உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

mother a 230 மேஜர் யாழினி

முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி

நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி

எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம். அதுதான் அவளைக் கரும்புலியாச் சாதிக்கவைத்ததோ.

யாழினியின் அக்கா 2ம்.லெப் தர்சினி இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது வீரச்சாவடைய, அக்காவின் பாதையில் தானும் போகவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த யாழினி, போராட்டத்தோடு தானும் இணைந்து கொண்டாள்.

மணலாற்றில் அரசபடைகளின் கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடிக்க நாம் அமைத்த சண்டைக்களம் இவளது முதற்களம். அந்தச் சண்டையின்போது அவள் மணலாற்றுக் காட்டிலே நின்றாள். ஆரம்பப்பயிற்சி ஆரம்பித்து ஏழு நாட்கள்தான் முடிவுற்ற நிலையில் இவர்களுக்கு காவும் குழுவேலை கொடுக்கப்பட்டது. இறுதிநேரச் சண்டை எதிர்பார்த்ததைவிட அமர்க்களமாக நடந்ததால் அதுவே இவளுக்கு பெரிய அனுபவமாக இருந்தது.

மணலாற்றிலிருந்து புகைப்படப்பிரிவிற்குவந்து, புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த போதுதான் கரும்புலியாகப் போகவேண்டும் என்பதே அவளின் மூச்சாகிப்போனது. அங்கிருந்தபடியே மாதத்திற்கு குறைந்தது ஒருதடவையாவது தலைவருக்குக் கடிதம் எழுதுவாள். அதன்படி அவள் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டு, வேவுப்பயிற்சி அளிக்கப்பட்டு, வேவுகளில் ஈடுபட்டாள்.

ஒருமுறை இயக்கச்சிப்பகுதியில் வேவு எடுக்கச்சென்ற சமயத்தில் நாரிப்பகுதியில் அவளுக்குப் பலமான காயம். அந்தக் காயத்தினால் சிறிதுகாலம் நாரிப்பகுதியில் உணர்வின்றி இருந்தாள். அந்த நாட்களிலும் கரும்புலியாகப்போய் சாதிக்கவேண்டும் என்ற உறுதிமட்டும் குலையவில்லை.

அந்தச்சம்பவம் எங்களுக்குள் இன்னும் அவளது ஆற்றலை, செய்துமுடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பதியவைத்த சம்பவமாகும். சூரியக்கதிர் – 1 இராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம். அது ஒரு நிலவுநாள். வலிகாமம் மேற்கில் ஒருபகுதியில் வேவு எடுத்துவரவேண்டும். எல்லோரும் போய் சிக்கல்பட்டு திரும்பிக்கொண்டிருந்த நேரம்.

“நான் போய் எடுத்துவாறன்” என்று உறுதியளித்தபடி யாழினி போனாள். சொன்னபடியே பகல்போல நிலவு எறிந்த அந்த இரவில் மின்சார வெளிச்சங்களும், தேடொழியும் சேர்ந்து இரவைப்பகலாக்க, மண் அணைதாண்டி உட்சென்று அவள் எடுத்துவந்த வேவு அவள்மீது எல்லோருக்கும் அசையாத நம்பிக்கையைக் கொடுத்தது.

அவளது கடைசி நாட்களில் அவள் இலக்குக்குப் போகின்ற கடைசி நேரம்வரை அவளுக்குக் காய்ச்சல். இலக்குக்கான மாதிரிப் பயிற்சியையும் காய்ச்சலுடன்தான் செய்து முடித்தாள். விரைவாகத் தனக்குக் கிடைத்த சர்ந்தப்பம் நழுவிப்போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் தனது இயலாமையைக்கூட வெளிப்படுத்தாது இரவிரவாக கடுமையான மாதிரிப் பயிற்சிகளைச் செய்து முடித்த பின்பே தனது இலக்குக்குச் சென்றாள்.

“தற்செயலாய் இலக்கை அடையமுதல் அங்கே காயப்பட்டால் கூட, குறோஸ் இழுத்தாவது இலக்குக்குப் போவன்”

அதுதான் யாழினி சொல்லிவிட்டுச் சென்ற கடைசி வார்த்தை. அவளது இலக்கு தான் மடிகின்ற இடம் தனது சொந்த ஊர்தான் என்பதில் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவளின் இலக்குக்கான நீண்டநேர நடைப்பயணத்தின் இறுதியாக அவளது உறவினர் வீட்டுக்கு அண்மையாகச் சென்றுகொண்டிருந்த நேரம் என்ன நினைத்தாளோ?

BT-Maj-Yalini

“ஒரு நிமிடம்”

என ஓடிச்சென்று தனது ஜீன்ஸ் பொக்கற்றினுள் வைத்திருந்த கடிதத்தை எடுத்து, வெறிச்சோடிப் போயிருந்த தனது வீட்டுக்குள் புகுந்தாள். சில நாட்களாகக் கிழிக்கப்படாதிருந்த நாட்காட்டியினுள் வீட்டினருக்கான தனது இறுதிக் கடிதத்தை வைத்த கடைசி நிமிடத்தில், கூடச் சென்றவர்களின் விழிகள் ஈரத்தில் பளிச்சிட்டன.

அடுத்தநாள் வீடு பார்க்கச் சென்ற உறவினர்கள், கடிதத்தை எடுத்து அவளது தாயிடம் கொடுத்தார்களாம். கரைந்து போகின்ற அந்த இறுதி நிமிடங்களில் அவசரத்தில் கிறுக்கிச்சென்ற அவளது வார்த்தைகளில் அவனைத் தேடித்தேடி அவளது 

வியாழன், 28 ஏப்ரல், 2022

mother a229 தமிழருக்கு தற்காலிக நிவாரணம்

தட்சிணாமூர்த்தி காத்தையா: நாளை தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மலேசிய தமிழர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் எதிர்ப்பைத் தூண்டியது. இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த வழக்கறிஞர் எம்.ரவி, மே 20ஆம் தேதி தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதால், அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார். சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் 13 கைதிகள் தொடர்பான ஒரு சிவில் வழக்கின் அங்கமாக தட்சிணாமூர்த்தியின் வழக்கும் உள்ளது. அந்த கைதிகள் தங்களுடைய பார்வைக்கு காட்டப்படாமல் தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கடிதப் பரிவர்த்தனையை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களுக்கான வழக்கு விசாரணைக்காக சிறைக்கு வெளியே மனித உரிமைகள் ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான் குரல் கொடுத்து வருகிறார்.
அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு பயந்து எந்த வழக்கறிஞரும் வழக்கை எடுக்க விரும்பாததால், தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ரவியும் ஹானும் தெரிவித்தனர். தட்சிணாமூர்த்திக்காக ஏன் தற்போது ஆஜராகவில்லை என்று கேட்டதற்கு, "மரண தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளை கடைசி கட்டத்தில் கையில் எடுக்கும் வழக்கறிஞர்கள், அந்த வழக்கில் தோற்றால் நீதிமன்ற நடைமுறைகளை தவறாகப் பேசும் போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அடிக்கடி ஆளாவதுண்டு. அத்தகைய வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கோரும் வழக்குச் செலவினத்தொகையை கட்டவும் நேரிடும்," என்று வழக்கறிஞர் ரவியும் கிர்ஸ்டன் ஹானும் தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டப்பட்டார். சக மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முன்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்தார். போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழையும்போதே தெளிவுபடுத்தப்படும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறுகிறது. யார் இந்த தட்சிணாமூர்த்தி, இவருக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் யார்? மலேசிய தமிழர் சிங்கப்பூர் தூக்கு பட மூலாதாரம்,REUTERS மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 36 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் ஏப்ரல் 27 (புதன்கிழமை) தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் ஒரு மலேசியர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பது மலேசியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த மலேசியர் இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையில் தட்சிணாமூர்த்தி சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் தமக்குத் தாமே அவர் வாதாடினார். காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்றார் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என்பதே அவரது வாதம். 45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளியான நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார் மலேசிய இளைஞருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம் - முழு விவரம் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தியும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர். இருவரும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர். விசாரணையின்போது, தமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஆதரிக்க தமக்கு பணம் தேவைப்பட்டதாகவும், ஒரு சிலரால் தாம் தட்சிணாமூர்த்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கிறிஸ்டின் ஜெயமணி தெரிவித்தார். கம்பி பட மூலாதாரம்,GETTY IMAGES "தட்சிணாமூர்த்தி என்னிடம் ஒரு பையைக் கொடுப்பார். அதில் சில பாக்கெட்டுகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்கச் சொல்வார். அந்த பாக்கெட்டுகள் செய்தித்தாள்களாலும் கனமான டேப்புகளாலும் சுற்றப்பட்டிருக்கும். மேலும் கனமாகவும் இருக்கும். "எனவே, அவற்றில் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் எனக் கருதினேன். வேலை முடிந்ததும் அவர் எனக்கு 200 சிங்கப்பூர் டாலர்கள் (630 மலேசிய ரிங்கிட்) தருவார். தட்சிணாமூர்த்தி அளித்த பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருப்பதோ, அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பதோ எனக்குத் தெரியாது," என்று கிறிஸ்டின் ஜெயமணி கூறியிருந்தார். இதேபோல் தட்சிணாமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், தாம் போதைப் பொருள் கடத்துவது தமக்கு அறவே தெரியாது என்றும், சீன மருத்துவத்துக்கான மருந்துகளை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாகவே தாம் கருதியதாகவும் குறிப்பிட்டார். "மலேசிய, சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தாம் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சீன மருந்துகளை ராஜா என்பவர் தம்மிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். "ஒருமுறை ஆர்வத்தின் பெயரில், நான் கொண்டு செல்வது என்ன என்று ராஜாவிடம் கேட்டேன். அதற்கு, அபாயகரமான மருந்துகள் ஏதுமில்லை என்று அவர் கூறினார். அதன் பின்னர், உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியே தெரியும்படி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாக்கெட்டில் பிரவுன் (brown) நிறத்தில் ஏதோ இருப்பது தெரிந்தது. எனவே, அது சீன மருந்தாகத்தான் இருக்கும் என்று கருதினேன். போராட்டங்களால் பலவீனமாகிறதா இலங்கை சுற்றுலாத் துறை? கள நிலவரம் என்ன? "சிங்கள, முஸ்லிம் மக்களை இப்போதுதான் புரிந்து கொள்கிறோம்" - இலங்கையில் ஒரு போராட்டக் குரல் "சந்தேகம் ஏதும் எழாததால், நான் மேலதிக விவரங்கள் எதையும் கேட்கவில்லை. ராஜாவுக்கும் கிறிஸ்டினுக்கும் இடையே தகவல் தொடர்பாளராகவும் நான் மாறிப்போனேன்," என்று தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் வாக்குமூலம் அளித்திருந்தார். சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயல்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது. இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது. கடந்த 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தியும் கிறிஸ்டினும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், கிறிஸ்டின் வெறும் தபால் சேவையைப் போல் செயல்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார். அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. அவர் சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானது. நேற்று தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம் பட மூலாதாரம்,SHARMILA படக்குறிப்பு, நேற்று தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட இருந்தார். எனினும், அதை ஒத்திவைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தகவல் அனுப்பியது. சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள ஒரு மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு இருக்கையில் அவரை எவ்வாறு தூக்கிலிட முடியும் என்றும் மலேசியாவைச் சேர்ந்த Lawyers for Liberty (LFL) என்ற அமைப்பின் ஆலோசகர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மே 20ஆம் தேதி, தட்சிணாமூர்த்தி மனு மீதான விசாரணை நிறைவேற உள்ளதாகவும், அவருக்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் சுரேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார். தட்சிணாமூர்த்தியால் தமக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரையும் நியமிக்க முடியவில்லை. அவருக்குப் போதுமான வசதியில்லாத நிலையில், சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்களும் அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக விரும்பவில்லை என்கிறார் லாயர்ஸ் ஃபார் லிபெர்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸைட் மாலெக். "போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடினால், சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல், நீதிமன்றங்களால் பழிவாங்கப்படுவோம் என்று சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான் தட்சிணாமூர்த்தி இன்று தமக்குத்தாமே வாதாட வேண்டிய நிலையில் உள்ளார்," என்று ஸைட் மாலெக் கூறியுள்ளார். நேற்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
இவர் அறிவுசார் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும் இவரின் மரண தண்டைனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 27 ஏப்ரல், 2022

mother a 228 புலம்பெயர் தமிழர்கள் ஸ்ரீலங்காவை மீட்பது சாத்தியமா?

சிறிலங்காவை மீட்கும் புலம்பெயர் தமிழர்கள் : மகாவம்ச மனப்பாங்கு மாற்றம்?
இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களிடையே மகாவம்ச மனப்பாங்கு மாற்றம்பெற வேண்டும் எனவும், தென்னிலங்கையில் வெடித்துள்ள போராட்ட விவகாரத்தில் தமிழர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, 60 வீதமான தமிழர்கள் வெளிநாட்டு தொடர்புகளுடன் வாழ்வதால், இலங்கை அவர்களை தங்கியிருக்கும் சூழலில் உள்ளதாக அவர் கூறுகிறார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்கள் காணொளி வடிவில்,

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

mother a 227 பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு

பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? எண்ணெயில்
இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வரும் 28 ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் அதன் மூலப்பொருளான பாமோலின் ஏற்றுமதியை தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் நாட்டில் பாமாயில் உற்பத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் 'மலிவாகவும் ஏராளமாகவும்' பாமாயில் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதே தனது நோக்கம் என்று அதிபர் ஜோகோ விடோடோ கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். பாமாயில் ஏற்றுமதிக்கான தடை அடுத்த முடிவு வரும்வரை அமலில் இருக்கும். விளம்பரம் நாட்டில் பற்றாக்குறை இந்தோனீசியாவில் பனை மரங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பாமாயில் அதன் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதில் இருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது தவிர, டிடெர்ஜெண்ட், ஷாம்பு, பற்பசை முதல் சாக்லேட், டோனட் மற்றும் உதட்டுச்சாயம் வரை பல பொருட்களின் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் இது உயிரி எரிபொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாமாயில் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தோனீசியா உள்ளது. ஆனால் தற்போது உள்ளுர் மட்டத்தில் அதன் பற்றாக்குறையை நாடு சந்தித்து வருகிறது. ஏற்றுமதியை குறைத்த இந்தோனீசியா இந்த ஆண்டு ஜனவரி இறுதியில், இந்தோனீசியா பாமாயில் ஏற்றுமதியை குறைத்தது. மார்ச் மாதம் இதற்கான தடை நீக்கப்பட்டது, ஆனால் அதற்குள் சர்வதேச சந்தையில் பாமாயில் விலை கிடுகிடுவென உயர்ந்தது என்று நாஸ்டாக் பங்குச் சந்தையின் இணையதளம் தெரிவிக்கிறது. ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு உணவுப் பற்றாக்குறையின் சூழ்நிலையைத் தவிர்க்க பல நாடுகள் தங்கள் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று ப்ளூம்பெர்க்கில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தோனீசியாவின் இந்த முடிவு இந்த திசையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இந்தோனீசியாவின் முடிவால் பரவலாக கவலைகளும் அதிகரித்துள்ளன என்று இந்த வாரம் சேனல் நியூஸ் ஏசியாவில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. பாமாயில் பழம்
அதே நேரம் சர்வதேச சந்தையில் சோயாபீன் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் யுக்ரேன் முதலிடத்தில் இருப்பதாகவும், ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக இங்கிருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. ரஷ்யா - யுக்ரேன் போரால் ஏற்பட்ட பாதிப்பு உலகின் தேவையின் 76 சதவிகித சூரியகாந்தி எண்ணெய் கருங்கடல் வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆனால் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் இந்த வர்த்தகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சோயாபீன் மற்றும் பாமாயில் மீது மக்களின் நம்பிக்கை இருந்தது. சோயாபீன் எண்ணெய் சமையலறை உபயோகத்தில் பாமாயிலுக்கு ஒரு நல்ல மாற்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் ஏற்றுமதியாளரான அர்ஜென்டீனா, சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதிக்கான பதிவை மூடுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையின் மூலம், 2021-22 ஆம் ஆண்டில் பயிரிடப்பட்ட பயிரின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. திரவ உணவு முறை என்றால் என்ன? அது பாதுகாப்பானதா? தமிழக அரசின் சிறந்த விவசாயி ஆக வேண்டுமா? இதோ அந்த வழிமுறைகள் அர்ஜென்டீனா சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதிக்கு 31 சதவிகித வரி விதிக்கிறது. இந்த ஆண்டு, அதாவது 2021-22ல் வறட்சி நிலவினாலும், நாட்டில் சோயாபீன் உற்பத்தி 4 கோடியில் இருந்து 42 கோடி டன்களாக அதிகரித்துள்ளது என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஒரு செய்தியை வெளியிட்டது. அரசின் முடிவிற்குப் பிறகு, அர்ஜென்டீனாவில் உள்ள சப்ளையர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், இது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறுகிறார்கள். இதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும், அந்நிய செலாவணி தேவை பூர்த்தியாகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதற்கான மாற்று வழியை தேடி அமெரிக்கா அல்லது பிரேசிலை நோக்கித் திரும்பலாம். அதிகரிக்கும் விலைவாசி உலகம் முழுவதும் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை எல்லா நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. போரின் தாக்கம் நாட்டின் வர்த்தகத்தின் மீது ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் வர்த்தகம் தொடர வேண்டும் என்றும் ஐநா கூறியுள்ளது. கோவிட் தொற்றுநோயால் ஏற்கனவே விநியோகச் சங்கிலி சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நாடுகள், ரஷ்ய-யுக்ரேன் போருடன் கூடவே அர்ஜெண்டீனா மற்றும் இந்தோனீசியாவின் முடிவுகளால் பெரிய தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று பல ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இந்த ஆண்டு ஜனவரியில், இந்தோனீசியா நாட்டுக்குள் பாமாயில் விற்பனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. நாட்டிற்குள் கச்சா பாமாயிலின் ஒரு குறிப்பிட்ட அளவை, கிலோவுக்கு அதிகபட்சமாக 9,300 இந்தோனீசிய ரூபாய்க்கு விற்பனை செய்வதை அரசு கட்டாயமாக்கியது. நாட்டிற்குள் சமையல் எண்ணெயின் விலை உயரத் தொடங்கியுள்ளது என்று நிக்கி ஏஷியா கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவிகிதம் அதிகம். இதற்குப் பிறகு, நாட்டின் வர்த்தக அமைச்சர் முகமது லுஃப்டி, எல்லா சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களும் தங்கள் ஏற்றுமதியின் 20 சதவிகிதத்தை உள்நாட்டு சந்தையில் விற்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார். பாமாயில் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் என்ன பாதிப்பு ஏற்படும் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதில் 63 சதவிகிதம் அதாவது 8.5 லட்சம் டன் பாமாயில் ஆகும். அதன் பெரும்பகுதி இந்தோனீசியாவிலிருந்து வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் மலேஷியா மற்றும் தாய்லாந்தும் குறைந்த அளவு பாமாயிலை இந்தியாவிற்கு விற்கின்றன என்று பிசினஸ் ஸ்டாண்டர்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. BL Agro நிறுவனம், இந்தோனீசியா மற்றும் மலேஷியாவிலிருந்து இந்தியாவிற்கு பாமாயிலை இறக்குமதி செய்கிறது. "இந்தியாவின் மொத்த எண்ணெய் தேவையின் 65 சதவிகிதத்தை இந்திய அரசு இறக்குமதி செய்கிறது. 35 சதவிகிம் உள்நாட்டிலேயே உற்பத்தி ஆகிறது. இந்த 65 சதவிகித எண்ணெயில் 60 சதவிகிதம் பாமாயில் ஆகும். பிற எண்ணெய்களுடன் இது கலக்கப்படுகிறது," என்று பிபிசியிடம் பிஎல் ஆக்ரோ நிறுவனத்தின் தலைவர் கன்ஷ்யாம் கண்டேல்வால் தெரிவித்தார். பாமாயில் இறக்குமதிக்காக மத்திய அரசு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்தோனீசியாவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளை பாதிக்கலாம், ஆனால் இது இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும் என்று இந்திய சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டெர்ஸ் சங்கத்தின் தலைமை இயக்குனர் பிவி மேத்தா பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளேட்டிடம் தெரிவித்தார். இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா தனது ராஜீய வழிகளை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கருதுகிறார். இந்திய நுகர்வோர், வரவிருக்கும் கடினமான காலத்திற்கு தயாராக வேண்டும் என்று தி இந்து பிசினஸ்லைனில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இந்திய சந்தை, ரமலான் மற்றும் திருமண சீசனால் ஏற்கெனவே விலையேற்றத்தை சந்தித்து வருவதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தோனீசியாவின் நடவடிக்கைக்குப் பிறகு, அங்கு சமையல் எண்ணெய் விலை குறையும். ஆனால் இந்தியாவில் அதன் விலை விண்ணைத் தொடலாம்.

திங்கள், 25 ஏப்ரல், 2022

mother a 226 அனைத்தையும் மூட வேண்டி ஏற்படும்! ரணில்

எதிர்வரும் மாதங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூட வேண்டி ஏற்படும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்து விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மேலும் காலம் தாழ்த்த முடியாது, நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த தீர்வினைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட அறிவித்தலொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார். இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

"mother a 225 சூசையின் மனைவி நடுக்கடலில் நடந்த நாடகத்தை நினைவு கூருகிறார்

தலைவர் பிரபாகரனும், கடற்புலி தளபதி சூசையும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டவர்கள் – சூசையின் மனைவி

இலங்கைக் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற கடற்புலிகளின் தளபதி சூசையின் துணைவி த நேசன் என்னும் ஆங்கில வார இதழுக்கு பேட்டி ஒன்றை வழங்கி இருந்தார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் “த நேசன்” என்கிற ஆங்கில வார இதழுக்காக சாமரா லக்ஷன் குமார, சூசையின் துணைவி சத்யதேவி அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் சத்யதேவி தனது சில அனுபவங்களை பதில்களாக நினைவு கூர்ந்திருந்தார்.


சூசையின் மனைவி நடுக்கடலில் நடந்த நாடகத்தை நினைவு கூருகிறார்
-சாமரா லக்ஷன் குமார-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருமுறை அடுத்த ஈழப்போர் நடுக்கடலில்தான் நடைபெறும் என ஒருமுறை மிகைப்படுத்தி பேசியிருந்தார். அவரது அந்த மிகைப்படுத்தல் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது, கடற்புலிகள் என்றழைக்கப்படும் போராளிகள் தங்களிடமுள்ள பல்வேறு வகையான கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கடற்படையினருக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருந்ததே.

கடற்புலிகளின் தலைவர் சூசை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார், மற்றும் அவர் மனைவி சத்தியதேவி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சகிதம் ,தப்பிச் செல்வதற்காக அவரது கணவர் சூசை வழங்கிய படகு ஒன்றின் மூலம் நந்திக்கடல் பிரதேசத்தை விட்டு வெளியேற முயன்றார்.

சதியதேவி `த நேசன்` வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சவாலான அந்த நாட்களையும் மற்றும் பாதுகாப்புக் காவலில் உள்ள அவரது தற்போதைய வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறார்.

உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள்?
சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய என் சகோதரனின் ஒரு நண்பராவார். அந்த நேரத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். 1982ல் எல்.ரீ.ரீ.ஈ க்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் போராளி எனது அண்ணன். எனது அண்ணனின் மறைவுக்குப் பின்னரும் கூட சூசை எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. யாருக்காவும் அவர் தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவி புரிபவராகவும் மற்றும் அவசியப்படுபவர்களுக்கு உதவி புரிவதில் தயக்கம் காட்டாதவராகவும் இருந்தார். அவருடைய நல்ல பழக்கங்கள் என்னைக் கவர ஆரம்பித்தன. நான் அவரை விரும்பத் தொடங்கினேன், நாங்கள் நெருக்கமானவர்களாக மாறினோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து இருந்ததால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வடமராட்சி பகுதியின் உள்ளுர் தலைவராக இருந்தார். எனினும் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், மற்றும் அதன் பின் விரைவிலேயே அவர் கடற்புலிகளின் தலைவராக மாற்றம் பெற்றார்.

நீங்களும் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டிருந்தீர்களா?
இல்லை

சூசையை மணந்த பிறகும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா?
அதன் பிறகும் மாறவில்லை.

ஏன்?
அது அவசியம் என்று நான் கருதவில்லை சூசையும் என்னை எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்படி ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.

சூசை, எல்.ரீ.ரீ.ஈ விடயங்களைப்பற்றி வீட்டில் கதைப்பாரா?
அப்படியான விடயங்களை அவர் ஒருபோதும் விவாதிப்பதில்லை. நாங்கள் வீட்டில் எங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களைப் பற்றியே பேசுவோம்.

அவர் வீட்டுக்கு வந்ததும் எதைப்பற்றி கதைப்பார்?
அவருக்கு சிறிதளவு ஓய்வே கிடைக்கும். அவர் வீட்டுக்கு வருவது பிரதானமாக உறங்குவதற்காகவே.

உங்கள் வீடு எங்கே உள்ளது?
ஆரம்பத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம், ஆனால் இராணுவத்தினர் “ஒப்பரேசன் ரிவிரச” நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர், நாங்கள் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். நாங்கள் தேவபுரம், முல்லைவெளி, வள்ளிக்குளம் மற்றும் இறுதியாக 2007ல் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்தோம்.

சூசை ஒரு வலிமையான மனிதராக அறியப்பட்டிருந்த போதிலும், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததாக அநேகர் எழுதி அல்லது சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா?
அவர் தனது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தார். எங்கள் மகனின் முதலாவது பிறந்த நாளின்போது, எங்கள் மகனுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலின் வடிவத்திலிருந்த கேக் ஒன்றை கொண்டுவந்தார். அது நெல்லியடியில் இருந்த சுபாஷ் வெதுப்பகத்தில் அது தயாரிக்கப்பட்டது. அவரது கடமைகள் அவரது பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவருக்கு இடமளிப்பதில்லை, அதனால் அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை அவர் என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அவரின் அந்த பயணத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா?
இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் மேலதிக சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

சிங்கப்பூருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது?
அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரு தடவைகள் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

பிரபாகரனுக்கும் சூசைக்கும் இடையே உறவு எப்படியாக இருந்தது?
சூசை பிரபாகரன் மீது உயர்வான நம்பிக்கை வைத்திருந்தார், மற்றும் அதேபோல பிரபாகரனும் சூசைமீது உயர்வான நம்பிக்கையை வைத்திருந்தார்.

உங்களது குடும்பம் பிரபாகரனின் குடும்பத்தினரோடு எந்த வகையான உறவினைக் கொண்டிருந்தது?
எங்களது குழந்தைகள் பிறந்த நேரத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர் அனைவரும் எங்களிடம் வருகை தந்தனர், அதைத்தவிர வேறு வருகைகள் எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் புலிகளின் விழாக்களிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வோம். அப்போது நாங்கள் எங்களுக்கு அக்கறையுள்ள பல விடயங்களையும் பற்றிப் பேசிக் கொள்வோம். பிரபாகரன் மற்றும் மதிவதனி ஆகிய இருவருமே எப்படி எங்களின் குழந்தைகளின் படிப்பு விடயங்கள் முன்னேற்றகரமாக உள்ளனவா என வழக்கமாக எங்களிடம் விசாரிப்பதுண்டு.

உங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ யினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கி வந்தபோது நீங்கள் அச்சமடையத் தொடங்கினீர்களா?
ஏன் இல்லை. யார்தான் அச்சப்பட மாட்டார்கள்?

அப்போதுகூட எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுமாறு அவரிடம் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
நான் அவரிடம் கேட்டிருந்தால்கூட அவர் ஒருபோதும் எல்.ரீ.ரீ.ஈயை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். தனது சாவு, தான் எல்.ரீ.ரீ.ஈக்காக பணியாற்றும்போது வரக்கூடுமே தவிர வேறு வழியினால் அல்ல என்று அவர் வழக்கமாகச் சொல்வதுண்டு.

2007இல் உங்கள் மகன் சங்கர் இறந்தது மற்றும் சூசை கூட மிகவும் மோசமான காயங்களுக்கு உள்ளானது. இவை பற்றிய உங்கள் கருத்து?
எனக்கு அந்த திகதி நினைவில் உள்ளது. அது ஜூலை 18ந்திகதி. கிளிநொச்சியில் நடக்கும் ஒரு விழாவுக்காக நான் வாகனமொன்றில் செல்ல இருந்தேன். எங்களது இளையமகன் வாகனங்களில் பயணம் செய்வதில் அளவுகடந்த ஆசை உள்ளவனாக இருந்தான், அதேபோலவே அவன் கடலையும் விரும்பினான். ஆனால் சூசை ஒருபோதும் எங்களது மகனை கடலுக்கு கூட்டிப்போனது கிடையாது. அவர் அவரது மகனை கரையில் உள்ள படகு ஒன்றில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர் ஆழ்கடலுக்குச் செல்வார். சங்கர் படகிலிருந்து மற்றவர்களுடன் விளையாடுவான். இது நடந்த தினத்திலும் கூட இதையேதான் சூசை செய்தார், ஆனால் எப்படியோ அல்லது வேறுவிதமாகவோ அவர் தனது ஆட்களிடம் எனது மகன் இருந்த படகினையும் ஆழ்கடலுக்கு கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். அந்நேரத்தில் படகுகள் சில பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ படகுகளில் ஒன்று ,சூசையின் படகுடனும் மற்றும் எனது மகன் இருந்த படகுடனும் மோதியது. இந்த விபத்தில் நான் எனது மகனைப் பறிகொடுத்தேன்.

அது திட்டமிட்ட ஒரு விபத்து என்று நாங்கள் கேள்விப் பட்டோம்?
அப்படி ஒரு வதந்தி நிலவியது, ஆனால் அது ஒரு விபத்து என்றே நான் நம்புகிறேன்.

அந்த விபத்தில் சூசைக்கு என்ன நடந்தது?
அவரது வயிற்றில் மிக நீளமாக கிழிக்கப்பட்டிருந்த காயம் இருந்தபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, மற்றும் அது நடந்தபின் மூன்று வாரங்களாக அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.

பொட்டு அம்மான் அந்த படகு விபத்தை ஏற்பாடு செய்ததாக வதந்தி பரவியது, அதுகுறித்து எல்.ரீ.ரீ.ஈ கடும் மௌனம் சாதித்ததால் அந்த வதந்தி உண்மையோ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது?
அவர் அந்த விபத்தை ஏற்பாடு செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை.

பொட்டு அம்மான் அந்த விபத்து நடந்ததுக்குப் பிறகு உங்களுடன் பேசினாரா?
ஆம் அவர் என்னுடன் பேசினார். பொட்டு அம்மான் மட்டுமல்ல மற்ற எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் என்னுடன் பேசினார்கள். எல்லா எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் எனது மகனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டார்கள்.

காயங்கள் சுகமடைந்த பின்பு அந்த விபத்தைப்பற்றி சூசை ஏதாவது சொன்னாரா?
எமது மகனின் மறைவினால் அவர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்திருந்தார். அது அவருடன் நீண்டகாலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பலமுறை நான் அவரிடம் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளிலிருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கி இருக்கும்படியும் ஆனால் தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் எனது அறிவுரைகளைக் கேட்கவில்லை.

நீங்கள் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதுவித உதவியும் செய்வதில்லை எனச் சொல்லப்படுகிறதே. நீங்கள் வீட்டிலிருந்து என்ன செய்வீர்கள்?
நான் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதுடன் வீட்டில் அவர்கள் தேவைகளையும் பார்த்துக் கொள்வேன். எங்கள் தேவைகளுக்கு வேண்டிய உணவுப் பயிர்களை நானே பயிர் செய்து கொள்வேன். எனது குழந்தைகளுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் இணைந்து கொள்வேன்.

எல்.ரீ.ரீ.ஈ வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவிகளை வழங்காத போதிலும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் குடும்பங்களுக்கு வாகனங்களையும் பாதுகாப்பினையும் வழங்கியிருந்ததே?
எங்களுக்கும் ஒரு வானும் மற்றும் சாரதியுடன் கூடிய ஒரு முச்சக்கர வண்டியும் மற்றும் ஒரு பாதுகாப்பு கடமையாளரும் வழங்கப்பட்டிருந்தன.

வடக்குக்கு வெளியே அதாவது கொழும்பு போன்ற இடங்களில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன என்கிற தகவல்களை அறியக்கூடிய வழிகள் உங்களுக்கு இருந்தனவா?
நாங்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து அப்படியான விடயங்களை அறிந்து கொள்வோம். சிலவேளைகளில் சூசை வீட்டுக்கு வரும்போது தெற்கில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகை ஒன்றை வழக்கமாகக் கொண்டு வருவார்.

யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை எப்போது நீங்கள் அறிந்தீர்கள்?
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அச்சத்துடன்தான் வாழ்ந்து வந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியேறினால் எந்த வித மாற்றமுமில்லாமல் காயமடைவோம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். விடயம் அத்தகைய மோசமான நிலைக்கு வந்துவிட்டது.

இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் கிரிக்கட் போட்டிகள் நடந்த போது யாருக்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்கள்?
நாங்கள் இந்தியாவுக்கே ஆதரவு வழங்கினோம். நாங்கள் சச்சின் டெண்டுல்கரை மிகவும் விரும்பினோம்.

முரளீதரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முரளீதரனையும் நாங்கள் விரும்பினோம் ஆனால் டெண்டுல்கரை அதைவிட அதிகம் விரும்பினோம்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நீங்கள் புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற விரும்பினீர்கள். ஏன்?
நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பியது, மே 12ல். அந்த நேரத்தில் அதிக அளவிலான மக்கள் ஒரு சிறு பகுதி நிலப்பரப்பினுள் அடைபட்டுக் கிடந்தார்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு அது தெளிவான சான்றாக அப்போது தோன்றியது. நாங்கள் எங்கள் மகள் சிந்துமணியையும் மற்றும் மகன் கடலரசனையும் சூசையின் மூத்த சகோதரனின் மனைவி மற்றும் பிள்ளையுடன் ஒரு படகில் அந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் நான் மற்றவர்களை விட்டுச் செல்ல முடிவெடுக்கவில்லை, ஏனெனில் சூசை அப்படிச் செய்வதை விரும்பவில்லை. ஆனால் இறுதியாக நான் எனது பிள்ளைகளுடன் செல்வது என முடிவெடுத்தேன். சூசை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதிவரை தான் போராடப்போவதாக தெரிவித்த சூசை பின்னர் வெளியேறுவதற்காக எங்களுக்கு ஒரு படகினை வழங்கச் சம்மதித்தார்.

அந்தப் படகிலேறி எங்கே செல்ல விரும்பினீர்கள்?
எங்களுக்கு இரண்டு இலக்குகள் இருந்தன. ஒன்று முடியுமானால் இந்தியாவுக்கு தப்பிச் செல்வது ஆனால் இதன்போது நாங்கள் ஆழ்கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் கப்பல்களை எதிர்கொள்ள நேரிடும். கடற்படையினரிடம் பிடிபடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை, அனால் எங்கள் எண்ணமெல்லாம் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிலேயே இருந்தது. நாங்கள் மே 12ந்திகதி வெளியேற தீர்மானித்தாலும் உக்கிரமடைந்த யுத்த நிலமை எங்களை பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியிருக்க வைத்தது. எனவே கடைசியாக நாங்கள் மே 14ந்திகதியே வெளியேறினோம்.

மே 12ந்திகதி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நீங்கள் புதுக்குடியிருப்பில் வைத்து காணவில்லையா?
ஆம் அவர்கள் அங்கேதான் இருந்தார்கள், நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் வரை அவர்கள் அங்கே பத்திரமாக இருந்தார்கள்.

அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களுடன் பேசினீர்களா?
நான் அவர்களுடன் பேசவில்லை, ஆனால் சிலவேளைகளில் நாங்கள் வெளியேறுவதைப்பற்றி சூசை அவர்களிடம் சொல்லியிருக்கலாம்.

பிரபாகரன் அடைபட்டுக் கிடந்த மக்களுடன் இருந்தாரா அல்லது அவர்களிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு இருந்தாரா?
அந்த இறுதிக்கட்டத்தின்போது அவர்களுக்காக எந்த ஒரு தனியான இடமும் இருந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

அவரை விட்டுப் பிரியும் முன்பு சூசை என்ன சொன்னார்?
நான் கடைசியாக அவரைப் பார்த்தது, மே 12ல். ஆனால் மே 14ல் நாங்கள் அந்த இடத்தை வெளியேறும்போது நான் அவரைக் காணவில்லை . நாங்கள் அன்றுதான் வெளியேறுகிறோம் என்பதை அவர் அறியவில்லை, எங்களுக்கென்று தனியான பதுங்கு குழிகள் எதுவும் இருக்கவில்லை அதனால் நாங்கள் மற்றவர்களுடன் ஒரு பதுங்கு குழியினைப் பகிர்ந்து கொண்டோம்.

நீங்கள் வெளியேறுவதற்கு முன்னதாக சூசை எங்கேயிருக்கிறார் என்பதை அறிய நீங்கள் முயற்சி செய்யவில்லையா?
நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில் அதைச் செய்ய முடியவில்லை. யுத்தமானது அநேகமாக ஒரு கைப்பிடியினுள் அடங்கும் நிலையை எட்டியிருந்தது. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினரிடம் ,நாங்கள் வெளியேறுவதை சூசையிடம் தெரிவிக்கும்படி சொன்னோம். இரவு 9 மணியளவில் புறப்பட்டோம். நாங்கள் 12பேர்கள் அந்தப் படகில் இருந்தோம் ஆனால் படகு தாக்கப்படும்வரை எங்களால் சுமார் 4 நிமிடம் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது.

பின்னர் என்ன நடந்தது?
அதை இயக்கிக் கொண்டிருந்த நபரை அவர்கள் தாக்கியபோது அவர் குண்டடிபட்டு படகினுள் விழுந்தார். படகின் பல இடங்களிலும் துவாரம் ஏற்பட்டு அதனுள்ள நீர் வர ஆரம்பித்தது. நாங்கள் நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தபோது சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய கடற்படைப்படகு எங்களை அணுகியது. சிலர் கொட்டியா கொட்டியா என சத்தமிடுவதை நான் கேட்டேன் மற்றும் அவர்கள் எங்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ என நாங்கள் அஞ்சினோம். அந்த நிமிடத்தில் ஒரு பெரிய படகு உறுதியான வெளிச்சத்தை பாய்ச்சியபடி எங்களை நோக்கி வந்தது. சூசையின் சகோதரரின் மனைவி றூபனின் கைக்குழந்தையை உயர்த்திக் காட்டினார். சிறிய படகில் இருந்த மனிதர்கள் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் தமிழில் பேசினார்கள். “பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம்’’ என அவர்கள் சொன்னார்கள் .பிறகு அவர்கள் எங்களை அவர்களது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தார்கள்.

நீங்கள் சூசையின் மனைவி என்பதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா?
உடனடியாக இல்லை. எனது இரண்டு பிள்ளைகளையும் சூசையின் சகோதரரின் மனைவியுடையது என்று கூறினேன். எனது சொந்த விருப்பத்தின்படி தனிமையாக்கப்பட்ட நான், றூபனின் தூரத்து உறவினர் என அவர்களிடம் கூறினேன். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் கடற்படையினரிடம் அகப்பட நேர்ந்தால் இவ்வாறு பேசவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். எப்படியாயினும் சூசையின் சகோதரரின் மனைவி தனது காலிலுள்ள காயமொன்றுக்கு மருந்து போட என்னுடன் மருத்துவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முதலாவது சோதனைச் சாவடியை நாங்கள் கடந்தபோது கடற்படையினரிடம் சரணடைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி நான் சூசையின் மனைவி என்பதை சொல்லிவிட்டார். உடனடியாகவே பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக நான் மற்றவர்களிடமிருந்து வேறாக்கப் பட்டேன். நான் ஏன் எல்.ரீ.ரீ.ஈ பிரதேசத்தை விட்டு வெளியேறினேன் என்றும் நான் எங்கு போக எண்ணியிருந்தேன் என்றும் என்னிடம் வினாவினார்கள். கடற்படையினர் என்னை தடுக்காவிட்டால் நான் இந்தியாவுக்குச் செல்ல எண்ணியிருந்ததாக நான் அவர்களிடம் சொன்னேன். இந்தியாவை அடைந்ததும் அங்கிருந்து லண்டனில் உள்ள எனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருப்பேன் என கடற்படையினரிடம் தெரிவித்தேன்.

கடற்படையினர் சூசையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கவில்லையா?
எனக்கு சூசையின் தொலைபேசி இலக்கம் தெரியுமா என அவர்கள் என்னிடம் வினவியபோது எனக்குத் தெரியாது என அவர்களிடம் நான் கூறினேன். ஆனால் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

சூசை ஒரு தொலைபேசியை பயன்படுத்தியதில்லை என்றா சொல்கின்றீர்களா?
அவர் ஒன்றைப் பயன்படுத்தி வந்தார் ஆனால் மே 12ந்திகதி கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது அவரிடம் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை.

மே 12ந்திகதி எல்.ரீ.ரீ.ஈ யுத்தத்தில தோற்கடிக்கப்படும் என்பதை, சூசை அறிந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?
யுத்தத்தில் நாங்கள் வெல்வோமா அல்லது தோற்போமா என்பதை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு குறுகிய நேரச் சந்திப்பு. ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் எங்களை அவரிடம் கூட்டிச் சென்றபோது நாங்கள் அங்கே நிற்கிறோம் என்பதைக் காணமட்டுமே அவரால் முடிந்தது. அந்தச்சமயத்தில் இராணுவத்தினர் வெகு சமீபத்தில் வந்து விட்டதால் வெகுநேரம் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை.

கடற்படையினர் உங்களை அடையாளம் கண்டு கொண்டபின் என்ன நடந்தது?
எங்களை அவர்களது முகாமுக்கு கொண்டு சென்றார்கள். எங்கள் படகில் துவாரங்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டதால் படகினை இலகுவானதாக்க நாங்கள் எங்கள் பொதிகள் யாவற்றையும் தூக்கி எறிந்து விட்டோம் மற்றும் நாங்கள் அப்போது உடுத்திருந்த உடைகள் ம்ட்டுமே எங்களிடம் இருந்தது. கடற்படையினர் எங்களுக்கு உடைகளை வழங்கினார்கள்.

உங்களது தற்போதைய வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
நாங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதும், எனது பிள்ளைகளும் நானும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப் படுவோமோ என எண்ணி நான் ஆழமாக அச்சமடைந்திருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது நாங்கள் நலமாகவே உள்ளோம்.

நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று கூறுவதால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
அது இப்படித்தான். நாங்கள் எங்களுக்கு உரியது என் நம்புவதிலும் அதிகம் வசதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. பிள்ளைகள் பாடசாலை மற்றும் பூங்கா என்பனவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நானும் அவர்களுக்கு துணையாகச் செல்கிறேன். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்ப்பதற்கும் மற்றும் வேறு இடங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என்பதை எண்ணும்போதுதான் நான் துக்கப்படுகிறேன்.

உங்கள் உறவினர்கள் உங்களுடன் பேசினார்களா?
என்னுடைய சகோதரரும் தந்தையும் லண்டனில் வசிக்கிறார்கள். தொலைபேசி மூலம் அவர்கள் என்னுடன் பேசுவார்கள். அவர்கள் ஒருமுறை என்னைக் காண வந்திருந்தார்கள்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
எனது இரண்டு பிள்ளைகளுக்கும் முறையான கல்வி வழங்கப்பட்டால் அதுவே எனக்குப் போதும் மற்றும் அவர்கள் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

உங்கள் நாளாந்த வாழ்க்கைமுறை என்ன?
நான் காலை 4.30 மணிக்கு எழுந்து எனது பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களை பாடசாலைக்கு அனுப்புகிறேன் அதன் பின்னர் நான் துவைத்தல், வீட்டுச் சாமான்களை அடுக்கி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். வெளியே கோவில் மற்றும் பூங்கா என்பனவற்றுக்கச் செல்கிறேன் இரவில் வேலை ஏதுமின்றி இருந்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிப்பேன்.

மிக முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். நீங்கள் கடற்படையின் படகுகளால் வழி மறிக்கப்பட்டபோது உங்களிடம் 2 கிலோகிராம் தங்கம் மற்றும் ரூபா 600,000 பணம் என்பன உங்களிடம் இருந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தளவுக்கு தங்கமும் பணமும் ஏன் கொண்டு சென்றீர்களா?
என்னிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை, ஆனால் என்னுடையது 200,000ரூபா. மற்றும் றூபுனின் மனைவியுடையது 200,000ரூபா. எங்களோடிருந்த மற்றொருவருடைய பணம் 175,000ரூபா என்பனவே மொத்தப்பணமும். எல்லா தங்க நகைகளும் என்னுடையதல்ல, ஆனால் எங்கள் மூவருக்கும் சொந்தமானது. என்னுடைய தங்க நகைகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பலராலும் பரிசுகளாக வழங்கப்பட்டவைகளாகும்.

உங்களைச் சுற்றி யுத்த அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் இவ்வளவு தங்கத்தையும் எப்படி உங்களால் வைத்துச் சமாளிக்க முடிந்தது மற்றும் தப்பி ஓடும்போது ஏன் அவற்றைக் கொண்டு சென்றீர்கள்?
பதில் : நான் தங்கங்கள் யாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நாங்கள் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வேன், எனதுபிள்ளைகளுடையதும் மற்றும் என்னுடையதும் எதிர்காலத்துக்கு பயன்படும் என்கிற எண்ணத்தில்தான்.

நன்றி


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

mother a 224 தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமெண்டு நினைப்பது வெறும்கனவு.

அன்பா சொல்லி அம்மிநகராது.
தியாகங்கள் இல்லாமல் விடுதலை வருமெண்டு நினைப்பது வெறும்கனவு.மற்ற சமூகங்களெல்லாம் பெரும் விலைகொடுத்து பெற்ற சுதந்திரத்தை சிங்களவன் நமக்கு இலவசமாக தருவான் என்று நான் நம்பவில்லை. ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும் யுத்தங்களாலும் வேதனைகளாலும் இரத்தக் கண்ணீராலும் வென்றவற்றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பேனா மையக் கொண்டும் கோரிக்கை மனுங்களை கொண்டும் மேடை பேச்சாளர்களின் திறமையைக் கொண்டும் சுலபமாக சாதிக்க நினைப்பது வேடிக்கையும் வீண்கனவும் ஆகும். பிரசவலியின்றி குழந்தை பிறக்குமா? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன கடலைவடையா? உளுந்தவடையா?அது கூட இன்று இலவசமாக கிடைக்காது.அப்படியிருக்க சுதந்திரம் எப்படி இலவசமாக கிடைக்கும் ?அதை போராடி இரத்தம்சிந்தி உயிர்கொடை கொடுத்து அளப்பரிய தியாகங்கள் செய்துதான் பெற முடியும். தேசியத்தலைவர். அன்றோதொட்டு இன்றுவரை எந்தவொரு சிங்கள தலைமையிடமிருந்தும் தமக்கு தீர்வுகிட்டும் என்றோ,தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் அதை பெற்று தருவார்கள் என்றோ தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாகும்.அன்றும்சரி இன்றும்சரி அவ்வாறான எதிர்பார்ப்பு முட்டாள்தனமானது என்றே கடந்த காலங்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றது. தமிழர்கள் நாங்கள் எங்களது போரிடும் வல்மையினாலும் போராட்டத்தின் வெற்றியினாலுமே தமிழீழ தேசத்தின் உதயமும் அதன்வழி தமிழீழ மக்களின் சுதந்திரமான சுயமான வாழ்வும் அமையும் என்பதில் தமிழ்மக்கள் தெளிவுபெற வேண்டும்.அத்தகைய எண்ணப்பாட்டின் எதார்த்த புறநிலைகளுக்கேற்ப இலக்கினைநோக்கி முன்னகரவேண்டும்.தமிழ் இளைஞர்கள் போரியல் நுணுக்கங்களை கற்றுதேறி போர்வீரர்களாக அணிவகுக்கவேண்டிய தேவையை உணரவேண்டும்.எந்தவொரு இனமும் தமக்காக முற்று முழுதாக போராடாமல் அவர்கள் எந்தவொரு நாட்டின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க முடியாது.எனவே பூரணமாக படைதிரட்டி கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதிகளை தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதன் மூலமாகவே தமிழர்களுக்கான உலக அங்கீகாரத்தை பெறமுடியும். தமிழர்களின் விடுதலை என்பதும் தமிழீழ தேசத்தின் புலர்வு என்பதும் எதிர்காலத்திலும் சமாதான ரீதியாக ஒருகாலமும் பெற்றுகொள்ள முடியாது என்பதையே இலங்கையின் பலசகாப்தகால வரலாறு சுட்டிநிற்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பு ஈட்டபோகும் போரியல் வெற்றிகளே தமிழ்மக்களின் அடிப்படை அபிலாஷைகளான தாயகம்,தேசியம்,தன்னாட்சி உரிமை என்பதை அவர்களுக்கு ஈட்டிதரும் என்பதையே இன்றைய காலம் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். பிரபாசெழியன்.

mother a 223 லெப்.கேணல் மணிவண்ணன்(page04)

லெப்.கேணல் மணிவண்ணன்
அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன. ஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள். 19.08.1997இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன. கொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் விழித்துக்கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். சிறப்புக் கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான். எறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை. வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங்காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும். மணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது. இன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு படைக்காவி கவச ஊர்தியும் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய படையாட்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து படையினரின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் பந்தாடப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப் போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல. ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் அன்பு உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது. 1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் கடுமையாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் இறுக்கமாகச் சண்டையிட்டன. சிறப்பு கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. "நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்" இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் குகைக்குள் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. "20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான். 20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன் எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் படைக்காவிகளும் அவர்களுடன் சேர்ந்து பெருமளவான படையினரும் முன்னநகர்ந்தனர். டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரி தன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின் சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான். அவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவச டாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது. நவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் ஏற்புத் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது. 26.09.1998இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப்படுத்தினான். சண்டை கடுமையாக நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். துண்டாடப்பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் படைகளும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டை அதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப்படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் தமது சுடுகலன்களிற்கு இரையாக்கினர். தங்கள் துப்பாக்கிகளில் ரவைகள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர். இறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண்பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது. மணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி, சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் வேளைவரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை. ஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள் புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற ஊர்தி கண்ணிவெடியில் சிக்கியது. மணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான் "நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்." அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான். ச.புரட்சிமாறன்

 பாகம் 4 

1990 தொடக்கம் 1995 வரை 



அன்பின் வாசகர்களே இது வெளியிடப்படாதே மறு பக்கத்தில் உள்ளது இதை நான் தற்பொழுது வெளியிடவில்லை இதை முழுமையாக எழுதிய பின் வெளியிடுவேன், தற்பொழுது எவரும் இதைப்பார்க்க வேண்டாம், நீங்கள் இதைப்பார்ப்பதால் blogger நிறுவனம் எனக்கு கொம்பிளேன் தருகின்றது அதாவது உங்களின் வாசகர்கள் சட்டத்தை மீறுகின்றார்கள் என்பதே அதின் கருத்து நீங்கள் களவாகப்பார்ப்பது எனக்கும் அந்த நிறுவனத்திற்கும் தெரியும் என்பதை மறந்து விட வேண்டாம் பொறுமையாகயிருக்கவும் மிக விரைவில் வெளியிடுவேன்,மக்களே



யாழை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விடுதலைப்புலிகள் திறிஸ்ரார் என அழைக்கப்படும் இந்தியாவின் துணைக்குழுவான உறுப்பினர்கள் ஒரு  சிலரிக்கு மட்டும் மரண தண்டனை வளங்கப்பட்டது. ஏனையவர்களிற்கு பொது வன்னிப்பு வளங்கப்பட்டு அவர்கள்சமுகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு அனுமதி வளங்கப்பட்டது.

இதேகாலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் எமது போராட்டத்திற்கு மறைமுகமாக செயல் பட்டுக்கொண்டுயிருந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மற்றும் சம்பந்தப்படாத புதியவர்களும் இயக்கத்தில் இனைந்துகொண்டுயிருந்தார்கள் இவர்கட்கு மணியன் தோட்டம் மற்றும் கோட்பாக்க் என்ற இடத்தில் இவர்களிற்கான இராணுவப்பயிற்சி நடந்துகொண்டுயிருந்தது,

24/03/ 1990 இந்தியா இராணுவம்இலங்கையை விட்டு முழுமையாகவெளியேறிச் சென்றது.ஆனால் இந்தியா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட கனிசமான விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என பலர் இந்தியா இராணுவத்திடம்கைதிகளாக இருந்தார்கள் இவர்களில் ஒரு சில போராளிகளை மட்டும் கண்துடைப்பிற்காக விடுதலை செய்து விட்டு ஏனையவர்களை பிரமதாசா அரசிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியா இராணுவம். வெளியே சென்றது

அதில் விடுதலையானவர்களின் விபரம்.இவர்கள் இந்தியா இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது தலையாட்டிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் அதில் மூன்று  பேராளிகளைக் குறிப்கின்றேன் கேணல் தமிழேந்தி மூத்த போராளி சுக்குளா அரசியல்துறையைச் சேர்ந்த தங்கன் என்பன அதில் அடங்கும். 

ஆனால் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு கைதிகளாகயிருந்த அனைத்து இந்தியாச் சிப்பாங்களும் எவ்வித நிவந்தனையும் இன்றி அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இந்தியா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

எனவே  இந்திய இராணுவத்தின் கதை இன்றில் இருந்து முற்றாக முடிந்து விட்டது இனி அவர்களின்மாறுக் குழுக்களிற்கு என்ன நடந்தது என்று முன்னர் குறிப்பிட்டுள்ளேன்


25/03/1990 தலைவர் யாழ்பாணம் வந்தார், பிரமதாசா விடயத்தை எப்படி கையாண்டார்,


25/03/1990 ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் திரு சொர்ணம் அண்ணைஉட்பட40 போராளிகளுடன் அவரின்மறைவு இருப்பிடமான புனிதபூமி மணற்றுக்காட்டில் இருந்து நாலு வாகனர்களில் ஏறி யாழ்ப்பாணம் நோக்கிய அவரின்பயணம் ஆரம்பம் ஆனது,அவர்கள் கொம்படிக்குச்சென்றபோது நேரம் இரவு பத்து மணி ஆகி விட்டது அதனால் வாகன வெளிச்சத்தின் உதவியோடு தலைவர் வேட்டை ஆடிக் கொண்டு சென்றார், சுமார் 20 முயல்களை அவர் சுட்டார், அவ் முயில்களையும் ஒரு உரப்பையில் எடுத்துக்கொண்டு முதலாவதாகசாவகச்சேரியில் இருந்த 1-1- முகாமிற்குச் சென்றார்கள், அங்கே சென்றதும் அங்கே நின்ற போராளிகளிடம் முயல்களை சமைக்கக்கொடுத்து விட்டு தலைவர் வந்தகளைப்யில் ஓய்வு எடுத்தார்,

அவரைப்பின்தொடர்ந்து எங்களின் வக்கூஸ் அணி 15 பேரையும்   திரு கடாபி அண்ணையோடு யாழை நோக்கிச்சென்றுகொண்டுயிருந்தோம் கொம்படி ஊரியான் தரைவளிபாதையூடாக யாழைச்சென்றடைந்தோம்..


அங்கே சென்றதும் யாழ்  சாவகச்சேரி பெருங்குழச் சந்தியில்அமைந்து இருந்த ஒரு வீட்டில் விடப்பட்டோம். ஆனால் தலைவரோடு நிக்கும் போராளிகளிற்கும் எமக்குமான தொடர்வை திரு கடாபி அண்ணைஅவர்களள் எமக்கு ஏற்படுத்தித்தரவில்லை . அவர் எங்களை இறக்கியதும் உடனே வன்னிக்கு திரும்பிவிட்டார்.


அதில் சென்ற சிலருடைய பேரைக் குறிப்பிடுகின்றேன், அதன் அணித் தலைவர் சந்தோஸ் உதவித் தலைவர் போராளி நிமால், போராளி சரவணன் 03 போராளி ராகீம் 04 கப்டன் மோகன சுந்தரம்05 கப்டன் கண்ணாளன் / மல்லி 06 லெப் லெனின் 07 கப்டன் காசன் 08 தாயாபரன் 09 போராளி திவாகரன்10 நான் 11  இதில் சந்தோஸ்,ராகீம் சரவணன் மற்றும் என்னுடன் நாலு பேர் இந்தப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்தார்கள் ஏணையவர்கள் மரணித்து விட்டனர்,

3 நாட்கள் அங்கே இருந்தோம் எங்களோடுயிருந்த மோகனசுந்தரம் மற்றும் சந்தோஸ் இருவரும் அவர்களின் வீடான வல்வட்டித்துறை சென்று அரிசி / மா/சீனி/ புண்ணாக்கு/ பொரிமா என நிறைய உணவு கொண்டுவந்துசேர்த்தார்கள். அனைவரும் சாப்பிட்டோம்.. அடுத்த நாள் காலையில் கிராமத்தைசுற்றிப்பார்போம் என நானும் திவாரனும் நடந்துகொண்டுபோனோம் அப்பொழுது போராளி காளி என்பவரைச்சந்தித்தோம் .அவர் தான் மட்டுமாவட்டம் என தன்னை அடையாழப்படுத்தினார்.


அவரிடம் பிரச்சனையைச்சொன்னோம் நீங்கள் எங்களிற்கு உரிய ஆட்கள் தான்என நான் நினைக்கின்றேன் நாங்கள் புனிதபூமி இருந்து வந்த நாங்கள் என்று எங்களிடம் கூறினார். நாங்கள் உதயபீடத்தில் இருந்து வந்த நாங்கள் என அவருக்குத்தெரியப்படுத்தினோம் அதையெடுத்து எங்களிற்குத்தானாகவிளங்கி விட்டது. இவர்கள் தலைவரோடு நிக்கின்றார்கள் என்பதை விளங்கிக்.கொண்டோம்.இவர் சென்றதும் ஒரு சில மணித்தியாலம் களித்து சொர்ணம் எண்ணை எங்களின் வீட்டிற்கு வந்து எங்களோடு கதைத்தார்,

எக்காரணம் கொண்டும் பொது மக்களின் விடுகளிற்குப்போகக்கூடாது அவர்களோடு பேசுவதற்கு முயற்கிசி செய்யக் கூடாது எனவும் அவர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும் முறைக்கக்கக் கூடாது எனவும் அனுமதி இல்லாமல் உங்களின் சொந்த வீடுகளிற்குக்கூட  போகக்கூடாது எனவும் எங்களிற்குத்தெரியப்படுத்தி விட்டு அவர் சென்றார்,


அடுத்த நாள் உணவு 3 நேரமும் எங்களின் முகாமிற்குவந்துகொண்டுயிருந்தது.தொடர்ந்து தலைவரின் பாதுகாப்பு மற்றும் சண்டை இப்படித்தான் எங்களின் காலம் நகர்ந்தது.

1990ஆண்டுஇதே காலம்தான் தலைவரோடு நாங்கள் சாவகட்சேரி, கரவெட்டி மற்றும் பழையென மாறி மாறி வாழ்ந்த காலம் 

இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலகளின் கலைபண்பாட்டுக்கலகம் செயல்பட்டுக்கொண்டுயிருந்தது

புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் கலை பன்பாட்டுக்கலகம் தலைவரால் உருவாக்கப்பட்டது,கலை பன்பாட்டுக்கலகத்திற்கு தலைவரால் முதன் முதலில் விடப்பட்ட போராளிகள் தலைமைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை. லெப்கேணல் தவா, போராளி நல்லாம்பி, மகளீர் படையணியில் போராளி சீத்தாதா  தலைமையில் கப்டன் கஸ்தூரி, போராளி ஞானகி, ,  உட்பட மொத்தம் 07 போராளிகள் காலை பன் பாட்டுக்கலகத்திற்கு தலைவரால் விடப்பட்டனர்,

இதில் இறுதி சுத்ததின்போது போராளி சீத்தாசலண்டர் அடைந்த பின் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார், ஞானகி இப்புத்தகம்எழுதிங்காலத்தில் உயிரோடுயிருந்துள்ளார். 


புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் நடந்துகொண்டுயிருந்தது, இவர்கள் தெருக்கூத்துக்கள் வைத்து இளைஞர் யுவதிகளை பெருமளவில் இணைத்துக்கொண்டுயிருந்தகாலம்அது ,இதே காலம் தமிழகத்தில் இருந்து தேனிசை செல்லப்பா அவர்களின் இசைக்குழு தமிழீழம் வந்து யாழில் உள்ள வலிகாம் வடமராட்சி தென்மரட்சி உட்பட தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இசைக்கட்சேரிவைத்தனர்,


காசியண்ணையின் உணர்ச்சி வரிகளை பாடலாகப்பாடினார் தேனிசைச்செல்லாப்பா இந்த இசை நிகழ்விற்குப்பின்னர்தான் தமிழீழத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் அதிக உணர்வு ஏற்பட்டு ஐயாயிரத்திற்குமேற்பட்ட மாவணர்வர்கள் எமது அமைப்பில் இணைந்தார்கள்,


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உணர்ச்சிக் கவிஞ்சர் காசியானந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகயிருந்தது



தேனிசைச் செல்லப்பா அவரின் மகள் சொர்னலாதா இவர்கள் முக்கியபங்குவகுத்தார்கள் என்பதை எமது தமிழீழ மக்கள் மறந்து விடக்கூடாது, 

இது மட்டும் அல்ல வெளிநாடுகளில் சென்று இசைக்கட்சேரி யூடாக எமது விடுதலைப்போராட்டத்திற்கு நிதிகளை பெற்றுத்தந்தவர்கள் என்பதையும் ஞாபகப்படுத்துவதோடு இதின் செயல்பாட்டிற்குமூத்த உறுப்பின ஒரு தரின் பங்களிப்பு இருந்தது என குறிப்பட்டு இருந்தேன் .,

, இவர் அதே காலப்பகுதியில் பெண்களுடனான தொடர்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்ப்ட்டமையால், பொன்திகாகம் அப்பா, பொட்டுஅம்மான் இவர்கள் இவருக்கு சாசொறுப்பு வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த போதுலும் எமது விடுதலை போராட்டத்தில் ஆழணி கூடிய மாவட்டமான மட்டக்காப்பு மாவட்டத்தில் 74 ஆண்டு காலப்பகுதியில் இருந்துபெருந்திரளான இளைஞர்களை போரட்டத்திற்கு இணைத்தது மட்டும் அல்லாமல் அவ் மாவட்டத்தில் அரசிக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், அதனால் இவருக்கு சாசொறுப்பு வழங்கினால் ஒரு மாவட்டத்தின் போராளிகளின் மற்றும் அந்த மாவட்ட மக்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதற்காக தனது ஆழுமையைப்பயன்படுத்தி தலைவர் அவர்கள் அவரிக்குப் பொது மன்னிப்பு வழங்கினார், பின் அவர் அயல் நாடு ஒன்றிற்குப்போய் வாழ்ந்ததாக நாம் அறிந்துள்ளோம்

இதைத் தொடர்ந்துஇவ் இடத்திற்கு பொறுப்பாளாராகபுதுவைஇரத்தினதுரை   அவர்கள் தலைவர்அவர்களால் நியமணிக்கப்பட்டார்,



 தமிழீழ விடுதலைப் புலிகளின்  கலை பண்பாட்டுக் கழகம்


 ஒரு முக்கிய பிரிவாக இருந்தது. அது தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டது. அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை இருந்தார்.


கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன. 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல் திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டதாகும். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், வாசல் ஒவ்வொன்றும் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் செம்மணி போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியிட்டது.



இறுதி 2009 மட்டும் இவரே இதன் பொறுப்பாக இருந்தார் இறுதி சுத்தத்தின்போதுசலண்டர் அடைந்த பின் எதிரிகளால் இவர்கொலைசெய்யப்பட்டுள்ளார், 

.1990/4 ம் மாதம் அப்பொழுது வடமராட்சி கரவெட்டியில் எமது பாசறை இருந்தது வயல்வெளிகளும் அடர்த்தியான மாமரங்களும் எங்களுடையே வீட்டை  அழகுபடுத்திய வண்ணம் இருந்தது


. அக்காலப்பகுதியில் எங்களுடைய உணவுத் தேவையைபூர்த்தி செய்வதற்காக அவ்விடத்தை சேர்ந்த தேவி அக்கா சமைத்துத்வைப்பார். நேரத்திற்கு நேரம் போய் உணவை எடுத்துக்கொண்டுவந்து அனைவரும் பரிமாறுவோம். எங்களிடம் 50 கலிபர் இருந்ததுஅது தலைவரின் பாதுகாப்பிற்கு உரியது அதற்கு யக்ஸ்சன் என்பவர் பொறுப்பாகயிருந்தார்.

எங்களில் இருந்து 500 meeteர் தூரத்தில் டே வீற்ட் என்ற முகாமில் தலைவர் இருந்தார் அடிக்கடி காவல் கடமைக்காக அங்கே நாங்கள் சென்று வருவோம். 3/5 நாட்கள் மட்டுமே ஒரே இடத்தில் தங்குவோம் அதற்கு மேல் நிறையக் காலம் ஒரே இடத்தில் தங்குவது இல்லை ஏனெனில் பாதுகாப்புக்காரணமாக அடிக்கடி இடங்களை மாற்றுவது எமது கடமையாகயிருந்தது. அவ் வேலையை தலைவரே தீர்மானிப்பார்,

அக்காலப்பகுதியில் எமக்கு ஒரு கறியும் சோறும் அல்லது ஏதாவது ஒரு சாப்பாடு ஒரு கறிதான் வரும் அதில் மாட்டு இறைச்சி சாப்பிடாத போராளிகள் இருந்தார்கள் அதில் நானும் ஒருதன் அப்படி மாட்டுக்கறிவரும்போது நாங்கள் சீனி போட்டு அவ் உணவைச் சாப்பிடுவோம்.


 அக்காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி சலன்ற்ராஜ் இருந்தார் அவர் மாடு சாப்பிடுவது இல்லை அனைத்துப் போராளிகளும் அழுத்தம் கொடுத்து அன்று அவரை மாடு சாப்பிட வைத்து விட்டார்கள், தீவிர கடவுள் நம்பிக்கை உடைய அவர் அது பற்றி அவர் எழுதிய கடிதம் நான் மாடு சாப்பிட்டு விட்டேன் என்னை கடவுள் மன்னிக்க மாட்டார் அதனால் நான் கடவுளிற்குத் துரோகம் செய்து விட்டேன். அதனால் நான் குப்பி கடித்துச் சாவடைகின்றேன். எனது சாவிற்கு இயக்கம் தான் பொறுப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு குப்பி கடித்து அவர் சாடைந்தார்,


 அது சமாதான காலம் என்பதால் அவரின் வித்துடல்வாகனத்தில் ஏற்றி மட்டக்களப்புக்குக்கொண்டு சென்று அவரின் பெற்றோரிடம் அவ்வித்துடல்ஒப் டைக்கப்பட்டது,


இதை ஆழமாகச்சிந்தித்த தலைவர் அன்றில் இருந்து இரண்டு கறியென சட்டத்தை உருவாக்கிநார் அதவது ஒரு இறைச்சி என்றால் கத்தரிக்காய் அல்லது பருப்பு இரண்டாவது கறி சமைத்தே  ஆக வேண்டும் என்பதே அதின் கட்டுப்பாடாகயிருந்தது, இது இயக்கம் அழியும் வரை இந்நடமுறையிருந்தது,

அதே வடமராட்ச்சியில் நவண்டியில் என்ற இடத்தில் அடுத்த முகாம்யிருந்தது. அங்கே செளியின் பொறுப்பாயிருந்தார் மிகவும் ஒரு சிறந்த  நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாழம் காணப்பாட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப்  பழங்களும் நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்து போராளிகளுக்கும் வேண்டிவந்து வழங்குவார்.

 அது தலைவரிற்கு மெகவும் விருப்பமாகயிருந்தது. சில நேரங்களில்தலைவரே  சொல்வார் பொடியெல் சோர்வாகயிருக்கின்றார்கள் செளியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்..  அதே காலப்பகுதி20/05 /1990  / ஆண்டு காலப் பகுதியில்சாவகச்சேரியில்1-1- மற்றும்77 என்ற முகாங்களில் மற்றும் பழையில் 7,3 என அழைக்கக்படும் சுவாஸ் தோட்டத்திலும் தலைவர் தங்கும் இடங்களாகயிருந்தது, 3-4- அல்லது ஒருவராத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிக்காமல்சூழர்ச்சி முறையில் மாறி மாறி தலைவர் தங்குவார்,இது இப்படி இருக்க

10/06/1990 அதிபர் பிரமதாசா விடுதலைப் புலிகளிற்கு எதிரான இரண்டம்கட்ட ஈழப்போரை ஆரம்பித்தார்,

அடுத்து அவர் தாக்குதலை ஆரம்பித்தார்மீண்டும் பேச்சுவார்த்தை முறியடைந்தமைக்கானகாரணம் என்னன்றால் இந்தியா இராணுவம் இலங்கையில் இருக்கும்போது அவர் பேசிய பேச்சு அவர்தந்தவாக்குறுதிகள் உன்மைபோல்தென்பட்டாலும் ஆனால் இந்தியா இராணுவம் வெளியேறியதும் நடைமுறைக்கு சாத்தியப்படாதே கோமாளித்தனமான சொல்களை அவர்பயன்படுத்தினார்.

அதாவது தமிழர்களின் தீர்வு தொடர்வாக விடுதலைப்புலிகள் போய் பிரமதாசாவோடு பேசியபோது அவர் சொன்ன விடயம் எதிர்பாராத ஏமாற்றம் ஒன்றை எமக்கு அளித்தது. அவர் சொன்ன விடயம் எனக்கு இரட்டாவதாக பிரபாகரன் இருக்கட்டும் இலங்கையின் உடைய ஆலோசகரக பாலசிங்கம் இருக்கட்டும். இலங்கை என்றால் ஒரு நாடுதான் என தனது உன்மையான முகத்தை வெளிக்காட்டினார் பிரமதாசா .


இதை இனவெறிகொண்ட பெரும்பாண்மை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவே நடைமுறைக்கு சாத்தியப்படாதே பைத்தியகாரத்தனமாக பிரமதாசா பேச வெளிக்கிட்டார். தமிழர்களின் போராட்டம் தனக்கோ தனது அரசாங்கத்திற்கோ எந்தப் பயமும் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

அதை விட மகாவலி வலையம் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். தமிழர்களின் தாயகவிடுதலையை இலக்காகக்கொண்டு அதை மீட்பதற்கு தலைமைதாங்கிப்போராடும் அமைபான விடுதலைப் புலிகளை முழுமையாகஅளிப்வதற்கு சிறிலங்கா இராணுவத்தை நவினமயப்படுதியதோடு இராணுவத்தின் தொகையை பெருக்கிவதற்கு அவர் கூடுதலான ஆர்வம் காட்டினார்.


அதை விட திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் வஸ்சில் பயணித்தவர்களை வளிமளித்து தமிழர்களை மட்டும் பிரித்து எடுத்து நூற்றுக்காணக்கான தமிழர்களை வாளால் வெட்டி கொலை செய்தமை. என தமிழர் விரோதப்போக்கு கூடுதலாக அவரிடம் இருந்ததை நாம் அறிந்தோம். இதனால் அவரைகொலை செய்ய வேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.


இருந்தும் கண்ணைக் கெடுத்த சத்திராதியும் கண் எதிரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு தொடர்ச்சியாக தமிழர் பகுதி மீது விமானத் தாக்குதல் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என அவரின் வேலை நடந்து னெண்டே இருந்தது. கடுமையான கோபம் அடைந்த நாம்இருந்தும் பொறுமையாகயிருந்தோம்



10/06/1990 ஆண்டு எமதுக்கும் அரசபடைகளிற்கும் சண்டை ஆரம்பம், ஆனது அதாவது இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் ஆனது,தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படைகளிற்கும் சண்டையை ஆரம்பித்த

சில குறிகிய நாட்களில் மட்டக்களப்பிலே சண்டை ஆரம்பம்ஆனது 

அதே நேரம் சண்டை தொடங்கி சில குறிப்பிட்ட வாரத்தில் மட்டகளப்பில் எமது இயக்கம் சுமார் 800 சிறிலங்கா பொலிசை கைது செய்ததோடு பெரும் தொகையான ஆயுதம் மற்றும் அவர்களிற்கு மாதம் மாதம் கொடுக்கும் பெரும் கொகையானபணம் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து அங்கே இருந்த கும்புறு முலை கழுவன் சூடி என பலஇராணுவ முகாம்களைச் சுற்றி வழைத்து தாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்தார்கள்,விடுதலைப் புலிகள் இது நடந்துகொண்டுயிருக்க பல திட்டர்களை தலைவர்போட்டுக்கொண்டுயிருந்தார் தொடர்ச்சியாக உயர்நிலை தலைவர்களோடு ஆலோசனை நடத்திக்கொண்டுயிருந்தார்,




அவ்கையில்11  /06/1990 தலைவர் மாத்தையா சந்திப்பு

 அதனால் யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது,

அதனால் மாத்தையாவை சந்தித்து அடுத்த கட்டம் தொடர்பாக சில வேலைகளை செய்ய வேண்டும் என  தலைவர்சிந்தித்தார்,

அதே வடமராட்ச்சியில் நவண்டியில் என்ற இடத்தில் அடுத்த முகாம்யிருந்தது. அங்கே செளியின் பொறுப்பாயிருந்தார் மிகவும் ஒரு சிறந்த  நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாழம் காணப்பாட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப்  பழங்களும் நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்து போராளிகளுக்கும் வேண்டிவந்து வழங்குவார். அது தலைவரிற்கு மெகவும் விருப்பமாகயிருந்தது.


 சில நேரங்களில்தலைவரே  சொல்வார் பொடியெல் சோர்வாகயிருக்கின்றார்கள் செளியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்..  அதே காலப்பகுதியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தோடர்பாகக்கதைப்பதற்கு மாத்தையாவை சந்திக்கத் தலைவர் தீர்மானித்தார்.

 அதுசெளியன் அவர்களின் முகாமிலையே ஏற்பாடு செய்யப்பட்டது,தொடர்ந்து தலைவரோடு அவ் முகாமிற்குச் சென்றோம்,  அடுத்த நாள் காலை பத்து மணி முகாமில் உள்ள முன்னரங்கக்கக்காவல் அரணில் கடமையில் நான் நிக்கின்றேன். ஒரு கயேஸ் வெள்ளை வான்வெளியே வந்து நிக்கின்றது. றோட் கரையோரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு உங்களின் பெயர் என்ன என்று அவர்களிடம் கேட்டேன்.


அவர்கள் பெயரைச் சொல்லவில்லை உங்களுடைய பொறுப்பாளரிடம் கேழுங்கோ என பதில் வந்தது. இரண்டு பேர் என்றால் ஒருதர் போய்க் கேட்டு வரலாம் ஆனால் தனியாக நிட்பதால் அது முடியாமல் இருந்தது. அவர்கள் 4 பேரையும் வானில் இருந்து இறக்கி உள்ளே இருக்கும் வாங்கில் இருத்தினேன். ஆனால் அதை ஒரு சில மக்கள் பார்த்துக் கொண்டு போனார்கள்.



அந்தச் செய்தி காட்டுத்தீ போல் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் என நினைக்கின்றேன். அந்த மாதத்தில் தான் தமிழர்களின் கொண்டாட்டமான கார்திகை விளக்கீடு வருவது வளமை எனவே அந்த விளக்கீட்டிற்கு செய்த உணவுகளான மோதகம் அவல் என நிறைய ஓலைப்பெட்டியில்மக்கள் கொண்டுவந்த வண்ணம்  இருந்தார்கள்கொண்டுவருபவர்கள் மாத்தையா அண்ணைக்கு கொடுங்கோ என சொல்லி விட்டுப் போகின்றார்கள். அப்பொழுது தான் எனக்குத் தெரியும் மாத்தையா அண்ணையைத் தான் நாம் வைத்துயிருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டேன்.



வெளியே சென்ற சொர்னம் அண்ணை சிறிது நேரத்தில் உள்ளே வந்தார். மாத்தையா அண்ணையை ஏன் உள்ளே விடல்ல என கேட்டு எனது கன்னத்தில் அறைத்தார். அறைந்துவிட்டு அவரே மாத்தையா அண்ணையைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று தலைவரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு பிறகு என்னை சந்திப்பதற்கு வந்தார்.


மாத்தையா அண்னையை உமக்கு தெரியாதா? என சொர்ணம் அண்ணை என்னிடம் கேட்டார் அவரின் பெயர் தெரியும் ஆனால் ஆளை தெரியாது என அவரிடம் சொன்னேன். நீ அவர்களிடம் பேரைக் கேட்கவில்லையா? என என்னிடம் கேட்டார் அதற்கு நான் அவர்களிடம் கேட்டேன் அவர்கள் எனக்குச் சொல்லவில்லை என பதில் அழித்தேன் முன்ன்ர் ஆயிரம் தோப்படிக்கச் சொன்னவர் இதைக் கேட்டதும் தோப்படிக்க வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்.பின்னர் இதையறிந்த தலைவர் செளியனை என்னிடம் அனுப்பியிருந்தார் நடந்த பிரச்சனைகளை தெளிவாகச் செளியனிடம் சொன்னேன். அதைக் கேட்டுத்து செளியன் போய் விட்டான் தகவல் தலைவரிக்கு சென்று விட்டது.


 அப்பொழுது பாதுகாப்புப் பொறுப்பாளராக துசி. அம்மான் இருந்தார்உடனே துசி அம்மான்அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதோடு அவ் இடத்திற்கு திலிப் அண்ணை நியமணிக்கப்பட்டார். திலிப்அவர்கள் மிகவும் ஒரு திறமையான போராளி இந்தியாவில் இருந்த பத்மநாபாவை கிட்டக்கூட நெருங்க முடியாமல் இருந்த காலம் அது. அக்காலத்தில் குறிப்பிட்ட சில போராளிகளோடு தானும் சென்று திறமையான முறையில்பத்மநாபாவிற்கு பரணை தண்டனை வளங்கப்பட்டது. பத்மநாவா என்பவர்  EPRLF  அமைபின் தலைவர் இவர்எமது இயக்கத்தை அளிப்பதற்கு பல நடவடிகள் செய்தவர் என்பதை எம்மால் மறந்து விட முடியாது. இப்படியான திறமையான வேலைகளை செய்தமையால் திலிப் அண்ணைக்கு எமது இயக்கத்தில் ஒரு பதிப்பு இருந்தது. 

 திலிப்அவர்கள்17/05/2009  காணமல் போய்விட்டார்   செளியன் இவர் அதே ஆண்டு ஏதாவது ஒரு பிளை விட்டுயிருக்கின்றார் அது இயக்கத்திற்கு தெரியக் கூடாது என்பதற்காகவே அதே முகாமில் தன்னைத்தானே சுட்டு சாவடைந்தார். அவரின் வித்துடல் சொர்னம் அண்ணையால் பெற்றோர்களிடம் வளங்கப்பட்டது.


15 /06/1990 மேஜர் குணா இவரும் தலைவரின் பாதுகாப்பிற்கு உரிய போராளிதான் செக்  மேக் இந்தியா இராணுவதின் தலைவரைப்பிடிப்பதற்கான பாரிய நடவடிக்கைச்சண்டையை முறியடிக்க இவர் சண்டையிட்ட வீரத்தைக்குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது குணா அண்ணை நெல்லியடிக்கு வந்தார். நீங்கள் யாழ் கோட்டை சாண்டைக்காகப்போகப்போகின்றீர்கள் என சொல்லி 01 யக்சன்02 நான் /3 லெனின்/4 திவார்.  சரவணன் என நாங்கள் சண்டைக்குச் செல்ல தயார் ஆனோம்,எங்களுடையே 50 கலிபர் முகிலன் என்பவரிடம்கொடுக்கப்பட்டது. நான் மட்டும்T 81 துப்பாக்கி வைத்துயிருந்தேன். ஏனையே அனைவரும் நிராயுதபாணியாகயிருந்தார்கள். அனைவரையும் கூட்டிக்கொண்டு குணா அண்ணைமாணிப்பாய் சென்றார்.

அங்கேதான் கப்டன் கிறோராஜ் இருந்தார். சென்றதும் ஒரு புது வெல்ஜிய்ம் 50 கலிபர் எமக்குத் தரப்பட்டது அதற்கு யக்சன் கண்ணராகவும் உதவி லெனின் இருவரையும் விட்டு நானும் திவாகர் சரவணன்  நாங்கள் மூவரும் கண்ணிற்கான பாதுகாவலர்கள் என குணா அண்ணையால் சொல்லப்பட்டது. அடுத்து எங்களிற்கு ஒரு பிக்காப்வாகணமும் தரப்பட்டு அதற்கு றைவராக கிறோராஜ் நியமணிக்கப்பட்டார்.








அக்காலம்பகுதியில்தான் கடல்புறா என்ற பேரில் கேணல் சங்கர் அண்ணையின் தலைமையில் கடல் நடவடிக்கள் இருருந்ததுஅதன் நடவடிக்கைகளை சிறப்புத்தளபதி கடாபிஅவர்கள்கண்காணித்து வந்தார்   அதனால் நானும் குணா அண்ணையும் கரவெட்டி வந்தோம். அன்று மதிய்யம் சாப்பிட்ட பின்னர் குணா அண்ணை மற்றும் கடாபி அண்ணை இருவரும் தலைவரோடுகதைத்துவிட்டு வெளியேவந்தார்கள். வந்ததும் கடாபி அண்ணை நான் குணா அண்ணை மூவரும் கடல்பகுதிகளின் பாதுகாப்புத்தொடர்வாகவும் யாழ் மாவட்ட வாண் கடல் பாதுகாப்புப்பொறுப்பாளராக குணா அண்ணையிருப்பார் என்பதை அவர்களிற்கு அறிமுகம் படுத்தவே அங்கே சென்று கொண்டுயிருந்தோம். அது இரண்டு பிற்பகல் இருக்கும்

இக்காலப்பகுதியில் கடல் நடவடிக்கைகளிற்கு கடல்புறா என்ற பேரில் தளபதி கடாபி அவர்களே பொறுப்பாக இருந்தார்,


அங்கே சென்றதும் அரைக் காச்சட்டையோடும் / முழு காச்சட்டையோடும் சுமார் 30 போராளிகள் காணப்பட்டா ர்கள். அவர்களின் கடல் புறா முகாம் பருத்தித் துறையில் அமைந்து இருந்தது. முதலில் கடாபி அண்ணை கடல் புறவின் கடமை தொடர்வாகவும் அவர்களின் கட்டுப்பாடு தொடர்வாகவும் பேசிவிட்டு ஆகாய கடல் வளி பாதுகாப்புப்பொறுப்பாளராக தளபதி குணா அண்ணையிருப்பார் எனவும் . ஏதாவது தரையிறக்க முயிற்ச்சி இராணுவத்தால் நடப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் குணா அண்ணைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கடாபி யண்ணை அவர்களிடம் தெரியப்படுத்தினார்.

தொடர்ந்து குணா அண்ணை சிறிது நேரம் அவர்களோடு கதைத்தார். அது முடிந்ததும் கடாபி அண்ணையை நெல்லியடியில் கொண்டு இறக்கி விட்டுத்து நானும் குணா அண்ணையும் மாணிப்பாயை நோக்கிச் சென்றோம்.அப்பொழுது யாழ் மாவட்டம் அனைத்து இடங்களிலும் எம்மால் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. எம்மிடம் இருந்த 50 கலிபர் ஜீப்பியம் அனைத்து ஆயுதங்களும் பிக்காப்வாகனங்களில் பூட்டி ஆகாயம் கடல் ஓரங்கள் கடுமையாக அவதானிக்கப்பட்டன.

அதே நேரம் சண்டை தொடங்கி சில குறிப்பிட்ட வாரத்தில் மட்டகளப்பில் எமது இயக்கம் சுமார் 800 சிறிலங்கா பொலிசை கைது செய்ததோடு பெரும் தொகையான ஆயுதம் மற்றும் அவர்களிற்கு மாதம் மாதம் கொடுக்கும் பெரும் கொகையானபணம் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.என்பதை முன்னர் குறிப்பட்டுள்ளேன்

அரசாங்கத்திற்கு கடுமையான தோல்வி ஏற்பட்டமையால் . அனைத் மாவட்டங்களிற்கும் கூடுதலான படைகளை அனுப்பியது சிறிலங்கா ஆரசாங்கம் . அப்பொழுது1990 6 ம் மாதம் இறுதிப்பகுதி மேஜர் விவேகன் மாஸ்ட்டர்தலைமையில் யாழ் காங்கேசன்துறை குவாட்டேஸ் முகாமையைத்தாக்குவதற்காகத் தாயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

அப்பொழுது எங்களை1.4 படையென்றே போராளிகள் அளைப்பார்கள். எங்களோடு வந்த ஜெமிலன் இந்தியா தயாரிப்பான காள்கஸ்ரோவைத்துயிருந்தார். நாங்கள் யக்சனின் தலைமையில் 50 கலிபறை சண்டைக்கு உரிய வாறு பொருத்தியிருந்தோம். அதற்கு மெயன் கட்டளை அதிகாரியாக மேஜர் குணா அவர்களே இருந்தார். முற்பகல் 10.30 மணிக்கு சண்டை ஆரம்பம் என்று எங்களிடம் சொல்லப்பட்டது.

அதைத் திடீர் என 3. பிற்பகல் என மேஜர் விவேகன் அவர்களால்மாற்றப்பட்டது. அதற்கான விளக்கம் பகல் ஆனால் ஆயுதங்களை எடுப்பது இலகுவாகயிருக்கும் என எங்களிடம்சொல்லப்பட்டது. எல்லோரும் தாயார் நிலையில் இருந்தோம். 2.30 பிற்பகல் இரவு மேஜர் விவேகன் அவர்கள் வைனாக்குளர் ஊடாகக் கடல்கரையைபார்வையிடுகின்றார். அதைப்பார்த்தபின்னர் எங்களிடம் அவர் வந்து சொன்னார். ஆரத்திற்கு மேற்பட்ட இராணுவம் தரையிறக்கப்பட்டுள்ளது. இனி எங்களால் இதைத் தாக்க முடியாது யெனவும் . நீங்கள் 50 கலிபறைக்கொண்டு முன்னே செல்லுக்கோ எனவும் நான் வெடிமருந்துகள் இவ் இடங்ககளிற்கு வைத்து விட்டு பின்னால் வருகின்றேன் என எங்களிடம் சொன்னார்.

கப்ரன் கீறோராஜ் வாக கனத்தை தாயார் படுத்த யக்சன் அவர்கள்50 கலிபறை வேகமாக்களட்டிவாகணத்திற்கு மேலே ஏற்றினார். அடுத்து வாகணத்தை கீறோராஜ் ஓட்டே நாங்கள் தச்சன் காட்டை நோக்கிச் சென்று கொண்டுயிருந்தோம். அவ்வேளைபாரிய வெடிச் சத்தம் ஒன்று எங்கள் காதில் கேட்டது. பின்னால் இருந்த நான் வாகணத்தை தட்டி உடனே வாகனத்தைநிறுத்தினேன்.

நான் நிறுத்தியதும் வோக்கியில் தொடர்வு எடுத்த அவர்கள் எங்களை உதவிக்குவருவாறு கேட்டார்கள். அதையடுத்து உடனே பழைய இடம் நோக்கிச் சென்று கொண்டுயிருந்தோம். அங்கே சென்றதும். ஒரு போராளியிடம் கீறோராஜ் அண்ணை விவேகன் மாஸ்ட்டரின் பிரச்சனையைத் தெளிவாகக் கேட்டார்.

அப்பொழுது வெடிமருந்துகளை வங்கறுக்குள் வைத்துவிட்டு பின்னர் வெளியேறுவதற்குதாயாராக விவேகன் மாஸ்ட்டர் உட்பட நாங்கள் எல்லோரும் இருந்த வேளை. ஆமி RPG அடித்து விட்டான். விவேகன் மாஸ்ட்டர் உட்பட நான்கு போராளிகள் வெடிமருந்து வைத்த வங்றுக்குள் புகுந்து விட்டார்கள். அவன் ஏவிய செல் அதே வங்கறுக்குள் தான் வந்து விழுந்தது என எங்களிடம் சொன்னார்.

வங்கறுக்குள் சென்று பார்த்தோம் 4 பேரும் உடல் சிதறிக் கிடந்தார்கள். பின்னர் இரண்டு சூரியா வேக்கில் அவர்களின் சதத்துண்டுகளை எடுத்துக்கொண்டு மாணிப்பாய்க்குச் சென்றுகொண்டுயிருந்தோம் அங்கே சென்றதும்மேஜர் குணா அண்ணையோடு சென்று மாணிப்பாய சுடலையில் அவர்களின் சதத்துண்டுகளை அடக்கம் செய்தோம். சரியான இராணுவ அறிவு இல்லாதே காரணத்தாலே இவ் இளப்பு ஏற்பட்டதாக மேஜர் குணா அண்ணை எங்களிடம் சொன்னார்.

இதை முடித்து விட்டு நாங்கள் கோட்டையை நோக்கிச் சென்றோம். கோட்டையை தக்கவைப்பதற்காக சிறிலங்கா இராணுவம் கெலியில் இருந்து ரொயிலட் பீப்பாக்ககளையும் வெடிகுண்டுகளையும் கோட்டையைச் சுற்றி போட்ட வண்ணம் இருநந்தது. அதனால் கோட்டை தூர்நாத்தமாகயிருந்தது.

19/06 /1990 யாழ் கோட்டை முதலாவது சண்டை நடத்த திட்டம் தீட்டப் படப்படது



 சண்டைக்குப்பொறுப்பாகக் கேடியிருந்தார். தளபதி மாத்தையா அண்ணையின் போராளிகள் கேடி தலைமையில் உடுதலாகக்காணப்பட்டார்கள்அக்காலப் பகுதியில் யாழ் மாவட்டத் தளபதியாக வாணு அவர்கள்  தமிழ்செல்வனேஅவரிக்கு உதவியாக லெப் கேணல் ராஜன் அல்லது R.n இருந்தார் இருந்தார். அதில் எங்களின் பணி யாழ் வீரசிங்கம் கோட்டல் 5ந்தாவது மொட்டமாளிக்கு மேல் ஏறி 1000. 50 கலிபர் ரவை கோட்டையை நோக்கி அடித்துக்கொடுக்க வேண்டும். அப்பொழுது எங்களின் வாகண ஓட்டுனராக கிறோராஜ் இருந்தார். தலைமை பொறுப்பாளர் மேஜர் குணா. 50 கலிபர் இயக்குணராக யக்ஸ்சன் இருந்தார்.

நாங்கள் 50 கலிபரால் கோட்டை உள்பக்கம் அடித்துக்கொடுக்க 30 பேர் கொண்ட ஆண் பெண் அணியினர் கோட்டை அகளிக்குள்ளால் இறங்கி பின் மேலே ஏறி கோட்டக்குள் செல்லுவார்கள் இது தான் விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது. ஆனால் இதை திதை திருப்புவதற்காக கோட்டை முன்வாசலால் ஒரு செக்ஸ்சன் போராளிகள் உள்ளே அடித்துக்கொண்டு இறங்குவார்கள். இது தான் திட்டமாகயிருந்தது

அதில் தலைவரின் பாதுகாப்புக் கடமையில் நின்ற போராளிகளும் உள்ளே இறங்கும் அணியில் இருந்தார்கள் அதில் லெப் பூவதி தலைவரின் பெசனல் பொடிக்காட் அடுத்து தலைவரின் பாதுகாவலர்களான கட்டன் அந்தோனி லெப் சேரன் இதில் சேரனின் வித்துடல் மன்னிக் காட்டிற்குக்கொண்டுபோய் மேஐர் சோதியா அவர்களிற்கு வெட்டப்பட்ட கிடங்கில் அடக்கம் செய்யப்பட்டது ஏன் இப்படி நடந்தது என்பதை முன்னர் குறிப்பட்டுள்ளேன் .

அடுத்து இருவரின் வித்துடல் கொடிகாமம் துயிலும் சில்லத்தில் எரிக்கப்பட்டது அதில் எங்களின் 50 கலிபர் மற்றும் அதே சண்டையில் வீரச்சாவு அடைந்த லெப்டின்ட்  பூவதி அவர்களைக் குறிப்பிடலாம்.. அதில் எங்களின் பணிகடினமாகயிருந்தது 100 ரவை கொண்டே 10 ரவை பெட்டிகளை ஐந்தாவது மொட்டமாளிகைக்கு மேல் ஏற்ற வேண்டும். உடனே நான் அங்கே நின்ற யாழ் மாவட்ட போராளிகளின் உதவியை கேட்டு அனைத்துப் பெட்டிகளையும் விரைவாக மேலே ஏற்றினேன்.

அதையடுத்து இரவு 12. மணிக்கு கோட்டை மீதான சண்டை ஆரம்பித்தது ரவுன்ஸ் உயருகின்றதுபதித்தடிரா யக்ஸ்சன் என இறுக்கமான கட்டளையை மேஜர் குணா அண்ணை வளங்கிக்கொண்டுயிருந்தார். வோக்கி அலறிக்கொண்டுயிருந்தது. யக்ஸ்சன் நாலாவது பெட்டியை மாற்றி அடித்துக்கொண்டுயிருந்தான்.

திடீரென பேருச்சலோடுவொம்பர் என அளைக்கப்படும் சியாமா சட்டி விமானம் எங்கள் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியது. அது மையிர்ருளையில் மொட்ட மாடியை உரசிக்கொண்டு கீழே விழுந்து விடித்தது. அதில் 7 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்ங்கள். நாங்கள் அவசர அவசரமாக கீழே இறங்கி 50 கலிபறை வாகணத்தில் பூட்டிக்கொண்டு மேலால்வரும் விமானத்தை நோக்கிச் சுடுக்கொண்டுயிருந்தோம்.

அதே வேளை கோட்டை அகளிக்குள் இறங்கிய 22 போராளிகள் அதற்குள்ளே வீரச்சாவு அடைந்தார்கள் அவர்களின் பொடியைக் கூட எம்மால் எடுக்க முடியாமல் போய் விட்டது. மொத்தம் 29 போராளிகள் அச்சண்டையில்வீரச்சாவு அடைத்தார்கள் சண்டை தோல்வியில் முடிந்தது.இச்சண்டையில் எமது படையணிப்போராளி லெப்டினன்ட் பூவதி அவர்களும் வீரச்சாவு அடைந்தார்.




 அடுத்து இராண்டாவது முறை05/08/1990 முதல் திட்டமிட்டது போல் ஒரு பாரிய நடவடிக்கை விடுதலைப்புலகளால் மேற்கொள்ளப்பட்டது, அதில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பங்குபற்றியது அதில் முன்பாக்கமாக லெப் சங்கீதா தலைமையில் ஒரு அணி அடித்துக்கொண்டு உள்ளே நுளைந்தது , பல பெண் போராளிகள் விரச்சாவு அடைந்த போதுலும் லெப் சங்கீதா அவர்கள் கோட்டைக்குள்நுழைந்தார்,

 இவர் தொடர்வாக அக்காவலில் இருந்த இராணு வீரன் எழுதும்போது அது ஒரு துணிச்சலாலான பெண் எங்களின் கோட்டையியை அண்மித்து வந்து விட்டது அதின் முகம் எனது தங்கையின் முகம் போன்ற இருந்தது, அதனால் எனக்குச்சுடமனம்வரவில்லை, எனக்குப் பக்கத்தில் இருந்த இராணுவவீரேனே குண்டைக் களட்டி அப்பெண்மீது எறிந்தான் அப்பெண் அவ் இடத்திலே சாவடைந்தது.

 ஆனால் நாங்கள் அந்தப் பெண்ணின் உடலிற்குப் பக்கத்தில்கூடப்போய்பார்க்கவில்லை ஏனென்றால் வெடிகுண்டுகள்வெடிக்காலாம் என்பதற்காக அப்பெண்ணின் உடல் அவ்விடத்திலே கிடந்து உருக் குலைந்து போனது .என குறிப்பிட்டுயிந்தார்,

 பின் கோட்டை எமது கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் அவரின் எலும்புக்கூட்டை நாம் எடுத்து துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்தோம் இவரின் வீரம் விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை,லெப்டினன்ட் சங்கீதா, கணகசுந்தரம், ரேணுகா வீரப்பிறப்பு04/09/1974 வீரச்சாவு05/08/1990 முகவரி சங்கீதா வீதி திருநெல்வேலி கிழக்கி யாழ்பாணம் 

பலமுறை நாங்கள்யாழ் கோட்டை மீது சண்டையில் ஈடுபட்டோம். அனைத்தும் தோல்வியில் முடித்தன.இதே காலப்பகுதியில் மற்ற ஒரு போர்முனையை எதிரி உருவாக்கினான், அரிகில் உள்ள மண்டைதீவைப்பாதுகாப்பதற்காக எமது 50பது போராளிகள் அங்கே கடமையில் இருந்தார்கள். இதின் தகவல் எதிரிக்குக்கிடைத்துவிட்டது இதனால் ஒரு பாரியதரையிறக்கம் ஒன்றை எதிரி மேற்கொண்டான். கடல் கரையை நோக்கி எதிரியின் போர்க் கப்பல் வேகமாகவந்துகொண்டுயிருந்தது.

அதில் இருந்த எம்மினத்துரோகி ஒருதன் இறங்க விட்டு அடிப்போம் என்று பிளையான தகவலை வளங்கினான். ஆனால் தரையிறங்கிய பின் நிலமை தலைகீழாக மாறி எதிரியன் கை ஒங்கியது. அதில் ஐம்பது எமது போராளிகள் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் அவர்களின் உடல்களை ஒரு பாளடைந்த கிணற்றுக்குள் போட்டு கொங்கிறீட் கலவையால் அதை மூடி விட்டான். தொடர்ந்து மண்டைதீவில் இருந்து யாழ் நோக்கி ஒரு பாரிய படை நகர்வு எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

இதை முன்கூட்டிய அறிந்த விடுதலைப் புலிகள் மண்டைதீவுப்பாலத்தைஊடைத்துவிட்டார்கள். அதனால் அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.


பின்னர் தலைவரின் சிந்தனையில் மணியன்னையின் தலைமையில் புதி ஆயுதங்களை செய்வதில் ஈடுபட்டோம். மணியன் தோட்டம் என்றயிடத்திலே இத்தொளில் சாலை அமைந்துயிருந்தது. கூடுதலான ஆரசாங்க வஸ் ஏனைய வாகனங்கள் உதிரிகளாகப்பிரிக்கப்பட்டு அதன் இரும்புகள் உருக்கப்பட்டது. அடுத்து புதிய வகையான கண்டம் விட்டு பாயும் ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டது.

அதின் பெயர் பசிலன் 2000 என்பது ஆகும் இது சுமார் 600m இரண்டாயிரம் கிலோக்கிராம் வெடிமருந்தை காவிச் சென்று வெடிக்கக்கூடியது இது அரிகில் வீழ்ந்து வெடித்தால் அவர்களின் செவிப்பறை முற்றாக செயல் இளந்து விடும்

 

. (இதுதான் செல்)
அதை விட ஒரே நேரத்தில் கூடுதலான இராணுவத்தை கொல்லக்கூடியது. இது இயக்கும் முறை சுமார் 25 மீற்றர் நிலவங்கறுக்குள் இருந்த படி சூட்சை அழுத்த வேண்டும் ஏனெனில் இது சில நேரங்களில் இயக்கும் போது தவறுதலாக தன்னையும் அளித்து விடும் அதனால் அவதானமாக இருக்க வேண்டும்.

இதுதான் அந்தப் பிராங்கி தலைவர் அதை பார்வையிடுகின்றார்,

அக்காலத்தில்புதுப்புது வகை ஆயுதங்களை சொந்தமாக உருவாக்கி வந்தனர். அந்த ஆயுதங்களுக்கு, மறைந்த தங்கள் போராளிகளின் பெயர்களை அவர்கள் சூட்டி வந்தனர். 


புலிகள், தங்களது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய கனரக மார்ட்டர் பீரங்கிக்கு ‘பசிலன் 2000‘ என பெயர் சூட்டியிருந்தனர். லாரி போன்ற ஒரு வாகனத்தின் மீது இதை நிலைநிறுத்தி இயக்க முடியும். இடம்விட்டு இடம் எளிதாக கொண்டு செல்ல முடியும்.



மேஜர் பசிலன் (நல்லய்யா அமிர்தலிங்கம்), முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். புலிகளின் வன்னிப்பகுதி தளபதியாக இருந்தவர். இவரது தலைமையின் கீழ்தான் புலிகளின் தலைசிறந்த தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் ஒரு காலத்தில் போராளியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படைக்கு எதிரான போரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய ராணுவத்தின் பல டாங்குகளைச் சிதறடித்தவர் பசிலன். 1987ஆம் ஆண்டு எறிகணை தாக்குதல் ஒன்றில் இவர் வீரமரணம் எய்தினார் 

                                              

இந்தப்பசிலன் கோட்டை மீது விடுதலைப் புலிகளால் சரமாரியாக அடிக்கப்பட்டது. எதிரிகளால் ஈடு கொடுக்க முடியவில்லை கடுமையான உயிர் சேதம் இராணுவத்திற்கு ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து யாழ் கோட்டையை விட்டு பண்ணைக்கடல் ஊடாக சிங்கள இராணுவம் ஓடித் தப்பியது. தமிழீழ மக்களும் விடுதலைப் புலிகளும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுநாளான 27 /09/1990 மூத்த தளபதி வானு அவர்களால் யாழ் கோட்டையிலே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அன்றைய நாள் தமிழர்களின் மிகவும் மகிழ்ச்சி நாளாகயிருந்ததுஇந்தக் கோட்டை ஒல்லாந்தரால்கட்டப்பட்டது பின் இந்தக்கோட்டை விடுதலைப்புகளால் உடைக்கப்பட்டு வீதிகள் திருத்துவதற்காகஅக்கல் பாறைகள்பயன்படுத்தப்பட்டது,.
                                          

21/06/1990 மன்னார் கொண்டச்சி முகாமை தாக்குவதற்கு விடுதலைப்புகள் திட்டமிட்டனர்,


                                                         


  இதே காலப்பகுதியல்தலைவரின் தூரநோக்கத்திற்கு அமைவாக அனைத்து மாவட்டர்களிலும் இருந்துதிறமையாகச் சண்டையிடும் போராளிகளை இனங்கண்டு ஒரு கொமாண்டோ அணிக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது அது இரண்டு வருடப் பயிற்சித் திட்டம் என தலைவரால் சொல்லப்பட்டது, அது தளபதி வசந் அவர்களின் தலைமையில் மன்னாரில்நடந்துகொண்டுயிருந்தது,

ஆனால் அதே காலம் மன்னார் கொண்டச்சி முகாமைதாக்கவேண்டிய தேவை தலைருக்கு ஏற்பட்டது, அதனால் நீங்கள் கொண்டச்சி முகாமைத்தாக்கி அங்கே இருக்கும் வவளையும் அதில் பூட்டி இருக்கும் எல் 3 ஆயுதத்தையும் எடுத்தால் உங்களின் பயிற்சி நிறைவு செய்யப்படும் என்று தளபதி சொர்ணம் அண்ணையூடாக தகவல் எமக்குத் தெரிவிக்கப்பட்டது,

அச்சண்டையை பிடிப்பதற்கானகட்டமைப்பு முதலாவது பொறுப்பாராக மேஜர் வசந் இரண்டாவது பொறுப்பாராக போராளி நி௹பன் இவர்கள் நியனிக்கப்பட்டார்கள், அடுத்து மன்னார் சேர்ந்த போராளிகளும் அதில் கலந்து கொண்டார்கள்,அவர்கட்கு போராளி கெக்லர் தலைமையில் ஒரு அணி வந்தது அதற்கு மண்ணார் மாவட்டத்தளபதி லெப்கேணல் சுமன் அவர்ககள்  தலைமை தாங்கினார், ஆனால் அச்சண்டை மேஐர் வசந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது ,

சண்டை தொடங்கி மிகக் குறிகிய நேரத்தில் வசந்தின் தலைமையில் சென்ற அணி யில் செல்லக்கிளி வசந்த ரெட்ணம் என்னும் பல போராளிகளும் மின்னல் வேகத்தில் கேம்புக்குள்ள பாய்ந்தார்கள்ஆனால் திடீரென தளபதியாகச் சென்ற வசந் வெடிப்பட்டு கீழே விழுந்தான் செல்லக்கிளி மயிர் இழையில் உயிர் தப்பிக் கொண்டான் ஆனால் இராணுவம் சுடவில்லை சூடு வந்த பக்கம் சுமன் தலைமையில் இறங்கிய மன்னார் அணியைச் சேர்ந்த போராளி கெக்லர் நின்றான், இவர்கள் இதை அவதானித்துவிட்டு ஏதோ தவறுதலாக நடந்து விட்டது என எண்ணி   தங்களின் கடமையை நிறுத்தவில்லை மின்னல் வேகத்தில் உள்ளே இறங்கி வவழை கைப்பற்றினார்கள்

, செத்தவன் சாக சாகாத ஆமி ஆயுதங்களையும் எறிந்து விட்டு தப்பி ஓடியது, ஆனால் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது தலைமை தாக்கி நடத்திய மேஐர் வசந்உட்பட வீரவேங்கை ரமணி, மட்டக்களப்பு-01 கப்டன் தனபால் கிளிநொச்சி-02 லெப்கோபிநாத் வவுனிய- 03 லெப் சுப்பிறமணியம் மன்னார்-04  வீரவேங்கை பிக்கான்ட் மன்னார்- 05 வீரவேங்கை சாந்தா மன்னார்- 06 வீரவேங்கை சுபித்திரன் மன்னர் - 07 வீரவேங்கை மேனன் மன்னார் 08 இதில் மொத்தம் 09 போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள் இதில் வீரவேங்கை ரமணி one, 4 பிரிவைச்சேர்ந்தவர் இவர் நிலமை அறிவிப்பாளராக அச்சண்டைக்கு சொர்ணம் அண்ணையால் அனுப்பப்பட்டவர்,

 அதில் வசந்தினுடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இளப்பாக இருந்ததுஅதில் பங்குபற்றிய அனைத்துப் போராளிகளிற்கும் பெரும் கவலையாகயிந்தது,  இதில் வவள் உட்பட பல தானியங்கி ஆயுதங்களும் வெடி பொருட்களும் எடுக்கப்பட்டது,சண்டை மிகவெற்றியாக நடந்து முடிந்தது

இத்தகவல் தலைவருக்குச்சென்றதும் மிக்க மகிழ்ச்சி அடைந்த தலைவர் உடனே தளபதி சொர்ணம் அவர்களை அனுப்பிஅவர்களின் பயிற்சியை நிறைவு செய்ததோடு மட்டும் அன்றி வாகணங்கள் அனுப்பி 120 போராளிகளையும் வவள் மற்றும் அங்கே எடுத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பழையில் இருந்த எழுதுவாட்டுவால் பயிற்சி முகாம்கொண்டு வந்தார் தளபதி சொர்ணம்.



நாங்கள், அங்கே மூன்று மாதம் நின்றோம், அவ்வேளை தளபதி கடாபி அவர்களினின் பாதுகாப்பணி ஒன்றுடன் தலைவர் வந்து எங்களோடு கதைத்தார் அன்று தலைவரின் ஒழுங்குபடுத்தலில் உணவுப் பாட்டி ஒன்றும் ஒங்குபடுத்தப்பட்டது, அன்று தலைவர் கதைத்த விடயம் நீங்கள் திறமையானவர்களாகயிருக்கவேண்டும் இன்றில் இருந்து உங்களிற்கு வரிப்புலிச்சீருடையில்லை உங்களிற்கு புள்ளிப் புள்ளியான ஒரு களரில் இந்தியவில் செய்ய ஓடர் கொடுத்துள்ளேன் நீங்கள் ஒரு கொமாண்டோ அணியாக இருப்பீர்கள் உங்களின் முதலாவது சண்டை மிக வெற்றியாக அமைந்துள்ளது,, என்று தலைவர் கதைத்தார்.

 அன்று அவரால் சில பரிசுப் பொருட்களும் எங்களிற்கு வழங்கப்பட்டது,தொடர்ந்து நாங்கள் உடல் பயிற்சிகளைய் செய்துகொண்டு அங்கே பல மாதங்களாக இருந்தோம் இடைக்கிடை தளபதி சொர்ணம் அவர்கள் வந்து இயக்க நடைமுறைரீதியாக எங்களோடு கதைத்து விட்டுச்செல்வார்,
 தொடர்ந்து அவர் எங்களைக்கண்காணித்து அதில் உயிரை அற்பனிக்கக்கூடிய திறமையானவர்களைத் தேர்ந்து எடுத்தார், அதில் அவரால் எடுக்கப்பட்ட65 பேரில் எனக்குயாபகம் உள்ளவர்களை குறிப்பிடுகின்றேன்,
 நான் திரு நிருபன் 02 மேஐர் மாறன் 03 மேஜர் குமரன் 04 லெப் கேணல் செல்வா மாஸ்ட்டர்  05 கேணல் குமரிநாடன் / வசந் 06  கட்டன் தினேஸ் 07   திரு மணியரசன் 08 லெப் ரெட்டியன் 09 திரு சுடர் 10 மாவீரன் சேகர்11 மொண்டியா12 மாவீரன் கலிஸ் 13  திரு கிசோ  14 செல்லக்களி 15  திரு ரெட்ணம் எங்கள் அனைவரையும் தளபதி சொர்ணம் அண்ணையால் வண்போர் குறுப்பிற்கு என தேர்ந்து எடுத்தார்.

 எடுக்கப்பட்ட 65 போராளிகளும் தளபதி சொர்ணம் அவர்களின் ஏற்பாட்டில் முதன்முதலாக 25/11/1990  நாவக்குளியில் இருந்த தென்னம் தோட்ட முகாமிற்கு வந்தோம்,

 அங்கே பாதுகாவலர் நிமலேஸ்வரனுடன் தளபதி சொர்ணம் அங்கே வந்தார், அவர் வந்தவுடன் 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஒடும் போது வாகனத்தில் பாய்ந்து காட்டினோம் அப்பொழுது கட்டன்  தினேஸ் மட்டக்களப்பு என்பவரின் கையுடைந்தது,

பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு கடமைக்கு ஏற்றவாறு அனைவரும் பிரிக்கப்பட்டனர், அதில் நிருபன் வட மரச்சி -மேஜர் குமரன் மட்டக்களப்பு மேஜர் மாறன் திருமலை -கேணல் குமரிநாடன் மன்னார்- இவர்களை பயிற்சி ஆசிரியராகத் தேர்ந்து எடுத்தார்தளபதி சொர்ணம், அடுத்து லெப் ரெட்டியன் திரு சுடர் இவர்கள் இருவரையும் தலைவரின் மேற்பாதுகாப்பிற்காகத் தேர்ந்து எடுத்தார், ரெட்ணம் சாவகச்சேரியில் இருந்த எமது படையணிபுளியடித் தடுப்பு முகாமிற்குப் பொறுப்பாக நியமணிக்கப்பட்டார்,
ஏனைய அனைவரையும் எமது படை பணியின் தாக்குதல் அணிக்குக்கொண்டு போனார்,

அப்பொழுது எமது தாக்குதல் அணியில் திரு கலபதி திரு உதயன் கப்டன் தீபன் இவர்களே உயிர் நிலைத் தலைவர்களாகயிருந்தார்கள் இவர்களை அங்கேகொண்டு போய் அனைவருக்கும் 75 பேருக்குகுப்பொபொறுப்பாளர்15  பேருக்கும் பொறுப்பாளர் 7 பேருக்குப் பொறுப்பாளர் என அனைவருக்கும் பொறுப்பு நிலைவழங்கி விடப்பட்டனர், 

 அனைத்துக் கட்டமைப்புக்களும் பிரித்து முடிந்ததும்அங்கே பிரதான பொறுப்பாக இருந்த கப்டன் தீபன் மற்றும் இவர்களில் இருபர் மூவரையும் ஏற்றிக்கொண்டு தலைவரின் பாதுகாப்பு முகாமிற்கு நானு சொர்ணம் அண்னை இவர்கள் மூவரும் ஆக ஐந்து பேரும் போய் சேர்ந்தோம், அடுத்த நாள் வந்து செல்லக்கிளியை ஏற்றிக்கொண்டுபோய் ராஜீ அண்ணையிடம் கொடுத்து விட்டு நானும் சொர்ணம் அண்ணயும் முகாமிற்குப்போய்ச்சேர்த்தோம்,                                                   
வசந் வளர்த்த போராளிகளான குமரிநாடன்  சில காலம் களிந்த பின்    


                                                                        

 கேணல் குமரிநாடான் சொர்ணம் அண்ணையிடம்மேஐர் வசந்த அவர்களின் பேரை தனக்கு வைக்குமாறு அனுமதி கேட்டார், அதை சொர்ணம் அண்ணை தலைவரிடம் அனுமதிஎடுத்தபின் சட்ட ரீதியாககுமரிநாடனின் பெயர் வசந்த என மாற்றப்பட்டது, அதைத்தொடர்ந்து குமரிநாடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் அது மட்டும் அல்ல எமது படையணியில் இறுதி வரை வசந் ஒரு ஆசிரியராகக்கடமையாற்றினான்,இதல்லாம் முடிந்தவுடன் கெக்லர் தவறுதலாகச்சுட்டு தளபதி வசந் வீரச்சாவு அடைந்ததை தளபதி சொர்ணம் அண்ணைக்குச் சொல்லி அத்தகவல் தலைவருக்குச் சென்றது, உடனே கெக்லர் அவர்களை எடுத்து விசாறனை மேற் கொள்ளுமாறு தளபதி சொர்ணம் அவர்கட்டு தலைவர் கட்டளை வளங்கினார்,

, உடனே சொர்ணம் அண்ணை கெக்லர் அவர்களை சாவகச்சேரிக்கு எடுத்து எமது படையணி தடுப்பு முகாம் ஆன முளியடி தடுப்பு முகாமில் அடைத்து ஒரு மாதம் விசாரனை மேற்கொள்ளப்பட்டது, அது தவறுதல் என தலைவருக்கு உறுதிப்படுத்தப்பட்டது, அதற்கு தலைவர் அவதானம் இல்லாமல் செயல்பட்ட காரணத்தால் ஒரு போராளியை நாம் இறந்துள்ளோம் அதனால் போராளி கெக்லர் அவர்களை விட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தலைவர் கட்டளை வழங்கினார், அதன்படியே தளபதி சொர்ணம் அண்ணை போராளிகெக்லர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்,

10/07/1990 அன்றுவிடுதலைப் புலிகளின் இரண்டாவது கரும்புலித்தாக்குதல்


10/07/1990 அக்காலப் பகுதியில் சிங்களக் கடல் படையினர் யாழ் கடல் ஓர மக்களின் சாதாரன இயல்வு வாழ்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். குறிப்பாக கடல் ஓரங்களை இலக்கு வைத்து 5/ அல்லது ஆறு கடல் மையில் தூரங்களில் நின்று 20 மில்லிமீற்றர் கணோன் பிராங்கிகளால் மக்கள் வாழ்விடக்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக கடல் படை தாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்தது.

அதனால் பயன் தரும் தென்னை மரங்கள் வீடுகள் அளிவது ஒரு பக்கம் இருக்க தொடர்ச்சியான மரண ஓலங்கள் கரை ஒயோர மக்கள் 1 அல்லது இருவர் மக்கள் தங்கள் உறவுகளை இளந்த வண்ணம் இருந்தார்கள். இதை அவதானித்ததலைவர் கடல் படைக்கு ஒரு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

அதற்காக ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்தவர்களும் தனது பாதுகாப்புக் கடமையில் இருந்தார்கள். அவர்களில் இருவர்தான் காந்தரூபன் மற்றும் கொலின்ஸ் . அதை விட வெளிப்படையணியில் இருந்த வினோத் அவர்களும் இருந்தார். மூவரையும் கூப்பிட்டு ஒரு கரும்புலி பயிற்சிக்கு தலைவர் அனுப்பினார். அவர்கள் தங்களின் பயிற்சியை எடுத்துக் கொண்டுயிருந்தார்கள்.

தொடர்ந்து அதற்கான வெடிமருந்துகளை தயார்படுத்தும் கடமைமையை தளபதி சொர்ணம் அவர்களிடமே தலைவர் ஒப்படைத்தார். அதையடுத்து சொர்ணம் அண்ணை எமது படையெணி மூத்த போராளி ஜெகன் அல்லது றைவர்


 அவர்களிடம் வெடிமருந்து நிறப்பும் கடமையை ஒப்படைத்தார். அடுத்து நானும் றைவர் அண்ணையும் வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டில் இறக்கி 15 பணியாளர்களை வைத்துC 4 என்ற வெடிமருந்து 25 லீற்றர் வெறும் கேண்களில் நிறப்பப்பட்டது.

ஒரு இரவு விடிய விடிய இவ்வேலை நடந்தது மருந்து மணம் ஒவ்வாமையால் ஒரு சிலருக்கு தலைச் சுற்று ஏற்பட்டதை என்னால் அவதானிக்க முடிந்தது. காலை விடிந்ததுது நிரப்பிய அனைத்து கேண்களையும் நானும் றைவர் அண்ணையும் ஒரு கண்டர் ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பருத்தித்துறையில் உள்ள கடல் புலிகளின் முகாமிற்கு கொண்டு போய் அதை ஒப்படைத்தோம்..
அதைக் கொடுத்து மூன்றாவது நாள் காந்தரூபன். கொலின்ஸ் மற்றும் வினோத் மூவரும் கரும்புலியாக சென்று வல்வெட்டித்துறை கடலில் நின்ற கடல் படை பெரிய கப்பலான எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது அக் கப்பலை மூழ்கடித்தனர். அனைத்து சிறிய கப்பல்களையும் வளி நடத்திய இந்தக் கப்பல் தான் என்பது பின்னர் எமக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மக்கள் நிம்மதியாகவாழ்ந்தார்கள




 வாழ்ந்தார்கள்.

காந்தரூபன் இறுதியாக தலைவரிடம் விடைபெறும் போது ஒரு நிவந்தனையை சொல்லிச் சென்றான். தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை எமது இயக்கம் தத்தடுத்து சிறந்த முறையில் அவர்களை படிப்பித்து  வளர்க்க வேண்டும் என்பதே அவனின் நிவந்தனையாகயிருந்தது.   ஏனெனில் அவனும் ஒரு அனாதையாக வளர்ந்தவன்அதனால் அவனிடம் அந்தச் சிந்தனை இருந்தது.அக் கடமையை தலைவர் நிறைவேற்றினார். காந்தரூபன் அறிவுச்சோலை என்ற பேரில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பிள்ளைகள் எடுக்கப்பட்டு அங்கே வளக்கப்பட்டார்கள்.ஒவொருமாவீரனும் வீரச்சாவு அடையும்போது தலைவருக்குச்சொன்ன கடமைகளை செயல்படுத்துவதில் மிகவும் கவனமாக இருந்து அதை சிறந்த முறையில் தலைவர்நடைமுறைப்படுத்திவந்தார்



இதேகாலப் பகுதியில்தான் கிழக்கு இலங்கையில் அமைந்து இருந்த கும்புறுமுலை மற்றும் கழுவாஞ்சூடி சிங்களப்படை முகாம் மீது விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் நடாத்தப்பட்டது நூற்றுகாணக்காண போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். அச்சண்டை தோல்வியில் முடிந்தது. அது அப்படியிருக்க

22/07/1990 யானையிறவில் இருந்து பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை சிங்கள இராணுவம் மேற்கொண்டது 


அதின் நோக்கம் கிளிநொச்யில் இருந்த இராணுவம் மற்றும்சிறிலங்காகாவல்துறையைமீட்டுயானையிறவிற்குகொண்டுபோவதே அவர்களின் நோக்கமாகயிருந்தது. இதை எதிர்த்து பால்ராஜ் அவர்களின் தலைமையில் சண்டை நடைபெற்றது. இருந்தும் இதை விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாமல் போனது இராணுவம் தனது திட்டத்தை நிறைவேற்றியது கிளிநொச்சியில் இருந்த இராணுவத்தை மீட்டு யானை பிறவிற்குகொண்டு சென்றது. இதில்தலைவரின் பாதுகாப்பு அணியைச் சேர்ந்த 


லெப்டினன்ட் சி ட்டன்.உட்பட வீவேங்கை தாகன் யாழ்,வீரவேங்கை சீலன் மட்டு, கப்டன் பிரபா யாழ், லெப் சிட்டன் மட்டு,2ம் லெப் தங்கப்பா யாழ், வீரவேங்கை முத்து யாழ், வீரவேங்கை டெனா, வவுனியா,2ம் லெப் தேவன் முல்லைத்தீவு என எட்டுப்போராளிகள் வீரச்சாவு அடைந்தனர் இதில் 50 போராளிகள் காயம் அடைந்தனர்,
மற்றும் மேஜர் காஞ்சனாவும் அடுத்த நாள் விரச்சாவு அடைந்தார்

 23//0/7/1990 அன்றுகீரிமலைகடல் கரையில் சிறிலங்கா கடல் படையின் பாரிதரையிறக்க  நடபடிக்கை

 விடுதலைப்புலகளால் ,முறிக்கப்பட்டது
முன்கூட்டிய எங்களிற்கு தகவல் வந்தது.

 அதை அடுத்து மேஜர் குணா அண்னை எங்களின் பிக்காப்வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆயிரம் 50 கலிபர் ரவைகளை ஏற்றிக்கொண்டு குணா அண்ணை வாகணத்தை ஓட்ட  யக்சன், லெனின். திவாகர்.சரவணன் நான் வாகணத்தில் ஏறினோம் கடும் வேகமாக நாங்கள் கீரிமலையை நோக்கி சென்றுகொண்டுயிருந்தோம்.

அங்கே சென்றதும் கீரிமலை கோயில்மடத்திற்குப்பின்னால் எங்களின் வாகணத்தை குணா அண்ணை மறைத்துவைத்தார். அப்பொழுது யாழ் மாவட்டத் தளபதியாகயிருந்த தினேஸ் தற்போதைய பெயர் தமிழ்செல்வன் இவரின் படையெணியான உ பிரிவு என போராளிகல் அழைக்கப்படும் இவர்களின் படையணியும் அங்கே நின்றது. ஒரு 30 கலிபறும் அவர்கள் வைத்துயிருந்தார்கள்.



யக்சன் ஒரு புது நிலைப் போராளி யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்டவன் அவன் ஒரு குறுப்புக்காரன் கடுமையான முஸ்ப்பாத்திக்காரன். சண்டையை தான் எப்படி எதிர்கொள்ளப்போகின்றேன் என நினைத்து கடுமையான பதட்டம் அவனிற்கு இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவனின் பதட்டத்தை போக்குவதற்காக அடிக்கடி என்னை டொக்டர் டொக்டர் என கேலி செய்துகொண்டுயிருந்தான்.

அப்பொழுது குணா அண்ணையக்சனைக் கூப்பிட்டுச் சொன்னார். நேவியின் போட் 400 மீற்றர் வர நான் கடல் கடல்கரையில் கொண்டுவாகனத்தை நிறுத்துவேன் நீ போட்டை நோக்கிச் சுட வேண்டும் என்று அவர் யக்சனிடம் சொன்னார்.

அதற்கு அவன் சரியென்று சொன்னான். கடலில் இருந்து சுமார் 400 மீற்றர் கடல் படையின் வோட் உறுமிக்கொண்டுவந்தது. திடீர் என குணா அண்ணை கடல் கரையோடுவாகணத்தைநிறுத்தினார் அடிறாயக்சன் என பல மான கட்டளை வளங்கினார்.

யக்சன் கடுமையாகப் பதட்டம் அடைந்தான் 50 கலிபறை பின்னால் திருப்பினான் அதுதவறுதலாகவெடித்து பின்னால் இருந்த போஸ்மரம் விழுந்தது. முன்னால் அடித்தான் அது கடல் தண்ணீரில் குத்தியது. இதைப்பார்த்த குணா அண்ணைக்கு கடுமையான கோபம்அவருக்குவந்தது. உடனே குணா அண்ணை வாகணத்திற்கு மேலே ஏறினார் நெஞ்சு என்னத்திற்கு வைத்துயிருக்காய் ஒக்குறா ஓக்குறா ஓழுங்காகத் தெரியாதாத? என தூசணத்தில் பேசி அவனை வெளியே தூக்கி எறிந்தார்.

பின்னர் குணா அண்ணை ஆயுதத்தை வேண்டி அந்த வோட்டை நோக்கி 3 தடவை செய்யின் பெட்டி மாத்தி மாத்தி சுமார் 300 ரவைகள் அந்த நேவி வோட்டை நோக்கிச் சுட்டார். கடல் படையின்போட் கடுமையானதேசம் அடைந்தது எதிரிக்கு கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவ் நடவடிக்கையில்யிருந்து அவன்  பின்வாங்கிச் சென்றான்.

தொடர்ந்து நிலமை அமைதியாகயிருந்தது அப்பொழுது எங்களிற்கு கடுமையான பசியாகயிருந்தது இதை அவதானித்த குணா அண்ணை அரில் உள்ள ஒரு தேனீர்கடைக்குச் சென்று சுட சுட ரீ மற்றும் வனிஸ் என்பன வேண்டித்தந்தார். அதைச்சாப்பிட்டு பசி ஆறிக்கொண்டு தச்சான்காட்டை நோக்கிச் சென்றுகொண்டுயிருந்தோம்.
திடீர் என ஒரு ரொக்கேட் தாக்குதல் எங்கள் வாகணத்தை நோக்கி விமானம் ஏவியது. அத்தாக்குதலில் இருந்து மயிர் இளையில் நாங்கள் தப்பினோம். அக்குண்டு அரிகில் இல்யிருந்த புல் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.

மறுபடியும் வொம்பர் கலைத்து வருவதாக மக்கள் கையைக்காட்டினார்கள். உடனே குணா அண்ணை அரிகில் உள்ள ஒரு பிளேட் வீட்டில் வாகணத்தைமறைப்பாக உள்ளே விட்டார். வெளியே வந்த வீட்டிற்கு சொந்தமான பெண் என்னுடைய கணவரும் கால் இல்லாமல் இருக்கின்றார் எனது வீட்டிற்கு விமானம் தாக்கப்போகின்றது உடனே வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே போங்கோடா. என சத்தமான குரலில் பேசி அழுதிக்கொண்டுயிருந்தார்.

இதைப்பார்த்த 18 வயதுடைய அவரின் மகன் அண்ணாக்களை அலைக்க வேண்டாம் அம்மா என்று அவர் கேட்டதற்கு நீராடா வீடு கட்டினாய் என்று கேட்டு மகனையும் பேசிக் கலைத்தார் அப்பெண். இதைப் பார்த்துக் கொண்டுயிருந்த குணா அண்ணைக்கு கடுமையான கோபம் வந்தது. உடனே பிக்காப்வாகனத்தை வெட்ட வெளியில் கொண்டு விட்டார். அடிரா யக்சன் என தனது இறுக்காமன கட்டளையை வளங்கினார் குணா அண்ணை விமானம் சுற்றிக்கொண்டுயிருந்தது அவ்விடம் பதட்டமாகயிருந்தது.

குணா அண்ணை வாகணத்திற்குள்ளே றைவர் இருக்கையில் இருந்தார். எங்களை சுற்றி பாதுகாப்பான இடங்களில் நிலையெடுக்குமாறு கட்டளையிட்டார். நாங்கள் நிலையெடுத்துக்கொண்டு வாழ்வா சாவா என பார்த்துக்கொண்டுயிருந்தோம்.

லெனின் 50 கலிபர் ரவைப் பெட்டிகளை பொருத்த யக்சன் விமானத்தை நோக்கி கடுமையானதாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்தான். தச்சன் காட்டு மக்கள் நீங்கள்பாதுகாப்பான இடங்களிற்கு ஓடித் தப்புங்கோ இல்லையென்றால் நீங்கள் விமானத் தாக்குதலில் சாகப்போகின்றீர்கள் என்று சொல்லி ஒப்பாரி வைத்து அழுதிக் கொண்டுயிருந்தார்கள்.

யக்சனைப்பார்க்க எங்களிற்கும் கவலையாகயிருந்தது எங்களை அறியாமெலே கண்ணால் தண்ணீர் வந்தது விமானத்தின் உடைய ரொக்கேட் அரிகில் வந்து வீழ்ந்து வெடித்துக்கொண்டுயிருந்தது. யக்சன் சுமார் 400 ரவைகள் அடித்து முடித்தான் விமானம் அவ்விடத்தைவிட்டு ஓடித் தப்பியது. அடி விமானத்திற்குபிடித்துவிட்டது என குணா அண்ணை எங்களிடம் சொன்னார். எங்களை பார்த்துக் கொண்டுயிருத்த மக்கள் கைதட்டி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

யக்ஸ்சன் கடுமையான மகிழ்ச்சியில் காணப்பட்டான் 3 மணித்தியாலத்திற்கு முன்னர் கீரிமலையில் குணா அண்ணையால் வாகனத்தில் இருந்து தூக்கி ஏறியப்பட்ட யகஸ்சன் மீண்டும் தனது வீரத்தை நிலைநாட்டினான். அதைத் தொடர்ந்து யாழ் கோட்டையை நோக்கிச் சென்றோம்.


                                    


25/07//1990  அக்காலப்பகுதியில் கடல்பகுதிகளைக் கண்ணிப்பதற்கும் கடல்லுடாக சில கொள்வனவுகளை செய்வதற்கும் . விடுதலைப் புளிகளின் படைக்கட்டமைப்பாக கடல்புறா இருந்தது. அதற்கு சிறப்புத் தளபதியாக தளபதி கடாபி அல்லது ஆதவன் அவர்கள் இருந்தார். பெரிய வள்ளங்களில் இந்தியாவில் இருந்து வோக்கி வெற்றி மருந்துப் பொருட்கள் ஏனையவை தமிழீழம் கொண்டுவருவது வளமையாகயிருந்தது.

அந்த நடவடிக்கைகளிற்கு கேனல் சங்கர் அவர்களே பொறுப்பாகயிருந்தார். அது மட்டும் அல்ல அவரே நேரடியாகப்போய் அனைத்துப்பொருட்களையும் வேண்டிக்கொண்டு அவரே அந்த வண்டியையும் ஒட்டிவருவார். அக்காலப் பகுதியில் சங்கர் அண்ணை சாமன் கொண்டுவருகின்றார் என்றதகவல்   தலைவர் ஊடாகத் தளபதி கடாபியண்ணைக்கு கிடைத்தது.

அதையடுத்து இந்தியா இராணுவத்திடம் எடுத்த பெரிய றக்கில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு றைவர் அண்ணை பின்னால் வர கடாபியன்னை . முருகேஸ் . நான் மூவரும் ஒரு ஜீப்பில் முன்னே சென்று கொண்டுயிருந்தோம். போராளிகளின் ரக்கைப்பாதுகார்த்தவாறு சின்னமணி ஐம்பது கலிபர் பிக்காப்வாகனத்தை ஓட்டி வந்து கொண்டுயிருந்தார். நாங்கள் சாவகச்சேரியில்யிருந்து வெற்றிலைக்கேணியூடாக கட்டைகாடுசென்றோம்.

கட்டைக்காட்டுப்பகுதி கடுமையான மணலாயிருந்தமையால் வாகனங்கள் பின்பக்கத்தால் மெதுவாகச் சென்றுகொண்டுயிருந்தோம். அங்கே சென்றதும் வாகணத்தை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு கடாபி யண்ணையோடு நானும் முருகேசும் சென்றுகொண்டுயிருந்தோம்.

கடல் கரையை அண்மித்த ஒரு சிறு காட்டிற்குள் படகில் இருந்து சாமான்களை இறக்கு அடிக்கிவைத்துக் கொண்டு சங்கர் அண்ணையிருந்தார். நாங்கள் போனதும் இருங்கோ தம்பி மச்சான் என சொல்லி விட்டு பளம் ரின்களை வெட்டி எங்களுக்கு பரிமாறினார்.

பளங்களை நாங்கள் சாப்பிட்டுக்கொண்டுயிருந்தவேளை பேர் இரச்சலோடு சிங்கள நேவி வோட் வேகமாக வந்து எங்களின் வெறுமையான வோட்டை தாக்கிவிட்டு சென்றது. வோட்டிற்குக்குள் சாமான் இருக்குதா அண்ணெ என்று கடாபி அண்ணை சங்கர் அண்ணையிடம்கேட்க இல்லை பழம்ரின்கள் மட்டும்தான் சிறிது கிடக்கின்றது என பதில் அளிக்கின்றார்.

அடுத்து அனைத்து சாமான்களையும் ஏற்றிக்கொண்டு சங்கர் அண்ணையை எங்களின்வாகணத்தில் ஏற்றிக்கொண்டுபாதுகாப்பாகச் சாவகச்சேரிக்குச்சென்றோம். 

30/08/1990  றோமியா நவம்பர் அல்லது லெப் கேணல் ராஜன் அவர்கள்ளின் குடும்பம் எமது போராட்டத்திற்கு செய்யத கடமையை மறக்க முடியாது.


ராஜன் அவர்களின் அண்ணாவின் வீடு  மாதகல்லில் இருந்தது அப்பொழுது எமது கடல் புலிகள் பெரிதாக வளரவில்லை அப்பொழுது நானும் சொர்ணம் அண்ணையும் அடிக்கடி அவர்களின் வீட்டிற்குச்சென்று லக்ஸ்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டுவரும்வோம் பின் குறிப்பிட காலம் சென்று எமக்கு அவசரமாகத்தேவைப்படும் வோக்கி வெற்றி மற்றும் மருந்துப்பொருட்கள் பெண் போராளிகளிற்குத்தேவையான பொருட்கள் என்பன அவர் இந்தியவிற்குச் சென்று வேண்டிக்கொண்டுவந்து அவரின் வீட்டில் வைப்பார்,

 அது மிகவும் உயிர் ஆவத்தான பிரச்சனை என்பது எமக்குத் தெரியும் உயிரை அற்பனித்து விடுதலைப் போராட்டத்திற்கு கடமை செய்த குடும்பம் தான் அந்தக்குடுபம் 

பின்னர் நாங்கள் அப்பொருட்களை ஏற்றிக்கொண்டுவருவோம் , ஒரு நாள் ராஜன் அவர்களின் அண்ணி எங்களிற்கு சாப்பாடுதருவதற்கு ஒழுங்குபடுத்திவைத்துயிருந்தார், அவர் அன்று எங்களிற்கு கோழி வுறியானிச்சாப்பாடும் இரண்டு முட்டைகளும் அவித்து வைத்துயிருந்தார், சொர்ணம் அண்ணைக்கு ஒரு முட்டையும் அவரின் கணவருக்கு ஒரு முட்டையும் வைத்தார், ஆனால் எனக்கு வைக்கவில்லை ,எனது சாப்பாட்டுப் பிளேட்டை பார்த்த சொர்ணம் அண்ணைக்கு முகம் கறுத்துபோய்விட்டது,

உடனே சொர்ணம் அண்ணை தனது முட்டையை தூக்கி எனது பிளேட்டில் வைத்து விட்டார், நான் நீங்கள் சாப்பிடுங்கோ அண்னை  என்றேன் பொத்துடா வாய் என்றார் நான் எதுகும் கதைக்கவில்லை அப்பெண் வேகமாகச்சென்று முட்டை பொரித்துக்கொண்டு அவரின் உணவுத்தட்டில் வைத்தார்., தான்முட்டைசாப்பிடுவது இல்லையென்று அவரிக்குத்தெரியப்  படுத்தினார்,சொர்ணம் அண்ணன

 ஆனால் அது அவர்களிற்கு பெரும் கவலையாகயிருந்தது பொரித்த முட்டையைவைத்து ஒரு சாப்டாட்டுப்பாரிசல் எங்களிற்குத் தேவையென சொர்ணம் அண்ணன சொல்ல சிரித்த முகத்துடன் அவர்போய் சாப்பாட்டை கட்டிக்கொண்டுவந்து எங்களிற்குத்தந்தார், அதை வாகனத்திற்குப்பக்கத்தில்நின்ற போராளிக்குக்கொண்டுபோய் நான் கொடுத்தேன் ஒவ்வொரு போராளியிலும் அன்பும் பாசமும் வைத்துயிருந்தவர்தான் தளபதி சொர்ணம் அண்ணன.எங்களின் படையணிப்போராளிகள் உயிரையே வைத்து இருந்தார்கள்அவர் மீது





23/11/1990 வன்னியில் இருந்த சிறு முகாம்களை அளித்தொளித்தால் தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது, 


 வடமாகானத்தில் இருந்தஅனைத்துமுகாம்களையும் துடைத்து எறிய வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது. அத்திட்டத்திற்கு அமைவாக மாங்குளம் சிங்களப்படைமுகாம் தாக்குவதற்கான திட்டம் விடுதலைப் புலிகளால் தீட்டப்பட்டது.

மேதகு வே.பிரபாகரன் அவர்களால் அந்  நவடடிக்கைக்கான கட்டளைத்தளபதிகளான தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பால்ராஜ் அவர்கள் நியமணிக்கப்பட்டனர். சண்டைக்கான பயிற்சி நடைபெறும் போதே போர்க் தன்னிடம் சொன்ன  விடயத்தை தளபதி சொர்ணம் ஊடாக தலைவரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அப்படி என்ன தான் போர்க்சொன்னார் மாங்குளம் தாக்குவதாகயிருந்தால் தான் தான் கரும்புவியாகப்போக வேண்டும் என்பதே போர்க் அவர்களின் நிவந்தனையாகயிருந்தது.

அவ் நிவந்தனையை தலைவர் ஏற்றுக்கொண்டார். அனைத்துப் பயிற்சிகளும் நிறைவடைந்து சண்டை ஆரம்பம் ஆனது. வோக்கி அலரத்தொடங்கியது தளபதி பால்ராஜ் மற்றும் சொர்ணம் இருவரும் கட்டளையை வளங்கிக்கொண்டுயிருந்தார்கள். காத்தை ஊடறுத்தவாறு வெடிமருந்து ஏற்றியவாகனத்தை லெப்கேணல் போர்க் அவர்கள் வேகமாக ஓட்டி முகாம் உள்ளே நுளைந்தார். சிறிது நேரத்தில் .

பேர் இரச்சலோடு கரும்புலிவாகனம் வெடித்து சிதறியது. முகாமில் இருந்த சிங்களப்படையினர் செத்தவன் சாக ஏனையவர்கள் சிதறி  காடுகளிற்குள் ஓடித்தப்பினார்கள். படை முகாம் விடுதலைப் புலிகளால் முற்றாக அளிக்கப்பட்டது. லெப் கேணல் போர்க் உட்பட பல போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். பெரும் தொகையான ஆயுதம் வெடி பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்து.

மாங்குளம் சண்டை பற்றி தளபதி பால்ராஜ் அவர்கள் குறிப்பிடும்போது நாங்கள் அடித்துக் கொண்டு போகும் போது ஒரு கட்டத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது நான் சொர்ணத்தை ஒரு பக்கம் இறக்க வா என தலைவரிடம் கேட்டேன் அதற்கு தலைவர் சொன்னார். சொர்ணம் போனாலும் சரி நீர் போனாலும் சரிவிடியிரத்திற்குள் எனக்கு மாக்குளம் வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே தலைவரின் இறுக்கமான கட்டளையே இந்த வெற்றிக்குக்காரணம் என பால்ரரஜ் அவர்கள் குறிப்பிட்டார்.லெப் கேணல் போர்க் 23.11.1990 அன்று முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படை முகாம்மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவை தழுவிக்கொண்டார். pork



எதிரியைச் சிதறடித்து வரலாற்றில் தடம் பதித்த மாங்குளம் முகாம் தகர்ப்பு

சிறிலங்கா அரசிற்கும் – விடுதலைப் பேரியக்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களினடிப்படையில் இந்திய வல்லாதிக்கப் படைகள் 1990 பங்குனியுடன் இலங்கையிலிருந்து முற்றாக வெளியேறிய நிலையில் வட-கிழக்குப் பிராந்தியத்தியம் முழுவதும் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வர ஸ்ரீலங்காப் படைகள் ஆங்காங்கே முகாம்களுக்குள் முடங்கிக் கொண்டனர்.

வரிப் புலிச் சீருடை தரித்த புலிகளின் ஆண், பெண் போராளிகள் அணியணியாக நகரங்களில் வந்திறங்குகின்றனர். மக்கள் ஆழ்ந்த வியப்புடன் இக் காட்சிகளை திரண்டு சென்று பார்க்கின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட பெரும் பிரதேசங்களில் புலிகள் நிர்வாக நடவடிக்கைகளை வீச்சுடன் தொடங்குகின்றனர். இளைஞர்களும் யுவதிகளும் அணியணியாக இயக்கத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் பிரேமதாஸ-புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைய 1990 ஆனி மாதம் 10ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகின்றது. அந் நேரம் வடபிரதேசத்தின் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்க படையினர் தங்கியிருந்த சில முகாம்களை புலிகள் சுற்றிவளைத்து தமது இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டுவருகின்றனர். யாழ் கோட்டை, ஆனையிறவு, பலாலி, மற்றும் மாங்குளம் ஆகிய முகாம்கள் இவ்வாறு முற்றுகை வளையத்துள் வந்தன. இவ் இராணுவ முகாம்களிற்கான விநியோகங்களை ஹெலிகொப்டர்கள் மூலமாகவே இராணுவம் மேற்கொண்டுவந்தது. இவற்றுள் யாழ் கோட்டை இராணுவ முகாமை கடுமையான சமர்களின் பின்னர் 1990 புரட்டாதி மாதம் 26ம் திகதி தியாகச் செம்மல் திலீபனின் மூன்றாவது நினைவு நாளன்று புலிகள் முற்றாக மீட்கப்படுகின்றது.

இந் நிலையில் வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தை போன்று அமைந்திருந்த மாங்குளம் இராணுவ முகாமை தகர்த்து அழித்து அப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு புலிகள் திட்டமிட்டனர். அப்போதைய வன்னிப் பிராந்தியத் தளபதி பால்ராஜ், உதவித் தளபதி தீபன் மற்றும் தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பாளர் தளபதிஆகியோருடன் வன்னியின் மாவட்டத் தலைவர்கள், குழுத்தலைவர்களும் சேர்ந்து மாங்குளம் முகாமின் அமைப்பு, அதன் பலம்-பலவீனம் ஆகிய இராணுவ விடயங்களை நுணுகி ஆராய்ந்து தாக்குதலுக்கான திட்டங்களை வரைந்தனர்.





அச்சண்டையில் பங்குபற்றிய போராளி குறிப்பிடுகையில்


21.11.1990 மாவீர்ர் வாரத்தின் தொடக்க நாள். மண்ணுக்காக மரணித்த வீரமறவர்களை தாய்மண் நினைவு கூர்ந்து கொண்டிருக்க புலிகளின் பீரங்கிப் படையணிகள் சுறுசுறுப்பாக தமது வேலையை ஆரம்பித்தன. முகாமையும் அதன் பிரதான காவலரண்களையும் குறிபார்க்கும் வண்ணம் தமது தயாரிப்பான பசிலன்-2000 ஏவுகணைகளை நிலைநிறுத்திக் கொண்டனர். முகாம் தகர்ப்பிற்கான தாக்குதலணிகளும், பக்கபலமாக செயற்படுவதற்கான உதவித் தாக்குதல் அணிளும், இவர்களிற்கான ஆயுத-வெடிமருந்துகளை வழங்க விநியோக அணிகளும், தாக்குதலில் காயமடையும் போராளிகளை அப்புறப்படுத்த மீட்புக் குழுக்களும், அவர்களுக்கு சிகிச்சை வழங்கவென 18-22 வயதேயான சீருடை தரித்த இளம் மருத்துவ அணியினரும் பிரிக்கப்பட்ட அவரவர்களுக்குரிய கடமைகளும், கட்டளைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கார்த்திகை 22ம் நாள் கதிரவன் மறையத் தொடங்க அணிகளும் தத்தமது கடமை இடங்களுக்கு நகரத்தொடங்குகின்றன. மீண்டும் தாம் சந்திக்க முடியாமல் போகலாம் என்பதை நன்கறிந்து கொண்டவர்களாய் வேறு வேறு தாக்குதலணிகளில் இருந்த நண்பர்கள் பரஸ்பரம் விடைபெற்றுக் கொள்கின்றனர். 

சரியாக இரவு 7.00 மணிக்கு முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளும் இயங்க வைக்கப்படுகின்றன. 23ம் நாள் விடிகாலைப் பொழுதில் பெரும்பாலான காவலரண்களும் மினிமுகாம்களும் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வருகின்றன. பின்வாங்குதலும் முன்நகர்தலுமாக பகல்பொழுது அமைந்திருக்க மாலை 4.00 மணியளவில் பிரதான முகாம் தவிர்ந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு 57 போராளிகளின் இழப்புடன் முதலாவது தாக்குதல் திட்டம் நிறைவிற்கு வருகின்றது.

 இவ்வாறு வீரச்சாவடைந்தவர்களில் கப்டன் ஜெகன், கப்டன் வதனன், மேஜர் திலீப் ஆகியோர் இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர்.
 பல தாக்குதல்களில் ஒன்றாகப் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். புகைப்படக் கருவியை வைத்திருந்த சக போராளியை பார்த்து ஜெகன் கூறினானான் ”மச்சான்! எங்கள் மூன்று பேரையும் ஒரு படம் எடுத்து விடு. நாளைக்கு சுவரில தான் நிப்பம்இப்படித்தான் இவர்களின் பன்பல் அன்று இருந்தது”  . 23.11.1990 முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளையும் முன்னோக்கி நகர்த்திய அணிகள் பிரதான முகாமை குறிவைத்து சரியாக இரவு 8.00 மணிக்கு சகல பீரங்கிகளையும் இயக்கின.

பேரொசைகளுடன் முகாம் பகுதி அதிர்கின்றது. நள்ளிரவு தாண்டி 1.00 மணிக்கு பீரங்கிகளின் அனைத்து இயக்கமும் நிறுத்தப்பட யாழ்-வவுனியா பிரதான வீதியிலே வெடிமருந்து வண்டியுடன் தயாராக கரும்புலி லெப்.கேணல் போர்க். முகாமைச் சுற்றியிருந்த அனைத்து அணிகளுக்கும் வெடிமருந்து வண்டி செல்லப் போகும் செய்தி இரகசிய பாசை வழியாக அறிவிக்கப்படுகின்றது. 

போராளிகள் பாதுகாப்பாக நிலையெடுத்துக் கொள்கின்றனர். துணைத் தளபதி தீபனிடம் இறுதி விடைபெற்றுக் கொண்ட இரண்டாவது தரைக்கரும்புலி தன் இலக்கு நோக்கி நகர்ந்து சென்று பிரதான முகாமின் மையப்பகுதியில் வெடிக்கின்றான். மாங்குளம் பிரதேசம் முழுவதுமே அதிர போர்க் காற்றோடு கலந்தான். புகைமண்டலமாக காட்சியளித்த முகாம் பகுதியை நோக்கி நிலையெடுத்திருந்த புலியணிகள் விரைந்து சென்று சல்லடை போட்டு முகாமை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றன.

 இத் தாக்குதல்களில் பங்கு கொண்ட போராளிகளில் மொத்தமாக 108 பேர் வீரச்சாவடைந்தனர்.

இவ்வாறாக விடுதலையை அவாவி நின்ற எம் இளைஞர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளில் அளவிட முடியாதவை. சொற்களில் வர்ணிக்க முடியாதவை. இவர்கள் விடுதலை வேண்டி பட்ட துன்பங்கள், இழப்புகள், வேதனைகள் எண்ணிறைந்தவை. என்றோ ஒரு நாள் இவர்களின் உயிர்விலைக்கான அறுவடை பெறப்படும். அப்போது வருடத்தின் இந் நாட்களில் இன்றைய இளைஞர்களிற்கான வழிகாட்டிகளாக இவர்கள் ஒளிவீசிப் பிரகாசிப்பர்.

போர்க் அவர்களின் மன நிலை எப்படி இருந்தது அவரின் உறவினர்கள்


“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்
வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.

இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. 

“நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.
அந்தக் குரலில் உறுதி தெரிந்தது”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.

கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….
இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.

“ தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” ‘ஏன் சாகப் போறியளோ’ பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன ”
அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.

கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.
சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.
சிறிது நேரத்தின் பின்
தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.இப்படித்தான் ஒவ்வொரு கரும்புலிமரவர்களும் தங்களின் இரகசியத்தைப்பாதுகார்த்தார்கள்


90களில் இருந்து யாழ் மாவட்டம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது இராணும் இப்படியான சண்டைகளில்தான் ஈடுபடும் அச்சம்பவத்தில் பங்குபற்றிய போராளி ஞானகி குறிப்பிடுகையில்,திடீரேன பின்வாங்வாங்குவது அவர்களின் தொடர் நடவடிக்கையாகயிருந்தது காவல் அரனை தாக்க வந்த இராணுவத்தின் முயற்சியை முறியடித்து முதன்முதலாக இராணுவத்தின் பொடி எடுத்தபெருமையுடன் பெண் போராளிகளின் வீரத்தை நிலைநாட்டி இறுதியில் தன்னையும் அற்பணித்த கப்டன் அஜித்தா,





22/12/1990 கட்டுவனில் பெண் போராளிகளின் வீரம்

அக்காலப்பகுதியில் யாழ் மாவட்டத் தளபதியாக வாணு இருந்தார் மகளீர்ருக்குக் கட்டளை அதிகாரியாக தளபதி விதுசா இருந்தார் அப்பொழுது நாங்கள் சிறு சிறு குழுக்களாக  யாழ் மாட்டத்தைச்சுற்றி இராணுவம் உள்ளேவராதவாறு காவல் அரன்களை அமைத்துயிருந்தோம்

, அப்பொழுது கட்டுவன் பகுதியில் அஜீத்தா மற்றும் ஜெனி தலைமையில் பல பெண் போராளிகள் காவல் கடமையில் நின்றோம்,

அக்கட்டமைப்புக்குப் பொறுப்பாக ஒரு பகுதிக்கு கப்டன் அஜித்தா பொறுப்பாகயிருந்தார் அடுத்த பகுதிக்குபொறுப்பாக ஜெனி இருந்தார், இரண்டு அணிகளிற்கும் இடையில் இருந்த காவலரனை பிடிப்பதற்காக விடிகாலை 5.30 மணி இருக்கும் கனரக ஆயுங்களால் தாக்கியவாறு பெரிதாக கத்திக்கொண்டு இராணுவம் முன்னேறி வந்தது,

 ஆனால் அவன் வந்து ஏறிய இடம் எமது வுறன் LMG வைத்து இருந்த இடம் ஆகும் அதனால் இராணுவம் கிட்ட வரும் வரை எமது போராளி செறிவான சூட்டை வழங்கிக்கொண்டுயிருந்தார், அதனால் பல இராணுவம் காயம் அடைந்தும்  நிலை அவர்களிற்கு ஏற்பட்டது,

 அதை விட நாங்கள் வாழ்வா சாவா என அனைத்தும் பெண்போராளிகளோடு நானும் நின்று கடுமையாகச் சண்டையிட்டோம் அதில் கட்டன் அஜித்தா அவ்விடத்தில விரச்சாவு அடைந்தார், என்னொருபோராளி செல்வா அச்சண்டையில்இரண்டுகைகளையும் இளந்தார், அச்சண்டையில் ஒரு இராணுவத்தின் பொடி எடுக்கப்பட்டது, அவன் வைத்து இருந்த ஒரு டொங்கான் எறிகணை செலுத்தியும் மேலும் பல ரவைகளும் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது,

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள்

அச்சண்டையை நாம் வெற்றிகரமாக முறியடித்தோம் அதில்நான் உட்படமேலும் பல பெண் போராளிகள் காயம் அடைந்தோம் , என அதில் பங்குபற்றிய போராளி ஞானகி குறிப்பிட்டார், 

இந்  நவடிக்கையில் வீரச்சாவு அடைந்த போராளிகள்
01 கப்டன் ஆசா பத்மாவதி, கலா, யாழ், வீரப்பிறப்பு06/04/1968 வீரச்சாவு22/12/1990

 02 கப்டன் அஜித்தா, சுகுணராணி, கந்தையா, யாழ் பிறப்பு22/02/1968.வீரச்சாவு:22.12.1990

 03 வீரவேங்கை சாம்சன், செல்வநாயகம் செல்வச்சந்திரன்.யாழ் பிறப்பு:26.04.1971வீரச்சாவு:22.12.1990

 04 வீரவேங்கை.ஸ்ராலின்.துரைரட்ணம் பபிதரன் பிறப்பு:28.03.1972வீரச்சாவு:22.12.1990 


04 வீரவேங்கை அலன்.குருசாமி ஜீவராசா, யாழ்,பிறப்பு:
27.01.1976,வீரச்சாவு:22.12.1990.

05 வீரவேங்கை.றமா.லோகேஸ்வரி சிதம்பரப்பிள்ளை, முல்லை பிறப்பு:02.02.1975வீரச்சாவு:

06 ,வீரவேங்கை  ,ரதிகலா,சுகந்தினி(யாழ்)பிறப்பு03.03.1975/:,வீரச்சாவு: 22.12.1990   மேற்படி இவர்கள் அவ்வெற்றிகரத்தாக்குதலிற்கு பெரும் சேர்த்ததோடு அச்சன்டையில் தங்களின் உயிரையும் அற்பணித்தனர்,

அஜித்தாவின் போராட்ட வாழ்வு பற்றி அவரோடு வாழ்ந்த பெண் போராளி குறிப்பிடுகையில்,

 எதிரியை வீழ்த்தும் துப்பாக்கிகளில் தனது துப்பாக்கியும் ஒன்றாக இருக்கவேண்டும்  


அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது. அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அஜித்தாக்காதான் எடுத்திருப்பா’ என்று. இன்று இந்தத் துப்பாக்கியில் இருக்கும் கவலையீனம்தான் நாளை எமது போராளிகள் உயிரைக்கொடுத்தெடுத்த துப்பாக்கிகளிலும் இருக்கும்.

 அவர்களின்ரை உயிர்கள் தான் இந்த துப்பாக்கிகள். ஆனபடியால் அவற்றை எங்கட உயிரைவிட மேலாக நினைக்க வேண்டும். கவனமாக அவற்றை நேசித்தபடிவைத்திருக்க வேண்டும் என்று கூறி திரும்பத் தருவா.

இந்தக்காலத்தில்தான் எங்களுடைய பாசறை அமைந்திருக்கும் பகுதி ஒரு சிறு அழகான குடியேற்றமாக அற்புதமான பூங்காவாக மாறிக்கொண்டிருந்தது. ஒரே பாதையைச் சுற்றி எமது வாசஸ்த் தலங்களாக சாக்குக் கொட்டில்கள். அத்தனை கொட்டில்களுக்கும் இடையில் ஓரு வித்தியாசமாக பளிச்சென்று ஒழுங்கா அமைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் ஓழுங்காக துப்பரவாக அடுக்கப்பட்டிருக்கும்

. அந்த குழுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள் யாவும் நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டிருக்கும் அல்லது சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கும். பார்த்த உடனேயே பட்டெண்டு சொல்லிவிடலாம் அது அஜித்தாவின் குமு என்று.அந்த அளவிற்கு வேலைகளைச்சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்றும், எந்தளவுகெதியாக வேலைகளைச்செய்கிறோமோ அந்தளவிற்கு இயக்கத்தின் வளர்ச்சி, போராட்ட வளர்ச்சி விரைவுபெறும் என்பதும், தரப்படுகின்ற வேலைகளை மகிழ்வுடன் ஏற்றுச்செய்ய வேண்டும் என்பதும் அஜித்தாக்காவினுடைய விரிவுரைகளாக இருக்கும். விரிவுரைகளுக்கு மட்டுமல்ல அஜித்தா, அந்த விரிவுரைகளுக்கு விளக்க குறியீடாகவும் இருந்தவள்.

அஜித்தா இந்த போராட்டத்திற்குக்காலடி எடுத்து வைத்த காலகட்டம் வித்தியாசமானது. பெண்கள் தாமும், தமது குடும்பமும், வீட்டு வேலைகளும் தான் உலகம் என்று எண்ணியிருந்த சமூக அமைப்புக்குள் இருந்து அந்தத் தடைகளை உடைத்து வெளியேற வேண்டிய காலம். யாழ். மாவட்டத்திலிருந்து நேரடியாக ஆயுத பயிற்சிக்குப்பெண்கள் அனுப்பப்படவில்லை. ஆனாலும் இந்த சமூகத்தின் மாறுபட்ட பார்வைகளுக்கு மத்தியில் இந்தத் தேசத்திற்காக ஏதோ ஓரு வகையில் தன்னுடைய செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதனால் விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கத்தினூடு தனது வேலைகளைச் செய்தாள்.

தொடர்ந்து கால ஓட்டத்தில் பெண்களுக்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அஜித்தாவும் ஓருத்தி. இயக்கத்தில் ஏற்கனவே ஓரு அண்ணா, முடக்கொள்கையில் ஊறிப்போன சமுதாய அமைப்பு, அத்தகைய சூழலில் இருந்து அஜித்தா இயக்கத்துக்கு வந்தமை அவள் விடுதலையை எந்த அளவிற்கு நேசித்தாள் என்பதனைப்புலப்படுத்தும். 

ஓழுங்கான பயிற்சி.அப்போது எந்த வேளையிலும் ஓட்டத்தில் அஜித்தா தான் முதல். பயிற்சியை முடித்து இந்த மண்ணில் இருந்து எதிரியை வீழ்த்தும் துப்பாக்கிகளில் தனது துப்பாக்கியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று வந்தவர்களுக்கு, ஆதிக்கம் அடிபணியவைக்கும் ஒப்பந்தத்தைத் திணித்தது’ கண்டு குமுறினாள். எரிமலைகளுக்கு முன்னால் இந்த ஓப்பந்தம் எத்தனை நாளைக்கு நின்றுபிடிக்கும்? சில மாதங்களின் பின்னால். எமது அனுமதியின்றி இந்த மண்ணில் எந்த அந்நியனும் நுழைய முடியாது. அப்படி நுழையமுடியுமென்றால் அது எமது பிணங்களுக்கு மேலாற்றான்” என்று எமது பொறுப்பாளர் கூறி “இதற்கு நீங்கள் தயார் என்றால் எம்முடன் வாருங்கள்” என்றபோது அஜித்தா சொல்லாமல் கொள்ளாமலே வாகனத்தில் ஏறிவிட்டாள்.
சண்டை ஆரம்பித்துவிட்டது. யாழ். மருத்துவபீடத்தில் இறக்கப்பட்ட இந்திய இராணுவம் அனைத்தும் சடலங்களாகச் சமைந்து போயின.

இதில் பெண் போராளிக்குழுக்கள் பெரும் பங்கினை வகித்தனர். அங்கே சடசடத்த துப்பாக்கிகளில் அஜித்தாவின் துப்பாக்கியும் ஒன்று. வீழ்த்தப்பட்ட எதிரிகளின் எண்ணிக்கையில் அவளுக்கும் பங்குண்டு. பலத்த எதிர்ப்புகளுக்கும், இழப்புக்களுக்கும் மத்தியில் எமது மக்களின் உடல்களை ஏறி மிதித்தபடி அங்குல அங்குலமாக முன்னேறியது இந்திய இராணுவம். 

புற்றீசல் போல் புறப்பட்டவர்களைப் புலிப்படை பொசுக்கியது. ஆனைக்கோட்டை, தாவடி, தெல்லிப்பளை என்ன இராணுவத்தை அஜித்தா எதிர்கொண்டாள். தெல்லிப்பளையில் இவளுக்கு மோசமான வயிற்றுளைவு: எழுந்து நடக்கவே முடியாது. திரும்பும் இடமெங்கும் ஆக்கிரமிப்பாளர்களின் துப்பாக்கிகள் குறி பார்த்தபடி. ஆனால் அவளின் உள்ளம் சோர்வடையவில்லை. விடுதலைக்கு மட்டும் தான் அங்கே இடம் கிடைத்தது.அஜித்தாவைப் பொறுத்த வரையில் வித்தியாசமான கஸ்டங்கள் நிறைந்த ஆனால் மகிழ்ச்சியான ஓரு புது வாழ்வை எதிர்கொண்டாள்.

 அதுதான் அந்தக் காட்டுவாழ்க்கை. அங்கே எங்களுக்கு எல்லாமே நாங்கள்தான். எமதுதேவைகள் எல்லாவற்றையும் நாமேதான் பூர்த்தி செய்யவேண்டும். உடுப்புத் தைப்பதிலிருந்து வெடிபொருட்கள், கண்ணிகள் உற்பத்தி செய்வது வரைக்கும் அஜித்தாவின் கை படிந்திருக்கும். அங்கிருந்த அனைத்துப்பெண் போராளிகளும் அணிந்திருந்தது அஜித்தா – தைத்த உடுப்புத்தான். இரவு, பகல் என்று எந்த வித்தியாசமும் அவளுக்கில்லை. அவ்வளவிற்கு வேலை இல்லை. அந்தளவிற்கு அவளின் கடமை உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.

அவளின் அண்ணன்,போராளி தியாகு


பக்கத்தில் உள்ள முகாமுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தான். அவள் அதிகமாகக் கூறுவாள் அறியாமல் கூட .நான் தவறு செய்யக்கூடாது. அப்படி தவறு செய்து விட்டால், நான் தண்டனை பெறும்போது அண்ணாவுக்கு அவமானம்* என்று. எந்தப்பிள்ளையையும் அன்பாகத்தான் அணைப்பாள். ஆனால் கூடவேகண்டிப்பும், தவறுகளுக்கான தண்டனைகளை வழங்கிவிட்டு பின் கூப்பிட்டு ஆறுதலாக அந்தத்தவறுகள் இனிமேல் விடக்கூடாது என்றும், அதற்காகத்தான் தண்டனைகளைத் தந்தேன் என்றும் மிக நீண்ட விரிவுரை. ஆம்! அவள் மகளீர் படைப்பிரிவைப் பொறுத்த வரையில் ஒரு பேராசிரியர்தான். அன்று எல்லாம் வழமை யாகத்தான் இருந்தது. ஆனால் அஜித்தா மட்டும் விம்முகின்றாள், ஆற்றமுடியாத அழுகை, எவராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோருமே அப்படி அப்படியே உறைந்து போனார்கள். முகாமிலுள்ள அத்தனை பேரும் ஒன்று கூடிய ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் பின் மெல்ல எல்லோரும் அதிர்ந்தவர்களாய்… அஜித்தாவின் அண்ணாவிற்கு இயக்கக்கட்டுப் பாட்டு விதிகளை மீறியமைக்காய்…

 அதி உயர் தண்டனை. எந்த அண்ணனுக்காகதான் அறியாத தவறு ஒன்றுக்காகக் கூட தண்டனை பெறக்கூடாது என்று இருந்தாளோ, அந்த அண்ணன் தெரிந்து விட்ட குற்றத்திற்காகத் தண்டனை! அவள் அழுததெல்லாம் அண்ணன் இயக்கத்தின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்து விட்டான் என்ற ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் தான். அந்தத் தண்டனையை தான் வழங்கப்போவதாகக் கேட்கிறாள். முகாம பொறுப்பாளர் ஊடாகத் தலைவரிடம் கேட்டாள் அதைப் தலைவர் அனுதிக்கவில்லை மாறாக சொர்ணம் அண்ணை மற்றும் றோவட் அண்ணை இருவருமே அக்கடமையைச் செய்தார்கள்,


திலீபன் அண்ணைக்குப்பத்தில் இருப்பவர் மேஜர் றோவட் அண்ணை


ஆனால் இயக்கம் மறுத்து விட்டது. அவளின் விசுவாசத்திற்கு முன்னால் நாங்கள் விக்கித்துப்போனோம் அதற்குப் பின்னால் இந்தத் துரோகத்தினால் உள்ளுக்குள்வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் எதுவுமே நடக்காததுபோல் அமைதியாகிவிட்டாள். தொடர்ந்து தனது குழுவும் தன் வேலைகளுமாக முன்னையைவிட இன்னும் தூய்மையைப் பேணுபவளாக இருந்தாள்.எமது மகளீர் படைப்பிரிவு புதிய போராளிகளை உருவாக்கி விரிவடைகின்றபோது

 ஓரு படையணி கப்டன் அஜித்தா காட்டிற்குள் இருந்து நாட்டிற்குவர அதற்கு அஜித்தாவும் ஒரு குழுத் தலைவியாக வந்தாள். மூன்று வருடங்களுக்குப் பின்னால் பெற்றோரை இவள் சந்தித்தபோது இந்த நிகழ்வினை அவள் எப்படிச் சொன்னாள் என்பதெல்லாம் எமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. தாய்ப் பாசத்துக்கு முன்னால் அண்ணனின் நிலையினையைத் தங்கை சொல்லும்போது அவள் உள்ளம் பலவிதமான உணர்வுகளைச் சந்தித்திருக்கும் என்பதுதான்.

காட்டிற்குள் இருந்து நாட்டிற்கு வந்த கொஞ்சக்காலத்திற்குள்ளேயே வரலாற்று எதிரியுடன் மீண்டும் யுத்தத்தை நடத்தினோம். பலம் வாய்ந்த எதிரியும் பலம் வாய்ந்த கோட்டைமதில்களைச் சுற்றியும் முற்றுகை யுத்தம் நடாத்தினதில் ஒரு அணிக்கு அஜித்தாவின் தலைமை பொறுப்பேற்கின்றது.
அப்போதெல்லாம் அவ்ரோ” விமானமும், பொம்மர் விமானங்களும் குண்டுகளை வீச இன்னொரு விமானம் உணவுகளைப்போடும். இவற்றிற்கு மத்தியில் வீரசிங்கம் மண்டபத்தில் 5 ஆவது மாடியில் அஜித்தா எல்.எம்.ஜி உடன் நிற்பாள். கோட்டைக்குள்ளே சில பார்சல்கள் விழ அதை எடுக்க ஓடி வரும் இராணுவத்தினர் அந்த இடத்திலேயே விறைத்து விடுவார்கள். 

கோட்டை முகாமைத்தாக்கி அழிக்கும் முயற்சி ஒன்றிலும் அவள் தலைமை ஏற்று குழுவுடன் சென்றாள். முற்றுகைப் போருக்கு முகம் கொடுக்க முடியாத இராணுவம் பின்பக்கத்தால் ஓடியது. கோட்டையில் இன்று புலிக்கொடி பறக்கிறது. ஓய்விற்கு அவளுக்கு அவகாசம் இல்லை. பலாலி இராணுவம் வெளியேறியபோது குப்பிளான் கட்டுவன் பகுதிகளில் அவள் துப்பாக்கி முழங்கிறது. கட்டுவனில் எதிரியை மறித்து நிலைகளை அமைத்துக் காவல் கடமையைத் தொடர்ந்தாள்.

25 அல்லது 30 யார் தூரத்தில் இருக்கும் இராணுவ நிலைகளை அறிய வேண்டும். அவர்களின் நடமாட்டங்களை அறிய வேண்டும். முகாம் பலப்படுத்தும் அல்லது விஸ்தரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வேலைகளின் போது அவள்முன்னால் சென்ற பின்பே பிள்ளைகள் பின்னால் செல்ல வேண்டும். எமது நிலைகளுக்கு முன்னால் சென்று சின் நிலைகளுக்குக் கிட்ட நின்று அவள்துப்பாக்கி சத்தமிடும். எந்தப்போராளியும் அவளுக்குத் தெரியாமல் முன்னால் போக முடியாது, அவளுக்குத் தெரிந்து அவள் நிற்கையில்தான் முன்னால் போக வேண்டும்.இது அவளின் இறுக்கமான கட்டளை. அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்.

 அவளின் நடத்தையில் அன்பும் கண்டிப்பும் நிறைந்திருக்கும். நாங்கள் ஓரு விடுதலை அமைப்பு. அதிலும் மிக மோசமான சமூக அழுத்தங்களில் இருந்து புறப்பட்டவர்களின் அடுத்த பரம்பரை எம்மைப்பார்த்து எமக்கு பின்னால் வரவேண்டும். ஆனபடியால் நாங்கள் ஓழுக்க சீலர்களாக, பண்பாடுள்ளவர்களாக, வீரமுள்ளவர்களாக, மொத்தத்தில் தனித்துவமுள்ளவர்களாக வளர வேண்டும்” என்பன அவள் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வசனங்கள்.

22-12-90 அன்று கட்டுவன் பகுதியில் இருந்த இவளது பக்கமாக இராணுவம் முன்னேறுகிறது.ஓரு குழுவுடன் நின்ற இவளுக்குத் தகவல் வருகிறது. மறுபக்கமாக எதிரி வெளியேறுகின்றான் என்று. ஓடி வந்து கட்டளைகளைப் பிறப்பித்து நிலை எடுத்து ஓவ்வொருவராகக் குறிபார்த்துச் சுடுகின்றாள். “இந்தா ஒருத்தன்…ம் அடுத்தவன்…” எண்ணி எண்ணி அவதானமாகத்தான்… “எந்த நிலையிலும் பதற்றப்படாது, பரபரப்படையாது நிலைமையை விளங்கி ரவைகள் வீண் போகாது அடிக்கவேண்டும் “என்றவளின் துப்பாக்கி நிதானத்தை விட்டு மெல்லச் சரிகிறது. வீரத்தின் சாட்சியாய் நெஞ்சிலே குண்டுனை ஏந்தியபடி குருதி கொப்பளிக்க அவள் சாய்கிறாள். ஆம்! எங்கோ இருந்து ஒரு கொடியவனின் குண்டு அவள் உடலில். அந்த சண்டையில் பெண் போராளிகள் பல ஆயுதங்களை எடுத்தார்கள். அவள் அடிக்கடி சொல்வாள் சண்டையில் நாங்கள் ஆயுதங்கள் எடுக்கவேண்டும் அப்பிடி நல்லா அடிபட வேண்டும்* என்று. அப்படியே சண்டை பிடித்தார்கள். ஆயுதங்கள் எடுத்தார்கள். ஆனால் அந்த உணர்வினை ஊட்டியவள் அங்கே இல்லை. ஓரு உன்னதமான போராளியை நாம்இழந்தோம். ஒரு பேராசிரியரை மகளீர்படைப்பிரிவு இழந்தது. ஆனால் அவள் வளர்த்த பிள்ளைகள் அவளின் உணர்வைச்சுமந்து இன்று பல களங்களில்….




05 /01/1991 பாரிய இராணுவநடவடிக்கை ஒன்றை செய்து காங்கேசன்துறை முகாமைசுற்றவுள்ள பகுதியைப்பிடித்ததுஇராணுவம்.



இது இப்படி துயரமாக இருக்க 05 /01/1991 பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை செய்து காங்கேசன்துறை முகாமைசுற்றவுள்ள பகுதியைப்பிடித்து பலாலியை பலப்படுத்த இராணுவம் திட்டம் இட்டது அதற்கு அமைவாக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது இராணுவம், ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட எந்த இளப்பும் இல்லாமல் தச்சன் காட்டுப் பகுதியை கைபற்றியது சிங்களப்படை,

 மற்றும் கொல்லன் களட்டி எமது மக்களின் வெங்காய் வயல்களையும் ஏனைய வாழை கிறப்ஸ் தோட்டங்களையும் கைப்பற்றி தச்சன் காடு மாவட்ட புரம் ஊடாக பாரிய தொடர்காவல் அரன்களை அமைத்தது சிறிலங்கா இராணுவம்.




இதனால் பல மக்கள் தங்களின் சொந்தத் தொளிலான விவசாயத்தை இளந்தார்கள்,அப்பொழுது யாழ் மாட்ட தளபதியாக இருந்த தினேஸ் அல்லது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஆழனிப்பற்றாக்குறையாக அப்பிரதேசம் விடுபட்டதாக தலைவரிடம் குறிப்பிட்டார். 

அதை தொடர்ந்து தலைவர் அப்பிரதேசத்தை மட்டும்தான் பொறுப்படுத்ததோடு அப்பிரதேசத்தை தான் நேரடியாகப்பாதுபாகப்பதற்காக தளபதி சொர்ணத்தின் தலைமையில் தலைவரின் நேரடி வளிநடத்தில் செயல்படும் one  four படையணி அனுப்பப்பட்டது.

அவ்வகையில் தலைவரோடு நீன்றே காலமாக பாதுகாப்புக்கடமையில் இருந்த கப்டன் தீபன். மேஜர் சலீம்-கட்டன்  கேதீஸ் அவர்களோடு நானும் மட்டக்களப்பு மாவட்டம் இருந்து எமது படையணிக்காக புதிதாக  75 போராளிகள் வந்துயிருந்தார்கள். அவர்களையும் இணைத்து மற்றும் எமது படைபணியில் இருந்த போராளி சூட்டி போராளி கிறீஸ்னா என தளபதி சொர்ணம் அண்ணையால் கட்டன் தீபன் தலைமையில் ஒரு கொம்பணி சண்டைக்கு உரியவாறு உருவாக்கப்பட்டது.

அதில் 15 போராளிகளிற்குச் சூட்டி அடுத்து 15 போராளிகளிற்கு போராளி கிஸ்னா 15 போராளிகளிற்கு மேஜர் சலீம், அடுத்து 15 போராளிகளிற்கு மேஜர் கேதீஸ் என அணிக்கொமாண்டர்ககள் நியமணிக்கப்பட்டு அதற்கு உதவியாக பதிங்கிச் சுடும் போராளி லெப் வீரா இணைக்கப்பட்டார். அதை விட எனது தலைமையில் ஒரு வேவுரீம் உருவாக்கப்பட்டது.


அதில் லெப் நகுலேஸ் லெப் ராஜா போராளி வேல்ராஜ் போராளி உதயன் என 5 ந்து பேர் கொண்ட அணி  உருவாக்கி இரவு நேரங்களில் இராணு முகாம் மற்றும் தச்சன்காட்டுத் தொடர் காவல் அரன்கள் தொடர்வான தகவல் எடுக்குமாறு எங்களிடம் சொர்ணம் அண்ணையால் எங்களிற்குச் சொல்லப்பட்டது.

 தொடர்ந்து எங்களின் அணி தச்சன் காட்டிற்குச் சென்றது சிறப்ஸ் தோட்டங்களும் வாளை மற்றும் வெங்காய வயல்கள் எங்களை வரவேற்றது அது மட்டும் அல்ல அங்கே ஒரு சில முதியவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் மிகவும் நாட்டுப்பற்று நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.


14/01/1991 தமிழர் நாளான தைப்பொங்கள் அன்று அங்குள்ள முதியவர்கள் பொங்கல் செய்து அனைத்துப் போராளிகளிற்கும் பரிமாறி தங்களின் அன்பை வெளிக்காட்டினார்கள்.


அது அப்படி இருக்க எங்களின் வேவு அணி ஒவ்வொரு இரவும் இராணுவ முகாம். உள்ளே. சென்று தகவலை எடுத்துக்கொண்டு இருந்தோம்.வழமையாக நானும் ராஜாவும் உள்ளே சென்று வருவோம், ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் தொடர் காவல் அரனை பல நாட்களாகக்கண்காணித்து ஆமி இல்லாத காவல் அரனிக்கு மேலால் ஏறி உள்ளே செல்வோம் ஏனெனில் தரைப்பகுதிகள் அனைத்திலும் முள்வேலிகள்போடப்பட்டுயிருக்கும் அத்தோடு கீழே மிதிவெடிகளும் வைத்து இருப்பார்கள் அதனால் நாங்கள் இதைப் பயன்படுத்துவோம் இது எங்களிற்குப்பாதுகாப்பாகயிருந்தது,

உள்ளே சென்று இரவு 3 மணிக்கு வெளியே வருவதற்காக காவல் அரணிக்கு மேலால் ஏறும்போது இராணுவம் எங்களைக்கண்டு சுடத்தொடங்கி விட்டது ராஜா வெளியே ஓடி விட்டான் நான் பதட்டம் அடைந்து கேம்புக்குள்ளே ஓடிவிட்டேன், ஆனால் நான் பதட்டம் அடையவில்லை இராணுவதின் கேம்புக்குள் சிக்கி விட்டோம் அவனிக்குத்தெரியாமல் மறைவாகயிருந்து வெளியே செல்ல வேண்டும் என நினைத்து வேகமாக நடந்து சென்று மாவட்ட புரப்பக்கமாகயிருந்த மக்களின் பாழ் அடைந்த விட்டுப்பக்கம் சென்றேன், அங்கு இருந்த ஒரு உயிரமான விட்டிற்கு மேலே ஏறி ஓட்டைக்களட்டி லெவல் சீற்றுக்குள் இறங்கினேன், அதற்குள் மறைந்துகொண்டுயிருந்தேன்

 காலை விடிந்து ஒரு பத்து மணியிருக்கும் வெளியே அவதானித்தேன் ஆமியின் நடமாட்டம் தெரியவில்லை வோக்கியை ஓன் பண்ணி சொர்ணம் அண்ணையிடம் பிரச்சனைத் தெரிவித்தேன் அவர் உள்ளே இருக்கும் எங்களின் போராளிகளோடு கதைக்க வேண்டாம் எனவும் இரவானதும் குப்பியைக்கடிக்கக் கூடியவாறு பைக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டு கடல் கரைப்பக்கம் சென்று அங்கே அவர்களைக்கண்காணித்து அவர்களின் நடமாட்டம் பற்றித் தனக்குத் தெரிவிக்கும்மாறு என்னிடம் சொன்னார்,

அது இலகுவான விடடம் அல்ல நிறையத் தூரம் நடந்து செல்ல வேண்டும் போனால் இந்த இடத்திற்கு வர முடியாது என்பதும் எனக்குத்தெரியம் அதனால் இரவு பத்து மணியானதும் விட்டில் இருந்து கீழே இறங்கி காலைக் கடன்களை முடித்து பழைய கிணற்றில் தண்ணீர் அழ்ளி அதை குருவிகள் குடிப்பதற்கு வைத்துப் பார்த்தேன் அதை புழுனி என்ற ஒரு குருவி குடித்துச்சென்றது, இருந்தும் அதைக் குடிப்பதற்கு மனம் வரவில்லை நடக்கத்தொடங்கினேன் இடையில் தென்னைமரம் ஒன்று காய்த்துக் கிடந்தது இரண்டு நாள் சாப்பிட்டு கடும்பசியாகயிருந்தது அதனால் மரத்தில் ஏறி மூன்று இளணி புடுங்கி இளநீரையும் குடித்து மழுக்கலையும் சாப்பிட்டேன், எனது பசி அடங்கியது

அங்கே சென்று அவதானித்தேன் கடல் கரைப்பக்கமும் காவல் அரன்கள் இருந்தது செறிவாக்கயிருக்கவில்லை ஆனால் புல்வெளிகள் பெரிதாக வழர்ந்து இருந்தது நான் தவண்டு தவண்டு கடல்கரைக்குச் சென்றேன் அங்கே சிறிது சிறிது கற்பாறைகள் காணப்பட்டது, நான் ஒரு கற்பாறைக்குள் புகுந்துகொண்டேன்

அது சூனியப் பிரதேசம் என்ற காரணத்தால் ஆமியின் வோட்டோ அல்லது நடமாட்டவோ இருக்கவில்லை, அடுத்த நாள்சொர்ணம் அண்ணைக்கு வோக்கியை ஒண் பண்ணி அண்ணெய் நான் உள்ளே சென்று ஒரு பத்து ஆமியைச் சுட்டு விட்டு நானும் தற்கொலை செய்யலாம் என அவருக்குஆலோசனை வழங்கினேன் அப்படி ஒரு ஆமியையும் சுட வேண்டாமாம் அப்படி நீர் சில சமையம் பிடிபட்டால் பாதுகாப்பு முகாம்களை மாற்றவேண்டிவருமாம், என்று அண்ணை சொன்னவர், உன்னை றைபுளையும் கோழ்சறையும் களட்டி தண்ணீருக்குள் ஏறிந்து விட்டு யட்டியோடு நீந்தி கீரிமலைக்கு வருமாறு அண்ணை சொல்லியுள்ளார் உமக்கு புதுறைவுள் யூனிபோம் தரலாம் என்று தலைவர் சொன்னதாக அவர் சொன்னார்,அவர் சொன்னதுபோல் நான் நீந்தி கீரிமலைக்கு வந்து சேர்ந்தேன் புது T81 றைவுள் புது வரிப்புலிச்சீருடை வைத்துக்கொண்டு எனது வரவைப் பார்த்துகொண்டு சொர்ணம் அண்ணையிருந்தார்,நான் சென்றதும் உடுப்பை மாற்றிக்கொண்டு றைபுளையும் கட்டிக்கொண்டு மீண்டும் தச்சன் காட்டிற்குச்சென்றோம் இத்தகவலை எவருக்கும் சொல்லக் கூடாது எனசொர்ணம் அண்ணை எனக்குத் தெரியப்படுத்தினார்,அங்கே சென்று ராஜாவைச் சந்தித்தேன் என்னைவிட்டதற்காக 5000 தோப் ராஜாவிற்கு சொர்ணம் அண்ணையால் வழங்கப்பட்டுயிருந்தது,மீண்டும் இருவரும் கடமையை ஆரம்பித்தோம்,




அதை விட பதிக்கிச் சுடும் லெப் வீராவின் பணி மிகச் சிறப்பாக இருந்தது, 

அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் 20 திற்கு மேற்பட்ட இராணுவ வீரர்களைச்சுட்டுத்தள்ளினான் லெப் வீரா .ஆனால் மாவட்ட புரத்தில் கடாசியாக பதிங்கிச்சுடும்போது மரத்திற்கு மேல் இருந்து வீரா இலக்கை தேடிக்கொண்டுயிருந்தான்  ஆனால் இராணுவப்பகுதியில் இருந்து பதிங்கிச்சுடுபவனும் இலக்கைத்தேடிக்கொண்டுயிருந்தான். ஆனால் அவன் விட்டிற்கு மேலே இருந்தான் வீரா மரத்திற்கு மேலே இருந்தான் இருவரும் இலக்கைத்தேடித்தேடி இறுதியில் இருவரும் இலக்கை கண்டுபிடித்து விட்டார்கள்.


இருவரும் அன்றைக்குத்தான் ஒருதரை ஒருதர் குறி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இருவரும் திறமையானவர்கள் அந்த இராணுவ வீரனும் 6ற்கு மேற்பட்ட எமது போராளிகளைச்சுட்டுகொலை செய்ததோடு 10 திற்கு மேற்பட்ட போராளிகளைச் சுட்டு காயப்படுத்தினானான் எனவே இருவரும் திறமையானவர்கள் தந்திரமானவர்கள் .

 என்ற காரணத்தால் இருவரும் ஒரே நேரத்தில் தங்களின் ஆயுதங்களின் விசைவில்லை அழுத்தினார்கள். இருவரிக்கும் ஒரே நேரத்தில் இடது கண்களிற்குள்ளால் வெடிபட்டுப்பறிந்தது. இருவரும் ஒரே நேரத்தில் வீரச்சாவு அடைந்தார்கள். இதை ஒட்டுக்கேட்கும் கருவியூடாக விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தினார்கள்.

இது தான் இவர்களின் கடசி இலக்காகயிருக்கும் என்பதை இவர்கள் இருவரிக்கும் தெரிந்துயிருக்கவாய்ப்புயில்லைஅன்று அவன் வீரச்சாவு அடைந்தான் லெப் வீரா என்ற நிலை அவனிக்கு சொர்ணம் அண்ணை வழங்கினார், 20 திற்கு மேற்பட்ட இராணுவத்தை குறிதவறாமல் சுட்ட பெருமை அவனையேசாரும்,.லெப் வீரா மட்டக்காப்புஎன்ற போராளிஎமது படையணிக்குப் பெருமை சேர்த்தான்

 இதற்குப்பின்னர் அப்பகுதியில் இருந்த21 காவல் அரனையும் தாக்கி அழிக்க வேண்டும் என சொர்ணம் அண்ணை திட்டம்மிட்டார்,

02/02/1991 எங்கள் அனைவரையும் தச்சன் காட்டில் இருந்து எழுதுமட்டுவாள் தென்னம் தோட்டம்கொண்டுபோய் அங்கே தச்சன்காடு மினி முகாம் தாக்குவதற்கான மாதிரிப்பயிற்சி அதாவது தடை உடைக்கும் பயிற்ச்சி நடைபெற்றது. அப்பயிற்சியை தளபதி சொர்ணம் அண்ணையே நேரடியாகயாகக்கொடுத்தார். ரோப்பிரோ அடித்து தடை உடைத்து கடுமையான பயிற்சி அன்று நடைபெற்றது.


பயிற்சி முடிந்து மீண்டும் தச்சன்காடு வந்து சேர்ந்தோம் அங்கே அமைந்து இருந்த 21 ரு தொடர் காவல் அரண்களையும் அடிப்பதுதான் எங்களின் திட்டமாகயிருந்தது

.05/02/1991 இரவு 8 ட்டு மணிக்குச்சண்டை ஆரம்பம் அன சொர்ணம் அண்ணையால் எங்களிற்குச் சொல்லப்பட்டது.

 முதலாவது எமது தயாரிப்பான பசிலன் அடிப்பது எனவும் பின்னர் தடையை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வது என திட்டம் இடப்பட்டது.

ஆனால் பசிலன் அடிக்கும் போது அனைத்துப் போராளிகளும் முதலாவது Rவியில் சண்டைக்குத் தயார் ஆக நிக்க வேண்டும். அன்றைய சண்டைக்கான சங்கீதப்பாசை கொத்து ரொட்டி சாப்பிட்டாச்சா என்றால் சண்டைக்குத் தாயார் ஆக நில்லுங்கோ என்பதைக்குறிக்கும். தண்ணி குடிச்சாச்சா? என்றால் ஓம் என்றால் தானாக பசிலன் காரன் சண்டையை ஆரம்பிப்பான்.


ஆனால அன்றையச் சாப்பாடும் கொத்துரொட்டிதான் காவலரனில் இருந்து 400 மீற்றர் பின்னால் இருந்து அனைவரும் கொத்து ரொட்டி சாப்பிட்டுக்கொண்டுயிருக்கின்றோம். கொத்து ரொட்டி சாப்பிட்டாச்சா என பசிலன் காரன் தீபண்ணையிடம் கேட்டான் சாப்பிட்டுக்கொண்டுயிருக்கின்றோம் என பதில் அளித்தார் ஐந்து நிமிடம் களித்து தண்ணீர் குடிச்சாச்சா என பசிலன் காரன் கேட்டான் அவரும் மறந்துபோய் ஓம் என பதில் அளித்தார். உடனே அவன் பசிலன் தாக்குதலை ஆரம்பித்தான் பேர் இரச்லோடுபோய் பசிலன் வெடித்தது.


எதிரி சண்டையை ஆரம்பித்து விட்டான் நாங்கள் 400 மீற்றர் பின்னால் நிக்கின்றோம். அப்பொழுது நான் தீபன் அண்ணையிடம் போய் இது தவறுதலாக நடந்து விட்டது சொர்ணம் அண்ணையிடம் சொல்லி சண்டையை நிறுத்தி என்னொரு நாளைக்கு இதைச் செய்வோம் என ஆலோசனை வளங்கினேன்.


ஆனால் அதை தீபன் அண்ணை நிராகரித்ததோடு அதை சொர்ணம் அண்ணை ஏற்கமாட்டார் நீர் முதலில் பாதையைக்காட்டு என என்னிடம் சொன்னார். அப்பொழுது நான் சூட்டி அண்ணையின் 15 பேர் கொண்ட அணியைக் கூட்டிக்கொண்டு காவலரனில் இருந்து 30 மீற்றர் கம்பி றோள் அரிகில் கொண்டு விட்டேன் அப்பொழுது கப்டன் தீபன் அண்ணையும் எங்களோடுதான்வந்தார்.


சூட்டி அண்ணை தனதுT81 துப்பாக்கியால் 3 றைவுள் கிறினெட்காவல் அரனை நோக்கி அடித்தார் 3ன்றும் முன்னால் துப்பிக்கொண்டு விழுந்தது,ஆனால் தேவராஜ் தனது துப்பாக்கியால் காவல் அரனை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருந்தான் நான் எதிரியின் இலக்கை அவர்களிற்குக்காட்டிக்கொண்டுயிருந்தேன்,

ஆனால் அது இலக்கை தாக்கவில்லை அப்பொழுது நாங்கள் நிக்கும் இடத்தை துப்பாகி சுவாலை எதிரிக்கு தெளிவாகக் காட்டிக்கொடுத்தது, எதிரி 60 மில்லிமீற்றர் எறிகனையாலும் Ak LMG களாலும் கடுமையாத்தாக்கினான் அவ்வேளை எங்களோடு வந்த தலைமைப் பொறுப்பாளர் கப்டன் தீபன் அவர்களும் கழுத்தில் வெடிப்பட்டுஅவ்விடத்தில வீரச்சாவு அடைந்தார், வீரச்சாவு அடைத்தார்

தீபன் தீபன் என சொர்ணம் அண்ணை கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்,அதனால் வோக்கி அலறிக்கொண்டுயிருத்தது,அப்பொழுது நான் சொர்ணம் அண்ணையைத்தொடர்வு எடுத்து தீபன் அண்ணை வீரச்சாவு என்பதை தெரியப்படுத்தியதோடுஉன்மையாக நடந்த பிரச்சனையை அருக்குச் சொன்னேன்

ஆரப்பத்தில் எனக்குப்பேசினார்பின்னர் நானும் காயம் அடைந்துவிட்டேன் என அவருக்குத் தெரியப்படுத்தினேன், காயம் அடைந்தவர்களையும்கூட்டிக்கொண்டு என்னையும்பின்னுக்கு வருமாறு கட்டளை வழங்கினார்.

எனது காலிலும் காய்ம் ஏற்பட்டது கடுமையான வலியாக எனக்கு இருந்தது அனைவரையும் கூட்டிக்கொண்டுபின்னால் வந்தேன்எனது சூவைக்களட்டி எனது காலிக்கு மருந்து கட்டுவதை சொர்ணம் அண்ணன பார்த்துக்கொண்டு இருந்தார் பின்னர் என்னை மருத்துவமனைக்கு அனுப்பினார்,

அச்சண்டை மிகத் தோல்வியில் எமக்கு முடிந்தது எமது தரப்பில் வேவு அணியில் இருந்த லெப் ராஜா மட்டக்களப்பு மற்றும் லெப் நகுலேஸ் பூவரசம்குழம்வவுனியா தலைவரின் முக்கிய பாதுடாதுகாப்புப்போராளிகளான கப்டன் தீபன்திருமலை- மேஜர் சலீம்யாழ்பாணம்-கப்டன் கேதிஸ் திருமாலை  இவர்கள் உட்பட எமது தரப்பில் மொத்தம் 29 போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள் இராணுவத்தின் தரப்பில் 7 பேர் கொல்பட்டனர்.. இதே காலம்தான் எமது  இயக்கத்தில்.

 இருந்த அனைத்துப் போராளிகளிற்கும் தகட்டு இலக்கம் வழங்கப்பட்டது,


எமது வண்போர்பிரிவிற்கு 0, என்ற குறியீட்டுடன் வழங்கப்பட்டது எனது முதலாவது தகட்டு இலக்கம்0,149என்ற இலக்கம்வழங்கப்பட்டது அதின் பொருள் எனக்கு முன்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்களின் தொகை படையணியில்148 என்பதாகும், அப்பொழுது எமதுயணியில் கடசியத் தகட்டு இலக்கம் 750  ஆகும் ஒவொரு மாவட்டங்களிற்கும் தமிழ் எழுத்துகளில் வழங்கப்பட்டது, 

        

 சிறுத்தைப் படையணி கா, மாலதி படையணி எ,சோதியாப் படையணி ஞா, யாழ் மாவட்டம் உ, மன்னார் மாவட்டம் ஊ மட்டக்களப்பு அ,புலநாய்வுத்துறை ஐ என வழங்கப்பட்டது, இதின் நோக்கம் சண்டையின் போது அவரின் உடம்பு முழுமையாகச் சிதைவு அடைந்தால் அவரை அடையாளம் காணுவதற்காகவே வழங்கப்பட்டது, தலைவரின்  சிந்தனையில் இதுவும் ஒன்றாகும்,





19 /03 /1991ஆணையிறவைத்தாக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர்அதற்கான ஆயுதக்கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்,,

,1991இதே காலத்தில் ஆனையிறவை தாக்குவதற்காக திறமையான ஆண் பெண் போராளிகள் இனங்காணப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரு இடத்திற்கு இணைக்கப்பட்டார்கள், அனைவரும் அணி அணிகளாகப்பிரிக்கப்பட்டு ஆனையிறவை சுற்றி வேவு பார்ப்பதற்காகவிடப்பட்டார்கள், 

இது அந்தப்பக்கம் நடந்துகொண்டுயிருக்க அதை அழிப்பதற்கு தேவையான ஆயுதங்களை கொழ்வனவு செய்வதற்காக லெப் கேணல் குட்டிச்சிறி தலைமையில் பெரிய ஒரு ஆயுதக் கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.

 அப்பொழுது ஆயுதக் கொள்வனவாளராகயிருத்த லெப் கேணல் சூட்டிசிறி அவர்கள் இக்கொள்வளவிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டார் .அங்கு சென்ற அவர்  பெரும் தொகையான ஆயுதம் வேண்டிக்கொண்டுசர்வதேசக்கடலில் வந்துகொண்டுயிருந்தார்,

 இயக்கம் கொள்வனவு செய்த, அவ் ஆயுதக் கப்பல் ஆழ்கடலால் வந்துகொண்டுயிருக்கும்போதே அதைப்பாதுகாற்பதற்காக தலைவரின் பாதுகாப்பு அணியைச் சேர்ந்த சுமார் 45 போராளிககள் தளபதி சொர்ணம் அண்ணையின் தலைமையில் கட்டைக்காட்டிற்குச் சென்றோம்.

அதில் போராளிகளிற்கு பொறுப்பாக வந்தவர்கள் கெனடி 15 பேர் மேஜர் மாறன் 15 பேர் -மணியரசன் 15 பேர் மொத்தம் 45 பேர் அதில் மாறன் என்பவரின் அணியில் நான் இருந்தேன்,.

 அத்தோடு எமது போராட்டத்தில் மிகவும் நம்பிக்கையான மக்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 50 பொதுமக்களையும் அவ் ஆயுதங்களை இறக்குவதற்காகக்கொண்டுபோனோம் ஒரு மாதம் அழவில் அங்கே தங்கினோம்,

  இவர்களை ஏற்றி இறக்கும் வேலையை எமது இயக்கத்தில் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவரான றைவர் அல்லது ஜெகன் மாஸ்ட்டர் அவர்களே நாம் இந்திய இராணுவத்திடம் கைப்பற்றிய பெரிய துருப்புக்காவி
ரக்கை ஓட்டி தனது கடமையை திறன்பட செய்தார்.,அது மட்டும் அல்ல எமது அமைப்பில் கனிசமான பேராளிகளிற்கு ஒட்டுனார் பயிற்சி வழங்கிவரும் இவரே ஆவார் 2009 இறுதி சுத்ததின்போது அவர் வீரச்சாவு அடைந்தார்,



அங்கே நாங்கள் கவடிவிலையாடுவது மீன்பிடிப்பது என பல பொழுதுபோக்கான வேலைகளில் ஈடுபட்டோம் வல்வெட்டித்துறை மக்களை பொறுத்தவரையில் எமது அமைப்பில் அவர்களும் போராளிகள் போன்றுதான்பார்கப்பட்டார்கள், அதனால் அவர்களோடு சேர்ந்து விலையாடுவது நொடி சொல்வது என மிக மகிழ்சியாகச் சென்றது எங்களின் காலம்


, கவடிவிலையாடுவது கடலில்குழிப்பது காவல் கடமைகளில் ஈடுபடுவது. இளநீர் புடுக்கக்கூடாது என சொர்ணம் அண்ணையால் கடுமையான கட்டுப்பாடு போடப்பட்டது .அதனால் களவாக ஒரு சிலர்இநீர் குடித்தது பிடிபட்டு அவர்களிற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது,

.ரொயிலட் போபவர்கள் அனைவரும் மண் வெட்டிகொண்டு போய் வெட்டித்தாக்க வேண்டும் என கடுமையான அட்டுப்பாடு கொர்ணம் அண்ணையால் போடப்பட்டது. 

அந்நாட்களில் நாங்கள் அனைவரும் காவல் கடமையில் இரு போராளிகளை நிறுத்தி விட்டு அனைவரும் கடல் கரைமணலில் இரவையில் படுத்து உறங்குவோம் .அவ்வேளை இரவு ஒரு 12 மணி இருக்கும் என நினைக்கின்றேன், எனது காது ஒன்றில் ஏதோ உள்நுளைந்துவிட்டது சிறகு அடிப்பது போல் உணரக்கூடியவாறு இருந்தது .உயிரு போற அழவிற்கு வலியாக இருந்தது, அப்போது எங்களின் 15 பேருக்குப் போறுப்பாகயிருந்த மேஜர் மாறன் அவர்களை எழுப்பி பிரச்சனையைச் சொன்னேன்,


எப்படி வலிக்குது என்று என்னிடம் கேட்டார் சிறகு அடிப்பது போல் உள்ளது என்று அவரிடம் சொன்னேன் எனது இரண்டு காதையும் அவரின் கையால் காத்து உள்ளே போகாதவாறு அவரின் இரு கைகளாலும் எனது இரண்டு காதுகளையும் அழுத்திப்பிடித்தார் சிறிது நேரத்தால் இரண்டு காதையும் திடீரென விட்டார் வண்டு வெளியே பறந்து விட்டது எவளவு திறமையான போராளிகள் எமது இயக்கத்தில் இருக்கின்றார்கள் என எண்ணி பெருமிதம் அடைந்தேன் எனது வலி இல்லாமல் போனது,

 இப்படி இருக்க ஒரு நாள் இரவு 10மணி  23 மில்லிமீற்றர்க கனோன் உட்பட பெரிய ஆயிதக்கப்பல் ஒன்றுவந்து கரை தட்டியது தளபதி சொர்ணம் அவர்களின் கட்டளைக்கு அமைவாகபொது மக்களின் உதவியோடு கட்டலில் வந்த 23 உட்பட ரசியன் 50 கலிபர் போட்டின் பொயன் 5 அதாவது45 மில்லிமீற்றர் ஆயுதம் பெரும் தொகையான வெடிபொருட்களை இறக்கிக்கொண்டுயிருந்தோம்,


அதில் 23 மில்லிமீற்றர் கனோன் உட்பட  ரசியின்  ஐம்பது கலிபர் மற்றும் எறிகணைகள் ரவைகள் ஏராளமான ஆயுதங்கள் வந்துஇருந்தது   எனவே இதை திதைதிருப்பிருப்பி இராணுவத்தின் சிந்தனையை மற்றும் அவர்களின் நடவடிக்கையை திசை திருப்ப வேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது. கப்பல் தரை தட்டியாது இரவோடு இரவாக அனைத்து ஆயுதப் பொருட்களையும் இறக்கும் வேலை தீவிரமாக நடந்துகொண்டுயிருந்தது,


 இது இங்கே நடந்துகொண்டுயிருக்க தலைவரின் தீர்க்கதரிசனம் ஊடாக அதைத் திசை திருப்புவதற்காக  நடத்தப்பட்ட தாக்குதல்தான் லெப் கேணல் சுமன் அவர்களின் தலைமையில் மன்னாரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.அதை விரிவாகப்பார்ப்போம்.

 மன்னார் மாவட்டத்தில் ஆரம்பச் சிறப்புத் தளபதியாக லெப் கேணல் விக்டர் இருந்தார், அதை அடுத்து லெப் கேணல் ராதா அவர்கள் இருந்தார், அதை அடுத்து பிரிகேடிய வானு அவர்கள் இருந்தார், வானு அண்ணையை அடுத்து 1990 ஆண்டு தலைவரின் மேற்பாதுகாப்பு ஆணியில் இருந்த சுமன் அவர்கள் தனதுA.K, LMG துப்பாக்கியை வைத்து தலைவரைப்பாதுகாற்ற ஒரு வீரன் , அக்காலத்தில் அவனின் திறமையைப்பார்த்த தலைவர் அவனை மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக அனுப்பினார்,

, அவனை அனுப்பிய காலத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இராணுவத்திற்கு எதிராதாக்குதல் நடந்துகொண்டயிருந்தது, அச்சண்டைகளில் எடுத்த வெல்ஜியம் தாயாரிட்டான மினி மினி எல்லம் ஜீகளைத்தலைவரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைபார்.


அவ் திசைதிருப்பும் நடவடிக்கையை செய்வதற்காக அக்காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத்தளபதியாகயிருந்த சுபன் அவர்கள் தலைவரால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.


அதற்கு அமைவாக அச்சண்டைக்கான பொறுப்பை தலைவர் சுமனிடம் ஒப்படைத்தார். சுமன் சண்டைக்கு போராளிகளை தயார்படுத்தினான் அதே நேரம். மன்னாரில் முதல் கரும்புலித்தாக்குதல் நடத்துவது என்றால் தன்னையே அனுப்ப வேண்டும் என்று டாம்போ சொன்னது சுமனிற்குயாபகம் இருந்தது.தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக… அந்தக் காட்டு முகாமில் உயர்ந்த மரமொன்றில் நிழலில், அதன் அடிவேரில் சாய்ந்திருந்தபடி…. நண்பனொருவனுக்கு டாம்போ தன் வீட்டுக்கதையைச் சொன்னான்.

“வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை. இரண்டு தம்பிமாருக்குப் பிறகு கடைசியாகத் தங்கச்சி பிறந்தாள். நான் சின்ன வயசாக இருக்கும் போதே அப்பாவுக்கு இயலாமல் போய்விட்டது. அம்மாதான் கஷ்டப்பட்டு  கூலி வேலை செய்து , எங்களை வளர்த்தா. நான் கொஞ்சம் வளர்ந்ததும் அம்மாவின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளத் துவங்கினேன் . நாங்கள் எல்லோரும் பாசத்தோட பிணைஞ்சு வளர்ந்தம். இந்து வருடங்களுக்கு முன்னம் எனக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது  நாட்டு நிலைமை என்னை போராட்டத்துக்குள்ள இணைத்தது…..

அது எல்லோருக்கும் இருக்கிற கடமையும் தானே …..”

“இதுக்குப்பிறகு ஒரு சண்டையில காயப்பட்டு, சிகிட்சைக்காக தமிழ்நாட்டுக்குப் போயிருந்தன். அங்கு வைத்து ஏனைய தோழர்களோடு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு, வவுனியா இந்தியப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தன்…. சிறைக்குள்ளே இருந்த காலத்தில் , இந்தியப் படைக்கெதிரான போரில் என்னால் பங்கேற்க முடியவிலையே என்ற துயரத்தில மனது துடித்தது….. அங்கேயிருந்து சிறையை உடைத்து போராளிகள் வெளியேறும் போது நானும் வந்தேன்  அந்த முயற்சியில காலில காயப்பட்டேன்.”

“வீட்டில், நாங்கள் எல்லோருமே எங்களுடைய ஒரேயொரு தங்கச்சியில் மிகுந்த அன்பு வைத்திதோம் . அவளின் சாமத்திய வீட்டை சொந்தக்காரர் எல்லோருக்கும் சொல்லி வீட்டில்  எங்களின் வசதிக்கேற்ற அளவிற்கு பெரிதாகச் செய்தம்….. ஆனால்

….. சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள், தம்பிக்கும்  தங்கச்சிக்கும் இடையில் சின்னதாக ஒரு பிரச்சினை. அம்மா தம்பிக்கு அடித்துபோட்டா…. தன்னாலதான் அண்ணனுக்கு அடி விழுவதேன்று நினைத்து …. எங்களின் ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து உயிரைப் போக்கிக்கொண்டாள்…”

ஒரு கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு; கிழே குனிந்தபடி ஒரு தடிகுச்சியால் மண்ணைக் கிண்டிக்கொண்டு , டாம்போ சொன்னான்…..

“இதற்கிடையில் எங்களின் இன்னொரு தம்பி பயணம் போனவன், கடற்படையால கைது செய்யப்பட்டான். இன்னும் வீட்டுக்கு வரவில்லை. இராணுவம் பிடித்துச் செல்கின்ற ஆக்கள் காணாமல் போவதென்பது இங்கு புதினமில்லைத் தானே…

…. அதற்குப் பிறகு; தங்கை இறந்து ஒரு மாதம் போக முந்தியே தம்பி இயக்கத்திற்கு வந்திட்டான். எங்களுடைய வீட்டு நிலைமையைத் தெரிந்துகொண்ட சுபன் அண்ணை, தம்பியை வீட்டுக்குப் போகச் சொல்லி அனுப்பினபோதும் போகமாட்டன் என்று அடம்பிடித்துக் கொண்டு முகாம் ஒன்றில் நின்றான்…..

….. பிறகு நான்தான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து பயிற்சி முகாமில் விட்டன்…. இப்ப அவன் அங்கு ஓடித் திரிகின்றான்…. நான் கரும்புலியாகப் போகப் போகிறேன் என்று அவனுக்கு சொல்லிபோட்டன் …. “என்ற முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு வேறெங்கோ பார்த்தான்.

மன்னாரில் நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான் செய்ய வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது…. அதை நான் சுபன் அண்ணையிட்ட சொல்லியிருந்தனான்…. இப்ப அந்த நாளும் வந்திருக்குது….”

கலக்கமில்லாத � மிகத் தெளிவான � கண்களோடு தோழனைப் பார்த்துச் சொன்னான்… இது தான் போராளிகளின் வாழ்க்கைபின்னர் அந்த முகாம்முகாம் முற்றாக அழிக்கப்பட்டது இவர்கள் இதை செய்ய நாங்கள்04/03/1991

 காடாபியண்ணை மற்றும் சொர்ணம் அண்ணை தலைமையில் 60 வது வல்வெட்டித்துறை மக்களைக் கூட்டிக்கொண்டு1.4 படையணியான தலைவரின் பாதுகாப்புப் போராளிகளான நாங்கள் இந்தியா இராணுவத்தின் பெரிய றக்கை ஜெகன் /றைவர் அண்ணை ஓட்ட நாங்கள் எல்லோரும் வெற்றிலைக்கேணிமுள்ளியான் ஊடாக கட்டைக்காட்டில் இருந்துசாவகச்சேரிக்குவந்து சேர்ந்தோம், 

 அங்கே வந்தது ஆயதங்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டது அதின் ரவைகள் வெடி பொருட்கள் அனைத்தையும் பாது காட்டதற்கான ஒரு இடம் ஒழுங்குபடுத்தப்பட்டது தென் மாரச்சிப் டொறுப்பாளர் லெப் கேணல் குணா அண்ணையின் பொறுப்பில் இருந்த வங்கர் ஒடு சேர்ந்த ஒரு வீட்டை சொர்ணம்அண்ணை வேண்டினார் அங்கே இரவோடு இரவாக ஆயுதங்களைகொண்டு வந்து நுணாவில்லில் இருந்த ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது அது மிகவும் இரகசியமான இடமாக இருந்தது அங்கே நான்  விக்கி / ஜெமிலன் மற்றும் உதயகுமார்  என நாலு பேர் பாதுகாப்பிற்காகவிடப்பட்டோம்,

குட்டிச்சிறி அண்ணை மற்றும் மேஜர் றோவட் அண்ணை ஒவ்வொரு நாளும்வந்து ஆயுதங்களைப்பார்வையிடுவார்கள். 


இதே காலப்பகுதியில்தான்தான்கொக்குத்தொடுவாய்பிரதேத்தை சேர்ந்த போராளி மகேந்திஅவர்கட்கு சாவகொறுப்பு வழங்கப்பட்டது,


 இவர் 75 போராளிகளிற்குப் போறும்பாக இருந்தார் உயர்ந்த தோற்றம் வெள்ளை நிரம் என அழகான தோற்றத்தைக்கொண்ட மகேந்தி போராளிகள் மத்தியிலும் எப்வும் அன்பானவனாகக்காணப்பட்டான்.

 அதைவிட எமது மக்களைக்கண்டாலும் வயது வேறுபாடுன்றி அன்பாகக்சிரிக்கக்கூடியவன் மகேந்தி.
துரஸ்ற்றவசமாக விரும்பியோ விரும்பாமலோ சாவகச்சேரியில் உள்ள அவனது முகாம் அரில் ஒரு வயதுவந்த பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு நாளும் மகேந்தியைப்பார்த்து சிரிப்பாள் ஆனால் மகேந்திக்கும் அது புரியவில்லை. ஆனால் கதைப்பதற்கு இருவருக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை ஆனால் இது ஒருதலைக்காதலாகவே இருந்தது. எப்படியாவது மகேந்தியை திருமணம் செய்ய வேண்டும் என அழவிற்கு அதிகமாக அவள் ஆசைப்பட்டாள்.



ஆனால் இது ஒரு கடுமையான கட்டுப்பாடான இயக்கம் ன்பதையும் அதையும் கடந்து மிகவும் கட்டுப்பாடான ஒரு படையணி என்பதை அவள் அறிந்து இருக்க மாட்டாள்,  திடீரென ஒரு நாள் படையணித்தளபதி சொர்ணம் அண்ணைக்கு ஒரு கடிதம் அவள் எழுதினாள்.மகேந்தி எனது வீட்டிற்கு வந்து அவரின் சிப்பை திறந்து காட்டினார் .என்பது தான் அந்தக்கடிதம் தளபதி சொர்ணம் அண்ணையூடாகத் தலைவரிக்கு பறந்தது அந்தக்கடிதம். அதைப்பார்த்த தலைவரிக்கு மிகவும் கடுமையான கோபம் வந்தது.

உடனே நடவடிக்கை எடுக்குமாறு தளபதி சொர்ணம் பண்ணைக்குகட்டளை வழங்கினார் தலைவர் உடனே மகேந்தி விசாறனைக்காக பொட்டு அம்மானிடம்  அனுப்பப்பட்டான்.
அங்கே சென்று விசாறனை முடிந்தபின்சாவகச்சேரி பெருக்குழச்சந்தியில்வைத்து லெப் கேணல் அம்மா அவர்கள் மகேந்திக்கு சாசொறுப்பு வழங்கினார்,இதை அறிந்த அந்தப்பெண் மகேந்திக்கு எக்களின் வீட்டிற்குவருவது இல்லை இப்படி எழுதினால் நீங்கள் மகேந்தியை எனக்கு திருமணம் செய்து தருவீர்கள் என எழுதினேன் ஆனால் நீங்கள் அவரைக் கொலை செய்து விட்டீர்கள்என சொர்ணம் அண்ணைக்கு அப்பெண் கடிதம்எழுதினார் இதை அறிந்த கொர்ணம் அண்ணை கவலைப்பட்டதோடு மட்டும் இன்றி போராளிகளிற்கு கடுமையானகட்டுப்பாடும்போட்டார்

அதைத்தொடர்ந்து அவரின் பெற்றோர்களிடம் சென்று உங்களின் மகனை மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனவும் அது தவறுதலாக நடந்ததாகவும் எமது பொறுப்பாளர்கள் மன்னிப்பு கோரிய போதும் அதை அந்தப் பெற்றோர்கள்நிராகரித்து விட்டார்கள்.விடுதலைப் போராட்டங்களில் பல பிரச்சனைகள் வரும் நல்லதும் நடக்கலாம் கெட்டதும் நடக்கலாம் ஆனால் இது ஒருவரலாற்ருப் பாடமாக எண்ணி அதை நாம் கடந்து போக வேண்டும் இதுதான் விடுதலைப் போராட்டங்களின் வரலாறாகயிருந்துள்ளது.

04/05/1991 கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் இவர்களின்வீரச்செயல் நடந்தது.

                   


04/05/1991 அன்று அதாவது வடமரச்சிப்பொறுப்பாராக இருந்த எஸ்சோ அல்லது சூசை அவர்கள் கடல்புறாவை  தளபதி கடாபி அவர்களிடம் இருந்து/1991 ஆரம்பப்பகுதியில்  தலைவர் அவர்களால் தளபதி  எஸ்சோ அவர்கட்டு கடல்புறாபொறுப்பு வழங்கப்பட்டது, அக்காலப்பகுதியில்தான் புதிதாகக்கடல் புலிகள் என்ற பெயரைத் தலைவர் மாற்றினார்,


புதிய பொறுப்பாளர் புதிய பெயர் என அனைத்தும் மக்களிற்கு அதியசயமாகயிருந்தது பொறுப்படுத்துகாலத்தில் ஒரு பெரிய தாக்குதலாகவும் அவருக்கு ஒரு பெரும்புகளைத் தேடித்தந்ததாக்குதலாகக்கூடஇதைப்பார்க்கலாம்.


அபிதா ஒருசாதாரண போர்க்கப்பல் அல்ல சிறிலங்கா கடல்படைகளிடம் இருந்த பெறுமதியான கப்பல்களில் அதுகும் ஒன்று,இது ஒரு கட்டளையிடும் கப்பலாகயிருந்தது இக்கபலில் கட்டளைக் கோபுரம் பொருத்தப்பட்டு அனைத்து சிறிய படகுகளிற்கும் கட்டளை வழக்குவதே இதின் கடமையாகயிருந்தது இக்கட்டலை கரும்புகளிகளால் களிப்பதுதான் விடுதலைப்புலிகளின் திட்டமாகயிருந்தது,

 அதற்கு கட்டன் ஜேந்தன் அவர்களும் என்னொரு போராளிக்கும் சூசை அவர்களின் அனுமியுடன் கப்டன் சிதம்பரமே பயிற்சியைவழங்கி வந்தான்அப்பயிற்சி முடிந்ததும் அவர்கள் தாயார் ஆகயிருந்தார்கள் 

, ஆனால் கரும்புலித்தாக்குதலிற்கு இருவருக்குகும் அனுமதி வழங்கப்பட்டபோது அப்போராளி மறுப்புத் தெரிவித்தான் ஆனால் அவனோடு நின்ற ஜெயந்தன் அவர்கட்கு பெரும்கவலையாகயிருந்தது, கால் இல்லாத நிலையில் இதைப்பார்துக்கொண்டுயிருந்தஆசிரியரான சிதம்பரத்திற்கு  சகிக்க முடியாமல் போனது ஏனனெனில் ஏலாது என்று சொன்னவன் அவன் பயிற்சி வழங்கமுதல சொல்லியிருக்கவேண்டும் இடையில் இப்படி செய்து இருக்கக்கூடாது என்பதே அவனின் கருத்தாக இருந்தது, கொன்ற கொள்கையில் சிறிதளவும் தளம்பால் ஜெயந்தன் நின்றான்.இதை அவதானித்த சிதம்பரத்திற்கு ஒரு உறுதி வந்தது

,ஆனால் இயக்கத்தில் ஒரு மரபு இருந்தது போராளிகள் செய்யாமல் விட்டால் அப்பொறுப்பாளரே அக்கடமையைச் செய்ய வேண்டும், இதை அறிந்தவன்தான் சிதம்பரம், அதனால் தானே ஜெயந்தனோடு போவதாக தளபதியிடம் அனுமதி எடுத்தான் சிதம்பரம், 


 பயிற்சி வழங்கிய ஆசானும் மாணவனும் சென்று தங்களின் வாழ்வை முடித்துக்கொண்ட வலாறாகவே இக்கதை பதிவானது,

சிறிலங்கா கடற்படைக் கப்பல் ” அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல்மூழ்கடிக்கப்பட்டது.

 கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.போராளி சிதம்பரம் பற்றி


. சிதம்பரம் ஏற்க்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான். சந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.


 இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன்  வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம். ….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரானாகச் சென்றுவிட்டான்.

.” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள். || தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்காளைப் பற்றிச் சொல்கிறார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம்.


அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது,


அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது. 


அபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். “நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…?” எனக் கேட்டோம்.


“நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன…… சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அல்லது தயக்கமோ தென்படவேயில்லை, கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் … ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’ ‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. 


கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள். அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிட்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளான அபிதா கடற்படைக் கப்பல்........... “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன.




பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்,இவனின் தளராத உறுதிய அறிந்த தலைவர் அவனின் பேரிலே படையணியை உருவாக்குவாறு கருணாவிற்கு தெரியப்படுத்தினார், ஆனால் ஜேந்தன் சிதம்பரம் படையணி என்பதே பொருத்தமாகயிருக்கும் என தலைவருக்குப் பல போராளிகள் ஆலோசனைக் கடிதம் எழுதினார்கள்,

 வைத்த பேரை மாற்ற முடியாது என்பதை விழங்கிக்கொண்டதலைவர் தனது படையணிக்கு பேர் வைக்கும்போது தனது பாதுகாப்பில் நின்ற இரு போராளிகளான  இம்ரான் மற்றும் பாண்டியன் இருவரையும் இணைத்து இம்ரான் பாண்டியன் படையணி என்ற பேரை வைத்து போராளிகளை மகிழ்சிப்படுத்தினார்,

 ஜெயந்தன் சிதம்பரம் வீரச்சாவு அடைந்தபின் புதிய படையணியை உருவாக்கிய தலைவர்.

10/04/1991 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிஉருவாக்கம்





தளபதி பால்ராஜ் அவர்களின் ஆழுகைக்குக்கீழ் செயல்பட்டுக்கொண்டுயிந்த கொமாண்டோ அணியையும்மற்றும் அனைத்துமாவட்டங்களிலும் இருந்து திறமையானபோராளிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியாகும்,


தலைவரிக்கு மிகவும் நம்பிக்கையானவரும் ஆரம்பத் தளபதியும்மான லெப் சீலன் அவர்களின் சொந்தப் பேரையே தலைவர் இப்படை பணிக்கு வைத்தார், அது மட்டும் அல்ல அவரின் மூத்தமகனிக்கும் அந்தப் பெயரையே அவர் வைத்தார்,



அப்படையணிக்கான சின்னத்தையும் தலைவரே உருவாக்கினார்,


லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக்கொண்டு தலைவரால் உருவாக்கப்பட்டது இப்படையணி,



 பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்று தலைவரின் சிந்தனையைக்கொன்று தலைவரால்10/04/1991 இப்படையணி உத்தியோகபூர்வமாக தலைவரால் இப்படையா ஆரம்பித்து வைக்கப்பட்டது,

தளபதி பால்ராஜ் அவர்களே சிறப்புத் தளபதியாக ஆரம்பத்தில் நியமணிக்கப்பட்டார், அதற்குப்பின்பலர் மாறி மாறு பொறுப்பாளராக விடப்பட்டனர்,




சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.


1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் "வன்னி விக்கிரம 2" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பின் ஆயிரக்கணக்காண போராளிகள் அப்படையணியில் இருந்து களமாடி வீரச்சாவு அடைந்துள்ளனர்,



5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணியில் ஆரம்பத்தில் இருந்தது லெப் கேணல் சேகர் அவர்களும் இப்படையணிக்குப்பொறுப்பாகயிருந்து சண்டையின்போது வீரச்சாவு அடைந்தார் இப்படையணியின் இறுதி 2009 வரையிருந்து கேணல் கோவித் அவர்கள் வீரச்சாவு அடைந்தார்,



நினைச்சுக்கூட நாம் செய்ய விரும்பாத ஒரு வேலையை செய்தது இந்திய வினுடைய றோ,




21/05 /1991 இந்தியா பிரதமர் Rajivgandhy தேர்தல்பிரச்சாரத்திற்கு சிறி பெரும் புத்தூர் வந்த போது அவர் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். உன்மையில் நடந்த விடயம் இதுதான். 1987 ம் ஆண்டு வந்த இந்திய இராணுவத்தை 3 வருடம் கடுமையான ஆயுதப்போரில் சுமார் இரண்டாயிரம் இந்தியா வீரர்களைக் கொலை செய்ததோடுமட்டும் அல்லமல் பலரை சுத்தக் கைதிகளாகப்பிடித்து பின்னர் விடுதலை செய்தோம்.

இறுதியில் ஜனதுபதி பிரமதாசா அவர்களோடு இணைந்து இந்தியா இராணுவத்தை வெளியேற்றுவதற்கு கடுமையாக உளைத்ததவர்கள் நாங்கள் . ஆனால் இந்தியா இராணுவத்தை நாம் வெளியேற்றினாலும் எமது தொளில் சாலைகள் அனைத்தும் சுதந்திரமாக இந்தியாவில் இங்கிக்கொண்டுயிருந்தன. குறிப்பாக வரிப்புலி சீருடை தொளில் சாலை வெடிமருந்து குண்டுகள் தயாரிக்கும் தொளில்சாலை. எமது மருத்துவமனை சுத்தகாலங்களில் காயம் அடையும் அனைத்துப் போராளிகளும் அங்கேதான் இருந்தார்கள். அதை விட சுத்த நடவடிக்கைக்குத் தேவையான வோக்கி வெற்றி தொடக்கம்C.4 வெடிமருந்துவரை நாங்கள் அங்கே தான் கொள்வனவுசெய்தோம்.

அரிகில் உள்ள தமிழ்நாடு எமக்கு மிகவும் உதவளங்கும் நாடாகயிருந்தது. இது இந்தியாவின் உடைய( றோ) அமைப்பான புலநாய்வுத்துறைக்கு கடும் எரிச்சலாகயிருந்தது. எப்படியாவது ஒரு பெரிய தாக்குதலை செய்து தமிழக மக்களிற்கும் எங்களிற்கும் இருக்கும் உறவை முறித்து முதலில் எங்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இது தான் அவர்களின் குறிக்கோலாகயிருந்தது.

அக்காலப்பகுதியில்தான் கரும்புலிகள் தலைவரால் உருவாக்கப்பட்டுக்கொண்டுயிருந்தார்கள் கொழும்பில் சில மறைமுகத் தாக்குதல் செய்வதற்காக மகளீர் படை பணியை செர்ந்த பெண்போராளி தனு படித்துக் கொண்டு யிருந்தார்

ஆனால் இந்தியா குண்டுத் தொளில் சாலையில் கடமையாற்றிய பேராளிகள் வெடி மருந்து தொடர்வாக மிகவும் அனுவபம் உள்ளவர்கள் அதனால் மேலதிகப்படிப்பிற்காக தளபதி பொட்டுஅம்மான் அவர்கள் தனுவை இந்தியா அனுப்பினார்.தனு பயிற்ச்சி முடிந்து இலங்கை வந்ததும் அவர் கொழும்பிற்கு சென்று ஒரு மறைமுகத்தாக்குதவிற்காகவே அவர் பயிற்சி கொடுத்து வளக்கப்பட்டார்.

இந்தத் தகவல் இந்தியாவின் உடைய புலநாயவுத்துறையான .றோ.விற்கு கிடைத்து விட்டது. விடுதலை புலிகளால் தகவல் பரிமாறும் சங்கீதப் பிரதி இந்தியாவினுடைய றோவிடம் இருந்தது. இந்தியாவின் உடைய றோ அமைப்பினர் 3ன்று நாளைக்கு முதல் அப்போதை விடுதலைப் புலிகளின் இந்தியாவிற்கு பொறுப்பாகயிருந்த சிவராசனிற்கு தகவல் அனுப்பப்பட்டது. தனுவை அனுப்பி றாஜீவ் அவர்களை போட ஒழுங்கி செய்யவும் இதுதான் அந்தத் தகவல். 

ஆனால் சிவராசனும் இத்தகவல் எங்கு இருந்து வந்தது என்பதை அறிய முற்படவில்லை,அவர் தனுவை மட்டும் அனுப்பி வைத்தார்  சிவராசன் 
 வீடியோ எடுப்பதில் இருந்து தனுவை வாகனத்தில்ஏற்றிக்கொண்டு போனதில் இருந்து அனைத்து வேலைகளையும் இந்தியாவின் உடைய றோபுலாய்வுத்துறையே செய்து முடித்தது. 

ஆனால் சிவராசனிற்கு இதை அறிய போதிய காலமும் இல்லை அறிவும்அவர் முற்படவில்லை அவர்கள் திட்டமிட்டதுபோல் றோ அதிகாரிகள் எவரும் அந்த வெடிமருந்தில் சிக்காத வாறும் வேறு சிலஉயர் அதிகாரிகளும் ராஜீவ் அவர்களிற்கு பக்கத்தில் நிக்காத வாறும் ராஜீவ் அவர்களை மட்டும் இலக்குவைத்தே அவர்கள் சிறந்த முறையில் திட்டமிட்டார்கள்

மிகவு தொழில்நுட்பமாக ராஜீவ்வை மட்டும் கொலை செய்வதே அவர்களின் திட்டமாகயிருந்தது அவர்கள் திட்டம்டதுபோல் அப்பிரச்சாரக்கூட்டத்தில் அதிபர் ராஜீவ் அவர்கள் மட்டும் கொலைசெய்யப்பட்டார், ராஜீவ் அவர்களின் கொடைக்குப்பின்னர் அவர்களிற்குப் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது,

.ஆனால் ராஜீவ் கொலை செய்யப்பட்டதினால் எமக்கு ஏற்பட்ட இளப்புகளைப் பார்ப்போம். எமது குண்டுத் தொளில் சாலை சுற்றி வளைக்கப்பட்டது. அப்பொழுது 50 கலிபறிக்கு றைவுள் கிறினெட் செய்வதற்காக தமிழீழம் இருந்து தலைவரால் அனுப்பப்பட்ட மேஜர் குணா அண்ணை அவர்களும் அங்கே தான் நின்றார். இந்தியா இராணுவம் சுற்றி வளைத்து சலண்டர் அடையுமாறு கேட்டார்கள். அதை ஏற்க மறுத்த தளபதி குணா அவர்கள் குண்டை வெடிக்க வைத்து மேஜர் குணா உட்பட 21 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.

வரிப்புலி தொளில் சாலை சுற்றி வளைக்கப்பட்டு அதில் வேலை செய்த எமது பணியாழர்கள் அனைவரும் இந்தியா பொலிஸ்சால் கைது செய்யப்பட்டார்கள். அனைத்து வரிப்புலி சீருடைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியா மருத்துவமனையில் இருந்து 174 எமது காயம் அடைந்த போராளிகள் கைது செய்யப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள் பின்னர் முக்கிய உறுப்பினர்கள் இந்தியாவின் றோவால் கொலைசெய்கப்பட்டார்கள் ஏனைபவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சிவராசன் இந்தியா இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்ட சிவராசன் இறுதியில் சிவராசன் உட்பட 17 போராளிகள் குப்பி கடித்து வீரச்சாவு அடைந்தார்கள்.

அதையடுத்க்கிட்டுவின் கப்பல் உட்பட சுமார் 12 எமது ஆயுதக்கப்பலை இந்தியா நேடியாகவும் மற்றும் காட்டிக் கொடுத்தும் கடலில் மூழ்கடித்தது. அதை விட இந்தியா மக்களிற்கும் எமக்கும் இருந்த நெருங்கிய உறவை இல்லாமல் செய்தது.

இந்த நடவடிக்கையில் நாம் முழுமையாக தோற்றுவிட்டோம் எதிர்காலத்தில் இதை பாடமாக வைத்து நாம் முறியடிப்போம் என தளபதி பொட்டு அவர்கள் எங்களிடம் கூறினார்.


10/07//1991 முதலாவது மரபுவளிச்சமர் ஆனையிறவைஅதே நேரம் நாங்கள் 4 பேரும் கப்பலில் இருந்து சாமனை பாதுகாத்துக்கொண்டுயிருக்கின்றோம் என்பதை முன்னர் குறிப்ட்டுள்ளேன், அதில் நான் 01எமிலன்02 உதயகுமார் 03கரின்டன் பிரவு 04 இப்பொழுது விடத்திற்குவரும் ஆணையிறவு சண்டை 10/07/1991 அன்று இரவு தொடங்கி விட்டது.

 அப்பொழுது எங்களிடம் இருக்கும்புதியவெடிபொருட்களை லெப் கேணல் குட்டிச்சிறி மற்றும் மேஐர்றோவட் இருவரும் மாறிமாறி வருவார்கள் .வந்து சண்டைக்கான வெடிபொருட்களைஒவ்வொரு நட்களும் ஏற்றிக்கொண்டுபோவார்கள், அதாவது 23 மில்லிமீற்றர் ரவை 50 கலிபர்ரவை 40 மில்லிமீற்றர் ரவை RPG செல் என்பன ஒவ்வொரு நாளும்கொண்டுபோவார்கள்,


வங்கறுக்குள் ஏறி இறங்கி ஆயுதப் பெட்டிகளை தொடர்ந்து வாகனத்தில் ஏற்றுவதால் நாங்களும் கடுமையான கழைப்பாகயிருந்தோம்,

சண்டை தொடங்கி 15 நாள் ஆகி விட்டது,

திடீரென ஆயுத்ததை ஏற்றிக்கொண்டுபோன வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்து 23 செல்க்குப்பதிலாக வேறு செல்லை நாங்கள் ஏற்றியதாக எங்களிக்குப் பேசிவிட்டு வங்கறுக்குள் இறங்கி ஆயுதஇருப்புவிபரங்களை செக்பண்ணிக்கொண்டுயிருக்கின்றார்,குட்டிசிறி அண்ணை



அவருக்கும் பெரிய ஏமாத்தம் ஒன்று தெரியவந்தது 23 மில்லிமீற்றர் ரவையென நினைத்து 20 மில்லிமீற்றர் ரவையை நிறைய ஏற்றி விட்டார்கள், ஆயுதத்தரகர்கள்அதனால் 23 மில்லிமீற்றர் செல் முற்றாக முடிந்து விட்டது,


ஆனால் போதிய அழவு 20 மில்லிமீற்றர் ரவைகள் இருப்பில் உள்ளது ஆனால் அந்த ஆயுதம் எமது இயக்கத்தில் இல்லை,தவறுதலாக அனுப்பப்பட்தா? அல்லது தெரிந்துதான் அனுப்பினார்களா? என்பது எமக்குத் தெரியாது.

 ஆனால் இதை என்னன்று நான் அண்ணைக்குத் தெரியப்படுத்துவது என்று தலையில் கடித்து கத்திக்கொண்டுயிருந்தார்குட்டிசிறி அண்ணை , நாவல் பழ சூஸ் என்றால் குட்டிச் சிறி அண்ணை விரும்பிக் குடிப்பார் அதனால் நாவல் பழம் பிடிங்கி கசக்கி அதன் சாறயை எடுத்து சீனி போட்டுக்கரைத்துக்கொண்டுகொடுத்தேன், THANKS என்று சொல்லி அதை வேண்டி வெளியே  ஊத்திவிட்டார்,

 அவர் குடிக்கக்கூடிய மன நிலையில் இல்லை, அண்ணைக்கு என்ன சொல்வது என சரியான மனக்குழப்பத்தில் காணப்பட்டார்,இப்படி எல்லா பக்கத்தாலும் பிரச்சனைகள் காணப்பட்டது,

இனி ஆனையிறவில் என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்,

 இந்நடவடிக்கைக்கு தளபதி மாத்தையா  தலைவரால் ஒருங்கிணைப்புத்தளபதியாக நியமணிக்கப்பட்டார்,


இவருக்குத்கொடுக்கப்பட்ட கடசிச்சந்தர்ப்பமாக இதைப் பார்க்கலாம் ஏன் அவருக்குபிறகுசந்தர்ப்பம் கொடுக்கவில்லையென்பதை இக்கதையை முழுமையாகபடித்த பின்னர் உங்களிற்குத் தெரிந்துவிடும் என நினைக்கின்றேன்,


ஒருங்கினைப்புத் தளபதியாக மாத்தையா அவர்ககள் நியமணிக்கப்பட்டார்.அருக்குக்கீழே செயல்படபல தளபதிகள் விடப்பட்டார்கள், அதில் தமிழ்செல்வன், பால்ராஜ் கடல்பகுதியைக்கண்காணிக்க தளபதி சூசை வண்போர் படைப்பிரிவுப்பொறுப்பாளர் தளபதி சொர்ணம்,மகளீர் படை பணிகள் தளபதி பொட்டுஎன ஆனையிறவைச்சுற்றிக்களம் இறக்கப்பட்டார்கள், 


மாவட்டங்களில் இருந்தும் சிறு சிறு அணிகளை எடுத்தாலும் மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார்400 போராளிகள் வண்போர் பிரிவுக்கு எடுக்கப்பட்டார்கள் இதற்கு தளபதி சொர்னம் அவர்களேபொறுப்பாகயிருத்தார், இது தலைவரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தது,.ஆபிரக்கணக்கான போராளிகள் இந்நடவடிக்கைக்கு தாயார் ஆகயிருத்தார்கள் அதைவிட பின் தள வேலைகள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுயிருந்தது, அவர்களிற்கான உணவுப்பகுதி மருத்துவப்பகுதி வெடி பொருட்கள் வழங்குவதற்கான சப்பிளை பகுதி அதில் வீரச்சாவு அடைபவர்களை எரிப்பதற்கான ஏற்பாடுகள்அதாவதுகொடிகாமதுயிலும் இல்லத்தில் மலையழவு விறகுகள் சேமித்து வைக்கப்பட்டுயிருந்தன,


புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 23 மில்லிமீற்றர் கணோன்50 பது கலிபர் R.P.G ராங்கி எதிர்ப்பு உத்துகனைசெலுத்தி லோ என அனைத்தையும் வைத்துக்கொண்டு போராளிகள் மிக்க மகிழ்ச்சியில்காணப்பட்டார்கள்,


10/07/1991 இரவு சண்டை ஆரம்பிக்கப்பட்டது.ஆனையிறவைச் சுற்றிதாக்குதல் நடந்துகொண்டுயிருந்தது முதல் நாள் சண்டையிலே 60 திற்கு மேற்பட்ட போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள்,


தொடர்ந்து புதிய புதிய சுத்திகளை விடுதலைப் புலிகள்கையாண்டார்கள் அதில் மண்ணை வரலிக்குள்  நிறப்பி வெட்டை வெளிகளிற்குள்ளால் அதை உருட்டிக்கொண்டு சென்றால் மிதிவெடிகள் அதில் பட்டு வெடித்துவிடும் என அதையும் செய்தார்கள்,ஆனால் அனைத்தும் பெரித்தளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை,

 முதலாவதுநடவடிக்கை13/07/1991 அன்று வன்னி உமயாள் புரப்பக்கமாக ஆனையிறவை நோக்கி பாரிய நாகர்வு ஒன்று விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது அதற்கான கட்டளையை தளபதி பால்ராஜ்அவர்கள் மேற்கொண்டார்.

 அது முதலில் வெடிமருந்து நிறப்பப்பட்ட வாகனம் வேகமாகப் சென்று உள்ளே வெடிப்பது எனவும் தொடர்ந்து போராளிகள் அடித்துக்கொண்டு உள்ளே இறங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது, அதன்படிஇவ் வாகனம் அனுப்பப்பட்டது.

 நினைத்துக்கூடபார்க்க முடியாது செயல் ஒன்று அங்கே நடந்தது ஒரு இராணுவவீரன் சாவதற்கு துணிந்து வீட்டான் முன்னர் எந்தக் காலத்திலும் இராணுவ வீரர்கள் சாவதற்கு துணிவது இல்லை சண்டை தொடங்கினால் ஒன்று பின்னால் ஒடுவார்கள் அல்லது காயப்பட்டு சாவார்கள் ஆனால் இது அவர்கள் மனதில் ஒரு புதிய சிந்தனை  உருவானதை நாம் அறிந்து கொண்டோம், 

திடீரேன வேகமாக ஓடிவந்து அவ் துணிகர வேலையை அவ்இராவ வீரன் செய்தான்வேகமாக ஒடி வந்து வாகணத்திற்கு மேலே ஏறி குண்டைக்களட்டி உள்ளே இருப்பவர்களிற்குமேலேபோட்டான்அதுபேர்இரைச்சலோடுவெடித்து,அவ் இராணுவவீரன் உடல் சிதறிப் பலியானான், வாகனத்தை ஒட்டிச்சென்ற மேஐர் கேசரி, அவர்களும் அவருக்கு உதவியாகச் சென்ற கப்டன் டக்ளஸ் அவர்களும் விரச்சாவு அடைந்தனர்,


அதனால் நாம் திட்டமிட்ட நடவடிக்கை பாரிய தோல்வியில் முடிந்தது அவ் நடவடிக்கைக்குசச் சென்ற பல போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் எமது அன்றையநடவடிக்கை நிறுத்தப்பட்டதுஇரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக

அதாவது ஒரு பாரிய நட வழக்கை மேற்கொள்ளப்பட்டது இந்நடவடிக்கைக்குப்பொறுப்பாக பிரிகேடியர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்,


இந் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் நேரடியாக வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.


இவ் இராணுவ முகாம் .வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாக அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும். திட்டம் தீட்டப்பட்டது,



அதற்கு அமைவாக தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் ஒரு பெரிய கவச வானத்தில் முன்னே சென்றார்கள், பின்னால் கனிசமான போராளிகள் சென்றுகொண்டுயிருந்தார்கள், ஆனால்   எதிரியின் காவலரனுக்கு அண்மையாக ச் சென்ற வேளை எதிரி ஒருவன் RPG உந்துகணை செல்லுத்தியால் எமது வாகனத்தை நோக்கி துல்லியமாகத்தாக்குதல் நடத்தினான், அதனால்துரதிஸ்டவசமாக அவ் வாகனம் சேதம் அடைந்தது  அதை ஒட்டிச் சென்ற தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர். அதனால் அன்றைய நடவடிக்கைநிறுத்தப்பட்டது

 அதில்மேலும் பலபோராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் அதனால் 


அடுத்தமுயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.


இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.


இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.ஆனால் சண்டைகள் தோல்வி அடைந்தாலும் புதிய புதிய சுத்திகளில் விடுதலைப் புலிகள்தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தார்கள், புதிய 23 மில்லிமீற்றர் கனோன் ஆயுத்தால் உலங்கு வானூர்திகள், அவ்றோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் காயம் அடைந்த சிப்பாய்களை வெளியேகொண்டுபோகமுடியாத நிலை அடுத்து ஆயுதச்சப்பிளை உள்ளே வரமல் தடைப்பட்டது, இதானால் இரு பெரும் சிக்கல்களை அரசபடை எதிர்கொண்டது,


 14.07.1991அன்று ஆனையிறவை மீட்க சிங்களக் கடல் படையால் தரையிறக்கம் செய்யட்பட்டத

 வாழ்வா சாவா என்ற நிலைக்கு இராணும் தள்ளப்பட்டது, அதனால்வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை பக்கமாக ஒரு பாரிய தாக்குதல் ஒன்றை செய்து ஆணையிறவில் உள்ள படைகளை பாதுகாப்பது என அரசாங்கம் திட்டம்மிட்டது,


அதற்கு அமைவாக 14.07.1991 அன்று சுமார் 800 படைகளை ஏற்றிக்கொண்டு சிறிலாங்கா கடல்படை கடலில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் அழவில் வந்துகொண்டுயிருந்தது,

 ஆனால் அப்பொழுது அதை சுட்டு வீழ்த்தக்கூடிய பலமான ஆயுதமான வீற்றன் 23 மில்லிமீற்றர் ஆயுதங்கள் இருந்தன.எம்மிடம் , அப்பகுதிக்குப்பொறுப்பாக நின்ற தமிழ்செல்வன் கப்பல் வந்துகொண்டுயிருக்கும் கதையை மாத்தையாவிற்குத்தெரிவிக்கின்றார், அத்தோடு கடலில்வைத்து மூழ்கடிக்கப்போகின்றோம் என்ற தகவலும் மாத்யாவிற்குத் தமிழ்செல்வனால்சொல்லப்பட்டது,

திடீரென 5 நிமிடம் களித்து மாத்தையாவின் பதில் வருகின்றது கப்பலை கடலில் வைத்து மூழ்கடிக்க வேண்டாம் அவர்கள் தரையிறங்கியதும் அவர்களை சுட்டு விட்டு அவர்கள்கொண்டுவரும் ஆயுதங்களை எடுக்குமாறு மாத்தையா தமிழ் செல்வனிற்குக் கட்டளை வளங்கினார்,


தமிழ்செல்வனும் மாத்தையாவின் கட்டளையை நிறைவேற்றினார், ஆனால் தரையிறங்கியதும் நிலமை தலைகீழாக மாறியது, இராணுவத்தின் கை ஓங்கியது கடல்ககரைப் பிரதேசமான வெற்றிலைக்கேணியையும்கைப் பற்றி இராணுவம் ஆனையிறவோடு இணைத்ததுஅன்று நடந்த சண்டையில் மட்டும் லெப் கேணல் சூட்டி உட்பட 15 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்,


 இச் சமரை முறியடிக்க தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் பதுகாப்புப் படையணியான 0 படையணியைவைத்து கடுமையானதாக்குதல் நடத்தினார், அச்சண்டையில்லெப். கேணல் சூட்டி உட்பட நூற்றுக்கணக்காண சிறோ படையணிப்போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப் பிரிக்க முடியாவிட்டாலும் .பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை. கடுமையான எதிர்த் தாக்குதலைதளபதி சொர்ணம்மேற்கொண்டார், 


கொம்படி வரை வந்த படையினர். கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப். கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த் தாக்குதல் நடைபெற்றது. இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ் 


அா்ப்பணிப்பு மிக்க இச்சமர். இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர். இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்திய சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான ச. பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். அச்சண்டையின் தோல்விக்கு பிரதான பொறுப்பாக விடப்பட்ட மாத்தையா அவர்களின் தூரோகமே காரணம் இந்நடவடிக்கைக்காக நாம்அறுநூற்றி மூன்று போராளிளைக்கொடுத்தும் வெல்ல முடியாமல் போனதை எண்ணிக்கவலையடைகின்றோம்,

ஆனால் ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும். 10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. 


துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும். மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம்

. ஆனால் பேச்சுவாhத்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றே கருத்தை நாம் எப்பொமும் தெரிவித்துக்கொண்டே இருந்தோம்.


இராணுவத்தின் கவலை முடிந்து விட்டது விடுதலைப் புலிகள் இந்நடவடிக்கையில் முற்றாத்தோற்றுவிட்டார்கள், இதற்கு மாத்தையா என்ற பச்சை தூரோகி அரசாங்கத்திற்கு உதவினான் என்பதை எந்த ஒரு போராளியும் மறக்க மாட்டான்

சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் இருவரும்அந்நடவக்கையில் ஒரே நாள் வீரச்சவு அடைந்தனர் 


17/09/1991மின்னல்என்றபேரில்விடுதலைப் புலிகளின் ஆனையிறவு நடவடிக்கையை திசை திருப்புவதற்காகமணலாற்றைப்பிடிக்க ஒரு பாரிய நடவடிக்கையை அரச படைகள் ஆரம்பித்தது,


 நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக விடுதலைப்புலிகளிற்கு மேலதிகாமஆழணிகளை மணலாற்றுக்கு அனுப்ப வேண்டியதேவை ஏற்பட்டது,, அதனால் நான் முன்னர் குறிப்பிட்டுயிருந்தேன் ஆனையிறவுச்சண்டைக்காக புதிதாக கொள்வனவு செய்த சாமானை போராளி எமிலனின் தலைமையில் நாலு போராளிகள் நுணாவில்லில் நின்றோம் என குறிப்பிட்டு இருந்தேன், அப்பொழுது தளபதி சொர்ணம் அண்ணை திடீரேன எங்களின் முகாமிற்கு வந்த அவர்என்னை மட்டும் உடமைப்பையுடன் தனது வாகனத்தில் ஏறுமாறு கட்டளை வழங்கினார்,


நான் எங்களேடு நின்ற மூவரிடமும் போய்ற்று வாறன் என சொல்லி விட்டு அவரின் வாகனத்தில் ஏறினேன், அவர் நேராக சாகச்சேரியில் இருந்த தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆன 7,7 முகாமிற்குச் சென்றார்,அங்கே சென்றதும் அப்பொழுது ஒரு நடைமுறை இருந்தது பாதுகாப்பு முகாமில் இருந்து வெளியே சென்று 3 அல்லது ரண்டு மாதங்கள் அங்கேதங்கி நின்று கடமை செய்து விட்டு மீண்டும் உள்ளே வரும்போது தனிநபர் உடுப்பு வேக் செக்பண்ணும் நடைமுறை ஒன்று இருந்தது,


 ஆனால் அன்று எதிர்மாறாக நடந்தது காவல்கடமைகளில் நிற்பவர்களத் தவிர அங்கே நின்ற அனைவரையும் உடுப்பு வேர்க்கோடு வருமாறு சொர்ணம் அண்ணை கட்டளை வழங்கினார், அதனால் அனைவரும் உடுப்பு வேர்க்கோடுசென்றோம், அனைவரின் உடுப்பு வேக்குகளையும் நேரடியாக சொர்ணம் அண்ணை செக்பண்ணினார், அப்பொழுது அவ் முகாமிற்கு நிர்வாகப் பொறுப்பாக இருந்த லெப் அரசனின் வேர்க்குக்குள் சாவகச்சேரியை சேர்ந்த ஒரு பெண் எழுதிய காதல் கடிதமும் அவளின் படமும்  அவரின்வேக்கில் இருந்தது,


அதைப் பார்த்ததும் சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறைபோட்டு உமக்கு களியானம் கட்ற வயசா? என கேட்டு சண்டைக்கு உருயவாறு வெளிக்கிடு என சொல்லி அவனை அனுப்பினார், அடுத்து அனைவரின் உடமைகளும் செக் பண்ணி முடிந்தவுடன்,


லெப் அரசன் மேஜர் டிசான் என்னும் இரு போராளிகளையும் சண்டைக்கு வெளி கிடுமாறு கட்டளை வழங்கினார், அதற்கு மேஜர் டிசான் தனக்குறைவுளை மாத்தித்தருமாறு கேட்டான், உடனே என்னைக் கூப்பிட்ட சொர்ணம் அண்ணை எனது T.81 துப்பாக்கியை டிசானுக்குக் கொடுக்குமாறும் அவர் வைத்து இருந்த G 3துப்பக்தியை என்னை வேண்டி எடுக்ககுமாறு கட்டளை வழங்கினார், நானும் அவரிடம் எனது றைவுளை களட்டிக்கொடுத்துவிட்டு அவரின் றைவுளை வேண்டி எடுத்தேன்.


 அப்பொழுது எனது றைவுளிற்கு சிலிங் இல்லை நான் சீலைத்துணியால் தான் றைவுளை கட்டி இருந்தேன்,, அப்பொழுதுமேஐர் டிசானிடம் இரண்டு சிலிங் இருந்தது, ஒன்றை எனக்குத் தருமாறு கேட்டேன், நீர் சொர்ணத்திடம் சொன்னாலும் பராவாய் இல்லை சிலிங் தர மாட்டேன் உன்ற்ற பல்லை உடைப்பேன் என்றார்,


 இதே காலம்தான் ஒவ்வொரு போராளிகளையும் தலைவர் தன்னோடு வைத்துயிருந்து அவர்களின் திறமையான செயல்பாட்டை அவதானித்தபின் அவர்களை அடுத்த கட்ட வழர்ச்சிக்காக மாவட்டங்களிற்கு அனுப்புவார் அந்தத் தெரிவில் 1988ட்டு காலப்பகுதியல் இருந்து தலைவரின் மேற்பாது. காவலர்களாகருயிந்த லெப் கோணல் ஜோய். லெப் கேணல் விஜயகாந்-மேஐர் வினோத் போராளி அருள் இவர்கள்4 பேரும் மற்றும் தளபதி வாணு அவர்களையும் மட்டக்களப்பிற்கு அனுப்ப தலைவர் திட்டமிட்டர். அதற்காகவே அவர்கள் அங்கே விடப்பட்டு இருந்தார்கள்,


அப்பொழுது அகிரில் நின்ற ஜோய்  டிசான் என்னேடு முறன்பட்டதை பார்த்துக்கொண்டு நின்றார்.


உடனே யோய் டிசானிடம் சொன்னான்  அவனில் தவறு இல்லை இண்டு சிலிங்கை பார்த்தபடியால் தான் உன்னிடம் கேட்டான் நீர் ஏன் அவனிக்குப் பேசினாய் என சொல்லி விட்டு அவனின் சிலிங்கை எனக்குத்தந்தான் ஆனால் தான் மட்டக்களப்பு வெளிக்கிடும்போது என்னிடம்தரவேண்டும் என சொல்லித்தான்தந்தான், 


 ஆனால் அன்று பிற்பகல் அவர்கள்யாழ் மாட்டத்தை சுற்றிப்பார்ப்பதற்காக  வெளியே போய்விட்டார்கள்  , ஆனால் அவன் வெளியே சென்று சில மணித்தியாலத்தால்  நாங்கள் தலைவரோடு வடமராச்சிக்குப்போய் விட்டோம்   , அப்பொழுது ஜோ மீண்டும் முகாமிற்கு வந்து என்னைக் கேட்டுள்ளான், அதற்கு அவர்கள் நான் வெளியே சென்று விட்டேன் என அவனிடம் சொல்லி உள்ளனர் அதற்கு அவன் என்னிடம் கொடுக்கச் சொல்லி ஏதாவது தந்தானா என கேட்டுள்ளான்,? அவர்கள் இல்லை என சொல்லியுள்ளனர் அதற்கு அவன் கான்ற இடத்தில் அவனை சுடுவனைச்சுடுவன் என சொல்லுங்கோ என சொல்லி வீட்டு மட்டக்களப்பு சென்று விட்டான், அங்கே சென்று சிறிது காலத்தில்அவன் வீரசாவு அடைந்து விட்டான் இதுதான் போராளிகளின் வாழ்கை



அடுத்து அங்கே இருந்து மேஜர் டிசானும் லெப் அரசனும் மின்னல்
 நடவடிக்கையை முறியடிப்பதற்காக மணலாற்றுக்கு அனுப்பப்பட்டார்கள்,, அப்பொழுது எங்களின் 0 படையணிப்போராளிகள் பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தலைமையில்மணலாற்றில் நின்றார்கள் 


 
  அவர்களோடு இவர்கள் இருவரும் போய் இணைந்து சண்டையிட்டுகொண்டு இருந்தார்கள், இனி மின்னல் நடவடிக்கையை பற்றி விரிவாகப்பார்ப்போம்,




 எப்படியாவது ஆனையிறவுச் சண்டையை திதை திருப்ப வேண்டும் என எதிரி திட்டமிட்டான் அதை திசை திருப்புவதற்காக ஒரு புதிய கழமுகனையை ஆரம்பித்தான்.


அதுமின்னல் என்ற பேரில் மணலாற்றை பிடிப்பதற்கான நடவடிக்கையாகும்.எதிரியின் நோக்கம் ஒன்று ஆணையிறவில் இருந்து விடுதலைப் புலிகளை மணலாற்றிக்கு இழுத்து ஆனையிறவைப்பாதுகாப்பது, அல்லது அவர்கள் எதிர்புக்குக் காட்டாமல் இருந்தால் இழப்பு இன்றி இலகுவாகமணலாற்றை கைப்பற்றுவது, இதுவே அரசாங்கத்தின் திட்டமாகயிருந்தது,


ஆனால் ஆனையிறவைவிட மணலாறே விடுதலைப் புலிகளிற்கு முக்கியமானது என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்த விடயம் அதனால் அங்கே கைவத்தால் ஆனையிறவை தானாக விடுவார்கள் என்பது அவர்கட்கு நன்கு தெரியும்எனவே அதைமையமாகவைத்தே,மணலாற்றில்ஆரம்பிக்கப்பட்ட  ராணுவ நடவடிக்கையாகும்.


இரண்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்பது விடுதலைப் புலிகளைப்பொறுத்தவரை ஒரு பாரிய சாவாலாகவே இருந்ததுஏனெனில்அவர்ட்கு பாரிய ஆழணிப் பிரச்சனையாக இருந்தது ஆணையிறவில் இருந்து குறிப்பிட்ட போராளிகளை மணலாற்றுக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது,


அதனால் தலைவரின் 0 பிரிவில் இருந்து சுமார் 200 போராளிகளுடன் பிரிகேடியர் ஜெயம் தலைமையில் மணலாற்றுக்கு ஒரு படையணி அனுப்பப்பட்டது தளபதி பால்ராஜ் அவர்களின் றெஜிமேன்ட் 1991 - 4ம் மாதம் சாழ்ஸ் அன்ரனி என பேர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே சாழ்ஸ் அன்ரனி படையனியைச் சேர்ந்த சுமார் 250போராளிகளுடன் போராளி STAR  தலைமையில் அங்கே அனுப்பப்பட்டது,

அதின் பிரதான பொறுப்பாளர் தளபதியாக தளபதி பால்ராஜ் அவர்களும்அங்கே சென்றார்,




மணலாறு பகுதிக் கொமான்டராக லெட் கேணல் ஜஸ்ரின் கடமையாற்றினார், அச்சண்டைகறிற்கான கட்டளைகளை தளபதி பால்ராஜ் அவர்கள் வழங்கினார், காயப்பட்ட போராளிகளைப் பரமரிப்பது நிலமையை அறிந்து தலைவருக்குத் தெரியப்படுத்துவது, இவ் வேலைகளை கேணல் சங்கர் அவர்கள் செய்தார் .


ஒரு பகுதிக் கொமாண்டாராக தளபதி ஜெயம் தனது 0 படை பணியை வைத்து இராணுவத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தினார் , 0 படையணியடமே நவின ஆயுதங்கள் உள்ளது என்பது எதிரிக்கும் தெரிந்த விடயம்,இதுவே தலைவரின் நேரடிகண்காணிப்பில் செயல்படும் அணியாகும், இச்சண்டையில் தலைவரின் பாதுகாவலரான லெப் அரசன் மேஜர் டிசான் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்,


 


ஆனால் எதிரியின் திட்டம் தோற்கடிக்கப்பட்டது மணவாறு பாதுகாற்கப்பட்டது,

இதேகாலத்தில் சில முக்கிய மாற்றங்களைக்கொண்டு வந்த தலைவர்,





14/07/1991முனர் போராளிகளின் வித்துடல்கள் எரியூட்டப்பட்டன, எரிபடும் போது ராஜன் என்ற பேராளியே அவ் விடியோ வை தலைவரிக்குக் காட்டியுள்ளார், அதைப்பார்த்த தலைவர் மேடையில் வைத்து அஞ்சலி செய்தபின் அடக்கம் செய்யுமாறு கட்டளை வளங்கியுள்ளார், அதை அடுத்து14/07/1991 முதல் முதலாக கப்டன் சோலை என்பவரின் வித்துடன் கோப்பாய் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது, அன்றில் இருந்து தமிழீழப்குதியில்வீரச்சாவு அடையும்அனைத்துப் போராளிகளும்துயிலும் இல்லங்களில்விதைக்கப்பட்டார்கள்,


இதே காலம் தான் தளபதி வாணு அண்ணை மட்டக்களப்பு அனுப்பப்பட்டார், தளபதி பதுமன் அண்ணை திருமலையில் இருந்து எடுக்கப்பட்டார், அங்கே இருந்து எடுக்கப்பட்ட பதுமன் அண்ணை தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆன 7, 7 முகாமிலே ஒரு சில மாதங்கள் நின்றார், அப்பொழுது பாதுகாப்பில் நிக்கும் அனைத்துப் போராளிகளும் மதிய நேரங்களில் அணிநடை செய்வது எங்களின் கடமையாக இருந்தது, அப்பொழுதுநான் பதுமன் அண்ணையையும் அணிநடைக்கு எடுப்பதா என சொர்ணம் அண்ணையிடம் கேட்டேன், பதுமன் என்றா அவருக்கு என்ன கொம்பா அவரையும் எடுத்து உயரமுறைப்படிவிட்டு பரட்டை கொடுங்கோ என சொர்ணம் அண்ணை என்னிடம்சொன்னார் அவர் சொன்னது போல் பதுமன் அண்ணைக்கும் பரட் வழங்கப்பட்டது,20/09/1991 அன்று பதுமன் அண்ணை படைத்துறைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார்,

19/09/1991 அன்று அவரின் தலைமையில் தமிழீழப்படைத்துறைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது


19/09/1991 தமிமீழத்தில் பல கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும் என தலைவர் இரவு பகலாக சிந்தித்துக் கொண்டுயிருந்தார். அவ்வேளையில் தான் வெளிநாடுகளில் உள்ள சில பக்க சார்பற்ற நிறுவணங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக போலியானவதந்திகளைப்பரப்பிய வண்ணம் இருந்னே

அதற்காக அவர்கள் எமது மக்களால் கலை நிகழ்வுகள் செய்யும் போது சிறுவர்கள்  வரிப்புலி அணிந்து நடிக்க வைப்பது அவர்களின் விருப்பமாகயிருந்தது. இந்தப் படங்கள் இப்படியான மீடியாக்களின் கைகளில் சிக்கி விட்டது இந்தப் படங்களைவைத்தே அவர்கள் கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள்.

அது தலைவருக்கு கடும் கவலையாகயிருந்தது செய்யாதே ஒரு வேலையை செய்வதாக இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்களே என்பது தான் அத்தக் கவலை. அக்காலப்பகுதியில் திருகோணமலை சிறப்புத் தளபதியாகவிடப்பட்ட தளபதி பதுமன் அவர்கள் திறமையான முறையில் இராணுவத்திற்கு எதிரான சண்டைகளில் ஈடுபடாமல் செயல்பாடு அற்ற ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம்காணப்பட்டது.

10/08/1991 திருகோணமலை மாவட்டத்தில் இருந்து அனைத்துப் பொறுப்புக்களையும் வேற ஒருவரிடம் பொறுப் கொடுத்து விட்டு யாழ்பாணம் வருமாறு தளபதி பதுமனிக்கு தலைவரால் சொல்லப்பட்டது. தொடர்ந்து பதுமன் யாழ் சாவகாச்சேரியில் உள்ளே தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆனே7.7. முகாமிற்கு வந்து சேர்ந்தார். அங்கே யார் வந்தாலும் தளபதி என்று எவ்விதமான சலுகைகளும் தளபதி சொர்ணம் அவர்களால் வளங்கப்படாது.அனைவரும் சமனாகவே மதிக்கப்படுவார்கள்,

நேரம் பகல் 12 மணியானால் கடும் வெய்லாகயிருக்கும் ஆனால் நாங்கள் எல்லோரும் பரட் அல்லது அணி நடை செய்வததற்காக லையின் பண்ணுவோம் உயர முறைப்படி பதுமன் பின்னால் நின்று பரட் அடிப்பார் நான் முன்னால் நின்று பரட் அடிப்போம். இது தான் அங்குள்ள நடைமுறையாகயிருத்தது. தளபதி பதுமன் மற்றும் தலைவரின் பாதுகாப்பு அணியில் மினிமினி LMG வைத்துயிருந்த  பதுமன் இவர்களின் இருவரின் தலைமையில் தமிழீழப்படைத்துறைப்பள்ளி19/09/1991 ம் ஆண்டு தலைவர் ஆரம்பித்துவைத்தார்.

இதின் நோக்கம் 18 வயதிற்கு குறைந்தவர்கள் எமது இயக்கத்தில் இணைந்தால் அவர்கள் படைத்துறைப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள். அங்கே அவர்களிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் கற்ப்பிக்கப்படும் 18ட்டு வயதை அவர்கள் அடையும் வரை இப்படிப்பு அவர்களிற்கு தொடர்ந்து நடக்கும். அவர்கள் 18ட்டு வயதை அடைந்ததும். மீண்டும் அவர்களிற்கு ஒரு நேர்மும் வைக்கப்படும் அதில் நீங்கள் விடுதலைப் புலிகளின் ஆரம்ப இராணுப்பயிற்சிக்கு செல்லப் போகின்றீர்களா? அல்லது  சமுகத்தோடு சேர்ந்து வாளப் போகின்றீர்காளா?

இது தான் அந்தக் கேழ்வியாகயிருக்கும் ஒரு சிலர் வீட்டிற்கு சென்று விடுவார்கள் பெரும்பாண்மையான இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்து கொள்வர்கள் . இது தான் எங்களின் வேலையாகருந்தது.பிற்காலத்தில் இவர்கள் சிறந்த பேராளிகளாக வழர்ந்து வந்தார்கள் ஒரு சிலர் சிறுத்தை கொமாண்டோ அணிக்கு விரும்பிப்போய் சேர்ந்தார்கள், இதில் வழந்தவர்கள் 99 வீதமானவர்கள் தங்களின் உயிரைதாய்நாட்டிற்காக அற்பணித்துவிட்டார்,

23/09/1991 செஞ்சோலை சிறுவர் இல்லம்






யுத்த சூழ்நிலையால் பெற்றோரைஇழந்து பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்” என்றார்.



என தெரிவித்ததோடு பெண் போராளிகளில் மிகவும் நேர்மையானவரான ஜெனனி அவர்கள் அப்பொறுப்பிற்கு நியமணிக்கப்பட்டார். பின்னர் அவ் மாணவர்களோடு பேசிய தலைவர் நீங்கள் ஒரு திறமையானவர்களாக வளர வேண்டும் உங்களிற்குயராவது அடித்தாலோ அல்லது துன்புறுப்தினாலோ நீங்கள் எனக்கு தெரிவிக்க வேண்டும் என தலைவர் கூறினார்.

தொடர்ந்து அவர்களை திறமையாகப்படித்ததோடு மட்டும் அல்லாமல் வயது வந்த மாணவிகளை ஆண் போராளிகள் திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னோடு நின்ற போராளிகளிற்கு விளிப்புணர்வு ஏற்படுத்தினார். வெளிப்படையணியில் நின்றவர்கள் அதை ஏற்காவிட்டாலும். தலைவரின் பாதுகாப்புப் போராளிகள் அதை ஏற்று திருமணம் செய்தார்கள். குறிப்பாக போராளி. நடா . போராளி. பில்லா . போராளி. குகதாஸ் என கூடுதலான போராளிகள் திருமணம் செய்தார்கள்.

19/11/1991 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழக்காவல் துறை உருவாக்கப்பட்டது 



அதன் நோக்கம் சமுக ரீதியான பிரச்சனைகளான பாலியில் குற்றம் கொலை கொள்ளை மற்றும் மக்கள் மத்தியில் ஏற்ப்படும் கொடுக்கள் வாங்கல் காணிப் பிரச்சனையென அளவிற்கு அதிகமான பிரச்சனைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுக்கொண்டுயிருந்தன. இதைபக்க சார்பற்ற முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே தலைவரின் நோக்கமாக இருந்தது.

அதை கையாழுவதற்கு பொறுப்பாக விடப்படுவபர் முன் அனுவபம் உள்ளவராகயிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பா.நடேசன் 

அதற்கு பொருத்தமானவராக தலைவரால் கருதப்பட்டர். 
    

அவர் தலைமையில் ஒரளவிற்கு படித்த இளைஞர் யுவதிகளை இணங்காணப்பட்டு முதலாவது காவல் துறை பயிற்ச்சி யாழில் நடைபெற்றது. சிறந்த போராளி ஆசிரியர்களைக் கொண்டே இப்பயிற்சி வளங்கப்பட்டது. அப்பயிற்சி முகாம் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது.

போராளிகளின் ஆம்பப் பயிற்சி நிறைவுகளை பார்க்க விரும்பாத தலைவர். இவர்களின் ஆரம்பப் பயிற்சிகளை இடைக் கிடகண்காணித்ததோடு பயிற்சி நிறைவு நாள்களில் சென்று அவர்களின் இராணுவ மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதனால் அவர்களிற்கு தலைவர் மீது நம்பிக்கையும் விசுவசமும் ஏற்பட்டது. அதனால் அவர்களின் செயல்பாடு சிறப்பாகக்காணப்பட்டது.



காலப்போக்கில் இவர்கள் சமுகப் பணி மட்டும் செய்யவில்லை இறுக்கமான ஆளணிபற்றாக்குறை ஏற்படும் போது போராளிகளோடு இணைந்து சண்டையிட்டு பலர் வீரச்சாவு அடைந்துள்ளனர். இவர்களைக் கண்டதும் மக்கள் ஒரு சிறிய பயத்துடனான ஒரு பெரிய மரியாதை கொடுப்பார்கள். போராளிகளிற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் போல் இவர்களிற்கு சிறிது குறைவாகக்காணப்பட்டது. கடமையில் இருக்கும் போது மட்டும்  மது/ புகைத்தல் மற்றும் சமுகம் ஏற்றுக் கொள்ளாத தவறான செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பதே இதன் கட்டுப்பாடாகும்
பின்வருமாறு காவல்துறை அங்கத்தவர் குறிப்பிடுகையில்,

1991ம் ஆண்டு, கார்த்திகை மாதம் , 19ம் திகதி எமது அணிகள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறின. எமது முதலாவது அணிவகுப்பை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு, எமது பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதனைத்,

 தொடர்ந்து யாழ். குடாநாட்டில் யாழ்ப்பாணம், சுண்ணாகம், சங்கானை, கோப்பாய், சாவகச்சேரி, பளை, பருத்தித்துறை, நாகர்கோவில் போன்ற இடங்களில் பணிமனைகள் திறந்து வைக்க்கப்பட்டன. இதன்பின்னர். வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் பணிமனைகள் திறந்து வைக்கப்பட்டன. சகல பணிமனைகளிலும் அன்றிலிருந்து இன்றுவரைபணிபுரிந்து வருகின்றது  

                                               


 01/01/1992 அன்று கிறுத்தைப் படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது





 இதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 17 வயது தொடக்கம் 22 வயதான ஆண் பெண் போராளிகள் எடுக்கப்பட்டார்கள், இதில் பெண் போராளிகள் தனியாகவும் ஆண் போராளிகள் தனியாகவும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது,

முதலில் பெண் போராளிகளைப் பற்றிப்பார்ப்போம்,

1990 கடசிப்பகுதியில் நானும் சொர்ணம் அண்ணையும் நாவல் குழி முகாமில் இருந்து செல்லக்கிளியை ராஜீவ் அண்ணையின் முகாமில் விட்டோம் என குறிப்பிட்டேன் இப்பொழுது அதைப் பற்றிப் பார்ப்போம்,


இதற்கு கேணல் ராஜீவ் அவர்கள் பிரதான பொறுப்பாளராக தலைவரால் நியமணிக்கப்பட்டார், சிறுத்தைப் படைபணியின் சிறப்புப் பொறுப்பாளர்,  லெப் கேணல் கோமளா,




 



தளபதி லெப் கேணல் நந்தா, துணைத்த தளபதி, போராளி சௌமியா,

ஆசிரியர்கள்உடல் பயிற்சி செல்லக்கிளி, ஆயுதரீதியான வகுப்பு, ஜெனனன் மாஸ்ட்டர், வெடிமருந்து கேணல் ராஜீவ் தொலைத்தொடர்பு பிள்ளையான் மாஸ்ட்டர், கரிகாலன், அன்ரி / பத்மலோஜினி, கரத்தே / குத்துச்சண்டை சோதி மாஸ்ட்டர்,என சிறந்த கட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்டது இவ் முகாம் கொடிகாமத்தில் அமைந்த ஒரு தொன்னம் தோட்டமாகும், இதற்கு   பலாலியில்விரச்சாவு அடைந்த மேஜர் தாரணி என்ற இவரின் பெயர் வைக்கப்பட்டது,இது தலைவரின் நேரடிகண்காணிப்பில் நடந்தது இவர்களிற்கான் உணவு பயிற்சி அனைத்தையும் தலைவரே நேரடியாகக் கண்காணித்தார் இவர்களிற்கும் கடல்புலிகற்கும் மட்டுமே டாவுள் வச்சேற் என சொல்லப்படும்சத்துக் கூடிய உணவு வழங்கப்பட்டது, ஒவ்வொரு பயிற்சி மதிப்பீட்டிற்கும் இவர்களின் பயிற்சியைப்பார்ப்பதற்கு தலைவர் அங்கே செல்வார்,



அதே காலம் இவர்களின் பயிற்சிபதிப்பீட்டைப் பார்வையிடுவதற்காக தளபதி லெப் கேணல் குட்டிசிறி தலைமையில்தலைவரோடு நாங்கள் நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த 9.5 முகாமில் இருந்து சென்றுகொண்டுயிருந்தோம்.தலைவரின் வாகன ஓட்டியாக சின்னமணி, தலைவர் மேஜர் மாதவன் அண்ணெ மற்றும் குட்டிசிறி அண்ணணெ இவர்கள் தலைவரோடு முதலாவது வாகனத்தில் சென்றுகொண்டுயிருந்தார்கள்,

, இரண்டாவது வானத்தை போராளி நசிர் அண்ணெ ஓட்டினார் அதில் நான் லெப் கேணல் குணேஸ் அரிச்சந்திரன், போராளி கிறேசி, என பல போராளிகள் சென்றோம் மூன்றாவது வாகனத்தை போராளி  லாம்பா அண்ணை ஓட்டி வந்தார் அதில் கதிரோனி,முத்துஐயன், கமல் என பல போராளிகள் அதில் வந்தார்கள் அதில் தலைவரின் பாதுகாப்பிற்காக 50 கலிபறும் வந்தது.மூன்று வாகனங்களும் 150 மீற்றர் இடைவெளியில் சென்று கொண்டுயிருந்தது,

அது பெண் போராளிகன் சிறுத்தை பயிற்சி முகாமான கொடிகாமத்தில் அமைந்து இருந்த தாரணி பயிற்சி முகாமிற்குச் சென்றது,


அங்கே சென்றதும் ராஜீவ் அண்ணை மற்றும் உடல் பயிற்சி ஆசிரியர்ரான செல்லக்கிளி இருவரும் தலைவர் மற்றும் பொட்டு அம்மான் இருவரையும் கூட்டிக்கொண்டு அனைத்துப் பயிற்சிகளையும் காட்டினார்கள், அதைத்தலைவர் பார்வையிட்டுக்கொண்டுவந்தார், அனைவரும் ஆண்களிற்கு நிகராக சிறந்த முறையில் தங்களின் பயிற்சியை செய்து காட்டினார்கள்.

, தலைவருக்கு மிக்க மகிழ்ச்சியாகயிருந்தது, கடசிப்பயிற்சியான 25 அடி உயிரத்தில் இருந்து கீழே பாய்தல் இதில் அனைத்துப் போராளிகளும் சிறந்த முறையில் பாய்ந்து ஓடிச்செல்கின்றார்கள் தலைவரும் மிக்கமகிழ்ச்சியில் பார்த்துக்கொண்டுயிந்தார், ஆனால் கடசியக வந்த ஒரு பெண் போராளி பாயாமல் கோபுரத்திற்கு மேலேநிக்கின்றார், ராஜீவ்  அண்ணையும் பாயுமாறு சொன்னார் பொட்டு அம்மானும் சொன்னார் இறுதியாக தலைவரும் பாயப்பிடமல் பாய் பிள்ளை என சொன்னார் அவர் அதையும் கேட்கவில்லை,

ஆனால் அப்போராளிபாயவில்லை பாய்வது போல் பாசாங்கு செய்வது பின்னர் நிற்பதும் ஆக நேரம் கடந்து சென்றது, இறுதியாக தலைவர் அது பிரச்சனை இல்லை கோபுரத்தில் இருந்து இறங்கிவா பிள்ளை என கட்டளை வழங்கினார், அதையும் அப்பிள்ளை செய்யவில்லை அது கோபுரத்திற்கு மேலேநின்றது,

இத்தகவல் செல்க்கிளிக்குச்சென்று விட்டது எங்கயோ இருந்து வேகமாக ஓடி வந்தான் செல்லக்கிளி எதோ ஒரு பேரைச்சொல்லி சமசோட் யம் என கட்டளை வழங்கினான்அப்போராளி தலைகீழாக சுற்றி கீழே பாய்ந்தது பின் உறுதியாக நிலத்தில் நின்று ஓடியது



இதைப்பார்த்த தலைவர் சொன்னார் நாங்கள் எவளவு பேர் சொல்லியும் அப்பிள்ளை செய்யவில்லை பயிற்சி மாஸ்ட்ட்டர் சொன்னவுடனே மேலதிகமாக சமசோட்டும் அடித்து விட்டும்போனது பார்த்தையளா? இங்கே மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் மாஸ்ட்டர் சீப்பிற்கு அனைத்துப்போர் வீரர்களும் கட்டுப்படுவார்கள் ஏனெனில் மாஸ்ட்டர் சீப்பிற்குத்தான் ஒவ்வொரு போர்வீரனின் பலம் பலயீனம் கண்டிப்பாகத்தெரிந்து இருக்கும் என தலைவர் குறிப்பிட்டார்,பயிற்சி மதிப்பீடு முடிந்து தலைவர், பொட்டுஅம்மாள்,ராஜீவ் அண்ணை அனைவரும் சாப்பிடுவதற்கு தயார் ஆகி விட்டார்கள், 

அவர்கள் இருக்கும் வட்டக்கொட்டிலுக்குப்பின்னால் நான் மினி மனி L.M.G யோடு கடமையில் நிக்கின்றேன் முன்னால் லெப் கேணல் குனேஸ் அதே றைவுளோடு கடமையல் நின்கின்றார், எனது முடியும் குனேஸ் அவர்களின் முடியும் காத்துக்குப்பறக்கக்கூடிய இலகுவான முடிகள் அதனால் வாகணத்திற்குப் பின்னால்  இருந்து வந்தமையால் இருவரின் தலைகளும் குழம்பிய நிலையில்காணப்பட்டது,அதில் இருந்தவர்களில் 



கேணல் ராஜீவ் அல்லது குயிலன் என்பவர் மட்டும் போராளிகளில் குற்றபிடிப்பதில் திறமையானவர்,

மிகவும் ஆர்வமானவர் அதனால் இந்த மாதம் பொடியில் முடி வெட்டல்லப்போலயிருக்கு தலையல்லாம் குழம்பியிருக்குது, என்று தலைவரிடம் ராஜீவ் அவர்கள் சொல்ல தலைவருக்கு கடும்போபம் வந்து விட்டது என்னோடு நிப்பதல்லாம் பேய்கள்தான் என்று சொல்லிவிட்டு தனது கோபத்தை அடக்கியதோடு அதற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார்,

 மேற்கொண்டு அது தொடர்வாக அவர்கதைக்கவில்லை, இது ராஜீவ் அவர்கட்டு ஒரு ஏமாத்தமாகக்கூட இருந்துயிருக்கலாம், ஏனெனில் ஆரையும் கூப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைவர்எவரையும் கூப்பிட்டுச்சொல்லவில்லை . இதை அவதானித்த ராஜீவ் அண்ணை பாதுகாப்புக்குப்போறுப்பாகவந்த லெப் கேணல் குட்டிசிறி அண்ணையிடம் அப்பிரச்சனையைத் தெரியப்படுத்தியுள்ளார்,


நாங்கள் மீண்டும் முகாம் திரும்பியதும் எங்கள் இருவருடனும் தளபதி குட்டிசிறி அண்ணை எங்களிடம் வந்து ஏன் முடிவெட்டவில்லையென விசாரித்தார் அதற்கு நாங்கள் நேரம் இல்லாத பிரச்சனை தான் காரணம் என தெரிவித்தோம், அவர் உடனே ஒரு போராளியைக் கூப்பிட்டு எங்கள் இருவருரின் முடியும் வெட்டப்பட்டது.

 அத்தோடு இருவருக்கும் நல்லண்ணை போத்தல் ஒன்றும் தரப்பட்டது அதை வாகனங்களில் போகும் வேளைகளில்மட்டும் தலைக்கு வைக்குமாறு அவரால் சொல்லப்பட்டது,1992அக்காலப்பகுதியில் எமது பாசறை யாழ் வலிகாமத்தில் உள்ள கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் அரிகில் அமைந்துயிருந்தது. அவ் முகாமிற்கு பெயர்9.5 என்பதாகும். அங்கே தான் தலைவர் அனகமாக வசிப்பது வளமை. அக்காலப்பகுதியில் தலைவரின் மேற்பாதுகாப்புப் பொறுப்பாளர்களாகச் செயல்பட்ட தளபதி சொர்ணம் 01தளபதி கடாபி 02 தளபதி ஜெயம் 03 தளபதி றோவட் 04 தளபதி குட்டிச் சிறி 05 இவர்கள்தான் நம்பிக்கையான தளபதிகளாக தலைவரால் கருதப்பட்டவர்கள் .


இதேஆண்டு6 ஆம் மாதம்  காலப்பகுதியில்மட்க்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி கணேஸ்தலைவரின் பாதுகாப்பு அணியில் இருந்தார். இவன் ஒருசுறு சுறுப்பான வீரணாகக்காணப்பட்டான் 

. ஆனால் கடுமையான தலைவலி. ஒவ்ருவொரு நாளும் சித்தாலேவை போன்ற மருந்துகளை கன்னத்தில் பூசிப் பூசி கன்னம் பெரிதாக வீங்கிக்காணப்பட்டது.


அதை தாங்கிக்கொள்ள முடியாத கனோல் தலைவரிக்கு 10த்திற்கு மேற்பட்ட கடிதம் எழுதினான். அதாவது கூடுதலான காலம் போராட்டத்தில் என்னால் இருக்க முடியாது ஏனெனில் கடுமையான தலைவலி எனக்கு இருப்பதால் அதைத்தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

எனவே என்னை கரும்புலிக்கு அனுப்புமாறும் எனது கடமையைத்திறமையாகச்செய்து எனது போராட்ட வாழ்கையை நிறைவு செய்யதான் விரும்புவதாக குறிப்பிட்டுயிருந்தான். தலைவரோ இவன் வேலை காணமல்தான் இப்படி சிந்திக்கிறான் என எண்ணி அவனின் வேலையை அதிகரிக்க ஆரம்பித்தார்.


தலைவரைப்பொறுத்தவரை எவரையும் இலகுவில் இளக்க விரும்பமாட்டார் அது அவருடையே இரங்கல் குணத்தைக்காட்டியது. அனைத்துப் போராளிகளும் கரும்புலியாகப்போவது என்றால் தலைவரிக்கு பல கடிதங்கள் எழுதி இறுதியில் கடுமையாக முரன்பட்டுக்கொண்டேபோவது வளமையாகயிருந்தது. அதைத்தான் கணேஸ் அவர்களும் செய்து பார்த்தார் அது வெற்றி அளிக்கவில்லை


 முன்னர் அவன் எமது ரெட்டி முகாம் தொலைத்தொடர்பாளாக கடமையாற்றினான்தொடர்ந்து தலைவரின் கட்டளைக்கு அமைவாக,  லெப் கேணல் குட்டிச்சிறி அண்ணையிடம் சொல்லி ஒரு லக்ஸ்சம் பெறுமதியான மரத்தாலான மேல்மாடிகீழ்மாடிக்கூடுகள் செய்து கொடுக்கப்பட்டது,

 அதற்குத்தலைவரின் அனுமதியுடன் வீரவேங்கை கணேஸ் அவர்களையே பொறுப்பாகவிட்டார் குட்டி சிறி அண்னை


மேல் தட்டில்வாண்கோழிகளும் கீழ் தட்டில்   முயல் மற்றும் மரைமான்  வளப்பதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்குப்பொறுப்பாளராகவும் இராண்டாவது முகாம் தொலைத்தொடர்வாளர்களாகவும் வீரவேங்கை கணேஸ் நியமணிக்கப்பட்டான்.


அதனால் சிறிது நேரம் கூட அவனால் சிந்திக்கக் கூடநேரம் இல்லாமல் இருந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு சாவகச்சேரியில் உள்ள2.3மருத்துவமனைகுச்சென்ற  கணேஸ்இறுதியாக தலைவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்புமிக்க தலைவர் அவர்கட்கு நான் பல தடவை கரும்புலியாகச் செல்வதற்கு கடிதம் எழுதினேன்.

. ஆனால் நீங்கள் எதிர்மறையாக எனது கடமைகளைக் கூட்டியவாறு இருந்தீர்கள் அதுஉங்களின் இளகிய மனதைக்காட்டுகின்றது. நான்அதை அறிவேன்  ஆனால் நீங்கள் என்னை விடவில்லை ஆனால் அதே காலத்தில் பல போராளிகளிற்கு சந்தர்ப்பம் வளங்கிக்கொண்டுயிருக்கின்றீர்கள்.இப்பொழுது நான் இறுதிமுடிவிற்கு வந்துவிட்டேன்  

 தற்பொழுது நான் குப்பி கடித்து சாவடைகின்றேன் மாவீரர் பட்டியலில் இணைப்பதும் இணைக்காமல் விடுவதும் உங்களின் கடமையென நினைக்கின்றேன். புலிகளின் தாகம் தமிழ்த்தாயகம் இப்படிக்குக்

கணேல்.


என கடிதத்தை எழுதி வைத்துவிட்டுஅவர் சாவகச்சேரி மருத்துவமனையில் குப்பி கடித்துசாவடைந்தார்.அக்கடிதம் சொர்ணம் அண்ணையூடாக தலைவருக்குச் சென்றது,கடிதத்தைப்பார்த்ததும் தலைவர் வீரவேங்கை என நிலை வளங்கி மாவீரர் பட்டியயிலில் இணைத்தார். 

தொடர்ந்துஅவனின் வித்துடலை படையணி நிர்வாகப் பொறுப்பாக இருந்த போராளி அசோக் அண்ணை மிகச் சிறப்பகச் செய்துஅஞ்சலி செலுத்தப்பட்டுஇறுதியாககொடிகாமம் மாவீரர்துயிலும் இல்லத்தில் அவனின் வித்துடல் அடக்கம் செய்யப்பட்டது,

தேசியத்தலைவரைப்பொறுத்தவரை தனது நடவடிக்கையால் போராளிகள் பாதிக்கப்பட்டுயிருந்தால் அல்லது போராளிகள் இறுதியாகச் செல்லும்போது அவர்களால் இதை செய்யுங்கோ அண்ணை என தலைவருக்கக்கொடுக்கப்பட்கடமைகள் இவற்றை நிறைவேற்றுவதில் தலைவர் மிக பொறுப்பு உணர்வோடு செயல்படுவார்,

கணேசின் சாவைத்தொடர்ந்து தலைவரின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. கூடுதலான போராளிகளின் கரும்புலியில் இணைவிற்கான கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தோடு அவர்களிற்கான பிரத்தியேகமான பயிற்சி முகாம்களும் அமைக்கப்பட்டு பயிற்சிகள்ஆரம்பித்துவைக்கப்பட்டது,




 முன்னர் மான் மரை வழப்பதற்கு கணேசைப்பொறுப்பாக விட்ட என குறிப்பிட்டு இருந்தேன் இந்த மிருகக்கள் எப்படி வந்தது என்பதை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும்

அக்காலப்பகுதியில்




தளபதி ஜெயம் அவர்கள் அடிக்கடி வன்னிக்குபோய்வருபவர். அங்கே போராளிகள் தங்களின் பொழுதுபோக்கிற்ககாக காடுகளில் இருந்து பிடித்து வளக்கும் மான் மற்றும் மரைக்குட்டிகளை தளபதி ஜெயம் அவர்கள் அதை வேண்டிக்கொண்டுவந்து எங்களின் 9.5 முகாமில் விடுவது வளமையாகயிருந்தது.


முகாமில் மூடு வங்கறுக்கு மேல் நிறையே புல்லுகள்இருந்தன அதாவது வயல்வெளிகளிற்குச்சென்று கேணல் இளங்கீரன் அவர்கள் அறுகம்புல்லுகளை மண்ணோடு சேர்த்து வெட்டிக்கொண்டுவந்து வங்கறுக்கு மேல் அழகான முறையில் நாட்டியிருந்தார். அதானால் போதிய அளவு மேச்சல் தரை மிருகளிற்குயிருந்தது.  மொத்தமாக ஆறுமிருகங்கள் இருந்தன அதில் இரண்டு மரை இரண்டு மான் பெரிதாகயிருந்தது.



அதிகாலை வாகணம் வெளியே செல்லும் பாதை திறந்துயிருந்ததால் பெரிய ஆண் மரையும் பெரிய பெண்மரையும் வெளியே சென்று விட்டது.அப்பொழுது லெப் கேணல் குட்டிசிறி அவர்களும் எங்களோடுதான்யிருந்தார்.


மரையைக் காணவில்லையென தளபதி குட்டிசிறி அவர்களிடம் சொல்லப்பட்டது. சொன்னவுடன் அவர் வாகணத்தை எடுத்துக்கொண்டு தேடுவதற்காக வெளியே சென்று விட்டார். அடுத்த பக்கம் போராளி பேரும்பலத்துடன் இருவர் தேடுதலிற்காக அனுப்பப்பட்டனர். காலை 6 மணிக்கு சென்ற பேரும்பலம் பிற்பகல் இரண்டு மணிக்கு இரண்டு உரவேக்கில் இரத்த வெள்ளத்தோடு துவிச்சக்கரவண்டியல் தள்ளிக்கொண்டுஇரு செல்லப்பிராணிகளின் இறைச்சிகளையும் முகாமிற்குக்குக்கொண்டுவந்துசேர்த்தான்


என்ன விடயம் என விசாரித்தபோது m.mo  பொறுப்பாளர் பிரதீப் தலைமையிலான வெடிபொருள் உற்பத்தி செய்யும் போராளிகள் காட்டு மரையென நினைத்து இரண்டு மரைகளையும் சுட்டு இரவுச் சாப்பாட்டிற்காக கொத்துரொட்டி செய்யும், வேலை நடந்து கொண்டுயிருந்ததாகவும் தான் அதைப் பார்த்ததும் இது எங்களின் வழப்பு மரை எனஅவர்களிற்குப் பேசி விட்டு அவ் இறைச்சிகளை வேண்டிக்கொண்டுவருவதாகவும் எங்களிடம் குறிப்பிட்டார். இறைச்சிகளையும் வேறு வேறாக இரண்டு உரப்பையில் வேண்டிக் கொண்டு வருவதாக எக்கவிடம் குறிப்பிட்டார்கள்.


இது நடக்கும்போது தலைவர் பழையில் இருகும் எமது முகான சுவாஸ் தோட்டத்தில் நிக்கின்றார்,இந்தத்கவல் குட்டி சிறி அவர்கள் ஊடாக தலைவரிக்கு பறந்தது  தகவலை அறிந்த தலைவர் இரண்டு மரைகளையும் தனித்தனியாக கிடங்கு வெட்டி முகாமில் மூன்று மனைமரங்கள்இருக்கும்இடத்தில்அவ்மரங்களிற்குக்கீழேஇறைச்சிகளை கிடங்கில் தாட்டு அதற்கு மேல் கல்லறை கட்டுமாறு குறிபிட்டுயிருந்தார்.

எவளவு வேலைப்பழு இருந்த போதிலும்அவ் இடத்தையும் தானே தெரிவு செய்துள்ளார் என்பதையும் அவரின் உயர்ந்த சிந்தனை எப்படி இருந்துள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள்,

 அதை விட மரையை சுட்டவர்களிற்கு 6 மாதம் தண்டனையாக சமைப்பதற்கு விடுமாறு அப்பொழுது அவர்களிற்குப்பொறுப்பாகயிருந்த பிரதீப் மாஸ்ட்டர் அவர்களிடம் சொல்லி அனுப்பப்பட்டது.


இரவு மரைக்கறி சாப்பிடலாம் என எதிர்பார்த்த எமது முகாம் போரளிகற்கு முகம் கறுத்தது தலைவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை எவராலும் கனிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாகயிருந்தது இந்த இரண்டு மரைகளும் தலைவரின் வீட்டுற்குப் பின் யன்னல் ஓரமாக சென்று ஒவ்வொருநாளும் தலைவரிடம் இருந்து உணவு வேண்டிச்சாப்பிடுவது வளமையாகயிருந்தது.அதனால் அவ் இருமிருகங்கள் மீதும் தலைவர் அழவு கடந்தபாசம் வைத்துயிருந்த்தார்.


 சில காலம் களித்துஅதே ஆண்டு பாரிய ஒரு துயரச் சம்பவம் நடந்தது அதே முகாமில் ஒரு பெரிய கொம்பு மானும் இருந்தது ஆனால் அனைத்து போராளிகளோடும் அன்பாகப்பளகும் புல்லுகொடுத்தால் வேண்டிச்சாப்பிடும் . ஆனால் அங்கே நின்ற போராளி  துறமணி அவர்களைமட்டும் அந்த மானிற்கு கண்ணில் காட்டக் கூடாது அந்த மானிற்கு கடுமையானகோபம் வரும்.


இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனையென்று எங்களின்குத் தெரியாது. ஒரு நாள் நான் ஒரு புல்தரையில் இருந்தேன் மான் எனக்கு முன்னால் புல் மெய்ந்து கொண்டுயிருந்தது. துறமணி யண்ணை எனக்குப்பின்னால் நின்று மானிற்கு எத்தம் காட்டினார். ஆனால் அவரை தாக்குவது என்றால் மான் என்னைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் மான்தவறுதலாக என்னைதாக்கும் என அவர் நினைத்துயிருக்கலாம்.


மான் என்னை நோக்கி கடும் வேகமாகவந்தது கதிரோளி மற்றும் முத்துஐயன் இருவரும் மான் உன்னை தாக்கவருகுது ஓடு ஓடு என கத்திய வண்ணம்யிருந்தார்கள். வேகமாக வந்தமான் எனக்கு மேலால் பாய்ந்து சென்று துறைமணி அண்ணையைக்கலைத்தது. அவர் அரிகில் நின்ற நெல்லிமரத்தில் ஏறி தன்னைப்பாதுகாத்துக்கொண்டார்.


எனவே ஒவ்வொரு நாளும் இந்தமான் அவரை பின்தொடர்ந்தவண்ணம்யிருத்தது ஒரு நாள் நாங்கள் எல்லோரும் தலைவரோடுவேறு முகாமிற்குச்சென்றுவிட்டோம். இரவு 7 மணி இவர் மானிடம் சரியான முறையில் மாட்டிவிட்டார். மான் இவர் மீது கடுமையானதாக்குதல் தாக்கி இவர் யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார் அங்கே இவருக்கு15 தையல் போடப்பட்டது.


இந்தத்கவல் தலைவரிக்கு உடனே வந்தது தலைவருக்ரிக்கு  மான் மீது கடுமையான கோபம் வந்தது ஆனால் பொறுமையாகயிருந்தார்.25 /11/1993 கரவெட்டி முகாமில் இருந்து இரவு 9 மணி 9.5 முகாமிற்கு வந்து சேர்ந்தோம். அப்பொழுது நாவா மற்றும் பிரகாஸ் இருவரும் தலைவரின் P.A அல்லது நெருங்கிய பாதுகாவலர் இதின் பொருள் என்ன உணவாக பிருந்தாலும் முதலில் இவர்கள் தான் சாப்பிட்டுப்பார்ப்பார்கள் பின்னர் தான் அதைத் தலைவர் சாப்பிடுவார்..


காலை 7 மணி தலைவர் நாவா அவர்களை கூப்பிட்டு மானைச் சுட்டு போராளிகளிற்குகறிகாச்சக்கொடுகொடுமாறு தலைவர் நவா அவர்கட்டு கட்டளை வழங்கினார் . ஊசன் நவா அவனிற்கு மிகவும் உசாராகயிருந்தது. உடனே இடுப்பில் இருந்து 

 கைத்துப்பாக்கியை எடுத்து மானின் முன் தலையில் மூன்று வெடி வைத்தான். மான் சுருண்டு கீழே விழுந்தது. அன்று மதியம் மான் கறி எல்லோரும் சாப்பிட்டோம். மரை நல்ல பெயர் எடுத்ததால் அதற்கு கல்லறை கிடைத்தது மான்தவறு விட்டமையால் அது கறியாகப்போனது அனைத்து உயிர் களிற்கும் ஒரே சட்டத்தை நடைமுறைபடுத்திய உன்னததலைவன்.



.6 ம் மாதம் 1992 மாத்தையாதலைமையாலான மக்கள் முன்னணி கலைக்கப்பட்டது மக்கள்முக்கள் முன்னனி செயலார் யோகரத்தினம் யோகி அவர்களின் பதவியும் கலைப்பட்டது.


 அதற்குப்பதிலாக அரசியல்துறைப்பொறுப்பாளராக பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நிமணிக்கப்பட்டார்.



5/07/1992 யாழ் பல்கலைக் கலகத்தில் கரும்புலிகளின் கொண்டாட்டமும் ஒழிப்பேழை வெளியிட்டு நிகழ்வும் நடைபெற்றது. அந் நிகழ்விங்கும் மாத்தையா அவர்களிற்கு அழைப்பு வளங்கப்பட்டபோதும் ஆனால் இதற்கும் மாத்தையா அவர்கள்வரவில்லை. மாத்தையா  வரதமைக்கான இருகாரணங்களாகயிருக்கலாம் ஒன்று பொறுப்பு மாற்றத்திற்கான கோபம் அடுத்து தன்னைக்கைது செய்யலாம் என நினைத்துயிருக்கலாம்.

05/06/1992 அந்தக் காலப்பகுதி கடும் இறுக்கமாகாலமாகயிருந்தது ஏன்னென்றால் முதலில் தலைவரின் பாதுகாப்பு அணி ஒரு அணியாகயிருந்தது.


 சண்டைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் போய் சண்டையிடுவது அதில் காயம் ஏற்பட்டால் காயம் மாறியதும் தலைவரின் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுவதும் இது தான் எங்களின் கடமையாகயிருந்தது.

அப்பொழுது காவல் கடமைக்கான நேரம் இரண்டு மணித்தியாலம் இது இரவும்பகலும் வரும். ஏணைய நேரங்களில் காலையில் உடல் பயிற்ச்சி அடுத்தல் உடல் சுத்தம் பத்திரிக்கை வாசித்துக் காட்டல் இலையான் அடித்தல் கவிதை ஓவியங்கள் வரைதல்மற்றும் யூதர்களின் விடுதலை கதையான  தாயகம் நோக்கிய பயணம் இதை போராளிகற்கு வாசித்துக்காட்டுவது இப்படித்தான் எங்களின் காலம் நகர்ந்தது.

ஆனால் புதிய நடைமுறை மிகவும் கடினமாகயிருந்தது. 1992ம் ஆண்டு எமது கட்டமைப்பு ஒரு புதிய வியுகமாகமாற்றப்பட்டது. பதிய போராளிகள் பாதுகாப்புக்கடமைக்காக உள்வாங்கப்பட்டார்கள். அடுத்து 40 பேர் கொண்ட அணி தளபதி ஜெயம் அவர்களின் தலைமையிலும் அடுத்து 40 பேர் கொண்ட அணி தளபதி சொர்ணம் அவர்களின் தலைமையிலும் பிரிகப்பட்டது 

ஒரு அணி பயிற்சியில் நிற்கும் அடுத்த அணி பாதுகாப்பில் நிற்கும் இது மாதம் ஒரு தடமை கடமை பயிற்சி என வந்து கொண்டுயிருக்கும். இக்காலத்தில் பாதுகாப்பிற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பயிற்சியில் நிக்கும் அணி உடனே செயல்யல்பட்டு பாதுகாப்பிற்கு ஏற்படும் பிரச்சனையை இந்த அணி முறியடிக்கும் இதுதான் திட்டமாகயிருந்தது. பாதுகாப்பிற்கான காவல் கடமை நேரம் மிகவும் கடினமான முறையில் மாற்றப்பட்டது. ஒருதர்24 நாலு மணித்தியாலம் இரவு பகல் தொடர்ச்சியாகக்காவல் கடமையில் ஈடுபட வேண்டும். குறிப்பாக இருபது பேர் காவல் கடமையில் நின்றால்  அடுத்த 20 பேர்24 மணித்தியாலம் நித்திரை கொள்வார்கள்.

அவர்களிற்கு சமைப்பதற்கும் இரவு நேரங்களில் தேனீர் போடுவதற்கும் ஒரு அணிதொடர்ந்துசெயல்படும்.கடமையில்யிருக்கும். போராளிகளின் தனிப்பட்ட வாழ்கை மிகவும் கடினமாகயிருந்தது. பாதுகாப்பு அணியில் இணைப்பது என்றால் சில நிபந்தனைகள் இருந்தன குறிப்பாக மாற்று இயக்கங்களில் அவர்களின் உறவினர்கள் இருந்துயிருக்கக் கூடாது இயக்கத்தில் இணைந்தத்தில் இருந்து நேர்மையாகச்செயல்பட்டவராகயிருத்தல் வேண்டும் கடுமையான பயிற்சியை எடுக்கக் கூடிய துணிச்சலானவராகயிருத்தல் வேண்டும். இரகசியம் பாதுகாக்கக் கூடியவராகயிருத்தல் மற்றும் எந்த நேரமும் தனது  உயிரை அற்பணிக்கக்கூடியவராகயிருத்தல்வேண்டும் இவர்களே இதற்கு தகுதியானவர்களாகக்கருதப்படுவார்கள்.

இப்படி பல பின்னணி பார்த்துத்தான் பாதுகாப்பு அணிக்கு போராளிகளை தளபதி சொர்ணம் அவர்கள் எடுப்பார். அவ்வேளை தளபதி ஜெயம் அவர்களின் பாதுபாப்பு அணியில் நான் கடமையாற்றினேன்
(நடுவில் இருப்பது தளபதி ஜெபம்)



 . இது இப்படியிருக்க அனைத்துப் போராளிகளும் போறுப்பாளரோடு கதைப்பது என்றால் சலூட் அடித்துத்தான் கதைக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை எமது படையணிக்கு வந்தது அப்பொழுது லெப் கேணல் குணேஸ் அவர்களே எங்களின் 15 பேருக்கும் பொறுப்பாக இருந்தார், நான் குணேஸ் அவர்களிடம் கதைப்பதற்குச் சென்றேன். சலூட் அடித்த பின்னர் தன்னேடு கதைக்குமாறு கட்டளை வழங்கினார், கடுமையாக கோவம் அடைந்த நான் சலூட் அடிக்கின்றேன் என அவரிக்குக்கிட்டச் சென்று அவரின் கன்னத்தில் அறைந்தேன்,


(மேலே உள்ள சிறுபடம் லெப் கேணல் குணேஸ்)
 உடனே அவர் அதைப் பெரிதாக எடுத்து ஜெயம் அன்னைக்குச் சொல்லி விட்டார், தளபதி ஜெயம் அவர்கள் என்னைக் கூப்பிட்டு கட்டுப்பாட்டை மீறியதற்காக 25 வட்டம் முகாமைச் சுற்றி டக்புக் அதாவது தாறா நடை  செல்லுமாறு கட்டளை வழங்கினார், ஒரு நாள் புள்ளாக 25 வட்டம் டக்புக் செய்து முடித்தேன் இரண்டு கால்களும் பெரிதாக வீங்கி விட்டது. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் கடும் வேதனையில் இருந்தேன்,

எனது அதிஸ்ற்றமாகயிருக்கலாம் தலைவரைச் சந்திப்பதற்கு தளபதி சொர்ணம் அண்ணெ வந்து இருந்தார், அவரிடம் போய் நடந்த பிரச்சனையைச்சொல்லி தற்பொழுது என்னால் காவல் கடமை செய்ய முடியாது. இரண்டு கால்களும் வீங்கி விட்டது அதனால் உங்கட அணிக்கு வந்து பயிற்சி எடுக்கப்போகின்றேன். என அவரிடம் தெரியப்படுத்தினேன், அவர் எதைப் பற்றியும் என்னிடம் கதைக்கவில்லை, உடமைகளை எடுத்துக்கொண்டு வாகனத்தில் ஏறுமாறு கட்டளை வழங்கினார், 

உடனே நான் உடமைகளோடு வாகனத்தில் ஏறினேன், ரெட்டி9.5 முகாமான கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயிலடியில் இருந்து நானும் சொர்ணம் அண்ணையும் சாகச்சேரி சம்பூத்தோட்டம் பயிற்சி முகாமிற்கு வந்து சேர்ந்தோம்

 தளபதி சொர்ணம் அவர்களின் அணி பயிற்சியில் நின்றது.இவ் இரு அணிகளிற்கும் கேணல் குமரிநாடன்/வசந் அவர்களின் தலையில் கடுமையான பயிற்சி நடைபெற்றுக்கொண்டுயிருந்தது. குறிப்பாக 40 கிலோ மீற்றர் ஓடும் வாகனத்தில் இருந்து பாய்தல் உயரம் பாய்தல் என கடுமையான கொமாண்டே பயிற்சி நடைபெற்றுக்கொண்டுயிருந்தது

             






. 21/07/1992 காலப்பகுதியில் வெற்நிலைக்கேணியில் இருந்து யாழ்ழைநோக்கி சிறிலங்காப்படை முன்னேற தொடங்கி விட்டது.


அப்பொழுது நாங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டுயிருந்த இடம் சாவகச்சேரியில் உள்ள சம்பூத் தோட்டமகும். அங்கே வைத்து தளபதி சொர்ணம் அவர்கள் போராளிகளை லையின் பண்ணி அவர் சொன்னது இதுதான் சண்டைக்கு விரும்புபவர்களும் இதுவரை காலமும் சண்டைக்கு போகாதவர்களும் இந்தப் பக்கம் லையின்பண்ணுங்கோ என்றார். முதலாவது நானும் மற்றும் கப்டன் உமேஸ்- பகிர்கி கிறேசி நடா என்று பலர் அடுத்த பக்கமாக போய் நின்றோம்

கடுமையாக கோபம் அடைந்த தளபதி சொர்ணம் அவர்கள் ஓடி வந்து வகுத்தில் பிடித்து என்னை அங்கால தூக்கி எறிந்தார் நீர் பிடித்த சண்டை காணும் சண்டைக்கே போகாதவர்களைத் தான் நான் கூப்பிட்டேன் என எனக்கு பதில் அளித்தார். திருப்பிக் கதைப்பது சொர்ணம் அண்ணைக்குப் பிடிக்காது அதனால் நான் அமைதியாக நின்றேன். அச்சண்டக்காக நடா - பகிர் - உமேஸ் கிறேசி ரமணி என பல போராளிகள் எடுக்கப்பட்டார்கள். அதில் சென்ற உமேஸ் மிகவும் நல்லவன் எந்த நேரமும் போராளிகளை கோமாளி கதைகளை சொல்லி

 சிரிப்புக்காட்டியவண்ணமே இருப்பான். இவனின் பெயர் கந்தசாமி மணிமாறன் திருமலை மாவட்டம் தான் இவனின் சொந்த இடம்.


                        

அதில் தலைவரின் பாதுகாப்பு  அணியில் இருந்தும் எமது தாக்குதல் அணியில் இருந்தும் பல போராளிகள் அச்சண்டைக்கு அனுப்பப்பட்டார்கள்  அடுத்து எமது படை பணி மூத்த போராளி திலிப் அவர்களின் தலைமையில் அச்சண்டை நடைபெற்றது, எதிரியின் முன்னேற்றம் முறியடிக்கப்பட்டது கட்டன் உமேஸ் லெப் ரமணி உட்பட பல போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள், அதில் எதிரியின் டாங் அடியில் மூத்த போராளி திலீப் அவர்களின் கால் உடைந்து தோங்கிக்கொண்டு இருந்ததாகவும் அதை அவரே கத்தியால் வெட்டி எறிந்ததாகவும், அவரின் வீரத்தை எமது போராளிகள் சில குறிப்பிட காலம் வரை கதைத்துக் கொண்டே இருந்தார்கள்,



08/08/1992 அன்றுபோராளி கருவண்ணன் தலையில் 7 பேர்கொண்ட  அணி உள்ளே சென்று வேவுநடவடிகையில் ஈடுபட்னர்.



 அவ்வேளை ராணுவ வாகணங்கள் அவ்வளியால் சென்று வரும் தடையங்கள் அவர்களால் அவதானிக்கப்பட்டது, அப்பொழுது அரசாங்கம் மண்டைதீவால் இருந்தும் யாழ் பலாலியா மற்றும் ஆணையிறவால் இருந்தும் மும்முனைத் தாக்குதல் ஒன்றைச் செய்து யாழ்பாணத்தை முழுமையாகக்கைப்பற்றுவதேஅவர்களின் திட்டமாகயிருந்தது,

 கொப்பக்கெடுவாஅவர்கள் அந் நடவடிக்கை செய்யும் பிரதேசங்களை  நேரடியாகப்பார்வையிட்டுக்கொண்டு இருந்த காலம் .அது,


 அவ்வேளை எமது தலைவர் சொல்வது போல் எந்தப் பலத்திலும் ஒரு பலயீனம் இருக்கும் அதைக்கண்டுபிடிப்பது எமது திறமைஅதற்கு அமைவாக போராளிகள் வேவு நடபடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தார்கள்.அப்பொழுது அராலி முனைப்பகுதியில் நிறைய வாகணம் சென்றுவரும் தடங்கள் இவர்களால் அவதானிக்கப்பட்டது


அதனால் அராலி முனையில்உள்ளேஒரு  பாதையில் வைக்கல் மகேன்ஸ்சை றோட்டை வெட்டி தாட்டு வைத்துவிட்டுஇவர்கள் மீண்டும் எமதுமுகாமிற்குவந்து விட்டார்கள்அதனால். 08/08/1992 அன்றுஅவர்களின் திறமையான செயல்பாட்டால்

முதலாவது சிக்கிய முள்ளி நாம் தேடிக் கொண்டுயிருந்த அதிகாரி அப் பொறியில் சிக்கி விட்டார்,புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன,  ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப். ஜெ. விக்கிரமசிங்க உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் , யாழ் குடாநாட்டில் அராலி முனையில் வைத்து 8 ஆகஸ்ட் 1992 அன்று விடுதலைப்புலகளால் எவ்விதமான இளப்பும் இன்றி அவர்களை அழிக்க முடிந்தது


அதனால் 1992 ஆம் ஆண்டு யாழ்பாணம் எதிரிகளின் கைக்குச் செல்லாமல் தப்பிக்கொண்டது,இவ் சிறப்பு நடவடிக்கையைச் செய்த கருவண்ணன் உட்பட அனைத்து வீரர்களையும தமிழீழத் தேசியத் தலைவர் கூப்பிட்டு சிறப்புப் பரிசிகளைக் கொடுத்து கெளருவித்தார்

 இவ்வெற்றிகர நடவடிக்கையால், எமக்கு எதிராகப் போராடிக்கொண்டுயிருந்த இராணுவத்தின்   மன உறுதியையும் வெகுவாக பாதித்தது.அதனால் 1995 ஆம் ஆண்டு வரை அவர்களின் பாழ்பாணத்தைப்பிடிப்பதற்கான அசை பிற்போடப்பட்டது 

 இந்நடவடிக்கையைச் செய்த மேஜர் கார்வண்ணன், / பீற்றர்

சிவஞானம, சிவஜோதி மிருசிவில் வடக்கு மிருசுவில் யாழ்ப்பாணம் இவர் கட்டைக்காட்டில் 01.10.1992 அன்று படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து இருந்து06.10.1992யாழ். மருத்துவமனையில் கிச்சை பலன் அழிக்காமல்வீரச்சாவு அடைந்தார்,


 01/10/1992 இதே காலம்தான் தலைவரால் இம்ரான் பாண்டியணி உருவாக்கப்பட்டது,



 தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி

1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான வொடிக்காட் அணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார்.

 பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். தலைவரின் பாதுகாப்புக்கான படையணியியை  இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார்

. இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் வீரச்சாவை தழுவிக்கொண்டார். பாண்டியன் வீரச்சாவு அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். 

இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.01/10/1992  தலைமையோடு வாழ்ந்த மற்றும்அவரைப்பாதுகார்த்த போராளிகளும் வாழ்ந்தார்கள். இருந்தும் 05 /05/ 1976ம் ஆண்டிற்கு முதல் புதிய புலிகள் என்ற பெயரில் இயங்கிய எமது இயக்கம் 05/05/1976 அதன் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புவிகள் என பேர் மாற்றப்பட்டது. இருப்பினும் வேறு படைபணிகளை மற்றும் மாவட்டங்களில் இயங்கும் புலி உறுப்பினர்களை விட தலைவரின் பாதுகாப்பு அணியில் நிற்பவர்களை அதே படையணியில் இருப்பவர்கள் STP என அளைப்பார்கள்.



ஆனால் எமது நிலந்தர எதிரியான இந்திய இராணுவம்1.4  one four பிரிவு என்று அழைத்தது அதன் பொருள் தலைவரோடு நிப்வர்கள் துணிந்தவர்கள் எந்த நேரமும் தங்களின் உயிரை அற்பணிக்க பின் நிக்க மாட்டார்கள் என்பதே இதன் பொருள்ளாகும் எந்தமாவட்டம் அல்லது எந்தப்படைபணியாகயிருந்தாலும் முதலாவது நிலை அல்லது இரண்டாவது நிலையானவர்களாகயிருந்தாலும் அவர்களிடம் நாம் சில விடையகங்களை அவர்களிடம் கேட்டால் முதலில் அவர்கள் தலைவரோடு நின்றவர்களாகத்தான் இருப்பார்கள்.



இப்படித்தான் ஒரு முக்கிய வட்டமாக தலைவர் தலைப்பிடம்இருந்தது இங்கேதான் தலைவரால் சுயநலம் அற்றவர்களாகப் போராளிகள் வளர்க்கப்படுகின்றார்கள். பின்னர் கடமைக்காக வேறு படையணிகளிற்கும் வேறு மாவட்டங்களிற்கும் இங்குயிருந்துதான் அனுப்பப்படுகின்றார்கள். அந்த வகையில் 1983 ஆண்டில் இருந்து தலைவரின் மேற்பாதுகாப்பு அணியில் இருந்தவர்தான் தளபதி சொர்ணம்.அவருக்கு முன்னர் தலைவரை பாது கார்த்த போராளிகள் தான் இம்ரான் மற்றும் பாண்டியன் ஆகும்



 1989 ம் ஆண்டிற்கு முன்னர் தளப தியாகு என்பவர் தலைவரின் மேற்பாதுப்பு அணிக்குப் பொறுப்பாகயிருந்தார். அதே ஆண்டுகாலப்பகுதியில் தளபதி தியாகு அவர்கள் பெண் போராளிகளோடுதவறாக நடந்தமைக்காக அவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது

அன்றில் இருந்து அப்பொறுப்பைத் தளபதி சொர்ணம் அவர்களிற்கு தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார் என்பதை முன்னர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்

 இயக்கத்தை வளர்க்க வேண்டும் தலைவரைபாதுகாற்க வேண்டும் என்று இரவு பகலாக சிந்திப்பர்தான் சொர்ணம். அதைவிட இவர் அனைத்து மாவட்டங்களிலும் சென்று சண்டைபிடித்த அனுபவங்களைக்கொண்டவர். வடமாகணத்தில் நடைபெற்ற அனைத்து சமர்களிலும் சொர்ணத்தின் பாதுகாப்பு அணி பங்குபற்றியிருக்கும் பங்கு பற்றாத சண்டையன்றால் அது மிகக்குறைவானதாகயிருக்கும்

.01/10/1992 கட்டைக்காட்டுச்சண்டையோடு தலைவரின் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி உருவாக்கப்பட்டது.


(இப்படையளியன் ஆரம்ப உறிகாட்டி தளபதி சொர்ணம்)

.அக்காலப்பகுதியில் தான் தளபதி சொர்ணம் அவர்களால் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப்பகுதியில் அமைந்துயிருந்த மினி முகாம்மீதான தாக்குவதற்கான வேவு நடவடிக்கை நடந்துகொண்டுயிருந்தது.



அதில் குறிப்பாக அவரின் படையெணிப் போராளிகளே அந்த நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.கடல் புலிகளில் இருந்து பொறுப்பாளர் சேரனின் தலைமையில் மிதிவெடி சோதனை பண்ணுபவர்கள் 10 பேர்அடுத்து 



 அடுத்து மகளீர்படையணியில் இருந்து தளபதி ரெட்ணா தலைமையில் 45 போராளிகள் எடுக்கப்பட்டனர் வேறு படையணியில் இருந்து இந்நடவடிக்கைக்குப் போராளிகள் எடுக்கப்படவில்லைஎன்பது,

இப்படையணியின் இரண்டாவது உளிகாட்டி தளபதி கடாபி




குறிப்பிடத்தக்கது. கட்டைக்காட்டுச் சண்டக்கான தயார்படுத்தல் தயார் ஆனது திரு ரஞ்ஜீத் அவர்களின் தலைமையில் சுமார் 75 போராளிகள் சண்டைக்குத் தயார் ஆனார்கள் வேல்ராஜ் அவர்களளின் தலைமையில் 15 பேர் மொறிஸ் அவர்களின் தலைமையில்15பேர் கெணடி அவர்களின் தலைமையில் 15 வாலேஸ் 15 ஜெகன் தலைமையில் 5 பேர் மிதிவெடி அகற்றும் ரிம் . மொத்தம் 75 போராளிகள் அனைவருக்கும் ஒயில் பூசப்பட்டு உடல் நிறம் மாற்றப்பட்டது. அனைவரின் ஆயுதங்களும் எஸ்ரூலோன் பைப்பில் தண்ணீர் போகாதவாறு பொதி செய்யப்பட்டது . அடுத்து சுண்டிக்குள கடல் ஊடாக நாலு கிலோ மீற்றர் நீந்தி அனைத்து ஆயுதங்களும் கொண்டுசென்றார்கள் போராளிகள். கட்டைக்காடு முகாம் நெருங்கியதும் அனைத்து ஆயுதங்களையும் வெளியே எடுத்து சண்டைக்குத்தயாறாக உள்ளே நகர்ந்து சண்டையை ஆரம்பித்தனர்.



தளபதி சொர்ணம் றஞ்ஜீத் அவர்ட்டு கட்டளை வளங்க றஞ்ஜீத் போராளிகளை முன் நோக்கி வளி நடத்திச் சென்றான்.முதலாவது தாக்குதலாக போராளி திருமேனி அவர்கள் ராங்கி எதிர்ப்பு ஆயுதமான லோவால் படையினரின் விட்டுற்கு அடித்து எரிக்கப் பண்ணினான் பேரிரச்சலோடு சண்டை நடந்த வண்ணம் இருந்தது தளபதி சொர்ணம் அவர்கள் கட்டளையை வளங்கிய வண்ணம் இருந்தார். 

அதே நேரம் தளபதி நிருபன் அவர்களின் தலைமையில் ஒரு கொம்பனி போராளிகள் சுண்டிகுளப்பக்கம் இருந்து சண்டையைஆரம்பித்தார்கள். அடுத்து கட்டைகாடு ஆஸ்பத்திரிப்பக்கமாக செற் குட்டி அவர்களின் தலைமையில் ஒரு கொம்பனிப் போராளிகள் சண்டையை ஆரம்பித்தார்கள் 

தளபதி சொர்ணம் கட்டளையை வளங்கிய வண்ணம் இருந்தார் இச்சண்டைக்குமகளிர் படையணி தளபதி ரெட்னா தலைமையில் ஒரு ஒரு அணி கட்டைக்காட்டு கிழக்குப் பக்கமாக ஒரு பாரிய தாக்குதலை நடாத்தி எதிரியை திதை திருப்பியதோடு பாரிய இளப்பும் எதிரிக்கு ஏற்பட்டது அதனால் கட்டைக்காட்டுச்சண்டையின் வெற்றிக்கு இது பெரும் உதவியாக அமைந்தது, இதில்  2ம் லெப் அருந்ததி முல்லை மாவட்டம் கப்டன் காசி மன்னார் மாவட்டம் 2ம் லெப் மறைச்செல்வன் நீர்வேலி யாழ்  2ம் லெப் மங்கை / தர்சா இளவாலை யாழ் என மொத்தம்17 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்,

.செத்தவன் சாக .சாகாத இராணுவம் தலைதெறிக்க ஆனையிறவிற்குஓடித்தப்பியது.



சிறிய ஆயுதக்கிடங்கில் இருந்து180 Fnce றைவுள் டொங்கான் மற்றும்  L. 3  LMG  பெரும் தொகையான றைவுள் ரவைகள் என்பன எமது சைவர் பிரிவால் மிட்கப்பட்டது.

02 /10/1992 பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி தலைவரின் பாதுகாப்பு முகாமான 7.7 முகாமில் இருந்து நானும் தளபதி கடாபி அவர்களும் ஒரு கண்டர்ரக வாகணத்தில் கட்டைக்காட்டை நோக்கிச்செல்கின்றோம். கடுமையான மளை பெய்துகொண்டுயிருந்தது. போனதும் மளையில் நனைந்து நனைந்து அங்கு நின்ற போராளிகளோடு சேர்ந்து நானும் ஆயுதங்களைஎங்களின் வாகனத்தில் ஏற்றினோம் .


அடுத்து வாகணம் செல்வதற்கு தாயார் ஆணெ வேளை தளபதி சொர்ணம் அவர்களும் எங்களோடுவரப்போவதாகத்தெரிவித்தார். பின்னர் சொர்ணம் அண்ணையும் வாகணத்தில் வந்து ஏறினார் கடாபியண்ணை வாகணத்தை ஓட்ட சொர்ணம் அண்ணை நடுவில் இருக்க நான் அவரிக்குப்பக்கத்தில்யிருந்தேன்.வாகனம் ஓடத் தொடங்கியது. இம்ரான் பாண்டியன் படையணி கிளைம் பண்ணியது தொடர்வாக மக்கள் என்ன கதைக்கின்றார்கள் என கடாபி அண்ணையைப்பார்த்து சொர்ணம் அண்ணை கேட்டார். அதற்கு கடாபி அவர்கள் புதுப்படையணி ஒன்றை வைத்துயிருக்கின்றார்கள் இப்பத்தான் சண்டைக்கு விட்டுயிருக்கின்றார்கள் என்று கதைப்பதாகக்கூறினார்,



அடுத்துதலைவர் என்ன கதைக்கின்றார் என சோர்ணம் அண்ணை கேட்டார். இளப்பு இல்லாத நல்ல சண்டை என்று கூறியதாக கடாபி அண்ணை பதில் அளித்தார். இரவு விடிகாலை 5ந்துமணிக்கு சாவகச்சேரி 7.7 முகாமிற்குவந்து சேர்ந்தோம். காலை அனைத்து ஆயுதங்களையும்தலைவர்பார்வையிட்டார்.



இந்தச்சண்டையோடுதான் முதல்  ONE FOUR பிரிவாகயிருந்த நாம் 1990 சைவர் பிரிவாக மாறினோம் 01/10/1992 இம்ரான்பாண்டியன் படையணியென்ற புதிய பேயருடன் எமது பணி ஆரம்பம் ஆனது.இம்ரான் பாண்டியன் படையணி என்று பேர் வைத்தது பற்றி திரு சொர்ணம் அவர்கள் விளக்குகையில் இம்ரான் பாண்டியன் இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள் . பாடசாலையில் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் . அதைவிட விடுதலைப் போராட்டத்தில் இருவரும் ஒரே நாளில் இணைந்தவர்கள் . ஆரம்பப்பயிற்ச்சி முடிந்தவுடன் இருவரும் தலைவரின் பாதுகாப்புக்கடமையில் இருந்தவர்கள் .இருவரும் மிகவும் சிறந்த போராளிகள் என அவர் குறிப்பிட்டார்.

இதின்  இறுதித் தளபதியாக 2009 வேலவன் இருந்தார் இவரோடு போராட்டம் முடிவிற்கு வந்தது,


16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் சர்வதேசக்கடலால் தமிழீழம்வந்துகொண்டுயிருந்தார் தளபதி கிட்டு 


அவருடன் குட்டிசிறி உட்பட 10 போராளிகளும் தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் பணியாழர்களும் அதில் இருந்தார்கள், இதை இந்திய வினுடைய கடல் படை அறிந்து விட்டது,



உடனே கப்பலை முற்றுகையிட்ட இந்திய கடல் படையினர், சலண்டர் அடையுமாறு கேட்டனர்,நிலைமைய உணர்ந்த கிட்டு அண்ணை அனைத்துப் பணி யாழர்களையும் தனது கப்பலில் இருந்து இறக்கி சிறிய போட்டில் இந்திய கடல் படையின் கப்பலிற்கு அனுப்பினர், அவர்களும் கடசியாக கிட்டு அவர்களும் போராளிகளும் சண்டர் அடைந்து தங்களிடம் வருவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டுயிருந்தனர், 

இத்துயரம் அங்கே நடக்க அப்பொழுது தலைவர் 7.6 என அழைக்கப்படும் பழையில் உள்ள சுவாஸ் தோட்டத்தில் இருக்கின்றார், ஆனால் அங்கே அனகமாக பொட்டுஅம்மான் வருவது இல்லை ஆனால் அன்று பொட்டு அங்கே வந்து தலைவரோடு நீன்ற நேரம் உரையாடிக்கொண்டுயிருந்தார்,


அப்பொழுது கிட்டு அண்ணை தலைவருக்கு தொலைத்தொடர்பு ஊடாகத்தகவல் தெரிவிக்கின்றார், எங்களை இந்தியக் கடல் படை முற்றுகையிட்டுவிட்டது நாங்கள் என்ன செய்வது இது தான் அந்தக் கேழ்வி, நான் என்னத்த உமக்கு சொல்வது நீரே ஒரு கட்டளை அதிகாரி இயக்க மரபுக்கு ஏற்ப முடிவு எடு,?



தலைவரின் அனுமதி கிடைத்ததும் தன்னை அழிப்பதற்கு அவர் தயார்படுத்திக்கொண்டுயிருந்தார் ஆனால்இந்தியவின் அப்பலை மோதி தகர்த்தால் தன்னோடு வந்த அனைத்துப்பணியாழகர்களும் சாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் அதை கிட்டு அண்ணை விரும்பவில்லை அதனால்தான் அவர்களை இறக்கிவிட்டு கப்பலை வெவைத்து போராளிகளுடன் தானும் வீரபணம் அடைந்தார்,

இதுதான் அந்தப் பதில் அதை சொல்லிவிட்டு அவர் இருக்கவில்லை முகாமில் இருந்து படலை அடிக்கும் முகாமிற்கும் ஆக நடந்துகொண்டே இருந்தார் எங்களால் நடக்க முடியாமல் போய் விட்டது, உடம்பு வேருத்து உடுப்புகள் நனைந்தன கடுமையான கழைப்பாக இருந்தது, எங்களைப்பார்த்து கவலைபடைந்த சொர்ணம் அண்ணை எல்லம் ஜீ காரர்களைமட்டும் சென்றி மாத்தி விட்டார் மிகவும் களைப்பாக இருந்தது நான் கிணற்றடிக்குப்போய் குளித்து விட்டு மீண்டு காலையுணவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றிக்குப் போய் விட்டேன்,

ஆனால் தலைவர் நடந்து கொண்டே இருக்கின்றார், ஏனனெனில் கிட்டு அண்ணை சில சமயம் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், வெளிநாடு தொடர்வான எமது இரகசியத்தகவல்கள் மற்றும் எமது செயல்பாடுகளை இந்திய அறிந்துவிடும் அப்படி அறிந்துவிட்டால்,


விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது தூர்பாக்கிய நிலை ஏற்படும் அதனால்தான் அவர் நடந்து கொண்டே இருந்தார், திடீரேன செற்காரன் ஓடிவந்து கிட்டு அண்னை வெடித்து விட்டார் என்ற தகவலைத் தெரியப்படுத்தினான் அடுத்து இந்திய வானோளிகளில் செய்திகள் வந்தது அதைத் தொடர்ந்துதான் தலைவர் வந்து இருந்தார்,



               





 04/04/1993 ஜெயந்தன் படையணிஉருவாக்கம் 


போர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணியாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகிய வீரச்சாவு அடைந்தனர்.

 எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் போது தான் ஜேயந்தன் வீரச்சாவு அடைந்தார்.



கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி போர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணி
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.



ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள் வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.

விடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது.



பொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.

மட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.

ஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.


ஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன.

ஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது
குறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.

பூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.

ஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.


இந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..

‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.

04/05/1993 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.

‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்,

‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’

தலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றைசொன்னத

03/05/1993 இதே காலம் தளபதி கருணா அவர்களிற்கு திருமணம் நடந்தது.


இவர்தான் கருனா 2002 துரோகியாக மாறி விடுதலைப்புகளின் பலயீனங்களை எதிரிக்குச் சொல்லி விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தவர்?

 இதே காலப்பகுதியில்ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த செஞ்சோலை சிறுவர்களிற்கான நிகழ்வு   அந் நிகழ்விற்கு தலைவர் கண்டிப்பாக கலந்து கொள்வார். என்பது தளபதி மாத்தையா அவர்கட்குத்தெரியும். அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த மாத்தையா, 

 அதை தனக்கு சாதகமாகப்பயன்படுத்த அவர் விரும்பினார். தனக்கு விசுவாசமான போராளி ஒருதரை அனுப்பி ஸ்ரிக்கர் ஒட்டிய வாகணம் வந்தால் அதற்கு குண்டு தாக்குதல் நடத்துமாறு மாத்தையா அவர்கள் சொல்லியிருந்தார்.


ஆனால் அவர்கள் எதிர்பார்த்தவர் அப்பாதையால் வரவில்லை எதிர்மாறாக பொட்டு அம்மான் அவர்கள் வந்துகொண்டுயிருந்தார். அப்பொழுது கோப்பாய்பகுதியில் வைத்து கட்டிட மறைவில் இருந்து வாகணத்தை நோக்கி குண்டுவீசப்பட்டது. 




குண்டு கீழே விழுந்து பேர் இரச்சலோடு வெடித்தது. வாகணம் மட்டும் சிறு சேசம் அடைந்தது ஆனால் பொட்டுஅம்மானிற்கு எவ்விதமானபாதிப்பும் ஏற்படவில்லை. அவர் மயிர் இளையில் தப்பிக் கொண்டார். ஆனால் குண்டு ஏறிந்தவரை தேடுதல் வேட்டை செய்த போதும் அவர் பிடிபடவில்லை அது எமது புலநாய்வுத்துறைக்கு ஒரு சாவாலாக அமைந்தது.

இச்சத்தம் தொடர்வாக தவறுதலான வெடிவித்தன எங்களிற்குச் சொல்லப்பட்டது ஏனைய படையணிப்போராளிகளிற்கும் மக்களிற்கும் இத்தகவலே பரப்பப்பட்டது அன்று தலைவரின் வாகனத்தில் சென்ற போராளிகளிற்கும் பொட்டு அம்மானுக்கும்தான் இந் விடயம் தெரியும்,


அது எமது தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்த அது ஒரு முன்னோடி அனுபவமாக அமைந்தது. அதற்குப்பிறகு எமது படையணி புலநாய்வுப்படையணியின் ஆழணிகள் அதிகரிக்கப்பட்டது அத்தோடு தலைவரின் பாதுகாவலர்களின் ஆழணித் தொகையும் அதிகரிக்கப்பட்டது



.01/05/1993 நடைபெற்ற அரசியல் கூட்டத்தின் போது இனிமேல் இவர் திருந்தவமாட்டார் என்பதை அறிந்து கொண்ட நாம் அவ் நிகழ்வின்போது அவரைக் கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்ட்டோம்.


.03/05/1993 அன்று தளபதி கருணாவிற்கு திருமணம் செய்வதற்கு தேசியத் தலைவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைவாக. ஒரு மாதற்கு முன்னர் தலைவரின் அனுமயுடன் தனக்கு கீழே கடமையாற்றிய பெண் போராளிகளின் தலைவியான நிறா அவர்களை கருணா முன்னரே விரும்பி இருந்தார் அதனால் அவரைக்கூட்டிக்கொண்டு யாழ்பாணம்வருமாறு தலைவரால் தகவல் கருணாவிற்கு .அனுப்பப்பட்டது 


அத் தகவல் கிடைத்ததும் பெண் போராளி நிறா அவர்களையும் கூட்டிக்கொண்டு100 நூறு போராளிகளின் பாதுகாப்புடன் கருணா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். ஐந்து லக்ஸ்சத்திற்கு மேல் கருணா அவர்களின் திருமணத்திற்காக தலைவரால் நிதி ஒதுக்கப்பட்டது. அது மட்டும் அல்ல அந்தத் திருமணத்திற்கான ஏற்பாட்டை தலைவரே நேரடியாக செய்தார்.

 இந்ந வடிக்கைக்கை தளபதி சொர்ணம் அண்ணையின் கட்டளையிலே நடந்தது,



தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் லெப்  கேணல் Smஅப்பா  தலைமையில் துறமணி மற்றும் உதயன் அதைவிட சமையல்தொடர்வாக படித்தமாணவர்கள் என சைனீஸ் சமையல் ஆழர்கள் என sm அப்பா தலைமையல் ஒரு அணி இருந்தது அதின் அங்கத்தவர்கள் Sm அப்பா போராளி உதயன் மற்றும் துறமணி இவர்கள் தலைமைப் பொறுப்பாளர்கள் அதற்குக் கீழே குமரதேவன்01 டட்லி02 றோவட்03 ஆனந்தபாலன்04 சாம்பசிவம்05 சுமன்06 சோதி07 வேங்கைமார்பன் 08என போராளிகளும் இவர்களிற்குக்கீழே சிறந்த சமையல்ஆழர்களாகயிருந்தார்கள்.


கருணா அவர்ளின் திருமண நிகழ்விற்காக Sm அப்பா தலைமையில் பாண் கோட்டலில் சிறப்பான முறையல் சமையல் நடைபெற்றுக்கொண்டு இருந்தது அடுத்ததாக இந்தச்சமையல்களை கண்காணிப்பதற்காக இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட றெக்கோ உணவகப் பொறுப்பாளர் சைனீஸ் ராஜி அவர்கள் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகளால் மிகவும் ஆடம்பரமாக நடந்த திருமணமாக இது கருதப்பட்டது.


 தலைவர் நேரடியாகப்பங்குபற்றித் தானே அந் நிகழ்வை செய்தமையால் சில குறிப்பிட்ட தளபதிகளைத்தவிர சாதாரணபோராளிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. பாதுகாப்புக்காரணங்களிற்காக அது தவிர்க்கப்பட்டது.இது நடந்துகொண்டுயிருக்கும்போது தலைவர் சொன்ன கருத்து  தென்னிலங்கையில் சாவீடு இங்கே திருமண வீடு என தலைவர் சொன்னார்எல்லோருடைய துன்பங்களையும் நினைத்துப்பார்க்கும் உயிர்ந்த மனிதர்களின் உணர்பு தலைவருக்கு இருந்தது,

இத்திருமணநிகழ்வில் தளபதி மாத்தையா அவர்களை வரச் சொல்வதற்காக தளபதி றிச்சாட் அவர்கள் அக்பர் மற்றும் குமரதேவன்  என மூவரும்

 வாகணத்தில் ஏற்றிக்கொண்டு சுதுமலையில் இருந்த அவரின் வீட்ற்குச்சென்று இரு போராளிகளையும் அனுப்பி கருணா அவர்களிற்குத் திருமணம் அதனால் உங்களைக்கண்டிப்பாக தலைவர் வரச் சொன்தாக ஒருகிழமைக்கு முதல் தகவல் சொல்லப்பட்டது. அதற்கு அவர் தனக்கு கடுமையான வேலையிருப்பதாகவும்  தன்னால் வரமுடியாது என பதில் அளித்துள்ளார்.


இது இவ்வாறுயிருக்க ஆடம்பரமாகசமையல் நடந்துகொண்டுருயிந்தது. இந்நிகழ்வின்போது பாரிய ஒரு துரோகம் செய்வதற்கான திட்டம். நடைபெற்றுக்கொண்டுயிருந்தது. அதாவது சைனீஸ் ராஜி1987 ம் ஆண்டு  இந்தியா இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படையாக வரும்போதுஅவரைக் கூட்டிக்கொண்டு இலங்கை வந்தது .

அவர் தமிழ்நாட்டுத் தமிழர் என்ற காரணத்தால் அவர் தமிழ் அழகாகப் பேசுவார் அதனால் யாழ்ப்பாணம் வேம்படி மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒரு உணவகத்தை இந்தியா இராணுவம் வேண்டிக்கொடுத்து அவர்  கடை நடத்துவது போல் இந்தியா இராணுத்தின் புலநாய்வுமுகவராகச் செயல்பட்டுவந்தார் அனால் இது தமிழ் மக்களிற்கோ அல்லது விடுதலைப் புலிகளிற்கோ தெரியாத விடயமாகயிருந்தது.

அவ் உணவகம் சிறப்பானதாக நடந்தமையால் தளபதி றிச்சாட் பிரிகேடியர் ஜெயம் இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக அவ்  உணவகத்தில்சாப்பிடுவதால் ராஜீவ் அவர்களிற்கும் இவர்கள் இருவரிகும் நெருக்கமான நற்ப்பு வளர்ந்தது.



இதன் காரணமாக தளபதி றிச்சாட் அவர்களே பாதுகாப்பு சமையல் ஆழர்களிற்குப் படிப்பிப்பதற்காக ராஜீவை அழைத்துவந்தார்.இது மாத்தையா அவர்களிற்கு  ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது..

ஏன்னென்றால் றோவிற்கும் மாத்தையாவிற்கும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்வால் ராஜி எங்களிற்கு உரிய ஆழ்தான் என்பதை றோ மாத்தையாவிற்குத் தெரியப்படுத்தியிருந்தது. ராஜீவ்தான் கருணாவின் நிகழ்விற்கு சமையல் மேலாளர் என்பதை அறிந்து கொண்ட மாத்தையா திருமண நிகழ்வின்போது தலைவர் சாப்பிடும் உணவில் மட்டும் விசம் கலந்து கொடுக்குமாறு கட்டளை வளங்கியிருந்தார்.

ஆனால் ராஜீவ் அவர்கள் கலப்பதற்கான விசத்தை தன்னோடு வைத்து இருந்தது மட்டும் அல்ல அச்சந்தர்ப்பதை எதிர்பார்த்துக்கொண்டுயிருந்தார். ஆனால் திருமண நிகழ்வு ஆரம்பம் ஆனதும் தலைவர் வந்தார். ஆனால் மாத்தையா எதிர்பார்த்தது போல் தலைவரின் பாதுகாவலர்கள் ராஜீவை தலைவரிக்கு பக்கத்தில் கூட எடுக்கவில்லை. அதைவிட தலைவரிக்கான உணவு மட்டும் தலைவரின் முகாமான ரெட்டி முகாமில் இருந்து வந்தது. திருமணம் நடந்து முடிந்து படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது அப்பொழுது என்னையும் ரெட்டியணையும் படம் எடுக்க கருணா வரச்சொல்லி இருந்தார், ஏன் அவளவு பேர் இருக்கும் போது உங்களை மட்டும் அவர் வரச்சொன்னார் என இதைவாசிப்பவர்கள் கேட்கலாம்,

 கருணா தலைவரைச் சந்திக்க வரும் போது நானும் ரெட்டியனும் தான் அவரைச் சந்திப்பதும் கதைப்பதும் வேறு எந்தப் போராளிகளும் அவரைமதிப்பதுஇல்லை, அதனால் அவர் எங்கள் இருவருக்கு மட்டும் அவர் சொல்லி இருந்தார், 

நாங்கள் இருபரும் போய்க்கொண்டுயிருந்ததோம், இடையில் வந்து சொர்ணம் அண்ணை எங்களைப்பிடித்தார், எங்கடா போறயல் என்று சொர்ணம் அண்ணை கேட்க படம் எடுக்க என ரெட்டியன் சொன்னான் அவனிக்கு கன்னத்தை பொத்தி இரண்டு அறை எனக்கு ஒரு அறை நீங்கள் படம் எடுத்தால் பிற்காத்தில் தலைவரின் பாதுகாப்பிற்கு ஆவத்து அதைவிட உங்கட அம்மா அப்பாவிற்கு ஆவத்துவரும் என பேசிக்கலைத்தார், அவர் சொன்னது கருனா பிரிந்த போது நாங்கள் விளங்கிக்கொண்டோம்,







15/07/1993 அன்று சந்தேகத்திற்கு இடமானவர்களோடு நெருங்கிப் பளகிய காரணத்தால் சைனீஸ் ராஜிவ் விடுதலைப் புலிகளின் புலநாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டர். விசாரணையின்போது மாத்தையா அவர்கள் நஞ்சு கலக்கச் சொன்னது தொடக்கம் தனக்கும் இந்தியா றோவிக்கும் உள்ள தொடர்வு அனைத்து விடையங்களையும் தெளிவாகச்சொன்னார். அடுத்த கட்டம் மாத்தையா அவர்களைக் கைது செய்வதற்கு உறுதிப்படுத்தப்பட்ட கனிசமான தகவல்கள் எமக்கு வந்த வண்ணம் இருந்தன.

.1991 மின்னல் இராணுவ நடவடிக்கை முடிந்தபின்னர், அக்காலப்பகுதியில் அந்நடவடிக்கையை  தலைமை தாங்கி நடத்தியபடைத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜெனகப்பெரரா அவர்கள் மண் கிண்டிமலை யென்ற தமிழ் பெயரை மாத்தி தனது பேரான ஜெனகபுர என பேரை மாற்றியது மட்டும் அல்லாமல், பாரிய சிங்களக் குடியேற்றம் ஒன்றை மேற்கொண்டார், அது மட்டும் அல்ல விடுதலைப்புலிகளிற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தார்,25.07.1993இதயபூமி-1  அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம்

இம்முகாமை துடைத்து அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டம் இட்டார்கள், இந்நடவடிக்கைக்கு இதய பூமி ஒன்று என தலைவரால் பேர் வைக்கப்பட்டு தளபதி பால்ராஜ் தலைமையில் வேவு நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டது,





02.07.1993 மணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம்  மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.

அதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப்.கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.


இதயபூமி-1 என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில்பின்னணி வேலைகள்ஆன மருத்துவம், சண்டைகளில் ஈடுபடும் போராளிகளிற்கான ஆயுத மற்றும் உணவு மினி யோகம் அனைத்தையும் தளபதி அன்பு பொறுப்படுத்தார்,



, பால்றாஜ் அண்ணையின் வழிகாட்டலுடன்  தளபதி சொர்ணத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில்ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.


இந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளை தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.!

ஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.


அந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை அந்த முகாம் கொண்டிருந்தது.



இப்படி இது நடந்துகொண்டுயிருக்க யாழில் இருந்து தலைவவரின் பாதுகாப்புப் படை பணியான இம்ரான் பாண்டியன் படையணிப்போராளியைக் கூட்டிக்கொண்டு தளபதி சொர்ணம் அவர்கள் மணலாறு செல்கின்றார். இதுதான் விடுதலைப் புலிகளின் அதிநவீன சிறப்புப் படையணியாகும் கருப்புலி அணி மற்றும் அதி நவீன ஆயுதங்களும் இவர்களிடம் மட்டுமே உள்ளது



  இப்படையிணிக்கு முதலாவது பொறுப்பாளராக போராளி கமிலோ- இரண்டாவது பொறுப்பாராக போராளி வேல்ராஜ் -மூன்றாவதுபொறுப்பாளர் போராளி கோணேஸ்- நாலாவது போறுப்பாளர் போராளிபாலேஸ்- மருத்துவப் போராளிகுமரதேவன் உட்பட லெப் கேணல் ஜெரி  சுசிலன்/SL   செங்கமலம்  கெங்கா  என சுமார் 70, போராளிகளுடன்சென்றுயிருந்தார் தளபதிசொர்ணம் தொடர்ந்து சண்டை தொடர்வாகப் பேசுவதற்கு அனைத்துப்போராளிகளும் ஒரு இடத்தில் ஒன்றுகூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


அச்சண்டைக்கு தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பால்ராஜ் அவர்கள் கட்டளை அதிகாரிகளாகயிருந்தார்கள். இருவரும் மாறி மாறி அச்சண்டை தொடர்வாகக்கதைத்தார்கள். அடுத்து போராளிகளிற்கு தேவையான ரவை கூடு  குண்டுகள் மற்றும் கோழ்சர்கள் என்பன வளங்கப்பட்டது. அப்பொழுது அனைத்துப்போராளிகளும் மேலதிக ரவைகள் வைக்கும் கோழ்சர்களை நெஞ்சில் கட்டியிருடுத்தார்கள். ஆனால் பெண் போராளிகளின் தலைவியான தளபதி ஜெணி அவர்கள் கோழ்சறை இடுப்பில்கட்டியிருந்தார்.



(இவர் தான் ஜெனி)


இதைப்பார்த்த தளபதி சொர்ணம் அவர்கள் ஜெணி கோழ்சறை நெஞ்சில் கட்டு என கட்டளை வளங்கினார். தான் கட்ட மாட்டேன் என ஜெணி அடம்பிடித்தார். அனைத்துப் போராளிகளிற்கும் முன்மாதிரி நடக்க வேண்டிய நீர் கோழ்சர் நெஞ்சில்கட்டவில்லை.ஆனால் அவர்கள் கோழ்சர் நெஞ்சில் கட்டியிருக்கின்றார்கள். ஆனால் நீர் மட்டும் கட்டவில்லையென சொர்ணம், அண்ணை உதாரணம் காட்டினார். ஆனால் ஜெணி அதை ஏற்கவில்லை.



அடுத்து சொர்ணம் அண்ணை லெப்ரினன்ட் கேணல் ஜெரி அவர்களைக் கூப்பிட்டு உன்னுடையே யக்கேட் கோழ்சறை ஜெணிக்குக்கொடு அவளின் நெஞ்சுக் கோழ்சறை நீர்வேண்டிக்கட்டு என்று சொல்லி ஜெணியின் பிரச்சனையைத்தீர்த்துவைக்கின்றார்.

இன்று நடந்த முறன்பாடுதான் பிற்காலத்தில் அவர்கள் இருவரும் ஒரு குடும்பம் ஆவதற்கான இறுக்கமான நற்பு ஏற்பட்டது. இதுபற்றி பின்னர்குறிப்பிடுகின்றேன்.


 இருட்டோடு இருட்டாக நகர ஆரம்பித்தனர்.போராளிகள் காவலரணில், இருந்து. 

 சுமார் 15 கிலோ மீற்றர் நடந்து சென்றார்கள் விடுதலைப் புலிகள் சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணை தூவிவட்டு, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.புலி வீரர்கள்

இந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.


இப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.இப்படியான சம்பவங்கள் நிறையவே எமது விடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது,இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!



25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.!

இந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.

திடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது.

பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது மண்கிண்டிமலை சண்டை ஆரம்பமானது தளபதி பால்ராஜ் கட்டளை வளங்க சாழ்ஸ் அன்ரனி படையணி தடையை உடைத்து உள்ளே சென்றது. தளபதி ஜெணியும் கட்டளை வளங்கி தனது பெண் போராளிகளை வளி நடத்திக்கொண்டுயிருந்தார். அடுத்து மணலாறு மாவட்டப் போராளிகளும் சண்டையில் ஈடுபட்டார்கள் தளபதி சொர்ணம் அவர்களின்அணிக்கு வேல்ராஜ் மற்றும் கமிலோ இருவரும் கட்டளை வழங்கினார்கள்,

 சிணைப்பர் ஆயுங்களுடன் இம்ரான் பாண்டியன் படையணிப்போராளிகளும்.   சண்டையில் ஈடுபட்டார்கள்பல சிங்களப் சிப்பாய்களின் தலைகள் பறந்தது சொர்ணத்தின் குரலைக் கேட்டதும் குதிகால் நிலத்தில் படாமல் ஒட்டம் எடுத்தது இராணுவம். டோசர் வாகனங்களை 


RPG  ஆயுதத்தால் அடித்து நொறிக்கினார்கள். புலி வீரர்கள் செத்தவன் சாக உயிரோடு இருந்த இராணுவம் ஆயுதங்களையும் எறிந்து விட்டு ஓடித் தப்பியது. இறுதியில் சண்டை வெற்றியில் முடிந்தது. றெச்சன் பைய்ண்டர் p.k  LMG உட்பட  t 81    எறிகனை செலித்தி என பலஆயதங்கள் ரவைகள் என்பன விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது. அச்சண்டையில்இம்ரான் பாண்டியன் படைபணியைச்சேர்ந்த  போராளி கிஸ்னா உட்பட பத்துப் போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள். இது முடிய சொர்ணம் அண்ணை யாழ்பாணம் வந்துகொண்டுயிருந்தார் இதே காலத்தில்தான் இந்த வெற்றித் தாக்குதலும் நடந்தது இதை பார்த்துவிட்டுபின்னர் பின்னர் சொர்ணம் அண்னை என்ன செய்தார் என பார்ப்போம்,

26/08/1993 அன்றுயாழ்மாவட்டத்திற்கான மினியோகப்பாதையான தரைவளிப்பாதையான கொம்படி ஊரியான் பாதையை இராணுவம் 91 மூடியதில்  இருந்து

அதனால் யாழ்குடா மக்கள் கடுமையான கஸ்ற்றத்தை எதிர்நோக்கியது மட்டும் அல்லாமல் நாளாந்தம் மக்கள் கடல் படையனரால் கொல்லப்பட்டுக்கொண்டுயிருந்த காலம் அது,

                       



மக்கள் வெளியே செல்வது சென்றால் சிறு சிறு போட்டுக்களில் கிழாலியில் இருந்து ஏறி பூனகரி நல்லூர் பகுதிக்குச் செல்வதும் அங்கு இருந்து கிளாலிக்குச் செல்வதுமாக அவர்களின் பயணம் இருந்தது, விமானத் தாக்குதல் மற்றும் கடல் படையினரின் அச்சுஅச்சுறுத்தலால் பெரும்பாலும் மக்கள் அவ் ஆவத்தான பயணத்தை இரவு நேரங்களிலே மேற்கொள்வார்கள், ஆனால் அந்த நேரங்களைப்பார்த்து சிங்களக் கடல் படையினர் சுப்பர் டோறாக்களில் திடீரேன வந்து மக்களை வாழ்களால் வெட்டி அவர்களிடம் இருக்கும் பொருட்களைப் பறித்த பின்னர் அவர்கள் சென்ற வோட்டை கடலில் தாட்டு விடுவார்கள், ஒரு வாரம் சென்ற பின்னர் வெட்டுக் காயங்களுடன் அவர்களின் வொடி கரை ஒதுங்கும்,  


 இப்படித்துயிரச்சம்பவம் நடந்து கொண்டுயிருக்கையில்தான் தலைவர் அதற்கான திட்டம் ஒன்றை வகுத்தார், அதாவது நடவடிக்கை செய்ய வரும் கடல் படைப்படகுகளை திரும்பிசெல்வதற்கு விடக்கூடாது அதை கடலிலே மூழ்கடிக்கவேண்டும் அப்படி தொடந்து செய்தால் அவர்கள் இவ்வேலையை செய்வற்குதுணிந்து வரமாட்டார்கள்,

 அதனால் தனது திட்டத்தை தலைவர் கடல் புலிகளின் தளபதிக்கு தெரியப்படுத்தினார், அதை ஏற்ற தளபதி அந்நடவடிக்கையை செய்வதற்கு இவர்கள் இருவரையும் நியமணித்தார்  ஏன்னெனில் இவர்கள் இருவரும் நீன்ற நாட்கள் இப்பணியில் ஈடுபட்டமையால் இவர்கள் இருவருக்கும் உறவுகளை இளந்த பெற்றோர்கள் பட்ட வேதனைகள் இறந்தவர்களின் அழுகுரல்கள் என அனைத்தையும்அறிந்தவர்கள் அதனால்தான் தளபதி அவர்களை தேர்ந்து எடுத்தார்,

வரதனும், மதனும் களம் இறக்கப்பட்டார்கள், மக்கள் படகில் பயணிக்கும்போது இவர்களும் அவர்களிற்குப்பாதுகாப்பாகச் சென்றுகொண்டுயிருப்பார்கள்,இருவரும் தனி தனி வெடிமருந்து நிறப்பப்பட்ட படகில் அவ்வேளையில்தான் 40 பேர் சென்றுகொண்டுயிருந்த மக்களின் படகைவளிமறித்தது சிங்களக்கடல்ப்படைஇரு சுப்ப டோறாக்கள்இருவரும் ஆளுக்கு ஒன்றை தேர்ந்து எடுத்து மக்கள் பார்த்துக்கொண்டுயிருக்கஆங்கிலப்படங்களில் நடப்பதுபோல் இரண்டையும் மூழ்கடித்தார்கள்,
அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது,




கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் தியாகம் மறக்க முடியாது என26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி, கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். எனஈழ நாதப் பேப் பறில் செய்திவந்தது


அவர்களின் விபரம் வருமாறு:


1. கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)

(கந்தசாமி இராமசந்திரன் – கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு)


2. கடற்கரும்புலி கப்டன் மதன்

(சீனிவாசகம் சிவகுமார் – மட்டக்களப்பு)


3. கடற்புலி கப்டன் சிவா

(முத்துலிங்கம் கருணாநாதன் – குச்சவெளி, திருகோணமலை)


4. கடற்புலி லெப்டினன்ட் பூபாலன்

(சுந்தரராஜ் பாஸ்கரன் – நாகர்கோவில், யாழ்ப்பாணம்)


5. கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்

(சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

தளபதி சொர்ணம் அவர்கள் சண்டை முடிந்து வெற்றிக்களிப்புடன் சண்டையில் எடுத்த சில ஆயுதங்களுடன் 28/07/1993 அன்று




வன்னியில் இருந்து யாழ்பாணம் நோக்கி வந்துகொண்டுயிருந்தார் சொர்ணம் அண்ணை அது அப்படி இருக்க யாழ்ப்பாணத்தில்

 மிகவும் மகிழ்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றது.யாழ் பருத்தித்துறைக் கடலில் நினைத்துப்பார்க்க முடியாத வெற்றிகரச் சம்பவம் ஒன்று நடந்தது அது பற்றி விரிவாகப்பார்ப்போம். 

அப்பொழுது தலைவரின் பாதுகாப்புப்பொறுப்பாக பிரிகேடியர் கடாபி அவர்கள் இருந்தார். அதே வேளை ஒரு மகிழ்ச்சியான செய்தி வருவதற்கு பிரிகேடியார் சூசை அண்ணை அவர்களின் வளி நடத்தலில் இரண்டு கரும்புலிகளான புகளரசன் மற்றும் மணியரசன் இருவரும் கடல் றோந்தில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தார்கள்.



29/08/1993 திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக்கடற்பரப்பில் வைத்து தளபதி சூசை அவர்களின் வளி நடத்தலில் இவர்கள் இருவரும் சென்று மிகவெற்றிகரமாக அத்தாக்குதலை நடத்தினார்கள்,

மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோர் இச்சாதனையை செய்தனர்,அவ்வேளை திருகோணமலைய் காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டுயிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கப்பல் கடல் படையினர் இவர்களை அவதானித்துள்ளனர் தொடர்ந்து இவர்களின் வோட் அவர்களின் கண்ணிற்கு மீண் பிடிப்பவர்கள் போலவே தெரிந்தன. இவர்களை மறித்து மீண் பறிக்கலாம் என நினைத்து கிட்ட நெருங்கி மீண் கேட் ள்ளனர்.

  முன்னர் இருதடவை சொர்ணம் அண்ணை வந்து கொண்டுயிருக்கின்றார் என குறிப்பட்டேன் இப்பொழுது அதைப் பற்றிப்பார்ப்போம்.

இங்கே ஆவத்தான விமானத்தாக்குதல் நடந்துகொண்டுயிருக்க பிரிகேடியர் சொர்ணம் அண்ணை தான் சண்டைகாகக்கொண்டுபோன அனைத்துப் போராளிகளையும் வாகணங்களில் ஏற்றிக்கொண்டு31/08/1993 அன்று யாழ்ப்பாணம்வந்துசேர்த்தார். சொர்னம் அண்ணை அவர்கள்கொண்டு வந்த PK  LMG தான் தலைவரின் வாகணத்தில் செல்லும் பூரிப் என்பவருக்கு வளங்கப்பட்டது.


இதுதான் மினிமி LMG வெல்ஜியம் வெல்ஜீயம் தயாரிப்பு 

முன்னர் இவர் மினிமினி LMG வைத்துயிருந்தவர் பின்ன்னர் இதை மாற்றி

PK  LMG   கொடுக்கபட்டதுஇதுதான் மண்கிண்டிமலையில்யிருந்து சொர்ணம் அண்ணைகொண்டு வந்தபிரதான ஆயுதமாகும்



   (இதுதான் சொர்ணம் அண்ணை கொண்டுவந்தPK  LMG )

PK  LMG பூரிப் இது அவரின் பட்டப் பெயர் இவர் முன்னர் மினி மினி LMG வைத்து இருந்தார் பின்னர் இது ஒரு சிறந்த ஆயுதம் என்பதால் இது அவருக்குமாற்றி வாளங்கப்பட்டது.மண்கிண்டிமலை சண்டையில் பெரும் வெற்றிக்களிப்போடு வந்த தளபதி சொர்ணம் அவர்கட்டு அந்த சந்தோசம் நீன்ற நாள் நிலைக்கவில்லை.

 இயக்கத்தினுடையே உள்வீட்டிற்குள் பெரும் நஞ்சுப்டாம்பு இருப்பது விடுதலைப் புலிகளின் புலநாய்வுப்பொறுப்பாளர் பொட்டுஅம்மான்  அவர்களிற்கு தெரிய வந்தது.குறிப்பாக முகாம் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் அடுத்து மேலதிகமாக கிடைக்கப்பெற்ற புலநாய்வுத்தகவல்கள் என பாரிய குழப்பமான நிலையில் தலைமைப்பீடத்தில் காணப்பட்டது.


ஆனால் இவ்விடயத்தை மிக இரகசியமாக கையாழ வேண்டும் ஜேர்மன்தலைவர் கில்லர் சொன்னது போல் முதலில் கோளிக்கு அடிக்க வேண்டும் பின்னர் சிதறி ஓடிய குஞ்சுகளை அளிக்க வேண்டும். என்பதின் பொருள் முதலில் ரஸ்சியாவிற்கு அடிக்க வேண்டும் பின்னர் அதன் கிளை நாடுகளை அளிக்க வேண்டும் என்பதே கில்லர் அவர்களின் தந்திரமாகயிருந்தது அது அவரிக்கு தோற்ராலும் மாத்தையாவிடயத்தில் அதுவே எமக்கு சிறந்த வளியாக இருந்தது.


அதே வளிமுறையைத்தான் விடுதலைப் புலிகள் கையாழ விரும்பினார்கள். முன்னர் தளபதி மாத்தையா அவர்களை கைது செய்வது பின்னர் அவரோடு இணைந்த அனைவரையும் தனித்தனியாகக் கைது செய்வது இது தான் விடுதலைப் புலிகளின்தலைமையின் திட்டமாகயிருந்தது.


31//08/1993 அன்று மாத்தையா அவர்களோடு நிக்கும் போராளி ஒருதர் அவசரச்செய்தி ஒன்றை பொட்டு அம்மானிற்கு அனுப்பினார். மாத்தையா அண்ணை முல்லை மாவட்டத்தில் இருக்கும் மண்ணாங்கண்டல் முகாமிற்குச்சென்று அங்குயிருந்து கெலிக்கொட்டர் ஊடாக இந்தியா செல்லப் போகின்றார் என்பது தான் அந்தத்தகவல்.


இது திசை திருப்பலா அல்லது போலியானதா? அல்லது உன்மையானதா என்பதை உறுதிப்படுத்த அக்காலத்தில் போதியகாலம் காணமல்  எமக்கு இருந்தது. இது தொடர்வாக31/08/1993 வலிகாமத்தில் உள்ள தலைவரின் ரெட்டி  முகாமில் காலை 10 PM தலைவர் பொட்டுஅம்மான் சொர்ணம் மூவரும் ஆலோசனை நடத்தினார்கள்.அந்த ஆலோசனை என்னவன்றால் தளபதி மாத்தையா அவர்களை தலைவரை சந்திக்க வரச்சொல்லி அங்கே வைத்து அவரின் பிரச்சனையை பேசித்தீர்ப்பதோடு தொடர்ந்து அவரின் பாதுகாவலர்களை மாற்றி கண்காணிப்பில் வைத்துயிருப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அடுத்து அவருடைய ஏனைய போராளிகளையும் கைது செய்து விசாறனையூடாக உன்மையை அறிவதுதான் அவர்களின் திட்டமாகயிருந்தது.


31/8/1993  காலை 10.30  மணிக்கு தங்களை தலைவர் சந்திக்க விரும்புவதாகவும் உடனே நீங்கள் ரெட்டி அல்லது9.5 முகாமிற்கு வரவும் என்று தகவல் மாத்தையா அண்ணைக்கு அனுப்பப்பட்டது



. தகவலை அனுப்பி விட்டு தலைவர் சொர்ணம் அண்ணை மற்றும் பொடு அம்மான் அனைவரும் அவரின் வரவை எதிர்பார்த்து பார்த்துக்கொண்டுயிருக்கின்றார்கள்.9. 5 முகாமில்


ஆனால் 3.30 பிற்பகல் ஆகியும் அவர் வரவில்லை. அதனால் இவர்களிற்கு கடுமையான ஏமாற்றம் ஒரு பக்கம் இவர் இங்கே தான் உள்ளாரா? அல்லது வெளியே சென்று விட்டாரா ?அல்லது இனித்தான்போகப்போகின்றாரா? என்று குழப்பதில் இருந்தார்கள். தொடர்ந்து அடுத்தே நாட்கள் நகரவிடமுடியாது இரவைக்கு கண்டிப்பாக தளபதி மாத்தையா அவர்களை பிடித்தே ஆக வேண்டும் என்று மூவரும் முடிவு எடுத்தார்கள். ஆனால் அவரைப்பிடிப்பதற்கான முழுமையான பொறுப்பை தளபதி சொர்ணம் அவர்களிடம் இருவரும் ஒப்படைத்தார்கள்.  அன்றைய நாள் நான் அதே முகாமில் சமையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தேன்.


அதைவிட நான் தான் சமைப்பவர்களிற்கு அனைவருக்கும் பொறுப்பாகயிருந்தேன்31/03 /1993 பிற்பகல் 3.00 மணி என்னை கூப்பிட்ட சொர்னம் அண்ணை சமையில் முடிஞ்சா ? என கேட்டார் நான் ஓம் என்று சொல்ல நிறைய சாயம் போட்டு ஒரு T கொண்டுவா என்று அவர் சொல்ல நானும் ஒரு சூடான T போட்டுக்கொண்டுகொடுத்தேன். T யைக்குடித்துக்கொண்டே மினிமினி மேலதிகமாக 200 ரவையும் பிரசண்ணாவிடம் வேண்டிக்கொண்டு வேகமாக வெளிக்கிட்டுக்கொண்டுவா என கட்டளையிடுகின்றார் எனக்கு.


கோழ்ஸ்சறில் 500 மேலதிகமாக வேண்டிய 200 மொத்தம் 700 ரவையுடன் மினிமினி LMG யைக்கட்டிக்கொண்டு சொர்ணம் அண்ணையைச் சந்திக்கிண்றேன். வாகணத்தை சொர்ணம் அண்ணை ஓட்டே நான் அவர் பக்கத்தில் இருக்கின்றேன். வாகணம் வேகமாக ரெட்டி முகாமில் இருந்து வல்லைவெளியூடாக வடமராச்சியை நோக்கிச்செல்கின்றது. அங்கே முதல் பாதுகாப்பில் இருந்தே லெப் கேணல் குணேஸ் அவரின் உணர்வு மற்றும் விடுலைப்பற்று காரணமாக கடல் புலிக்கு அனுப்பப்பட்டவர். உறனர்களோடு ஜேர்மேனியில் வாழ்ந்த குணேஸ் அவர்கள் விடுதலைக்காகப்போராட வேண்டும் என்பதற்காக ஜேர்மனியில் இருந்து தமிழீழம் வந்து இயக்ககத்தில் இணைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


                                              


தொடந்து அங்கே சென்றதும் சிறிது நேரம் சொர்ணம் அண்ணை கதைத்து விட்டு குணேஸ் அவர்களையும் வாகணத்தில் ஏற்றிக்கொண்டு சாவகச்சேரியை நோக்கி எங்களின் வாகணம் சென்று கொண்டுயிருந்தது.அங்கே சாவகச்சேரியில் உள்ள கச்சாயில்தான் எங்களுடைய 45 பயிற்சி முகாம் இருந்தது. அங்கே சென்றதும் சொர்ணம் அண்ணை பயிற்ச்சி ஆசிரியர் ஊடாக விசில் அடித்து அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூடலிற்கு வருமாறு சொல்லப்பட்டது. அனைவரும் ஓடிவந்து வரிசையாகநின்றார்கள்.


பின்னர் சொர்ணம் அண்ணை அதில் குறிப்பிட்ட சில போளிகளைமட்டும் மணியின் தோட்டம் செல்வதற்காக தரம்பிரித்து விட்டார். அதில் மிகவும் நம்பிக்கையான போராளிகளான தளபதி இரட்ணம் போராளி கோணேஸ் போராளி பூரிப்  மூவரையும்என்னுடையே பக்கம் அவர்களை போய் நில்லுங்கோ என சொர்னம் அண்ணை சொல்ல நான் விளக்கம் இல்லாமல் வேறு பக்கம் போய் நிக்க ஆத்திரம் அடைந்த கொர்ணம் அண்ணை ஒடி வந்து எனக்கு இரண்டு அறையும் போட்டு வகுத்தில் பிடித்து எழுத்து எறிந்தார் என்ணை நான் மினி மினி யோடு நிலத்தில் விழுந்து வேகமாக எழும்பி பூரிப்புக்குப் பின்னால் போய் நின்றேன்.

 அடியை வேண்டிக்கொண்டு இயக்கத்தில் ஏதோ ஒரு பாரிய பிரச்சனை எற்பட்டுள்ளது என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்,எங்களுடையே பிக்காப் வாகனத்தில்போராளி பூரிப்-போராளி கோணேஸ்- பிரிகேடியர் இரட்ணம் - லெப் கேணல் குணேஸ்-  இவர்கள்  நாலுபேரையும் ஏற்றிக்கொண்டு நானும் சொர்ணம் அண்ணயும்   மணியின் தோட்டம் சென்றோம்.


அங்கே றிச்சாட்தலைமையில்  எங்களுடைய பாதுகாப்புப் போராளிகளும் வந்து சேர்ந்தார்கள்அதில் போராளி இளையவன் .ஜெயநந்தன் கரும்புலி கப்டன் வாமன் என பல போராளிகள் வந்துயிருந்தார்கள்.. சாழ்சன்ரனி புலநாய்வுத்துறை சைவர் பிரிவு என கனிசமான போராளிகள் பங்குபற்றினார்கள்.   பொட்டுஅம்மான் பால்ராஜ் அண்ணை மற்றும் சொர்ணம் மூவரும் மாறி மாறிக்கதைத்தார்கள்அனைத்தும் போராளிகளிடம் கதைத்தார்கள் நான் சொர்ணம் அண்ணக்கு முன்னால் சென்று அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டுயிருந்தேன்.


ஆனால் உன்மையைச்சொல்லவில்லை மாறாக வெளில் இருந்து எமக்கு எதிராக ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் . அதே நேரம் உள்ளே இருந்து ஒரு சிலர் தப்பி வேறு நாட்டிற்கு போவதற்கு இருப்பதாகவும்கோட்டையில் ஒரு பாரிய ஆகாயத்தரையிறக்கம் நடந்தால் நாம் பல இளப்பை சந்திக்க நேரிடும் நீங்கள் அனைவருவரும் விளிப்புடன் இருந்து கடமையைச் செய்ய வேண்டும் என்று சொல்லி அனைத்து போராளிகளிற்கும் தெளிவுபடுத்தப்பட்டது. அதையடுத்து கடல் ஒரங்களைச் சுற்றி அனைத்துப் போராளிகளும் விடப்பட்டார்கள்.

அதில் எமது தாக்குதல் படையினர் போராளி கெனடி தலைமையில் மாவட்ட புரப்பக்கத்தால் மாத்தையா தப்பிப் போகாதவாறு பாதுகாப்வாகப்பை பலபபப்படுத்தினார்கள்,மகளீர் படையணி சாழ்ஸ் அன்ரணி , கடல் புலிகள் இவர்கள்மாதகல் பண்ணைக்கடல்கரையோரமாகவிடப்பட்டார்கள் புலநாய்வுத்துறையினர் யாழ் நகருக்குள் இறக்கப்பட்டார்கள், மட்டு அம்பாரை ஜெயந்தன் படையணி இந்நடவடிக்கைக்கு எடுக்கப்படவில்லை


அவர்களின்பிரச்சனையை முடித்து விட்டு அதே இடத்தில் எமது படையணி போராளிகள் றிச்சாட் தலைமையில் ஒரு சிறப்பு அணி தளபதி சொர்ணம் அண்ணையால் உருவாக்கப்பட்டது. அவ் 15 பேர் கொண்ட அணியில் தளபதி இரட்ணம் போராளி2 oscar 3 பிரின்ஸ் .4 கரும்புலி கப்டன் வாமன்5  கோணேஸ் 6  லெப் கேணல் குணேஸ் போராளி இளையவன் லோ போராளி பூரிப் போராளி ஜேயனந்தன்போராளி ஜெயாப் இவர்கள் 15 பேரும் சொர்ணம் அண்ணையின் தலைமையில் சென்று முன் பக்கத்தால்தாக்குவது எனவும் பின் பக்கத்தால் நிருபன் அவர்களின் எமது புலநாய்வு  அணிப்போராளிகள்பின்னால் ஓடாமல் தடுப்பார்கள் என சொர்ணம் அண்ணையால் திட்டம் தீட்டப்பட்டது - ஆனால் பொட்டுஅம்மான் சொர்ணம் அண்ணைபால்ராஜ் மூவரும் எங்களோடு வந்தார்கள்.


நாங்கள் அனைவரும் மணியன் தோட்டத்தில் இருந்து கால்நடையாக மாத்தையா அண்ணையின் முகாமை அமைந்து இருந்தசுண்டக்குளிபகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்இரவு 12 மணிக்கு அம்முகாமை நெரிங்கினோம்.அவ்வேளையில் தான்.முகாம் சுற்றுச் சூழலை அவதானிக்கும் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு போராளிகளை நாங்கள் பிடித்தோம்.

 பிடித்தவுடன் அவர்களின் ஆயுதங்களை பறித்த சொர்ணம் அண்ணை உடனே அவர்களின் சேட்டைக்களட்டி இருவரின் கைகளையும் பின் பக்கத்தில்வைத்துக்கட்டினார்.அதற்குப்பின்னர் பின்னால் நின்ற எங்களை ரோச் அடித்து இந்த பாரு எவளவு பேர் வந்துயிருக்கம் என்று ஏதாவது மறைத்தாய் என்றால் அடித்து நொறுக்குவோம் என்று சொர்ணம் அண்ணை  அவ் இருவரையும் விரட்டினார்.


அதற்கு பின் சுரேஸ் எங்கே என முலாவது கேழ்வியைக்கேட்டார் அதற்கு அப்போராளி இங்கேதான் நிக்கின்றார் என  பதில் சொன்னான். கோபம் அடைந்த சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறை அறைந்தார். அடிக்குப் பின்னர்அவர் வன்னிக்கு போய் விட்டார் என உன்மையைச்சொல்லிய அப்போராளிஅழத்தொடங்கினான் இருந்தும்அடுத்த கேழ்வி இந்த முகாம் பொறுப்பாக யார் நிற்பது என்று கேட்டார் அதற்கு அவன் ராகவன் என்று பதில் அளித்தான்.

 உடனே அவனிற்கு தொடர்பு எடு என்று சொன்ன சொர்ணம் அண்ணை தொடர்வு கிடைத்ததும்அவனின் வோக்கியை வேண்டி உள்ளே நின்ற ராகவனோடு சொர்ணம் அண்ணை கதைத்தார். நான் சொர்ணம் கதைக்கின்றேன் நான் மாத்தையா அண்ணையை சந்திக்கவருகின்றேன் என்பதை அவரிக்கு தெரியப்படுத்து என்று சொல்லி விட்டு கதையை முடிக்க முன்னர் அந்த வோக்கியை பொட்டு அம்மானிடம் கொடுக்கின்கின்றார்.

 பொட்டுஅம்மான் மாத்தையா அண்ணையிடம் வோக்கியைக்கொடுகதைக்க வேண்டும் என்று சொல்ல அவன் வோக்கியை மாத்தையா அண்ணையிடம் கொடுக்கின்றான். மாத்தையா அண்ணையிடம் பொட்டுஅம்மான் பேசுகின்றார் மாத்தையா தலைவர் கொல்லி நாங்கள் வருகின்றோம் நீ ஒரு தரம் வெளியே வா என்று அம்மான் தெரியப்படுத்த ஒரு பிரச்சனையும் இல்ல பொட்டுநீங்கள் உள்ளே வாங்கோ என்று மாத்தையா அண்ணை பதில் அளிக்கின்றார். மீண்டும் பொட்டு அம்மான் சிறிதாக மாத்தையா அண்ணையை விரட்டுகின்றார்.


மாத்தையா நீ பிளையான வளியில் போகாகதே நேரானவளியில்வா என்று அம்மான் சொல்ல பிரச்சனை இல்ல பொட்டு உள்ளே வாங்கோ என்று மீண்டும்மாத்தையா அண்ணை சொல்கின்றார்.


சொர்ணம் அண்ணை அவனின் வோக்கியையும் றைவுளையும் வேண்டி எடுக்கின்றார். அதை வேண்டவும் அவன் அளத்தொடங்கினான்.


சந்திப்பது என்றால் வாகணத்தில் உள்ளே வார நீங்கள் இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி வர வேண்டும் என்று கேழ்வி கேட்டான். அதற்கு சொர்ணம்அண்ணை சாதறண போராளிகளிடம் எல்லாம் சொல்ல முடியாது அவனை சமாளிப்பதற்காக அண்ணை சந்திக்க வரச் சொல்ல மாத்தையா அண்ணை வரவில்லை அதனால்தான் இப்படி வந்த நாங்கள் என்று அவனிடம் சொன்னார். சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி பின்னால் அனுப்பிவிட்டு நாங்கள் நடக்கத் தொடங்கினோம்


. இப்பொழுது தான் எனக்கு விளங்கியது மாத்தையா அண்ணையை கைது செய்வதற்காகத்தான் இந்தத் திட்டம் போடப்பட்டு நாங்கள் போய்க்கொண்டுயிருக்கின்றோம் என்று நூறு வீதம் நான் விளங்கிக் கொண்டேன்.


வேகமாக நடந்து மாத்தையா அண்ணையின் முன் வாசல் பக்கம் உள்ள வேலியைச் சென்றடைந்தோம். அதற்கு பக்கத்தில் சென்றதும் மினி மினி LMG குணேஸ்  நான் லோ வாகனத்தகர்ப்பு லோஞ்சர்வைத்து இருந்த  பிரின்ஸ் இளையவன் மற்றும் கரும்புலி கப்டன் வாமன் டொங்கான் வைத்துயிருந்த  இரட்ணம் என பல போராளிகள் வேலி ஓரத்தோடு சண்டைக்குத் தயாராக நின்றோம்.

 அதில் நின்ற லெப் கேணல் குணேஸ் அவர்களிடம் சொர்ணம் அண்ணை உள்ளே துப்பாக்கிச் சத்தங்கள்  கேட்டால்அல்லது   எனது தொடர்வு இல்லாமல் விட்டால்  உள்ளே இருப்பவர்களை சலண்டர்அடையச் சொல்லிக்கேழுங்கோ அதை ஏற்று சண்லடர் அடைவபர்களை பாதுகாப்பாக வெளியே எடுங்கோ அதை ஏற்காதவர்களிற்கு நடவடிக்கை எடுங்கோ லோவால் அடித்து விட்டை தரை மட்டமாக்குங்கோ எங்களிற்கு அண்ணைதான் முக்கியம் என்று சொல்லி விட்டுசொர்ணம் அண்ணை

உள்ளே சென்றார்   அவரோடு போராளி கோணேஸ் மற்றும் றிச்சாட்போராளிளான ஜெயாப் பூரிப் ஜெயநந்தன் தளபதிகளான பால்ராஜ்   பொட்டு என15ற்கு மேற்பட்ட போராளிகள் உள்ளே  சென்றார்கள்

அவர்கள்உள்ளே போய்க்கொண்டுயிருக்க LMG யை சேம்பறில் ஏற்றி விட்டு லெப் கேணல் குணேஸ் அழ  வெளிக்கிட்டான்இதைப்பார்த்த இரட்ணம் அப்படி ஒன்றும் நடக்காது. கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி குணேஸ் அவர்களை அமைதிப்படுத்தினான்.இவர்கள் உள்ளே சென்றதும் மாத்தையா அண்ணையிடம் சொர்ணம் அண்ணை அண்ணை வரட்டாம் என்று சொல்ல எவ்விதமான எதிர்பும் இன்றி வெளிக்கிட்டுக்கொண்டுவாகணத்தில் ஏறினார். அவர் தனியாக ஒரு வாகணத்திலும் அவரின் மனைவி பிள்ளைகள் வேறு ஒரு வாகணத்திலும் ஏற்றிக்கொண்டு பொட்டுஅம்மான் கண் முடி முளிப்பதற்கு இடையில் தனது வேலையைத்திறமையாக முடிவுத்து விட்டு வெளியே சென்று வட்டார்.




 ஆனால் இது நடந்தது இரவு 2 மணி இதையடுத்து தளபதி சொர்ணம் அண்ணை நித்திரையில் கிடந்த அனைத்துப்போராளிகளையும் தட்டி எழுப்பி அவர்களிடம் இருந்த ஆயுதம் குப்பி தகடுகளை வேண்டினார் சொர்ணம் அண்ணையிடம் . ஒரு சில போராளிகள் ஏன் என்று கேட்க



 சொர்ணம் அண்ணை உங்களின் ஆயுதங்களை மற்றும் குப்பிகளைக்களட்டி தாங்கோ என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பாதுகாப்பிற்கு நிக்கின்றோம் ஏன் ஆயுதத்தை தர வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சொர்ணம் அண்ணை உங்களிற்கு யார் தலைவர் என்று கேட்டார்.  அவர்கள் பிரபாகரன் என்று பதில் அளித்தார்கள். அவர் சொன்னால் நீங்கள் செய்வயலா அல்லதுசெய்ய மாட்டீர்களா என்று கேட்டார் செய்வம் என பதில் அளிக்கின்றார்கள்.


அதையடுத்து சொர்ணம் அண்ணை அவர்தான் உங்களின் ஆயுதங்களை வேண்டச்சொன்னவர் என்று அவர்களிற்குத் தெரியப்படுத்த அவர்கள்அனைவரும்  தங்களின் ஆயுதங்களைக்களட்டிக்கொடுக்கின்றார்கள். அதைத்தொடர்ந்து அனைவரின் ஆயுதங்களும் வேண்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து சமையல் கூடம் தொடக்கம் அனைத்து இடங்களும் சோதனை இடப்பட்டு அனைத்து ஆயுதங்களும் அனைத்து விவரங்களும் எடுக்கப்ப்பட்டது.


தளபதி சொர்ணம் அண்ணையின் வெற்றிகர நடவடிக்கையால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மாத்தையா அண்ணை உட்பட அவரின் பாதுகாப்பிற்கு நின்ற அனைத்துப் போராளிகளையும் கைது செய்து பொட்டு அம்மானிடம் ஒப்படைத்தோம். 


பக்கத்து வீட்டில் ஒரு நாய் கூட குலைக்காமல் அயலில் உள்ள மக்களிற்குத் தெரியாமல் மிகவும் இரகசியாக அமைதியாக இந்நடவடிக்கை செய்து முடிக்கப்பட்டது.அவர்களிடம் இருந்து எடுத்த இரண்டு M 2  னோத்திறி PK மற்றும் டொங்கான் கைத் துப்பாக்கிகள் T 56 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வெற்றிக்களிப்புடன் எங்களின் ரெட்டி முகாமிற்குச் சென்றடைந்தோம்.

 ஒரு பெரிய தலைவலி இலகுவாக முடிந்தது.மாத்தையா அண்ணையை பிடித்து அடுத்த நாள் தளபதி கடாடி தலைமையில் போராளி மோகன் செல்லக்கிளி நசிர் கதிரோளி நான் முத்துஐயன் தலைவரின் வாகனறைவராக  தளபதி கடாபி அண்ணை வாகணத்தையோட்டிச்செல்ல அதற்கு உள்ள செல்லக்கிளி மற்றும் மோகன் இருவரும் இருந்தார்கள். அதை விட தலைவரின் மனைவி மதிவதனியும் அவரின் இரு பிள்ளைகளும் அதற்குள் இருந்தார்கள். அப்பொழுது நாங்கள் எல்லோரும்

 வடமராச்சியில் உள்ள நவண்டில் முகாமிற்குச்சென்றது வாகனம் இரண்டாவது வாகணத்தை போராளி நசிர் ஓட்டிச் செல்ல வாகனத்ற்குள் 50 பது கலிபர் உள்ளே இருக்க அதன் கண்ணர் கதிரோளி உதவியாளர் முத்துஐயன் மற்றும் மினி மினி LMG யோடு நான் அங்கே சென்றுகொண்டுயிந்தோம்.


75 ற்கு மேற்பட்டபாதுகாவலர்களை விட்டு தலைவர் தன்னம் தனியாக ஒரு சிலரை மட்டும் தன்னோடு கொண்டு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தலைவரிக்கு மாத்தையா அண்ணை என்ற ஒரு தனி மனிதனால் ஏற்பட்டது என்பதை எவராலும் மறந்து விடமுடியாது.

 அது வடமராச்சி நவண்டிலில்  இருந்தது உயர்ந்த மனைமரமும் பெரிய மாமரங்களுமாக அழகான முகாமாக அது இருந்தது.நான் முத்துஐயன் கதிரோளி நசிர் 4 பேரும் அனைவருக்குமான சமையில் வேலைகளையும் செய்துகொண்டு காவல்கடமைகளிலும் ஈடுபட்டோம். அடுத்த மூவருமான கடாபி அண்ணை செல்லக்கிளி மற்றும் மோகன் இவர்கள் மாறி மாறி தலைவரின்பாதுகாப்புக்கடமையில்  ஈடுபட்டார்கள். இருவாரங்கள் எங்களுடைய காலம் அங்கே சென்றது.

 இது இப்படி இருக்க தளபதி சொர்ணம் அண்ணை மற்றும் போராளி நிருபன்இருபரும்ரெட்டி அல்லது 9.5 தலைவரின் பாதுகாப்பு முகாம் உட்பட பாதுகாவலர்கள் நின்ற பயிற்சி முகாம்ககள்அனைத்துக்கும் சென்று மாத்தையா அண்ணையின் உளவாளிகள் என்று சந்தேப்பட்டவர்களான அனைவரையும் கைது செய்து தளபதி பொட்டு அம்மானிடம் ஒப்படைத்து விட்னர்.

சொர்ணம் அண்ணையால்பிடிக்கப்பட்டவர்களின் விபரம் தலைவரின் வாகண ஓட்டுணர் போராளி சின்னமணி தலைவரின் மருத்துவப்போராளி தோமஸ்  தலைவரின் பிரதான தொலைத்தொடர்வாளர்கள் போராளி நரையன் மற்றும் முருகன் ரெட்டி 9.5 முகாம் பொறுப்பாளர் சதீஸ்சன். பொறுப்பாளர் சுசிலன் பொறுப்பாளர் செங்கமலம். தளபதி ஜெயம் போராளி லோறன்ஸ்.போராளி சந்தோஸ் இவர்கள் அனைவரையும் பிடித்து சொர்ணம் அண்ணை பொட்டு அம்மானிடம் கொடுத்து விட்டார்.இது இப்படி இருக்க பாதுகாப்பிற்கு நல்ல போராளிகளை இணக்கண்டு கணிசமான போராளிகளை உள்ளே  எடுத்து அவ்வெற்றிடங்களை நிறப்பினார் தளபதி சொர்ணம்.

 அண்ணை புதிதாக வந்தவர்களான போராளிகளான டெல்சன் டொமினிக் சண் சிவசங்கர் என பல போராளிகள் உள்ளேவந்தார்கள்அதனால் பாதுகாப்புக்கடமைக்கான ஆழ் பற்றாக்குறையும் தீர்ந்துவிட்டது


இது இப்படிஇருக்க 1989 ஆம் ஆண்டு தொடக்கம் தளபதி மாத்தையா அவர்களிற்கும் இந்தியாவினுடையே புலநாய்வுத்துறையான றோ அமைப்பிற்கும் இருந்து வந்த இரகசியத்தொடர்வு 10/08//1993 முற்றாகத்தூண்டிக்கப்பட்டது. காரணம் மாத்தையா அண்ணையின் அனுதாபிகள் அனைவரும்பிடிக்கப்பட்டகாரணத்தால் இப்பிரச்சனை ஏற்பட்டது.


இது இந்தியாவினுடையே புலநாய்வுத்துறைக்கு பெரிய தலையிடியாகமாறியது. எப்படியாவது இதை அறிய வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. றோ அக்காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் பிரச்சனையில் பிடிபட்ட நிறையப்போராளிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தார்கள். அதில் தேசியத்தலைவரோடு நெருக்கமாகப்பளகக்கூடிய யாழ் வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி தாளைபடியைச் சேர்ந்த கிருபன் என்பவரும் அந்த ஜெயலில் இருந்தார்.

ஜெய்லிற்குச் சென்று நேரடியாக கிருபனைச்சந்தித்த புலநாய்வுத்துறையினர். விசாரனைக்கு என்று சொல்லி இரண்டு கிழைமை தொடர்ச்சியாக கிருவனைவெளியே கொண்டு சென்றார்கள். ஆனால் அவரோடு இருந்தவர்களிற்குக்கூட ஏன் அவரை மட்டும் தனியாகக்கொண்டுபோகின்றார்கள் என்பது தெரியாமலும் கடுமையான இகசியமாக றோ இதைச்செய்தது.


அங்கே கிருவனைகொண்டுபோன றோவினர் 20 வயது மதிக்கத்தக்க இந்தியா விவச்சாரிகளைக்கொண்டு கிருபன் தங்கும் அறையில் விட்டனர். கிருவன் அந்தப்பெண்ணோடு செய்த ஆண் பெண் உறவுகளை அறையில் பொருத்தப்பட்ட கமரா படம் எடுத்துக்கொண்டுயிருந்தது. இது தான் அங்கே நடந்தது.


ஆனால் கிருவன் ஒரு புது அனுபவத்தை தான் கண்டதாக மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த நாள் கிருவன் மீதுறோ அதிகாரிகள் ஒரு சிலரால் விசாரனை தொடங்கியது. முதலில் கிருவன் செய்தே தவறான வீடியோக்களை அவரிடம் காட்டினார்கள். பின்னர் இந்த வீடியோவை நாங்கள் இணையத்தில் போட்டால் பிரபாகரன் கண்டிப்பாக உங்களிற்கு மரண தண்டனை வளங்குவார் அதனால் நாங்கள் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்று கிருவனிடம் சம்மதம் கேட்கப்பட்டது.


அதை ஏற்காவிட்டால் கிருவனிற்கும் வேறு வளியில்லை கிருவனும் அவர்கள் சொன்னதை சம்மதித்தான். உன்னை நாங்கள் செய்லில் இருந்து தப்பிச்செல்வதற்கான வளிகளை உருவாக்குவோம் நீ அங்கே சென்று வே பிரபாகரனிற்கு நல்ல பிள்ளை போல் நடித்து பிரபாகரனையும் பொட்டு அம்மாளையும் கொலை செய்ய வேண்டும்.

 அதை அடுத்து ஜெயிலில் இருக்கும் மாத்தையாவை வெளியே எடுத்து அவர் விடுதலை புலிகளின் தலைவராகவும் நீ உதவித் தலைவராகவும் இருக்க வேண்டும். சிறிது காலம் களித்து நீ மாத்தையாவையும் கொலை செய்து விட்டு நீயே தலைவராகயிரு உமக்கு விரும்பியே ஒருதர் இரண்டாவது தலைவராகயிருப்பார்.நீ போய் மாத்தையா இருக்கும் இடத்தை அறியே வேண்டும்.

 இது முடியாவிட்டால் இரண்டாவது மாத்தைய்யாவை கடத்தி இந்தியா அல்லது இலங்கை இராணுவத்திடம் கடத்தி பாதுகாப்பாகக்கொண்டு செல்ல வேண்டும் அல்லது மாத்தையாவை கொலை செய்ய வேண்டும் அப்படி செய்தால் மாத்தையாவால் முளைச்சலவை செய்து பிரபாகரனை கொலை செய்வதற்கு மாற்றப்பட்ட 40 முகவர்களையும் பாதுகாற்க முடியும் அப்படி பாதுகாற்தால் தொடரந்து நடவடிக்கையை செய்வது இலகுவாகயிருக்கும் என்று கிருபனிற்கு றோவால் சொல்லட்பட்டது.


இலங்கை அரசிக்கும் உங்களிற்கும் சண்டை வராது அதை இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று கிருவனிற்கு உறுதி அளிக்கப்பட்டது.அடுத்து ஆரம்பம் ஆனது வேலை இந்தியாவின் புலநாய்வுதுறையால்கைத்துப்பாக்கிகள்  கிருவனிற்கு வளங்கப்பட்டது. வேலூர் சிறைசாலையில் இருந்து என்னொரு சிறைசாலைக்கு மாற்றுவது போல் திட்டம் போடப்படும். ஆனால் நீ இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் காவல் துறையைச்சுட்டுவிட்டு நீர் மட்டும் தப்பி ஓட வேண்டும் என றோவால் சொல்லப்பட்டது.

.முதலில் சொல்லப்பட்டது ஆனால் அங்கே செல்லும் போது வழமையாக கடையில் சாப்பட்டு விட்த்தான் மீண்டும் ஜெயிலிற்கு வருவது வழமைஅங்கு சென்று அக்கடையில் கிருபன் சாப்பிட்டுக்கொண்டுயிருந்தார்ஆனால் மறைத்து வைத்துயிருக்கும் பிஸ்ரேளைஇடுப்பில் இருந்து எடுத்து பொலிசை சுடுவதிற்கான சந்தர்ப்பம் கிருபனிக்க்குக் கிடைக்கவில்லை, மூன்று தடவை றோ சந்தர்ப்பம் கொடுத்தும் கிருபன் அக்காரியத்தை செய்யவில்லை, சில நேரம் தமிழர்கள் என்ற அனுதாபம் கிருபனிக்கு இருக்கலாம் என றோ நினைத்தது,

, இரண்டு தமிழ் பொலிசார் அவருக்குப் பாதுகாப்பாக நின்றார்கள் திடீரென காரில் வந்து இறங்கய இந்தியாவின்றோ அதிகாரிகள் இரண்டு டொலிஸ்சையும் சுட்டு விழ்தினார்கள், இதை எதிர்பார்த்த கிருடன் அவ்விடத்தில் இருது சத்த வெடி ஒன்றை வைத்து விட்டுத் தப்பி ஓடினான், அங்கே சென்ற கிருபன் தமிழ்நாட்டில் வாழ்ந்த எமது உறுப்பினார்களான போராளி ஜீவா, போராளி,சாழ்ஸ், போராளி கவில் இவர்கள் மூவரிடமும் தானே பொலீஸ்சைச் சுட்டதாகப் பச்சைப் பொய்யைச் சொன்னான், அவர்கள் நம்பவில்லை துப்பாக்கி வரலை மணந்து பார்க்கச் சொல்லி அவர்களை நம்ப வைத்தான்,


அவர்களும் நம்பினார்கள் இத்தகவல் விடுதலைப்புலிகளிற்குபறந்தது, இதை அறிந்த தலைவர் உடனே தமிழீழம் அனுப்புமாறு தலைவர் இந்தியாவில் நிக்கும் போராளிளிக்குத் தலைவரால் தகவல் அனுப்பப்பட்டது, உடனே விடுதலைப் புலிகளின்ஒழுங்குபடுத்தலில் மேற்குறிப்பிட் 3 போராளிகளுடன் கிருவனுடன் 4 பேரும்கோடியாக்கரையில் இருந்து தமிழீழம் வந்து சேர்ந்தார்கள்,


 அவர்கள் திட்டம் இட்டது போல் வேலுரில்இருந்துமாற்றும் போது இரண்டு பொலிசாரை கிருவன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றான். எனவும் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக டாரிய வதந்தி இந்திய ஊடகங்களில்.றோவால்பரப்பப்பட்டது 

அதை தமிழக மக்கள் நம்பியதோடு மட்டும் அல்லாமல் இரண்டு தமிழ் பொலிசாரையும் சுட்டு விட்டுச் சென்று விட்டார்களே என்று விடுதலைப்புலிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.

ஆனால் புத்திசாலித்தனமாக செய்து விட்டு நல்லபிள்ளைபோல் நடித்தது இந்தியாவினுடையே புலநாய்வுத்துறை.இது இப்படி இருக்க இவர்கள் நாலு பேரும் பாதுகாப்பாக போய் செர்ந்தார்கள் யாழ்பாணம். இவர்கள் வந்ததை அறிந்தே தேசியத்தலைவர் கடுமையான மகிழ்ச்சி அடைந்தார்

. தனது பாதுகாவலர்களை அனுப்பி தனது முனாமிற்கு எடுத்து வாழ்த்துத் தெரிவித்ததோடுமட்டும் இன்றி முத்தம் கொடுத்து வரவேற்றார். முதலாவதாக பழையில் உள்ள சுவாஸ் தோட்டத்திற்குத்தான் கிருவனை கொண்டுவந்தார்கள் கிருவனைப் பார்த தலைவர் கட்டி அனைத்து முத்தம் கொடுத்தது மட்டும் அல்லாமல் உடனே கிருவனிற்கு கைத்துப்பாக்கியால் சூட்டுப்பயிற்ச்சியும் வளங்கினார்.

 அதையெடுத்து யாழ்கொக்குவில்லில் இருக்கும் ரெட்டி அல்லது9.5 முகாமிற்கு தலைவர் அவரையும் கூட்டிக்கொண்டு சென்றார். அங்கே சென்றதும் சொர்ணம் அண்ணையின் வீட்டில் கிருவன் தங்கினார்.


அடுத்த நாள் காலை என்னைக்கூப்பிட்டு சொர்ணம் அண்ணைய் தொட்டியை கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளி தொட்டியை நிறப்பு கிருவனை குளிப்பாட்டு மாறு என்னிடம் தெரியப்படுத்தினார் நான் அவர் சொன்னது போல் கிருவனை குழிப்பாட்டினேன் அதைத்தொடர்ந்து செங்கமலம் வைத்து இருந்த2ப் போர் வாகணத்தை கிருவனிக்குக்கொடுத்து உல்லாசமாக இடங்களை சுற்றி பார்த்துக்கொண்டு திரியுமாறு தலைவரால் அனுமதி வளங்கப்பட்டது.


அதை விட கிருவனிற்கு புதுகைத்துப்பாக்கிகளையும் கொடுத்து வெளிநாடுகளிற்குக்கதைக்கும் நவின தொலை தொடர்வுக்கருவி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் லெப் கேணல் மகேந்தி மேஜர் ஆதவன் இருவரும் கிருவனின் பாதுகாப்பிற்காக விடப்பட்டது.

அனைத்தையும் கிருபனிற்குக் கொடுத்ததலைவர் கிருபனிற்குக்கொடுத்த கடமையை நினைத்தால் கவலைதான் வரும் ஆனால் நம்பிக்கைத்துரோகம் என்பது இப்படியானவரலாறுகளை படிப்பதின்னூடாக எம்மால் அறிய முடியும். கள்ளனைப்பிடித்து பொலிஸ்வேலை கொடுத்த கதையாகத்தான் அது இருந்தது.


மாத்தையா செய்த தவறுகளை தலைவர் வெளிப்படையாக கிருபனிடம் சொன்னார். நீர் மாத்தையாவை அடிக்கடி சந்தித்து றோவினுடையே திட்டங்களை அறிந்து என்னிடம் சொல் என்று தலைவர் கிருவனிடம் சொன்னார்.


அது கிருவனிற்கு றோவிற்கு தகவல் கொடுக்க பெரும்வசதியாகயிருந்தது. கிருபன் மாத்தையா அவர்களை சந்திப்பதற்கு பூரண அனுமதிதலைவரால் வளங்கப்பட்டது 

ஆனால் மாத்தையா அவர்களை கிருபன் அடிக்கடி சந்தித்தார். ஆனால் மேலே றெக்கோட் கமறா பொருத்தப்பட்டுயிருந்தது. அது அனைத்து விடையங்களையும் பதியும் என்பதை கிருவன் அறிந்தானோ இல்லையோ என்பது தெரியாது. கிருவன் மாத்தையா அண்ணையின் அறைக்குள் சென்றதும் முதலில் சுகம் விசாரிப்பதுபோல் கதைப்பான். அதையடுத்து ஒரு மாததிற்குள் இருவரையும் போட்டுவிடுவேன் அதற்குப்பின்னர் நீங்கள் வெளியே வரலாம் என்று சொல்லி விட்டு வெளியே போவான் காவலர்களைக் கண்டதும் இவனிடம் ஒன்றும் எடுக்க முடியாது என்று மாத்தையா அண்ணைக்கு கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வான்.


கமறாவை சோதனையிட்ட போது இந்த வசணம் தொடர்ச்சியாகப்பாவித்துயிருக்கின்றார் அந்த இருவர் யார் என்று பார்ப்போமானால் ஒன்று பொட்டுஅம்மான் அடுத்தது தலைவர் இது தான் அதனுடையே உன்மையான கருத்தாகயிருந்தது.


இது இப்படி இருக்க இஞ்ஜினியர் என்ற போராளிஇவர்ஒரு கால் இல்லாதவர் கால் வருத்தம்தொடர்வாக அடிக்கடி இந்தியா போய்வருவது ஆனால் இவரை இலங்கை இராணுவம் பிடிப்பதோ விசாரிப்பதோ கிடையாது.ஆனால் இது தலைவருக்கு தெரியாது மாத்தையா அவர்களிற்கும் இஞ்சினியருக்கும் தான் இந்த இரகசியம் தெரியும். மாத்தையா கொடுக்கும் தகவல்களை றோவிற்குக்கொடுப்பதும் றோ கொடுக்கும் தகவலை மாத்தையாவிற்குக்கொடுப்பதும் இது தான் இவரின் தரகர் வேலையாகயிருந்தது.


ஆனால் பொது மக்களிற்கு தான் இயக்கத்தில் இருந்து விலகியதாகச்சொல்வது. ஆனால் மாத்தையாவின் முக்கிய விசுவாசியாக இவர் இருந்தார்.



 சந்தேகத்தின் அடிப்படையில்இவர் விடுதலைப் புலிகளின் புலநாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டார்.இவரை விசாரித்த போது கிருவனின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாகத் தெரியவந்தது இந்தியா புலநாய்வுத்துறையினரின் பொலிசாரை கொன்றகதை ஏன் கிருபன் அனுப்பப்பட்டார் நான் என்னத்திற்காக இந்தியா போய் வந்தேன் என பல உன்மைகள் வெளிவந்தன இதன் ஊடாக அனைத்து விடயமும் விடுதலைப்புலிகள் இஞ்ஜீனியர் இடம் இருந்து அறிந்து கொண்டார்கள். இதையடுத்து

சித்திரைவதையுடன் கூடுதலான விசாரனை மாத்தையா மீது நடந்தது. எதையும் ஒளிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால் 4 மணித்தியாலே றெக்கோட் ஊடாக அவர் சொல்லும் அனைத்து உன்மைகளும் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. முதலில் அது தலைவரிக்கு காண்பிக்கப்பட்டது அடுத்து தலைவரின் அனுமதியுடன் அனைத்து போராளிகளிற்கும்காண்பிக்கப்பட்டது.

கிருவன் உட்பட இலை மாறைகாயாக இருந்த மாத்தையா அவர்களின் ஆட்கள் அல்லது இந்தியாவின் புலநாய்வு முகவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால் இதில் எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடாதே நல்ல போராளிகளும் இருந்தார்கள். உளவாளிகளும் இருந்தார்கள். அது தான் ஒரு கவலையான விடையமாகயிருந்தது இதில் கடுமையான சித்திரவதை செய்து உன்மையான உளவாளிகளை இனங்காண வேண்டிய துப்பாக்கிய நிலை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளால் மரணதண்டனை வளங்கப்பட்டவர்களின் விபரம் மகேந்திரராஜா மாத்தையா விடுதலை புலிகளின் தற்காலிகப் பிரதித்தலைவர்01  அவரின் முக்கிய விசுவாசிகளான சுரேஸ் மற்றும் இஞ்ஜினியர்03   தலைவரின் பாதுகாப்பு அணியில் இருந்து திரு மாத்தையா அவர்களால் மனம் மாற்றி எடுக்கப்பட்டவர்களன தளபதி சுசிலன்04 தளபதி செங்கலம் 05 தலைவரின் வாகணறைவர் சின்னமணி06  தலைவரின் வெளிநாட்டு தொலைத் தொடர்வாளர் முருகன்07  ரெட்டி முகாம் பொறுப்பாளர் சதீசன்08 இந்தியாவில் இருந்து இரண்டு பொலிசை சுட்டுப்பொட்டு றோவினால் அனுப்பப்பட்ட கிருவன்09  என பத்து பேரிக்கு மரணதண்டனை என அழைக்கப்படும் அதிகூடிய தண்டனையான சாவொறுப்பு வளங்கப்பட்டது. 


விசாறனைகள் முடிந்து குற்ற மற்றவர்கள் என விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட்டு நீங்கள் போராளிகளோடு இணைந்து நீங்கள் முதல் செய்த கடமைகளைச் செய்யலாம் என்று அமைப்பின் புலநாய்வுத்தலைவர் பொடு அம்மானால்அனுமதி வளங்கப்பட்டதோடு அந்த துன்பியல் சம்பவத்திற்கு முகம்கொடுத்த அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரினார்கள் விடுதலைப்புலிகள்.


அதில்விசாறனை முடிந்து வந்த சில போராளிகளிளை நான் நேரடியாகக்கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது தளபதி ஜெயம் தளபதி  லோறன்ஞ் தளபதி மகேந்தி இவர்களில் பிரிகேடியர் ஜெயம் அண்ணன சொன்னவை ஒரு குடும்பத்தில் ஒருதர் தவறு செய்வது வளமை ஆனால் தவறு செய்யாமல் என்னை தண்டித்து விட்டார்கள் இருந்தும் எமது குடும்பத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பதே எனது குறிகோல் என்று பதில் அளித்தார்.




அடுத்து தளபதி லோறன்ஞ் அண்ணை அவர்களை தளபதி சொர்ணம் அண்ணை விசாறனை முடிந்து சாவகச்சேரியில் உள்ள பயிற்சி முகாமிற்குக்கொண்டுவந்து போராளிகளோடு இணைத்து பொறுப்பு வளங்கப்பட்ட பின்னர் கோழ்க்கொமாண்டோமற்றும் கைத்துப்பாக்கிகள் அவரிக்கு வளங்கப்பட்டது. அதை லோறன்ஞ் அண்ணை வேண்டாம் என்று மறுத்ததோடு நான் சண்டையிட்டு அதை எதிரியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாகக்குறிப்பிட்டார்.

இப்படி பல போராளிகள் மனம் உடைந்து காணப்பட்டார்கள்மாத்தையாவின் ஆட்கள் தலைவரிக்கு செய்வதற்குதிட்டமிட்ட துரோகங்கள்.மற்றும் இவர்களை மாத்தையா எப்படி மாத்தினார் என்பதைக் குறிப்பிடுகின்றேன் ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களோடு உறவு கொள்ளக்கூடிய அச்சந்தர்ப்பத்தை உருவாக்குதல் பின் அதைக்கண்காணித்து அவர்களை விரட்டி மனம் மாற்றுதல். இப்படித் தான் மாத்தையா அவர்களின் செயல்பாடு இருந்தது.

01 சதீசன் திருமலைமாட்டம் முன்னர் தலைவரின் மனைவியின் பாதுகாப்புப்பொறுப்பாக இருந்தவர் பின்னர் ரெட்டி முகாம் பொறுப்பாளராகயிருந்தவர்.


இவரின் பணி  தலைவரின் மனைவிக்கு மயக்கமருந்து அடித்து இந்தியாவிற்கு கடத்திச் செல்வது.

02 தளபதி செங்கமலம் யாழ் மாவட்டம்

மான் மறையிறச்சி பத்தல் மற்றும் தேன் என்பன வளமையாக வன்னியில் இருந்து எடுத்துகொண்டு வந்து தலைவரிக்குக்கொடுப்பவர். இதை அறிந்த மாத்தையா அவரிக்குக்கொடுத்தகடமை. சந்தேகம் வராதவாறு ஒரு மாதம் களித்து சாகக்கூடிய மருந்தை தேன் அல்லது இறைச்சிக்குள் கலந்துகொடுக்குமாறு மாத்தையா சொல்லியுள்ளார்.

இதை இவர் நேரடியாக மாத்தையாவிடம் மறுத்துள்ளார். ஆனால் இதைத்தலைவரிக்கு தெரியப்படுத்தவில்லை.


03 தளபதி சுசிலன் யாழ்கரவெட்டி   இவர் வாகனங்களைக் கையாழக்கூடிய மற்றும் வெடி மருந்துகளை பற்றிய கூடுதல் அனுபவம் உள்ளவர் பூனகரியில் எடுத்த T 56 டாங்கியை இவரே ஓடிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரிக்கு மாத்தையாகொடுத்த கடமை நேரக்கனிப்பு வெடிமருந்து செய்து சின்னமணியிடம்கொடுக்குமாறும் அதை சின்னமணி தலைவரின் வாகனத்திற்குள் வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இதை இவர் தலைவரிக்குத் தெரிவிக்கவில்லை.


04 சின்னமணி தாளையடி யாழ் இவரிக்கு மாத்தையாயாவால் கொடுக்கபபட்டகடமை. கொடிகாமத்தில் மாவீரர் திறப்பு விளா தூவி ஒன்று திறந்து வைக்க ஏற்பாடு நடந்துகொண்டுயிருந்தது. அவ் தூவி திறப்பு விளாவிற்கு தலைவர் போவதாகத் திட்டம் இருந்தது.

இவர் மாத்தையா குறிப்பிட இடத்தில் தலைவரின் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனம் பழுது என்று சொல்லி விட்டு இவர் பின்னால் செல்வார்.


இவர் பின்னால் சென்றதும் மாத்தையாவின் ஆட்கள் மறைப்பில் இருந்து தலைவரின் வாகனத்தை நோக்கி சரமாரியாகச் சுடுவார்கள் அவ்வேளை தலைவர் செத்து விடுவார் சின்னமணி தப்பி விடுவார். அதே வேளை இச்சம்பவம் யாழில் நடக்கும் வேளை மாத்தையா அவர்கள் வன்னியில் நிப்பதாகவும் இப்பிரச்சனை தொடர்வாக மாத்தையாவிற்கு ஏதுவும் தெரியாது என்று போராளிகள் நம்பக் கூடியவாறு அவர்களின் திட்டம் இருந்தது

. இரண்டு நாட்களிற்கு முன்னர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிவில் உடையில் ஆயுதங்களோடு ஒரு சிலர் நடமாடியதை அவதானித்த புலநாய்வுத்துறையினர் இதை அம்மானிக்கு தெரியப்படுத்தி இதை அம்மான் தலைவரிக்குச்சொல்லி தலைவரின் வருகையைத்தடுத்ததோடு அன்று நடக்கவிருந்த சம்பவத்தில் இருந்து தலைவரை பொட்டுஅம்மான் பாதுகாத்தார்.பின்னர் இந்தத் தூவியை கருனா திறந்து வைத்தார்.

05 முருகன் இவர் தலைவரின் வெளிநாட்டுத்தொலைத்தொடர்வாளர் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் கிட்டு அண்ணை தமிழீழம் வரப்போகின்றார் என்ற தகவலை தொலைத்தொடர்வு ஊடாக மாத்தையா அண்ணைக்குத்தெரியப்படுத்தி அதை மாத்தையா அவர்கள் இந்தியாவின் றோவிற்குத் தெரியப்படுத்தி கிட்டண்ணை அவர்களின் கப்பலை இந்தியாக் கடல்ப்டை முற்றுகையிட்டு சலண்டர் அடையுமாறு கேட்டது.அவர் அதை மறுத்து தலைவரின் அனுமதியுடன் இயக்க மரபிற்கு ஏற்ப கப்பலை தகர்த்து அனைத்து தோழர்கழுடன் தனது உயிரை அற்பணித்தார்.

06 சுரேஸ் மாத்தையா அண்ணையின் பாதுகாப்புப்பொறுப்பாளர் தலைவரைக்கொலை செய்வதற்கு பல திட்டங்கள் தீட்டியவர்  இவரே. அதை விட வன்னியில் உள்ள மண்ணாங்கண்ட லிற்கு இந்தியாவின் கெலிக் கொப்டரை எடுத்து அதில் மாத்தையா அவர்களை பாதுகாப்பாக இந்தியா அனுப்ப திட்டம் இட்டுடவர்.இவர்கள் அனைவரிடமும் சரியான முறையில் விசாரித்து அவர்களின் வாய்யால் தங்களின் தவறுகளை ஏற்ற பின்னர் எமது இயக்கத்தில் இருந்த அனைத்துப்போராளிகளிடமும் இவர்கள் செய்த தவறை அனைத்தும் போராளிகளிடமும் சொல்வதற்கான ஏற்பாட்டை விடுதலைப் புலிகள் செய்தனர். 

அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் சட்டத்திற்கு அமைவாக துரோகத்திற்கு வளிகாட்டியான முக்கிய பொறுப்பு வகுத்தபர்களிற்கு மட்டும் சாவொறுப்புவளங்கப்பட்டது.








11/11/1993 பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்

 

1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள்.

BT Poonakari-palaali

பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்

புதிய சரிதம் எழுதி…

இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..!

” கரும்புலிகள் ” மூலம் உருவாக்கப்பட்ட இத்தந்திரோபாயம் பூநகரி சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுவாக்கியது.பூகரி முகாம் தாக்கும்போது பலாலியில்இருந்து விமானம் மற்றும் ஆட்லறிதாக்குதல் வரக்கூடாது என்பதற்காவே இத்தாக்குதலை நடத்த வேண்டியதேவை தலைவருக்கு ஏற்பட்டது, அதற்கு அமைவாக புதிதாகக் கரும்புலிகள் தேர்ந்து

 எடுக்கப்பட்டார்கள்,பூநகரி சண்டை ஆரம்பித்தவுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட கரும்புலிகள் பலாலி விமான தளத்தில் உள்ளே சென்று விமானங்களையும் தகர்த்து அங்கே இருக்கும் ஆட்ளறிகளையும்தகர்க்கவேண்டும் என்பதே தலைவரின் திட்டமாகயிருந்தது , அது திட்டமிட்டாப்போல்வெற்றியாக நடந்தால் பூனகரிப் படையனருக்கு இவர்களால் உதவ முடியாமல் போகும், அப்படி நடந்தால் பூனகரியைபிடிப்பது எமக்கு இலகுவாகயிருக்கும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது,இந்நடவடிக்கைக்கு மேஜர் தொண்டமான்பொறுப்பாககச் சென்றார்,


BT-Maj-Thondaman

 இவரின் சங்கீதப்பெயர் கந்தையா என்பது ஆகும்

 இதற்கான கட்டளைக் கொமாண்டர் பிரிகேடியர் கடாடி இவரின்சங்கீதப் பெயர் கரிகாகாளன் என்பது ஆகும், இக்கரும்புலிகளிற்குக்கொடுக்கப்பட்ட கடமை, பூனகரிச் சண்டை ஆரம்பித்தவுடன் பலாலி விமான நிலையத்தில் இறங்கி விமானம் மீதும் ஆட்ளறி மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே ஆகும்,

 திட்டமிட்டாப்போல் இவர்கள் 15 பேரும் பயிற்சி வளங்கப்பட்டு  இவர்களிற்கான ஆயுதங்களும் வழங்கப்பட்டது பின்னர் ஆயுதங்கள் தண்ணீர் உள்ளே போகாதவாறு பாரிசல் பண்ணப்பட்டது, அடுத்து இவர்களை அனைவரையும் பிரிகேடியர் கடாபி அவர்கள் ஏற்றிக்கொண்டுபரித்தித்துறைக் கடல்கரையில் விட்டார், இரவு பத்துமணி இவர்கள் 15 பேரும் கடலில் இறங்கி தொடர் கைத்தைப்பிடித்துக்கொண்டு நீந்தத் தொடங்கினார்கள்,

 ஆனால் கடல் அடி கூடுதலாக அடிக்க ஆரம்பித்தது, அதனால் தொடர்கைத்தை வெட்டி ஒரு அணி இரண்டாப்பிரிந்து சென்று கொண்டுயிருந்தது,

கடலில் சென்றுகொண்டு டிருந்த வேளை இரு அணிகளிற்கும் இடைவெளி கனத்துவிட்டது அதனால் இரண்டு அணிகளிற்கும் ஆன தொடர்பு தூண்டிக்கப்பட்டது, அதனால் கடலில்வைத்த ஒரு அணியை ஒரு அணி தேடினதால் இவர்கட்டுகொடுக்கப்பட்ட நேரம் வந்து விட்டது.

 அதனால் முதலில் சென்ற சென்ற அனி தரைக்குச்சென்று பலாலிக்குள் நுளைந்தது ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் இறங்கிவிட்டார்கள், தங்களின் ஆயுதங்களை வெளியே எடுப்பதற்கான மறைவிடத்தை தேடிச்செல்கின்றார்கள், தொடர்ந்து அடுத்த அணியும் தரைக்குவந்துவிட்டது ஆனால் அவர்களும் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் தான் இறங்கினார்கள்,

ஆனால் இவர்கள் சென்ற இடப்பகுதியில் கடல்கரைபக்கத்தில் பாரிய வேலி போடப்பட்டு இருந்தது அதனால் வேலிக்கு மேலால் ஏறிகுதிக்கும் போது எதிரி கண்டு விட்டான் அதனால் சண்டை தொடங்கிவிட்டது, அவ்விடத்திலே இரு போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள்,ஏனையவர் உள்ளே சென்று விட்டார்கள், ஆனால் முதல் சென்ற அணியும் இவர்களோடு இணைந்துவிட்டது, இவர்கள் உள்ளே நுளைந்ததை அறிந்த இராணுவம் விமானத்தளம் மற்றும் ஆட்ளறி தளத்தைப்பலப்படுத்திவிட்டது, அதைவிட இராணும்இவர்களையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்து, இரு பகுதிக்கும் கடும் சண்டை நடந்து


பல இராவத்தினர் கொல்லப்பட்டனர், இது இப்படி இருக்க பூனகரிபடைத்தளம்மீதும் விடுதலைப்புலிகள் சண்டைடையை ஆரம்பித்து அது முன்னேற்றமாக நடந்துகொண்டுயிருந்தது, அதனால் பூனகரிப்படைக்கு உதவுவதா அல்லது தங்களைப்பாதுகாப்பதா? என்ற குழப்பமான நிலைக்கு பலாலி இராணுவம் தள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் 13 கரும்புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள், மூன்று போராளிகள் தடையை உடைத்துக்கொண்டு தப்பிவந்தார்கள்,


பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்

இக் கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் தேசப்புயல்களாய் வீசினர்.

கரும்புலி மேஜர் கலையழகன்

கரும்புலி மேஜர் தொண்டமான்

கரும்புலி கப்டன் சிவலோகன்

கரும்புலி கப்டன் கரிகாலன்

கரும்புலி கப்டன் சீராளன்

கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி

கரும்புலி கப்டன் மதிநிலவன்

கரும்புலி கப்டன் ஐயனார்

கரும்புலி லெப் நல்லதம்பி

கரும்புலி லெப் கண்ணன்

கரும்புலி லெப் ஜீவரஞ்சன்

கரும்புலி லெப் செங்கண்ணன்

கரும்புலி லெப் வீரமணி

BT-Lt-VeeramaniBT-Lt-SenkannanBT-Lt-JeevaranjanBT-Lt-KannanBT-Lt-NallathambiBT-Capt-AiyanaarBT-Capt-MathinilavanBT-Capt-SenthamizhnambiBT-Capt-SeeralanBT-Capt-KarikaalanBT-Capt-SivaloganBT-Maj-ThondamanBT-Maj-Kalaiyalagan

11/11/1993 இப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.!தவளைப்பாய்ச்சல் ஆதாவது பூனகரிச் சண்டை,


அதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.



இந்த தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காக தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.!



எங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்த தாக்குதல்.!

இந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில்ஏராளம்.

 

அந்தத் திதை திருப்பத்தின் ஒரு பக்கம்தான் அடுத்த நடவடிக்கை அடுத்து பாரிய தாக்குதல் ஒன்றுக்காகத் தங்களைத் தயார்ப்படுத்தினார்கள்.விடுதலைப் புலிகள் அதற்காக ஒரு வருடமாக தளபதி சொர்ணம் தலைமையில் வேவு நடவடிக்கை நடந்துகொண்டுயிருந்தது. அவ்வேவு நடவடிக்கையூடக எடுக்கப்பட்டதகவலைவைத்து அதற்கான மாதிரிப்பயிற்சிகளும் நடந்துகொண்டுயிருந்தது,


.11/11/1993 பூனகரி சண்டை ஆரம்பம் ஆனது

வராலாற்று புகழ் மிக்க தவளைப்பாய்ச்சல் பூனகரிச்சண்டைக்காக புறப்படுகின்றது இம்ரான் பாண்டியன் படையணி இப்படையணியானது அனைத்து மாவட்டப் போராளிகளும் இணைக்கப்பட்ட தலைவரின் நேரடி பார்வையில் உள்ள மிகவும் பலம் பொருத்திய படை யணியாகும்,


தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவரை பாதுகாப்பதும் இப்படையயின் கடமையாக இருந்தது ஆரம்பத்தில் கரும்புலி மரவர்கள் உருவாகியதும் இப்படையணியில் இருந்து தான். இப்படையணிக்குக் கட்டளை அதிகாரியாக தளபதி சொர்ணம் அவர்கள் இருந்தார்.


இப்படையணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் இருந்தார்கள். அப்பொழுது தளபதி கொர்ணம் அவர்களின் ஏற்பாட்டில் தளபதி கெங்கா தலைமையில் 170 போராளிகள் பூனகரிச் சண்டைக்காகத்தயார்படுத்தப்பட்டார்கள். அதற்கு உதவித் தலைவராக போராளி ரஞ்சித் அவர்கள் நியமணிக்கப்பட்டார். அதில் அணித் தலைவர்களாக 45 போராளிகளிற்கு போராளி வேல்ராஜ் அடுத்து 45 போராளிகளிற்கு போராளி தீபன் அடுத்து 45 போராளிகளிற்கு மையுறன் அத்துடன் மேலதிகமாக உந்துகணை செலுத்தும்ரீம் ஆர் பீச்சி ரீம்அவர்களின் பலத்தை மெருகூட்டுவதற்காக இணைக்கப்பட்டது.


இவர்களிற்கு வளங்கப்பட்ட பணி யாழ் மணியன் தோட்டம் கடல் கரையால் நகர்ந்து பூனகரிக்கேம்பிற்கு முன்னால் இருக்கும் மினி முகாமை தாக்கி அழித்து இரண்டு கிலோ மீற்றர் உள்ளே நகர வேண்டும். இது தான் இவர்களின் கடமையாகயிருந்தது. சண்டை தொடங்கியதும் தளபதி சொர்ணம் மற்றும் பொட்டுஅம்மானின் கட்டளைகளால் வோக்கி அலறிக்கொண்டுயிருந்தது. திட்டம் இட்டாப்போல் படையணிகள் மினி முகாமை அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள் கப்டன் தீபன் உட்பட 9 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.


இப்பகுதிச் சண்டைக்கான கட்டளை அதிகாரியாக தளபதி பொட்டுஅம்மான் தளபதி சொர்ணம் இருவரும் அண்ணை இருவரும் மாறி மாறிக் கட்டளை வளங்கினார்கள். மூன்றாவது நாள் சண்டையில் போராளி ரஞ்சீத் உட்பட பல போராளிகள் காயம் அடைந்ததினால் பின் தளத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சண்டை பல முனைகளில் நடைபெற்றது தளபதி வால்ராஜ் தலைமையிலும் மற்றும் கடல் பகுதிகளைக் கண்காணித்து தளபதி சூசை தலைமையிலும் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் முதல் நாள் வீரச்சாவு அடைந்த லெப் கேணல் அன்பு அவர்களின் செயல்பாடும் அவரின் போராளிகளின் உழைப்பும் மிக முக்கியமானதாக்கக்கருதப்பட்டது.


தேசியத் தலைவர் அவர்களால் ஒவ்வொரு படையணிகளுக்கும் ஒவ்வொரு பகுதி என்ற அடிப்படையில் வேலைப்பங்கீடுகள் சிறந்த முறையில் வளங்கப்பட்டுயிருந்தது. அவ்வகையில் சண்டை தொடங்கி சிறிது நேரத்தில் தெயந்தன் படையணிப்போராளிகள் நாகதேவன் துறையை தங்களின் பூரணகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவந்தார்கள். அதையடுத்து பூனகரி மெயன் பகுதி பிடிபட்டது. அதைத் தக்க வைப்பதற்காக மகளீர்ப்படைபணியிடம் வளங்கப்பட்டது.


ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கிளிய பண்ணி பின் தளத்திற்கு அனுப்புவது பற்றி அவர்கள்சிந்திக்கவில்லை. கள நிலவரம் நிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டுயிருந்தது  . கடும் பலத்துடன் மீண்டும் எதிரி அப்பகுதிதைக் கைப்பற்றினான் மீண்டும் எதிரிகள் பார்த்த போதுஅவர்கள் முன்னர் சேமித்து வைத்த ஆயுதங்கள் அப்படியே இருந்தது.


அது அவனிற்கு பெரும் மகிழ்ச்சியாகயிருந்தது  பின்னர் அவ் ஆயுங்களை அவன் விடுதலைப்புலிகளிற்கு எதிராக பயன்படுத்தினான். தொடர்ந்து 3ன்று நாட்கள் கடுமையான சண்டை நடைபெற்றது. இரண்டு  T 56 சுத்த டாங்கிகள் பெரும் தொகையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது.


மெயின் பகுதி மட்டும் பிடிபடாமல் இருந்தது அதை தலைமை தாங்கி நின்ற இராணுவப்படை அதிகாரி சுற்றி வர வாகணடையர்களை போட்டு எரித்து விட்டு இதைச் சுற்றி விமானத்தாக்குதல் நடத்துமாறுதங்களின் விமானப்படையிடம் கேட்டுக்கொண்டுயிருந்தான்,.இதைக்கேட்டுக்கொண்டுயிருந்ததலைவர் விடிந்தால் நிலைமை மோசமாகும் என்பதை விளங்கிக்கொண்டார் தேவையில்லாத இழப்பு ஏற்படலாம். அதனால் விடிவதற்கு முன்னர் பிடிக்கப் பாருங்கோ இல்லையெனில் பின்னால் நகர்ந்து பாதுகாப்பான இடங்களில் போராளிகளை நிலையெடுத்து  இருக்குமாறு தலைவர் கட்டளை வளங்கினார்..


தலைவர் சொன்னது போல் பகல் கடுமையான விமானத்தாக்குதல் நடந்தது தளபதி சொர்ணம் அண்ணை கையில் காயம் அடைத்தார். அடுத்த நாள் மெயனில் இருந்த இராணும் பின்வாங்கி ஓடிவிட்டது பூனகரி முழுமையாக எமது கட்டுப்பாட்டில் வந்தது. சுமார் 320 போராளிகள் இப்படை முகாமை தாக்குவதற்காக தங்களின் உயிரை அற்பணித்தார்கள்.

 லெப் கேணல் குணாஅவர்களின் பங்களிப்பும் இப்படை முகாம் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகக்கருதப்பட்டது.



10/05/1994 கடும் பதட்டமான நிலையில் இருந்த போதும்செல்லக்கிளிதிருடனின் வேலையால் கடுமையாகப் பயந்த  தலைவர், 





அக்காலத்தில் அக்கடமையில் நின்ற போராளி குமணன் குறிப்பிடுகையில்

இது இப்படி இருக்க மீண்டும் ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டது இருந்தும் மாத்தையா அவர்களின் பிரச்சனையோடு அல்லது வேறு துரோகத்தானமான பிரச்சளைகளோடு இது சம்மந்தப்படவில்லைஇருந்தும் இதையும் தெளிவாகப்பார்ப்போம்.

1992 ஆம்காலப்பகுதியில்செல்லக்கிளி அவர்கள் சிறுத்தை பெண் போராளிகளிற்கு பயிற்ச்சி கொடுக்க விடப்பட்டார். அதில் பெண் போராளிகளிற்கு திறமையாகப் பயிற்சி வளங்கி  அவர்கள் அனைத்து பயிற்சிகளும் எடுப்பதற்கு அவர்களால் முடியும் என்பதை நிருபித்தார் செல்லக்கிளி ஆணிற்கு நிகராக அனைத்தும் அவர்களால் செய்ய முடியும் ஆனால் புவிஈர்ப்புத்தன்மை அவர்களிடம் கூடுதலாகக்காணப்படுவதால் அவர்கள் ஓடும் போதுகளைபபடைவதாகவும் சிறிது வேகம் குறைவதாகவும் செல்லக்கிளி தலைவரிடம் குறிப்பிட்டுயிருந்தார்.10/05/1994 


இவனின் திறமையைக்கண்ட தலைவர் பாதுகாப்பு பயிற்சிக்கு போராளிகளை எடுக்கும் போது செல்லக்கிளியும் அவ் அணியில்இணைக்கப்பட்டான் . அக்காலத்தில் தலைவரின் பாதுகாப்புச் சிஸ்ரங்கள்புதிப்பிக்கப்பட்டது 3 பேர் கொண்ட ஒரு ஸ்குவாட்அதற்கு ஒரு தலைவர் அவருரிக்கு கைத்துப்பாக்கி இருக்கும் இரண்டு பேரிக்கு அவர் கட்டளை அதிகாரியாக  இருப்பார். அப்பபடி நாலு ஸ்க்குவாட்டிற்கு முதலாவது பொறுப்பாளராக தளபதி கடாபியும் இரண்டாவது பொறுப்பாகராக திரு செல்லகிளி அவர்களும்தலைவரால் நியமணிக்கப்பட்டாகள்.15/05 1994 இந்தப் பொறுப்புத்தான் செல்லக்கிளிக்கு ஆசை கூடுவதற்கான காரணமாக இருந்தது.


அக்காலப்பகுதியில் கொக்குவில் தாவடியில் தலைவரின் மனைவியின் முகாம் அமைந்துயிருந்தது. அடுத்துதலைவரின் முகாம் கொக்குவில் நந்தவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்ததுவாரத்தில் ஒரு முறை ஞாயற்றுக்கிழமைகளில் தலைவர் அங்கே செல்வது வளமையாகயிருந்தது. அப்பொழுது தலைவரின் வாகண ஓட்டுணராக போராளி அம்மா அவர்கள் இருந்தார். திட்டமிட்டாற் போல் ஞாயற்றுக்கிழமை தலைவர் மதிவதனி அவரின் மனைவி வீட்டிலே தங்கினார்.


பாதுகாப்புச்சட்டத்தின்படி வாகண ஓட்டுனரான அம்மா அவர்கள் இரவு 9 பது மணிக்கு வாகனத்திறப்பை செல்லக்கிளியிடம் ஒப்படைத்தார்.அக்கீயை பெற்றுக்கொண்ட செல்லக்கிளி அவர்கள் வேகமாகச் செயல்படத்தொடங்கினார். லெப் கேணல் தேவன் இவர் அப்பொழுது றீசிவீங் அதாவது ஒட்டுக் கேட்கும் கடமையாற்றியவர். இவர் தனது குப்பியை வீட்டுச் சுவரில் இருக்கும் ஒரு ஆணியில் தனதுகுப்பியைக் கொழுவி வைப்பது வளமை இதை செல்லக்கிளி முதலில் அவதானித்து வைத்துள்ளான்.


உடனே போய் அந்தக்குப்பியை எடுத்துக்கொண்டுவந்து உடைத்து தூள் ஆக்கி தலைவர் குடிக்கும் தண்ணீர் கேனுக்குள் கலந்து வைத்துள்ளான். தலைவர் தண்ணீர் கேட்க பக்கத்தில் நிற்கும் பியேய் கிட்டு அவர்கள் தண்ணீர் செல்லக்கிளியிடம் கேட்டதும் செல்லக்கிளி கேணைதிறந்து தண்ணீரை குடித்துள்ளான். பின்னர் வாந்தி எடுப்பது போல்தானே நடித்துள்ளான்.


பின்னர் குறிப்பிட்ட போராளிகள் கேணை முணர்த்துபார்த்தபோது அதில் குப்பி மணந்துள்ளது. உடனே தகவல் தலைவரிக்குச் சொல்லப்பட்டது. தலைவர் உடனே தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பொட்டு இருவரையும் உடனே வருமாறு அளைத்துள்ளார். தகவல் அறிந்ததும்சொர்ணம் மற்றும் பொட்டு இருவரும் முகாம் வந்து சேர்ந்தனர்.


செல்லக்கிளி உடனே யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டான். இரவு11 மணிக்கு தளபதி பொட்டு அவர்கள் எல்லோருடனும்கதைத்த்தார். தளபதி சொர்ணம் பக்கத்தில் இருக்க கதையை ஆரம்பித்துள்ளார். முதலில் அனைத்துப்போராளிகளின் குப்பிகள் அவர்களிடம் உள்ளனவா என சோதனையிடப்பட்டது. இறுதியில் போராளி தேவனின் குப்பி இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.தொடர்ந்து அனைத்துப் போராளிகளிற்கும் விசாறனை ஆரம்பம் ஆனது. 


அந்த முகாம் வெறிச்சோடிக்காணப்பட்டது. தலைவரின் கண்கள் சிவந்து இருந்தது கைத்துப்பாக்கியில் இருந்து கை எடுக்காமல் கடுமையான அவதானத்துடன் தலைவர் காணப்பட்டார். தலைவரின்  மனைவி மதிவதனி அழுதிய வண்ணம் கண் சிவந்து காணப்பட்டார். அப்பொழுது போராளி கிட்டு அவர்கள் தான் தலைவரின் நெருங்கிய பாதுகாப்புப் பீயேய் ஆகயிருந்தார்.


11/05 1994 காலை 9 மணிற்கு பாண் கோட்டவில் ஒரு வெள்ளையரை சந்திப்பதற்கான ஏற்பாடுயிருந்தது பதட்டமான சூழ்நிலையிலும் எந்த சந்திபுக்களையும் தலைவர் நிறுத்தவில்லை. அது திட்டமிட்டாப் போல் நடந்தது. அந்த ஒன்றுகூடல் முடிந்ததும் மீண்டும் தலைவர் அதே முகாமிற்கு வந்தார் பிற்பகல் 3 மணிக்கு தளபதி பொட்டு அவர்கள் வந்து அனைத்துப் போராளிகளிற்கும் நடந்த பிரச்சனை பற்றி தெளிவுபடுத்தினார்.


பொட்டு அவர்கள் சொன்னது ஆரோ ஒருதர் தலைவரின் கேனுக்குள் குப்பியை கரைத்து விட்டார்கள் செல்லக்கிளி அதை குடித்து சோதனையிட்டபோது அவர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். தற்போது செல்லக்கிளி ஆஸ்பத்திரியில் உள்ளார். அது அவரிக்கு ஆவத்தாகக்காணப்படவில்லை. ஆனால் அது கொல்வதற்காக செய்யவில்லையென நான் நினைக்கின்றேன். சிலர் பகிடியாக செய்தார்களோ தெரியாது. ஆனால் நாங்கள் அதைகண்டுபிடிக்க வேண்டும் என சொல்லி விட்டு இதை உங்களில் ஒருதர் தான் செய்துயிருக்க வேண்டும் நீங்கள் அனைவரும் எங்களிற்கு ஒத்துளைப்பு தர வேண்டும்.என சொல்லி அனைவருக்கம் விசாறனை ஆரம்பம்ஆனது


24  மணித்தியாலம் உங்களின் செயல்பாட்டை சொல்ல வேண்டும் என சொல்லி அனைத்தும் போராளிகளிடமும் தனித்தனியாக விசாரனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் இதன் முக்கிய சூனிக்காரன் செல்லக்கிளி என்பதை தலைவரும் பொட்டு அம்மானும் அறிந்து கொண்டார்கள், செல்லக்கிளியின் நகவஞ்சகத்தை தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ எமக்குச் சொல்லவில்லை அதனால் நானும் குறிப்பிட விரும்பவில்லை,


இருந்தும் தங்கமான தலைவர் என்ற காரணத்தால் எல்லாப் போராளிகளிலும் அழவிற்கு அதிகமான அன்பு தலைவர் வைத்துயிருந்தார், செல்லக்கிளியின் நரி குணத்தை அறிந்த தலைவர் செல்லக்கிளியன் பிரச்சனையை மாத்தையாவின் சதியோடு ஒப்பிட வேண்டாம்,  விசாரனை என்ற போர்வையில்செல்லக்கிளியின் உடம்பில் கைவைக்க வேண்டாம் என பொட்டு அம்மானிடம் சொல்லியிருந்தார்

தலைவர் சொன்னதற்கு என்னம் ஒரு காரணம் இருந்ததுசெல்லக்கிளியின் குடும்பத்தில் அவனும் அவனின் தம்பியும் இயக்கத்தில் இருந்தார்கள் அவனின் தம்பி ஆனையிறவுச் சண்டையில் வீரசாவு அடைந்தார் அந்த வீரனால்தான் செல்லக்கிளியின் உயிர் தப்பிக்கொண்டது, அவனின் தம்பியின் வீரச்சாவு விபரம்

வீரவேங்கை அல்வின்

சிவபாலன் கருணாகரன் ஆரையம்பதி, மட்டக்களப்பு


வீரப்பிறப்பு:26.09.1974.வீரச்சாவு:21.07.1991யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்தி வரை முன்னகர்ந்திருந்த சிறிலங்கா படையினரின் சங்கிலித்தொடர் நிலைகள் மீது முள்ளியானில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பத் தாக்குதலின்போது வீரச்சாவுஅடைந்தார்

, அது போல் பொட்டு அம்மானும் செல்லக்கிளியை அடிக்கால் விசாரித்து உன்மையை அறிந்து கொண்டார்., அதை அடுத்து செல்லக்கிளி மற்றும் மாத்தையாவின் சதிதொடர்வாக எமது ரெட்டி முகாமில் வைத்து மூன்று தடவை பொட்டுஅம்மான் அவர்கள் அனைத்துப்போராளிகளிற்கும் வகுப்பு எடுத்து போராளிகளை தெளிவுபடுத்தினார்,



செல்லக்கிளி அனைத்துப் பிரச்சனையையும் அவன் ஒத்துக் கொண்டான் தொடர்ந்து அப்பிரச்சனை முடிவிற்கு வந்து, செல்லக்கிளியை தலைவர் என்னன்று கையாண்டார், என பார்ப்போம்,, 1996 வன்னிக்குச் சென்றதும், எமது படையணி விசுவமடு புதுக்குடியிருப்பு முத்துஐயன்கட்டு என முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கியேஇடங்களிலே பாசறைகள்   அமைக்கப்பட்டது அப்பொழுது விசுவமடு ரெட் வாணா பிரசத்தில் எமது படையணி மண்ணெண்ணை களஞ்சிம் இருந்தது, 


அதற்குலெப் கேணல் SM அப்பா பொறுப்பாகயிருந்தார், தண்டனை என்று சொல்லாமல் கடமை என்ற போர்வையில் மண்ணண்ணைஅழந்து கொடுக்கும் வேலைக்கு பிரிகேடியர் கடாபி அவர்களால் செல்லக்கிளி விடப்பட்டார், தனது கடமையை வைத்தே செல்லக்கிளி உணர்ந்து கொண்டான் இனி எந்தக் காலத்திலும் தனக்கு ஒரு வளர்ச்சி  கிடைக்காது என்பதை அவன் புரிந்து கோண்டான்,


 உடனே தான் வீடு செல்லப்போவதாக தலைவருக்கு கடிதம் எழுதினான், தலைவரும் உடனே அனுமதித்தார்,, சிறிது காலம் புதுக்குடியிருப்பில் இருந்த செல்லக்கிளி பின்னர் அங்கு இருந்து வெளிநாடு ஒன்றுக்குச் சென்றான், இப் புத்தகம் எழுதும்போது செல்லக்கிளி உயிரோடுயிருந்துள்ளார்செல்லக்கிளியின் தவறான நடத்தையால் தலைவரின் பாதுகாப்பு தற்காலிகவாகன ஓட்டுனராகயிருந்த அம்மா உட்பட சில போராளிகள் வெளியேற்றப்பட்டார்கள், அதனால் ஆழணிப் பிரச்சனை பெரியபிரச்சனையாகயிருந்தது,



1994 காலப்பகுதியில் தலைவரின்பாதுகாப்பில் பாரி மாற்றம் ஏற்பட்டு இருந்த காலம் அது தலைவரின் வாகன ஓட்டுனரில்  இருந்த பெரும்பாலான போராளிகள்வெளியேற்றப்பட்டு அதற்குப்பதிலாக புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டார்கள்,

,அப்பொழுது நானும் விரல் விட்டு எண்ணக்கூடிய அழவிற்குத்தான் பழைய போராளிகள் இருந்தார்கள், ஆனால் அவர்கட்டு அனுபவம் குறைவாகவே இருந்ததுதற்காலிகமாக அப்பொழுதுசொர்ணம் அண்ணை வன்னிக்குச் சென்று கிறிஸ்தோபறின் வாகன ஓட்டியான போராளி சிவசங்கர்அவர்களைக் கூட்டிகொண்டு வந்து தலைவரின் வாகண ஓட்டுநராகவிட்டுயிருதார். அன்றில் இருந்து தலைவரின் வாகண ஒட்டுனராக போராளி சிவசங்கர் இருந்தார்.

அப்பொழுது ஒரு சந்திப்பிற்காக நாகர்கோயிலிக்குப்போகவேண்டிய தேவை தலைவருக்கு ஏற்பட்டது, அதனால் போராளி சிவசங்கர் தலைவரின் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றான்

 இரண்டாவது வாகனத்திற்காகான ஒட்டுனராக போராளி தீபன் அல்லது அவரின் பட்டப்பெர் (எமட்டேசன்-1 ) என்பதாகும்இவர் புதிதாக வாகனம் பழகிக்கொண்டுயிருந்தவேளை அவசரத் தேவைக்காக உள்ளே எடுக்கப்பட்டவர், அதனால் வாகணத்தைப் பற்றி அனுபவம் இல்லாதவர்,

 அப்பொழுது இரண்டாவது வாகணத்தை போராளி தீபேன் ஓட்டிச் செல்ல அவரிக்குப் பக்கதில் ஐம்பதுகலிபர் கண்ணர் போராளி கதிரோளி இருக்கின்றார், ஐம்பது கலிபர் வாகனத்திற்குள் களட்டப்பட்ட நிலையில் இருக்கின்றது நான் எனது றைபுள் ஆன மினி மினி LMG யோடு உள்ளே இருக்கின்றேன், எனக்குப் பக்கதில் ஐம்பது கலிபர் உதவியாழர் முத்து ஐயன் இருக்கின்றார் .

எமது முகாம் ஆன நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த ரெட்டி முகாமில் இருந்து வல்வைவளியூடாக கடல்புலிகளி முகாம் ஒன்றிக்குச் சென்று கொண்டுயிருக்கின்றோம்,


அது கரும்புலி கப்டன் வாமன் நாளாயினி அவர்களை தலைவர் சந்தித்து கடசி உணவு அருந்தி அவர்களோடு நின்று படம் எடுத்து அவர்களை வளி அனுப்பி வைப்பதற்காகவே தலைவர் சென்றுகொண்டுயிருந்தார்,, முன்னால் சென்ற தலைவரின் வாகனம் மிக வேகமாகச்சென்றுகொண்டுயிருந்தது, ஏனனில் அவர் புதியர் என்ற காரணத்தால் பின்னால் வரும் வாகனத்தை கவனித்து ஓடும் அழவிற்கு அவருக்கு அனுபவம் இல்லை,அவரின் பெயர் சிவசங்கர்


இரண்டாவது வாகனம் நூறு மீற்றறில் இருந்து இருநூறு மீற்றறில் செல்ல வேண்டும் ஆனால் இது அதையும் விட கூடுதலான இடைவெளி கனத்துவிட்டது, இதை அவதானித்த கதிரோளி இது என்ன 80 கிலோ மீற்றர் வேகத்தில்தான் வாகனம் செல்லுது வேகமாக ஓட்டி முதலாவது வாகணத்திற்குக்கிட்டப்போ என சத்தமாகக் கட்டளை வழங்கினான்,

 அதுதான் கடசி என நினைக்கின்றேன், வாகனம் ஒரு பக்க வேலியை உரசிக்கொண்டுபோனது பின்னர் அடுத்த கரையை உரசிக்கொண்டுபோனது அடுத்து நடு றோட்டில் மூன்று தடவை வாகனம் வெல்ட்டி அடித்து குடை சாஞ்சது, வாகனம் கண்ணாடியில் இருந்து அனைத்தும் எமது நிசான் பிக்காப் தேசம் அடைந்தது தீபனின் உடம்பில் தோல் ஒன்றும் இல்லை இறைச்சிபோல் கணப்பட்டான் தீபன் மட்டும் கடுமையான காயம் அடைந்தான் ஏணைய மூவரும் மயிர் இளையில் உயிர் தப்பினோம், இது கண் மூடி முளிப்பதற்குக்குள்நடந்தது,


தனது உயிரை நேசிக்கும் எந்தத் தலைவனும் போன பாதையால் திரும்பி வர மாட்டார்கள் ஆனால் எமது தலைவர் எந்தக் காலத்திலும் தனது உயிரைப் பொருட்படுத்தியது கிடையாது, இரண்டாவது வாகனத்தை காணவில்லையென நினைத்த தலைவர் திரும்பி வந்து அவரின் வாகனம் எங்களின் வாகனத்திற்குக்பக்கதில் நின்றது,

 பொது மக்களும் ஒரு சிலர் வந்தமையால் அவர் வாகனத்தில் இருந்து வெளியே வரவில்லை உள்ளே இருந்து எங்களின் வாகனத்தைப்பார்த்துக்கொண்டுயிருந்தார், பின்னர் எஸ்சோ அண்ணையும் அவ்விடத்திற்குவந்துவிட்டார், 

பின்னார் நாங்கள் கதிரோளி வாகனத்தை ஓட்டிமந்திகைக்குச் சென்று தீபனை அங்கே இறக்கி விட்டு நாங்கள் ரெட்டி முகாமிற்குச்சென்றோம், நாங்கள் 300 மீற்றர் வரும் வரை தலைவர் எங்களின் வாகனத்தைப்பார்த்துக் கொண்டே இருந்தார், அடுத்து திட்டமிட்டாப்போல் தலைவர்  அந்த ஒன்றுகூடலிற்குச் சென்றார்,





 23/05/1994 ஆம் ஆண்டு தமிழீழ வைப்பகம் முதலாவதா யாழ்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது,


 இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம்.


திரு. ம.வீரத்தேவன்,
மேலாண்மைப் பணிப்பாளர்,

 

தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்!
இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகம்’ திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை. இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை.
 
இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது. இந்த வங்கி


 உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத்தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


 
36 வயதாகும் வீரத்தேவன, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார். தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும். இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது.

“சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் வீரத்தேவன். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும் இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர்.

2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன். தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன்.

தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன. தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைதாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர்.

தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை. தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது.

சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை. இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம்… அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்… “யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன்.

 

தமிழீழ வைப்பகத்தின் கிளைகள்

கிளைகள் ஆரம்ப நாள்
யாழ்ப்பாணம் 23-05-1994
கிளிநொச்சி 05-06-1995
நெல்லியடி 14-09-1995
முல்லைத்தீவு 14-05-1996

ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள்
மாங்குளம் 07-07-1997
விசுவமடு 01-06-2001
புளியங்குளம் 24-07-2002
பளை 14-03-2003
முழங்காவில் 14-01-2004

பணிகள்

நிலையான வைப்புகள் Fixed Deposits
தேட்ட வைப்புகள் Savings Deposits
நடைமுறைக் கணக்குகள் Current Accounts
தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates
ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits
வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange
கடன்கள் Loans
மேலதிக வரைவுகள் Overdrafts
நகையடைவு Pawn Broking
காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities
வாடகைக் கொள்வனவு Hire Purchase
நிலையான கட்டளைகள் Standing Orders
பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service

நிலையான வைப்புத்திட்டங்கள்
Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 08.50 %
12 மாத நிலையான வைப்பு 08.00 %
06 மாத நிலையான வைப்பு 07.00 %
03 மாத நிலையான வைப்பு 06.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %

வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தேட்ட வைப்புத்திட்டங்கள்
Savings Deposit Schemes

தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம்
வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50%
நல்லைத் தேட்டம் 06.00%
நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50%
சிறார் உண்டியல் திட்டம் 06.50%
ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
அமுதம் சிறார் தேட்டம் 06.50%
பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50%

கடன் திட்டங்கள்
Loan Schemes

கடன் திட்டங்கள் வட்டி வீதம்
நகையடைவுக் கடன் திட்டம் 18.00%
வாணிபக் கடன் திட்டம் 16.00%
மேம்பாட்டுக் கடன் திட்டம்
வேளாண்மைக் கடன் திட்டம் 15.00%
கடற்றொழில் கடன் திட்டம் 15.00%
கைத்தொழில் கடன் திட்டம் 15.00%
சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00%
சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00%
கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%

02/08/1994 பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிற்குத் தலைவர் திட்டமிட்டார்,

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.காரணம் முன்னர் நடந்த தாக்குதலை வைத்து இராணுவ அதிகாரிகள் பலாலிக்குக் கிட்டக்கூட அவர்களால் நெருங்க முடியாது அப்படி வந்த அனைவரையும் தாங்கள் சுட்டு விட்டோம் என அறிக்கை விட்ட காலம் அது, அதனால் இவர்கட்கு ஏதாவது செய்ய வேண்டும் என தலைவர் திட்டமிட்டர்,

பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.

1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.அதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்


அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

இச்சண்டை தொடர்பாக அதில் பங்குபற்றிய கனடி குறிப்பிடுகையில்அப்பொழுது பூநகரிச் சண்டையில் தளபதி சொர்ணம் காயப்பட்டுயிருந்தகாலம் அது எங்களுடைய முகாமிற்கு வந்த சொர்ணம் அண்ணை என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார், அப்பொழுது நாங்கள்அங்கே சென்றதும், ஒரு வட்டக் கொட்டிலில் நான்  இருந்தேன் சிறிது நேரத்தில் தலைவர் வந்தார், சாப்பிட்டுத்தாயா என தலைவர் என்னிடம் கேட்டார், நான் இல்லையென்றேன், சரி சாப்ட்ட பின்னர் கதைப்போம் என்று சொல்லி நானும் தலைவரும் சாப்பிட்டோம் சொர்ணம் அன்னை தலைவரின் பாதுகாப்பில் நின்றார்,


அப்பொழுது தலைவர் என்னிடம் கேட்டார் பூனகரி சண்டை நடக்கும் போது பலாலியில் ஒரு தாக்குதல் நடந்தது உமக்குத் தெரியுமா என கேட்டார் ஓம் என்றேன் அதற்கு தலைவர் முதல் நடந்த தாக்குதல் பற்றி இராணுவ அதிகாரிகள் வீரம் பேசிக்கொண்டுயிருக்கின்றார்கள் இதற்கு என்ன செய்யலாம், என்று தலைவர் என்னிடம் கேட்டார் அதற்கு நான் திருப்பி அடிக்க வேண்டும் என பதில் அழித்தேன்,அதுதான் உன்னை வரச் சொன்னனான் எனஅவர் சொல்லிவிட்டுதொடர்ந்து சில புத்திமதிகளை தலைவர் எனக்குச் சொன்னார், 


அடுத்து தலைவர் எனக்கு ஒரு மாதம் விடுமுறையில் செல்லும்மாறு அனுமதி வளங்கினார். ஆனால் ஒரு நாள் முந்திவந்தாலும் உன்னை  இயக்கத்தை விட்டு கலைத்து விடுவேன் என  சொல்லி தலைவர் என்னை அனுப்பினார், அதற்காக ஒரு மோட்டார் சைக்கலும் செலவிற்குப்பணமும் எனக்குத்தரப்பட்டது,அது எனக்கு கடசி விடுமுறை என்பதால் நான் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கதைத்தேன் அத்தோடு மிக்க மகிழ்ச்சியாக எனது, விடுமுறை நாள்யிருந்தது 1994/01 மாதம் சென்ற நான்1994 / 2 ஆம் மாதம் விடுமுறை முடிந்து சாவாச்சேரிக்கு வந்து சொர்ணம் அண்ணையைச் சந்திக்தேன்,

 அப்பொழுது சொர்ணம் அண்ணை எண்ணைக் கூட்டிக்கொண்டு எங்களுடைய பயிற்சி முகாமான சாவகச்சேரியில் இருந்த சம்புத் தோட்டம் கொண்டுபோனார், அங்கே சென்று கரும்புலிக்கு விருப்பமானவர்கள் கையையுத்துங்கோ என்றார் கூடியிருந்த 200 பேரில் சுமார் 190 பேரளவில் கையை உயிர்த்தினார்கள் மீண்டும் கையை விடுங்கோ என்று சொல்லி விருப்பமானவர்கள் உடனே கையை உயிர்த்துங்கோ என கட்டளை வழங்கினார், பின்னர் அதில் இருந்து எல்லோரும் கையை உயர்த்தி னார்கள், அடுத்து என்னையும் சேர்த்து  6ஆறு போராளிகள் அந்நடவடிக்கைக்காகத் தேர்ந்து எடுத்தார் தளபதி சொர்ணம் அண்ணை பின்னர் அதற்கான மாதிரிப்பயிற்சியை எடுப்பபதற்காக வடமராச்சியில் இருந்த யப்பான் முகாமிற்குச் சென்றோம்,

மீண்டும் சொர்ணம் அண்ணை என்னைஏற்றிக்கொண்டு போய் தலைவரைச் சந்தித்தேன் சிரித்த முகத்தோடு காணப்பட்ட தலைவர் மீண்டும் எனக்கு சில புத்திமதிகளைச் சொன்னார்.மாதிரிப் பயிற்சியை எடுக்குமாறும் பின்னர்தான் வந்து சந்திப்பேன் என்று சொல்லித்தலைவர் என்னை வளி அனுப்பினார்.    



அடுத்து எங்களிற்கு பயிற்சி ஆரம்பம் ஆனது தொடர்ச்சியாக எங்களின் பயிற்சியை தலைவர் வந்து பார்வையிடுவார் அது வடமராச்சியில் யப்பான் பயிற்சி முகாமில் நடந்தது, அது ஆறு மாதங்கள்நடந்தது


 பயிற்சி முடிந்துஎங்கள்09பேரையும் வடமராச்சியப்பான் முகாமில் இருந்து சொர்ணம்மற்றும் செல்வராசா, வானு இவர்கள் இரண்டு வாகனங்ளில் 31/07/1994 எங்களை ஏற்றிக்கொண்டு மாதகல் கடல்கரையில் விட்டார்கள்அப்பொழுதுஒரு உறுப்பினருக்கு 2 லோ ஒரு றையுள் 1000, வை அனைவருக்கும் தரப்பட்டது.

 கெனடி ஒரு டொங்கான் மற்றும் னைட்விசன் சினைப்பர் வைத்துயிருந்தார்,அங்கு இருந்து கடலால் நீந்தி நாங்கள் மாவட்ட புரம் இராணுவப்பகுதிக்குச் சென்று விடோம், அங்கே எமது மக்களின் பாழடைந்த வீடுகள் நிறையக் காணப்பட்டது,அதனால் அன்று இரவு அங்கே தங்கினோம். மீண்டும்01/08/1994 இரவு நகரத் தொடங்கினோம்பாளடைந்தவீடுகளில் மறைந்து மறைந்து ஓய்வு எடுத்து எடுத்து நடக்கத் தொடங்கினோம் பகல் ஆனதும் வீடுகளில் தங்குவோம் இரவானதும் நடக்கத் தொடங்குவோம் பலாலியை அண்மித்ததும் ஒரு வீட்டிற்குச் சென்று உடுப்புக்களை மாற்றி சண்டைக்கு உரியவாறு தயார் அனோம்,


பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது.   நாங்கள்  வந்துகொண்டுயிருக்கும்போதுஒரு இராணுவ  வவள்வாகனம் ஒன்று றோட்டால் வந்துஇடையில் நின்றது நாங்கள் அனைவரும் நிலத்தில் படுத்து எங்களை மறைத்துக்கொண்டோம் அரை மணித்தியாலத்தால் இராணுவம் வாகனம் அவ்விடத்தில் இருந்து சென்றது.


 பின்னர் காங்கேசன்துறை றோட்டை கடக்கும்போது ஆமி எங்களை கண்டு விட்டான் எங்களிற்கும் ஆமிக்கும் ஒரு சண்டை ஏற்பட்டது அதில் எங்களிற்கு சேதம் ஏற்படவில்லை ஆனால் அணி இரண்டாகப் பிரிந்து விட்டது ஒரு வளிகாட்டியோடு கெனடியோடு ஐந்து பேரும் புலிகுட்டியோடு மூன்று பேரும்மாக அணி இரண்டாகப்பிரிந்துவிட்டது,பின்னர் பின்னர் நாங்கள் ஐந்து பேரும் நகர்ந்து விமான ஒடுபாதைக்கு அருகாமையில் சென்றோம் அதில் மின்சார வேலி ஒன்று இருந்ததுஆனால் பதட்டம் அடைந்த இராணுவம் உலங்குனூர்தியை திடீரேன மேலே எழும்பி பின்னர் கீழே இறங்கியது.  


அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் இருந்த மின்சார வேலிக்குக் கீழால் பகுந்து உள்ளே சென்றோம்அங்கே சென்றதும் அப்பொழுது நேரம்12.30 மணிஎங்களோடு வந்த வளிகாட்டியான அசோக் என்பவரை போகுமாறும் நாங்கள் சண்டையை ஆரம்பிக்கப்போகின்றோம் என அவரிடம் சொல்லுகின்றேன் இனிப்போவது கடினம் உங்களோடு நானும் வருகின்றேன் என அவர் சொல்லிகின்றார், ஒரு மாதிரி அவரை அண்ணை கண்டிப்பாக உன்னை அனுப்பச் சொன்னவர் என சொல்லி அனுப்பினேன் அவர்ஒரு 10த்து மீற்றர் நடந்து இருப்பார் எங்கையோ இருந்து ஒப்பிக்காரன் சுட்டான் அவர் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார்,




பின்னர் நாங்கள் நாலு பேரும் உள்ளே சென்றோம்,அதற்குப் பின்னரும் இரண்டு தடைகளைத்தாண்டி உள்ளேசென்றோம், இரண்டு பொய்சனிக்கு இடையே கம்பியை வெட்டி நாங்கள் 4 பேரும் உள்ளே நுளைந்தோம் இப்பொழுது உலங்கு வானூர்தி எங்களின் கண்ணிற்குத்தெரிகின்றதுநாங்கள் நடந்து சென்றோம் நெற்வேலி ஒன்று இருந்தது அதையும்வெட்டி உள்ளே நுழைந்தோம், இப்பொழுது02/08/1994 இரவு 2. மணி-இருக்கும் உலங்குவானூர்தியில் இருந்து நாங்கள் 50 மீற்றறில் நிக்கின்றோம் அதன் பாதுகாப்பிற்காக ஒரு சென்றி நிக்கின்றது, அவரை நைட்விசன் சினைப்பறால் சுட்டு வீழ்தினோம், அடுத்து உலங்கு வானூர்திக்கு உள்ளே சென்று அதை இயக்கிப் பார்த்தோம் அது நிலத்தில் வைத்துப்பூட்டப்பட்டுயிருந்தது, அடுத்து கெலியில் இருந்து 50 மீற்றர் பின்னால் வந்து அதைக்குறிபார்த்து மேஜர்ஜெயம் லோவால் அடித்தார்ஆனால் அது எரியவில்லை


                                 ,

பின்னர் கிட்டப்போய் அதை லைட்டறால் எரித்தோம் அது எரிகின்றது,அடுத்து அதைப்பாதுகாற்காக வவுசர் வாகனம் ஒன்று வருகின்றது அதையும் லோவால் அடித்தோம்அதுகும் எரிந்தது, பின்னர் அடுத்த வவுசர் வந்தது அதற்கும் அடித்தோம் அதுகும் எரிந்துகொண்டுயிருக்கின்றது பின்னர் 50 கலிபர் பூட்டிய மொட்ட ஜீப் ஒன்று வந்தது அதற்கும் அடித்தோம்,அதில் வந்த ஐந்து இராணுவம் இறங்கி ஒட வெளிக்கிட்டர்கள் அவர்களையும் சுட்டு விழ்த்தினோம்,அடுத்து உள்ளே இருந்த ரக்கை பின்னால எடுத்து வெளியே ஓட எடுத்தான் அதையும்லோவால் அடித்தோம், அதுகும் எரிந்தது இப்பொழுது ஒரு லோ மட்டும் எமது கையில் உள்ளது,

அடுத்து பெரிய வீடு ஒன்றுக்குள் பழுது அடைந்த விமானம் ஒன்று நின்றது அதையும் எரித்தோம்,இந்த நடப்புக்கை முடிந்தவுடன் வெளியில் இருந்து இராணுவம் சுட்டுக்கொண்டுவந்தது அதில்மேஜர்திலகன் விரச்சாவு அடைந்தார்.

                    

                   

அடுத்து ஜெனரேட்டர் வேலை செய்துகொண்டுயிந்தமையால் அதையும் டொங்கான் அடித்து நிறுத்தினேன்,வேறு ஒரு இடத்தில் இருந்து ஜெனனேட்டர்வேலை செய்தது கடசியாகயிந்தலோவை ஜெயம் அடித்தான், ஆனால் அது நிக்கவில்லை வேலை செய்து கொண்டே இருந்தது,இராணுவம் சுற்றி நின்று கைக்குண்டுகள் எங்களை நோக்கிஎறிந்துகொண்டுயிருந்தது, அக்குண்டுபட்டு மேஜர் ஜெயம் வீரச்சாவு அடைந்தார்,இப்பொழுது நானும் நவரெட்ணமும் இருக்கின்றோம்அப்பொழுது நாங்கள் ஒரு பெரிய விட்டிற்குள்ஓடிப்போய் நுளைந்து விட்டோம்.


                    



அங்கே ஆமி ஒருதரையும்காணவவில்லை இரண்டு வெற் இருந்தது அதற்கு மேலே நுளம்பு வலை கட்டப்பட்டு இருந்தது மேசை ஒன்று கிடந்தது அதில் ஒரு மிஸ்ட்டலும் தண்ணீர் போத்தலும் இருந்தது,இப்பொழுது விடிந்துகொண்டுவருகின்றது நாங்கள் இதிற்குள்ளே இருப்போம் இராணுவம் வர வர சுட்டுக்கொண்டே இருப்போம் இரவானதும் தப்பிப்போவோம் எனஇருவரும்முடிவு எடுக்கின்றோம்.

 எடுக்கின்றோம்,இப்பொழுது நேரம் 4 மணி நான் ஒரு கொமாண்ட்கொடுக்கின்றேன் டெய் நீ பத்துப் பேரைக்கொண்டு அங்கால அடி நீ பத்துப் பேரைக்கொண்டு எங்களை வந்து சந்தி என கொடுத்தேன் இராணுவம் அமைதியாகயிருந்தது,நவரெட்ணம் பசிக்குது என்று சொல்ல எனது பைக்கேட்டில் இருந்து குழுக்கோஸ் மற்றும் விஸ் கேட்டையும் எடுத்து அவனிக்குக்கொடுக்கின்றேன் அடுத்து அவனும் நானும் சாப்பிட்டு தண்னிரும் குடிக்கின்றோம்,

அப்பொழுது நாங்கள் இருந்த வெற் உயந்து பதிந்தது, எனக்கு சந்தேகம் வந்து விட்டது நான் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வெளியே பாந்தேன், திடீரென இரண்டு குண்டை களட்டி உள்ளே போட்டு விட்டு ஒருஆமி வெளியே பாந்தான் அதில் இருந்து நான் தப்பிக் கொண்டேன் நவரெட்ணம் கடுமையாகக் காயப்பட்டுவிட்டான்,சிறிதி  தூரம் அவனைக்கொண்டு போனேன் அவன் குப்பி கடித்து விட்டான் நான் மட்டும் தனித்தேன் விடிந்துகொண்டுவர கடல் கரையை நோக்கி வேகமாக ஓடினேன் என்னை மின்சாரம் தாக்கியது, அடுத்து நான் குப்பி கடித்தேன் பின் ஆறு நாட்கள் எனக்கு உணர்பு இல்லை, என அவர் குறிப்பட்டார்,

                                                         

                                                        

  ரீம் பிரிந்தது என முன்னர் குறிப்பிட்டேன் அதில் புலிக்குட்டியோடு சென்ற இரு போராளிகள் ஆன கப்டன் திரு-லெப் ரங்கன்இருவரும் வீரச்சாவு அடைந்தார்கள்இதில் புலிகுட்டி ஒருவளி காட்டியும் தப்பிச்சென்றார்கள்,



19/09/1994 கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி


BT-Lt-Col-Nalayini

பெண் போராரிகளின் வீர வரலாற்றை மீண்டும் ஒரு தடவை சிந்திக்க வைத்தவள் நளாயினி ஒரு சிறந்த பெண் தலைவியாக இருந்தது மட்டும் அல்லாமல் அவள் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட, அப் பேச்சு திறமையூடாக பல இளம் பெண்களை போராட்டத்தில் இணைத்தவள் நளாயினி பல சண்டைகளிற்குப் போய் விழுப்புண் அடைந்தவள், நாளாயினி அவள் அவள் நினைத்து இருந்தால் தனது முதுமையையும் தனது காயத்தையும்காட்டி போராட்டமரபுக்கு ஏற்ப திருமணம் செய்து ஒரு அம்மாவாக வாழ்ந்து இருக்கலாம், ஆனால் தான் முன்மாதிரியாக சாதித்துக் காட்டினால்  தான் அணைத்த போராளிகளும் தன்னை பின்தொடர்ந்து வீரவரலாறு படைத்துப் பெண்களிற்குப் பெருமை சேர்ப்பார்கள்,

 என்பதில் அசையாத நம்பிக்கை உடையவள் நளாயினி, அவள் மிகவும் இரக்கம் உடையவள்

காவலரண் தொகுதி ஒன்றைத் தாக்கும் அணிக்குப் பொறுப்பாகச் சென்று வெடிபட்டு மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடந்ததாள் லெப் கேணல்பாமா அதைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதினாள்  நளாயினி அப்படி இருக்கும் வேளையில்தான்  பாமா எங்களைவிட்டும் எட்டாததூரத்திர்க்குப் போய்விட்டாள்.ஒரு மிதிவண்டிதானும் இல்லாமலிருந்த ஆரம்ப நாட்களில் , மங்கையும் அவளும் ஒழுங்க்கைக்கு ஒழுங்கை நடையாய் நடந்தார்கள்.


BT-Maj Mangai

வீதிவீதியாகத் திரிந்து , வீடுவீடாகக் கருத்துச் சொல்லி , புதிது புதிதாகப் பிள்ளைகளைச் சேர்த்து , கடற்புலிகள் மகளிர் அணியை உறுதியான ஒரு அத்திவாரத்தின் மீது அவர்கள் கட்டியெழுப்பினார்கள்.” ஆண்போராளிகள் துணையின்றி கடலில் நாங்கள் தனித்து சண்டை பிடிக்க வேன்றும் ”

தங்களது கனவுகளையெல்லாம் நனவாக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச் நஞ்சமல்ல. என்ன வருத்தம் என்றாலும்நளாயினி கடலுக்கு வராமல் ஒரு நாளும் விடாள்.பகலெல்லாம் எமக்கு பயிற்சி தந்து ஓயாமல் இயங்குகின்ற அவர்கள் , இரவான பின்னர்தான் எம்மை ஓய்வாக உறங்கவிட்டு தமக்காகப் பயிற்சி எடுக்கக் கடலுக்குப் போவார்கள். ஆனால் அது அவர்களின் கடசிப் பயணத்திற்கான பயிற்சி என்பதுஎமக்குத் தெரியாது,


வல்வெட்டித்துறையில் ஆறுமுகசாமி யாவின் 8 செல்வங்களில் இவள் 6வது குழந்தை.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தபோது பெரிய வசதிகளைத் தூக்கி எரிந்துவிட்டுத்தான் அவள் புறப்பட்டாள்.கரும்புலியாக போவதற்கு அனுமதி கிடைத்தபின் கடசியாக தனது தாயையும் சகோதரர்களையும்பார்க்க விடுமுறையில் வீட்டிற்குச் சென்றாளாம்

வீட்டுக்குப் போயிருந்த ஒரு பொர்ணமி நாளில் முற்றத்தில் அம்மாவின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த பிள்ளையை ஆசையோடு வருடிவிட்ட அன்னையிடம்…

அக்காவுக்குப் பத்து இலட்சம் கொடுத்து கலியாணம் செய்து வைத்தீர்கள் அம்மா , எனக்கு ஐந்து இலட்சம் thaangko இயக்கத்திற்கு கொடுக்க என்றாளாம்.இறுதி சந்திப்பில் கூட அப்பணத்தை வேண்டி இயக்க வழர்ச்சிக்குக்கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதை  நினைத்த பெண் போராளி என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்,


 தொலைத்தொடர்பு சாதனம் ” ஒலித்தது.


இலக்கு தெரியுது.


நல்லா கிட்ட வந்திட்டம்…


இடிக்கிறம்…. இது தான் அவளின் கடசிக்குரல்குக் கேட்டது

BT-Capt-Laxman


கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.


தச்சன்காட்டில், பலாலிப் பெருந்தளத்தின் ஒரு பகுதிக் காவல் வியூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதல்.


கை எலும்புகளையும் நொறுக்கி, வாய்ப் பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன துப்பாக்கிச் சன்னங்கள்.


ஒரு தண்டு இல்லாமல்போய், ஒரு பக்கமாய் இழுபட்டு, நெளிந்துபோயிருந்த வாயால் அவன் பேசும்போது, பார்க்கா அழகாய்த்தான் இருக்கும்.


அது மழலைக் குரல்.


பண்டத்தரிப்புக்குப் பகைவன் நகர்ந்த சண்டையில் காலை இழந்தவன், ‘பலவேகய – 02′ சண்டை துவங்கியபோது பொய்க்கால் பொருத்திக்கொண்டு ஆனையிறவுக்கு ஓடினான்.


இயக்கச்சியில் வைத்து, அடிக்காத குறையாய் துரத்திக் கலைத்த தளபதியோடு சண்டை பிடித்துக்கொண்டுதான் அவன் திரும்பி வந்தான்.


‘மணியந்தோட்டம் – 02′ பயிற்சி முகாம், நான்காண்டுகளுக்கு முன்னர் லக்ஸ்மனை போரிற்குத் தயாராக்கியது.


யாழ்ப்பாணக் கோட்டைதான் அந்த வீரனின் முதற்களம்.


மாங்குளம், சிலாபத்துறை, ஆனையிறவு, மணலாறு, காரைநகர், பலாலி; பகைவன் கூடாரமடித்த இடங்களிலெல்லாம் அந்த வீரன் போர்தொடுத்தான்.


குடிமகனொருவன் தன் தாய்மண்ணுக்குகாகச் செய்யக்கூடிய அதியுயர் தியாகத்தைத் தான் செய்யவேண்டுமென்ற வேட்கையை, சுவாசப்  பகல் சுமந்துகொண்டு திரிந்தான் அந்தக் கரும்புலி.


அந்த சர்ந்தப்பத்திற்காக அவன் கடல்மடியில் தவம் கிடந்த நாட்கள் ஏராளம்.


சதுரங்கப் பலகையில், தனது சேனையை மதிநுட்பத்தோடு வழிநடாத்தி, எதிராளிகளின் அரசர்களை முற்றுகையிட்டு, முறியடித்து வீழ்த்துகிற அந்த சதுரங்க வீரன்.


கற்பிட்டிக் கடலில், ஒரு கரும்புலியாய் எதிரியின் “கடல் அரசனைத்” தகர்த்து மூழ்கடித்தான்.


‘ஆசீர்’ கடற்பயிற்சிப் பாசறையில் தளபதி சாள்ஸ் வனைந்தெடுத்த கடற்புலி வீரர்களுள், லக்ஸ்மனும் ஒருவன்.


கிளாலிக் கடற்தளத்தில் அந்த வீரத் தளபதி வீழ்ந்தபோது, அவனது கைகளில் வளர்ந்த இந்தக் கரும்புலிக் குழந்தைகள் வெகுண்டெழுந்தார்கள்.


சுட்டெரித்துச் சாம்பராக்க எங்கள் கடலெங்கும் பகைவனைத் தேடியலைந்தார்கள்.


பருத்தித்துறையில் ‘சுப்பர் டோறா’ வைத் தகர்த்தபோதும், இதயத்தில் விழுந்த அந்த ஆழமான காயம் ஆறவேயில்லை.


அந்தத் தளபதியின் நினைவோடு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயின்று வெளியேறிய மாணவர்கள்தான்.


சிலாபத்துறையில், பகைவனின் மடியில் நெருப்பு மூட்டினார்கள்;


‘சாகரவர்த்தனா’ வைச் சாகடித்துச் சாதனை படைத்தார்கள்.


லக்ஸ்மன் இயல்பாகவே கெட்டிக்காரன். விஷயம் தெரிந்தவன்.


அநேகமாக, பொதுவான எல்லா விடயங்களைப் பற்றியும் அவனது மூளைக்குள் பதிவுகள் இருந்தன.


முகாமிற்குப் பொருள்கள் ஏற்றிவரும் உழவுப்பொறி ஐயாவைப் பார்த்து, “நடுப்பெரிய சில்லு ரெண்டுக்கும் எத்தினை கிலோ காத்து?” என்பான்.


ஐயா தலைசொறிந்து நிற்க, “பெரிய சில்லுகள்தானே, எப்படியும் 150, 200 கிலோவரும்” என நாங்கள் நினைக்க….


“40 கிலோதானய்யா……….. கணக்கா இல்ல” மேதாவியாய் பதில் சொல்லுவான்.


பள்ளிக்கூட மைதானத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் பையன்களைக் கைதட்டிக் கூப்பிட்டு,


“கிரிக்கற் பந்து எவ்வளவு நிறை இருக்க வேண்டும்?” என்பான்.


பதில் தெரியாமல் முழித்து, அப்பாவித்தனமாய்ச் சிரிக்கும் பையன்களைப் பார்த்து “110 கிராம் தம்பி” சொல்லிவிட்டு வருவான்.


அவனைப் பெரிய அறிவாளி என்று சொல்வதற்கில்லை: ஆனால், எவரோடும் எதைப்பற்றியும் கதைக்கக்கூடிய அளவுக்கு அவன் இருந்தான்.


அது அவனது சிறப்பு இயல்புகளில் ஒன்று. வீட்டுக்கு வெளியில், நாட்டுக்கு வெளியில், பூமிக்கு வெளியில், எங்கள் ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியில், எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் வெளியில் மானிடன் கண்டுபிடித்த எல்லாவற்றையும் பற்றித் தானும் அறிந்திருக்க வேண்டும் என்ற முனைப்பும் முயற்சியும் கொண்டவன் லக்ஸ்மன்.


அந்த ஆர்வத்தினால்.


எல்லாவற்றையும் பற்றித் துருவித் துருவி ஆராய்வான்.


‘றாடர்’ படிப்பிக்க வந்தவர் குழம்பியே போனார். அவன் குடைந்த குடையலுக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு,


“பிரண்டவன்”


‘பிரணவன்’ என்ற அவனது இயற்பெயரை நாங்கள் தான் இப்படி மாற்றினோம்!


பிறந்தது 05.07.1974இல்.


ஊர் நல்லூர்; சங்கிலி மன்னனின் பழைய இராசதானி.


படித்தது யாழ்ப்பாணம் ‘ஸ்ரான்லி கல்லூரி’யில் கிரிக்கற் பைத்தியம்.


வீட்டில் துடுப்போடும் பந்தோடும்தான் படுக்கைக்குப் போவானாம்.


லக்ஸ்மனுக்கு தச்சன்காட்டுச் சண்டையில் வெடிபட்டு, ஒரு கையில் இயக்கம் இல்லாமல் போய்விட்டது.


பண்டத்தரிப்பில் மிதிவெடி வெடித்து ஒரு காலில் பாதம் சிதைந்துபோய்வ்ட்டது.


இருந்தபோதும், கடலில் இறங்கி, தோழர்களின் தோள்களைப் பற்றி மெல்ல மெல்ல நீந்தப் பழகியவன், கொஞ்சகாலத்திற்குப் பிறகு, தன்னந்தனியாக நீந்திக் கடந்த தூரம் 5 கடல் மைல்கள்


லக்ஸ்மன் நல்லதொரு படகோட்டி. நீண்டகால அனுபவம் பெற்றிருந்தவர்களை விடவும் குறுகிய காலத்திற்குள் அவன் பெற்றிருந்த திறமை, எங்களை ஆச்சரியப்பட வைத்தது. கடற்புலிகளின் சிறந்த படகோட்டிகளுள் ஒருவனென அவனைச் சொல்ல முடியும். இறுதியில் அவனும் தன்னை தாய் நாட்டிற்கு அற்பணித்தான்,

BT-Maj Mangai, Nalayini leader




கோயில் போரதீவு கிராமத்திவு மட்டக்களப்பு


கந்தசாமி; அம்மா யோகம்மா இவர்களின் புதல்வன் தான் வாமன், இந்திய இராணுவ உள்வரவின்போதுதான், அவர்களின் கெடுபிடியால்தான் வாமன் இயக்கத்திற்கு வர நேர்ந்தது இல்லையெனில் அந்த ஏளைவிவசாய்யின் குடும்பத்தில் அவனும் ஒருதனாக உளைத்து ஓரு சிறந்த விவசாகியாக வந்துயிருப்பான், ஆனால் அப்படி வருவதற்கு இந்திய இராணுவம் அவனை விடவில்லை.


,இந்திய நெருக்கடி; அடிவருடிகளின் அனர்த்தங்கள்: நிம்மதி இழந்துபோன வாழ்வு. அதனால் அவன் போராட்டத்தில் இணைந்தான் பயிற்சி முடிந்து,ரி. 56 அவனுக்கு வழங்கப்பட்டு ஒரு விடுதலைப் போராளியாக அவன்வெளியே வந்தான்,


மண்டூர் அவனது முதற்களம். இரும்புப் பாலத்தடியில் ஒரு பதுங்கித் தாக்குதல். இலக்கு, இந்திய வல்லரசின் ஒரு தரைப்படை ரோந்து அணி.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த சேனாதிபதிகளில் ஒருவரும், தென் பிராந்தியத் துணைத் தளபதியுமான லெப்ரினன் கேணல் றீகன், களத்தில் நின்று வழிநடாத்திய அதிரடிதாக்குதலில்.


நடு வீதியில், 30 இந்தியச் சிப்பாய்கள் பிணங்களாய்ச் சுருண்டார்கள். இதுதான் இவனின் முதலாவதுதாக்குதல் அனுபவம், அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் 1989 கடசியப்பகுதியில் கால்நடையாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான்,

 தளபதி சொர்ணம் அவர்களின்1.4 ரீமில் ஒரு போராளியாகயிருந்தான் கிறிது காலம் அவனின் திறமையைக்கண்ட தளபதி சொர்ணம் அண்ணை அவனை தலைவரின் பாதுகாப்பு அணியில் இணைத்தார் அவனுக்கு மிகவும் பொறுமதியான ஆயுதம் ஆன வாகன எதிர்ப்பு ஆயுதம் லோ வழங்கப்பட்டது,

BT-Capt-Vaman


அப்பொழுது நாங்கள் ஒரு ஒன்றுகூடலிக்காக தலைவரோடு பழை எழுதுமட்டுவாழுக்குச்சென்றோம், அப்பொழுது சில குறிப்பிட்ட போராளிகளைக் கூப்பிட்டு தலைவர் ராக்கேட்டை நோக்கிச் சுடுமாறு கட்டளை வழங்கினார், முதலாவது டெல்சனைக்கூப்பிட்டு மினி மினியால் சுடுமாறு கட்டளை வழங்கினார்.

 நூறு மீற்றறில் இரண்டு 7-7 பிடித்தது நீர் ஆமியைக் கொல்லவில்லை ஆனால் காயப்படுத்தி விட்டாய் என சொல்லி அவரை அனுப்பினார் ,,அடுத்து தலைவர் வாமனைக்கூப்பிட்டார் வாமன் 200 மீற்றறில் இருந்து வேகமாக ஓடி தலைவரிடம் வந்தான் ௹று மீற்றர் தூரத்தில் இருந்து ஒரு பளைய வாகணத்திற்கு லோவால் அடிக்குமாறு தலைவர்கட்டளை வழங்கினார் வாமன் குறி தவறாமல்லோவால் அடித்தான் வாகனம் பத்தி எரிந்தது தலைவர் சிரித்தார் வாமனிடம் போய் தோழில் தட்டி நீர் ஒரு கிறோ என சொல்லி அனுப்பினார்,

Sakaravarththganaa ship


இப்படிதவைரோடு வாமன் இருந்த வேளை வாமனுக்கு ஒரு எலும்பு உரிக்கி நோய் வந்தது, அது கைகால் மடிக்கும் வேளையில் மடக் மடக் என சத்தம் கேட்கும் அதை யாழ்பாணத்தில் இருந்த குகதாஸ் டோட்டர்தொட்டு அனைவரிடமும் காட்டப்பட்டது, ஆனால் அது சுகப்படுத்தமுடியாதவருத்தமாகவே இருந்தது, அதனால் மனம் உடைந்த வாமன் கரும்புலியாகப் போவதற்கு பல முறை தலைவரிக்குக்கடிதம் எழுதினான், அதற்கு தலைவர் அனுமதி வழங்கவில்லை,


 அடுத்து தனது கோப்பாய்யில் உள்ள தாய்மாமனின் வீட்டிற்கு விடுமுறையில் செல்வதற்கு  சொர்னம் அண்ணையிடம் அனுமதி கேட்டான், அதற்கு அவர் என்னைக்கூட்டிக்கொண்டுபோகுமாறு கட்டளை வளங்கினார், நான் கூட்டிக்கொண்டு போனேன், அந்த ஊர்சனம் அவரிக்கு மட்டக்களப்பார் என பேர் வைத்துயிருந்தார்கள். எனவே மட்டக்களப்பாரின் வீடு எங்கே என எல்லோரிடமும்கேட்டு அங்கே இருவரும்சென்றோம் .


வாமன் அங்கே சென்றதும் தனது மாமனாரைக் கட்டி அனைத்து தனக்கு வருத்தம் வந்து விட்டது என சொல்லி அழுதினான் மாமனாரும் அவனுக்கு ஆறுதல் சொன்னார், அவர்கள் மலைப்பாறைகளைத்தோண்டி வாழைத்தோட்டம் செய்து இருந்தார்கள் அதை நாங்கள் இருவரும் சுற்றிப்பார்வையிட்டோம், அடுத்து அன்று பகல் எகளிற்குச்சாப்பாடுதந்தார்கள் நாங்கள் சாப்பிட்டோம்,, பிற்பகல் எங்களின் ரெட்டி முகாமிற்குச் சென்றோம்,

அடுத்து சாவகச்சேரியில் உள்ள எமது படையணி மருத்துவமனைக்கு வாமன் சென்றான் அங்கே கிச்சைக்காக பல மாதம் நின்றான், அவ்வேளை எனக்கு பல் வருத்தம் வந்து அங்கே நானும் சென்று இருந்தேன் அப்பொழுது வாமன் ஓடிவந்து எனது காலில் விழுந்து அழுதிரைனான், ஏன் என கேட்டேன் நீர் சொன்னால் தலைவர் கரும்புலியாக என்னை அனுப்புவார் என்றான், அது எப்படி நடக்கும் என்று கேட்டேன் அதற்கு அவன் தலைவர் என்னை நம்பவில்லை இப்பொழுதும் கரும்புலிக்கு ஆட்கள் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.


 அதனால் பலயீனமான வாமனிக்கு பலமான நானும் அவனோடு கரும்புலியாகச் சென்று இருவரும் அக்கடமையை செய்து முடிப்போம் என கடிதம் எழுதி தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றான், நானும் அவனின் கவலையைப் பார்த்து பரிதாபப்பட்டேன், பின் அவனே சென்று அவசரமாகக் கடிதம் ஒன்று எழுதி என்னை சையன் வைக்குமாறு சொன்னான் நானும் வைத்தேன் அக்கடிதம் சொர்ணம் அண்ணையூடாக தலைவருக்குச்சென்றது, ஒரு நாள் சொர்ணம் அண்ணை என்னைக் கூப்பிட்டார், உன்னை கரும்புக்கு அனுப்ப ஏலாதாம் கால் கை இல்லாமல் போனால் சந்தர்ப்பம் தரலாமாம் ஆனால் வாமனை அனுப்பலாம் என்று தலைவர் சொன்னதாக சொர்ணம் அண்ணை என்னிடம் சொன்னார், சரி என்று கேட்டேன். ஒரு மாதம் களித்து வாமன் என்னை வெளியில் இருந்து போன் எடுத்தான் என்ன வாமன் சுகமாய் இருக்கின்றாயா? என்று கேட்டேன், நான் உரிய இடத்திற்கு வந்து விட்டேன் அண்ணை என்னை சந்தித்தவர் நான் அவரோடு கதைத்து அவரோடு சாப்பட்டனான், அப்பொழுது அவருக்கு இறுதிப் பரிசாக ஒரு T. சேட்டும் வேண்டிக் கொடுத்தேன்.




 அடுத்து 4 வசனம் எழுதி சுகித்தம்மாவின் வீட்டிற்கு அனுப்பியுள்ளேன், அதையும் வேண்டி எடு நிலையாக படைத்தவனிடம் செல்கின்றேன் இனிமேல் நான் உன்னைச் சந்திக்க மாட்டேன் இது கடசிக் கடிதம் என நினைத்துக்கொள் எமது வளி காட்டியை கவனமாகப்பாதுகாத்துக்கொள் எனது கடசிச் செய்தி கேட்டதும் என்னைப் பற்றி எழுதி மக்களிற்குத் தெரியப்படுத்து இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கிய உமக்கு எனது நன்றிகள் என வாமன் என்னிடம் நேரடியாக தெரியப்படுத்தினான் இதுதான் அவரின் கடசிக்கதை, ஒரு கரும்புலி மரவனின் உணர்வு எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்,

,19/09/1994அன்று வாமன் லக்ஸ்மன் ஒரு பக்கமும் மங்கை, நாளாயிணி மறுபக்கமும் கரும்புலியாகச் சென்று சாகரவர்த்தனா  போர்கப்பல்  மீது மோதினார்கள் ஒரு பக்கமாய்ச் சரிந்து மூழ்கிக் கொண்டிருந்த கப்பலின் மீது , தாவிப் பாய்ந்தனர் கடற்புலிகள்.

மூர்க்கத்தனமான தாக்குதல்….

துப்பாக்கிகளின் முரட்டுத்தனமான உறுமல்.. !

” பொங்கு தமிழுக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு ”
செய்யுள் ஆக்கியவர் பாரதிதாசன்.
செய்து காட்டியவர் பிரபாகரன்.

கடலுக்குள் குதித்துக் கைகளைத் தூக்கியோரை , கப்பலில் எடுத்த ” 50 கலிபர்களோடு ” கரைக்குக் கொண்டுவந்தனர் கடற்புலிகள்.

ஒருவர் கப்பலின் தளபதி – அடுத்தவர் கப்பலின் துணைத் தளபதி.

போர்க்கைதியாய் உள்ள கொமாண்டர் சொன்னார்…..

எனது 20 வருட படியில் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத நிகழ்வு , என் கண்களால் பார்த்த இந்தத் தற்கொடைத் தாக்குதல்தான்.

தேசியத்தலைவர் கூறினார்….

சிறீலங்கா கடற்படியின் ஒரு காப்பர் தளபதியை , தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெறியைப் பெற உயிர் துறந்தாள்.

1994 . 09 . 19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தவிதப் பிசகுமே இல்லாமல் செய்து பார்த்த பயிற்சிகளில் எந்த தவறுமே நேராமல் நளாயினியும் – மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் – லக்ஸ்மனும் மோதியதில் ” சாகரவர்த்தனா “ மூழ்கத் தொடங்கியது.



இதனால் எத்தனை உயிர்கள் மகிழ்கிச் அடைந்தது என்பதைப்  பார்ப்போம்,22/10/2002 அன்று விடுதலை புலிகளிற்கும் அரசாங்கத்தற்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின்போது, ஓமந்தையில் வைத்து சுத்ததக் கைதிகளை பரிமாறுவது என முடிவு எடுக்கப்பட்டதற்கு அமைவாக சாகரவர்த்தனா  போர்கப்பலில் விடுதலைப் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்டன் வோயாங்கோடை  உட்பட 9 இராணுவச்சிப்பாய்களை விடுதலைப் புலிகளின் தளபதிகளான தளபதி வானு தளபதி தீபன் தமிழ்ச்செல்வன் பிரிகேடியர் சகிக்குமார் உட்பட மேலும் பல போராளிகள் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஓமந்தை சென்றார்கள்,



கைதிகள் பரிமாற்றத்திற்கு தலைமை தாங்கிய தளபதிகள்


பின்னர் தேவர் அண்ணன மூலமாக இவர் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு இவர் குற்ற வாழி இல்லையென நிறுபிக்கப்பட்டு தலைவரின் அனுமதியுடன் விடுதலை செய்யப்பட்டு அவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார், மிக்க மகிழ்ச்சியோடு அவர் தமிழீழத்தில் இருந்து விடை பெற்றார்,இவர் தான் கப்டன் அஜித் வோயாங்கொடை,இவர் உட்பட 9 இராணுவச்சிப்பாய்களை விடுதலைப் புலிகள் வடபிராந்திய இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்தார்கள்,


                                           (இவர்தான் கெனடி)
கரும்புலி மேஜர் கெனடி உட்பட 07 எல்லைப்படையினனை வடபிராந்திய தளபதி மற்றும் சட்டமா அதிபர் அவர்களைக்கொண்டுவந்து விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தார்கள், 

26/03/2005 தமிழீழ தேசிய தொலைக்காட்சி உருவாக்கம்



 


2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும்.

தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பான இந்த தொலைக்காட்சி சேவையை. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 
கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம்.


போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,அக்கால சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே எம் தரப்பு உண்மைகளை சொல்லும் என உருவாக்கப்பட்டது.

ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை எத்துணை உண்மையாக இருந்தாலும் அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.


 
. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.



ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்”புலிகளின் குரல்” வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி பின்பு வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.

அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து “தேதுன்ன” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.





 
1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் “நிதர்சனம்”என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய ஆக்கிரமிப்பு படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



பல தடைகளை வென்று போராட்டத்தோடு ஊடக போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னகர்த்திய பெருமை தமிழீழ விடுதலை புலிகளுக்கே உரித்தானது.

இன்று ஈழ மண்ணில் எங்கள் ஆயுத போராட்டமும் ஊடக சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கலாம். இணையதளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் ஊடகவியலாளனாக மாறி இருக்கும் எழுச்சியும் உலகெங்கும் தமிழ் ஊடகங்கள் பல்கி வருகின்ற பேராற்றலும் எங்கள் தாய் மண்ணின் ஊடக எழுச்சி விதைத்த விதைப்புகளில் இருந்து முளைத்தவையே என்றால் மிகை இல்லை.


 
களத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போல் இன்று எழுத்தோடு ஆயுதம் ஏந்தும் போராளிகளால் எங்கள் போராட்டம் முன்னகர்ந்தே செல்கிறது!



 19,/04 / 1995 அபுறோ விமானம்

சிங்கள அரசியின் சார்பாக 1995ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், சந்திரிகா குமாரணதூங்கா, தான் ஒரு பெண்மணி எனவும் வட கிழக்கப் பெண்களின் துன்ப துயரங்களை தான் அறிவேன் எனவும், அவர்களின் பிரச்சனையை இலகுவாகத் தீர்ப்பேன் என பாரிய பிரச்சரங்களில் ஈடுபட்டார், 

அதனால் நம்பிய தமிழர்கள் அவருக்கு பெரும் திரளான வாக்குகளை செலுத்தினார்கள்,, சிங்கள மக்களும் பெருந்தொகையான வாக்குகளை அவருக்கு போட்டார்கள், அதனால் அவர் அதிபர் தேர்தலில் வெற்றியீட்டினார்,


அதனால் மகிழ்சி அடைந்த தமிழர்கள்குழிக்கின்ற சோப்வரை அனைத்துப் பொருட்களிற்கு


ம் சந்திரிகா என பேர் வைத்தார்கள், இதனால் பாரிய எதிர்பார்ப்போடு இருந்தது தமிழீழம்,


அவரின் சுத்த நிறுத்தம் 100 நாட்கள் இருந்தது ஏனனெனில் ஆயுதங்கள் வேண்டுவதற்கும் படைகளை தயார்படுதுவதற்க்கும் அவருக்குத் தேவைப்பட்டது, விடுதலை புலிகளை பேச்சிக்கு வருமாறு சொல்லி தேவையற்ற நிபந்தனைகளை விதித்து காலத்தை இழுத்தடிப்பதிலேயே கவனம் செலுத்தினார்,


இவரின் முதல் நடவடிக்கையாக யாழ் மாவட்டத்தைப்பிடிப்பதே இவரின் திட்டமாகயிருந்தது அதற்காக கொமாண்டோ படைகளை யாழ்பாணம் நோக்கி நகர்த்திக்கொண்டுயிருந்தார், இவரின் இவ் திட்டத்தை புலநாய்வுரீதியாக விடுதலைப்புலிகள் அறிந்து கொண்டார்கள், அதனால்


மூன்றாம் ஈழப்போரை புதிய போர் ஊடாக ஆரம்பிக்க வேண்டும் என விடுதலைப்புலிகள் திட்டம் இட்டார்கள், இருந்தும் நூறு நாட்கள் பொறுமை கார்த்தார்கள், அதனால்100 நாட்கள் நீடித்ததது போர் நிறுத்த ஒப்பந்தம்,


05/03/1995 அன்று எனது அக்கா கறுப்பளை பொலநறுவையில் இருந்து என்னைப்பார்ப்பதற்கு கிழாலிஊடாக சாவகச்சேரிக்கு வந்து சேர்ந்தார், அவர் வந்து எமது இம்ரான் பாண்டியன் படையணித்தொடர்பகத்தில் நின்றார்,

இதே சாமதான காலத்தில்தான் 10/03/1995 அன்று மூத்த தளபதி சொர்ணம் அவர்கட்கும் பெண் போராளிகளில் ஒருவரான ஜெணி அவர்கட்கும் திருமணம் நடந்தது



இவர்தான் சொர்ணம் அண்ணையின் மனைவி ஜெனி



 மூத்த பயிற்சி மாஸ்ட்டர் ஆன தினேஸ் மாஸ்ட்டர் அவர்கட்கும் மூத்த பெண் போராளியான ஞானகி அவர்கட்கும் ஒரே நாள் திருமணம் செய்வதற்கான ஏற்பாடு தலைவரால் மேற்கொள்ளப்பட்டது, பத்தாம் திகதி இரவுசுண்டிக்குளியில் அமைந்து இருந்த பாண் கோட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது, அதில் பதுமன், தமிழ்செல்வன், வானு ஜெனனி அக்கா, பாலா அண்ணை அடல் தலைவர் தலைவரின் மனைவி அனைவரும் கலந்து சிறப்பாக இவ் நிகழ்வு நடைபெற்றது,




தொடர்ந்துஇருபாலையில் அமைந்து இருந்த ஜெயராஜ் மண்டபத்தில் வைத்து இருபோராளிகளின்நிகழ்விற்கு வந்த அனைவருக்கும்  நேரடியாகத் தேசியத் தலைவவரின் படையணிப்போராளிகளான உதயன் தலைமையில் துரமணி, றோவட், ஆனந்தபாலன் S.M அப்பா அவர்களால் சமைக்கப்பட்டு

உணவு இத்திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெயராஜ் முகாமில் வைத்து வழங்கப்பட்டது .


 இருநாட்கள் களித்து எமது படையணிப் பயிற்சி முகாமான சம்புத் தோட்டத்தில்தனது மனைவியான ஜெனி அவர்களையும் கூட்டிக்கொண்டு தளபதி சொர்ணம் அவர்கள் தனது படையணிப்போராளிகளோடு ஒரு சந்திப்பை நடத்தினார்,

 அதில் தான் திருமணம் செய்து விட்டேன் என்ற விடயத்தை அனைத்துப் போராளிகளிற்கும் தெரியப்படுத்தினார்தனது மனைவி வடிவா என எல்லாப் போராளிகளிடமும், கேட்டார் அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள்.
 அது ஒரு மகிழ்ச்சியான நாளாக எங்களிற்கு இருந்தது,அந்த மகிழ்சியான நாளில் கூட என்னைப் பார்த்து எலி டொக்டர் என்று பட்டம் சொல்லும் கதையை அவர்மறக்கவில்லை,

இதுசாவகச்சேரியில் உள்ள படையணிப் பயிற்சி முகாமில் நடந்தது, ஐநூறுக்கு மேற்பட்ட படையணிப்போராளிகள் அதில் கலந்து கொண்டார்கள், அனைத்துப் போராளிகள் முன் நிலையில் போராளி குமரதேவன் அவர்களின் திருமணம் தொடர்வான கவிதையை அவனே எழுதி அவனே வாசித்தான் ,


( இவர்தான் குமரதேவன்)

 19,/04 / 1995 அன்று போராக மாறியது. தமிழீழம் கடற்புலிகள் "சூரயா", "ரணசுரு" ஆகிய கடற்படையினரின் கடற்கலங்களை மூழ்கடித்தனர். மேலும், விடுதலைப் புலிகள் தோளில் வைத்து செலுத்தக்கூடிய ரஸ்சியாத்தாரிப்பான மெசள்ஸ் அதாவது புதிய ரக 7.7 விமான எதிர்ப்பு ஆயுதமாகும்,


விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இப்போரில்புதிதாக விடுதலைப் புலிகள் பாவித்தனர். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் இரு "அவ்ரோ" (AVRO) விமானங்கள் யாழ் தீபகற்பத்தின் மேலாகப் பறக்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டன.இவ் இரு விமானங்களையும் 24 மணித்தியாத்திற்குள் பிரிகேடியர் கடாபி அவர்களே சுட்டு வீழ்த்தினார்



இதுதான் அந்த விமான எதிர்ப்பு ஆயுதம்இதற்குப்பின்னர்இதில் ஒன்று நிலாவரையில் விழுந்து நொருகியது அடுத்தது கடலல் வீழ்ந்து முழ்கிப்போனது தரையில் விழுந்தது போராளிகள் பெருந்திரளான மக்கள் பார்வையிட்டார்கள், யாழ்பாணத்தைக்கைப்பற்றுவதற்காக பாரிய நடவடிக்கையை ஆரம்பித்தது சந்திரிகா ஆசாங்கம் அதனால் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய தேவை தேசியத்தலைவருக்கு ஏற்பட்டது, அதனால் தளபதி சொர்ணம் அவர்களைத் தலைவர் ஜேயோசி கட்டமைபு என ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி அதில் அனைத்து மாவட்டப் போராளிகளையும் இணைத்து அக் கட்டமைப்புக்குப்போறுப்பாக தளபதி சொர்ணம் அவர்களை தலைவர் நியமணித்தார், 


அன்றில் இருந்து தலைவரின் பாதுகாப்புப் பொறுபாளராகவும் தலைவரின் நேரடிக் கண்ணிப்பில் இயங்கும் படையணியான இம்ரான் பாண்டியன் படையணிக்கும் பிரிகேடியர் கடாபி அவர்கள் தலைவரால் நியமணிக்கப்பட்டார்1995/4 ம் மாதம் சாவகச்சேரியல் உள்ள சம்புத் தோட்டம் பயிற்ச்சி முகாமில் மாத்தையா அவர்களின் ஆட்களை போராளிகளிற்கு காட்டிக்கொண்டுயிருந்தவேளை அதாவது மாத்தையா அவர்களாடு சேர்ந்து தலைவரைக்கொலை செய்து விட்டு அத் தலைமைப்பொறுப்பை தான் எடுப்பதற்காக மாத்தையா அவர்கள் போட்ட  துரோக வலையில் சிக்கிய 95 முகாம்பொறுப்பாளர் சதிஸ்சன்01 தலைவரின்வாகன ரறைவர் சின்னமணி02 தலைவரின் மோபையில் செற்காரன் முருகன்03 மினி மினி LMG சந்தோஸ்04 படையணியைச் சேர்ந்த கெங்கா05 சுசிலன் 06 செங்கமலம்07 என மொத்தம் 12 பேரைக்கொண்டு எமது படையணிப்போராளிகள் முன் நிலையில் காட்டப்பட்டது,


 அவர்கள் விட்ட பிளைகளை போராளிகளிற்கு விளக்கப் படுத்திக்கொண்டுயிருந்தார்கள், அதில் போராளி நவா காரசாரமாக அவர்களிடம் பல கேழ்விகளைக் கேட்டான், அதற்குச் சொர்ணம் அண்ணை துரோகியாக மாறியவனிடம் எந்தக் கேழ்வி கேட்டாலும் அவனிடம் விடை இருக்காது என நவா அவர்களிடம் சொன்னார்,


இது நடந்துகொண்டு இருக்கையில்கிடும்தகவல் ஒன்று வந்தது அண்ணெஇளவரசன் அண்ணையை யாரோ சுட்டுப் பொட்டு ஓடி விட்டார்கள். என மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயது மதிக்கத்தக்க போராளி வந்து சொர்ணம் அண்ணையிடம் சொன்னான்,


இந்த முகாம் பற்றி பார்ப்போமானால் தளபதி கிட்டு அவர்கள் வரப்போகின்றார் என்ற செய்தி வந்தவுடன்  தலைவர் சாவகச்சேரிப்பகுதியில் ஒரு அழகான வீட்டை கிட்டு அண்ணைக்காக எடுத்து கப்டன் இளவரசன் தலைமையில் ஐந்து போராளிகளை அவ்விட்டைப் பாதுகாற்பதற்காக அங்கே விட்டு இருந்தார், ஆனால் பெரிய எதிர்பார்ப்போடு இருந்தபோது தளபதி கிட்டு வீரச்சாவு அடந்து விட்டார், ஆனால் அவ் முகாம் இளவரசன் தலைமையல் இயங்கிக்கொண்டுயிருந்தது, அங்கு இருந்துதான் இந்தத்துயிரமான செய்தி வந்தது,


அவன் வந்துசொன்னதும்  சொர்ணம் அண்ணை பதட்டம் அடையவில்லை. உதவிக்கு வரச்சொல்லி எவரையும் கேட்கவும் இல்லை, ஒன்று கூடலை நடத்துங்கோ என்று சொல்லி விட்டு தனியாக அந்தப் போராளியைக் கூட்டிக்கொண்டுபோய் அவரின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார்,அங்கே சொர்ணம் அண்ணைபோய் பார்த்த போது கட்டன்இளவரசன் மட்டு மாவட்டம்  என்பவர்தலையில் வெடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததாகவும், இவனிடம் கேட்டபோது சுட்டு விட்டு ஆயுதத்தையும் யாரோ எடுத்துச் சென்றதாகச்சொர்ணம்அண்ணையிடம் சொல்லியுள்ளான்.


 நீதாண்டா சுட்டனி என்று கன்னத்தை பொத்தி இரண்டு அறை போட்டாராம் சொர்ணம் அண்ணை அடி வேண்டிய பயத்தில் அவன் வாழைமரத்தடியில் இளவரசனின் றைவுளை தாட்டுவைத்துவிடு அதற்கு மேலே தண்ணீர் அள்ளி ஊத்தி இருந்தானாம், ஏன் இப்படி செய்தனி என்று கேட்க அந்தப்பாதையில் பெண்போராளிகள்  போவதாகவும் தான் அவர்களிற்கு கிண்டல் செய்ய இளவரசன் இதைக்கண்டதும் தனக்குப் தண்டனை தந்ததாகச் சொர்ணம் அண்ணையிடம் சொல்லியுள்ளான், 1995 / 4ம் மாதம் அதே சம்பபுத்தோட்டப்பயிற்சி முகாமில் மாட்டு மண்டியில் ரையர்றும் விறகுறுகளும்கொண்டு வந்து பறிக்கப்பட்டது.


 பின் சொர்ணம் அண்ணை அவனைக்கொண்டு வந்தார் அடுத்து படையணிப்போராளிகள் முன் நிலையில் அவன் செய்த தவறுகளை தெரியப்படுத்தினான், சொர்ணம் அண்ணை திருமணம் செய்த காரணத்தால் அவரைச்சுட நாவாவிடவில்லை, நாவாவே தனது கைத்துப்பாக்கியால் சுட்டு அவனுக்குச் சாசொறுப்பு வழங்கப்பட்டது



  28.07.1995  18 தொடக்கம் 20 வரையான இளைஞர் யுவதிகளை அனைத்து மாவட்டங்களிலும் இருந்து எடுத்து தலைவர் சிறுத்தைப் படையணி உருவாக்கினார் எனவும் அதற்குப் பொறுப்பாக ராஜீவ் அண்ணையும் பயிற்சி ஆசிரியராக செல்லக்கிளியும் இருந்தார்கள் என முன்னர் குறிப்பிட்டுயிந்தேன் அவர்கட்டு என்ன நடந்தது என்று இப்பொழுது பார்ப்போம்,



மணலாற்றில்  அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டம் இட்டார்கள், அதற்கான மாதிரிப் பயிற்சிகளும் நிறைவிற்கு வந்தது, ஆனால் இதன் வேவு நடவடிக்கையில் துணைப்படையினரையும் இணைத்துக்கொண்டார்கள் இந்தத் துணைப்படை வீரன் எந்தப் பக்கத்தால் இராணுவத்தை தாக்கவருவருவார்கள் விடுதலைப் புலிகள்  என்ற தவலை இராணுவ அதிகாரிகளிற்குத்தெரியப்படுத்தி விட்டான், அதனால் இராணுவமும் எதிர்பார்த்துக்கொண்டுயிருந்தது,


அச்சண்டைக்காகன கட்டளைத்தளபதி சொர்ணம் அவர்களும் பெண் போராளிகளின் நேரடி கட்டளை அதிகாரியாக லெப் கேணல் கோமளா அவர்களும் நியமணிக்கப்பட்டனர் கொமாண்டோ பயிற்சி எடுத்த 200 றிற்கு மேற்பட்ட போராளிகளே உள்ளே இறங்கி கேம்பைப்பிடிப்பது என திட்டம் தீட்டப்பட்டது 28.07.1995  அன்று இரவு தளபதி சொர்ணம் கட்டளை வழங்க லெப் கேணல் கோமழா தனது பெண் போராளிகளைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே நுளைந்தார், எதிர்பார்த்துக்கொண்டுயிருந்த லெப்ரினன் ஜெனரல் ஐனகப்பிரரா தலைமையிலான இராணுவ வீரர்கள் செறிவான சூட்டை வழங்கிக்கொண்டுயிருந்தார்கள், உள்ளே நுளையும் போதே கேணல் கோமளா உட்பட 180 கோமாண்டோ பயிற்சி எடுத்த பெண் போராளிராளிகள் கொல்லப்பட்டனர்,



. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.

 

தொடர்ந்து வீரச்சாவு அடைந்த பெண்போராளிகளின் பெண் உறுப்புக்களில் பெரிய பெரிய கட்டைகள் இறுக்கி செத்தவர் என்றும் ஒரு மனித இரக்கம்அல்லாமல் அவர்களின் உடல்கள் கத்திகளால் வெட்டி துண்டு துண்டாகக் கொடுமைப்படுத்திபின்னர் ICRC ஊடா 180 போராளிகளின் உடல்களும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது, பின்னர் இவ்வித்துடல்கள் இராணுவமரியாதையுடன் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டது, அடுத்து காட்டிக்கொடுத்ததுனைப்படை வீரனைபிடித்து விசாரனை முடிந்தபின் அவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது, இத்துடன் பெண் கொமாண்டோ அணியின் செயல்பாடு நிறைவிற்கு வந்தது இதில் எஞ்சியிருந்த சில குறிப்பட பெண் போராளிகளிற்கு போராளி ஆரவி பொறுப்பாகயிருந்தார்,


 30/10/1995 விடுதலைப்புலிகளின் கோட்டையாகயிருந்த வலிகாமம் இடம் பெயர்வு அன்றுநடந்தது


உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்தித்திராத பாரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்தார்கள். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இதற்கு காரணமாக இருந்தது தான் அன்றைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் ‘சூரியக் கதிர்’ ராணுவ நடவடிக்கை. இந்த சூரியக்கதிர் நடவடிக்கை 1995 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்டது.



இந்த நடவடிக்கையை முறியடிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தளபதி சொர்ணம் தலைமையில் இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தினார்கள், ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தன, அதனால் பின்வாங்குவதைத்தவிர விடுதலைப்புலிகளிற்கு வேறுவளியிருக்கவில்லை,



அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.


காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். 



ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.


ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.


8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.


யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.


யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.


ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி. இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.


ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று. அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. 


இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று. தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.



அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.


24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.


காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும். அதே வலி இன்று ….


 இது இப்படி இருக்க தலைவருக்கு என்ன நடந்தது பாகம் ஜந்தில்பார்ப்போம்,





a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...