உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 7 ஜனவரி, 2025

a 216 கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு..

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்!

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! | Galkissa Gun Shoot Double Murder Investigation

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் இருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்றையதினம் (07-01-2025) அதிகாலை 4.25 மணியளவில், கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியில் இடம்பெற்றுள்ளது.!

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் வியாபாரிகளான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோருக்கு இடையில் நிலவி வந்த தகராறு காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! | Galkissa Gun Shoot Double Murder Investigation

வீட்டினுள் இருந்த மனோ எனப்படும் 36 வயதான சுதத் கோமஸ், 9mm ரக துப்பாக்கி மற்றும் கல்கடஸ் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய சானக விமுக்தி என்ற சந்துன் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! | Galkissa Gun Shoot Double Murder Investigation

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தப்பியோடிய 2 இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பிரபல தென்னிந்திய நடிகரான அஜித்தின் கார் விபத்து... ஷாக்கில் ரசிகர்கள்!

பிரபல தென்னிந்திய நடிகரான அஜித்தின் கார் விபத்து... ஷாக்கில் ரசிகர்கள்!

சம்பவம் தொடர்பில் விசாரணை இன்று காலை கல்கிஸ்ஸ நீதவான் சத்துரிகா சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டது.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! | Galkissa Gun Shoot Double Murder Investigation

கொல்லப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரி படோவிட்ட அசங்க என்பவருடன் தொடர்பில் இருந்தமையினால், கொஸ்மல்லியின் தரப்பினால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! | Galkissa Gun Shoot Double Murder Investigation

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரின் பாட்டி மற்றும் சகோதரன் ஒருவர் நேற்றிரவு (06-01-2025) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! | Galkissa Gun Shoot Double Murder Investigation

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 217யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்!

  யாழ் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்! பரபரப்பு காட்சிகள் யாழ்ப்பாணம் ஏ 9 பிரதான வீதியில் சொகுசு பேருந்து ஒன்று மோட்...