உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 18 ஜனவரி, 2025

a 225 உலகமே இருளில் மூழ்கும் ; பாபா

 

உலகமே இருளில் மூழ்கும் ; பாபா வாங்காவின் அதிர்ச்சி தகவல்

உலகமே இருளில் மூழ்கும் ; பாபா வாங்காவின் அதிர்ச்சி தகவல் | World Will Darkness Baba Vanga S Information

இந்த 2025 ஆம் ஆண்டில் உலகமே இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளது எனவும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்காவின் கணிப்புகள் பல பலித்துள்ளன. இதனால் ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பின் போதும் இந்த ஆண்டுக்கான இவரது கணிப்புகள் என்ன என அறிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

2024 ஆம் ஆண்டின் இறுதியிலேயே 2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாக தொடங்கிவிட்டன.


அந்த வகையில் இந்த ஆண்டில் ஐரோப்பிய கண்டத்தில் பெரும் மோதல் வெடிக்கும், உலக நாடுகளின் பொருளாதார பாதிக்கப்படும், பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகள் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என பல நிகழ்வுகளை கணித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அவரது சில கணிப்புகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

அதாவது இந்த ஆண்டில் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என்றும் ஆய்வுக் கூடங்களில் இதயம், கல்லீரல், கிட்னி, கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் தனியாக உருவாக்கப்படும் என்று கணித்துள்ளார். இது மனித குலத்திற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் இந்த ஆண்டில் சக்தி வாய்ந்த சூரியப் புயல் வீசும் என்றும் இதனால் மின்சாரம் தடைப்படும், இணைய சேவை, தொலைத் தொடர்பு சேவை உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

உலகமே இருளில் மூழ்கும் ; பாபா வாங்காவின் அதிர்ச்சி தகவல் | World Will Darkness Baba Vanga S Information

மேலும் இந்த சக்தி வாய்ந்த சூரியப் புயல் காரணமாக மின்சாரம் தடைப்பட்டு உலகமே இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒருநாள் மின்சாரம் தடைப்பட்டால் 11 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுமாம். இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு பாபா வங்கா சூரியப் புயல் குறித்து கணித்திருந்தார். ஆனால் அப்போது சிறிய அளவில் சூரியப்புயல் தாக்கியது.

கடந்த 2024 ஆம் ஆண்டும் சூரியப் புயல் குறித்து கணித்திருந்தார் பாபா வங்கா. அப்போதும் பெரிய அளவில் சூரியப் புயல் தாக்கவில்லை.

இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தப்பித்தோம். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரியப் புயல் வீசும் என்றும் அதனால் உலகமே முடங்கும் என்றும் கணித்துள்ளார் பாபா வங்கா.

அப்படி ஒருவேலை சக்தி வாய்ந்த சூரியப்புயல் வீசி உலகம் முடங்கினால், உலக நாடுகளின் வணிகம் தடைப்பட்டு பொருளாதாரமும் முடங்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமின்றி இந்த 2025 ஆம் ஆண்டில் மனிதர்கள் மனதில் நினைப்பதை அறியும் வகையில் அறிவியல் வளர்ச்சி பெறும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளாராம்.

மேலும் இந்த 2025 ஆம் ஆண்டில் ஏலியன்கள் நிச்சயம் பூமியை தொடர்பு கொள்வார்கள் என்றும் கணித்திருக்கிறாராம் பாபா வங்கா. ஏலியன்கள் குறித்து அவ்வப்பபோது அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 306 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை

  இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை  என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick B...