உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 2 டிசம்பர், 2024

a 182 யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்.

 

யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த பூசகர்!

யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த பூசகர்! | Priest Died Falling Into Well While Bathing Jaffna

யாழ்ப்பாண பகுதியொன்றில் வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றுக்குள் விழுந்து பூசகர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.!


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் கிணற்றுக்குள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

யாழில் குளித்துகொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த பூசகர்! | Priest Died Falling Into Well While Bathing Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...