உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 14 டிசம்பர், 2024

a 193 யாழ். கரவெட்டியில் துயரம் - எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி

 

யாழ். கரவெட்டியில் துயரம் - எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி

யாழ். கரவெட்டியில் துயரம் - எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி | Jaffna Rat Fever Outbreak Uoung Boy Death

யாழ்ப்பாணம் (Jaffna) - கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் நேற்றிரவு (14,12,2024) 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

வடமராட்சி - கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோமா நிலை

சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அவரின் உடலில் நோய் அதிகாரிக்க யாழ் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

யாழில் உயிரைப் பறிக்கும் திடீர் காய்ச்சல் : வைத்தியர் வழங்கும் செவ்வி

யாழில் உயிரைப் பறிக்கும் திடீர் காய்ச்சல் : வைத்தியர் வழங்கும் செவ்வி

எலிக்காய்ச்சல் நோய் அறிகுறி

இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இதுவரை 66 பேர் எலிக்காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் வந்து சிகிச்சை பெற்றுள்ளார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். கரவெட்டியில் துயரம் - எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி | Jaffna Rat Fever Outbreak Uoung Boy Death

தற்போது 32 நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுகின்றார்கள் என தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...