உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 2 ஜூலை, 2025

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு 


செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது | Gov Stance Revealed On Jaffna Chemmani Mass Grave

நீதிமன்ற நடவடிக்கைகள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி – மனித புதைக்குழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்

தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எவ்வாறிருப்பினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

செம்மணி – சித்துபாத்தி பகுதியில் இனங்காணப்பட்ட மனித புதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் சிறுவர்கள் பயன்படுத்தக் கூடியவாறான நீல நிற பையொன்று மீட்கப்பட்ட நிலையில், நேற்று  (01) பொம்மை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...