உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 19 மார்ச், 2025

a281 போரைநிறுத்திய (Donald Trump)

 

ட்ரம்பின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்…! போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவின் அறிவிப்பு

ட்ரம்பின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்...! போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவின் அறிவிப்பு | Putin Agrees To Limited Cease Fire On Ukraineஉக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆகியோர் நடத்திய பேச்சில் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரை நிறுத்தும் முயற்சி

மூன்றாண்டுகளை கடந்தும் நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.

ட்ரம்பின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்...! போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவின் அறிவிப்பு | Putin Agrees To Limited Cease Fire On Ukraine

சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில் அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

அது தொடர்பாக சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இரண்டாம் கட்டமாக இரு நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான தொலைபேசி பேச்சுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு மணிநேரம் நடந்த பேச்சு

இதையடுத்து, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன், ட்ரம்ப் நேற்று பேச்சு நடத்தினார்.

இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.


இதன்முடிவில், அந்நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்குவரும் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 297 வீதியால் சென்ற பெண்களிடம் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்த இராணுவ வீரரொருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

  வீதியால் சென்ற பெண்களிடம் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்த இராணுவ வீரரொருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் .கு...