உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 6 ஜனவரி, 2025

a 215 இலங்கையில் தொடரும் ஆயுதவண்முறை காவு கொள்ளப்படும் மனித உயிர்கள்?

 


ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - தந்தை உட்பட இருவர் பலி 


ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - தந்தை உட்பட இருவர் பலி - இலக்கு வைக்கப்பட்ட நபர் | Underworlds Gun Fire Plan 2 Shot Dead In Seeduwa

- இலக்கு வைக்கப்பட்ட நபர்அண்மையில் நீர்கொழும்பின் புறநகர் பகுதியான சீதுவயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்மார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

காரில் இருந்து வந்த கும்பல் மூவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணிலை சந்தித்த சஜித்..!

தந்தை மரணம்

காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு மகன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு - தந்தை உட்பட இருவர் பலி - இலக்கு வைக்கப்பட்ட நபர் | Underworlds Gun Fire Plan 2 Shot Dead In Seeduwa

குறித்த குடும்பத்தின் தந்தை இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு மகன் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.  

துப்பாக்கி சூடு

குடும்பத்தின் தொழிலதிபராக உள்ள மகனை சுட்டுக் கொல்லுமாறு ஒப்பந்த அடிப்படையில் கூலிப்படை அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இலக்கு வைக்கப்பட்ட நபர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 216 கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு..

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு... இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்! கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்...