உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 16 ஜனவரி, 2026

a 352 இலங்கையில் தனி நபர் ஆயுத வன்முறை அதிகரிப்பு?

 

இலங்கையில் தனி நபர் ஆயுத வன்முறை அதிகரிப்பு ; ஒருவர் பலி


கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 44 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு ; இரு சிறுவர்கள் நேரந்த கதி ; ஒருவர் பலி | Shooting In Sri Lanka Two Children Injured

தப்பி ஓட்டம்  

அத்துடன், இத்துப்பாக்கிச் சூட்டின் போது சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிந்துப்பிட்டி ‘125 வத்தை’ பகுதியிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 355-தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன

  தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன? கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்எதிர்வரும் 02ம் திகதி திங்கட்க...