உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 31 ஆகஸ்ட், 2024

a 28 தமிழீழப்பகுதியில் விசமிகள் அட்டகாசம்

 

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் விலங்கின் சடலங்கள்!

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பாவனையிலிருந்து வரும் குடிநீர் தாங்கியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் விலங்கின் சடலங்கள்! | Mullaitivu School Drinking Water Monkey Corpses

100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் குறித்த பாடசாலையில், இவ்வாறான நிகழ்வு நடைபெற்றது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

மேலும், மாணவர்களுக்கான குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படாதது தொடர்பில் சகலரும் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்திருக்கவில்லை.

இவ்வாறு செய்திருந்தால் குடிநீர் தாங்கியில் குரங்கு விழுந்து இறந்து அழுகியிருந்திருக்காது என பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் விலங்கின் சடலங்கள்! | Mullaitivu School Drinking Water Monkey Corpses

2ஆம் தவணை விடுமுறை முடிந்து 3ஆம் தவணை கற்பித்தல் காலமாக பாடசாலைகள் இந்த வாரம் முதல் நாளிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவவாறான நிலையில் பாடசாலையில் உள்ள குழாய் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்களால் ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினு, அது குறித்து அக்கறையற்று ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.

சில மாணவர்களால் இது தொடர்பில் பழைய மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவே, நீர்த்தொட்டியை பரிசோதிக்க முடிவெடுத்துள்ளனர்.

அவ்வாறு பரிசோதித்த வேளை குடிநீர் தொட்டியின் மேல்பக்க மூடி திறந்துவிட்ட நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

குடிநீர்த்தொட்டியினுள் குரங்கு அழுகிய நிலையில் அதன் உடல் உருக்குலைந்து எலும்புகள் சிதறும் நிலையில் இருந்துள்ளதையும் காணமுடிந்துள்ளது.

இந்த நிகழ்வுடன் தொடர்புபட்ட பழைய மாணவர் ஒருவருடன் உரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சில பெற்றோரும் மற்றும் பழைய மாணவர் சிலரும் இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அபயம், மற்றும் சுகாதார பிரிவினர், கல்வி சார் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதோடு குறித்த பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

a 27 கிளிநொச்சி மத்திய கிளையும் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் : செல்வம் அடைக்கலநாதன்

 

கிளிநொச்சி மத்திய கிளையும் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் : செல்வம் அடைக்கலநாதன்


இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் காரியாலயத்தில் நேற்று (31) இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சங்கு சின்னம்

மேலும் கருத்துரைத்த அவர், இந்த புரட்சிகரமான முடிவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். எங்கள் ஒற்றுமையால் தமிழ் கட்டமைப்பு ஒற்றுமையை காட்டியுள்ளது.

கிளிநொச்சி மத்திய கிளையும் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் : செல்வம் அடைக்கலநாதன் | Kilinochchi Branch Also Decided To Support Conch

இதனால் தான் 22 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். சங்கு சின்னம் ஊடாக அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து மக்களுக்கு பலமான செய்தியை சொல்ல வேண்டும் .

எங்களுக்குள் பிரிவினையற்ற நிலை இல்லாது தமிழ் தேசியத்துக்கு அந்த பலத்தை கொண்டு செல்ல வேண்டும். பிரிவினைகள் மக்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும் இதனால் இருக்கின்ற 10 பிரநிதித்துவம் ஐந்தாக குறையலாம்.

கிளிநொச்சி மத்திய கிளையும் சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் : செல்வம் அடைக்கலநாதன் | Kilinochchi Branch Also Decided To Support Conch

இந்த கூட்டு தேர்தலுக்கான கூட்டாகவன்றி மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொனரவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் ஆலமரமாக இருக்க வேண்டும் .திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் முடிவால் கிளிநொச்சி மாவட்ட கட்சி கிளையும் இதே முடிவெடுத்துள்ளது என்றார்.

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

a 26 தமிழீழப்பகுதியில் உளவியல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மாணவர்களின் தொகை அதிகரிப்பு?

 தமிழீழப்பகுதியில் உளவியல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மாணவர்களின் தொகை அதிகரிப்பு?கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

இச்சம்பவம் நேற்று  (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! | Kilinochchi School Girl Student Committed Suicide

சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி கற்று வரும் மாணவி இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share: 
  •  
  •  
  •  

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

a 25 யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி

 

யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி

யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி | Young Family Woman Suicide Jaffna

அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்ததையடுத்து வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாங்கிய கடனை செலுத்த முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


இதனைதொடர்ந்தே இன்றையதினம்(30) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

a 24 தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!

 

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்! | Accident On Vavuniya Mannar Road Jaffna Youth Died

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் இன்றையதினம் மாலை (30-08-2024) வவுனியா - மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும், வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மற்றொரு இளைஞர் படுகாயடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்! | Accident On Vavuniya Mannar Road Jaffna Youth Died

மேலும், குறித்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பரமனாத் சிவாகரன் என்ற இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செல்லத்துரை கிருஸ்னபாலமன் என்ற இளைஞரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

a 23 அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

 Email

அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.


வெளிநாடொன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர்! உறுதி செய்த உயர்நீதிமன்றம் | Husband Killed His Wife In Australia High Court

மெல்போர்னில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் தாக்கி அப்பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதெவேளை, வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே மனைவியை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.


எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்போர்ன் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

a 22 கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்

 

கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்

கருங்குருவி

 

*கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்*

அண்மையில் கனடாவிற்கு நுழைவு  விசா இலகுபடுத்தல் மூலம் சிங்கள தேசத்தின் வெளிநாட்டு பயங்கரவாத முறியடிப்பு    பிரிவால்  தமக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ் உளவாளிகளை  இறக்கியது அம்பலமாகியுள்ளது.
இவர்கள் நேரடியாக இலங்கை தூதுவரின் நேரடி வழிநடத்தலில் செயற்படுவார்கள்.  இத் தூதுவர்தான் 2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது போரை முடிவுக்குக் கொண்டு வர மறைமுக ஆதரவு வழங்கிய அமெரிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.


அவற்றில் சிங்கள உளவாளிகள் 20 நபர்களும்,தமிழ் உளவாளிகள் 45 நபர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
(இவர்களுக்குள் எம்மால் இனங்காணப்பட்டவர்கள் மட்டும்*  புனர்வாழ்வு பெற்றவர்கள் 4, தலையாட்டிகள் 2, கிழக்கில் செயற்பட்டவர்கள் 4, ஏற்கனவே சிங்களத்தோடு இயங்கியவர்கள் 8)
.
  கதிர்                                                     பொன். சிவா
அனைவரும் 5 பேர் கொண்ட குழுக்களாக Ontario வை மையப்படுத்தி 13 வெவ்வேறு இடங்களுக்கு களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
.
நகுலன்
.
ராம்
.
அதைவிட ஏற்கனவே சிங்கள உளவாளிகளாக இயங்கிய 5 பேரும் மற்றும் அமைப்புக்களைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் 9 பேரும் சேர்ந்து நேரடி சிங்களத்தின் கட்டளையின்படி இயங்குகின்றார்கள்.
.
சுவிஸ் முரளி
 
.
இக்குழுக்களுக்கிடையே *நேரடி தொடர்பு இல்லாமல் சிலீப்பர் செல்கள்* போன்று வைக்கப் பட்டுள்ளார்கள். இவர்களில் உலகத்தமிழர் உரிமைக்குரலின் சர்வதேச இணைப்பாளர் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர். இவர் ஏற்கனவே பல வாட்ஸ்ப் குறூப்களை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே.
.
ஜெயந்தன்
.
*இவர்களின் பிரதான நோக்கம்*
தமிழ் அமைப்புக்களை குழப்புவது, பிளவுகளை உண்டு பண்ணுவது
தமிழினப் படுகொலை நினைவு நாளை நிறுத்துவது அல்லது குழப்புவது
தமிழின அழிப்பு நினைவாலயம் வராமல் தடுப்பது அல்லது ஆதரவை தடுப்பது
பொய்பிரச்சாரங்களை பரப்புவது
தேசியவாதிகளுக்கும் மக்களிற்கும் இடையில் பிளவை உண்டுபண்ணுவது
புதிய புதிய அமைப்புக்களை உருவாக்குவது அண்மையில் மட்டும் 3 அமைப்புகள் புதிதாக உருவாகியுள்ளது.*
*ஆகவே மக்களே தேசிய உணர்வாளர்களே அவதானமாக இருங்கள்.*
புதிது புதிதாக உங்களோடு இணைந்து தேசியம் பேசுவோர் சார்ந்து சற்று கவனம் எடுங்கள்.
*மிக விரைவில் அனைவரின் படங்களோடு அடுத்த மடல்*
.
நிகழ்வுகளில் கொடியை தவிர்த்து ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தேசியக்கொடியை தூக்கி அதை தடை செய்ய முயற்சிக்கும் NCCT தேவசபாபதி
.
தேவசபாபதி
 
.
கனடாவில் இரவு நேரத்தில் நடமாடும் “சுவிஸ் முரளி” என்னும் இந்த வன்முறையாளன் செய்யும் செயற்பாட்டை பாருங்கள். கையில் ஆயுதத்தோடு மக்கள் சொத்தை சேதமாக்கும் ஒளிப்பதிவை பாருங்கள் !
Video Player
00:00
00:43

 

புதன், 28 ஆகஸ்ட், 2024

a 21 தொடர்ந்து போராடும் தமிழர்கள்?

 

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் போராட்டம் !

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் போராட்டம் ! | Tomorrow Protest In Kilinochchi

சர்வதேச காணாமல் வலிந்து ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பேராட்டமானது நாளை (30) கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலிலே ஆரம்பமாகவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கனகரஞ்சி (Kanakaranji) மற்றும் செயலாளர் லீலாதேவி (Leela Devi) ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கவனயீர்ப்பு போராட்டம்  

இதனடிப்படையில், 30 இற்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள், மற்றும் கையளிக்கப்பட்ட, இழுச்துச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட , சரண்டைந்த உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்திற்கான அழைப்பில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் எனைய அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பங்குகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், புலம்பெயர் தேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டங்களில் அந்தந்த நாடுகளில் வலுச்சேர்த்து அழுத்தம் கொடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...