உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 20 மே, 2025

a 311 பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

 

பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு


இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முந்தைய அரசாங்கங்கள் நியமித்த அனைத்து ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் இன்று வரை கேள்வி எழுப்பபடுகிறது.

குறிப்பாக கடந்த 19 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் நினைவுகூறப்பட்ட நிலையில், இறுதி யுத்ததத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலில் கலந்துக்கொண்ட தென்னிலங்கையின் சிங்கள இளம் சட்டத்தரணி “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த கேள்வி தொடர்பான காணொளியானது இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்கான குரல் என சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே நினைவிடத்திற்கு சென்றிருந்த போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், முள்ளிவாய்க்கால்  மண்ணை புண்ணிய பூமி என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தென்னிலங்கை சட்டத்தரணி ஒருவர் சென்று அரசாங்கத்தை நோக்கி இவ்வாறு எழுப்பப்பட்ட கோள்வி, அநுர தரப்புக்கு எவ்வாறான எதிர்வினைகளை ஆற்றக்கூடும் என்பதை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி…

  •  
  •  
  •  

ஞாயிறு, 18 மே, 2025

a 310 குயின்ஸ்லாந்து மாநிலத்தில்TCC தமிழீழ மாவீரர் செயல்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நாள் நோத்பகுதியில் 18/05/2025 அன்று நடைபெற்றது

 குயின்ஸ்லாந்து மாநிலத்தில்TCC தமிழீழ மாவீரர் செயல்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நாள் நோத்பகுதியில் 18/05/2025 அன்று நடைபெற்றது




அதில் கலந்துகொண்ட சாந்தன் அவர்களின் முள்ளிவாய்க்கால்தொடர்பான உரை இது தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு நாளிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது முதல் கண்வணத்தை தெரிவித்துக் கொண்டு ஆரம்ப காலம் தொட்டு முள்ளிவாய்க்கால் வரை நடந்தவற்றை தெளிவுபடுத்துகின்றேன்

1970 இருந்து இலங்கையில் வாழும்பூர்வீகக்குடிகளான தமிழர்கள் மீது இந்தியாவில் இருந்து வந்தேறு குடிகளான விஜயனினின் அடி தோன்றல்களான சிங்களவர்கள் இலங்கையைப்பற்றி பெரிதாக அக்கரை கொள்ளவில்லை உதாரணம், பெரும்பாண்மையாகயிருந்த தமிழர்கள் போர்த்துக்கையர் 1505ம் ஆண்டு வந்து 153 வருடம் இலங்கையை ஆட்சி செய்தார்கள் அவர்களோடும் தமிழர்படை சண்டையிட்டு கனிசமான தமிழர்கள்கள் கொல்லப்பட்டார்கள், அடுத்து1658ம் ஆண்டு ஒல்லாந்தர்கள் இலங்கையைப்பிடித்து 138 வருடம் அவர்களின் ஆதிக்கம் இருந்தது அவர்களோடும் தமிழர் படை சண்டையிட்டது, அதிலும் கனிசமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், அடுத்து1796ம் ஆண்டு பிரிட்டீஸ் இலங்கையைப்பிடித்தது அவர்கள் 152 வருடம் இலங்கையை ஆட்சி செய்தார்கள், அவர்களோடும் பட்டாரவன்னியன் சங்கிலியன் மன்னன் இரு மன்னர்களின் வழி நடத்தலில் ஆங்கிலப் படைகளோடு கடுமையான சண்டை நடந்தது மாறி மாறி 443 வருடம் அன்னியப் படைகளோடு சண்டையிட்டதால் தமிழர்களின் பெரும்பாண்மை முற்றாக அன்னியப் படைகளால் அழிக்கப்பட்டது,

ஆனால் வந்தேறு குடிகளான விஜயனின் அடித்தோன்றல்கள் இந்த 443 வருட அன்னியர்களோடு நடந்த சண்டையில் பங்குபற்றிய வரலாறே இல்லை,
தமிழர்கள் சண்டையிட அவர்களின் இரத்தத்தில் குளிர் காயந்தவர்கள் தான் இலங்கையில் வாழும் சிங்களவர்கள், ஆனால் ஆங்கிலேயர்கள் வெளியேறும்போது தங்களோடு சண்டையிட்ட இந்திய வீரரான சந்திரபோசிடம் நாட்டை கொடுக்காமல் காந்தியிடம் கொடுத்தார்கள், அதுபோல் தங்களோடு சண்டையிட்ட தமிழர்களிடம் நாட்டைகொடுக்காமல் சிங்களவர்களிடம் நாட்டை கொடுத்து விட்டுச் சென்றார்கள்,

அன்றிலிருந்து இருந்து இவர்களின் இன ரீதியாக பாகுபாடான, கல்வி தரைப்படுத்தல் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ,வட கிழக்கில் மற்றும் தென்னிலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் ,அதிகரித்தமையால் சொந்த நாட்டில் வாழும் சிங்களவர்களோடு போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு வடகிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் தள்ளப்பட்டார்கள்,

1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள்தென்னிலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள், அதை அறிந்த இந்திய அதிபரான இந்திரகாந்தி அம்மையார் பிரபாகரன் தலைமையிலான தமிழ் இளைஞர் யுவதிகளிற்கும் ஆயுதப்பயிற்சி தர முன்வந்தார்கள் ,அன்றில் இருந்து சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைந்தது ,

1987ம் ஆண்டு கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலில் இலங்கையில் நாங்கள் வாழ முடியாது எங்களைப் பாதுகாருங்கள் என இந்தியாவின் காலில் விழுந்தார்கள் இலங்கை அதிபர் ஜேவர்த்தன, அவரின் கதையைக் கேட்டு விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு 3 வருடமாக இந்தியப் படைகள் விடுதலைப்புலிகளோடு கடுமையான சண்டையில் ஈடுபட்டனர், மூன்று வருட யுத்தில் 600 விடுலைப் புலிகளும் 1200 இந்தியப்படையினரும் கொல்லப்பட்டனர்,

இது இப்படிஇருக்க இலங்கை தேர்தலில் புதிய அதிபராக பிரேமதாசா பதவி ஏற்றார், இந்தியாவின் நயவஞ்சகப் போக்கை துல்லியமாக அறிந்த பிரேமதாச இங்கே நடப்பது ஒரு தாய் பிள்ளைகளின் பிரச்சனை அதை நாங்கள் கதைத்து தீர்ப்போம் இந்தியப் படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கட்டளை வழங்கினார்
அதனால் இந்தியப் படைகள் வெளியேறியது அதே நேரம் மூன்று வருடமாக ஒரு சிறிய குழுவோடு சண்டையிட்டும் வெல்ல முடியவில்லையே என்ற தோல்வி மன நிலையில் வெளியே சென்றது இந்தியா இராணும்

அவர்கள் வெளியேறியதும் மீண்டும் விடுதலைப் புலிகளிற்கும் இலங்கைப் படையனருக்கும் சண்டை நடந்து கொண்டேயிருந்தது ஆனால் ஒரு நிணல் அரசாங்கம் போன்ற தமிழர்கள் வாழ்ந்தார்கள்,அவர்களிற்கு என்று தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழீழம் இருந்தது. அதனால் அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள்,

எமது வழர்ச்சியைக்கண்டு அயல் நாடான இந்திய மீண்டும் அச்சம் கொள்ள ஆரம்பித்தது, அதாவது இதை இப்படிய விட்டால் ஒரு வேளை இவர்களிற்குத் தமிழீழம் கிடைத்தால், இவர்களும் தமிழர்கள் தமிழகத்தில் வாழுபவர்களும் தமிழர்கள், அவர்களும் தமிழகத்தை பிரிக்கப் போராடலாம்அப்படி போராடினால் தமிழீழம் அவர்களிற்கு உதவும் என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது, அதனால் இலங்கை தமிழர்களின் போராட்டத்தையும் அதை தலைமை தாங்கி நாடாத்தும் தேசியத் தலைவரையும் முற்றாக அழிக்க வேண்டும் என இந்திய திட்டமிட்டது ,அதற்கு அமைவாக சிங்களப் படைகளின் தீச்சுவாலை நடவடிக்கை தோற்றபின் விடுதலைப் புலிகளை சமாதான பேச்சுவார்த்துக்குச் செல்லுமாறு இந்திய அமெரிக்கா போன்ற நாடுகள் அழுத்தம் கொடுத்தமையால் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்கள்,

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் 12 ஆயுதக் கப்பல்களை இந்திய கடல் படையனர் கடலில் வைத்து அழித்தனர் நிராயுதபாணிகளாகவிருந்தாலும் தங்களின் கொள்கையில் தலைவரும் அவரோடு நின்ற போராளிகள் மற்றும் 4 லட்சம் மக்களும் உறுதியாக இருந்தமையால் இறுதி முள்ளிவாய்க்கால் நெருங்கிய போது அவர்களிடம் மன உறுதி மட்டுமே இருந்தது ,

கப்பலை அழித்ததோடு இந்திய நின்று விடவில்லை நிராயுதபாணிகளான விடுதலைப்புலிகளையும் அவர்களோடு நின்ற 4 லட்சம் மக்களையும் அழிக்கவென இந்தியாவில் இருந்து 5000 இந்தியப் படையினர் திருமலை புல்மோட்டையில் வந்து இறங்கி இலங்கைப் படையினரோடு இணைந்து முள்ளிவாய்க்கால் சண்டையில் ஈடுபட்டர்கள், இரு நாட்டுப்படைகளும் உலக நாடுகளின் ஆதரவும் எதிரிக்கு இருந்தமையால் கடுமையான மானப்போர் அந்த மண்ணில் நடந்தது நாள் ஒன்றிற்கு ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டும் பலர் காயம் அடைந்தும் கொண்டு இருந்தார்கள், ஆனால் காயப்பட்டவர்களிற்கு மருந்தோ ஏனையவர்கற்கு உணவோ இல்லாத மிகவும் பரிதாபமான நிலை அங்கே காணப்பட்டது ,மே 14-15 அன்றைய நாள் கடலில் இருந்து ஆகாயத்தில் இருந்து தரையில் இருந்து எறிகணைகளையும் T56 டாங்கியால் நேரடிச்சூடு மற்றும் கணோன் ஆயுதங்களாலும் நேரச் சூடுஇரு நாள் நடந்த தாக்குதலில் மட்டும் 50000 ஐம்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்,

இறந்த தாயிடம் பால் குடித்த குழந்தையும் கெற்பத்தில் இருந்த குழந்தை செல் பட்டு வெளியே வந்து துடித்த கதையேன தமிழர்கள் துடிக்க கொல்லப்பட்டார்கள்,ஆனந்தபுரம் மற்றும் தேவிபுரம் இரு இடங்களிற்கும் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சிக்குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்தியது அதில் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டார்கள்,
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த தமிழினப் படுகொலையில் மொத்தம் 146,679 ஈழத்தமிழர்கள், சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற துல்லியக்கணக்கை உலகின் முன்வைத்த வண.பிதா இராயப்பு யோசேப் ஆண்டகை என்பதும் குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 16 மே, 2025

a 309 இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் உடலங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இறந்து கிடந்த உடல்களில்இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் உடலங்களில் காணப்பட்ட நகைகளை இராணுவம் திருடியதாக களத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) ஏற்பாட்டில் இன்றையதினம் (16) யாழ் (Jaffna)- சாங்கானை பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தடைக் கற்களை படிக்கற்களாக பாவித்து நாங்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறிக்கொண்டிருந்தோம். அப்போது இராணுவம் எங்களை நோக்கி சுட்டது.

இராணுவத்தினரின் செயல்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த எங்களது உறவுகளின் உடலங்களை நாங்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். இதன்போது இராணுவத்தினர், இறந்து கிடந்த உடல்களில் காணப்பட்ட நகைகளை கழற்றி தங்களது சப்பாத்துகளிலும், உடைகளிலும் மறைத்து வைத்ததை அவதானித்தோம்.

இறந்து கிடந்த உடல்களில் இருந்த நகைகளை திருடிய இராணுவம் : பரபரப்பு குற்றச்சாட்டு | Sl Army Stole Jewelry From Dead Bodies Final War

நாங்கள் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை, எங்களது உடைமைகளையும் இழந்தோம். இறுதி நேரத்தில் உணவுக்கே பாரிய நெருக்கடியை எதிர்நோக்கினோம். இறுதியில் இருந்த வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் விற்று கஞ்சி காய்ச்சி குடித்து உயிரை தக்கவைத்தோம்.

எனினும் 12,13ஆம் திகதிகளில் அந்த கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அரிசி இல்லை, சமைப்பது என்றால் பாத்திரங்கள் இல்லை, உடைகள் இல்லை, பெண்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகள் இல்லை.

தொடர்ந்து யுத்தம் நடக்கும்போது ஓடிக்கொண்டிருந்தோம். இன்றைக்கும் எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எமக்கு உள்ளது” என தெரிவித்தார்.

வியாழன், 15 மே, 2025

a 308 தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

 தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

breaking

தமிழீழ விடுதலையின் மாபெரும் படைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்.

கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

ஜோசப் அன்ரனிதாஸ் 

08.04.1964 - 15.05.2009 

திருகோணமலை 


தளபதி சொர்ணம் அண்ணா ! இந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு 


உலகம் போற்றும் எம் பெருந்தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன்பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றி கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும்  பலரையும் கவர்ந்தன. இவரது குரல் கேட்கும் படைகள் களத்தில் அஞ்சிக் கதிகலங்கும்.


வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த கேணல் சங்கர் அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. தமிழீழ வான்படை ஒரு மிகப் பெரும் வளர்ச்சியை  நோக்கிப் பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர்  அவர்களின் இழப்பு இடியாய் விழுந்தது. 




தமிழீழ வான்படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் அதனைக் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது.தேசியத்தலைவரின் ஆலோசனைக்கிணங்க ,கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக் கூடிய ஒரு தளபதியாக, வான்படை முன்நகர்த்த உகந்தவராகத் தளபதி சொர்ணம் அவர்கள் வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுகிறார். வான்படையின் பணி காடு சார்ந்த இடங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையால், அவரின் காடு சார்ந்த நீண்ட அனுபவம் போராளிகளுக்குப் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. 




வான்புலிகள்  காட்டில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக போராளிகளுக்கு கற்றுக் கொடுத்தார். நெருக்கடியான காலகட்டத்தை எப்படிக் கையாள்வது என்பதை அருகில் வைத்து, அதைச் செயல் வடிவாக்கிக் கற்றுக் கொடுத்தோடு, வான்படை சீராகச் செப்பனிட்டார்.

பெருந்தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நாடாத்திய வல்லமை மிக்க தளபதியான அவர்,எதிர் காலத்தில் ஆகாய தரைச் சமர்களை ஒழுங்கமைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்து போராளிகளை வழிநடத்தி சீர்பட அதை வளர்த்தெடுத்து ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். 

பாதுகாப்பு போராளிகளின் மனங்களைத் தொய்வடையாமல் பாதுகாத்துக் கொள்வது இப் பெரும் இயக்கத்தின்  நிர்வாக முறைமை போன்றவற்றைச் செவ்வனக் கற்றுத் தந்தார்.

காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த தளபதி சொர்ணம் அவர்கள் எமது ஓடு தளத்திற்கான பாதையாக இரணமடுவிற்கு கிழக்காகவும் வட்டக்கச்சியிலிருந்து  பழைய கண்டி வீதிப் பக்கமாகவும் இடத்தினைத் தேர்ந்தெடுத்தார்.இது சண்டை  தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடு தளம் அமைக்கும்  பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது. 

அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு எற்ப்பட்டது, அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிடம் வழங்கினார். எங்கெல்லாம் தமிழீழத்

 தேசியத்தலைவர் அவர்கள், நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் தளபதி சொர்ணம் களமிறங்குவார்.அங்கு 55யின் குரல் முழங்கும்.தடைகள் விலகும் பாதை திறக்கும் அதுதான் சொர்ணம் அண்ணாவின் தனித்திறன்.

தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார்.




தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த, தளபதி சொர்ணம் அவர்களுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.ஏனெனில்,போராளிகளை உறுதியோடு செதுக்கும் சிறந்த சிற்பி.அவரின் பட்டறிவு போராட்டப் பயணத்தின் செல்நெறி.

வாழ்வா சாவா என்று நம்  தேசம் களம் கண்கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய்  தேசத்திற்காக பெரும் பணியில் இணைத்துவிட்டு, அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையாவர். அப்பாவும் மகளுமாக ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காக பணி செய்து,இறுதிவரை வீரத்தோடு களமாடி வரலாற்றைப் பதியம் செய்து, வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய்நிலம் திகழ்கிறது .இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது வீரப்புதல்விக்கும் தமிழீழ மண் தலைவணங்கும்.



தம் குடும்பத்தை விடுத்து, தேசித்தலைவனையும் மண்ணையும் நேசித்து,முன்னேறி வந்த சிறிலங்காப் படைகளைச் சிதறடித்து, கேப்பாப்புலவில் இடியாக இறங்கி படைவிரட்டி வரலாறு படைத்த மாவீரன்.

தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் குறித்துச் சொல்லக்கூடிய, தரையிறக்கச் சண்டைகளில் குடாரப்புவிற்குப் பின் சாளைத் தரையிறக்கமும் முக்கியத்துவம் பெற்ற தரையிறக்கமாகும்.



மிக நெருகடி மிக்க காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளுடன், கட்டளைத் தளபதியாக சாதகமற்ற நிலப்பரப்பில் தரையிறங்கி, எதிரிகளை விரட்ட எடுத்த முயற்சி கைகூடவில்லை.இருந்தும் சிங்களப்படைகளை சிதைத்து விழுப்புண் தாங்கி தளம் திரும்பிய மாபெரும் தளபதியாவார்.இவருடன் கட்டளைத் தளபதிகளாக தரையிறங்கியவர்களில் கட்டளைத்தளபதி லோறன்ஸ் மற்றும் கட்டளைத்தளபதி சாள்ஸ் அன்ரனி ஆகிய இருவரும் உடனிருந்தனர்.முள்ளிவாய்க்கால் வரை தமது இலட்சியப்பாதையில் உறுதியோடு பயணித்து,முள்ளிவாய்க்காலில் படையணிகள் மற்றும் துறைசார் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராகத் தமிழீழத் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டு.முள்ளிவாய்க்கால் முற்றுகைப் போரிற்கெதிரான முடியடிப்புக் கட்டளைத் தளபதியாக படைநடாத்திய உன்ன தளபதி சொர்ணம் அவர்கள் ,கட்டளை பிறப்பித்தபடியே பிரிகேடியர் சொர்ணமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரவரலாறானார்.இவ்வீரப்பெருந் தளபதிகளையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி, நாம் தமிழீழம் என்ற கொள்கைப்பற்றோடு உறுதிதளராது தடைகளைத் தகர்த்து விடுதலை நோக்கிப் பயணிப்போம்.

செவ்வாய், 13 மே, 2025

a 307 வித்தியாவின் பத்தாம் ஆண்டு நினைவு – வெடித்த போராட்டம் : இடைமறித்த காவல்துறை

 

வித்தியாவின் பத்தாம் ஆண்டு நினைவு – வெடித்த போராட்டம் : இடைமறித்த காவல்துறை


வித்தியா படுக்கொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (13) வேலணை சந்தியில் இடம்பெற்றுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கொடூரத்துக்கு எதிர்ப்பு 

குறித்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தினை சமூமட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த நிலையில், இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வித்தியாவின் பத்தாம் ஆண்டு நினைவு - வெடித்த போராட்டம் : இடைமறித்த காவல்துறை | Pungudutivu Vithiya Remembering Day Protest

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பறையொலி எழுப்பி, “பாலியல் வன்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம், பாலியல் வன்புணர்வுக்கு எதிரான நீதிக்கு சட்டவாக்க துறையே கவனம் செலுத்து, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மௌனத்தை கலைப்போம், பாலியல் வன் கொடுமைக்கு நீதி வேண்டும், பெண்களை இழிவுபடுத்தாத ஊடகங்கள் வேண்டும், ஊடகங்களே பாலியல் வன்கொடுமைகளை பாதுகாக்காதே, பாலியல் சுரண்டல்களின் கதவுகளை மூடுவோம், உரிமையின் எல்லைகளை திறப்போம், பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என கோஷமிட்டு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் குழப்பம்

ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கேட்டு பதிவுசெய்வதற்கு காவல்துறையினர் முனைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியாவின் பத்தாம் ஆண்டு நினைவு - வெடித்த போராட்டம் : இடைமறித்த காவல்துறை | Pungudutivu Vithiya Remembering Day Protest

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது படங்களை வேண்டுமானால் எடுக்குமாறும் பெயர்களை கூற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியதுடன் இது எமக்கு மாத்திரமல்ல உங்களது வீட்டில் உள்ள பெண்களுக்கும் தான் ஏற்படும் பிரச்சினை எனவே இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதால் காவல்துறையினர் ஒரு கட்டத்துக்கு மேல் செயற்பட முடியாது ஓரமாக சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தை கூற அநுர அரசு காவல்துறையினரை வைத்து அடக்குகின்றது என்றால் ஏனைய விடயங்களுக்கு எவ்வாறு செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்கும் என கூறி மக்கள் தமது விசனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

  •  
  •  
  •  

ஞாயிறு, 11 மே, 2025

a 306 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை

 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை

தமிழர் இனப்படுகொலை - மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை : பிரம்டன் மேயர் | Halt Construction Tamil Genocide Memorial Canada

 என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார்.

கனடாவில் (Canada) தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள்.

உடல்ரீதியான இனப்படுகொலை

உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர்.


இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் இது.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்.

மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  •  
  •  
  •  

வியாழன், 1 மே, 2025

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

 

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து | Tamil Representative Wins Canadian Election

2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்குக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கனேடியத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் கனேடியத் தமிழர் பேரவை தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மக்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கையை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் புதிய அரசு உறுதியுடன் செயற்படும் என நாம் நம்புகின்றோம்.

தேர்தல் வெற்றி

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற கனேடியத் தமிழ் உறுப்பினர்களுக்கும் கனேடியத் தமிழர் பேரவை பெருமிதத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.


கனேடியத் தமிழர் பேரவையின் முன்னாள் சட்ட ஆலோசகரான கரி ஆனந்தசங்கரி மீண்டும் தெரிவாகியுள்ளார். கனேடியத் தமிழர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஜோனீட்டா நாதன் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாகப் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

இதனுடன், அனீட்டா ஆனந்த்தும் மீண்டும் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றிகள், கனேடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் ஈடுபாடு மற்றும் பங்களிப்பைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

கனேடியத் தமிழர் பேரவை

அரசியல் சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பாகச் செயற்படும் கனேடியத் தமிழர் பேரவை, புதிய அரசுடன் இணைந்து, அனைத்து கனேடியர்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தும் பணிகளிலும் செயற்படத் தயாராக இருக்கின்றது.

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து | Tamil Representative Wins Canadian Election

புதிய அரசு மக்கள் விருப்பங்களை மதித்து, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

அதேபோல், நாடு எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் திறமையாகச் சமாளித்து, கனடாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தி, அனைத்து கனேடியர்களுக்கும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளைப் புதிய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

கனேடியத் தமிழர் பேரவை, புதிய அரசின் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து உறுதியாகக் கைகோர்க்கும்.”என்றுள்ளது.


a 311 பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

  பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத...