பாகம் 4
1990 தொடக்கம் 1995 வரை 
24/03/ 1990 இந்தியா இராணுவம்இலங்கையை விட்டு முழுமையாகவெளியேறிச் சென்றது.ஆனால் இந்தியா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட கனிசமான விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என பலர் இந்தியா இராணுவத்திடம்கைதிகளாக இருந்தார்கள் இவர்களில் ஒரு சில போராளிகளை மட்டும் கண்துடைப்பிற்காக விடுதலை செய்து விட்டு ஏனையவர்களை பிரமதாசா அரசிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா இராணுவம். வெளியே சென்றது
அதில் விடுதலையானவர்களின் விபரம்.இவர்கள் இந்தியா இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது தலையாட்டிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் அதில் மூன்று பேராளிகளைக் குறிப்கின்றேன் கேணல் தமிழேந்தி மூத்த போராளி சுக்குளா அரசியல்துறையைச் சேர்ந்த தங்கன் என்பன அதில் அடங்கும்.
ஆனால் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு கைதிகளாகயிருந்த அனைத்து இந்தியாச் சிப்பாங்களும் எவ்வித நிவந்தனையும் இன்றி அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இந்தியா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
எனவே இந்திய இராணுவத்தின் கதை இன்றில் இருந்து முற்றாக முடிந்து விட்டது இனி அவர்களின்மாறுக் குழுக்களிற்கு என்ன நடந்தது என்று முன்னர் குறிப்பிட்டுள்ளேன்
25/03/1990 தலைவர் யாழ்பாணம் வந்தார், பிரமதாசா விடயத்தை எப்படி கையாண்டார்,
25/03/1990 ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் திரு சொர்ணம் அண்ணைஉட்பட40 போராளிகளுடன் அவரின்மறைவு இருப்பிடமான புனிதபூமி மணற்றுக்காட்டில் இருந்து நாலு வாகனர்களில் ஏறி யாழ்ப்பாணம் நோக்கிய அவரின்பயணம் ஆரம்பம் ஆனது,அவர்கள் கொம்படிக்குச்சென்றபோது நேரம் இரவு பத்து மணி ஆகி விட்டது அதனால் வாகன வெளிச்சத்தின் உதவியோடு தலைவர் வேட்டை ஆடிக் கொண்டு சென்றார், சுமார் 20 முயல்களை அவர் சுட்டார், அவ் முயில்களையும் ஒரு உரப்பையில் எடுத்துக்கொண்டு முதலாவதாகசாவகச்சேரியில் இருந்த 1-1- முகாமிற்குச் சென்றார்கள், அங்கே சென்றதும் அங்கே நின்ற போராளிகளிடம் முயல்களை சமைக்கக்கொடுத்து விட்டு தலைவர் வந்தகளைப்யில் ஓய்வு எடுத்தார்,
அவரைப்பின்தொடர்ந்து எங்களின் வக்கூஸ் அணி 15 பேரையும் திரு கடாபி அண்ணையோடு யாழை நோக்கிச்சென்றுகொண்டுயிருந்தோம் கொம்படி ஊரியான் தரைவளிபாதையூடாக யாழைச்சென்றடைந்தோம்..
அங்கே சென்றதும் யாழ் சாவகச்சேரி பெருங்குழச் சந்தியில்அமைந்து இருந்த ஒரு வீட்டில் விடப்பட்டோம். ஆனால் தலைவரோடு நிக்கும் போராளிகளிற்கும் எமக்குமான தொடர்வை திரு கடாபி அண்ணைஅவர்களள் எமக்கு ஏற்படுத்தித்தரவில்லை . அவர் எங்களை இறக்கியதும் உடனே வன்னிக்கு திரும்பிவிட்டார்.
அதில் சென்ற சிலருடைய பேரைக் குறிப்பிடுகின்றேன், அதன் அணித் தலைவர் சந்தோஸ் உதவித் தலைவர் போராளி நிமால், போராளி சரவணன் 03 போராளி ராகீம் 04 கப்டன் மோகன சுந்தரம்05 கப்டன் கண்ணாளன் / மல்லி 06 லெப் லெனின் 07 கப்டன் காசன் 08 தாயாபரன் 09 போராளி திவாகரன்10 நான் 11 இதில் சந்தோஸ்,ராகீம் சரவணன் மற்றும் என்னுடன் நாலு பேர் இந்தப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்தார்கள் ஏணையவர்கள் மரணித்து விட்டனர்,
3 நாட்கள் அங்கே இருந்தோம் எங்களோடுயிருந்த மோகனசுந்தரம் மற்றும் சந்தோஸ் இருவரும் அவர்களின் வீடான வல்வட்டித்துறை சென்று அரிசி / மா/சீனி/ புண்ணாக்கு/ பொரிமா என நிறைய உணவு கொண்டுவந்துசேர்த்தார்கள். அனைவரும் சாப்பிட்டோம்.. அடுத்த நாள் காலையில் கிராமத்தைசுற்றிப்பார்போம் என நானும் திவாரனும் நடந்துகொண்டுபோனோம் அப்பொழுது போராளி காளி என்பவரைச்சந்தித்தோம் .அவர் தான் மட்டுமாவட்டம் என தன்னை அடையாழப்படுத்தினார்.
அவரிடம் பிரச்சனையைச்சொன்னோம் நீங்கள் எங்களிற்கு உரிய ஆட்கள் தான்என நான் நினைக்கின்றேன் நாங்கள் புனிதபூமி இருந்து வந்த நாங்கள் என்று எங்களிடம் கூறினார். நாங்கள் உதயபீடத்தில் இருந்து வந்த நாங்கள் என அவருக்குத்தெரியப்படுத்தினோம் அதையெடுத்து எங்களிற்குத்தானாகவிளங்கி விட்டது. இவர்கள் தலைவரோடு நிக்கின்றார்கள் என்பதை விளங்கிக்.கொண்டோம்.இவர் சென்றதும் ஒரு சில மணித்தியாலம் களித்து சொர்ணம் எண்ணை எங்களின் வீட்டிற்கு வந்து எங்களோடு கதைத்தார்,
எக்காரணம் கொண்டும் பொது மக்களின் விடுகளிற்குப்போகக்கூடாது அவர்களோடு பேசுவதற்கு முயற்கிசி செய்யக் கூடாது எனவும் அவர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும் முறைக்கக்கக் கூடாது எனவும் அனுமதி இல்லாமல் உங்களின் சொந்த வீடுகளிற்குக்கூட போகக்கூடாது எனவும் எங்களிற்குத்தெரியப்படுத்தி விட்டு அவர் சென்றார்,
அடுத்த நாள் உணவு 3 நேரமும் எங்களின் முகாமிற்குவந்துகொண்டுயிருந்தது.தொடர்ந்து தலைவரின் பாதுகாப்பு மற்றும் சண்டை இப்படித்தான் எங்களின் காலம் நகர்ந்தது.
1990ஆண்டுஇதே காலம்தான் தலைவரோடு நாங்கள் சாவகட்சேரி, கரவெட்டி மற்றும் பழையென மாறி மாறி வாழ்ந்த காலம்
இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலகளின் கலைபண்பாட்டுக்கலகம் செயல்பட்டுக்கொண்டுயிருந்தது
புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் கலை பன்பாட்டுக்கலகம் தலைவரால் உருவாக்கப்பட்டது,கலை பன்பாட்டுக்கலகத்திற்கு தலைவரால் முதன் முதலில் விடப்பட்ட போராளிகள் தலைமைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை. லெப்கேணல் தவா, போராளி நல்லாம்பி, மகளீர் படையணியில் போராளி சீத்தாதா தலைமையில் கப்டன் கஸ்தூரி, போராளி ஞானகி, , உட்பட மொத்தம் 07 போராளிகள் காலை பன் பாட்டுக்கலகத்திற்கு தலைவரால் விடப்பட்டனர்,
இதில் இறுதி சுத்ததின்போது போராளி சீத்தாசலண்டர் அடைந்த பின் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார், ஞானகி இப்புத்தகம்எழுதிங்காலத்தில் உயிரோடுயிருந்துள்ளார்.
புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் நடந்துகொண்டுயிருந்தது, இவர்கள் தெருக்கூத்துக்கள் வைத்து இளைஞர் யுவதிகளை பெருமளவில் இணைத்துக்கொண்டுயிருந்தகாலம்அது ,இதே காலம் தமிழகத்தில் இருந்து தேனிசை செல்லப்பா அவர்களின் இசைக்குழு தமிழீழம் வந்து யாழில் உள்ள வலிகாம் வடமராட்சி தென்மரட்சி உட்பட தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இசைக்கட்சேரிவைத்தனர்,
காசியண்ணையின் உணர்ச்சி வரிகளை பாடலாகப்பாடினார் தேனிசைச்செல்லாப்பா இந்த இசை நிகழ்விற்குப்பின்னர்தான் தமிழீழத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் அதிக உணர்வு ஏற்பட்டு ஐயாயிரத்திற்குமேற்பட்ட மாவணர்வர்கள் எமது அமைப்பில் இணைந்தார்கள்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உணர்ச்சிக் கவிஞ்சர் காசியானந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகயிருந்தது
தேனிசைச் செல்லப்பா அவரின் மகள் சொர்னலாதா இவர்கள் முக்கியபங்குவகுத்தார்கள் என்பதை எமது தமிழீழ மக்கள் மறந்து விடக்கூடாது,
இது மட்டும் அல்ல வெளிநாடுகளில் சென்று இசைக்கட்சேரி யூடாக எமது விடுதலைப்போராட்டத்திற்கு நிதிகளை பெற்றுத்தந்தவர்கள் என்பதையும் ஞாபகப்படுத்துவதோடு இதின் செயல்பாட்டிற்குமூத்த உறுப்பின ஒரு தரின் பங்களிப்பு இருந்தது என குறிப்பட்டு இருந்தேன் .,
, இவர் அதே காலப்பகுதியில் பெண்களுடனான தொடர்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்ப்ட்டமையால், பொன்திகாகம் அப்பா, பொட்டுஅம்மான் இவர்கள் இவருக்கு சாசொறுப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த போதுலும் எமது விடுதலை போராட்டத்தில் ஆழணி கூடிய மாவட்டமான மட்டக்காப்பு மாவட்டத்தில் 74 ஆண்டு காலப்பகுதியில் இருந்துபெருந்திரளான இளைஞர்களை போரட்டத்திற்கு இணைத்தது மட்டும் அல்லாமல் அவ் மாவட்டத்தில் அரசிக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், அதனால் இவருக்கு சாசொறுப்பு வழங்கினால் ஒரு மாவட்டத்தின் போராளிகளின் மற்றும் அந்த மாவட்ட மக்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதற்காக தனது ஆழுமையைப்பயன்படுத்தி தலைவர் அவர்கள் அவரிக்குப் பொது மன்னிப்பு வழங்கினார், பின் அவர் அயல் நாடு ஒன்றிற்குப்போய் வாழ்ந்ததாக நாம் அறிந்துள்ளோம்
இதைத் தொடர்ந்துஇவ் இடத்திற்கு பொறுப்பாளாராகபுதுவைஇரத்தினதுரை அவர்கள் தலைவர்அவர்களால் நியமணிக்கப்பட்டார்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்
ஒரு முக்கிய பிரிவாக இருந்தது. அது தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டது. அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை இருந்தார்.
கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன. 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல் திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டதாகும். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், வாசல் ஒவ்வொன்றும் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் செம்மணி போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியிட்டது.
இறுதி 2009 மட்டும் இவரே இதன் பொறுப்பாக இருந்தார் இறுதி சுத்தத்தின்போதுசலண்டர் அடைந்த பின் எதிரிகளால் இவர்கொலைசெய்யப்பட்டுள்ளார்,
.1990/4 ம் மாதம் அப்பொழுது வடமராட்சி கரவெட்டியில் எமது பாசறை இருந்தது வயல்வெளிகளும் அடர்த்தியான மாமரங்களும் எங்களுடையே வீட்டை அழகுபடுத்திய வண்ணம் இருந்தது
. அக்காலப்பகுதியில் எங்களுடைய உணவுத் தேவையைபூர்த்தி செய்வதற்காக அவ்விடத்தை சேர்ந்த தேவி அக்கா சமைத்துத்வைப்பார். நேரத்திற்கு நேரம் போய் உணவை எடுத்துக்கொண்டுவந்து அனைவரும் பரிமாறுவோம். எங்களிடம் 50 கலிபர் இருந்ததுஅது தலைவரின் பாதுகாப்பிற்கு உரியது அதற்கு யக்ஸ்சன் என்பவர் பொறுப்பாகயிருந்தார்.
எங்களில் இருந்து 500 meeteர் தூரத்தில் டே வீற்ட் என்ற முகாமில் தலைவர் இருந்தார் அடிக்கடி காவல் கடமைக்காக அங்கே நாங்கள் சென்று வருவோம். 3/5 நாட்கள் மட்டுமே ஒரே இடத்தில் தங்குவோம் அதற்கு மேல் நிறையக் காலம் ஒரே இடத்தில் தங்குவது இல்லை ஏனெனில் பாதுகாப்புக்காரணமாக அடிக்கடி இடங்களை மாற்றுவது எமது கடமையாகயிருந்தது. அவ் வேலையை தலைவரே தீர்மானிப்பார்,
அக்காலப்பகுதியில் எமக்கு ஒரு கறியும் சோறும் அல்லது ஏதாவது ஒரு சாப்பாடு ஒரு கறிதான் வரும் அதில் மாட்டு இறைச்சி சாப்பிடாத போராளிகள் இருந்தார்கள் அதில் நானும் ஒருதன் அப்படி மாட்டுக்கறிவரும்போது நாங்கள் சீனி போட்டு அவ் உணவைச் சாப்பிடுவோம்.
அக்காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி சலன்ற்ராஜ் இருந்தார் அவர் மாடு சாப்பிடுவது இல்லை அனைத்துப் போராளிகளும் அழுத்தம் கொடுத்து அன்று அவரை மாடு சாப்பிட வைத்து விட்டார்கள், தீவிர கடவுள் நம்பிக்கை உடைய அவர் அது பற்றி அவர் எழுதிய கடிதம் நான் மாடு சாப்பிட்டு விட்டேன் என்னை கடவுள் மன்னிக்க மாட்டார் அதனால் நான் கடவுளிற்குத் துரோகம் செய்து விட்டேன். அதனால் நான் குப்பி கடித்துச் சாவடைகின்றேன். எனது சாவிற்கு இயக்கம் தான் பொறுப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு குப்பி கடித்து அவர் சாடைந்தார்,
அது சமாதான காலம் என்பதால் அவரின் வித்துடல்வாகனத்தில் ஏற்றி மட்டக்களப்புக்குக்கொண்டு சென்று அவரின் பெற்றோரிடம் அவ்வித்துடல்ஒப் டைக்கப்பட்டது,
இதை ஆழமாகச்சிந்தித்த தலைவர் அன்றில் இருந்து இரண்டு கறியென சட்டத்தை உருவாக்கிநார் அதவது ஒரு இறைச்சி என்றால் கத்தரிக்காய் அல்லது பருப்பு இரண்டாவது கறி சமைத்தே ஆக வேண்டும் என்பதே அதின் கட்டுப்பாடாகயிருந்தது, இது இயக்கம் அழியும் வரை இந்நடமுறையிருந்தது,
அதே வடமராட்ச்சியில் நவண்டியில் என்ற இடத்தில் அடுத்த முகாம்யிருந்தது. அங்கே செளியின் பொறுப்பாயிருந்தார் மிகவும் ஒரு சிறந்த நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாழம் காணப்பாட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப் பழங்களும் நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்து போராளிகளுக்கும் வேண்டிவந்து வழங்குவார்.
அது தலைவரிற்கு மெகவும் விருப்பமாகயிருந்தது. சில நேரங்களில்தலைவரே சொல்வார் பொடியெல் சோர்வாகயிருக்கின்றார்கள் செளியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்.. அதே காலப்பகுதி20/05 /1990 / ஆண்டு காலப் பகுதியில்சாவகச்சேரியில்1-1- மற்றும்77 என்ற முகாங்களில் மற்றும் பழையில் 7,3 என அழைக்கக்படும் சுவாஸ் தோட்டத்திலும் தலைவர் தங்கும் இடங்களாகயிருந்தது, 3-4- அல்லது ஒருவராத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிக்காமல்சூழர்ச்சி முறையில் மாறி மாறி தலைவர் தங்குவார்,இது இப்படி இருக்க
10/06/1990 அதிபர் பிரமதாசா விடுதலைப் புலிகளிற்கு எதிரான இரண்டம்கட்ட ஈழப்போரை ஆரம்பித்தார்,
அடுத்து அவர் தாக்குதலை ஆரம்பித்தார்மீண்டும் பேச்சுவார்த்தை முறியடைந்தமைக்கானகாரணம் என்னன்றால் இந்தியா இராணுவம் இலங்கையில் இருக்கும்போது அவர் பேசிய பேச்சு அவர்தந்தவாக்குறுதிகள் உன்மைபோல்தென்பட்டாலும் ஆனால் இந்தியா இராணுவம் வெளியேறியதும் நடைமுறைக்கு சாத்தியப்படாதே கோமாளித்தனமான சொல்களை அவர்பயன்படுத்தினார்.
அவ்கையில்11 /06/1990 தலைவர் மாத்தையா சந்திப்பு
அதனால் மாத்தையாவை சந்தித்து அடுத்த கட்டம் தொடர்பாக சில வேலைகளை செய்ய வேண்டும் என தலைவர்சிந்தித்தார்,
அதே வடமராட்ச்சியில் நவண்டியில் என்ற இடத்தில் அடுத்த முகாம்யிருந்தது. அங்கே செளியின் பொறுப்பாயிருந்தார் மிகவும் ஒரு சிறந்த நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாழம் காணப்பாட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப் பழங்களும் நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்து போராளிகளுக்கும் வேண்டிவந்து வழங்குவார். அது தலைவரிற்கு மெகவும் விருப்பமாகயிருந்தது.
சில நேரங்களில்தலைவரே சொல்வார் பொடியெல் சோர்வாகயிருக்கின்றார்கள் செளியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்.. அதே காலப்பகுதியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தோடர்பாகக்கதைப்பதற்கு மாத்தையாவை சந்திக்கத் தலைவர் தீர்மானித்தார்.
அதுசெளியன் அவர்களின் முகாமிலையே ஏற்பாடு செய்யப்பட்டது,தொடர்ந்து தலைவரோடு அவ் முகாமிற்குச் சென்றோம், அடுத்த நாள் காலை பத்து மணி முகாமில் உள்ள முன்னரங்கக்கக்காவல் அரணில் கடமையில் நான் நிக்கின்றேன். ஒரு கயேஸ் வெள்ளை வான்வெளியே வந்து நிக்கின்றது. றோட் கரையோரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு உங்களின் பெயர் என்ன என்று அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள் பெயரைச் சொல்லவில்லை உங்களுடைய பொறுப்பாளரிடம் கேழுங்கோ என பதில் வந்தது. இரண்டு பேர் என்றால் ஒருதர் போய்க் கேட்டு வரலாம் ஆனால் தனியாக நிட்பதால் அது முடியாமல் இருந்தது. அவர்கள் 4 பேரையும் வானில் இருந்து இறக்கி உள்ளே இருக்கும் வாங்கில் இருத்தினேன். ஆனால் அதை ஒரு சில மக்கள் பார்த்துக் கொண்டு போனார்கள்.
அந்தச் செய்தி காட்டுத்தீ போல் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் என நினைக்கின்றேன். அந்த மாதத்தில் தான் தமிழர்களின் கொண்டாட்டமான கார்திகை விளக்கீடு வருவது வளமை எனவே அந்த விளக்கீட்டிற்கு செய்த உணவுகளான மோதகம் அவல் என நிறைய ஓலைப்பெட்டியில்மக்கள் கொண்டுவந்த வண்ணம் இருந்தார்கள்கொண்டுவருபவர்கள் மாத்தையா அண்ணைக்கு கொடுங்கோ என சொல்லி விட்டுப் போகின்றார்கள். அப்பொழுது தான் எனக்குத் தெரியும் மாத்தையா அண்ணையைத் தான் நாம் வைத்துயிருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டேன்.
வெளியே சென்ற சொர்னம் அண்ணை சிறிது நேரத்தில் உள்ளே வந்தார். மாத்தையா அண்ணையை ஏன் உள்ளே விடல்ல என கேட்டு எனது கன்னத்தில் அறைத்தார். அறைந்துவிட்டு அவரே மாத்தையா அண்ணையைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று தலைவரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு பிறகு என்னை சந்திப்பதற்கு வந்தார்.
மாத்தையா அண்னையை உமக்கு தெரியாதா? என சொர்ணம் அண்ணை என்னிடம் கேட்டார் அவரின் பெயர் தெரியும் ஆனால் ஆளை தெரியாது என அவரிடம் சொன்னேன். நீ அவர்களிடம் பேரைக் கேட்கவில்லையா? என என்னிடம் கேட்டார் அதற்கு நான் அவர்களிடம் கேட்டேன் அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என பதில் அழித்தேன் முன்ன்ர் ஆயிரம் தோப்படிக்கச் சொன்னவர் இதைக் கேட்டதும் தோப்படிக்க வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்.பின்னர் இதையறிந்த தலைவர் செளியனை என்னிடம் அனுப்பியிருந்தார் நடந்த பிரச்சனைகளை தெளிவாகச் செளியனிடம் சொன்னேன். அதைக் கேட்டுத்து செளியன் போய் விட்டான் தகவல் தலைவரிக்கு சென்று விட்டது.
இக்காலப்பகுதியில் கடல் நடவடிக்கைகளிற்கு கடல்புறா என்ற பேரில் தளபதி கடாபி அவர்களே பொறுப்பாக இருந்தார்,
19/06 /1990 யாழ் கோட்டை முதலாவது சண்டை நடத்த திட்டம் தீட்டப் படப்படது
21/06/1990 மன்னார் கொண்டச்சி முகாமை தாக்குவதற்கு விடுதலைப்புகள் திட்டமிட்டனர்,
10/07/1990 அன்றுவிடுதலைப் புலிகளின் இரண்டாவது கரும்புலித்தாக்குதல்
22/07/1990 யானையிறவில் இருந்து பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை சிங்கள இராணுவம் மேற்கொண்டது
லெப்டினன்ட் சி ட்டன்.உட்பட வீவேங்கை தாகன் யாழ்,வீரவேங்கை சீலன் மட்டு, கப்டன் பிரபா யாழ், லெப் சிட்டன் மட்டு,2ம் லெப் தங்கப்பா யாழ், வீரவேங்கை முத்து யாழ், வீரவேங்கை டெனா, வவுனியா,2ம் லெப் தேவன் முல்லைத்தீவு என எட்டுப்போராளிகள் வீரச்சாவு அடைந்தனர் இதில் 50 போராளிகள் காயம் அடைந்தனர்,
23//0/7/1990 அன்றுகீரிமலைகடல் கரையில் சிறிலங்கா கடல் படையின் பாரிதரையிறக்க நடபடிக்கை
30/08/1990 றோமியா நவம்பர் அல்லது லெப் கேணல் ராஜன் அவர்கள்ளின் குடும்பம் எமது போராட்டத்திற்கு செய்யத கடமையை மறக்க முடியாது.
23/11/1990 வன்னியில் இருந்த சிறு முகாம்களை அளித்தொளித்தால் தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது,
அச்சண்டையில் பங்குபற்றிய போராளி குறிப்பிடுகையில்
போர்க் அவர்களின் மன நிலை எப்படி இருந்தது அவரின் உறவினர்கள்
“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்
வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது.
“நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.
அந்தக் குரலில் உறுதி தெரிந்தது”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.
கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….
இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

“ தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” ‘ஏன் சாகப் போறியளோ’ பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன ”
அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.
சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.
சிறிது நேரத்தின் பின்
தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.இப்படித்தான் ஒவ்வொரு கரும்புலிமரவர்களும் தங்களின் இரகசியத்தைப்பாதுகார்த்தார்கள்
90களில் இருந்து யாழ் மாவட்டம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது இராணும் இப்படியான சண்டைகளில்தான் ஈடுபடும் அச்சம்பவத்தில் பங்குபற்றிய போராளி ஞானகி குறிப்பிடுகையில்,திடீரேன பின்வாங்வாங்குவது அவர்களின் தொடர் நடவடிக்கையாகயிருந்தது காவல் அரனை தாக்க வந்த இராணுவத்தின் முயற்சியை முறியடித்து முதன்முதலாக இராணுவத்தின் பொடி எடுத்தபெருமையுடன் பெண் போராளிகளின் வீரத்தை நிலைநாட்டி இறுதியில் தன்னையும் அற்பணித்த கப்டன் அஜித்தா,
22/12/1990 கட்டுவனில் பெண் போராளிகளின் வீரம்

பக்கத்தில் உள்ள முகாமுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தான். அவள் அதிகமாகக் கூறுவாள் அறியாமல் கூட .நான் தவறு செய்யக்கூடாது. அப்படி தவறு செய்து விட்டால், நான் தண்டனை பெறும்போது அண்ணாவுக்கு அவமானம்* என்று. எந்தப்பிள்ளையையும் அன்பாகத்தான் அணைப்பாள். ஆனால் கூடவேகண்டிப்பும், தவறுகளுக்கான தண்டனைகளை வழங்கிவிட்டு பின் கூப்பிட்டு ஆறுதலாக அந்தத்தவறுகள் இனிமேல் விடக்கூடாது என்றும், அதற்காகத்தான் தண்டனைகளைத் தந்தேன் என்றும் மிக நீண்ட விரிவுரை. ஆம்! அவள் மகளீர் படைப்பிரிவைப் பொறுத்த வரையில் ஒரு பேராசிரியர்தான். அன்று எல்லாம் வழமை யாகத்தான் இருந்தது. ஆனால் அஜித்தா மட்டும் விம்முகின்றாள், ஆற்றமுடியாத அழுகை, எவராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோருமே அப்படி அப்படியே உறைந்து போனார்கள். முகாமிலுள்ள அத்தனை பேரும் ஒன்று கூடிய ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் பின் மெல்ல எல்லோரும் அதிர்ந்தவர்களாய்… அஜித்தாவின் அண்ணாவிற்கு இயக்கக்கட்டுப் பாட்டு விதிகளை மீறியமைக்காய்…
05 /01/1991 பாரிய இராணுவநடவடிக்கை ஒன்றை செய்து காங்கேசன்துறை முகாமைசுற்றவுள்ள பகுதியைப்பிடித்ததுஇராணுவம்.
இது இப்படி துயரமாக இருக்க 05 /01/1991 பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை செய்து காங்கேசன்துறை முகாமைசுற்றவுள்ள பகுதியைப்பிடித்து பலாலியை பலப்படுத்த இராணுவம் திட்டம் இட்டது அதற்கு அமைவாக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது இராணுவம், ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட எந்த இளப்பும் இல்லாமல் தச்சன் காட்டுப் பகுதியை கைபற்றியது சிங்களப்படை,
மற்றும் கொல்லன் களட்டி எமது மக்களின் வெங்காய் வயல்களையும் ஏனைய வாழை கிறப்ஸ் தோட்டங்களையும் கைப்பற்றி தச்சன் காடு மாவட்ட புரம் ஊடாக பாரிய தொடர்காவல் அரன்களை அமைத்தது சிறிலங்கா இராணுவம்.
இதனால் பல மக்கள் தங்களின் சொந்தத் தொளிலான விவசாயத்தை இளந்தார்கள்,அப்பொழுது யாழ் மாட்ட தளபதியாக இருந்த தினேஸ் அல்லது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஆழனிப்பற்றாக்குறையாக அப்பிரதேசம் விடுபட்டதாக தலைவரிடம் குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து தலைவர் அப்பிரதேசத்தை மட்டும்தான் பொறுப்படுத்ததோடு அப்பிரதேசத்தை தான் நேரடியாகப்பாதுபாகப்பதற்காக தளபதி சொர்ணத்தின் தலைமையில் தலைவரின் நேரடி வளிநடத்தில் செயல்படும் one four படையணி அனுப்பப்பட்டது.
அவ்வகையில் தலைவரோடு நீன்றே காலமாக பாதுகாப்புக்கடமையில் இருந்த கப்டன் தீபன். மேஜர் சலீம்-கட்டன் கேதீஸ் அவர்களோடு நானும் மட்டக்களப்பு மாவட்டம் இருந்து எமது படையணிக்காக புதிதாக 75 போராளிகள் வந்துயிருந்தார்கள். அவர்களையும் இணைத்து மற்றும் எமது படைபணியில் இருந்த போராளி சூட்டி போராளி கிறீஸ்னா என தளபதி சொர்ணம் அண்ணையால் கட்டன் தீபன் தலைமையில் ஒரு கொம்பணி சண்டைக்கு உரியவாறு உருவாக்கப்பட்டது.
அதில் 15 போராளிகளிற்குச் சூட்டி அடுத்து 15 போராளிகளிற்கு போராளி கிஸ்னா 15 போராளிகளிற்கு மேஜர் சலீம், அடுத்து 15 போராளிகளிற்கு மேஜர் கேதீஸ் என அணிக்கொமாண்டர்ககள் நியமணிக்கப்பட்டு அதற்கு உதவியாக பதிங்கிச் சுடும் போராளி லெப் வீரா இணைக்கப்பட்டார். அதை விட எனது தலைமையில் ஒரு வேவுரீம் உருவாக்கப்பட்டது.
அதில் லெப் நகுலேஸ் லெப் ராஜா போராளி வேல்ராஜ் போராளி உதயன் என 5 ந்து பேர் கொண்ட அணி உருவாக்கி இரவு நேரங்களில் இராணு முகாம் மற்றும் தச்சன்காட்டுத் தொடர் காவல் அரன்கள் தொடர்வான தகவல் எடுக்குமாறு எங்களிடம் சொர்ணம் அண்ணையால் எங்களிற்குச் சொல்லப்பட்டது.
தொடர்ந்து எங்களின் அணி தச்சன் காட்டிற்குச் சென்றது சிறப்ஸ் தோட்டங்களும் வாளை மற்றும் வெங்காய வயல்கள் எங்களை வரவேற்றது அது மட்டும் அல்ல அங்கே ஒரு சில முதியவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் மிகவும் நாட்டுப்பற்று நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.
14/01/1991 தமிழர் நாளான தைப்பொங்கள் அன்று அங்குள்ள முதியவர்கள் பொங்கல் செய்து அனைத்துப் போராளிகளிற்கும் பரிமாறி தங்களின் அன்பை வெளிக்காட்டினார்கள்.
அது அப்படி இருக்க எங்களின் வேவு அணி ஒவ்வொரு இரவும் இராணுவ முகாம். உள்ளே. சென்று தகவலை எடுத்துக்கொண்டு இருந்தோம்.வழமையாக நானும் ராஜாவும் உள்ளே சென்று வருவோம், ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் தொடர் காவல் அரனை பல நாட்களாகக்கண்காணித்து ஆமி இல்லாத காவல் அரனிக்கு மேலால் ஏறி உள்ளே செல்வோம் ஏனெனில் தரைப்பகுதிகள் அனைத்திலும் முள்வேலிகள்போடப்பட்டுயிருக்கும் அத்தோடு கீழே மிதிவெடிகளும் வைத்து இருப்பார்கள் அதனால் நாங்கள் இதைப் பயன்படுத்துவோம் இது எங்களிற்குப்பாதுகாப்பாகயிருந்தது,
உள்ளே சென்று இரவு 3 மணிக்கு வெளியே வருவதற்காக காவல் அரணிக்கு மேலால் ஏறும்போது இராணுவம் எங்களைக்கண்டு சுடத்தொடங்கி விட்டது ராஜா வெளியே ஓடி விட்டான் நான் பதட்டம் அடைந்து கேம்புக்குள்ளே ஓடிவிட்டேன், ஆனால் நான் பதட்டம் அடையவில்லை இராணுவதின் கேம்புக்குள் சிக்கி விட்டோம் அவனிக்குத்தெரியாமல் மறைவாகயிருந்து வெளியே செல்ல வேண்டும் என நினைத்து வேகமாக நடந்து சென்று மாவட்ட புரப்பக்கமாகயிருந்த மக்களின் பாழ் அடைந்த விட்டுப்பக்கம் சென்றேன், அங்கு இருந்த ஒரு உயிரமான விட்டிற்கு மேலே ஏறி ஓட்டைக்களட்டி லெவல் சீற்றுக்குள் இறங்கினேன், அதற்குள் மறைந்துகொண்டுயிருந்தேன்
காலை விடிந்து ஒரு பத்து மணியிருக்கும் வெளியே அவதானித்தேன் ஆமியின் நடமாட்டம் தெரியவில்லை வோக்கியை ஓன் பண்ணி சொர்ணம் அண்ணையிடம் பிரச்சனைத் தெரிவித்தேன் அவர் உள்ளே இருக்கும் எங்களின் போராளிகளோடு கதைக்க வேண்டாம் எனவும் இரவானதும் குப்பியைக்கடிக்கக் கூடியவாறு பைக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டு கடல் கரைப்பக்கம் சென்று அங்கே அவர்களைக்கண்காணித்து அவர்களின் நடமாட்டம் பற்றித் தனக்குத் தெரிவிக்கும்மாறு என்னிடம் சொன்னார்,
அது இலகுவான விடடம் அல்ல நிறையத் தூரம் நடந்து செல்ல வேண்டும் போனால் இந்த இடத்திற்கு வர முடியாது என்பதும் எனக்குத்தெரியம் அதனால் இரவு பத்து மணியானதும் விட்டில் இருந்து கீழே இறங்கி காலைக் கடன்களை முடித்து பழைய கிணற்றில் தண்ணீர் அழ்ளி அதை குருவிகள் குடிப்பதற்கு வைத்துப் பார்த்தேன் அதை புழுனி என்ற ஒரு குருவி குடித்துச்சென்றது, இருந்தும் அதைக் குடிப்பதற்கு மனம் வரவில்லை நடக்கத்தொடங்கினேன் இடையில் தென்னைமரம் ஒன்று காய்த்துக் கிடந்தது இரண்டு நாள் சாப்பிட்டு கடும்பசியாகயிருந்தது அதனால் மரத்தில் ஏறி மூன்று இளணி புடுங்கி இளநீரையும் குடித்து மழுக்கலையும் சாப்பிட்டேன், எனது பசி அடங்கியது
அங்கே சென்று அவதானித்தேன் கடல் கரைப்பக்கமும் காவல் அரன்கள் இருந்தது செறிவாக்கயிருக்கவில்லை ஆனால் புல்வெளிகள் பெரிதாக வழர்ந்து இருந்தது நான் தவண்டு தவண்டு கடல்கரைக்குச் சென்றேன் அங்கே சிறிது சிறிது கற்பாறைகள் காணப்பட்டது, நான் ஒரு கற்பாறைக்குள் புகுந்துகொண்டேன்
அது சூனியப் பிரதேசம் என்ற காரணத்தால் ஆமியின் வோட்டோ அல்லது நடமாட்டவோ இருக்கவில்லை, அடுத்த நாள்சொர்ணம் அண்ணைக்கு வோக்கியை ஒண் பண்ணி அண்ணெய் நான் உள்ளே சென்று ஒரு பத்து ஆமியைச் சுட்டு விட்டு நானும் தற்கொலை செய்யலாம் என அவருக்குஆலோசனை வழங்கினேன் அப்படி ஒரு ஆமியையும் சுட வேண்டாமாம் அப்படி நீர் சில சமையம் பிடிபட்டால் பாதுகாப்பு முகாம்களை மாற்றவேண்டிவருமாம், என்று அண்ணை சொன்னவர், உன்னை றைபுளையும் கோழ்சறையும் களட்டி தண்ணீருக்குள் ஏறிந்து விட்டு யட்டியோடு நீந்தி கீரிமலைக்கு வருமாறு அண்ணை சொல்லியுள்ளார் உமக்கு புதுறைவுள் யூனிபோம் தரலாம் என்று தலைவர் சொன்னதாக அவர் சொன்னார்,அவர் சொன்னதுபோல் நான் நீந்தி கீரிமலைக்கு வந்து சேர்ந்தேன் புது T81 றைவுள் புது வரிப்புலிச்சீருடை வைத்துக்கொண்டு எனது வரவைப் பார்த்துகொண்டு சொர்ணம் அண்ணையிருந்தார்,நான் சென்றதும் உடுப்பை மாற்றிக்கொண்டு றைபுளையும் கட்டிக்கொண்டு மீண்டும் தச்சன் காட்டிற்குச்சென்றோம் இத்தகவலை எவருக்கும் சொல்லக் கூடாது எனசொர்ணம் அண்ணை எனக்குத் தெரியப்படுத்தினார்,அங்கே சென்று ராஜாவைச் சந்தித்தேன் என்னைவிட்டதற்காக 5000 தோப் ராஜாவிற்கு சொர்ணம் அண்ணையால் வழங்கப்பட்டுயிருந்தது,மீண்டும் இருவரும் கடமையை ஆரம்பித்தோம்,
அதை விட பதிக்கிச் சுடும் லெப் வீராவின் பணி மிகச் சிறப்பாக இருந்தது,
அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் 20 திற்கு மேற்பட்ட இராணுவ வீரர்களைச்சுட்டுத்தள்ளினான் லெப் வீரா .ஆனால் மாவட்ட புரத்தில் கடாசியாக பதிங்கிச்சுடும்போது மரத்திற்கு மேல் இருந்து வீரா இலக்கை தேடிக்கொண்டுயிருந்தான் ஆனால் இராணுவப்பகுதியில் இருந்து பதிங்கிச்சுடுபவனும் இலக்கைத்தேடிக்கொண்டுயிருந்தான். ஆனால் அவன் விட்டிற்கு மேலே இருந்தான் வீரா மரத்திற்கு மேலே இருந்தான் இருவரும் இலக்கைத்தேடித்தேடி இறுதியில் இருவரும் இலக்கை கண்டுபிடித்து விட்டார்கள்.
இருவரும் அன்றைக்குத்தான் ஒருதரை ஒருதர் குறி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இருவரும் திறமையானவர்கள் அந்த இராணுவ வீரனும் 6ற்கு மேற்பட்ட எமது போராளிகளைச்சுட்டுகொலை செய்ததோடு 10 திற்கு மேற்பட்ட போராளிகளைச் சுட்டு காயப்படுத்தினானான் எனவே இருவரும் திறமையானவர்கள் தந்திரமானவர்கள் .
என்ற காரணத்தால் இருவரும் ஒரே நேரத்தில் தங்களின் ஆயுதங்களின் விசைவில்லை அழுத்தினார்கள். இருவரிக்கும் ஒரே நேரத்தில் இடது கண்களிற்குள்ளால் வெடிபட்டுப்பறிந்தது. இருவரும் ஒரே நேரத்தில் வீரச்சாவு அடைந்தார்கள். இதை ஒட்டுக்கேட்கும் கருவியூடாக விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தினார்கள்.
இது தான் இவர்களின் கடசி இலக்காகயிருக்கும் என்பதை இவர்கள் இருவரிக்கும் தெரிந்துயிருக்கவாய்ப்புயில்லைஅன்று அவன் வீரச்சாவு அடைந்தான் லெப் வீரா என்ற நிலை அவனிக்கு சொர்ணம் அண்ணை வழங்கினார், 20 திற்கு மேற்பட்ட இராணுவத்தை குறிதவறாமல் சுட்ட பெருமை அவனையேசாரும்,.லெப் வீரா மட்டக்காப்புஎன்ற போராளிஎமது படையணிக்குப் பெருமை சேர்த்தான்
இதற்குப்பின்னர் அப்பகுதியில் இருந்த21 காவல் அரனையும் தாக்கி அழிக்க வேண்டும் என சொர்ணம் அண்ணை திட்டம்மிட்டார்,
02/02/1991 எங்கள் அனைவரையும் தச்சன் காட்டில் இருந்து எழுதுமட்டுவாள் தென்னம் தோட்டம்கொண்டுபோய் அங்கே தச்சன்காடு மினி முகாம் தாக்குவதற்கான மாதிரிப்பயிற்சி அதாவது தடை உடைக்கும் பயிற்ச்சி நடைபெற்றது. அப்பயிற்சியை தளபதி சொர்ணம் அண்ணையே நேரடியாகயாகக்கொடுத்தார். ரோப்பிரோ அடித்து தடை உடைத்து கடுமையான பயிற்சி அன்று நடைபெற்றது.
பயிற்சி முடிந்து மீண்டும் தச்சன்காடு வந்து சேர்ந்தோம் அங்கே அமைந்து இருந்த 21 ரு தொடர் காவல் அரண்களையும் அடிப்பதுதான் எங்களின் திட்டமாகயிருந்தது
.05/02/1991 இரவு 8 ட்டு மணிக்குச்சண்டை ஆரம்பம் அன சொர்ணம் அண்ணையால் எங்களிற்குச் சொல்லப்பட்டது.
முதலாவது எமது தயாரிப்பான பசிலன் அடிப்பது எனவும் பின்னர் தடையை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வது என திட்டம் இடப்பட்டது.
ஆனால் பசிலன் அடிக்கும் போது அனைத்துப் போராளிகளும் முதலாவது Rவியில் சண்டைக்குத் தயார் ஆக நிக்க வேண்டும். அன்றைய சண்டைக்கான சங்கீதப்பாசை கொத்து ரொட்டி சாப்பிட்டாச்சா என்றால் சண்டைக்குத் தாயார் ஆக நில்லுங்கோ என்பதைக்குறிக்கும். தண்ணி குடிச்சாச்சா? என்றால் ஓம் என்றால் தானாக பசிலன் காரன் சண்டையை ஆரம்பிப்பான்.
ஆனால அன்றையச் சாப்பாடும் கொத்துரொட்டிதான் காவலரனில் இருந்து 400 மீற்றர் பின்னால் இருந்து அனைவரும் கொத்து ரொட்டி சாப்பிட்டுக்கொண்டுயிருக்கின்றோம். கொத்து ரொட்டி சாப்பிட்டாச்சா என பசிலன் காரன் தீபண்ணையிடம் கேட்டான் சாப்பிட்டுக்கொண்டுயிருக்கின்றோம் என பதில் அளித்தார் ஐந்து நிமிடம் களித்து தண்ணீர் குடிச்சாச்சா என பசிலன் காரன் கேட்டான் அவரும் மறந்துபோய் ஓம் என பதில் அளித்தார். உடனே அவன் பசிலன் தாக்குதலை ஆரம்பித்தான் பேர் இரச்லோடுபோய் பசிலன் வெடித்தது.
எதிரி சண்டையை ஆரம்பித்து விட்டான் நாங்கள் 400 மீற்றர் பின்னால் நிக்கின்றோம். அப்பொழுது நான் தீபன் அண்ணையிடம் போய் இது தவறுதலாக நடந்து விட்டது சொர்ணம் அண்ணையிடம் சொல்லி சண்டையை நிறுத்தி என்னொரு நாளைக்கு இதைச் செய்வோம் என ஆலோசனை வளங்கினேன்.
ஆனால் அதை தீபன் அண்ணை நிராகரித்ததோடு அதை சொர்ணம் அண்ணை ஏற்கமாட்டார் நீர் முதலில் பாதையைக்காட்டு என என்னிடம் சொன்னார். அப்பொழுது நான் சூட்டி அண்ணையின் 15 பேர் கொண்ட அணியைக் கூட்டிக்கொண்டு காவலரனில் இருந்து 30 மீற்றர் கம்பி றோள் அரிகில் கொண்டு விட்டேன் அப்பொழுது கப்டன் தீபன் அண்ணையும் எங்களோடுதான்வந்தார்.
சூட்டி அண்ணை தனதுT81 துப்பாக்கியால் 3 றைவுள் கிறினெட்காவல் அரனை நோக்கி அடித்தார் 3ன்றும் முன்னால் துப்பிக்கொண்டு விழுந்தது,ஆனால் தேவராஜ் தனது துப்பாக்கியால் காவல் அரனை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருந்தான் நான் எதிரியின் இலக்கை அவர்களிற்குக்காட்டிக்கொண்டுயிருந்தேன்,
ஆனால் அது இலக்கை தாக்கவில்லை அப்பொழுது நாங்கள் நிக்கும் இடத்தை துப்பாகி சுவாலை எதிரிக்கு தெளிவாகக் காட்டிக்கொடுத்தது, எதிரி 60 மில்லிமீற்றர் எறிகனையாலும் Ak LMG களாலும் கடுமையாத்தாக்கினான் அவ்வேளை எங்களோடு வந்த தலைமைப் பொறுப்பாளர் கப்டன் தீபன் அவர்களும் கழுத்தில் வெடிப்பட்டுஅவ்விடத்தில வீரச்சாவு அடைந்தார், வீரச்சாவு அடைத்தார்
தீபன் தீபன் என சொர்ணம் அண்ணை கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்,அதனால் வோக்கி அலறிக்கொண்டுயிருத்தது,அப்பொழுது நான் சொர்ணம் அண்ணையைத்தொடர்வு எடுத்து தீபன் அண்ணை வீரச்சாவு என்பதை தெரியப்படுத்தியதோடுஉன்மையாக நடந்த பிரச்சனையை அருக்குச் சொன்னேன்
ஆரப்பத்தில் எனக்குப்பேசினார்பின்னர் நானும் காயம் அடைந்துவிட்டேன் என அவருக்குத் தெரியப்படுத்தினேன், காயம் அடைந்தவர்களையும்கூட்டிக்கொண்டு என்னையும்பின்னுக்கு வருமாறு கட்டளை வழங்கினார்.
எனது காலிலும் காய்ம் ஏற்பட்டது கடுமையான வலியாக எனக்கு இருந்தது அனைவரையும் கூட்டிக்கொண்டுபின்னால் வந்தேன்எனது சூவைக்களட்டி எனது காலிக்கு மருந்து கட்டுவதை சொர்ணம் அண்ணன பார்த்துக்கொண்டு இருந்தார் பின்னர் என்னை மருத்துவமனைக்கு அனுப்பினார்,
அச்சண்டை மிகத் தோல்வியில் எமக்கு முடிந்தது எமது தரப்பில் வேவு அணியில் இருந்த லெப் ராஜா மட்டக்களப்பு மற்றும் லெப் நகுலேஸ் பூவரசம்குழம்வவுனியா தலைவரின் முக்கிய பாதுடாதுகாப்புப்போராளிகளான கப்டன் தீபன்திருமலை- மேஜர் சலீம்யாழ்பாணம்-கப்டன் கேதிஸ் திருமாலை இவர்கள் உட்பட எமது தரப்பில் மொத்தம் 29 போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள் இராணுவத்தின் தரப்பில் 7 பேர் கொல்பட்டனர்.. இதே காலம்தான் எமது இயக்கத்தில்.
இருந்த அனைத்துப் போராளிகளிற்கும் தகட்டு இலக்கம் வழங்கப்பட்டது,
எமது வண்போர்பிரிவிற்கு 0, என்ற குறியீட்டுடன் வழங்கப்பட்டது எனது முதலாவது தகட்டு இலக்கம்0,149என்ற இலக்கம்வழங்கப்பட்டது அதின் பொருள் எனக்கு முன்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்களின் தொகை படையணியில்148 என்பதாகும், அப்பொழுது எமதுயணியில் கடசியத் தகட்டு இலக்கம் 750 ஆகும் ஒவொரு மாவட்டங்களிற்கும் தமிழ் எழுத்துகளில் வழங்கப்பட்டது,

சிறுத்தைப் படையணி கா, மாலதி படையணி எ,சோதியாப் படையணி ஞா, யாழ் மாவட்டம் உ, மன்னார் மாவட்டம் ஊ மட்டக்களப்பு அ,புலநாய்வுத்துறை ஐ என வழங்கப்பட்டது, இதின் நோக்கம் சண்டையின் போது அவரின் உடம்பு முழுமையாகச் சிதைவு அடைந்தால் அவரை அடையாளம் காணுவதற்காகவே வழங்கப்பட்டது, தலைவரின் சிந்தனையில் இதுவும் ஒன்றாகும்,
19 /03 /1991ஆணையிறவைத்தாக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர்அதற்கான ஆயுதக்கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்,,
அங்கே நாங்கள் கவடிவிலையாடுவது மீன்பிடிப்பது என பல பொழுதுபோக்கான வேலைகளில் ஈடுபட்டோம் வல்வெட்டித்துறை மக்களை பொறுத்தவரையில் எமது அமைப்பில் அவர்களும் போராளிகள் போன்றுதான்பார்கப்பட்டார்கள், அதனால் அவர்களோடு சேர்ந்து விலையாடுவது நொடி சொல்வது என மிக மகிழ்சியாகச் சென்றது எங்களின் காலம்
, கவடிவிலையாடுவது கடலில்குழிப்பது காவல் கடமைகளில் ஈடுபடுவது. இளநீர் புடுக்கக்கூடாது என சொர்ணம் அண்ணையால் கடுமையான கட்டுப்பாடு போடப்பட்டது .அதனால் களவாக ஒரு சிலர்இநீர் குடித்தது பிடிபட்டு அவர்களிற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது,
.ரொயிலட் போபவர்கள் அனைவரும் மண் வெட்டிகொண்டு போய் வெட்டித்தாக்க வேண்டும் என கடுமையான அட்டுப்பாடு கொர்ணம் அண்ணையால் போடப்பட்டது.
அந்நாட்களில் நாங்கள் அனைவரும் காவல் கடமையில் இரு போராளிகளை நிறுத்தி விட்டு அனைவரும் கடல் கரைமணலில் இரவையில் படுத்து உறங்குவோம் .அவ்வேளை இரவு ஒரு 12 மணி இருக்கும் என நினைக்கின்றேன், எனது காது ஒன்றில் ஏதோ உள்நுளைந்துவிட்டது சிறகு அடிப்பது போல் உணரக்கூடியவாறு இருந்தது .உயிரு போற அழவிற்கு வலியாக இருந்தது, அப்போது எங்களின் 15 பேருக்குப் போறுப்பாகயிருந்த மேஜர் மாறன் அவர்களை எழுப்பி பிரச்சனையைச் சொன்னேன்,
எப்படி வலிக்குது என்று என்னிடம் கேட்டார் சிறகு அடிப்பது போல் உள்ளது என்று அவரிடம் சொன்னேன் எனது இரண்டு காதையும் அவரின் கையால் காத்து உள்ளே போகாதவாறு அவரின் இரு கைகளாலும் எனது இரண்டு காதுகளையும் அழுத்திப்பிடித்தார் சிறிது நேரத்தால் இரண்டு காதையும் திடீரென விட்டார் வண்டு வெளியே பறந்து விட்டது எவளவு திறமையான போராளிகள் எமது இயக்கத்தில் இருக்கின்றார்கள் என எண்ணி பெருமிதம் அடைந்தேன் எனது வலி இல்லாமல் போனது,
இப்படி இருக்க ஒரு நாள் இரவு 10மணி 23 மில்லிமீற்றர்க கனோன் உட்பட பெரிய ஆயிதக்கப்பல் ஒன்றுவந்து கரை தட்டியது தளபதி சொர்ணம் அவர்களின் கட்டளைக்கு அமைவாகபொது மக்களின் உதவியோடு கட்டலில் வந்த 23 உட்பட ரசியன் 50 கலிபர் போட்டின் பொயன் 5 அதாவது45 மில்லிமீற்றர் ஆயுதம் பெரும் தொகையான வெடிபொருட்களை இறக்கிக்கொண்டுயிருந்தோம்,
அதற்கு அமைவாக அச்சண்டைக்கான பொறுப்பை தலைவர் சுமனிடம் ஒப்படைத்தார். சுமன் சண்டைக்கு போராளிகளை தயார்படுத்தினான் அதே நேரம். மன்னாரில் முதல் கரும்புலித்தாக்குதல் நடத்துவது என்றால் தன்னையே அனுப்ப வேண்டும் என்று டாம்போ சொன்னது சுமனிற்குயாபகம் இருந்தது.தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக… அந்தக் காட்டு முகாமில் உயர்ந்த மரமொன்றில் நிழலில், அதன் அடிவேரில் சாய்ந்திருந்தபடி…. நண்பனொருவனுக்கு டாம்போ தன் வீட்டுக்கதையைச் சொன்னான்.
இதே காலப்பகுதியில்தான்தான்கொக்குத்தொடுவாய்பிரதேத்தை சேர்ந்த போராளி மகேந்திஅவர்கட்கு சாவகொறுப்பு வழங்கப்பட்டது,
04/05/1991 கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் இவர்களின்வீரச்செயல் நடந்தது.
04/05/1991 அன்று அதாவது வடமரச்சிப்பொறுப்பாராக இருந்த எஸ்சோ அல்லது சூசை அவர்கள் கடல்புறாவை தளபதி கடாபி அவர்களிடம் இருந்து/1991 ஆரம்பப்பகுதியில் தலைவர் அவர்களால் தளபதி எஸ்சோ அவர்கட்டு கடல்புறாபொறுப்பு வழங்கப்பட்டது, அக்காலப்பகுதியில்தான் புதிதாகக்கடல் புலிகள் என்ற பெயரைத் தலைவர் மாற்றினார்,
புதிய பொறுப்பாளர் புதிய பெயர் என அனைத்தும் மக்களிற்கு அதியசயமாகயிருந்தது பொறுப்படுத்துகாலத்தில் ஒரு பெரிய தாக்குதலாகவும் அவருக்கு ஒரு பெரும்புகளைத் தேடித்தந்ததாக்குதலாகக்கூடஇதைப்பார்க்கலாம்.
அபிதா ஒருசாதாரண போர்க்கப்பல் அல்ல சிறிலங்கா கடல்படைகளிடம் இருந்த பெறுமதியான கப்பல்களில் அதுகும் ஒன்று,இது ஒரு கட்டளையிடும் கப்பலாகயிருந்தது இக்கபலில் கட்டளைக் கோபுரம் பொருத்தப்பட்டு அனைத்து சிறிய படகுகளிற்கும் கட்டளை வழக்குவதே இதின் கடமையாகயிருந்தது இக்கட்டலை கரும்புகளிகளால் களிப்பதுதான் விடுதலைப்புலிகளின் திட்டமாகயிருந்தது,
அதற்கு கட்டன் ஜேந்தன் அவர்களும் என்னொரு போராளிக்கும் சூசை அவர்களின் அனுமியுடன் கப்டன் சிதம்பரமே பயிற்சியைவழங்கி வந்தான்அப்பயிற்சி முடிந்ததும் அவர்கள் தாயார் ஆகயிருந்தார்கள்
, ஆனால் கரும்புலித்தாக்குதலிற்கு இருவருக்குகும் அனுமதி வழங்கப்பட்டபோது அப்போராளி மறுப்புத் தெரிவித்தான் ஆனால் அவனோடு நின்ற ஜெயந்தன் அவர்கட்கு பெரும்கவலையாகயிருந்தது, கால் இல்லாத நிலையில் இதைப்பார்துக்கொண்டுயிருந்தஆசிரியரான சிதம்பரத்திற்கு சகிக்க முடியாமல் போனது ஏனனெனில் ஏலாது என்று சொன்னவன் அவன் பயிற்சி வழங்கமுதல சொல்லியிருக்கவேண்டும் இடையில் இப்படி செய்து இருக்கக்கூடாது என்பதே அவனின் கருத்தாக இருந்தது, கொன்ற கொள்கையில் சிறிதளவும் தளம்பால் ஜெயந்தன் நின்றான்.இதை அவதானித்த சிதம்பரத்திற்கு ஒரு உறுதி வந்தது
,ஆனால் இயக்கத்தில் ஒரு மரபு இருந்தது போராளிகள் செய்யாமல் விட்டால் அப்பொறுப்பாளரே அக்கடமையைச் செய்ய வேண்டும், இதை அறிந்தவன்தான் சிதம்பரம், அதனால் தானே ஜெயந்தனோடு போவதாக தளபதியிடம் அனுமதி எடுத்தான் சிதம்பரம்,
பயிற்சி வழங்கிய ஆசானும் மாணவனும் சென்று தங்களின் வாழ்வை முடித்துக்கொண்ட வலாறாகவே இக்கதை பதிவானது,
சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல்மூழ்கடிக்கப்பட்டது.
கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.போராளி சிதம்பரம் பற்றி
. சிதம்பரம் ஏற்க்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான். சந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.
இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன் வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம். ….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரானாகச் சென்றுவிட்டான்.
.” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள். || தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்காளைப் பற்றிச் சொல்கிறார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.
அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது,
அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது.
அபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். “நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…?” எனக் கேட்டோம்.
“நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன…… சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அல்லது தயக்கமோ தென்படவேயில்லை, கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் … ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’ ‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது.
கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள். அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிட்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளான அபிதா கடற்படைக் கப்பல்........... “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன.
பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்,இவனின் தளராத உறுதிய அறிந்த தலைவர் அவனின் பேரிலே படையணியை உருவாக்குவாறு கருணாவிற்கு தெரியப்படுத்தினார், ஆனால் ஜேந்தன் சிதம்பரம் படையணி என்பதே பொருத்தமாகயிருக்கும் என தலைவருக்குப் பல போராளிகள் ஆலோசனைக் கடிதம் எழுதினார்கள்,
வைத்த பேரை மாற்ற முடியாது என்பதை விழங்கிக்கொண்டதலைவர் தனது படையணிக்கு பேர் வைக்கும்போது தனது பாதுகாப்பில் நின்ற இரு போராளிகளான இம்ரான் மற்றும் பாண்டியன் இருவரையும் இணைத்து இம்ரான் பாண்டியன் படையணி என்ற பேரை வைத்து போராளிகளை மகிழ்சிப்படுத்தினார்,
ஜெயந்தன் சிதம்பரம் வீரச்சாவு அடைந்தபின் புதிய படையணியை உருவாக்கிய தலைவர்.
10/04/1991 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிஉருவாக்கம்
தளபதி பால்ராஜ் அவர்களின் ஆழுகைக்குக்கீழ் செயல்பட்டுக்கொண்டுயிந்த கொமாண்டோ அணியையும்மற்றும் அனைத்துமாவட்டங்களிலும் இருந்து திறமையானபோராளிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியாகும்,
தலைவரிக்கு மிகவும் நம்பிக்கையானவரும் ஆரம்பத் தளபதியும்மான லெப் சீலன் அவர்களின் சொந்தப் பேரையே தலைவர் இப்படை பணிக்கு வைத்தார், அது மட்டும் அல்ல அவரின் மூத்தமகனிக்கும் அந்தப் பெயரையே அவர் வைத்தார்,
அப்படையணிக்கான சின்னத்தையும் தலைவரே உருவாக்கினார்,
லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக்கொண்டு தலைவரால் உருவாக்கப்பட்டது இப்படையணி,
பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்று தலைவரின் சிந்தனையைக்கொன்று தலைவரால்10/04/1991 இப்படையணி உத்தியோகபூர்வமாக தலைவரால் இப்படையா ஆரம்பித்து வைக்கப்பட்டது,
தளபதி பால்ராஜ் அவர்களே சிறப்புத் தளபதியாக ஆரம்பத்தில் நியமணிக்கப்பட்டார், அதற்குப்பின்பலர் மாறி மாறு பொறுப்பாளராக விடப்பட்டனர்,
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.
1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் "வன்னி விக்கிரம 2" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பின் ஆயிரக்கணக்காண போராளிகள் அப்படையணியில் இருந்து களமாடி வீரச்சாவு அடைந்துள்ளனர்,
5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணியில் ஆரம்பத்தில் இருந்தது லெப் கேணல் சேகர் அவர்களும் இப்படையணிக்குப்பொறுப்பாகயிருந்து சண்டையின்போது வீரச்சாவு அடைந்தார் இப்படையணியின் இறுதி 2009 வரையிருந்து கேணல் கோவித் அவர்கள் வீரச்சாவு அடைந்தார்,
நினைச்சுக்கூட நாம் செய்ய விரும்பாத ஒரு வேலையை செய்தது இந்திய வினுடைய றோ,
ஆனால் இந்தியா குண்டுத் தொளில் சாலையில் கடமையாற்றிய பேராளிகள் வெடி மருந்து தொடர்வாக மிகவும் அனுவபம் உள்ளவர்கள் அதனால் மேலதிகப்படிப்பிற்காக தளபதி பொட்டுஅம்மான் அவர்கள் தனுவை இந்தியா அனுப்பினார்.தனு பயிற்ச்சி முடிந்து இலங்கை வந்ததும் அவர் கொழும்பிற்கு சென்று ஒரு மறைமுகத்தாக்குதவிற்காகவே அவர் பயிற்சி கொடுத்து வளக்கப்பட்டார்.
10/07//1991 முதலாவது மரபுவளிச்சமர் ஆனையிறவைஅதே நேரம் நாங்கள் 4 பேரும் கப்பலில் இருந்து சாமனை பாதுகாத்துக்கொண்டுயிருக்கின்றோம் என்பதை முன்னர் குறிப்ட்டுள்ளேன், அதில் நான் 01எமிலன்02 உதயகுமார் 03கரின்டன் பிரவு 04 இப்பொழுது விடத்திற்குவரும் ஆணையிறவு சண்டை 10/07/1991 அன்று இரவு தொடங்கி விட்டது.
அப்பொழுது எங்களிடம் இருக்கும்புதியவெடிபொருட்களை லெப் கேணல் குட்டிச்சிறி மற்றும் மேஐர்றோவட் இருவரும் மாறிமாறி வருவார்கள் .வந்து சண்டைக்கான வெடிபொருட்களைஒவ்வொரு நட்களும் ஏற்றிக்கொண்டுபோவார்கள், அதாவது 23 மில்லிமீற்றர் ரவை 50 கலிபர்ரவை 40 மில்லிமீற்றர் ரவை RPG செல் என்பன ஒவ்வொரு நாளும்கொண்டுபோவார்கள்,
வங்கறுக்குள் ஏறி இறங்கி ஆயுதப் பெட்டிகளை தொடர்ந்து வாகனத்தில் ஏற்றுவதால் நாங்களும் கடுமையான கழைப்பாகயிருந்தோம்,
சண்டை தொடங்கி 15 நாள் ஆகி விட்டது,
திடீரென ஆயுத்ததை ஏற்றிக்கொண்டுபோன வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்து 23 செல்க்குப்பதிலாக வேறு செல்லை நாங்கள் ஏற்றியதாக எங்களிக்குப் பேசிவிட்டு வங்கறுக்குள் இறங்கி ஆயுதஇருப்புவிபரங்களை செக்பண்ணிக்கொண்டுயிருக்கின்றார்,குட்டிசிறி அண்ணை
அவருக்கும் பெரிய ஏமாத்தம் ஒன்று தெரியவந்தது 23 மில்லிமீற்றர் ரவையென நினைத்து 20 மில்லிமீற்றர் ரவையை நிறைய ஏற்றி விட்டார்கள், ஆயுதத்தரகர்கள்அதனால் 23 மில்லிமீற்றர் செல் முற்றாக முடிந்து விட்டது,
ஆனால் போதிய அழவு 20 மில்லிமீற்றர் ரவைகள் இருப்பில் உள்ளது ஆனால் அந்த ஆயுதம் எமது இயக்கத்தில் இல்லை,தவறுதலாக அனுப்பப்பட்தா? அல்லது தெரிந்துதான் அனுப்பினார்களா? என்பது எமக்குத் தெரியாது.
ஆனால் இதை என்னன்று நான் அண்ணைக்குத் தெரியப்படுத்துவது என்று தலையில் கடித்து கத்திக்கொண்டுயிருந்தார்குட்டிசிறி அண்ணை , நாவல் பழ சூஸ் என்றால் குட்டிச் சிறி அண்ணை விரும்பிக் குடிப்பார் அதனால் நாவல் பழம் பிடிங்கி கசக்கி அதன் சாறயை எடுத்து சீனி போட்டுக்கரைத்துக்கொண்டுகொடுத்தேன், THANKS என்று சொல்லி அதை வேண்டி வெளியே ஊத்திவிட்டார்,
அவர் குடிக்கக்கூடிய மன நிலையில் இல்லை, அண்ணைக்கு என்ன சொல்வது என சரியான மனக்குழப்பத்தில் காணப்பட்டார்,இப்படி எல்லா பக்கத்தாலும் பிரச்சனைகள் காணப்பட்டது,
இனி ஆனையிறவில் என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்,
இந்நடவடிக்கைக்கு தளபதி மாத்தையா தலைவரால் ஒருங்கிணைப்புத்தளபதியாக நியமணிக்கப்பட்டார்,
இவருக்குத்கொடுக்கப்பட்ட கடசிச்சந்தர்ப்பமாக இதைப் பார்க்கலாம் ஏன் அவருக்குபிறகுசந்தர்ப்பம் கொடுக்கவில்லையென்பதை இக்கதையை முழுமையாகபடித்த பின்னர் உங்களிற்குத் தெரிந்துவிடும் என நினைக்கின்றேன்,
ஒருங்கினைப்புத் தளபதியாக மாத்தையா அவர்ககள் நியமணிக்கப்பட்டார்.அருக்குக்கீழே செயல்படபல தளபதிகள் விடப்பட்டார்கள், அதில் தமிழ்செல்வன், பால்ராஜ் கடல்பகுதியைக்கண்காணிக்க தளபதி சூசை வண்போர் படைப்பிரிவுப்பொறுப்பாளர் தளபதி சொர்ணம்,மகளீர் படை பணிகள் தளபதி பொட்டுஎன ஆனையிறவைச்சுற்றிக்களம் இறக்கப்பட்டார்கள்,
மாவட்டங்களில் இருந்தும் சிறு சிறு அணிகளை எடுத்தாலும் மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார்400 போராளிகள் வண்போர் பிரிவுக்கு எடுக்கப்பட்டார்கள் இதற்கு தளபதி சொர்னம் அவர்களேபொறுப்பாகயிருத்தார், இது தலைவரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது,.ஆபிரக்கணக்கான போராளிகள் இந்நடவடிக்கைக்கு தாயார் ஆகயிருத்தார்கள் அதைவிட பின் தள வேலைகள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுயிருந்தது, அவர்களிற்கான உணவுப்பகுதி மருத்துவப்பகுதி வெடி பொருட்கள் வழங்குவதற்கான சப்பிளை பகுதி அதில் வீரச்சாவு அடைபவர்களை எரிப்பதற்கான ஏற்பாடுகள்அதாவதுகொடிகாமதுயிலும் இல்லத்தில் மலையழவு விறகுகள் சேமித்து வைக்கப்பட்டுயிருந்தன,
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 23 மில்லிமீற்றர் கணோன்50 பது கலிபர் R.P.G ராங்கி எதிர்ப்பு உத்துகனைசெலுத்தி லோ என அனைத்தையும் வைத்துக்கொண்டு போராளிகள் மிக்க மகிழ்ச்சியில்காணப்பட்டார்கள்,
10/07/1991 இரவு சண்டை ஆரம்பிக்கப்பட்டது.ஆனையிறவைச் சுற்றிதாக்குதல் நடந்துகொண்டுயிருந்தது முதல் நாள் சண்டையிலே 60 திற்கு மேற்பட்ட போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள்,
தொடர்ந்து புதிய புதிய சுத்திகளை விடுதலைப் புலிகள்கையாண்டார்கள் அதில் மண்ணை வரலிக்குள் நிறப்பி வெட்டை வெளிகளிற்குள்ளால் அதை உருட்டிக்கொண்டு சென்றால் மிதிவெடிகள் அதில் பட்டு வெடித்துவிடும் என அதையும் செய்தார்கள்,ஆனால் அனைத்தும் பெரித்தளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை,
முதலாவதுநடவடிக்கை13/07/1991 அன்று வன்னி உமயாள் புரப்பக்கமாக ஆனையிறவை நோக்கி பாரிய நாகர்வு ஒன்று விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது அதற்கான கட்டளையை தளபதி பால்ராஜ்அவர்கள் மேற்கொண்டார்.
அது முதலில் வெடிமருந்து நிறப்பப்பட்ட வாகனம் வேகமாகப் சென்று உள்ளே வெடிப்பது எனவும் தொடர்ந்து போராளிகள் அடித்துக்கொண்டு உள்ளே இறங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது, அதன்படிஇவ் வாகனம் அனுப்பப்பட்டது.
நினைத்துக்கூடபார்க்க முடியாது செயல் ஒன்று அங்கே நடந்தது ஒரு இராணுவவீரன் சாவதற்கு துணிந்து வீட்டான் முன்னர் எந்தக் காலத்திலும் இராணுவ வீரர்கள் சாவதற்கு துணிவது இல்லை சண்டை தொடங்கினால் ஒன்று பின்னால் ஒடுவார்கள் அல்லது காயப்பட்டு சாவார்கள் ஆனால் இது அவர்கள் மனதில் ஒரு புதிய சிந்தனை உருவானதை நாம் அறிந்து கொண்டோம்,
திடீரேன வேகமாக ஓடிவந்து அவ் துணிகர வேலையை அவ்இராவ வீரன் செய்தான்வேகமாக ஒடி வந்து வாகணத்திற்கு மேலே ஏறி குண்டைக்களட்டி உள்ளே இருப்பவர்களிற்குமேலேபோட்டான்அதுபேர்இரைச்சலோடுவெடித்து,அவ் இராணுவவீரன் உடல் சிதறிப் பலியானான், வாகனத்தை ஒட்டிச்சென்ற மேஐர் கேசரி, அவர்களும் அவருக்கு உதவியாகச் சென்ற கப்டன் டக்ளஸ் அவர்களும் விரச்சாவு அடைந்தனர்,

அதனால் நாம் திட்டமிட்ட நடவடிக்கை பாரிய தோல்வியில் முடிந்தது அவ் நடவடிக்கைக்குசச் சென்ற பல போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் எமது அன்றையநடவடிக்கை நிறுத்தப்பட்டதுஇரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக
அதாவது ஒரு பாரிய நட வழக்கை மேற்கொள்ளப்பட்டது இந்நடவடிக்கைக்குப்பொறுப்பாக பிரிகேடியர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்,
இந் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் நேரடியாக வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.
இவ் இராணுவ முகாம் .வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாக அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும். திட்டம் தீட்டப்பட்டது,
அடுத்தமுயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.
இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.ஆனால் சண்டைகள் தோல்வி அடைந்தாலும் புதிய புதிய சுத்திகளில் விடுதலைப் புலிகள்தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தார்கள், புதிய 23 மில்லிமீற்றர் கனோன் ஆயுத்தால் உலங்கு வானூர்திகள், அவ்றோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் காயம் அடைந்த சிப்பாய்களை வெளியேகொண்டுபோகமுடியாத நிலை அடுத்து ஆயுதச்சப்பிளை உள்ளே வரமல் தடைப்பட்டது, இதானால் இரு பெரும் சிக்கல்களை அரசபடை எதிர்கொண்டது,
14.07.1991அன்று ஆனையிறவை மீட்க சிங்களக் கடல் படையால் தரையிறக்கம் செய்யட்பட்டத
வாழ்வா சாவா என்ற நிலைக்கு இராணும் தள்ளப்பட்டது, அதனால்வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை பக்கமாக ஒரு பாரிய தாக்குதல் ஒன்றை செய்து ஆணையிறவில் உள்ள படைகளை பாதுகாப்பது என அரசாங்கம் திட்டம்மிட்டது,
அதற்கு அமைவாக 14.07.1991 அன்று சுமார் 800 படைகளை ஏற்றிக்கொண்டு சிறிலாங்கா கடல்படை கடலில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் அழவில் வந்துகொண்டுயிருந்தது,
ஆனால் அப்பொழுது அதை சுட்டு வீழ்த்தக்கூடிய பலமான ஆயுதமான வீற்றன் 23 மில்லிமீற்றர் ஆயுதங்கள் இருந்தன.எம்மிடம் , அப்பகுதிக்குப்பொறுப்பாக நின்ற தமிழ்செல்வன் கப்பல் வந்துகொண்டுயிருக்கும் கதையை மாத்தையாவிற்குத்தெரிவிக்கின்றார், அத்தோடு கடலில்வைத்து மூழ்கடிக்கப்போகின்றோம் என்ற தகவலும் மாத்யாவிற்குத் தமிழ்செல்வனால்சொல்லப்பட்டது,
திடீரென 5 நிமிடம் களித்து மாத்தையாவின் பதில் வருகின்றது கப்பலை கடலில் வைத்து மூழ்கடிக்க வேண்டாம் அவர்கள் தரையிறங்கியதும் அவர்களை சுட்டு விட்டு அவர்கள்கொண்டுவரும் ஆயுதங்களை எடுக்குமாறு மாத்தையா தமிழ் செல்வனிற்குக் கட்டளை வளங்கினார்,
தமிழ்செல்வனும் மாத்தையாவின் கட்டளையை நிறைவேற்றினார், ஆனால் தரையிறங்கியதும் நிலமை தலைகீழாக மாறியது, இராணுவத்தின் கை ஓங்கியது கடல்ககரைப் பிரதேசமான வெற்றிலைக்கேணியையும்கைப் பற்றி இராணுவம் ஆனையிறவோடு இணைத்ததுஅன்று நடந்த சண்டையில் மட்டும் லெப் கேணல் சூட்டி உட்பட 15 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்,
இச் சமரை முறியடிக்க தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் பதுகாப்புப் படையணியான 0 படையணியைவைத்து கடுமையானதாக்குதல் நடத்தினார், அச்சண்டையில்லெப். கேணல் சூட்டி உட்பட நூற்றுக்கணக்காண சிறோ படையணிப்போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப் பிரிக்க முடியாவிட்டாலும் .பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை. கடுமையான எதிர்த் தாக்குதலைதளபதி சொர்ணம்மேற்கொண்டார்,
கொம்படி வரை வந்த படையினர். கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப். கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த் தாக்குதல் நடைபெற்றது. இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ்
அா்ப்பணிப்பு மிக்க இச்சமர். இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர். இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்திய சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான ச. பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். அச்சண்டையின் தோல்விக்கு பிரதான பொறுப்பாக விடப்பட்ட மாத்தையா அவர்களின் தூரோகமே காரணம் இந்நடவடிக்கைக்காக நாம்அறுநூற்றி மூன்று போராளிளைக்கொடுத்தும் வெல்ல முடியாமல் போனதை எண்ணிக்கவலையடைகின்றோம்,
ஆனால் ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும். 10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது.
17/09/1991மின்னல்என்றபேரில்விடுதலைப் புலிகளின் ஆனையிறவு நடவடிக்கையை திசை திருப்புவதற்காகமணலாற்றைப்பிடிக்க ஒரு பாரிய நடவடிக்கையை அரச படைகள் ஆரம்பித்தது,
நான் எங்களேடு நின்ற மூவரிடமும் போய்ற்று வாறன் என சொல்லி விட்டு அவரின் வாகனத்தில் ஏறினேன், அவர் நேராக சாகச்சேரியில் இருந்த தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆன 7,7 முகாமிற்குச் சென்றார்,அங்கே சென்றதும் அப்பொழுது ஒரு நடைமுறை இருந்தது பாதுகாப்பு முகாமில் இருந்து வெளியே சென்று 3 அல்லது ரண்டு மாதங்கள் அங்கேதங்கி நின்று கடமை செய்து விட்டு மீண்டும் உள்ளே வரும்போது தனிநபர் உடுப்பு வேக் செக்பண்ணும் நடைமுறை ஒன்று இருந்தது,
ஆனால் அன்று எதிர்மாறாக நடந்தது காவல்கடமைகளில் நிற்பவர்களத் தவிர அங்கே நின்ற அனைவரையும் உடுப்பு வேர்க்கோடு வருமாறு சொர்ணம் அண்ணை கட்டளை வழங்கினார், அதனால் அனைவரும் உடுப்பு வேர்க்கோடுசென்றோம், அனைவரின் உடுப்பு வேக்குகளையும் நேரடியாக சொர்ணம் அண்ணை செக்பண்ணினார், அப்பொழுது அவ் முகாமிற்கு நிர்வாகப் பொறுப்பாக இருந்த லெப் அரசனின் வேர்க்குக்குள் சாவகச்சேரியை சேர்ந்த ஒரு பெண் எழுதிய காதல் கடிதமும் அவளின் படமும் அவரின்வேக்கில் இருந்தது,
அதைப் பார்த்ததும் சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறைபோட்டு உமக்கு களியானம் கட்ற வயசா? என கேட்டு சண்டைக்கு உருயவாறு வெளிக்கிடு என சொல்லி அவனை அனுப்பினார், அடுத்து அனைவரின் உடமைகளும் செக் பண்ணி முடிந்தவுடன்,
லெப் அரசன் மேஜர் டிசான் என்னும் இரு போராளிகளையும் சண்டைக்கு வெளி கிடுமாறு கட்டளை வழங்கினார், அதற்கு மேஜர் டிசான் தனக்குறைவுளை மாத்தித்தருமாறு கேட்டான், உடனே என்னைக் கூப்பிட்ட சொர்ணம் அண்ணை எனது T.81 துப்பாக்கியை டிசானுக்குக் கொடுக்குமாறும் அவர் வைத்து இருந்த G 3துப்பக்தியை என்னை வேண்டி எடுக்ககுமாறு கட்டளை வழங்கினார், நானும் அவரிடம் எனது றைவுளை களட்டிக்கொடுத்துவிட்டு அவரின் றைவுளை வேண்டி எடுத்தேன்.
அப்பொழுது எனது றைவுளிற்கு சிலிங் இல்லை நான் சீலைத்துணியால் தான் றைவுளை கட்டி இருந்தேன்,, அப்பொழுதுமேஐர் டிசானிடம் இரண்டு சிலிங் இருந்தது, ஒன்றை எனக்குத் தருமாறு கேட்டேன், நீர் சொர்ணத்திடம் சொன்னாலும் பராவாய் இல்லை சிலிங் தர மாட்டேன் உன்ற்ற பல்லை உடைப்பேன் என்றார்,
இதே காலம்தான் ஒவ்வொரு போராளிகளையும் தலைவர் தன்னோடு வைத்துயிருந்து அவர்களின் திறமையான செயல்பாட்டை அவதானித்தபின் அவர்களை அடுத்த கட்ட வழர்ச்சிக்காக மாவட்டங்களிற்கு அனுப்புவார் அந்தத் தெரிவில் 1988ட்டு காலப்பகுதியல் இருந்து தலைவரின் மேற்பாது. காவலர்களாகருயிந்த லெப் கோணல் ஜோய். லெப் கேணல் விஜயகாந்-மேஐர் வினோத் போராளி அருள் இவர்கள்4 பேரும் மற்றும் தளபதி வாணு அவர்களையும் மட்டக்களப்பிற்கு அனுப்ப தலைவர் திட்டமிட்டர். அதற்காகவே அவர்கள் அங்கே விடப்பட்டு இருந்தார்கள்,
அப்பொழுது அகிரில் நின்ற ஜோய் டிசான் என்னேடு முறன்பட்டதை பார்த்துக்கொண்டு நின்றார்.
உடனே யோய் டிசானிடம் சொன்னான் அவனில் தவறு இல்லை இண்டு சிலிங்கை பார்த்தபடியால் தான் உன்னிடம் கேட்டான் நீர் ஏன் அவனிக்குப் பேசினாய் என சொல்லி விட்டு அவனின் சிலிங்கை எனக்குத்தந்தான் ஆனால் தான் மட்டக்களப்பு வெளிக்கிடும்போது என்னிடம்தரவேண்டும் என சொல்லித்தான்தந்தான்,
ஆனால் அன்று பிற்பகல் அவர்கள்யாழ் மாட்டத்தை சுற்றிப்பார்ப்பதற்காக வெளியே போய்விட்டார்கள் , ஆனால் அவன் வெளியே சென்று சில மணித்தியாலத்தால் நாங்கள் தலைவரோடு வடமராச்சிக்குப்போய் விட்டோம் , அப்பொழுது ஜோ மீண்டும் முகாமிற்கு வந்து என்னைக் கேட்டுள்ளான், அதற்கு அவர்கள் நான் வெளியே சென்று விட்டேன் என அவனிடம் சொல்லி உள்ளனர் அதற்கு அவன் என்னிடம் கொடுக்கச் சொல்லி ஏதாவது தந்தானா என கேட்டுள்ளான்,? அவர்கள் இல்லை என சொல்லியுள்ளனர் அதற்கு அவன் கான்ற இடத்தில் அவனை சுடுவனைச்சுடுவன் என சொல்லுங்கோ என சொல்லி வீட்டு மட்டக்களப்பு சென்று விட்டான், அங்கே சென்று சிறிது காலத்தில்அவன் வீரசாவு அடைந்து விட்டான் இதுதான் போராளிகளின் வாழ்கை
எப்படியாவது ஆனையிறவுச் சண்டையை திதை திருப்ப வேண்டும் என எதிரி திட்டமிட்டான் அதை திசை திருப்புவதற்காக ஒரு புதிய கழமுகனையை ஆரம்பித்தான்.
அதுமின்னல் என்ற பேரில் மணலாற்றை பிடிப்பதற்கான நடவடிக்கையாகும்.எதிரியின் நோக்கம் ஒன்று ஆணையிறவில் இருந்து விடுதலைப் புலிகளை மணலாற்றிக்கு இழுத்து ஆனையிறவைப்பாதுகாப்பது, அல்லது அவர்கள் எதிர்புக்குக் காட்டாமல் இருந்தால் இழப்பு இன்றி இலகுவாகமணலாற்றை கைப்பற்றுவது, இதுவே அரசாங்கத்தின் திட்டமாகயிருந்தது,
ஆனால் ஆனையிறவைவிட மணலாறே விடுதலைப் புலிகளிற்கு முக்கியமானது என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்த விடயம் அதனால் அங்கே கைவத்தால் ஆனையிறவை தானாக விடுவார்கள் என்பது அவர்கட்கு நன்கு தெரியும்எனவே அதைமையமாகவைத்தே,மணலாற்றில்ஆரம்பிக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும்.
இரண்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்பது விடுதலைப் புலிகளைப்பொறுத்தவரை ஒரு பாரிய சாவாலாகவே இருந்ததுஏனெனில்அவர்ட்கு பாரிய ஆழணிப் பிரச்சனையாக இருந்தது ஆணையிறவில் இருந்து குறிப்பிட்ட போராளிகளை மணலாற்றுக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது,
அதனால் தலைவரின் 0 பிரிவில் இருந்து சுமார் 200 போராளிகளுடன் பிரிகேடியர் ஜெயம் தலைமையில் மணலாற்றுக்கு ஒரு படையணி அனுப்பப்பட்டது தளபதி பால்ராஜ் அவர்களின் றெஜிமேன்ட் 1991 - 4ம் மாதம் சாழ்ஸ் அன்ரனி என பேர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே சாழ்ஸ் அன்ரனி படையனியைச் சேர்ந்த சுமார் 250போராளிகளுடன் போராளி STAR தலைமையில் அங்கே அனுப்பப்பட்டது,
அதின் பிரதான பொறுப்பாளர் தளபதியாக தளபதி பால்ராஜ் அவர்களும்அங்கே சென்றார்,
மணலாறு பகுதிக் கொமான்டராக லெட் கேணல் ஜஸ்ரின் கடமையாற்றினார், அச்சண்டைகறிற்கான கட்டளைகளை தளபதி பால்ராஜ் அவர்கள் வழங்கினார், காயப்பட்ட போராளிகளைப் பரமரிப்பது நிலமையை அறிந்து தலைவருக்குத் தெரியப்படுத்துவது, இவ் வேலைகளை கேணல் சங்கர் அவர்கள் செய்தார் .
ஒரு பகுதிக் கொமாண்டாராக தளபதி ஜெயம் தனது 0 படை பணியை வைத்து இராணுவத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தினார் , 0 படையணியடமே நவின ஆயுதங்கள் உள்ளது என்பது எதிரிக்கும் தெரிந்த விடயம்,இதுவே தலைவரின் நேரடிகண்காணிப்பில் செயல்படும் அணியாகும், இச்சண்டையில் தலைவரின் பாதுகாவலரான லெப் அரசன் மேஜர் டிசான் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்,
ஆனால் எதிரியின் திட்டம் தோற்கடிக்கப்பட்டது மணவாறு பாதுகாற்கப்பட்டது,
இதேகாலத்தில் சில முக்கிய மாற்றங்களைக்கொண்டு வந்த தலைவர்,
19/09/1991 அன்று அவரின் தலைமையில் தமிழீழப்படைத்துறைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது
23/09/1991 செஞ்சோலை சிறுவர் இல்லம்
19/11/1991 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழக்காவல் துறை உருவாக்கப்பட்டது
01/01/1992 அன்று கிறுத்தைப் படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது
இதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 17 வயது தொடக்கம் 22 வயதான ஆண் பெண் போராளிகள் எடுக்கப்பட்டார்கள், இதில் பெண் போராளிகள் தனியாகவும் ஆண் போராளிகள் தனியாகவும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது,
முதலில் பெண் போராளிகளைப் பற்றிப்பார்ப்போம்,
1990 கடசிப்பகுதியில் நானும் சொர்ணம் அண்ணையும் நாவல் குழி முகாமில் இருந்து செல்லக்கிளியை ராஜீவ் அண்ணையின் முகாமில் விட்டோம் என குறிப்பிட்டேன் இப்பொழுது அதைப் பற்றிப் பார்ப்போம்,
இதற்கு கேணல் ராஜீவ் அவர்கள் பிரதான பொறுப்பாளராக தலைவரால் நியமணிக்கப்பட்டார், சிறுத்தைப் படைபணியின் சிறப்புப் பொறுப்பாளர், லெப் கேணல் கோமளா,
தளபதி லெப் கேணல் நந்தா, துணைத்த தளபதி, போராளி சௌமியா,
ஆசிரியர்கள்உடல் பயிற்சி செல்லக்கிளி, ஆயுதரீதியான வகுப்பு, ஜெனனன் மாஸ்ட்டர், வெடிமருந்து கேணல் ராஜீவ் தொலைத்தொடர்பு பிள்ளையான் மாஸ்ட்டர், கரிகாலன், அன்ரி / பத்மலோஜினி, கரத்தே / குத்துச்சண்டை சோதி மாஸ்ட்டர்,என சிறந்த கட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்டது இவ் முகாம் கொடிகாமத்தில் அமைந்த ஒரு தொன்னம் தோட்டமாகும், இதற்கு பலாலியில்விரச்சாவு அடைந்த மேஜர் தாரணி என்ற இவரின் பெயர் வைக்கப்பட்டது,இது தலைவரின் நேரடிகண்காணிப்பில் நடந்தது இவர்களிற்கான் உணவு பயிற்சி அனைத்தையும் தலைவரே நேரடியாகக் கண்காணித்தார் இவர்களிற்கும் கடல்புலிகற்கும் மட்டுமே டாவுள் வச்சேற் என சொல்லப்படும்சத்துக் கூடிய உணவு வழங்கப்பட்டது, ஒவ்வொரு பயிற்சி மதிப்பீட்டிற்கும் இவர்களின் பயிற்சியைப்பார்ப்பதற்கு தலைவர் அங்கே செல்வார்,

இதேஆண்டு6 ஆம் மாதம் காலப்பகுதியில்மட்க்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி கணேஸ்தலைவரின் பாதுகாப்பு அணியில் இருந்தார். இவன் ஒருசுறு சுறுப்பான வீரணாகக்காணப்பட்டான்
. ஆனால் கடுமையான தலைவலி. ஒவ்ருவொரு நாளும் சித்தாலேவை போன்ற மருந்துகளை கன்னத்தில் பூசிப் பூசி கன்னம் பெரிதாக வீங்கிக்காணப்பட்டது.
அதை தாங்கிக்கொள்ள முடியாத கனோல் தலைவரிக்கு 10த்திற்கு மேற்பட்ட கடிதம் எழுதினான். அதாவது கூடுதலான காலம் போராட்டத்தில் என்னால் இருக்க முடியாது ஏனெனில் கடுமையான தலைவலி எனக்கு இருப்பதால் அதைத்தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.
எனவே என்னை கரும்புலிக்கு அனுப்புமாறும் எனது கடமையைத்திறமையாகச்செய்து எனது போராட்ட வாழ்கையை நிறைவு செய்யதான் விரும்புவதாக குறிப்பிட்டுயிருந்தான். தலைவரோ இவன் வேலை காணமல்தான் இப்படி சிந்திக்கிறான் என எண்ணி அவனின் வேலையை அதிகரிக்க ஆரம்பித்தார்.
தலைவரைப்பொறுத்தவரை எவரையும் இலகுவில் இளக்க விரும்பமாட்டார் அது அவருடையே இரங்கல் குணத்தைக்காட்டியது. அனைத்துப் போராளிகளும் கரும்புலியாகப்போவது என்றால் தலைவரிக்கு பல கடிதங்கள் எழுதி இறுதியில் கடுமையாக முரன்பட்டுக்கொண்டேபோவது வளமையாகயிருந்தது. அதைத்தான் கணேஸ் அவர்களும் செய்து பார்த்தார் அது வெற்றி அளிக்கவில்லை
முன்னர் அவன் எமது ரெட்டி முகாம் தொலைத்தொடர்பாளாக கடமையாற்றினான்தொடர்ந்து தலைவரின் கட்டளைக்கு அமைவாக, லெப் கேணல் குட்டிச்சிறி அண்ணையிடம் சொல்லி ஒரு லக்ஸ்சம் பெறுமதியான மரத்தாலான மேல்மாடிகீழ்மாடிக்கூடுகள் செய்து கொடுக்கப்பட்டது,
அதற்குத்தலைவரின் அனுமதியுடன் வீரவேங்கை கணேஸ் அவர்களையே பொறுப்பாகவிட்டார் குட்டி சிறி அண்னை
மேல் தட்டில்வாண்கோழிகளும் கீழ் தட்டில் முயல் மற்றும் மரைமான் வளப்பதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்குப்பொறுப்பாளராகவும் இராண்டாவது முகாம் தொலைத்தொடர்வாளர்களாகவும் வீரவேங்கை கணேஸ் நியமணிக்கப்பட்டான்.
அதனால் சிறிது நேரம் கூட அவனால் சிந்திக்கக் கூடநேரம் இல்லாமல் இருந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு சாவகச்சேரியில் உள்ள2.3மருத்துவமனைகுச்சென்ற கணேஸ்இறுதியாக தலைவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்புமிக்க தலைவர் அவர்கட்கு நான் பல தடவை கரும்புலியாகச் செல்வதற்கு கடிதம் எழுதினேன்.
. ஆனால் நீங்கள் எதிர்மறையாக எனது கடமைகளைக் கூட்டியவாறு இருந்தீர்கள் அதுஉங்களின் இளகிய மனதைக்காட்டுகின்றது. நான்அதை அறிவேன் ஆனால் நீங்கள் என்னை விடவில்லை ஆனால் அதே காலத்தில் பல போராளிகளிற்கு சந்தர்ப்பம் வளங்கிக்கொண்டுயிருக்கின்றீர்கள்.இப்பொழுது நான் இறுதிமுடிவிற்கு வந்துவிட்டேன்
தற்பொழுது நான் குப்பி கடித்து சாவடைகின்றேன் மாவீரர் பட்டியலில் இணைப்பதும் இணைக்காமல் விடுவதும் உங்களின் கடமையென நினைக்கின்றேன். புலிகளின் தாகம் தமிழ்த்தாயகம் இப்படிக்குக்
கணேல்.
என கடிதத்தை எழுதி வைத்துவிட்டுஅவர் சாவகச்சேரி மருத்துவமனையில் குப்பி கடித்துசாவடைந்தார்.அக்கடிதம் சொர்ணம் அண்ணையூடாக தலைவருக்குச் சென்றது,கடிதத்தைப்பார்த்ததும் தலைவர் வீரவேங்கை என நிலை வளங்கி மாவீரர் பட்டியயிலில் இணைத்தார்.
தொடர்ந்துஅவனின் வித்துடலை படையணி நிர்வாகப் பொறுப்பாக இருந்த போராளி அசோக் அண்ணை மிகச் சிறப்பகச் செய்துஅஞ்சலி செலுத்தப்பட்டுஇறுதியாககொடிகாமம் மாவீரர்துயிலும் இல்லத்தில் அவனின் வித்துடல் அடக்கம் செய்யப்பட்டது,
தேசியத்தலைவரைப்பொறுத்தவரை தனது நடவடிக்கையால் போராளிகள் பாதிக்கப்பட்டுயிருந்தால் அல்லது போராளிகள் இறுதியாகச் செல்லும்போது அவர்களால் இதை செய்யுங்கோ அண்ணை என தலைவருக்கக்கொடுக்கப்பட்கடமைகள் இவற்றை நிறைவேற்றுவதில் தலைவர் மிக பொறுப்பு உணர்வோடு செயல்படுவார்,
கணேசின் சாவைத்தொடர்ந்து தலைவரின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. கூடுதலான போராளிகளின் கரும்புலியில் இணைவிற்கான கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தோடு அவர்களிற்கான பிரத்தியேகமான பயிற்சி முகாம்களும் அமைக்கப்பட்டு பயிற்சிகள்ஆரம்பித்துவைக்கப்பட்டது,
முன்னர் மான் மரை வழப்பதற்கு கணேசைப்பொறுப்பாக விட்ட என குறிப்பிட்டு இருந்தேன் இந்த மிருகக்கள் எப்படி வந்தது என்பதை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும்
அக்காலப்பகுதியில்
தளபதி ஜெயம் அவர்கள் அடிக்கடி வன்னிக்குபோய்வருபவர். அங்கே போராளிகள் தங்களின் பொழுதுபோக்கிற்ககாக காடுகளில் இருந்து பிடித்து வளக்கும் மான் மற்றும் மரைக்குட்டிகளை தளபதி ஜெயம் அவர்கள் அதை வேண்டிக்கொண்டுவந்து எங்களின் 9.5 முகாமில் விடுவது வளமையாகயிருந்தது.
முகாமில் மூடு வங்கறுக்கு மேல் நிறையே புல்லுகள்இருந்தன அதாவது வயல்வெளிகளிற்குச்சென்று கேணல் இளங்கீரன் அவர்கள் அறுகம்புல்லுகளை மண்ணோடு சேர்த்து வெட்டிக்கொண்டுவந்து வங்கறுக்கு மேல் அழகான முறையில் நாட்டியிருந்தார். அதானால் போதிய அளவு மேச்சல் தரை மிருகளிற்குயிருந்தது. மொத்தமாக ஆறுமிருகங்கள் இருந்தன அதில் இரண்டு மரை இரண்டு மான் பெரிதாகயிருந்தது.
அதிகாலை வாகணம் வெளியே செல்லும் பாதை திறந்துயிருந்ததால் பெரிய ஆண் மரையும் பெரிய பெண்மரையும் வெளியே சென்று விட்டது.அப்பொழுது லெப் கேணல் குட்டிசிறி அவர்களும் எங்களோடுதான்யிருந்தார்.
மரையைக் காணவில்லையென தளபதி குட்டிசிறி அவர்களிடம் சொல்லப்பட்டது. சொன்னவுடன் அவர் வாகணத்தை எடுத்துக்கொண்டு தேடுவதற்காக வெளியே சென்று விட்டார். அடுத்த பக்கம் போராளி பேரும்பலத்துடன் இருவர் தேடுதலிற்காக அனுப்பப்பட்டனர். காலை 6 மணிக்கு சென்ற பேரும்பலம் பிற்பகல் இரண்டு மணிக்கு இரண்டு உரவேக்கில் இரத்த வெள்ளத்தோடு துவிச்சக்கரவண்டியல் தள்ளிக்கொண்டுஇரு செல்லப்பிராணிகளின் இறைச்சிகளையும் முகாமிற்குக்குக்கொண்டுவந்துசேர்த்தான்
என்ன விடயம் என விசாரித்தபோது m.mo பொறுப்பாளர் பிரதீப் தலைமையிலான வெடிபொருள் உற்பத்தி செய்யும் போராளிகள் காட்டு மரையென நினைத்து இரண்டு மரைகளையும் சுட்டு இரவுச் சாப்பாட்டிற்காக கொத்துரொட்டி செய்யும், வேலை நடந்து கொண்டுயிருந்ததாகவும் தான் அதைப் பார்த்ததும் இது எங்களின் வழப்பு மரை எனஅவர்களிற்குப் பேசி விட்டு அவ் இறைச்சிகளை வேண்டிக்கொண்டுவருவதாகவும் எங்களிடம் குறிப்பிட்டார். இறைச்சிகளையும் வேறு வேறாக இரண்டு உரப்பையில் வேண்டிக் கொண்டு வருவதாக எக்கவிடம் குறிப்பிட்டார்கள்.
இது நடக்கும்போது தலைவர் பழையில் இருகும் எமது முகான சுவாஸ் தோட்டத்தில் நிக்கின்றார்,இந்தத்கவல் குட்டி சிறி அவர்கள் ஊடாக தலைவரிக்கு பறந்தது தகவலை அறிந்த தலைவர் இரண்டு மரைகளையும் தனித்தனியாக கிடங்கு வெட்டி முகாமில் மூன்று மனைமரங்கள்இருக்கும்இடத்தில்அவ்மரங்களிற்குக்கீழேஇறைச்சிகளை கிடங்கில் தாட்டு அதற்கு மேல் கல்லறை கட்டுமாறு குறிபிட்டுயிருந்தார்.
எவளவு வேலைப்பழு இருந்த போதிலும்அவ் இடத்தையும் தானே தெரிவு செய்துள்ளார் என்பதையும் அவரின் உயர்ந்த சிந்தனை எப்படி இருந்துள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள்,
அதை விட மரையை சுட்டவர்களிற்கு 6 மாதம் தண்டனையாக சமைப்பதற்கு விடுமாறு அப்பொழுது அவர்களிற்குப்பொறுப்பாகயிருந்த பிரதீப் மாஸ்ட்டர் அவர்களிடம் சொல்லி அனுப்பப்பட்டது.
இரவு மரைக்கறி சாப்பிடலாம் என எதிர்பார்த்த எமது முகாம் போரளிகற்கு முகம் கறுத்தது தலைவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை எவராலும் கனிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாகயிருந்தது இந்த இரண்டு மரைகளும் தலைவரின் வீட்டுற்குப் பின் யன்னல் ஓரமாக சென்று ஒவ்வொருநாளும் தலைவரிடம் இருந்து உணவு வேண்டிச்சாப்பிடுவது வளமையாகயிருந்தது.அதனால் அவ் இருமிருகங்கள் மீதும் தலைவர் அழவு கடந்தபாசம் வைத்துயிருந்த்தார்.
சில காலம் களித்துஅதே ஆண்டு பாரிய ஒரு துயரச் சம்பவம் நடந்தது அதே முகாமில் ஒரு பெரிய கொம்பு மானும் இருந்தது ஆனால் அனைத்து போராளிகளோடும் அன்பாகப்பளகும் புல்லுகொடுத்தால் வேண்டிச்சாப்பிடும் . ஆனால் அங்கே நின்ற போராளி துறமணி அவர்களைமட்டும் அந்த மானிற்கு கண்ணில் காட்டக் கூடாது அந்த மானிற்கு கடுமையானகோபம் வரும்.
இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனையென்று எங்களின்குத் தெரியாது. ஒரு நாள் நான் ஒரு புல்தரையில் இருந்தேன் மான் எனக்கு முன்னால் புல் மெய்ந்து கொண்டுயிருந்தது. துறமணி யண்ணை எனக்குப்பின்னால் நின்று மானிற்கு எத்தம் காட்டினார். ஆனால் அவரை தாக்குவது என்றால் மான் என்னைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் மான்தவறுதலாக என்னைதாக்கும் என அவர் நினைத்துயிருக்கலாம்.
மான் என்னை நோக்கி கடும் வேகமாகவந்தது கதிரோளி மற்றும் முத்துஐயன் இருவரும் மான் உன்னை தாக்கவருகுது ஓடு ஓடு என கத்திய வண்ணம்யிருந்தார்கள். வேகமாக வந்தமான் எனக்கு மேலால் பாய்ந்து சென்று துறைமணி அண்ணையைக்கலைத்தது. அவர் அரிகில் நின்ற நெல்லிமரத்தில் ஏறி தன்னைப்பாதுகாத்துக்கொண்டார்.
எனவே ஒவ்வொரு நாளும் இந்தமான் அவரை பின்தொடர்ந்தவண்ணம்யிருத்தது ஒரு நாள் நாங்கள் எல்லோரும் தலைவரோடுவேறு முகாமிற்குச்சென்றுவிட்டோம். இரவு 7 மணி இவர் மானிடம் சரியான முறையில் மாட்டிவிட்டார். மான் இவர் மீது கடுமையானதாக்குதல் தாக்கி இவர் யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார் அங்கே இவருக்கு15 தையல் போடப்பட்டது.
இந்தத்கவல் தலைவரிக்கு உடனே வந்தது தலைவருக்ரிக்கு மான் மீது கடுமையான கோபம் வந்தது ஆனால் பொறுமையாகயிருந்தார்.25 /11/1993 கரவெட்டி முகாமில் இருந்து இரவு 9 மணி 9.5 முகாமிற்கு வந்து சேர்ந்தோம். அப்பொழுது நாவா மற்றும் பிரகாஸ் இருவரும் தலைவரின் P.A அல்லது நெருங்கிய பாதுகாவலர் இதின் பொருள் என்ன உணவாக பிருந்தாலும் முதலில் இவர்கள் தான் சாப்பிட்டுப்பார்ப்பார்கள் பின்னர் தான் அதைத் தலைவர் சாப்பிடுவார்..
காலை 7 மணி தலைவர் நாவா அவர்களை கூப்பிட்டு மானைச் சுட்டு போராளிகளிற்குகறிகாச்சக்கொடுகொடுமாறு தலைவர் நவா அவர்கட்டு கட்டளை வழங்கினார் . ஊசன் நவா அவனிற்கு மிகவும் உசாராகயிருந்தது. உடனே இடுப்பில் இருந்து
கைத்துப்பாக்கியை எடுத்து மானின் முன் தலையில் மூன்று வெடி வைத்தான். மான் சுருண்டு கீழே விழுந்தது. அன்று மதியம் மான் கறி எல்லோரும் சாப்பிட்டோம். மரை நல்ல பெயர் எடுத்ததால் அதற்கு கல்லறை கிடைத்தது மான்தவறு விட்டமையால் அது கறியாகப்போனது அனைத்து உயிர் களிற்கும் ஒரே சட்டத்தை நடைமுறைபடுத்திய உன்னததலைவன்.
5/07/1992 யாழ் பல்கலைக் கலகத்தில் கரும்புலிகளின் கொண்டாட்டமும் ஒழிப்பேழை வெளியிட்டு நிகழ்வும் நடைபெற்றது. அந் நிகழ்விங்கும் மாத்தையா அவர்களிற்கு அழைப்பு வளங்கப்பட்டபோதும் ஆனால் இதற்கும் மாத்தையா அவர்கள்வரவில்லை. மாத்தையா வரதமைக்கான இருகாரணங்களாகயிருக்கலாம் ஒன்று பொறுப்பு மாற்றத்திற்கான கோபம் அடுத்து தன்னைக்கைது செய்யலாம் என நினைத்துயிருக்கலாம்.
05/06/1992 அந்தக் காலப்பகுதி கடும் இறுக்கமாகாலமாகயிருந்தது ஏன்னென்றால் முதலில் தலைவரின் பாதுகாப்பு அணி ஒரு அணியாகயிருந்தது.
தளபதி சொர்ணம் அவர்களின் அணி பயிற்சியில் நின்றது.இவ் இரு அணிகளிற்கும் கேணல் குமரிநாடன்/வசந் அவர்களின் தலையில் கடுமையான பயிற்சி நடைபெற்றுக்கொண்டுயிருந்தது. குறிப்பாக 40 கிலோ மீற்றர் ஓடும் வாகனத்தில் இருந்து பாய்தல் உயரம் பாய்தல் என கடுமையான கொமாண்டே பயிற்சி நடைபெற்றுக்கொண்டுயிருந்தது
. 21/07/1992 காலப்பகுதியில் வெற்நிலைக்கேணியில் இருந்து யாழ்ழைநோக்கி சிறிலங்காப்படை முன்னேற தொடங்கி விட்டது.
08/08/1992 அன்றுபோராளி கருவண்ணன் தலையில் 7 பேர்கொண்ட அணி உள்ளே சென்று வேவுநடவடிகையில் ஈடுபட்னர்.
அவ்வேளை ராணுவ வாகணங்கள் அவ்வளியால் சென்று வரும் தடையங்கள் அவர்களால் அவதானிக்கப்பட்டது, அப்பொழுது அரசாங்கம் மண்டைதீவால் இருந்தும் யாழ் பலாலியா மற்றும் ஆணையிறவால் இருந்தும் மும்முனைத் தாக்குதல் ஒன்றைச் செய்து யாழ்பாணத்தை முழுமையாகக்கைப்பற்றுவதேஅவர்களின் திட்டமாகயிருந்தது,
கொப்பக்கெடுவாஅவர்கள் அந் நடவடிக்கை செய்யும் பிரதேசங்களை நேரடியாகப்பார்வையிட்டுக்கொண்டு இருந்த காலம் .அது,
அவ்வேளை எமது தலைவர் சொல்வது போல் எந்தப் பலத்திலும் ஒரு பலயீனம் இருக்கும் அதைக்கண்டுபிடிப்பது எமது திறமைஅதற்கு அமைவாக போராளிகள் வேவு நடபடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தார்கள்.அப்பொழுது அராலி முனைப்பகுதியில் நிறைய வாகணம் சென்றுவரும் தடங்கள் இவர்களால் அவதானிக்கப்பட்டது
அதனால் அராலி முனையில்உள்ளேஒரு பாதையில் வைக்கல் மகேன்ஸ்சை றோட்டை வெட்டி தாட்டு வைத்துவிட்டுஇவர்கள் மீண்டும் எமதுமுகாமிற்குவந்து விட்டார்கள்அதனால். 08/08/1992 அன்றுஅவர்களின் திறமையான செயல்பாட்டால்
முதலாவது சிக்கிய முள்ளி நாம் தேடிக் கொண்டுயிருந்த அதிகாரி அப் பொறியில் சிக்கி விட்டார்,புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப். ஜெ. விக்கிரமசிங்க உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் , யாழ் குடாநாட்டில் அராலி முனையில் வைத்து 8 ஆகஸ்ட் 1992 அன்று விடுதலைப்புலகளால் எவ்விதமான இளப்பும் இன்றி அவர்களை அழிக்க முடிந்தது
அதனால் 1992 ஆம் ஆண்டு யாழ்பாணம் எதிரிகளின் கைக்குச் செல்லாமல் தப்பிக்கொண்டது,இவ் சிறப்பு நடவடிக்கையைச் செய்த கருவண்ணன் உட்பட அனைத்து வீரர்களையும தமிழீழத் தேசியத் தலைவர் கூப்பிட்டு சிறப்புப் பரிசிகளைக் கொடுத்து கெளருவித்தார்
இவ்வெற்றிகர நடவடிக்கையால், எமக்கு எதிராகப் போராடிக்கொண்டுயிருந்த இராணுவத்தின் மன உறுதியையும் வெகுவாக பாதித்தது.அதனால் 1995 ஆம் ஆண்டு வரை அவர்களின் பாழ்பாணத்தைப்பிடிப்பதற்கான அசை பிற்போடப்பட்டது
இந்நடவடிக்கையைச் செய்த மேஜர் கார்வண்ணன், / பீற்றர்
சிவஞானம, சிவஜோதி மிருசிவில் வடக்கு மிருசுவில் யாழ்ப்பாணம் இவர் கட்டைக்காட்டில் 01.10.1992 அன்று படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து இருந்து06.10.1992யாழ். மருத்துவமனையில் கிச்சை பலன் அழிக்காமல்வீரச்சாவு அடைந்தார்,
01/10/1992 இதே காலம்தான் தலைவரால் இம்ரான் பாண்டியணி உருவாக்கப்பட்டது,
1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான வொடிக்காட் அணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார்.
பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். தலைவரின் பாதுகாப்புக்கான படையணியியை இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர்.

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் சர்வதேசக்கடலால் தமிழீழம்வந்துகொண்டுயிருந்தார் தளபதி கிட்டு
அவருடன் குட்டிசிறி உட்பட 10 போராளிகளும் தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் பணியாழர்களும் அதில் இருந்தார்கள், இதை இந்திய வினுடைய கடல் படை அறிந்து விட்டது,
உடனே கப்பலை முற்றுகையிட்ட இந்திய கடல் படையினர், சலண்டர் அடையுமாறு கேட்டனர்,நிலைமைய உணர்ந்த கிட்டு அண்ணை அனைத்துப் பணி யாழர்களையும் தனது கப்பலில் இருந்து இறக்கி சிறிய போட்டில் இந்திய கடல் படையின் கப்பலிற்கு அனுப்பினர், அவர்களும் கடசியாக கிட்டு அவர்களும் போராளிகளும் சண்டர் அடைந்து தங்களிடம் வருவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டுயிருந்தனர்,
இத்துயரம் அங்கே நடக்க அப்பொழுது தலைவர் 7.6 என அழைக்கப்படும் பழையில் உள்ள சுவாஸ் தோட்டத்தில் இருக்கின்றார், ஆனால் அங்கே அனகமாக பொட்டுஅம்மான் வருவது இல்லை ஆனால் அன்று பொட்டு அங்கே வந்து தலைவரோடு நீன்ற நேரம் உரையாடிக்கொண்டுயிருந்தார்,
அப்பொழுது கிட்டு அண்ணை தலைவருக்கு தொலைத்தொடர்பு ஊடாகத்தகவல் தெரிவிக்கின்றார், எங்களை இந்தியக் கடல் படை முற்றுகையிட்டுவிட்டது நாங்கள் என்ன செய்வது இது தான் அந்தக் கேழ்வி, நான் என்னத்த உமக்கு சொல்வது நீரே ஒரு கட்டளை அதிகாரி இயக்க மரபுக்கு ஏற்ப முடிவு எடு,?
தலைவரின் அனுமதி கிடைத்ததும் தன்னை அழிப்பதற்கு அவர் தயார்படுத்திக்கொண்டுயிருந்தார் ஆனால்இந்தியவின் அப்பலை மோதி தகர்த்தால் தன்னோடு வந்த அனைத்துப்பணியாழகர்களும் சாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் அதை கிட்டு அண்ணை விரும்பவில்லை அதனால்தான் அவர்களை இறக்கிவிட்டு கப்பலை வெவைத்து போராளிகளுடன் தானும் வீரபணம் அடைந்தார்,
இதுதான் அந்தப் பதில் அதை சொல்லிவிட்டு அவர் இருக்கவில்லை முகாமில் இருந்து படலை அடிக்கும் முகாமிற்கும் ஆக நடந்துகொண்டே இருந்தார் எங்களால் நடக்க முடியாமல் போய் விட்டது, உடம்பு வேருத்து உடுப்புகள் நனைந்தன கடுமையான கழைப்பாக இருந்தது, எங்களைப்பார்த்து கவலைபடைந்த சொர்ணம் அண்ணை எல்லம் ஜீ காரர்களைமட்டும் சென்றி மாத்தி விட்டார் மிகவும் களைப்பாக இருந்தது நான் கிணற்றடிக்குப்போய் குளித்து விட்டு மீண்டு காலையுணவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றிக்குப் போய் விட்டேன்,
ஆனால் தலைவர் நடந்து கொண்டே இருக்கின்றார், ஏனனெனில் கிட்டு அண்ணை சில சமயம் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், வெளிநாடு தொடர்வான எமது இரகசியத்தகவல்கள் மற்றும் எமது செயல்பாடுகளை இந்திய அறிந்துவிடும் அப்படி அறிந்துவிட்டால்,
விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது தூர்பாக்கிய நிலை ஏற்படும் அதனால்தான் அவர் நடந்து கொண்டே இருந்தார், திடீரேன செற்காரன் ஓடிவந்து கிட்டு அண்னை வெடித்து விட்டார் என்ற தகவலைத் தெரியப்படுத்தினான் அடுத்து இந்திய வானோளிகளில் செய்திகள் வந்தது அதைத் தொடர்ந்துதான் தலைவர் வந்து இருந்தார்,
04/04/1993 ஜெயந்தன் படையணிஉருவாக்கம்
03/05/1993 இதே காலம் தளபதி கருணா அவர்களிற்கு திருமணம் நடந்தது.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தவர் அப்பாதையால் வரவில்லை எதிர்மாறாக பொட்டு அம்மான் அவர்கள் வந்துகொண்டுயிருந்தார். அப்பொழுது கோப்பாய்பகுதியில் வைத்து கட்டிட மறைவில் இருந்து வாகணத்தை நோக்கி குண்டுவீசப்பட்டது.
குண்டு கீழே விழுந்து பேர் இரச்சலோடு வெடித்தது. வாகணம் மட்டும் சிறு சேசம் அடைந்தது ஆனால் பொட்டுஅம்மானிற்கு எவ்விதமானபாதிப்பும் ஏற்படவில்லை. அவர் மயிர் இளையில் தப்பிக் கொண்டார். ஆனால் குண்டு ஏறிந்தவரை தேடுதல் வேட்டை செய்த போதும் அவர் பிடிபடவில்லை அது எமது புலநாய்வுத்துறைக்கு ஒரு சாவாலாக அமைந்தது.
இச்சத்தம் தொடர்வாக தவறுதலான வெடிவித்தன எங்களிற்குச் சொல்லப்பட்டது ஏனைய படையணிப்போராளிகளிற்கும் மக்களிற்கும் இத்தகவலே பரப்பப்பட்டது அன்று தலைவரின் வாகனத்தில் சென்ற போராளிகளிற்கும் பொட்டு அம்மானுக்கும்தான் இந் விடயம் தெரியும்,
அது எமது தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்த அது ஒரு முன்னோடி அனுபவமாக அமைந்தது. அதற்குப்பிறகு எமது படையணி புலநாய்வுப்படையணியின் ஆழணிகள் அதிகரிக்கப்பட்டது அத்தோடு தலைவரின் பாதுகாவலர்களின் ஆழணித் தொகையும் அதிகரிக்கப்பட்டது
.01/05/1993 நடைபெற்ற அரசியல் கூட்டத்தின் போது இனிமேல் இவர் திருந்தவமாட்டார் என்பதை அறிந்து கொண்ட நாம் அவ் நிகழ்வின்போது அவரைக் கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்ட்டோம்.
.03/05/1993 அன்று தளபதி கருணாவிற்கு திருமணம் செய்வதற்கு தேசியத் தலைவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைவாக. ஒரு மாதற்கு முன்னர் தலைவரின் அனுமயுடன் தனக்கு கீழே கடமையாற்றிய பெண் போராளிகளின் தலைவியான நிறா அவர்களை கருணா முன்னரே விரும்பி இருந்தார் அதனால் அவரைக்கூட்டிக்கொண்டு யாழ்பாணம்வருமாறு தலைவரால் தகவல் கருணாவிற்கு .அனுப்பப்பட்டது
அத் தகவல் கிடைத்ததும் பெண் போராளி நிறா அவர்களையும் கூட்டிக்கொண்டு100 நூறு போராளிகளின் பாதுகாப்புடன் கருணா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். ஐந்து லக்ஸ்சத்திற்கு மேல் கருணா அவர்களின் திருமணத்திற்காக தலைவரால் நிதி ஒதுக்கப்பட்டது. அது மட்டும் அல்ல அந்தத் திருமணத்திற்கான ஏற்பாட்டை தலைவரே நேரடியாக செய்தார்.
இந்ந வடிக்கைக்கை தளபதி சொர்ணம் அண்ணையின் கட்டளையிலே நடந்தது,
தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் லெப் கேணல் Smஅப்பா தலைமையில் துறமணி மற்றும் உதயன் அதைவிட சமையல்தொடர்வாக படித்தமாணவர்கள் என சைனீஸ் சமையல் ஆழர்கள் என sm அப்பா தலைமையல் ஒரு அணி இருந்தது அதின் அங்கத்தவர்கள் Sm அப்பா போராளி உதயன் மற்றும் துறமணி இவர்கள் தலைமைப் பொறுப்பாளர்கள் அதற்குக் கீழே குமரதேவன்01 டட்லி02 றோவட்03 ஆனந்தபாலன்04 சாம்பசிவம்05 சுமன்06 சோதி07 வேங்கைமார்பன் 08என போராளிகளும் இவர்களிற்குக்கீழே சிறந்த சமையல்ஆழர்களாகயிருந்தார்கள்.
கருணா அவர்ளின் திருமண நிகழ்விற்காக Sm அப்பா தலைமையில் பாண் கோட்டலில் சிறப்பான முறையல் சமையல் நடைபெற்றுக்கொண்டு இருந்தது அடுத்ததாக இந்தச்சமையல்களை கண்காணிப்பதற்காக இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட றெக்கோ உணவகப் பொறுப்பாளர் சைனீஸ் ராஜி அவர்கள் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகளால் மிகவும் ஆடம்பரமாக நடந்த திருமணமாக இது கருதப்பட்டது.
தலைவர் நேரடியாகப்பங்குபற்றித் தானே அந் நிகழ்வை செய்தமையால் சில குறிப்பிட்ட தளபதிகளைத்தவிர சாதாரணபோராளிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. பாதுகாப்புக்காரணங்களிற்காக அது தவிர்க்கப்பட்டது.இது நடந்துகொண்டுயிருக்கும்போது தலைவர் சொன்ன கருத்து தென்னிலங்கையில் சாவீடு இங்கே திருமண வீடு என தலைவர் சொன்னார்எல்லோருடைய துன்பங்களையும் நினைத்துப்பார்க்கும் உயிர்ந்த மனிதர்களின் உணர்பு தலைவருக்கு இருந்தது,
இத்திருமணநிகழ்வில் தளபதி மாத்தையா அவர்களை வரச் சொல்வதற்காக தளபதி றிச்சாட் அவர்கள் அக்பர் மற்றும் குமரதேவன் என மூவரும்
வாகணத்தில் ஏற்றிக்கொண்டு சுதுமலையில் இருந்த அவரின் வீட்ற்குச்சென்று இரு போராளிகளையும் அனுப்பி கருணா அவர்களிற்குத் திருமணம் அதனால் உங்களைக்கண்டிப்பாக தலைவர் வரச் சொன்தாக ஒருகிழமைக்கு முதல் தகவல் சொல்லப்பட்டது. அதற்கு அவர் தனக்கு கடுமையான வேலையிருப்பதாகவும் தன்னால் வரமுடியாது என பதில் அளித்துள்ளார்.
இது இவ்வாறுயிருக்க ஆடம்பரமாகசமையல் நடந்துகொண்டுருயிந்தது. இந்நிகழ்வின்போது பாரிய ஒரு துரோகம் செய்வதற்கான திட்டம். நடைபெற்றுக்கொண்டுயிருந்தது. அதாவது சைனீஸ் ராஜி1987 ம் ஆண்டு இந்தியா இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படையாக வரும்போதுஅவரைக் கூட்டிக்கொண்டு இலங்கை வந்தது .
அவர் தமிழ்நாட்டுத் தமிழர் என்ற காரணத்தால் அவர் தமிழ் அழகாகப் பேசுவார் அதனால் யாழ்ப்பாணம் வேம்படி மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒரு உணவகத்தை இந்தியா இராணுவம் வேண்டிக்கொடுத்து அவர் கடை நடத்துவது போல் இந்தியா இராணுத்தின் புலநாய்வுமுகவராகச் செயல்பட்டுவந்தார் அனால் இது தமிழ் மக்களிற்கோ அல்லது விடுதலைப் புலிகளிற்கோ தெரியாத விடயமாகயிருந்தது.
அவ் உணவகம் சிறப்பானதாக நடந்தமையால் தளபதி றிச்சாட் பிரிகேடியர் ஜெயம் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக அவ் உணவகத்தில்சாப்பிடுவதால் ராஜீவ் அவர்களிற்கும் இவர்கள் இருவரிகும் நெருக்கமான நற்ப்பு வளர்ந்தது.
இதன் காரணமாக தளபதி றிச்சாட் அவர்களே பாதுகாப்பு சமையல் ஆழர்களிற்குப் படிப்பிப்பதற்காக ராஜீவை அழைத்துவந்தார்.இது மாத்தையா அவர்களிற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது..
.1991 மின்னல் இராணுவ நடவடிக்கை முடிந்தபின்னர், அக்காலப்பகுதியில் அந்நடவடிக்கையை தலைமை தாங்கி நடத்தியபடைத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜெனகப்பெரரா அவர்கள் மண் கிண்டிமலை யென்ற தமிழ் பெயரை மாத்தி தனது பேரான ஜெனகபுர என பேரை மாற்றியது மட்டும் அல்லாமல், பாரிய சிங்களக் குடியேற்றம் ஒன்றை மேற்கொண்டார், அது மட்டும் அல்ல விடுதலைப்புலிகளிற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தார்,25.07.1993இதயபூமி-1 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம்
இம்முகாமை துடைத்து அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டம் இட்டார்கள், இந்நடவடிக்கைக்கு இதய பூமி ஒன்று என தலைவரால் பேர் வைக்கப்பட்டு தளபதி பால்ராஜ் தலைமையில் வேவு நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டது,
02.07.1993 மணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம் மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.
அதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப்.கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.
இதயபூமி-1 என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில்பின்னணி வேலைகள்ஆன மருத்துவம், சண்டைகளில் ஈடுபடும் போராளிகளிற்கான ஆயுத மற்றும் உணவு மினி யோகம் அனைத்தையும் தளபதி அன்பு பொறுப்படுத்தார்,
, பால்றாஜ் அண்ணையின் வழிகாட்டலுடன் தளபதி சொர்ணத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில்ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.
இந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளை தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.!
ஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.
அந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை அந்த முகாம் கொண்டிருந்தது.
இப்படையிணிக்கு முதலாவது பொறுப்பாளராக போராளி கமிலோ- இரண்டாவது பொறுப்பாராக போராளி வேல்ராஜ் -மூன்றாவதுபொறுப்பாளர் போராளி கோணேஸ்- நாலாவது போறுப்பாளர் போராளிபாலேஸ்- மருத்துவப் போராளிகுமரதேவன் உட்பட லெப் கேணல் ஜெரி சுசிலன்/SL செங்கமலம் கெங்கா என சுமார் 70, போராளிகளுடன்சென்றுயிருந்தார் தளபதிசொர்ணம் தொடர்ந்து சண்டை தொடர்வாகப் பேசுவதற்கு அனைத்துப்போராளிகளும் ஒரு இடத்தில் ஒன்றுகூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அச்சண்டைக்கு தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பால்ராஜ் அவர்கள் கட்டளை அதிகாரிகளாகயிருந்தார்கள். இருவரும் மாறி மாறி அச்சண்டை தொடர்வாகக்கதைத்தார்கள். அடுத்து போராளிகளிற்கு தேவையான ரவை கூடு குண்டுகள் மற்றும் கோழ்சர்கள் என்பன வளங்கப்பட்டது. அப்பொழுது அனைத்துப்போராளிகளும் மேலதிக ரவைகள் வைக்கும் கோழ்சர்களை நெஞ்சில் கட்டியிருடுத்தார்கள். ஆனால் பெண் போராளிகளின் தலைவியான தளபதி ஜெணி அவர்கள் கோழ்சறை இடுப்பில்கட்டியிருந்தார்.
(இவர் தான் ஜெனி)
இதைப்பார்த்த தளபதி சொர்ணம் அவர்கள் ஜெணி கோழ்சறை நெஞ்சில் கட்டு என கட்டளை வளங்கினார். தான் கட்ட மாட்டேன் என ஜெணி அடம்பிடித்தார். அனைத்துப் போராளிகளிற்கும் முன்மாதிரி நடக்க வேண்டிய நீர் கோழ்சர் நெஞ்சில்கட்டவில்லை.ஆனால் அவர்கள் கோழ்சர் நெஞ்சில் கட்டியிருக்கின்றார்கள். ஆனால் நீர் மட்டும் கட்டவில்லையென சொர்ணம், அண்ணை உதாரணம் காட்டினார். ஆனால் ஜெணி அதை ஏற்கவில்லை.
அடுத்து சொர்ணம் அண்ணை லெப்ரினன்ட் கேணல் ஜெரி அவர்களைக் கூப்பிட்டு உன்னுடையே யக்கேட் கோழ்சறை ஜெணிக்குக்கொடு அவளின் நெஞ்சுக் கோழ்சறை நீர்வேண்டிக்கட்டு என்று சொல்லி ஜெணியின் பிரச்சனையைத்தீர்த்துவைக்கின்றார்.
இன்று நடந்த முறன்பாடுதான் பிற்காலத்தில் அவர்கள் இருவரும் ஒரு குடும்பம் ஆவதற்கான இறுக்கமான நற்பு ஏற்பட்டது. இதுபற்றி பின்னர்குறிப்பிடுகின்றேன்.
இருட்டோடு இருட்டாக நகர ஆரம்பித்தனர்.போராளிகள் காவலரணில், இருந்து.
சுமார் 15 கிலோ மீற்றர் நடந்து சென்றார்கள் விடுதலைப் புலிகள் சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணை தூவிவட்டு, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.புலி வீரர்கள்
இந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.
இப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.இப்படியான சம்பவங்கள் நிறையவே எமது விடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது,இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!
25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.!
இந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.
திடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது.
பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது மண்கிண்டிமலை சண்டை ஆரம்பமானது தளபதி பால்ராஜ் கட்டளை வளங்க சாழ்ஸ் அன்ரனி படையணி தடையை உடைத்து உள்ளே சென்றது. தளபதி ஜெணியும் கட்டளை வளங்கி தனது பெண் போராளிகளை வளி நடத்திக்கொண்டுயிருந்தார். அடுத்து மணலாறு மாவட்டப் போராளிகளும் சண்டையில் ஈடுபட்டார்கள் தளபதி சொர்ணம் அவர்களின்அணிக்கு வேல்ராஜ் மற்றும் கமிலோ இருவரும் கட்டளை வழங்கினார்கள்,
சிணைப்பர் ஆயுங்களுடன் இம்ரான் பாண்டியன் படையணிப்போராளிகளும். சண்டையில் ஈடுபட்டார்கள்பல சிங்களப் சிப்பாய்களின் தலைகள் பறந்தது சொர்ணத்தின் குரலைக் கேட்டதும் குதிகால் நிலத்தில் படாமல் ஒட்டம் எடுத்தது இராணுவம். டோசர் வாகனங்களை
RPG ஆயுதத்தால் அடித்து நொறிக்கினார்கள். புலி வீரர்கள் செத்தவன் சாக உயிரோடு இருந்த இராணுவம் ஆயுதங்களையும் எறிந்து விட்டு ஓடித் தப்பியது. இறுதியில் சண்டை வெற்றியில் முடிந்தது. றெச்சன் பைய்ண்டர் p.k LMG உட்பட t 81 எறிகனை செலித்தி என பலஆயதங்கள் ரவைகள் என்பன விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது. அச்சண்டையில்இம்ரான் பாண்டியன் படைபணியைச்சேர்ந்த போராளி கிஸ்னா உட்பட பத்துப் போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள். இது முடிய சொர்ணம் அண்ணை யாழ்பாணம் வந்துகொண்டுயிருந்தார் இதே காலத்தில்தான் இந்த வெற்றித் தாக்குதலும் நடந்தது இதை பார்த்துவிட்டுபின்னர் பின்னர் சொர்ணம் அண்னை என்ன செய்தார் என பார்ப்போம்,
26/08/1993 அன்றுயாழ்மாவட்டத்திற்கான மினியோகப்பாதையான தரைவளிப்பாதையான கொம்படி ஊரியான் பாதையை இராணுவம் 91 மூடியதில் இருந்து
அதனால் யாழ்குடா மக்கள் கடுமையான கஸ்ற்றத்தை எதிர்நோக்கியது மட்டும் அல்லாமல் நாளாந்தம் மக்கள் கடல் படையனரால் கொல்லப்பட்டுக்கொண்டுயிருந்த காலம் அது,
மக்கள் வெளியே செல்வது சென்றால் சிறு சிறு போட்டுக்களில் கிழாலியில் இருந்து ஏறி பூனகரி நல்லூர் பகுதிக்குச் செல்வதும் அங்கு இருந்து கிளாலிக்குச் செல்வதுமாக அவர்களின் பயணம் இருந்தது, விமானத் தாக்குதல் மற்றும் கடல் படையினரின் அச்சுஅச்சுறுத்தலால் பெரும்பாலும் மக்கள் அவ் ஆவத்தான பயணத்தை இரவு நேரங்களிலே மேற்கொள்வார்கள், ஆனால் அந்த நேரங்களைப்பார்த்து சிங்களக் கடல் படையினர் சுப்பர் டோறாக்களில் திடீரேன வந்து மக்களை வாழ்களால் வெட்டி அவர்களிடம் இருக்கும் பொருட்களைப் பறித்த பின்னர் அவர்கள் சென்ற வோட்டை கடலில் தாட்டு விடுவார்கள், ஒரு வாரம் சென்ற பின்னர் வெட்டுக் காயங்களுடன் அவர்களின் வொடி கரை ஒதுங்கும்,
கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம்
கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் தியாகம் மறக்க முடியாது என26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி, கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். எனஈழ நாதப் பேப் பறில் செய்திவந்தது
அவர்களின் விபரம் வருமாறு:
1. கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)
(கந்தசாமி இராமசந்திரன் – கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு)
2. கடற்கரும்புலி கப்டன் மதன்
(சீனிவாசகம் சிவகுமார் – மட்டக்களப்பு)
3. கடற்புலி கப்டன் சிவா
(முத்துலிங்கம் கருணாநாதன் – குச்சவெளி, திருகோணமலை)
4. கடற்புலி லெப்டினன்ட் பூபாலன்
(சுந்தரராஜ் பாஸ்கரன் – நாகர்கோவில், யாழ்ப்பாணம்)
5. கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்
(சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
தளபதி சொர்ணம் அவர்கள் சண்டை முடிந்து வெற்றிக்களிப்புடன் சண்டையில் எடுத்த சில ஆயுதங்களுடன் 28/07/1993 அன்று
வன்னியில் இருந்து யாழ்பாணம் நோக்கி வந்துகொண்டுயிருந்தார் சொர்ணம் அண்ணை அது அப்படி இருக்க யாழ்ப்பாணத்தில்
மிகவும் மகிழ்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றது.யாழ் பருத்தித்துறைக் கடலில் நினைத்துப்பார்க்க முடியாத வெற்றிகரச் சம்பவம் ஒன்று நடந்தது அது பற்றி விரிவாகப்பார்ப்போம்.
அப்பொழுது தலைவரின் பாதுகாப்புப்பொறுப்பாக பிரிகேடியர் கடாபி அவர்கள் இருந்தார். அதே வேளை ஒரு மகிழ்ச்சியான செய்தி வருவதற்கு பிரிகேடியார் சூசை அண்ணை அவர்களின் வளி நடத்தலில் இரண்டு கரும்புலிகளான புகளரசன் மற்றும் மணியரசன் இருவரும் கடல் றோந்தில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தார்கள்.
29/08/1993 திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக்கடற்பரப்பில் வைத்து தளபதி சூசை அவர்களின் வளி நடத்தலில் இவர்கள் இருவரும் சென்று மிகவெற்றிகரமாக அத்தாக்குதலை நடத்தினார்கள்,
மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோர் இச்சாதனையை செய்தனர்,அவ்வேளை திருகோணமலைய் காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டுயிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கப்பல் கடல் படையினர் இவர்களை அவதானித்துள்ளனர் தொடர்ந்து இவர்களின் வோட் அவர்களின் கண்ணிற்கு மீண் பிடிப்பவர்கள் போலவே தெரிந்தன. இவர்களை மறித்து மீண் பறிக்கலாம் என நினைத்து கிட்ட நெருங்கி மீண் கேட் ள்ளனர்.
முன்னர் இருதடவை சொர்ணம் அண்ணை வந்து கொண்டுயிருக்கின்றார் என குறிப்பட்டேன் இப்பொழுது அதைப் பற்றிப்பார்ப்போம்.
இங்கே ஆவத்தான விமானத்தாக்குதல் நடந்துகொண்டுயிருக்க பிரிகேடியர் சொர்ணம் அண்ணை தான் சண்டைகாகக்கொண்டுபோன அனைத்துப் போராளிகளையும் வாகணங்களில் ஏற்றிக்கொண்டு31/08/1993 அன்று யாழ்ப்பாணம்வந்துசேர்த்தார். சொர்னம் அண்ணை அவர்கள்கொண்டு வந்த PK LMG தான் தலைவரின் வாகணத்தில் செல்லும் பூரிப் என்பவருக்கு வளங்கப்பட்டது.
இதுதான் மினிமி LMG வெல்ஜியம் வெல்ஜீயம் தயாரிப்பு
முன்னர் இவர் மினிமினி LMG வைத்துயிருந்தவர் பின்ன்னர் இதை மாற்றி
PK LMG கொடுக்கபட்டதுஇதுதான் மண்கிண்டிமலையில்யிருந்து சொர்ணம் அண்ணைகொண்டு வந்தபிரதான ஆயுதமாகும்
(இதுதான் சொர்ணம் அண்ணை கொண்டுவந்தPK LMG )
PK LMG பூரிப் இது அவரின் பட்டப் பெயர் இவர் முன்னர் மினி மினி LMG வைத்து இருந்தார் பின்னர் இது ஒரு சிறந்த ஆயுதம் என்பதால் இது அவருக்குமாற்றி வாளங்கப்பட்டது.மண்கிண்டிமலை சண்டையில் பெரும் வெற்றிக்களிப்போடு வந்த தளபதி சொர்ணம் அவர்கட்டு அந்த சந்தோசம் நீன்ற நாள் நிலைக்கவில்லை.
இயக்கத்தினுடையே உள்வீட்டிற்குள் பெரும் நஞ்சுப்டாம்பு இருப்பது விடுதலைப் புலிகளின் புலநாய்வுப்பொறுப்பாளர் பொட்டுஅம்மான் அவர்களிற்கு தெரிய வந்தது.குறிப்பாக முகாம் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் அடுத்து மேலதிகமாக கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் என பாரிய குழப்பமான நிலையில் தலைமைப்பீடத்தில் காணப்பட்டது.
ஆனால் இவ்விடயத்தை மிக இரகசியமாக கையாழ வேண்டும் ஜேர்மன்தலைவர் கில்லர் சொன்னது போல் முதலில் கோளிக்கு அடிக்க வேண்டும் பின்னர் சிதறி ஓடிய குஞ்சுகளை அளிக்க வேண்டும். என்பதின் பொருள் முதலில் ரஸ்சியாவிற்கு அடிக்க வேண்டும் பின்னர் அதன் கிளை நாடுகளை அளிக்க வேண்டும் என்பதே கில்லர் அவர்களின் தந்திரமாகயிருந்தது அது அவரிக்கு தோற்ராலும் மாத்தையாவிடயத்தில் அதுவே எமக்கு சிறந்த வளியாக இருந்தது.
அதே வளிமுறையைத்தான் விடுதலைப் புலிகள் கையாழ விரும்பினார்கள். முன்னர் தளபதி மாத்தையா அவர்களை கைது செய்வது பின்னர் அவரோடு இணைந்த அனைவரையும் தனித்தனியாகக் கைது செய்வது இது தான் விடுதலைப் புலிகளின்தலைமையின் திட்டமாகயிருந்தது.
31//08/1993 அன்று மாத்தையா அவர்களோடு நிக்கும் போராளி ஒருதர் அவசரச்செய்தி ஒன்றை பொட்டு அம்மானிற்கு அனுப்பினார். மாத்தையா அண்ணை முல்லை மாவட்டத்தில் இருக்கும் மண்ணாங்கண்டல் முகாமிற்குச்சென்று அங்குயிருந்து கெலிக்கொட்டர் ஊடாக இந்தியா செல்லப் போகின்றார் என்பது தான் அந்தத்தகவல்.
இது திசை திருப்பலா அல்லது போலியானதா? அல்லது உன்மையானதா என்பதை உறுதிப்படுத்த அக்காலத்தில் போதியகாலம் காணமல் எமக்கு இருந்தது. இது தொடர்வாக31/08/1993 வலிகாமத்தில் உள்ள தலைவரின் ரெட்டி முகாமில் காலை 10 PM தலைவர் பொட்டுஅம்மான் சொர்ணம் மூவரும் ஆலோசனை நடத்தினார்கள்.அந்த ஆலோசனை என்னவன்றால் தளபதி மாத்தையா அவர்களை தலைவரை சந்திக்க வரச்சொல்லி அங்கே வைத்து அவரின் பிரச்சனையை பேசித்தீர்ப்பதோடு தொடர்ந்து அவரின் பாதுகாவலர்களை மாற்றி கண்காணிப்பில் வைத்துயிருப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அடுத்து அவருடைய ஏனைய போராளிகளையும் கைது செய்து விசாறனையூடாக உன்மையை அறிவதுதான் அவர்களின் திட்டமாகயிருந்தது.
31/8/1993 காலை 10.30 மணிக்கு தங்களை தலைவர் சந்திக்க விரும்புவதாகவும் உடனே நீங்கள் ரெட்டி அல்லது9.5 முகாமிற்கு வரவும் என்று தகவல் மாத்தையா அண்ணைக்கு அனுப்பப்பட்டது
. தகவலை அனுப்பி விட்டு தலைவர் சொர்ணம் அண்ணை மற்றும் பொடு அம்மான் அனைவரும் அவரின் வரவை எதிர்பார்த்து பார்த்துக்கொண்டுயிருக்கின்றார்கள்.9. 5 முகாமில்
ஆனால் 3.30 பிற்பகல் ஆகியும் அவர் வரவில்லை. அதனால் இவர்களிற்கு கடுமையான ஏமாற்றம் ஒரு பக்கம் இவர் இங்கே தான் உள்ளாரா? அல்லது வெளியே சென்று விட்டாரா ?அல்லது இனித்தான்போகப்போகின்றாரா? என்று குழப்பதில் இருந்தார்கள். தொடர்ந்து அடுத்தே நாட்கள் நகரவிடமுடியாது இரவைக்கு கண்டிப்பாக தளபதி மாத்தையா அவர்களை பிடித்தே ஆக வேண்டும் என்று மூவரும் முடிவு எடுத்தார்கள். ஆனால் அவரைப்பிடிப்பதற்கான முழுமையான பொறுப்பை தளபதி சொர்ணம் அவர்களிடம் இருவரும் ஒப்படைத்தார்கள். அன்றைய நாள் நான் அதே முகாமில் சமையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தேன்.
அதைவிட நான் தான் சமைப்பவர்களிற்கு அனைவருக்கும் பொறுப்பாகயிருந்தேன்31/03 /1993 பிற்பகல் 3.00 மணி என்னை கூப்பிட்ட சொர்னம் அண்ணை சமையில் முடிஞ்சா ? என கேட்டார் நான் ஓம் என்று சொல்ல நிறைய சாயம் போட்டு ஒரு T கொண்டுவா என்று அவர் சொல்ல நானும் ஒரு சூடான T போட்டுக்கொண்டுகொடுத்தேன். T யைக்குடித்துக்கொண்டே மினிமினி மேலதிகமாக 200 ரவையும் பிரசண்ணாவிடம் வேண்டிக்கொண்டு வேகமாக வெளிக்கிட்டுக்கொண்டுவா என கட்டளையிடுகின்றார் எனக்கு.
கோழ்ஸ்சறில் 500 மேலதிகமாக வேண்டிய 200 மொத்தம் 700 ரவையுடன் மினிமினி LMG யைக்கட்டிக்கொண்டு சொர்ணம் அண்ணையைச் சந்திக்கிண்றேன். வாகணத்தை சொர்ணம் அண்ணை ஓட்டே நான் அவர் பக்கத்தில் இருக்கின்றேன். வாகணம் வேகமாக ரெட்டி முகாமில் இருந்து வல்லைவெளியூடாக வடமராச்சியை நோக்கிச்செல்கின்றது. அங்கே முதல் பாதுகாப்பில் இருந்தே லெப் கேணல் குணேஸ் அவரின் உணர்வு மற்றும் விடுலைப்பற்று காரணமாக கடல் புலிக்கு அனுப்பப்பட்டவர். உறனர்களோடு ஜேர்மேனியில் வாழ்ந்த குணேஸ் அவர்கள் விடுதலைக்காகப்போராட வேண்டும் என்பதற்காக ஜேர்மனியில் இருந்து தமிழீழம் வந்து இயக்ககத்தில் இணைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடந்து அங்கே சென்றதும் சிறிது நேரம் சொர்ணம் அண்ணை கதைத்து விட்டு குணேஸ் அவர்களையும் வாகணத்தில் ஏற்றிக்கொண்டு சாவகச்சேரியை நோக்கி எங்களின் வாகணம் சென்று கொண்டுயிருந்தது.அங்கே சாவகச்சேரியில் உள்ள கச்சாயில்தான் எங்களுடைய 45 பயிற்சி முகாம் இருந்தது. அங்கே சென்றதும் சொர்ணம் அண்ணை பயிற்ச்சி ஆசிரியர் ஊடாக விசில் அடித்து அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூடலிற்கு வருமாறு சொல்லப்பட்டது. அனைவரும் ஓடிவந்து வரிசையாகநின்றார்கள்.
பின்னர் சொர்ணம் அண்ணை அதில் குறிப்பிட்ட சில போளிகளைமட்டும் மணியின் தோட்டம் செல்வதற்காக தரம்பிரித்து விட்டார். அதில் மிகவும் நம்பிக்கையான போராளிகளான தளபதி இரட்ணம் போராளி கோணேஸ் போராளி பூரிப் மூவரையும்என்னுடையே பக்கம் அவர்களை போய் நில்லுங்கோ என சொர்னம் அண்ணை சொல்ல நான் விளக்கம் இல்லாமல் வேறு பக்கம் போய் நிக்க ஆத்திரம் அடைந்த கொர்ணம் அண்ணை ஒடி வந்து எனக்கு இரண்டு அறையும் போட்டு வகுத்தில் பிடித்து எழுத்து எறிந்தார் என்ணை நான் மினி மினி யோடு நிலத்தில் விழுந்து வேகமாக எழும்பி பூரிப்புக்குப் பின்னால் போய் நின்றேன்.
அடியை வேண்டிக்கொண்டு இயக்கத்தில் ஏதோ ஒரு பாரிய பிரச்சனை எற்பட்டுள்ளது என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்,எங்களுடையே பிக்காப் வாகனத்தில்போராளி பூரிப்-போராளி கோணேஸ்- பிரிகேடியர் இரட்ணம் - லெப் கேணல் குணேஸ்- இவர்கள் நாலுபேரையும் ஏற்றிக்கொண்டு நானும் சொர்ணம் அண்ணயும் மணியின் தோட்டம் சென்றோம்.
அங்கே றிச்சாட்தலைமையில் எங்களுடைய பாதுகாப்புப் போராளிகளும் வந்து சேர்ந்தார்கள்அதில் போராளி இளையவன் .ஜெயநந்தன் கரும்புலி கப்டன் வாமன் என பல போராளிகள் வந்துயிருந்தார்கள்.. சாழ்சன்ரனி புலநாய்வுத்துறை சைவர் பிரிவு என கனிசமான போராளிகள் பங்குபற்றினார்கள். பொட்டுஅம்மான் பால்ராஜ் அண்ணை மற்றும் சொர்ணம் மூவரும் மாறி மாறிக்கதைத்தார்கள்அனைத்தும் போராளிகளிடம் கதைத்தார்கள் நான் சொர்ணம் அண்ணக்கு முன்னால் சென்று அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டுயிருந்தேன்.
ஆனால் உன்மையைச்சொல்லவில்லை மாறாக வெளில் இருந்து எமக்கு எதிராக ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் . அதே நேரம் உள்ளே இருந்து ஒரு சிலர் தப்பி வேறு நாட்டிற்கு போவதற்கு இருப்பதாகவும்கோட்டையில் ஒரு பாரிய ஆகாயத்தரையிறக்கம் நடந்தால் நாம் பல இளப்பை சந்திக்க நேரிடும் நீங்கள் அனைவருவரும் விளிப்புடன் இருந்து கடமையைச் செய்ய வேண்டும் என்று சொல்லி அனைத்து போராளிகளிற்கும் தெளிவுபடுத்தப்பட்டது. அதையடுத்து கடல் ஒரங்களைச் சுற்றி அனைத்துப் போராளிகளும் விடப்பட்டார்கள்.
அதில் எமது தாக்குதல் படையினர் போராளி கெனடி தலைமையில் மாவட்ட புரப்பக்கத்தால் மாத்தையா தப்பிப் போகாதவாறு பாதுகாப்வாகப்பை பலபபப்படுத்தினார்கள்,மகளீர் படையணி சாழ்ஸ் அன்ரணி , கடல் புலிகள் இவர்கள்மாதகல் பண்ணைக்கடல்கரையோரமாகவிடப்பட்டார்கள் புலநாய்வுத்துறையினர் யாழ் நகருக்குள் இறக்கப்பட்டார்கள், மட்டு அம்பாரை ஜெயந்தன் படையணி இந்நடவடிக்கைக்கு எடுக்கப்படவில்லை
அவர்களின்பிரச்சனையை முடித்து விட்டு அதே இடத்தில் எமது படையணி போராளிகள் றிச்சாட் தலைமையில் ஒரு சிறப்பு அணி தளபதி சொர்ணம் அண்ணையால் உருவாக்கப்பட்டது. அவ் 15 பேர் கொண்ட அணியில் தளபதி இரட்ணம் போராளி2 oscar 3 பிரின்ஸ் .4 கரும்புலி கப்டன் வாமன்5 கோணேஸ் 6 லெப் கேணல் குணேஸ் போராளி இளையவன் லோ போராளி பூரிப் போராளி ஜேயனந்தன்போராளி ஜெயாப் இவர்கள் 15 பேரும் சொர்ணம் அண்ணையின் தலைமையில் சென்று முன் பக்கத்தால்தாக்குவது எனவும் பின் பக்கத்தால் நிருபன் அவர்களின் எமது புலநாய்வு அணிப்போராளிகள்பின்னால் ஓடாமல் தடுப்பார்கள் என சொர்ணம் அண்ணையால் திட்டம் தீட்டப்பட்டது - ஆனால் பொட்டுஅம்மான் சொர்ணம் அண்ணைபால்ராஜ் மூவரும் எங்களோடு வந்தார்கள்.
நாங்கள் அனைவரும் மணியன் தோட்டத்தில் இருந்து கால்நடையாக மாத்தையா அண்ணையின் முகாமை அமைந்து இருந்தசுண்டக்குளிபகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்இரவு 12 மணிக்கு அம்முகாமை நெரிங்கினோம்.அவ்வேளையில் தான்.முகாம் சுற்றுச் சூழலை அவதானிக்கும் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு போராளிகளை நாங்கள் பிடித்தோம்.
பிடித்தவுடன் அவர்களின் ஆயுதங்களை பறித்த சொர்ணம் அண்ணை உடனே அவர்களின் சேட்டைக்களட்டி இருவரின் கைகளையும் பின் பக்கத்தில்வைத்துக்கட்டினார்.அதற்குப்பின்னர் பின்னால் நின்ற எங்களை ரோச் அடித்து இந்த பாரு எவளவு பேர் வந்துயிருக்கம் என்று ஏதாவது மறைத்தாய் என்றால் அடித்து நொறுக்குவோம் என்று சொர்ணம் அண்ணை அவ் இருவரையும் விரட்டினார்.
அதற்கு பின் சுரேஸ் எங்கே என முலாவது கேழ்வியைக்கேட்டார் அதற்கு அப்போராளி இங்கேதான் நிக்கின்றார் என பதில் சொன்னான். கோபம் அடைந்த சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறை அறைந்தார். அடிக்குப் பின்னர்அவர் வன்னிக்கு போய் விட்டார் என உன்மையைச்சொல்லிய அப்போராளிஅழத்தொடங்கினான் இருந்தும்அடுத்த கேழ்வி இந்த முகாம் பொறுப்பாக யார் நிற்பது என்று கேட்டார் அதற்கு அவன் ராகவன் என்று பதில் அளித்தான்.
உடனே அவனிற்கு தொடர்பு எடு என்று சொன்ன சொர்ணம் அண்ணை தொடர்வு கிடைத்ததும்அவனின் வோக்கியை வேண்டி உள்ளே நின்ற ராகவனோடு சொர்ணம் அண்ணை கதைத்தார். நான் சொர்ணம் கதைக்கின்றேன் நான் மாத்தையா அண்ணையை சந்திக்கவருகின்றேன் என்பதை அவரிக்கு தெரியப்படுத்து என்று சொல்லி விட்டு கதையை முடிக்க முன்னர் அந்த வோக்கியை பொட்டு அம்மானிடம் கொடுக்கின்கின்றார்.
பொட்டுஅம்மான் மாத்தையா அண்ணையிடம் வோக்கியைக்கொடுகதைக்க வேண்டும் என்று சொல்ல அவன் வோக்கியை மாத்தையா அண்ணையிடம் கொடுக்கின்றான். மாத்தையா அண்ணையிடம் பொட்டுஅம்மான் பேசுகின்றார் மாத்தையா தலைவர் கொல்லி நாங்கள் வருகின்றோம் நீ ஒரு தரம் வெளியே வா என்று அம்மான் தெரியப்படுத்த ஒரு பிரச்சனையும் இல்ல பொட்டுநீங்கள் உள்ளே வாங்கோ என்று மாத்தையா அண்ணை பதில் அளிக்கின்றார். மீண்டும் பொட்டு அம்மான் சிறிதாக மாத்தையா அண்ணையை விரட்டுகின்றார்.
மாத்தையா நீ பிளையான வளியில் போகாகதே நேரானவளியில்வா என்று அம்மான் சொல்ல பிரச்சனை இல்ல பொட்டு உள்ளே வாங்கோ என்று மீண்டும்மாத்தையா அண்ணை சொல்கின்றார்.
சொர்ணம் அண்ணை அவனின் வோக்கியையும் றைவுளையும் வேண்டி எடுக்கின்றார். அதை வேண்டவும் அவன் அளத்தொடங்கினான்.
சந்திப்பது என்றால் வாகணத்தில் உள்ளே வார நீங்கள் இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி வர வேண்டும் என்று கேழ்வி கேட்டான். அதற்கு சொர்ணம்அண்ணை சாதறண போராளிகளிடம் எல்லாம் சொல்ல முடியாது அவனை சமாளிப்பதற்காக அண்ணை சந்திக்க வரச் சொல்ல மாத்தையா அண்ணை வரவில்லை அதனால்தான் இப்படி வந்த நாங்கள் என்று அவனிடம் சொன்னார். சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி பின்னால் அனுப்பிவிட்டு நாங்கள் நடக்கத் தொடங்கினோம்
. இப்பொழுது தான் எனக்கு விளங்கியது மாத்தையா அண்ணையை கைது செய்வதற்காகத்தான் இந்தத் திட்டம் போடப்பட்டு நாங்கள் போய்க்கொண்டுயிருக்கின்றோம் என்று நூறு வீதம் நான் விளங்கிக் கொண்டேன்.
வேகமாக நடந்து மாத்தையா அண்ணையின் முன் வாசல் பக்கம் உள்ள வேலியைச் சென்றடைந்தோம். அதற்கு பக்கத்தில் சென்றதும் மினி மினி LMG குணேஸ் நான் லோ வாகனத்தகர்ப்பு லோஞ்சர்வைத்து இருந்த பிரின்ஸ் இளையவன் மற்றும் கரும்புலி கப்டன் வாமன் டொங்கான் வைத்துயிருந்த இரட்ணம் என பல போராளிகள் வேலி ஓரத்தோடு சண்டைக்குத் தயாராக நின்றோம்.
அதில் நின்ற லெப் கேணல் குணேஸ் அவர்களிடம் சொர்ணம் அண்ணை உள்ளே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டால்அல்லது எனது தொடர்வு இல்லாமல் விட்டால் உள்ளே இருப்பவர்களை சலண்டர்அடையச் சொல்லிக்கேழுங்கோ அதை ஏற்று சண்லடர் அடைவபர்களை பாதுகாப்பாக வெளியே எடுங்கோ அதை ஏற்காதவர்களிற்கு நடவடிக்கை எடுங்கோ லோவால் அடித்து விட்டை தரை மட்டமாக்குங்கோ எங்களிற்கு அண்ணைதான் முக்கியம் என்று சொல்லி விட்டுசொர்ணம் அண்ணை
உள்ளே சென்றார் அவரோடு போராளி கோணேஸ் மற்றும் றிச்சாட்போராளிளான ஜெயாப் பூரிப் ஜெயநந்தன் தளபதிகளான பால்ராஜ் பொட்டு என15ற்கு மேற்பட்ட போராளிகள் உள்ளே சென்றார்கள்
அவர்கள்உள்ளே போய்க்கொண்டுயிருக்க LMG யை சேம்பறில் ஏற்றி விட்டு லெப் கேணல் குணேஸ் அழ வெளிக்கிட்டான்இதைப்பார்த்த இரட்ணம் அப்படி ஒன்றும் நடக்காது. கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி குணேஸ் அவர்களை அமைதிப்படுத்தினான்.இவர்கள் உள்ளே சென்றதும் மாத்தையா அண்ணையிடம் சொர்ணம் அண்ணை அண்ணை வரட்டாம் என்று சொல்ல எவ்விதமான எதிர்பும் இன்றி வெளிக்கிட்டுக்கொண்டுவாகணத்தில் ஏறினார். அவர் தனியாக ஒரு வாகணத்திலும் அவரின் மனைவி பிள்ளைகள் வேறு ஒரு வாகணத்திலும் ஏற்றிக்கொண்டு பொட்டுஅம்மான் கண் முடி முளிப்பதற்கு இடையில் தனது வேலையைத்திறமையாக முடிவுத்து விட்டு வெளியே சென்று வட்டார்.
ஆனால் இது நடந்தது இரவு 2 மணி இதையடுத்து தளபதி சொர்ணம் அண்ணை நித்திரையில் கிடந்த அனைத்துப்போராளிகளையும் தட்டி எழுப்பி அவர்களிடம் இருந்த ஆயுதம் குப்பி தகடுகளை வேண்டினார் சொர்ணம் அண்ணையிடம் . ஒரு சில போராளிகள் ஏன் என்று கேட்க
சொர்ணம் அண்ணை உங்களின் ஆயுதங்களை மற்றும் குப்பிகளைக்களட்டி தாங்கோ என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பாதுகாப்பிற்கு நிக்கின்றோம் ஏன் ஆயுதத்தை தர வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சொர்ணம் அண்ணை உங்களிற்கு யார் தலைவர் என்று கேட்டார். அவர்கள் பிரபாகரன் என்று பதில் அளித்தார்கள். அவர் சொன்னால் நீங்கள் செய்வயலா அல்லதுசெய்ய மாட்டீர்களா என்று கேட்டார் செய்வம் என பதில் அளிக்கின்றார்கள்.
அதையடுத்து சொர்ணம் அண்ணை அவர்தான் உங்களின் ஆயுதங்களை வேண்டச்சொன்னவர் என்று அவர்களிற்குத் தெரியப்படுத்த அவர்கள்அனைவரும் தங்களின் ஆயுதங்களைக்களட்டிக்கொடுக்கின்றார்கள். அதைத்தொடர்ந்து அனைவரின் ஆயுதங்களும் வேண்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து சமையல் கூடம் தொடக்கம் அனைத்து இடங்களும் சோதனை இடப்பட்டு அனைத்து ஆயுதங்களும் அனைத்து விவரங்களும் எடுக்கப்ப்பட்டது.
தளபதி சொர்ணம் அண்ணையின் வெற்றிகர நடவடிக்கையால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மாத்தையா அண்ணை உட்பட அவரின் பாதுகாப்பிற்கு நின்ற அனைத்துப் போராளிகளையும் கைது செய்து பொட்டு அம்மானிடம் ஒப்படைத்தோம்.
பக்கத்து வீட்டில் ஒரு நாய் கூட குலைக்காமல் அயலில் உள்ள மக்களிற்குத் தெரியாமல் மிகவும் இரகசியாக அமைதியாக இந்நடவடிக்கை செய்து முடிக்கப்பட்டது.அவர்களிடம் இருந்து எடுத்த இரண்டு M 2 னோத்திறி PK மற்றும் டொங்கான் கைத் துப்பாக்கிகள் T 56 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வெற்றிக்களிப்புடன் எங்களின் ரெட்டி முகாமிற்குச் சென்றடைந்தோம்.
ஒரு பெரிய தலைவலி இலகுவாக முடிந்தது.மாத்தையா அண்ணையை பிடித்து அடுத்த நாள் தளபதி கடாடி தலைமையில் போராளி மோகன் செல்லக்கிளி நசிர் கதிரோளி நான் முத்துஐயன் தலைவரின் வாகனறைவராக தளபதி கடாபி அண்ணை வாகணத்தையோட்டிச்செல்ல அதற்கு உள்ள செல்லக்கிளி மற்றும் மோகன் இருவரும் இருந்தார்கள். அதை விட தலைவரின் மனைவி மதிவதனியும் அவரின் இரு பிள்ளைகளும் அதற்குள் இருந்தார்கள். அப்பொழுது நாங்கள் எல்லோரும்
வடமராச்சியில் உள்ள நவண்டில் முகாமிற்குச்சென்றது வாகனம் இரண்டாவது வாகணத்தை போராளி நசிர் ஓட்டிச் செல்ல வாகனத்ற்குள் 50 பது கலிபர் உள்ளே இருக்க அதன் கண்ணர் கதிரோளி உதவியாளர் முத்துஐயன் மற்றும் மினி மினி LMG யோடு நான் அங்கே சென்றுகொண்டுயிந்தோம்.
75 ற்கு மேற்பட்டபாதுகாவலர்களை விட்டு தலைவர் தன்னம் தனியாக ஒரு சிலரை மட்டும் தன்னோடு கொண்டு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தலைவரிக்கு மாத்தையா அண்ணை என்ற ஒரு தனி மனிதனால் ஏற்பட்டது என்பதை எவராலும் மறந்து விடமுடியாது.
அது வடமராச்சி நவண்டிலில் இருந்தது உயர்ந்த மனைமரமும் பெரிய மாமரங்களுமாக அழகான முகாமாக அது இருந்தது.நான் முத்துஐயன் கதிரோளி நசிர் 4 பேரும் அனைவருக்குமான சமையில் வேலைகளையும் செய்துகொண்டு காவல்கடமைகளிலும் ஈடுபட்டோம். அடுத்த மூவருமான கடாபி அண்ணை செல்லக்கிளி மற்றும் மோகன் இவர்கள் மாறி மாறி தலைவரின்பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டார்கள். இருவாரங்கள் எங்களுடைய காலம் அங்கே சென்றது.
இது இப்படி இருக்க தளபதி சொர்ணம் அண்ணை மற்றும் போராளி நிருபன்இருபரும்ரெட்டி அல்லது 9.5 தலைவரின் பாதுகாப்பு முகாம் உட்பட பாதுகாவலர்கள் நின்ற பயிற்சி முகாம்ககள்அனைத்துக்கும் சென்று மாத்தையா அண்ணையின் உளவாளிகள் என்று சந்தேப்பட்டவர்களான அனைவரையும் கைது செய்து தளபதி பொட்டு அம்மானிடம் ஒப்படைத்து விட்னர்.
சொர்ணம் அண்ணையால்பிடிக்கப்பட்டவர்களின் விபரம் தலைவரின் வாகண ஓட்டுணர் போராளி சின்னமணி தலைவரின் மருத்துவப்போராளி தோமஸ் தலைவரின் பிரதான தொலைத்தொடர்வாளர்கள் போராளி நரையன் மற்றும் முருகன் ரெட்டி 9.5 முகாம் பொறுப்பாளர் சதீஸ்சன். பொறுப்பாளர் சுசிலன் பொறுப்பாளர் செங்கமலம். தளபதி ஜெயம் போராளி லோறன்ஸ்.போராளி சந்தோஸ் இவர்கள் அனைவரையும் பிடித்து சொர்ணம் அண்ணை பொட்டு அம்மானிடம் கொடுத்து விட்டார்.இது இப்படி இருக்க பாதுகாப்பிற்கு நல்ல போராளிகளை இணக்கண்டு கணிசமான போராளிகளை உள்ளே எடுத்து அவ்வெற்றிடங்களை நிறப்பினார் தளபதி சொர்ணம்.
அண்ணை புதிதாக வந்தவர்களான போராளிகளான டெல்சன் டொமினிக் சண் சிவசங்கர் என பல போராளிகள் உள்ளேவந்தார்கள்அதனால் பாதுகாப்புக்கடமைக்கான ஆழ் பற்றாக்குறையும் தீர்ந்துவிட்டது
இது இப்படிஇருக்க 1989 ஆம் ஆண்டு தொடக்கம் தளபதி மாத்தையா அவர்களிற்கும் இந்தியாவினுடையே புலநாய்வுத்துறையான றோ அமைப்பிற்கும் இருந்து வந்த இரகசியத்தொடர்வு 10/08//1993 முற்றாகத்தூண்டிக்கப்பட்டது. காரணம் மாத்தையா அண்ணையின் அனுதாபிகள் அனைவரும்பிடிக்கப்பட்டகாரணத்தால் இப்பிரச்சனை ஏற்பட்டது.
இது இந்தியாவினுடையே புலநாய்வுத்துறைக்கு பெரிய தலையிடியாகமாறியது. எப்படியாவது இதை அறிய வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. றோ அக்காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் பிரச்சனையில் பிடிபட்ட நிறையப்போராளிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தார்கள். அதில் தேசியத்தலைவரோடு நெருக்கமாகப்பளகக்கூடிய யாழ் வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி தாளைபடியைச் சேர்ந்த கிருபன் என்பவரும் அந்த ஜெயலில் இருந்தார்.
ஜெய்லிற்குச் சென்று நேரடியாக கிருபனைச்சந்தித்த புலநாய்வுத்துறையினர். விசாரனைக்கு என்று சொல்லி இரண்டு கிழைமை தொடர்ச்சியாக கிருவனைவெளியே கொண்டு சென்றார்கள். ஆனால் அவரோடு இருந்தவர்களிற்குக்கூட ஏன் அவரை மட்டும் தனியாகக்கொண்டுபோகின்றார்கள் என்பது தெரியாமலும் கடுமையான இகசியமாக றோ இதைச்செய்தது.
அங்கே கிருவனைகொண்டுபோன றோவினர் 20 வயது மதிக்கத்தக்க இந்தியா விவச்சாரிகளைக்கொண்டு கிருபன் தங்கும் அறையில் விட்டனர். கிருவன் அந்தப்பெண்ணோடு செய்த ஆண் பெண் உறவுகளை அறையில் பொருத்தப்பட்ட கமரா படம் எடுத்துக்கொண்டுயிருந்தது. இது தான் அங்கே நடந்தது.
ஆனால் கிருவன் ஒரு புது அனுபவத்தை தான் கண்டதாக மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த நாள் கிருவன் மீதுறோ அதிகாரிகள் ஒரு சிலரால் விசாரனை தொடங்கியது. முதலில் கிருவன் செய்தே தவறான வீடியோக்களை அவரிடம் காட்டினார்கள். பின்னர் இந்த வீடியோவை நாங்கள் இணையத்தில் போட்டால் பிரபாகரன் கண்டிப்பாக உங்களிற்கு மரண தண்டனை வளங்குவார் அதனால் நாங்கள் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்று கிருவனிடம் சம்மதம் கேட்கப்பட்டது.
அதை ஏற்காவிட்டால் கிருவனிற்கும் வேறு வளியில்லை கிருவனும் அவர்கள் சொன்னதை சம்மதித்தான். உன்னை நாங்கள் செய்லில் இருந்து தப்பிச்செல்வதற்கான வளிகளை உருவாக்குவோம் நீ அங்கே சென்று வே பிரபாகரனிற்கு நல்ல பிள்ளை போல் நடித்து பிரபாகரனையும் பொட்டு அம்மாளையும் கொலை செய்ய வேண்டும்.
அதை அடுத்து ஜெயிலில் இருக்கும் மாத்தையாவை வெளியே எடுத்து அவர் விடுதலை புலிகளின் தலைவராகவும் நீ உதவித் தலைவராகவும் இருக்க வேண்டும். சிறிது காலம் களித்து நீ மாத்தையாவையும் கொலை செய்து விட்டு நீயே தலைவராகயிரு உமக்கு விரும்பியே ஒருதர் இரண்டாவது தலைவராகயிருப்பார்.நீ போய் மாத்தையா இருக்கும் இடத்தை அறியே வேண்டும்.
இது முடியாவிட்டால் இரண்டாவது மாத்தைய்யாவை கடத்தி இந்தியா அல்லது இலங்கை இராணுவத்திடம் கடத்தி பாதுகாப்பாகக்கொண்டு செல்ல வேண்டும் அல்லது மாத்தையாவை கொலை செய்ய வேண்டும் அப்படி செய்தால் மாத்தையாவால் முளைச்சலவை செய்து பிரபாகரனை கொலை செய்வதற்கு மாற்றப்பட்ட 40 முகவர்களையும் பாதுகாற்க முடியும் அப்படி பாதுகாற்தால் தொடரந்து நடவடிக்கையை செய்வது இலகுவாகயிருக்கும் என்று கிருபனிற்கு றோவால் சொல்லட்பட்டது.
இலங்கை அரசிக்கும் உங்களிற்கும் சண்டை வராது அதை இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று கிருவனிற்கு உறுதி அளிக்கப்பட்டது.அடுத்து ஆரம்பம் ஆனது வேலை இந்தியாவின் புலநாய்வுதுறையால்கைத்துப்பாக்கிகள் கிருவனிற்கு வளங்கப்பட்டது. வேலூர் சிறைசாலையில் இருந்து என்னொரு சிறைசாலைக்கு மாற்றுவது போல் திட்டம் போடப்படும். ஆனால் நீ இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் காவல் துறையைச்சுட்டுவிட்டு நீர் மட்டும் தப்பி ஓட வேண்டும் என றோவால் சொல்லப்பட்டது.
.முதலில் சொல்லப்பட்டது ஆனால் அங்கே செல்லும் போது வழமையாக கடையில் சாப்பட்டு விட்த்தான் மீண்டும் ஜெயிலிற்கு வருவது வழமைஅங்கு சென்று அக்கடையில் கிருபன் சாப்பிட்டுக்கொண்டுயிருந்தார்ஆனால் மறைத்து வைத்துயிருக்கும் பிஸ்ரேளைஇடுப்பில் இருந்து எடுத்து பொலிசை சுடுவதிற்கான சந்தர்ப்பம் கிருபனிக்க்குக் கிடைக்கவில்லை, மூன்று தடவை றோ சந்தர்ப்பம் கொடுத்தும் கிருபன் அக்காரியத்தை செய்யவில்லை, சில நேரம் தமிழர்கள் என்ற அனுதாபம் கிருபனிக்கு இருக்கலாம் என றோ நினைத்தது,
, இரண்டு தமிழ் பொலிசார் அவருக்குப் பாதுகாப்பாக நின்றார்கள் திடீரென காரில் வந்து இறங்கய இந்தியாவின்றோ அதிகாரிகள் இரண்டு டொலிஸ்சையும் சுட்டு விழ்தினார்கள், இதை எதிர்பார்த்த கிருடன் அவ்விடத்தில் இருது சத்த வெடி ஒன்றை வைத்து விட்டுத் தப்பி ஓடினான், அங்கே சென்ற கிருபன் தமிழ்நாட்டில் வாழ்ந்த எமது உறுப்பினார்களான போராளி ஜீவா, போராளி,சாழ்ஸ், போராளி கவில் இவர்கள் மூவரிடமும் தானே பொலீஸ்சைச் சுட்டதாகப் பச்சைப் பொய்யைச் சொன்னான், அவர்கள் நம்பவில்லை துப்பாக்கி வரலை மணந்து பார்க்கச் சொல்லி அவர்களை நம்ப வைத்தான்,
அவர்களும் நம்பினார்கள் இத்தகவல் விடுதலைப்புலிகளிற்குபறந்தது, இதை அறிந்த தலைவர் உடனே தமிழீழம் அனுப்புமாறு தலைவர் இந்தியாவில் நிக்கும் போராளிளிக்குத் தலைவரால் தகவல் அனுப்பப்பட்டது, உடனே விடுதலைப் புலிகளின்ஒழுங்குபடுத்தலில் மேற்குறிப்பிட் 3 போராளிகளுடன் கிருவனுடன் 4 பேரும்கோடியாக்கரையில் இருந்து தமிழீழம் வந்து சேர்ந்தார்கள்,
அவர்கள் திட்டம் இட்டது போல் வேலுரில்இருந்துமாற்றும் போது இரண்டு பொலிசாரை கிருவன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றான். எனவும் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக டாரிய வதந்தி இந்திய ஊடகங்களில்.றோவால்பரப்பப்பட்டது
அதை தமிழக மக்கள் நம்பியதோடு மட்டும் அல்லாமல் இரண்டு தமிழ் பொலிசாரையும் சுட்டு விட்டுச் சென்று விட்டார்களே என்று விடுதலைப்புலிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.
ஆனால் புத்திசாலித்தனமாக செய்து விட்டு நல்லபிள்ளைபோல் நடித்தது இந்தியாவினுடையே புலநாய்வுத்துறை.இது இப்படி இருக்க இவர்கள் நாலு பேரும் பாதுகாப்பாக போய் செர்ந்தார்கள் யாழ்பாணம். இவர்கள் வந்ததை அறிந்தே தேசியத்தலைவர் கடுமையான மகிழ்ச்சி அடைந்தார்
. தனது பாதுகாவலர்களை அனுப்பி தனது முனாமிற்கு எடுத்து வாழ்த்துத் தெரிவித்ததோடுமட்டும் இன்றி முத்தம் கொடுத்து வரவேற்றார். முதலாவதாக பழையில் உள்ள சுவாஸ் தோட்டத்திற்குத்தான் கிருவனை கொண்டுவந்தார்கள் கிருவனைப் பார்த தலைவர் கட்டி அனைத்து முத்தம் கொடுத்தது மட்டும் அல்லாமல் உடனே கிருவனிற்கு கைத்துப்பாக்கியால் சூட்டுப்பயிற்ச்சியும் வளங்கினார்.
அதையெடுத்து யாழ்கொக்குவில்லில் இருக்கும் ரெட்டி அல்லது9.5 முகாமிற்கு தலைவர் அவரையும் கூட்டிக்கொண்டு சென்றார். அங்கே சென்றதும் சொர்ணம் அண்ணையின் வீட்டில் கிருவன் தங்கினார்.
அடுத்த நாள் காலை என்னைக்கூப்பிட்டு சொர்ணம் அண்ணைய் தொட்டியை கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளி தொட்டியை நிறப்பு கிருவனை குளிப்பாட்டு மாறு என்னிடம் தெரியப்படுத்தினார் நான் அவர் சொன்னது போல் கிருவனை குழிப்பாட்டினேன் அதைத்தொடர்ந்து செங்கமலம் வைத்து இருந்த2ப் போர் வாகணத்தை கிருவனிக்குக்கொடுத்து உல்லாசமாக இடங்களை சுற்றி பார்த்துக்கொண்டு திரியுமாறு தலைவரால் அனுமதி வளங்கப்பட்டது.
அதை விட கிருவனிற்கு புதுகைத்துப்பாக்கிகளையும் கொடுத்து வெளிநாடுகளிற்குக்கதைக்கும் நவின தொலை தொடர்வுக்கருவி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் லெப் கேணல் மகேந்தி மேஜர் ஆதவன் இருவரும் கிருவனின் பாதுகாப்பிற்காக விடப்பட்டது.
அனைத்தையும் கிருபனிற்குக் கொடுத்ததலைவர் கிருபனிற்குக்கொடுத்த கடமையை நினைத்தால் கவலைதான் வரும் ஆனால் நம்பிக்கைத்துரோகம் என்பது இப்படியானவரலாறுகளை படிப்பதின்னூடாக எம்மால் அறிய முடியும். கள்ளனைப்பிடித்து பொலிஸ்வேலை கொடுத்த கதையாகத்தான் அது இருந்தது.
மாத்தையா செய்த தவறுகளை தலைவர் வெளிப்படையாக கிருபனிடம் சொன்னார். நீர் மாத்தையாவை அடிக்கடி சந்தித்து றோவினுடையே திட்டங்களை அறிந்து என்னிடம் சொல் என்று தலைவர் கிருவனிடம் சொன்னார்.
அது கிருவனிற்கு றோவிற்கு தகவல் கொடுக்க பெரும்வசதியாகயிருந்தது. கிருபன் மாத்தையா அவர்களை சந்திப்பதற்கு பூரண அனுமதிதலைவரால் வளங்கப்பட்டது
ஆனால் மாத்தையா அவர்களை கிருபன் அடிக்கடி சந்தித்தார். ஆனால் மேலே றெக்கோட் கமறா பொருத்தப்பட்டுயிருந்தது. அது அனைத்து விடையங்களையும் பதியும் என்பதை கிருவன் அறிந்தானோ இல்லையோ என்பது தெரியாது. கிருவன் மாத்தையா அண்ணையின் அறைக்குள் சென்றதும் முதலில் சுகம் விசாரிப்பதுபோல் கதைப்பான். அதையடுத்து ஒரு மாததிற்குள் இருவரையும் போட்டுவிடுவேன் அதற்குப்பின்னர் நீங்கள் வெளியே வரலாம் என்று சொல்லி விட்டு வெளியே போவான் காவலர்களைக் கண்டதும் இவனிடம் ஒன்றும் எடுக்க முடியாது என்று மாத்தையா அண்ணைக்கு கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வான்.
கமறாவை சோதனையிட்ட போது இந்த வசணம் தொடர்ச்சியாகப்பாவித்துயிருக்கின்றார் அந்த இருவர் யார் என்று பார்ப்போமானால் ஒன்று பொட்டுஅம்மான் அடுத்தது தலைவர் இது தான் அதனுடையே உன்மையான கருத்தாகயிருந்தது.
இது இப்படி இருக்க இஞ்ஜினியர் என்ற போராளிஇவர்ஒரு கால் இல்லாதவர் கால் வருத்தம்தொடர்வாக அடிக்கடி இந்தியா போய்வருவது ஆனால் இவரை இலங்கை இராணுவம் பிடிப்பதோ விசாரிப்பதோ கிடையாது.ஆனால் இது தலைவருக்கு தெரியாது மாத்தையா அவர்களிற்கும் இஞ்சினியருக்கும் தான் இந்த இரகசியம் தெரியும். மாத்தையா கொடுக்கும் தகவல்களை றோவிற்குக்கொடுப்பதும் றோ கொடுக்கும் தகவலை மாத்தையாவிற்குக்கொடுப்பதும் இது தான் இவரின் தரகர் வேலையாகயிருந்தது.
ஆனால் பொது மக்களிற்கு தான் இயக்கத்தில் இருந்து விலகியதாகச்சொல்வது. ஆனால் மாத்தையாவின் முக்கிய விசுவாசியாக இவர் இருந்தார்.
சந்தேகத்தின் அடிப்படையில்இவர் விடுதலைப் புலிகளின் புலநாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்.இவரை விசாரித்த போது கிருவனின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாகத் தெரியவந்தது இந்தியா புலநாய்வுத்துறையினரின் பொலிசாரை கொன்றகதை ஏன் கிருபன் அனுப்பப்பட்டார் நான் என்னத்திற்காக இந்தியா போய் வந்தேன் என பல உன்மைகள் வெளிவந்தன இதன் ஊடாக அனைத்து விடயமும் விடுதலைப்புலிகள் இஞ்ஜீனியர் இடம் இருந்து அறிந்து கொண்டார்கள். இதையடுத்து
சித்திரைவதையுடன் கூடுதலான விசாரனை மாத்தையா மீது நடந்தது. எதையும் ஒளிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால் 4 மணித்தியாலே றெக்கோட் ஊடாக அவர் சொல்லும் அனைத்து உன்மைகளும் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. முதலில் அது தலைவரிக்கு காண்பிக்கப்பட்டது அடுத்து தலைவரின் அனுமதியுடன் அனைத்து போராளிகளிற்கும்காண்பிக்கப்பட்டது.
கிருவன் உட்பட இலை மாறைகாயாக இருந்த மாத்தையா அவர்களின் ஆட்கள் அல்லது இந்தியாவின் புலநாய்வு முகவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார்கள்.
ஆனால் இதில் எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடாதே நல்ல போராளிகளும் இருந்தார்கள். உளவாளிகளும் இருந்தார்கள். அது தான் ஒரு கவலையான விடையமாகயிருந்தது இதில் கடுமையான சித்திரவதை செய்து உன்மையான உளவாளிகளை இனங்காண வேண்டிய துப்பாக்கிய நிலை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளால் மரணதண்டனை வளங்கப்பட்டவர்களின் விபரம் மகேந்திரராஜா மாத்தையா விடுதலை புலிகளின் தற்காலிகப் பிரதித்தலைவர்01 அவரின் முக்கிய விசுவாசிகளான சுரேஸ் மற்றும் இஞ்ஜினியர்03 தலைவரின் பாதுகாப்பு அணியில் இருந்து திரு மாத்தையா அவர்களால் மனம் மாற்றி எடுக்கப்பட்டவர்களன தளபதி சுசிலன்04 தளபதி செங்கலம் 05 தலைவரின் வாகணறைவர் சின்னமணி06 தலைவரின் வெளிநாட்டு தொலைத் தொடர்வாளர் முருகன்07 ரெட்டி முகாம் பொறுப்பாளர் சதீசன்08 இந்தியாவில் இருந்து இரண்டு பொலிசை சுட்டுப்பொட்டு றோவினால் அனுப்பப்பட்ட கிருவன்09 என பத்து பேரிக்கு மரணதண்டனை என அழைக்கப்படும் அதிகூடிய தண்டனையான சாவொறுப்பு வளங்கப்பட்டது.
விசாறனைகள் முடிந்து குற்ற மற்றவர்கள் என விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட்டு நீங்கள் போராளிகளோடு இணைந்து நீங்கள் முதல் செய்த கடமைகளைச் செய்யலாம் என்று அமைப்பின் புலநாய்வுத்தலைவர் பொடு அம்மானால்அனுமதி வளங்கப்பட்டதோடு அந்த துன்பியல் சம்பவத்திற்கு முகம்கொடுத்த அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரினார்கள் விடுதலைப்புலிகள்.
அதில்விசாறனை முடிந்து வந்த சில போராளிகளிளை நான் நேரடியாகக்கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது தளபதி ஜெயம் தளபதி லோறன்ஞ் தளபதி மகேந்தி இவர்களில் பிரிகேடியர் ஜெயம் அண்ணன சொன்னவை ஒரு குடும்பத்தில் ஒருதர் தவறு செய்வது வளமை ஆனால் தவறு செய்யாமல் என்னை தண்டித்து விட்டார்கள் இருந்தும் எமது குடும்பத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பதே எனது குறிகோல் என்று பதில் அளித்தார்.
அடுத்து தளபதி லோறன்ஞ் அண்ணை அவர்களை தளபதி சொர்ணம் அண்ணை விசாறனை முடிந்து சாவகச்சேரியில் உள்ள பயிற்சி முகாமிற்குக்கொண்டுவந்து போராளிகளோடு இணைத்து பொறுப்பு வளங்கப்பட்ட பின்னர் கோழ்க்கொமாண்டோமற்றும் கைத்துப்பாக்கிகள் அவரிக்கு வளங்கப்பட்டது. அதை லோறன்ஞ் அண்ணை வேண்டாம் என்று மறுத்ததோடு நான் சண்டையிட்டு அதை எதிரியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாகக்குறிப்பிட்டார்.
இப்படி பல போராளிகள் மனம் உடைந்து காணப்பட்டார்கள்மாத்தையாவின் ஆட்கள் தலைவரிக்கு செய்வதற்குதிட்டமிட்ட துரோகங்கள்.மற்றும் இவர்களை மாத்தையா எப்படி மாத்தினார் என்பதைக் குறிப்பிடுகின்றேன் ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களோடு உறவு கொள்ளக்கூடிய அச்சந்தர்ப்பத்தை உருவாக்குதல் பின் அதைக்கண்காணித்து அவர்களை விரட்டி மனம் மாற்றுதல். இப்படித் தான் மாத்தையா அவர்களின் செயல்பாடு இருந்தது.
01 சதீசன் திருமலைமாட்டம் முன்னர் தலைவரின் மனைவியின் பாதுகாப்புப்பொறுப்பாக இருந்தவர் பின்னர் ரெட்டி முகாம் பொறுப்பாளராகயிருந்தவர்.
இவரின் பணி தலைவரின் மனைவிக்கு மயக்கமருந்து அடித்து இந்தியாவிற்கு கடத்திச் செல்வது.
02 தளபதி செங்கமலம் யாழ் மாவட்டம்
மான் மறையிறச்சி பத்தல் மற்றும் தேன் என்பன வளமையாக வன்னியில் இருந்து எடுத்துகொண்டு வந்து தலைவரிக்குக்கொடுப்பவர். இதை அறிந்த மாத்தையா அவரிக்குக்கொடுத்தகடமை. சந்தேகம் வராதவாறு ஒரு மாதம் களித்து சாகக்கூடிய மருந்தை தேன் அல்லது இறைச்சிக்குள் கலந்துகொடுக்குமாறு மாத்தையா சொல்லியுள்ளார்.
இதை இவர் நேரடியாக மாத்தையாவிடம் மறுத்துள்ளார். ஆனால் இதைத்தலைவரிக்கு தெரியப்படுத்தவில்லை.
03 தளபதி சுசிலன் யாழ்கரவெட்டி இவர் வாகனங்களைக் கையாழக்கூடிய மற்றும் வெடி மருந்துகளை பற்றிய கூடுதல் அனுபவம் உள்ளவர் பூனகரியில் எடுத்த T 56 டாங்கியை இவரே ஓடிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரிக்கு மாத்தையாகொடுத்த கடமை நேரக்கனிப்பு வெடிமருந்து செய்து சின்னமணியிடம்கொடுக்குமாறும் அதை சின்னமணி தலைவரின் வாகனத்திற்குள் வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இதை இவர் தலைவரிக்குத் தெரிவிக்கவில்லை.
04 சின்னமணி தாளையடி யாழ் இவரிக்கு மாத்தையாயாவால் கொடுக்கபபட்டகடமை. கொடிகாமத்தில் மாவீரர் திறப்பு விளா தூவி ஒன்று திறந்து வைக்க ஏற்பாடு நடந்துகொண்டுயிருந்தது. அவ் தூவி திறப்பு விளாவிற்கு தலைவர் போவதாகத் திட்டம் இருந்தது.
இவர் மாத்தையா குறிப்பிட இடத்தில் தலைவரின் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனம் பழுது என்று சொல்லி விட்டு இவர் பின்னால் செல்வார்.
இவர் பின்னால் சென்றதும் மாத்தையாவின் ஆட்கள் மறைப்பில் இருந்து தலைவரின் வாகனத்தை நோக்கி சரமாரியாகச் சுடுவார்கள் அவ்வேளை தலைவர் செத்து விடுவார் சின்னமணி தப்பி விடுவார். அதே வேளை இச்சம்பவம் யாழில் நடக்கும் வேளை மாத்தையா அவர்கள் வன்னியில் நிப்பதாகவும் இப்பிரச்சனை தொடர்வாக மாத்தையாவிற்கு ஏதுவும் தெரியாது என்று போராளிகள் நம்பக் கூடியவாறு அவர்களின் திட்டம் இருந்தது
. இரண்டு நாட்களிற்கு முன்னர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிவில் உடையில் ஆயுதங்களோடு ஒரு சிலர் நடமாடியதை அவதானித்த புலநாய்வுத்துறையினர் இதை அம்மானிக்கு தெரியப்படுத்தி இதை அம்மான் தலைவரிக்குச்சொல்லி தலைவரின் வருகையைத்தடுத்ததோடு அன்று நடக்கவிருந்த சம்பவத்தில் இருந்து தலைவரை பொட்டுஅம்மான் பாதுகாத்தார்.பின்னர் இந்தத் தூவியை கருனா திறந்து வைத்தார்.
05 முருகன் இவர் தலைவரின் வெளிநாட்டுத்தொலைத்தொடர்வாளர் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் கிட்டு அண்ணை தமிழீழம் வரப்போகின்றார் என்ற தகவலை தொலைத்தொடர்வு ஊடாக மாத்தையா அண்ணைக்குத்தெரியப்படுத்தி அதை மாத்தையா அவர்கள் இந்தியாவின் றோவிற்குத் தெரியப்படுத்தி கிட்டண்ணை அவர்களின் கப்பலை இந்தியாக் கடல்ப்டை முற்றுகையிட்டு சலண்டர் அடையுமாறு கேட்டது.அவர் அதை மறுத்து தலைவரின் அனுமதியுடன் இயக்க மரபிற்கு ஏற்ப கப்பலை தகர்த்து அனைத்து தோழர்கழுடன் தனது உயிரை அற்பணித்தார்.
06 சுரேஸ் மாத்தையா அண்ணையின் பாதுகாப்புப்பொறுப்பாளர் தலைவரைக்கொலை செய்வதற்கு பல திட்டங்கள் தீட்டியவர் இவரே. அதை விட வன்னியில் உள்ள மண்ணாங்கண்ட லிற்கு இந்தியாவின் கெலிக் கொப்டரை எடுத்து அதில் மாத்தையா அவர்களை பாதுகாப்பாக இந்தியா அனுப்ப திட்டம் இட்டுடவர்.இவர்கள் அனைவரிடமும் சரியான முறையில் விசாரித்து அவர்களின் வாய்யால் தங்களின் தவறுகளை ஏற்ற பின்னர் எமது இயக்கத்தில் இருந்த அனைத்துப்போராளிகளிடமும் இவர்கள் செய்த தவறை அனைத்தும் போராளிகளிடமும் சொல்வதற்கான ஏற்பாட்டை விடுதலைப் புலிகள் செய்தனர்.
அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் சட்டத்திற்கு அமைவாக துரோகத்திற்கு வளிகாட்டியான முக்கிய பொறுப்பு வகுத்தபர்களிற்கு மட்டும் சாவொறுப்புவளங்கப்பட்டது.
11/11/1993 பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்
1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள்.
பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்
புதிய சரிதம் எழுதி…
இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..!
” கரும்புலிகள் ” மூலம் உருவாக்கப்பட்ட இத்தந்திரோபாயம் பூநகரி சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுவாக்கியது.பூகரி முகாம் தாக்கும்போது பலாலியில்இருந்து விமானம் மற்றும் ஆட்லறிதாக்குதல் வரக்கூடாது என்பதற்காவே இத்தாக்குதலை நடத்த வேண்டியதேவை தலைவருக்கு ஏற்பட்டது, அதற்கு அமைவாக புதிதாகக் கரும்புலிகள் தேர்ந்து
எடுக்கப்பட்டார்கள்,பூநகரி சண்டை ஆரம்பித்தவுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட கரும்புலிகள் பலாலி விமான தளத்தில் உள்ளே சென்று விமானங்களையும் தகர்த்து அங்கே இருக்கும் ஆட்ளறிகளையும்தகர்க்கவேண்டும் என்பதே தலைவரின் திட்டமாகயிருந்தது , அது திட்டமிட்டாப்போல்வெற்றியாக நடந்தால் பூனகரிப் படையனருக்கு இவர்களால் உதவ முடியாமல் போகும், அப்படி நடந்தால் பூனகரியைபிடிப்பது எமக்கு இலகுவாகயிருக்கும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது,இந்நடவடிக்கைக்கு மேஜர் தொண்டமான்பொறுப்பாககச் சென்றார்,

இவரின் சங்கீதப்பெயர் கந்தையா என்பது ஆகும்
இதற்கான கட்டளைக் கொமாண்டர் பிரிகேடியர் கடாடி இவரின்சங்கீதப் பெயர் கரிகாகாளன் என்பது ஆகும், இக்கரும்புலிகளிற்குக்கொடுக்கப்பட்ட கடமை, பூனகரிச் சண்டை ஆரம்பித்தவுடன் பலாலி விமான நிலையத்தில் இறங்கி விமானம் மீதும் ஆட்ளறி மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே ஆகும்,
திட்டமிட்டாப்போல் இவர்கள் 15 பேரும் பயிற்சி வளங்கப்பட்டு இவர்களிற்கான ஆயுதங்களும் வழங்கப்பட்டது பின்னர் ஆயுதங்கள் தண்ணீர் உள்ளே போகாதவாறு பாரிசல் பண்ணப்பட்டது, அடுத்து இவர்களை அனைவரையும் பிரிகேடியர் கடாபி அவர்கள் ஏற்றிக்கொண்டுபரித்தித்துறைக் கடல்கரையில் விட்டார், இரவு பத்துமணி இவர்கள் 15 பேரும் கடலில் இறங்கி தொடர் கைத்தைப்பிடித்துக்கொண்டு நீந்தத் தொடங்கினார்கள்,
ஆனால் கடல் அடி கூடுதலாக அடிக்க ஆரம்பித்தது, அதனால் தொடர்கைத்தை வெட்டி ஒரு அணி இரண்டாப்பிரிந்து சென்று கொண்டுயிருந்தது,
கடலில் சென்றுகொண்டு டிருந்த வேளை இரு அணிகளிற்கும் இடைவெளி கனத்துவிட்டது அதனால் இரண்டு அணிகளிற்கும் ஆன தொடர்பு தூண்டிக்கப்பட்டது, அதனால் கடலில்வைத்த ஒரு அணியை ஒரு அணி தேடினதால் இவர்கட்டுகொடுக்கப்பட்ட நேரம் வந்து விட்டது.
அதனால் முதலில் சென்ற சென்ற அனி தரைக்குச்சென்று பலாலிக்குள் நுளைந்தது ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் இறங்கிவிட்டார்கள், தங்களின் ஆயுதங்களை வெளியே எடுப்பதற்கான மறைவிடத்தை தேடிச்செல்கின்றார்கள், தொடர்ந்து அடுத்த அணியும் தரைக்குவந்துவிட்டது ஆனால் அவர்களும் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் தான் இறங்கினார்கள்,
ஆனால் இவர்கள் சென்ற இடப்பகுதியில் கடல்கரைபக்கத்தில் பாரிய வேலி போடப்பட்டு இருந்தது அதனால் வேலிக்கு மேலால் ஏறிகுதிக்கும் போது எதிரி கண்டு விட்டான் அதனால் சண்டை தொடங்கிவிட்டது, அவ்விடத்திலே இரு போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள்,ஏனையவர் உள்ளே சென்று விட்டார்கள், ஆனால் முதல் சென்ற அணியும் இவர்களோடு இணைந்துவிட்டது, இவர்கள் உள்ளே நுளைந்ததை அறிந்த இராணுவம் விமானத்தளம் மற்றும் ஆட்ளறி தளத்தைப்பலப்படுத்திவிட்டது, அதைவிட இராணும்இவர்களையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்து, இரு பகுதிக்கும் கடும் சண்டை நடந்து
பல இராவத்தினர் கொல்லப்பட்டனர், இது இப்படி இருக்க பூனகரிபடைத்தளம்மீதும் விடுதலைப்புலிகள் சண்டைடையை ஆரம்பித்து அது முன்னேற்றமாக நடந்துகொண்டுயிருந்தது, அதனால் பூனகரிப்படைக்கு உதவுவதா அல்லது தங்களைப்பாதுகாப்பதா? என்ற குழப்பமான நிலைக்கு பலாலி இராணுவம் தள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் 13 கரும்புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள், மூன்று போராளிகள் தடையை உடைத்துக்கொண்டு தப்பிவந்தார்கள்,
பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்
இக் கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் தேசப்புயல்களாய் வீசினர்.
கரும்புலி மேஜர் கலையழகன்
கரும்புலி மேஜர் தொண்டமான்
கரும்புலி கப்டன் சிவலோகன்
கரும்புலி கப்டன் கரிகாலன்
கரும்புலி கப்டன் சீராளன்
கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி
கரும்புலி கப்டன் மதிநிலவன்
கரும்புலி கப்டன் ஐயனார்
கரும்புலி லெப் நல்லதம்பி
கரும்புலி லெப் கண்ணன்
கரும்புலி லெப் ஜீவரஞ்சன்
கரும்புலி லெப் செங்கண்ணன்
கரும்புலி லெப் வீரமணி
11/11/1993 இப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.!தவளைப்பாய்ச்சல் ஆதாவது பூனகரிச் சண்டை,
அந்தத் திதை திருப்பத்தின் ஒரு பக்கம்தான் அடுத்த நடவடிக்கை அடுத்து பாரிய தாக்குதல் ஒன்றுக்காகத் தங்களைத் தயார்ப்படுத்தினார்கள்.விடுதலைப் புலிகள் அதற்காக ஒரு வருடமாக தளபதி சொர்ணம் தலைமையில் வேவு நடவடிக்கை நடந்துகொண்டுயிருந்தது. அவ்வேவு நடவடிக்கையூடக எடுக்கப்பட்டதகவலைவைத்து அதற்கான மாதிரிப்பயிற்சிகளும் நடந்துகொண்டுயிருந்தது,
.11/11/1993 பூனகரி சண்டை ஆரம்பம் ஆனது
வராலாற்று புகழ் மிக்க தவளைப்பாய்ச்சல் பூனகரிச்சண்டைக்காக புறப்படுகின்றது இம்ரான் பாண்டியன் படையணி இப்படையணியானது அனைத்து மாவட்டப் போராளிகளும் இணைக்கப்பட்ட தலைவரின் நேரடி பார்வையில் உள்ள மிகவும் பலம் பொருத்திய படை யணியாகும்,
தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவரை பாதுகாப்பதும் இப்படையயின் கடமையாக இருந்தது ஆரம்பத்தில் கரும்புலி மரவர்கள் உருவாகியதும் இப்படையணியில் இருந்து தான். இப்படையணிக்குக் கட்டளை அதிகாரியாக தளபதி சொர்ணம் அவர்கள் இருந்தார்.
இப்படையணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் இருந்தார்கள். அப்பொழுது தளபதி கொர்ணம் அவர்களின் ஏற்பாட்டில் தளபதி கெங்கா தலைமையில் 170 போராளிகள் பூனகரிச் சண்டைக்காகத்தயார்படுத்தப்பட்டார்கள். அதற்கு உதவித் தலைவராக போராளி ரஞ்சித் அவர்கள் நியமணிக்கப்பட்டார். அதில் அணித் தலைவர்களாக 45 போராளிகளிற்கு போராளி வேல்ராஜ் அடுத்து 45 போராளிகளிற்கு போராளி தீபன் அடுத்து 45 போராளிகளிற்கு மையுறன் அத்துடன் மேலதிகமாக உந்துகணை செலுத்தும்ரீம் ஆர் பீச்சி ரீம்அவர்களின் பலத்தை மெருகூட்டுவதற்காக இணைக்கப்பட்டது.
இவர்களிற்கு வளங்கப்பட்ட பணி யாழ் மணியன் தோட்டம் கடல் கரையால் நகர்ந்து பூனகரிக்கேம்பிற்கு முன்னால் இருக்கும் மினி முகாமை தாக்கி அழித்து இரண்டு கிலோ மீற்றர் உள்ளே நகர வேண்டும். இது தான் இவர்களின் கடமையாகயிருந்தது. சண்டை தொடங்கியதும் தளபதி சொர்ணம் மற்றும் பொட்டுஅம்மானின் கட்டளைகளால் வோக்கி அலறிக்கொண்டுயிருந்தது. திட்டம் இட்டாப்போல் படையணிகள் மினி முகாமை அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள் கப்டன் தீபன் உட்பட 9 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.
இப்பகுதிச் சண்டைக்கான கட்டளை அதிகாரியாக தளபதி பொட்டுஅம்மான் தளபதி சொர்ணம் இருவரும் அண்ணை இருவரும் மாறி மாறிக் கட்டளை வளங்கினார்கள். மூன்றாவது நாள் சண்டையில் போராளி ரஞ்சீத் உட்பட பல போராளிகள் காயம் அடைந்ததினால் பின் தளத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சண்டை பல முனைகளில் நடைபெற்றது தளபதி வால்ராஜ் தலைமையிலும் மற்றும் கடல் பகுதிகளைக் கண்காணித்து தளபதி சூசை தலைமையிலும் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் முதல் நாள் வீரச்சாவு அடைந்த லெப் கேணல் அன்பு அவர்களின் செயல்பாடும் அவரின் போராளிகளின் உழைப்பும் மிக முக்கியமானதாக்கக்கருதப்பட்டது.
தேசியத் தலைவர் அவர்களால் ஒவ்வொரு படையணிகளுக்கும் ஒவ்வொரு பகுதி என்ற அடிப்படையில் வேலைப்பங்கீடுகள் சிறந்த முறையில் வளங்கப்பட்டுயிருந்தது. அவ்வகையில் சண்டை தொடங்கி சிறிது நேரத்தில் தெயந்தன் படையணிப்போராளிகள் நாகதேவன் துறையை தங்களின் பூரணகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவந்தார்கள். அதையடுத்து பூனகரி மெயன் பகுதி பிடிபட்டது. அதைத் தக்க வைப்பதற்காக மகளீர்ப்படைபணியிடம் வளங்கப்பட்டது.
ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கிளிய பண்ணி பின் தளத்திற்கு அனுப்புவது பற்றி அவர்கள்சிந்திக்கவில்லை. கள நிலவரம் நிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டுயிருந்தது . கடும் பலத்துடன் மீண்டும் எதிரி அப்பகுதிதைக் கைப்பற்றினான் மீண்டும் எதிரிகள் பார்த்த போதுஅவர்கள் முன்னர் சேமித்து வைத்த ஆயுதங்கள் அப்படியே இருந்தது.
அது அவனிற்கு பெரும் மகிழ்ச்சியாகயிருந்தது பின்னர் அவ் ஆயுங்களை அவன் விடுதலைப்புலிகளிற்கு எதிராக பயன்படுத்தினான். தொடர்ந்து 3ன்று நாட்கள் கடுமையான சண்டை நடைபெற்றது. இரண்டு T 56 சுத்த டாங்கிகள் பெரும் தொகையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது.
மெயின் பகுதி மட்டும் பிடிபடாமல் இருந்தது அதை தலைமை தாங்கி நின்ற இராணுவப்படை அதிகாரி சுற்றி வர வாகணடையர்களை போட்டு எரித்து விட்டு இதைச் சுற்றி விமானத்தாக்குதல் நடத்துமாறுதங்களின் விமானப்படையிடம் கேட்டுக்கொண்டுயிருந்தான்,.இதைக்கேட்டுக்கொண்டுயிருந்ததலைவர் விடிந்தால் நிலைமை மோசமாகும் என்பதை விளங்கிக்கொண்டார் தேவையில்லாத இழப்பு ஏற்படலாம். அதனால் விடிவதற்கு முன்னர் பிடிக்கப் பாருங்கோ இல்லையெனில் பின்னால் நகர்ந்து பாதுகாப்பான இடங்களில் போராளிகளை நிலையெடுத்து இருக்குமாறு தலைவர் கட்டளை வளங்கினார்..
தலைவர் சொன்னது போல் பகல் கடுமையான விமானத்தாக்குதல் நடந்தது தளபதி சொர்ணம் அண்ணை கையில் காயம் அடைத்தார். அடுத்த நாள் மெயனில் இருந்த இராணும் பின்வாங்கி ஓடிவிட்டது பூனகரி முழுமையாக எமது கட்டுப்பாட்டில் வந்தது. சுமார் 320 போராளிகள் இப்படை முகாமை தாக்குவதற்காக தங்களின் உயிரை அற்பணித்தார்கள்.
லெப் கேணல் குணாஅவர்களின் பங்களிப்பும் இப்படை முகாம் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகக்கருதப்பட்டது.
10/05/1994 கடும் பதட்டமான நிலையில் இருந்த போதும்செல்லக்கிளிதிருடனின் வேலையால் கடுமையாகப் பயந்த தலைவர்,
அக்காலத்தில் அக்கடமையில் நின்ற போராளி குமணன் குறிப்பிடுகையில்
இது இப்படி இருக்க மீண்டும் ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டது இருந்தும் மாத்தையா அவர்களின் பிரச்சனையோடு அல்லது வேறு துரோகத்தானமான பிரச்சளைகளோடு இது சம்மந்தப்படவில்லைஇருந்தும் இதையும் தெளிவாகப்பார்ப்போம்.
1992 ஆம்காலப்பகுதியில்செல்லக்கிளி அவர்கள் சிறுத்தை பெண் போராளிகளிற்கு பயிற்ச்சி கொடுக்க விடப்பட்டார். அதில் பெண் போராளிகளிற்கு திறமையாகப் பயிற்சி வளங்கி அவர்கள் அனைத்து பயிற்சிகளும் எடுப்பதற்கு அவர்களால் முடியும் என்பதை நிருபித்தார் செல்லக்கிளி ஆணிற்கு நிகராக அனைத்தும் அவர்களால் செய்ய முடியும் ஆனால் புவிஈர்ப்புத்தன்மை அவர்களிடம் கூடுதலாகக்காணப்படுவதால் அவர்கள் ஓடும் போதுகளைபபடைவதாகவும் சிறிது வேகம் குறைவதாகவும் செல்லக்கிளி தலைவரிடம் குறிப்பிட்டுயிருந்தார்.10/05/1994
இவனின் திறமையைக்கண்ட தலைவர் பாதுகாப்பு பயிற்சிக்கு போராளிகளை எடுக்கும் போது செல்லக்கிளியும் அவ் அணியில்இணைக்கப்பட்டான் . அக்காலத்தில் தலைவரின் பாதுகாப்புச் சிஸ்ரங்கள்புதிப்பிக்கப்பட்டது 3 பேர் கொண்ட ஒரு ஸ்குவாட்அதற்கு ஒரு தலைவர் அவருரிக்கு கைத்துப்பாக்கி இருக்கும் இரண்டு பேரிக்கு அவர் கட்டளை அதிகாரியாக இருப்பார். அப்பபடி நாலு ஸ்க்குவாட்டிற்கு முதலாவது பொறுப்பாளராக தளபதி கடாபியும் இரண்டாவது பொறுப்பாகராக திரு செல்லகிளி அவர்களும்தலைவரால் நியமணிக்கப்பட்டாகள்.15/05 1994 இந்தப் பொறுப்புத்தான் செல்லக்கிளிக்கு ஆசை கூடுவதற்கான காரணமாக இருந்தது.
அக்காலப்பகுதியில் கொக்குவில் தாவடியில் தலைவரின் மனைவியின் முகாம் அமைந்துயிருந்தது. அடுத்துதலைவரின் முகாம் கொக்குவில் நந்தவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்ததுவாரத்தில் ஒரு முறை ஞாயற்றுக்கிழமைகளில் தலைவர் அங்கே செல்வது வளமையாகயிருந்தது. அப்பொழுது தலைவரின் வாகண ஓட்டுணராக போராளி அம்மா அவர்கள் இருந்தார். திட்டமிட்டாற் போல் ஞாயற்றுக்கிழமை தலைவர் மதிவதனி அவரின் மனைவி வீட்டிலே தங்கினார்.
பாதுகாப்புச்சட்டத்தின்படி வாகண ஓட்டுனரான அம்மா அவர்கள் இரவு 9 பது மணிக்கு வாகனத்திறப்பை செல்லக்கிளியிடம் ஒப்படைத்தார்.அக்கீயை பெற்றுக்கொண்ட செல்லக்கிளி அவர்கள் வேகமாகச் செயல்படத்தொடங்கினார். லெப் கேணல் தேவன் இவர் அப்பொழுது றீசிவீங் அதாவது ஒட்டுக் கேட்கும் கடமையாற்றியவர். இவர் தனது குப்பியை வீட்டுச் சுவரில் இருக்கும் ஒரு ஆணியில் தனதுகுப்பியைக் கொழுவி வைப்பது வளமை இதை செல்லக்கிளி முதலில் அவதானித்து வைத்துள்ளான்.
உடனே போய் அந்தக்குப்பியை எடுத்துக்கொண்டுவந்து உடைத்து தூள் ஆக்கி தலைவர் குடிக்கும் தண்ணீர் கேனுக்குள் கலந்து வைத்துள்ளான். தலைவர் தண்ணீர் கேட்க பக்கத்தில் நிற்கும் பியேய் கிட்டு அவர்கள் தண்ணீர் செல்லக்கிளியிடம் கேட்டதும் செல்லக்கிளி கேணைதிறந்து தண்ணீரை குடித்துள்ளான். பின்னர் வாந்தி எடுப்பது போல்தானே நடித்துள்ளான்.
பின்னர் குறிப்பிட்ட போராளிகள் கேணை முணர்த்துபார்த்தபோது அதில் குப்பி மணந்துள்ளது. உடனே தகவல் தலைவரிக்குச் சொல்லப்பட்டது. தலைவர் உடனே தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பொட்டு இருவரையும் உடனே வருமாறு அளைத்துள்ளார். தகவல் அறிந்ததும்சொர்ணம் மற்றும் பொட்டு இருவரும் முகாம் வந்து சேர்ந்தனர்.
செல்லக்கிளி உடனே யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டான். இரவு11 மணிக்கு தளபதி பொட்டு அவர்கள் எல்லோருடனும்கதைத்த்தார். தளபதி சொர்ணம் பக்கத்தில் இருக்க கதையை ஆரம்பித்துள்ளார். முதலில் அனைத்துப்போராளிகளின் குப்பிகள் அவர்களிடம் உள்ளனவா என சோதனையிடப்பட்டது. இறுதியில் போராளி தேவனின் குப்பி இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.தொடர்ந்து அனைத்துப் போராளிகளிற்கும் விசாறனை ஆரம்பம் ஆனது.
அந்த முகாம் வெறிச்சோடிக்காணப்பட்டது. தலைவரின் கண்கள் சிவந்து இருந்தது கைத்துப்பாக்கியில் இருந்து கை எடுக்காமல் கடுமையான அவதானத்துடன் தலைவர் காணப்பட்டார். தலைவரின் மனைவி மதிவதனி அழுதிய வண்ணம் கண் சிவந்து காணப்பட்டார். அப்பொழுது போராளி கிட்டு அவர்கள் தான் தலைவரின் நெருங்கிய பாதுகாப்புப் பீயேய் ஆகயிருந்தார்.
11/05 1994 காலை 9 மணிற்கு பாண் கோட்டவில் ஒரு வெள்ளையரை சந்திப்பதற்கான ஏற்பாடுயிருந்தது பதட்டமான சூழ்நிலையிலும் எந்த சந்திபுக்களையும் தலைவர் நிறுத்தவில்லை. அது திட்டமிட்டாப் போல் நடந்தது. அந்த ஒன்றுகூடல் முடிந்ததும் மீண்டும் தலைவர் அதே முகாமிற்கு வந்தார் பிற்பகல் 3 மணிக்கு தளபதி பொட்டு அவர்கள் வந்து அனைத்துப் போராளிகளிற்கும் நடந்த பிரச்சனை பற்றி தெளிவுபடுத்தினார்.
பொட்டு அவர்கள் சொன்னது ஆரோ ஒருதர் தலைவரின் கேனுக்குள் குப்பியை கரைத்து விட்டார்கள் செல்லக்கிளி அதை குடித்து சோதனையிட்டபோது அவர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். தற்போது செல்லக்கிளி ஆஸ்பத்திரியில் உள்ளார். அது அவரிக்கு ஆவத்தாகக்காணப்படவில்லை. ஆனால் அது கொல்வதற்காக செய்யவில்லையென நான் நினைக்கின்றேன். சிலர் பகிடியாக செய்தார்களோ தெரியாது. ஆனால் நாங்கள் அதைகண்டுபிடிக்க வேண்டும் என சொல்லி விட்டு இதை உங்களில் ஒருதர் தான் செய்துயிருக்க வேண்டும் நீங்கள் அனைவரும் எங்களிற்கு ஒத்துளைப்பு தர வேண்டும்.என சொல்லி அனைவருக்கம் விசாறனை ஆரம்பம்ஆனது
24 மணித்தியாலம் உங்களின் செயல்பாட்டை சொல்ல வேண்டும் என சொல்லி அனைத்தும் போராளிகளிடமும் தனித்தனியாக விசாரனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் இதன் முக்கிய சூனிக்காரன் செல்லக்கிளி என்பதை தலைவரும் பொட்டு அம்மானும் அறிந்து கொண்டார்கள், செல்லக்கிளியின் நகவஞ்சகத்தை தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ எமக்குச் சொல்லவில்லை அதனால் நானும் குறிப்பிட விரும்பவில்லை,
இருந்தும் தங்கமான தலைவர் என்ற காரணத்தால் எல்லாப் போராளிகளிலும் அழவிற்கு அதிகமான அன்பு தலைவர் வைத்துயிருந்தார், செல்லக்கிளியின் நரி குணத்தை அறிந்த தலைவர் செல்லக்கிளியன் பிரச்சனையை மாத்தையாவின் சதியோடு ஒப்பிட வேண்டாம், விசாரனை என்ற போர்வையில்செல்லக்கிளியின் உடம்பில் கைவைக்க வேண்டாம் என பொட்டு அம்மானிடம் சொல்லியிருந்தார்
தலைவர் சொன்னதற்கு என்னம் ஒரு காரணம் இருந்ததுசெல்லக்கிளியின் குடும்பத்தில் அவனும் அவனின் தம்பியும் இயக்கத்தில் இருந்தார்கள் அவனின் தம்பி ஆனையிறவுச் சண்டையில் வீரசாவு அடைந்தார் அந்த வீரனால்தான் செல்லக்கிளியின் உயிர் தப்பிக்கொண்டது, அவனின் தம்பியின் வீரச்சாவு விபரம்
வீரவேங்கை அல்வின்
சிவபாலன் கருணாகரன் ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு:26.09.1974.வீரச்சாவு:21.07.1991யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்தி வரை முன்னகர்ந்திருந்த சிறிலங்கா படையினரின் சங்கிலித்தொடர் நிலைகள் மீது முள்ளியானில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பத் தாக்குதலின்போது வீரச்சாவுஅடைந்தார்
, அது போல் பொட்டு அம்மானும் செல்லக்கிளியை அடிக்கால் விசாரித்து உன்மையை அறிந்து கொண்டார்., அதை அடுத்து செல்லக்கிளி மற்றும் மாத்தையாவின் சதிதொடர்வாக எமது ரெட்டி முகாமில் வைத்து மூன்று தடவை பொட்டுஅம்மான் அவர்கள் அனைத்துப்போராளிகளிற்கும் வகுப்பு எடுத்து போராளிகளை தெளிவுபடுத்தினார்,
செல்லக்கிளி அனைத்துப் பிரச்சனையையும் அவன் ஒத்துக் கொண்டான் தொடர்ந்து அப்பிரச்சனை முடிவிற்கு வந்து, செல்லக்கிளியை தலைவர் என்னன்று கையாண்டார், என பார்ப்போம்,, 1996 வன்னிக்குச் சென்றதும், எமது படையணி விசுவமடு புதுக்குடியிருப்பு முத்துஐயன்கட்டு என முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கியேஇடங்களிலே பாசறைகள் அமைக்கப்பட்டது அப்பொழுது விசுவமடு ரெட் வாணா பிரசத்தில் எமது படையணி மண்ணெண்ணை களஞ்சிம் இருந்தது,
அதற்குலெப் கேணல் SM அப்பா பொறுப்பாகயிருந்தார், தண்டனை என்று சொல்லாமல் கடமை என்ற போர்வையில் மண்ணண்ணைஅழந்து கொடுக்கும் வேலைக்கு பிரிகேடியர் கடாபி அவர்களால் செல்லக்கிளி விடப்பட்டார், தனது கடமையை வைத்தே செல்லக்கிளி உணர்ந்து கொண்டான் இனி எந்தக் காலத்திலும் தனக்கு ஒரு வளர்ச்சி கிடைக்காது என்பதை அவன் புரிந்து கோண்டான்,
உடனே தான் வீடு செல்லப்போவதாக தலைவருக்கு கடிதம் எழுதினான், தலைவரும் உடனே அனுமதித்தார்,, சிறிது காலம் புதுக்குடியிருப்பில் இருந்த செல்லக்கிளி பின்னர் அங்கு இருந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றான், இப் புத்தகம் எழுதும்போது செல்லக்கிளி உயிரோடுயிருந்துள்ளார்செல்லக்கிளியின் தவறான நடத்தையால் தலைவரின் பாதுகாப்பு தற்காலிகவாகன ஓட்டுனராகயிருந்த அம்மா உட்பட சில போராளிகள் வெளியேற்றப்பட்டார்கள், அதனால் ஆழணிப் பிரச்சனை பெரியபிரச்சனையாகயிருந்தது,
1994 காலப்பகுதியில் தலைவரின்பாதுகாப்பில் பாரி மாற்றம் ஏற்பட்டு இருந்த காலம் அது தலைவரின் வாகன ஓட்டுனரில் இருந்த பெரும்பாலான போராளிகள்வெளியேற்றப்பட்டு அதற்குப்பதிலாக புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டார்கள்,
,அப்பொழுது நானும் விரல் விட்டு எண்ணக்கூடிய அழவிற்குத்தான் பழைய போராளிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கட்டு அனுபவம் குறைவாகவே இருந்ததுதற்காலிகமாக அப்பொழுதுசொர்ணம் அண்ணை வன்னிக்குச் சென்று கிறிஸ்தோபறின் வாகன ஓட்டியான போராளி சிவசங்கர்அவர்களைக் கூட்டிகொண்டு வந்து தலைவரின் வாகண ஓட்டுநராகவிட்டுயிருதார். அன்றில் இருந்து தலைவரின் வாகண ஒட்டுனராக போராளி சிவசங்கர் இருந்தார்.
அப்பொழுது ஒரு சந்திப்பிற்காக நாகர்கோயிலிக்குப்போகவேண்டிய தேவை தலைவருக்கு ஏற்பட்டது, அதனால் போராளி சிவசங்கர் தலைவரின் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றான்
இரண்டாவது வாகனத்திற்காகான ஒட்டுனராக போராளி தீபன் அல்லது அவரின் பட்டப்பெர் (எமட்டேசன்-1 ) என்பதாகும்இவர் புதிதாக வாகனம் பழகிக்கொண்டுயிருந்தவேளை அவசரத் தேவைக்காக உள்ளே எடுக்கப்பட்டவர், அதனால் வாகணத்தைப் பற்றி அனுபவம் இல்லாதவர்,
அப்பொழுது இரண்டாவது வாகணத்தை போராளி தீபேன் ஓட்டிச் செல்ல அவரிக்குப் பக்கதில் ஐம்பதுகலிபர் கண்ணர் போராளி கதிரோளி இருக்கின்றார், ஐம்பது கலிபர் வாகனத்திற்குள் களட்டப்பட்ட நிலையில் இருக்கின்றது நான் எனது றைபுள் ஆன மினி மினி LMG யோடு உள்ளே இருக்கின்றேன், எனக்குப் பக்கதில் ஐம்பது கலிபர் உதவியாழர் முத்து ஐயன் இருக்கின்றார் .
எமது முகாம் ஆன நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த ரெட்டி முகாமில் இருந்து வல்வைவளியூடாக கடல்புலிகளி முகாம் ஒன்றிக்குச் சென்று கொண்டுயிருக்கின்றோம்,
அது கரும்புலி கப்டன் வாமன் நாளாயினி அவர்களை தலைவர் சந்தித்து கடசி உணவு அருந்தி அவர்களோடு நின்று படம் எடுத்து அவர்களை வளி அனுப்பி வைப்பதற்காகவே தலைவர் சென்றுகொண்டுயிருந்தார்,, முன்னால் சென்ற தலைவரின் வாகனம் மிக வேகமாகச்சென்றுகொண்டுயிருந்தது, ஏனனில் அவர் புதியர் என்ற காரணத்தால் பின்னால் வரும் வாகனத்தை கவனித்து ஓடும் அழவிற்கு அவருக்கு அனுபவம் இல்லை,அவரின் பெயர் சிவசங்கர்
23/05/1994 ஆம் ஆண்டு தமிழீழ வைப்பகம் முதலாவதா யாழ்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது,
02/08/1994 பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிற்குத் தலைவர் திட்டமிட்டார்,
2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.காரணம் முன்னர் நடந்த தாக்குதலை வைத்து இராணுவ அதிகாரிகள் பலாலிக்குக் கிட்டக்கூட அவர்களால் நெருங்க முடியாது அப்படி வந்த அனைவரையும் தாங்கள் சுட்டு விட்டோம் என அறிக்கை விட்ட காலம் அது, அதனால் இவர்கட்கு ஏதாவது செய்ய வேண்டும் என தலைவர் திட்டமிட்டர்,
பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.
1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.
அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.அதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்
அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)
இச்சண்டை தொடர்பாக அதில் பங்குபற்றிய கனடி குறிப்பிடுகையில்அப்பொழுது பூநகரிச் சண்டையில் தளபதி சொர்ணம் காயப்பட்டுயிருந்தகாலம் அது எங்களுடைய முகாமிற்கு வந்த சொர்ணம் அண்ணை என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார், அப்பொழுது நாங்கள்அங்கே சென்றதும், ஒரு வட்டக் கொட்டிலில் நான் இருந்தேன் சிறிது நேரத்தில் தலைவர் வந்தார், சாப்பிட்டுத்தாயா என தலைவர் என்னிடம் கேட்டார், நான் இல்லையென்றேன், சரி சாப்ட்ட பின்னர் கதைப்போம் என்று சொல்லி நானும் தலைவரும் சாப்பிட்டோம் சொர்ணம் அன்னை தலைவரின் பாதுகாப்பில் நின்றார்,
அப்பொழுது தலைவர் என்னிடம் கேட்டார் பூனகரி சண்டை நடக்கும் போது பலாலியில் ஒரு தாக்குதல் நடந்தது உமக்குத் தெரியுமா என கேட்டார் ஓம் என்றேன் அதற்கு தலைவர் முதல் நடந்த தாக்குதல் பற்றி இராணுவ அதிகாரிகள் வீரம் பேசிக்கொண்டுயிருக்கின்றார்கள் இதற்கு என்ன செய்யலாம், என்று தலைவர் என்னிடம் கேட்டார் அதற்கு நான் திருப்பி அடிக்க வேண்டும் என பதில் அழித்தேன்,அதுதான் உன்னை வரச் சொன்னனான் எனஅவர் சொல்லிவிட்டுதொடர்ந்து சில புத்திமதிகளை தலைவர் எனக்குச் சொன்னார்,
அடுத்து தலைவர் எனக்கு ஒரு மாதம் விடுமுறையில் செல்லும்மாறு அனுமதி வளங்கினார். ஆனால் ஒரு நாள் முந்திவந்தாலும் உன்னை இயக்கத்தை விட்டு கலைத்து விடுவேன் என சொல்லி தலைவர் என்னை அனுப்பினார், அதற்காக ஒரு மோட்டார் சைக்கலும் செலவிற்குப்பணமும் எனக்குத்தரப்பட்டது,அது எனக்கு கடசி விடுமுறை என்பதால் நான் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கதைத்தேன் அத்தோடு மிக்க மகிழ்ச்சியாக எனது, விடுமுறை நாள்யிருந்தது 1994/01 மாதம் சென்ற நான்1994 / 2 ஆம் மாதம் விடுமுறை முடிந்து சாவாச்சேரிக்கு வந்து சொர்ணம் அண்ணையைச் சந்திக்தேன்,
அப்பொழுது சொர்ணம் அண்ணை எண்ணைக் கூட்டிக்கொண்டு எங்களுடைய பயிற்சி முகாமான சாவகச்சேரியில் இருந்த சம்புத் தோட்டம் கொண்டுபோனார், அங்கே சென்று கரும்புலிக்கு விருப்பமானவர்கள் கையையுத்துங்கோ என்றார் கூடியிருந்த 200 பேரில் சுமார் 190 பேரளவில் கையை உயிர்த்தினார்கள் மீண்டும் கையை விடுங்கோ என்று சொல்லி விருப்பமானவர்கள் உடனே கையை உயிர்த்துங்கோ என கட்டளை வழங்கினார், பின்னர் அதில் இருந்து எல்லோரும் கையை உயர்த்தி னார்கள், அடுத்து என்னையும் சேர்த்து 6ஆறு போராளிகள் அந்நடவடிக்கைக்காகத் தேர்ந்து எடுத்தார் தளபதி சொர்ணம் அண்ணை பின்னர் அதற்கான மாதிரிப்பயிற்சியை எடுப்பபதற்காக வடமராச்சியில் இருந்த யப்பான் முகாமிற்குச் சென்றோம்,
மீண்டும் சொர்ணம் அண்ணை என்னைஏற்றிக்கொண்டு போய் தலைவரைச் சந்தித்தேன் சிரித்த முகத்தோடு காணப்பட்ட தலைவர் மீண்டும் எனக்கு சில புத்திமதிகளைச் சொன்னார்.மாதிரிப் பயிற்சியை எடுக்குமாறும் பின்னர்தான் வந்து சந்திப்பேன் என்று சொல்லித்தலைவர் என்னை வளி அனுப்பினார்.
அடுத்து எங்களிற்கு பயிற்சி ஆரம்பம் ஆனது தொடர்ச்சியாக எங்களின் பயிற்சியை தலைவர் வந்து பார்வையிடுவார் அது வடமராச்சியில் யப்பான் பயிற்சி முகாமில் நடந்தது, அது ஆறு மாதங்கள்நடந்தது
பயிற்சி முடிந்துஎங்கள்09பேரையும் வடமராச்சியப்பான் முகாமில் இருந்து சொர்ணம்மற்றும் செல்வராசா, வானு இவர்கள் இரண்டு வாகனங்ளில் 31/07/1994 எங்களை ஏற்றிக்கொண்டு மாதகல் கடல்கரையில் விட்டார்கள்அப்பொழுதுஒரு உறுப்பினருக்கு 2 லோ ஒரு றையுள் 1000, வை அனைவருக்கும் தரப்பட்டது.
கெனடி ஒரு டொங்கான் மற்றும் னைட்விசன் சினைப்பர் வைத்துயிருந்தார்,அங்கு இருந்து கடலால் நீந்தி நாங்கள் மாவட்ட புரம் இராணுவப்பகுதிக்குச் சென்று விடோம், அங்கே எமது மக்களின் பாழடைந்த வீடுகள் நிறையக் காணப்பட்டது,அதனால் அன்று இரவு அங்கே தங்கினோம். மீண்டும்01/08/1994 இரவு நகரத் தொடங்கினோம்பாளடைந்தவீடுகளில் மறைந்து மறைந்து ஓய்வு எடுத்து எடுத்து நடக்கத் தொடங்கினோம் பகல் ஆனதும் வீடுகளில் தங்குவோம் இரவானதும் நடக்கத் தொடங்குவோம் பலாலியை அண்மித்ததும் ஒரு வீட்டிற்குச் சென்று உடுப்புக்களை மாற்றி சண்டைக்கு உரியவாறு தயார் அனோம்,
பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. நாங்கள் வந்துகொண்டுயிருக்கும்போதுஒரு இராணுவ வவள்வாகனம் ஒன்று றோட்டால் வந்துஇடையில் நின்றது நாங்கள் அனைவரும் நிலத்தில் படுத்து எங்களை மறைத்துக்கொண்டோம் அரை மணித்தியாலத்தால் இராணுவம் வாகனம் அவ்விடத்தில் இருந்து சென்றது.
பின்னர் காங்கேசன்துறை றோட்டை கடக்கும்போது ஆமி எங்களை கண்டு விட்டான் எங்களிற்கும் ஆமிக்கும் ஒரு சண்டை ஏற்பட்டது அதில் எங்களிற்கு சேதம் ஏற்படவில்லை ஆனால் அணி இரண்டாகப் பிரிந்து விட்டது ஒரு வளிகாட்டியோடு கெனடியோடு ஐந்து பேரும் புலிகுட்டியோடு மூன்று பேரும்மாக அணி இரண்டாகப்பிரிந்துவிட்டது,பின்னர் பின்னர் நாங்கள் ஐந்து பேரும் நகர்ந்து விமான ஒடுபாதைக்கு அருகாமையில் சென்றோம் அதில் மின்சார வேலி ஒன்று இருந்ததுஆனால் பதட்டம் அடைந்த இராணுவம் உலங்குனூர்தியை திடீரேன மேலே எழும்பி பின்னர் கீழே இறங்கியது.
அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் இருந்த மின்சார வேலிக்குக் கீழால் பகுந்து உள்ளே சென்றோம்அங்கே சென்றதும் அப்பொழுது நேரம்12.30 மணிஎங்களோடு வந்த வளிகாட்டியான அசோக் என்பவரை போகுமாறும் நாங்கள் சண்டையை ஆரம்பிக்கப்போகின்றோம் என அவரிடம் சொல்லுகின்றேன் இனிப்போவது கடினம் உங்களோடு நானும் வருகின்றேன் என அவர் சொல்லிகின்றார், ஒரு மாதிரி அவரை அண்ணை கண்டிப்பாக உன்னை அனுப்பச் சொன்னவர் என சொல்லி அனுப்பினேன் அவர்ஒரு 10த்து மீற்றர் நடந்து இருப்பார் எங்கையோ இருந்து ஒப்பிக்காரன் சுட்டான் அவர் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார்,

பின்னர் நாங்கள் நாலு பேரும் உள்ளே சென்றோம்,அதற்குப் பின்னரும் இரண்டு தடைகளைத்தாண்டி உள்ளேசென்றோம், இரண்டு பொய்சனிக்கு இடையே கம்பியை வெட்டி நாங்கள் 4 பேரும் உள்ளே நுளைந்தோம் இப்பொழுது உலங்கு வானூர்தி எங்களின் கண்ணிற்குத்தெரிகின்றதுநாங்கள் நடந்து சென்றோம் நெற்வேலி ஒன்று இருந்தது அதையும்வெட்டி உள்ளே நுழைந்தோம், இப்பொழுது02/08/1994 இரவு 2. மணி-இருக்கும் உலங்குவானூர்தியில் இருந்து நாங்கள் 50 மீற்றறில் நிக்கின்றோம் அதன் பாதுகாப்பிற்காக ஒரு சென்றி நிக்கின்றது, அவரை நைட்விசன் சினைப்பறால் சுட்டு வீழ்தினோம், அடுத்து உலங்கு வானூர்திக்கு உள்ளே சென்று அதை இயக்கிப் பார்த்தோம் அது நிலத்தில் வைத்துப்பூட்டப்பட்டுயிருந்தது, அடுத்து கெலியில் இருந்து 50 மீற்றர் பின்னால் வந்து அதைக்குறிபார்த்து மேஜர்ஜெயம் லோவால் அடித்தார்ஆனால் அது எரியவில்லை
பின்னர் கிட்டப்போய் அதை லைட்டறால் எரித்தோம் அது எரிகின்றது,அடுத்து அதைப்பாதுகாற்காக வவுசர் வாகனம் ஒன்று வருகின்றது அதையும் லோவால் அடித்தோம்அதுகும் எரிந்தது, பின்னர் அடுத்த வவுசர் வந்தது அதற்கும் அடித்தோம் அதுகும் எரிந்துகொண்டுயிருக்கின்றது பின்னர் 50 கலிபர் பூட்டிய மொட்ட ஜீப் ஒன்று வந்தது அதற்கும் அடித்தோம்,அதில் வந்த ஐந்து இராணுவம் இறங்கி ஒட வெளிக்கிட்டர்கள் அவர்களையும் சுட்டு விழ்த்தினோம்,அடுத்து உள்ளே இருந்த ரக்கை பின்னால எடுத்து வெளியே ஓட எடுத்தான் அதையும்லோவால் அடித்தோம், அதுகும் எரிந்தது இப்பொழுது ஒரு லோ மட்டும் எமது கையில் உள்ளது,
அடுத்து பெரிய வீடு ஒன்றுக்குள் பழுது அடைந்த விமானம் ஒன்று நின்றது அதையும் எரித்தோம்,இந்த நடப்புக்கை முடிந்தவுடன் வெளியில் இருந்து இராணுவம் சுட்டுக்கொண்டுவந்தது அதில்மேஜர்திலகன் விரச்சாவு அடைந்தார்.
அடுத்து ஜெனரேட்டர் வேலை செய்துகொண்டுயிந்தமையால் அதையும் டொங்கான் அடித்து நிறுத்தினேன்,வேறு ஒரு இடத்தில் இருந்து ஜெனனேட்டர்வேலை செய்தது கடசியாகயிந்தலோவை ஜெயம் அடித்தான், ஆனால் அது நிக்கவில்லை வேலை செய்து கொண்டே இருந்தது,இராணுவம் சுற்றி நின்று கைக்குண்டுகள் எங்களை நோக்கிஎறிந்துகொண்டுயிருந்தது, அக்குண்டுபட்டு மேஜர் ஜெயம் வீரச்சாவு அடைந்தார்,இப்பொழுது நானும் நவரெட்ணமும் இருக்கின்றோம்அப்பொழுது நாங்கள் ஒரு பெரிய விட்டிற்குள்ஓடிப்போய் நுளைந்து விட்டோம்.
அங்கே ஆமி ஒருதரையும்காணவவில்லை இரண்டு வெற் இருந்தது அதற்கு மேலே நுளம்பு வலை கட்டப்பட்டு இருந்தது மேசை ஒன்று கிடந்தது அதில் ஒரு மிஸ்ட்டலும் தண்ணீர் போத்தலும் இருந்தது,இப்பொழுது விடிந்துகொண்டுவருகின்றது நாங்கள் இதிற்குள்ளே இருப்போம் இராணுவம் வர வர சுட்டுக்கொண்டே இருப்போம் இரவானதும் தப்பிப்போவோம் எனஇருவரும்முடிவு எடுக்கின்றோம்.
எடுக்கின்றோம்,இப்பொழுது நேரம் 4 மணி நான் ஒரு கொமாண்ட்கொடுக்கின்றேன் டெய் நீ பத்துப் பேரைக்கொண்டு அங்கால அடி நீ பத்துப் பேரைக்கொண்டு எங்களை வந்து சந்தி என கொடுத்தேன் இராணுவம் அமைதியாகயிருந்தது,நவரெட்ணம் பசிக்குது என்று சொல்ல எனது பைக்கேட்டில் இருந்து குழுக்கோஸ் மற்றும் விஸ் கேட்டையும் எடுத்து அவனிக்குக்கொடுக்கின்றேன் அடுத்து அவனும் நானும் சாப்பிட்டு தண்னிரும் குடிக்கின்றோம்,
அப்பொழுது நாங்கள் இருந்த வெற் உயந்து பதிந்தது, எனக்கு சந்தேகம் வந்து விட்டது நான் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வெளியே பாந்தேன், திடீரென இரண்டு குண்டை களட்டி உள்ளே போட்டு விட்டு ஒருஆமி வெளியே பாந்தான் அதில் இருந்து நான் தப்பிக் கொண்டேன் நவரெட்ணம் கடுமையாகக் காயப்பட்டுவிட்டான்,சிறிதி தூரம் அவனைக்கொண்டு போனேன் அவன் குப்பி கடித்து விட்டான் நான் மட்டும் தனித்தேன் விடிந்துகொண்டுவர கடல் கரையை நோக்கி வேகமாக ஓடினேன் என்னை மின்சாரம் தாக்கியது, அடுத்து நான் குப்பி கடித்தேன் பின் ஆறு நாட்கள் எனக்கு உணர்பு இல்லை, என அவர் குறிப்பட்டார்,
ரீம் பிரிந்தது என முன்னர் குறிப்பிட்டேன் அதில் புலிக்குட்டியோடு சென்ற இரு போராளிகள் ஆன கப்டன் திரு-லெப் ரங்கன்இருவரும் வீரச்சாவு அடைந்தார்கள்இதில் புலிகுட்டி ஒருவளி காட்டியும் தப்பிச்சென்றார்கள்,
19/09/1994 கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி
பெண் போராரிகளின் வீர வரலாற்றை மீண்டும் ஒரு தடவை சிந்திக்க வைத்தவள் நளாயினி ஒரு சிறந்த பெண் தலைவியாக இருந்தது மட்டும் அல்லாமல் அவள் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட, அப் பேச்சு திறமையூடாக பல இளம் பெண்களை போராட்டத்தில் இணைத்தவள் நளாயினி பல சண்டைகளிற்குப் போய் விழுப்புண் அடைந்தவள், நாளாயினி அவள் அவள் நினைத்து இருந்தால் தனது முதுமையையும் தனது காயத்தையும்காட்டி போராட்டமரபுக்கு ஏற்ப திருமணம் செய்து ஒரு அம்மாவாக வாழ்ந்து இருக்கலாம், ஆனால் தான் முன்மாதிரியாக சாதித்துக் காட்டினால் தான் அணைத்த போராளிகளும் தன்னை பின்தொடர்ந்து வீரவரலாறு படைத்துப் பெண்களிற்குப் பெருமை சேர்ப்பார்கள்,
என்பதில் அசையாத நம்பிக்கை உடையவள் நளாயினி, அவள் மிகவும் இரக்கம் உடையவள்
காவலரண் தொகுதி ஒன்றைத் தாக்கும் அணிக்குப் பொறுப்பாகச் சென்று வெடிபட்டு மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடந்ததாள் லெப் கேணல்பாமா அதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதினாள் நளாயினி அப்படி இருக்கும் வேளையில்தான் பாமா எங்களைவிட்டும் எட்டாததூரத்திர்க்குப் போய்விட்டாள்.ஒரு மிதிவண்டிதானும் இல்லாமலிருந்த ஆரம்ப நாட்களில் , மங்கையும் அவளும் ஒழுங்க்கைக்கு ஒழுங்கை நடையாய் நடந்தார்கள்.

வீதிவீதியாகத் திரிந்து , வீடுவீடாகக் கருத்துச் சொல்லி , புதிது புதிதாகப் பிள்ளைகளைச் சேர்த்து , கடற்புலிகள் மகளிர் அணியை உறுதியான ஒரு அத்திவாரத்தின் மீது அவர்கள் கட்டியெழுப்பினார்கள்.” ஆண்போராளிகள் துணையின்றி கடலில் நாங்கள் தனித்து சண்டை பிடிக்க வேன்றும் ”
தங்களது கனவுகளையெல்லாம் நனவாக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச் நஞ்சமல்ல. என்ன வருத்தம் என்றாலும்நளாயினி கடலுக்கு வராமல் ஒரு நாளும் விடாள்.பகலெல்லாம் எமக்கு பயிற்சி தந்து ஓயாமல் இயங்குகின்ற அவர்கள் , இரவான பின்னர்தான் எம்மை ஓய்வாக உறங்கவிட்டு தமக்காகப் பயிற்சி எடுக்கக் கடலுக்குப் போவார்கள். ஆனால் அது அவர்களின் கடசிப் பயணத்திற்கான பயிற்சி என்பதுஎமக்குத் தெரியாது,
வல்வெட்டித்துறையில் ஆறுமுகசாமி யாவின் 8 செல்வங்களில் இவள் 6வது குழந்தை.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தபோது பெரிய வசதிகளைத் தூக்கி எரிந்துவிட்டுத்தான் அவள் புறப்பட்டாள்.கரும்புலியாக போவதற்கு அனுமதி கிடைத்தபின் கடசியாக தனது தாயையும் சகோதரர்களையும்பார்க்க விடுமுறையில் வீட்டிற்குச் சென்றாளாம்
வீட்டுக்குப் போயிருந்த ஒரு பொர்ணமி நாளில் முற்றத்தில் அம்மாவின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த பிள்ளையை ஆசையோடு வருடிவிட்ட அன்னையிடம்…
அக்காவுக்குப் பத்து இலட்சம் கொடுத்து கலியாணம் செய்து வைத்தீர்கள் அம்மா , எனக்கு ஐந்து இலட்சம் thaangko இயக்கத்திற்கு கொடுக்க என்றாளாம்.இறுதி சந்திப்பில் கூட அப்பணத்தை வேண்டி இயக்க வழர்ச்சிக்குக்கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதை நினைத்த பெண் போராளி என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்,
தொலைத்தொடர்பு சாதனம் ” ஒலித்தது.
இலக்கு தெரியுது.
நல்லா கிட்ட வந்திட்டம்…
இடிக்கிறம்…. இது தான் அவளின் கடசிக்குரல்குக் கேட்டது
கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.
தச்சன்காட்டில், பலாலிப் பெருந்தளத்தின் ஒரு பகுதிக் காவல் வியூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதல்.
கை எலும்புகளையும் நொறுக்கி, வாய்ப் பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன துப்பாக்கிச் சன்னங்கள்.
ஒரு தண்டு இல்லாமல்போய், ஒரு பக்கமாய் இழுபட்டு, நெளிந்துபோயிருந்த வாயால் அவன் பேசும்போது, பார்க்கா அழகாய்த்தான் இருக்கும்.
அது மழலைக் குரல்.
பண்டத்தரிப்புக்குப் பகைவன் நகர்ந்த சண்டையில் காலை இழந்தவன், ‘பலவேகய – 02′ சண்டை துவங்கியபோது பொய்க்கால் பொருத்திக்கொண்டு ஆனையிறவுக்கு ஓடினான்.
இயக்கச்சியில் வைத்து, அடிக்காத குறையாய் துரத்திக் கலைத்த தளபதியோடு சண்டை பிடித்துக்கொண்டுதான் அவன் திரும்பி வந்தான்.
‘மணியந்தோட்டம் – 02′ பயிற்சி முகாம், நான்காண்டுகளுக்கு முன்னர் லக்ஸ்மனை போரிற்குத் தயாராக்கியது.
யாழ்ப்பாணக் கோட்டைதான் அந்த வீரனின் முதற்களம்.
மாங்குளம், சிலாபத்துறை, ஆனையிறவு, மணலாறு, காரைநகர், பலாலி; பகைவன் கூடாரமடித்த இடங்களிலெல்லாம் அந்த வீரன் போர்தொடுத்தான்.
குடிமகனொருவன் தன் தாய்மண்ணுக்குகாகச் செய்யக்கூடிய அதியுயர் தியாகத்தைத் தான் செய்யவேண்டுமென்ற வேட்கையை, சுவாசப் பகல் சுமந்துகொண்டு திரிந்தான் அந்தக் கரும்புலி.
அந்த சர்ந்தப்பத்திற்காக அவன் கடல்மடியில் தவம் கிடந்த நாட்கள் ஏராளம்.
சதுரங்கப் பலகையில், தனது சேனையை மதிநுட்பத்தோடு வழிநடாத்தி, எதிராளிகளின் அரசர்களை முற்றுகையிட்டு, முறியடித்து வீழ்த்துகிற அந்த சதுரங்க வீரன்.
கற்பிட்டிக் கடலில், ஒரு கரும்புலியாய் எதிரியின் “கடல் அரசனைத்” தகர்த்து மூழ்கடித்தான்.
‘ஆசீர்’ கடற்பயிற்சிப் பாசறையில் தளபதி சாள்ஸ் வனைந்தெடுத்த கடற்புலி வீரர்களுள், லக்ஸ்மனும் ஒருவன்.
கிளாலிக் கடற்தளத்தில் அந்த வீரத் தளபதி வீழ்ந்தபோது, அவனது கைகளில் வளர்ந்த இந்தக் கரும்புலிக் குழந்தைகள் வெகுண்டெழுந்தார்கள்.
சுட்டெரித்துச் சாம்பராக்க எங்கள் கடலெங்கும் பகைவனைத் தேடியலைந்தார்கள்.
பருத்தித்துறையில் ‘சுப்பர் டோறா’ வைத் தகர்த்தபோதும், இதயத்தில் விழுந்த அந்த ஆழமான காயம் ஆறவேயில்லை.
அந்தத் தளபதியின் நினைவோடு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயின்று வெளியேறிய மாணவர்கள்தான்.
சிலாபத்துறையில், பகைவனின் மடியில் நெருப்பு மூட்டினார்கள்;
‘சாகரவர்த்தனா’ வைச் சாகடித்துச் சாதனை படைத்தார்கள்.
லக்ஸ்மன் இயல்பாகவே கெட்டிக்காரன். விஷயம் தெரிந்தவன்.
அநேகமாக, பொதுவான எல்லா விடயங்களைப் பற்றியும் அவனது மூளைக்குள் பதிவுகள் இருந்தன.
முகாமிற்குப் பொருள்கள் ஏற்றிவரும் உழவுப்பொறி ஐயாவைப் பார்த்து, “நடுப்பெரிய சில்லு ரெண்டுக்கும் எத்தினை கிலோ காத்து?” என்பான்.
ஐயா தலைசொறிந்து நிற்க, “பெரிய சில்லுகள்தானே, எப்படியும் 150, 200 கிலோவரும்” என நாங்கள் நினைக்க….
“40 கிலோதானய்யா……….. கணக்கா இல்ல” மேதாவியாய் பதில் சொல்லுவான்.
பள்ளிக்கூட மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் பையன்களைக் கைதட்டிக் கூப்பிட்டு,
“கிரிக்கற் பந்து எவ்வளவு நிறை இருக்க வேண்டும்?” என்பான்.
பதில் தெரியாமல் முழித்து, அப்பாவித்தனமாய்ச் சிரிக்கும் பையன்களைப் பார்த்து “110 கிராம் தம்பி” சொல்லிவிட்டு வருவான்.
அவனைப் பெரிய அறிவாளி என்று சொல்வதற்கில்லை: ஆனால், எவரோடும் எதைப்பற்றியும் கதைக்கக்கூடிய அளவுக்கு அவன் இருந்தான்.
அது அவனது சிறப்பு இயல்புகளில் ஒன்று. வீட்டுக்கு வெளியில், நாட்டுக்கு வெளியில், பூமிக்கு வெளியில், எங்கள் ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியில், எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் வெளியில் மானிடன் கண்டுபிடித்த எல்லாவற்றையும் பற்றித் தானும் அறிந்திருக்க வேண்டும் என்ற முனைப்பும் முயற்சியும் கொண்டவன் லக்ஸ்மன்.
அந்த ஆர்வத்தினால்.
எல்லாவற்றையும் பற்றித் துருவித் துருவி ஆராய்வான்.
‘றாடர்’ படிப்பிக்க வந்தவர் குழம்பியே போனார். அவன் குடைந்த குடையலுக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு,
“பிரண்டவன்”
‘பிரணவன்’ என்ற அவனது இயற்பெயரை நாங்கள் தான் இப்படி மாற்றினோம்!
பிறந்தது 05.07.1974இல்.
ஊர் நல்லூர்; சங்கிலி மன்னனின் பழைய இராசதானி.
படித்தது யாழ்ப்பாணம் ‘ஸ்ரான்லி கல்லூரி’யில் கிரிக்கற் பைத்தியம்.
வீட்டில் துடுப்போடும் பந்தோடும்தான் படுக்கைக்குப் போவானாம்.
லக்ஸ்மனுக்கு தச்சன்காட்டுச் சண்டையில் வெடிபட்டு, ஒரு கையில் இயக்கம் இல்லாமல் போய்விட்டது.
பண்டத்தரிப்பில் மிதிவெடி வெடித்து ஒரு காலில் பாதம் சிதைந்துபோய்வ்ட்டது.
இருந்தபோதும், கடலில் இறங்கி, தோழர்களின் தோள்களைப் பற்றி மெல்ல மெல்ல நீந்தப் பழகியவன், கொஞ்சகாலத்திற்குப் பிறகு, தன்னந்தனியாக நீந்திக் கடந்த தூரம் 5 கடல் மைல்கள்
லக்ஸ்மன் நல்லதொரு படகோட்டி. நீண்டகால அனுபவம் பெற்றிருந்தவர்களை விடவும் குறுகிய காலத்திற்குள் அவன் பெற்றிருந்த திறமை, எங்களை ஆச்சரியப்பட வைத்தது. கடற்புலிகளின் சிறந்த படகோட்டிகளுள் ஒருவனென அவனைச் சொல்ல முடியும். இறுதியில் அவனும் தன்னை தாய் நாட்டிற்கு அற்பணித்தான்,
கோயில் போரதீவு கிராமத்திவு மட்டக்களப்பு
கந்தசாமி; அம்மா யோகம்மா இவர்களின் புதல்வன் தான் வாமன், இந்திய இராணுவ உள்வரவின்போதுதான், அவர்களின் கெடுபிடியால்தான் வாமன் இயக்கத்திற்கு வர நேர்ந்தது இல்லையெனில் அந்த ஏளைவிவசாய்யின் குடும்பத்தில் அவனும் ஒருதனாக உளைத்து ஓரு சிறந்த விவசாகியாக வந்துயிருப்பான், ஆனால் அப்படி வருவதற்கு இந்திய இராணுவம் அவனை விடவில்லை.
,இந்திய நெருக்கடி; அடிவருடிகளின் அனர்த்தங்கள்: நிம்மதி இழந்துபோன வாழ்வு. அதனால் அவன் போராட்டத்தில் இணைந்தான் பயிற்சி முடிந்து,ரி. 56 அவனுக்கு வழங்கப்பட்டு ஒரு விடுதலைப் போராளியாக அவன்வெளியே வந்தான்,
மண்டூர் அவனது முதற்களம். இரும்புப் பாலத்தடியில் ஒரு பதுங்கித் தாக்குதல். இலக்கு, இந்திய வல்லரசின் ஒரு தரைப்படை ரோந்து அணி.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த சேனாதிபதிகளில் ஒருவரும், தென் பிராந்தியத் துணைத் தளபதியுமான லெப்ரினன் கேணல் றீகன், களத்தில் நின்று வழிநடாத்திய அதிரடிதாக்குதலில்.
நடு வீதியில், 30 இந்தியச் சிப்பாய்கள் பிணங்களாய்ச் சுருண்டார்கள். இதுதான் இவனின் முதலாவதுதாக்குதல் அனுபவம், அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் 1989 கடசியப்பகுதியில் கால்நடையாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான்,
தளபதி சொர்ணம் அவர்களின்1.4 ரீமில் ஒரு போராளியாகயிருந்தான் கிறிது காலம் அவனின் திறமையைக்கண்ட தளபதி சொர்ணம் அண்ணை அவனை தலைவரின் பாதுகாப்பு அணியில் இணைத்தார் அவனுக்கு மிகவும் பொறுமதியான ஆயுதம் ஆன வாகன எதிர்ப்பு ஆயுதம் லோ வழங்கப்பட்டது,

அப்பொழுது நாங்கள் ஒரு ஒன்றுகூடலிக்காக தலைவரோடு பழை எழுதுமட்டுவாழுக்குச்சென்றோம், அப்பொழுது சில குறிப்பிட்ட போராளிகளைக் கூப்பிட்டு தலைவர் ராக்கேட்டை நோக்கிச் சுடுமாறு கட்டளை வழங்கினார், முதலாவது டெல்சனைக்கூப்பிட்டு மினி மினியால் சுடுமாறு கட்டளை வழங்கினார்.
நூறு மீற்றறில் இரண்டு 7-7 பிடித்தது நீர் ஆமியைக் கொல்லவில்லை ஆனால் காயப்படுத்தி விட்டாய் என சொல்லி அவரை அனுப்பினார் ,,அடுத்து தலைவர் வாமனைக்கூப்பிட்டார் வாமன் 200 மீற்றறில் இருந்து வேகமாக ஓடி தலைவரிடம் வந்தான் ௹று மீற்றர் தூரத்தில் இருந்து ஒரு பளைய வாகணத்திற்கு லோவால் அடிக்குமாறு தலைவர்கட்டளை வழங்கினார் வாமன் குறி தவறாமல்லோவால் அடித்தான் வாகனம் பத்தி எரிந்தது தலைவர் சிரித்தார் வாமனிடம் போய் தோழில் தட்டி நீர் ஒரு கிறோ என சொல்லி அனுப்பினார்,
இப்படிதவைரோடு வாமன் இருந்த வேளை வாமனுக்கு ஒரு எலும்பு உரிக்கி நோய் வந்தது, அது கைகால் மடிக்கும் வேளையில் மடக் மடக் என சத்தம் கேட்கும் அதை யாழ்பாணத்தில் இருந்த குகதாஸ் டோட்டர்தொட்டு அனைவரிடமும் காட்டப்பட்டது, ஆனால் அது சுகப்படுத்தமுடியாதவருத்தமாகவே இருந்தது, அதனால் மனம் உடைந்த வாமன் கரும்புலியாகப் போவதற்கு பல முறை தலைவரிக்குக்கடிதம் எழுதினான், அதற்கு தலைவர் அனுமதி வழங்கவில்லை,
அடுத்து தனது கோப்பாய்யில் உள்ள தாய்மாமனின் வீட்டிற்கு விடுமுறையில் செல்வதற்கு சொர்னம் அண்ணையிடம் அனுமதி கேட்டான், அதற்கு அவர் என்னைக்கூட்டிக்கொண்டுபோகுமாறு கட்டளை வளங்கினார், நான் கூட்டிக்கொண்டு போனேன், அந்த ஊர்சனம் அவரிக்கு மட்டக்களப்பார் என பேர் வைத்துயிருந்தார்கள். எனவே மட்டக்களப்பாரின் வீடு எங்கே என எல்லோரிடமும்கேட்டு அங்கே இருவரும்சென்றோம் .
வாமன் அங்கே சென்றதும் தனது மாமனாரைக் கட்டி அனைத்து தனக்கு வருத்தம் வந்து விட்டது என சொல்லி அழுதினான் மாமனாரும் அவனுக்கு ஆறுதல் சொன்னார், அவர்கள் மலைப்பாறைகளைத்தோண்டி வாழைத்தோட்டம் செய்து இருந்தார்கள் அதை நாங்கள் இருவரும் சுற்றிப்பார்வையிட்டோம், அடுத்து அன்று பகல் எகளிற்குச்சாப்பாடுதந்தார்கள் நாங்கள் சாப்பிட்டோம்,, பிற்பகல் எங்களின் ரெட்டி முகாமிற்குச் சென்றோம்,
அடுத்து சாவகச்சேரியில் உள்ள எமது படையணி மருத்துவமனைக்கு வாமன் சென்றான் அங்கே கிச்சைக்காக பல மாதம் நின்றான், அவ்வேளை எனக்கு பல் வருத்தம் வந்து அங்கே நானும் சென்று இருந்தேன் அப்பொழுது வாமன் ஓடிவந்து எனது காலில் விழுந்து அழுதிரைனான், ஏன் என கேட்டேன் நீர் சொன்னால் தலைவர் கரும்புலியாக என்னை அனுப்புவார் என்றான், அது எப்படி நடக்கும் என்று கேட்டேன் அதற்கு அவன் தலைவர் என்னை நம்பவில்லை இப்பொழுதும் கரும்புலிக்கு ஆட்கள் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அதனால் பலயீனமான வாமனிக்கு பலமான நானும் அவனோடு கரும்புலியாகச் சென்று இருவரும் அக்கடமையை செய்து முடிப்போம் என கடிதம் எழுதி தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றான், நானும் அவனின் கவலையைப் பார்த்து பரிதாபப்பட்டேன், பின் அவனே சென்று அவசரமாகக் கடிதம் ஒன்று எழுதி என்னை சையன் வைக்குமாறு சொன்னான் நானும் வைத்தேன் அக்கடிதம் சொர்ணம் அண்ணையூடாக தலைவருக்குச்சென்றது, ஒரு நாள் சொர்ணம் அண்ணை என்னைக் கூப்பிட்டார், உன்னை கரும்புக்கு அனுப்ப ஏலாதாம் கால் கை இல்லாமல் போனால் சந்தர்ப்பம் தரலாமாம் ஆனால் வாமனை அனுப்பலாம் என்று தலைவர் சொன்னதாக சொர்ணம் அண்ணை என்னிடம் சொன்னார், சரி என்று கேட்டேன். ஒரு மாதம் களித்து வாமன் என்னை வெளியில் இருந்து போன் எடுத்தான் என்ன வாமன் சுகமாய் இருக்கின்றாயா? என்று கேட்டேன், நான் உரிய இடத்திற்கு வந்து விட்டேன் அண்ணை என்னை சந்தித்தவர் நான் அவரோடு கதைத்து அவரோடு சாப்பட்டனான், அப்பொழுது அவருக்கு இறுதிப் பரிசாக ஒரு T. சேட்டும் வேண்டிக் கொடுத்தேன்.
அடுத்து 4 வசனம் எழுதி சுகித்தம்மாவின் வீட்டிற்கு அனுப்பியுள்ளேன், அதையும் வேண்டி எடு நிலையாக படைத்தவனிடம் செல்கின்றேன் இனிமேல் நான் உன்னைச் சந்திக்க மாட்டேன் இது கடசிக் கடிதம் என நினைத்துக்கொள் எமது வளி காட்டியை கவனமாகப்பாதுகாத்துக்கொள் எனது கடசிச் செய்தி கேட்டதும் என்னைப் பற்றி எழுதி மக்களிற்குத் தெரியப்படுத்து இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கிய உமக்கு எனது நன்றிகள் என வாமன் என்னிடம் நேரடியாக தெரியப்படுத்தினான் இதுதான் அவரின் கடசிக்கதை, ஒரு கரும்புலி மரவனின் உணர்வு எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
,19/09/1994அன்று வாமன் லக்ஸ்மன் ஒரு பக்கமும் மங்கை, நாளாயிணி மறுபக்கமும் கரும்புலியாகச் சென்று சாகரவர்த்தனா போர்கப்பல் மீது மோதினார்கள் ஒரு பக்கமாய்ச் சரிந்து மூழ்கிக் கொண்டிருந்த கப்பலின் மீது , தாவிப் பாய்ந்தனர் கடற்புலிகள்.
மூர்க்கத்தனமான தாக்குதல்….
துப்பாக்கிகளின் முரட்டுத்தனமான உறுமல்.. !
” பொங்கு தமிழுக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு ”
செய்யுள் ஆக்கியவர் பாரதிதாசன்.
செய்து காட்டியவர் பிரபாகரன்.
கடலுக்குள் குதித்துக் கைகளைத் தூக்கியோரை , கப்பலில் எடுத்த ” 50 கலிபர்களோடு ” கரைக்குக் கொண்டுவந்தனர் கடற்புலிகள்.
ஒருவர் கப்பலின் தளபதி – அடுத்தவர் கப்பலின் துணைத் தளபதி.
போர்க்கைதியாய் உள்ள கொமாண்டர் சொன்னார்…..
எனது 20 வருட படியில் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வு , என் கண்களால் பார்த்த இந்தத் தற்கொடைத் தாக்குதல்தான்.
தேசியத்தலைவர் கூறினார்….
சிறீலங்கா கடற்படியின் ஒரு காப்பர் தளபதியை , தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெறியைப் பெற உயிர் துறந்தாள்.
1994 . 09 . 19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தவிதப் பிசகுமே இல்லாமல் செய்து பார்த்த பயிற்சிகளில் எந்த தவறுமே நேராமல் நளாயினியும் – மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் – லக்ஸ்மனும் மோதியதில் ” சாகரவர்த்தனா “ மூழ்கத் தொடங்கியது.
இதனால் எத்தனை உயிர்கள் மகிழ்கிச் அடைந்தது என்பதைப் பார்ப்போம்,22/10/2002 அன்று விடுதலை புலிகளிற்கும் அரசாங்கத்தற்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின்போது, ஓமந்தையில் வைத்து சுத்ததக் கைதிகளை பரிமாறுவது என முடிவு எடுக்கப்பட்டதற்கு அமைவாக சாகரவர்த்தனா போர்கப்பலில் விடுதலைப் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்டன் வோயாங்கோடை உட்பட 9 இராணுவச்சிப்பாய்களை விடுதலைப் புலிகளின் தளபதிகளான தளபதி வானு தளபதி தீபன் தமிழ்ச்செல்வன் பிரிகேடியர் சகிக்குமார் உட்பட மேலும் பல போராளிகள் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஓமந்தை சென்றார்கள்,
26/03/2005 தமிழீழ தேசிய தொலைக்காட்சி உருவாக்கம்
2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும்.
தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பான இந்த தொலைக்காட்சி சேவையை. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம்.
போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,அக்கால சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே எம் தரப்பு உண்மைகளை சொல்லும் என உருவாக்கப்பட்டது.
ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை எத்துணை உண்மையாக இருந்தாலும் அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.
. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.
ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்”புலிகளின் குரல்” வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி பின்பு வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.
அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து “தேதுன்ன” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.
1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் “நிதர்சனம்”என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய ஆக்கிரமிப்பு படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பல தடைகளை வென்று போராட்டத்தோடு ஊடக போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னகர்த்திய பெருமை தமிழீழ விடுதலை புலிகளுக்கே உரித்தானது.
இன்று ஈழ மண்ணில் எங்கள் ஆயுத போராட்டமும் ஊடக சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கலாம். இணையதளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் ஊடகவியலாளனாக மாறி இருக்கும் எழுச்சியும் உலகெங்கும் தமிழ் ஊடகங்கள் பல்கி வருகின்ற பேராற்றலும் எங்கள் தாய் மண்ணின் ஊடக எழுச்சி விதைத்த விதைப்புகளில் இருந்து முளைத்தவையே என்றால் மிகை இல்லை.
களத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போல் இன்று எழுத்தோடு ஆயுதம் ஏந்தும் போராளிகளால் எங்கள் போராட்டம் முன்னகர்ந்தே செல்கிறது!
சிங்கள அரசியின் சார்பாக 1995ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், சந்திரிகா குமாரணதூங்கா, தான் ஒரு பெண்மணி எனவும் வட கிழக்கப் பெண்களின் துன்ப துயரங்களை தான் அறிவேன் எனவும், அவர்களின் பிரச்சனையை இலகுவாகத் தீர்ப்பேன் என பாரிய பிரச்சரங்களில் ஈடுபட்டார்,
அதனால் நம்பிய தமிழர்கள் அவருக்கு பெரும் திரளான வாக்குகளை செலுத்தினார்கள்,, சிங்கள மக்களும் பெருந்தொகையான வாக்குகளை அவருக்கு போட்டார்கள், அதனால் அவர் அதிபர் தேர்தலில் வெற்றியீட்டினார்,
அதனால் மகிழ்சி அடைந்த தமிழர்கள்குழிக்கின்ற சோப்வரை அனைத்துப் பொருட்களிற்கு
ம் சந்திரிகா என பேர் வைத்தார்கள், இதனால் பாரிய எதிர்பார்ப்போடு இருந்தது தமிழீழம்,
அவரின் சுத்த நிறுத்தம் 100 நாட்கள் இருந்தது ஏனனெனில் ஆயுதங்கள் வேண்டுவதற்கும் படைகளை தயார்படுதுவதற்க்கும் அவருக்குத் தேவைப்பட்டது, விடுதலை புலிகளை பேச்சிக்கு வருமாறு சொல்லி தேவையற்ற நிபந்தனைகளை விதித்து காலத்தை இழுத்தடிப்பதிலேயே கவனம் செலுத்தினார்,
இவரின் முதல் நடவடிக்கையாக யாழ் மாவட்டத்தைப்பிடிப்பதே இவரின் திட்டமாகயிருந்தது அதற்காக கொமாண்டோ படைகளை யாழ்பாணம் நோக்கி நகர்த்திக்கொண்டுயிருந்தார், இவரின் இவ் திட்டத்தை புலநாய்வுரீதியாக விடுதலைப்புலிகள் அறிந்து கொண்டார்கள், அதனால்
மூன்றாம் ஈழப்போரை புதிய போர் ஊடாக ஆரம்பிக்க வேண்டும் என விடுதலைப்புலிகள் திட்டம் இட்டார்கள், இருந்தும் நூறு நாட்கள் பொறுமை கார்த்தார்கள், அதனால்100 நாட்கள் நீடித்ததது போர் நிறுத்த ஒப்பந்தம்,
இதே சாமதான காலத்தில்தான் 10/03/1995 அன்று மூத்த தளபதி சொர்ணம் அவர்கட்கும் பெண் போராளிகளில் ஒருவரான ஜெணி அவர்கட்கும் திருமணம் நடந்தது
இவர்தான் சொர்ணம் அண்ணையின் மனைவி ஜெனி
மூத்த பயிற்சி மாஸ்ட்டர் ஆன தினேஸ் மாஸ்ட்டர் அவர்கட்கும் மூத்த பெண் போராளியான ஞானகி அவர்கட்கும் ஒரே நாள் திருமணம் செய்வதற்கான ஏற்பாடு தலைவரால் மேற்கொள்ளப்பட்டது, பத்தாம் திகதி இரவுசுண்டிக்குளியில் அமைந்து இருந்த பாண் கோட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது, அதில் பதுமன், தமிழ்செல்வன், வானு ஜெனனி அக்கா, பாலா அண்ணை அடல் தலைவர் தலைவரின் மனைவி அனைவரும் கலந்து சிறப்பாக இவ் நிகழ்வு நடைபெற்றது,
19,/04 / 1995 அன்று போராக மாறியது. தமிழீழம் கடற்புலிகள் "சூரயா", "ரணசுரு" ஆகிய கடற்படையினரின் கடற்கலங்களை மூழ்கடித்தனர். மேலும், விடுதலைப் புலிகள் தோளில் வைத்து செலுத்தக்கூடிய ரஸ்சியாத்தாரிப்பான மெசள்ஸ் அதாவது புதிய ரக 7.7 விமான எதிர்ப்பு ஆயுதமாகும்,
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இப்போரில்புதிதாக விடுதலைப் புலிகள் பாவித்தனர். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் இரு "அவ்ரோ" (AVRO) விமானங்கள் யாழ் தீபகற்பத்தின் மேலாகப் பறக்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டன.இவ் இரு விமானங்களையும் 24 மணித்தியாத்திற்குள் பிரிகேடியர் கடாபி அவர்களே சுட்டு வீழ்த்தினார்
இதுதான் அந்த விமான எதிர்ப்பு ஆயுதம்இதற்குப்பின்னர்இதில் ஒன்று நிலாவரையில் விழுந்து நொருகியது அடுத்தது கடலல் வீழ்ந்து முழ்கிப்போனது தரையில் விழுந்தது போராளிகள் பெருந்திரளான மக்கள் பார்வையிட்டார்கள், யாழ்பாணத்தைக்கைப்பற்றுவதற்காக பாரிய நடவடிக்கையை ஆரம்பித்தது சந்திரிகா ஆசாங்கம் அதனால் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய தேவை தேசியத்தலைவருக்கு ஏற்பட்டது, அதனால் தளபதி சொர்ணம் அவர்களைத் தலைவர் ஜேயோசி கட்டமைபு என ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி அதில் அனைத்து மாவட்டப் போராளிகளையும் இணைத்து அக் கட்டமைப்புக்குப்போறுப்பாக தளபதி சொர்ணம் அவர்களை தலைவர் நியமணித்தார்,
அன்றில் இருந்து தலைவரின் பாதுகாப்புப் பொறுபாளராகவும் தலைவரின் நேரடிக் கண்ணிப்பில் இயங்கும் படையணியான இம்ரான் பாண்டியன் படையணிக்கும் பிரிகேடியர் கடாபி அவர்கள் தலைவரால் நியமணிக்கப்பட்டார்1995/4 ம் மாதம் சாவகச்சேரியல் உள்ள சம்புத் தோட்டம் பயிற்ச்சி முகாமில் மாத்தையா அவர்களின் ஆட்களை போராளிகளிற்கு காட்டிக்கொண்டுயிருந்தவேளை அதாவது மாத்தையா அவர்களாடு சேர்ந்து தலைவரைக்கொலை செய்து விட்டு அத் தலைமைப்பொறுப்பை தான் எடுப்பதற்காக மாத்தையா அவர்கள் போட்ட துரோக வலையில் சிக்கிய 95 முகாம்பொறுப்பாளர் சதிஸ்சன்01 தலைவரின்வாகன ரறைவர் சின்னமணி02 தலைவரின் மோபையில் செற்காரன் முருகன்03 மினி மினி LMG சந்தோஸ்04 படையணியைச் சேர்ந்த கெங்கா05 சுசிலன் 06 செங்கமலம்07 என மொத்தம் 12 பேரைக்கொண்டு எமது படையணிப்போராளிகள் முன் நிலையில் காட்டப்பட்டது,
அவர்கள் விட்ட பிளைகளை போராளிகளிற்கு விளக்கப் படுத்திக்கொண்டுயிருந்தார்கள், அதில் போராளி நவா காரசாரமாக அவர்களிடம் பல கேழ்விகளைக் கேட்டான், அதற்குச் சொர்ணம் அண்ணை துரோகியாக மாறியவனிடம் எந்தக் கேழ்வி கேட்டாலும் அவனிடம் விடை இருக்காது என நவா அவர்களிடம் சொன்னார்,
இது நடந்துகொண்டு இருக்கையில்கிடும்தகவல் ஒன்று வந்தது அண்ணெஇளவரசன் அண்ணையை யாரோ சுட்டுப் பொட்டு ஓடி விட்டார்கள். என மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயது மதிக்கத்தக்க போராளி வந்து சொர்ணம் அண்ணையிடம் சொன்னான்,
இந்த முகாம் பற்றி பார்ப்போமானால் தளபதி கிட்டு அவர்கள் வரப்போகின்றார் என்ற செய்தி வந்தவுடன் தலைவர் சாவகச்சேரிப்பகுதியில் ஒரு அழகான வீட்டை கிட்டு அண்ணைக்காக எடுத்து கப்டன் இளவரசன் தலைமையில் ஐந்து போராளிகளை அவ்விட்டைப் பாதுகாற்பதற்காக அங்கே விட்டு இருந்தார், ஆனால் பெரிய எதிர்பார்ப்போடு இருந்தபோது தளபதி கிட்டு வீரச்சாவு அடந்து விட்டார், ஆனால் அவ் முகாம் இளவரசன் தலைமையல் இயங்கிக்கொண்டுயிருந்தது, அங்கு இருந்துதான் இந்தத்துயிரமான செய்தி வந்தது,
அவன் வந்துசொன்னதும் சொர்ணம் அண்ணை பதட்டம் அடையவில்லை. உதவிக்கு வரச்சொல்லி எவரையும் கேட்கவும் இல்லை, ஒன்று கூடலை நடத்துங்கோ என்று சொல்லி விட்டு தனியாக அந்தப் போராளியைக் கூட்டிக்கொண்டுபோய் அவரின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்,அங்கே சொர்ணம் அண்ணைபோய் பார்த்த போது கட்டன்இளவரசன் மட்டு மாவட்டம் என்பவர்தலையில் வெடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததாகவும், இவனிடம் கேட்டபோது சுட்டு விட்டு ஆயுதத்தையும் யாரோ எடுத்துச் சென்றதாகச்சொர்ணம்அண்ணையிடம் சொல்லியுள்ளான்.
நீதாண்டா சுட்டனி என்று கன்னத்தை பொத்தி இரண்டு அறை போட்டாராம் சொர்ணம் அண்ணை அடி வேண்டிய பயத்தில் அவன் வாழைமரத்தடியில் இளவரசனின் றைவுளை தாட்டுவைத்துவிடு அதற்கு மேலே தண்ணீர் அள்ளி ஊத்தி இருந்தானாம், ஏன் இப்படி செய்தனி என்று கேட்க அந்தப்பாதையில் பெண்போராளிகள் போவதாகவும் தான் அவர்களிற்கு கிண்டல் செய்ய இளவரசன் இதைக்கண்டதும் தனக்குப் தண்டனை தந்ததாகச் சொர்ணம் அண்ணையிடம் சொல்லியுள்ளான், 1995 / 4ம் மாதம் அதே சம்பபுத்தோட்டப்பயிற்சி முகாமில் மாட்டு மண்டியில் ரையர்றும் விறகுறுகளும்கொண்டு வந்து பறிக்கப்பட்டது.
பின் சொர்ணம் அண்ணை அவனைக்கொண்டு வந்தார் அடுத்து படையணிப்போராளிகள் முன் நிலையில் அவன் செய்த தவறுகளை தெரியப்படுத்தினான், சொர்ணம் அண்ணை திருமணம் செய்த காரணத்தால் அவரைச்சுட நாவாவிடவில்லை, நாவாவே தனது கைத்துப்பாக்கியால் சுட்டு அவனுக்குச் சாசொறுப்பு வழங்கப்பட்டது
28.07.1995 18 தொடக்கம் 20 வரையான இளைஞர் யுவதிகளை அனைத்து மாவட்டங்களிலும் இருந்து எடுத்து தலைவர் சிறுத்தைப் படையணி உருவாக்கினார் எனவும் அதற்குப் பொறுப்பாக ராஜீவ் அண்ணையும் பயிற்சி ஆசிரியராக செல்லக்கிளியும் இருந்தார்கள் என முன்னர் குறிப்பிட்டுயிந்தேன் அவர்கட்டு என்ன நடந்தது என்று இப்பொழுது பார்ப்போம்,
மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டம் இட்டார்கள், அதற்கான மாதிரிப் பயிற்சிகளும் நிறைவிற்கு வந்தது, ஆனால் இதன் வேவு நடவடிக்கையில் துணைப்படையினரையும் இணைத்துக்கொண்டார்கள் இந்தத் துணைப்படை வீரன் எந்தப் பக்கத்தால் இராணுவத்தை தாக்கவருவருவார்கள் விடுதலைப் புலிகள் என்ற தவலை இராணுவ அதிகாரிகளிற்குத்தெரியப்படுத்தி விட்டான், அதனால் இராணுவமும் எதிர்பார்த்துக்கொண்டுயிருந்தது,
அச்சண்டைக்காகன கட்டளைத்தளபதி சொர்ணம் அவர்களும் பெண் போராளிகளின் நேரடி கட்டளை அதிகாரியாக லெப் கேணல் கோமளா அவர்களும் நியமணிக்கப்பட்டனர் கொமாண்டோ பயிற்சி எடுத்த 200 றிற்கு மேற்பட்ட போராளிகளே உள்ளே இறங்கி கேம்பைப்பிடிப்பது என திட்டம் தீட்டப்பட்டது 28.07.1995 அன்று இரவு தளபதி சொர்ணம் கட்டளை வழங்க லெப் கேணல் கோமழா தனது பெண் போராளிகளைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே நுளைந்தார், எதிர்பார்த்துக்கொண்டுயிருந்த லெப்ரினன் ஜெனரல் ஐனகப்பிரரா தலைமையிலான இராணுவ வீரர்கள் செறிவான சூட்டை வழங்கிக்கொண்டுயிருந்தார்கள், உள்ளே நுளையும் போதே கேணல் கோமளா உட்பட 180 கோமாண்டோ பயிற்சி எடுத்த பெண் போராளிராளிகள் கொல்லப்பட்டனர்,
. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.
தொடர்ந்து வீரச்சாவு அடைந்த பெண்போராளிகளின் பெண் உறுப்புக்களில் பெரிய பெரிய கட்டைகள் இறுக்கி செத்தவர் என்றும் ஒரு மனித இரக்கம்அல்லாமல் அவர்களின் உடல்கள் கத்திகளால் வெட்டி துண்டு துண்டாகக் கொடுமைப்படுத்திபின்னர் ICRC ஊடா 180 போராளிகளின் உடல்களும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது, பின்னர் இவ்வித்துடல்கள் இராணுவமரியாதையுடன் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டது, அடுத்து காட்டிக்கொடுத்ததுனைப்படை வீரனைபிடித்து விசாரனை முடிந்தபின் அவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது, இத்துடன் பெண் கொமாண்டோ அணியின் செயல்பாடு நிறைவிற்கு வந்தது இதில் எஞ்சியிருந்த சில குறிப்பட பெண் போராளிகளிற்கு போராளி ஆரவி பொறுப்பாகயிருந்தார்,
30/10/1995 விடுதலைப்புலிகளின் கோட்டையாகயிருந்த வலிகாமம் இடம் பெயர்வு அன்றுநடந்தது
உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்தித்திராத பாரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்தார்கள். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இதற்கு காரணமாக இருந்தது தான் அன்றைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் ‘சூரியக் கதிர்’ ராணுவ நடவடிக்கை. இந்த சூரியக்கதிர் நடவடிக்கை 1995 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை முறியடிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தளபதி சொர்ணம் தலைமையில் இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தினார்கள், ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தன, அதனால் பின்வாங்குவதைத்தவிர விடுதலைப்புலிகளிற்கு வேறுவளியிருக்கவில்லை,
அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.
காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான்.

ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.
8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.
யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி. இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று. அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது.
இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று. தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.
24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.
காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும். அதே வலி இன்று ….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக