மாத்தறை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!
மாத்தறை, வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வெலிகம மூணமல்பே பகுதியில் உள்ள ஏரிக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வார்டில் “போ மரக்கிளை” விழுந்ததில் உயிரிழந்த கைதியின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த துருக்கி கிராமத்தில் உள்ள வீட்டுக்கு 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று (03) இரவு சென்றுள்ளனர்.
பின்னர், இன்று (04) அதிகாலை 1.00 மணியளவில் குறித்த குழுவினர் கால் நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெலிகம கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வீதியில் நடந்து சென்ற ஐவரில் இருவர் காயமடைந்து மாத்தறை வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக