உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 10 பிப்ரவரி, 2025

a 247 பாலச்சந்திரன் மரணத்திற்கு

 

பாலச்சந்திரன் மரணத்திற்கு காரணமானவரே தற்போது மனம் வருந்துகின்றார்: சிவஞானம் சிறீதரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு காரணமாக இருந்தவரே இன்று பல ஆண்டுகள் கழித்து மனம் வருந்துவதாக வாக்கு மூலம் கொடுத்திருக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Sritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாலச்சந்திரன் உயிரிழந்த காலத்தில், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு துறை செயலாளராகவும் இருந்தார்.

அவருக்கு பிஸ்கட் கொடுத்து இலங்கை இராணுவத்தினால் சுட்டுக்கொலைப்பட்டார். வெளிநாட்டு பத்திரிக்கைகளில் அவரின் மரணத்தை ஆய்வு செய்து செய்திகள் வெளிவந்துள்ளன.

வெகுகாலத்திற்கு பின்னர்தான் இந்த விடயங்கள் எமக்கு தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

  பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு   பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...