உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

mother a 224 தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமெண்டு நினைப்பது வெறும்கனவு.

அன்பா சொல்லி அம்மிநகராது.
தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமெண்டு நினைப்பது வெறும்கனவு.மற்ற சமூகங்களெல்லாம் பெரும் விலைகொடுத்து பெற்ற சுதந்திரத்தை சிங்களவன் நமக்கு இலவசமாக தருவான் என்று நான் நம்பவில்லை. ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும் யுத்தங்களாலும் வேதனைகளாலும் இரத்தக் கண்ணீராலும் வென்றவற்றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பேனா மையக் கொண்டும் கோரிக்கை மனுங்களை கொண்டும் மேடை பேச்சாளர்களின் திறமையைக் கொண்டும் சுலபமாக சாதிக்க நினைப்பது வேடிக்கையும் வீண்கனவும் ஆகும். பிரசவலியின்றி குழந்தை பிறக்குமா? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன கடலைவடையா? உளுந்தவடையா?அது கூட இன்று இலவசமாக கிடைக்காது.அப்படியிருக்க சுதந்திரம் எப்படி இலவசமாக கிடைக்கும் ?அதை போராடி இரத்தம்சிந்தி உயிர்கொடை கொடுத்து அளப்பரிய தியாகங்கள் செய்துதான் பெற முடியும். தேசியத்தலைவர். அன்றோதொட்டு இன்றுவரை எந்தவொரு சிங்கள தலைமையிடமிருந்தும் தமக்கு தீர்வுகிட்டும் என்றோ,தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் அதை பெற்று தருவார்கள் என்றோ தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாகும்.அன்றும்சரி இன்றும்சரி அவ்வாறான எதிர்பார்ப்பு முட்டாள்தனமானது என்றே கடந்த காலங்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றது. தமிழர்கள் நாங்கள் எங்களது போரிடும் வல்மையினாலும் போராட்டத்தின் வெற்றியினாலுமே தமிழீழ தேசத்தின் உதயமும் அதன்வழி தமிழீழ மக்களின் சுதந்திரமான சுயமான வாழ்வும் அமையும் என்பதில் தமிழ்மக்கள் தெளிவுபெற வேண்டும்.அத்தகைய எண்ணப்பாட்டின் எதார்த்த புறநிலைகளுக்கேற்ப இலக்கினைநோக்கி முன்னகரவேண்டும்.தமிழ் இளைஞர்கள் போரியல் நுணுக்கங்களை கற்றுதேறி போர்வீரர்களாக அணிவகுக்கவேண்டிய தேவையை உணரவேண்டும்.எந்தவொரு இனமும் தமக்காக முற்று முழுதாக போராடாமல் அவர்கள் எந்தவொரு நாட்டின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க முடியாது.எனவே பூரணமாக படைதிரட்டி கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதிகளை தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதன் மூலமாகவே தமிழர்களுக்கான உலக அங்கீகாரத்தை பெறமுடியும். தமிழர்களின் விடுதலை என்பதும் தமிழீழ தேசத்தின் புலர்வு என்பதும் எதிர்காலத்திலும் சமாதான ரீதியாக ஒருகாலமும் பெற்றுகொள்ள முடியாது என்பதையே இலங்கையின் பலசகாப்தகால வரலாறு சுட்டிநிற்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பு ஈட்டபோகும் போரியல் வெற்றிகளே தமிழ்மக்களின் அடிப்படை அபிலாஷைகளான தாயகம்,தேசியம்,தன்னாட்சி உரிமை என்பதை அவர்களுக்கு ஈட்டிதரும் என்பதையே இன்றைய காலம் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். பிரபாசெழியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 298 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா

  20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா  (Baba Vanga) உலகப்புகழ் பெற்றவராவார்.  அவரது பல கணிப்புகள் பலித்து ...