உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 15 ஜனவரி, 2025

a 223 தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான அரச பேருந்துகள்

 

தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான அரச பேருந்துகள்

தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான அரச பேருந்துகள் | Government Buses Attacked In North Sl

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் (Jaffna) இருந்து கல்முனைக்கும் (Kalmunai) மற்றும் வாழைச்சேனையில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.

கல்வீச்சு தாக்குதல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனம் தெரியாதேரினால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலால் குறித்த இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பேருந்துகள் வழமை போல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை காவல் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான இரவு 07.30 மணியளில் இனம் தெரியாதோரினால் பேருந்துகள் மீது தீடிரென கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதையடுத்து, பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தத நிலையில் பிரயாணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி ஏற்றி அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து   2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூ...