உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 16 டிசம்பர், 2024

a 195 கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டபெண்!

கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!

கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்! | Kidnapped Jaffna Girl In Kilinochchi

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை குளம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார்.

யாழில் பேருந்தில் பயணித்த நபரொருவர் தீடிரென உயிரிழப்பு!

யாழில் பேருந்தில் பயணித்த நபரொருவர் தீடிரென உயிரிழப்பு!

கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்! | Kidnapped Jaffna Girl In Kilinochchi

இந்த நிலையில் குறித்த இளம் பெண் வழமை போன்று தான் தங்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம், வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி பெண்ணை ஏற்றி சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த பெண்ணின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்! | Kidnapped Jaffna Girl In Kilinochchi

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சமரவிக்ரம தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், பூர்வாங்க விசாரணைகள் குற்றத்தடுப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...