உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

a 261 பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து அநுரவின் அறிவிப்பு

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து அநுரவின் அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து அநுரவின் அறிவிப்பு | Govt Will Remove Prevention Of Terrorism Act Soon

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி நுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள்  கனவு

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.


தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார்.

வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

  பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு   பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...