உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 13 டிசம்பர், 2024

a 192 கனடாவில் ஒன்ராறியோவில் அறிமுகமாகும் புதிய சட்டம்

 

கனடாவில் ஒன்ராறியோவில் அறிமுகமாகும் புதிய சட்டம்

கனடாவில் ஒன்ராறியோவில் அறிமுகமாகும் புதிய சட்டம் | New Law To Be Introduced In Ontario Canada

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிகடகை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு இது பயன்படுத்தப்படும் என அறியமுடிகிறது.

ஒன்ராறியோ மாகாண வீட்டுவசதி

இது தொடர்பாக ஒன்ராறியோ மாகாண வீட்டுவசதி இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில்,


“எங்கள் அரசாங்கம் 75.5 மில்லியான் டொலர்களை முதலீடு செய்து வீடற்றவர்களின் நிலைமையைத் தடுப்பதற்கும், முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நியாயமான மாற்றுத் தங்குமிடத்திற்கான அணுகலை வழங்குவதற்கும் மேலும் முதலீடு செய்கிறது” என்றார்.

இது ஒவ்வொரு ஆண்டும் வீடற்றோர் தடுப்பு திட்டங்களில் மாகாணத்தின் தற்போதைய 700 மில்லியன்  டொலர் முதலீட்டிற்கும், அத்துடன்  வீடின்மை மற்றும் போதைக்கு அடிமையானோர் மீள்வாழ்வு மேம்பாட்டு இணைப்பு மையங்களுக்கான (HART) மாகாணம் முதலீடு  378 மில்லியனுக்கும் கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...