பாகம்02தமிழிழீழக்கதை Tamil Eelam of story
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு
பாகம் இரண்டின்முதலாவதுதொடர்
தலைமைப்பீடத்தின் கதை CAPITAL OF STORY
இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி சுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு. K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் என்பவரால் எழுதப்பட்டது இது தமிழீழ விடுதலைப் புலிகளின் Master book. (மாஸ்டர் புக்) இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,
1980 தொடக்கம்1985 வரையான பிரத்தியேகமான
வரலாறுக்கதைகள் உள்ளடக்கம்,
பாகம் 02 உள்ளடக்கம்
1980 தொடக்கம் 1985 வரையான போராட்ட
வரலாற்றுக் கதைகளுடன் மேலும் பல கதைகள் உள்ளடக்கம்.
01-05/04/1981 குட்டிமணி தங்கத்துரைகைது

02 31/05/1981 யாழ்பொது நூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் எரிப்பு மேலும் பல கலவரங்கள் சிங்களக் காடையர்களால் யாழில் நடத்தப்பட்டது,
03 15/10/1981தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கை.
04 புலிச் சின்னம் அதாவது தேசியக்கொடி தலைவரால் உருவானது,
05 19/05/1982/அன்று பாண்டி பஜாரில் தலைவர், உமாமகேஸ்வரன் சண்டை நடைபெற்றது,
06 எம் ஜீ ஆர் அவர்களிற்கும் எமது அமைப்பிற்குமான உறவு ஆரம்பம் ஆனது,
07 ,29/07/1982 ஜெ.ஆர் ஜேவர்த்தனாவின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்த்தும் மேலும் பல தாக்குதல் விடுதலைப் புலிகளால் அரசிக்கு எதிராக நடத்தப்பட்டது,
08 27/11/1982 அன்று விடுதலைப் புலிகளின் முதல் மாவீரன் சங்ககர் வீரச்சாவு அடைந்தார்
09 ,,04/02/1983 அன்று போராளி அற்புதன்அல்லது பொன்னம்மான் தலைமையில்தாக்குதல்,
10 18/05/1983 அன்று உள்ளூர் ஆட்சித் தேர்தலின்போது கந்தர்மடத்தில் தாக்குதல்,
11 07/04/1983 இத்தாக்குதலிற்குப்பிறகு கிட்டு அவர்கள் செல்லக்கிளி அம்மானின் உதவியாகத் தலைரால் நியமிக்கப்பட்டார்.
12 23/07/1983 அன்று திருநெல்வேலித்தாக்குதல் பற்றி கேணல் கிட்டு
13 24 /07 /1983 இரவு தொடங்கிதென்னிலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக்காடையர்கள் தாக்குதல் ஆரம்பம் ஆனது.
14 இதைத் தொடர்ந்து,இந்தியா மத்திய அரசு தமிழ் இளைஞர்களிற்கு பயிற்சி தர முன்வந்தது
15 1983 /08 மாதம்ஆம்பத்தில் இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கு கடுமமையாக உழைத்த அவரின் மனைவி அடல் மற்றும் பாலா அண்ணை இதைப்பற்றி விளக்குகின்றார்.
16 1983 அக்டோபர் மாதம் பிரபாகரனும்; அவரோடு சில மூத்த தளபதிகளும்; இந்தியா வந்தனர்.
17 எம்ஜிஆர் எமக்கு உதவ முன்வந்தார்,
18 1983/11 ஆம் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு பயிற்சி தர இந்தியா அனுமதி வழங்கியது.
19 10/04/1984மட்டு ஜெயிலை உடைத்து நிர்மலாவை மீட்டனர் புலிகள்.
20 1984 ஆண்டு 09ஆம் மாதம் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் ஐந்தாவது பயிற்சி முகாம்பற்றி,
21 2/03/1984 பயிற்சியை முடித்து வந்த பரமதேவாவை கிட்டு அவர்கள் தான் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.
22 யாழ் மாவட்ட முதல் தளபதிகப்டன். பண்டிதர் அவர்கள் வரலாறுருக்கும்
23 01/10/1984 அன்றுதேயத்தலைவர் அவர்களிற்கும் செல்லி மதி அவர்களிற்கும் திருமணம் நடைபெற்றது
24 19/11/1984 அன்று கட்டுவன் பதியிலும் மேலும் பல இடங்களில் சிறு சிறு தாக்குதல்கள் நடைபெற்றது
25 15/02/1985 - (6) ஆறாவது பயிற்சி முகாம் பற்றி அதில் பயிற்சி எடுத்தபோராளி நாடன் குறிப்பிடுகையில்
26 03/07/1985திம்பு பேச்சுவார்த்தைக்கு புலிகளை இழுக்கும் பொறி முறையை உருவாக்கிய இந்தியா.
27 13/07/1985 பூட்டான் திம்புவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஈழப் போராளிகள் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
28 மகளீருக்கான (7) ஏழாவது பயிற்சி முகாம் பற்றி மூத்த போராளி தீபா
29 1985 ஆம் ஆண்டு தமிழர்புனர் வாழ்வுக் கழகம்
இதற்கான அலுவலகம் சென்னை அடையாறு இந்திரா நகரில் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
05/04/1981 அன்று தங்கத்துரை குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
********************************
வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது காரணம் ஈழப் போராளிகளின் தாக்குதல்கள் வட கிழக்கில் அதிகமாக நடத்தப்பட்டமையால் அந்நிலையேற்பட்டது,.
அந்த நாட்களில் இவர்கள் தேசியத் தலைவரோடு இணைந்து செயல்பட்டார்கள் என்ற வகையில் 25/03/1981 அன்று நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலையில் அமைந்திருந்த இடத்தின் முன்புற வீதியில் வைத்து யாழ்குடா நாட்டின் சில வங்கிக் கிளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கள் வங்கிப் பணம் கொண்டு வரப்பட்ட வாகனம் வழிமறிக்கப்பட்டு 82 இலட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டது குட்டிமணி அவர்களியின் நண்பர்களின் பங்களிப்பே அவ் தடவடிக்கைக்குக் கூடுதலாகயிருந்தது.அதனால்.
குட்டிமணி மற்றும் தங்கத்துரை இருவரையும் சிறிது காலம் இந்தியா சென்று பாதுகாப்பாகயிருக்குமாறு தலைவர் உட்பட ஏனைய மூத்த போராளிகளும் ஆலோசனை வழக்கியதற்கு அமைவாக
05/04/1981 மாலை வல்லிபுரக் கோவிலுக்கு முன்பாக மணல் திடல்களைக் கடந்து கடற்கரையை மூவரும் அண்மித்தபோது சிங்களக் கடற்படையினரால் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இது நடந்தபின்னர் எம்மவர்களால்தான் இவர்கள் கைது செய்யட்பட்டதாக மக்கள் மத்தியில் குட்டிமணியின் நெருங்கிய நண்பர்கள் தேவையற்ற வதந்திகளைப் பரப்பியதால் இது எம்மவர்களின் காதுகளிற்கு எட்டி பின் நாட்களில் அது எமது தலைவருக்குத் தெரியவந்தது. அதானால் தொடர்ந்து அவர்களோடு இணைந்து செயல்படுவது இல்லையென தலைவர் முடிவு எடுத்தார்.
வடமராட்சிக் கடற்பரப்பில் கள்ளக் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இருந்த கடல் படையினரே இவர்களைக் கைது செய்தார்கள்.
இப்பிரச்சனை நடந்தபின் அப்பொழுது ரெலோவின் தலைவராக இருந்த சிறிசபாரத்தினத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தால் அவர்களிடம் இருந்து பிரிவதெனத் தலைவர் முடிவு எடுத்தார்.
அது என்னோடு கலந்து ஆலோசித்தபோது அவர்களோடு இணைந்து பறிக்கப்பட்ட மக்கள் வங்கிப்பணத்தில் வாங்கப் பட்ட ஆயுதங்கள், மற்றும் என் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தபணம் என்பவற்றைச் சிறிசபாரத்தினத்திடம் ஒப்படைக்கப்போவதாகப் தலைவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அந்த பணத்தைப் பாதுகாத்ததில் பெரும் பங்கு எமது அமைப்பாக இருந்தது. அதனால் அவற்றில் பத்து லட்சம் ரூபாய்களை நான் பாதுகாத்ததாக தங்கத்துரை அரசபடைகளிடம் சொல்லியுள்ளார். எனவே அப்பணத்தை பாதுகாக்க கடுமையாக கஷ்டப் பட்டவர்கள் நாங்கள்தான். ஆகையினால் அரைவாசிப் பங்கை நாங்கள் கேட்கலாம்தானே என்றேன்.
அதற்குத் தலைவர் சிரித்தபடியே உங்களிற்குத் தெரியும்தானே அண்ணை நான் என்ர சொத்தக் காலில் நிற்பவன் திரும்பவும் நாங்கள் வளருவோம் என்றார். அவர் சொன்னபடியே அனைத்துப் பணம், வேண்டப்பட்ட ஆயுதம், அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தோம். அதிலிருந்து அவர்களிற்கும் எமக்குமான அனைத்துத் தொடர்வுகளும் நிறுத்தப்பட்டன. எனத் தேவர் அண்ணா குறிப்பிட்டார்.
அதேகாலப்பகுதியில் சிங்களக் காடையர்களால் யாழில் நடத்தப்பட்ட கலவரத்தை நேரில்கண்ட தேவர் அண்ணை குறிப்பிடுகையில்.....

31/05/1981 யாழ்பொது நூலகம் , ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், எரிப்பு தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட அந்த நூலக எரிப்பின் மூலம் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வரையான நூல்களும் மீண்டும் என்றுமே தேடியும் கிடைக்க முடியாத வரலாற்றுப் பண்டையத் தமிழர்களின் ஆவணமும் அனைத்தும் அழிக்கப்பட்டன.யாழ் பொது நூலக எரிப்பு என்பது தமிழினப் படுகொலையின் ஒரு அங்கமே... ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த இனத்தின் வரலாற்றுச் சுவட்டை அழிக்க வேண்டும் என்ற சிங்களவர்களின் சிந்தனையில் வெளிப்பாடே அதுவாகும்.
31 மே 1981 யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு (Burning of Jaffna Public Library) என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 மே 31 ஒராம் திகதி வரையான நாட்களில் சிங்கவர்களால் எரிக்கப்பட்டது
இவ்வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன.
இந்நிகழ்வு 20ம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாக் காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
பின்னணி
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன
. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது
வன்முறைகளும் எரிப்பும்
ஞாயிறு 31,மே 1981
இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981 சூன் 4 அன்று நடத்த ஏற்பாடாகியிருந்தது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 இற்கும் அதிகமான காவல்துறையினர் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மே 26 அன்று வடபிராந்திய பிரதிக் காவல்துறை மாஅதிபர் பி. மகேந்திரன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக பி. டி. குணவர்தனா என்பவர் அடுத்த மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்
1981 மே 31 ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) கட்சியினர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர் இதன்போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவர்கள் யார் எனக் கண்டுபிடிக்கப்படவில்லை.
புஞ்சிபண்டா, கனகசுந்தரம் ஆகிய இரு காவல்துறையினர் உயிரிழந்தனர் இவர்களில் கனகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர் அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.பொதுமக்களும் தாக்கப்பட்டனர். தவிகூ கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
31/05/1981 ஆம் நாள் நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்ற விடுதலைக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வினைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்தை எரிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
குட்டக் குட்டக் குனியாமல் தமிழர்கள் தட்டிக்கேட்கத் துணிந்து விட்டார்கள். இதைப் பொறுக்க முடியாமல் தங்களின் இனவேற்றுமையைக் காட்டிய நாளாகவே இதைக் கருத முடியும்.
சிங்களப் பொலிஸாரின் பாதுகாப்புடன் காமினி திஸநாயக்கா தலைமையில் யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தில் கொண்டு வந்து குமவிக்கப்பட்டு இருந்த சிங்களக் காடையர்களினாலேயே 31 ஆம் திகதி இரவு பொது நூலகம் எரியூட்டப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம் நடைபெறும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடையவில்லை. அவர்கள் பலமாகயிருந்த நாட்களில் இது நடந்து இருந்தால் காமினி தலமையிலான அனைத்துக் காடையர்களும் கொலை செய்யப்பட்டுயிருப்பார்கள். இதைத் தொடர்ந்து நாச்சிமார் கோயிலுக்கு சீருடை அணிந்தும், அணியாமலும், சிங்களக் காவல்த் துறையினரும்; சிங்களக்காடையர்களுமாக சுமார் ஆயிரக்கணக்கில் வந்து தங்களின் வெறியாட்டத்தை ஆட வெளிக் கிட்டார்கள். தமிழர் பொருளாதாரம் மற்றும் பெறுமதியான தமிழர் உயிர்கள் அழிவதை என் கண்ணால் பார்த்தேன். இதேகாலம்தான் எமது இயக்கம் இராணுவம் மீது முதலாவது தாக்குதலை நாடத்தினார்கள்

15/10/1981தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கை.
அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டு, அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.
அடுத்து கலவரத்திற்கு வருவோம்
முதலாவதாக நாச்சிமார் கோயிலின் கோபுரம் தீயிடப்பட்டது. கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலிருந்த வீடுகள், கடைகள், தீயிடப்பட்டதோடு அப்பாவி பொது மக்களும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர்.
அத்தோடுஅவர்களின் வெறியாட்டம் நின்றுவிட வில்லை. யாழ் நகர் உட்பட குடாநாடு பூராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டன. யாழ் பழைய சந்தைக் கட்டிடம், பூபாலசிங்கம் புத்தகசாலை , உட்பட 86 க்கும் மேற்பட் கடைத் தொகுதியும் தீயிடப்பட்டது. யாழில் பழமை வாய்ந்த சந்தை, பிள்ளையார் ஸ்ரோர்க்கட்டிடம்; எரிக்கப்பட்டதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு லொறிகள் மற்றும் 404 பேஜோ காரும் தீக்கிரையாக்கப்பட்டது.
யாழில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஈழநாடு பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டது. அதற்கு உள்ளே இருந்த நிறுவனர் திரு,ப, சிவானந்தன் என்பவரும்; பணியாளர் திரு சச்சிதானந்தன் ;இருவரும் பலத்த தீக்காயங்களிற்கு உள்ளாகினர்.
யாழ்நகரின் மத்தியில் பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒளவையார் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டன. யாழ் பிரதான வீதியில் அமைந்திருந்த விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் தீயிடப்பட்டது. அடுத்து திருநெல்வேலிப் பகுதியில் இருந்த நாடளுமன்ற உறுப்பினர் திரு மு. சிவசிதம்பரம் அவர்களின் அலுவலகம் எரியூட்டப் பட்டதோடு அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாலஜோதி என்ற இளைஞரும் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கோப்பாய்ப்பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த விவசாய உத்தியோகத்தர் திரு அ.பரமேஸ்சுவரன் என்ற இளைஞர் நடு வீதியில் வைத்துச்சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிங்கள வெறியர்களின் வெறியாட்டத்தில் பல நூறு உயிர்களும்; பெறுமதியான உடைமைகளும்; அழிக்கப்பட்டது. இதன் வெளிப்பாடாய் திருநெல்வேலியில் வைத்து கூடுதலான சிங்களப் படைகளைக் கொல்ல வேண்டும் என்ற வைராக்கியம் செல்லக்கிளி தலைமையாலான இளைஞர்களிற்கு ஏற்பட தம்பி பிரபாகரன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்பதை இக்கதையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஐக்கிய தேசியக்கட்சிபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும்.
அதாவது ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றுமொரு துயரச் சம்பவமாகும். ஐதே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?
யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன் 1981 யூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 யூலை 31 ஆகஸ்ட் 1ம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.கட்சியினால் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டு இருந்தமையும் நாம் நினைவு கூறத்தக்கது. கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.
தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இன வன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா? என்பது எப்போதும் முடியாத காரியம்.
அக்காலப் பகுதியில் 25 இற்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் முளைத்துக் கொண்டு இருந்தன. இவர்களின் இலக்கு தமிழர்களைப் பாதுகாப்பது தொடர்ந்து அவர்களின் சுதந்திரத்திற்காகப் போராடுவது இது தான் இவர்களின் இலட்சியமாக இருந்தது. அதில் மக்கள் அறிந்து கொண்ட அமைப்புக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றேன்... ரெலோ01, ஈ.பி. ஆர். எல்.எப் 02, ஈரோஸ்03, பிளேட்04, தம்பாப்பிள்ளை இயக்கம்,மற்றும் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் எனக் குறிப்பிடாலாம்.
இதே காலப்பகுதியில்தான் தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் சில குறிப்பிட்ட போராளிகளிற்கு உடையார் கட்டில் உள்ள இருட்டு மடுவில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது,
அதுவே விடுதலைப் புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் ஆகும், அப்பயிற்சியை தேசியத்தலைவரே நேரடியாக வழங்கியானார், அதின் நிர்வாகப்பொறுப்பாராக தளபதி கிட்டுகடமையாற்றினார், உடல் பயிற்சிகளை புலேந்தி மற்றும் செல்லக்கிளி அம்மான் இருவரும் வழங்கினார்கள்

அதில் பயிற்சி எடுத்தவர்களின் பொட்டுஅம்மான் 01, யோகன் 02, விக்டர் 03, ராஜேஸ் 04,ரலிங்கம் 05, சுப்பண்ணா 06 றெஜி 07, ஞானம் 08,கணேஸ் 09, அருனா 10, கிட்டு 11, இதில் மொத்தம் 16 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள், அப்பயிற்சி முகாமில்வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் சத்தியப் பிராணம் உருவானது. அடுத்த தொடரில்
தேசியக்கொடி உருவான கதையைப்பார்ப்போம்
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக