உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 9 ஆகஸ்ட், 2025

a 315 தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

 வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு, முத்தையன்கட்டு


இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் நேற்றையதினம்(09) வெயிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மீது தாக்குதல்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது பொருளாதார நிலை காரணமாக வீடு அமைப்பதற்கான தகரத்தை பெறுவதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இராணுவ முகாமிற்கு வேறு சிலருடன் சென்றுள்ளார்.

இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Youth Killed In Army Camp

குறித்த பகுதியில் நின்ற இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தின் காரணமாக ஓடியுள்ளதுடன், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுமிராண்டித் தனமான சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன, இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்.

இச் செயற்பாடானது இராணுவத்தின் மனநிலையில் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்தும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை வெளிபடுத்துவதுடன், அடக்குமுறை ஆட்சி தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெறுவதை வெளிப்படுத்தி நிற்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share: 
  •  
  •  
  •  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...