உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி
b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள்
b11 லெப் கேணல் தர அதிகாரிகள்
b12 மேஜர் தர அதிகாரிகள்
13 கப்டன் தர அதிகாரிகள்
b14 லெப்ரினன் தரஅதிகாரிகள்
b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள்
b16 வீர வேங்கைகள்
b17 உதவியாழர்
b18 கரும்புலிகள்
b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க
இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் (jammu kashmir) பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மறுநாள் இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எல்லையை தாண்டியதாக தெரிவித்து கைது
பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையை தாண்டியதாக தெரிவித்து இந்திய BSF வீரரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை கடந்த 6 நாட்களாக அவரை மீட்பது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மோடி அரசு முனையவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது.
அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு
பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ஜப்பானின் Toho பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் நிபுணர்கள் இணைந்து, பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் துல்லியமான நாளை கணித்துள்ளனர்.
குறித்த தகவலின்படி, அப்பொகலிப்ஸ் (apocalypse) அல்லது உலக அழிவு, 1,000,002,021-ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் உயிரினங்கள்
இதன்படி, அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் மெதுவாக வெப்பத்தை அதிகரிக்க தொடங்குவதனால் கடல்கள் கொதித்து நீராவியாகி விண்வெளிக்கு சிதறும்.
குறித்த நிலை, 999,999,996-ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும், பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
அதே நேரத்தில், நாசா ஆய்வாளர்கள் சூரிய புயல்களின் உடனடி அபாயத்தையும் எச்சரித்துள்ளனர்.
2024 இல் வெளியான ஆய்வில், சூரியனில் இருந்து வெளியேறும் சக்திவாய்ந்த வெப்பக் கதிர்வீச்சுகள் மற்றும் CME வெளியேற்றங்கள் (Coronal Mass Ejections), பூமியின் வாயுவில் மாற்றங்களை ஏற்படுத்தி, வெப்பநிலை உயர்வுக்கும் ஆக்சிஜன் குறைவுக்கும் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவில் இருந்து தம்பதி நாடு திரும்பியுள்ளது.
இந்நிலையில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி செல்லும் ரயிலில் ஏறும் போது, அவர்களின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இலங்கை தம்பதி
திருடிய நபரை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் துரத்திச் சென்றதை அடுத்து, பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன், உடனடியாக பிரித்தானியரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.
பேலியகொடயில் உள்ள வீடு ஒன்றிற்குள் பையுடன் குறித்த நபர் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள
அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலான தகவலை வெளிப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், தற்போது அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
இதில், வெளிநாட்டவர்கள், காவல்துறை உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அத்துடன், இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று மூன்று நாட்களக்கு பின்னர் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க உளவு பிரிவின் சிறப்பு தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை அமெரிக்காவுக்கு எடுத்து சென்றுள்ளதாக தெரிவிப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….
6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்கள் திறம்பட ரத்து செய்யப்பட்டு அவர்களை வேலை செய்யவோ அல்லது சலுகைகளை அணுகவோ முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது, புலம்பெயர்ந்தோரை சுயமாக நாடுகடத்த ஊக்குவிக்கவும், சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டும் ட்ரம்ப் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது இலக்க எண்
இதேவேளை, இந்தக் கொள்கையால் குறிவைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவில் நுழைந்து தங்க அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
அவர்கள் சட்டப்பூர்வமாக சமூகப் பாதுகாப்பு எண்களைப் பெற்றிருந்துள்ளதுடன், அவை அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.இந்த எண்கள் பல்வேறு உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, இதில் வருவாய் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கான பங்களிப்புகளைக் கண்காணிப்பதும் அடங்கும் என கூறப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சி
அதன்படி, புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்களை அகற்றுவதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் பல நிதிச் சேவைகளிலிருந்து அவர்களைத் துண்டித்து, வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், பைடன் நிர்வாக திட்டங்களின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை ஒடுக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கடுமையான நடவடிக்கை கருதப்படுகிறது
எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோரை ஒடுக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா
(Baba Vanga) உலகப்புகழ் பெற்றவராவார்.
அவரது பல கணிப்புகள் பலித்து உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதனால்தான் அவரது கணிப்புகள் எப்போதும் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.
செப்டம்பர் 11 அன்று நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் அதில் மிகவும் முக்கியமானதாகும்.
அக்டோபர் 3, 1911 அன்று, அப்போது ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சலோனிகா விலாயெட்டில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பிறந்த வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா, பின்னர் பாபா வங்கா அல்லது என்று அழைக்கப்பட்டார்.
பார்வையற்ற தீர்க்கதரிசி
அவர் 12 வயதில் பார்வையை இழந்தார், ஆனால் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது, இது எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்க அவருக்கு உதவியது.
இப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக 2043 ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம்கள் முழு ஐரோப்பாவையும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், 44 ஐரோப்பிய நாடுகளும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
எதிர்காலத்திற்கான தனது விசித்திரமான கணிப்புகளில் ஒன்றில், சுற்றுச்சூழல் மற்றும் இரண்டாம் நிலை புவிசார் அரசியல் காரணங்களால் 2025 ஆம் ஆண்டுக்குள் முழு ஐரோப்பிய கண்டத்தின் மக்கள்தொகை கணிசமான அளவில் குறைந்துவிடும் என்று பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் கூறியிருந்தது.
ஐரோப்பாவின் தலைவிதி
இருப்பினும், 2025 ஏற்கனவே தொடங்கி விட்டதால் இந்த கணிப்பு பலிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான், மேலும் ஐரோப்பாவில் மக்கள்தொகை நெருக்கடிக்கான அறிகுறிகள் இப்போது எதுவும் இல்லை.
ஆனால், ஐரோப்பா பற்றிய பாபா வங்காவின் மற்றொரு கணிப்பும் உள்ளது, இது எதிர்காலத்தில் ஐரோப்பாவின் தலைவிதியையே மாற்றக்கூடும், கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கண்டமான ஐரோப்பா 2043 ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம்களால் ஆளப்படும் என்றும், இஸ்லாம் கிறிஸ்தவத்தை ஆதிக்க மதமாக மாற்றும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த பெரிய மக்கள்தொகை மாற்றத்தின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையில் ஒரு கலாச்சாரப் போர் உருவாகக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார்.
மக்கள் தொகை
குறிப்பாக, சமீபத்திய ஆய்வு ஒன்று, அடுத்த 35 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 70 சதவீதம் வரை அதிகரித்து, 3 பில்லியனைத் தாண்டி, 2060 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக மாறும் என்றும், கிறிஸ்தவத்தை விஞ்சிவிடும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவும் நேபாளமும் இந்துக்கள் அதிகமுள்ள இரண்டு பெரிய நாடுகளாகும், பாபா வங்கா ஐரோப்பாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றுவார்கள் என்று கணித்திருந்தாலும், அவர் நேபாளம் மற்றும் இந்தியா உட்பட எந்த ஆசிய நாட்டிற்கும் அத்தகைய கணிப்பு எதுவும் செய்யவில்லை.
வீதியால் சென்ற பெண்களிடம் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்த இராணுவ வீரரொருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்
.குறித்த நபர் நேற்றையதினம்(10) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ வீரர்
வவுனியா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பணியாற்றும் மிகிந்தலையைச் சேர்ந்த 30வயதுடைய இராணுவ வீரரே கைது செய்ய்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும், கடந்த ஜனவரி முதலாம் திகதி வேப்பங்குளம், 6 ஆம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரிடம் 2 பவுண் சங்கிலியும், கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூமாங்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இம் மாதம் முதலாம் திகதி நெளுக்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இராசேந்திரகுளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும் அறுத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடமை இல்லாத நேரங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய அவரது சொந்த மோட்டர் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அறுக்கப்பட்ட சங்கிலிகளும் அடைவு வைத்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளி, பள்ளத்துச்சேனை பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்றுள்ளது.
சித்தாண்டி 4 பழைய சந்தை வீதியைச்சேர்ந்த 63 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தாமோதரன் என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம்
சம்பவம் தொடர்பாகத் தெரியவருகையில், உயிரிழந்த குடும்பஸ்தர் மற்றும் வேரொரு நபருக்கிடையில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாய்த்தக்கம் கைககலப்பாக மாறியுள்ளது.
அருகிலிருந்த தண்ணீர் குடமொன்றினால் குறித்த குடும்பஸ்தர் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று (8) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளது.
பிள்ளையான் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுக்கான காரணங்கள்
கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், கைதுக்கான காரணங்கள் ஏதும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் தாக்குதல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் மரணம்
காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, காசாவில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பை சந்திக்கவுள்ள நெதன்யாகு
உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் எனவும் 12 பெண்கள் பேர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,?
பொத்து இருந்து பார்ப்போம்,மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் , “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.
தமிழ் சமூகத்திற்கு நீதி
பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.
அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!
தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலைபூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa Prison) தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் இன்று (04.04.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் சிவாநந்தன் என்ற 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம்
உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது
கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நிலக்சி ரகுதாஸ் என்பவரே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராவார்.
2018 முதல் ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்ட சோலஸ் ரோடில் உள்ள வீட்டில் மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், இந்த தாக்குதலில் 20 வயது நிலக்சி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார்.
மற்றொரு 26 வயது ஆணுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.மேலும், ஒரு நாய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் 28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்
வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது, மேலும் இது எளிதில் ஜீரணமாகும். இருப்பினும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சில உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதன் காரணமாக, வயிற்று வாயு, அமிலத்தன்மை, ஒவ்வாமை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வாழைப்பழத்துடன் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழத்துடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பால்
நாம் பெரும்பாலும் வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாகச் சாப்பிடுவோம்.இது உடலில் நச்சுக்களை உருவாக்கி, இருமல், ஒவ்வாமை மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் . எனவே, இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
தயிர்
தயிர் மற்றும் வாழைப்பழம் இரண்டும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளன.எனவே, அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தி, சளியை அதிகரிக்கும். இது சளி மற்றும் தொண்டை புண்ணையும் ஊக்குவிக்கிறது.
தர்பூசணி
தர்பூசணியில் நிறைய தண்ணீர் உள்ளது, அதே நேரத்தில் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உள்ளது.இரண்டின் கலவையும் செரிமான அமைப்பில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, வாயு, கனத்தன்மை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் .
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழங்கள் இரண்டிலும் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது.அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, இது வாயு, வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இறைச்சி மற்றும் மீன்
இறைச்சி அல்லது மீன் போன்ற அதிக புரத உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் கனத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தை எதனுடன் சாப்பிடலாம்
வாழைப்பழத்தை தனியாக சாப்பிடுங்கள் அல்லது ஓட்ஸ், வால்நட்ஸ் அல்லது பிற பழங்கள் போன்ற லேசான சிற்றுண்டிகளுடன் சாப்பிடலாம்.
வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே கனமான உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நீங்கள் வாழைப்பழத்தை பால் அல்லது தயிருடன் சாப்பிட விரும்பினால், அதை ஸ்மூத்தி வடிவில் சீரான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.