உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 14 ஏப்ரல், 2022

mother a213 தலைவரை பேச்சுக்கு அழைத்த காரணம் என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவரை பேச்சுக்கு அழைத்த மகிந்தவிடம் பின்னர் ஏற்பட்ட மனமாற்றம் (VIDEO)
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் காணப்பட்ட ஆயுத பலத்தின் காரணமாகவே மகிந்த ராஜபக்ச அவருடன் பேசுவதற்கு முன்வந்ததாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி, ஆயுத பலம் முடிவடைந்த பின்னர் பழைய பல்லவியோடு இனவாதத்தை தூண்டி தமிழ் மக்களை தூக்கி எறிந்து இதுவரையில் நேரடியான பேச்சு வார்த்தைக்கு வருகை தராமல் காலத்தை தட்டிக்கழிக்கும் அரசியல் போக்கையே மகிந்த ராஜபக்ச செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசியலில் சாணக்கியம் நிறைந்தவர் என்ற போதும் அரசியலில் காணப்படும் சாக்கடை தன்மையும்,போக்கிரி தன்மையும் அவரிடமே காணப்படுகின்றது. தன்னை அரசியலுக்குள் கொண்டு வந்த சந்திரிக்காவையே தூக்கி எறிந்தவர் எங்களை தூக்கி எறிந்து செல்வதில் ஆச்சர்யம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...