உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 20 ஏப்ரல், 2022

mother a 218 34வது ஆண்டு தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு நிகழ்வும் குயின்ஸ்லா...

பிரிஷ்பனில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் - 2022
தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நிகழ்வும் 34வது ஆண்டு தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு நிகழ்வும் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Woodrige என்ற இடத்தில் 19/04/2022 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. நினைவு நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக பொதுச் சுடரை திரு.பிரபா அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியாத் தேசியக்கொடியை திரு.பார்த்தீபன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் பழங்குடி மக்களின் தேசியக்கொடியை திரு.அனுசன் அவர்கள் ஏற்றி வைத்தார். இறுதியாகத் தமிழீழத் தேசியக்கொடியை திரு.மோகன்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் இந்தியா இலங்கை இராணுவத்திற்கு எதிராகப் போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும், அதன்பால் கொல்லப்பட்ட எமது மக்களிற்கும், இதே நாள் தனது உயிரை அர்ப்பணித்த அன்னை பூபதி அவர்கட்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் மண்டபம் உள்ளே நடைபெற்றது. அதில் அன்னை பூபதி அவர்களின் பிரதான ஈகைச்சுடரை திருமதி. செளமியா அவர்கள் ஏற்றி வைத்தார். அன்னை பூபதி அவர்களின் பிரதான மலர் மாலையை திரு.முரளிதரன் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினார்கள். அன்னை பூபதி அவர்களின் சிறப்பு உரையை திருமதி.செளமியா அவர்கள் ஆற்றினார். அன்னை பூபதி அவர்களின் வரலாறு பற்றி சகோதரர்களான செல்வி.டக்க்ஷிகா செல்வன். ரதுஜன் ஆகியோர் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நினைவுப்பகிர்வு ஒன்றை வழங்கினர். இரவு 8.30 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவிற்குவந்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...