கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது
கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நிலக்சி ரகுதாஸ் என்பவரே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராவார்.
2018 முதல் ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்ட சோலஸ் ரோடில் உள்ள வீட்டில் மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், இந்த தாக்குதலில் 20 வயது நிலக்சி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார்.
மற்றொரு 26 வயது ஆணுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.மேலும், ஒரு நாய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் 28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக