உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 10 ஜனவரி, 2025

a 219 யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி

 

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி; 50 ஆயிரத்தை பறிகொடுத்த நபர்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வழிப்பறி; 50 ஆயிரத்தை பறிகொடுத்த நபர்! | People Beware Of Robbers Claiming Police In Jaffna

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த  சம்பவம் ஒன்று பதிவாகிய்டுள்ள நிலையில்  வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் நேற்று (09) நின்ற இருவர் வீதியில் வந்த நபரை வழிமறித்து ,தம்மை பொலிஸார் என கூறி அவரது உடமைகளை சோதனையிட்டுள்ளனர்.


50 ஆயிரம் ரூபாய்   கொள்ளை

அதன் போது அவரது உடைமையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இந் நிலையில் பொலிஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபகளை கைது செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 222 தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

  தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை ஜனாதிபதி அநுர கும...