உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

mother a 214 இலங்கையில் வைப்பிலிட்ட பணத்தின் நிலை!என்ன?

இலங்கையில் வைப்பிலிட்ட தனிநபர்களின் பணத்தின் எதிர்காலம் (VIDEO)
வெளிநாடுகளில் இருந்து நிரந்தரமாக பணத்தினை அனுப்பிக்கொண்டிருப்பவர்கள் தங்களின் பணத்திற்கு அதிக பெறுமதி கிடைக்க வேண்டும் என்பதினையே எப்பொழுதும் விரும்புவார்கள். அவர் தனியார் நிறுவனங்கள் ஊடாக நிதியை அனுப்புவதினால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயங்கள் வராத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கையில் வைப்பிலிட்ட பணத்தின் நிலை என்ன என்பது குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது எதிர்காலம் பற்றி சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டத்தாரி கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி, இதேவேளை,வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு உத்தரவாதம் காணப்படுவதாகவும்,பணத்திற்கான பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில்,பணத்திற்கான கொள்ளளவு சக்தி குறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வங்கிகளினுடைய வெளிநாட்டு கொடுப்பனவு விடயங்களில் தற்போது இலங்கையில் காணப்படும் வங்கிகள் இக்கட்டான நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 298 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா

  20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா  (Baba Vanga) உலகப்புகழ் பெற்றவராவார்.  அவரது பல கணிப்புகள் பலித்து ...