உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 29 ஜனவரி, 2026

a 355-தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன

 

தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன?


கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இன்று தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கும் நோக்குடனும், எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இத்திட்டம் அமையவுள்ளது.

பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணை

அத்தோடு வனவளத்திணைக்களமே குறித்த பிரதேசத்தினுடைய பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கும் நாம் எதிர்ப்பு தெரிவிப்பதோடு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் | Massive Protest Against The Kivul Oya Project

திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

அதன் அடிப்படையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை வரும் 02ம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளோம்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் | Massive Protest Against The Kivul Oya Project

எனவே எமது எதிர்காலத்தினை சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் அனைவரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்

திங்கள், 26 ஜனவரி, 2026

a 354அநுரவின் அமைச்சர்களுக்கு புகழாரம்! சரத்

 

அநுரவின் அமைச்சர்களுக்கு புகழாரம்! சரத் பொன்சேகா வெளிப்படை


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்புகள்

அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் தமிழர்களின் வீடத்தில் கட்டாய சிங்களப் பாடத்தைக்கொண்டுவந்து அவர்களின் தமிழீழக்கனவை முற்றராக அழிப்பதற்கு சிறந்த முறையில் தூர நோக்கத்தோடு செயல்படுகின்றார் , அதற்கும் எமது வாழ்த்துக்கள் அடுத்து முஸ்லிங்கள் ஒரு பிள்ளைக்கு மேல் பெறக் கூடாது என்ற கட்டாயத்தையும் சிங்கள கட்டாயப் பாடம் போன்று அவர் கொண்டு வர வேண்டும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” என்றார்.

சனி, 24 ஜனவரி, 2026

a 353 கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


 கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.




கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் – முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன் என்பவரே விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பாரவூர்தி விசுவமடு பகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்...! | Kilinochchi Accident Family Man Dies On A 35

இந்த நிலையில், விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 16 ஜனவரி, 2026

a 352 இலங்கையில் தனி நபர் ஆயுத வன்முறை அதிகரிப்பு?

 

இலங்கையில் தனி நபர் ஆயுத வன்முறை அதிகரிப்பு ; ஒருவர் பலி


கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 44 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு ; இரு சிறுவர்கள் நேரந்த கதி ; ஒருவர் பலி | Shooting In Sri Lanka Two Children Injured

தப்பி ஓட்டம்  

அத்துடன், இத்துப்பாக்கிச் சூட்டின் போது சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிந்துப்பிட்டி ‘125 வத்தை’ பகுதியிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினர் இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

புதன், 14 ஜனவரி, 2026

a 351mothers land

 

mothers land  வாசகர்களுக்கு தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்


2026ஆம் ஆண்டு தைப்பொங்கலை கொண்டாடும் 

mothers land

 வாசகர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆரம்பமாகியுள்ள 2026ஆம் ஆண்டில், தமிழர்கள் கொண்டாடும் முதல் தமிழ் பெருநாள் இதுவாகும்.

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த இனிய நாளில் நாட்டில் உள்ள அனைவரின் மனங்களிலும் இன்பமும், வளமும் நிறைய வாழ்த்துகின்றோம்.

நல்ல பல நிகழ்வுகளுடனும், உடனுக்குடன் செய்திகளையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் இணைந்து பயணிப்போம்.

செவ்வாய், 13 ஜனவரி, 2026

a 350 = கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்…! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

 

கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்…! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை


அமைதியை நிலைநாட்டப் போகின்றோம் என முழக்கமிட்டு ஈழ மண்ணிற்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, அந்தத் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய நரகத்தை அரங்கேற்றியது என்பதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

யுத்தக் களத்தில் போராளிகளோடு நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவில்லாத ஒரு வல்லரசு இராணுவம், திக்கற்ற தமிழ் வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் கௌரவத்தைச் சிதைத்த கோர அத்தியாயங்கள், இன்றும் ஆறாத வடுக்களாய் நம் சமூகத்தின் நினைவுகளில் ரத்தம் கசிகின்றன.

ஒவ்வொரு இந்தியப் படைவீரனும் எம் பெண்களைச் சீரழித்தது என்பது தனிமனிதக் குற்றமல்ல, அது ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையும் அச்சுறுத்தி அடிபணிய வைக்க இந்தியா கையாண்ட கீழ்த்தரமான போர் தந்திரம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

பெண்களின் கதறல்கள் ஓயாமல் ஒலித்த அந்தப் பயங்கரமான நாட்களில், இந்திய ஏகாதிபத்தியத்தின் போலி முகமூடி கிழிந்து தொங்கியது.

பாதுகாப்பிற்காக வந்தவர்கள் வேட்டையர்களாக மாறியபோது, அந்தப் பிஞ்சு உள்ளங்கள் அனுபவித்த மரண பயமும் சிதைக்கப்பட்ட கனவுகளும் இன்றும் அந்த மண்ணின் காற்றில் நீதிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன.

இந்திய இராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் வெறும் கடந்த காலக் கதைகள் அல்ல, அவை நீதி மறுக்கப்பட்ட ஒரு இனத்தின் தீராத ஆதங்கம்.

  1. இவ்வாறு இந்தியாவின் அதிகார மமதைக்கு ஈழத்துத் தாய்மார்கள் கொடுத்த விலை…
  2. அமைதிப்படை என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த வன்கொடுமைகளின் கசப்பான சாட்சியங்கள்…

என்பவற்றை சுமந்து வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அவலங்களின் அதியாயங்கள் நிகழ்ச்சி…!

Share: 
  •  
  •  
  •  

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

a 349 தற்பெருமைக்காக கொன்றவனிக்கே கொடைவழங்கும் தமிழர்கள்?

 

தற்பெருமைக்காக கொன்றவனிக்கே கொடைவழங்கும் தமிழர்கள்?


அரசாங்கத்திடம் பாரிய நிதியை கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!டிட்வா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளமைக்கும் நிதி திட்டத்திற்கு (Rebuilding Sri Lanka Fund) லண்டன் வாழ் தொழிலதிபர் ஒருவர் பத்து மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.இவனின் உறனர்கள் யாராவது சுத்தத்தில் கொலை செய்யப்பட்டிருந்தால் இதைக் கொடுத்திருப்பானே,பொங்கி எழுந்த தமிழ் பெண்கள்,

இங்கிலாந்தில் இயங்கும் பிரபல வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் (Western Jewellers) நிறுவனத்தின் உரிமையாளரும் மற்றும் யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்தின் நிறுவனருமான வேலுப்பிள்ளை சிவசுந்தரம் என்பவரே இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.

மறுசீரமைப்புப் பணி

இந்தநிலையில், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பத்து மில்லியன் ரூபாய்க்கான காசோலையை சிவசுந்தரம் நேற்று (11) ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

அரசாங்கத்திடம் பாரிய நிதியை கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்! | Diaspora Businessman Donates Money To Lankan Govt

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனி, 10 ஜனவரி, 2026

A 348 யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல்

 Threads


யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல்



உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52ஆவது ஆண்டு

 நினைவேந்தல் இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழில் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியடியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance
யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance

செய்திகள் – கஜிந்தன்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று  இடம்பெற்றது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று(10.01) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

படுகொலை 

இந்த நினைவேந்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நீங்காத வடு

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் | Ulaga Tamilar Manadu Massacre Remembrance

அதுமட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

a 347 கொழும்பில் நடப்பது என்ன?

 

கொழும்பில் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை



கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தெஹிவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை | Hotel Owner Shot At Injured In Dehiwala

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

a 346 வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக பொங்கியெழுந்த ரஷ்யா, மற்றும் ஈரான்

 

வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக பொங்கியெழுந்த ரஷ்யா, மற்றும் ஈரான்



வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நாடுகடத்தியுள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதுரோ சிறைப்பிடிப்பில் அமெரிக்காவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு செயலைக் கண்டித்த ரஷ்யா, அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கோரியுள்ளது.

 மேலும், இந்த நடவடிக்கைக்கான நியாயப்படுத்துதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு கொள்கைரீதியான விரோதம் மேலோங்கியுள்ளது.

மீண்டும் இடதுசாரி – வலதுசாரி மோதல்

மீண்டும் இடதுசாரி – வலதுசாரி மோதலுக்கு அமெரிக்காவின் தாக்குதல் வித்திட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக பொங்கியெழுந்த ரஷ்யா, மற்றும் ஈரான் | Russia Iran Condemns Us Military Strikes Venezuela

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஈரான் தெரிவிக்கையில்,

தேசிய இறையாண்மை- ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறும் செயல்

“வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல், நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதையும் வன்மையாக ஈரான் கண்டிக்கிறது.

வெனிசுலா ஜனாதிபதி கைதுக்கு எதிராக பொங்கியெழுந்த ரஷ்யா, மற்றும் ஈரான் | Russia Iran Condemns Us Military Strikes Venezuela

இது ஐ.நா. அவை சாசனத்தின் மீதான கடுமையான மீறல். ஐ.நா. அவையில் உறுப்பினராக உள்ள ஒரு சுதந்திர அரசுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பின் அப்பட்டமான மீறல். இதன் விளைவுகள் முழு சர்வதேச அமைப்பினையும் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

வியாழன், 1 ஜனவரி, 2026

a 345 இலங்கையில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளிக்கும் அயல் நாடுகளின்

 

இலங்கையில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளிக்கும் அயல் நாடுகளின் புலநாய்வளர்களே காரனம்?




கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் : பறிபோன 60 உயிர்கள் கடந்த (2025) வருடம் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் பாரிய குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.இருந்தும் இதில் பிடிபட்ட சந்தேக நபர்கள் குற்றத்தை அவர்கள் ஏற்க மறுத்தாலும், புடவை வியாபாருங்களிற்காக இந்திய மற்றும் கேரலா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் : பறிபோன 60 உயிர்கள் | More Than 100 Shooting Incidents Last Year

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இலக்கைத் தவறவிட்டு சிறுமியை சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிகிச்சை பெற்றுவந்த கைதி சுட்டுக்கொலை

சம்பவம் தொடர்பான விசாரணையில் இளம் பெண் வசிக்கும் வீட்டுக்கு அருகில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் இருப்பதும் அவர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர் குற்றக் கும்பல் குழுவொன்றின் உறுப்பினராவார்.

இதற்கிடையில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி நேற்றையதினம் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் திலீப் சதுரங்க எனப்படும் ரஜவத்த சத்துவா என அடையாளம் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

a 355-தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன

  தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன? கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்எதிர்வரும் 02ம் திகதி திங்கட்க...