உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 26 ஆகஸ்ட், 2023

mother a 256 பாகம் 03 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

 

தமிழீழக்கதைTamil Eelam of story

பாகம் 03 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.

                


 தலைமைப்பீடத்தின்=கதை CAPITAL OF STORY

இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி சுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர்  என்பவரால் எழுதப்பட்டது  இது தமிழீழ விடுதலைப் புலிகளின்வரலாற்று ஆவணத்தொகுப்பாகும்  இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,


உள்ளடக்கம், 1985 தொடக்கம் 1990 வரையான பிரத்தியேகமான வரலாற்றுக் கதையின் உள்ளடக்கம்,..........!


01--    09/01/1985  பண்டிதரின் வீரச்சாவிற்கு முன்னர் அனைத்து மாவட்டங்களிற்கும் கட்டளை அதிகாரியாக இருந்த தளபதிகிட்டு,....

02 -- 1986 இந்தியாவில் நடந்த கடைசிப் பயிற்சிமுகாம்,.....

03--  1985 ஆண்டு முதல் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை நடந்த சிறுசிறு தாக்குதல்கள்......

04--  1985 ஆண்டு காலப்பகுதியில் தளபதி குமரப்பா மட்டக் களப்பில் செய்த சிறந்த நடவடிக்கைகள்.....

05--  1986  ஆண்டு மாற்று இயக்கமான ரெலோவோடு சண்டையிட்டு வெற்றியீட்டினார் தளபதி கிட்டு.....

06--  மட்டக்களப்பில் நடந்த ஆரம்பப் பயிற்சி தொடர்பாகப் போராளி ரெட்ணம்,.....

07--   12/10/1986 அடம்பன் நகருக்குள் முன்னேறிய இராணுவத்துடன் சண்டை.....

08--  30/03/1987 அன்று கிட்டு அவர்கள் கால் இழந்தமையால்  மனநிலை பாதிக்கப்பட்ட அருணா அண்ணை,......

09--.  04/02/ 1987 பொன்னம்மான் வீரச்சாவு,...

10--  06/03 1987 யாழ் தொலைத்தொடர்பு நிலையம் மினி முகாம் தாக்குதல்....

11--  26/05/1987 ஒப்பரேசன், லிபரேசன் என்ற பேரில் சிங்களப் படையினர் வல்வெட்டித் துறை மீது பாரிய தாக்குதல்......

12--  05/06/1987வடமராட்சியில் அமைந்திருந்த முகாம் மீது தாக்குதல் நடத்த பயிற்சியை ஆரம்பித்த தலைவர், இதுதான் மில்லர் வரலாறு......

13--   29/07/1987 இந்திய, இலங்கை ஒப்பந்தம் நடந்தது என்ன......?

14--   04/08/1987 அன்றைய நாள் நடைபெற்ற இந்திய, இலங்கை ஒப்பந்தம்  தொடர்பாகத்  தமிழீழத்  தேசியத்தலைவரால்  முதல் சுதுமலைப் பிரகடனம்,.....

15--  14/09/1987  அன்று இரவு திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பம்....

16--.  05/10/1987குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு  வேங்கைகள் வீரச்சாவு.....

17--.   09/10/1987 விடுதலைப் புலிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது.......

18--.  நேரடியாக் களத்தில் நின்ற தூயாமணி இது பற்றிக் குறிப்பிடுகையில்.....

19--.  இவ்வாறு அந்தப் பக்கம் நடக்க தலைவருக்கு என்ன நடந்தது? என்பது பற்றி உடன் இருந்த போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில்,.....

20--   யாழில் நின்ற போராளிகளிற்கு என்ன நடந்தது? மீண்டும் தூயாமணி,.....

21--.  தலைவர் மணலாறு சென்றதும் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தார்......,

22--.   இந்திய இராணுவத்தின்  "ஒப்ரேசன் பவான்" நடவடிக்கை.......

23--.  பின்னர் அங்கே நடந்த சண்டை பற்றி போராளி காசன் குறிப்பிடுகையில்......

24--  02/12/1988 அன்று விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அதிபர் பிரேமதாசாவிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தம்,.....

25--  "ரின் பால்"ஒப்பரேசன் பற்றி.....

26--.  கட்டுப்பாட்டை மீறியதற்காக இரு போராளிகளுக்குச்  சாவொறுப்பு.....

27--  03/01/1989 ஆம் ஆண்டு வை.கோபால சாமியின் வன்னிப் பயணம்......

28--.  "செக்மேற் 02" நடவடிக்கை தொடர்பாக போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில்...

29--  இதுதான் கிட்டு அண்ணையின் கடைசி நடவடிக்கையாகவும், கடைசி திட்டமிடலாகவும் இருந்தது.....

30--  27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் .......

31--  இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி போராளி "பாலா" குறிப்பிடுகின்றார்...... 

32--  பின்னர் அங்கே என்ன நடந்தது? எனப் போராளி "ஓஸ்க்கார்" குறிப்பிடுகையில்.....

33--  இதே காலப் பகுதியில் யாழ்பாணத்தில் என்ன நடந்தது என்று போராளி "காமுறு" குறிப்பிடுகின்றார்.....

34--  மகளிர் படையணியின் வீரமிக்க முதல் தளபதி மேஜர் சோதியா (வான்மதி) பற்றி......



09/01/1985 பண்டிதரின் வீரச்சாவிற்கு முன்னர் அனைத்து மாவட்டங்களிற்குமான கட்டளை அதிகாரியாக இருந்த கிட்டு விற்கு மேலும் ஒரு பதவி உயர்த்தப்பட்டது. அவர்  யாழ் மாவட்டப் பொறுப்பாளராகத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.




 கிட்டுவால் நடாத்தப்பட்ட சில தாக்குதல்களைப் பற்றிப் பார்ப்போம்.  தளபதி "கேணல் கிட்டு" அவர்கள் தாக்குதலிற்கு செல்வதற்கான காலம் நெருங்கிக்கொண்டேயிருந்தது.04/03/1983 அன்று போராளி அற்புதன் பொணம்மான்தலமையில் உமையாள்புரம் மீதான தாக்குதலிற்கு விடுதலைப் புலிகள் அணி ஒன்று செல்கின்றது......

அதில் கேணல் கிட்டுவும் செல்கின்றார்........
தாக்குதலிற்கான திட்டம் தீர்மானிக்கப் படுகின்றது; அத்திட்டத்தின்படி வீதியில் நிலக்கண்ணி வெடிகளை தாட்டு விட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருகின்றார்கள். கண்ணி
வெடிகளை கையாளும் அனுபவம் இவர்களிற்கு போதியளவு  இல்லாமல் இருந்தது. இராணுவ வாகனம் இலக்கை அண்மிக்கும் நேரத்தில் அதைக் கண்டு மிரண்டு ஒடிய ஆட்டுக் குட்டியின் கால்கள்பட்டு கண்ணி வெடி வெடிக்க அனைத்துப் போராளிகளும் நிலைகுலைந்து போகின்றார்கள்........


இதை அவதானித்த இராணுவம் இரு கவச வாகனங்களில் இருந்து போராளிகளைச் சுட்டுக் கொண்டு வருகின்றார்கள். இவர்களிற்கு பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை; ஆனால் கிட்டு மட்டும் எதிரியின் பலத்தைக் கவனிக்காது;  துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜீ3 துப்பாக்கியால் இராணுவக் கவச வாகனத்தை நோக்கிச் சுடுகின்றான்........


அவனின் இலக்குத் தவறவில்லை; இராணுவச்சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகின்றது;  தலைவனின் இராணுவம் நிலை குலைந்த வேளையில் கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக பின்வாங்கிச் செல்கின்றார்கள்; தொடர்ந்து 07/04/1983 தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் அவர்களால் நிலை உயர்த்தப்பட்டார்.


தொடர்ந்து அவர் பங்குபற்றிய தாக்குதல்கள்; சிறிலங்கா அரசால் திணிக்கட்பட்ட உள்ளூர் ஆட்சித் தேர்தலை புறக்கணிக்கும் பொருட்டு கந்தர் மடத்தில் இராணுவம் மீதான தாக்குதல்; திருநெல் வேலித்தாக்குதல்; 
இந்தியாவிற்குப் பயிற்சிக்கு சென்ற போராளிகளுக்கான அணிக்கு இரண்டாவது பொறுப்பாக் கிட்டு நியமிக்கப் பட்டார்.


தொடர்ந்து பயிற்சியை முடித்து 02/03/1984 தமிழீழம் வந்த கிட்டு அதே மாதம் குருநகர் இராணுவ முகாம் மீதான தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் பங்கு பற்றினார். அதே நேரம் யாழ் மாவட்டத் தளபதியாகவிருந்த கட்டன். பண்டிதர் 09/01/1985 வீரச்சாவு அடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.

யாழ் மாவட்டத் தளபதி ஆனதும்;


வடமாகாணத்திலே பெரிய காவல் நிலையமாக இருந்த முகாமைத் தாக்கி அங்கு இருந்த பெரும் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஒரு  திருப்பு முனையை ஏற்படுத்தினார். கிட்டுவின்  தொடர்ச்சியான தாக்குதலால்; இராணுவம் நகர முடியாமல் கேம்பிற்குள்ளே முடங்கியது. முற்றுகையை உடைக்க பல முனைகளில் பல முறை முயன்ற சிறிலங்கா இராணுவத்திற்கு தகுந்த பதிலடிகொடுத்து;  இம் முயற்சிகளை முறியடித்தவர் "தளபதிகேணல் கிட்டு" மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்பட்டது. தமிழீழம் என்ற உயர் நிலையை அடைவதற்காக முதலாவது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை உருவாக்கினார் தளபதி கிட்டு. அடுத்து உற்பத்திக் குழுக்களை ஆரம்பித்து; அவர்கள் ஊடாக விவசாயம் மற்றும் வியாபாரம் என்பனவற்றைப் பெருக்கி மக்கள் மனங்களில் இடம் பிடித்த முதல் தளபதியாக கிட்டு கருதப்பட்டார்.


அவ்வேளை சிங்கள இராணுவத்திடம்மிருந்து மட்டுமல்ல; சமூக விரோதிகளிடமிருந்தும்; தேசத்துரோகிகளிடமிருந்தும்; தமிழீழ மண்ணையும், மக்களையும், பாதுகாத்தார் கிட்டு.  மற்றும் சட்டவிரோதச் செயல்கள்; சமூக ஒழுக்க மீறல்கள்; சிறு பிணக்குகள்; என்பனவற்றைக் கட்டுப் பாட்டிற்குள்  கொண்டுவர கிராமிய நீதிமன்றங்களை அமைத்தார்.


அதனூடாக மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். கிட்டு எழுத்தாற்றல் மிக்கவர். அவர் பங்குபற்றிய சண்டைகளை நாவல்வடிவில் எழுதி மக்களிற்கு விடுதலைப் போராட்டத்தை தெளிவு படுத்தினார்.
இது இப்படி இருக்க; அதே காலம் நடந்த 


பயிற்சி முகாமைப் பற்றிப் பார்ப்போம்...!

1986 / 3 ஆம் மாதம் நடந்த விடுதலைப் புலிகளின்   பத்தாவது பயிற்சி முகாம்... அதில் பயிற்சி எடுத்த போராளி குமார் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்;

இதுதான் இந்தியாவில் நடந்த கடசிப் பயிற்சி முகாமாக இருந்தது. அப்பொழுது தமிழீழத்தில் இருந்தும்; அனைத்து மாவட்டங்களில் இருந்தும்; போராளிகள் அவசர அவரமாக எடுக்கப்பட்டார்கள். அதனால் நாங்கள் பயிற்சி நடந்துகொண்டிருக்கும் போது தான் அங்கே வந்து அவர்களோடு இணைந்து கொண்டோம்.

 எமது பயிற்சி முகாம் மணியண்ணையின் தோட்டமான கர்நாடக மாநில எல்லைப் பிரதேசமான மலைப் பிரதேசத்தை அண்டிய கும்பாரப்பிட்டி என்ற இடத்தில் அமைந்திருந்தது. எங்களின் பயிற்சி முகாம் மேலாளராக லெப்.கேணல் பொன்னம்மான் இருந்தார்.

 முகாம் பொறுப்பாளராக  போராளி "றோய்" இருந்தார். எங்களிற்கான போராட்ட ரீதியான பாடங்களை; பொன்னம்மான், மனோ மாஸ்ற்றர், ஜெனகன் பிரதீப் மாஸ்ற்றர், இவர்கள் தந்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சியை; றோய், சஸ்ரின், புரட்சி, இவர்கள் தந்தார்கள். இதில் முந்நூற்றுஐம்பத்தைந்து போராளிகள் பயிற்சி எடுத்தோம். இதில் வீரச்சாவு அடைந்தவர்களை அவர் குறிப்பிடும்போது; இந்தியாவில் இருந்து பயிற்சி முடித்து தமிழீழம் வரும் போது இலங்கை கடல் படையோடு ஏற்பட்ட மோதலில் வீரவேங்கை கில்மன், வீரவேங்கை ஜஸ்ரின், இவர்கள்வீரச்சாவு அடைந்தனர்.

மற்றும் 2ஆம் லெப்.அகிலன் கோட்டையில் நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்தார்.  இதில் பலர் உயிரோடு இருப்பதாகவும்; அவர்களின் பெயர்களை அவர் எம்மிடம் சொன்னார். அவர்களின் அனுமதி இல்லாமல் இதில் பெயர்கள் குறிப்பிடவில்லை.


1985 முதல் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரையான காலங்களில் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்!



30/01/1985 அன்று பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் முகாமை கவச வண்டிகள் சகிதம் சுற்றி வளைத்து நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள்.  ஐந்து மணித்தியாலம்  நடந்த தாக்குதலில் இராணுவத்தின் முற்றுகையை முறியடித்ததோடு மட்டும் இன்றி ஒரு  பவள் கவசவாகனம் அழிக்கப்பட்டது. இருபது இராணுவத்தின்  உடல்களையும்; பெருமளவான ஆயுதங்களையும்; விடுதலைப்புலிகள் கைப்பற்றினார்கள்.

13/02/1985 அன்று முல்லைத்தீவில் உள்ள கொக்குளாய் இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நூற்று ஆறு சிங்களப்  படையினர் கொல்லப்பட்டனர்.  மற்றும் 25 பேர் காயம் அடைந்தனர், இதில்16 போராளிகள் வீரச்சாவு அடைந்தனர், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

13/03/1985 அன்று சிங்களப் பகுதியான வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மதவாச்சியில் விடுதலைப்  புலிகள் நடத்திய தாக்குதலில் அப் பொலிஸ் நிலையம் அழிக்கப்பட்டதோடு ஒன்பது  பொலிஸார் கொல்லப்பட்டனர். 

18/03/1985 அன்று நாகர்கோயிலில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகு ஒன்றை இரண்டு கடல் விமானங்கள், இரண்டு ஹெலிக் கொப்டர்கள், இணைந்து தாக்குதல் நடத்தினர்.  அதில் விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்  தாக்குதலில் ஹெலிக் கொப்டர் ஒன்று சுட்டு வீழ்தப் பட்டது .

10/04/1985 அன்று ஒட்டிசுட்டானில் இராணுவம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஏ. பி . சி கட்டிடத்தை விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்தனர்.

10/04/1985 அன்று வட மாகாணத்தில் மிகப்பெரிய பொலிஸ் நிலையமான யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தை தாக்கினர்.  அப்பொலிஸ் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான ஆயுதங்களையும் கைப்பற்றினர்.   இதில் பத்துப் பொலிஸார் கொல்லப்பட்டனர். 

11/04/1985 அன்று யாழ் பொலிஸ் நிலையத்தை அகற்ற  படையினருக்கு உதவக்  கொண்டு வந்த கிறேன் பாரஊர்தி விடுலைப் புலிகளால் பறித்துக் கொண்டு செல்லப்பட்டது. 

21/04/1985 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டிசுட்டான் பாதையில் இராணுவத்தினரின் மினிபஸ்சை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணி  வெடித்  தாக்குதலில்  இருபது இராணுவத்தினர்  கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.



26/04/1985 அன்று வியாபாரி முலையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பன்னிரண்டு  இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கவச வண்டியும் அழிக்கப்பட்டது .  பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.



26/04/1985 அன்று மூதூர் கட்டைப் பறிச்சானில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ ஜீப் வண்டி தகர்க்கப்பட்டது.  இதில் லெப் .அமரியல் உட்பட ஏழு படையினர் கொல்லப்பட்டனர்.



28/04/1985 அன்று பருத்தித்துறையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில்  நான்கு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



28/04/1985 அன்று யாழ் கரவெட்டியில் விடுதலைப்புலிகள் நடத்திய இரு கண்ணிவெடித்  தாக்குதலில், பதினெட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கவசவாகனம் அழிக்கப்பட்டது.



29/04/1985 அரியாலையில் விடுதலைப் புலிகள்  நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் இரண்டு கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டதுடன்; அதில் பயணித்த பத்து இராணுவதினர் கொல்லப்பட்டனர்.



02/05/1985 அன்று மூதூரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



04/05/1985 அன்று மன்னாரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இரகசியப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.



10/05/1985 அன்று மன்னாரில் அமைந்து இருந்த பொலிஸ் நிலையம்  மீது விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதில் அங்கு  இருந்த ஏழு கட்டிடங்களைத் தகர்த்ததோடு ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றினார்கள். இத்தாக்குதலின் போது இரண்டு பொலிஸார் உயிருடன்  பிடிபட்டனர். சில காலங்கள் தடுப்பில் இருந்தவர்களை பின்நாளில் கிட்டு அன்னை விடுதலை செய்தார்.



12/05 /1985 அன்று உடுப்பிட்டி மண் நிலையம் ஒன்றினுள் இருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் கைக்குண்டு விசி நடத்திய தாக்குதலில் மேஐர் .சிறிலால் மெண்டிஸ் உட்ட ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



13/05/1985 அன்று திருமலை குச்சவெளியில் விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி  வெடித்தாக்குதலில், வானில் வந்த பல பொலிஸார் காயம் அடைந்தனர்.



13/05/1985 அன்று திருமலை சாம்பல்தீவு ஆறாம் கட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகள் வான் மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பல பொலிஸார் காயமுற்றனர்.




22/05/1985 அன்று திருமலைப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் பிராண்டிஸ் டிமேல்  உயர் அதிகாரி உட்பட ஐந்து பொலிஸார் கொல்லப்பட்டனர்.



01/06/1985 அன்று விடுதலைப் புலிகள் திருமலை குச்சவெளி பொலிஸ் நிலையத்தை தாக்கி முற்றாக அழித்தனர். பத்து  இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் முகாமை விட்டுத் தப்பி ஓடினர். அவ்முகாமில்  இருந்த நூற்றுக் கணக்கான ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.



10/06/1985 அன்று குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த   கடற் படை முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உயர் அதிகாரி உட்ட முப்பது  படையினர் கொல்லப்பட்டனர்.



11/06/1985 அன்று  திருநெல்வேலியில் எழுபத்து இரண்டு  அறைகளைக் கொண்ட இராணுவம் தங்கி இருந்த ஹோட்டல் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது.

12/06/1985 அன்று திகிலவத்தையில் விடுதலைப் புலிகள் இராணுவம் மீது நடத்திய தாக்குதலில் ஒரு பொலிஸார் கொல்லப்பட்டார். ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.  அவர்களிடம் இருந்து ஐந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.


1985 /06ம் மாதம் வரை மட்டு, அம்பாறை பொறுப்பாளராக அருணா தலைவரால் நியமிக்கப்பட்டு  இருந்தார்.  அக்காலத்தில் தாக்குதல் தளபதியாக குமரப்பா இருந்தார். அருணா  பொறுப்பு மாறிச் சென்றதும் மட்டு, அம்பாறைப் பொறுப்பாளராக அங்கே குமரப்பா கடமையாற்றினார்.
 இவரின் காலத்தில்தான் நிறையத் தாக்குதல்கள் மட்டு, அம்பாறையில் நடத்தப்பட்டது . குமரப்பா என்றால் சாதாரண போராளி தொடக்கம் அனைத்து பொதுமக்களிற்கும் அது தெரிந்த பெயராகவே இருக்கும்.  அனேகமான தாக்குதல்களை மட்டு,  அம்பாறை மாவட்டங்களில் செய்து;  எதிரிகள் படுவான் கரையான காட்டுப் பகுதிகளிற்குச் செல்வதற்கு  பயந்த நிலையை உருவாக்கியவர் குமரப்பாதான். 
அம்  மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த  வேளையில்தான் மட்டு மாவட்டத்தில் ஒரு பெண்ணைக் காதலித்தார். பின்னர் இதை தலைவருக்குத் தெரியப்படுத்த அவர் திருமணம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார். 1987 கடைசிப் பகுதியில் இந்திய உலங்கு வானூர்தியில் குமரப்பா பொறுப்பாளர்களை ஏற்றி இறக்கும் வேலையாக மட்டக்களப்பிற்குச் சென்று வந்த காலம் அது.

அப்பொழுது தான் விரும்பிய பெண்ணையும்; மட்டக்களப்பில் இருந்து இந்திய உலங்கு வானூர்தியில் ஏற்றி யாழ்ப் பாணம் கொண்டு வந்தார். அடுத்து அவருடைய திருமணம் வல்வெட்டித்துறை அவரின் வீட்டில் நடைபெற்றது.  தலைவர் உட்பட மூத்த போராளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். ஆனால் திருமணம் ஆனாலும் அவர் அந்த வீட்டில் ஒரு கிழமை கூட இருக்கவில்லை.  இயக்க வேலையாக தொடர்ந்து ஓடித்திரிந்து இறுதியில் அவரின் வீரச்சாவும் நடந்தது; என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

26/06/1985 அன்று சர்வதேச  ரீதியில் தமிழினத்தைக் காட்டிக்  கொடுத்தவரும் அரசின் தீவிர ஆதரவாளரான யாழைச் சேர்ந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்த ராஜனிற்கு விடுதலைப் புலிகள் சாவொறுப்பு வழங்கினார்கள்.



20/07/1985 அன்று விடுதலைப் புலிகள் யாழ் பொலிகண்டியில் இராணுவத்தை மறித்து தாக்கியதில் ஏழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



10/08/1985 அன்று வவுனியாவில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் கொமாண்டோக்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் கப்டன் உட்பட ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.



18/08/1985 அன்று வாகரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத் தொடர் வாகன அணி மீது விடுதலைப் புலிகள் நடத்தியதாக்குதலில் இரு வண்டிகள் சேதம் அடைந்தன. மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் தப்பி ஓடினர். அவர்களிடம் இருந்து ஆயுதம் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டது.



23/08/1985 அன்று மட்டு வந்தாறுமுலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



29/08/1985 அன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வினாயகபுரம் என்ற இடத்தில் இராணுவ டிரக் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர்.



02/09/1985 அன்று மட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை விடுதலைப் புலிகள் முற்றுகையிட்டு அவர்களைச்  சரண் அடையுமாறு கேட்டுள்ளனர்.  அதை அவர்கள் நிராகரித்தமையால்;  அவர்கள் இருந்த கட்டிடத்தை விடுதலைப் புலிகள் தரைமட்டம் ஆக்கினர். அச்சண்டையில் பல பொலிஸார் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.



04/09/1985 அன்று திருமலை  கிண்ணியாவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவாகனங்களின் முன்னால் நடந்து வந்த இராணவம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இராணுவத்திற்கு வழி காட்டியாக  வந்த பௌத்தபிக்கு உட்பட பதின் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.

12/09/1985 அன்று தமிழ் மக்களை வேட்டையாட வந்த சிங்கள இராணுவத்தினரின் நடமாட்டத்தை கட்டுப் படுத்துவதற்காக  மட்டக்களப்பு வளையறவுப் பாலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தகர்த்தனர்.  பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



13/09/1985 அன்று யாழ் கோட்டையில் இருந்து வெளியேற முற்பட்ட    சிங்களப்  படைகளை விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி முன்னேற்தைத் தடுத்து நிறுதினர்.



14/09/1985 அன்று விடுதலைப் புலிகளின் திருமலை முகாமை தாக்கச் சென்றஉலங்கு வானூர்தியை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்தினார்கள்.



15/09/1985 அன்று திருமலை கன்னியாப் பகுதியில் ரோந்து வந்த இராணுவத் தொடர்வண்டிகள் மீது நடாத்திய கன்னி வெடித் தாக்குதலில் பதினைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

16/09/1985 அன்று பருத்தித்துறை இராணுவமுகாமில் இருந்து ரோந்து செல்லப் புறப்பட்ட இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவ் நடவடிக்கையால் ரோந்து நடவடிக்கையைக் கைவிட்டு முகாமிற்குள் ஓடித் தப்பினர்.

20/09/1985 அன்று மட்டுக்  கல்லடியில் ரோந்துவந்த இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு இராணுவத்தினர் அவ்விடத்திலே கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். 



07/11/1985 அன்று மட்டு வாகரையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஏழு  இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

14/11/1985 அன்று மன்னாரில் 14 வாகனத்தொடர் அணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு பலர் காயம் அடைந்தனர்.ஜீப் வண்டி ஒன்றும் முற்றாக அழிக்கப்பட்டது.

14/11/1985  அன்று  முல்லை  மாவட்ட நீராவிப்பிட்டியில் மூன்று வண்டிகளில் ரோந்து வந்த இராணுவத்தினர்மீது விடுதலைப் புலிகள் "ரொக்கேட்" தாக்குதல் நடத்தினர் அதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஒரு இராணுவ வண்டி முற்றாக அழிக்கப்பட்டது.

25/11/1985 அன்று மட்டு கரடியன் ஆற்றுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், முன்னேற  முடியாமல் இராணுவம் பின்வாங்கிச் சென்றது.



27/11/1985 அன்று திருமலை சம்பூரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.



01/12/1985 அன்று அம்பாறை தம்பிலுவில் என்ற இடத்தில் இராணுவம் மீது விடுதலைப் புலிகள் "றொக்கேட்" தாக்குதல் நடத்தி  ஒரு கவச வாகனம் அழிக்கப்பட்டது, பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



09/12/1985 அன்று நாவற்குழி இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று  இராணுவத்தினர் கொல்லப்பட்ட தோடு பலர் காயம் அடைந்தனர்.

19/12/1985 அன்று தொண்டமன் ஆற்றில் இருந்து ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்,



20/12/1985 அன்று யாழில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை ஐந்து  ஹெலிகொப்டர்கள் சகிதம் சுற்றி வளைத்த இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் கடுமையாகச் சண்டையிட்டபோது, ரெலோ, ஈபி.ஆர்.எல் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகச் சண்டையிட்டார்கள்.



26/12/1985 அன்று மன்னார் பரப்புக் கடந்தான், ஆட்காட்டிவெளி ஆகிய இடங்களில் ஹெலிகொப்டர்கள் சகிதம் ரோந்து வந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பதினாறு  இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் . மூன்றுஇராணுவ வாகனங்களும்  முற்றாக  அழிக்கப்பட்டது.


1986 /4ம் மாதம் மாற்று இயக்கமான ரெலோவோடு சண்டையிட்டு வெற்றியீட்டினார் தளபதி கிட்டு .



விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கத் திட்டமிட்டது ரெலோ. இதை முன்கூட்டியே அறிந்த கிட்டண்ணை முளையில் கிள்ளி எறிந்து விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்தார் கிட்டண்ணா.
1986 ஆம் ஆண்டு இக்காலப் பகுதியில் மாற்று இயக்கமான ரெலோ அமைப்பிற்கும், எமக்கும் இடையே சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

 ஆனால் பெரிய பிரச்சனைகள் எதுவும் நடக்கவில்லை. இருந்தும்! இரண்டு அமைப்பினரும் தங்கள் தங்களின் போராளிகளைக் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள்.
அரியாலைப்  பகுதியில் எமது உறுப்பினர்களும்; அவர்களின் உறுப்பினர்களும்; ரோந்து நடவடிக்கையில் திரியும்போது கைகலப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் அதில் கடுமையாகக் காயப்பட்டது எமது உறுப்பினர்கள்தான்.அப்
பொழுது அரியாலைப் பகுதியில் எமக்கு "நடா வீடு "என ஒரு முகாம் இருந்தது. அந்த வீட்டில் நடாதான் பொறுப்பாக இருந்தார்.


அப்பொழுது தாக்குதலிற்கு உள்ளான எமது உறுப்பினர்கள் அப் பிரச்சனையை நடா அவர்களுக்குத் தெரிவிக்கின்றார்கள் .உடனே நடா அவ்விடத்திற்குச் செல்கின்றார். அங்கே நின்ற "ரெலோ" உறுப்பினர்களோடு கதைத்துக் கொண்டு இருந்த வேளை இவர்களைத் தாக்கியவர்கள் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார்கள். 

அவர்களைக் கண்டதும் "இவர்கள்தான்  எங்களைத் தாக்கினார்கள்" என நடாவிடம் போராளிகள் சொன்னார்கள்.

நடா அவர்களை மறித்து இருவருக்கும் அடிபோட்டார். அடியை வேண்டிக்கொண்டு இருவரும் கள்ளியம் காட்டிற்கு ஓடிச் சென்று விட்டார்கள். அவர்களின் கோபம் விடுதலைப்  புலிகளிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. 


இனிமேல் கள்ளியங் காட்டுப்பக்கம் யாராவது  வந்தால் பிடிப்பது என ரெலோ திட்டமிட்டது. அதே நேரம் அந்த ஏரியாப் பகுதிக்குப் பொறுப்பாக  லெப். கேணல் சரா அண்ணை இருந்தார்.

எனவே சரா அண்ணையைப் பிடிப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் சரா அவர்கள்  பற்றி அவர்களிற்கு எந்தந் தகவலும் தெரியாது . அக்காலப் பகுதியில் மூத்த உறுப்பினர் அருணா  அவர்கள் இந்தியாவில்  இருந்து தமிழீழம் வரும்போது சிறிலங்கா கடல் படையினர் தாக்கி அருணா வீரச்சாவு அடைந்து விட்டார்.

என தகவல் வந்தது. ஆனால் அருணா அன்று வீரச்சாவு அடையவில்லை. அவரின் படகு சிங்களப் படையால் மூழ்கடிக்கப்பட்டு அருணா அவர்கள் பலமான முறையில் காயப்பட்டு சிங்களப் கடல் படையால் கைது செய்யப்பட்டு கழுத்துறை ஜெயிலில் அடைக்கப்பட்டு  இருந்தார். ஆனால் அப்பொழுது விடுதலைப் புலிகளிற்கு இந்த உண்மை தெரியாமல் இருந்தது. ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் இந்த உண்மை முதலில் பிடிபட்டு  ஜெயிலில் இருந்த மூத்த போராளி ஒருவர் மூலமாகத் தெரியவந்தது.  



அதற்கு முன் பசீர்க்காக்கா மற்றும் சந்துரு இருவரும் போய் அருணா அவர்களின் படம் அடித்து நினைவு அஞ்சலி செய்வதற்காகக் கேணல் கிட்டு அண்ணையால் அனுப்பப் படுகின்றார்கள்; இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கள்ளிங் காட்டை நோக்கிப் போகின்றார்கள். அப்பொழுது "ரெலோ" உறுப்பினரான நித்தி என்பவர் இவர்கள் இருபரையும் மறித்து உங்களை விசாரிக்க வேண்டும்! "கேம்புக்குள்ளே "வாங்கோ..! என்று இவர்களிடம் சொல்கின்றார்.




அதற்கு காக்கா அண்ணை "உங்கட பிரச்சனையை திலீபனிடம் போய்ச் சொல்லுங்கோ!  நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என காக்கா அண்ணை பதில் அளிக்கின்றார். ஏனெனில் அக்காலப்குதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராகத் திலீபன் அவர்கள் இருந்தார்.

 அதற்கு இறுக்கமான குரலில் "வாங்கடா! வாங்கடா ! "என நித்தி கத்திக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.  ஆனால் அங்கு இருந்து தப்புவது கடினமான விடயம் என்பதை காக்கா அண்ணை விளங்கிக் கொண்டார்.

அக்காலப் பகுதியில் காக்கா அண்ணை அவர்களுக்கு விடுதலைப்  புலிகளின் அமைப்பில்  மூன்றாவது திருமணமாகச் செய்து வைக்கப்பட்ட  காலமது. திருமணம் செய்து ஆறேநாள் தான்  ஆகியிருந்தது. அவரின் திருமணத்திற்கு சிறிசபாரெத்தினத்திற்கு அழைப்பிதல் கொடுத்தும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."எனது பெயர் பசீர்காக்கா என்று சிறியிடம் சொல்லுங்கோ!" என காக்கா அண்ணை தெரியப்படுத்த அவர்கள் அலட்சியமாகக் கேட்டுவிட்டு செல்கின்றார்கள்.


ஆனால் இத்தகவலை எப்படியாவது கிட்டு அண்ணைக்கு தெரிவிக்க வேண்டும்.  அதனால் நித்தியிடம் நான் நிக்கின்றேன் இவர் அவசரமாகப் போகவேண்டும் என்று சொல்வி சந்துருவை காக்கா அண்ணை "நேராகப் போவதுபோல் வேகமாக அரியாலை றோட்டால் திரும்பிப்போய்  கிட்டுவிடம் தகவலை சொல்" என அனுப்பி விடுகின்றார்.

சந்துரு சொன்னது போல் கிட்டு அண்ணைக்கு தகவல் போய்விட்டது. காக்கா அண்ணை இவர்களிடம் கைதியாக இருக்கின்றார். அப்பொழுது காக்கா அண்ணை எனது பெயர் பசிர்காக்கா என்று சிறிசாபா  ரத்தினத்திடம் சொல்லுமாறு மீண்டும் மீண்டும் சொல்லிக்  கொண்டிருந்தார்.

இதற்கு இடையில் கிட்டண்ணைக்கு தகவல் கிடைத்ததும்; அவர் கடுமையான கோபம் அடைந்தார். தொடர்ந்து ரெலோ அமைப்பின் பொறுப்பாளர்களை  தொடர்பு எடுத்த போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. இதற்கு இடையில் போராளி முரளியையும் பிடித்து விட்டார்கள். அதனால் கள்ளியங்காட்டில் உள்ள ரெலோவின் "கட்டபராய் முகாமிற்கு" கிட்டு அண்ணையின் கட்டளைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது" இருவரையும் விடுதலை செய்யாமல் விட்டால் நேரடிமோதலை எதிர்கொள்ள வேண்டிவரும்" என கிட்டு அண்ணை அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.



தகவலை அவர்கள்அறிந்ததும் "யாராவது வந்தால் சுடுங்கோ" என காவல் ஆளிடம் கட்டளை வழங்கி இருந்தான்  ரெலோ தலைவன். இவர்கள் அவர்களின் கள்ளியங்காட்டில் அமைந்து இருந்த "கட்டபராய்" முகாமிற்கு போராளி நடா தலைமையிலான குழுவுடன் கதைப்பதற்காகச் சென்றுள்ளனர். இவர்களைக் கண்டதும் காவல் கடமையில் நின்றவன் இவர்களை நோக்கிச் சுட தொடங்கி விட்டான். எமது அமைப்பைச் சார்ந்த ஒரு போராளி அவ்விடத்திலேயே வீரச்சாவு அடைந்து விட்டார். நிலமை பதட்டமாக இருந்ததால் நடா தலமையிலான குழு அவர்களின் முகாமை நோக்கித்தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.

சண்டையைத்  தாக்குப் பிடிக்க முடியாமல் காக்கா அண்ணையையும், முரளியையும்  கூட்டிக்கொண்டு வேறு இடம் மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள்.  அவர்கள்   ஓட ஓட களைத்துக், களைத்து தாக்குதல் நடத்தியது நடா தலைமையிலான ரீம். இருந்தும் இவர்களின் கண்களிற்குத் தெரியாமல் அவர்கள் மறைந்துவிட்டார்கள். அதை அடுத்து வீரச்சாவு அடைந்த போராளியையும் எடுத்துக் கொண்டு முகாம் திரும்பினார்கள் எம்மவர்கள்.

இவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு ஒரு விட்டிற்குள் அடைத்து வைத்திருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் அக்கதவை உடைத்துக் கொண்டுவேகமாக ஓடிபோய் நடந்த பிரச்சனையை கிட்டு அண்ணையிடம் சொல்லி விட்டார்கள்.

 அதே காலம் பருத்தித்துறை சிங்களப் படை முகாம் அடிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெரும் தொகையான போராளிகள் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தகாலமது.  அதனால் எதற்கும் பயப்பிட வேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு இருக்கவில்லை. தொடர்ந்து சிங்களப் படைமுகாம் தாக்குதலை நிறுத்தி யாழில் உள்ள அனைத்துரெலோ முகாம்களையும்;

 அடுத்து.  ஈபி .ஆர். எல்.எப் முகாம்களையும்; முற்றுகை இட்டார்கள் விடுதலைப் புலிகள். சண்டை தொடங்கி விட்டது..! சண்டையின் போது  சரண்டர் அடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு பொது மன்னிப்பு என்ற போர்வையில் சில குறிப்பிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்த்து நின்று சண்டையிட்டவர்கள் அச் சண்டையின் போது கைது செய்யப்பட்டார்கள்.  இவர்களை யாழ் நல்லூர்  பகுதியில்  உள்ள கந்தன் கருணன் என்ற முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.


இதே ஆண்டு கடைசிப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய ரெலோ பொறுப்பாளராக தமிழீழ இசைக்குழுப்  பொறுப்பாளர் சண்முகராஜா /sp இருந்தார். E. P R .L.F பொறுப்பாளராக தேவா இருந்தார்.  புளோட் பொறுப்பாளராக மாமா இருந்தார்.  இவ் மூன்று இயக்கங்களும் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது.  SP போன்ற ஒரு சிலருக்கு கருணா பொது மன்னிப்பு வழங்கி எமது இயக்கத்தில் இணைத்துக் கொண்டார் . இது நடந்து ஒரு மாதம் அழவில் 06/05/1986 அன்று டெலோ இயத்தின் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்களிற்கு விடுதலைப் புலிகளால் சாவொறுப்பு வழங்கப்பட்டது,



 இது இப்படி இருக்க..! இதே காலப் பகுதியில் மட்டக்களப்பில் நடந்த தனது ஆரம்ப்பயிற்சி பற்றியும்; அங்கே நடந்த பதில்தாக்குதல் பற்றியும்; போராளி இரட்ணம் குறிப்பிடுகையில்....!  1986 5ம் மாதம் அளவில் இருநூற்று நாப்பது  இளைஞர்கள் கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளிடம் பயிற்சிக்காச் சென்றோம். அதில் நானும் ஒருவராகச் சென்றேன். மாவடி ஓடை மேற்பதி கெவர் மலைக் காட்டுப் பகுதியில் அப்பயிற்சி முகாம் அமைந்து இருந்தது.

அது மட்டு 7 ஆவது பயிற்சி முகாம் என எங்களிடம் சொல்லப்பட்டது. மெயின் பொறுப்பாக போராளி காந்தன் இருந்தார். பயிற்சி முகாம் பொறுப்பாக மேஜர் குலதீபன் இருந்தார். எமக்கான உடல் பயிற்சியை குலதீபன் செந்தில் இருவரும் தந்தார்கள். எங்களிற்கான போராட்டப் பாடங்களை காந்தன், குலதீபன் மற்றும் சர்வோதயன் மூவரும் மாறி, மாறித் தந்தார்கள். எங்களிற்கான சூட்டுப் பயிற்சியை மேஜர். குலதீபன் நேரடியாகக் கண்காணித்தார்.

அதில் பயிற்சி எடுத்தவர்கள் அமிர் தவறுதலான வெடி விபத்தின் போது வீரச்சாவு அடைந்தார்.  அதில் பயிற்சி எடுத்த டக்ளஸ்- லெப் நிவாஸ்- இவர்கள் விரச்சாவு அடைந்தனர்.  மற்றும் மணலாற்றுக் காட்டிற்குள் நாப்பது அடிக் கிணறு கிட்டிக்கொண்டு இருந்தவேளை அகற்ற முடியாத ஒரு கற்பாறை வந்தது. அதை அகற்றுவதற்காக வெடிமருந்து வைக்கப்பட்டது. அந்த வெடிமருந்து அவரைத் தாக்கி கடுமையான மூச்சுத் திணறலில் இருந்து அடுத்த நாள் வீரச்சாவு அடைந்தார்.  அதே பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த நிக்கிளஸ் அவார். இவரின் வித்துடல் உதைய பிடத்தில் விதைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி முகாம் நடப்பதற்கு இரவு பகலாகத் தலையில் சாமான் சுமந்து;  இப்பயிற்சி நடப்பதற்கு கடுமையாக உழைத்தவர்களை அவர் குறிப்பிடும்போது கண் கலங்கி விட்டார்.  அவர்களின் பெயர்---    வேந்தன், ரமேஸ், உமேஸ்,  வசந்தன், இவர்களே! அப்பயிற்சி முகாமின் நிர்வாக வேலைகளைச்  செய்துள்ளனர்.

அடுத்து அவர் பங்குபற்றிய சண்டை பற்றிக் குறிப்பிடுகையில்


1986/ 6 மாதம் அகத்தி அண்ணையின் தலைமையில் முப்பது  போராளிகளும்; குலதீபனின் தலைமையில் பதினைந்து போராளிகளும்; மொத்தம் 45 பேர் கொண்ட அணி தாக்குதலிக்காகச் சென்றது. அங்கே சென்று அம்பாறையில் கரும்புத் தோட்டத்தில்  இருந்த இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினர் என இருவரும் நிலை கொண்டு இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 அது இரவு 1.30 மணியளவில் நடத்தப்பட்டது. அதில் 11 படை யினர் கொல்லப்பட்டனர். அதில் றிப்பீட்டர் 3,    5 சொற்கண் என்பன எடுக்கப்பட்டது. அதில் எம்மவர்களிற்கு எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை  என அவர் குறிப்பிட்டார் .

1986 /10 மாதம் மேஜர் ௹பன் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட அணி சென்று மயிலவட்டுவான் சிவத்தப் பாலத்தில் ரோந்து சென்ற படையினருக்கு 7.30 பகல் நடாத்திய தாக்குதலில் 3 இராணுத்தினர் கொல்லப் பட்டனர் . 3 T56 ஆயுதம் எடுக்கப்பட்டது.  அதில் எமது தரப்பில் 3 போராளிகள்  காயம் அடைத்தனர்.  விஜி, உமேஸ், அடுத்து.  இன்னொரு போராளியும் வீரச்சாவு அடைந்தார்; என அதில் பங்குபற்றிய இரட்ணம் குறிப்பிட்டார்.  வடகிழக்கில் பல இடங்களில் இப்படியான தாக்குதல்கள் நடந்தன.

  இதே காலத்தில் தான் பெண்களிற்கான இரண்டாவது பயிற்சி முகாம் சாவகச் சேரிப்பகுதியில் நடந்தது. அதை போராளி தீபா தலைமை தாங்கி நடத்தினார். 

ஆண் போராளிகளிற்கான "கலிபோனியா1/ 2" என பெயர் வைத்து கிட்டு அண்னையால் பல பயிற்சி முகாம்கள்  வடக்கில்
நடைபெற்றது.  இருந்தும் பலர் வீரச்சாவு அடைந்தமையால் அத்தகவலைப்  பெற முடியவில்லை.

 மட்டக்களப்புப்  பகுதியில்1தொடக்கம் 6 ஆவது  வரை பயிற்சி முகாம்களும் நடைபெற்றது.  அடுத்து வவுனியா சேமமடுவிலும் பல பயிற்சி முகாம்கள் நடைபெற்றது.  திருமலையிலும் சில பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. 

இது இப்படி இருக்க; கிட்டண்ணையின் காலத்தில்   தான் லெப் கேணல் விக்டர் தலைமையிலான குழு அடம்பனில் சண்டையிட்டது.


 

12.10.1986  அடம்பன்   நகருக்குள் முன்னேறிய  இராணுவதுடன் தாக்குதல்.



சண்டை கடுமையாக நடந்த வேளை  விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க  சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலி கொப்டரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்தத் தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீர மரணமடைகின்றான்.


அடுத்து வீரனின் உடலையும் எடுத்துக் கொண்டு கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவச் சிப்பாய்களையும்; கைப்பற்றப்பட்ட பெரும் தொகையான ஆயுதங்களையும்; எடுத்துக்கொண்டு வெற்றிக் களிப்புடன் போராளிகள் கிட்டு அண்ணையை வந்து சந்தித்தார்கள்.



விக்டர்..! விடுதலைக்காகப் போராட ஆரம்பித்த 1981 இறுதிப்பகுயில் இருந்து அவனது செயல்பாடுகளைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

விடுதலைப் புலிகளுடனான தொடர்பு  ஆரம்பித்தவுடன் அவனை உள்வாங்குவதற்கான அனைத்துக் கவனிப்புகளிலும் இயக்கம் அவதானித்துக் கொண்டேயிருந்தது.

விக்டரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றான்.


அங்கே..! லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கின்றார். பயிற்சி முகாமின் நிர்வாகப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற் பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார்.

இப்பயிற்சிக்குப் பின்னர் விக்டர் ஒரு சிறந்த போராளியாக மாற்றப்பட்டான்.

சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான்.

விக்டரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும், அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

 எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்டர்.


விக்டர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்டரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.


மன்னார் பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலில் விக்டருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்  கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக் கையாண்டவன் விக்டர்.

விடுவிக்கப்பட்ட  மன்னார் நிலப்பகுதியில் விக்டர் பயிற்சி முகாம்களையும்  உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளைத்  தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன்.

அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன் நகருக்குள் ராணுவம் நுழைந்துவிட்டதாக்  கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க் குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும்,நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்டரின் தலைமையில்ஆண் போராளிகளுடன் முதல் முதலாக பெண் போராளிகளையும் கூட்டிக் கொண்டு விக்டர் வேகமாக களமுனைக்குப் சென்றான்.




நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் பெண்களிற்கான தலைமையாக ஜெனனி, வனிஐா உட்பட சுமார் 15 பெண் போராளிகள் அவரோடு சென்றார்கள். அடுத்த அணி சுமன் தலைமையில் அதில் பெண்களிற்கான தலைமையாக தீபா, மதி, ஜெயா,இவர்களின் தலைமையில் 15 பெண் போராளிகள் சென்றார்கள். அதில்   விக்டரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.அவர்களின் முதலாவது சண்டையாக தமிழீழ வரலாற்றில் அது பதிவானது.



விக்டர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில் தான் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும், இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.

சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.

அதனால் இரண்டு கைதிகளையும் தன்னிடம் எடுத்து கிட்டு அண்ணை கைதிகள் பரிமாற்றத்திற்கு தாங்கள் தயார் எனவும்; நீங்கள் விரும்பினால் வரலாம் என சிங்கள அரசிக்குத் தெரியப்படுத்தினார்.


ஆனால் அவர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை அப்பொழுது.....!

 சிங்களத் தளபதியாக இருந்த ஆனந்த வீரசேகர,  கட்டன் கொத்தலாவை இருவரையும் துணிச்சலாக  10/09/1986  அன்றுஅழைத்து சந்தித்ததின் மூலம் சிங்களக் கைதிகளை அவர்களிடம்  ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தார் கேணல் கிட்டு அவர்கள்.


அதற்குப்பதிலாக அவர்கள் சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலிக்குச்சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்  புலிகளின் கைதிகளாக தாங்கள் வைத்து இருந்த  அருணாவையும், காமினியையும் கேணல் கிட்டு விடம் ஒப்படைத்தனர்.


அவர்களின் கைதிகளிற்குப் பதிலாக கேணல் கிட்டு அவர்களும் தங்களிடம் போர் கைதிகளாக முதன்முதலாக சிங்கள இராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு இருந்தவர்களான 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோர் கேணல் கிட்டு அவர்களால்  அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.


ஆனால் 2வது லெப்.அஜித் சந்திரசிறீ  அவர்கள் முகாமிற்கு மீண்டும் போவதை விரும்பவில்லை தான் யாழ்பாணத்தில் பொது மகனாக விடுதலை புலிகளின் பாதுகாப்பில் வாழப்போவதாக தெரிவித்தார்.  இது வந்த இராணுவ அதிகாரிகளிற்கு மிகவும் வெக்கக்கேடான செயலாகயிருந்தது.  அவன் சொன்னதற்கு  அவர்கள் எதுவும் பேசவில்லை அவனை விட்டு விட்டு ஒருதனைக் கூட்டிக்கொண்டு முகாமிற்கு சென்று விட்டார்கள். இதற்கு விடுதலைப் புலிகளின் அன்பும் பாசமும்தான் காரணமாக இருந்தது.

பின்னர் இவர் யாழில் ஒரு தமிழ் பெண்ணைத் திருமணம் செய்து "அஜித் டொக்டர்" என்ற பேரில் அவர் ஒரு மருத்துவப் போராளியாக  2009 மட்டும் கடமையாற்றினார். என்பதை நாம் மறக்கமுடியாது.

 அதன் பின்னர் கப்டன் கொதலாவை ஊடாக சிங்கள மக்களிற்கு தகவல் போய் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மற்றும்  உலக நாடுகள் அனைத்திலும் தளபதி கிட்டு அவர்களின் பெயர்தெரிய வந்தது.  

அடம்பனில் எடுத்த இராணுவ வீரர்களின் பொடிக்கு என்ன நடந்தது அச்சண்டையில் சம்மந்தப்பட்ட போராளி குறிப்பிடுகையில்,

அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் சிங்கள இராணுவ பெற்றோர்கள் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதை வைத்தே அக்காலப் பகுதியில் இருந்தபோராளிகள் சில முடிவுளை எடுத்துள்ளார்கள்,பின்னர் அறிய வரும்போது அது மெய்சிலிர்க்கும். விடயமாகயிருந்தது,

12 ஒக்டோபர் 1986 இல், அடம்பனில் இலங்கை இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீர மரணம் அடைகிறார். அந்தச் சமரில், விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக, விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள இராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள்.

சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு, நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது குழறிக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடைக்கிடையே இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்குப் பயன்பட்டது.

விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார்.

கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம், கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார்.

"உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார்.

கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது பாராளுமன்றத்தில் இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை.

அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதா கப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார்.

கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்துக் கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே இதனை புலிகள் முதலில் நோக்குகிறார்கள்.

அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களையும் இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் தெரிவிக்கிறார்.

அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்கும் இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள்.

தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார்.

ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள்.

ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு, யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது.

நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்…

பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன.

இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்கத் தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள்.

கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள்.

சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.

இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தைச் சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் தாக்குதல் அணிகளோ அமைதி காக்கின்றன.

புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார்.

கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது.

கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார்.

ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார்.

சடலங்களை  ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள்.

மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தின் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை.

ட்ரக்கை reverse இல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் தாக்குதல் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கிட்டரால் அறிவுறுத்தப்படுகிறது.

இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் ட்ரக்கைப் புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம்.

ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் திடீரென பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது.

ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி, கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார்.

ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமைச் சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்கள் இரண்டும், போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது.

கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முன்வந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார்.

வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பைச் சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் மிடுக்காக பதிலளிக்கிறார்.

வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்ள ஆரம்பிக்கிறது.

வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார்.

பின்னர் இராணுவத் தளபதிகளுமனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வந்த ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார்.

முதல் நாளிரவு கோட்டையடியில் நடந்த வரலாற்று சம்பவத்தைப் பற்றியறியாமல் உறங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தாரை, அடுத்த நாள் வெளியான உதயன் பத்திரிகையின், “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” என்ற தலைப்புச் செய்தி நித்திரைப் பாயால் எழுப்புகிறது. விடுதலை புலிகள் போர்க்களத்தில் கடைப்பிடித்த விதிமுறைகளைப் பார்தீர்களா,?

ஆக்கம் _ யூட் பிரகாஷ்


கிட்டு பற்றி தளபதி சொர்ணம் அண்ணை  குறிப்பிடும்போது  1986 நடுப்பகுதியில்  நாங்கள் கொக்குவில்  பகுதியில் இருந்தோம்.  அப்பொழுது கிட்டு அண்ணை வெளியில் இருந்து முகாமிற்கு வரும் போது எவரும் முகாமில் இருக்கவில்லை. எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள். ஆனால் அங்கே நிறையே ஆயுதங்கள் இருந்தது. எவரும் பாதுகாப்பிற்கு விடப்படவில்லை.



இதைப் பார்த்ததும் குழப்பம் அடைந்த கிட்டண்ணை தண்ணீர் கூட குடிக்கவில்லை வெளியே சென்றவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார். அவர்கள்  3 சைக்கிளில் 6 பேர் வெளியே இருந்து வந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர்களிற்கு பேசவோ அடிக்கவோ இல்லை வீட்டிற்குள் சென்று கோடாரியை எடுத்துக் கொண்டு மூன்று சைக்கிளையும்  கொத்தி துண்டுதுண்டாக ஆக்கினார். அத்தோடு அவரின் கோபம் முடிந்து விட்டது.

அன்றில் இருந்து 24 மணித்தியாலமும்   அம்  முகாமைப் பாதுகாக்க போராளிகள் காவல் கடமையில் இருப்பார்கள். என தளபதி சொர்ணம் குறிப்பிட்டார்.தளபதி கிட்டு வாயால் சொல்லாமல் செயலால் செய்து காட்டி அவர்களின் மனங்களை மாற்றுவார்.


இது இப்டி இருக்க மூத்த உறுப்பினர் அருணா கைது பரிமாற்றத்தின் போது அவரை எடுத்த கிட்டு அண்ணை "கந்தன் கருணை"ஜெயில் முகாமிற்குப் பொறுப்பாக விட்டார். அங்கே முன்னர் கைது செயப்பட்ட ரெலோ, மற்றும் ஈபி. ஆர். எல்.எப் உறுப்பினர்களும் இருந்தார்கள்.  அவர்களிற்கு உணவு கொடுப்பதற்கு மூன்று போராளிகளும் வெளிப் பாதுகாப்பிற்கு சில குறிப்பிட்ட போராளிகளும் விடப்பட்டு இருந்தனர்.

,30/03/1987ம் ஆண்டு  தளபதி கிட்டு அண்ணை சென்ற வாகனத்திற்கு  கைக்குண்டு எறிகின்றார்கள் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் . அதில் கிட்டு அண்ணையின் கால்தூண்டிக்கப்பட்டது. ஆனால் கிட்டு அண்ணை மீதும் தலைவர் மீதும் அதிக பாசம் கொண்டவர் அருணா அண்ணை.



இச்செய்தியை அறிந்து கடுமையான கோபமான மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறினார் அருணா அண்ணை. மிகவும் மனநிலை பாதிக்கப் பட்டவராகச்  சென்ற அருணா அண்ணை அவர் சென்ற நேரம் அத் தடுப்பு முகாமில் சுமார் 35 ஈபி. ஆர் .எல் .எப் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.


இவர் போகும் நேரம்எமது போராளிகள் மூவர் இரவு உணவு    அவர்களுக்கு பரிமாறிக்   கொண்டு இருந்தார்கள்.  திடீர் என்று இவர் போனதும் றைவுளை எடுத்து சுடத்தொடங்கினார்; அதில் ஈபி .ஆர் .எல்.எப் 10 ரெலோ 3 உணவு பரிமாறிக் கொண்டிருந்த எமது உறுப்பினர்கள் 3 அச் சம்பவத்தில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து உறுப்பினர்கள் படுகாயம் அடைந்தார்கள்.



அதில்அருணா அண்ணையின் ஆயுதத்தைப் பறிக்கும் போது எமது உறுப்பினர் ஒருவரும் படுகாயம் அடைந்தார் . இதை அறிந்த தலைவர்  உடனே அருணா  அண்ணையை விசாரிக்குமாறு கிட்டு அண்ணைக்கு கட்டளை வழங்கினார்.

 விசாரணையை மேற்கொண்டபோது அருணா அண்ணை சொன்ன விடயம் அந்நேரம் என்ன நடந்தது என்று எனக்கே தெரியாது என்னை மன்னிக்க முடிந்தால் மன்னிக்கட்டாம் இல்லை எனில் சுட்டுக் கொல்லுமாறு தலைவரிடம் சொல்லுங்கோ..! எனஅருணா  சொன்னார். இத்தகவல் கிட்டண்ணையூடாக தலைவருக்கு அனுப்பப்பட்டது.


அவரை வீட்டிற்குச்சென்று  பொது வாழ்க்கையில் ஈடுபடுமாறும்;  இல்லை அவர் இயக்கத்தில் இருக்க விரும்பினால் அவர் வீரச்சாவு அடையும்போது அவரை மாவீரர் பட்டியலில் இணைக்கமாட்டேன்! என்பதை அவருக்குச் சொல்லுமாறு  தலைவர் கிட்டு அண்ணைக்கு செய்தி அனுப்பினார். 

 அச்செய்தி அருணா அண்ணைக்குச் சொல்லப்பட்டது. அச்செய்தியை அறிந்ததும், 1988ம் ஆண்டு யாழில் நின்ற அனைத்துப் பேராளிகளையும் வன்னிக்கு வருமாறு இயக்கம் தெரிவித்த போதும் அருணா அண்ணை மட்டும் அங்கே சென்று தலைவரைப்  பார்க்க விரும்பவில்லை. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நின்று இந்தியா இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.



அக்காலத்தில் இந்தியா இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது சில குறிப்பிட்ட  பொது மக்களோடு அருணா அண்ணையும் இந்தியா இராணுவத்தால் கைது செய்ப்பட்டார் . அவ்வேளை அனைவரையும் முட்டுக்காலில் வைத்தது இந்தியா இராணுவம், திடீரென அருணா அண்ணை எழும்பி முற்றுகையை உடைத்துக் கொண்டு மதிலால்பாய்ந்து ஓடும்போது இந்தியா இராணுவம் சுட்டு அருணா அண்ணை அவ்விடத்திலே கொல்லப்பட்டார்.


அருணா விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய உறுப்பினர் ஆவார். சீலன், ஆனந் இருவரையும் எதிரியிடம் உயிருடன் பிடிபடாமல் இருவரையும் சுட்டு விட்டு அவர்களின் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டுபாதுகாத்தது, மட்டும் அல்லாமல் மட்டு அம்பாறைப் பொறுப்பாளராக இருந்து கணிசமான போராளிகளை கிழக்கு மாகாணத்தில் இணைத்தவர்.   திருநெல் வேலித்தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதலிலும் பங்குபற்றிய ஒரு முக்கியதளபதி ஆவார். 

தலைவர் சொன்னது போல் அவரை மாவீரர் பட்டியலில் எடுக்கவும் இல்லை போராளிகள் கூட அவர் தொடர்பாக ஒரு வரலாறுகளையும்  எழுத வில்லை. அனைவரும் தலைவரின் கட்டளையைப் பின்பற்றினார்கள்.


  அவரின் மனநிலை பாதிக்கப்பட்டமையால் எமதுமூன்று  போராளிகள் உட்பட சில சகோதரர்களையும் இழக்க  வேண்டியிருந்தது. அமெரிக்காவில்  பல தடவை இது நடத்தாலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு தடவை  நடந்தாலும் இதற்காக மிகவும் கவலை அடைகின்றோம்.


14/02/1987பொன்னம்மான் வீரச்சாவு

4/02/1987 யாழ்பாணம் நாவக்குழியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு கிட்டுவும்,  அவர்கள் திட்டமிட்டனர். அத்தாக்குதலை செய்வதற்கு பொன்னம்மான் செயல் பட்டுக்கொண்டிருந்தரர்;

 அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.  அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.


எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.



எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.



1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையில் பயிற்சி எடுத்துக் கொண்டு அதற்குப் பொறுப்பாகவும் இருந்தார் பொன்னம்மான்.  பயிற்சியின் போதே சகவீரர்களையும் எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கி எடுத்தார் பொன்னம்மான்.


 இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் பயிற்சி எடுத்தார்கள் பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை உருவாக்கினார் .


. உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.




வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் உருவாக்கினார்.  பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.


 இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.


பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.


அப்பொழுது யாழ் மாவட்டத் தளபதியாகக் தளபதி கிட்டு இருந்தார், அக்காலபகுதியில் சிங்கள இராணுவத்தினர் முகாம்களிற்கு உள்ளே இருந்தவாறு மக்கள் குடியிருப்பை நோக்கி  தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்த காலம் அது; நாவற் குழி முகாமில் இருந்து அரியாலை மிக நெருங்கிய தூரத்தில் இருந்தது, அன்று அரியாலை  கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடந்தது, மாப்பிள்ளையும்  பெண்ணும் மோதிரம் மாத்திக் கொண்டிருந்த வேளை...!




நாவற்குழி முகாமில் இருந்த  இராணுவத்தினர் 60 mm மோட்டார் எறிகணையை அக்கிராமத்தை நோக்கி வீசினார்கள்.  அச் செல் அவ் மணவறை வீட்டிற்கு மேலே விழுந்து வெடித்தது. ஸ்தலத்திலே மாப்பிள்ளையும் பெண்ணும் சாவடைந்தனர். மேலும் பல மக்கள் காயம் அடைத்தார்கள்.  இச்செய்தி கிட்டு அண்ணைக்குப்போனது ; செய்தியைக் கேட்டதும் கிட்டு அண்ணை கடுமையாகக் கோபம் அடைந்ததோடு மட்டும் அல்லாமல் அக் கேம்பை அழிக்குமாறு பொன்னம்மானுக்குக் கட்டளை வழங்கினார்.


 அப்பொழுது  யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார்.


. இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கு மேலாக ஒரே வெளிப் பிரதேச வெட்டை வெளி.  சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது.


இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும்  எமது  வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களைப் பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.


தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி  சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு; திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.


பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஷ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள்.


புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.


இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.

பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன்.


மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து; இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.



14/-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கொரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டி விடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.


முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன.


முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.


நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.


கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்… மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி..!வியப்பு !  சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. 


பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்ததும் பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள்.


பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது.


பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.


முகாம்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும்;  அந்த மனிதன் இன்று இல்லை. ‘அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.


லெப்.கேணல் பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்த போராளிகள்;


மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர்

(படம்லெப். சித்தாத்தர்)
 (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்)குறித்த படைமுகாம் மீதான தாக்குதலுக்கு வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை தண்ணீர் தாங்கி ஊர்தி வெடித்துச் சிதறியது.


இதன்போது மேஜர் கேடில்சுடன் மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


இது நடந்து ஒரு மாதம் கழித்து இந்தத் தாக்குதலை செய்து கிட்டண்ணை பொன்னம்மானின் இழப்பை ஈடு செய்யத் திட்டமிட்டார். 



 

06.03.1987 யாழ் தொலைத்தொடர்பு நிலைய மினிமுகாம் தாக்குதல் !

06.03.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்ட  யாழ்தொலைத்  தொடர்புநிலைய மினிமுகாம் தாக்குதலைக்  குறிப்பிடலாம். 


யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக் கொண்டு  வந்தனர்.   {  எனவே இதை முற்றாகதாக்கி அழிக்க கிட்டண்ணை திட்டமிட்டார்,

அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு இந்தக் காவலரன்களை அழிக்க தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் .

 

அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்;  உடனடியாக இம்மினி  முகாமை தாக்கியழித்து மக்களைப்  பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குதலணிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட  தாக்குதல் அணிகளையும்  இத்தாக்குதலுக்கப் பயன்படுத்துமாறும்  அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும் அனுப்பிவைத்தார்.


அதற்கமைவாக இம்மினி  முகாமைத்  தாக்கியழிப்பதற்கான திட்டத்தை தளபதி கிட்டண்ணா அவர்கள் விளங்கப்படுத்தி இத்தாக்குதலுக்கான முக்கியத்துவத்தையும் தாக்குதலனிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.  அதற்கமைவாக தாக்குதலணிகள்



தளபதி கிட்டண்ணா அவர்களின் திட்டத்ததில் நடைபெற்றது, தாக்குதற் திட்டத்திற்கமைவாக ஒரு அதிவேக மின்னல் தாக்குதலை மேற்கொண்டனர்புலிகள்.  அதாவது 6 RPG யால் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி எதிரியைத்  திணரடிக்கச் செய்து தாக்குதலை ஆரம்பித்தனர், 

குறிப்பிட்ட நிமிடத்தில் தாக்குதலின் பின் மினிமுகாம் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. இவ்வெற்றிகர மினிமுகாம் தாக்குலில் பல படையினர் கொல்லப்பட்டும்;  எட்டுப்படையினர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர். மற்றும் பல அதிநவீன ஆயுதங்களும் வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் ஐம்பது போராளிகள் பங்குபற்றியிருந்தனர். இத்தாக்குதல் மூலம்  பொதுமக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய முகாம்  முற்றுமுழுதாக கைப்பற்றி தொடர்ந்தும் தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருந்தனர். இவ்வெற்றிகரத்  தாக்குதலை தளபதி கிட்டண்ணா செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். கிட்டண்ணாவிற்கு உதவியாக அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதி ராதா அண்ணா அவர்களும் செவ்வனவே செயற்பட்டிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர் .


அவர்களின்.. விபரம் வருமாறு.


கப்டன். நிக்சன்.


2ம் லெப். அசோக்.


வீரவேங்கை.ரதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். சிறு சிறு தாக்குதல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் கை ஓக்கிக்கொண்டியிருக்க;  தொடர்ந்து முகாம்களை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது  சிங்கள அர படைகளிற்கு; 


26 /05/1987,ஒப்பரேசன் லிபரேசன் என்ற பேரில் சிங்களப் படையினர் யாழ் வல்வெட்டித்துறை மீது கடுமையான தாக்குதலை தொடங்கியது........






 தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான முதல் பாரிய இராணுவ நடவடிக்கை இதுவாகும் சிங்கள அரசால் ஒப்பரேசன் லிபரேசன் என பெயர் வைக்கப்பட்டு  /26./05/1987 அன்று  சிறிய நிலப் பரப்பைக் கொண்ட வடமராட்சிப் பிரதேசத்தில் 8000 க்கு மேற்பட்ட ராணுவத்தினரால் நூற்றுக்கு மேற்பட்ட கனக ரக ராணுவ வாகனங்களும் பல உலங்கு வானூர்திகளும் ,குண்டு வீச்சு விமானங்களும் சிறிலங்கா கடற்படையினரின் கடல்படை படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சுற்றிவளைத்து கோரத் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். 15000 க்கு மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை விட்டு ஏதிலிகள் ஆக்கப்பட்டனர். இத்தாக்குதலை முறியடிப்பதற்காக தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டலில் 200 வரையிலான போராளிகள் எதிர்த்து நின்று  கடுமையான சண்டையிட்டார்கள்.


இதின் முதல் நாள் சமரில் 8 போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களின் விபரம் 01. வீரவேங்கை ராஜ் ,02. வீரவேங்கை நரேஸ் 03.  வீரவேங்கை செட்டி, 04.  கட்டன் வீமன் ,05. லெப் அகிலன், 06. 2ம் லெப் ரம்போ, ஆறு பேர்யாழ் மாட்டத்தைச் சேர்ந்தவர்களும் , 07. 2 ம் லெப் நாகேந்திரன் மன்னார். இவர்கள் அச்சண்டையில் வீரச்சாவு அடைந்துள்ளனர்.   அதில் சுமார் 60 திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள்  அடையாளம் தெரியாமல்  சிதறுண்டு சதைத்துண்டுகளாகக் காணப்பட்டார்கள்.  இந்தியா அரசாங்கம்  தாக்குதலை நிறுத்தச் சொல்லியும் சிங்களப் படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தனது கட்டளையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்பதை புரிந்து கொண்ட இந்தியா அரசாங்கம்  தனது விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை வட பகுதி தமிழர்களிற்கு என வானத்தில் இருந்துபோட்டது.


இது எமது தலைவரிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது  இலங்கைப் படையினரிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என முடிவு எடுத்தார்.


05/06/1987வடமராச்சியில் அமைந்திருந்த முகாம் மீது தாக்குதல் நடத்த தலைவர் திட்டமிட்டார்;




இதற்கான வேவு நடவடிக்கையை மேஐர் விசு மற்றும்  மூத்த போராளி சுக்குளா தலைமையிலான போராளிகள் ஈடுபட்டனர். 

அப்பொழுது எமது அமைப்பில் இருந்த பிரபா என்பவர் நெல்லியடி சண்டைக்குப்பிறகு தலைவரால் அவருக்கு "சக்கைப்பிரிகேடியர் " என பட்டப் பெயர் தலைவரால் வைக்கப்பட்டது.  அப்படி மிகவும் திறமையானவராக பிரபா காணப்பட்டார். பிரபா அவர்களின் தலைமையில் நெல்லியடி சண்டைக்கான திட்டம் தலைவரால் தீட்டப்பட்டது.


அப்பொழுது தென்மராட்சி, வலிகாமம், வடமராட்சி அனைத்து பிரதேசங்களிலும் இருந்து சுமார் 120 போராளிகள் எடுக்கப்பட்டு பளையில் உள்ள வைரமாளிகை என்ற தென்னம் தோடத்தில் போராளிகளைகொண்டு போய் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரைத் தாக்குவதற்கான மாதிரிப் பயிற்சி தேசியத்தலைவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதற்கு மெயின் பொறுப்பாக மாத்தையாவை விட்டாலும் தலைவரே அப்பயிற்சியை நேரடியாக வழங்கிக்கொண்டுயிருந்தார், 



காலையிலே  ஒரு டெலிக்கா வேனில் தலைவர் பயிற்சியை பாப்பதற்கு வந்து நிப்பார்.


அப்பொழுது போராளிகள் தென்னை ஓலைகளை வெட்டி அவரிடம் கொடுப்பார்கள். அதை அவர் நிலத்தில் போட்டு   அதில் இருந்து பயிற்சியைப்  பார்த்துக்கொண்டுயிருப்பார். அவரின்  பாதுகாவலராக பிரிகேடியர் சொர்ணம் மற்றும் பிரிகேடியர் கடாபி இருவரும் நிப்பார்கள்.




 அதில் கலந்துகொண்ட முக்கிய போராளிகளான லெப் கேணல் செல்வராசா,  ஜெயம்,  பிரிகேடியர் வானு, லெப் கேணல்சூட்டி பிரிகேடியர் சூசை, கப்டன் மில்லர், போராளி அசோக் சுசிலன், மேஐர் விசு,  போராளி சுக்குளா, போராளி ஜெயா உட்பட சுமார் 120 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள்.

 ஒரு மாத காலம் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் பங்குபற்றிய தூயாமணி  ஆகிய எங்களின் 15 பேருக்கு ஜெயம் பொறுப்பாகவும்; எங்களின் இரண்டாவது பொறுப்பாக திரு அசோக் அவர்கள் இருந்தார்கள் . பதினைந்து பேராக எட்டு அணிகள்  உருவாக்கப்பட்டு  கடுமையான பயிற்சி நடைபெற்றது.  அப்பயிற்சியை லெப் கேணல் செல்வராசா அவர்கள் வளங்கினார், எங்களின் திட்டம் இது தான் முதலில் வாணு அவர்கள் RPG ஆல் அடித்து சண்டையை ஆரம்பிக்க நாங்கள் அனைவரும் ஆயுதங்களால் ஒரு செறிவான தாக்குதலை நடத்துவோம்.



அந்த சத்தத்தில் இராணுவம் திகைத்து நிக்கும் வேளையில் 5/07/198அன்று இரவு மில்லர் சக்கை வண்டியை உள்ளே கொண்டு போய் வெடிப்பார். அவர் வெடித்ததும் அடுத்து ராசிக் இரண்டாவது வாகனத்தை செலுத்தி வெடிப்பார். இது இப்படி நடக்க சுக்குளா அவர்களின் அணி ஒரு பக்கமும்; விசு அவர்களின் அணி ஒருபக்கமும் அடித்துக்கொண்டு உள்ளே இறங்குவார்கள்.


 எங்களின் அணி திடமாக இருந்தது திட்டமிட்டாப்போல் சண்டை ஆரம்பம் ஆனது. பிரிகேடியர் வானு அவர்கள் R.p.G ஆல் அடிக்க நாங்கள் எல்லோரும் கேம்மை நோக்கிச் சரமாரியாகச்  சுட்டோம்.


எதிர்பாராத  தாக்குதலை கண்ட இராணுவத்தினர் அமைதியாக இருந்தனர். கப்டன் மில்லர் அவர்கள் சக்கை வாகனத்தை வேகமாகச் செலுத்தி உள்ளே வெடித்தார்.  ஆனால் நாங்கள் நினைத்த இடத்திற்கு அதுபோகவில்லை. அதனால் எங்களை சிறிது தூரம் பின்னால் வருமாறு கட்டளை வந்தது. தொடர்ந்து இரண்டாவது வாகனத்தை போராளி ராசிக் அவர்கள் உள்ளே வேகமாக செலுத்திச்சென்றார். ஆனால் அது இடையில் பிரண்டு விட்டது வாகனம் பிரண்டதும் அவர் பின்னால் வந்து விட்டார். இருந்தும் அவ்வாகனம் வெடித்துச் சிதறியது.


பின்னர் நாங்கள் எல்லோரும் அடித்துக்கொண்டு உள்ளே சென்றோம். அனைத்து இராணுவத்திரின் உடல்களையும் பெரும் தொகையான ஆயுதங்களையும் எடுத்தோம். நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்களை நாங்கள் எடுத்தோம். சண்டை மிகவும் வெற்றியாக அமைந்தது. மில்லர் என்ற மாபெரும் வீரனை இழந்த சோகத்தில் நாம் மீண்டும் எமது இடங்களிற்குச் சென்றோம்.


,கப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் (01/01 /1966 அன்று பிறந்தார் - /05 /07/1987) அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலிப்போராளியாகச் சென்று விடுதலைப் போராடத்தில் பாரிய ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் அவ் முகாமை இலகுவாகத் தாக்கி அழிப்பதற்காகத் தானே முதல் கரும்புலியாச் சென்று முகாமைத் தாக்கி அழித்தது மட்டும் அல்லாமல் கரும்புலி  மறவர்களிற்கு வழிகாட்டியாகவும்     இவரே இருந்தார் .


இவரின் குடும்பம் பற்றிய விபரம்

யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை பருத்தித்துறை, இலங்கை வங்கிக் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார்.


இயக்கத்தில் இணைவு



இளம் வயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த வசந்தன்1985 ஆண்டு விடுதலைப் புலிகளின் 9 பதாவது பயிற்கு முகாமில் இந்தியாவில் பயிற்சி எடுத்தார், மிக விரைவிலேயே கரும்புலிப் பிரிவில் இணைக்கப்பட்டார்இவர் 

. இயக்கத்தில் இவர் மில்லர் என அழைக்கப்பட்டார். இலங்கை இராணுவம் வடமராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தபோது; வசந்தன் இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 யூன் 5 ஆம் நாளன்று வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து ஒன்றை கரவெட்டியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்க வைத்தார். இதன் போது சுமார் 100 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.



 கரும்புலி மில்லர் அவர்களின் தாக்குதலில் சுமார் 100 சிங்கள இராணுவத்தினர் ஒரே நாளில்கொல்லப்பட்டனர்,சிங்கள அரசையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் கிலி கொள்ளச் செய்த அந்த முதலாவது கரும்புலித் தாக்குதல், கப்டன் மில்லர் எனும் மாவீரனால் செய்து முடிக்கப் பட்டது.

 மில்லர் பற்றிஅவரோடு பயிற்சி எடுத்த போராளி காசன் இறிப்பிடுகையில் மில்லர் அதிகமாகக் கதைக்க மாட்டான் என்னோடுதான் சேர்ந்து பழகுவான் பயிற்சி முடிந்ததும் விடுமுறையில் விடுவார்களா? என்று என்னிடம் கேட்டான் அதற்கு நான் ஓம் என்றேன் விடுமுறையில் சென்றபின்தான் நான் சண்டைக்குப் போவேன் என்றான் அதின் பொருள் சாவதற்கு முன்னர் அம்மாவை பார்க்க வேண்டும் என்பதே ஆகும்அது போல் கரும்புலியாக அவன் செல்வதற்கு முன்னர் அவன் விடுமுறையில் சென்று தாயோடு கதைத்த பின்னரே அவ்வேலையை செய்து தனது மாநிட வாழ்க்கையை முடித்துக் கொண்டான்.



 29/07/1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் நடந்ததுஎன்ன?

அதை அடுத்து ஜே.ஆர்.ஜேவர்த்தனா  கடுமையாகப் பயந்தார், இவர்கள் தற்கொலைதாரிகளாக   மாறிவிட்டார்கள். எங்கே எந்த இடத்தில் தாக்குதல் நடக்கும் என்பது தெரியாது? ஆனால் இப்படி ஒரு தாக்குதல் எதிர்காலத்தில் நடந்தால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும்; என்பதை ஜெயர் அறிந்து கொண்டார்.


உடனே போய் இந்தியாவின் காலில் விழுந்தார் ஜே.ஆர் ஜேவர்த்தனா "நீங்களே புலிகளை வளர்த்தீர்கள் நீங்களே அவர்களை அழித்துத்தரும்படி தயவாகக்கேட்டார்" ராஜீவ்விடம்.



எப்ப வருவார்கள் என எதிர்பார்த்த ராஜீவ் அவர்களிற்கு மிக்க மகிழ்ச்சியாகயிருந்தது. அதை ஏற்றுக் கொண்டது மட்டும்  இன்றி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்காக தான் கொழும்பிற்கு  வருவதாக உறுதி அளித்தார் ராஜீவ் அவர்கள்; பெரும் மகிழ்ச்சியில் ஜே.ஆர் கொழும்பு திரும்பினார்,.

இது இப்படி நடந்து  கொண்டேயிருக்க இந்திய அதிபர் ராஜீவ் அவர்கள் பேசவல்ல அதிகாரியான பூரியை யாழ்ப்பாணம் அனுப்பி இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக எமது தலைவருக்கு  தெரியப்படுத்தி விட்டு பெரும் நிறைவோடு இந்தியா திரும்பினார் பூரி அவர்கள்.

29/07/1987  அன்று,ராஜீவ் அவர்கள் கொழும்புக்குச்  சென்று இந்தியா இலங்கை  ஒப்பந்தத்தில்  கைச்சாத்திட்டு திரும்பும் பாதையில் வைத்து இலங்கை ராணுவச்சிப்பாய் ஒருவர் பலமான முறையில் துவக்கு பின் பக்கத்தால் அதிபர் ராஜீவ் காந்தி அவர்களின் தோளில் அடித்தார். அந்த அடியின் வலி தான் தமிழர்களிற்கு நிரத்தரத்  தீர்வுகொடுக்க ராஜீவ் பின்னடித்ததாக மூத்த போராளிகள் நகைச்சுவையாகச் சொல்வார்கள்.  அடியையும் வேண்டிக் கொண்டு ஒப்பந்தில் கைச்சாத்தும் இட்டுவிட்டு ராஜீவ் இந்தியா திரும்பினார்,


அதை அடுத்து அவர் போய் சில குறிப்பிட்ட  நாட்களில் இனப்பிரச்சனை தொடர்பாகப் பேச இந்தியா வருமாறு தலைவருக்கு அழைப்பு வந்தது, அதனால் தலைவர் தன்னை தயார்   படுத்துவதற்காகப்  விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களிற்கும்  மூத்த போராளிகளிற்குமான" பிறெஸ் ஒன்றுகூடல்" ஒன்று  தயார்படுத்தினார். அதில் நான் இந்தியா போய் பேச்சு வாத்தையில் கலந்து பேசிவிட்டு வரும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக கோபாலசாமி, மகேந்திரராஜா அல்லது மாத்தையா அவர்களை நியமிப்பதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் தலைவர்   தெரியப்படுத்தினார்.


ஒன்று கூடல் முடிந்து அடுத்த நாள் இந்தியாவில் இருந்து   30 /07/1987  அன்று ஹெலிக்கொப்டரில் தலைவரை பேச்சுவார்த்தைக்குக்  கொண்டுபோக திரு. குக்தா அவர்கள் சுதுமலை அம்மன் கோயிலில் வந்து இறங்கினார்,. தயாராக இருந்த விடுதலைப் புலிகளிற்கு மகிழ்சியாகயிருந்தது. 



அடுத்து தலைவர் பாலா ,அண்ணன் ,கேணல் சங்கர் அண்ணை மூவரையும் சுதுமலையில் இருந்து கூட்டிக்கொண்டு குக்தா அவர்கள்  சென்னைக்குச்  சென்றார்.  அங்கிருந்து பேச்சுவார்த்தைக்கு  கொழும்பு  அசோகா  ஹோட்டலிற்கு மூவரும் அனுப்பப்பட்டார்கள்.


அங்கே வைத்து  இந்திய  இலங்கை ஒப்பந்தம் தொடர்பான வரைபை  இந்திய  அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை தலைமையாளரான திரு  டிக்சீட் அவர்கள் பாலா அண்ணையிடம் கொடுத்தார்.  பாலா அண்ணை  அதை வாசித்து தலைவருக்கு விளங்கப்படுத்தினார்.


அதிலிருந்த விடயம் தற்காலிக வடகிழக்கு இணைப்பு, இரண்டு வருடத்திற்கான இடைக்கால நிர்வாகம், இரண்டு வருடத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாண மக்களிடம் வடக்கோடு நீங்கள் இணைய விரும்புகின்றீர்களா? என்ற ஒரு பொது வாக்கடுப்பு வைத்து அதில் பெரும்பாண்மையானவர்கள் விருப்பமென வாக்கு அளித்தால் நிரந்தரமாக இணைக்கலாம் என்று அவ் ஒப்பத்ததில் எழுதப்பட்டு இருந்தது.

அத்தோடு நீங்கள் வைத்து இருக்கும் ஆயுங்களை இந்தியா அமைதிப்படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்; பிரச்சனை தீரும் வரை இந்தியா அமைதிப்படை இலங்கையில் இருக்கும் எனவும்;  சிறுபாண்மை தமிழர்களின் பாதுகாப்பை இப்படை உறுதிப்படுத்தும்.

 என்றும் உங்களின் போராளிகளிற்கு புணர் வாழ்வு அளிப்பதற்காக இந்தியா அரசு நிதி உதவி வழங்கும் எனவும் இடைக்கால நிர்வாகம் அமைந்தால் ஊர்காவல் படை அல்லது பொலிஸ் என்ற கட்டுமானத்துடன் உங்களின் போராளிகள் அதில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு திறியோ303 போன்ற ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ; அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  அதை வைத்து உங்களின் மக்களைப்  பாதுகாற்க முடியும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.  ஆனால் நீங்கள் ஏற்றாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி இந்த ஒப்பந்தத்தை இந்தியா அரசாங்கம் நடைமுறைப்படுத்தியே தீரும் என்று தலைவருக்குத் தெரியப்படுத்தினார் தளபதி டிக்சீட் அவர்கள்,,

வடக்கு மக்களிடம் வைக்கத்  தேவையில்லையென அதில் குறிப்பிடப்பட்டுயிருந்தது, இதை வாசித்த பாலா அண்ணைக்கு கடும் கோபம் வந்தது.



 வடகிழக்கு எங்களின் பாரம்பரிய பிரதேசம், அங்கே வாழ்பவர்கள் எங்களின் மக்கள் அங்கே நாங்கள் தேர்தல் வைக்க வேண்டிய தேவையில்லையெனவும்; அப்படி வைப்பதாகயிருந்தால் இரண்டு மாநிலங்களிலும் தான் வைக்க வேண்டும் என்றும் பாலா அண்ணை வாதிட்டார். ஆத்திரம் அடைந்த டிக்சிட் இதை ஏற்காவிட்டால் ஒரு சிகரேட் பத்தி முடிய முன்னர் உங்களின் 200 சாரம் கட்டிய பையன்களையும் சுட்டு த்தள்ளி விடுவோம் என மிரட்டினார்.

,இந்த முரன்பாட்டை அடுத்து தலைவரும் பாலா அண்ணையும் ஒருத்தரோடு ஒருதர் கதைக்காதவாறு தனிமைப்படுத்த பாலா அண்ணையை அவர்கள் கூப்பிட்டபோது ; தலைவர் பாலா அண்ணை பிரியும் போது சொன்ன விடயம்   எதிலும் கையெழுத்து வைக்க வேண்டாம்!  எனச்  சொல்லி அனுப்பினார் சில குறிப்பிட்ட வாரம் இருவரையும் இந்தியா இராணுவம் தனிமைப்படுத்தி வைத்து இருந்தது.

இது இப்படி நடந்து கொண்டேயிருக்க  இலங்கையில் இருந்த மூத்த போராளி பேவி அல்லது  இளங்குமரனோடு தலைவர் கதைத்து இலங்கையில் உள்ள தமிழரசுக்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்திடம்  எந்த ஒப்பந்தத்திலும்  கைச்சாத்து இட வேண்டாம் என்ற தகவல் அனுப்பப்படுகின்றது.

 தலைவரின் ஆலோசனையை நிறைவேற்றும்போது உங்களிற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டால் அந்தக்காலத்தில் மட்டுமாவது லண்டனில் போய் தங்கி விட்டு வருமாறும்; நீங்களும் ஏற்க வேண்டாம்! நானும் ஏற்க மாட்டேன். என்ற தகவல் அமுர்தலிங்கத்திற்கு  அனுப்பப்பட்டது,  இந்த விடயம் பரபரப்பாக  நடந்துகொண்டேயிருக்க  இதை அறிந்த ஐயா நெடுமாறன் உயர்மட்ட அரசியல் தலைவர்களோடு கடுமையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.



, அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஐயா தீவிர ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

 பிரபாகரன் தனிமைப்படுத்தப்பட்டு  வீட்டுக் காவலில் இருக்கும் தகவல் ஐயாவின்  காதிற்குச் சென்று விட்டது.  உடனே கோபம் அடைந்த ஐயா தமிழ்நாட்டு  மக்களிடம் பிரபாகரனை விடுதலை செய்யும் வரை மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் நடாத்துமாறு கட்டளை வழங்கினார். இதை அறிந்த  அவரின் ஆதரவளர்கள்தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைத்  திரட்டி வீதியில் இறங்கி  பிரபாகரனை விடுதலை செய் என மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  முன்னரும் ஒரு பிரச்சனையில் ஐயாவின் கடும் உழைப்பாலேயே  தலைவர் பாதுகாக்கப்பட்டார்.   இப்பொழுதும் அவரின் கடுமையான செயற்பாட்டால் தலைவர் பாதுகாக்கப்பட்டார்.


இதைச் சமாளிப்பதற்காக  இந்தியாவின் முதல் அமைச்சராக இருந்த MGR அவர்களிடம் பிரபாகரனை நீங்கள் போய் பேசி சமாளிங்கள் என சொல்லி அனுப்பினார்  ராஜீவ்அவர்கள். பிரபாகரனை  சந்தித்த MGR  நீ ஒரு முதல் அமைச்சர் கேட்டாய் அவர்கள் இரண்டு முதல் அமைச்சர்பதவி  தருவதாகச் சொல்கின்றார்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்கினார். 



MGR தமிழர் என்ற காரணத்தால் எங்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடகிழக்கை குறிப்பாக இது கிழக்கை துண்டாடும் சதித்திட்டம் என்பதையும் தமிழர்பகுதியில் இருக்கும் சிங்களக் குடியேற்றங்களை பாதுகாற்பதற்காகவும், எமது தமிழீழக் கனவை சிதைப்பதற்கான திட்டம் என்பதையும் MGR அவர்களுக்கு  தெளிவு படுத்தினார் தலைவர்,. அதையடுத்து MGR சொன்ன கதை தலைவருக்கு  "நீர் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன் நீர் கொள்கையில் உறுதியாகயிரு" என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.  MGR அவர்களைக்  கொண்டுபோயும்   முன்னேற்றம் ஏற்படவில்லை அதுவும் தோல்வியில் முடிந்தது இந்தியவிற்கு .



இதுக்கு இடையில் இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் யாழில் உள்ள பலாலிக்கு இந்தியா இராணுவம் 29/07/1987அன்று வந்து இறங்கி   விட்டது.   அப்பொழுது விடுதலைப்  புலிகளின் யாழ்மாவட்டத்  தளபதியாக லெப்.கேணல் குமரப்பா அவர்கள் இருக்கின்றார்.



 அவரிடம்  நாங்கள் இந்திய அமைதிப்படை யாழ்பாணத்திற்கு ரோந்து வரப்போகின்றோம் என்று தளபதி குமரப்பா அவர்களிடம் அனுமதி  கேட்கின்றது;  இந்தியா இராணுவம் மிகவும் ஆங்கிலம் பேசக்கூடிய தளபதி குமரப்பா" தலைவரை எங்களிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கோ! அதற்கு பிறகுதான் நீங்கள் வரலாமா? அல்லது வரக்கூடாதா? என்ற முடிவை நாங்கள் எடுப்போம்.  இல்லையெனில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்" என்ற செய்தியை குமரப்பா வெளிப்படையாகத்  தெரிக்விக்கின்றார் இந்தியா   இராணுவத்திற்கு.....


இங்கே பயங்கர  முரனண்பாடு  நடந்துகொண்டிருக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் ஏற்பாட்டில் தலைவர்  பாலா அண்ணை இருவரும் அதிபர் ராஜீவ்காந்தியைச் சந்திப்பதற்கு  ஏற்பாடு செய்கின்றார் எம். ஜீ . ஆர்


ராஜீவ்வை சந்திப்பதற்கு வாகனத்தில் தலைவரையும், மற்றும் பாலா அண்ணையையும் ஒரு பாதுகாப்பான வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இந்தியா அதிகாரிகள் செல்கின்றார்கள். தலைவரைக்  கண்டதும் ராஜீவ் அவர்கள் கதிரையில் இருந்து எழுந்து வந்து "நீர் ஒரு மாவீரன் தான் நான் உன்னை அறிந்திருக்கின்றேன் என புகழாரம் சூட்டினார்".



அதை அடுத்து ராஜீவ் சொல்ல  பண்ருட்டி ராமச்சந்திரன் மொழிபெயர்த்து  தமிழில் தலைவருக்குத் தெரியப்படுத்தினார் , அதில் அவர் சொன்னது "அங்கே அவர்கள் பக்கமும் பெரும் பிரச்சனை உள்ளது;  பெரும்பாண்மை சிங்களவர்கள் உங்களின் தீர்வு விடயத்தை ஏற்கவில்லை;  அதனால் நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  என அவர் ஆலோசனை வழங்கினார்,  வடகிழக்கு  தற்காலிக இணைப்பு அதாவது வடகிழக்கு    தற்காலிக அரசாங்கம்  உங்களிற்கு வழங்கலாம். நீங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.  இந்தியா அமைதிப்படை உங்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அதில் முடிவெடுக்கும் அதிகாரிகளாக 7 பேர் அதில் ஐந்து தமிழர்கள்,  இரண்டு முஸ்லிம்ங்கள், எனவும் பெரும்பாண்மை நீங்கள் தான் என்று ராஜீவ் தெரிவிக்க இதை எழுத்து மூலம் தரமுடியுமா? என்று தலைவர் கேட்டார்.   தலைவர் கேள்வியைக் கேட்டதும் ராஜிவ் அவர்களின் கண் சிவந்தது.  எழுத்து மூலம் தர முடியாது கண்டிப்பாகத்  தருவோம் என்று ராஜீவ் பதில் அளித்த்தார்.


அடுத்து போராளிகளின் செலவு தொடர்பாக அவரிடம் கேட்போது அவர்களின் புனர் வாழ்விற்காக பணம் தரலாம் என பதில் அளித்தார்.  அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவுற்றன.  இந்திய உலங்கு வானூர்தியில் தலைவர் மற்றும் கேணல்சங்கர் அண்ணை, இருவரையும் ஏற்றிக் கொண்டு 01/08/1987 அன்று பலாலி விமான நிலையத்தில் விட்டது இந்திய அரசு.



அங்கே இருந்த "ரட்சிங்" அவர்கள்  தலைவரை வரவேற்றார், தலைவரைப் பார்த்து சில கேள்விகளைக்  கேட்டார். "உங்களிற்கு அழகான மனைவி  பிள்ளைகள் இருக்கின்றார்கள் நீங்கள் ஏன் சாக வேண்டும்" என்று அவர் கேட்க நீங்களும் ஒரு ராணுவவீரன்தான், நானும் ஒரு இராணுவீரன்தான் எந்த ஒரு ராணுவவீரனும் மனைவி பிள்ளைகள் என்று சாவைக் கண்டு பயப்படுவது இல்லை  என தலைவர் பதில் அளித்தார்,

பலாலி  இராணுவத்துடன் சில கேள்விகளிற்குபதில் சொல்லி விட்டு இந்தியா இராணுவத்தின் வாகனத்தொடர் அணியின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் தலைவர்,



அவர்கள் வந்தது மிகவும் குழப்பமான மன நிலையில் காணப்பட்டார் ஏனெனில் அவசரமாக சில முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது. அப்பொழுது யாழ்  மாவட்டத்தளபதியாக இருந்த குமரப்பாவைக்  கூப்பிட்டு இந்தியா இராணுவத்தின் உலங்கு வானூர்தியை எடுத்துக்கொண்டு வடகிழக்கில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்.  அனைத்து மாவட்டத் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை ஏற்றிக் கொண்டு  வருமாறு  தலைவர் கட்டளை வழங்கினார்.

 1987 / முதலாம் மாதத்தில் இருந்து மட்டு அம்பாறை சிறப்புத் தளபதி என்ற பொறுப்பில் இருந்து விடை பெற்றார்  லெப் கேணல் குமரப்பா இறுதியில் அவர் வீரச்சாவு அடையும்போது யாழ்  மாவட்டத்தளபதியாக இருந்தார்,


அதை ஏற்றுக்கொண்ட லெப்.கேணல் குமரப்பா 02 /08/1987 இந்தியா இராணுவத்தின் ஹெலிக் கொப்டரை வேண்டிக்கொண்டு முதலாவதாக மட்டக்களப்பிற்குச்  சென்றார், அங்கே சென்று மட்டக்களப்பு  விமானநிலையத்தில் தரையிறங்கியதும் தளபதி கருணா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பிறான்சீஸ் புலனாய்வுதுறைப்பொறுப்பாளர் திலிப் மற்றும் மூத்த போராளி  காந்தனாகிய நானும் மட்டக்களப்பு விவஸ்ரேரியத்தில் அவர்கள்முன்னரே எமக்கு அறிவித்தமைக்கு அமைய  அங்கே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்,


குமரப்பா தரையிறங்கியதும் 15 இந்தியாசிப்பாய்களின் பாதுகாப்புடன் அவர்களின் வாகனத்தில் எங்களை வந்து சந்தித்தார்கள், அப்பொழுது  குமரப்பா  எங்களிடம் சொன்னார் "உங்களைக்  கூட்டிக்கொண்டு தலைவர் வரச்சொன்னதாகச்சொல்லி" எங்கள் 4 பேரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்,


நாங்கள் மட்டக்களப்பு விமான நிலையித்தில் இருந்து யாழப்பாணம்  பலாலிக்கு வந்து சேர்ந்தோம், அங்கே வந்து இறங்கியதும் இந்திய  இராணுவம் எங்களிற்கு உணவு கொடுத்துவிட்டு பின்னர்  அங்கே பொறுப்பாக இருந்த" கப்சிங்" அவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்தினார் குமரப்பா.,


அடுத்து நாங்கள் யாழ்பாணம் உள்ளே வந்ததும் திருநெல் வேலியில் இருந்த எமது மட்டக்களப்பு தொடர்பகம் சென்று அங்கே தங்கினோம், காலை  விடிந்ததும்  தொலைத்தொடர்பு ஊடாக எங்களிற்கு தகவல் வந்தது, அதாவது எங்கள் 4 பேரையும் வெளிக்கிட்டு நிற்கவும் என்று அப்பொழுது நாங்கள் தாயாராக நின்றோம்.





காலை  எட்டு  மணிக்கு லெப். கேணல் திலீபன்  வந்து எங்களை ஏற்றிக் கொண்டு தலைவரைச் சந்திப்பதற்காக யாழ் பிரம்படியில் அமைந்து இருந்த வீட்டில் விட்டார். அங்கே ஒன்று கூடலிற்காக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த மாவட்டத்  தளபதிகள் மற்றும் மூத்த போராளிகள் என சுமார் 75   இற்கு  மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் அங்கே நின்றோம்.


03/08/1987 அன்று மீண்டும் திலீபன் வந்து எங்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு கோல்பார்க்  அல்லது  பழைய பூங்கா என்ற இடத்தில் எங்களைக் கொண்டுவந்து இறக்கி அங்கேயே  நிக்குமாறு திலீபன் கட்டளை வழங்கினார்.


அங்கே சிறிது நேரம் நின்றோம். தனது மெய்ப்  பாதுகாவலர்கள் ஆன  சொர்ணம், பொட்டுஅம்மான், அடுத்து குட்டப்பா, இவர்களின் பாதுகாப்போடு தலைவர் எங்களிடம் வந்தார்,




வந்தவுடன் மாவட்டத் தளபதிகளை  மட்டும் கூப்பிட்டு10 நிமிடம் தனிப்பட்ட ரீதியில் கதைத்தார். அதை முடித்து விட்டு அனைத்துப் போராளிகளுடனான ஒன்றுகூடல் ஆரம்பமானது.


அதில் குறிப்பாகக் கப்டன் மற்றும் லெப்ரினன்ட் தர அதிகாரிகள் வந்து இருந்தார்கள். அதில் யாழ்மாவட்டத்தில் இருந்து வந்தவர்களில்  எமது மாவட்டத்தை சேர்ந்த சபேசன் அவர்களும் வந்து இருந்தார்.  அப்பொழுது தலைவர் பேச்சுக்களுக்கென  தன்னை வரச்சொல்லி இந்தியா அதிகாரிகள்  செய்த கொடுமைகளையும், அவர்கள் தன்னை விரட்டியதையும் அனைத்துப்  போராளிகளிற்கும் தெளிவு படுத்தி விட்டு நீங்கள் என்னை  எடுப்பதற்கு  இந்தியா அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில்தான் நான் இங்கே வந்து இருக்கின்றேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும் பாசத்திற்கும் தனது நன்றியைத் தெரிவிதார். 


தொடர்ந்து என்னை நீங்கள் நம்ப வேண்டும்.  ஆனால் தற்பொழுது எமது விடுதலைப் போராட்டம் பாரிய ஒரு சிக்கலிற்குள் சென்று விட்டது.  அதனால் சில முடிவுகள் நாம் விரும்பியோ விரும்பாமலோ எடுக்க வேண்டிய  துர்ப்பாக்கிய நிலக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  அதனால் நாளைய சுதுமலைப்  பிரகடனத்தின் போது  ஆயுதம்  ஒப்படைப்பது  தொடர்வாக வெளிப்படையாக மக்களிற்குத் தெரியப்படுத்தப்போகின்றேன், .நீங்கள் எவரும் குழம்பத் தேவையில்லை.  ஏனெனில் ஒரு பிராந்திய  அரசோடு  எம்மால் மோத முடியாது. அதனால் ஆயுதங்களை  ஒப்படைப்பதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம்.  இருந்தும்  எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் எமது இலட்சியத்தை நோக்கிய போராட்டம் தொடரும் ........என போராளிகளிடம் உறுதி அளித்தார்.


ஆயதம் ஒப்படைத்த பின் வடகிழக்கு தற்காலிய  நிர்வாகம் எங்களிற்குத்  தருவதாக  இந்தியா உறுதியளித்துள்ளது. ஆனால் நாங்கள் அதை  எழுத்து  மூலம்  கேட்போது அவர்கள் அதைத்தர விரும்பவில்லை.   எங்களிடமும் ஆயுதங்களை முதலில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் நாங்களும் அவர்களிற்கு எழுத்து மூலம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் என்ற போர்வையில் குறைந்ததீர்வுகளைத்தர இந்தியா எம்மீது அழுத்தம் கொடுக்கலாம், அப்படி ஒரு நிலை வந்தால்  அதை நான் ஏற்கமாட்டேன். அந்த நிலையை மாத்தையாவிற்கு வழங்கப்படும்.   என கூறிய தலைவர் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கோ ...!  என  சொன்னார்.


 எங்களோடு வந்த மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர் கப்டன் பிரான்சீஸ் பின்வருமாறு ஒரு கேள்வியைக்  கேட்டார்,. "ஆயுதங்களை  ஒப்படைத்தால் எல்லைப் புறங்களில் வாழும் தமிழ் மக்களின்  பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது?" அதற்குத்  தலைவர் "இடைக்கால அரசாங்கம் எமக்குக் கிடைத்தால்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள்.   அவர்களிடம் "த்றினோட்த்றி" போன்ற ஆயுதங்கள் இருக்கும் எனவே பாதுகாப்பிற்கு      பிரச்சனை  இல்லையென "பதில் அளித்தார். 

 இரண்டாவது சபேசன் ஒரு கேள்வி கேட்டார். " எல்லா ஆயுதங்களையும்   ஒப்படைக்கப் போகிறிங்களா?" அதற்குத்  தலைவர்" ஒப்படைத்த பின்னர்  ரீவியில் காட்டுவார்கள் தானே அப்ப பாருங்கோ" என தலைவர்  பதில் அளித்தார், அடுத்த நாள் பிரிகேடியர் சொர்ணம், போராளி குண்டப்பா, லெப் கேணல் புலேந்திரன்,  தலைவரின் மெய்ப்  பாதுகாவலங்களாக   அருகில் நிற்க  நூற்றுக்கணக்கான  போராளிகள்  வெளிப்பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு இருக்க சுதுமலையில் தலைவர் மக்கள் முன் தோன்றி பேசத்  தொடங்கினார்.


 வரலாற்றுச் சிறப்புமிக்க தேசியத் தலைவரின் சுதுமலை பிரகடனம்.....

********************************************************************

04/08/1987 அன்றைய நாள் நடைபெற்ற இந்திய  இலங்கை ஒப்பந்தம்  தொடர்பாக  தமிழீழத்  தேசியத்தலைவர் முதல் முதலாக  மக்கள்  முன்தோன்றி யாழ்பாணம் சுதுமலை அம்மன் கோயிலடியில்  வரலாற்று சிறப்புமிக்க ஒன்று கூடலில் இந்தியாவின் திட்டத்தை தலைவர் தெளிவுபடுத்தினார்.

இதின் அறிவிப்பாளராக லெப் கேணல் திலீபன் காடமையாற்றினார்முதலாவது உரையை யாழ் மற்றும் மட்டு அம்பாரைப்மாவட்டப் பொறுப்பாளர் லெப் கேணல் குமரப்பா அவர்கள் ஆறினார்,


 தலைவர் அவர்கட்கும் இங்கே கூடியிருக்கும் மூத்த போராளிகளுக்கும் சகல பொது மக்களிற்கும் எனது இனிமையான வணக்கங்கள், முதல் கட்டமாக அதாவது இறுதியாக நடந்த இந்தப் போராட்ட சூழ்நிலையில் எமது தலைவர் டெல்லியில் இருந்தபோது, அவரை இங்கேகொண்டு வருவதற்கு மக்கள் செய்த அமைதிவளியான போராட்டங்கள் அதற்கு நாம் மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்,


 அதே நேரத்தில் எமது போராட்டப் பாதையில் ஏற்பட்ட இந்த நிகழ்சிப்போக்கை எமக்கு ராஜதந்திரமாகப்பயன்படுத்தி, மேலும் எமது பாதையில் சென்று எமது இலக்சியத்தை வென்று எடுப்போம் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாகவே இருக்கின்றோம், யாரும் கூறுவது போல எமது தலைவரோ அல்லது எமது சக அங்கத்தவர்களோ பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் அல்லஅதாவது தற்போதைய சூழ்நிலையில் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எமது இலக்சியப்பாதையில் மேலும் அதைச்சென்றடைவோம் என்பதையும் அதில் மக்கள் எங்களைப் பூரணமாக நம்ப வேண்டும் என்பதே எனது வேண்டுகோல் என சொல்லி வணக்கத்துடன் நிறைவு செய்தார்,,




 இரண்டாவதாக திருமலை மாவட்டத்தளபதி புலேந்தி அம்மான் அவர்கள் உரை மாற்றுகையில் இங்கே வருகை தந்து இருக்கும் தலைவர் அவர்கட்கும் அனைத்து மூத்த உறுப்பினர்களிற்கும் எமக்கு ஆதரவு வழங்கிவரும் பொது மக்களிற்கும், வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய நிலை தமிழீழப் போராட்ட வரலாற்றிலே ஒரு இறுக்கமான காலகட்டமாகும், இந்த நிலையில் எமது கடந்தகால வலாற்றைக்கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம், திருகோணமலையைப்பொறுத்தவரை காலம்காலமாக மக்கள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள் 1958 ஆம் ஆண்டு இருந்து இன்றுவரை அவர்கள்தாக்கப்பட்டுக் கொண்டயிருக்கின்றார்கள்,


இன்று அமைதி நிலை காணப்பட்டாலும் எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என்பதைபொறுத்துயிருந்துதான்பார்க்கவேண்டும், ஆனால் இந்த நிலையில் இலங்கைக்கும் இந்திய விற்கும் இடையில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த நிலையில் நாங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கை விடுவதாகவோ அல்லது நாக்கள் பலயீனம் அடைந்து விட்டோம் என்பதோ இல்லை, என கூறி தனது உரையை நிறைவு செய்தார்,


இறுதியாகத்தலைவர் அவர்கள் உரையாற்றுகையில்

தங்களின் அதிகாரத்தையும் ,ஆயுத பலத்தையும் வைத்து பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்து விட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முதலில் அவர்கள் ஆலோசிக்கவில்லை.

பின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில்  நாங்கள் இந்தியாவின் தடுப்புக்  காவலில்  இருந்தோம். அக்காலப்பகுதியில் தாங்கள் வைக்கும் ஒப்பந்தத்தை ஏற்ற வேண்டும் என்று இந்தியா எம்மை விரட்டியது. இது பற்றி எமது மக்களிற்கு தலைவர் தெளிவு படுத்தினார்.



எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே ...!இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது   போல எமது சக்திக்கு அப்பாற்  பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கின்றது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்துதிருந்து  பார்க்கவேண்டும்.


திடீரென மிகவும் அவசரமாக எமது மக்களையோ! எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ! கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது  அவசர அவசரமாக  அமுலாக்கப்பட்டு  வருகின்றது. என்பதை நீங்கள் அறிவீர்கள்  நான்டெல்லி செல்லும் வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்குத் தெரியாது,


பாரதப்பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச்  சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள் அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமக்கு எமது மக்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுமா?  என்பதைப்பற்றி  எமக்குச்  சந்தேகம் எழுந்தது. ஆகவே இந்த ஒப்பந்தத்தை நாம்.  ஏற்றுக்கொள்ள  முடியாது, என்பதை இந்தியா அரசுக்குத் தெள்ளத்  தெளிவாக விளக்கினோம் .  ஆனால் நாம் ஏன்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் . என இந்தியா அரசு கங்கணம் கட்டி நிக்கின்றது.


இந்தியா அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படத்   தேவையில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு  நிற்கவில்லை இது பிரதானமாக இந்திய  இலங்கை உறவு பற்றியது. இந்தியா வல்லாதிக்க   வியூகத்தின்  கீழ் இலங்கையைக்  கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன.  இலங்கையில்  அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல்  தடுக்கவும். இது வழிவகுக்கின்றது.


ஆகவேதான் இந்தியா அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால் அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணைப்பதாகவும்  இந்த  ஒப்பந்தம்  அமைக்கிறது. ஆகவேதான்  எமது மக்களைக் கலந்தாலோசிக்காமல்  எமது கருத்துக்களைக்  கேளாது இந்த  ஒப்பந்தம்  செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.


எமது அரசியில் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது. இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல்  இலட்சியத்தைப்  பாதிக்கிறது. எமது போராட்ட  வடிவத்தைப்  பாதிக்கிறது. எமது ஆயுதப் போரட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து ,சாதனை ஈட்டி எத்தனையோ உயிர்பலிகொடுத்துக்  கட்டி எழுப்பப்  பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவது என்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி  எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுத  பாணியாக்குகிறது. ஆகவே நாம் ஆயுதங்களைக்  ஒப்படைக்க மறுத்தோம்.  அந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்சனைகளை மனந்திறந்து பேசினேன்.


சிங்கள இனவாத அரசின் மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதையும் ;  இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப்போதில்லை என்பதையும்;  இந்தியாப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாபுப் பிரச்சனை பற்றியும்  அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார்.


பாரதப் பிரதமரின்  நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில்  நம்பிக்கை இருக்கிறது  என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான்  நாம் இந்தியச் சமாதானப்படையிடம்  எமது ஆயுதங்களை ஒப்படைக்க  முடிவு செய்கிறோம். நாம்  எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பெரிய தியாகங்களைப் புரிந்தோம், என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத்தேவையில்லை. எமது இலட்சியப் பற்றும் தியாக உணர்வும்  எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய  நீங்கள் நன்கு அறிவீர்கள்.  உங்களது பாதுகாப்பிற்காக  உங்களது விடுதலைக்காக உங்களது விடிவிற்காக  நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியா அரசிடம் ஒப்படைக்கின்றோம்.


நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து  எமது மக்களாகிய  உங்களின் பாதுகாப்புப்  பொறுப்பையும் இந்தியாவிடம்  ஒப்படைக்கின்றோம். ஈழத்தமிழரின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்தியா  அரசு எம்மிடம் பெற்றுக் கொள்வதிலிருந்து  மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.


ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது. நாம் ஆயுதங்களைக்  கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய  சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை இந்தியாவை நாம் நேசிக்கின்றோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை.  எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.


நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதில் இருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனுடையே உயிரிக்கும் பாதுகாப்பிற்கும் இந்தியா அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.


ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுமென  நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தையை விழுங்கிவிடும்  காலம் வெகுதூரத்தில் இல்லை தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.


தமிழீழ இலட்சியத்துக்காவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களிற்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.


தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசியல் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப்போவதுயில்லை. முதமைச்சர் பதவியையும் ஏற்கப்போவதுல்லை. இதை நான் மிகவும் உறுதியாகச்  சொல்ல விரும்புகின்றேன்.என ஒரு இலட்சம் தமிழீழ மக்கள் முன்னிலையில் தலைவர் பேசி முடித்தார். அடுத்து,.......

இந்தப்பிரகடனத்தின்போது இந்தியவினுடைய றோ விடுதலைப் புலிகளின் ஆழுமைமிக்க தலைவர்கள் யார் என்பதை அறிந்து விட்டார்கள், அதாவது மக்கள் மத்தியில் கருத்து விதைக்கக்கூடிய ஆதிகாரம் உள்ளவர்களாகவும் விடுதலைப்புலிப் போராளிகளைக்கட்டுப்படுத்தக்கூடிய வீற்ரோ அதிகாரம் உள்ளவர்கள் இந்த மூன்று தலைவர்களும்தான் இந்த மூவரையும் அழித்து விட்டால் இவர்களால் எதுகும் செய்ய முடியாது அதானால்தான் குமரப்பா புலேந்தி இருவரும் இந்தியாவால் இலக்குவைக்கப்பட்டார்கள் 2009 இறுதி அந்த மூன்று மனிதர்களில் ஒருதரான தலைவர் இலக்கு வைக்கப்பட்டார் அத்துடன் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது.





05/08/1987 அன்று ஆயுதங்களை ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம்.


புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு | Arms Surrender By Ltte Ltte Leader Tamil Eelam


ஆயுதங்களை ஒப்படைப்பதைத் தவிர புலிகளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்காத பட்சத்தில், புலிகளிடம் இருந்து பலவந்தமாக ஆயுதங்களை களையவும் இந்தியப்படைகள் தயாராக இருந்தன.

அதனால் தமது உயிரிலும் மேலாக புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு புலிகள் முன்வந்திருந்தார்கள். ஆயுத ஒப்படைப்பு தினம், 1987ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 5ம் திகதி என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பாலாலி விமானப்படைத்தளத்தில் முதலாவது ஆயுத ஒப்படைப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆயுத ஒப்படைப்பு மிகவும் சுமூகமாக ஆரம்பமானது.


புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு | Arms Surrender By Ltte Ltte Leader Tamil Eelam


சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க,சிறிலங்கா இராணுவத்தின் வடபிராந்திய தளபதி பிரிகேடியர் ஜெரி.டி.சில்வா போன்றோர் அங்கு வந்திருந்தார்கள்.

அவர்களுடன் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் பல உயரதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள். இந்திய அமைதிகாக்கும் படைகள் சார்பாக, ஜெனரல் திபீந்தர் சிங் (OFC, IPKF), மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் (GOC, 54 Division, IPKF), பிரிகேடியர் பெர்ணான்டஸ் (Pacification Specialist, IPKF) உட்பட மேலும் பல இராணுவ உயரதிகாரிகளும் சமூகம் அளித்திருந்தார்கள்.

புலிகளின் ஆயுத ஒப்படைப்பை தமது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக மாற்றிவிடும் ஆர்வத்திலும், வேகத்திலும், உள்ளுர் மற்றும் வெளியூர் ஊடகவியலாளர்கள் பலர் அங்கு திரண்டிருந்தார்கள்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  தினம்

விடுதலைப் புலிகளால் ஒப்படைக்கப்பட இருந்த ஆயுதங்களை ஏற்றியபடி புலிகளின் ஷபிக்கப் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பலாலி விமானப்படைத் தளத்தை நோக்கி வந்தன.

தமிழீழ இலக்கத் தகடுகளுடனும், புலிக் கொடிகளைப் பறக்கவிட்டபடியும், புலிகளது வாகனங்கள் அணிவகுத்து வந்த காட்சி, அங்கு திரண்டிருந்த அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டது.

விடுதலைப் புலிகளின் சார்பில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் யோகரத்தினம் யோகி, ஆயுத கையளிப்பின் அடையாளமாக, ஒரு கைத்துப்பாக்கியை, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமது பிக்கப் வாகனங்களில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கி அணிவகுத்து வந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்களை ஒவ்வொன்றாக ஒப்படைத்தார்கள்.ஆயுத ஒப்படைப்பைத் தொடர்ந்து, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சேபால ஆட்டிக்கல, 

சிறிலங்கா சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து, அவர்களை விடுதலை செய்வதற்கான, சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அறிவித்தலை பகிரங்கமாக வெளியிட்டார்.

சேபால ஆட்டிக்கல கூறும்போது, “சிறிலங்காவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இன்றைய தினம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும்.

இரத்தம் சிந்துதல் மற்றும் வன்முறை போன்றனவற்றால் எமது ஜனநாயக சமுகம் தொடர்ச்சியாக பாதிப்புக்குள்ளாகி வந்ததை, இந்த ஆயுத ஒப்படைப்பு இன்று முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

இன்றைய தினத்தில் இருந்து, இலங்கையர்களாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய சொந்த நாட்டில் சமாதானமாகவும், நல்லிணக்கத்துடனும் வாழுவோம் என்று நான் உண்மையாகவே எண்ணுகின்றேன் என்று குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமான நிகழ்வுகள்

மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிந்த இந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வுகளின் போது, ஒருசில சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

புலிகள் சார்பாக முதன் முதலில் ஆயுதத்தை ஒப்படைத்த யோகி, மிகவும் கவலை அடைந்த மன நிலையுடன், ஏனோதானோ என்று நடந்துகொண்டார்.

மிகவும் வேகமாக அவர் தனது கைத்துப்பாக்கியை சேப்பால ஆட்டிக்கலவிடம் ஒப்படைத்து விட்டதால், அவர் ஆயுதத்தை ஒப்படைக்கும் காட்சியை தமது கெமராக்களில் படம் பிடித்துக்கொள்ளுவதற்கு, புகைப்படப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் தவறிவிட்டார்கள்.

புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு | Arms Surrender By Ltte Ltte Leader Tamil Eelam

எனவே, மீண்டும் ஒரு தடவை ஆயுத கையளிப்பை மேற்கொள்ளும்படி அவர்கள் யோகியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் யோகியோ அதற்கு ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

மறுபடியும் அடையாள ஆயுதக் கையளிப்புக் காட்சியை நடாத்துவதற்கு சேபால ஆட்டிக்கல தயாராக இருந்த போதிலும், யோகி அதற்கு உடன்பட உறுதியாக மறுத்துவிட்டார்.

இதனால், ஆயுதக் கையளிப்பை பதிவு செய்வதற்கு படப்பிடிப்பாளர்களால் முடியவில்லை. யோகியால் கையளிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, அங்கிருந்த மேசை ஒன்றின் மீது வைக்கப்பட, அதன் மீது சேபால ஆட்டிக்கல தனது கை வைத்தபடி புகைப்படங்களுக்கு காட்சி தந்தார்.

இந்தப் படங்களே பின்னர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி இருந்தன. புலிகளின் ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக, யோகியால் ஒப்படைக்கபட்டிருந்த கைத்துப்பாக்கியை, சிறிலங்காவின் அதிபர் ஜே.ஆரிடம் கையளிக்க வேண்டும் என்று கூறிய சேபால ஆட்டிக்கல, அதனை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

ஆயுத ஒப்படைப்பு நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு என்று கூறி, ஒரு தொகுதி இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை, இந்தியா தனது விமானங்களின் முலம் யாழ்பாணத்திற்கு அழைத்து வந்திருந்தது.

ஆயுதக் கையளிப்பு

கடவுச் சீட்டுக்களோ, விசாக்களோ, சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியோகூட இல்லாமல், இவ்வாறு அழைத்துவரைப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள், ஆயுதக் கையளிப்பு நடைபெற்ற கட்டிடத்தில் முன்னுரிமை கொடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

இலங்கை ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருக்கையில், இந்தியாவின் தூர்தர்ஷன் உட்பட, இந்தியாவில் இருந்து விஷேட விமானத்தில் வந்த ஊடகவியலாளர்களுக்கு, நிகழ்வுகளை பதிவுசெய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விஷேட விமானத்தில் பலாலியில் வந்திறங்கியிருந்த ஊடகவியலாளர்கள், பலாலி விமானத்தளத்தின் அனைத்து இராணுவ நிலைகளையும் பார்வையிடவும், வீடியோ படம் பிடிக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

புலிகள் மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்பு | Arms Surrender By Ltte Ltte Leader Tamil Eelam

அது, சிறிலங்கா பாதுகாப்பு படை அதிகாரிகளின் முனுமுனுப்புக்கு இலக்கானது. ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், இந்திய ஷறோ உளவாளிகளும் அங்கு வந்துள்ளதாக, சிறிலங்காவின் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தார்கள்.

இந்திய அதிகாரிகள், புலிகளுடனும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடனும், ஊடகவியலாளர்களுடனும் புலிகளது ஆயுத ஒப்படைப்பு பற்றி பேசும் போது, Surrender (சரணாகதி) என்ற வார்த்தைப் பிரயோகத்தை பாவிக்காது தவிர்த்துக்கொண்டார்கள்.

ஆயுதக் கையளிப்பு, ‘ஆயுத ஒப்படைப்பு (Arms Handing over) என்றுதான் குறிப்பிட்டார்கள்.

புலிகளும், தாங்கள் ஆயுதங்களை கைவிட்டதாகவோ அல்லது தாம் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டதாகவே (Lay down) எச்சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவேயில்லை.  



08/08/ 1987 அன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து தலைவரால் அழைக்கப்பட்ட  பிராந்தியா தளதிகள்  மற்றும் மூத்த போராளி காந்தன் உட்பட 4 பேரையும் அதே இந்திய உலங்கு வானூர்தியில் தளபதி லெப். கேணல் குமரப்பா அவர்கள் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பில் விட்டார்.


ஆனால் இது நடந்து முடிந்து அவர்கள்  எமது மக்களிற்காக எவ்விதமான அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் பற்றியும் சிக்கள அரசாங்கத்தோடு பேசவில்லை. ஆனால் புத்திசாலித்தனமாக அவர்கள் வந்த  கையோடு நாம் எமது கடினமான உழைப்பினால் வேண்டி வைத்து இருந்த ஆயுதங்களைக்  களைவதிலேயே  கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். நாம் பல முறை அது சிங்கள வெறியர்களிடம் இருந்து மக்களை பாதுகாற்பதற்காக  வைத்து இருக்கின்றோம்  என சொன்ன போதிலும் அவர்கள் அதை ஏற்கவில்லை, அதிகாரத்தைப் பயன்படுத்தி  அதைவேண்டி விட்டார்கள்.  




உதிரத்தைக்  கொடுத்து வேண்டிய  உயிரைக் கொடுத்து பாதுகாத்த ஆயுதம் இல்லை.   இரண்டையும் இழந்த நிலையில் எமது தலைமை தவித்துக்கொண்டு இருந்தது, அதேவேளை வரதராஜப்பெருமாள்  தலைமையில்  எமது அமைப்பிற்கு எதிராகச்  செயல்பட்ட  மாற்று இயக்கங்களை இணைத்து இந்தியா அதிபர் ராஜீவ் காந்தியின் திட்டத்தின்படி  வரதராஜப்பெருமாளின்  தலைமையில் வடகிழக்கு தமிழ் இராணுவம் என்ற பேரில் ஒரு கட்டமைபு உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  அதன்  பெயர்  "த்றீ ஸ்ரார் " ஒட்டுக் குழு என்று எமது மக்கள் பிற்காலத்தில் இவர்களை அழைத்தார்கள்,


எனவே நாம் அப்பொழுது 1987 / 9ம் மாதம் வரை நிராயுத பாணிகளாக இருந்தோம்.  அதைவிட எமது எதிர்காலச் சந்ததியினருக்குத்  தேவையான கல்வி அறிவு தொடர்வான விடயங்களிலும் அவர்கள் கைவைத்தார்கள்.  அதின் தொடர் நடவடிக்கையாக வட கிழக்கில் இருந்த அனைத்துப் பாடசாலைகளும்  இந்தியா  இராணுவத்தின்  படை முகாமாக மாற்றப்பட்டது, இதனால்  மாணவர்களிற்கு   படிப்பு இல்லாமல் போனது,

அதை விட தங்களிற்கு  சார்பான தமிழ் இயக்கங்களை இணைத்து வரதராஜப்பெருமாளின்   தலைமையில்  வட கிழக்கு இராணும் என ஒரு கட்டமைப்பை  உருவாக்கியது,  இந்திய இராணுவம்  அதில் தமிழ் மக்களின் ஏகபிரநிகளும் மக்களிற்காக ஆயுதம்   தூக்கிப்போராடி பல உயிர்களை அர்பணித்த  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது.   இந்திய  அரசாங்கத்தால், அதை விட விடுதலைப்  புலிகளின் உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவாளர்கள்  அனைவரும்  தமிழ் ஒட்டுக்குழுக்களின் உதவியோடு   தலையாட்டிகளை   வைத்து இனங்  காணப்பட்டு அவர்களை நயவஞ்சகமாகக்  கொலை செய்வதற்கான திட்டம் அரங்கேறியது. 


இவர்களின் கபட நாடகத்தை புரிந்துகொண்ட நாம் அகிம்சை வழியில்  சென்று போராடினால்  இவர்கள் தீர்வு  தருவார்கள் என  நாம் நம்பினோம்.

14/09/1987  அன்று இரவு திலீபன்அவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தார். அப்பொழுது திலீபன் தேசியத் தலைவரோடு உண்ட உணவே இறுதி உணவாகயிருக்கும் என நினைக்கின்றேன்.


 நல்லிரவு நெருக்கிய வேளை திலீபன் விடை பெற்றுச் செல்ல அதனைத் தொடர்ந்து தலைவர் அவர்களும் மற்றையவர்களும் மன்மதன் இல்லத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர், அதற்கு முன்னர் தலைவர் என்னை அழைத்து அண்ணை நேரத்தோடு வெளிக்கிட்டுப் போய்யிடுங்கோ நீங்கள் திலீபனிற்குப் பக்கத்திலே இருக்க வேண்டும்.


நான் இரவு நேரங்களில் தான் அங்கே வருவேன். கவனமாகப்பாத்துக்கொள்ளுங்கோ என ஒரு பெரிய பொறுப்பை என்னிடம் தலைவர் ஒப்படைத்தார், மறுநாள் காலை நான் சென்று விட்டேன், அங்கு போராளி ராஜன் சோட் முரளி பலர் பந்தல் வேலைகளை செய்து கொண்டுயிருந்தார்கள், திலீபன் உண்ணா நோன்பு இருந்த 12 நாட்களும் அவன் கூடவே இருந்தேன். இரவு வேளைகளில் மட்டும் அலுவலகம் சென்று தலைவரை சந்திப்பது எனது கடமைகளை செய்வது என எனது காலம் கடந்தது, அக்டோபர் மாதம் 9.10 ஆகிய நாட்கள் இந்தியாப்படைகள் இயக்கம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை மன்மதன் இல்லம் துடிப்புடன் செயல் பட்டுக்கொண்டுயிருந்தது, 

திலீபன் முன் வைத்த கோரிக்கைகள்

01 . பயங்கரவாதத் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.  இதன்காரணம் ஆயிரக்கணக்கான  தமிழ்  இளைஞர்கள் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு ஒழுங்கான உணவு இன்றி வாடிக்கொண்டு இருந்தார்கள்.


02. புனர்வாழ்வு  என்ற  பெயரில்  தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும்  சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  திருமலை, மணலாறு, மற்றும் மட்டக்களப்பு பிரதேங்களில் மிகவேகமாக சிங்களக் குடியேற்றங்கள் நடந்துகொண்டியருந்தது.


03.  இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.


04.  வட கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காரணம் பல பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன.


05 . இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவம் காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும். இதன் காரணம் விடுதலைப் புலிகளிற்கு எதிரான இயக்கங்களை இணைத்து வரதராஜப் பெருமாளின் தலைமையில் அவர்களிற்கு இந்தியா அரசு ஆயுதங்கள் வழங்கியதால், நிராயுத பாணிகளாகயிருத்த  விடுதலைப் புலிகளை அவர்கள் இலகுவான முறையில் வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள்.


அடுத்து இந்தியாவிலிருந்து வந்த அமைதிப்படையினர், வடகிழக்கில் இருந்த பாடசாலைகளில் இருந்தமையால் பாடசாலைகளை நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் மக்கள் இருந்தார்கள். 

திலீபனின் கோரிக்கையை இந்தியா நிறைவேற்றும் என தலைவர் உட்பட நாங்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தோம்.  இந்தியா அதிகாரிகள் வேண்டும் என்றே காலத்தை இழுத்து திலீபனின் சாவிற்குக் காரணமாக இருந்தார்கள். என உடன் இருந்த தேவர் தெரிவித்தார்.


 ஏனெனில் 1947ம் ஆண்டு காந்தி அகிம்சை வழியில் போராடி இங்கிலாந்து அரசிடம் இருந்து இந்தியாவிற்கு சுகந்திரம்   பெற்றுக் கொடுத்தார்.  என்பதை நாம் அறிந்தவர்கள் அதனால் எமது இயக்கம் சார்பாக லெப் கேணல். திலீபனை  நிறுத்தினோம். திலீபன் மிகவும் திறமையானவர்.  அதை விட உயர் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஆவார். தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த திலீபன் அவரின் பேச்சுத் திறமை காரணமாக அக்காலத்தில் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக  தலைவரால் நியமிக்கப் பட்டிருந்தார்.


அதனால்தான்  அவ்வுண்ணா விரதப் போராட்டம் செய்ய விரும்புவதாகத் தேசியத் தலைவருக்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார்.  திலீபன் உண்ணா விரதத்தை ஆரம்பித்த 12 நாட்களும் இலட்சக்கணக்காக மக்கள்  திலீபனைச்  சுற்றி இருந்தார்கள்.  அதை விட  கவிஞர் காசி ஆனந்தன், கப்டன் வானதி, தமிழீழப் பெண்கள் என அனைத்து  கவிஞர்களும் கண்ணீர் மல்க  கவிதைகளை பொழிந்த வண்ணம் இருந்தார்கள்.

 அனைத்து தமிழ்த்  தாய்மார்களும் கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தார்கள்.  திலீபன் இறுதி மூச்சு நிக்கும் வரை தனது கருத்துக்களை மக்களிற்கு விதைத்த வண்ணம் இருந்தான்.  தான் செத்த பின்னர் தனது உடலை பல்கலைக்கழக மாணவர்கள் ஆராட்சி மற்றும் படிப்புக்காக வழங்குமாறு கட்டளை வழங்கினான். தொடர்ந்து 12 நாட்களின் பின் அவனின் உயிர் பிரிந்தது.

இந்த உண்ணா விரதத்தை இந்திய அரச தலைவர் ராஜீவ்காந்தி சிறிதளவும்  மதிக்கவில்லை. மாறாக ஆயுத வன்முறையூடாகத் தமிழ் ஓட்டுக்குழுக்களின் உதவியோடு வன்முறைகளைப் பயன்படுத்தியது இந்திய  இராணுவம்.  திலீபனை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பல நடவடிக்கைகளைச் செய்தது இந்திய இராணுவம், ஆனால் திலீபனைச் சுற்றி லட்சக்கணக்கில் மக்கள் கூடியிருந்த காரணத்தால் அவர்களால் எதையும் செய்ய முடியாமல்போனது.  ஆனால் திலீபனின் உண்ணாவிரதப்  போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  இந்தியாவின் கபட நாடகத்தை தமிழர்களிற்கு வெளிப்படுத்திய பெரும் தியாகியாக திலீபன் தமிழர்களால் மதிக்கப்படுகின்றான்.


அவர் இறுதியாகச் சொன்ன வசனம் இவைதான் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்,  சுதந்திர தமிழீழம் மலரட்டும், அதை 621 மாவீரர்களோடு தானும் ஒருத்தனாக  வானத்தில் இருந்து பார்ப்பதாகச் சொல்லி பன்னீரு நாட்கள் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து 27/09/1987 வீரச்சாவு அடைந்தார். அவரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அவரின் கனவை நனவாக்க சுமார் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் போராடி வீரச்சாவு அடைந்தார்கள்.  என்பதை நாம் மறந்து விட முடியாது.


நல்லூர் வீதியிலே பல லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீருடன் திலீபன் முன்வைத்த எவ்விதமான நிபந்தனையும் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் திலிபனின் உயிர் பிரிந்தது,


திலீபனின் மரணத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் இந்திய இராணுவத்துடன் போராடுவது என முடிவு எடுத்தார். அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த கணிசமான போராளிகள் "நாம் இந்தியா இராணுவத்துடன் போராடி வெல்ல முடியாது;  நாம் முழுமையாக அழிந்து விடுவோம் "என தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்கள்.  இதைத்  தலைவர் மறுத்தமையால்  தங்களால் முடியாதுது எனச் சொல்லி அமைப்பில் இருந்து விலகி   வெளிநாடுகளிற்குச் சென்றார்கள்,

இவர்களின்   உறுதியில்லாத   மனநிலையைப் பார்த்து பெரும் கவலையும்  ஏமாற்றமும் தான் அடைந்ததாகவும் திலீபனின் கனவை நனவாக்க தான் மட்டுவாவது போராடி வீரச்சாவு அடைவது என  முடிவு எடுத்ததாகவும்;  போறவர்களெல்லாம்  போகட்டும் உறுதியாகப்   போராடக்கூடிய  பத்துப்பேர்  இருந்தால் காணும் என்று தான் வெளிப்படையாகச் சொன்னதாக தலைவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

 05/10/1987குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் வீரச்சாவு


 இத்  துரோகத்தோடு  இந்திய  அரசின் நடவடிக்கைகள் நின்று விடவில்லை.  02/10/1987 அன்று இயக்கத்தின் மூத்த தளபதிகள் லெப்.  கேணல் குமரப்பா லெப்.  கேணல் புலேந்திரன் உட்பட 17 போராளிகள் தமிழ் நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் நிமித்தம் படகேறி தமிழகம் சென்றார்கள்.  அங்கே  வேலைகளை முடித்து விட்டு மீண்டும் தமிழீழம் வந்து கொண்டிருந்த வேளை நடந்த சம்பவம்......


இந்திய  இலங்கை ஒப்பந்தப்படி  விடுதலைப் புலிகளை இலங்கைப் படைகள் கைது செய்யக் கூடாது, ஆனால் ஒப்பந்தத்தை மீறி சிறிலங்காப் கடற் படையினர்  பருத்தித் துறை கடற்பரப்பில் வைத்து நமது போராளிகளை கைது செய்தது.  அவர்களை கைது செய்து மிகுந்த பாதுகாப்பிடமான பலாவி விமானத் தளப் பகுதியில் அமைந்திருந்த இராணுவப் பகுதிக்குக்   கொண்டு சென்றார்கள்.


தகவல் அறிந்ததும் தலைவர் அவர்கள் அப்போது இந்தியத்  தரப்போடு தொடர்பு கொள்ளும் புலிகளின் இணைப்பாளராகச் செயற் பட்டுக் கொண்டிருந்த கேணல்.  சங்கரை இந்தியா அதிகாரிகளோடு பேசி அவங்களை மீட்குமாறு அனுப்பி வைத்தார். இந்தியா அதிகாரிகள் அவர்களை விரைவில் விட நடவடிக்கை எடுப்பதாக சங்கரிடம் தெரியப்படுத்தினர். 


ஆனால் 05/10/1987 அன்று அவர்கள் அனைவரையும் கொழும்பு கொண்டுபோக நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகவும், அப்படிக்  கொண்டுபோக நினைத்தால் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகவும் தங்களின் கடிதங்களைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்கள் தளபதிகள்.   தங்களிற்கு சைனட் குப்பிகளை உடனே அனுப்புமாறு தகவல் அனுப்யிருந்தனர். 



குமரப்பா, புலேந்திரனை கொழும்புக்கு கொண்டு சென்றால் என்னென்ன  சித்திரவதைகள் செய்வார்கள் என்பது எமக்கு தெரியாத விடயம் அல்ல, அப்பொழுது மன்மதன் இல்லத்தில் நின்றவர்களிடம் குப்பி கேட்டு வேண்டப்பட்டது.  அடுத்து எனக்கும் பா. நடேசனிற்கும் சிங்களம் தெரியும் என்பதால் குப்பிகளை கொண்டு அவர்களிடம் கொடுக்கும் பொறுப்பை எங்களிடம் தலைவர் ஒப்படைத்தார். அத்துடன் சங்கரும் நாங்கள் மூவரும் தயார் செய்யப்பட்ட  உணவுப் பொதிகளுடன் பலாலி நோக்கி விரைந்தோம்.  பலாலியில் சுற்றி வர இராணுவத்தினர்; ஒரு மண்டபத்திற்குள் போராளிகள் தங்கவைக்கப்  பட்டுயிருந்தனர்,


"சங்கர்அண்ணா" இந்திய  அதிகாரிகளோடு  பேசிக் கொண்டிருக்க நானும்  நடேசனும் உள்ளே சென்று காவலில் நிற்கும் சிப்பாயிடம் சிரிச்சபடியே சாப்பாடு கொண்டு வந்திருக்கின்றோம் கொடுக்கலாமா? என்று கேட்டேன்.  அவனும் சிரித்தவாறு அனுமதித்தான், உள்ளே சென்று சாப்பாட்டுப் பையைக்  கையளித்தேன், கைகளையும்  பரிமாறிக்கொண்டோம்.


சேர வேண்டியவை அவர்களின் கைகளிற்குச் சென்று விட்டன. சிறிது நேரம் அவர்களோடு உரையாடிவிட்டு மீண்டும் தலைவரிடம் சென்று நடந்தவற்றை தெரியப் படுத்தினோம்,  அன்று மாலை அவர்களைக்  கொழும்பு கொண்டு செல்வதற்காக பலவந்தப் படுத்தி  விமானத்தில்  ஏற்ற  முயன்றபோது அவர்கள் குப்பிகளைக் கடித்து உயிர் நீத்து விட்டனர்; என்ற செய்தி தலைவருக்கு வந்ததும் அனைத்துப் போராளிகளும்  பெரும்சோகத்தில் இருந்தார்கள்.


தலைவரின் முகம் ஆத்திரத்தின் உச்சமாக மாறியதை அவரது முகத்தை வைத்தே எம்மால் சொல்ல முடியும். நாங்கள் பலாலி சென்று இரவு அவர்களின் உடல்களை பொறுப்பெடுத்தபோது  எங்களிற்கு அதிர்ச்சியாக இருந்தது.  புலேந்தி, குமரப்பா இருவரது முகங்கள் கத்தியால் கீறிக் கிழிக்கப் பட்டிருந்தது.  திருமலையில் புலேந்தி பேரைக் கேட்டால்  சிங்களவர்கள் நடுங்குவார்கள்.  நேருக்கு நேர் மோதத் தைரியம் இல்லாத சிங்கள வெறியர்கள் அவர்கள் மீது கோபத்தைக்  காட்டி விட்டார்கள்.

                                         

தலைவரிடம் வந்து அந்தச் செய்தியை சொன்னபோது அவர் எரிமலையாக மாறிப்போனார்.  புலேந்திரனை பொறுத்தவரை தலைவருக்கு எதிரான சதிகள் உமா மகேஸ்வரனால் நிகழ்தப்பட்டபோதும்;  தலைவர் தனிமையாக இருந்த போதும் தலைவருக்கு பக்கத் துணையாக செயல்பட்ட ஒரு சிலரில் இவரும் முக்கியமானவராகயிருந்தவர்.  மறுநாள் தீருவில் வெளியில் மாவீரர்களின் வித்துடல்களிற்கு  தீயோடு சங்கமத்திற்க்காக  வைக்கப்பட்டபோது அங்கு வந்து தலைவர் அஞ்சலி செலுத்தினார்.  அவரின் முகம் கடுமையான கவலையில்  காணப்பட்டது.  05/10/1987 அன்று இரவு 12 தியாகிகளின் உடல்கள் பெருந்  திரளான மக்கள் முன் நிலையில் தீருவில்லில் வைத்து தீயோடுசங்கமம் ஆக்கப்பட்டது.

 9ம் திகதி இரவு வேளையில் யாழில் உள்ள பத்திரிக்கை நிறுவனம் புலிகளின் குரல்" நிதர்சனம் ஒளிபரப்புச் சேவை "அலுவலகம் மீது சிறிலங்கா வான்படைத்  தாக்குதல் நடத்தியது. இது இப்படி இருக்க 10/10/1987 இந்தியா இராணுவம் கிராமங்களை நோக்கி  நகரத் தொடங்கி விட்டது. 




விடுதலைப் புலிகளை யாழில் இருந்து முற்றாகக் கலைப்பது அல்லது அழிப்பது என பல இராணுவ நடவடிக்கைகளுற்கான திட்டங்களைப் போட்டுக் கொண்டேயிருந்தது இந்திய இராணுவம்.

10/10/1987மாலதியின் எதிர் நடவடிக்கை

1985 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி முதலாவது இராணுவப் பயிற்சியை இந்தியாவில் பெற்றாலும்; அவர்களிற்கு சண்டைரீதியான அனுபவம் மிகக்குறைவாகவே இருந்தது.   ஏனெனில் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் நிர்வாக வேலைகளை திறமையாக தமிழகத்திலும் வன்னிக் காட்டிலும் செய்து வந்தார்கள். 


சில குறிப்பிட்டதாக்குதலிற்கு அவர்கள் சென்றாலும் ஆண் போராளிகளிற்கு உதவியாகவே சென்றிருக்கின்றார்கள். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டதாகயிருந்தது. 


தலைவரை  இலக்குவைத்து இந்தியா இராணுவம் பல நடவடிக்கைகளை செய்யத்  திட்டமிட்டுக்கொண்டி ருந்தமையால் தலைவரைப்  பாதுகாப்பதா?  அல்லது பெண் போராளிகளோடு சேர்ந்து அவர்களை வழி நடத்துவதா? அதை விட ஆழணிப் பற்றாக்குறை ஒரு பக்கம் என பொட்டுஅம்மான் மிகவும் குழம்பிய நிலையில் இருந்தார்.


அந்தப்  பதட்டமான சூழ்லைநிலையை விளங்கிக் கொண்ட பெண் போராளிகளில் முதல் நிலைத் தளபதியாக  தன்னை இனம் காட்டிய 2ஆம் லெப். மாலதி அவர்கள்....


அவசர அவசரமாக பெண் போராளிகளை அழைத்து ஒரு தாக்குதல் ரீமை உருவாக்கினார்.

நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில் பதினைந்து பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக  வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன்  அதுகூட எல்லோரிடமுமில்லை. ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன். தாக்குதலிற்கு தாயார் ஆகியிருந்தார்கள்.  திட்டமிட்டாற்  போல் இந்திய இராணுவம்  10/10/அன்று 1087 சுத்த டாங்கிகள் சகிதம் முன்னேறி வந்தது, அப்பொழுது களத்தில் நின்றவர்களில் ஒரு சிலரைக் குறிப்பிடுகின்றேன்.



2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில்;  முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை அப்போது;  பெரும் பலத்துடன் பெருந் தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை.  எம்மவர்கள்  கோப்பாய்ச் சந்திநோக்கி  சண்டையிட்டவாறு பின்னகர்ந்து கொண்டு சண்டையிட்டுக்  கொண்டிருந்தோம்,.

 


கள நிலமை முற்றிலும் மாறுபட்டு எதிரிக்குச்  சாதகமாக வந்து கொண்டுயிருந்தது, 

மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்கமுடியவில்லை.விஜி  மாலதியை இழுத்துச் செல்ல முயற்சி செய்தார், ஆனால் அவரும் காயப்பட்டார்,


 இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது.  விஜி முயற்சித்துக்  கொண்டிருந்தார்  முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார்.




“என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடு” என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார்.  இதுதான் பெண் போராளிகள் தனியாக நின்று சண்டையிட்ட ஆரம்ப கால வரலாற்று சமராக பதியப்பட்டுள்ளது.




 12/10/1987 தலைவரைப் பிடிக்க இந்தியப்படை தரையிறக்கம். களத்தில் நின்ற போராளி தூயாமணி பின் வருமாறு குறிப்பிடுகின்றார்......

இது இப்படி நடக்க பொட்டுஅம்மான் தலைமையில் இந்தியஇராணுவத்துடன் கடுமையான சண்டை நடைபெற்றது .


 இக்காலத்தில் சண்டையிடக்கூடிய குமரப்பா, புலேந்திரன் போன்ற தளபதிகளை இழந்து மிகவும் பலயீனமாகயிருந்தது எமது இயக்கம்.


ஆனால் இந்திய  இராணுவம் எதிர்பார்த்தது போல் தலைவர் அங்கே தான் நின்று போட்டு அம்மானுக்கு கட்டளை வழங்கிக் கொண்டுயிருந்தார்.


இந்திய இராணுவத்தின் தரையிறக்கத்தை முறியடித்து சண்டையிட்டு  வானில் இருந்து தரையிறக்கப்பட்ட  இராணுவத்தினரின் உடல்களை எடுத்து  மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சண்டை முடிந்தும் 3 நாட்கள் தலைவர் அங்கேதான் நின்றார். இருந்தும்  மூத்த போராளிகள் வேறு இடம் செல்லுங்கள் என அழுத்தம் கொடுத்த காரணத்தால் தலைவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.


தலைவரின் போராட்ட வரலாற்றில் மக்களைக் கூடுதலாக நம்பி இருந்த சம்பவங்கள் நிறையேவே உள்ளன. மக்களும் தலைவரைக் கைவிடவில்லை தலைவரும் மக்களை ஏமாத்தவும் இல்லை.  யாழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் கொக்குவில் பகுதியில் பிரம்படி வீதியில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்  நிலை கொண்டிருப்பதாக அவர்களின் ரேடியோ தொலைத் தொடர்பை ஒட்டுக் கேட்ட  இலங்கை இராணுவத்தின் உளவுத் துறை இந்திய அமைதிப்  படைக்குத் தகவல்கொடுத்தது. 


‘தலை’யை அகற்றி விட்டால் புலிப் போராளிகள் சீர் குலைந்து,  மனம் தளர்ந்து எதிர்பைக் காட்டாமல் சரணடைந்து விடுவார்கள் என்றுஇந்தியா அரசு நம்பியது.

விமானப்படையின் முழு பலத்துடன் ஒரு கொமாண்டோ தாக்குதல் நடத்துவது என இந்தியா அரசால் திட்டம் தீட்டப்பட்டது. அதற்கு அமைவாக தலைவர் தங்குமிடத்தை அவர்கள் தேர்ந்து எடுத்தார்கள்,


இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற சண்டை பற்றி போராளி தூயாமணி குறிப்பிடுகையில்


 09/10/1987 அன்று இந்திய இராணுவத்துடன் முதலாவது சண்டையிடுவதற்காக நிராயத பாணிகளாக இருந்த எங்களை அப்பொழுது எங்களிற்குப் பொறுப்பாகயிருந்த லெப் கேணல் சந்தோஸ் மாஸ்ட்டர் அவர்கள் உடனடியாக  எங்கள் எல்லோரையும் கோழ்பாக் என்ற இடத்திற்கு வருமாறு சொல்லியிருந்தார், உடனே நாங்கள்அவ் இடத்திற்கு 25 ந்திற்கு மேற்பட்ட போராளிகள் வந்து நின்றோம்,



அங்கே ஒரு வானில் சந்தோஸ் மாஸ்டர் வந்துஇறங்கினார் உள்ளே கிறிஸ் வைக்கப்பட்டு பொழுத்தினால் சுத்தப்பட்ட ஆயுதங்கள் வாகனத்தில் வந்துயிருந்தது அதில் RPG உந்துகணை செலுத்தி உட்பட  AKLGகளும் வந்து இருந்தது ஒவ்வொரு போராளிகளையும்கூப்பிட்டு ஒவ்வொருதராக ஆயுதங்களை மாஸ்ட்டர் எடுத்துக் கொடுத்தார் நாங்கள் அனைவரும் மண்ணண்ணையால் கிறிஸ்சைக் கழுவி சுத்தம் செய்தோம்,அதில் எனக்கு ஒரு ஓட்டோ   SLR துப்பாக்கி ஒன்றும் மேலதிக ரவையாக 100 தரப்பட்டது ஆனால் கோழ்சர் எதுகும் தரப்படவில்லை, அதனால் நான் சாரத்தில் சுற்றி இடுப்பில் கட்டினேன், அனைவரும் எனது நடைமுறையைத்தான்பின்பற்றினார்கள்,


அப்பொழுது எங்களைக்கொண்டுபோய் கோட்டைப்பக்கமாகயிருந்த வேம்படி பகுதியில் எங்களை விட்டார்கள்,கோட்டையில் இருந்து வரும் இந்திய இராணுவத்தை தாக்குவதற்காக நிலையடுத்து தயார் ஆகயிருந்தோம், அமைதியா இருந்த இடம் திடீரென சுத்த டாங்கி இரையும் சத்தம் கேட்டது, கோட்டைப்பக்கமாகபார்த்துக்கொண்டுயிருந்தோம், சுத்த டாங்கி முன்னால் வர இரண்டு பக்கமும் இந்திய ஆமி நடந்து வந்துகொண்டுயிருந்தான், அதற்குப்பின்னாலும் நிறைய ஆமி வந்துகொண்டுயிருந்தார்கள் அவர்களை, நாங்கள் கண்டதும் குறிபார்துப்பார்துச்சுட்டுக்கொண்டுயிருந்தோம், சுட சுட நிறைய இராணுவம் தரையில் விழுந்தது. ஆனால் அவர்கள் முன்னேற்றத்தை நிறுத்தவில்லை காயப்பட்டவர்களை ஒரு பக்கம்போட்டுவிட்டு இராணுவம் முன்னேறிவந்துகொண்டுயிருந்தது,


RPG அடி அடி என போராளிகள் கத்திக்கொண்டுயிருந்தார்கள், ஒரு போராளி குறிபார்த்துRPG ஆல் அடித்தான் அது டாக்கில்பட்டு வெடித்தது அதனால் கத்திக்கொண்டு சிறிது தூரம்பின் வாங்கியது இராணுவம்,, அத்தோடு தங்களின் மூவையும் அவர்கள்நிறுத்தினார்கள். அடுத்து சித்தங்கேணிப்பக்கம் முன்னேறுவதாக எக்களிற்குத்தகவல் கிடைத்ததால் குறிப்பட்ட போராளிகளை அவ்விடத்தில் வீட்டுத்து சந்தோஸ் மாஸ்ட்டறின்  தலைமையில்  நாங்கள் வேகமாக அங்கே சென்றோம். 


அங்கே இருந்தபோராளிகள் நாங்கள் அழைக்கும்( பண்டிக்குட்டி) அதாவது பெரிய கிழைமர் என்பதே இதின் பொருள் அவர்கள் முன்மனேறி வந்த இராணுவவாகனத்திற்கு கிழைமர் தாக்குதல் நடத்திவாகனம் ஒன்றைபிரட்டி விட்டார்கள் அது பிரண்டுகிடந்தது,அவ் இடத்தில் 5 இந்திய இராவத்தின் பொடியும் நிறைய பழரின்களும் ஆயத ரவைகளும் கிடந்தது மற்றும்சாப்பாடுகளும் பரவிக் கிடந்தது, நாங்கள் போனதும் கடுமையான பசியாகயிருந்தமையால் அவ் பழரின்களை வெட்டி சாப்பிட்டோம்,, பின்னர் மருத்துபபிடமைதானதில்விமனத்தில் இருந்துதரையறக்கப்போன்றார்கள் என்ற தகவல் எமக்குக் கிடைத்து அங்கே சென்றோம்

உடனே வேகமாக எங்களின் சந்தோஸ் மாஸ்டரின் ரீம் அங்கே சென்றதுநாங்கள் சென்றதும் கல்லூரரி மைதானம் பக்கமாகயிருந்த 3சந்திப்பகுதியை அண்மித்துமைதானத்தில் தான் அவர்களின் தரையிறக்கம் நடக்கலாம் என எதிர்பார்த்து நின்றோம்,

நாங்கள் எதிர்பார்த்ததுபோல் அவர்களின் நடவடிக்கை அமைந்தது,அதைச் செயல் படுத்தும் விதமாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்த விலையாட்டு  மைதானத்தை இலக்காக வைத்து இந்திய இராணுவதினுடைய சீக்கிய பரி சூட் கொமாண்டோக்கள் ஒன்றில் 19 பேர் படி  இரண்டு கெலிக்கொப்டர்களில் 38பேரைக் ஹெலியில் இருந்து "பரசூட்" மூலம் மைதானத்தை  நோக்கிக் குதித்தார்கள் சீக்கியக் கொமாண்டோக்கள்.

மூத்த போராளி பொட்டம்மான் எங்களிற்கு அவ் நடவடிக்கைக்கு பொறுப்பாகயிருந்தார்லெ கேணல் சாந்தோஸ்மாஸ்ட்டர்இ ருந்தார்


நான்உட்பட என்னோடு நிறையப் போராளிகளையும் முதலவந்து நின்றதால் நாங்கள் சண்டையிடுவதற்கான இடவசதிசை எங்களிற்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டோம்.  அப்பொழுது நான் சண்டையிடுவதற்கு தயாராக நின்றமையால்". நான் பல்கலைக்கழக முன்பக்கம் நின்றேன். மூன்று சந்தியும் அப்பக்கம் தான் இருந்தது, எனது கையில் ஓட்டோ S.L.R இருந்தது.  இவ் நடவடிக்கைக்கு பொட்டம்மானே பொறுப்பாகயிருந்தார். ஆனால் நான் சந்தோசம் மாஸ்டரின் ரீமில் இருந்தேன்.  அப்பொழுது விடிகாலை 4 மணியிருக்கும் என நினைகிறேன்; ஆகாயத்தில்  பேரிரைச்சலோடு ஹெலிச் சத்தம் கேட்டது.  வானத்தைப் பார்த்தேன் சிறு ,சிறு வெளிச்சங்கள் தெரிந்தன. சண்டை தொடங்கி விட்டது வானத்தில் இருந்து நிறையப் பொதிகள் வருவது  போல் எங்களிற்கு தெரிந்தது. நாங்கள் அப் பொதிகளை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தோம்;


ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஹெலி போய்விட்டது. இராணுவம் மைதானத்திற்குள் இறங்கி விட்டதும் ஒரு சிலர் பொடியாக கீழ விழுந்தாங்கள். ஒரு சிலர் கீழே விழுந்ததும் பொய்சன் அமைத்து எங்களை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருந்தார்கள்.  நாங்கள் பின் பக்கமாகச் சென்றவுடன் முதலாவதாக பொட்டுஅம்மான் R.P.G  யால் தாக்குதல் நடத்திவிட்டு செறிவாக எங்களைச் சுடுமாறு கட்டளை வழங்கினார். நாங்கள் அவர்களை நோக்கிச்சுட்டுக் கொண்டுயிந்தோம்;


அதை அடுத்து மேல் மாடிகளிற்கு மேல் ஏறி போராளிகள் சுட்டுக்கொண்டிருந்தார்கள். எங்களிற்கு பக்கத்தில் நின்று கடாபியும் சுட்டுக்கொண்டு இருந்தார்.


இது இப்படி நடந்துகொண்டிருக்க சத்துருக்கனின் தலைமையில் ஒரு அணி குறோலில் சென்று இராணுவத்திற்குக் கிட்டே நெருங்கியது;  ஆனால் நாங்கள் இராணுவத்தை தலை தூக்க விடவில்லை. மேல் மாடியிலிருந்து சுட்டுக்கொண்டேயிருந்தோம். எங்கட ஆட்கள் கிட்டே  நெருங்கியதும் கைக் குண்டுகளை எறிந்து விட்டு உள்ளே இறங்கிச் சுட்டுக்கொண்டு சென்றார்கள். 


கைகலப்புச்  சண்டையும் ஏற்பட்டது. அதில் பொட்டம்மான் காயப்பட்டார். ஹெலியில்  இறக்கப்பட்ட 38 இராணுவத்தில் சுமார் 37 பொடிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒரு வீரர் உயிரோடு பிடிபட்டாரென போராளி தூயாமணி குறிப்பிட்டார்.

இது அந்தப் பக்கம் நடந்து கொண்டிருக்கத்  தலைவர் இருந்த இடம் நோக்கித்  தரை வழியூடாக வந்தது இந்திய இராணுவம். அதில் சம்மந்தப்பட்ட போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில் ....... 


12/10/1987அன்று இரவு சண்டையிடுவதற்கான விடுதலைப் புலிகளின் திட்டத்தை அறிந்துகொண்ட இந்தியா இராணுவம் யாழ் நல்லூர்  பகுதியைத் திடீரென முற்றுகையிடுவதற்கு தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டேயிருந்தது இந்திய இராணுவம். அக் காலப்பகுதியில் தேசியத்தலைவர் நல்லூர்ப் பகுதியில் பிரம்படி என்ற இடத்தில் இருந்தார். தலைவரின் மனைவி கைக் குழந்தையுடன்  அங்கேதான் இருந்தார்.  நல்லூரடியில்  தலைவர் இருக்கின்றார் என்ற தகவல் இந்திய இராணுவத்திற்குத் தமிழ் ஒட்டுக் குழுக்கலூடாகத்  தீயாய்ப்  பறந்தது. தகவலறிந்த இராணுவம் பாரிய முற்றுகை ஒன்றைச் செய்து எப்படியாவது  பிரபாகரனைக்  கைதுசெய்வது அல்லது, கொலை செய்து விட்டால் இவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு  முற்றுப்புள்ளி  வைத்து விடலாம் என்று இந்தியாவின் அதிபர் ராஜீவ்காந்தி நம்பினார். அதனால் மேலிடத்தில் இருந்து உடனே பிரபாகரனைக் கைது செய்யுமாறு அவர்களுக்கு  அனுமதி வந்தது. இந்திய இராணுவம்  உடனே  இரவு 1 மணிக்கு நல்லூர டியைச் சுற்றிவளைப்பதாகத்  திட்டமிட்டுக் கொண்டேயிருந்தது.......   


இதை முன்கூட்டியே  அறிந்த விடுதலைப்புலிகள்; இது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட போராளி ஜெயராஜ் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்...! "அப்பொழுது எங்களின் முகாம் வலிகாமத்தில் உள்ள பிரம்படியில்தான் இருந்தது. அங்கே தான் தலைவரும் அவரின் மனைவியும் இருந்தார்கள்.  அப்பொழுது அவரின் மனைவிக்கு ஒரு கைக் குழந்தையும் இருந்தது. புகை மண்டலமாகவும் பெரும் வெடிச் சத்தமாகவும் அவ்விடம் பெரும் பதட்டமாகயிருந்தது . சனநெரிசலான இடம் என்றமையால் ஒரு குறிப்பிட்ட மக்கள் பதுங்குகுழியில் இருப்பதை அவதானித்தேன்.


அவரின் பாதுகாப்பிற்கு என நான் உட்பட 33 ற்கும்  மேற்பட்ட போராளிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்  கொண்டுயிருந்தோம், அப்பாதுகாபிற்குப் பிரதான பொறுப்பாளராக  லெப் .கேணல் இம்பிரான்அண்ணையிருந்தார்.


அதே நேரம் பாடசாலை  மைதானத்தில் இந்திய இராணுவம்   பரசூட்டில் தரையிறக்கப் பட்டுக்கொண்டிருந்தது; அதனால் அங்கே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது .


அங்கே   அது நடக்க; வரைபடத்தைப்  பயன்படுத்தி ஏழிற்கு மேற்பட்ட  இந்திய இராணுவம் எமது முகாம் சுடலைப்பக்கமாக வரைபடத்தைப் பயன் படுத்தி கால்நடையூடாக   முகாம் பின்பக்கம் நுழைந்து விட்டார்கள்.  இதைப் போராளி ரெட்னராஜ் (ரெட்டி)முதலில் கண்டு தாக்குதலை ஆரம்பித்து விட்டார்.  பின்னர் நானும் போராளி சற்குருவும் இன்னும் ஒரு  சிலபோராளிகளும் வந்து இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். அதேவேளை லெப். கேணல் இம்ரான் அண்ணையின் தலைமையில் பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் கடாபி, மேலும் 20 போராளிகள் பாதுகாப்பாக நடந்து தலைவர் மற்றும் கைக் குழந்தையுடன் அவரின்மனைவி அனைவரையும் கூட்டிக்கொண்டு நல்லூர்ப்  பகுதியில் இருந்த மன்மதன் இல்லம் என அழைக்கப்படும் எமது முகாமிற்கு  பாதுகாப்பாகச் சென்றார்கள்.


நாங்கள் சண்டையிட்டு உள் நுழைந்த அனைவரையும் சுட்டு விட்டோம்.  பின்னர் ரவி அண்ணை வந்து மோட்டார் சைக்கிலில் என்னை ஏற்றிக்கொண்டு மன்மதன் இல்லத்தில் விட்டார், அங்கே தலைவர் மற்றும் மனைவி இருவரும் இருந்தார்கள்,.அடுத்து ஒரு சில நாட்களில் தலைவரின் உறவினர்களின் வீட்டிற்கு தலைவரின் மனைவியும் கை குழந்தையும் சென்றுவிட்டார்கள்.  பின் தலைவர் மட்டுமே எங்களோடு நின்றார்.

 சண்டைகள் அனைத்தும் முடிந்த பின்னர் 15 / 10 / 1987 அன்று இரவு  எப்படியாவது தலைவரை  வேறு இடம் கொண்டுபோக வேண்டும் என இம்ரான் அண்ணை யோசித்துக் கொண்டிருந்தார், ஆனால் தலைவரும் இங்கு இருந்து வெளியேறப்போவது  இல்லை எனவும்;  தான் செத்த பின்னர் தமிழக மக்கள் இந்திய இராணுவத்திற்குப் பாடம் படிப்பிப்பார்கள் என தமிழக மக்களை அதிகம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் எப்படியாவது  அவ்விடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே இம்ரான் அண்ணையின் திட்டமாகயிருந்தது.

  இது  இப்படி இருக்க  முதலாவது நடவடிக்கை தோற்கத்  தன்மானப்பிரச்சனையில் இருந்தனர் இந்தியஅதிகாரிகள்.  எப்படியாவது இரண்டாவது பாரிய நடவடிக்கை செய்துதலைவரைப்பிடிப்பதற்கு இந்திய இராணும் தன்னைத் தாயார் படுத்திக் கொண்டிருந்தது.   இதை முன்கூட்டியே  அறிந்த விடுதலைப் புலிகள் காலை 4 மணிக்கு அடிக்க வேண்டியே நல்லூர் கோயில் மணியை இரவு 1 மணிக்கு அடித்து மக்களை ஒன்று கூட்டினார்கள். இரவோடு இரவாக விடுதலைப் புலிகளிற்கு ஏதோ ஆபத்து  நடக்கப்  போகின்றது  என்பதை விளங்கிக் கொண்ட மக்கள் உடுத்த உடுப்போடு கோயிலிற்கு ஓடிவந்தார்கள். நல்லூரடி மக்கள் வெள்ளமாக மாறியது, ஆனால் தமிழ் ஒட்டுக்குழுக்களும், இந்தியா இராணுவமும் நல்லூரை முற்றுகையிடுவதற்கான வேலையில் ஈடுபட்டுக்  கொண்டுயிருந்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தார்கள் பிரபாகரன் ஏதோ மக்களோடு பேசப்போகின்றார் அதில் வைத்து அவரைப் பிடிப்பது, அல்லது கொலை செய்வது இதுவே அவர்களின் திட்டமாகயிருந்தது.  ஆனால் அச்சூழலையும், சன நெரிசலையும் சாதகமாகப் பயன்படுத்திய லெப். கேணல் இம்ரான் அவர்கள் ஒரு "ரெலிக்கா "வானை ஒட்ட அதில் பிரிகேடியர் சொர்ணம்- பிரிகேடியர் கடாபி ,மேஜர் ரெட்டி, மற்றும் தலைவர் இவர்கள் பாதுகாப்பாக முன்னால் சென்று கொண்டிருக்க அடுத்த வாகனத்தில் அனைத்துப் போராளிகளும் தலைவருக்குப் பாதுகாப்பு  வழங்கிய வண்ணம் இரண்டாவது வாகனத்தில் போய்க் கொண்டிருந்தோம்.  

                                                            


 எங்களுடைய வாகனம் எமக்கு முன்னர் இருந்த பழை முகாம் ஒன்றிக்குச்சென்றது, அங்கே சென்றதும் எமது இரண்டாவது  வாகனமும் எங்களோடு வந்து சேர்ந்தது. போன களைப்பில் பால் தேனீரும் போட்டு சிற்றுண்டிகளும் அனைவரும் சாப்பிட்டோம்,


எங்களோடு 33 போராளிகள் இருந்தார்கள். அவர்களில் எனக்கு ஞாபகம் உள்ளோர் லெப். கேணல் இம்ரான் 01- பிரிகேடியர் சொர்ணம் 02 , மேஜர் றோவட்03,   மாவீரன்04, வீமன்05 ,லெப் .கேணல் சுபன்06, மேஜர் அரவிந்தன்07,  செபமாலை 08 ,நசிர்09 , மேஜர் ரெட்னராஜ்10, மாவீரன் லெப் .கேணல் சிவாஜி11 பிரசாத்12, மாவீரன்  டேவிற் 13, சக்குறு14,  மேஜர் கைலன்15 , ஜெயராஜ்16 ,லெப் ,கேணல் குட்டிச்சிறி17,  பிரிகேடியர் கடாபி  இதில் நிலை போட்ட அனைவரும் விரச்சாவு அடைந்துள்ளனர். நிலை போடாமல் உள்ளவர்கள் இது எழுதிக்கொண்டிருக்கும் போது உயிரோடு உள்ளனர், இதில் போராளி சக்குறு இயக்கக்கட்டுப்பாட்டை மீறினார் என்பதை உறுதிப் படுத்தியமையால் 1990 கடசிப்பகுதியில் இவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது,

அடுத்து 15 /10/1987 அன்று இரவு ஒரு பெரிய லொறியில் லெப். கேணல்இம்ரான் அவர்கள்  லொறியை ஓட்ட தலைவர் அவருக்கும் பக்கத்தில் இருக்க அவருக்குப் பக்கத்தில் சொர்ணம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டுயிருந்தார்,

  நாங்கள் 30 போராளிகளும் லொறிக்கு  உள்ளே இருந்தோம். நாங்கள்பளையில் இருந்து கொம்படியூடாக  சுண்டிக்குளம் போய்க் கொண்டிருந்தோம். இடையில் அவ் லொறி சேத்தில் புதைந்து விட்டது.  பின்னர் அனைவரும் இறங்கி கால் நடையாக மீண்டும்  பளை முகாமிற்கு திரும்ப வந்து அங்கே தங்கினோம்.


அடுத்து17 /10/1987 அன்று இரவு குட்டி அண்ண ஒரு பெரிய லொறியைக்கொண்டுவந்து எங்கள் அனைவரையும் பளையில் இருந்து ஏற்றிக்கொண்டு கொம்படி ஊடாக விசுவமடு சுண்டிக்குளம் போய் சேர்ந்தோம். அங்கு இருந்து 3 வாகனத்தில் எமது பயணம் ஆரம்பமானது.  அதாவது தலைவர் சென்ற வாகனத்தை லெப். கேணல் இம்ரான் அவர்கள் ஒட்டிச் சென்றார் அதில் சொர்ணம், கடாபி, ஜெயராஜ், றோவட் லெப். கேணல் குட்டிச்சிறி இவர்கள் இருந்தார்கள்,


முதலாவது வாகனத்தை சுசிலன் 10த்திற்கு மேற்பட்ட போராளிகளாகளோடு சென்றுகொண்டிருக்க  மூன்றாவது வாகனத்தை குட்டி அண்ணை ஒட்டிபின்னால் வந்து கொண்டுயிருந்தார்.

 அதில் மிகுதி அனைத்துப் போராளிளும் வந்து கொண்டிருந்தார்கள்,  நாங்கள் போய்க் கொண்டிருக்கும் போது ஒன்பதாம் | கட்டையில் ஒரு வாகனம் காற்றுப் போய் விட்டது, அதைத் திருத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம். இடையில் லெப். கேணல் நவம் அவர்களும் தலைவர் சென்ற வாகனத்தில் வந்து ஏறிக்கொண்டார். அனைவரும் சென்று ஒட்டிசுட்டான் காட்டுபகுதியில் உள்ள ஒரு முகாமில் குறிப்பிட்ட நாட்கள் அங்கே தங்கினோம்,

இவர்கள் இடையில் வந்துகொண்டுயிருக்க மணலாற்றுக் காட்டுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி போராளி காசன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், அப்பொழுது நாங்கள் மேஜர் பசிலன் அவர்களின் தலைமையில் மணலாற்றுப்பகுதியில்  கடமையாற்றிக் கொண்டுயிருந்தோம்.
அப்பொழுது பசீலன் திடீரென என்னை "வோக்கி டோக்கியில்" அழைத்தார், அப்பொழுது என்னோடு அவர் கதைத்தார், புதிதாக ஒரு குறூப் வருவதாகவும்; பொடியலையும் கூட்டிக்கொண்டு மணலாற்றுக்காட்டில் உயிர்ந்த காடுகள் உள்ள இடமாகப் பார்த்து ஒரு15 பேர் தங்கக் கூடியவாறு ஒரு "ரென்ட் கொட்டில்" போடுமாறு சொன்னார், அதற்கு நான் "மஞ்சள் ரென்ட் தான் என்னிடம் உள்ளது பச்சை நீலம் போன்ற ரென்ட் இல்லையென தெரிவித்தேன்,"

கதை சொல்ல வேண்டாம்! உடனே போய் செய் என கட்டளை வழங்கினார். உடனே நான் என்னோடு நின்ற போராளிகளான 01. வெப்கேணல், சூட்டி 02 .பிரிகேடியர் பால்ராஜ், 03. நாயகம் ,04 .கேணல்அன்ரன், 05. மேஜர் கமல்,  06. ஜீவன், 07. மாவீரன் சாள்ஸ், இவர்களக்கூட்டிக்கொண்டு உடனே அங்கே சென்றேன்.
இதுதான் மணலாற்றில் அமைக்கப்பட்ட முதலாவது பாசறையாகும், தரவைக்குப் பக்கத்தில் உள்ளஉலத்து வெளி என்ற இடத்தில் அங்கே சென்று ஒரு "மஞ்சள் ரென்ட்" கொட்டிலை அடித்தேன். பின்னர் கீழே உள்ள காடுகளை சுத்தம் செய்தோம், பின்னர் வருபவர்களிற்குத் தேவையான தண்ணீர் உணவுக் களஞ்சியப் பொருட்கள் அனைத்தையும் வன்னியில் இருந்து தோள்களில் சுமந்துகொண்டு இன்னொரு சிறிய ரெண்ட் கொட்டில் அடித்து அப்பொருட்களை அதற்குள் வைத்தோம். அடுத்து சமைப்பதற்கான பாத்திரங்களும் கொண்டு வந்து அங்கே வைத்தோம், இதைச் செய்வதற்கு எமக்கு 5 நாட்கள் பிடித்தது.

பின்னர் பசிலனிற்கு தொடர்பு எடுத்து "அனைத்தும் செய்து விட்டேன் "என அறிவித்தேன்.  எனக்கு நன்றி அவர்தெரிவித்தார். இது நடந்து முடிய25/10/ 1987 அன்று இரவு 7 மணிக்கு லெப். கேணல் நவம் அவர்கள் தலைவரோடு 30 திற்கு மேற்பட்ட போராளிகளக் கூட்டிக்கொண்டு கொம்பாஸ் உதவியோடு  நடையில்  வந்தார் அன்று இரவு தலைவர் அங்கே தங்கினார். 

இப்படி இருக்க யாழ்பாணத்தில் நின்ற போராளிகற்கு என்ன நடந்தது என்று அங்கே நின்ற போராளி தூயாமணி  பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்,


 பரி சூட் தரைக்தத்தை திறமையாகச்செய்த  நாங்கள் பின்னர் கோண்டாவில் பக்கம் சந்தோஸ் மாஸ்ட்டரின் தலையில் கடுமையாக இந்திய இராணுவத்திற்கு எதிராகச்சண்டையிட்டுக்கொண்டுயிருந்தோம், ஆனால் இராணுவமும் எங்களிற்கு எதிராக கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டுயிருந்தது அச்சண்டையில் எங்களை வளி நடத்திய பொறுப்பாளரான லெப் கோணல் சந்தோஸ் மாஸ்ட்டர்அவர்கள்21//10/1987 அன்று காலை 09 மணியழவில் அவர்வீரச்சாவு அடைந்தார்
இவரின் வீரச்சாவிற்குப்பின்னர் எங்களின் சண்டையிடுவதற்கான கட்டமைப்பு முற்றாக உடைந்தது
அங்கு இருந்த ஒரு போராளி சொன்னான் இனி ஒன்றாகயிருந்து செயல்பட்டால் எங்களை இந்திய இராணுவம்  அழித்து விடுவான் அதனால் இங்கே நிக்கும் போராளிகள் அனைவரும்உங்கட உங்கட மாவட்ட அணிகளோடு போய்ச் சேர்ந்து இயங்குமாறு அவன்ஆலோசனை வழக்கினான்

, அதை அனைவரும் ஏற்றுக்கொண்டர்கள் தொடர்ந்து அனைவரும் வலிகாமத்தில் இருந்து தென்மராச்சிக்கு வந்தோம் அங்கு இருந்து திருமலை, மன்னார், மட்டு, வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகள் அனைவரும் அவரவர் மாவட்டங்களிற்குச் சென்று விட்டார்கள், நான் சாவகச்சேரியில் இயங்கிக்கொண்டுயிருந்த யாழ்மாவட்ட அணியான தமிழ்செல்வன் அல்லது தினேஸ் என்பவரின் அணியில் இணைந்துகொண்டேன்,

தொடர்ந்து பிரிகேடியர் தமிழ்செல்வன் என்னை  லெப்கேணல் செல்வராசா அவர்களின் அணியில் இனைத்துவிட்டார்,

 

அன்றையில் இருந்து நான் அவரோடு கடமையாற்றினேன், எங்களின் கடமை இந்திய இராணுவத்தின் வாகணங்களிற் குண்டுகளை எறிந்துவிட்டு வேகமாக மறைவிடங்களிற்குச் சென்று விடுவதாகயிருந்தது.அப்படி இருந்தும் மாற்று இயக்கங்களை சேர்ந்த உறவினர்கள் நாங்கள்இருக்கும்இடங்கள் பற்றிய தகவல்களை இந்திய இராணுவத்திற்குப்கொடுப்பதால் பாரிய சுற்றிவழைப்புக்க்களைச்செய்து எங்களைப்பிடிக்கவரும்போது உயிருடன் பிடிபடாமல் குப்பி கடித்து பலர் வீரச்சாவு அடைந்துகொண்டு யிருந்தார்கள் 

தொடர்ச்சியாக இந்திய இராணுவம் சுற்றி வழைத்து தேடுதல் நடத்துவதால் ஒழுங்கான சாப்பாடு குழிப்பு என்பன எங்களிற்குக்கிடையாது இப்படிய எங்களின் போராட்ட வாழ்கை சென்றது, அடுத்து1988 நடுப்பகுதியில் அங்கே சொர்ணம் வந்து எங்களில் 30 போராளிகளை தலைவரின் பாதுகாப்பிற்கு என கூட்டிக்கொண்டு வன்னிக்காட்டிற்குச் சென்றார் அன்றில் இருந்து மணலாற்றுக்காட்டில் தலைவரின் பாதுகாப்பு அணியில் நீன்ற காலம் இருந்ததாக தூயாமணி குறிப்பிட்டர்.

 


அடுத்து தலைவர் மணலாறு சென்ற தொடர்ச்சி

அங்கே சென்றதும் ஒரு புது இடமாகவே தலைவரிக்கு இருந்தது ஏனெனில் ஆரம்பகாலத்தில் புளியங்குளம் மன்னார், போன்ற காடுகளே தலைவரிக்கு பளக்கமாகயிருந்தது.


ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மன்னார் வவுனிய போன்ற பெரும்காடுளிலே வாழ்த்தார்கள் என்பதைமுன்னர் குறிப்பிட்டுள்ளேன், 1983 ற்குப்பின்னர் லெப் கேணல் நவம் அவர்களின் அப்பா எமது தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர் வேபி அண்ணைக்கு மிகவும் நெருங்கிய நன்பாராகயிருந்தார், 



 அதனால் அவரின் ஆலோசனைக்கு அமைவாக1883ற்குப்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துக்காடுகளிலும் வாழ்ந்தாலும் அனைத்தும் பாதுகாப்பான இடமாகவே கருதப்பட்டது, ஆனால்12/10/1987 ளிக்குபின்னர் அதாவது இந்தியா இராணுவம்யாழ் பல்கலைக்கலக மைதானத்தில் தலைவரை கொலை செய்வதற்காக நடத்திய தாக்குதலிற்குப்பின்னர்முன்னர் நாம் வாழ்ந்த இடங்கள் பாதுகாப்பானதாகயிருக்காது என்பதே சில குறிப்பிட்ட மூத்த போராளிகளின் நம்பிக்கையாகயிருந்தது, 


இந்திய இராணுவத்துடன் கடும்மையாகக்சண்டையிட வேண்டியதுர்ப்பாகிய நிலை எமது இயக்கத்திற்கு கண்டிப்பாக ஏற்பபடும் எனவும்அப்படி சண்டையிடுவதாக இருந்தால் தலைவர்தப்பிச்சென்று   ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும்அப்படியிருந்தால் தான் போராட்டத்தை நடத்த முடியும் இதுவே மூத்த போராளிகளின் நிலைப்பாடாகயிருந்தது,

. அப்பொழுது ஒரு சில மூத்த போராளிகள் சொன்னார்கள் வவுனியாக்காடு நல்லம் என்று ஒரு சிலர் சொன்னார்கள் மன்னார் சிறந்தகாடு என்று ஆனால் இது இரண்டு இடங்களும் 1976ம் ஆண்டில் இருருந்து சிறிலங்கா ஆரசாங்கத்திற்கு தெரிந்த இடம் அதனால் இவ் இரு இடங்களையும் இந்திய இராணுவத்திற்குப்பிடிப்பது இலகுவாக இருக்கும் என்பதை விளங்கிக்கொண்டதலைவர் லெப் கேணல்நவம் அவர்களின் அப்பாவிடம் சென்று ஆலோசனை கேட்டார், 


ஏன் இவரிடம் கேட்டார் இவரின் திறமை என்ன இவர் ஒரு சிறந்த வேட்டைக்காரனும் மணலாற்றுகாடுபற்றிய முழுமையான அறிவும் உடையவர் என்பதும் குறிப்படத்தக்கது அதை அதைவிட அவரின்மகன் லெப் கேணல் நவம் அவர்கள் எமது இயக்கத்தில்மிகவும் விசுவாசமான போராளியாகவும் எமது போராட்டத்தின் வழர்ச்சிக்காகக் கடுமையாக உளைத்தவர் அத்தோடு அவரின் அப்பா Dady அவர்களும் எமது அமைப்புப் பற்றியும் தலைவர் பற்றியும் மிகவும் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவர்,

அதனால்அவர்களின் அப்பா அவருடைய மகன் ஆன லெப் கேணல் நவம் அவர்களிற்கு மணலாறு பொருத்தமான இடம் என்று முன்கூட்டிய சொல்லி வைத்துயிருந்தார்,


  அவரின் ஆலோசனைக்கு அமைவாகவே தலைவர் அங்கே செல்வதற்கு முடிவு எடுத்தார் தலைவர் சென்றதற்குபின் குறிப்பிட்ட  6 மாதற்குப்பின்னர்அவரும்அவருடைய இரண்டு நாய்களுடன்அங்கே  போய் நின்றுவளி காட்டியாகவும் அவர்களோடு மணலாற்றுக்காட்டிலே வாழ்ந்தும் உள்ளார். அவர்எம்மவர்களைவிட்டுப் பிரியும்போது  மையில் குஞ்சு என்ற சிறந்த பாதை காட்டியையும் அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார்,

அங்கே சென்றதும் தலைவர் என்ன மாற்றங்களைக் கொண்டுவந்தார் என்பது பற்றி போராளி காசன் அவர்கள் குறிப்பிடுகையில்,


உதயம் என்றால் ஆரம்பம் என்பதைக் குறிக்கும் உதயபீடம் இந்த முகாமிற்கு ஆரம்பத்தில் தேவன், சமுத்துரன் அடுத்து மேஜர் அரவிந்தன் இவர்கள் அம்முகமிற்குப்பொறுப்பாகயிருந்தனர், இங்கே போராளிகளை உருவாக்குதல் சண்டைக்கான பயிற்சிகள் சூட்டுப்பயிற்சிகள் தலைவரின் சந்திப்பு முகாமாகவும் இது இருந்தது, அடுத்தது நீதிதேவன் இதற்கு கேணல் சங்கர் அவர்கள் பொறுப்பாகயிருந்தார், அங்கே கேணல்கிட்டு மற்றும் பிரிகேடியர் சொர்ணம் போன்ற முக்கிய பொறுப்பாளர்கள் அங்கே சென்று வருவார்கள் ஏணைணைய போராளிகள் அங்கே செல்ல முடியாது,
அங்கே தவறு விடும் போராளிகளை விசாரித்து நீதி வழங்குதல் கடுமையான தவறு விடுபவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களிற்கு சாசொறுப்பு அங்கே வைத்து வழங்கப்படும்,


 வசந்த நாடு என ஒரு முகாம் இருந்தது அங்கே வெளி ஆட்களைச் சந்திக்கும் இடமாக அது இருந்தது பிரமதாசாவோடு நடைபெற்றபேச்சுவார்த்தையின்போது பேச்சுவார்த்தைக்கு கொழும்பிற்கு சென்று  யோகிஅண்ணை  ஏணயவர்கள் அங்குயிருந்துதான் கெலிக் கொப்டர்மூலமாக போய் திரும்பிவரும்..

 இடமாக அது இருந்தது, அதே காலப்பகுதியில் புனித பூமியில் இருந்துகிட்டு அண்ணையை கிழச்சேசில்  நாலு போராளிகள்தூக்கிச் செல்ல பல போராளிகள் பாதுகாப்பு வழங்கிச் சென்று வந்தனர்.

அங்கே சென்று இறக்கி  வைத்தனர்  பின் கெலி வந்ததும் அவரின் கண்ணால் கண்ணீர் வழிந்தது கண்ணீரைத் துடைத்துவிட்டு போராளிகற்குக்கை காட்டிக்கொண்டு கிட்டு அண்ணை கொழும்பிற்குக் சென்றார் கெலி 100 மீற்றர் பறந்து கொண்டுயிருக்கும் போதே கையைக்காட்டிக்கொண்டே சென்றார்அதைப்பார்த்த போராளிகளும் கண்ணீர் விட்டு அழுதினார்கள்,,  அங்கு இருந்து பின்னர் லண்டனிற்குப்போனார்,


அமுதகானம் இதற்கு சிவா பொறுப்பாகயிந்தார் அடுத்து கப்டன் தீபன் பொறுப்பாக இருந்தார்,,இது களஞ்சி முகாமாகயிருந்தது.இங்கே தான் அனைத்து உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுயிருந்தது அனைத்து முகாம்களில் இருந்து போராளிகள் இங்கே வந்து தான் தக்களிற்கான சமைப்பதற்கான பொருட்கள் பரமரிப்பு சோப் சம்போ அவர்களிற்கான உடுப்புக்களையும் வேண்டிக்கொண்டு செல்வார்கள்,
, இதற்குப் பக்கத்தில்தான் வெதுப்பகவும் அமைக்கப்பட்டுயிருந்தது அதற்கு பிரிகேடியர் காடாபி அண்ணையின் அப்பா அவ் வெதுப்பகத்தை நடத்தி வந்தார் அவர் அனைத்துப் போராளிகளிற்கும் சுவையான பாண்களைசெய்து வழங்கினார், மகனும் ஒரு சிறந்தபோராளி ஆனால் தகப்பனும் ஒரு போராளி போன்றே  கடமையாற்றினார்,

 புனித பூமி அங்கேதான் தலைவர் இருந்தார் அதற்கு தியாகு பொறுப்பாகயிருந்தார்,தலைவரின்கண்காணிப்பில்தான் பெண் போராளிகளும் இருந்தார்கள், அவரின் பாதுகாவலர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள்


 அவரின் முகாமிற்குப் பக்கதில் பெண்போராளிகளின் முகாமும் இருந்தது.அவர்களிற்குப் பொறுப்பாக மேஐர் சோதியா, அவர்கள் இருந்தார்,அவருக்குக் கீழே பல பெண் போராளிகள் இருந்தார்கள், அங்கே ஒரு கிணறு இருந்தது அதற்கு நேர அட்டவனை போட்டு ஒரு நாள் அண் போராளிகள் அதைப்பயன்படுதுவார்கள் அடுத்த நாள் பெண் போராளிகள்அதைப்பயன்படுத்துவார்கள் அங்கே இருந்தவர்களை அவர் குறிப்பிடும்போது பிரிகேடியர் சொர்ணம் .பிரிகேடியர் கடாபி. மேஜர் றோவட், கரும்புலி மேஜர் காந்தரூபன், கரும்புலி கப்டன் கொலின்ஸ், போராளி காசன் மேஜர்சேரன், கப்டன் அந்தோனி, லெப் பூவதி, கட்டன் நிவாஸ், கேணல் அன்ரன், இவர்கள் அங்கே இருந்ததாகக்குறிப்பட்டுள்ளார்,வேறு சிலரும் ஆரம்பத்திலே அமைப்பில் இருந்து விலகி வெளிநாடுகளில் வாழ்வதாகக் குறிப்பிட்டார்


நாசகாரி என ஒரு முகாம் இருந்தது அதற்கு போராளி டானியல் பொறுப்பாக இருந்தார், அங்கே செபமாலை,, போராளி கிறிஸ்தோபர் என பல போராளிகள் அங்கே இருந்தார்கள் அங்கேதான் போராளிகற்கான சூ உற்பத்தி செய்யப்பட்டது,இத்தேவையை முன்கூட்டிய அறிந்த தலைவர் வல்வெட்டித்துறையில் இருந்து சூ தைப்பதில் அனுபவம் பாய்ந்த இரண்டு பேரை அங்கே இருந்து ஏற்றிக்கொண்டு எமது முகாமிற்குக்கொண்டுவந்தனர், அடுத்து அதற்கான அடிப் பாதங்கள் அதற்கு பயன்படுத்தப்படும் மாட்டுத்தோல் பிளாஸ்ரிக் உதிரிகள் ஒட்டும் பசைகள் அனைத்தும் கொழும்பில் இருந்து பெரும் தொகையாக வேண்டப்பட்டது, அடுத்து கிறிஸ் தோமரின் தலைமையில் 15 போராளிகளைவிட்டு அவ்வேலையை பழக்கியதோடு மட்டும் இன்றி ஆயிரக்காணக்கான சூக்கள் அங்கே செய்யப்பட்டது,

 அடுத்துஅங்கேதான் மிதிவெடிகளும் அதாவது ஜொனிமிதிவெடி ஏனைய கிழைமர் வெடி பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டது,





தளபதி மாத்தையா அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போர்போம் இந்தியா இராணுவத்தோடுசண்டையிட விரும்பாத போராளிகளில் தளபதி மாத்தையாவும் ஒருதர், என்பதும் இந்தியாவினுடைய றோவிற்கு நன்கு தெரியும்.

பிரமதாசா அரசுக்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடைய ஏற்பட்ட உறவு நிலையை றோ அறிந்து விட்டது, அதனால் மிக விரைவாகத் தலைவரைக்கொலை செய்து அவர்களின் போராட்டத்தை முற்றாக அழிப்பதின் ஊடாக தாங்கள் தான் விடுதலைப் புலிகளை அழித்த நாங்கள் தமிழர்களை பாது காற்கவேண்டிய பொறுப்பு எங்களிற்கு இருக்கின்றது என சொல்லி மாத்தையா போன்றவர்களை விடுதலை புலிகளின் தலைவராக்கி நிரந்தரமாகவே இலங்கை அதாவது தமிழர் பகுதியில் இருப்பதே அவர்களின் திட்டமாகயிருந்தது,

அதற்கு தலைவர் எங்கே இருக்கின்றார் என்பதை சரிகாக அறிய வேண்டிய தேவை இந்தியா அரசபடைகளிற்கு இருந்தது,

1987 ல் தலைவர் இந்திய விற்கு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் போது தனக்கு ஏதாவது நடந்தால் தனது இடத்திற்கு மாத்தையாவை நியமனித்தபின்னரே சென்றார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்

அதனால் தலைவர் இல்லை என்றால் தான்தான் தலைவர் என்ற  நம்பிக்கை மாத்தையாவிற்கும இருந்தது, அதனால் தலைவர் மணலாற்க்குக்காட்டில் தளம் அமைத்து இந்திய படைகளோடு சண்டையிடுவதற்கு தயார் ஆகயிருந்தார், ஆனால் அக்காலப் பகுதியில் மாத்தையாவும் அவரின் பாதுகாவலர்களும் நெடுங்கேணியில் இருந்தார்கள்,

ஆனால் மாத்தையாவைப்பிடிக்க வேண்டிய தேவையோ அல்லது கொல்ல வேண்டிய தேவையோ இந்திய படைகளிற்கு இருக்கவில்லை அவர்களின் இலக்குப் பிரபாகரனாகவே இருந்தது,

அதனால் எப்படியாவது பிரபாகரன் இருக்கும்இடத்தை அறிய வேண்டும் என்பதற்காக இந்தியாவின் உளவு நிறுவனமான றோ தலைமைத்துவப் போட்டி காரணமாக பிரபாகரனிக்கும் மாத்தையாவிற்கும் நடந்த கைத்துப்பாக்கிச் சண்டையில் பொருத்தமான இடத்தில் வெடிப்பட்டு பிரபாகரன் அவ் இடத்திலே கொல்லப்பட்டதாக இந்தியவில் உள்ள ஊடகங்கள் அனைத்திலும் செய்தி பரப்பப்பட்டது, அவர்கள் எதிர்பார்த்தது இருவரும் பக்கத்தில் நின்று ஒரு படத்தை வெளியிட்டால் இருவரும் இருக்கும் இடம் வன்னி என்பதை உறிதிப் படுத்தலாம்என்பதே அவர்களின் திட்டமாகயிருந்தது, ஆனால் மாத்தையா இருக்கும் இடம் முன்னரே இந்தியப்படைகளிற்குத்தெரியும்,


 ஆனால் இதை அறிந்தவடகிளக்குத்தமிழர்கள் கண்ணீர் விட்டு அழுதினார்கள். கிழக்கு இலங்கையைச்சோந்த பிறேஸ்காட் சின்னத்தம்பி என்பவர் தலையில் மண் அள்ளிவைத்து மாத்தையாவை சுட்டுக் கொல்லுங்கோ என்று ஒப்பாரிவைத்தார். இதுதான் வடகிழக்கு தமிழர்களின் நிலையாக இருந்தது.



இதை அறிந்த விடுதலைப்புலிகள் தலைவரின் புனிதபூமி முகாமில் இருந்து தலைவரின் மேற் பாதுகாவலர்களின் ஒருதர் ஆன தளபதி சொர்ணம்அவர்களின் தலைமையல் 20 போராளிகள் நெடுங்கேணிக்குச் சென்றார்கள் அங்கே சென்றதும் அவரின் பாதுகாவலர்களோடு மாத்தையா ஒரு இடத்திற்கு வந்தார், அவ் இடத்தில் இருந்து தளபதி மாத்தையா அவர்களை மட்டும் நாங்கள் எடுத்துக்கொண்டு அவரின் பாதுகாவலர்களை முகாமில் போய் நிக்கி மாறும் பின்னர் அவரை உங்களிடம் கொண்டு வந்து ஒப்படைப்பதாகச் சொல்லி விட்டு புனித பூமியை நோக்கி நடக்கத் தொடங்கினோம், 

அவர் மிகவும் களைப்பாகக்காணப்பட்டார், இடைக்கிட இருந்து இருந்து மெதுவாக நடந்து வந்தார், அங்கே சென்றதும் தலைவரும் மாத்தையாவும் சிறிது நேரம் கதைத்ததும் இருவரும் ஒன்றாக நின்று படம் எடுத்தார்கள் அதை அடுத்து அவரைக்கூட்டிக்கொண்டுபோய் நெடுங்கேணியல் விட்டுத்து வந்ததாகப் போராளி தூயாமணி குறிப்பட்டார்



 தலைவரும் மாத்தையாவும் ஒன்றாக நின்று எடுத்த ஒரு படத்தை வெளியிட்டு தலைவரிக்கும் மாத்தையாவிற்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை இது போலியானது. இதில் எவ்விதமான உன்மையும் இல்லையென மக்கள் இதை நம்ப வேண்டாம் என்று இலங்கை வீரகேசரியில் இச்செய்தி வெளியானது.


பின் இந்திய ஊடகங்களிலும் இச்செய்தி பரவியது,ஏன் இந்தச்செய்தியை றோ பரப்பியது மாத்தையா மீது விடுதலை புலிகளின் தலைவர் சந்தேகப்படுகின்றாரா? இல்லையா என்பதை உறுதிப்படுத்தவே றோ இந்தத்தகவலைப்பரப்பியதுஅடுத்து தலைவர் வன்னியில் உள்ளார் என்பதை அறிவதே அவர்களின் திட்டமாகயிருந்தது ஆனால் விடுதலைப் புலிகளின் அறிக்கைக்கும்பின்னர் விடுதலை புலிகளின் தலைவரோ அல்லது தளபதிகளோ மாத்தையாமீதுசந்தேகப்படவில்லையென்பதையும்,அவர் வன்னியில்தான் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தவே லெப் கேணல் ஜொனி அனுப்பப்பட்டார் .

தொடர்ந்து இந்தியாவிற்கும் தளபதி மாத்தையாவிற்கும் இரகசியத்தொடர்வு நடந்துகொண்டுயிருந்தது இதின் விளைவு எப்படி இருந்தது என்பதை அந்தந்த ஆண்டுகள் வரும் போது குறிப்பிடுகின்றேன்


அப்பொழுது ஒப்ரேசன் பவான் நடவடிக்கை ஒன்றை செய்வதற்கு இந்தியா இராணுவம் திட்டமிட்டுக்கொண்டுயிருந்த காலம் அது


தலைவரைக் கொல்வது  அல்லது கைது செய்வது இதுவே அவர்களின் திட்டமாகயிருந்தது அதை முறியடிக்கத்தான் தலைவர் ஜொனி அவர்களின் பேரில் இந்த மிதிவெடியை உருவாக்கி முன்னேறிவரும் இந்திய இராணுவத்தை அழிப்பதே அவரின் திட்டமாகயிருந்தது,

ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்க வைத்த சொல்.!


ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.!


இந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் 650 க்கு மேற்பட்ட போராளிகள்வீரர்கள் விரச்சாவு அடைந்து விரச்சாவு அடைந்து இருந்த போதிலும் ஏன்? இந்த மாவீரரின் பேரை  தலைவர் தேந்து எடுத்தார்,?




இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.!


லெப். கேணல்.ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்டவாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது.


இந்த நேரத்தில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது. இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர்.


இந்த பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர். அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலிதாக்குதலும் அடங்கும்.இந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார்.


உலக இராணுவப் பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சிகள் தரம் குறைந்ததாகவே வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்களுக்கு புலிகள் மீதோ எமது மக்கள் மீதோ எந்தவித கரிசனையும் இல்லை.


ஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் ஆறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர்.


இன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன்.


ஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற “ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்” (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ்303துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன.


சரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை. புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது.


இந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கோடுத்தது   அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும்.


ஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார். 1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது.


கிட்டண்ணையால் சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார்.இந்திய–இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.


இதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார்.


இந்திய இராணுவத்தினர் தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய TELO, EPRALF, ENDELF போன்ற சமூக வீரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது.


அப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர்.


இதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர்.


ஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது.


சில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது.


அதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார்.


இவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர்.


இந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர்.


அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும்.


அதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணைத்தூவ புலிகளும் ஆயத்தமாகினர்.


அதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர் அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர்.இந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும்.


ஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடிக்குடுத்து (றிலே) போடுவதுபோல் அது இருக்கும்.


ஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு ஜோகியண்ணையையும் அவர்ட்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார். அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார்.


தலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்.


தலைவரிடம் வந்தபின் தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது.


அவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று


பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும் திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார்.


இதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.!


அதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்கியிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர்.


இதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர்.


ஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் “செக்மேட்” என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார்.


அப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.


இதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும்,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்கக் கட்டளை இட்டார்.


அதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.


பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.


இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்) இதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது.


அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.?


இது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.!

ஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர்.


அந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.!


அப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.!


அதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும்.


எல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.!


மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.


இதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது.


தனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் “ஒப்ரேஷன் பவான்”எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.


ஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.!


இராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம்,போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும்.


அன்று இந்த ஜொனி மிதிவெடியினால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி,எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது.!


தாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது.! வரலாற்றுடன் துரோணர்.!!

 வெடி பொருட்கள் உற்பத்தி பற்றி அறிந்து இருப்பீர்கள் அடுத்து1988 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒப்பிரேசன் பவான் நடவடிக்கை இந்திய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது அதில்பங்கு பற்றிய போராளி ஜெயராஜ் குறிப்பிடுகையில்,.

 அப்பொழுது இந்திய இராணுவம் சிறு சிறு குழுக்களாக எமது பாசறைகளை நோக்கி வந்துகொண்டு இருந்தது. அப்பொழுது ஆண் போராளிகளும் பெண் போராளிகளுமாக ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியான எமது புனிதபூமிக்குப்பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் இந்திய இராணுவத்தின்வருகையை எதிர்பார்த்துக்கொண்டு காவல் கடமையில்ஈடுபட்டுக்கொண்டுயிருந்தோம்


இருந்தோம்,
 அப்பொழுது ஏனைய போராளிகள் இலகு ஏந்திரத் துப்பாக்கிகள் வைத்து இருந்தார்கள் ஆனால் என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டும்தான் இருந்தது, ஏனெனில் அப்பொழுது ஆயுதங்கள் அனைத்தையும் இத்திய இராணுவத்திடம் ஒப்படைத்தமையால் எமக்கு ஆயுதப் பற்றாக்குறையும் இருந்தது,

 அதனால் அத்துப்பாக்கி மட்டும் என்னிடம் இருந்தது திடீரன நாங்கள் எதிர்பார்க்கவில்லை இந்திய இராணுவம் எங்களை நோக்கிச்சுடத்தொடங்கிவிட்டது .எங்களோடு நின்ற ஆண் பெண் இருபகுதியினரும் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டுயிருந்தார்கள். பெண் போராளிகளின் தரப்பில் -போராளி சஞ்சிகா . போராளி செல்வி, -போராளிஅருந்ததி என ஆண் போராளிகளில் 7ளிற்கு மேற்பட்ட போராளிகள் நின்று சுட்டுக் கொண்டுயிருந்தோம் . சண்டை நடந்துகொண்டுயிருக்க முதலாவது போராளி சத்தியன் அவர்கள் காயம் அடைந்தார்.அது சிறு காம் அதை அவர் பெரிதுபடுத்தவில்லை தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டுயிருந்தார்.
அதை அடுத்து
லெப், கேணல் நவம் அவர்கள் நெஞ்சில் காயப்பட்டார்ஆனால் அது சிறு காயமாகயிருந்தபடியால் அவர்பின்னால் போகவில்லை சண்டையிட்டுக்கொண்டுயிருந்தார்


, அதைபடுத்து நான் இரண்டு இராணுவச் சிப்பாய்களைக்கண்டு எனது கைத்துப்பாக்கியால் 7 ரவைகள் அவர்களை நோக்கிச்கிச்சுட்டேன். கடுமையான வெடிச்சத்தம் காது அடைப்பது போல் இருந்தது அடுத்து  இரண்டு சிப்பாய்கள் பெண் போராளிகளின் பக்கம் ஒடுவதைப்பார்த்தேன், திடீரென எனது இடுப்புப் பக்கம் சுளுக் என தீட்ண்டினாப்போல் இருந்தது.

 குணிந்து பார்த்தேன் இரண்டு கால்களும் இரத்தததால் நனைந்துகொண்டுயிருந்தது, அச்சண்டையியின் போது சுரேஸ்என்ற மட்டக்களப்புப்மாவட்டத்தைச் சேர்ந்த  போராளிசிறிது நேரம் முன்னர் விரச்சாவு அடைத்தார் நானும் விரச்சாவு அடையப் போகின்றேன் என நினைத்தேன்,

நான் மயக்கத்தில் நிலத்தில் இருந்தேன் உடனே ஒரு ஆண் போராளி என்னத்தூக்கினார் ஆனால் அவரால் தூக்க முடியாமல் இருந்தது. அதைப் பார்த்த பெண்போராளி சஞ்சிகா . விடுதம்பி நான் தூக்கின்றேன் என சொல்லிஎன்னை அவரின் தோழில் தூக்கிக்கொண்டு குழந்தையைக்கொண்டுபோவதுபோல் 3 கிலோ மீட்டர் நடந்து எங்களின் தற்காலிக மருத்துவமனையில் ஒப்படைத்தார்,

 என்னை ஒப்படைக்கும்போது அவரின் உடைகள் எல்லாம் இரத்தத்தால் நனைந்து காணப்பட்டார், பின்னர் அவர்விடைபெற்றுச் சென்றார் ,அங்கே வேறு இடத்தில் நடந்த சண்டையில் பிரிகேடியர் எஸ்சோ அவர்களும் காயம் அடைந்து அங்கே நின்றார்.


தலைவருக்குப்பக்கத்தில் தளபதி சூசை / எஸ்சோ

இருவரையும் வோட்டில் ஏற்றி மருத்துவச் சிகிச்சைக்காக எங்களைஇந்திய அனுப்பினார்கள். நாங்கள் மூன்று நாட்களில் இத்திய போய்ச் சேர்தோம் என அவர் குறிப்பட்டார்.என்றார்,

 அடுத்து களத்தில் நின்றபோராளி காவேரி குறிப்பிடுகையில் தொடர்ந்து சண்டை நடந்தமையால் தளபதி சொர்னம்- தளபதி ஜேம்ஸ்- என நிறையப் போராளிகள் அங்கே வந்து விட்டார்கள், அதனால் சண்டை எமக்கும் இந்திய இராணுவத்திற்கும் கடுமையாக நடந்தது.

 அதில் சத்தியன் மிகவும் திறமையானவர்இவர் இந்திய நாலாவது பயிற்ச்சி முகாமில் பயிற்சி எடுத்தவர் கிளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்,அச்சண்டையில் இவர் குறி பார்த்து குறிபார்த்து 10 இந்திய இராணுவத்தைச் சுட்டு விட்டார், அதில் பத்து இந்திய இராணுவத்தின் உடல்களையும் காயம் அடைந்த ஒரு இந்தய இராணுவத்தையும் உயிரோடுபிடித்தோம், எமது தரப்பில் இரு போராளிகள் விரச்சாவு அடைந்தனர் அதில் போராளி கோபி மிதிவெடி வைக்கச்சென்றவேளை இராணுவத்தின் சூட்டில் வீரச்சாவு அடைந்தார், என அவர் குறிப்பிட்டார். அதில் திறமையாகச்செயல்பட்ட சத்தின் என்பவரை அவர்களின் வீட்டில் கடுமையான கஸ்ட்டம் என்பதால் தலைவரால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்,அத்தோடு அவரின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக தேசியத் தலைவரால் அவருக்குஉளவு எந்திரம் ஒன்றும் வேண்டிக்கொடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்,

அடுத்து என்ன இறுக்கமான சண்டை நடந்தாலும் டிசம்பர் 25 வந்தால் நந்தர் பாப்பா நடனத்தை விடுதலைப்புலிகள் மறந்ததே கிடையாது,



போராளிகளை என்னேரமும் மகிழ்சியாக வைத்துயிருக்க வேண்டும் என்பதில் பெண் தளபதிகளில் ஒருதரான சோதியா முன்மாதிரியாகச் செயல்படுபவர், டிசம்பர்25 வந்தால் பெண் போராளிகளை வெளிக்கிடுத்தி நடனம் ஆடிக்கொண்டு ஆண்போராளிகளின் முகாமிற்கு வந்துவிடுவார்கள்

 பெண் போராளிகள் நத்தார் பாப்பா வேடமிட்டு ஆடி வந்தவர் பெண் போராளி றோசீ என்பவர் ஆனால் தலைவரும் மற்றும் தளபதிகளும் அவர்களை ஊக்கப்படுத்தி அன்று இராவு  ஒரு பெரிய கலைநிகழ்வு நடைபெறும், அனைவரையும் கூப்பிட்டு ஆடிப்பாடி அணைவரையும் மகிழ்சியாகவைத்துயிருப்பதே அதின் திட்டமாகயிருந்தது, பாடல்கள் ஆடல்கள் தீன் பண்டங்கள் எனஅனைத்துப்போராளிகளும் கலகலப்பாகக்காணப்படுவார்கள்,



புலிகள் என்றுமே மதவேறுபாட்டையோ அல்லது சாதி விடயமாகவோ பார்ப்பது கிடையாது, அனைத்து ஒரு தாய் பிள்ளைகளாகவே பார்கப்படுவார்கள்,



பின்னர் அங்கே நடந்த சண்டைகளை போராளி காசன் குறிப்பிடுகின்றார்,





தொடந்து காயப்பட்டுப் போராளிகள் வெளியேறிக்கொண்டுயிருந்தார்கள்அதனால்எமக்கு ஆழணி இல்லாத பிரச்சனையிருந்தமைமையால்  சிறு சிறு குழுவாகப் பிரிந்து அனைத்துக் காடுகளிலும் தாக்குதலிற்குத் தாயார் ஆக விடப்பட்டுயிருந்தோம். எதிர்த்து நின்று சண்டையிடுவதால் காயம் விரச்சாவு என  ஆழணிகுறைந்துகொண்டுயிருந்தமையால் நாலாவது வல்லரசான இந்திய இராணுவத்தோடு சண்டையிட்டு எப்படி எமது இயக்கத்தைப் பாதுகாப்பதுஎப்படி என தலைவர் இரவு பகலாகச் சிந்தித்துக்கொண்டுயிருந்தார்.

அவரின் திட்டத்திற்கு அமைய திடீரென எங்களின் முகாமிற்கு புதிய றேடியோக்கள் வந்தது போராளிகளும் தங்களிற்குப்பாட்டுக்ககத்தரப்போகின்றார்கள் என மகிழ்ச்சி அடைந்தார்கள்

ஆனால் அதுவல்ல திட்டம் றேடியோர்களை எடுத்துக்கொண்டு சொர்ணம் எங்களை வந்து சந்தித்தார், அனைத்துக்காடுகளிலும் எல்லா இடங்களிலும் 100 மீட்டர் சுற்றிவர மிதி வெடிகளைப்நிலத்தில் புதைக்க வேண்டும் பின்னர் நடுப்பகுதியில் ஒரு கொட்டில்போன்ற இடத்தைச் செய்து அனைத்து மிதிவெடிகளும் புதைத் பின் அக் கொட்டிலில்வைத்து றேடியோவை குறைந்த சவண்டில்   போட்டுவிட வேண்டும் ஏனெனில் ஒலியைக் கூட்டி வைத்தால் வேகமாக வெற்றி இறங்கிவிடும் அத்தோடு தேடிவரும் இந்திய இராணுவமும் வேண்டும் என போடுவதாக எண்ணி சந்தேகப்படக்கூடும் அதனால் சவண்டை குறைத்துப்போடுமாறு சொல்லப்பட்து,


அதைவைத்துவிட்டு 300 மீற்றர் தள்ளி தாக்குதலிற்கு உரியவாறு எங்களை நிக்குமாறு சொல்லப்பட்டது,  அதனால் தலைவரின் திட்டத்திற்கு அமைவாக சிறு சிறு றேடியோக்கள் அதாவது வானோளிப்பெட்டிகள்தரப்பட்டது, அதை ஒரு அடந்த காட்டிற்குள் வைத்து 100 மீற்றர் சுற்றிவர ஜொனி மிதிவெடியை விதைத்து விடுவோம்,

இந்திய இராணுவம் சுற்றி வழைத்துத் தாக்குதலில் ஈடுபாடுவதற்காக மிகக்கிட்டே நெருங்குவார்கள் இருந்தும் றேடியோ சத்தம் கேட்டுக் கோண்டே இருக்கும், கடுமையான கோபம் ஏற்பட்டு பொறுமை இழந்துகிட்டே நெருங்குவார்கள்   பின்அவ் இலக்கை நோக்கிச் சுடுவார்கள்அதையடுத்து  துப்பரவு பண்ணுவதற்காக கிட்ட செல்வார்கள்அவ் இலக்கை அவர்கள் அடையும்போது சில பொருட்களைத் தொட நேருடும் அதைத்தொட்டதும் மரத்துக்கு மேலே வைக்கப்பட்டவெடி பொருட்கள்  வெடிக்கத் தொடங்கிவிடும் பின் அவர்கள் ஓட வெளிக்கிடும்போது 
 மிதிவெடிகள் வெடிக்க ஆரம்பித்துவிடும் காயம் அடைந்தவர்களையும் விட்டுத்து பின்னால் ஒடி விடுவார்கள், அங்கே போராளிகள் சென்று பார்த்தால் இறந்தவர்களின் வொடிகளும்வெபொருட்களும் ஆயுதங்களும் கிடக்கும் அதை எடுத்துக்கொண்டு நாங்கள்வேறு இடம் செல்வோம். ஆனால் தப்பி ஓடிய இந்திய இராணுவம் தங்களின் அதிகாரிகளிடம் சொல்வது இதுதான் அங்கே விடுதலைபுகளும் இல்லை மனிதர்களும் இல்லை பேய் காடுகளிற்குள் காத்துகின்றது அதை தேடிச் செல்லும்போது விடுதலைப்புலிகளிகளின் பொறிவெடியல் சிக்கவேண்டியுள்ளது என்றுஅதிகாரிகளிற்கு தெரிவிப்பார்கள் இது அக்காலப்பகுதியில் இந்தியவில் உள்ள செய்தித் தாள்களிலும் வந்தது.

பிற்பட்ட காலத்தில் உதயபிடத்திற்கும் அமுத கானத்திற்கும் ஆன வாகனப்பாதைபோடப்பட்டதுஅங்கே பல முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன குறிப்பாக பிக்காப் வாகணங்கள் உளவு எந்திரம் போன்ற வாகனங்கள் ஓடுவதற்கான பாதைகளும் அமைக்கப்படு இருந்தது

 பாதனிகள் செய்யும் தொளில் சாலை மற்றும் உடுப்புத்தைக்கும்  கொளில் சாலையும்அங்கே போடப்பட்டது திருகோணமலையைச் சேர்ந்த ஜோச்ஐயாகுடுப்புத்தைப்பதில் மிகவும் அனுபவமானவர் அதனால் அவர் விடுதலைப் புலிகளால் காட்டிற்குக்கொண்டுவரப்பட்டார்  அவரின் தலைமையில்வரிப் புலிச் சீருடை தைப்பதற்கான முகாம் உருவாக்கப்பட்டது  பல ஆண் போராளிககளிற்கு அவர் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டது அத்தோடு போராளிகளிற்கு தேவையானவரிப்புலி சீர் உடைகளும் போராளிகளிற்கான வெடிபொருட்கள் வைப்பதற்கான நெஞ்சுக்கோழ்சர்களும் தைக்கப்பட்டது 

அது ஒரு கிராமம் போன்ற கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது அடுத்த கட்டம் இந்தியா இராணுவம் தொடர்ச்சியாக பல தோல்விகளைச் சந்தித்தாலும் இறுதியாக ஒரு பாரிய முற்றுகையை மேற்கொள்வார்கள் என்பதை தலைவர் முன்கூட்டிய அறிந்தமையால்

 மன்னார் மட்டக்களப்பு திருமலை இவ் மாவட்டங்களில் இருந்து சண்டையில் மிகவும் அனுபவம் பாய்ந்த போராளிகளை தலைவர் தனது பாதுகாப்பிற்காக எடுத்தார்,

எடுத்து அந்த ரீம் கேணல் சங்கர் அவர்களின் தலைமையில் பயிற்சிகொடுத்துவைக்கப்பட்டது,அதில் மேஜர் கமல் லெப் கேணல் யோய் மேஜர் றோவட் கப்ட்டன் கைலன்லெப் கேணல் சுமன், மேஜர் வசந் என15  போராளிகள் இருந்தார்கள்


, அப்பொழுது தொடர்ச்சியாக வேறு வேறு பேர்களை வைத்து இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பல சண்டைகளை செய்துகொண்டு இருந்தார்கள்.
அதனால்அதைச் செய்வதற்காக கெக்மேற் 1 என்ற பேரில் இந்திய இராணும் ஒரு U வடிவில் அலம்பில் நாயாறு மணலாறு என தமிழர் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து மணலாற்றை முற்றுகையிட்டுயிருந்தது, இந்தியா இராணுவம் இந்நடவடிக்கைக்காக சுமார் 30000 ஆயிரம் படைகள் களம் இறக்கப்பட்டுயிருந்தன,



உணவு ஆயுதமினியோகம் எவையும் வெளிய இருந்து உள்ளே வரதவாறு அமைத்துதாக்குதலை ஆரம்பிப்பதே அவர்களின் திட்டமாகயிருந்ததுஇந்த முற்றுகைமூலம், விடுதலைப் புலிகளின் தலைவர் உட்படஅனைத்துப்புலிகளையும் கொல்வதே அவர்களின் திட்டமாகயிருந்தது 

 இருந்தும் முதலில் தலைவரை அகற்றினால் அனைத்துப்போராளிகளும்  சலண்டர் அடைய வேண்டும் அல்லது போராடி அனைவரும் விரச்சாவு அடைய வேண்டும் அல்லது அந்த முற்றுகையை முறியடித்து தங்களின் வீரத்தை நிலைநாட்ட வேண்டும், இந்த மூன்று நிலையில் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டியஒரு இறுக்கமான நிலையை அவர்களிற்கு ஏற்பபடுத்தி அவர்களை அழிப்பதே இந்திய இராணுவத்தின் திட்டமாகயிருந்தது,


உணவு குளிப்பு உறக்கம் எதையும் நினைத்துப்பார்க்க முடியாதநிலை அதைவிட ஒரு நேரக்கஞ்யையும் குடிக்க முடியாத நிலை தொடர்ச்சியான சண்டை உணவுகையிருப்பு முடிந்த நிலை, இன்றைக்கா அல்லது நாளைக்கா எமது சாவுவரும் என போராளிகள் நாள் குறித்துக்கொண்டு இருந்தாங்கள்,



அப்பொழுது காட்டுகரையோரங்களை இந்தியா இராணுவம் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவந்துவிட்டது, பிடிக்க வேண்டியது பாசறைகளோடு சேர்ந்த நடுப்பகுதி மட்டுமே இருந்தது ஆனால் அது உயர்ந்த காடாகவும் இறுக்கமான தரை அமைப்பாகவும் இருந்தது, வங்கர் வெட்டி சண்டை பிடிப்பதற்கு போராளிகற்கு உடல் பலமும் இருக்கவில்லை, இது தான் அன்றையநிலவரமாகயிருந்தது,


அவ்வேளையில்தான்செக்மேற் 1 என்ற பேரில் ஒரு பாரிய கொமாண்டோ தாக்குதலைச் செய்து தலைவரைப் பிடிக்கத் திட்டம்தீட்டீயது

இந்திய இராணுவம் அதைவிட அப்பிரதேசங்களை இலக்குவைத்து கொமான்டோக்களை கெலிக் கொப்டர்களில் ஏற்றிக்கொண்டு தரை இறக்கம் செய்துகொண்டு இருந்தது இந்தியா இராணும், அந்த வேளையில்தான் கேணல் சங்கர் அவர்களின் தலைமையில்  மேஜர் கமல் RPG அவரின் உதவியாழர் லெப் கேணல் ஜோய்


கப்டன் கைலன் GPM  LMG  லெப் கேணல் சுமன் மேஐர் வசந் கொம்பாஸ்  வளிகாட்டி-தளபதி தியாகு விமான எதிர்ப்பு ஆயுதம்மெசள்ஸ் .  போராளிகள் ஊடறுத்து சென்றுகொண்டுயிருந்தர்கள்இவ்வேழை தளபதி தியாகு அவர்களை உடனேதிரும்பி புனித பூமி முகாமிற்கு வருமாறு சொல்லப்பட்டது அவர் திரும்பிச் சென்று விட்டார் பின்னர் இதைப் பற்றிப் பார்ப்போம்,

 நித்திகைக்காட்டு வெட்டைக்கு இவர்கள் சென்றதும்

 இரண்டு கெலிக் கொப்டர்கள் தரையிறங்கி நின்றது அதில் ஒன்றை நோக்கி கப்டன் கைலன் GPM LMG ஆல் செறிவானதாக்குதலை நடாத்திக்கொண்டுயிருக்க துல்லியமாக குறிபார்த்து RPG ஆல் குறிதவறாமல் ஒரு கெலிக் கொப்ட்ரை சுட்டு வீழ்தினார் மேஜர் கமல் அடுத்த கெலிக் கொப்ட்டர் கடுமையான சேதத்தோடு தரை இறக்கிய  கொமாண்டோக்களையும் ஏற்றாமல் தப்பிச் சென்றது,

இச்சண்டை 4 மணித்யாசத்திற்கு மேல் நடந்ததுஇதில்20 திற்கு மேற்பட்ட இந்திய இராணுவக்கொமான்டோக்களின்  பொடிகளையும் நிறைய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றார்கள் விடுதலைப் புலிகள்





28.01.1988 லெப்டினன்ட் அனித்தாதென்தமிழீழத்தில்  முதல்பெண் மாவீரரும்அங்கே சயனைட் உட்கொண்டுவீரச்சாவு அடைந்த முதல் பெண்மாவீரரும் இவரே ஆவார்


பெண் மாவீரரும்
இயக்கப் பெயர்:சித்திராதேவி தம்பிராசாஆரையம்பதி, மட்டக்களப்பு.வீரப்பிறப்பு:
19.09.1970வீரச்சாவு:28.01.1988

சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இந்தியப்படையினர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலினால் கைது செய்யப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு இவரின் கல்லறை யாழ்கோப்பாய் துயிலுமில்லத்தில் நடப்பட்டுள்ளது,தென்தமிழீழத்தில் முதல் வீரச்சாவெய்திய பெண் போராளியும் தென்தமிழீழத்தில் முதலாவது குப்பி கடித்து வீரச்சாவு அடைந்த பெண் போராளியும் இவரே ஆவார், 

அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் மிகவும் சிரமம். ஈழத்தின் தெற்குப்பகுதியின் இந்நிலையைப் புரிந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவினர் தம்மை யாரென இனங்காட்டிக்கொள்ளாமல் இயங்கிக்கொண்டிருந்தனர். லெப். அனித்தாவும் தன்னை வெளிப்படுத்தாமல் தாயகத்துக்கான பணிகளில் ஈடுபட்டார்.



அனித்தாவின் வேலை மட்டக்களப்பு மாவட்டமெங்கும் விரிவாக்கப்பட்டது. இருவேறு பண்பாடுகளைக் கொண்ட தமிழ், இஸ்லாமிய சமூகத்தவரிடையே பொதுவான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்களின் எளிமையான வாழ்வைப் புரிந்துகொண்டு அவர்களுள் ஒருவராகி நிதானத்துடனும் கவனத்துடனும் செயலாற்றத்தொடங்கினார்.

இந்திய இராணுவ வருகையின் பின் அனித்தாவின் செயற்திறன் அம்பாறைக்கும் தேவைப்பட்டது. வேலைகள் விரிவாக்கப்பட்டன. எடுத்த பணியை முடிப்பதற்காகப் பல தடவைகள் பல படைத்தளங்களைக் கடந்து அம்பாறைக்கும் மட்டக்களப்புக்குமாக அவர் போய்வரவேண்டியிருந்தது.

தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் படைத்தளங்களைக் கடந்து போய் வருகின்ற அனித்தா 1988.11.28 அன்று காட்டிக்கொடுக்கப்பட்டு, தேசத்துரோகிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வழியிலேயே சயனைட் அருந்தி தன்னை அழித்துக்கொண்டார்.

ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா.லெப்டினன்ட் அனித்தா
சித்திராதேவி தம்பிராசா
ஆரையம்பதி, மட்டக்களப்பு. ஆவார்,

02/12/1988 அன்றுவிடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அதிபர் பிரமதாவிற்கும் இடையில் ஏற்பட்ட புரிந்து உணர்வு ஒப்பந்தம்,




ஆயுதங்கள் எடுக்கச் சென்ற போராளி தூயாமணி அது பற்றிக் குறிப்பிடுகையில்,


இதேகாலத்தில்தான் இந்தியாவினுடையே அரசியல் கொள்கை எதிர்மாறாக மாறுகின்றது. அக்காலப்பகுதியில் வைக்கோவாலசாமி உட்பட அனைத்து ஈழ ஆதரவு அமைப்புக்களும் இந்தியா இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று ஜோச்பெனாண்ட்டோஸ் ஊடாகப் பாரிய அழுத்தம் இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கு வாளங்கிக்கொண்டுயிருந்தார்கள். அதவேளை இலங்கை அதிபர் பிரமதாவும் இந்தியா இராணுவம் உடனே வெளியேற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்

ஆனால் இவ்விடயம் தொடர்வாக அதிபர் பிரமதாசா குறிப்பிடும்போது இது ஒரு நாடு இங்கே நடப்பது அண்ணன் தம்பிப்பிரச்சனை எனவே இந்தியா இராணுவம் எமக்குத்தேவையில்லை அதை நாங்கள் இருவரும் பேசித்தீர்த்துவிடுவோம். என்ற இராஜதந்திரச்சொல்களைப்பயன்படுத்தினார். அதைவிட பெரும்பாண்மையான சிங்களமக்கள் வடகிழக்கு இணைப்பு தமிழர்களிற்கு என்று ஒரு தனித்தாயகம் தமிழர்களைப்பாதுகாபற்கு ஒரு ஆயுதப்படை இதை சிங்கள மக்கள் ஒருபோதும் விரும் மாட்டார்கள்  என்பதும் அவருக்குத் தெரிந்தவிடயம்.

ஜே, ஆர்ஜெயவர்த்தனாவிற்கும் ராஜிவ் காந்திக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினாலோ அல்லது இந்தியவின் படை நடவடிக்கையினாலோ இலங்கைகையின் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என அவர் நம்பினார்,02/01/1989 அன்று அவர் அதிபராக வந்தபொழுது முதல மேடைப் பேச்சில விடுதலைப்புலிகளையும் ஜெ ,வி,பியையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார், அத்தோடு ஈரோஸ் தலைவர் பாலகுமரனிடம் பிரமதா குழுவினர் கேட்டபோது அவர் வாலசிங்கத்தோடு பேசுங்கள் என ஆலோசனை வழங்கியுள்ளார், அதை அடுத்து லண்டனிற்கும் கொழும்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆனது,

இருந்தும் அவர் இலங்கையின் நீண்டகால அரசியல் அனுபம் வாய்ந்தவரான பிரேமதசா விடுதலைப் புலிகள் போர் புரிவதற்கான காரணத்தை ஜே,,பி,யினரின் கிழர்ச்சிதொடர்பாகவும் அது இரண்டிற்குமான வேறுபாட்டையும் நன்கு அறிந்தவர், இந்தியப் படைகள் காலவரையின்றி தொடர்ந்து இலங்கை மண்ணிலே தங்கிவிடக்கூடும் என அவர் அஞ்சினார்,

இருந்தும் இந்தியவின் கழுகுப் பிடியில் இருந்து முதலில் இலங்கையை மீட்பது அடுத்து இலகுவான முறையில் விடுதலைப் புலிகளைக் கையாண்டு பின்னர் அவர்களை அழிப்பதற்கான வளியைக்கண்டுபிடிப்பது, ஆனால் அவரின் கணிப்பில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் தொகை இரண்டாயிரம் இருக்கலாம் என கருதினார், அவர்களை அழிப்பது தனது இராணுவக்திற்கு இலகுவான விடயம் என்றும் சண்டையிடக்கூடிய சிறந்த தளபதிகளான குமரப்பா புலேந்தின் போன்றவர்களை இந்திய இராணுவம் தீர்த்துக்கட்டிவிட்டது என அவர் நம்பினார்.

இதே காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அதிபர் பிரமதாசா அவர்களிற்கும் இந்திய விற்குத் தெரியாமல் புலநாய்வு ரீதியான உறவு ஏற்படுகின்றது, தொடர்பு ஏற்பட்டதும் தான் நேரடியாகப் பிரபாகரன் அவர்களோடு பேச விரும்புவதாகவும் அல்லது இரண்டாவது நிலையில் உள்ளவரோடு பேசத் தாயார் என பச்சக்கொடி காட்டினார், அதிபர் அதை அடுத்து 1987 காலப்பகுதியில் தலைவர் இந்தியவிற்கு பேச்சுவார்தைக்குப்போகும்போது அடுத்த தலைவராக மாத்தையாவை நியமனித்து சென்றார் என்பதை முன்னர் குறிப்பிட்டேன்.

இக்காலப்பகுதியில் மாத்தையா மக்கள் முன்னணித் தலைவராகக் கடமை மாற்றிக்கொண்டுயிருந்தார், அதனால் மாத்தையாவோடு நேரடியாகப் பேசலாம் என விடுதலைப்புலிகள் அதிபர் பிரமதாசாவிற்குத்தெரிவித்தார்கள் அவரும் அதை ஏற்றுக்கொண்டார்,

1988கடசிப்பகுதியில் இந்திய இராணுவத்தோடு சண்டை நடந்துகொண்டுயிருந்தகாலம் அது  தலைவரைப்பிடிப்பதற்கான பல சண்டைகளில் தோல்வியுற்றாலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளிற்கு எதிராகச் சண்டையிட்டுக்கொண்டுயிருந்தது இந்திய இராணுவம்,

 அவ் வேழையில்தான்அதிபர் பிரமதாசவிற்கும்எமக்கும் இரகசியமான முறையில் முதலாவது பேச்சு பேச்சுவார்தை கொழும்பில் நடைபெற்றது, இந்திய இராணுவத்தினுடையகண்களில் மண்ணைதூவி விட்டு மிகவும் இரகசியமான முறையில் இலங்கைப்படையின் உலங்கு வானுர்தி அடந்த காட்டிற்கு மேலால் மெதுவாகப் பறந்து வந்து மணலாற்றுக் காட்டில் அமைந்து இருந்த விடுதலைப் புலிகளின் பாசறையான  வசந்தநாடு என்ற முகாமிற்கு வந்து தரையிறங்கியது.

  அங்கு இருந்து யோகரெத்தினம் யோகி மற்றும் அவரிரோடு ஒரு சிலரையும் ஏற்றிக்கொண்டு உலங்குவானூர்தி கொழும்பிற்குச்சென்றது,  அடுத்து வெளியில் இருந்து வாலா அண்ணையும்பரமுமூர்த்தி என மூவர் கலந்து கொண்டனர் அரசதரப்பில் வறமீத்தும் மற்றும் இருவர் கலந்து கொண்டனர், , முதலாவது பேச்சுவார்த்தையில் இந்திய இராணுவத்திற்கு பலமானதாக்குதல்கொடுத்து வெளியேற்றுவது எனவும் அவர்கள் சென்ற பின்னர் இனப்பிரச்சனை தொடர்வாகப் பேசுவது என முடிவு எடுக்கப்பட்டது,



இப்பேச்சுவார்த்தை பல தடவைகள் நடைபெற்றது அப்பொழுது விடுதலைப் புலிகளிடம் போதிய அளவு ஆயுதம் இல்லையென அதிபர் பிரமசாசாவிடம் சொல்லுமாறு ஹமீத் அவர்களிடம் சொல்லப்பட்டது

 ஆயுதம் எங்களிற்குத் தாருங்கள் நாங்கள் இந்திய இராணுவத்துடன் சண்டையிடுகின்றோம் அல்லது நீங்கள் இந்திய இராணுதுடன் நேரடியாக அல்லது கெருளாமுறையில்சண்டையிடு இந்திய இராணுவத்தைத்தைவெளியேற்றுங்கள்  என வாலா அண்ணைஅவர்கட்குத் தெரிவித்தார், இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டு வெல்ல முடியாது என்பதை விளங்கிக்கொண்டபிரமதாசா விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் தருவதற்கு முன்வந்தார், ஆயுதங்களை எமக்குத் தருவதற்கான வேலைகளை மேற்கொண்டது இலங்கை அரசாங்கம்,ஆனால் இந்த விடயம் வெலியோயாபகுதியில் இருந்த சிங்களப் படைமுகாங்களிற்குத் தெரியாதவாறு மிகவும் பிரேமதாசாவின் விசுவாசிகளாகயிருந்த படையினரிடம் அவர் இக்கடமையை ஒப்படைத்து இருந்தார்அங்கே இருந்த இரண்டு கேம்பிற்கும் தெரியக்கூடாது எனவும் தாங்கள் குறிப்பிடும் இடத்திற்கு வந்து நிக்குமாறுசொல்லப்பட்டது

இதற்கு "ரின்பால்" ஒப்பரேசன் என தலைவரால் பேர்வைக்கப்பட்டது!


இந்நடவடிக்கை தொடர்பாக போராளி தூயாமணி குறிப்பிடுகையில்...!

ஆயுதம் எடுக்கச் செல்வதற்கு தாயார் ஆன ரீம் அப்பொழுது வண்போர் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த தளபதி தியாகு, போராளி ஐஸ்ரின், லெப்கேணல் சுமன், போராளி செபமாலை அப்பையா அண்ணை, தேவர்அண்னை மற்றும் அசோக் மற்றும் 10 பெண் போராளிகள்,எனரீம் தயார் ஆக நின்றது. அடுத்து தலைவர்வந்து சந்தித்து எங்களோடு கதைத்தார். அப்பையா அண்ணையையும், தேவர் அண்ணையையும் நீங்கள் போக வேண்டாம் என தலைவர் சொன்னபோதிலும் அவர்கள் இருவரும் அடம்பிடித்து வந்ததாக போராளி தூயாமணி குறிப்பிட்டார். இரவு 10த்துமணிக்கு  நாங்கள்நடக்க ஆரம்பித்தோம்;

சில மணித்தியாலங்கள் கழித்து அவ் இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு சிறிது நேரம் இளைப்பாறினோம். அந்த இடத்தில் இராணுவத்தினர் வழங்கிய ஆயுதங்களையும்  போர்த் தளபாடங்களையும் அடங்கிய கெட்டியான பிளாஸ்ரிக்கிலான பச்சை நிறப் பெட்டிகளையும் மற்றும் உணவுப் பொருட்களும் பழ ரின்களும் வந்திருந்தது. அனைவரும் பெரிய தடிகளில் போட்டுக் காவிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். இதைக் கம்பாலபோவது என விடுதலைப் புலிகள் அழைப்பார்கள். இது கம்பு என்றால் மட்டக்களப்பு பாசையில் தடி என்பதைக் குறிக்கும் கம்பில் போட்டுக்கொண்டு போவதையே கம்பால என்ற சொல் உருவானது.பின்னர் மிகவும் களைப்படைந்த  நிலையில் தலைவரின் முகாம் ஆன புனித பூமிக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் தலைவர் எங்களைச்  சந்தித்தார். சென்று வந்த அனைவருக்கும் ஒரு பெரிய கண்டோஸ் தலைவரால் வழங்கப்பட்டது.


 இதே காலத்தில்தான் இயக்கக் கட்டுப்பாட்டை மீறியதற்காக இரு போராளிகளுக்கு சாவெறுப்பு வழங்கப்பட்டது.

முன்னர் சண்டைக்கு போய்க் கொண்டு இருக்கும்  போது தளபதி தியாகு அவர்கள் பின்னால் எடுக்கப்பட்டார் எனக் குறிப்பிட்டேன். இவருக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்; 


(இவர்தான் போராளி தியாகு)
,கட்டுப்பாடான இயக்கம், ஒழுக்கமான போராளிகள் என்று எமது மக்களும் சரி, வெளிநாடுகளும் சரி இந்தப் பெயரை உச்சரிப்பதற்கு எமது அமைப்பின் கட்டுப்பாடுகளும் அதைக்கடைப் பிடித்தமையால்தான் அந்த நல்ல பெயர் எமது அமைப்பிற்குக் கிடைத்தது. அமைப்பில்  இருந்த நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களில்  தவறு செய்தது உறுதிப் படுத்தப்பட்டால் அவர்களுக்கு சாவொறுப்பு வழங்கப்பபடுவது உறுதி.

கனிசமான போராளிகள் தவறு விட்டுள்ளோம் என்பதை உணர்ந்து தாங்களே தற்கொலை செய்துகொண்ட உறுப்பினர்களும் அதிகம் என்பதை தெரிவிப்பதோடு இவருக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.




தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களே தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பாளராகவும்  மற்றும்1-4 போர் பொறுப்பாளராகவும் இருந்தார். இவர்தான் இந்திய இராணுவத்தின் முற்றுயை உடைத்து தலைவரைப் பாதுகாப்பாக மணலாறுக் காட்டிற்குக் கொண்டு சென்றார்.  என்பதை முன்னர் குறிப்பட்டுள்ளேன்; இவர் இந்திய இராணுவத்தின் சண்டையின் போது 03/03/1988 அன்று வீரச்சாவு அடைந்தார். அதற்குப் பிறகு தளபதி தியாகு அவர்களைத் தலைவர் இந்த வெற்றிடத்திற்குப்  பொறுப்பாக நியமித்தார்.

இந்திய  இராணுவம் எமது மண்ணில் இருந்த காலம் இது ஒரு இருண்ட காலம் என தலைவர் அவர்களால் வரணிக்கப்பட்ட நாட்கள். விடுதலை புலிகள் என அப்போது காட்டிக்கொடுக்கும் முகமூடிகள் ஒரு தடவை தலையாட்டினால் காணும் அவர்கள் அடித்தே அந்த இளைஞனை துடிதுடிக்க கொலை செய்து விடுவார்கள்.


இது ஒன்றல்ல பல நூறு சம்பவங்கள் நடந்தன. இந்தியா இராணுவம் எமது மண்ணில் இருந்த காலம் உயிரோடு பிடிபடக்கூடாது என்பதற்காக சுமார் 300ற்கு மேற்பட்ட போராளிகள் குப்பி கடித்து வீரச்சாவு அடைந்தார்கள். அப்படி இருந்தும் எமக்கும், தமிழகத்திற்கும் உரிய உறவு சிறந்த முறையில் இருந்தது. காயப்பட்ட போராளிகளை இந்தியாவிற்கு அனுப்புவதில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் தமிழீழம் கொண்டு வருவதற்கும் அந்த உறவு சிறந்த முறையில் பேணப் பட்டது.


விடுதலைப் புலிகள் மீதான போரை தமிழக மக்களான தமிழர்கள் அதைச் சிறிதளவும் விரும்பவில்லை அது தான் அந்த உறவு நீடித்தற்கான பின்னணிக் காரணியாகயிருந்தது. அதே காலப் பகுதியில்தான் யாழ்பாணம் சாவகச் சேரியைச் சேர்ந்த தளபதி தியாகு அவரின் தங்கையாரும் எமது விடுதலை இயக்கத்தில் ஒரு சிறந்த போராளியாக இருந்தார்.அவளின் பெயர் கப்டன் அஜித்தா



தளபதி தியாகு தலைவரின் மேற்பாதுப்பு சிறப்பு அணிப் போராளிகளுக்கான பொறுப்பாளராகயிருந்தார்.



(இவர் தான் சாவொறுப்பு வழங்கப்பட்ட தியாகு)

அப்பொழுது வன்னிக் காட்டிற்குள் பல பாசறைகள் இருந்தன. குறிப்பாக நீதிதேவன், புனிதபூமி, அமுதகானம், உதயபீடம்,  நாசகாரி,  கைலமலை இதில் புனிதபூமி என்பது தலைவரின்  பாதுகாப்பு முகாமாக இருந்தது. நீதிதேவன் என்பது விசாரணை முகாமாகயிருந்தது. அதற்கு தளபதி கேணல் சங்கர் அவர்களே பொறுப்பாக இருந்தார். அங்கே செல்பவர்கள் திரும்பி வருவது என்றால் நூற்றிற்கு ஒருதராகத்தான் இருக்கும். அங்கே சென்றால் அவர்களிற்கு முதலில் விசாரணை  நடக்கும் அடுத்து சாவொறுப்பு வழங்கப்படும்.


இதுதான் அங்கே நடக்கும் உண்மையாகவிருந்தது. இதேகாலம் தான் தளபதி தியாகு புனிதபூமியில் தலைவரின்  பாதுப்பு முகாமிற்குப் பொறுப்பாக இருந்தார். அப்பொழுது அருகில்  பெண் போராளிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான போராளி யூலியா வயித்துவலியெனத் தமிழீழத்திலிருந்து தமிழகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.  அங்கே அவர் சென்றதும்  மருத்துவர்கள் அவரைச் சோதனை  செய்தபோது இயக்கம் சிறிதளவும் கூட நினைத்துப் பார்க்காத ஒரு பாரியதவறு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர் திரும்பவும் வன்னிக்கு அனுப்பப்பட்டார்.


கேணல் சங்கர் அண்ணை அவர்கள் இருவரையும்  தனித்தனியாக விசாரித்து உண்மையை அறிந்து கொண்டார். தியாகுவும் அந்தப் பெண் போராளியும் தவறான முறையில் நடந்ததுதான் அந்தப் பரபரப்பான செய்தியாக போராளிகளுக்குத் தெரியவந்தது. பின் போராளியான புங்குடி தீவைச்சேர்ந்த யூலியா அவர்களும் பொறுப்பாளராகயிருந்த போராளி தியாகு அவர்களும் விசாரணை முடிந்த பின் தனிமைப்படுத்தி தடுப்பில் வைக்கப் பட்டிருந்தார்கள்.  தியாகு அண்ணை அப்பொழுது நீதிதேவனில் தடுத்து வைக்கப்பட்டுயிருந்தார். அடுத்து பெண் போராளி யூலியா அவர்கள் பெண் போராளிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுயிருந்தார்.தொடர்ந்து தளபதி தியாகு செய்த தலைவரின் பாதுகாப்பு பொறுப்பு என்ற உயர் பதவியும் 1-4 பொறுப்பாளர் என்ற  பதவியும் பிரிகேடியர் சொர்ணம் அவர்களிற்கு தலைவரால் வழங்கப்பட்டது.



அடுத்து தலைவரின் அனுமதியுடன் பொறுப்பாளர் ஜோகரெத்தினம் யோகி அவர்களால் 100 உயர்நிலை போராளிகளிடம் ஒருத்துக்கணிப்பு  நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் மரணதண்டனை வழங்குவதா? அல்லது இருவரையும் சேர்த்து வைப்பதா? இதுதான் திரு. யோகி அவர்களால் போராளிகளிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். அதில் தியாகுவின் தங்கை கப்டன் அஜீத்தா உட்பட லெப். கேணல் அப்பையா அண்ணை மரணதண்டனை வழங்கவேண்டும் என தனது கருத்தை முன்வைத்தார்கள். அதிலும் அஜித்தா தானே அந்தச் சாவொறுப்பை வழங்க வேண்டும் என கேட்டுயிருந்தார், அது தலைவரால் நிராகரித்தப்பட்டது,இருவருக்கும்  மரணதண்டனை வழங்கினால்தான் மற்றப் போராளிகள் இத்தவறை விடமாட்டார்கள் என்பதே அவரின் வாதமாகயிருந்தது.



லெப். கேணல் ஜெரி உள்ளடங்கலாக 60 போராளிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினார்கள்.

மகேந்தி உட்பட 40 போராளிகள் சேர்த்து வைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள். தலைவர், பொட்டுஅம்மான் இருவரும் இதில்      கலந்து கொள்ளவில்லை. அடுத்து பெரும்பாண்மையை முன்னிலைப் படுத்தி இதே மாதம் வன்னிக்காட்டில் இருந்த நீதிதேவன் முகாமில் வைத்து தளபதி சங்கர் கட்டளையிட  தளபதி சொர்ணம் மற்றும் மேஜர் றோவட் இருவரும் அவருக்கான மரணதண்டனையை வழங்கினார்கள்.



அதே காலம் அப்பெண் போராளிக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.இது பற்றி தலைவர் சொன்ன விடயம்; "நான் எல்லோருடையே பொக்கெட்டையும் தட்டிப்பார்த்தேன் ஆனால் என்னுடைய பொக்கெட்டை மட்டும் தட்டிப்பார்க்க வில்லை". அதுதான் என்னுடைய தவறென தனது பிழையை ஒத்துக் கொண்டார்.




இதே காலம் தலைவரால் வழக்கப்பட்ட  "பாமா "என்ற புலி மிகவும் செல்லமாக தலைவரால் வளர்க்கப்பட்டது. போராளிகள் காலையில் உடல் பயிற்சி எடுக்கும் போது அவர்களின் தோளில் ஏறி நிக்கும். தலைவரின் மிகவும் அன்புக்கு உரிய செல்லப் பிராணியாக இந்தப் புலியிருந்தது. அப்பொழுது நான் புனித பூமியில் நின்றபோது புலி உறுமிய சத்தம் கேட்டது.   பின் தலைவர் என்னைக் கூட்டிக்கொண்டு அப்புலியை எனக்குக் காட்டினார்.  அது பலமான மரமொன்றின் அடிப்பாகத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே வயதான பெரியவர் ஒருவர் நின்று புலியைத் தடவிக்கொண்டிருந்தார்.

 இந்த ஐயா யார்? தம்பி என்று கேட்டேன். அதற்கு தம்பி "இவர் லெப் கேணல் நவம் அவர்களின் அப்பா பெருமாள் ஐயா" என எனக்கு அறிமுகப்படுத்தினார்.அவர்தான் அந்தப் புலியை வளர்த்தார். இவரின் செயல்பாட்டை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

திடீரென அதற்கு குணம் மாறியதால் திருமால் என்ற போராளியின் தலையை பலமாகக்கடித்தது. திருமாலின் தலையில் பாரிய காயத்தழும்பு இன்றுவரை உள்ளது. அன்றையிலிருந்து புலிகடித்த திருமால் என்று போராளிகள் இவரை அழைப்பார்கள், இதைப் பார்த்து கோபம் அடைந்த தலைவர் உடனே புலிக்கு சாவொறுப்பு வழங்குமாறு மேஜர் றோவட் அவர்கட்கு கட்டளை வழங்கினார். கட்டளையை ஏற்ற றோவட் அவர்கள் புலியை தனது கைத்துப் பாக்கியால் சுட்டு அதற்கான சாவொறுப்பை வழங்கினார்.

                     

இதே காலம்தான் தலைவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இந்தியாவிலிருந்து கொழும்பு வந்து அங்கிருந்து சிறிலங்கா உலங்கு வானூர்தியில் வன்னிக்காடான வசந்த நாட்டிற்குவந்து இறங்கினார்கள். அங்கிருந்து நடந்து புனித பூமிக்குச் சென்று தலைவரோடு வாழ்ந்தார்.

03/01/1989ஆம் ஆண்டு வை.கோபால சாமியின் வன்னிப் பயணமும் அமைந்து இருந்தது;இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்திருந்த காலமது தேசியத்தலைவர் வாழ்ந்த மாணலாற்றுக் காட்டை தரைவழியாகவும், கடல்வழியாகவும் முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் சுற்றி வழைத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காலம்;


அப்போது விமானத் தாக்குதல்கள் வன்னிக்காட்டை நோக்கிக் கடுமையாக நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இப்படியான ஆபத்தான யுத்த காலத்தில் தான் திரு .வை.கோ அவர்கள் தமிழீழம் சென்று பிரபாகரனைப் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டார். அப்பொழுது தமிழ்நாட்டில் தங்கியிருந்த பேபி அண்ணாவைச் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். பேபி அண்ணாவும் தலைவருக்கு தெரியப்படுத்த உயிராபத்தான பயணம் விரும்பினால் வரட்டாம் என அவர் தெரியப் படுத்தியிருந்தார். ஆனால் அவர் எடுத்த முடிவில் மாற்றம் இல்லையென தலைவருக்குத் தெரியப்படுத்தினார். தான் ஈழம் செல்லும் போது ஏதாவது நடந்தால் ஒரு கடிதம்எழுதி தனது நண்பர் ஒருதரிடம் கொடுத்ததாகவும் தான் உயிர் இழந்தால் மட்டும் அக்கடிதத்தை கலைஞர் அவர்களிடம் கொடுக்குமாறும் சொல்லி விட்டுத் தனது பயணத்தை ஆரம்பித்தார்;


இவரின் கடல்ப் பயணத்தை போராளி ரகு அவர்களே ஏற்பாடு செய்தார். 06/02/1989  அன்று வெள்ளை நிற மாருதி வான் ஒன்று எனது வீட்டில் வந்து நின்றது. ரகு, பாலப்பா, தாஸ் மூவரும் வந்து என்னை ஏற்றிக் கொண்டு சென்றார்களெனத் தனது அனுபவத்தை திரு.வை.கோ குறிப்பிடுகையில்....!

அவ்வாகனத்தை போராளி நியூட்டன் ஓட்டிச்சென்றார். இடைவெளியில் மற்ற ஒரு வாகனத்தில் அருணா இணைந்து கொண்டார், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டைத் தாலுகாவில் அமைந்துள்ள கடற்க்கரைக் கிராமம் மல்லிப் பட்டினம். அந்த அழகிய மீன்பிடிக் கிராமத்தில் இருந்துதான் எனது பயணம் ஆரம்பமானது,

 பகல் வேளையில் சென்றால் அவர்கள் அடையாளம் காணக்கூடும் என்பதால் இரவு எட்டுமணிக்கு எங்களின் பயணம் ஆரம்பம் ஆனது;

படகு ஓட்டியான மரி,துரை என நாலு பேர் இருந்தார்கள். இவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள். பின் ஆழ்கடலில் நின்று இரவானதும் ஈழம் வெளிக்கிட்டோம். வேகமாகச் சென்று வெற்றிலைக்கேணி தாளையடி என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கிருந்து மீன் பிடிபடகுஒன்றில்  நாயாற்று சிறு கடலிற்குச் சென்றோம். முகாமமைத்து இருந்த இந்திய இராணுவத்திற்கு தெரியாமலே எங்களின் பயணம் இருந்தது. அங்கே நாங்கள் சென்றதும் எங்களின் வருகையைப் பார்த்துக் கொண்டு தளபதி சொர்ணம் அவர்களின் அணி தாயாராக நின்றது.


 படகில் இருந்தவாறே சொர்ணம் ஓடி வந்து கை கொடுத்து என்னை இறக்கினார். சொர்ணம் அணியில் போராளி தூயாமணி உட்பட 25 போராளிகள் வந்திருந்தார்கள்.  அதிலிருந்து வை.கோ. அவர்களை நான்கு போராளிகள் ஸ்ரச்சர் போன்றவொன்றில் தூக்கிக்கொண்டு நடக்க பின்னாலும் முன்னாலும் போராளிகள் பாதுகாப்பு வழங்கிக்கொண்டு சென்றார்கள்.

புனித பூமியை அண்மித்தவுடன் தன்னை இறக்கி விடுமாறும் தான் நடப்பதைவீடியோ எடுக்க வேண்டும்! என வை.கோ அடம் பிடித்தமையால் போராளிகள் இறக்கி விட பின் அவர் நடந்து சென்றார். அதன்பின் அங்கு இருக்கும் நடைமுறைகளை வை.கோ கேட்டு அறிந்தார். பின் உலக நாடுகள் பற்றி போராளிகளிற்குப் பாடங்கள் சொல்லிப் புரியவைத்ததோடு அவர்களின் மன உறுதியை இன்னும் ஊட்டினார். அங்கே இந்திய இராணுவத்தால் வீசப்பட்ட 300 கிலோக் கிறாம் குண்டுகளையும் அதன் கிடங்குகளையும் அவர் பார்வையிட்டார்.

 இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதால் இலங்கை அரசே  வளர்ச்சி அடைந்ததாக சொல்லித் தலைவர் கவலைபட்டார். இந்திய இராணுவத்திற்கு எதிராக நாம் சண்டையிட விரும்பவில்லையெனவும்; அச்சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும்; தலைவர் தெளிவு படுத்தினார். அங்கே அவர் நிற்கும் போது சங்கர், கிட்டு ,யோகி, பால்ராஜ் என பல போராளிகளையும் அவர்பார்த்தார்.

சில குறிப்பிட்ட வாரங்கள்  அங்கே தங்கிய அவர் அவருக்கு எனத் தலைவரால் ஒரு பிரியாவிடையும் அவருக்கு வைக்கப்பட்டது. அடுத்து அவரை அனுப்புவதற்கான பொறுப்பு பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரைப் பாதுகாப்பாக நாங்கள்கொண்டு சென்றபோது இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 13 போராளிகள் காயம் அடைந்தனர். இருந்தும் அவர்களின் முற்றுகையை முறியடித்து பாதுகாப்பாகக் கொண்டு சென்றோமெனப் பால்ராஜ் குறிப்பிட்டார்.  பின் யாழ்பாணம் சென்ற வை.கோ அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டுள்ளார். 03/03 /1989 அன்று வல்வெட்டித் துறையில் இருந்து தமிழகம் சென்றார். வை.கோ  அவர்கள் அங்கு சென்றதும் ரகு அவரை ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டில் விட்டுள்ளார். அங்கு சென்றதும் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கு அங்கிருந்த செல்வாக்கு மிக்க தலைவர்களோடு பேசிக் கொண்டேயிருந்தார் வை.கோ;

 

அடுத்து "செக் மேற் 02" நடவடிக்கை தொடர்பாக போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில் ;


,

இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில் அடுத்து "செக் மேற் 02"   என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து இரவோடு இரவாக நகர்ந்து வந்து செஞ்சோலை வெட்டையில் நிலையெடுத்தது  இந்திய இராணுவம். 



காலை விடிய /01/3/1989  12.40 "செக் மேற்2" என்ற  பெரில்  சண்டையை ஆரம்பிப்பதே அவர்களின் திட்டமாகயிருந்தது. அன்றைய நாள் கிறிஸ்தோபர் ஆகிய நானும் அவர்களோடு இருந்தேன். அப்பொழுது கடுமையாக முடி வளர்ந்து இருந்த காரணத்தால் போராளி கைலி அவர்கள் மேஜர் கமல் அவர்களிற்கு முடிவெட்டினார். அப்பொழுது நான் கைலியண்ணைக்கு முடி வெட்டினேன்.  அப்பொழுது எங்களின் உதயபீட பாசறையில் 5 பேர் குளித்தால் தண்ணீர் வற்றிவிடும். அதனால் கைலி அண்ணை GPMG வைத்து இருந்தார். ஆனால் LMG வைத்து இருந்த அனைவருக்கும் கைத்துப்பாக்கியும் இருந்தது. அதனால் அவரின் GPMG யை அவரின் உதவி ஆளுனரிடம் கொடுத்து விட்டு அவர் தனது கைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு நானும் அவரும் செஞ்சோலை வெட்டைக்குக் குளிப்பதற்குச் செல்கின்றோம். அங்கே பெரிய கிணறும் இருந்தது. அதைவிட வெளி இடங்களை அவதானிப்பதற்காக ஓப்பி என்ற பேரில் மரங்களிற்கு மேலே பரன் அடித்து மேலே இருந்து 24 மணித்தியாலம் கண்காணிப்பது எமதுபோராளிகளின் கடமையாகயிருந்தது. நாங்கள் சென்ற செஞ்சோலை வெளியில்  தொடர்ச்சியாக 7 போராளிகள் நிற்பார்கள். அதில் மேஜர் கமல் அண்ணையும் ஒருவர், அந்த முகாமில் அவர்தான் பொறுப்பாகயிருந்தார்.

 அங்கே நிறையத் தண்ணீர் உள்ள கிணறும் அமைந்து  இருந்தது.  நானும்  கைலியண்ணையும் அங்கே சென்றதும் குளிப்பதற்கு வெளிக்கிடுகின்றோம் அவ்வேளை  12.40 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி மேஜர் கமல் அண்ணை கேட்டுக் கொண்டே இருக்கின்றார்;

அவ்வேளை ஓப்பிக்காரன் எக்களைக் கூப்பிடுகின்றான். ஏதோ இருட்டாகத் தெரியுது பாருங்கோ! என்று அவன் சொல்ல நானும் கைலியண்ணையும் போய்ப் பார்த்தோம் எருமைமாட்டுக்கூட்டம் போல் எங்கள் கண்ணிற்கு தெரிந்தது, நாங்கள் மேஐர் கமல் அண்ணையைக்  கூப்பிட்டு இதைக் காட்டியபோது அவர் இந்திய இராணுவம் என உறுதிப்படுத்தினார்.



அப்பொழுது நானும் கைலியண்ணையும் இருவரும் வேகமாக  ஓடிப்போய் உதயபீடம் சென்று அங்கே வைத்து இருந்த  GPMG யை எடுத்துக்கொண்டு செஞ்சோலை வெளிக்கு திரும்பவும் வேகமாக ஓடிவருகின்றோம்.   அதே நேரம் கமல் அண்ணை பொடியலையும் கூட்டிக்கொண்டு செஞ்சோலை வெளிக்குச் சென்று விட்டார். நாங்கள் வந்து கொண்டு இருக்கும்போதே அவர்கள் சண்டையை  இந்திய இராணுவத்திற்கு எதிராக ஆரம்பித்து விட்டார்கள்.  பெரிய வெடிச்சத்தம் ஒருபக்கம் ஆகாயப்பக்கம் பைற்றர் தாக்குதல் மறுபக்கம் பெரிய புகை மண்டலாமாக மாறியது எமது பாசறை.
அப்பொழுது நாங்களும் வேகமாக ஓடிச் சென்று கமல் அண்ணையோடு சேர்ந்து சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றோம். கைலி அண்ணையும் இந்தியா இராணுவத்தை நோக்கி GPMG  துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொண்டேயிருக்கின்றார்.  சண்டை கடுமையாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது.  இவ்வேளை வயிற்றில் வெடிபட்டு கமல் அண்ணன் அந்த இடத்திலே வீரச்சாவு அடைந்து விட்டார்.





ஆனால் அவர் மதியம் சாப்பிட்ட உணவெல்லாம் வெளியே வந்து கிடந்தது பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் கடுமையான சண்டை நடந்து கொண்டேயிருந்தமையால் கமல் அண்ணையின் பொடியை எடுக்க முடியாத இறுக்கமான களச்சூழல்  எமக்கு ஏற்பட்டது. அப்பொழுது 50 கலிபர் கதாநாயகன் என தலைவரால் மதிக்கப்படுபவரும் சண்டையில்  மிகவும் திறமையும் அனுபவமும்  உள்ள மேஜர் குணா அண்ணை 50 கலிபரோடு வந்து இந்தியா இராணுவத்தை நோக்கி சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டார். வீரமரங்கள் முறிந்து விழுந்தன. பேய் அடிக்குது எனச் சொல்லி காயப்பட்ட சாவடைந்த  இந்திய இராணுவச் சிப்பாய்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடியது இந்திய இராணுவம்.



அதன்பின் நாங்கள் சென்று மேஜர் கமல் அண்ணன்  உட்பட 3 போராளிகளின் பொடியை எடுத்து உதயபீடம் அனுப்பினோம்.  தொடர்ந்து நாங்கள் சண்டை நடந்த இடங்களைச் சோதனையிட்டோம்.  பல இந்திய இராணுவத்தின் பொடிகள் கிடந்து எடுத்தோம், ஒரு சிப்பாய் கால் முறிந்து பற்றைக்குள் கிடந்தான்.  எங்களைக் கண்டதும் பல்லை நறுக்கி ஏதோ சத்தமிட்டான்.   இதைப்  பார்த்த கைலியண்ணை எனது றைவுளை வேண்டி அவனைச் சுட்டுக்கொன்றார். அச்சண்டையில்தான் இந்திய இராணுவத்தின்  உயர் அதிகாரியான கேணல் பக்ஸ்சி அவர்களும் கொல்லப்பட்டார். 



அவரின் பொடியை எடுத்து ஒரு நாவல் மரத்திற்குக் கீழேபோட்டு நாங்கள் எரித்தோம்.  அச்சண்டை மிக வெற்றியாக முடிந்தது.  நாமும்  இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு பெரிய தளபதியான மேஜர் கமல் அண்ணையை நாம் இழந்தோம். அது எமது போராளிகள் மத்தியில் பெரும் கவலையாக இருந்தது.  இது இப்படி இருக்க பல சண்டைகள் பிடித்தும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க முடியாது என்று இந்தியா அரசாங்கம் புரிந்து கொண்டது .





அதை விட எமது உறவுகளான இந்தியத் தமிழர்கள் மற்றும் இலங்கை அதிபர் பிரேமதாசா அனைவரும் இந்திய இராணுவத்தை வெளியே போகுமாறு சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இந்தியா இராணுவத்திற்கும் போர் நிறுத்தம் ஒன்று கொண்டு வந்து அது நடைமுறைக்கு வந்தது.

இந்திய இராணுவம் ஒப்பந்தம் போட்ட போதிலும் மாற்றுக் குழுக்கள் தமிழ் மக்கள் மீது தாக்கதல் நடத்திக் கொண்ட இடுத்தார்கள்.


இந்நடவடிக்கையில் நேரடியாக பங்குபற்றிய போராளி கிறிஸ்தோபர் குறிப்பிடுகையில்!   இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட த்றிஸ்ரார் என்று அழைக்கப்படும் தமிழ்துணைக் குழுக்கள்  27/09/1989 அன்று முள்ளி வாய்க்காலில் திலீபன் நினைவு நாளைச் செய்வதற்கு மக்கள் சோடனை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். இதை பொறுக்க முடியாத தமிழ் ஒட்டுக்குழுக்கள் சோடனையில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது ஒரு பொது மகன் அவ்விடத்திலே கொல்லப்பட்டார். ஏனையவர்கள் தப்பி ஓடியமையால் அந் நிகழ்வு மக்களால் செய்யப்படவில்லை.



ஆனால் இவர்களிற்குப் பக்கத்தில் இருந்த இரண்டு இந்திய இராணுவ முகாம்களில் இருந்த இந்தியச்  சிப்பாய்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இத்துயரச் சம்பவத்தை அறிந்த தமிழீழத் தேசியத் தலைவர் உடனே கிட்டு அண்ணையைக் கூப்பிட்டு தளபதி சொர்ணம் தலைமையில் ஒரு கொமாண்டோ அணியைத் தயார் படுத்தி  அவர்கட்கு ஒரு 3 நாள் பயிற்சியை வழங்கி அவ்வணியை அனுப்பி அத்துணைப் படையினரின் முகாமை அழித்துவிடுமாறு  கட்டளை வழங்கினார்.


இதை ஏற்ற கேணல் கிட்டு அவர்கள் மூன்று நாள் பயிற்சியை வழங்கி கிட்டு அவர்கள் பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் 150 போராளிகளை அனுப்பி வைத்தார்.  அதில் "வண் 4"ல் இருந்து போனவர்களிற்கு முதலாவது பொறுப்பாக லெப். கேணல் அன்பு அவர்களும் இரண்டாவது பொறுப்பாக போராளி கிறிஸ்தோபர் நானும் வன்னி அணிக்கு தளபதி பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி வந்தார். இவர்கள் கால்நடையாகச் சென்று 10/10/1989, அன்று முள்ளியவளையில் உள்ள மாஞ்சோலைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே வைத்து தளபதி சொர்ணம் அண்ணையால் சண்டைக்கான திட்டம் போராளிகளிற்கு விளக்கப் படுத்தப்பட்டது.  அதில் இந்திய இராணுவத்திடம் முதலில் தெரிவிப்பது நாங்கள் உங்களைத் தாக்கவில்லை தமிழ் துணைப்படையினரை மட்டும்தான் தாக்கப்போகின்றோம்  என தெரிவிப்பது இல்லை அவர்கள் எங்களைத் தாக்கினால் அவர்களையும் சேர்த்து தாக்குவது என திட்டம் தீட்டப்பட்டது.  தொடர்ந்து அன்று இரவு முள்ளிவாய்க்கால் துணைப் படையினரின் முகாம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது,



திட்டமிட்டாப்போல் இந்தியா இராணுவத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இந்திய இராணுவம் வீட்டிற்கு மேலே இருந்த பிளேட்ரில் நின்று விடுகிறேன் LMG ஆல் சத்தவெடிவைத்தது, ஆனால் திட்டமிட்டாப்போல் சண்டை ஆரம்பம் ஆனது எட்டுதமிழ் துணைப் படையினர் அவ்விடத்திலே கொல்லப்பட்டார்கள். இரண்டு பேர் உயிரோடு பிடிபட்டனர். ஏணைய துணைப்படைபினர் தப்பி ஓடி விட்டனர். குறிப்பிட்ட ஆயுதத்தள பாடங்களும் சில அவர்களின் அல்பம் மற்றும் ஆவணங்களும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது,



அதே நேரம் மாங்குளத்தில் அமைந்து இருந்த துணைப்படை முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அனைவரும் தப்பிஓடி விட்டார்கள். அதில் இரண்டு போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள், அனைத்தும் வெற்றிகரமாக முடித்துவிட்டு மீண்டும் வன்னிக்குச் சென்றார்கள் விடுதலைப் புலிகள். இதேகாலப் பகுதியில்தான் புதிதாக ஒரு கட்டுப்பாடு தலைவரிடம் இருந்து எமக்கு வந்தது.


அனைத்துப் போராளிகளையும் தாடியை  எடுக்குமாறு தலைவர் கட்டளை!

,
மாற்றுக் குழுக்களிடம் இருந்து பல அல்பங்கள்  விடுதலைப்புலிகள் எடுத்தார்கள்  எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த அல்பங்கள் தலைவரின் பார்வைக்காக  அனுப்பப்பட்டது. அதைப் பார்த்த  தலைவருக்குப்  பெரும் குழப்பமாகயிருந்தது. அப்படங்களில் இருந்த மாற்று இயக்கத் தோழர்களும் தாடியோடுதான் இருந்தார்கள், எக்கட போராளிகளும் தாடியோடுதான் இருக்கின்றார்கள்.

 அவர்களிற்கும் எங்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றது.  அப்படி என்றால் மக்கள் எப்படி வித்தியாசம் காணமுடியும்? ஒரு விடுதலைப் போராளி என்றால் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு என்பதில் மக்களை விட உயர்ந்தவனாகவும் அவர்களிற்கு முன்மாதிரியானவனாகவும் இருக்க வேண்டும் என தலைவர் நினைத்தார்.

அதனால் அன்றில் இருந்து எவரும் தாடிவளர்க்க முடியாது எனவும் அனைவரையும் உடனே தாடிகளை எடுக்குமாறு தலைவரால் கட்டளை வழங்கப்பட்டது.  அன்றைய  நாள் தலைவரின் பாதுகாப்பில் இருந்த புனித பூமி முகாமில் இருந்த அனைத்துப் போராளிகளுக்கும் விக்றேசர் வழங்கப்பட்டது . அன்றில் இருந்து ஒரு போராளிக்கு மாத பஜ்ஜேட் என்ற பேரில், 2 குழியல் சோப் இரண்டு உடைதோய்க்கும் சோப் இரண்டு சம்போ ஒரு பற்பசை மாதம் ஒரு பால்மா பக்கேட், ஒரு விக்றேசர் என இறுதி போராட்டம் மௌனிக்கும்  2009 /05/17 வரை தனி நபர் பராமரிப்புப் பொருள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் வழங்கி வந்தார்கள்.



இதே காலப்  பகுதியில்தான் தலைவரின் மேற்பாதுகாப்பு அணியில் மிகவும் திறமையான போராளியான  கரும்புலி மேஜர் காந்தரூபன் தலைமையில் திருமலையை அண்மித்த அக்கர வெளிக்கு ஒருஅணி  சென்றது.  அங்கு இருந்துவரும் திருமலைப் போராளிகளைக் கூட்டிக் கொண்டு  வரவே அவ்அணி சென்றது. அவ்வேளை ஒரு கரடி இரண்டு குட்டிகளோடு வந்துகொண்டேயிருந்தது......  போராளிகளைக் கண்டதும் அக்கரடி திடீரேன ஒரு போராளியின் தலையைக் கடிக்கப் பாய்ந்தது. பதட்டம் இல்லாத காந்தரூபன் அப் போராளிக்கு சூடு படாதவாறு குறிபார்த்து அக்கரடியின் தலையில் சுட்டு அதை விழுத்தினான்.


அவனின் திறமையால் அப் போராளி காப்பாற்றப் பட்டான்.  அது மட்டுமல்ல அக்கரடியைக்  காவிக்கொண்டு புனித பூமிக்குக் கொண்டுவந்து ஆண் பெண் போராளிகளின் பார்வைக்காக அதை வைத்தான்.  அதைத் தலைவரும் பார்வையிட்டு காந்தரூபனைப் பாராட்டினார்.   இந்த வீரன் இறுதியாக 10/07/1990 அன்று  கரும் புலியாகச்சென்று தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டான்.

இதே ஆண்டுதான் அனைத்து விடுதலைப்புலி உறுப்பினர்களிற்கும் வரிப்புலிச் சீருடை வழங்கப்பட்டது, ஆரம்பத்தில் வந்த வரிப்புலி கனம்கூடிய கெம்பேஸ் துணியில்களர்கொடுக்கப்பட்டு இருந்தது பின் அதற்கு அடுத்தபடி பொலிஸ்ற்றர் துணியில் களர்கொடுக்கப்பட்டு இந்தியவில் இருந்து வரிப்புலி சீருடை வந்தது, அதை திருகோணமலையைச் சேர்ந்த ஜோஜ்ஐயா மேலும் பலர் தைத்து அனைத்துப் போராளிகளிற்கும் வழங்கப்பட்டது, அன்றில் இருந்து வரிப்புலியோடு போராளிகள் அழகாகக்காணப்பட்டார்கள்,


இதுதான் கிட்டு அண்ணையின் கடைசி நடவடிக்கையாகவும், கடைசி திட்டமிடலாகவும் இருந்தது.

1989 /10ஆம் மாதம் அப்பொழுது பிரேமதாசா அரசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் பேச்சுவார்த்தை நடந்தமையால் அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிட்டு அவர்களை தங்களின் ஹெலியில் ஏற்றி கொழும்பிற்கு எடுத்து மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்புமாறு இலங்கை அதிபர் பிரமதாசாவிடம் விடுதலைப் புலிகள் கேட்டார்கள்.  அதற்கு அவர்களும் ஏற்றுக் கொண்டமையால் புனிதபூமியில் இருந்து 4 போராளிகள் ஸ்ரச்சரில் கேணல் கிட்டு அவர்களைக் காவிக்கொண்டு செல்ல 20 திற்கு மேற்பட்ட போராளிகள் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டு சென்றார்கள்.  அவர்கள் வசந்த நாடு என்ற முகாமிற்குச் சென்றதும் அங்கே அவரை இறக்கி வைத்தார்கள். சிறிது நேரத்தில் இலங்கை அரசிக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி வந்து இறங்கியது.





தலைவரையும், போராளிகளையும் தான் பிரிவதை எண்ணிக் கிட்டு அண்ணை அழத் தொடங்கிவிட்டார், அழ வேண்டாம் என போராளிகள் சொல்லியும் கிட்டு அண்ணை அழுதிக்கொண்டே ஹெலி நூறுமீற்றர் பறந்து செல்லும் வரை ஹெலியில் இருந்தவாறு போராளிகளைப் பார்த்து கையைக்  காட்டிக்கொண்டே சென்றார். அதுதான் அவரின் கடசிப்பயணமாக இருந்தது. அவருக்குஎன்ன நடந்தது என்று பிறகு பார்ப்போம்.

இதே காலப் பகுதியில்தான் விடுதலைப்புகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அவரின் மனைவியார் அடல் அவர்களும் கொழும்பில்  பிரேமதாசா குழுவோடு பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இருவரும் இலங்கைப் படையின் உலங்கு வானூர்தியில் தலைவரைச் சந்தித்துக் கதைப்பதற்கு வசந்த நாட்டில் வந்து இறங்கி புனித பூமிக்கு வந்தார்கள்.



 அங்கே வந்ததும் போராளி சக்குறு அவர்களிடம் பாலா அண்ணை உனது பேர் என்ன எனக் கேட்டார். அதற்கு சக்குறு தனது சொந்தப்பேரை அவர்கட்குச்சொன்னார். அதைப்  பார்துக் கொண்டேயிருந்த தேசியத் தலைவர் இயக்கப் பெயர் இருக்கும் போது ஏன் சொந்தப் பேரைச் சொன்னாய்? என கேட்டு அவருக்குத் தண்டனையாக 10 கிலோ மீட்டர் ஓடுமாறு கட்டளை வழங்கினார். சிறு சிறு பிழைகளைக் கண்டாலும் உடனே அதைத்திருத்த வேண்டும் என்பதே தலைவரின் குறிக்கோளாகயிருந்தது.

 சக்குறுவிற்கு என்ன நடந்தது? என்று பிறகுபார்ப்போம். அடல் பற்றி நாம் பார்ப்போமானால்1978  ல் இருந்து எமது அமைப்பில் செயல்பட ஆரம்பித்த பெண் என்றாலும்சரி , பெண் போராளி என்றாலும் சரி தமிழிழீ விடுதலைப் புலிகளில் பெண்கள் இணைவதற்கும் அவர்கள் துணிந்து வருவதற்கும் அவரே முதன்மை வழிகாட்டியாக நின்று கடமையாற்றினார்.
 அது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் தலைவரே தொடர்ந்து தலைவராகயிருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை ஒரேநிலைப்பாட்டில் இருந்தவர். ஸ்ரேவேலின் விடுதலை போராட்டத்தில் அமெரிக்கா பெண்மணியான கிற்றிபிறமேன்ட் அவர்கள் ஒரு மருத்துவம் போராளியாகவும் அவ்அமைப்பின் தலைவர்களில் ஒருத்தரான"மோசா தயான்" அவர்கட்கு ஆலோசகராகவும் இருந்து அவ்விடுதலையை வென்று எடுத்தாரென அவர்களின் வராலாற்றுப் புத்தகமான தாயம் நோக்கிய பயணம் என்ற புத்தகத்தில எழுதியுள்ளார்கள்.



அதேபோன்று தமிழர்களின்விடுதலைப் போரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணான அடல் அவர்களின் செயல்பாடு மிக முக்கியமானது. அவர் அமைப்பின் தலைவரோடு நெருக்கமாகயிருந்து  தனது ஆலோசனையை வழங்கியது மட்டுமன்றி, எமது பெண் போராளிகள் பற்றி சில கொழும்பில் வாழும் சிங்களவர்களிற்கு சார்பான தமிழ் பெண்கள் எமது பெண் போராளிகளைப் பற்றி அவர்கள் தவறானவர்கள் என்று ஆங்கில வடிவில் எழுதிய கட்டுரையை அடல்பார்த்தவுடன் எங்களின் பெண் போராளிகள் மிகவும் ஒழுக்கமானவர்கள், அவர்கள் எந்த நேரத்திலும் பாலியல் ரீதியான பிரச்சனையில் ஈடுபடமாட்டார்கள் என்று ஆங்கில வடிவில் ஒரு கட்டுரையை எழுதி அதை முறியடித்த பெருமையும் அவரைத்தான் சாரும்.


 அடல் தனது உயிரை எண்ணிப் பயந்து வாழ்ந்தவர் அல்ல அதற்கு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்! விடுதலைப்புலிகளின் வரிப்புலிச்சீருடையை விரும்பிப்போட்ட முதல் வெளிநாட்டுப் பெண்மணியும் அவரே ஆவார்,அத்துடன் விடுதலைப் புலிகளின் சைனட்டையும் அவர் அணிந்து கொண்டார். பெண் போராளிகளில் ஒரு மூத்த போராளியாக அவர் வலம்வந்தார்.


அது மட்டும் அல்ல ஆபத்தான கடல் பயணம் எனத்  தெரிந்தும் பாலா அண்ணைக்கு வருத்தம் ஏற்பட்டபோது அவரோடு சேர்ந்து கடல்ஊடாக இங்கிலாந்திற்குச் சென்றதும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியா நாடும் அந்த மண்ணில் பிறந்த அடலும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அளப்பெரிய கடமை செய்துள்ளார்கள் என்பதை தமிழர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. 2009 தமிழர்கள் சிங்களவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட போது சிறுபாண்மை தமிழர்களிற்கு புகலிடம் வழங்கலாம் என அவுஸ்திரேலியாப் பிரதமர் திருமதி யூலிய அவர்கள் 2012 அன்று அறிவித்தார். தமிழர்களை வரச்சொல்லி அறிவித்த முதலாவது நாடு என்ற பெருமையை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதில் இருந்து நூற்றுக் கணக்கான படகுகள் அவுஸ்திரேலியா நோக்கி வந்தது.

அடுத்து மிகவும் முக்கிய நாளான நவம்பர் 27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாளை தலைவர் புனித பூமியில் ஆரம்பித்து வைத்தார்.



மணலாற்றுக் காட்டில் வைத்துதான் தமிழீழ விடுதலைப்  போராட்டத்தில் வீரச்சாவு அடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை நினைவு கூறும் நாளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை தேசியத் தலைவர் மனதில் உதயம் ஆனது. கேணல் சங்கர் அவர்கள் தலைவருடன் வெளிநாட்டுச் செயல்பாடுகள் பற்றி தலைவர் அவர்களோடு உரையாடுவது வழமை.

முதலாவது உலகப் போரின் போது போர்க்களத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட பொபிமலர் நினைவு நாள் பற்றி கேணல் சங்கர் அவர்கள் தலைவருக்குத் தெரிவித்துள்ளார்,

அதைக் கேட்ட தலைவர் நாங்களும் எங்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளிற்கு என ஒரு நினைவு நாளை உருக்வாக்கிவிட வேண்டும் என தீர்மானித்தார். தொடர்ந்து அவர் சிந்தித்த போது எமது விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக வீரச்சாவு அடைந்த லெப்ரின்சங்கர் சத்தியநாதன் இறந்த நாளான 27/11/1982 இந்த நாளையே தேசிய மாவீர் நாளாக நினைவு கூறுவது என தீர்மானித்தார். அன்றையிலிருந்து எமது மாவீரர் நாள் ஆரம்பமானது.  சங்கர் பற்றிப்பார்போம், வடமராச்சி கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கர்,1978 பிற்பகுதியில் இயக்கத்தில் இணைந்துகொண்டார்,அக்காலத்தில் சங்கர் அவர்கட்கு குறிபார்த்துச் சுடும்பயிற்ச்சி வழங்கப்ட்டது.


அப்பயிற்சியின் போது குறிதவறாமல் அவ் இலக்கைச் சுட்டு அதில் பங்குபற்றிய போராளிகளை விட கூடுதலான மதிப்பெண்களை அவன் எடுத்தான். அதன் காரணமாகத் தலைவர் அவர்களால்045 ரிவோல்வர் ஒன்றைத்  அவனுக்குப் பரிசாக வழங்கினார்.  அதற்குப்பின் 81 ஆம் ஆண்டு நவின ஆயுதங்கள் பெறும் பயிற்சியை சங்கர் பெற்றுக் கொண்டான். அடுத்து தலைவரின் மெய்ப்பாதுகாவலாக இருவர் நியமணிக்கப்பட்டனர். அதில் ஒன்று சங்கர் இரண்டாவது ரகுவப்பா அன்றில் இருந்து ஜீ 3 ஆயுதம் சங்கருக்கு வழங்கப்பட்டது, 27/10/1982 அன்று சீலனின் தலைமையில் நடைபெற்ற பொலிஸ்ரேசன் தாக்குதலில்  பொறுப்பாக சென்ற சீலன் அச்சண்டையில் சீலன் ,குண்டப்பா, புலேந்தி மூவரும் காயம் அடைந்தமையால் அவர்களைப் பாதுகாப்பான  இடம்கொண்டு சென்றது வரை   அங்கே எடுத்த ஆயுதங்களை மறைப்பான இடத்தில் வைத்தது வரை அனைத்து வேலைகளையும் சங்கரே செய்து முடித்தான்.

,அதனால் அனுடைய இறந்த நாளை தலைவர் தேர்ந்து எடுத்தார். 27/11/1989 மாலை 12 மணிக்கு தேசிய மாவீரர் நாள் ஆரம்பித்து வைத்து தலைவர் உரையாற்றினார்,

"எமது விடுதலைப் போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாளை பிரகடனம் செய்துள்ளேன்.  இதுவரை காலமும் எமது புனித இலட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்த 1307 போராளிகளையும் நினைவு கூறும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்டவர்களை நினைவு கூறுவது வழமையாகும்.  அதை நீங்களும் அறிந்து இருப்பீர்கள்" இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளியையும் தனிப்பட்ட ரீதியாக நினைவு நாட்களாகக் கொண்டாடுவது  வழக்கமாயிருந்து வந்தது. ஆனால் இன்றிலிருந்து வீரச்சாவு அடைந்த  எல்லோரையும் வருடத்தில் இன்றைய நாளான நவம்பர் 27 நினைவு கூறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எமது விடுலைப் போராட்டத்தில் முதலாவது வீரச்சாவு அடைந்த லெப். சங்கர் அவர்களின்  நினைவு நாளையே தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களிற்கு ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவியில் உள்ள போராளிகள் வீரச்சாவு அடைந்தால் மட்டும்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம்.  அப்படிப்  பார்ப்பது தவறு வீரச்சாவு அடைந்த அனைவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும்.  அதை ஒட்டிய நாம் இந்த மாவீரர் நாளைப் பிரகடனப் படுத்தியுள்ளோம். இன்றையிலிருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரண போராளி வரை அனைவரையும் சமனாகக் கருதுகின்றோம். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தும் நிலையும் சில போராளிகளை அஞ்சலி செலுத்தப்படாமல் புறக்கணிக்கும்  நிலையும் உருவாகும் என நினைக்கின்றேன்.  அனைவரையும் சமனாக ஒரேநாளில் அஞ்சலி செலுத்தி வணங்க வேண்டும் என்பதற்காகவே இந்நாள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும், அறிவாளிகளையும், பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாக மாறி அது அழிந்து விடும், எங்களின் இனத்தில் பல அறிவாளிகள் இருக்கின்றார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது! எங்கள் இனத்தின் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகின்றார்கள்.அத்தோடு மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்  போது எமக்கு வீரர்களிற்குத்தான் பஞ்சமாகயிருந்தது, ஆனால் இன்று நாம் எமது வீரர்களைக் கெளரவிக்கும் நிலைக்குவந்துள்ளோம். அதற்குக்  காரணம் இந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் உயிர் அர்ப்பணிப்பால்தான் இந்த உயரிய நிலை உருவாகியது. இதுவரை காலமும் எங்களுடைய இன விடுதலைக்காக போராடியவர் யார்? என்ற நிலையிலிருந்து  இன்றிலிருந்து இனத்தின் வீரர்கள் யார் என்பதை எமது மக்களிற்கு அடையாளப் படுத்தியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது.

  இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கின்றது  என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த் தியாகம்தான்.  அவர்களுடைய வீரமான உணர்வானது தங்களின் உயிரையே மதியாது போராடித் தங்களின் உடல் சிதைவடைந்த நிலையிலும் நிதானமாக எதிரியை வீழ்த்தியதோடு மட்டுமன்றி உயிரோடு பிடிபட்டால் சக நண்பர்களிற்கும் உடமைகளிற்கும் ஆபத்து வரும் என்பதற்காக சைனைட்கொண்டு தங்களின் உயிரை அர்ப்பணித்த மிகப்பெரிய வரலாறு எமது வீரர்களிற்கு உள்ளது.

உல நாடுகளை ஒப்பிடும்போது  எமது வீரர்களிற்கு ஒரு தனிப் பெரும் மரியாதையை  இருக்கின்றது .

எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான தினமாக  இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும். எனத் தேசியத் தலைவர்  அம்மாவீரர் நாளில் குறிப்பிட்டிருந்தார். தேசியத் தலைவர் அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாகத் தமிழீழ மண்ணில் மாத்திரம் இன்றி எட்டுக் கோடித் தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் மாவீரர் நாள் நடைபெற்று வருகின்றது.



 இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் என்ன நடந்தது என்பது பற்றி போராளி பாலா குறிப்பிடுகின்றார். 

எமது கிராமத்தைச் சுற்றி வளைத்து அனைத்து மக்களையும் பாடசாலைக்கு வருமாறு கூட்டிக் கொண்டு  சென்றது இந்திய இராணுவம். அது எமது கிராமத்தில் உள்ள கிண்ணையடிபபடலை.   அங்கே சென்றதும்  ஆண்கள் பெண்கள் வேறு வேறாகப் பிரிக்கப்பட்டார்கள். அதையடுத்து 15 தொடக்கம்  30 வரையான ஆண்களை பிடித்துத் தலையை கம்பி வேலிக்குள் புகுத்தியவாறு படுக்கையில் வைத்து பெரியதடியால் துடையில் அடித்தது  இந்திய இராணுவம்.

எனக்கும் கடுமையான அடி விழுந்தது அடி மட்டும் இல்லாமல் சப்பாத்தால் இந்திய இராணுவம் உதைத்து எனது பல்லும் விழுந்தது. அன்றைய நாள் அந்தப் பாடசாலை கடுமையான சன நெரிசலாகயிருந்தது. பெண்கள், குழந்தைகள் அனைவரும் இதைப்பார்த்து அழுத வண்ணம் இருந்தார்கள்.

பாடசாலைக்கு அருகில் நடேசன் என்பவரின் கடையிருந்தது. அங்கே இரு போராளிகள்  இரவு பதுங்கியிருந்திருக்கின்றார்கள். அத்தகவலை மாற்றுக் குழுக்களைச் சேர்ந்த யாரோ இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்தி விட்டார்கள்.  அதனால் அதிகாலை 3 மணிக்கு இராணுவம் அக்கிராமத்தைச் சுற்றி வளைத்து விட்டது . ஆனால் இராணுவத்திற்கு அவர்கள் இருக்கும் இடம் தெரியாது பாடசாலைக்கு அருகாமையில் இருந்த பயன்படுத்தப் படாத கடைக்குள்தான் அவர்கள் இருவரும் இருந்தார்கள். கடை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அதற்குப் பக்கத்தில்தான் கிண்ணையடிப் பாடசாலையிருந்தது.  அதுக்குள்ளே சச்சி / மற்றும் அங்கிள் இரு போராளிகளும் இருக்கின்றார்கள்.  அதில் அங்கிள்  யாழ்மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  சச்சி கிரானைச் சேர்ந்தவர்,


அந்த ஊர் மக்களிற்கு இருவரும் பழக்கமானவர்கள் . இருவரில் ஒருவர் திடீரென இருமி விட்டார். உடனே இந்திய  இராணுவம் கடையை உடைத்து இருவரையும் வெளியே எடுத்தது. ஆனால் அவர்கள் இருவரும் அரை உயிரில் இருந்தார்கள். ஏன்னென்றால் அவர்கள் இருவரும் முதலிலே குப்பி கடித்து விட்டார்கள். இருவரும் தங்களின் உயிரைப்போக்குவதற்காக தலையை நிலத்தில் புகுத்திய வண்ணம் உயிரை விடுவதற்காகப் போராடிக் கொண்டேயிருந்தார்கள். அங்கே நின்ற எல்லோரிடமும் இந்திய இராணுவம் தேங்காய்பால் மற்றும் பழப்புளி எல்லோரிடமும் கேட்டார்கள். ஆனால் எவரும் கொடுக்க முன்வரவில்லை.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரின் உயிர் பிரிந்தது . இரவு ஐந்து மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தது இந்திய இராணுவம். அக்கிராமத்தில் ஒரு சிறிய பலசரக்குக் கடை ஒன்று நான் போட்டிருந்தேன். இந்திய இரணுவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட  நான் இந்திய இராணுவத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன வைராக்கியம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு அமைவாக 1988 கடைசிப்  பகுதியில்    சுந்தரம் என்பவரின் உதவியோடு விடுதலை புலிகள் அமைப்பில்இணைந்தேன். 


எக்காரணம் கொண்டும் நீங்கள் விலக முடியாது என அவரால் பல தடவை சொல்லப்பட்டு விருப்பம்  இல்லாவிடில் நீர் இப்பொழுதே போய் விடலாம் என அவர் பல தடவை புத்தி எனக்கு சொன்னார். நான் கண்டிப்பாகச் சேரத்தான் போறேன் என பிடிவாதமாக நின்றேன். அடுத்த நாள் ஜெனாத்தா மற்றும் கடவுள் இருவரும் என்னைக் கூட்டிக் கொண்டு போக வந்தார்கள். அவர்களோடு "மலை வேஸ் "என்ற இடத்திற்கு நான் போனேன். அங்கே ஒரு பத்துப் பேர்தான் நின்றார்கள். கப்ரன் தினேஸ் பொறுப்பாகயிருந்தார். இவர் 1991 ஆனையிறவுச் சண்டையில் வீரச்சாவு அடந்தவர்.


எங்களின் கடமை பொருட்களை வேண்டுவது, அல்லது கடத்துவது அப்பொருட்களை பயிற்சி முகாம்களிற்கு  அனுப்புவதே  கடமையாகயிருந்தது. உடனே உங்களைப் பயிற்சிக்கு அனுப்ப முடியாது எனவும் சில குறிப்பிட்ட மாதம் கழிய அனுப்பலாம் என்று என்னிடம்  சொன்னார் கட்டன் தினேஸ். நான் அதைக்கேட்டு  சரி என்றேன். அப்பிரதேசம் கடுமையான வெயிலாகயிருந்தது . சோலைக்காடு இடைக்கிட சிறு வெளிகள் நிறைய மலைகள் என காணப்பட்டது. இரவுகளில்  கடுமையான குளிர் ஆகயிருக்கும். கிராமங்களில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் துரத்தில் இவ்விடம் இருந்தது.


ஜெனாத்தாவின் தலைமையில் நான், கடவுள் மூவரும்மாக வாகநேரிக்கு மேற்க உள்ள கொழும்பு ரோட்டிற்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவோம். அதில் வரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான உணவுப் பொருட்கள் நிறைந்த லொறிகளை கடத்திக் கொண்டு பாதுகாப்பான காடுகளிற்குக் கொண்டு சென்று விடுவோம். இதுவே எங்களின் வேலையாகயிருந்தது.சில கடத்தல்கள் வெற்றியடையும் சில தோல்வி அடையும் அப்படியே எங்களின் காலம் சென்றது.

 அக்காலப் பகுதியில் கணிசமான தமிழ் இளைஞர்கள் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனமான தாக்குதல்கள் மற்றும் இயக்கம் என சந்தேகப்படுபவர்களை அடித்துக் கொலை செய்வது 75 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மீதான பாலியல் அதன் பின் கொலைகள் எனப் பல மிருகத்தனமான தாக்குதல்களால் போராட்டத்தின் பால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைய வந்துகொண்டேயிருந்தார்கள்.


6ம் மாதம் 1989 ஜெனாத்தா மற்றும் தினேஸ் எங்களைக் கூட்டிக்கொண்டு அநுராதாபுரம் சிங்களவோடர் விசர் கெங்கை பயிற்சி முகாமை நோக்கி நடக்கத்தொடங்கினோம். 15 இளைஞர்களில் நானும் ஒருத்தனாக நடக்கத் தொடங்கினோம். வானுயர்ந்த குனுகுறுளை மரம் என அங்கே கதைப்பார்கள்.  அந்த மரம் அப் பெரும்காட்டில் கூடுதலாகப்காணப்பட்டது.

இரவுபகலாக நடந்துகொண்டேயிருந்தோம். அருவிகளைக் கண்டால் அவ் இடங்களில் இருந்து தண்ணீர் குடித்து விட்டுப்  பின் நடக்கத் தொடங்குவோம். இரவு பகலாக நடந்து 3 நாட்களில் அப்பயிற்சி முகாமை சென்றடைத்தோம்.


மனோ மாஸ்ட்டர் உங்களோடு நாளை கதைப்பார் என அங்குள்ள கஸ்ரோ எங்களிடம் சொன்னார்.



அடுத்த நாள் எங்கள் 15 பேரையும் கஸ்ரோ அலுவலகம் வரச்சொல்லியிருந்தார். நாங்கள் எல்லோரும் போனோம் - அனைவருக்கும் கஸ்ரோ இயக்கப் பெயர் வைத்தார். எனக்கு பாலா என பெயர் வைத்தார். பின் முகாம் கட்டமைப்புத் தொடர்வாக கஸ்ரோ எங்களிற்குத் தெரியப்படுத்தினார். முகாம் பொறுப்பாளர் மனோ மாஸ்ட்டர் தலைமை ஆசிரியர் மேஜர் குலதீபன் அவருக்கு கீழுளுள்ள ஆசிரியர்களான . 1 பிரவா 2 தினேஸ் 3 வினோத் 4 இரண்டாவது முகாம் பொறுப்பாளராக சசி  தொலைத்தொடர்பாளர் மற்றும் அறிக்கை கஸ்ரோ நான் என எங்களிற்குத் தெளிவு படுத்தினார்.



இதில் மேற்படி கஸ்ரோ என்பவர் கருணாவோடு பிரிந்து கொழும்பில் தங்கியிருந்த வேளை கீர்த்தியின் தலைமையில் சென்று எமது போராளிகள்கொழும்பில் வைத்து எட்டுப் பேரைச்  சுட்டுக் கொன்றனர். அதில் கொல்லப்பட்டவர்களில் கஸ்ரோவும் ஒருவர்.

 மற்றும் 17/05 /2009 முள்ளிவாக்காலில் சரண்டர் அடைந்து பிரபா  காணமல் போய் விட்டார். மற்றும் சசி இயக்கத்தில் இருந்து விலகி யாழில் ஒருபொதுப் பெண்ணைத் திருமணம்  செய்து வாழ்கின்றார்.

அடுத்த நாள் காலையில் மனோ மாஸ்ட்டர் அங்கே கூடியிருந்த 150 போராளிகளோடும் கதைக்கத் தொடங்கினார். சுட்டாறிய நீர் குடிக்க வேண்டும். சுடு நீரில் டெட்ரோல் கலந்து குளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பயிற்சி முகாமில் இருந்து ஒடினால் கடுமையான தண்டனை அல்லது மரன தண்டனை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். பின்னர் தோளில் கொழுவக்கூடிவாறு 5k.lo ஒரு சாக்கால் தைக்கப்பட்ட அவல் வைக்கும் ஆயுதத்திற்குப் பதிலாக ஒரு பெரிய தடியும் தரப்பட்டது.

 ஆரம்பப் பயிற்சிக்கான அனைத்து வேலைகளும் தயாரானது!  அடுத்த நாள் காலை 9 பிற்பகல் அப்போதைய  மாவட்டத் தளபதியாகயிருந்த கருணா என்பவர் 40 பேர் கொண்ட மேற் பாதுகாப்பு அணியோடு அங்கே வந்திருந்தார். ஆரம்பப் பயிற்சியை ஆரம்பித்து கருணா அவர்கள் பேராளிகளோடு பேசுவதற்கு ஆரம்பித்தார் . 15/08/1989 காலை 9 மணி கருணா மேற்படி பேசும் போது விடுதலை புலிகளின் தலைவர் மிகவும் நல்லவர் எனவும் ஏனெனில் இந்திய அரசாங்கம் நீங்கள் வடமாகாணத்திற்கு முதலமைச்சராகயிருங்கோ ஆனால் கிழக்கு மாகாணம் முவ்வின மக்கள் வாழ்க்கூடிய ஒரு பிரதேசமாகயிருக்கும் என இந்திய அரசால்சொல்லப்பட்டது. ஆனால் அதைத் தலைவர் ஏற்கவில்லை.

 அவர் சொன்ன பதில் வடக்கிற்கு இப்பொழுதும்  நான் தலைவராகத்தான் இருக்கின்றேன். ஆனால் கிழக்கிற்காகத்தான் போராடுவதாக  அவர் சொல்லி அதிலிருந்து அவர் வெளியேறி விட்டார். எனவே இது இப்பொழுது கிழக்கிற்கான ஒரு போராகவே இருக்கின்றது. அதனால் கிழக்கு மாகாண இளைஞர்களாகிய நீங்கள் தான் தலைவருக்கு பலம் சேர்க்க வேண்டும், பயிற்சி நிறைவு செய்ததும் வடகிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்று சண்டையிடக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். என பேசித்  தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்து மனோ மாஸ்ற்றர் பயிற்சி தொடர்வாகப்பேசினார். தொடர்ந்து மனோ மாஸ்ற்றர் முன்னால் ஓட அனைத்துப் போராளிகளும் அவரைப்பின்  தொடர்ந்து ஒடத்  தொடங்கினார்கள். தொடர்ந்து அன்றைய நாள் 15 பேருக்கு ஒரு ஆசிரியர் விகிதம் பத்து ரீம் பிரிக்கப்பட்டது. பின்னர் கடுமையான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு எடுக்க மறுத்த சில போராளிகளிற்கு கடுமையான அடியும் விழுந்தது. இரண்டு மாதமாக அப்பயிற்சியை எடுத்தோம். ஒரு கிழமைக்கு ஒருக்கா விசர் கங்கையில் போய் குளிப்போம். ஏனைய நேரங்களில் மேல் கால்களைக் கழுவுவோம். அப்படியே எங்களின் காலம் கழிந்தது.பயிற்சி நடந்து கொண்டுடிருக்கும் வேளையில் மீளவும் புதியவர்களை இணைப்பதற்காக மேஜர் நோயல் அவர்கள் தேவராஜ் உட்பட சில குறிப்பிட்ட போராளிகளைக் கூட்டிக்கொண்டு எங்களின் பயிற்சி முகாமை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

 எங்களின் முகாம் பாதுகாவலரான சத்தியேஸ்வரன்,/ சத்தி இவர் ஆமி என நினைத்து 30 கவிபறால் வானத்தை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார். அதைத் தொடர்ந்து வந்தவர்களும் ஓடி விட்டார்கள். நாங்களும் ஓடுவதற்கு தயார் ஆகயிருந்தோம். பின்னர் தொடர்பு கொண்டு  கதைத்து அவர்களை உள்ளே எடுத்தோம்.  தொடர்ந்து நிலமை வழமைக்கு திரும்பியது. அக்காலப்  பகுதியில் இலங்கை அதிபர் பிரேமதாசாவிற்கும்  எமது தலைவர் வே. பிரபாகரனிற்கும் இரகசிய ஒப்பந்தம் ஏற்ப்பட்டு இருவரும் நண்பர்களாக மாறியதோடு பெரும் தொகையான ஆயுதங்களையும் திரு. பிரேமதாசா எமக்கு வழங்கினார். இக்கதையை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

இப்பயிற்ச்சி முகாமிற்கான மரக்கறி சில உணவுப் பொருட்களை சிங்களப்பகுதிக்குப்  போய்வாங்கி வரும் வேளையில் சிங்கள மக்கள் அதிசயமாக எங்களைப்  பார்த்துக்  கொண்டேயிருப்பார்கள்.


 ஆனால் வட கிழக்கில் இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட " த்றீஸ்ட்டர்" எனப்படும் வதராஜப்பெருமாளின் தமிழ் துணைப்படைகளே வட கிழக்கில் இருந்தது. சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மட்டு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை கல்லாறு என பல இடங்களில் முகாம் அமைத்திருந்தார்கள்.  அது அப்படியிருக்க 05//10/1989  எங்களுடைய ஆரம்பப் பயிற்சி நிறைவு செய்யப்பட்டது. சண்டைக்கு உரியவாறு 15 பேர் கொண்டே அணியாகப் பிரிக்கப்பட்டு மூத்த போராளிகள் ஆசிரியர்கள் அனைவரும் அணித்தலைவர்களாக அணிகளிற்கு விடப்பட்டர்கள்.

 பின்னர் சுமார்150 போராளிகள்  அங்கிருந்து கால்நடைகளாக  புல்லுமலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.  மூன்று நாட்கள் கடுமையாக நடந்து புல்லுமலை யூடாக செங்கலடியை சென்றடைந்தோம். அங்கிருந்து அனைத்து இடங்களிற்கும் எங்களுடைய அணி சென்றது. நான்15 பேர் கொண்ட ரூபன் அவர்களின் அணியில் விடப்பட்டேன். அவரோடு உன்னிச்சை சண்டைக்காகப் போனேன் அங்கே எங்களிற்கும் தமிழ் இந்திய இராணுவத்தின் துனைக் குழுவிற்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.  கனிசமான துணைப்படையனரும் ஒரு சில பெண்களும் அங்கே காணப்பட்டார்கள். அதில் பலர் எங்களோடு சண்டையிட்டு சாவடைந்தார்கள்.  ஒரு சிலர் மட்டும் சரண்டர் அடைந்தார்கள்.

 அதே நேரம் கல்லாற்றில் மூன்று நாட்கள் எங்களுடைய  போராளிகள் அவர்களை முற்றுகையிட்டு   இருந்ததால்   கணிசமானவர்கள் அங்கேயும் சரண்டர் அடைந்தார்கள். தொடர்ச்சியாக  நடைபெற்ற சண்டையால் மட்டு மாவட்டம் எங்களின் பூரணகட்டுப் பாட்டில் வந்தது. அடுத்து ரூபன் அவர்கள் எங்களையும் ஏற்றிக் கொண்டு கருணா  அவர்களைச் சந்திக்க கிரானிற்குச்  சென்றார்.   எங்களோடு இருந்த போராளிஅங்கே நடந்த சண்டையில் வீரச்சாவு  அடைந்தமையால் அவர்களின் வித்துடல் அங்கே இருந்தது. 

அவர் எப்படி  வீரச்சாவு அடைந்தார். என்றால் தன்னமுனைக்கும் மயிலம்பாவெளிக்கும் இடையில் துணைப்படையின் தாக்குதலில் தலையில் காயப்பட்டு அவ்விடத்திலே  தோத்திரன் வீரச்சாவு அடைந்தார் . அவ்வுடல் கிரானில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

அதைக் கருணா பார்த்துக் கொண்டிருக்கின்றார். நானும் போய்ப்  பார்த்தேன். அடுத்து கருணாவோடு சிறிது நேரம் கதைத்த ரூபன் அவர்கள் எங்களை ஏற்றிக்கொண்டு புலிபாய்ந்த கல்லிற்குச் சென்றார். அங்கே என்னையும் பட்டாவியையும் அந்த முகாமில் நிற்குமாறு சொல்லி விட்டு ரூபன் அவர்கள் சென்று விட்டார். புலி பாய்ந்தகல் பாடசாலையில் அவ்முகாம்அமைந்திருந்தது . அங்கே சந்தர் பொறுப்பாகயிருந்தார். ஆயுதக் களஞ்சியமும் அங்கே தான் இருந்தது. 

பகல் வேளைகளில் ஆயுதங்களைக் கிளின் பண்ணுவோம். அங்கே15 போராளிகளாய்  இருந்தோம். அக்காலப்  பகுதியில் சரண்டர் அடைந்த தமிழ் துணைக் குழுக்களில்  விசாரனை முடிந்தவர்களை ஒவ்வொரு இரவும்  சிலபேரை  உளவு இயந்திரத்தில் ஏற்றி  எங்களிடம் அனுப்புவார்கள். அவர்களிற்கு பனிஸ் மற்றும் பால் T என்பன நான் கொடுப்பேன் . பின்னர் அவர்களை பட்டாவியிடம் கொடுத்து விடுவேன் .


அவர்கள் இந்திய இராணுவத்திற்கு பல போராளிகளையும் எமக்கு ஆதரவான மக்களையும் காட்டிக்கொடுத்தமையால் இந்திய இராணுவம் அடித்தே அவர்களை கொலை செய்தது. சிலரை வைக்கோலின்  உள்ளே  போட்டு உயிரோடு எரித்தது. அத்தவறுகளை  தாங்கள் விட்டதை விசாரனை மூலம் அவர்கள்  ஒத்துக் கொண்டார்களென   நான் அறிந்தேன் .அப்படியான  ஒரு சிலருக்கு அங்கே வைத்து பட்டாவி என்பவரே அவர்களுக்கு சாவொறுப்பு வழங்கினார்.  இவர்.1991 ஆனையிறவுச் சண்டையில் லெப்டினன்ட் நிலையில் அவர் வீரச்சாவு அடைந்தார்.


 காலை எட்டு மணி திடிரென கருணா அவர்கள் சில குறிப்பிட்ட போராளிகளைக் கிரானுக்கு வருமாறு சொல்லி இருந்தார். அங்கே இருந்த புவி ,நிர்மலன் , பாவரசன் நான் நான்கு பேரும் கிரானுக்கு வந்தோம் .  கடவுள் இவர்கள் எல்லோரும் இருந்தாங்கள். பாவரசன் மட்டும் கடுமையான மகிழ்ச்சியில் காணப்பட்டார். ஏனெனில் அவர் தனது பிறந்த மண்ணைப்  பார்க்கப் போகின்றார் .  அதனால்தான் .
. உடனே நாங்கள் வாகனத்தில் வந்து சேர்ந்தோம்.  அந்த ஆறுகளையும் வயல்வெளிகளையும், பார்த்து  வந்தோம்.  ஆனால் அது கடசிப்  பார்வை என்பது எங்களிற்கு தெரியவில்லை. அங்கே நாங்கள் வந்து இறங்கியதும் முதலில் வந்தே 45 போராளிகள் அங்கே இருந்தார்கள்.  அதில் எங்களோடு பயிற்சி   எடுத்த கதிரவனும் நின்றார்.  கதிரவன் 50 பது பேர் ஆகக் கூடியது.  எங்களோடு பயிற்சி எடுத்த யாழ் மாவட்டத்தைச்  சேர்ந்த பாவரசனும்  இருந்தார். அவரைப் பார்த்ததும் வட பகுதி போகப்  போகின்றோம் என்பதை உணரக்கூடியவாறு இருந்தது.

 அப்பொழுது கருணா  பேசத் தொடங்கினார்.  இங்கே ஐம்பது பேர் கூடியிருக்கின்றீர்கள்.  உங்கள் அனைவருக்கும் லோரஞ் அவர்கள் பொறுப்பாகயிருப்பார்.  அவரின் தலைமையில்  நீங்கள் ஐம்பது பேரும் யாழ்ப்பாணம் போகப் போகின்றீர்கள்.  நீங்கள் அனைவரும் ஆயுதங்களோடு தலைவரின்  பாதுகாப்பிற்காக அங்கே போகின்றீர்கள். முதலாவது எமது மாவட்டத்தில் இருந்து ஆயுதங்களோடு போகும் அணி நீங்களாகத்தான் இருக்கும். அத்தப் பெருமை உங்களைத்தான் சாரும் என கூறி முடித்தார்.

 அங்கே இருந்தவர்கள் யாரும்  வேறு இடம் செல்வதை விரும்பவில்லை, அவர்களின் கண் கலங்கியதை நான் நேரடியாகப் பார்த்தேன். அதில் இருந்த போராளி ஒருவன் திடீரென என்னை விடுமுறையிலும் அனுப்பவில்லை நான் எப்பவும் அம்மாவைப் பார்க்கமுடியாது என ஒப்பாரி வைத்தபடி தனது துப்பாக்கியால் தனதுகாலைச் சுட்டு அவன் கீழே விழுந்தான். அவனைத் துக்கிக் கொண்டு  சென்று முதலுதவி செய்த பின் மருத்துவ மனைக்கு அனுப்பினார்கள். நிலமை பதட்டமாகவும், பயமாகவும் இருந்தது.

 லோறஞ் கதைக்கத் தொடங்கினார்.  இது புது விடயம் அல்ல வழமையாக நடப்பது தான் அங்கே இருப்பவர்கள்  இங்கே வருவார்கள்,  இங்கே இருப்பவர்கள் அங்கே போவார்கள் இது ஒரு வழமையான நடைமுறை . அங்கே இருப்பவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்கள் தான் அனைவரும்  எங்களுடைய மக்கள் தான். அமைதியாகயிருக்குமாறு அவர் குறிப்பிட்டார். 3 விறன்LMG 3 கால் காஸ்ரோ மிகுதி M 70 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. முன்னர் ஈரோஸ் அமைப்பிடம் இருந்து எடுக்கப்பட்ட T 81 துப்பாக்கிகளை மீளப்பெற்றனர்.  தரம் குறைந்த இந்தியாவின் ஆயுதங்களே எமக்கு வழங்கப்பட்டது.  ஆரம்பகாலப்  போராளிகளான சைமன் பரமதேவா பற்றியும் அவர்களின் திறமை பற்றியும் மூத்த போராளிகளால் எமக்கு சொல்லப்பட்டது.அவர்களும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  என்றாலும் அவர்கள் வீரச்சாவு அடைந்தது  வடகுதியில்தான்.  ஒரு போர்வீரன் எங்கையும் வீரச்சாவு அடையலாம் அதைக்  கதைப்பதும் அதற்கு பயப்பிடுவதும் ஒரு கோழையென அவர் தெளிவு படுத்தினார். 
அக்காலப் பகுதியில் எங்களால் பிடிக்கப்பட்ட  துணைப் படைகளில் ஒருவரான ராஜா அவர்கள் சாவகச்சேரியை சேர்ந்தவர் என்பதால் அவரைக் கவனமாகக் கொண்டு அங்கே ஒப்படைக்குமாறு என்னிடம் தந்தார்கள். நான் அவரின் கைகளிற்கு விலங்கிட்டு அவரின் இடுப்பில் கயிறு போட்டுக் கட்டியிருந்தேன். இதைப்பார்த்த  ௹பன் அவரின்  கட்டை அவிழ்க்குமாறும்   இரவு நேரம் மற்றும் காடுகளுக்கால் போகும் வேளையில் மட்டும் கட்டுமாறும் அவர் என்னிடம்குறிப்பிட்டார்.

 நான் அதை ஏற்றேன். அதனையடுத்து ஐம்பது பேரையும் ஒரு பஸ்சில் ஏற்றிக் கொண்டு வெருகல் அத்தோரத்தில் விட்டார்கள். அதிலிருந்து நாங்கள் யாழை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு நாள் நடந்து திருமலையில் உள்ள ஒரு கிராமத்தை வந்து அடைந்தோம். அங்கே கடுமையான வறுமை நிலை காணப்பட்டது. குறிப்பாக அவர்கள் எங்களிற்கு சமைப்பதற்கு கடுமையான கஷ்டத்தை எதிர் நோக்கியதை எங்களால் காணக்கூடியவாறு இருந்தது.

 அப்பொழுது எங்களோடு வந்தவர்களிடம் குறிப்பிட்ட சிலரிடம் பணம் இருந்தது. அது துணைப் படையினரிடம் இருந்து எடுத்தபணம் . அதனால் ஒரு போராளி சொன்னார் நீங்கள் கடையைக் காட்டுங்கோ நாங்கள் தேவையான பொருட்களை வாங்கித் தருகிறோம் எனச் சொல்லி அவரோடு கடைக்கு சென்றார். ஒரு மணித்தியாலம் கழித்து ஒரு மாதத்திற்கு உரிய சாமானோடு இருவரும் வந்தார்கள்.  சாமான்கள் மாட்டு வண்டிலில் வந்து இறக்கப் பட்டது. அங்கே இருந்தே ஒரு போராளி இது பற்றி குறிப்பிடும் போது ஒவ்வொரு தடவையும் மட்டுநகரில் இருந்து யாழ் செல்லும் போது இப்படியான உதவிகள் தங்களிற்கு தொடர்ச்சியாக செய்வதாக எங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

 அதைத் தொடர்ந்து சமைத்து எல்லோரும் சாப்பிட்டோம். ஆனால் திருகோணமலையில் எல்லா இடங்கலிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டேயிருந்தது. மட்டக்களப்பில் இருந்து மட்டுமே வேளைக்கு வெளியேறி திருமலையில் கவனமாக   இருந்தார்கள்.

அதனால் "அவர்களோடு சண்டையிடாமல் அவதானமாக நீங்கள் போக வேண்டும்" என்று அங்குள்ள போராளி எங்களிற்கு புத்திமதி சொன்னார். இரண்டு நாள் இரவு பகலாக நடந்து அடுத்த முகாமிற்குச்  சென்றோம். அங்கே எங்கள் எல்லோருக்கும் கஞ்சியும், ரீயும் போட்டு வைத்திருந்தார்கள்.  அதைக் குடித்தோம் எங்களின் பசி ஆறியது. பின்னர் பகல் முழுமையாக அங்கே தூங்கினோம். இரவு ஆறு மணிக்கு எங்களின் நடைப்  பயணம் தொடக்கியது.
 இரவு பகலாக இரண்டு நாள் நடந்து அடுத்த முகாமை சென்றடைந்தோம். அங்கே எங்களிற்காக  ஆடு வாங்கி வைத்து இருந்தார்கள். ஆனால் எங்களோடு நான்கு முஸ்லிம் போராளிகளும் வந்தார்கள்.  அதில் வந்த சத்தார் / மற்றும் ராவிக் இருவரையும் கூட்டிக்கொண்டு அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ப அவர்களாலே அந்த ஆடு வெட்டப்பட்டு சமைக்கப்பட்டது.

 சமையல் முடிய எல்லோரும் சாப்பிட்டோம். தொடர்ந்து அன்றைய பகல் அங்கே ஓய்வாக இருந்தோம். இரவு ஆறு மணிக்கு நடக்கத் தொடங்கியதும். மாரிமழை கடுமையாகப் பெய்ய தொடங்கியது. இரவு பகலாக மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனால் நாங்களும் நடந்து கொண்டே இருந்தோம்.தொடர்ந்து நடக்கத் தொடங்கி நல்லதண்ணி ஆறு கடலில் கலக்கும் இவ்விடம் மூதூரைச் சேர்ந்த இறால்குழி என எங்களிடம் அவர்கள் சொன்னார்கள்.சென்றதும் கடற்கரை நல்ல தண்ணியாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு போராளிகள் விரும்பினார்கள். பொறுப்பாளர்  லோறன்ஸ்சிடம் கேட்டார்கள். அவர் அதை அனுமதிக்கவில்லை ஏனெனில் இந்திய" இராணுவம் எம்மீது தாக்குதல் நடத்தலாம்" என எமக்கு தெளிவுபடுத்தினார். அங்கிருந்து ஒரு நாள் நடந்து புலேந்தி அம்மான் முகாமிற்குச் சென்றோம்.  அந்த முகாமில் தான் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட சிறப்புத்தளபதி பதுமன் அவர்கள் நின்றார்.
நாங்கள்  அங்கே சென்றதும்   எங்களுடைய ஆயுதங்களை திரு. பதுமன் அவர்கள் ஒவ்வொன்றாகப்  பார்வையிட்டார். அப்பொழுது அவரிடம் ஆயுதம் பற்றாக் குறையாகயிருந்ததை எங்களால் அறியக்கூடியவாறு இருந்தது. இரண்டு நாள் அங்கே நின்றோம். இரண்டாவது நாள் பதுமன் எங்களோடு கதைத்தார்.

.நீங்கள் நல்ல ஆயுதங்களோடு வந்திருக்கின்றீர்கள். எங்கள் மாவட்டத்தில் ஆயுதம் பற்றாக் குறையாக உள்ளது. நீங்கள்  இராணுவத்தோடு சண்டையிட்டு சிறிய தொகை ஆயுதம் எடுத்துத் தந்து விட்டு தலைவரிடம் போகுமாறு எங்களிடம் கேட்டார். எங்களின் பொறுப்பாளர் லோறன்ஸ் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார். இங்கே ஒரு இந்திய இராணுவத்தினுடைய  றக் முன்னால் போகும் அதை தொடர்ந்து 50வது இந்திய இராணுவம் றோந்து செல்லும். இது வழமையாக காலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் நடக்கும். நீங்கள் பதுங்கித் தாக்குதல் செய்வதன் மூலமாக அவர்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பின்வாங்குவது தான் எங்களின் நோக்கம் என எங்களிற்கு அவர் விளக்கப்படுத்தினார்.

 அதன் பின் என்ன நடத்தது .அடுத்த நாள் காலை 4 மணி பிற்பகல் விடிகாலை எங்களில் 50 பேர் அவர்களில் 25 பேர் மொத்தம் 75 போராளிகள்   25 மீற்றர் இடைவெளியில் றோட்டில் இருந்து 50 மீற்றர் தூரத்தில்  விடப்பட்டோம். பொது மக்களிற்கு தெரியாதவாறு மறைப்பான இடங்களில் சுடுவதற்கு நிலை எடுத்தவாறிருத்தோம்.  அன்றையிலிருந்து பதுமனால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களான மேஜர். சங்கர்,  மற்றும் வாய்சன் இருவரும் பொறுப்பாகயிருந்தார்கள்.

 அவர்களின் கட்டளையிலே சண்டையிடுவதற்கு  தயாராகயிருந்தோம். அவர்கள் எங்களிடம் சொன்னதுபோல் இந்திய ஆமியின் ஜீப் எங்களைக் கடந்துபோனது. 10 நிமிடத்தால் இராணுவம் வரும் என எதிர்பார்த்திருக்கின்றோம். திடிரென தளபதி பதுமன் அவர்கள் மேஜர் சங்கரைத் தொடர்பு கொண்டு சண்டைபிடிக்க வேண்டாம் உடனடியாக ஆட்களைக் கூட்டிக்கொண்டு  முகாம்வருமாறு கட்டளையிட்டார்.

 அறிவித்தலைத் தொடர்ந்து  வேகமாக அனைவரும் ஓடி காடுகளிற்குள் மறைந்து  முகாமிற்குச் சென்றடைந்தோம். அங்கே சென்றதும்" உங்களை சண்டைக்கு விட வேண்டாம் எனவும்" உடனே தன்னிடம் அனுப்புமாறும் அதை தலைவர் தன்னிடம் சொன்னதாக எங்களிடம் தெரியப்படுத்தினார். தொடர்ந்து சங்கர் , வாய்சன் இருவரின் தலமையில் மணலாற்றுக் காட்டை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

 சில குறிப்பிட்ட நாட்கள் நடந்து தென்னமரவாடியைக்  கடந்தோம். அது தமிழர்களின் பாரம்பரிய கிராமம் . ஆதித்தமிழர்கள் வாழ்ந்தற்கான சான்றும் அங்கேதான் உள்ளது.  அழகான வயல்வெளிகளும் காடுகளுமாக காட்சி அளித்தது. சில குறிப்பிட்ட  மணித்தியாலம் சென்று எழுச்சிப் பாதை என்ற இடத்தை சென்றடைந்தோம்.  இந்தப் பெயர் விடுதலை புலிகளால்தான் வைக்கப்பட்டது. காரணம் எழுச்சி என்றால் சந்தோசம் இலக்கை அடைந்து விட்டோம் என்பது தான் அதின் பொருள்.

 மாரிகாலம் என்பதால் கடும் மழையினால் காட்டாத்து வெள்ளம் ஓடியவாறு இருந்தது.  கயிற்றை அருவிக்கு மேலால் கட்டி கயிற்றைப் பிடித்து அனைவரும் அருவியைக் கடந்தோம். அதில் இருந்து சுமார் ஒரு நாள் நடந்தோம். கடுமையான களைப்பாகயிருந்தது. முன்னே மேஜர் சங்கர் நடக்க நாக்கள் அவரைப்பின் தொடர்ந்து நடந்தோம்.

.அடர்த்தியான மணலாற்றுக்காடு எங்களை வரவேற்றது.  சிறிது நேரத்தில் தலைவரைச் சந்திப்போம் என்று எங்களோடு வந்த சங்கர் அண்ணை சொன்னார். அங்கே முகாமிற்குள் உள்நுழைந்ததும்  நடக்கத் தொடங்கினோம்.  23/11/1989 உதய பீடத்தை  வந்துசேர்ந்தோம்.

 இதுதான்  உதயபீடம் என்று சங்கர் அவர்கள் சொன்னார். பின்னர் ஜீவன் என்று பெயர் மாற்றப்பட்டது.

அக்காலப் பகுதியில் வீரச்சாவு அடையும் போராளிகளை தாங்கள் வாழும் பாசறைகளில் இருக்கும் பயிற்சி மைதானங்களில் போராளிகளின் வித்துடல்களை விதைத்துக் கல்லறை கட்டி வைக்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. காலையில் எழுந்து  பின்அவ்விடம் சென்று கல்லறைகளிற்கு அஞ்சலி செலுத்தியபின் சத்தியப்பிரமானம் செய்து காலைப் பயிற்சிகளில் ஈடுபடுவது அவர்களின் வழமையான செயற்பாடாகயிருந்தது.

அவ்வகையில் நிறையக் கல்லறைகள் உதயபீட  மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தது,
 எங்களைக் கொண்டுபோய் மாவீரர் கல்லறைகள் இருக்கும் மைதானத்தில் இருத்தினார்கள். ஐம்பது பேரும் அதில் இருந்தோம்.  எங்களின் ஆயுதங்களை மேலே பார்த்தவாறு வைத்திருக்குமாறு சங்கர் அண்ணன் எங்களிடம் சொன்னார்.சிறிது நேரம் நாங்கள் அதில் இருந்தோம்
முன்னால் சொர்ணம் அண்ணை அலட் பொய்சனில் வர பின்னால் மூவர் மற்றும் நடுவில் ஒரு அரைக் காற்சட்டை போட்ட ஒரு கட்டையர் வந்து கொண்டேயிருந்தார். பொடியள்  எல்லாம் பார்த்து சொர்ணம் அண்ணனயைத் தான் தலைவர் என்று சொன்னார்கள். அங்கே வந்த தலைவர் ஒரு மரக்கதிரையில் இருந்த படி
எங்களோடு  கதைக்கத்  தொடங்கினார். மறகா எப்படி என மட்டுநகர்ப் பாசையில் தனது கதையை ஆரம்பித்தார். முதலில் துணைப் படையினருடன் நடந்த சண்டையைப் பற்றி கேட்டறிந்தார். அடுத்து உங்களின் அடிப்படைப் பயிற்சி எப்படி நடந்தது உங்களிற்கு அடிவிழுந்திருக்காது என தலைவர் சொன்னதும்  எங்களோடு வந்த பிறேம் என்ற போராளி முன்னே எழும்பி வந்து தலைவரிடம் தனது சேட்டைக் கழட்டி தனது முதுகைக் காட்டினான். 

முதுகுப்பகுதி பெரிதாக வெடித்திருந்தது  அதைப்பார்த்த தலைவர் "யார் அடித்தது?என கேட்டார். அதற்கு பிறேம் செந்தில் மாஸ்ட்டர் அடித்தவர் எனப் பதில் அழித்தார். கண்டிப்பாக அவருக்குத் தண்டனை வழக்கப்படும் எனச் சொல்லிவிட்டு யாழில் "அசோகா" ஹோட்டலில் முகாம் இட்டிருக்கும் துணைப்  படையினரைத் தாக்கவேண்டும். அதற்கான மாதிரிப் பயிற்சி  நடந்து கொண்டிருப்பதாகவும்  "அதில் நீங்களும் இணைந்து பயிற்சி  எடுக்க வேண்டும்"! என்றும் தலைவர் எங்களிடம் குறிப்பிட்டார். அடுத்து தலைவர் எங்களிடம் இருந்து விடை பெற்றார். பின்னர் நான் கூட்டி வந்த  துணைப்படையைச் சேர்ந்தே ராஜா என்பவரை உதயபீட முகாம் பொறுப்பாளரான மேஜர் அரவிந்தண்ணையிடம் ஒப்படைத்தேன்.

அங்கே தனித்தனிக்  கொட்டில்களில் நாங்கள் விடப்பட்டோம்.



அங்கே பால்ராஜ் அண்ணையின் தலைமையில் 700 போராளிகளிற்கு அசோகா ஹோட்டல் மாதிரிப் பயிற்சி நடந்துகொண்டேயிருந்தது.  ஏனெனில் யாழ்பாண நகரில் தான் வரதராஜப் பெருமாளின் துணைக் குழுக்களின் முகாம் அமைந்து இருந்த இடம்தான் அசோகா ஹோட்டல்.

 அங்கே ஒட்டுக்குழுக்கள்  பெரிய முகாம் அமைத்து  இருந்தார்கள். அவர்களை அழிப்பதற்கான மாதிரிப் பயிற்சிதான் அது.

அந்தப் பயிற்சியில் நாங்களும் இணைக்கப் பட்டோம். அப்பயிற்சிக்கான மெயின் பொறுப்பாளர்களாக பால்ராஜ் அண்ணை மற்றும் பொட்டுஅம்மான் இவர்கள் இருந்தார்கள். ஆசிரியர்களான மேஜர் விவேன் மாஸ்ட்டர் விடுதலைப் புலிகளில் மிகவும் அறிவு கூடியவரும் பொறுப்பாளர்களாலும் போராளிகளாலும் மிகவும் மதிக்கப்படுபவர்.  இவரே அதற்கு தலைமை ஆசிரியராகயிருந்தார்.

 மேஜர் ரெட்டி,. விருந்தன், ஜெனகன் , மேஜர் சங்கர் இவர்கள் பயிற்சியை வழங்கினார்கள்.  இதில்மேஜர் ரெட்டி, மேஜர் விவேகன், மேஐர் சங்கர், மேஐர் அரவிந்தன் அனைவரும் வீச்சாவு அடைந்துள்ளனர். இதில் மேஜர் விவேகன் மிகவும் திறமையானவர் ஆவார். அதே காலப்பகுதியில் இந்திய இரணுவத்திடம் இருந்து எடுத்த காள்கஸ்ரோ உந்துகணை செலுத்தியை அதில் எயா சோட் செற்றிங் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தவர் அவரே ஆவார். அதை அடுத்து அவ் உந்துகணை செலுத்தியை போராளிகள் ஆகாயத்தில் வெடிக்கக்  கூடியவாறு தாக்குதல் நடத்தி பல சேதங்களை எதிரிக்கு ஏற்படுத்தினார்கள். அதில், ஒரு சிலர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.

பின்னர் அங்கே என்ன நடந்தது? எனப் போராளி "ஓஸ்க்கார்" குறிப்பிடுகையில்......


அந்த நாட்களில் பல புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். அதில் மணிவண்ணன்.


சோ என பலர் நெருங்கிய நண்பர்களாகயிருந்தார்கள்."சோ"இவர் யாழ் மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் சுத்த டாங்கியை சண்டையில் இயக்குவதில் மற்றும் குறி தவறாமல் சுடுவதில் மிகவும் திறமையானவர். சிலாவத்துறை மன்னாரில் இரண்டு டோறா படகுகளை எமது டாங்கியால் ஒரே நாள் சுட்டு வீழ்த்தியவர். இவர் அடிக்கடி என்னை டொக்டர் எனஅழைப்பார். 1997ம் ஆண்டுகாலப் பகுதியில்  இவர் ஒரு பெண் போராளியை விரும்பினார்.  ஆனால் அந்தப் பெண் போராளியின் தலைவி இவர்களின் காதலை விரும்பவில்லைை.

 

அதைப்பெண் போராளியான "சோ" அவர்களின் காதலி "சோ"விற்கு தெரியப் படுத்தியுள்ளார்.

இதனால் இருவரும் மனம் உடைந்து தங்களிடம் இருந்த கைக்குண்டை வெடிக்கவைத்து  இருவரும் அவ்விடத்திலே சிதறிச் சாவடைந்தார்கள். இப்படியான சம்பவங்கள் எமது  அமைப்பில் பல நடந்துள்ளது.

தொடர்ச்சியாக இரவில் மாதிரிப் பயிற்சியில் ஈடுபடுவோம். பகலில் நான் மணிவண்ணன், சந்தோஸ் எனப் பல போராளிகள் சூட்டுப் பயிற்ச்சி எடுப்பதற்காக மூவிவங்கர் வெட்டும் வேலைகளில் ஈடுபடுவோம். மணிவண்ணன் உயரமானவர். என்ற காரணத்தால் நாங்கள்  வங்கருக்குள் நின்று வெட்டி மண்ணை  மணிவண்ணன் சவளால்  வெளியேற்றுவார்.  அப்படி அனைத்து வேலைகளிலும் போராளிகளை ஊக்கப்படுத்திச்  செய்வதில் மணிவண்ணன் ஒரு சிறந்த போராளியாக விளங்கினார்.தொடர்ந்து கடுமையாக  நடைபெற்ற அசோகா ஹோட்டல்  மாதிரிப் பயிற்சியில் ஈடுபட்ட போராளிகளில் உயரம் பாயும் ஒரு போராளியும் வெடிமருந்து தவறுதலாக வெடித்து ஆறு போராளிகளும் மொத்தம் ஏழு பேர்படுகாயம் அடைந்தனர்.  இதில் நாலு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.


அக்காலப் பகுதியில் தாஸ் 14 வயது உடைய போராளி என்பவர் நாயாற்றில் 35 வயது பெண்ணோடு தான் உறவு கொண்டதை விசாரனை மூலம் அவர் ஒத்துக் கொண்டதற்கு அமைவாக அவரை கோபுரத்திற்கு மேல் ஏற்றி தான் விட்ட பிழையை 700 போராளிகள் முன்னிலையில் அவர் சொன்னார்.


மேலும் அவர் எங்களிடம் குறிப்பிடும்போது அப்பெண் தன்னிடம் உருளைக் கிழக்கு கேட்டதாகவும்  தான் மூன்று கிலோவிற்கு மேல்கொடுத்ததாகவும் பின்னர் அடுத்த நாள் அப்பெண் வந்து உமக்கு சில விளையாட்டுக்களைக் காட்டுவேன் எனவும் ஆனால் நீ அதை எவரிடமும் சொல்லக் கூடாது எனச் சொல்லி அப்பெண் அந்த வேலையை தனக்குப் பழக்கினார் எனவும்  அவ்வேலை முடிய அவரின் உள் ஆடையை மறந்து விட்டுட்டு  போனமையால் தான் எங்களுடைய போராளிகளிடம் தான் பிடிபட்டதாகவும் அவர் எங்களிடம் சொல்லி முடித்தார்.ஒழுக்கம் என்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் எவரையும் முகம் பார்த்தது கிடையாது அதனால்தான் எமது தலைவனால் 30 வருடப் போராட்டத்தை திறமையாக நடத்த முடிந்தது.



அதை அடுத்து சா. பொட்டு அவர்கள் எங்களிடம் பேசும் போது ஒரு வருடம் முன்னர் தலைவரின் நம்பிக்கையானவரும் தலைவரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகயிருந்தவரான தியாகு என்பவர் பெண் போராளிகளின் தலைவியான யூலியா என்பவரோடு உறவில் ஈடுபட்டமையால் அப்பெண் இந்தியா அனுப்பப் பட்டபோது அவர் சோதனையிடப்பட்டு மருத்துவர்கள் உறுதிப் படுத்தியமையால் அவ்விடயம் தலைவருக்கு சொல்லப் பட்ட போது அவர் முடிவு எடுக்க கவலையடைந்த காரணத்தால் அவரின் அனுமதியுடன் உடனே மத்திய குழு கூடி அனைவராலும் இருவருக்கும் சாவொறுப்பு வழங்க வேண்டும் எனத்  தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாகவும்.  அம்முடிவிற்கு  ஏற்ப இருவருக்கும் மரண தண்டனை வழ சட்டங்கப்படதாக அவர் குறிப்பிட்டார். 



  

தியாகு என்பவருக்கு மேஜர் றொபேட் அவர்களால்  முன் நிலையில் வைத்து மரணதண்டனை வழங்கப்பட்டது. அதே றோபேட் அவர்களால் திரு. தாஸ் அவர்களிற்கும் மரண தண்டனை வழங்கப்படும் என சா . பொட்டு அவர்கள் அறிவித்தார். அவர் அறிவித்ததும் அனைத்து போராளிகளும் கவலையுடன் காணப் பட்டார்கள். அதையடுத்து அங்கே நின்ற றம்போ  தாஸைக் கூட்டிக்கொண்டு ஒரு மரத்தடியில் இருக்கச் சொல்ல மேஜர் றோபேட் என்பவர் வந்து அவரின் மண்டையில் கைத் துப்பாக்கியால் சுட்டார். பின்னர் நானும் றம்போவும் அவரின் உடலை எரித்தோம் .  அடுத்து போராளிகள் அனைவரும் கவலையில் காணப்பட்டார்கள். அக்காலப் பகுதியில் போராளிகள்  மத்தியில் ஒரு குழப்பமான நிலையேற்பட்டது. தற்பொழுது இலங்கை இராணுவத்துடன் இயக்கம் உறவாக உள்ளது. ஆகையால் இந்திய இராணுவமும்  போய்க்கொண்டிருக்கின்றது. அவர்கள் போனால் இனிமேல் சண்டையில்லை அப்படியென்றால் ஏன் நாங்கள் இயக்கத்தில் இருக்க வேண்டும். எனவே தற்பொழுது நாங்கள் வீட்டிற்குப் போவோம் சண்டை ஏற்பட்டால் பிறகு வருவோம் என்ற மனநிலை ஏற்பட்டது. எங்களில் கொட்டிலில் இருந்த அருந்தவம் ஜீவன் உட்பட சுமார் 75 போராளிகள் அப்பொழுது  இருந்த முகாம் பொறுப்பாளர் மேஜர். அரவிந்தன் அவர்களிடம் போய்க் கேட்டார்கள். நாங்கள் வீட்டிற்கு போகப் போகின்றோம்.  சண்டை தொடங்கினால் வருவோம் எனக்  கேட்டுள்ளனர். அவர் தலைவரிடம்  கேட்டு முடிவு சொல்லலாம் எனப் பதில் அளித்தார்.


சரியாக மூன்று நாளையில் தலைவரிடம் கேட்டுத்து முடிவு வந்தது. புதுசாரம் மற்றும் மாட்டின் வெள்ளச் சேட் கொடுத்து உடனே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவிதமான அழுத்தங்களோ அல்லது தண்டனைகளோ வழங்கப்பட  வில்லை.  இதைப் பார்த்ததும் தாங்களும் கேட்டிருக்கலாம்  என ஏனைய போராளிகளும் கவலைப் பட்டார்கள். அவர்களை அனுப்பியதும் இதுபற்றி அரவிந்தண்ணை  எங்களோடு கதைக்கும்  போது அவர்களின் முடிவால் தலைவர் கடுமையான கவலையடைந்ததாகவும்,   இனிமேல் இப்படியான முடிவு எவரும் எடுக்க வேண்டாம் என்றும் அப்படி யாராவது எடுத்தால் இரண்டுவருடம் கடுமையான தண்டணைக்குப்  பிறகுதான் வீடு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.


 என்று கடுமையான தொணியில் எங்களிடம் பேசினார்.  அதற்குப்பின் வீடு செல்லும் கனவை அனைத்துப் பேராளிகளும் கை விட்டார்கள்.  உயர்ந்த காடுகளைத் தன்னகத்தே கொண்டே உதயபீடம் மிக அழகாகக்  காணப்பட்டது. அந்தக் காடுகளிற்குள் பல முகாம்கள் இருந்தது.  என்பதை முன்னர்  குறிப்பிட்டுள்ளேன்.  ஆனால் இது தலைவரின் சந்திப்பு இடமாகயிருந்தது.



கிழமையில் ஒரு நாள் மட்டும் அனைத்துப் போராளிகளுக்கும் பாண் கொடுப்பது வழமை. அப்பொழுது நான் , மணிவண்ணன்,  மோகனசுந்தரம்,  சோ எனப் 15 போராளிகள் அமுதகானம் சென்று பாண் எடுப்போம். அங்கே திரு. கடாபி அண்ணையின் அப்பா தான் பேக்கறிப்பொறுப்பாளர்.  அவர்களுக்குக்  கீழே 5 போராளிகள் வெதுப்பக வேலை செய்தார்கள்.


நாங்கள் களைத்து விழுந்து அங்கே போவோம்.  போனதும் தம்பி இருங்கோ எனச் சொல்லி விட்டு தேனீர் பனிஸ் என்பன சாப்பிட  எங்களிற்குத் தருவார். அருமையான மனிதன் யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகக்  கொண்டே அந்தக் குடும்பத்தில் தகப்பன் சம்பளம் இல்லாத பணியாளராகவும் மகன் ஒரு போராளியாகவும் வாழ்ந்த குடும்பம் அது.


அடுத்து தேனீரைக் குடித்தபின் பாணை இருவர் தடியில் போட்டுபாணைக் காவியவாறு உதயபீடம் வந்து சேருவோம். போராளிகள் அனைவரும் பாணைக்கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். அடுத்து முதலாவது மாவீரர் நாள் கொண்டாடுவதற்கான வேலைகள் நடந்தது. முகாம் சிவப்பு மஞ்சள்  கொடிகளால் அலங்காரம் செயப்பட்டது. நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது அப்பிள்பழம், கேக், என்பன வந்தது.  தொடர்ந்து  27/11/1989 இரவு 12 மணிக்கு மாவீரர் நாள் சிறப்பாக நடைபெற்றது. என்ன நடக்குது என்பது தெரியாத அளவிற்கு கடுமையான நித்திரையாக இருத்தது.


 கேக், தேனீர் என்பன அனைத்துப் போராளிகளிற்கும் வழங்கப்பட்டது. 28 /12/1989 அடுத்த நாள் "அசோகா ஹோட்டல்" மாதிரிப் பயிற்சி நிறைவடைந்தது.

வேலைகள் நடந்தது பெரிய கடல் ஆமைகள் உளவு இயந்திரத்தில் பயிற்சி நிறைவிற்கான நாளைக் கொண்டாடுவதற்காக கொண்டு வரப்பட்டது. அது போராளிகளின்  பிரியாவிடைக்காக சமைக்கப்பட்டது. அசோகா ஹோட்டல் மாதிரிப் பயிற்சி நிறைவடைந்தது.




 தொடர்ந்து பிரிகேடியர் சொர்ணம் அண்ணை ஒவ்வொரு போராளியாக வரச்சொல்லி எங்களிடம் சில கேள்விகளைக் கேட்டார். எனது நேரம் வந்ததும் நான் சொர்ணம் அண்ணையிடம் போனேன். முதலில்  எனது வீட்டு நிலவரம் பற்றிக் கேட்டார். இரண்டாவது மாற்று இயக்கங்களோடு எனக்கு அல்லது எனது உறவினர்களிற்கு ஏதாவது தொடர்வு உள்ளதா? என்று என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றேன்.  பின் கரும்புலியாகப் போய் இந்தியாவில் தடுப்பில் இருக்கும் போராளிகளை மீட்க வேண்டும் உமக்கு விருப்பமா ? என என்னிடம் கேட்டார். ஆனால் கரும்புலித் தாக்குதல் செய்துதான் அவர்களை வெளியேற்ற வேண்டிவரும் அதில் நீரும் இன்னும் பல போராளிகளும் வீரச்சாவு அடைய வேண்டிவரும் உமக்கு விருப்பமா? என்று என்னிடம் கேட்டார். எப்ப செத்தாலும் சாவு ஒன்றுதான் ஒம் என்று சொன்னேன். அதில்15 போராளிகளை அவர் தேர்ந்தெடுத்தார். 01 சந்தோஸ்,  02 சரவணன் கட்டன் மோகனசுந்தரம்,03லெப் கலாதரன்,04  நிமால்05 , திவாகர்,06  ஜெமிலன்,07  சுடர்,08 றகீம், 09கட்டன் ,காசன்10 ,கட்டன் மல்லி கண்ணாளன்11, சலண்ட்ராஜ்12,  oscar 13, உதயகுமார் இதில் மொத்தம்15 பேர் மற்றவர்களை நான் மறந்து விட்டேன். அதில் சந்தோஸ்  இவ்அணிக்கு பொறுப்பாளராக விடப்பட்டிருந்தார். 


இதில் சந்தோஸ் மாத்தையா அண்ணையின் பிரச்சனையில் இவர் சம்மந்தப் பட்டிருக்கலாம் எனக் கருதி விசாரணை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் சம்மந்தப் படவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இயக்கத்தில் இருந்து விலகி வெளிநாட்டில் வாழ்கின்றார்.


 இதில் உதயகுமார், நாங்கள் கொக்குவிலில் 9.5 என்ற முகாமில் இருந்த வேளையில் பெண்ணியியல் ரீதியான தொடர்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்தப் பட்டமையால் இவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது.  சலன்ட்ராஜ் நாங்கள் 1990 / 8ம் மாதம் கரவெட்டி, நெல்லியடியில் இருந்த வேளை தான் ஒரு ஐயன் எனவும் "இறைச்சி சாப்பிட்டு விட்டேன் கடவுள் என்னை மன்னிக்கமாட்டார்" எனக் கடிதம் எழுதி வைத்து விட்டுக் குப்பி கடித்து அவர் சாவடைந்தார், இதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.   திரு. நிமால் இயக்கத்தில் இருந்து விலகி புதுக்குடியிருப்பில் திருமணம் செய்து இருந்தவேளை நோய் ஏற்பட்டு அங்கே சாவடைந்தார்.  ஏனையவர்கள்  தற்பொழுதும் உயிரோடு உள்ளனர்.



 வீரச்சாவு அடைந்தவர்களை நிலையுடன் அவர்களின் பெயரைப் போட்டுள்ளேன் . எங்களுடையே15  போராளிகளும்  உதயபீடத்தில் விடப்பட்டோம். காரணம் அது தலைவரின் மேற்பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட அணி என்பது  பின்னர்தான் எங்களிற்குத் தெரியும்.  இப்படித்தான் இயக்கத்தின் இரகசியம் பாதுகாக்கப்பட்டது.

 நாங்கள்  தொடர்ந்து 1990/3 ஆம் மாதம் வரை அங்கே நின்றோம். அங்கு இருந்த காலத்தில்தான்  நான் ஒரு தவறு விட்டேன்.  அக்காலத்தில் விலகி வீடு சென்ற அருந்தவம் தனது இரண்டு குப்பிகளையும் என்னிடம் தந்துவிட்டு அவர் வீடு சென்றார். அவ்வேளை எங்களின் உதயபீடக் கொட்டிலுக்குள்  காட்டெலி ஒன்று வந்து சாக்குக்குள் மறைந்திருந்து  அதை நான்பிடித்து எடுத்தேன்.  அப்பொழுது எனக்கு ஒரு சிந்தனை ஏற்பட்டது.  அதனால் மருத்துவக் கொட்டிலுக்குப் போய் ஒரு பழைய சிறஞ்சி எனப்படும் ஆட்களிற்கு அடிக்கும் ஊசி ஒன்றைப் எடுத்து வந்தேன். அடுத்து எனது குப்பியை உடைத்து  சிறிதளவு தண்ணீர் கலந்து அச் சிறஞ்சியில் எடுத்து அந்த எலிக்கு அடித்தேன். காரணம்  எத்தனை நிமிடத்தில் அது சாகும் என்பதை அறிந்து கொள்வதற்காகவே அதைச் செய்தேன்.  அடித்து அது கட்டை அறுத்துக்கொண்டு ஓடி விட்டது.  நான் தேடியும் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது.  ஆனால் நான் அதைப்பெரிது படுத்தவில்லை.  அது போய் சமையல்ப்  பகுதியில் செத்துக் கிடந்தது.  அடுத்த நாள் காலை உளவுப்படை காட்டிற்குள் இறங்கி விட்டதாகவும், நஞ்சுகளை அவர்கள் தூவியதால் மிருகங்கள் சாவதாகச்சொல்லி பாரிய தேடுதல் வேட்டை முகாமைச் சுற்றி நடத்தப்பட்டது. இதை அறிந்த நான் நேராகப்பொறுப்பாளர் மேஐர். அரவிந்தன் அவர்களிடம் நானே அத்தவறை செய்ததாக ஒத்துக் கொண்டேன்.


 அந்த எலி உணவுக்குள் விழுந்திருந்தால் அனைவரும் அல்லவா செத்துயிருப்போம்! எனக்  கடுமையாகப் பேசினார்.  அடுத்து மூன்று நாட்கள் மாற்று இயக்கங்களில்  உனது உறவினர்கள் இருக்கின்றார்களா? எனக் கடுமையான விசாரணை நடைபெற்றது. தஸை அடுத்து எனக்குத்தான் சாவொறுப்பு என நினைத்துக் கொண்டேன். அவர்கள் கடுமையாகப் பயந்து விட்டதை நான் அறிந்துகொண்டேன். அடுத்து பாதுகாப்பு அணியில் இருந்து என்னை வெளியேற்றுவார்கள்  என நினைத்தேன்.  எதையும் அவர்கள் செய்யவில்லை இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என ஆலோசணை  வழங்கினார்கள். அன்றிலிருந்து அங்கே நின்ற போராளிகள் "எலிடொக்டர்" என என்னை அழைத்தார்கள்.



ஆனால் எங்களோடு பயிற்சி எடுத்த 700 போராளிகளும். யாழ் சண்டைக்காக         திரு. பால்ராஜ் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.

இதே காலப்  பகுதியில் யாழ்பாணத்தில் என்ன நடந்தது என்று போராளி காமுறு குறிப்பிடுகின்றார்.



இது இப்படி இருக்க யாழில் பல செயல்பாடுகள் நடந்தன. 15/11/1989 விடுதலை புலிகளின் புலநாய்வு நடவடிக்கை வேகமாக நடந்தது ஏனெனில் இந்தியாவினுடையே அரசியல்  கொள்கை எதிர்மாறாக மாறுகின்றது. அக்காலப் பகுதியில் வை. கோபாலசாமி உட்பட அனைத்து ஈழ ஆதரவு அமைப்புக்களும் இந்திய  இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று ஜோச் பெனாண்ட்டோஸ் ஊடாகப் பாரிய அழுத்தம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதவேளை இலங்கை அதிபர் பிரேமதாசாவும் இந்திய இராணுவம் உடனே வெளியேற வேண்டும். என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

ஆனால் இவ்விடயம் தொடர்பாக அதிபர் பிரேமதாசா குறிப்பிடும் போது இது ஒரு நாடு இங்கே நடப்பது அண்ணன் தம்பிப்  பிரச்சனை எனவே இந்தியா இராணுவம் எமக்குத் தேவையில்லை அதை நாங்கள் இருவரும் பேசித் தீர்த்துவிடுவோம். என்ற இராஜதந்திரச்  சொற்களைப்  பயன்படுத்தினார். அதைவிட பெரும்பாண்மையான சிங்களமக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழர்களிற்கு என்று ஒரு தனித்தாயகம் தமிழர்களைப்  பாதுகாப்பதற்கு  ஒரு ஆயுதப்படை இதை சிங்கள மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. என்பதை அதிபர் பிரேமதாசா விளங்கிக்கொண்டார்.

சிங்கள மக்களின் வெறுப்பு உணர்வை அதிபர் பிரேமதாசா தனக்குச்  சாதகமாக மாற்றிக் கொண்டார். எனவே இந்திய இராணுவத்தை முதலில் வெளியேற்றினால் 500 றிற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகளை இலகுவாக அழித்து  விடலாம். என்று விடுதலைப்  புலிகளின் ஆளணித் தொகையை அதிபர் பிரேமதாசா குறைத்து மதிப்பிட்டார். தனது அரசாங்கத்தால்  விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியும் என்பதே அவரின் நம்பிக்கையாக  இருந்தது. அதே நேரம் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னெணி என்ற தளபதி மாத்தையா அவர்களின் திட்டத்தினூடாக பேரவை, சிற்றூரவை ஊரவை கலை பண்பாட்டுக்கழகம் ,அதில் சிற்றூரவை ஊரவை என்றால் கிரமங்களிற்கான கட்டமைப்பு பேரவை என்றால் மாவட்ட ரீதியான கட்டமைப்பு  கட்டமைப்புக்கள் ஊடாக விடுதலைப் புலிகள் கூடுதலான இளைஞர் யுவதிகளை இயக்கத்திற்காக இணைத்து வைத்து இருந்தார்கள்.  இது இப்படி இருக்க 15/11/1989 ஆம் ஆண்டு இந்திய  இராணுவம் நல்லூர் கந்தசாமி கோயிலில் இருந்து சங்கிலியன் சந்தி வரை அனைத்து இராணுவ வாகனங்களையும் வரிசையாக நிறுத்தியது  இந்தியா இராணுவம். ஆனால் தாங்கள் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் வாகனத்தில் ஏற்றப் பட்டிருந்தது.

ஆனால் ஊர் மக்களிற்கோ அவர்களின் துணைக் குழுவிற்கோ வெளிப்படையாக தாங்கள் வெளியேறுவதை  இந்திய  இராணுவம் தெரிவிக்கவில்லை. 

வடக்குக்  கிழக்கில் இருந்து இந்தியா செல்வதற்காக  திருகோணமலை சென்றது இந்திய இராணுவம் இதை முன்கூட்டியே  இரகசியமாக அறிந்த வரதராசப்பெருமாளின் வடக்குக் கிழக்கு இராணுவம் அல்லது" த்றிஸ்ரார்" என்றழைக்கப்  படும் துணைப் படையினரின் முக்கிய தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள் படகு மூலம் குறிப்பிட்ட சிலர் இந்தியாவிற்கு ஓடித்தப்பினர். ஒரு சிலர் கொழும்பிற்கு ஓடித்  தப்பினர்.

ஆனால் புதிதாகத்  துணைப்படைக்கு இணைந்தவர்கள் மட்டும் மணியன் தோட்டத்தில் அனாதரவாக விடப்பட்ட நிலையில் இருந்தார்கள்.  28/12/1989  மாதம் 600 இற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகள் வரிச்சீருடையுடன் பூனகரியூடாக யாழ்ப்பாணம் வந்தார்கள். வந்தவுடன் மணியன் தோட்டம் உட்பட யாழில் கூடுதலான பகுதிகளை தங்களின் பூரண கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு  வந்தார்கள்.

இந்தியா செல்வதற்காக திருகோணமலையில் நின்ற இந்திய  இராணுவத்திற்கு இத்தகவல் பறந்தது.  இதை சகித்துக் கொள்ளவிரும்பாத  இந்திய அதிகாரிகள் திருகோணமலையில் இருந்து வட பகுதியான பூனகரி மற்றும் யாழ்பாணம்  நோக்கி ஹெலிக் கொப்டரை அனுப்பி பூனகரி மண்ணின் தோட்டப் பகுதிகளில் நடமாடிய விடுதலைப்புலிகள் மீது பரவலான ஆகாயத் தாக்குதல்கள் நடத்தினார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகள் இதற்கு எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை . இருந்தும் இது இந்திய இராணுவத்தின்  கடைசித்  தாக்குதலாகயிருந்தது.

இதே காலம் தான் மிகவும் துயரமான சம்பவம் ஒன்று நடந்தது.

மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி

on: January 10, 2021


மேஜர் சோதியாவுடன் இறுதி நேரத்தில் பயணித்த போராளி ஒருவர் அவரின் நினைவுகளைப்  பின்வருமாறு    குறிப்பிடுகின்றார்.   11/.01/1990 அன்று அவரின் வீரச்சாவு போராளிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் நாளில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட  முதலாவது மகளிர் பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து, சோதியா என்ற பெயருடன் வெளியேறுகின்றார் மைக்கேல் வசந்தி.


அந்தக் காலகட்டங்களில் போராட்டத்தில் இணைந்த பெண்கள், ‘சுதந்திரப் பறவைகள்’ என்னும் பெயரில் பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். தமிழீழத்தில் அதற்குப் பொறுப்பாக தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் இருந்தார்,. அதே காலகட்டத்தில் தான் இரண்டாவது பயிற்சிப் பாசறைக்குப் பெண்கள் சேர்க்கப்பட்டார்கள்.  1987ஆம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள  எமது முகாமில் தான் நான் சோதியா அக்காவை முதன்முதலில் பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரை எனக்குப் பிடித்து விட்டது. சைக்கிளில் வருவார்  போவார். அவர் எமது முகாமில் ஒரு அறையில் தொலைத் தொடர்பு வேலைகளை செய்து வந்தார். யாழ் கோட்டை முற்றுகை சண்டையின் பின்னர் நான் அவரைப் பார்க்கவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து புனிதபூமி முகாமில் தான் நாம் ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில்  இருந்த காலம். அதுஅங்கே மகளிர் மருத்துவப் போராளியாக நான் சோதியா அக்காவைப் பார்த்தேன்.


அவரை ஓர் அன்பான தாயாகப் பார்த்தேன். அவரின் அன்பு,கவனிப்பு, அரவணைப்பு மிகவும் புனிதமாக இருந்தது. கம்பீரமான அந்தத் தோற்றம், எல்லோரையும் கவரும் அந்த துல்லியமான பார்வை, அன்பான அரவணைப்பு எல்லாம் போராளிகளையும் கவர்ந்து விட்டது. பிரிக்க முடியாத ஒரு உறவை உருவாக்கி விட்டது.


இன்பங்கள், துன்பங்கள், பாசங்கள் எல்லாம் கடந்து எமது வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. அதேவேளையில் மகளிர் அணியில் அங்கத்தவர்  சேர்வது அதிகமாகியது. இந்தவேளையில் எமது தலைவர் அவர்கள், சோதியாவை மகளிர் படையணியின் தளபதியாக நியமித்தார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம். காட்டு வாழ்க்கை  மகளிர் வளர்ச்சி அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதேவேளை நான் அங்கே மருத்துவப் போராளியாக  சோதியா அக்காவுடன் கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.  1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அதாவது கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் நேரம். போராட்டங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் இருந்த தருணம் மறக்க முடியாது. இறுதியாக அவரின் சந்தோசம் 1990 ஆங்கிலப் புதுவருடம் ஆகும்.


பச்சைப்பசேல் என இருந்த அந்த இயற்கை அடங்கிய மணலாறுக் காடு. சோதியா அக்காவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்தச் செய்தி தலைவருக்கு  அறிவிக்கப்பட்டது. அப்போது மருத்துவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் ஓர் ஆண் வைத்தியர் ஆவார். அவரை அழைத்த தலைவர் அவர்கள், என்னையும் அழைத்தார். நேரடியாக சோதியாவைப் பார்வையிட்டு மருத்துவம் பார்க்கும்படி கட்டளை இட்டார்.

அதனை நாம் செயற்படுத்தினோம். எமது இடத்தில் இருந்து சோதியா அக்காவின் விடியல் முகாம் 15 நிமிட நடை தூரம். அங்கு போய் மருத்துவம் பார்த்து வந்தோம். ஆனால் அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தது. அதன் காரணத்தினால்  நான் தலைவர் அவர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தேன். உடனடியாக சோதியாவை இங்கே அழைத்து வாருங்கள் எனச் சொன்னார். நாமும் போய் அவர் சொன்னதைச் சொன்னோம். ஆனால் சோதியா அக்கா வருவதற்கு மறுத்து விட்டார். புதிய போராளிகள் மனம் கலங்கி நிற்கிறார்கள். அது ஒரு பயிற்சி முகாம். என்னுடைய பிள்ளைகளை விட்டு நான் வரமாட்டேன். என பெரும் போராட்டம் நடந்தது. எல்லோரும் முயற்சி செய்தோம். ஒருவாறு அழுகையுடன் விடியல் முகாமிலிருந்து விடைபெற்று புனிதபூமி முகாமிற்கு வந்தார்உடல் நிலை முடியாத சோதியா அக்காவைப் பார்க்க தலைவர் வந்தார் அப்போது.......

மகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி

 தலைவரை சுகம் விசாரிக்க விடாமல், அண்ணை நான் என்னுடைய பிள்ளைகளிடம் போக வேண்டும் என்று கேட்டுக் கண்ணீர் விட்டு அழுதார். தலைவர் ஆறுதல் கூறினார். இவ்வாறு இருக்கும் போது மேலும் உடல் நிலை மோசமாகி விட்டது. வைத்தியரின் ஆலோசனைப்படி, வெளியில் அனுப்பி வைத்தியம் பார்ப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது.


அப்போது தலைவர் என்னை அழைத்து, வெளியில் நீங்கள் சோதியாவை பொறுப்பெடுத்துக் கொண்டு போய் இந்தியா செல்லுங்கள் என்று கூறினார். நானும் விடியல் முகாம் சென்று பொறுப்பாளரிடம் தகவலைத் தெரிவித்தேன். தலைவர் என்னுடன் இருவரை உதவிக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். பொறுப்பாளரின் அனுமதியுடன் நான் பைரவி மற்றும் கடற்புலிகளின் துணைத் தளபதியான மாவீரர் சுகன்யாவையும் தெரிவு செய்தேன். அது மட்டுமல்ல, ஆயுதம் தாங்கிய பெண் போராளிகளையும் எம்முடன் அனுப்பி வைத்தார் தலைவர். எம்மை ஜெயந்தி அக்கா தலைமை தாங்கி வல்வெட்டித்துறைக்கு கூட்டிச் சென்றார். எமது வைத்தியரும் எம்முடன் வந்திருந்தார். சோதியா அக்காவின் பாதுகாப்பிற்கு தலைவரால் அனுப்பப்பட்டவர்களில் மேஜர் தாரணி, மேஜர் அஞ்சனா, கப்டன் உஷா ஆகியோர் சோதியா அக்காவுடன் முதலாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சோதியா அக்காவின் வீட்டின் அருகில் தான் நாம் தங்கியிருந்தோம். அப்போது பொறுப்பாளரும் அவருடன் சென்ற எல்லோரும் சோதியா அக்காவின் அம்மா, அப்பாவைக் கூப்பிட்டு சோதியா அக்காவைப் பார்ப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டு, சோதியா அக்காவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். நமது கொள்கை, கட்டுப்பாடு, கட்டளைகளை மீறாத ஒரு பெரும் தளபதியாக அங்கு நான் அவரைப் பார்த்தேன். எமக்கு மேலும் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினார்.  எமது வைத்தியரினால் இந்தியாவில் உள்ள வைத்தியருக்கு சோதியா அக்காவின் நிலை குறித்து ஒரு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தினை என்னிடம் கொடுத்து எவ்வாறு பேச வேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டது. நாமும் ஆயத்தமாகி உடை மாற்றி விட்டோம். அப்போது வடமராட்சிப் பொறுப்பாளர் ஜேம்ஸ் அண்ணா ஒரு பெண் வைத்தியரை அழைத்து வந்து சோதனை செய்தார். அந்த வைத்தியர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியா செல்ல இருந்த பயணம் நிறுத்தப்பட்டது.


எங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க இருந்த சமயம் தலைவர் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளை இன்றும் என்னால் மறக்க முடியாதுள்ளது. “நீங்கள் குப்பியைக் கொண்டு செல்லுங்கள். சோதியாவின் குப்பியையும் வைத்துக் கொள்ளுங்கள். கடலிலோ அல்லது இராணுவத்திலோ நீங்கள் பிடிபட்டால், உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுங்கள்.” எனத் தலைவர் அவர்கள் கூறும் போது, அவரின் கண்களில் கோபக்கனல் தெரிந்தது.  நம்பிக்கை மேலும் பிறந்தது. என் இருதயம் வெடிப்பது போல் இருந்தது. எதற்காக என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.சோதியா அக்கா மதிய உணவு சாப்பிட்டு சந்தோசமாக இருந்தார். மாலை 6 மணியளவில் எமது போராளிகள் வெளியில் சென்று கொத்துரொட்டி வாங்கி வந்தார்கள். சோதியா அக்காவிற்கு முட்டைக் கொத்து கொடுக்கப்பட்டது. அவர் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு மீதியை என்னிடம் கொடுத்து விட்டார். இரவு உணவு வேளை முடிந்தது.


இரவு எட்டு மணி இருக்கும் சோதியா அக்காவைக் காணவில்லை என பைரவி என்ற போராளி என்னிடம் சொன்னார். நானும் தேடினேன். அப்போது அவர் கிணற்றுக் கட்டில் இருந்தார். "அக்கா வாங்கோ" என்று அழைத்த போது வாசுகியின் சட்டையைக் கொடு என்று கேட்டார். நாம் புரியாது நின்றோம். வாசுகி என்ற பெயரில்தான் வைத்தியருக்கு கடிதம் எழுதப்பட்டு, சோதியா அக்காவிற்கு வாசித்துக் காட்டப்பட்டது. அது அவரின் மனதில் பதிந்து விட்டது என நாம் நினைத்தோம்.


பின்பு எல்லோரும் படுக்கைக்குப் போய் விட்டார்கள். நான் அவருடன் தொடர்ந்து தூக்கம் இல்லாது  அவரை எனது மடியில் இரண்டு மூன்று தலையணை போட்டு படுக்க வைப்பேன். ஆனால் அன்று அவர் என்னைப் படுக்கும்படி கூறினார். சோதியா அக்காவைக் கட்டிலில் படுக்க வைத்து  நான் கீழே படுத்தேன். 15 நிமிடங்கள் நான் அசந்து தூங்கி விட்டேன். பின்பு எழுந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. தேடிப் பார்த்தேன்  வாசலில் இருந்தார். நான் வாங்கோ என்று கூப்பிடும் போது, அவரின் செயற்பாடுகள் மாறுதலாக இருந்தன. நான் கூறுவதை செய்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். வயிறு வீக்கமாகி நகங்கள் நிறம் மாறின. உடன் காவல் கடமையில் இருந்த தனுஜா என்ற போராளியை அழைத்து, தகவலை ஜெயந்தி அக்காவிடம் கூறும்படி சொன்னேன். உடனடியாக எமது வைத்தியர் இருக்கும் இடம் போய்த் தகவலைத் தெரிவித்து, அவரைக் கூட்டி வந்தார்கள்.

 எமது வைத்தியரின் உதவியுடன் வல்வை ஊறணி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். போகும் வழியில் அதிகாலை 2.58 மணியளவில் சோதியா அக்கா எனது மடியில் ஒரு பெருமூச்சு விட்டார். வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். எமது வைத்தியர் பதட்டமாகவே காணப்பட்டார். அங்கு அவருக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உயிர் எமது மண்ணை விட்டுப் பிரிந்து விட்டது. எமது  போராளிகளின் கதறல் சத்தம் இன்னும் எனது காதுகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. பின்பு சீருடை மாற்றப்பட்டு, மணலாற்றுக் காட்டிலுள்ள புனிதபூமி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் உடலிற்கு அங்கு எமது தலைவர் உட்பட எல்லாப் போராளிகளும் அஞ்சலி செலுத்தினர்கள்.


 சோதியா அக்காவின் தந்தையும் அங்கு வந்திருந்தார். பின்னர் அவரின் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மீண்டும் உடல் அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் குடும்ப இடுகாட்டில் பெண் போராளிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வீர உடல் விதைக்கப்பட்டது. அவரின் நினைவுக்கல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப் பட்டுள்ளது.இது இப்படி நடந்துகொண்டேயிருக்க......


 சோதியா அவர்களை அடக்கம் செய்ய புனித பூமியில் கிடங்கு வெட்டப்பட்டது.  அவ்வேலையை லெப் பூபதி, திருமலை, லெப் சேரன் நெடுங்கேணி, கப்டன் அந்தோனி மன்னார் இவர்கள் மூன்று போராளிகளே அக்கிடங்கை வெட்டினார்கள், திடீரென இவர்கட்கு சோதியா அவர்களின்  வித்துடல் இங்கே வராது என சொல்லப்பட்டது. கோபம் அடைந்த சேரன் நான் செத்தவுடன் இந்தக் கிடங்கில் தன்னை அடக்கம் செய்யுமாறு பொறுப்பாளர் ஊடாகத் தலைவருக்குத் தெரியப் படுத்தினான்.  அதுபோல்  19/06/1990 அன்று யாழ் கோட்டை மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் இவ் மூன்று போராளிகளும் வீரச்சாவு அடைந்தனர், அதில் லெப். சேரனின் வித்துடல் தலைவரின் கட்டளைக்கு அமைவாக புனித பூமிக்குக் கொண்டுபோய் அங்கே அடக்கம் செய்யப்பட்டது, டோராளிகளின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் தலைவர் என்றுமே மறந்ததும் தவறுவதும் இல்லை.


அனைவருக்கும் வணக்கம்...!

 இவ் ஆவணமானது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புச் சம்பந்தமானது. அதைவிட எமது தலைவனின் நேர்மையான பயணம் தொடர்வானது; இக்கதையை நாம் ஆவணப்படுத்திவந்தோம். ஆனால் வெளியிடுவதுற்கான தேவையேற்படவில்லை. இருந்தும் "மேதகு 2"  படம் வெளிவந்தபின்னர் அதில் பெண் போராளிகளின் இணைவு பற்றியோ; தலைவரின்  மெய்ப் பாதுகாவலர்கள் பற்றியோ; அவரின் நல்ல நடத்தைகள் பற்றியோ;  அதில் குறிப்பிடவில்லை. மாறாக அவர் ஒரு கொலைகாரன் போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தார் .  அது சம்பந்தமாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது!  "உயிர் போனாலும் கதைத்தவரின் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்" என தெரியப்படுத்தினார். இன்னொருதரின் போன் நம்பர் அவர் தந்தார்.  அது வேலை செய்யவில்லை. 


இருந்தும்  பலர்" போன்" எடுத்து எமக்குக் காரசாரமாகப் பேசினார்கள். அது மட்டும்அல்ல படம் ஓடிய இடத்தில் என்னைப் பார்த்து ஒருதர் காறி முன்னால் துப்பினார். இளநீர் குடித்தவன் தப்பி விட்டான்;  கோம்பை சாப்பிட்டவன் சிக்கி விட்ட கதையாகவே இருந்தது. அதனால் நாம் இவ் ஆவணத்தை வெளியிட்டோம். இதில் ஏதாவது தவறு இருந்தாலும் ; அல்லது இணைக்கப்படாமல் சில கதைகள் இருந்தாலும் ; உங்களின் போன் நம்பருடன்  உங்களிற்கு தெரிந்த கதைகளை எழுதி கீழே குறிப்பிடும் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்.  இவ் ஆவணமானது தலைவரால் சொல்லப்பட்டு;  ஆரம்ப  இராணுவப் பயிற்சி          

  போராளிகளுக்குப் படிப்பித்துக் கொடுக்கப்பட்டது. என்பதை நினைவூட்டுகின்றேன்.  

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்____

wwwtemlnews@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...