உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 28 டிசம்பர், 2024

a 205 தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை

 

தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது

தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது | Arrested In Connection Arson Commercial Center

மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தற்போது தடுத்து வைத்து விசாரனைக்குட்படுத்துவதாக மட்டக்களப்பு தலைமைய கால்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வர்த்தக நிலைய கூடாரங்கள் நேற்று இரவு தீக்கரையாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையில் கடந்த 12 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த வர்த்தக நிலைய கூடாரங்களில் மரக்கறி உள்ளிட்ட பல உள்ளுர் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


அதற்கமைய, குறித்த 12 பேரும் தங்களது வாழ்வாதரத்தை இந்த வர்த்தக நிலையங்கள் ஊடாக கிடைக்கும் வருமானத்திலேயெ முன்னெடுத்து வந்துள்ளனர்

இந்தநிலையில், கடந்த சில நாள்களாக குறித்த பகுதியில் குற்றச்செயல்களும் போதைப்பொருள் பாவனையாளர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஆகையால், தங்களுக்கான நட்டயீட்டினை பெற்றுத்தறுமாறு குறித்த வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 300 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள  அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...