உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 10 ஜூலை, 2023

mother a 254 ( 1)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு..பாகம்01

  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.........   தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் LTTE MASTER BOOK



தலைமைப்பீடத்தின்=கதை CAPITAL OF STORY

இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி சுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் என்பவரால் எழுதப்பட்டது  இது தமிழீழ விடுதலைப் புலிகளின் மாஸ்ற்றர் book. இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,


பாகம்01 _ஆரம்பம் இருந்து1980 வரையான பிரதான உள்ளடக்கம் மேலும் பல கதைகள் உள்ளே இருக்கின்றது!
################################
பாகம்01 _ஆரம்பம் இருந்து1980 வரையான பிரதான உள்ளடக்கம் மேலும் பல கதைகள் உள்ளே இருக்கின்றது!

################################
01. 1915 சிங்களவர்களால் முஸ்லிம்களிற்கு எதிராக வன்முறை மேற்கொள்ளப்பட்டது;

02. 1957  பண்டா, செல்வா ஒப்பந்தம்;

03. 1958 சிங்களவர்கள், தமிழருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்;

04. 1970 தமிழர்கள் நீதி கேட்டு அகிம்சை வழியில் போராட்டம்;

05 .1972 முதல் தாக்குதலுடன் புதிய புலிகள் ஆரம்பம்;

06 .1972 அரசியலில் இருந்து செல்வநாயகம் ராஜினமா;

07. 1973 அரசிற்கு எதிராக தமிழ் தலைவர்கள் உண்ணாவிரதம்;

08 .1974 பொன்.சிவகுமாரன் வீரச்சாவு;

09 .1974 மாணவர் தலைவரைக் காட்டிக்   கொடுத்த கருணாநிதிக்கு  முதல் மரணதண்டனை 
வழங்கியதோடு; தொடர்ச்சியாக இப்படியானவர்களிற்கு சாவொறுப்பு வழங்கிக்கொண்டுயிருந்தார்;தேசித்தலைவர்.

10. 1976 புத்தூர் வங்கிக்கொள்ளை;

11 . செல்வநாயகத்தின் தலைமையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்;

12. செல்லக்கிளியின் துணிகரத் தாக்குதலும்; அவரின் வரலாறும்;

13 .1979 சீலன், புலேந்திரன் இணைவு;

14. திருநெல்வேலிப் பணம் பறிப்பு;

15 .1980 பொட்டுஅம்மான் இணைவு.

 இலங்கையின் ஆரம்ப வரலாறு........

 சுமார் 40000 ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னர்பூமியின் நடுப்பகுதி கடல் அற்ற நிலப்பரப்பாகவே காணப்பட்டது. அதாவது கடல் மனிதர்கள் அற்ற சுற்றுச் சூழ்ந்த பகுதியாகவே  காணப்பட்டது.


அக்காலத்தில்தான் உலகிலேயே முதல் தோன்றிய இனமான தமிழர்கள் ஆசியாவிலே வாழ்ந்தார்கள். அதாவது இப்பொழுது இலங்கைக்கும் இந்திய விற்கும் இடையில் இருக்கும் கடல் பதியில்தான் தமிழர்களின் முதலாவது பட்டணமான குமரிக்கண்டம் இருந்தது.

அங்கேதான் தமிழர்கள் மிகவும் தொன்மையான கலை கலாச்சரம் கொண்டு அவர்களுக்கான  தமிழ் மொழி உருவாக்கப் பட்டு மிகவும் நாகரியமான ஒரு மனிதக் கூட்டமாக வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். அக்காலத்தில் தான் பூமியின் இயற்கை மாற்றமான தட்டுக்கள் மாறுபது என்று தமிழர்கள் இதை அழைப்பார்கள். இந் நிகழ்வு நடப்பதற்கு முன்னர் பூமியில் ஒரு மாற்றம்   ஏற்படப்போவதை சில உயிரினக்கள் முன்கூட்டியே அறிந்ததாகவும்; அதாவது..! பறவைகள், மிருகங்கள் அவ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்ததாகவும்;  அதைப்  பார்த்துச் சில மக்களும் இடம்பெயர்ந்து சென்று இருக்கின்றார்கள்.  அது நடந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமிழர்களின் பட்டணமான குமரிக் கண்டம் முற்றாகக் கடலிற்குக் கீழ் இறங்கி விட்டது.  



இதற்குப் பின்னர் பூமியில் உள்ள பல நாடுகள் கடலால் பிரிந்து விட்டது. அந்த வகையில்  தமிழர்களின் தாய் நிலமான இலங்கையும், இந்தியாவும் பிரிந்தன. அதைத் தொடர்ந்து இலங்கையில் இராவணன் என்ற மன்னனின் ஆட்சி நடந்தது. அதே காலம் இந்தியாவில் கிருஷ்ணன் என்பவரின் ஆட்சி நடந்தது. ஆனால் இவர்களின் நடைமுறைகள் அனைத்தும்  தெய்வப்பிறவி  போன்ற நடை முறைகளாகயிருந்தது.இலங்கையில் உள்ள இராவணன் சிவனை வழிபட்டான். ஆனால் இந்தியாவில் உள்ள கிருஷ்ணன் தானே கடவுள்  என்றான்.  அதனால் இருவருக்கும் இடையில் சில பனிப் போர்களும், சண்டைகளும் நடந்துள்ளது.


தொடர்ந்து இயற்கையின் அனர்த்தத்தால் இராவணனின் காலத்தில் வாழ்ந்தவர்களில் 99 வீதமானவர்கள் அழிந்தார்கள்.  அதில் தப்பிய குறிப்பட்ட  சில தமிழர்கள் குகேனி என்ற பெண்ணின் தலைமையைப் பிற்பற்றி வாழ்ந்து வந்தார்கள். அடுத்து  இவர்கள்  இறை வழிபாடாக  நெருப்பையும்  மற்றும் நாகங்களையும்  வழிபட்டார்கள்.


இக்காலப் பகுதியில் கிறிஸ்சுவிற்குப் பின்னர்  700 நூறாம்  நூற்றாண்ட்டில் அக்காலத்தில் இந்தியவில் நடைமுறையில் இருந்த பேர்களில் ஒன்றான (லாலா நாடு)இந்தியாவில் வாழ்ந்த மன்னர்களில்  ஒருவனான விக்கிரம ஆதித்தனின்  மகனான விஜயனும், அவனின் தோழர்களும்,  குற்றச் செயல்களில்  ஈடுபட்டமையால்  இந்த நாட்டில்  வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்  என மன்னரால் உறுதிப்  படுத்தப் பட்டு விஜயனோடு  600 தோழர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.  இவர்கள் பாய்மரக் கப்பலில் கடலில் சென்று கொண்டு இருந்தார்கள்,


அப்பொழுது மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடையே உள்ள தம்பவன்னி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அக்காலத்தில் குகேனியின் குழுவினர் அவ்விடத்தை பண்டமாற்று செய்யும் இடமாக வைத்து இருந்தனர்.


அதாவது இவர்களின் நாட்டுப்பொருட்களை அவ்விடத்தில் வைத்திருந்தால் வேறு நாட்டவர்கள் தக்களின் நாட்டுப் பொருட்களைக்  கொண்டுவந்து இவர்களிடம் கொடுத்து விட்டு இவர்களின் பொருட்களை எடுத்துக் கொண்டு தங்களின் நாட்டிற்குச் சென்று  விடுவார்கள்.இப்படியான செயல்பாடுகள் அக்காலத்தில் நடப்பது வழமையாக இருந்துள்ளது .

இவர்கள் வந்தபோது குகேனியின் குழுவினர் பொருட்கள் வருவதாகவே எண்ணினார்கள். ஆனால் 600 ஆண்கள் வந்திறங்கினார்கள். வந்தவுடன் குகேனியின் குழுவினர் இவர்கள் அனைவரையும் தனித்தனியாக மரத்தில் கட்டி விட்டார்கள்.

அங்கு வந்தவர்களும்  சரி: குகேனியின் குழுவினரும் சரி; இருபகுதியினரும் தமிழை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் தங்களின் பிரச்சனையை வந்தவர்கள் இவர்களிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள் இருந்தும் இவர்கள் நம்பவில்லை.


பின்னர் அந்நாட்டு  இளவரசியான குகேனி இவர்களைப் பார்வையிட  வந்தார். எல்லோரையும் பார்வையிட்டு வந்தபோது விஜயன் என்பவரைப் பார்த்ததும் குகேனி என்பவருக்கு பாலியல் ரீதியான ஆசை ஏற்பட்டமையால்  அனைவரையும் அவிழ்த்து விட்டதோடு;  தானும் விஜயனோடு உறவில் ஈடுபட்டது மட்டும் அல்லாமல்; அனைத்து ஆண்களையும் பெண்களோடு உறவில் ஈடுபட  அனுமதியும்  வழங்கினார் குகேனி. அதனால் இருவரும் இனப் பெருக்கத்தினூடாக பெரும் மக்கள் கூட்டமாக இவர்கள் மாற்றம் அடைந்தார்கள்.


அவர்கள் இலங்கையில் உள்ள மன்னார், யாழ்  என பிற இடங்களிற்கும் வாழ்வதற்காகச் சென்றார்கள் . ஆனால் விஜயனோடு வந்து பெண்களை மணந்தவர்கள் எவரும் வேறு இடம் செல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்களின் நண்பர்களோடு அநுராதபுரம் சென்று அங்கே ஒரு செறிவான மக்கள் கட்டமைப்பாக வாழ்ந்தார்கள். அப்போது அவர்களுக்குள் இருவித  வழிபாடுகள்  காணப்பட்டது. குகேனியின்  ஆட்கள் இயற்கையை வழிபட்டார்கள்.   விஜயனின் வழித் தோன்றல்கள் புத்தரை வழிபட்டார்கள். இதனால் மனிதர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், இருவழிபாட்டுக் காரர்களிற்கும் இடையே சண்டைகளும் ஏற்படத் தொடங்கிய காலம் அது......!



இதற்குப் பிற்பட்ட காலத்தில் மேலும் பலர் பௌத்த  மதத்தை வழிபடுபவர்கள் இந்தியாவில்  இருந்து வந்து விஜயனின் நண்பர்களோடு வந்து இணைத்தார்கள். இவர்களில் ஒரு சிலர்  நாடு கடத்தியமையால்  இந்தியா  மீது வெறுப்பும் இந்தியாவில்  பேச்சு வழக்கில் உள்ள எந்த மொழியையும்  பேசக்கூடாது எனவும்;  தங்களிற்கு  என்றொரு  மொழியை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியது.  அதனால் பாலி எழுத்தையும்  எடுத்து  தமிழ் உச்சரிப்பில் கடசியில்  (னா) இணைத்து அதை வேறுபடுத்தி அதாவது  தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும்  இருக்கும். ஆனால் தமிழில் (அ )என்று உச்சரித்தால் சிங்களத்தில் ஆயன்ன என்றே உச்சரிக்க வேண்டும்.  அதாவது தமிழில் "அம்மா" என்றால் சிங்களத்தில் "அம்மே" என சிறு மாற்றங்களை செய்து சிங்கள மொழியை உருவாக்கினார்கள்.


 இதற்குப் பிற்பட்ட காலத்தில் அநுராதாபுரத்தில்  எல்லாளன் தலைமையில்  இயற்கையை வழிபடும் தமிழர்களும்  துட்ட கைமுனு  தலைமையில் சிங்களவர்களுமாக இரு இனங்களாக வாழத் தொடங்கினார்கள். ஆனால் இதே காலத்தில் தமிழர்கள் இலங்கையில் வட கிழக்கு அனைத்து இடங்களிலும் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது  சிங்களவர்கள் அநுராதபுரத்தில் மட்டுமே வாழ்ந்தார்கள். ஆதலால் ஒரு இடதில் மட்டும்தான் நாம் வாழுகின்றோம் .  இந்த  இடத்தை தமிழர்களிற்கு விடக்கூடாது என்ற மனநிலை  துட்டகைமுனு  நண்பர்களிற்கு ஏற்படத் தொடங்கிவிட்டது. 


அதனால் துட்டகைமுனு அணியையும்; எல்லாளன் அணியையும்;  மோதவிட்டு வெல்பவர்களிற்குத்தான்  அநுராதபுரம் சொந்தம் என இரு தரப்பினரும் தீர்மானித்தனர்.  பின்னர் இப்படி விட்டால் தேவையற்ற உயிர்சேதம் ஏற்படும் என்றும்; இரண்டு தலைவர்களான துட்டகைமுனும் (35 வயது ) எல்லாளனையும் (75 வயது)  மோதவிட்டு  வெல்பவர்களிற்குத்தான் அநுராதபுரம் சொந்தம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதற்கு அமைவாக இருபகுதி   வீரர்களும் மக்களும் பார்வையாளர்களாக  இருக்க வைக்கப்பட்டு இருவரையும் மோத விட்டார்கள். அதையெடுத்து  இருவரும் யானைக்கு மேலே இருந்து வாளால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டேயிருந்தனர். திடீரென யானை துள்ளிவிட எல்லாளன் தலைகீழாக சாய்ந்து வர அத்தருணத்தைப் பயன்படுத்தி துட்டகைமுனு எல்லாளனின் தலையை வெட்டி  விட்டான் . இதன் போது யுத்த விதிமுறைப்படி துட்டகைமுனுவின் நடவடிக்கை தவறு என்று நிரூபித்த போதிலும் எல்லாளன்  இறந்தமையால் துட்டகைமுனுவிடமே  அநுராதாபுரம் கொடுக்கப்பட்டது.  அதற்குப்  பின்னர் வெற்றி அடைந்த துட்கைமுனுவின் நண்பர்களை ஏராளமான தமிழ் பெண்கள் விரும்பி திருமணம் செய்தார்கள். தொடர்ந்து நிறையக் குழந்தைகளைப் பெற்றமையால் திடீரென சிறுபாண்மையாக.  இருந்த சிங்களவர்கள் பெரும்பாண்மையாக மாறினார்கள்.


இதற்குப் பின்னர் சோழர்கள் வாரிசு  வாரிசாக இந்தியாவில் மன்னர் ஆட்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் அனைவரும் தமிழர்கள் ஆவர். இவர்களின் தேசியக்கொடி புலிக்கொடியாகும். இவர்களின் படைகளின் தொகை 12 லட்சத்திற்கு மேல் இருந்துள்ளது.  இவர்கள்  ஒவ்வொரு  நாடுகளையும் பிடித்து சைவக்கோயில் கட்டுவதிலே ஆர்வம் காட்டினார்கள்.   அதனால் ஆசியாவில்  உள்ள அனைத்து  நாடுகளையும்  பிடித்தார்கள். அங்கே சென்று  தங்களின்  சைவக்  கோயில்   கட்டுவதில் ஆர்வம் காட்டினார்கள்.  அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த  ஆசியாவில்  உள்ள  நாடுகள்   01. மலேசியா-  2.- தாய்லாந்து03  - இந்தோனிசியா 04-  இலங்கை 05- இந்தியா   இந்த நாடுகளைப் பிடித்து அங்கே தங்களின் கோயில்களைக் கட்டியதோடு இவர்களின் ஆட்சியே அனைத்து  நாடுகளிலும்  நடத்துள்ளது. அப்பொழுது  இலங்கையும்  இவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள்  இருந்துள்ளது.   பின்னர் அரசர்களுக்குள்  ஏற்பட்ட  உள் முரண்பாடுகளால் அப்படைகள் அழிக்கப்பட்டு பல மொழிகளாக சிதறுண்டிருக்கும்  இந்தியாதான்  அந்த நாடு.

இது இப்படி நடந்துகொண்டு இருக்க வெளிநாடுகளில் உள்ள ஐரோபியர்கள் ஆயுத ரீதியாக வளர்ச்சி அடைந்து கொண்டு வந்தார்கள். அதனால் தங்களின் ஆயுதங்களை வைத்து சிறிய நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற மனோநிலை அவர்களுக்கு  ஏற்பட்டது.


1505 ஆம் ஆண்டு  போத்துக்கேயர்கள் இலங்கையைப் பிடித்ததும் யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர் படைகளே இவர்களிற்கு எதிராகச் சண்டையிட்டதினால் நிறைய தமிழ் ஆண்கள்  கொல்லப்பட்டார்கள். ஆனால் அநுராதபுரத்தில் வாழ்ந்த சிங்களவர்கள்  இவர்களோடு  சண்டை பிடிக்காமல்  சாமாதானமாகப் போனார்கள். அதனால் அவர்களிற்கு உயிர் இழப்பு ஏற்படவில்லை.  இவர்கள் 1658 ஆம் ஆண்டு வரை ஆதாவது  153 வருடங்கள் வரை இலங்கை ஆண்டார்கள்.  ஆனால் இலங்கையில் வாழ்ந்த அநுராதபுரம், யாழ்ப்பாணம் , வன்னி  ஆட்சிகளை அழிக்கவில்லை. ஆனால்அதிகாரம் செலுத்தினார்கள்.


 இது நடந்து கொண்டேயிருக்க 1658 ஆண்டு ஒல்லாந்தர் பாரிய படையெடுப்  பொன்றை இலங்கை மீது மேற்கொண்டனர்.   போத்துக்கீசர் படைகளிற்கும்; ஒல்லாந்தர் படைகளிற்கும் ; கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் கணிசமான போத்துக்கீசர் படைகள் கொல்லப்பட்டனர்.  அடுத்து ஒல்லாந்தப் படைகள் இலங்கையைப் பிடித்துக்கொண்டனர்.  1796 வரை இலங்கையை ஆண்டார்கள். அதாவது 138 வருடம் இவர்களின் அதிகாரம் இருந்தது.  இவர்களும் மன்னர் ஆட்சிகளை அழிக்கவும் இல்லை, இணைக்கவும் இல்லை, அதிகாரம் மட்டுமே செலுத்தினார்கள். இவர்கள் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற இடங்களில் கோட்டைகளைக்  கட்டி தங்களின் வீரர்களைப் பாதுகாத்தார்கள். இவர்களோடும் அநுராத புரத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் சண்டையிட விரும்பவில்லை சமாதானமாகப் போனார்கள். ஆனால் தமிழர் படை தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே  இருந்தது. 


இது நடந்து  கொண்டேயிருக்க 1796 ஆம் ஆண்டு இலங்கை மீது பாரிய படை எடுப்பொன்றை  இங்கிலாந்து அரசு மேற்கொண்டது.  ஒல்லாந்தர் படைக்கும் இங்கிலாந்து  படைக்கும் கடுமையான சண்டை நடைபெற்றது.  கணிசமான படைகளை இழந்து சில குறிப்பிட்ட படைகளோடு  ஓடித்தப்பியது ஒல்லாந்தர் படை .அடுத்து  இங்கிலாந்து அரசியின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்  இலங்கை வந்தது.  அப்பொழுது தமிழ் மன்னர்களில் கடைசி  மன்னனான பண்டாரவன்னியன் வன்னியை ஆண்டான். சங்கிலி மன்னன் யாழ்ப்பாணத்தை  ஆண்டான். ஆனால் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான சண்டை நடந்தது.  தமிழர் படைகளிற்கும்; இங்கிலாந்தும் படைக்கும்; இதில் பண்டாரவன்னியன் இங்கிலாந்து படையோடு சண்டையிட்டு தங்களின் பீரங்கி ஒன்றை கச்சிலைமடு பிரதேசத்தில்  கைப்பற்றிச்  சென்றதாக "டோன்புறு" தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். திடீரென பாய்ந்து வருவார்கள் எனவும்; ஈட்டி போன்ற ஆயுதங்களை தங்கள் மீது ஏவுவார்கள் எனவும்; தாங்கள் செத்து விழுந்ததாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 அடுத்துச் சங்கிலியன் மன்னன்" எவரும் கிறிஸ்தவ மதத்தை பின்ற்ற வேண்டாம்" என சொல்லி இருந்த போதிலும் மன்னாரில் கட்டுப்பாட்டை மீறிப்  பலர் அம் மதத்தை பின்  பற்றியமையால் கோபம் அடைந்த சங்கிலியன் மன்னன் தனது வீரர்களை அனுப்பி 600 பொதுமக்களை வெட்டிக் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் வெள்ளையர்களிற்கு எதிராக பல தாக்குதலை செய்துள்ளான். அதனால் இவன் காட்டிக் கொடுக்கப்பட்டு இங்கிலாந்துப் படைகள் இவனைப் சிறைப்பிடித்து இந்தியாவிற்குப் கொண்டு போய் அங்கே வைத்து இவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். இது இப்படி நடந்து கொண்டேயிருக்க  அநுராதபுரத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் இவர்களோடும் சண்டையிட விரும்வில்லை சமாதானமாகப் போனார்கள். ஆனால் இவர்கள் இலங்கையினுடையே அனைத்து வரலாறுகளிலும் அன்னிப்படைகள் இலங்கையைப்பிடித்தபோதல்லாம் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவேயிருந்துள்ளனர்,


ஆனால் ஆங்கிலயர்கள் செய்த கொடுமை; தமிழ் மன்னர்கள் அனைவரையும் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல் மூன்று சிறிய அரசாக இருந்த இலங்கையை தங்களின் நிர்வாகச் சுகத்திற்காக அவர்களின் நிர்வாகங்களை முற்றாக அழித்து ஒரே இலங்கை என்ற நாட்டை உருவாக்கினார்கள்.  அடுத்து இந்தியாவில் இருந்து கணிசமான தமிழர்களை இலங்கைக்கு  கொண்டு வந்து தேயிலைத் தோட்டங்களையும்;  ரப்பர் தோட்டங்களையும்;  உருவாக்கி குறைந்த சம்பளம் அவர்களிற்கு  வழங்கினார்கள். இவர்கள் 152 வருடங்கள் இலங்கையை ஆண்டுள்ளனர்.


மொத்த அந்நியர் ஆட்சி  போத்துக்கீசர்153 வருடம்; ஒல்லாந்தர்138 வருடம்; இங்கிலாந்து 152 வருடம்; மொத்தம் 443 வருடங்கள் ஆகும் . இது இப்படி இருக்க சுபாஸ் சந்திரபோஸ்  போன்றவர்கள் கடைசிப் பகுதியில் வெள்ளையர்களிற்கு எதிராக கடுமையான சண்டையிட்டுக் கொண்டேயிருந்த   காரணத்தால்    இந்தியவைவிட  வேண்டிய  துர்ப்பாக்கிய நிலை இங்கிலாந்திற்கு  ஏற்பட்டது. அதே காலம் மகாத்மா காந்தியும்  இந்தியாவை விடுமாறு உண்ணாவிரதம் இருந்தார். அதனால் சந்திரப்போஸ் போன்ற குழுவினரின் கையில் நாட்டைக் கொடுக்கக்கூடாது எனவும்; காந்தியிடம் இந்தியவைக் கொடுத்தால் பிற்காலத்தில் இங்லாந்து நாட்டிற்கு நண்பராயிருப்பார் என்ற  தூர நோக்கத்தோடு மகத்மா காந்தியிடம் இந்தியாவைக் கொடுக்க இங்கிலாந்து  முன் வந்தது.  அதனால் அயல்  நாடான இலங்கையையும் கொடுப்பதற்கு  இங்கிலாந்து முன்வந்தது.  அது தொடர்பாக  தமிழர்களையும், சிங்களவர்களையும் இங்கிலாந்து அரச தலைவர்கள் கூப்பிட்டு  தமிழர்கள் நீங்கள் வாழும் வட கிழக்கை வைத்துக் கொள்ளுங்கோ! சிங்களவர்கள் நீங்கள் வாழும் தெற்குப் பகுதியை வைத்துக் கொள்ளுங்கோ என சொன்னதாகவும்; அதற்கு தமிழர்களோ " நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்" அதனால் சண்டை வராது எனச் சொல்லியுள்ளனர்.  அதன்போது நாட்டை சிங்களர்கள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் போனார்கள்.






ஆங்கிலயர்களின் காலம்
********************************

பாகம் 01ஆரம்பப் பிரச்சனைகளும் மற்றும் 1970 தொடக்கம்1980 வரையான வரலாறுக்கதைகள் உள்ளடக்கம்,


அப்பொழுது இந்தியாவில் இருந்து வந்து பல முஸ்லிம் வர்த்தகர்கள் தலைநகர் கொழும்பில் பல கடைகளைக்கட்டி சிறந்த முறையில் வியாபாரங்களை செய்ததோடு மட்டும் அல்லாமல் இலங்கையுடைய பொருளாதாரத்தில் சிங்களவர்களை விட முஸ்லிங்களின் பொருளாதாரம் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் தங்களின் பொருளாதாரச் செல்வாக்கை வைத்து அப்பொழுது வெள்ளையர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள நீதிமன்றம் சென்று முஸ்லிங்கள் தங்களின் பள்ளிவாசலில் இருந்து நூறு மீற்றர் தூரம் வரை எந்தச் சிங்களவர்களும் சத்தம் போடக் கூடாது என நீதிமன்றம் ஊடாக அனுமதியை பெறக்கூடிய வல்லமைஅவர்களிற்கு இருந்தது.

பெரும்பாண்மையாக நாங்கள் இருக்கும் போது வியாபாரத்திற்காக வந்தவர்கள் எங்கட நாட்டில் நூறு மீற்றர் அருகில் சத்தம் போடக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? என்ற மனநிலை சிங்களவர்கள் மத்தியில் ஏற்பட்டது. 1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றிச் செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது; ஊர்வலத்தில் ஈடுபட்ட பௌத்தமத சிங்களவர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால்  இந்திய முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார ,ரீதியாகக் காணப்பட்ட போட்டியானது 


இந்தக் கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தபோதும்  சமயம் சம்பந்தமான இந்த முரண்பாடானது முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலுக்கு காரணமாயிற்று. இந்த வன்செயலினால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் ,அடித்து நொறுக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வன்செயல் கொழும்பு, குருநாகல், போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது.
 இந்த நிலையைக் கண்டு ஆங்கில அரசு அச்சமடைந்தது. இந்த அச்சத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அப்போது முதலாம் உலக மகாயுத்தம் தீவிரமடைந்திருந்தது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்திருந்தது.இதனால் சிங்கள ,முஸ்லிம் குழப்பத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு விரோதமான சக்திகள் இருப்பதாக ஆளுநர் றொபட் தோமஸ் அச்சமும் ,ஐயமும் கொண்டார். இதனை அடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். ஏறக்குறைய நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை அடக்க இராணுவச் சட்டத்தை (மார்ஷல்லோ) பிரகடனப்படுத்தினார்.

 எவ்.ஆர். சேனநாயக்க அவரின் சகோதரர், டி.எஸ். சேனநாயக்க போன்ற பல சிங்களத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.அதுமட்டுமல்ல கலகத்தை அடக்க எடுத்த கடும் நடவடிக்கையினால் வில்லியம் பத்திரிஸ் உட்பட பல சிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.முஸ்லிம் சிங்கள இனமோதல் மூலம் அவர்களிடையே காணப்பட்ட உறவுகள் திருப்தியற்றனவாக மாறிக்கொண்டன. தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையானது சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களினாலும் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவானது.
 ஆனால், 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம், சிங்கள வன்முறையானது தாய்நாட்டவர்களுக்கிடையிலானதாக அமைந்த போதும் அதனை அடக்கியவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.எனவே, இலங்கையின் இன ரீதியான வன்முறையானது தமிழருக்கு எதிராக அல்லாமல் முதன் முதல் முஸ்லிம்களுக்கெதிராகவே நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள்சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராக இன்று மேற்கொள்ளும் இன வன்முறையின் முதற்படி 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்திக் காட்டப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இனி தமிழர் பிரச்சனைக்கு வருவோம்.....



25/07/1957 பண்டாசெல்வாஒப்பந்தம்  தமிழர் தந்தை செல்வநாயகத்துடன் பிரதமர் பண்டாரநாயக்கா நேரடியாகப் பேசினார்.


 சமரச உடன்பாட்டுக்கான இறுதிப் பேச்சுகள் 1957 ஜூலை 25 இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின. அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு அதாவது இற்றைக்கு சரியாக 63 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 26 ஆம் திகதி இணக்கம் எட்டப்பட்டது.முழுமையானசமஷ்டி வடிவம் இல்லாவிட்டாலும் பிரதேச மன்றங்கள் ஊடாகத் தமிழருக்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரங்களை வழங்கவும், தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும், இணங்கித் தந்தை செல்வாவுடன் ஒப்பமிட்டார் பண்டா.
 
ஆனால் அதன்பின் நடந்தது என்ன? தமிழருக்கு சற்றேனும் அதிகாரம் பகிரப்பட வாய்ப்பு ஏற்பட்டதைக் கண்டு சிங்களம் பொங்கிக் கொதித்து எழுந்தது. இனவாத சக்திகள் பேரெதிர்ப்புக்காக ஒன்று திரண்டன. ஜே. ஆர். ஜெய வர்த்தனா தலைமையில் மேற்படி ஒப்பந்தத்துக்கு எதிராக “கீர்த்தி மிக்க"கண்டியை நோக்கிய கால்நடை ஊர்வலம் நடத்தப்பட்டது.
 அதனால் தூண்டப்பட்டு, எழுச்சி பெற்ற சிங்களப் பேரினவாதம் 1958, ஏப்ரல் 9 ஆம் திகதி பிரதமர் பண்டார நாயக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டது. சுமார் இருநூறு பிக்குகள் உட்பட ஐநூறு இனவெறி ஆதரவாளர்களைக் கொண்ட அந்தப் பேரணி பண்டா செல்வா ஒப்பந்தத்தின் பிரதியை சவப் பெட்டி ஒன்றில் வைத்து இறுதி ஊர்வலமாக பண்டாவின் இல்லம்வரை கொண்டு சென்றது. 
அங்கு வைத்து சவப்பெட்டித்தகனத்தை உணர்ச்சி ஆரவாரத்தோடு அதுநிறைவேற்றியது.ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை.
ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால்தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். (1958 .4.9)ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்துஎட்டுஏப்ரல்ஒன்பதாம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரிப் பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டு அந்தப் பேரினவாதக் காட்டுக்கூச்சலுக்கு அடிமையாகி
அடிபணிந்தபிரதமர் பண்டாரநாயக்காஅந்தக் கூட்டத்தின் முன்னால் வந்து நின்று பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஒரு பிரதியைக் கிழித்தெறிந்து ஒப்பந்தம் செத்துவிட்டது எனப் பிரகடனம் செய்தார்.
சிங்களத் தலைமை அன்று புரிந்த இந்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமே இத்தீவில் இன ஒருமைப்பாட்டுக்கும்; தேசிய நல்லிணக்கத்துக்கும்; நிரந்தரமாகவே சாவுமணி அடித்தது. தமிழர் தேசம், சிங்களவர் தேசம் ஆகியவற்றுக்கு இடையே நிரந்தரப் பகை உண்டாக அதுவேகாரணமாயிற்று1925, 26 களில் இளம் அரசியல்வாதியாக பொதுவாழ்க்கைக்குள் நுழைந்த சமயம் இலங்கையில் சமரசம் பேணப்படுவதற்கு சமஷ்டியே உகந்த உயர்ந்த வழிமுறை எனத் துணிந்தும் வலுவாகவும் குரல் எழுப்பிய பண்டா முப்பது ஆண்டுகள் கழித்துத் தாம் ஆட்சித் தலைவராக வந்தபோது பௌத்த சிங்களப் பேரினவாத மாயையின் பிடிக்குள் முற்றாகச் சிக்குண்டு  அதற்கு சரணாகதி அடைந்து,  தாம் வலியுறுத்திய சமஷ்டிக் கோட்பாட்டைத் தாமே நிராகரித்தார். ஆட்சியைப் பிடிப்பதற்கு வசதியாக இனவாதத்தை அப்போது அவர் கையிலெடுத்தார்.
நாடு முழுவதிலும் சிங்களம் மட்டுமே அரச மொழி என்ற சட்டத்தை 24 மணி நேரத்தில் கொண்டுவருவேன்...! என்ற அவரது பேரினவாதக் கூச்சல் தென்னிலங்கையில் நன்கு எடுபட்டது. 1956 தேர்தலில் அவரது தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அதனால் தெற்கில் வெற்றிவாகை சூடியது.

 அத்தேர்தலில் தென்னிலங்கை ஒருபுறமாகவும்;வடக்கு கிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழர் தாயகம் மறுபுறமாகவும்; இனமுரண்பாட்டு அடிப்படையில் துருவமயப்பட  தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கலுக்குக் குரல் எழுப்பிய தமிழரசுக்கட்சி பெரு வெற்றியீட்டியது.தமிழ் மக்களின் தன்னாட்சி சமஷ்டி வடிவக் கோரிக்கைக்கு 1956 பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் தெளிவான ஆணை கிடைத்ததால் வீறுகொண்ட தமிழரசுக்கட்சி அதற்காகத் தனது சத்தியாக்கிரகப் போராட்டங்களையும்; சட்டமறுப்பு இயக்கங்களையும்; தீவிரப்படுத்தத்தீர்மானித்தது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மையோர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமாகும். அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழியையும் புறக்கணித்தது சிங்கள அரசு.இதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
 தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அது மட்டும் அல்ல ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சில தமிழர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் ஆடைகள் முற்றாக களையப்பட்டு சித்திரவதை செய்து புறந்தமேனியோடு அவர்களைக் கலைத்தனர்; சிங்களக்காடையர்கள் சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களுக்கும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுக்கொண்டது.




1958 இனக்கலவரம்தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர். இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது. 

இது நடந்துகொண்டுயிருக்க தமிழ் இளைஞர்கள் மத்தியில் உணர்வும் உறுதியும் மேலோங்கியது அவ் அடிப்படையில்தான் முதல் வழிகாட்டியும்







தமிழீழப் போராட்டத்திற்குஆரம்பவழிகாட்டியுமாகத் திகழ்ந்தவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன்  ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார்.
தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம்அதீதமாகக் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவனுள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.இவர் தனது தாயிடம் சென்று ?"ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது? " என்ற அவரது வினாவிற்கு  பதில் அம்மாவிடம் கிடைத்ததும் சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பி அடித்தால் என்ன?? என்று கேட்டானாம்.இயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் "தினப் புழுகு" என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர் சிவகுமாரன் பி.எஸ்.கே என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவுகடந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார்.

 இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழக்கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும் என்கிற பாகுபாட்டுத் தரப்படுத்தல் நடைமுறையானது. இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயத்தின் வெளிப்பாட்டின் அமைவாக"தமிழ் மாணவர் பேரவை"அமைப்பு உருவாக்கம் பெற்றது. 


1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது.

 இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றான்.சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும் தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.


அந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை "தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி"என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும், ஈகமும் மிக்க சிவகுமாரன் "அப்பா நான் எங்கும் போகமாட்டேன் இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்".என் உடலில் உயிர் இருக்கும் வரை ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினான். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம்"அம்மா... !உள்ள உயிர் ஒன்றுதான்; அது போகப் போவதும் ஒரு தடவைதான்; அப்படிப் போகும் இந்த உயிரை ;ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு?" இதுவே அவரது உறுதி நிலைப் பாடாகவும் இருந்தது.


தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிஸாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும், மங்கையர்களையும், மழலைகளையும் ,வெளிநாட்டுப் பேராதளவார்களையும், காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர், தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான்.


 அக்காலப்பகுதியில் சிங்களக்காடையர்களால் போராட்ட எழுச்சி ரீதியாக திரண்ட மக்களை இலக்கு வைத்துபொலிஸ் அதிகாரி சந்திரசேகரா தலைமையில் அவரின் கட்டளையில் யாழ்ப்பாணத்தில் கரண்ட் போஸ் மரம் சிங்கள பொலிசாரால் திட்டமிட்டு விழுத்தப்படுகின்றது.அது சன நெரிசலிற்கு மேல் விழுகின்றது. 10 உயிர் கரண்ட் கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் எவரும் அவர்களிற்குக் கிட்ட செல்ல முடியாது காரணம் கரண்ட் அடித்து விடும் இதுதான் அன்றய அந்தத் துயரமானசம்பவம் .அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்  கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின்கம்ப கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் அதனை வார்த்தைகள் கொண்டு விபரிக்க முடியாது இருந்தது.அகப்பட்ட தமிழர்களில் சிறுவன் ஒருவன் தியாகி பொன் சிவகுமாரனைப் பார்த்து "அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ...! நான் சாகப் போகின்றேன்"என்று அவலக் குரல் எழுப்பினான். ஆனால் இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்து தூக்கப் போக அவனது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத் தடுத்துவிட்டனர். அவன் கண்முன்னே தமிழீழத்தின் குருத்தொன்று மரமாகி ,காயாகி, கனியாகி, விதையாக முன்பே கருகி விடுகின்றது.


தமிழினப் படுகொலைக்குக் காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லுவதற்கு சிவகுமாரன் பல முறைமுயற்சி எடுத்தான். இது வெளியே தெரியவந்தது.அதனால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் தருவதாக சிங்களம் விலை கணித்தது. தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரனை சிங்களக் கைக்கூலியும், பெற்றோல் நிலைய அதிபருமான,நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை உட்கொண்டு வீரச்சாவு அடைந்தாரன் அந்த மாவீரன். அவரின் வழிகாட்டலையே 30 வருடம் நடந்த ஆயுதப் போராட்டத்தில் அவ்மரபை தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தார்கள்,

இதுவும் அவன் தயாள குணத்தாலேயே ஈகச் சாவடைந்தான். இறுதிக்கணத்தில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது ..."அம்மா, என்னைப் பிடிக்க வந்த காவற்படை அதிகாரி நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னை ஒன்றும் செய்துவிடாதே எனக் கெஞ்சினான்  அதனால் நான் அவனைஒன்றும் செய்யவில்லை என்றான்" அந்த இரக்க கொடையாளன்சிவகுமாரன்.கடைசி நேரத்தில் இவனிற்கு தாகம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க முற்பட்ட போது அதைக்கூடஇரக்கமற்ற சிங்களக் காவற்படை அனுமதிக்கவில்லை.


தியாகி பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமுதாயம் தாயகம் மீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆக்கபூர்வமாய்க் குதித்தது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தான் அந்த மாவீரன் சிவகுமாரன். வீட்டை விட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாத சமூகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவிகளும், இளைஞர்களும், தியாகி பொன். சிவகுமாரனின் இறுதி நிகழ்வில் திரண்டனர்.தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஜுன் 5ற்கு மறுநாள் ஜுன் 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இதன் அடுத்த கட்டப்பாய்ச்சலாக அனைத்து தமிழ் புத்திஜீவிகளும் சிங்கள வெறியர்களிற்கு என்ன செய்யலாம் எனசிந்திக்கத் தொடங்கினார்கள் 

1971 காலப்பகுதியில் தேசத்தின் குரல் பால அண்ணை அனைத்து இயக்களையும் சேர்ந்த இளைஞர்களையும் தான் லண்டனில் கூப்பிட்டு தமிழீழப் போராட்டம் தொடர்வாகபாடம் படிபித்ததாகவும் அதில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகளின் ஒரு உறுப்பினர் அன்ரன் மட்டுமே தங்களின் அமைப்பின் கொள்கையை ஆணித்தரமாகச் சொன்னதாகவும், அமைப்பின் சுய ஒழுக்கம்பற்றியும் அவர் குறிப்பட்டதாகவும் திருமதி அடல் அவரின் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்



, இருந்தும் 1972 ஆண்டஅரசுக்கு எதிராக தலைவர் தனது முதலாவது நடவடிக்கையைவெற்றிகரமாகச் செய்துள்ளார்,

இனித் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆயுதப் போராட்டத்திற்கு வருவோம்,

 இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். இவருக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர்.வேலுப்பிள்ளை இலங்கை அரசின்   அரச உத்தியோக்தில்   பணிபுரிந்தவர். அதனால் உத்தியோக வேலைகளில் பணி நிமிர்த்தம் காரணமாக மட்டு அரசடி என்ற இடத்தில் வேலிப்பிள்ளை குடும்பம் கனிசமான காலம் அங்கே வாழ்ந்துள்ளனர். அங்கே தான் ஆரம்பக்  கல்வியைத்தான் தொடர்ந்ததாகவும்

 அங்கே வாழ்ந்த காலத்தில்அன்னமுன்னாப்பழம் தான் நிறையச் சாப்பிடுவதாகவும் . தலைவர் எம்மிடம் குறிப்பிட்டார், அங்கு இருந்து வல்வெட்டித்துறை வந்த இவர்களின் குடும்பம் பின்னர் ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பராக் கல்லூரியில் 8ம்  வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். கடந்த 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.


தோழர்களுடன் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார். ஒரு முறை குண்டு வெடித்து அவரது காலில் தழும்பை ஏற்படுத்தியது. ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு பிரபாகரனை தேடி போலீஸார் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் தங்களது மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்ற உண்மை பெற்றோருக்குப் புரிந்தது. கதவு தட்டுவதை வைத்து போலீசார்தான் தன்னைத் தேடுகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் திடீரென புத்திசாலித்தனமாகத் தப்பிவிட்டார்.பிரபாகரனைத் தேடிச்சென்று கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவரது தந்தை. அப்போது தன் நிலைமையை அவரிடம் பிரபாகரன் கூறிய போது, “உங்களுக்கோ குடும்பத்துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொல்லையும் வேண்டாம் என்போக்கில் விட்டு விடுங்கள் என்னை எதிர்பார்க்காதீர்கள்’"என்று கூறி வீட்டை விட்டு வெளியே சென்று தனது கடமையை ஆரம்பித்தார் அன்றைய சிறுவனாய் இன்றைய தலைவனாய் எங்கள் தலைவர்.


அக்காலப்பகுதியில் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர் நடவடிக்கைகளைச்செய்யவேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்களால் வகுப்புகள் நடந்துகொண்டுயிருந்தன. ஆனால் இதற்கு தொடர்ச்சியாக பிரபாகரன் பங்குபற்றுவார். இருந்தும் எவரும் வண்முறைகளில் ஈடுபடுவதாகத்தெரியவில்லைஅதனால் தானே செய்ய முடிவு எடுத்தார்,

1972 ஆம் ஆண்டு இலங்கை சிறிலங்கா என்ற பெளத்த நாடாக பேர் மாற்றப்பட்டது இதன் வெளிப்பாடு தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன,, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் வட கிழக்கு தமிழர் தாயகப்பகுதி எங்கும் நடைபெற்றது,இதே காலப்பகுதியில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசோடு கடுமையாக மோதிக்கொண்டுயிருந்தார்கள், அதற்கு பதிலாக புதிய புதிய தமிழர்களிற்கு எதிரான சட்டங்களையும் சிங்கள அரசு அமுல்படுத்திக் கொண்டுயிருந்தது,

22/05/1972 புதிய அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதோடு தந்தை செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜனமா செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.



,22/05 /1972 அன்று தமிழ் மக்களின் ஆரம்பகாலம் முதல் இருந்து வந்த அரை குறைப்பாதுகாப்புச்சட்டங்களைக்கூட அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்கி தமிழ் மக்களிற்கு எவ்வித உரிமையும் இல்லாமல் தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜை ஆக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.  இலங்கையைஅரசாங்கம் சிங்களப்பௌத்த நடாகப்பிரகடனப்படுத்தினார்கள். இந்த அரசியலமைப்பை தயாரிக்கவென தமிழர் தரப்பில் இருந்து எவ்விதமான ஆலோசனைகளும் பெறுவதற்கு அவர்கள் விரும்பவில்லை.

 தமிழர்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களும் நிராகரிக்கப்பட்டது, பின்னர் தமிழர்களே இல்லாத சட்டசபைகளை உருவாக்கியது சிங்கள அரசாங்கம் இதேகாலப்பகுதியில்தான்அன்று சத்தியசீலனின்தலைமையில்தமிழ் பேரவை இயங்கிக்கொண்டுயிருந்தது .இவரின் செயல்பாட்டை ஏற்றவர்களில் பொன் சிவகுமரன் உட்பட தலைவர் பிரபகரனின் நண்பர்களும் அடங்குவர்.தலைவர்,சத்தியசீலன் மற்றும் வல்வெட்டித்துறை இளைஞகள் மூவர் மொத்தம் ஐந்து பேர் சாவகச்சேரியில் நின்ற அரசாங்க பேருந்தை மறித்து அதில் இருந்த மக்களை வெளியேற்றினார்கள். இது நடந்துகொண்டுயிருக்க பிரபாகரனின் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த 3 நண்பர்களும் அவ் இடத்தில் இருந்து ஓடி விட்டார்கள்.


இதை அவதானித்த தலைவராகச் சென்ற சத்தீயசீலனிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றார்.....


இதைக் கவனித்த தலைவர் பிரபாகரன் சத்திய சீலனிடம் இருந்த குண்டைப்பறித்து பஸ்ஸில் எறிந்தார்.அது பேரோசையோடு வெடித்தது .அதையடுத்து  நெருப்பை தட்டி வைத்து பஸ்சை எரித்தார்.அதன் பின்னர்புத்திசாலியான தலைவர் பிரபாகரன் வல்வெட்டிதுறையில் இருந்துவேறு இடம் சென்று தலைமறைவாக வாழ்ந்தார்.
இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் முழுக்க கடுமையான சோதனை நடத்திய பொலிஸார் தலைவர் சத்தியசீலனைக்கைதுசெய்து கடுமையான அடிகொடுத்தபின்னர் நிருபராதி என விடுதலைசெய்தனர். ஆனால் அனைத்து குற்றத்தையும் பிபாகரன் மீது போட்டது சிங்கள அரசு அதனால்அரசால் அவர் தேடப்படும்பட்டியலில் இருந்தார். அக்காலத்தில் செல்லக்கிளி அம்மானின் தம்பி செட்டி சிறிலங்கா ஜெயிலில் இருந்து தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்றார்.அப்பொழுது குண்டிமணி.தங்கத்துரை ஜெகன் போன்றவர்கள் தமிழ்நாட்டிலே இருந்தார்கள்


தமிழீழத்தில் சிறு சிறு வண்முறைகளை அரசிக்கு எதிராகச் செய்துகொண்டும் வந்ததலைவர் செட்டி உட்பட தனக்கு நம்பிக்கையானவர்களை வைத்து தனது அமைப்புக்கு புதிய புலிகள் என1972ம்ஆண்டு பெயர் வைத்தார்.


ஐயர் செட்டிபோன்ற முதல்தர சில குறிப்பிட்ட பேராளிகளை வைத்து தனது அமைப்பிற்கு  புதிய புலிகள் என பெயர் வைத்தார்தலைவர்.தலைவர் பிரபாகரன்அன்றில் இருந்து தங்களால் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளிற்கும் புதிய புலிகள் என உருமை கோரினார்கள் 

அது மட்டும் அல்ல தாங்கள் எங்கே சென்று தாக்குதல் நடத்தினாலும் சரி; அல்லது யாரும் தேசத் துரோகிகளிற்கு சாவொறுப்பு வழங்கினாலும்  சரி; தங்களின் புலி சின்னத்தை அவ்விடத்தில் ஒட்டி விட்டுவருவது; அல்லது அவ் இடத்தில் வைத்துவிட்டு வருவது; போன்ற நடைமுறையை தொடர்ந்து அவர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். 80திற்குப் பிற்பட்ட காலத்திலே அழகான புலிக்கொடியொன்றை தங்களின் அமைப்பிற்காக அவர்கள் வரைந்து எடுத்தார்கள்.

.

தலைவருக்கு கரிகாலன் என்ற பெயர் ஏன் வந்தது?தலைவரை மூத்த போராளிகள் தம்பி என்ற அளைப்பார்கள்,


இதே காலப் பகுதியில்தான் அரசிற்கெதிரான ஆர்பாட்டங்கள் அமைதிவழிப் போராட்டங்கள் நடைபெற்ற காலம் அது, இன்னொரு பக்கம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான வேலைகளை செய்துகொண்டுயிருந்தார்கள்.
அதன் முதல் கட்டமாக இதே ஆண்டு வல்வெட்டுத்துறைக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள நிக்குளுவைரவர் கோயிலடியில் சின்னச்சோதி, நடேஸ் தம்பி என்னும் சில நன்பர்களுடன் இனைந்து கைக்குண்டு ஒன்றைத்தாயாரித்துக்கொண்டுயிருந்தார்கள்.

 அது நடந்துகொண்டிருக்கும் வேளையில் அருகில் இருந்த பனை மரத்தில் ஒரு பனம்பழம் அவர்களின் வெடி மருந்திற்க்கு மேலே விழுந்ததினால் அவ்வெடி மருந்து வெடித்து தம்பியின் காலில் காயம் ஏற்பட்டது, அதன் காரணமாகபிறகு கரிகாலன் என்ற பெயர் தம்பிக்கு வரக் காரணமாயிருந்தது, அதனால் இளைஞர்கள் பிரபாகரனை கரிக்காலன் என குறிப்பிட்டார்கள்,

.அதே காலப்பகுதியில் செல்லக்கிளி அம்மானை எமது இயக்கத்தில் இணைத்த செல்லக்கிளி அம்மானின் தம்பியான செட்டி அவர்களின் நடவடிக்கை தவறாக இருந்த காரணத்தால் அவரின் தொடர்பை தலைவர் பிரபாகரன் முற்றாக துண்டித்துவிடுகின்றார். அக்காலப்பகுதியில் புதிதாகவாத்திநாராயணன் மற்றும் பற்குணம் இவர்களைச்சந்தித்து இவர்களையும்  தனது அமைப்பில் இணைத்துக்கொள்கின்றார் தலைவர்.



 1973 இக்காலப்பகுதியில்தான் தமிழர்களிற்கு எதிராக சிங்கள அரசு கடுமையான வன்முறைகளை மேற்கொண்டது,


தமிழர்களிற்கான அரச வேலை ,கல்வி என்பன சிக்கள அரசால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன, இந்நிலையில் 1973 தமிழ் தலைவர்களான அக்கால இளைஞர்களான மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனத்தன் உட்பட 42 பேர் அரசிக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
 இவர்கள் அனைவரும் அரசபடைகளால் கைது செய்து ஜெயிலில்அடைத்தது .ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவர்களின் அரசியல் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள்,

 ஆரம்ப காலத்தில் தமிழன் கனவு என பல நூல்களை எழுதியதோடு மட்டும் இன்றி உணர்ச்சிப் பாடல்களை எழுதி தமிழீழ இளைஞர் யுவதிகளிடையே பெரும் போராட்ட உணர்வை ஏற்படுத்தி இறுதி வரை தேசியத் தலைவரிக்கு துணையாக நின்றவர் காசி ஆனந்தன்.இது இப்படி இருக்க இவரின் தம்பி 1983 எமது அமைப்பில் இணைந்து மட்டு அம்பாறை நிதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர்,
இயக்கப் பெயர் மேஜர் வள்ளுவன் / சந்திரன் அமிர்தகளி மட்டு (பிறப்பு19/02/1945)வீரச்சாவு 10/09/1988 மட்டு தாளங்குடாப்பகுதியில் இந்தியா இராணுவத்தின் முற்றுகையின் போது சைனட் உட்கொண்டு வீரச்சாவு அடைந்தார்,



இதே காலத்தில் நேரில் பார்த்த அனுபவத்தைதிருமதி கமலினி குறிப்பிட்டார்,


1974 ஐனவரி 3 தொடக்கம்10 த்துவரை உலகத் தமிழராச்சி மாநாடு யாழ்பாணத்தில் நடைபெற்றது அப்பொழுது, கரண்மரத்தை விழுத்தி 11 தமிழர்களைகொலை செய்தமைக்காக காவல் துறை அதிகாரியான சந்திரசேகராவிற்கு பதவி உயிர்வு வழங்கப்பட்டது அதிபர் சிறிமா அவர்களால்,

அதில், எங்கள் குடும்ப நண்பர் செல்வன் ராஜன் 23 என்பவர் மின்சாரக் கம்பிகளிற்குள் விழுந்தவர்களைக் காப்பாற்றச் சென்றபோது காவல் துறை வாகனத்தால் ஏற்றப்பட்டு துடிதுடிக்க மரணமானார், இதை நேரில் பார்த்தேன்

தலைவர் இந்தியா சென்று திரும்பினார்.

இதே காலப்பகுதி தம்பி இந்தியா செல்கின்றார் ஏற்கனவே சென்று இருந்த சின்னச்சோதி மற்றும் நடேசும் தம்பியை வரவேற்கின்றார்கள், இக்காலப் பகுதியில் படகோட்டிகள் எவரும் இருக்கவில்லை.வல்வெட்டித்துறைமக்களின் உதவியுடன் ஆறு குதிரைச்சத்தி Horsepower கொண்ட நண்பர் ஒருவரின் உதவியுடன் தம்பி வேதாரணியம் போய்ச்சேர்த்தார்,

இந்தியா போய்ச் சேர்ந்த காலத்தில் எவ்வித உதவியும் இன்றி தம்பி கடுமையாகக்கஷ்ட்டப்பட்டார்,  சின்னச்சோதி ,நடேஸ் போன்றவர்கள் தாங்கள் தங்குமிடத்தை வசந்தமாளிகை என நக்கலாகச் சொல்வார்கள், அக்காலபகுதியில் சிங்கள அரசால் தேடப்படுபவர்கள் இந்தியா சென்றால் ஐனார்த்தனம் போன்ற தமிழ் உணர்வாளர்கள் அமிர்தலிங்கம் போன்றவர்களின் அனுமதியுடன் சில உதவிகளை செய்வார்கள்,
ஆனால் அவை போதிய அளவாகயிருக்காது  ......அதே ஆண்டு மீண்டும் தமிழீழம் வந்து சேர்ந்தார் தம்பி.

                                                 


அப்பொழுது தலைவர் சத்தியசீலன் பஸ் எரித்த பிரச்சனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு விடுதலை ஆகி  யாழில்இருந்தார் .அதை அறிந்த பிரபாகரன்  சத்தியசீலனை  போய் சந்தித்தார். அவர் மீண்டும் செயல்படுவதாக எதுவும் கதைக்கவில்லை பயந்த சுபாபமாகக்காணப்பட்டார். அவரின்கதையை வைத்து இவர் எந்தச்செயல்பாடுகளிலும் ஈடுபடமாட்டார் என்பதை தலைவர் அறிந்து கொண்டார்.



இதே காலப்பகுதியில்தான்  தனது பெற்றோரைப்பார்க்க வேண்டும் என்ற நோக்கில் அயலூரானின் உதவியுடன் மிதிவண்டியில் அங்கே செல்கின்றார்தலைவர், அங்கே சென்று தாயுடன் கதைத்து விட்டு அவரிற்குத்தெரிகாமல் 4 சோடிக்காப்பை எடுத்துக்கொண்டு தம்பி மீண்டும் பழைய இடம் திரும்புகின்றார், இந்தக் காப்புக்களை விற்று இரண்டு 38 ரக கைத்துப்பாக்கிகளை தம்பி வேண்டினார்.
அதற்கான ரவைகளை  கலாபதியின் உதவியுடன் தாங்களே செய்து சுட்டுப்ப ப்பயிற்சிகளை மேற்கொண்டார்கள், காலம் கடந்து எவரிலும் சந்தேகம் பட வேண்டாம் 4 சோடிக் காப்புக்களையும் தான்தான் எடுத்தேன் என்று கடிதம் எழுதிதாய்க்கு அனுப்பினார் தலைவர்.

05/06/1974 ஆம் ஆண்டுஅன்று காட்டிக்கொடுக்கப்பட்டுபட்டு பொன்சிவகுமரன் வீரச்சாவு அடைத்தார்.

ஆனால் பொன் சிவகுமாரனும் குறைந்த மாணவர்களை  வைத்து துணிச்சலான சில  வேலைகளை செய்துகொண்டுயிருந்தார். ஆனால் பொன் சிவகுமாரன்05/06/1974 சொந்த ஊரான உரும்பிராய்ப் பகுதியில் வைத்து சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக்காட்டிக்கொடுக்கப்பட்டு முற்றுகையில் சிக்கிய சிவகுமாரன் உயிரோடு பிடிபட்டால் சித்திரவதை தாங்காமல் ஏனையவர்களையும் காட்டிக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்பதற்காக சைனட் உட்கொண்டு வீரச்சாவு அடைந்தார்.

அவர் வீச்சாவு அடைந்ததும் அவனின் கனவை நனவாக்க எவரும் செயல்படவிரும்புவதாகத்தெரியவில்லை.ஆனால் சிவகுமாரனோடு சேர்ந்து செயல்பட்டவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் சிவகுமாரனின் கனவை நனவாகக்கவோ, போராடவோ அல்லது சிவகுமாரனை காட்டிக் கொடுத்தவர்களை கொல்வதற்கோ எந்த முயற்சியும் செய்யவில்லை.அதனால்தானே அக்கடமையை செய்வதற்கு முடிவு எடுத்தார் தலைவர்.



 1974 ஆண்டுமுதலாவது சாவொறுப்பைகருணாநிதி என்பவருக்கு தலைவரால் வழங்கப்பட்டது,


 அதனால் தமிழர்களால் தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.அதை உணர்ந்து கொண்ட தலைவர்முதல்முதலாக சிறிலங்கா அரசிக்கு புலனாய்வாளராக செயல்பட்ட தமிழரான கருணாநிதியை 1974
 ம் ஆண்டுகாங்கேசன் துறைவீதில் வைத்து தனது துப்பாக்கியால் சுட்டு அவரிற்கான சாவொறுப்பை வழங்கினார்,

 அது தலைவரின் முதலாவது தாக்குதலாகும் . அவரைச்சுட்ட தலைவர் மையிலிட்டியில் தெரிந்த நண்பர்களின் வீட்டில் இரண்டு நாட்கள் தலைமறைவாகயிருந்தார், அதை அடுத்து புத்திசாலித்தனமாக வேறு இடம் பாதுகாப்பாகச் சென்றுள்ளார்,

16/09/1975 அன்று கல்விநிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறை பயணித்தபோது......

அதை அடுத்து பயணிகள் பஸ்சில் வெள்ளை வேட்டியோடு ஏறி வல்வெட்டித்துறைக்கு சென்றுகொண்டுயிருந்தார், திடீரென இரண்டு பொலிஸார்  பஸ்சைமறித்து உள்ளே ஏறியதும் அவர்கள்  உமக்கு பிரபாகரனைத்தெரியுமா? என்று அவரிடமே கேட்டார்கள் . அவர் எந்தப் பதட்டமும் இல்லாமல் இல்லையென பதில் அளித்தார்,

ஆனால் தம்பி சென்ற அதே பஸ்சில் தம்பியின் உடை மாதிரியே அணிந்து இருவர்பயணித்தார்கள் வாகனத்தில் இருந்த புலனாய்வாளர்கள் அவர்களையே கண்காணித்தவாறு சென்றார்கள், அது தம்பிக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது,வெள்ளைவேட்டி அரைக்கைச்சேட் இதைப் பார்த்ததும் அவர்கள் சந்தேகம்படவில்லை ஆனால் அந்த பஸ்சில் இருந்தவர்களிற்குப் பிரபாகரன் இவர் தான் என்பது தெரியும் . ஆனால் எவரும் காட்டிக்கொடுக்கவில்லை, புத்திசாலியான தலைவர் இடையில் தனது இடம் வந்து விட்டது என்று ஓட்டுனரிடம் சொல்லி இறங்கி சாலையோரமாக நடந்து சென்றார், 

1975 ஆண்டு தலைவரின் மிகவும் நம்பிக்கையான போராளி குலம் அவர்களையும்  தனது அமைப்பில் இணைத்துக் கொண்டார்.

1975 ஆம் ஆண்டு தலைவரின் குணம் பற்றி மூத்த போராளி குலம் குறிப்பிடும்போது,தம்பியை நான் ஐயர் வீட்டில் வைத்து சந்தித்தேன் . நான் வணக்கம் என கூறியபோது தம்பி தலை குனிந்துகொண்டுயிருந்தார், தம்பியை நான் கண்ட போது 4 முழ வேட்டியுடன்  மேலும் வெள்ள சட்டையுடன் இருந்தார்,.தம்பி தேடப்படும் நபர் என ஐயர் எனக்கு அறிமுகப்படுத்தினார், நான் தையிட்டி கிராமத்திற்குச் சென்று இருந்த வேளை தம்பி தோட்டத்தில் பாத்தி கட்டுவதை அவதானித்தேன்,
நானும் சேர்ந்து அவரிற்க்கு உதவி செய்வேன், என குலம் குறிப்பிட்டார்.




27/07/1975 அன்று வரதராஜப்பெருமாள் ஆலய முன்றலில் வைத்து தலைவர் அல்பிறேட்துரையப்பாவிற்கு சாவொறுப்பு வழங்கினார் . 


அடுத்த நடவடிக்கையாக யாழ் மேயராக  இருந்தஅல்பிறேட் துரையப்பா தமிழர்களின் விடுதலை இயக்கங்கங்களை முளையில் கிள்ளியெறியும் புத்தி கூர்மையான தமிழினத்துரோகி ஆவார். இவரிற்கு கிட்ட எவரும் இலகுவாகநெருங்க முடியாது ,கிட்ட நெருங்கினால் தப்ப முடியாது, அப்படி பயங்கரத் துரோகியாகக் கணிக்கப்பட்டவர். இவரைக் கொல்வதற்கு புதிய புலிகளின் ஆரம்ப உறுப்பினர்களான கலாபதி ,கிருபாகரன், தம்பி மூவரும் வதராஜப்பெருமாளின் கோயிலுக்கு பேருந்திலேசென்றார்கள்,
 மதியம் 01,05 மணியலவில் மாவரைக்கும் தொழிற்சாலை உரிமையாளர் திருலோநாதன் ஆகியோருடன் ஆலயத்திற்கு வருகின்றார் துரையப்பா,
 அவரைக் கண்டதும் தம்பி குறிபார்த்து துரைப்பாவைச் சுடுகின்றார் , அடுத்து அவசரமாக TNT என எழுதுவதற்குப்பதிலாக TN என எழுதிப்போட்டுவிட்டு அவர் வந்த வாகனத்தில் மூவரும் வேகமாக தப்பிச் செல்கின்றார்கள் ......,.,

துரையப்பாவின் வாகனத்தில்தப்பிச்சென்ற  தம்பி மற்றும் கலபதி கிருபா   சாரதி  பற்றிக் ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக அதே வீதியில் வந்த காவல்துறைவாகனம் ஒன்றைச்சந்திக்கின்றனர் . அந்தக் காலப்பகுதியில் யாழ் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆரியரட்ணா மனைவி பிள்ளைகளுடன் கீரிமலை கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு  திரும்பிவந்துகொண்டுயிருந்தார், அவ்வாகனத்தைக்கண்டதும் வாகனச் சாரதி பதட்டம் அடைந்ததால் வாகனம் குடை பிரண்டது.
எல்லோரும் வாகனத்தை விட்டு இறங்கி சித்தங்கேணிபக்கமாக ஒடித்தப்பினார்கள்,


அல்பிறேட் துறையப்பாவின் தாக்குதலிற்குப்பின்னர் இவர்களின் உறுப்பினரான கலாபதி சிங்களப்பொலிசாரால் காட்டிக்கொடுகப்பட்டு  பிடிபட்டார். அதற்குபின்னர்  நடந்தவற்றை தலைவர் குறிப்பிடுகின்றார்,

தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது அப்பொழுதுதான்புண்ணாலைக்கட்டுவன் போனால் பாதுகாப்பாக இருக்கலாம் என தகவல் வந்தது. தகவல் கிடைத்ததும் நான் ஐயர் ,பற்குணம் ,நாராயணன் ராகவன், 5பேரும் எமது உறுப்பினரான புண்ணாவைக்கட்டுவனைச்சேந்த குலம் என்பவரின் வீட்டிற்குச் சென்றோம்.
அவரிடம் தங்குமிட வசதி கிடைத்தது . ஆனால் உணவிற்கு பெரும் கஷ்ரமாகயிருந்தது, ஏனெனில் அவர் ஒரு ஐயர் ஒரு வறுமையான குடும்பம் என்பது எமக்கு தெரியும்அதனால் இந்தத் திட்டத்தை அங்கு இருந்து தான் போட்டோம்,

.05/03/1976 புத்தூர் வங்கியை கொள்ளையிடத்திட்டமிட்டோம்....


அப்பொழுது நாம் ஒரு அரச வங்கியை கொள்ளையடிக்கதிட்டமிட்டோம். அப்பொழுது நான், குலம், ராகவன் ,ஐயர் ,அனைவரும் புத்தூர் வங்கியைத் தேர்ந்து எடுத்தோம். 5ந்தாம் திகதி அன்று.நாம்திட்டமிட்டது போல் சிறந்த முறையில் வங்கியை கொள்ளையடித்து பணத்தை மூவரிடம் பிரித்துக்கொடுத்துவிட்டோம். 
ஏனெனில் அது பிடிபடாமல் பாதுகாப்பாயிருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச்செய்தோம். என தலைவர் குறிப்பிட்டார்.,
இக்கொள்ளைக்குப் பின்னர் இப்பொழுது பணப்பிரச்சனை எமது அமைப்பிற்கு இல்லை  போதிய பணம் எம்மிடம் இருந்தது.
இக்காலப்பகுதியில் தான்   தொடர்ந்து விடுதலைக்காகப் போராட இளைஞர்கள் முன்வந்துகொண்டேயிருந்தார்கள்.....

 இதை அவதானித்த தலைவர் தூரநோக்கோடு தனது விடுதலைப் போரட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என முடிவு எடுத்தார். அதற்கு அமைவாக தொடர்ந்து யாழ்பாணத்தில் இருக்காமல் வன்னிக்கு நகர்த்தார்கள். அங்கே சென்று அடர்த்தியான காட்டுப் பிரதேசமான வவுனியாவில் முதல்பயிற்சி முகாம் புளியக்குளக்காட்டுப்பகுதியில் வாங்கப்ப்பட்டது அடுத்து பூந்தோட்டத்திலும் பன்றிகொய்தகுளம் ஆகிய பகுதிகளில் வாங்கப்பட்டது,
இப்பண்ணைகளிலே புதிதாகவரும் இளைஞர்களிற்கான பயிற்சி வழங்கப்பட்டது, அடுத்தகட்டமாக மன்னார் மடுவில் ஒரு பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டது .ஒலுமடு ஆகிய இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டன.

1976ஆம் ஆண்டு புளியங்குளப்பயிற்சிமுகாம் ஆரம்பிக்கப்படுகின்றது, இந்த முகாம் தற்காலிக கொட்டகையாகவே இருந்தது. இங்கே குறிபிட்ட சிலவாரங்கள் மட்டுமே பயிற்சிகள் நடைபெறும். பாண், பழம்,தேனீர் போன்றவைகளே இங்கே உணவாக இருந்தது .இதுதான் இயக்கத்தின் முதலாவது முகாம் ஆகவிருந்தது,

மேற்படி குலம் அவர்கள் குறிப்பிடும்போது அங்கே நானும் பல நாட்கள் தங்கியிருக்கின்றேன். யானைகள் நடமாட்டம் கூடுதலாகயவிருக்கும் என குறிப்பிட்டுள்ளார், இதே ஆண்டு எமது இயங்கத்தின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக முதல் முதலாக வவுனியா பண்ணை ஆரம்பிக்கப்பட்டது, முதலில் 10த்துப் பேர் வருவதாகச் சொல்லப்பட்டாலும் ஞானம் ,சித்தப்பா இருவர் மட்டுமே வந்து சேர்ந்தாங்கள், இந்தப் பண்ணை கிட்டத்தட்ட 50 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டது,

அவர்களே சமைத்து பண்ணை வேலைகளையும் செய்வார்கள், இது விடுதலைப் புலிகளின் இரண்டாவது பண்ணையாகும், மட்டுநகர் திருமலையிலும் பண்ணைகள் உருவாகின.
புளியங்குளத்தில் காட்டுக்கரையோடு சேர்ந்த ஒரு தோட்டம் செய்வதற்கான பண்ணையை விலைக்கு வாங்கினார்கள்.
அதைப் பயிற்சி முகாமாகவும் பயன்படுத்த திட்டமிட்டார்கள், ஆனால் என்ன பயிற்சி கொடுப்பது எப்படி என தெரியாத காரணத்தால் ஓய்வு பெற்ற நம்பிக்கையான தமிழ் பொலிஸ் அதிகாரிகளிடம் தலைவர் நேரடியாகச்சென்று அவர்களிற்கு வழங்கும் ஆயுதப் பயிற்சித் திட்டத்தை பெற்றுக்கொண்டார், 

அதை பெற்றுக்கொண்டதலைவர் அந்தக் காலப்பகுதியில் றிவ்வோலர் கைத்துப்பாக்கிகள் என சில ஆயுதங்கள் வேண்டியதாகவும் அந்த ஆயுதங்களிற்கான பயிற்சியை தானேநேரடியா வழங்கியதாவும் தலைவர் குறிப்பிட்டார். 
 

அதே முகாமில் வைத்துத்தான் 05/05/1976 புதிய புலிகள் என்ற பெயரை தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயரை மாற்றி இலங்கை தொடக்கம் உலக நாடுகள்வரை செல்வாக்குமிக்க பெயராக நிரூபித்தார் வே.பிரபாகரன்.
 பின்னர் அதே ஆண்டு அதே மாவட்டத்தில் இளைஞர்கள் கூடுதலாக வந்துகொண்டுயிருந்த காரணத்தால் புதிதாக பூத்தோட்டத்தில் ஒரு பண்ணையை வாங்கினார்கள். பெரிய எதிர்பார்ப்போடு அப்பண்ணையை வாங்கினாலும் பெரிதாக எவரும் இணைய முன் வரவில்லை எதிர்மாறாக சித்தப்பா மற்றும் கறுப்பி என இருவர் மட்டுமே இணைந்துகொண்டார்கள்திட்டமிட்டாற் போல் அவளிற்குப் பயிற்சி நடந்தது

1977 இதே காலப்பகுதியல் தென்நிலங்கையில் நடந்த தமிழர் மீதான இன வேற்றுமையை நேரில் கண்ட திருமதி கமலினி அவர்கள் குறிப்பிடுகையில், இவ் இனக்கலவரம் கண்டி மலையகப்பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பகுதிகளான கல்கிசை மாத்தறை மற்றும் நாரகம் பிட்டிய பகுதிகளில் இடம் பெற்றன அதில் பேராதனை பல்கலைக்கலகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலய அர்ச்சகர்கரை அங்கு இருந்து அடித்துக் கலைத்ததோடு அங்கு இருந்தமையில்களையும் வெட்டிக் கொண்றார்கள், அக்கலவரத்தில் காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர், அவர்களிற்கு மருந்து கட்டாமல் விசம் கலந்த ஊசி போட்டு அனைவரையும்கொலை செய்தார்கள்,

.14/05/1976 ஆம் ஆண்டு துணிச்சல் மிக்க தந்தை செல்வநாயகம் இலட்சக் கணக்கான  தமிழர்கள் முன்னிலையில் வட்டுக்கோட்டையில் வைத்து தமிழீழப் பிரகடனம் செய்தார்.


தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து, பன்னாகம் மெய்கண்டான் வித்தியாசாலையில் தமிழீழமே தமிழர்களிற்கு நிரந்தரத்தீர்வாக அமையும் எனத் தமிழீழத்தீர்மானம் தந்தை செல்வா தலைமையில் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து 77 பொதுத் தேர்தலில் தமிழீழத்திற்காக வாக்களியுங்கள் என்று வட கிழக்கு தமிழர்களிடம் கோரிக்கை விடப்பட்டது, அத்தோடு தமிழீழ வரைபடத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் பார்வைக்காக வடகிழக்கு அனைத்துக் கிராமங்களிலும் ஒட்டப்பட்டது, இது வடக்கில் நடந்துகொண்டு இருக்க மட்டக்களப்பில் தேவர் ஆகிய நான் திரு பரமதேவா மோகனச்சந்திரன் சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் நோட்டீசை ஒட்டினோம்.

  02/07//1976அன்று தலைவர் ,பற்குணம் நாராயணன்,இவர்கள் மூவரும் சென்றுநடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளருக்கு சாவொறுப்பு வழங்கினார்கள்.


அடுத்த  நடவடிக்கையாக  02/07//1976 அன்று தலைவர் ,பற்குணம் நாராயணன் இவர்கள் சென்றுஉரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளரை பொன் சிவகுமாரனைக்காட்டிக்கொடுத்தமைக்காக வெற்றிகரமாகக் சுட்டு இவரிற்கான மரணதண்டணையைநிறைவேற்றினார்கள்.

சரியாக இவர் காட்டிக்கொடுத்து ஒரு மாதத்திற்குள் இவ் மரணதண்டனை தலைவரால் வழங்கப்பட்டது.

இதே காலப்பகுதியில் பரமதேவா தனிக்குழுவாகயிங்கினார், அப்பொழுது அரசுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார், அப்பொழுது பரமதேவா தேவர் அன்னை மற்றும் கல்லடிச் சாந்தி இவர்கள் சென்று மட்டு நாவக்குடாவில் நின்ற அரசிக்குச் சொந்தமான வஸ் ஒன்றை எரித்தார்கள்,

அதை விட மேலும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், பின்னர் அயலவர்களால் காட்டிக் கொடுக்கட்பட்டு அவரும் அரச படைகளால் கைது செய்யப்பட்டு தென் நிலங்கையில் உள்ள ஜெய்லில்அடைக்கப்பட்டு இருந்தார் பின்னர் அவர் எப்படி எம்மோடு இணைத்தார் என்பதை அந்த ஆண்டு வரும் போது பார்ப்போம், 





 இப்பொழுது இயக்கத்தில் இருந்த மொத்த உறுப்பினர்களின் தொகை 10 தலைவர்01 செட்டி02/ மாத்திநாராயணன்03/ பற்குணம்04/ கலாபதி05/ ஐயர்06/ ராகவன்07/ குலம்08 உமாமகேஸ்வரன்9  செல்லக்கிளி 10 பத்தாவது செல்லக்கிளி அம்மான் அமைப்பில் இணைந்த பின்னர்தான் இயக்கம் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தது.

இவனின் சொந்தப் பெயர் செல்வநாயகம் . இயக்கம் வைத்த பெயர் செல்லக்கிளி, சொந்த முகவரி கல்வியங்காடு, யாழ்ப்பாணம். இவனின் குடும்பம் ஒரு ஏழை விவசாயக் குடும்பம் ஆகும். அதனால் கல்வியை தொடரமுடியாத நிலையில் அதைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை ஊர்தியின் ஓட்டுனராகக் கடமையாற்றினான்.

இவனின் திறமை செல்லக்கிளி இயக்கத்தில் இணைந்ததும்;   தலைவர் உட்பட மூத்தபோராளிகள் அனைவரையும் "டேய்" என்று தான் கூப்பிடுவான். அவன் தலைவரை அழைக்கும் விதம் "டேய் தம்பி" நேரம் போய்ற்றுது ஓடிவாடா, தலைவரும் ஓடிவந்து செல்லக்கிளிக்கு முன்னால் நிப்பார்.இதைப்பார்த்தும் மூத்த போராளிகள் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் எங்களின் நிலமை எப்படி? இருக்கும் என கடுமையான பயத்தில் காணப்படுவார்கள்.

இது தொடர்பாக ஒரு சிலர் தலைவருக்குப் புகார் அளித்ததாகவும்; அதற்குத் தலைவர் சொன்ன பதில்; "செல்லக்கிளி அண்ணன்" எங்களுக்கு வயதிற்கு மூத்தவர். அவர் எங்களை உரிமையோடு கையாளுகின்றார். அவருக்கு நாங்கள் கட்டுப்பட்டால்தான் நாளைக்கு மற்றவர்கள்  எங்ககளிற்குக் கட்டுப் படுவார்கள் என சிரித்த முகத்துடன் விளக்கப் படுத்தினார்.

செல்லகிளியே எமது விடுதலை அமைப்பின் ஆளுமை மிக்க முதல் இராணுவத் தளபதி ஆவார். அவரின் பசுமாடுகளை விற்று  முதல் முதலாக ஒரு சிறிய ரகS.M.G துப்பாக்கியை வேண்டினார், அவரின் வீரச்சாவிற்குப் பிறகு சிறிது காலம் இத் துப்பாக்கியை தலைவர் பயன்படுத்தினார். பின்னர் கிட்டு அண்ணை பயன்படுத்தினார். இறுதியாக இத் துப்பாக்கி விசுவமடுக் குளத்திற்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருந்த எமது படையணி ஆயுதக் களஞ்சியமான 1.1 முகாமில் மிவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது.



..1976,1977,1978 இதே காலப்பகுதியில் அமைப்பில்இயக்கிக்கொண்டிருந்தவர்கள்  ஜோன்01, பேபியண்ணை02, விசு03 ,சோட் பாலா04,நிர்மலன்05,வாத்திநாரயணன்06, ரவி07,காந்தன்08 ,கலாபதி09, பீரிஸ்10,  மனோமாஸ்ட்டர்11, உமாமகேஸ்வரன்12, ஐயர்13 ,பண்டிதர்14, செல்லக்கிிளி15, யோகன்பாதர்16,குலம்17,குமரச்செல்வம்18, தலைவர்19 எனஆளணிகூடிக்கொண்டே சென்றது.  ஆரம்பத்தில் பரமதேவா தனிக்குழு அமைத்து அரச படைகளிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மட்டக்களப்பில் செய்துகொண்டிருந்தார் .  

ஒருநடவடிக்கையின்போது பரமதேவா சிங்களப்படையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.அதன் பின்னர் தனது குழுவிற்கு நீங்கள்தனியாக  செயல்பட வேண்டாம் புலிகளோடு இணைந்து செயல்படுங்கோ...! என தெரியப்படுத்தினார். அதனால் அவரின் குழுவைச் சேர்ந்த மைக்கல், மோகன், அக்பர் மாணவன், காந்தன் என பலர் கிழங்கில் இருந்து எம்மோடு இணைந்து கொண்டார்கள். 

 செல்லக்கிளியை முதலில் தலைவருக்கு அறிமுகம் ஆக்கியவர் செட்டி என்பதை மறந்துவிட முடியாது.02/07/1976ஆம்ஆண்டு அக்காலப்பகுதியில்தான் சிவகுமாரனை காட்டிக்கொடுத்த இரண்டாவது நபரான நடராஜன் என்பவரை பேவி  என்பவர் கைக்குண்டு எறிந்து அவரைக்கொலை செய்தார். அவர் அந்நேரம் பிரபாகரன் தலைமையிலான அமைப்பில் இணையவில்லை. 


முன்னரே தனி நபராகச் சென்று பல தாக்குதலை அசாங்கத்திற்கு எதிராகச் செய்துள்ளார்.இதை அறிந்த தலைவர் நேரடியாக அவரின் வீட்டிற்குச்சென்று அவரையும் தனது அமைப்பில் இணைத்துக்கொண்டார்.அக்காலப்போக்கில் இளங்குமரன் அல்லது பேபி எனப்பேர் மாற்றப்பட்டு ஒரு சிறந்த போராளியாகக்கடமையாற்றினார்

அடுத்து தமிழேந்தி அண்ணை போராட்டத்தில் இணைந்துகொண்டார்.  அவர் இணைந்தது தொடர்பாக  புதுக்குடியிருப்பு78  முகாமில் வைத்து என்னிடம் தெரிவிக்கையில்;  அக்காலப்பகுதியில் நான் புத்தூர் வங்கியில் மனேஜராக ஆகாவிருந்தேன். அப்பொழுது எனக்கு விடுதலைப் புலிகளின் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

 இருந்தும் சிறிதளவு அவர்களை நான் நம்பினேன், தொடர்ந்து வங்கியைக் கொள்ளை அடிப்பது தொடர்பாக என்னோடு கதைத்தார்கள். முன்னர் நான் பயந்தேன். பின்னர் எனக்கு போதிய விளக்கம் தந்தமையால்; நான் அவர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டேன், அடுத்து ஒரு வீட்டில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமல் ஒரு காரை எடுத்துக்கொண்டு அவ் "பாங்கை" கொள்ளையிடப் பயன்படுத்தினார்கள். பின் அவ்வேலை முடிந்ததும் ; அக்காரைக் கொண்டு அவர்களின் வீட்டிற்குப்போனது மட்டும் அல்லாமல் அது இருந்த இடத்திலே அதை விட்டுச் சென்றும் இருந்தார்கள்.

பின்னர் அக் கார்க் காரரை நான் கண்டு கதைத்தபோது; அவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் தங்களின் இனத்தை எப்படியாவது பாதுகாக்க வேண்டும்! என்பதற்காக துடிப்போடு இயங்கும் எங்கட பொடியல் ஆகாத்தான் இருக்கும் என என்னிடம் குறிப்பிட்டார், எனவே இவர்களின் நேர்மையான செயல்பாட்டைக்கண்டுதான் இவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.

 இவர் இறுதி வரைக்கும் தமிழீழ நிதிப்பொறுப்பாளராக இருந்தவர் என்பதை எவராலும் மறக்க முடியாது.





14/02/1977  சிங்கள்புலனாய்வாளர் கருணாநிதிக்கு தலைவரால் மரணதண்டனை வழங்கப்பட்டது .


 கருணாநிதி  தலைமையிலான சிங்களக்      கைக்கூலிகள் பிரபாகரன் மற்றும் அவரின் இளைஞர்களை இலங்கை முழுவதுமாகத் தேடுகின்றார்கள்..... அரசாங்கத்தால் தமிழர்களிற்கு புலனாய்வுவேலை, மற்றும் அரசவேலையென, வழங்கி தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கான வேலைகளை செய்தது சிங்கள அரசாங்கம்.

அந்தப்பட்டியலில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் கடமையாயாற்றிய கருணாநிதியும் அடங்குவார். இவர் தங்காவையும், பேவி அண்ணாவையும் பின்தொடர்ந்த காலம் அது, கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பதற்காக14/02/1977 அன்றைய நாள் காங்கேசன்துறை வீதியில் இருந்து அவர் மிதிவண்டியில் போகும் திசையைநோக்கி தம்பியும்செல்லக்கிளியும் அவர் பின்னால் மிதிவண்டியில் சென்றுகொண்டுயிருந்தார்கள்.....

,

அதற்குப்பின்னால் இடைவெளிவிட்டு குலமும், பேவி அண்ணாவும் சென்றுகொண்டேயிருந்தார்கள்.எமது திட்டத்தின்படி போடவேண்டிய இடத்திற்குச் செல்லாமல் இடையில் இருந்த பாதையால் மிதிவண்டியை திருப்பிவிட்டார் கருணாநிதி ஆனால் தம்பியும், செல்லக்கிளியும் அவர் பின்னால் சென்று குறி தவறாமல் சுட்டு விட்டு பின்னர் எங்களை சந்தித்தபோது புன்சிரிப்புடன் நடந்த விடயத்தை எங்களிடம் சொன்னார்கள். அடுத்து நாங்கள்சேர வேண்டிய இடத்திற்கு விரைவாகப்போய்சேர்ந்தோம்.


1977   இதே ஆண்டில் பண்டிதர் என்ற இளைஞன் அமைப்பில் இணைக்கப்பட்டார். பண்டிதர் வந்தவுடன் தனக்கு மட்டக்களப்பில் ஒரு நண்பன் இருப்பதாகவும் அவனையும் அமைப்பில் இணைக்கலாம் என்று தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதைத்தலைவர் ஏற்றுக்கொண்டார் 1977ம் ஆண்டு முதலாம் மாதம் மட்டக்களப்பில் இருந்து யோகன்பாதர் இணைக்கப்பட்டார், அன்றிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கூடுதலான இளைஞர்கள்கிழக்கில் இருந்துவரத் தொடங்கினார்கள் . இதே ஆண்டு மலையகத்தை சேர்ந்த குமணன்,சாந்தன்  இவர்கள் அமைப்பில் உறுப்பினர்களாகஇணைக்கப்பட்டார்கள்.


 18/05/1977ம்ஆண்டுதேனீர் கடையில்வைத்து புலனாய்வாளர்களான இரு சண்முகநாதனிக்கும் தலைவரால் சாவொறுப்பு வழங்கப்பட்டது,

  திங்கள்கிழமை  காலை தலைவரும், சோட்வாலவும் இணுவில்லை நோக்கி நடந்து சென்றார்கள். அங்கே சென்று சாலை அருகாமையில் இருந்த தேனீர் கடை அருகில் நின்றார்கள், சண்முகநாதன் என்ற ஒரே பெயரில் இரண்டு தமிழ் சி.ஐ.டியினர் நின்றார்கள், ஆனால் அதில் ஒருதன் நல்லவன், ஒருதன் கெட்டவன், அவன் தலைவரையும் சோட்வாலாவையும் கண்டு விட்டான். அவர்களைக் கண்டதும் தலைவர் உடனே கைமுந்திவிட்டார், உடனே தனது றிவ்வோலரை எடுத்துச் சண்முகநாதனை நோக்கிச் சுட்டார். 

.ஆனால் ரவுன்ஸ் மிஸ் ஆகி வெடிக்கவில்லை, உடனே சண்முகநாதன் தலைவரைப் பாய்ந்து கட்டிப்பிடித்து நிலத்தில் இருவரும் உருளுகின்றார்கள்.... இதை சோட்வாலாவும் அடுத்த சண்முகநாதனும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் சண்முகநாதனிடம் றிவ்வோலர் இருக்கின்றது, அப்போது சோட்வாலாவிடமும் ஆயுதம் இல்லை, இது முக்கிய பிரச்சனையாகயிருந்தது ஆனால் சண்முகநாதன் சோட் வாலவிடம் சொன்னான்" இருவரும் மல்லுக்கட்டி வெல்லுறவன் வெல்லட்டும் நாம்இருவரும் பார்த்துக் கொண்டுயிருப்போம்" என ஆலோசனை வழங்கினான்.

அதற்கு சோட் வாலா சொன்னார் "தப்பிக்கு ஒன்று என்றால் நான்பாத்துக்கொண்டிருக்க மாட்டேன்" என்றான். இதைக் கேட்டதும் சண்முகநாதன் பாய்ந்து சோட்வாலாவை கட்டிப் பிடித்தான். பின்னர்சோட்வாலாவும், சண்முகநாதனும் கட்டிப் பிடித்து நிலத்தில் உருண்டு கொண்டேயிருந்தார்கள், அவ்வேளை சன்முகநாதனின் இடுப்பில் இருக்கும் றிவ்வோலரை சோட்வால அவதானித்துவிட்டான். ஒரு மாதிரியாக சண்முகநாதனின் றிவ்வோலரை இடுப்பில் இருந்து உருவி எடுத்தான் சோட்வாலா,

 அதை எடுத்ததும் சண்முகநாதனின் வயிற்றுப்பக்கமாக ஒரு வெடி வைத்தான் சோட்வாலா வெடிச் சத்தம் கேட்டதும் தலைவரைப் பிடித்துயிருந்த அடுத்த சண்முகநாதன் பயத்தில் தனதுகையை விட்டான். விட்ட உடனே வேகமாகச் செயல்பட்ட தலைவர் சண்முகநாதனின் தலையில் சுட்டார் உடனே சண்முகநாதன் அவ்விடத்திலே கொல்லப்பட்டான்.


அடுத்த சண்முகநாதன் வயிற்றுக் காயத்துடன்  உயிருக்குப் போராடிக்கொண்டேயிருந்தான். அதை அவதானித்த தலைவர் இவன் அனைத்துப் பிரச்சனைகளையும்பார்த்து விட்டான், இவனை விட்டால் பிற்காலத்தில் எமக்கு ஆபத்தென எண்ணி அவனிடம் சென்று நீ நல்லவன்தான் என்னை மன்னித்துக்கொள் என்று சொல்லி விட்டு அவனின் மண்டையில் சுட்டு மரணதண்டனை வழங்கினார். 2 காவற்துறையினரையும் இணுவிலில் வைத்து இருவரின் சிறந்த செயல்பாட்டால் அவர்களை கொல்ல முடிந்தது. 




26/01/1978  கனகரத்தினத்தினத்திற்கு தலைவர், செல்லக்கிளி மற்றும் உமாமகேஸ்வரன் மூவரும் கொழும்பிற்குச் சென்று அங்கே வைத்துஅவருக்கு சாவொறுப்பு வழங்கினார்கள். 

 இவர்பொத்துவில் தொகுதியில் தமிழரசிக் கட்சிசார்பாக போட்டியிட்டு கூட்டணி வேட்பாளராக அமோக வெற்றி ஈட்டினார். 

 அதனால்அவர்எம்.பி ஆகத் தெரிவுஆனார்.  ஆனால் தொடர்ந்து தமிழர்களின் உரிமைக்காகப் போராடாமல் சிங்களக்கட்சிகளோடு விலைபோனமையால் அவரிற்கு உயர் தண்டனையான சாவொறுப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் முடிவு எடுக்கின்றார்.....

 அதற்கு அமைவாக தலைவர் ,செல்லக்கிளி அம்மான் மற்றும் உமாமகேஸ்வரன் இவர்கள் மூவரும் கொழும்பிற்குச் சென்றுகொண்டிருந்தார்கள், அக்காலப்பகுதியில் எமது உறுப்பினரான வாத்திநாராயணன் கொழும்பு றேடியோ சிலோன் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அதனால் இவர்கள் மூவரும் கொழும்பில் உள்ள அவரின் அலுவலகத்தில் சென்று இரவு அங்கேயே தங்கினார்கள் .ஆனால் அங்கே அவரோடு வேறு ஓரு இளைஞனும் தங்கி நின்று வேலை செய்தான்.


 இவர்கள் எங்கே செல்வதாக இருந்தாலும் நாய் மோப்பம் பிடிக்காத மிளகுதூள் பக்கெட் கொண்டு செல்வது வழமை, அன்று இவர்கள் கொண்டு சென்ற மிளகு தூள் பவுடர் பக்கெட் வெடித்து கொட்டுப்பட ஆரம்பித்து விட்டது, அதனால் அவ் அலுவலகத்தில் கிடந்த ஒரு பேப்பரை எடுத்து அப்பக்கெட்டை கொட்டுப்படாமல் சுத்தி வைக்கிறார்கள், ஆனால் அதுதான் ஒரு தடயமாக வரப்போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின்னர் அடுத்த நாள் காலை கனகரெத்தினத்தின் கொழும்பு அலுவலகத்திற்கு தலைவர், செல்லக்கிளி மற்றும் உமாமகேஸ்வரன் மூவரும் சென்று அவரைச் சந்திக்கின்றார்கள்.....கனகரெத்தினம் வந்ததும் உமாமகேஸ்வரன் பைலைக் கனகரெத்தினத்திடம் கொடுக்கின்றார், கனகரெத்தினம் (ப்)பைலைத்திறந்ததும் அதற்குள் புலிச்சின்னம்இருந்தது.

 உடனே கனகரெத்தினத்தை நோக்கி தலைவர் சுடுகின்றார், அடுத்து செல்லக்கிளி அம்மானும் அவரை நோக்கிச் சுடுகின்றார்; கடசியாக உமாமகேஸ்வரன் அவருக்கு அருகில் சென்று சுடுகின்றார்; இருந்தும் வெடி முக்கிய இடத்தில் படவில்லை; ஆனால் அவன் செத்து விட்டான் என எண்ணி பவுடரை உடைத்துத் தூவி விட்டு மூவரும் தப்பி வன்னிக்குச் செல்கின்றார்கள். ஆனால் அவன் அன்று சாகவில்லை  26/01/1978சிகிச்சை பலன் அளிக்காமல் சாவடைந்தார்.


சம்பவம் அறிந்து வஸ்த்தியாம் பிள்ளை உடனே கனகரெத்தினத்தின் கொழும்பு அலுவலகத்திற்குச்செல்கின்றார்; அங்கே சென்ற வஸ்த்தியான்பிள்ளை அங்கே காணப்படும் தடையங்களை அவதானிக்கின்றார்; இவர்கள் பவுடர் (ப்)பக்கெட்டைச் சுத்திய பேப்பர் வஸ்தியான் பிள்ளையின் கையில் கிடைக்கின்றது; அதைவாசித்துப்பார்த்தால் வாத்தி நாராயணனின் கொழும்பு அலுவலகத்தின் விலாசம் இருந்தது;  உடனே வஸ்தியான்யான்பிள்ளை தலைமையிலான பொலிஸார் வாத்தி நாராயணனின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்; அங்கே வாத்தி நாராயணனும் அவரோடு சேர்ந்து வேலை செய்யும் இளைஞனும் இருந்தார்கள்.


அங்கே  சென்றதும் முதலில் அந்த இளைஞனிடம் விசாரணையைமேற்கொண்டார்கள்; அவன் சொன்னான்;" இங்கே உமாமகேஸ்வரனும் ஒரு கட்டையனும்; ஒரு நெட்டையனும்; வந்தார்கள் என்று"..... கட்டையன் என்றால் தலைவரையும்; நெட்டையன் என்றால் செல்லக்கிளி அம்மானையும்; குறிக்கின்றது. இப்படி அவன் வஸ்தியான்பிள்ளையிடம் சொன்னான் அடுத்து வஸ்தியான்பிள்ளை வாத்தி நாரயணணிடம் உமாமகேஸ்வரனின் வீடு தெரியுமா என கேட்டார், அவர் தெரியும் என பதில் அளித்தார். 

உடனே வாத்திநாராயணனை கூட்டிக்கொண்டு உமாமகேஸ்வரனின் தெல்லிப்பளையில் உள்ள வீட்டிற்கு செல்கின்றார் வஸ்தியான்பிள்ளை  அங்கே சென்றதும் வாத்திநாராயணன் வஸ்தியான்பிள்ளையிடம் சொல்கின்றார்" நீங்கள் கேற்ரடியில் நில்லுங்கோ நான் போய் அவரைக் கூட்டிவருகின்றேன்" என்று அதற்கு வஸ்தியான்பிள்ளை அனுமதி வழங்குகின்றார்.......


தொடர்ந்து உள்ளே சென்ற வாத்திநாராயணன் மதிலிற்கு மேலால்பாய்ந்து ஓடித்தப்பிவிட்டார்.நீண்டநேரம் வெளியில் காத்துக்கொண்டேயிருந்த வஸ்தியான்பிள்ளை உள்ளே சென்று ஒரு வயசான அம்மாவிடம் கேட்டபோது  ஒருத்தன் மதிலால் பாய்ந்து ஒடுவதாக அவர் குறிப்பிட்டார். வஸ்த்தியான்பிள்ளை தங்களை இவன் ஏமாத்தி விட்டான் என நினைத்துவிட்டு அவர்கள் மீண்டும் கொழும்பிற்குச் சென்றார்கள்.


இது இப்படி இருக்க வாத்திநராயணன் தப்பி ஓடி வந்து தலைவரோடு இணைந்துகொண்டார். அப்பொழுது இவர்கள் மன்னார் மடுவில் இருந்த இரகசியப் பண்ணையொன்றில் இருந்தார்கள். அங்கே வாத்தி நாராயணன், உமாமகேஸ்வன், தலைவர் என பல முக்கிய உறுப்பினர்கள் அங்கே இருந்தார்கள்.தொடர்ந்து வஸ்தியான்பிள்ளை சும்மா இருக்கவில்லை. இவர்கள் தங்கும் மறைவிடத்தை இவர்களோடு இருந்த கணேசவரப்பிரகாசம் என்பவரைக் கைது செய்ததன் ஊடாக இடத்தை அறிந்த கொண்ட வஸ்தியான்பிள்ளை அவரையும் கூட்டிக் கொண்டு தேடுதலிற்குப் புறம்பட்டுச் சென்றார்.



07.04.1978 அன்று அதிகாலை 5.30மணியளவில் செல்லக்கிளியை கொலை செய்ய சென்ற வஸ்தியான்பிள்ளை கும்பலை தனது திறமையால் அனைவருக்கும் சாவொறுப்பை வழங்கி போராட்டத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சென்றார் செல்லக்கிளி அம்மான்.


 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப்புலிகளின்இருப்பிடத்திற்குவந்து சேர்ந்தார் வஸ்தியான்பிள்ளை  குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர்.இயக்க உறுப்பினர் கணேசவரப்பிரகாசம் அவர்கள் வேலை காரணமாகச் சென்ற வேளை சிறி லங்கா புலனாய்வாளர்களால் கைது செய்யப்படுகின்றார் இவர் மீதான சித்திரவதைகாரணமாக இவரிடம் இருந்து மடுப்பண்ணை குறித்த தகவலை பெற்றுக் கொண்டார் அதிகாரி வஸ்த்தியான்பிள்ளை. இவரை ஏற்றிக்கொண்டு  9//04/1978 அன்று அதிகாலை பயணிக்கின்றது செல்லக்கிளியின் பண்ணையை நோக்கிய வஸ்தியாம்பிள்ளையின்பயணம்.......


புத்திசாலியான செல்லக்கிளி அம்மான் தனது ஆயதங்களை பண்ணைக் கொட்டிலிற்குள் வைப்பது இல்லை எந்த நேரமும் கொட்டிலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் மறைத்து வைக்கும் பழக்கம் உடையவர்.  ஏனெனில் சில நேரங்களில் தோட்டத்தைப் பார்ப்பதற்காக சில பொதுமக்கள் உள்ளே வந்து இதைக் கண்டு விட்டால் தகவல் வெளியே சென்று விடும் அதனால் எந்த நேரமும் அம்மான் விழிப்பாகவே இருப்பார்.


இவர்கள் இப்படி இருக்க திடீரென 4 பேர்கொண்டவஸ்தியான்பிள்ளையின் ஜேவர்த்தனா பொலிஸ் அணி ஜீப்வாகனம் பண்ணைக்குள் நுழைந்தது . வந்தவர்கள் உடனே பண்ணைக்கொட்டிலை ஓடிச் சென்று சோதனையிட்டார்கள். ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை, அவ்வேளை நாலு பேரும் எந்தப்பதட்டமும் இல்லாமல் தோட்ட வேலை செய்துகொண்டுயிருக்கின்றார்கள்.....

தன்னைக்கண்டதும் இவர்கள் பயப்பிடவும் இல்லை; மரியாதை கொடுக்கவும் இல்லை; என்பதை அவதானித்த வஸ்தியான்பிள்ளை இவர்கள் 4 பேரையும்கூப்பிட்டு கைகளைக்கட்டி முட்டுக்காலில் வைக்கின்றார்  அடுத்து ஏதாவது குற்றச் செல்களில் ஈடுபட்ட நீங்களா என கேட்டுவிட்டு உமாமகேஸ்வரனை உங்களிற்குத்தெரியுமா?  என வஸ்தியான்பிள்ளை கேட்டார். இவர்கள் தெரியாது என அனைவரும் பதில் அளித்தார்கள். அதை அடுத்து வஸ்தியான்பிள்ளை இவர்கள் சாதாரண இளைஞர்கள் என நம்பி விட்டார். செல்லக்கிளிக் அம்மானின் கையை அவிழ்த்து விட்டு அவரைத்  தேனீர் போட்டுவருமாறு கட்டளை வளங்கினார் வஸ்தியான்பிள்ளை.ஏனெனில் கொழும்பில் இருந்து தூரப்பயணம் வந்தமையால் இவர்களிற்கு கடுமையான பசியாக இருந்தது. 

 அப்போது கிணற்றில் தண்ணீர் அள்ள வேண்டும் என்று செல்லக்கிளி அம்மான் சொல்ல வஸ்தியான்பிள்ளையும் செல்லக்கிளி அம்மானோடு சேர்ந்து செல்கின்றார் அங்கே சென்றதும்  வஸ்தியான்பிள்ளை ஆழமானகிணற்றை எட்டிப்பார்பதற்கு முன்னர் அருகில் இருந்த மரத்தடியில் தனது SMG துப்பாக்கியை கொழுவியே பின்னர் கிணற்றை எட்டிப் பார்க்கின்றார்,........


சரியான  இலக்கு இதுதான் என்பதை விளங்கிக் கொண்ட செல்லக்கிளி அம்மான்  திடீரென  இடக் கையால் பிடித்துக்கொண்டு முழங்கையால் இடித்து வஸ்தியான்பிள்ளையை கிணற்றுக்குள் விழுத்தினார்.  அவர் தண்ணீரில் மிதந்து கொண்டேயிருந்த போது அவரின் மரத்தில் இருந்த ஆயுதத்தை எடுத்து அவரின் முதுகில் ஒரு வெடி வைத்தார்.

   அவ் றைவுளை எடுத்துக்கொண்டு கட்டி வைத்தவர்களை மீட்க விரைந்தார் அம்மான். அங்கே சென்றதும் அவரோடுவந்த மூவரும் பதட்டத்தில் காணப்பட்டார்கள். வேகமாக மூவரையும் சுட்டுத் தள்ளினார் செல்லக்கிளி அம்மான் ஆனால் துரதிஸ்ரவசமாக இவர்களின் அணியைச் சேர்ந்த கறுப்பி என்பவருக்கும் தவறுதலாக வெடிப்பிடித்துவிட்டது  அது சிறு காயமாகவேயிருந்தது.

அடுத்து இவர்கள் வந்த வாகனத்தை சென்று பார்த்த வேளை வஸ்தியான் பிள்ளையின் வாகனச்சாரதியும் அடுத்து எமது உறுப்பினனான கணேசவரப்பிரகாசமும் நிக்கின்றார்கள். அவருக்கு கடுமையான சித்திரவதை செய்து இருக்கின்றார்கள் என்பதை அவரைப்பார்த்தபோது எமக்கு விளங்கியது,

 அவ்வாகனச்சாரதியை செல்லக்கிளி சுட்டுக்கொன்றார். ஆனால் இவருக்கு செல்லக்கிளி ஒன்றும் செய்யவில்லை கடுமையாகப் பேசிவிட்டு அந்த வாகனத்தில் ஆயுதங்களையும் போராளிகளையும் ஏற்றிக்கொண்டு செல்லக்கிளி வேறு இடம் நோக்கிச்சென்றார்.


செல்லக்கிளி அம்மானின் தனிப்பட்ட திறமை

செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த ஊர்தியையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி  ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும், பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான்.


காட்டுப் பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை; தான் வாழ்ந்த சூழ்நிலையை ;ஒரு கொரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி வேளாண்மையில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.


ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்கு கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். தொடக்க காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கும் வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது; கொட்டில் போடுவது; கூரைவேய்வது; போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.


சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி என்ற இவ் அசாத்திய வீரன்.

“செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரியது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த சொற்கள்.


இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன்.



செல்லக்கிளி முதல் முதலில்  உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி; பொலிஸ் உளவுப்படைதலைமையகத்தைச் சேர்ந்த வஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான தாக்குதல்; உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல்; பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல்; கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல்; என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன்னைத் தனித்துவமாக முத்திரை பதித்தான் செல்லக்கிளி என்ற
ஒப்பற்ற மாவீரன்.


பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் சுட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மையில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் உட்படுத்தாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி வஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.




ஆபத்து வரும் வேளைகளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது என்றுகூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்”  தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.


தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு, விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?”


 என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.


 தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.


இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன்; பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது; இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சூட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.


படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும்; வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள்; அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். ஆனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டம்ஆயுதப் போராட்டமாகமாறியது.செல்லக்கிளியின் வீர வரலாறு அப்படி இருக்க அடுத்ததாக

 25/04/1978அன்று தமிழீழ விடுதலைப் புலிகள்11 நடவடிக்கைக்கு தாங்கள் உரிமை கோரினார்கள்.

 பின்னர் சிங்களஅரசு19/07/1978 விடுதலைப் புலிகள் மீதான தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில்கொண்டு வந்தது.  சிங்கள அரசு    இதற்குப்பின்னரே கூடுதலான தமிழ் இளைஞர்களை சிங்களப்படைகளால் கைது செய்யப்பட்டு; ஜெயிலில் அடைக்கப்பட்டு; மற்றும் காணும் இடத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். இதனாலயே தமிழ் இளைஞர்களிடம் போராடும் மனநிலை தீவிரம் அடைந்தது,,




1979 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் விடுதலைப் புலிகளிள் அமைப்பில் சீலன் மற்றும் புலேந்திரன் இருவரும் இணைந்து கொண்டனர்.



 திருமலை மாவட்டம் சிங்களக்குடியேற்றங்களாலும் சிங்கள இனவெறியர்களின் தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்டபகுதியாகும். திருமலையில் பள்ளி மாணவனாக சீலன் இருந்த காலத்தில் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவனிற்குஉதயமானது.




1978 செப்டம்பர் ஜே.ஆர்.ஐயவர்தன சிறிலங்கா சனநாயகக் குடியரசின் ஐனாதிபதியாக பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சீலன் பள்ளி மாணவனாக இருந்தபோதே நடவடிக்கையை மேற்கொண்டான். அந்த பதவியேற்பினை முன்னிட்டு திருமலை இந்துக்கல்லூரியில் சிறிலங்காவின் தேசியக்கொடியை அவர்கள் ஏற்றுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படிருந்தது. 

அந்தத் தேசியக்கொடியில் பொஸ்பரஸ் இரசாயனப் பொருளை மறைத்து வைத்திருந்தான் சீலன் அந்தக் கொடி ஏற்றப்படும்போது பொஸ்பரசில் காற்றுப் பட்டு அந்தக் தேசியக்கொடி எரிந்துள்ளது.

 சந்தேகத்தின் பேரில் அரச படைகளால் சீலன் கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதையை எதிர்கொண்டான். ஆனால் தனக்கு உதவியாகயிருந்த எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை.பின்னர் அவன் நிராயுதபாணி என சிங்கள அரச படைகளால் விடுதலை செய்யப்பட்டான்.

இதை அறிந்த தலைவர் நேரடியாகத் திருமலை சென்று விடுதலைப் போராட்டம் தொடர்பாக கதைத்துவிட்டு அவர் செய்த துணிகர செயலையைப் பாராட்டி விட்டு திரும்பி வந்துள்ளார். காலப்போக்கில் சந்தோசம் மாஸ்ரர் ஊடாக லெப் .கேணல் புலேந்திரன், லெப். சீலன் இருவரும் இணைக்கப்பட்டு விடுதலை புலிகளால் உடையார் கட்டில் நடாத்திய 2 ஆவது பயிற்சி முகாமில் தேசியத் தலைவரால் 1978 தை மாதம்அவர்களிற்கான ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது,

 தேசியத் தலைவரின் பூரண நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமாக விளங்கியவன் சீலன், அதனாலயேவிடுதலை புலிகளின் முதல் இராணுவத் தளபதியாக அவன் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டான்,சீலனின் நடவடிக்கைகள்....

1981 /9 ஆம் மாதம் பிரிகேடியர் வீரதூங்கா பதவி உயர்வு பெற்ற சமயம் யாழ் காங்கேசந்துறை வீதியில் வைத்து இரண்டு இராணுவத்தை சுட்டுக் கொன்றான்.


 அடுத்து18/05/1983 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளிற்கான வாக்களிப்பு யாழ் கந்தர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றபோது அரச படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டான்.

27/10/1982 சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலில் 10த்திற்கு மேற்பட்ட பொலிசார் கொல்லப்பட்டனர்; இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள் ஒன்பது 303 ரைபிள் உட்பட 30 ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது; அந்தக் தாக்குதலில் லெப் சீலன், லெப் கேணல் புலேந்திரன், ரகுவப்பா உட்பட மூவர் காயமடைந்தனர்.


சீலனின் கால்துடைப்பகுதியில்  காயம் ஏற்பட்ட  மூவரும் தமிழகம் கொண்டு போய் காயம் மாற்றப்பட்டு மீண்டும் தமிழீழம் வந்து தங்களின்கடமைகளைத் தொடர்ந்தார்கள்.

இவனின் கடசிப்பயணம்15/07/1983 அன்று மூன்று மணியளவில் தமிழீழத் தேசத்துரோகி ஒருதனின் தகவலிற்கு அமைவாக சீலன், ஆனந், அருணா, ஆகிய மூவரும் தங்கியிருத்த சாவகச்சேரி மீசாலைப்பகுதியை சிங்கள இராணுவம் சுற்றிவளைக்கின்றது . ஒரு மினிபஸ் ;இரண்டு ஜீப் ;ஒரு ரக் என நூற்றுக்கணக்கான சிக்களப் படையினர் சுற்றி வளைத்துதாக்குதல் நடத்துகின்றனர்; முதலில் சீலன் நெஞ்சில் காயம் அடைகின்றான் உடனே தன்னை சுட்டு விட்டு ஆயிதத்தை எடுத்துக்கொண்டு தலைவரிடம் கொடுக்குமாறு தனது நண்பன் அருணாவிற்கு கட்டளை வழங்குகின்றான்; சிறிது நேரத்தில் வீரவேங்கை ஆனந்தும் காயப்பட்டு அதே அனுமதியை அருணாவிடம் கோருகின்றான்;இருவரையும் சுட்டு விட்டு அவ்விடத்தில் இருந்து முற்றுகையை உடைத்துக்கொண்டு வேகமாகத் தப்பிச்சென்று இருவரின் ஆயுதங்களையும் தலைவரிடம் ஒப்படைத்தான் அருணா.






07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பில் கோலகலமாக கொண்டப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரத்மலானையில்வைத்து "அவ்ரோ" விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது .






07/09/1978 அன்று ஜேவர்த்தனா அரசு புதிய குடியரசு அரசியல் சட்டத்தை பிரகடனப்படுத்தியது . அதற்கான எதிர்ப்பு நடவடிக்கையாக ஏதாவது செய்ய வேண்டும் என விடுதலைப் புலிகளின் மத்திய குழு முடிவு எடுத்தது, அதற்கு அமைவாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் நாளன்று சிறிலங்காவின் விமானம் ஒன்றை குண்டு வைத்து தகர்க்கலாம் என்ற ஆலோசனை தலைவரால் முன்வைக்கப்பட்டது. அதை செய்வதற்காக முதலில் தரவு எடுப்பதற்கு பேவி அண்ணாவும், குலம் அவர்களும் பலாலி இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்து தகவலை திரட்டி வந்தனர்.

அவர்கள் வந்ததும் அனைவரும் கூடி ஆலோசனை நடத்திய போது விமானத்தில் பயணம் செய்பவர்கள் பாதிக்கக் கூடாது எனவும் பயணிகள் இறங்கிய பின் விமானத்தை குண்டுவைத்து தகர்க்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
பேவி அண்ணாவே அதற்கான நேரக் கணிப்புக் குண்டை தயாரித்தார். குண்டுவெடிப்பை நிறைவேற்றும் நிமித்தம் பேவிஅண்ணாவும் , ராவவனும் பலாலியில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணித்தனர். விமானத்தில் இருந்து அனைத்துப்பயணிகளும் இறங்கிய பின் நேரக்கணிப்புக் குண்டை வெற்றிகரமாகப் பொருத்தினார்கள்.




07/09/1978 அன்று சிறிலங்கா சோசலிஸக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பில் கோலகலமாக கொண்டப்பட்ட வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ரத்மலானையில் வைத்து "அவ்ரோ" விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இலங்கை தலைநகரில் எமது அமைப்பினால் முதலாவது நடத்தப்பட்ட வெற்றிகர நடவவடிக்கையாகும்.


அந்தக் காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய மகிழ்ச்சியோடு பேபி அண்ணாவும், ராகவனும் திரும்பினார்கள்.அனைத்தும் நல்லா நடந்தாலும் முக்கிய போராளி குலம் அவர்கள்11/10//1978 அதாவது ஒரு மாதம் கழித்து சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் எவரையும் காட்டிக்கொடுக்கவில்லை.இத்தோடுநின்றுவிடாமல் அடுத்து ஒரு பாரிய  சிறப்பு நடவடிக்கை செய்ய திட்டமிட்டார்கள்புலிகள்.






05/12/1978 அன்று திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியை கொள்ளையடிப்பதற்காக தலைவர்உட்பட செல்லக்கிளி அம்மான் இவர்களோடு இன்னும் இருவர் செல்கின்றார்கள்..


 ஆனால் இவர்கள் செல்லும் முன்னர் ரஞ்ஜீத் அப்பா என்றழைக்கப்படும் தமிழேந்தி அவர்களுடன் பேசி ஒருமுடிவிற்குவந்துள்ளனர் . ஏனெனில் அப்பொழுதுஅவர்அந்த வங்கி மனேஜ்சர்ஆக இருந்தார். பணம்எங்கே இருக்கின்றது என்ற தவகலைக் கொடுத்ததோடு மட்டும் இன்றி அந்நேரம் பாங்கையும் திறந்து வைத்திருந்தார்.


அந்நேரம் இவர்கள் தெருவோரமாக நின்ற ஒரு கார்க் காரனோடு கதைத்து அவனை அவ்விடத்தில் இறக்கி விட்டு இவர்கள் 4 பேரும் அங்கே சென்று இரண்டு காவல்துறையினரை சுட்டு விட்டு அங்கு இருந்து 12 லட்சம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டுசெல்கின்றார்கள் ..... பொலிஸ் தேடிவருவான் என்ற சந்தேகத்தில் பணத்தை மூன்றாகப் பிரித்து ஒரு தொகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு காரை ஒரு நம்பிக்கையான வீட்டில் விட்டுவிட்டுத்் தாங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றார்கள். 

அடுத்து மூன்று மணித்தியாலம் களித்து தலைவர் போகவில்லை செல்லக்கிளி அம்மானோடு மூன்று பேர் மட்டும் போய் காரை எடுத்துக்கொண்டு கரவெட்டிக்குச் சென்றார்கள். அங்கே சென்று தங்களிற்கு  நம்பிக்கையான ஒரு வீட்டுக்கிணற்றில் அப்பணத்தை தண்ணீர் உள்ளே செல்லாதவாறு  ( ப்) பார்சல் பண்ணி போடுகின்றார்கள். போட்டுவிட்டு வேறு இடம் தப்பிச் செல்கின்றார்கள்.


மூன்று நாள் சென்று செல்லக்கிளி அம்மான் இன்னொருவர் என்று  இருவர் கிணற்றைப் போய் பார்க்கின்றார்கள் அங்கே பணம் உள்ளது . ஆனால் இவர்களிற்கு நீரிக்குள் சுழியோடத் தெரியாது. அப்பொழுது பக்கத்தில் நின்ற ஒரு பொடியனைக்கூப்பிட்டு கிணற்றுக்குள் இறங்கிப் பெட்டியை எடுத்துதுத்தருமாறு கேட்க அவர் முடியாது என்று சொல்ல அவரை விரட்டி உள்ளே இறக்கி அப்பெட்டியை எடுக்கின்றார்கள். அதை எடுத்ததும் ஒருவர் சொல்கின்றார்" இது கொள்ளையடித்த பணம் என்று" அதற்கு செல்லக்கிளி அம்மான் அவனிற்குப் பேசிவிட்டு இது எங்கட பணம் என்று சொல்லி இருவரும் முரண் பட்டுக்கொண்டு சென்றார்கள்.


இப் பணத்தைக்  கொண்டு இவர்கள் குருநகரில் இருந்த நம்பிக்கையானவரான அருளாளன் ஐயா வீட்டில் பாதுகாப்பாக வைத்துச் சென்றுள்ளார்கள், இரண்டு கிழமை கழித்து  ஆஸ்பத்திரி செல்வதாக சொல்லி அவர் சென்று அப்பணத்தை உரியவர்களிடம் கொடுத்துள்ளார். இவரைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்த செல்லகிளி அம்மான் சொற்கண்ணை இவரின் கையில் கொடுத்து ஒரு படம் எடுத்து வைத்துள்ளார். இன்றையில் இருந்து நீர் எங்களிற்கு உரிய ஆள்தான் எனச் சொல்லி விட்டு அனுப்பியுள்ளார். பின்னாளில் 1995ம் ஆண்டு அமைப்பில் இணைந்த இவர் இறுதி2009 /05/18 வரையிருந்து அன்று குருநகரில் சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார்.


 இலங்கைத் தமிழர் வரலாற்றில் முதல் முதலாக அரசியல் தஞ்சம் கோரிய தமிழராக இவரே உள்ளார் என்பதை எவரும் மறந்து விட முடியாது.ஆரம்பகால தமிழர் பேரவை தலைவராகச் செயல்பட்ட சத்தியசீலன் முதல் முதலாக 1977 ம் ஆண்டு இலங்கையில் வாழமுடியாது என பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரினார். அவரின் கோரிக்கை பிரித்தானியா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர் அங்கே சென்று தனது தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.


இவரைத்தொடர்ந்து பயந்த தமிழர்கள் அனைவரும் சுதந்திரமும் வேண்டாம்; போராட்டமும்வேண்டாம்; எனச் சிக்களவற்குச் சார்வான தமிழர்களும் சரி; தமிழர்களின் தனி நாட்டுக் கொள்கைக்கு ஆதரவானவர்களும் சரி;  அனைவரும் சுயலாப வாழ்விற்காக வெளிநாடுகளிற்குச் சென்று அரசியல் புகளிடம் கோரினார்கள். அவர்கள் அனைவருக்கும் அரசியில் புகளிடம் வெளிநாடுகளால் வழங்கப்பட்டது.


1978ஆம்ஆண்டு பிற்பகுதி மாத்தையா மற்றும் நவம்டடி,சதாசிவம், கிட்டு இணைக்கப்பட்டனர்.  



1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாலா அண்ணை அவரின் மனைவி அடல்இருவரும் எமது அமைப்பில்இணைக்கப் பட்டனர். 


 இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலா அண்ணை, அவரின் மனைவி அடல்இருவரில்  பாலா அண்ணை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களான மதி, குமரன், குமணன், மாத்தையா , ராகவன், சுந்தரம், வாத்தி,  கலாபதி, நிர்மலன், தம்பி போன்றவர்களிற்கு இரவு பகலாக விடுதலைப் போராட்டம் எப்படி நடத்துவது; எப்படி எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாப்பது; எப்படி வெளிநாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றது; எந்த நாடுகள் சுதந்திரம் அடைந்துள்ளன; என அனைத்து  விடயங்களையும் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து அவர்களுக்கு பாடங்களையும்  எடுத்துக் கொண்டேயிருந்தார்.......

                         

அது மட்டும் அல்ல இறுதியாக அவர் சாவடையும்வரை  தலைவருக்கு உதவியாக ஒரு சிறந்த ஆலோசகராகயிருந்து  எமது விடுதலைப் போட்டத்தை பாதுகாத்தார். என்பதனை  தமிழர்களாகிய நாம் மறந்து விடக் கூடாது. அடல் அன்றியும் அப்படித்தான் பெண் போராளிகளிற்கு ஆங்கில வகுப்பு எடுப்பதில் இருந்து பெண் போராளிகளிற்கு பயிற்சி வழங்குவதில் இருந்து விடுதலைப் போட்டத்தைப் பற்றி யாராவது தவறாகக் கதைத்தாலோ அவர்களிற்கு எதிராக ஆங்கில வடிவத்தில் அறிக்கை எழுதி விடுவதில் இருந்து பலவழிகளில் எமது விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாத்திருக்கின்றார்.

 இதே ஆண்டுதான் குமணன் இணைக்கப்பட்டார்.  அந்தக்காலத்தில் பன்றிகெய்தகுளம் பண்ணைக்குச் சோமண்ணன் பொறுப்பாக இருந்தார். அவருடன் பீரிஸ் ,மனோவாத்தி,மொட்டைப் பிறேம், ஆகியோர் அப்பண்ணைக்கு வந்துஇணைந்துகொண்டார்கள்.
இப் பண்ணைக்கு தம்பி, செல்லக்கிளி, ஐயர், கலாபதி, மதி, குமணன் உரும்பிராய் பாலா, மாத்தையா, விசு ஆகியோர் வந்து போவார்கள். ஆனால் விசு ஒரு சந்தர்ப்பத்தில் சிங்களப் படைகளிடம் கைது செய்யப்படுகின்றார். இச்செய்தியை மாத்தையா அறிந்தவுடன் ஜயர்ருக்கு தெரியப்படுத்த ஐயர் அம்முகாமிற்கு வந்து இந்திரன், காந்தன் இருவரையும் மட்டக்களப்பு போய் டானியல் அவர்களின் தொடர்பில் இருக்குமாறு அனுப்பிவிடுகின்றார்.


அடுத்து ஏனையவர்களை ஐயர் கூட்டிச்சென்றதும்  அப்பண்ணை மூடப்பட்டது. இவர்கள் மட்டக்களப்பு சென்றதும் பிரபல வர்த்தகரான விஸ்வலிங்கம் உதவியுடன் தொப்பிகல பிரதேசத்தில் இரண்டாவது பண்ணை ஒன்றை அமைக்கின்றார்கள். இதற்கு டானியல் பொறுப்பாக உள்ளார். அங்கே காந்தன், றிசேச்சர், இந்திரன், மதி இவர்கள் அங்கே செயல்படுகின்றார்கள். அடுத்த பண்ணையாக மீயான்கல்குளம் அருகில் ஒரு பண்ணை இருந்தது. அங்கே நெல் பயிர் மேற்கொள்ளப்பட்டன. அங்கே பாம்பு மற்றும் முதலைஇவற்றில் இருந்து தான் மயிரிழையியில் தப்பியதாக அங்கே இருந்த மதி குறிப்பிடுகின்றார்.

பொட்டுஅம்மான்)1980 காலப்பகுதியில்
தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு.யோகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில்;  அவர் நல்ல உணர்வான கருத்தை இளைஞர்கள் மத்தியில் சொன்னமையால் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். ஆனால் அம்மான் மட்டும் பிளேட்ரால் தனது கையைக் 
கீறி இரத்தத்தால் பொட்டு வைத்தார். இதனால்தான் அவருக்கு பொட்டுஅம்மான் 
எனப் பெயர் உருவானது.

 அக்காலப் பகுதியில் ஈழப்போராளிகள் அரசிற்கு எதிராகப் பெரிய தாக்குதல்கள் எதையும் செய்யவில்லை. காரணம் கணிசமானவர்கள் ஜெயில் கைதிகளாக இருந்தார்கள். ஏனையவர்கள் பாதுகாப்புக் காரணங்களிற்காக இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்தார்கள். 

இதே காலப் பகுதியில்தான் பொட்டுஅம்மான் எமது அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பின் புலனாய்வுத் தலைவராகவும்; இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும்; இறுதிவரை கடமையாற்றினார்.


இவர் மிகவும்  நம்பிக்கையான ஒரு தலைவராகக் காணப்பட்டார். அதைவிட தலைவருக்கு மிகவும் விசுவாசமான தளபதியாகவும் கருதப்பட்டார். அது மட்டும் அல்ல இந்தியாவின் உளவுப் பிரிவின் மூளைச்சலவைக்கு ஆளாகி தலைவரைக் கொலை செய்ய மாத்தையா மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முறியடித்து தலைவரையும், இயக்கத்தையும் பாதுகாத்தார்.

அத்தோடு மட்டுமல்ல சிங்கள அரசால் தமிழீழம் மீது நடத்தத் திட்டமிடும் தாக்குதல்களை முன்கூட்டிய அறிந்து கொழும்பில் பல தாக்குதல்களையும் நடாத்தி அதை திசை திருப்பி தமிழீழத்தைப் பாதுகாத்தார்.
தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பொட்டு அம்மானை  1982 ல் விடுதலைப் புலிகளின் மூத்தபோராளி காக்கா அண்ணையால் இனங் காணப்பட்டு எமது அமைப்பில் இணைக்கப்பட்டார். பின்னர் 83 நடுப்பகுதியில் உடையார் கட்டு இருட்டுமடுவில் நடந்த பயிற்சி முகாமில் அவர் பயிற்சி எடுத்தார்.

அவருக்கான பயிற்சியை தலைவர் நேரடியாக வழக்கினார். அடுத்து மட்டக்களப்பில் அருணா பொறுப்பாகயிருந்த காலத்தில் அங்கே கடமையாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில் இராணுவற்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வேளை  அங்கே ஒரு பெண்ணைக் காதலித்து பின் தலைவரின் அனுமதியுடன் அப்பெண்ணை 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில்கட்டிக் கொண்டார். இயக்கத்தின் ஐந்தாவது திருமணமாக இது நிகழ்ந்தது.  இவருக்கு  மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவரின் கடைசிப்பிள்ளை இறுதி யுத்தத்தில் 4ஆம் மாதமளவில் எதிரிகளின் செல் தாக்குதலில் சாவடைந்தது; பின்னர் 2009 இல் இவருக்கு என்ன நடந்தத என்பதைப் பிறகு பார்ப்போம்.


அனைவருக்கும் வணக்கம்...!
 இவ் ஆவணமானது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புச் சம்பந்தமானது. அதைவிட எமது தலைவனின் நேர்மையான பயணம் தொடர்வானது; இக்கதையை நாம் ஆவணப்படுத்திவந்தோம். ஆனால் வெளியிடுவதுற்கான தேவையேற்படவில்லை. இருந்தும் "மேதகு 2"  படம் வெளிவந்தபின்னர் அதில் பெண் போராளிகளின் இணைவு பற்றியோ; தலைவரின்  மெய்ப் பாதுகாவலர்கள் பற்றியோ; அவரின் நல்ல நடத்தைகள் பற்றியோ;  அதில் குறிப்பிடவில்லை. மாறாக அவர் ஒரு கொலைகாரன் போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தார் .  அது சம்பந்தமாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது!  "உயிர் போனாலும் கதைத்தவரின் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்" என தெரியப்படுத்தினார். இன்னொருதரின் போன் நம்பர் அவர் தந்தார்.  அது வேலை செய்யவில்லை. 

இருந்தும்  பலர்" போன்" எடுத்து எமக்குக் காரசாரமாகப் பேசினார்கள். அது மட்டும்அல்ல படம் ஓடிய இடத்தில் என்னைப் பார்த்து ஒருதர் காறி முன்னால் துப்பினார். இளநீர் குடித்தவன் தப்பி விட்டான்;  கோம்பை சாப்பிட்டவன் சிக்கி விட்ட கதையாகவே இருந்தது. அதனால் நாம் இவ் ஆவணத்தை வெளியிட்டோம். இதில் ஏதாவது தவறு இருந்தாலும் ; அல்லது இணைக்கப்படாமல் சில கதைகள் இருந்தாலும் ; உங்களின் போன் நம்பருடன்  உங்களிற்கு தெரிந்த கதைகளை எழுதி கீழே குறிப்பிடும் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்.  இவ் ஆவணமானது தலைவரால் சொல்லப்பட்டு;  ஆரம்ப  இராணுவப் பயிற்சி          
  போராளிகளுக்குப் படிப்பித்துக் கொடுக்கப்பட்டது. என்பதை நினைவூட்டுகின்றேன்.  
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்____

1 கருத்து:

a 222 தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

  தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை ஜனாதிபதி அநுர கும...