மட்டக்களப்பில் (Batticaloa) குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி, பள்ளத்துச்சேனை பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்றுள்ளது.
சித்தாண்டி 4 பழைய சந்தை வீதியைச்சேர்ந்த 63 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தாமோதரன் என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம்
சம்பவம் தொடர்பாகத் தெரியவருகையில், உயிரிழந்த குடும்பஸ்தர் மற்றும் வேரொரு நபருக்கிடையில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாய்த்தக்கம் கைககலப்பாக மாறியுள்ளது.
அருகிலிருந்த தண்ணீர் குடமொன்றினால் குறித்த குடும்பஸ்தர் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக