உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

a 292 தொடரும் இனப்படுகொலை

 தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?



தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலைபூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa Prison)  தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று (04.04.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் சிவாநந்தன் என்ற 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம்

உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை | Tamil Prisoner Murdered In Boossa Prison

அத்துடன், உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 297 வீதியால் சென்ற பெண்களிடம் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்த இராணுவ வீரரொருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

  வீதியால் சென்ற பெண்களிடம் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்த இராணுவ வீரரொருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் .கு...