உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

a 316 யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்

 

யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?


யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.தகப்பனின் பிரிவு தாய்யின் தவறான நடத்தை காரணமாக இவர் மனக்கவலையில் தன்னை மாய்த்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்?

இடைக்காடு – அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவியின் தந்தை நீண்ட காலமாக மனைவியை பிரிந்திருந்த நிலையில் மாணவி தாயாருடனே வசித்து வந்தார்.

யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன? | 16 Year Old Schoolgirl Commits Suicide In Jaffna

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனக்கு தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.  

சனி, 9 ஆகஸ்ட், 2025

a 315 தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

தொடரும் இராணுவஅடக்குமுறை தமிழ் இளைஜர் அடித்துக்கொலை நடப்பது என்ன?

 வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு, முத்தையன்கட்டு


இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவர் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் நேற்றையதினம்(09) வெயிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மீது தாக்குதல்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது பொருளாதார நிலை காரணமாக வீடு அமைப்பதற்கான தகரத்தை பெறுவதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இராணுவ முகாமிற்கு வேறு சிலருடன் சென்றுள்ளார்.

இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mullaitivu Youth Killed In Army Camp

குறித்த பகுதியில் நின்ற இராணுவத்தினர் குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவர்கள் அச்சத்தின் காரணமாக ஓடியுள்ளதுடன், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுமிராண்டித் தனமான சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன, இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும்.

இச் செயற்பாடானது இராணுவத்தின் மனநிலையில் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்தும் மாற்றம் ஏற்படவில்லை என்பதை வெளிபடுத்துவதுடன், அடக்குமுறை ஆட்சி தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெறுவதை வெளிப்படுத்தி நிற்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share: 
  •  
  •  
  •  

புதன், 6 ஆகஸ்ட், 2025

a314ஆகஸ்ட்டில் நிகழப்போகும் பேரழிவு ; அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் அடுத்த கணிப்பு

 

ஆகஸ்ட்டில் நிகழப்போகும் பேரழிவு ; அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் அடுத்த கணிப்பு

ஆகஸ்ட்டில் நிகழப்போகும் பேரழிவு ; அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் அடுத்த கணிப்பு | Baba Vanga S Next August Prediction Shocks All

பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட பாபா வங்காவின் கணிப்புகள் இன்றும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் மர்மமான, ஆபத்தான நிகழ்வுகள் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.


இயற்கை பேரழிவுகளுக்கு முன் எச்சரிக்கை

அவரது ஆகஸ்ட் மாத கணிப்பின்படி, “வானத்திலும் பூமியிலும் ஒரே நேரத்தில் இரட்டை நெருப்பு” எழும் என கூறியுள்ளார். இதன் அர்த்தம் தெளிவாக இல்லாவிட்டாலும் இது எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ, அல்லது விண்கல் தாக்கம் போன்றவற்றை குறிக்கலாம் என கருதப்படுகின்றது. சிலர் இதை இயற்கை பேரழிவுகளுக்கு முன் எச்சரிக்கையாக பார்க்கிறார்கள்.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் மனிதர்கள் அறிய விரும்பாத ஒன்றை உணர வாய்ப்பு இருப்பதாகவும், அது ஒரு “மூடியது மீண்டும் திறக்க முடியாத” வகையான விடயமாக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இது செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் அல்லது வேற்றுகிரகவாசிகள் பற்றிய விடயமாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.

ஆகஸ்ட்டில் நிகழப்போகும் பேரழிவு ; அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் அடுத்த கணிப்பு | Baba Vanga S Next August Prediction Shocks All

அதே நேரத்தில், பாபா வங்கா “ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும்” என கூறியுள்ளார். இது நேட்டோ (NATO) அல்லது ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற அமைப்புகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிலர் நம்புகின்றனர்.

அத்துடன், இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும், ஐரோப்பாவில் மக்கள் தொகை குறையும். 2025 இல் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அவர் கூறியுள்ளார். இது தற்போது உலகில் பரவலாக பேசப்படும் விடயமாக உள்ளது.

உலகம் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வது என்ற சூழலில், பாபா வங்காவின் வர்ணனைகள் பலருக்கு ஒரு எச்சரிக்கையாகவே தெரிகின்றன. இந்த வகையில், அவர் கூறிய ஆகஸ்ட் மாத இரட்டை நெருப்பு கணிப்பு பலரும் கவனிக்க வேண்டிய முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...