உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 17 ஜூலை, 2023

mother a 255(2)தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு (பாகம் 02 )

 

பாகம் 02 தமிழிழீழக்கதை Tamil Eelam of story

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு


தலைமைப்பீடத்தின்=கதை CAPITAL OF STORY

இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி சுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உன்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர் என்பவரால் எழுதப்பட்டது  இது தமிழீழ விடுதலைப் புலிகளின் மாஸ்ற்றர் book. இதை 7 முதல்நிலைப் போராளிகள் சரிபார்த்துள்ளனர்,

1980 தொடக்கம்1985 வரையான
பிரத்தியேகமான 

வரலாறுக்கதைகள்உள்ளடக்கம்,


  பாகம் 02 உள்ளடக்கம்

1980 தொடக்கம் 1985 வரையான போராட்ட

 வரலாற்றுக் கதைகளுடன் மேலும் பல கதைகள் உள்ளடக்கம்;


01-05/04/1981  குட்டிமணி தங்கத்துரைகைது

02 31/05/1981 யாழ்பொது நூலகம் ;ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம்;  எரிப்பு மேலும் பல கலவரங்கள் சிங்களக் காடையர்களால் யாழில் நடத்தப்பட்டது,


03 15/10/1981தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கை.

04 புலிச் சின்னம் அதாவது தேசியக்கொடி தலைவரால் உருவானது,

05 19/05/1982/அன்று பாண்டி பஜாரில் தலைவர், உமாமகேஸ்வரன் சண்டை நடைபெற்றது;

06 எம் ஜீ ஆர் அவர்களிற்கும் எமது அமைப்பிற்குமான உறவு ஆரம்பம் ஆனது,

07 ,29/07/1982 ஜெ.ஆர் ஜேவர்த்தனாவின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்த்தும் மேலும் பல தாக்குதல் விடுதலைப் புலிகளால் அரசிக்கு எதிராக நடத்தப்பட்டது,

08  27/11/1982 அன்று விடுதலைப் புலிகளின் முதல் மாவீரன் சங்ககர் வீரச்சாவு அடைந்தார்

09 ,,04/02/1983 அன்று போராளி அற்புதன்அல்லது பொன்னம்மான் தலைமையில்தாக்குதல்,

10 18/05/1983 அன்று உள்ளூர் ஆட்சித் தேர்தலின்போது கந்தர்மடத்தில்தாக்குதல்,

11 07/04/1983 இத்தாக்குதலிற்குப்பிறகு  கிட்டு அவர்கள் செல்லக்கிளி அம்மானின் உதவியாகத் தலைரால் நியமிக்கப்பட்டார்.

12  23/07/1983 அன்றுதிருனல்வேலித்தாக்குதல் பற்றி கேணல் கிட்டு

13 24 /07 /1983  இரவு தொடங்கிதென்னிலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக்காடையர்கள் தாக்குதல் ஆரம்பம் ஆனது.


14 இதைத் தொடர்ந்து,இந்தியா மத்திய அரசு தமிழ் இளைஞர்களிற்கு பயிற்சி தர முன்வந்தது



15 1983 /08 மாதம்ஆம்பத்தில் இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கு கடுமமையாக உழைத்த அவரின் மனைவி அடல் மற்றும்  பாலா அண்ணை இதைப்பற்றி விளக்குகின்றார்.


16 1983 அக்டோபர் மாதம் பிரபாகரனும்; அவரோடு சில மூத்த தளபதிகளும்; இந்தியா வந்தனர்.


17  எம்ஜிஆர் எமக்கு உதவ முன்வந்தார்,

18 1983/11 ஆம் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு பயிற்சி தர இந்தியா அனுமதி வழங்கியது.

19 10/04/1984மட்டு ஜெயிலை உடைத்து நிர்மலாவை மீட்டனர் புலிகள்.

20 

 1984 ஆண்டு 09ஆம்  மாதம் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின்  ஐந்தாவது பயிற்சி முகாம்பற்றி;

21  2/03/1984 பயிற்சியை  முடித்து வந்த பரமதேவாவை கிட்டு அவர்கள் தான் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.

22 யாழ் மாவட்ட முதல் தளபதிகப்டன். பண்டிதர் அவர்கள் வரலாறுருக்கும் 


23 01/10/1984 அன்றுதேயத்தலைவர் அவர்களிற்கும் செல்லி மதி  அவர்களிற்கும் திருமணம் நடைபெற்றது

24 19/11/1984 அன்று கட்டுவன் பதியிலும் மேலும் பல இடங்களில் சிறு சிறு தாக்குதல்கள் நடைபெற்றது

25 15/02/1985   - (6) ஆறாவது பயிற்சி முகாம் பற்றி அதில் பயிற்சி எடுத்தபோராளி நாடன்  குறிப்பிடுகையில்;

26  03/07/1985திம்பு பேச்சுவார்த்தைக்கு புலிகளை இழுக்கும் பொறிமுறையை உருவாக்கிய இந்தியா.

27 13/07/1985 பூட்டான் திம்புவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஈழப் போராளிகள் இந்திய  மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

28  மகளீருக்கான (7) ஏழாவது பயிற்சி முகாம் பற்றி மூத்த போராளி தீபா

29  1985 ஆம் ஆண்டு தமிழர்புனர் வாழ்வுக் கழகம்

 இதற்கான அலுவலகம் சென்னை அடையாறு இந்திரா நகரில் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்

05/04/1981 அன்று தங்கத்துரை குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

********************************


வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது  காரணம் ஈழப் போராளிகளின் தாக்குதல்கள் வட கிழக்கில் அதிகமாக நடத்தப்பட்டமையால் அந்நிலையேற்பட்டது,.

 அந்த நாட்களில் இவர்கள் தேசியத் தலைவரோடு இணைந்து செயல்பட்டார்கள் என்ற வகையில் 25/03/1981 அன்று நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலையில்  அமைந்திருந்த இடத்தின் முன்புற வீதியில் வைத்து யாழ்குடா நாட்டின் சில வங்கிக் கிளைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கள் வங்கிப் பணம் கொண்டு வரப்பட்ட வாகனம் வழிமறிக்கப்பட்டு 82 இலட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டதுகுட்டிமணி அவர்களியின் நண்பர்களின்பங்களளிப்பே அவ் தடவடிக்கைக்குக் கூடுதலாகயிருந்தது.அதனால்.

 குட்டிமணி மற்றும் தங்கத்துரை இருவரையும் சிறிது காலம் இந்தியா சென்று பாதுகாப்பாகயிருக்குமாறு தலைவர் உட்பட ஏனைய மூத்த போராளிகளும் ஆலோசனை வழக்கியதற்கு அமைவாக

 ,05/04/1981 மாலை வல்லிபுரக் கோவிலுக்கு முன்பாக மணல் திடல்களைக் கடந்து கடற்கரையைமூவரும் அண்மித்தபோது   சிங்களக் கடற்படையினரால் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் மூவரும் கைது செய்யப்பட்டனர்;

இது நடந்தபின்னர் எம்மவர்களால்தான் இவர்கள் கைது செய்யட்பட்டதாக மக்கள் மத்தியில் குட்டிமணியின் நெருங்கிய நண்பர்கள்  தேவையற்ற வதந்திகளைப் பரப்பியதால் இது எம்மவர்களின் காதுகளிற்கு எட்டி பின் நாட்களில் அது எமது தலைவருக்குத் தெரியவந்தது. அதானால் தொடர்ந்து அவர்களோடு இணைந்து செயல்படுவது இல்லையென தலைவர் முடிவு எடுத்தார்.

                    

வடமராட்சிக்  கடற்பரப்பில் கள்ளக் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இருந்த கடல் படையினரே இவர்களைக் கைது செய்தார்கள்.


இப்பிரச்சனை நடந்தபின் அப்பொழுது ரெலோவின் தலைவராக இருந்த சிறிசபாரத்தினத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தால் அவர்களிடம் இருந்து பிரிவதெனத் தலைவர் முடிவு எடுத்தார். அது என்னோடு கலந்து ஆலோசித்தபோது அவர்களோடு இணைந்து பறிக்கப்பட்ட மக்கள் வங்கிப்பணத்தில் வாங்கப் பட்ட ஆயுதங்கள், மற்றும் என் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தபணம் என்பவற்றைச் சிறிசபாரத்தினத்திடம் ஒப்படைக்கப்போவதாகப் தலைவர் என்னிடம் குறிப்பிட்டார்.


அந்த பணத்தைப் பாதுகாத்ததில் பெரும் பங்கு எமது அமைப்பாக  இருந்தது. அதனால் அவற்றில் பத்து லட்சம் ரூபாய்களை நான் பாதுகாத்ததாக தங்கத்துரை அரசபடைகளிடம் சொல்லியுள்ளார். எனவே அப்பணத்தை பாதுகாக்க கடுமையாக கஷ்டப் பட்டவர்கள் நாங்கள்தான். ஆகையினால் அரைவாசிப் பங்கை கேட்கலாம்தானே என்றேன்.


அதற்குத் தலைவர் சிரித்தபடியே உங்களிற்குத் தெரியும்தானே அண்ணை நான் என்ர சொத்தக் காலில் நிற்பவன் திரும்பவும் நாங்கள் வளருவோம் என்றார். அவர் சொன்னபடியே அனைத்துப் பணம்; வேண்டப்பட்ட ஆயுதம்; அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தோம்.அதிலிருந்து அவர்களிற்கும் எமக்குமான அனைத்துத் தொடர்வுகளும் நிறுத்தப்பட்டன. எனத் தேவர் அண்ணா குறிப்பிட்டார்.



 அதேகாலப்பகுதியில் சிங்களக் காடையர்களால் யாழில் நடத்தப்பட்ட கலவரத்தை நேரில்கண்ட தேவர் அண்ணை குறிப்பிடுகையில்.....


31/05/1981 யாழ்பொது நூலகம் ;ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம்;  எரிப்பு தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட  அந்த நூலக எரிப்பின் மூலம் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வரையான நூல்களும் மீண்டும் என்றுமே தேடியும் கிடைக்க முடியாத வரலாற்றுப் பண்டையத் தமிழர்களின் ஆவணமும் அனைத்தும் அழிக்கப்பட்டன.

யாழ் பொது நூலக எரிப்பு என்பது தமிழினப் படுகொலையின்  ஒரு அங்கமே... ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அந்த இனத்தின் வரலாற்றுச் சுவட்டை அழிக்க வேண்டும் என்ற சிங்களவர்களின் சிந்தனையில் வெளிப்பாடே அதுவாகும்.


31/05/1981 ஆம் நாள் நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்ற விடுதலைக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வினைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்தை எரிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? குட்டக் குட்டக் குனியாமல் தமிழர்கள் தட்டிக்கேட்கத் துணிந்து விட்டார்கள். இதைப் பொறுக்க முடியாமல் தங்களின் இனவேற்றுமையைக் காட்டிய நாளாகவே இதைக் கருத முடியும்.


சிங்களப்பொலிஸாரின் பாதுகாப்புடன் காமினி திஸநாயக்கா தலைமையில் யாழ் சிங்கள மகா வித்தியாலயத்தில் கொண்டு வந்து குமவிக்கப்பட்டு இருந்த சிங்களக் காடையர்களினாலேயே 31 ஆம் திகதி இரவு பொது நூலகம் எரியூட்டப்பட்டது. ஆனால் அந்தச் சம்பவம் நடைபெறும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடையவில்லை. அவர்கள் பலமாகயிருந்த நாட்களில் இது நடந்து இருந்தால்  காமினி தலமையிலான அனைத்துக் காடையர்களும் கொலை செய்யப்பட்டுயிருப்பார்கள். இதைத் 
தொடர்ந்து நாச்சிமார் கோயிலுக்கு சீருடை அணிந்தும், அணியாமலும், சிங்களக் காவல்த் துறையினரும்; சிங்களக்காடையர்களுமாக; சுமார் ஆயிரக்கணக்கில் வந்து தங்களின் வெறியாட்டத்தை ஆட வெளிக் கிட்டார்கள். தமிழர் பொருளாதாரம் மற்றும் பெறுமதியான தமிழர் உயிர்கள் அழிவதை என் கண்ணால்ப் பார்த்தேன்.இதேகாலம்தான் எமது இயக்கம் இராணுவம் மீது முதலாவது தாக்குதலை நாடத்தினார்கள் 

15/10/1981தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கை.





அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு  இராணுவத்தினர் கொல்லப்பட்டு, அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

அடுத்து கலவரத்திற்கு வருவோம்முதலாவதாக நாச்சிமார் கோயிலின் கோபுரம் தீயிடப்பட்டது. கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலிருந்த வீடுகள்,கடைகள் ,தீயிடப்பட்டதோடு அப்பாவி பொது மக்களும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர்.


அத்தோடு அவர்களின் வெறியாட்டம் நின்றுவிட வில்லை. யாழ் நகர் உட்பட குடாநாடு பூராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டன. யாழ் பழைய சந்தைக் கட்டிடம் ;பூபாலசிங்கம் புத்தகசாலை ; உட்பட 86 க்கும் மேற்பட் கடைத் தொகுதியும் தீயிடப்பட்டது. யாழில் பழமை வாய்ந்த சந்தை; பிள்ளையார் ஸ்ரோர்க்கட்டிடம்; எரிக்கப்பட்டதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு லொறிகள் மற்றும்404 பேஜோ காரும் தீக்கிரையாக்கப்பட்டது.


யாழில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஈழநாடு பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டது. அதற்கு உள்ளே இருந்த நிறுவனர் திரு,ப, சிவானந்தன் என்பவரும்; பணியாளர் திரு சச்சிதானந்தன் ;இருவரும் பலத்த தீக்காயங்களிற்கு உள்ளாகினர்.


யாழ் நகரின் மத்தியில் பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒளவையார் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டன. யாழ் பிரதான வீதியில் அமைந்திருந்த விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் தீயிடப்பட்டது. அடுத்து திருநெல்வேலிப் பகுதியில் இருந்த நாடளுமன்ற உறுப்பினர் திரு மு. சிவசிதம்பரம் அவர்களின் அலுவலகம் எரியூட்டப் பட்டதோடு  அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாலஜோதி என்ற இளைஞரும் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.


கோப்பாய்ப் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த விவசாய உத்தியோகத்தர் திரு அ.பரமேஸ்சுவரன் என்ற இளைஞர் நடு வீதியில் வைத்துச்சுட்டுக்கொல்லப்பட்டார்

சிங்கள வெறியர்களின் வெறியாட்டத்தில் பல நூறு உயிர்களும்; பெறுமதியான உடைமைகளும்; அழிக்கப்பட்டது. இதன் வெளிப்பாடாய் திருநெல்வேலியில் வைத்து கூடுதலான சிங்களப் படைகளைக் கொல்ல வேண்டும் என்ற வைராக்கியம் செல்லக்கிளி தலைமையாலான இளைஞர்களிற்கு ஏற்பட  தம்பி பிரபாகரன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்பதை இக்கதையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.



ஐக்கிய தேசியக்கட்சிபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும். அதாவது ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றுமொரு துயரச் சம்பவமாகும்.

ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?


யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன் 1981 ஜூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.கட்சியினால் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டு இருந்தமையும் நாம் நினைவு கூறத்தக்கது. கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.

 தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இன வன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா? என்பது எப்போதும் முடியாத காரியம்.


அக்காலப் பகுதியில் 25 இற்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் முளைத்துக் கொண்டு இருந்தன. இவர்களின் இலக்கு தமிழர்களைப் பாதுகாப்பது தொடர்ந்து அவர்களின் சுதந்திரத்திற்காகப் போராடுவது இது தான் இவர்களின் இலட்சியமாக இருந்தது. அதில் மக்கள் அறிந்து கொண்ட அமைப்புக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றேன்... ரெலோ01, ஈ.பி. ஆர். எல்.எப்02, ஈரோஸ்03, பிளேட்04, தம்பாப்பிள்ளை இயக்கம்,மற்றும் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் எனக் குறிப்பிடாலாம்.



இதே காலப்பகுதியில்தான் தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் சில குறிப்பிட்ட போராளிகளிற்கு உடையார் கட்டில் உள்ள இருட்டு மடுவில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது, அதுவே விடுதலைப் புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் ஆகும்,
அப்பயிற்சியை தேசியத்தலைவரே நேரடியாக வழங்கியானார், அதின் நிர்வாகப்பொறுப்பாராக   தளபதி கிட்டுகடமையாற்றினார், உடல் பயிற்சிகளை புலேந்தி மற்றும் செல்லக்கிளி அம்மான் இருவரும் வழங்கினார்கள் அதில் பயிற்சி எடுத்தவர்களின் பொட்டுஅம்மான் 01 யோகன் 02 விக்டர் 03 ராஜேஸ் 04 லிங்கம்05 சுப்பண்ணா 06 றெஜி 07 ஞானம்08 கணேஸ் 09 அருனா 10 கிட்டு 11 இதில் மொத்தம் 16 போராளிகள் பயிற்சி எடுத்தார்கள், அப்பயிற்சி முகாமில்வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் சத்தியப் பிராணம் உருவானது,

இதே காலப்பகுதிதான் எமது அமைப்பிற்கான புலிச் சின்னம் அதாவது தேசியக்கொடி உருவானது, 

    விடுதலைப் புலிகளின் சத்தியப்பிராணத்தை தெளிவாகப்படிக்கவும் இதை ஏற்றுக்கொண்டுதான் ஜம்பதினாயிரம் போராளிகளும் தங்களின் உயிரை அற்பணித்தார்கள்,    


    எமது புரட்சிகர இயக்கத்தின் 


மேன்மைமிகு குறிக்கோளாம் 


சமவுடமை தன்னாட்சி 


தமிழீழ விடுதலைக்காக 


எனது உள்ளம் உயிர் உடல் உடமை அனைத்தையும் ஈந்து


உறுதியோடு போராடுவேன் என்றும் 


எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 


வழிநடத்தலை உளமார ஏற்று 


அவருக்கு என்றும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்படுவேன் என்றும் இதனால் உறுதி கூறுகின்றேன்


புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

                                                    

 மதுரையில் வாழ்ந்த ஓவியர் நடராஜா அவர்களிடம் தலைவர் மற்றும் பேபி அண்ணா இருவரும் சென்று புலிச் சின்னம் அதாவது தமிழீழச்தேசியக்கொடிக்கான வரைவு தொடர்வாகக்கதைத்துள்ளனர், இலங்கை தமிழர்கள் மீது அதிகம் பற்றுக் கொண்ட இவர் உங்களிற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்,


அதற்கு தலைவர் தாங்கங்ள் இயக்கம் ஆரம்பித்துயிருப்பதுபற்றியும் சோழமன்னனின் கொடியில் புலிச் சின்னம் இடம் பெற்றது போன்று எங்கள் கொடியிலும் புலிச்சின்னம் இடம் பெற வேண்டும் அதற்காகத்தான் உங்களிடம் வந்ததாகாக்குறிப்பிட்டுளார், அதைக் கேட்ட அவர் முழு மனதோடு அதைச் செய்துதருவதாகக் சொல்லியுள்ளார்,


தொடர்ந்து தலைவர், பேபி .ரகு மூவரும் என்னை அடிக்கடி வந்து சந்தித்து தங்களின் விருப்பத்தை அவர்கள் சொல்ல அவர்களின் எண்ணத்தின் படி கால்கள் இருந்தால் நல்லாக இருக்கும் என்றேன் உடனே தம்பி அப்படியே வரையுங்கோ என்றார், 11 தோட்டாக்கள் என 33 தோய்டாக்களை வரைந்து அவர்கள் விருப்பப்படி கத்தி உள்ள இரண்டு துப்பாக்கிகளோடு ஒன்றுக் ஒன்று குறுக்காக வளைவின் பின்புறம் இருக்கும்படி வரைந்து கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்,

  


தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பு ஆரம்பிக்கும்போது அமைப்பின் மத்திய குழுவால் சாவொறுப்புக்குரிய குற்றம்; மற்றும் தண்டனை வழங்கக்கூடிய குற்றம்; எனஇரு வகைகளாக வரையறுக்கப்பட்டது.

 01 . நிதிமோசடி  ஆதாவது இயக்கப்பணத்தை அனுமதி இல்லாமல் செலவு செய்தல் பிறருக்குக் கொடுத்தல் துலைத்துவிட்டதாக நடித்தல்,


02 .காட்டிக்கொடுத்தல்  இயக்கம் மறைத்து வைத்து இருக்கும் ஆயுதம்பணம் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக  இருக்கும் குடும்பங்கள் பற்றியவர்களின்  தகவல்களை எதிரிகளிற்கு தெரியப்படுத்துதல், 

03.பெண்கள் ரீதியான ஆண் பெண் உறவுகளில் ஈடுபடுதல் மற்றும் இயக்கத் தகவல்களை அவர்கள் மூலமாக எதிரிகளிற்கு தெரியப்படுத்துதல் என்பன சாவொறுப்பிற்கு உரிய குற்றறமாகும்.


அடுத்துதண்டனைக்கு உரிய குற்றம்; சண்டை நேரங்களில் அனுமதி இன்றி பின்வாங்கி வீடுகளிற்கு ஓடித் தப்புதல், தவறுதலாக துப்பாக்கியால் சுடுதல், பொறுப்பு நிலையில் இருப்பவரின் கட்டளைக்கு கீழ்படியாமல் எதிர்த்துக் கதைத்தல், அவருக்கு அடிக்கக் கை நீட்டுதல்,  அல்லது சக நண்பர்களோடு சண்டையிடுதல்  அடித்தல், தனிநபர் உடமைகள் மற்றும் குப்பித் தகடுககள், அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதம் அதன் உதிரிகளைக்கவனக்குறைவாகத்தொலைத்தல்,கொடுக்கப்படும் கடமைகளை செய்யாமல் அலட் சியமாகத் திரிதல் என்பன தண்டனைக்கு உரிய குற்றமாக் கருதப்படும்.

இவ்வகையில் பெண்கள் ரீதியான பிரச்சனையில் ஈடுபட்டு அமைப்பின் செயலாளராக  இருந்த உமாமகேஸ்வரன் வெளியேற்றப்பட்டுயிருந்தார்.



19/05/1982/அன்று பாண்டி பஜாரில் தலைவர், உமாமகேஸ்வரன் சண்டை நடைபெற்றது;


1982 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால ஆண் ,பெண் போராளிகள் தமிழகத்தில் ஒரு முகாமிலே வாழ்ந்தார்கள். அக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராக இருந்த திரு உமாமகேஸ்வரன் அடுத்து பெண் போராளி ஊர்மிலா இருவரும் மொட்ட மாடிக்கு மேல் ஒன்றாக இருந்தார்கள் என்று போராளி கலாபதி உறுதிப்படுத்தினார்.

மூத்த உறுப்பினர் சிலர் உண்மையை அறிவதற்காக கடுமையான விசாரணையை மேற்கொண்டனர்; பிரச்சனையை ஒப்புக் கொண்டால் நீங்கள் இருவரும் திருமணம் செய்து இயக்கத்தில் இயங்கலாம் என சொல்லப்பட்டது; ஆனால் நாங்கள் பிழைவிடவும் இல்லை இயக்கத்தில் இருந்து விலகவும் மாட்டம்; என இருவரும் அடம் பிடித்தனர்.


 அதன்பின்னராக மத்திய குழு கூடியபோது பெரும் பாண்மையான வாக்குகள் தலைவருக்கு ஆதரவாக இருந்தன;அதன் அடிப்படையில் இருவரும் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

அதை அடுத்து உமாமகேஸ்வரன் வேறு இயக்கம் உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தகாலப் பகுதியில் எதிர்பாராதவிதமாக 19/05/1982 அன்றைய நாள் பாண்டிபஜாரில் அரச  பஸ்தரிப்பு இடத்தில் இருவரும் சந்திக்கின்றனர்; 

தலைவரும் போராளி ராகவனும்மற்றும் ஜீவக்குமாரும் பஸ் நிக்குமிடத்தைநோக்கி நடந்துவருகின்றார்கள்;

 எதிர்பராத நேரத்தில் உமாமகேஸ்வரனை தலைவர்கண்டதும், தலைவர் முகுந்தன் என்று சொன்னதுதான் தாமதம் எந்த அனுமதியையும் போராளி ராகவன் எதிர்பார்கவில்லை;


உமாமகேஸ்வரனை நோக்கி ராகவன் சுடத்தொடங்கி விட்டார்; பதட்டம் அடைந்த உமா மகேஸ்வரனும் அவரோடு வந்த ஜெகதீஸ்வரன், சிவநேஸ்வரன், நிமலராஜன் மற்றும் கண்ணன் உமாமகேஸ்வரன் , அல்லது முகுந்தன் அங்காலப் பக்கம் 4பேர் அப்போது இவர்களில் நாலு பேரும் தலைவரை நோக்கி சுடுகின்றார்கள்; கண்ணனும் தலைவரை நோக்கிச் சுடத்தொடங்கிவிட்டார். இருந்தும் தலைவரோடு நின்ற ராகவன் குறிதவறாமல் சுடுவதில் பெரும் கில்லாடி உமாமகேஸ்வரனோடு வந்த கண்ணனைநோக்கி குறி தவறாமல் சுட்டார் ராகவன் பலமான காயம் ஏற்பட்டு துடிதுடித்துக்கொண்டு இருந்தார் கண்ணன்;


தமிழகத்தின் சனங்கள் அழுதகொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டு இருந்தார்கள்; உமாமகேஸ்வரனும் அவ் இடத்தை விட்டு ஓடிக் கொண்டேயிருந்தான். ஆனால் எதிர்மாறாக உமாமகேஸ்வரன் ஆட்கள் தொடர்ந்து சண்டையிட நினைத்து இருந்தால் நாலு பேரையும்போராளி ராகவன்  தீர்த்துக்கட்டியிருப்பான் என்பது உமாமகேஸ்வரனிற்கு நன்கு தெரிந்து இருந்தது. 

தலைவரோடு நின்ற போராளி ஜீவக்குமார் மட்டும்தான்  தமிழகக் காவல் துறையினரிடம் சிக்காமல் தப்பிச் சென்றார்; இவர் ஊடாகத்தான் தமிழகத்தில் இருந்தஎமதுஆதரவாளர்களிற்கும் அனைத்துப்போராளிகளிற்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

இது நடந்து கொண்டு இருக்க உடனே அவ்விடத்திற்கு விரைந்த தமிழகக்காவல்துறை 4 பேரையும் பிடித்துக்கொண்டு சென்று விட்டது.


  அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து இருந்தனர்.இது இப்படி இருக்க போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் ஐயா நெடுமாறன் ரூரிஸ் விசாவில் சென்று அவுஸ்திரேலியாவில் நின்றார். இத்தகவல் அவருக்குத் தெரிந்து விட்டது; அவர் உடனே தனது ஆதரவான வழக்கறிஞர்களிற்குத் தெரியப்படுத்தினார்; பிரபாகரனை விடுதலை செய்யும் வரை வீதியில் இறங்கிப் பாரிய ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கட்டளை வழங்கினார்; அதனால் தமிழகம் பெரும் கலவரபூமியாக மாறியது;


 சென்னை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தலைவர் அவர்கள் வழக்கறிஞர் திரு கே எஸ் ராதாகிருஸ்ணன் அவர்களால் 05/08/1982 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடிய காரணத்தால் பிணையில் சென்று வீட்டுக் காவலில் வாழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதை அடுத்து நெடுமாறன் ஐயா தேசியத் தலைவரை அழைத்துச் சென்று மதுரையில் தங்கவைத்தார்.


இது இவ்வாறு இருக்க தேசியத் தலைவரை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் நிலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு பல முயிற்சிகள் ஏற்பட்டன. அதில் ஒன்றைப் பார்ப்போம்....! இது   எமது மூத்த போராளிகளான   சீலனின் முடிவு; சென்னையில் உயரமான கட்டிடமாக விளங்கிய எல் , ஐ.சி கட்டிடத்தின் உச்சியில் இருந்து  01 சீலன்,02 ரஞ்சன்லாலா,03 புலேந்திரன்,04 இவர்கள் நாலு பேரும் ஒருதர் பின் ஒருவராக குதித்து தற்கொலை செய்வது என அவர்கள் முடிவு எடுத்தனர்.

அப்படி செய்தால் கண்டிப்பாக இந்தியா அரசு இலங்கையிடம் இவர்களைக் கையளிக்க அல்லது நாடுகடத்தமாட்டார்கள் என்பதே சீலனின் கூற்றாக இருந்தது.  அக்காலத்தில் தலைவருக்கு அடுத்த நிலையாகவும்; தலைவர் உடைய தீவிர விசுவசமாகவும் இருந்தவர் சீலன் என்பதை எம்மால் மறக்க முடியாது.



ஆரம்பத்தில் எமது இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு உமா மகேஸ்வரனிடம் இருந்தது. அவரைக் கலைத்தபின்னர் ,இயக்கத்தினுடைய இரண்டாவது
திறப்பு சீலனினிடம் இருந்தது.
சீலனின் வீரச்சாவிற்குப்பின்னர் இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு செல்லக்கிளி அம்மானின் கையில் இருந்தது . செல்லக்கிளி அம்மானின் வீரச்சாவிற்குப்பின்னர்  இயக்கத்தினுடைய  இரண்டாவது திறப்பு கிட்டு அண்ணையின் கையில் இருந்தது. கிட்டு அண்ணையின் விரச்சாவிற்குப்பிறகு இயக்கத்தினுடைய இரண்டாவது திறப்பு பொட்டுஅம்மானின் கையில் இறுதி 2009 மட்டும் இருந்தது.   இந்த உண்மை தலைவரோடு நின்ற ஒரு சிலருக்கு மட்டும் தெரியும் என நினைக்கின்றேன்.




இதை அறிந்த பேபி அண்ணா அவர்கள் அந்தச்செயலை செய்ய விடாது தடுத்தது மாத்திரமின்றி தன்னால் இயன்றவரை செயற்பட்டு  தலைவர் அவர்களை நாடு கடத்தும் ஆபத்தில் இருந்து தப்ப வைப்பதில் பெரும் பங்காற்றியவர் பேபி அண்ணா.

,16/07/1989 அன்று இனம் தெரியாக நபர்களால் கொழும்பில் வைத்து உமாமகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.அடுத்து ஊர்மிலா தனது சொந்த ஊரான வவுனியாவில் வாழ்ந்துகொண்டியருந்த வேளை மஞ்சட் காமாளை நோயால் சாவடைந்தார்.

               


உள் வீட்டுப்பிரச்சனை காரணமாக பாண்டி பஐாரில் தலைவருக்கும், உமாகேஸ்வரனிற்கும்  இடையில்சண்டை நடந்தசண்டையின்போது தான் எமது அமைப்பிற்கும் எம் ஜீ ஆர் அவர்களிற்குமான உறவு மலர்ந்தது .

 அச்சம்பவத்தின் போது இருவரையும்  இந்தியப் பொலிஸார் கைது செய்தனர். அதை அடுத்து அவர்களை இலங்கை அனுப்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது; அதுதொடர்பாக 

 01/06/1982 அன்று ஐயா பழநெடுமாறன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.




 அக்கூட்டத்தில் பிரபாகரன் உட்பட போராளி முகுந்தன் எவரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்ட்டது.





எம் ஜீ ஆர் அவர்களிற்கும் எமது அமைப்பிற்குமான உறவு ஆரம்பம் ஆனது,

அந்தத் தீர்மானத்தைக் காரணம் காட்டி எம் ஜீ ஆர் அவர்கள் இந்திய மத்திய அரசிற்கு எழுதிய கடிதம் தேசியத் தலைவர் உட்பட அனைத்துப் போராளிகளையும் காப்பாற்றியது.


எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்பதிக்க மாட்டேன் என உறுதியோடு இருந்தவர் எம். ஜீ .ஆர் அன்றில் இருந்து M.G.R அவர்களிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமான உறவு ஏற்பட்டது. 


இதேகாலம்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

02/07/1982 அன்று நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் படை மீது விடுதலைப் புலிகள் நடாத்திய மின்னல் வேகத் தாக்குதலில்  4 பொலிசார் கொல்லப்பட்டனர்; மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.;அதில் பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது, எவ்விதமான இழப்பும் ஏற்படவில்லை.




,29/07/1982 ஜெ.ஆர் ஜேவர்த்தனாவின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்க்கும் முகமாக பொன்னாலைப் பாலத்திற்கு அருகாமையில் வந்து கொண்டிருந்த கடல் படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் படையினர் மயிர் இழையில் உயிர் தப்பினாலும் அப்பாலம் சேதம் அடைந்தது.


29/09/1982 அன்று இனவெறியன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை புதைத்து வெடிக்க வைத்தனர்.

27/10/1982  முதல் முதலாக தலைவரின் பாதுகாப்பிற்கு என இருவரை  நியமிக்க வேண்டும் என விடுதலைப் புலிகளின் மத்திய குழு தீர்மானித்தது; அதற்கு அமைவாக சங்கர் மற்றும் குண்டப்பா இருவரும் தலைவரின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டார்கள்; அதிலிருந்து தமிழீழம் சென்றதும் தலைவரின் உள் பாதுகாப்பு 75 ந்துக்கு மேற்பட்டவர்களும் வெளிப் பாதுகாப்பு என நிறையப் போராளிகளும் கடமையாற்றினார்கள்.


27/10/1982  

அன்று அதிகாலை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப் புலிகள் தீடீர்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். அத்தாக்குதில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டனர்; பல பொலிசார் காயப்பட்டனர்; ஏனையவர்கள் தப்பி ஓடி விட்டனர்; அதில் 9 திறியோ303, இரண்டு இலகுரக ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. எமது தரப்பில் முக்கிய தளபதிகளான குண்டப்பா மற்றும் சீலன் உட்பட மூன்றுபேர் காயம் அடைந்தனர். அவ் முகாம் தாக்குதலில்  காயம் அடைந்த பேராளிகளிற்கு நிர்மலா என்பவரின் வீட்டில் வைத்துத்தான் விடுதலைப் புலிகள் மருந்து கட்டினார்கள்.

  எமது அமைப்பைச் சேர்ந்த அன்ரன் பல்கலைக்கழத்தில் படிக்கும்போது பேராசிரியரான நித்தியானந்தனோடு உறவு நிலைஏற்பட்டு இருந்தது.
நிதித்தியானந்தன் என்பவரின் மகள் தான் நிர்மாலா   அவர்களின் வீட்டில் வைத்துதான் சாவகச்சேரி பொலிஸ்ரேசன் தாக்குதலில்  காயப்பட்ட குண்டப்பா மற்றும் லெப். சீலன் இவர்களிற்கு மருந்து கட்டப்பட்டது. 



 அப்பொழுதுமயக்க மருந்து வேண்ட வேண்டிய தேவை இவர்களிற்கு ஏற்பட்டதால் அதை சிங்கராஜாபாதர் ஊடாக கொழும்பில் இருந்து அதை வாங்கினார்கள். ஆனால் அதை முன்கூட்டிய அறிந்த சிங்களக் காவல்துறையினர் இப்படியான மருந்து வேண்டினால் தங்களிற்கு தெரிவிக்குமாறு கொழும்பில் இருந்த மருந்துக் கடைகள் அனைத்திற்கும் தெரியப்படுத்திவைத்து இருந்தார்கள்.



அதனால் மருந்து வேண்டிக்கொண்டுபோன சிங்கராஜ பாதரின் விலாசம் சிங்களப் பொலிஸாருக்குக் கிடைத்தது . அத்தகவலை அறிந்து கொழும்பில் இருந்து வந்த பொலிஸார் சிங்கராஜ பாதரை அவரின் யாழ்பாணத்தில் இருந்தவீட்டில் வைத்து கைது செய்து கடுமையான சித்திரவதையை மேற்  கொண்டமைனால் சிங்கராஜாபாதர் நிர்மலா விட்டில்தான் காயப்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெரியப்படுத்திவிட்டார்.

 தகவலை அறிந்த பொலிஸார் நிர்மலாவின் விட்டிற்கு வேகமாகச் சென்றுகொண்டு இருந்தனர்.....
 இவ்விடயத்தை அறிந்த கிட்டு அண்ணை நிர்மலா வீட்டிற்குப்போய் தகவலைத் தெரியப்படுத்தி சீலனையும் குண்டப்பாவையும்அங்கே இருந்து வெளியேற்றுமாறு
கட்டளை வழங்கினார்  லெப் சங்கர்அவர்கட்கு......

தகவலை அறிந்த சங்கர் கடமையை ஏற்றுக்கொண்டுஉடனேஅங்கே சென்று "சிங்கராஜாபாதர் பிடிபட்டுள்ளார் உடனே இடத்தை மாத்துங்கோ நீங்களும் பாதுகாப்பாக இருங்கோ" என சங்கர் சொல்ல உடனே அவர்கள் வேறு இடம்அவசர அவசரமாக அனுப்பி வைக்கப் பட்டார்கள்.

 இருவரையும் வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டு, தானும் வெளியே செல்லத்தாயார் ஆகஇருந்தவேளை..... 

பொலிசார் வீட்டிற்குள் புகுந்து சுடத்தொடங்கி விட்டார்கள்; சங்கரும் அவர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடத் தொடங்கினான். ஆனால் பலமான வெடி அவனது உடம்பில் பிடித்து இரத்தம் ஓடிக்கொண்டுயிருந்தது,இதைஎமது ஆதரவாளர் ஆன செல்வன்   சங்கரைக் கண்டதும்  அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு
போய்...... செல்வன் சங்கரைக் கூட்டிக்கொண்டு போய் ஜெயராஜ் அவர்களிடம் ஒப்படைக்கின்றார், ஜெயராஜ் கூட்டிக்கொண்டுபோய் போராளி அன்ரனிடம் ஒப்படைக்கின்றார்;அன்ரன்கொண்டுபோய் கிட்டண்ணைக்குத் தகவலைத் தெரியப்படுத்த கிட்டண்ணை சங்கரைப் பொறுப்பெடுத்து படகு மூலம் இந்தியா அனுப்பிவைத்தார்.


சங்கரை தப்பவிட்ட கோபத்தில் நிர்மலா வீட்டை முற்றுகையிட்டுஅங்கே இருந்த நிர்மலாவின் தகப்பன் தாய் அனைவருக்கும் அடி போட்ட பொலிஸார் நித்தியானந்தாவின் மகளான நிர்மலாவை கைது செய்துகொண்டுபோய் கொழும்பில் அடைத்தார்கள். 1583 வெலிக்கடைச் சிறைசாலையை சிங்ளக் காடையர்கள் உடைத்து தமிழ் கைதிகளை கொலை செய்த காரணத்தால் கொழும்பில் இருந்த தமிழ் கைதிகள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அதில் நிர்மலாவும் அங்கே காவலில் இருந்தார் இதைப் பின்னர் பார்ப்போம்.

சங்கரின் விடயத்தை முன்னரே படித்து இருப்பீர்கள் தமிழகம் கொண்டு செல்லப்பட்டாலும்; அங்கே சிகிச்சை பலன் அழிக்காமல் தலைவரின் மடியில் இருந்தவாறே






 08  27/11/1982 அன்று விடுதலைப் புலிகளின் முதல் மாவீரன் சங்ககர் வீரச்சாவு அடைந்தார்.

 மதுரையில் வீரச்சாவு அடைந்தபின் தொடர்ந்து காவல் நிலையம் போய் ஒப்பம் இட்டு அங்கே இருப்பதைத் தலைவர் அவர்கள் விருப்பவில்லை; தமிழகப் பொலிஸாரின் கண்காணிப்பில்இருப்பதை   விட  தமிழீழம் சென்று இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றநோக்கத்தில்  தமிழகக்  காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தமிழீழ மண்ணிற்கு வந்து சேந்தார் தலைவர்.





அங்கே சென்ற அவர் சும்மா இருக்கவில்லை;  பல தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டுயிருந்தார்; அக்காலப் பகுதியில்தான் தளபதி கேணல். கிட்டு அவர்கள் தாக்குதலிற்கு செல்வதற்கான காலம் தெருங்கிக் கொண்டே இருந்தது........  


இது இப்படியிருக்க29/02/1983 விடுதலைப் புலிகளை அழிக்கவென ஒரு இராணுவ அணியைஉருவாக்குவதற்கான  கூட்டம் நடை பெறுவதற்காகற்காக ஏற்பாடு செய்யப்பட்டது; யாழில் இருந்த அம் மண்டபத்தை சில மணி நேரத்திற்கு முன்னர்  விடுதலைப் புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர்; அத்தோடுஅங்கே நின்ற ஜீப் ஒன்றும் சேதமானது.


இக்காலத்தில் தான் தனது திறமையை நிலைநாட்டுவதற்கான காலம் வந்தது கிட்டு அவர்கட்கு;

,,04/02/1983 அன்று போராளி அற்புதன்அல்லது பொன்னம்மான் தலைமையில் பரந்தன் உமையாள்புரம் மீதான தாக்குதலிற்கு விடுதலைப் புலிகள் அணி ஒன்று செல்கின்றது..... அதில் கேணல் கிட்டுவும் செல்கின்றார்;




தாக்குதலிற்கான திட்டம் தீர்மானிக்கப்படுகின்றது; அத்திட்டத்தின்படி வீதியில் நிலக்கன்னி வெடிகளைத் தாட்டு விட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருகின்றார்கள்போராளிகள்; கண்ணிவெடிகளைக் கையாழும் அனுபவம் இவர்களிற்கு போதியளவு  இல்லாமல் இருந்தது;  இராணுவ வாகனம் இலக்கை அண்மிக்கும் நேரத்தில் அதைக் கண்டு மிரண்டு ஓடிய ஆட்டுக் குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடி  வெடிக்க அனைத்துப் போராளிகளும் நிலை  குலைந்து போகின்றார்கள்;


இதை அவதானித்த இராணுவம்  இரு கவச வாகனங்களில் இருந்து போராளிகளைச் சுட்டுக் கொண்டு வருகிறார்கள்; இவர்களிற்கு பின்வாங்குவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியின் பலத்தைக் கவனிக்காது  துணிந்து நின்று தான் வைத்துயிருந்த ஜீ3 துப்பாக்கியால் இராணுவக் கவசவாகனத்தை  நோக்கிச் சுடுகின்றான்;


அவனின் இலக்குத் தவறவில்லை; சாரதிஉட்பட 4 இராணுவத்தினர் காயம் அடைந்தனர். அப்போது வாகனம் செயலற்றுப் போகின்றது;  எதிரியின் தலைவனின்  இராணுவம் நிலை குலைந்த வேளையில் கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக  பின்வாங்கிச் செல்கின்றார்கள்;



18/05/1983 அன்று உள்ளூர் ஆட்சித் தேர்தலின்போது கந்தர்மட வாக்குச் சாவடியில் கூட்டுக் காவலில் ஈடுபட்டுயிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் நேரடியாக சாவால் விட்டு10 நிமிடங்கள் நடத்திய தாக்குதலில் இராணுவக் கோப்பிறல் ஜெயவர்த்தனா கொல்லப்பட்டார். மேலும் ஒரு இராணுவம், இரண்டு பொலிஸார் காயம் அடைந்தனர். அச்சமரில் T56 றைவுள் ஒன்றும் விடுதலைப் புலிகளிகளால் கைப்பற்றப்பட்டது .29/09/1982 அன்று இனவெறியன் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி 

வெடிகளை புதைத்து வெடிக்க வைத்தனர் 


 07/04/1983 இத்தாக்குதலிற்குப்பிறகு  கிட்டு அவர்கள் செல்லக்கிளி அம்மானின் உதவியாகத் தலைரால் நியமிக்கப்பட்டார்.


வராலாற்று புகழ் மிக்க திருநெல்வேலி  தாக்குதலிற்காக லெப். செல்லக்கிளி அம்மான் தலைமையிலான ஒரு அணியை உருவாக்கி பயிற்சி வழங்கிக்கொண்டுயிருந்தார்தலைவர்;

ஆனால் அவரிடம் பயிற்சி எடுத்த அனைவரும் உறுதியானவர்களாவும்; எந்த நேரமும் தங்களின் உயிரை அர்ப்பணிக்கக் கூடியவர்களாகவும் ;காணப்பட்டார்கள். அதை விட அதில் இருந்த அனைவரும் சிங்களக் காடையர்களின் தமிழர்மீதான  வன்முறைகளை நன்கு அறிந்தவர்கள்.

சிங்களக்காடையர்கள் தமிழர்களின் இரத்தைக் குடிப்பவர்கள்; அதை விட  தமிழ்ப் பெண்களை மானபங்கப் படுத்துபவர்கள்; அத்தோடு உடமைகளைப் பறிப்பவர்கள்; என்பதை இவர்கள் அறியாதவர்கள் அல்ல தொடர்ச்சியாக பொறுமையாக இருக்க முடியாது இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். 




எனவே இவர்களின் முதல் கூடுதலான இராணுவத்தை  அழிப்பதற்கானதாக்குதலிற்கு செல்லக்கிளி தலைமையாலான அணியின் பயிற்சி நிறைவு செய்யப்பட்டு அதில் தானும் ஒருதனாக தலைவர் செல்கின்றார்..... இத்தாக்குதல் பற்றி கேணல் கிட்டு அவர்கள் விளக்கப் படுத்துகின்றார்;


23/07/1983 அன்றுதிருனல்வேலித்தாக்குதல் பற்றி கேணல் கிட்டு

ஆயுதப் போராட்டம் உச்சம் தொட்ட நாள்  .23/07/1983 வெற்றிகர தாக்குதல் பற்றி கேணல் கிட்டு அவர்கள் விரிவாக விளக்குகின்றார்;




 23.7.1983 திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது; வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறான் விக்ரர்; அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் என்னோடு தம்பி மற்றும் ஏனைய தோழர்கள்;


நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம்; அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும்; வான் அந்த இடத்தில் நிற்க;  நாங்கள் இறங்க; அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளி வரத்தொடங்க; விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க; வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை அவர்கள் இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.


முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்; விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர்; கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை வெடிமருந்து தயார் படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும்; என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும் விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.


எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல்; எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில் கண்ணி வெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம்; அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு "வோக்கிரோக்கி"  அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.


விக்ரரும், செல்லக்கிளியும், அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம்; ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக்கொண்டிருக்கையில்  விக்ரர் விலகி தனக்குஒதுக்கப் பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான்; சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான்; துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும்; துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்;


தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கையில் "வோக்கி" செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.


செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான்; அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்க வைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்;


வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் "அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ!” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில்; வோக்கி மீண்டும் அலறியது.


“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் முன்னால் ஜீப் பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில்.... வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன;


ஜீப்பை எம்மிடம் வரவிட்டு பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது; நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம்; அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக் மெல்ல வந்து கொண்டிருக்கின்றன;


நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது; எமக்கு அதிர்ச்சி! ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.


சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம்; ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எதுவும்  எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்து சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்;


ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் இருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த  சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான்; பின்னர்அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனை  மறுபடியும் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை; அப்போது தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. 

அவன் ஓடிவிட  ஜீப்புக்குக் கிட்டேயிருந்து ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளால் சுட்டான். துப்பாக்கி திடீரென்று நின்றுவிட  விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டன என்று குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தபோது அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும்,  கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன்!  பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.


ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்;


தம்பி  இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது; சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது;


ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது; G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத் தொடங்கியது.....


சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.



ஆனால்...! இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்மையாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.


ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது; வெடியின் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார்; எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார்; ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதூரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன; இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது....…


இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜீப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கித் திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன.... கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.


அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.


விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து "பசீர் காக்கா" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்.... றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி சொல்லி உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார்  காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை;  அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான் ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே "கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.


இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் "தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.


ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.


சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.


மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து "யாரது” என்று முன்னே வந்தனர்.


"அது நான்ராப்பா” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கட பக்கம் எப்படி என்றார்? "அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை” என்றார் ரஞ்சன்.


"இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது" ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும், சந்தோசத்தையும் காணவில்லை? "வா பார்ப்போம்” என்றவாறு தன் பிரியத்திற்குரிய  G3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.


மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.


இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தை அடைந்தான். அங்கு புலேந்திரன், சந்தோசத்தைக் காணவில்லை. "எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து "அண்ணா அவன் முனங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் முனங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும்  வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். G3டின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.


இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போராளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும், நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.....


"கரையால் வாருங்கள்” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம்; இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.


இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் வேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் "அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.


பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க "அம்மானைக் காணவில்லை” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும், புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். "டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் பலமாக எதிரொலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.


வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.


வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது....

செல்லக்கிளியின் வீரச்சாவிற்குப்பின் இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும் அனைத்து மாவட்டங்களிற்கும் கட்டளை வழங்கும் இராணுவத் தளபதியாக தலைரால் கிட்டு நியமிக்கப்பட்டார். 




இத்தாக்குதலைத் தொடர்ந்து சிங்களக்காடையர்களின் தமிழர்மீதான இனப் படுகொலையையும் தமிழர்களின் பொருளாதாரச் சுரண்டல் அல்லது அழித்தல் இப்படியான உணர்வு இவர்களிடம் உள்ளது என்பதை தமிழர் தேசம் அறிந்த நாள் கறுப்பு யூலை.


1983 ஜூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து; அதே நாள் அதே திருநெல் வேலியைச் சேர்ந்த 43 தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனார்.


24 /07 /1983  இரவு தொடங்கிதென்னிலங்கையில் தமிழர்கள் மீது சிங்களக்காடையர்கள் தாக்குதல் ஆரம்பம் ஆனது.

 குண்டர்களால்கொழும்பு உட்பட அனைத்துப்பகுதிகளிலும் இனவன்முறை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக் கலவரத்தின்போது வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் சிறைசாலைக் கதவை சிங்களக் காவலர்களான ஜெயிலர், ரோஜர், இவர்களே திறந்து விட்டுள்ளனர். 

குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அதில்அடங்கியிருந்தனர். குட்டிமணியின் உடல் இழுத்துவரப்பட்ட போது அவரின் உடலில் அசைவுகள் இருந்தாகவும் நேரில் பார்த்த ஒரு சிங்களக் கைதி தெரிவித்துள்ளார்.

 குட்டி மணிக்கு நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது;" எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து ஒரு பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள் நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்" என அவர் தெரிவித்திருந்தார்.


அவர் கண்கூட தமிழீழத்தைபார்க்கக்கூடாது என்பதில் சிங்கள வெறியர்கள் கவனமாகயிருந்துள்ளனர். அவரது இரண்டுகண்களையும் கூரிய ஆயுதத்தால்தோண்டி எடுத்து தங்களின் காலில் போட்டு மிதித்ததை ஏனைய கைதிகள்பார்த்து கைதட்டி ஆரவாரப்பட்டுள்ளனர். 

இவர்கள் மூவரின் கண்களும் தோண்டி துடிதுடிக்கக் கொலை செய்துள்ளனர்.

 52 தமிழ் கைதிகள் கை, கால், கழுத்து வெட்டப்பட்டு கொடூ ரமாகக் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து தென்னிலங்கையில் கூரிய ஆயுதங்களோடு சென்ற சிங்களக் காடையர்கள் ஒன்றாக வாழ்ந்த மனிதர்களின் மனங்களில் இன வேற்றுமையைத் தூவி அரச படைகளின் உதவியுடன்


கொழும்பு விதிகளில் காரில் சென்ற தமிழர்களின் கார்கள் காடையர்களால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டன. இதை நேரில் பார்த்த ஒரு சிங்களவரின்கதை "கார் ஒன்று வந்து கொண்டிருந்தது காரை எம்மவர்கள் மறித்தார்கள் தாயும், தகப்பனையும் உடனே வெளியே இறங்கினார்கள் 15 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரு தமிழ் பிள்ளைகள் காருக்குள் இருந்தார்கள்.


 காரைச் சுற்றி ஆயிரத்திற்கு மேல் எம்மவர்கள்  "பெற்றோல் கேன்" என்பனவற்றுடன் நின்றார்கள். ஒரு சிலர் காரை எரிப்பதற்கு கார்மீது பெற்றோல் ஊற்றிக் கொண்டு இருந்தரர்கள் சிறுவர்கள் என்றாலும் அவர்களிற்கு எம்மை எரிக்கப் போகின்றார்கள் என்பது விளங்கி விட்டது. மூத்த மகள் பெரிதாகக்கத்தி "அம்மா அப்பா எங்களை எரிக்கப் போகின்றார்கள் வேகமாக உள்ள வாங்கோ" என்று தாயையும் தகப்பனையும் இழுத்து காறுக்குள் எடுத்து அவசாரமாகக் காரின் கதவைச்சாத்தினார்கள்.காடையர்கள் கார்மீது நெருப்பு வைத்தார்கள். துடிதுடிக்க நான்கு பேரும் எரிந்து கொண்டுயிருந்தார்கள். இப்படி பல நூறு சம்பவங்கள் நடந்தன.



 இது தான் அந்தக்கார்


 ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடமைகள் அளிக்கப்பட்டன, எண்ணாயிரம் தமிழர்களின் வீடுகள் உடைக்கப்பட்டு, அனைத்துப் பொருட்களும் சூறையாடப்பட்ட பின்னர் அவை எரிக்கப்பட்டன. 




அவ் நிலங்களைக் சிங்களவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள்.  


நானூறு தமிழ்பெண்கள் சிங்களக் காடையர்களால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு; அவர்களின் மார்பகங்கள் வெட்டப்பட்டு; தார் கொதிக்கும் தார்பீப்பாய்க்குள் போடப்பட்டனர். சுமார் இருபத்தையாயிரம்  தமிழர்கள் தென்னிலங்கையை விட்டு வடக்கு மற்றும் கிழக்கிற்கு உடுத்த உடுப்புக்களுடன் கொழும்பில் இருந்து கலைக்கப் பட்டனர்.ஒரு தொகுதித் தமிழர்கள் பெரிய படகுகளில் தப்பி யாழ் காங்கேசன் துறைக்கு வந்து சேர்ந்தார்கள். 


ஏனையவர்கள் கால்நடையாக உடுத்த உடுப்புக்களுடன் வடக்கு மற்றும் கிழக்கிற்குச் சென்றார்கள்.அதை அடுத்து ஒரு சில வாரங்களில் லட்சக்கணக்கில் தமிழர்கள் படகு மூலம் இந்தியாவிற்கு ஓடித் தப்பினார்கள். தமிழகம் அவர்களை அன்போடு ஏற்றுக்கொண்டது; கட்சி பேதமின்றி அனைவரும் "அவர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்று ஏற்றுக்கொண்டார்கள்". இவர்களின் நிலையைப் பார்த்து இந்திய மத்திய அரசு விரும்பியோ விரும்பாமலோ சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 




அக்காலத்தில் ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்தார்கள். அதனால் இலங்கையில் வாழும் சிறுபாண்மை தமிழர்களிற்கு உதவாமல் விட்டால் தேர்தலின் போது ஆறுகோடி மக்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும்; அடுத்து ஐரோப்பியவில் உள்ளஇங்கிலாந்தில்  மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டால்  தனது நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்; அதே நேரம் உலகத்தில் வாழும் ஒட்டு தொத்த தமிழர்களின் செல்வாக்கும் ஆதரவும் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரசிக்கு இருக்காது என்பதை அவர்கள் விளங்கிக்கொண்டார்கள்.

 இதைத் தொடர்ந்து,இந்தியா மத்திய அரசு தமிழ் இளைஞர்களிற்கு பயிற்சி தர முன்வந்தது.

 சில முன்னோடி நடவடிக்கைகளை செய்வதற்கு திட்டமிட்டது; அதனை தொடர்ந்து விடுதலைஇயக்கங்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முன்வந்தது தொடர்ந்துஅனைத்து ஈழ விடுதலைக்காகப்போராடிய இயக்கங்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டார்கள்; அதன் முதல்கட்டமாக எமது விடுதலை இயக்கம் சார்பாக தேசியத்தலைவர் தமிழீழம் இருந்தும், அன்ரன் பாலசிங்கம் அவர்கள் லண்டனில் இருந்தும் தமிழகம் வந்து சேர்ந்தார்கள்.

தமிழ் இளைஞர்களிற்கு ஆயுதப்பயிற்சிகொடுத்து இலங்கையில் வாழும் சிறுபாண்மை தமிழர்களை பாதுகாக்க தாங்கள் உதவ முன்வருவதாக இந்திய மத்திய அரசு அவர்களின் நம்பிக்கையான புலனாய்வு முகவர்கள் ஊடாக தகவலை தெரியப்படுத்தியது.




1983 /08 மாதம்ஆம்பத்தில் இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கு கடுமமையாக உழைத்த அவரின் மனைவி அடல் மற்றும்  பாலா அண்ணை இதைப்பற்றி விளக்குகின்றார்.


விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி1983 ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதி வன்னிக் கெரில்லாப் பயிற்சிப் பாசறையிலிருந்து தலைவர் பிரபாகரன் என்னோடு தொடர்பை ஏற்படுத்தி லண்டனில் அவ்வேளை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். என்னையும் எனது மனைவி அடலையும்  உடனடியாகச் சென்னைக்கு வருமாறு பணித்திருந்தார்.

 தமிழ்ப் போராளிகளுக்கென இராணுவப் பயிற்சி திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசு செயற்படுத்தப் போவதாகத் தமிழீழத்தில் வதந்திகள் அடிபடுவதாகவும்; தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏராளமான இளைஞர்களை அணிசேர்த்துக் கடல் மார்க்கமாகத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாகவும், உடனடியாகத் தமிழ்நாடு சென்று நிலமையை அறிந்து தன்னுடன் தொடர்பு  கொள்ளுமாறும் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


 தமிழரின் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு பெரும் எடுப்பில் தலையிட முடிவு செய்திருப்பதால் விடுதலைப் போராட்டம் புதிய வரலாற்றுத் திருப்பத்தை அடையப் போவதாகக் குறிப்பிட்ட பிரபாகரன் இம்முறை தமிழ்நாட்டில்  நாம் நிரந்தரமாக நீண்ட காலம் தங்கியிருந்து பணிபுரிய நேரிடும் என்றும் சூட்சுமமாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.


நானும் எனது மனைவி அடேலும் 1979லும் பின்பு 1981லும் தமிழ்நாடு வந்து தலைவர் பிரபாகரனுடனும் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் போராளிகளுடனும் இரு தடவைகளும் பல மாதங்கள் வரை தங்கியிருந்து பணி புரிந்தோம்.

  1983 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் அவரது நூலில் தரப்படுகிறது. எனவே ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, இந்தியத் தலையீட்டால் எழுந்த பிரச்சினைகளையும், குறிப்பாக இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மத்தியிலான உறவுகள் பற்றியுமே இப்பகுதியில் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன்.



1983 ஆகஸ்ட் நடுப்பகுதியில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் வந்திறங்கிய போது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேவி சுப்ரமணியம் (இளங்குமரன்) எம்மை வரவேற்றார்.

 சென்னை நகரில் வூட்லண்ட்ஸ் எனப்படும் நடுத்தரமான சைவ விடுதியில் நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 நேசன் (ரவி பரமநாதன்) மற்றும் சில மூத்த உறுப்பினர்கள் அந்த விடுதியில் எம்மைச் சந்தித்தனர். அவ்வேளையில் சென்னையில் எமது இயக்கத்திற்கெனச் செயலகமோ அல்லது இரகசிய வீடுகளோ இருக்கவில்லை. எமது அறைக்குப் பக்கமாக இன்னொரு அறையும் எடுத்து அவ்விரு அறைகளையும் அரசியற் செயலகமாக மாற்றிச் சிறிது காலமாக அவ்விடுதியிலிருந்தே செயற்பட்டோம்.

 பேவி சுப்ரமணியத்தின் நண்பரும் அ.தி.மு.க கட்சியில் மூத்த அமைச்சருமான திரு.காளிமுத்து நாம் ஒரு செயலகம் அமைக்கும் வரை விடுதியின் செலவீனங்கள் அனைத்தையும் பொறுப் பெடுத்தார். அந்த விடுதியில் இருந்தபடியே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டம் பற்றித் தகவல் அறிய முனைந்தோம்.


தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை. அவ்வேளை எனக்கு முன்பு அறிமுகமான தமிழ்நாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவரைச் சந்தித்தபோது அவரிடம் இந்தியப் பயிற்சித் திட்டம் பற்றிக் கேட்டேன்.

 இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இப்பயிற்சித் திட்டத்தைப் பொறுப்பேற்று நடத்துவதாகக் கூறிய அந்தப் பத்திரிக்கையாளர்; என்னை றோ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்.

 அவ்வேளை சென்னையில் "றோ" அதிகாரிகளின் செயற்பாடுகள் மிகவும் இரகசியமானதாக இருந்ததால் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. 

அந்தச் சூழ்நிலையில்தான் எனக்கு முன்பு அறிமுகமான கலாநிதி ராஜேந்திரனைச் சந்தித்தேன். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜேந்திரன் எமது இயக்கத்தின் ஆதரவாளர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்திய இராணுவப் பயிற்சி திட்டத்தின் முழு விபரங்களுடன் வூட்லண்ட்ஸ் விடுதிக்கு வந்து என்னைச் சந்தித்தார்.


தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஈழப் புரட்சி இயக்கம் (ஈரோஸ்) ஆகிய முன்று அமைப்புகளுக்கும் இந்திய இராணுவப் பயிற்சி திட்டத்தில் அனுமதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்த ராஜேந்திரன்; இந்த அமைப்புகளைச் சார்ந்த போராளிகள் ஏற்கனவே வட இந்தியாவிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமுக்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார்.

 இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இந்தப் பயிற்சித் திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள் என்றும் கூறினார். காலம் சென்ற திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் மகனான திரு. சி. சந்திரகாசனே இப்பயிற்சித் திட்டத்திற்கு இணைப்பாளராக முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் கூறினார்.


தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் திரு. சந்திரகாசனுக்கு முக்கிய தலைமைப்பீடப் பொறுப்பைப் பெற்றுக் கொடுப்பதே இந்திய புலனாய்வுத் துறையினரது இரகசியத் திட்டம் என்பதையும் திரு. ராஜேந்திரன் வெளியிட்டார்.

 இந்திய இராணுவப் பயிற்சித்திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சிபாரிசு செய்யச் சந்திரகாசன் தயாராக இருக்கிறார் எனக் கூறிய ராஜேந்திரன் அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை உண்டு என்றார். அந்த நிபந்தனை என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு ஒருபுறம் ஆச்சரியத்தையும், மறுபுறம் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

 அதாவது தமிழீழத் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகச் சந்திரகாசனை திரு.பிரபாகரன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

 இந்திய இராணுவப் பயிற்சி முடிவு பெற்றதும் எல்லாத் தமிழ் போராளி அமைப்புகளும் தமிழ்த் தேசிய இராணுவம் ஆக மாற்றப்படுமென்றும், அந்த தமிழர் இராணுவம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் வேளை, தமிழர் தேசத்தின் அரசியல் போராட்டத்தைச் சந்திரகாசன் தலைமை தாங்கி நடத்துவார் என்றும் ராஜேந்திரன் விளக்கினார்.



எமது கலந்துரையாடலை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக கொண்டிருந்த எனது மனைவி அடேல், சந்திரகாசனின் நிபந்தனையை அறிந்ததும் பொறுமையிழந்து ராஜேந்திரன் மீது சீறி விழுந்தார்.


எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் பிரபாகரனோ அல்லது எமது போராளிகளோ சந்திரகாசனைத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் நிபந்தனை என்றால் எமது இயக்கத்திற்கு இந்திய இராணுவப் பயிற்சி அவசியமில்லை என்று கடிந்து கொண்டார் அடேல்;

.இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கும் எமக்கும் மத்தியில் சூடான விவாதம் எழுந்தது. அடேலின் கருத்தை ஆதரித்து நான் வாதிட்டேன்

.


சந்திரகாசனின் ஆசியைப் பெறாமல் ‘றோ’ அதிகாரிகளை நெருங்க முடியாது என்றும்; 
 ‘றோ’ அதிகாரிகளின் சிபாரிசு இன்றி விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி கிடைக்கப்போவதில்லை என்றும்; இந்தப் பயிற்சி கிடையாது போனால் புலிகள் இயக்கம் பின்னடைவை எதிர்நோக்க ஏனைய அமைப்புகள் வளர்ந்து முன்னேற்றம் அடையும் என்றும்; ராஜேந்திரன் பூச்சாண்டி காட்டினார். 

சந்திரகாசனின் உதவியின்றி இந்தியப் பயிற்சியை நாம் எப்படியோ பெற்றே தீருவோம் என நான் எதிர்த்து வாதாட தனது முயற்சி பலிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ராஜேந்திரன் ஆத்திரத்துடன் எமது அறையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அதற்கப்புறம் நான் அவரைக் கண்டதேயில்லை.


ராஜேந்திரனுடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றியும்; இந்திய இராணுவப் பயிற்சியை ஒழுங்கு செய்வதில் சந்திரகாசன் வகிக்கும் பங்கு பற்றியும்; பயிற்சித் திட்டத்தில் இடம்பெற அவர் விதிக்கும் நிபந்தனை பற்றியும்; சகல விபரங்களையும் நான் உடனடியாகப் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினேன்.

 எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்திரகாசனின் உதவியை நாடவேண்டாம் எனத் தெரிவித்த பிரபாகரன்; எப்படியாவது முயன்று இந்தியப் புலனாய்வுத் துறையினருடன் என்னை நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது எனக்கு ஒரு சிக்கலான சவாலாக அமைந்தது.

 சந்திரகாசனை வெட்டியோடி தலைமறைவாக இயங்கும் "றோ" அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது எங்ஙனம்? இப்படியாக நான் இடர்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்குத் தமிழக உள்நாட்டுப் புலனாய்வுத் துறையினரது தொடர்பு கிடைத்தது. அப்பொழுது நாம் சென்னை நகரப் புறத்திலுள்ள "சன்தோம்" என்னுமிடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தோம்.


நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிந்ததும் தமிழகப் புலனாய்வுத்துறை (கியூ பிரிவு) உதவிப்பொலிஸ் மா அதிபர் திரு. அலெக்ஸ்சாண்டர் என்னைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து ஈழத் தமிழர் பிரச்சினை பற்றியும் விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றியும் விசாரித்தார்.

 மாறி மாறி நிகழ்ந்த சந்திப்புகள் நட்புறவாகப் பரிணமித்தன. அன்பும் பண்பும் ஆழமான அரசியற் தெளிவும் கொண்டவராக விளங்கினார் திரு. அலெக்ஸ்சாண்டர். இலங்கை அரசியல் பற்றியும் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருந்தார்.

 இந்திய இராணுவ பயிற்சித் திட்டம் பற்றியும்; "றோ" அதிகாரிகளுக்கும் சந்திரகாசனுக்கும் இடையிலான இரகசிய உறவு பற்றியும்; எந்தெந்த அமைப்புகளுக்கு எங்கெல்லாம் பயிற்சிகள் வழங்கப் படுகிறது பற்றியும்; சகல விபரங்களையும் நான் அலெக்ஸ்சாண்டர் வாயிலாக அறிந்து கொண்டேன்.



சென்னை மாநகரில் பிரபல்யமான Blue Diamond விடுதியில் ஒருமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தி அதனைத் தனது தலைமைச் செயலகமாகக் கொண்டு "றோ" அதிகாரிகளுடன் இணைந்து சந்திரகாசன் செயற்பட்டு வருகிறார் என்ற தகவலையும் அலெக்ஸ்சாண்டர் எனக்குத் தெரிவித்தார். .

அந்த விடுதியில், சந்திரகாசனின் மாடியில் தனது புலனாய்வு உளவாளி ஒருவர் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிகிறார் என்றும்; ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தி; அங்கு நடைபெறும் திருவிளையாடல்களை எல்லாம் தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். 


சந்திரகாசனுடன் இணைந்து செயற்படும் "றோ" அதிகாரிகளில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும்; அவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே நன்று; என்றும் அலெக்ஸ்சாண்டர் அறிவுரை சொன்னார்.

 அலெக்ஸ்சாண்டர் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் சந்திரகாசன் அப்பொழுது நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உன்னிக்கிருஷ்ணன் எனப்படும் "றோ" அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டு; இந்திய இராணுவப் பயிற்சி சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்களை; அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏக்கு கையளித்தார்; என்று குற்றம் சுமத்தப்பட்டு நீண்ட காலக் கடூழியச் சிறையில் தள்ளப்பட்டார்.


விடுதலைப்புலிகள் இயக்கமும்; இந்திய இராணுவப் பயிற்சியையும்; ஆயுத தளபாடங்களையும் பெற்றுக் கொள்வதன் அவசியத்தை அலெக்ஸ்சாண்டருக்கு எடுத்து விளக்கிய நான்! அதற்கான வழிமுறை பற்றியும் கேட்டேன்.

 தமிழீழ மக்களின் நல்லாதரவு பெற்ற விடுதலை அமைப்பாக நீண்ட கால ஆயுதப் போராட்ட அனுபவத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமே களத்தில் நின்று இயங்கி வருகிறது; என்ற உண்மையைத் திருமதி. இந்திராகாந்தி அம்மையாருக்கு விபரமாக எழுதி; இந்தியாவின் இராணுவப் பயிற்சித்திட்டத்தில் புலிகளுக்கும் இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும்படியும் அலெக்ஸ்சாண்டர் ஆலோசனை வழங்கினார்.

 திருமதி. இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றே "றோ" புலனாய்வு அமைப்பின் அதிபர் திரு.சக்சேனாவுக்கும் அனுப்பி வைக்குமாறு அவர் சொன்னார்.


அவர் கூறியபடியே திருமதி காந்திக்கு நான் ஒரு விபரமான கடிதம் எழுதினேன்.





அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை, கருத்தியல், போராட்ட வரலாறு என்ற ரீதியில் விளக்கத்தைக் கொடுத்து; இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் எமது இயக்கத்தை இணைத்துக் கொள்ளும் அவசியத்தையும் வலியுறுத்தினேன். அத்தோடு அக்கடிதத்தின் பிரதி ஒன்றை "றோ" அதிபர் திரு. சக்சேனாவுக்கும் அனுப்பிவைத்தேன். புது டெல்லியிலிருந்து பதில் வர நீண்ட காலம் பிடிக்கவில்லை.


பாரதப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து இரண்டு வாரத்திற்குள் புது டெல்லியிலுள்ள "றோ" புலனாய்வுத்துறைத் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி என்னைச் சந்திப்பதற்காக சென்னை வந்தார். எஸ். சந்திரசேகரன் என்ற பெயருடைய அவர் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர். 

சென்னை நகரப்புறத்திலுள்ள விடுதி ஒன்றில் மிகவும் இரகசியமான முறையில் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சகல தொடர்புகளுக்கும் பெறுப்பதிகாரியாக தான் நியமிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னாரவர். முதற் சந்திப்பின்போதே விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றித் துருவி ஆராய்ந்து என்னைக் குடைந்து எடுத்தார். புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பு, ஒழுக்க விதிகள், தலைமைப்பீடம், அரசியல் கொள்கை, ஆயுதப் போராட்ட வரலாறு போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி அவர் விடுத்த கேள்விக் கணைகளின் நுட்பத்திலிருந்து திரு. சந்திரசேகரன் ஒரு ஆழமான ஆளுமையுடைய மனிதர் என்பதை உணர்ந்து கொண்டேன்.


ஆயுதப் போரியல் வடிவங்கள் பற்றியும், நிறைய அறிந்து வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் ஆர்வமாக விசாரித்தார். பிரபாகரனின் ஆளுமை; அரசியல் நோக்கு; போராட்ட அனுபவம் என அவர் எழுப்பிய கேள்விகளுக்கு விபரமான பதில் அளித்தேன்.

 விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக பிரபாகரனை தான் நேரில் சந்திக்க வேண்டும்! என வலியுறுத்தினார். இந்தியாவில் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி நான் கேட்டபோது; அதற்கு தான் உத்திரவாதம் அளிப்பதாகச் சொன்னார்.

 திருமதி. காந்தியின் விசேட பணிப்பின்பேரில் இப்பயிற்சித் திட்டம் ஒழுங்கு செய்யப்படுவதால் பிரபாகரனின் பாதுகாப்புக்குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். 

இறுதியாக  நாயர் என்ற பெயருடைய அதிகாரி ஒருவரை அறிமுகம் செய்து அவர்மூலம் தன்னுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

சந்திரகாசனுக்கும்; ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் தெரியாதவாறு எமது போராளிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுமெனக் கூறிய சந்திரசேகரன்;  விடுதலைப்  புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டியது குறித்து சந்திரகாசன் மீது புதுடில்லி அதிருப்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பின் விபரங்களை உடனடியாகவே பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தியதுடன்; எமது போராளிகளுக்கும் இந்தியாவில் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக உடனடியாகத் தமிழ் நாட்டுக்கு வருகை தருமாறும்; அவரைக் கேட்டுக்கொண்டேன்.

 இந்தியா வருவதில் எழக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இரு மூத்த உறுப்பினர்களான மாத்தையாவையும், ரகுவையும் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைத்தார் பிரபாகரன்.


மதுரையில் ஒரு விடுதியில் மாத்தையாவும், ரகுவும் என்னைச் சந்தித்தனர். பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பது மாத்தையாவின் கருத்து. பாண்டிபஜார் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நிபந்தனைப் பிணையிலிருந்து தமிழீழத்திற்குத் தப்பிச் சென்றவர் என்பதால்; இந்தியச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகப் பிரபாகரனை இந்திய காவல்துறையினர் கைது செய்து சிறையில் தள்ளலாம்; என்பது அவரது வாதம்.



 திருமதி. காந்தியின் ஆசியுடன் இந்திய அரசுதான் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று கூறியும்; அவர்களை நம்பச்செய்ய முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி என்ற பொறிவைத்துப் புலிகளின் தலைவரை மடக்கிப் பிடிப்பதுதான் இந்திய புலனாய்வுத் துறையினரின் கபட நோக்கம் என்பது அவர்களது வாதம்.

 இவர்களுடன் வாதிடுவதில் அர்த்தமில்லை என உணர்ந்த நான்; இந்திய நிலைமைய விரிவாக விளக்கி; இந்தியப் பயிற்சி பெறுவதாயின் கட்டாயமாக இந்தியாவுக்கு வந்தாக வேண்டு மென்றும்; பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் எழப்போவதில்லை என்றும்; உறுதிகூறிப் பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி அவர்களிடம் கொடுத்தேன்.

 இந்தியாவில் பிரபாகரனுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் அதற்கான பொறுப்பையும்; இயக்க நடவடிக்கையையும்; நான்தான் ஏற்கவேண்டி வரும் என மிரட்டிவிட்டுச் சென்றார் மாத்தையா.

 மறுநாள் எனது கடிதம் பிரபாகரன் கையில் கிடைத்ததும்; தான் விரைவில் இந்தியாவுக்கு வரவிருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார். எனது விளக்கத்திலும்; உறுதிமொழியிலும்; பிரபாகரன் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அறிந்து; எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிஏற்பட்டது.




1983 அக்டோபர் மாதம் பிரபாகரனும்; அவரோடு சில மூத்த தளபதிகளும்; இந்தியா வந்தனர்.


 பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி; அங்கு தங்கியிருந்தனர். திரு. சந்திரசேகரனும் மற்றும் சில "றோ" புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளும் பிரபாகரனைப் பாண்டிச்சேரியில் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தேன்.

 சந்திப்பு நிகழும் நாளன்று நானும், அடேலும் இரு போராளிகளுமாக சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்குப் பயணமாகினோம். பாண்டிச்சேரியில் பிரபாகரனைச் சந்தித்து சென்னையில் நம் வந்திறங்கியதிலிருந்து நடைபெற்ற சம்பவங்களை அவரிடம் விபரமாகக் கூறினேன்.

 அன்று நள்ளிரவு திரு. சந்திரசேகரனும்; மற்றும் சில  இந்தியப் புலனாய்வு அதிகாரிகளும்; பாண்டிச்சேரியிலுள்ள எமது வீட்டுக்கு வந்தார்கள். பிரபாகரனும், நானும், சந்திரசேகரனும் தனி அறை ஒன்றில் மந்திராலோசனை நடத்தினோம். முதற் சந்திப்பின்போதே சந்திரசேகரனுக்குப் பிரபாகரனை நன்கு பிடித்துக்கொண்டது.




இருநூறு விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்வதாகச் சந்திரசேகரன் உறுதியளித்தார்.

 நூறு பேர் கொண்ட இரு அணிகளகப் பயிற்சி நடைபெறும் என்றும்; முதல் அணியின் பயிற்சி நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் சொன்னார். 

புலிப் போராளிகள் சென்னையிலிருந்து டில்லி வரை புகையிரத வண்டியில் பயணம் செய்து; பின்பு டில்லியிலிருந்து இராணுவ டிரக் வண்டிகளில் உத்திரப்பிரதேச மலைப் பிராந்தியத்திலுள்ள "டெக்ராடன்" என்னுமிடத்தில் அமைந்திருக்கும்; இந்திய இராணுவப் பயிற்சிப் பாசறைக்குக் கொண்டு செல்லப்படுவர்; என்றும் சந்திரசேகரன் விளக்கினார்.

 முதல் அணியில் பயிற்சி பெறுவோரின் பெயர் விபரப் பட்டியலைத் தமக்குச் சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படியும் அவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டார்.


தமது போராளிகளுக்கு எத்தகைய போரியற் பயிற்சி வழங்கப்படுமென்றும்; எத்தகைய ஆயுதங்களைக் கையாளுவதற்கான பயிற்சி கொடுக்கப்படும் என்றும்; பிரபாகரன் வினவினார். சகலவிதமான நவீன போரியல் உத்திகள்,தந்திரோபாயங்கள், பற்றிய தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி வழங்குவார்கள் என்றும்; சிறுரக ஆயுதங்களிலிருந்து கனரக ஆயுதங்கள் வரை பலவிதமான ஆயுதங்களைக் கையாளுவது பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுமென்றும்; சந்திரசேகரன் விளக்கினார்.

 நிலப்படங்கள் வரைதல்; கண்ணி வெடிகளைப் புதைத்தல்; வெடி பொருட்களைப் பாவித்தல்; டாங்க எதிர்ப்பு, விமான எதிர்ப்பு, ஆயுதங்களைக் கையாளுதல்; போன்றவற்றிலும் பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆயுத உதவி சம்பந்தமாகச் சந்திரசேகரன் எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. இவ் விவகாரம் குறித்துப் பின்பு பேசலாம் என்று மட்டும் சொன்னார். 

உத்திரப் பிரதேசத்திலுள்ள "டெக்ராடன்" இராணுவப் பயிற்சித் தளத்திற்கு வருகை தந்து விடுதலைப் புலிப்போராளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நேரடியாக  மேற்பார்வை செய்யுமாறு; அவர் பிரபாகரனுக்கு அழைப்பு விடுவித்தார் .






 எம்ஜிஆர் எமக்கு உதவ முன்வந்தார்,

எம்ஜிஆர் அவர்களிற்கும் எமக்குமான உறவு எப்படி


 மலர்ந்தது

;

 எம் ஜீ ஆர் அவர்களின் செயல்பாடுகள் பற்றிப்பார்ப்போம் ; 27/10//1983 அன்று எம் ஜீ ஆர் அவர்களின் உறுதியான முடிவுதான் தேசியத் தலைவரை காப்பாத்தியதோடு தமிழழத்தையும் காப்பாற்றியது. அது மட்டுமல்ல 1983 இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது இந்தியா இராணுவம் இலங்கை மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகச் சட்டசபையில் கூறிஇருந்தார் எம் .ஜீ.ஆர்.

அத்தோடு முன்னர் மாற்று இயக்கங்களிற்கு சிறு உதவிகளை செய்தவர் பின்னர் அவர்களின் தவறான நடவடிக்கைகளைக் கண்டு அவர் அவர்களை முற்றாகக் கைவிட்டார். உறுதி தளராமல் தலைவர் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு இருந்து தமிழீழக் கொள்கைக்காகப் போராடியது எம் ஜீ ஆர் அவர்கட்டு மிகுந்த நம்பிக்கையைக்கொடுத்தது; அதனால் தமிழீழத்தைப் போராடி வென்றெடுக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் விடுதலைப்புலிகள் மாத்திரமே என்பதை அவர் விளங்கிக் கொண்டார்.


 எமது தலைவரின்உறுதியையும், ஆளுமையையும் அவர் புரிந்து கொண்டார். இதை அறிந்த கருணாநிதி ஈழ இயக்கங்கள் அனைத்தையும் தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்; ஆனால் விடுதலை புலிகள் மட்டும் அதை ஏற்கவில்லை; மற்ற இயக்கங்கள் அனைத்தும் அவரைப்போய் சந்தித்தார்கள்.

 இது எம். ஜீ .ஆர் அவர்களிற்கு விடுதலை புலிகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது; 83 இலங்கை அரசால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப் படுகொலையைத் தொடர்ந்து ஈழ இயக்கங்களிற்கு இந்தியாவில் பயிற்சி எடுக்க பாலா அண்ணையோடு கதைத்து வழி காட்டியவரான தமிழகப் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த காவல் துறை துணை மா அதிபர் அலக்ஸாண்டர் அவர்களும் எமது ஈழ விடுதலை ஆதரவாளர்களில் முக்கியமான வராகக்  கருதப்படுகின்றார்.

 இதே காலப் பகுதியில்தான் எம். ஜீ ஆர் அவர்களின் பாரிய உதவி ஒன்று எமக்குக் கிடைத்தது.


எம் .ஜீ.ஆர் அவர்களுக்கும் எமது அமைப்பு சார்பாக தலைவர் பாலா அண்ணன், கேணல் சங்கர் இவர்களிற்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடைபெற்ற வேளை அங்கே பேசிக்கொண்டு இருந்தபோது ஆயுத ரீதியாகவும் எங்களிற்கு உதவிகள் தேவைப்படுகின்றது என்பதை கேணல் சங்கர் அவர்கள் மெதுவாக அவருக்குத் தெரியப்படுத்தினார்.


அது பிரச்சனை இல்லை தேவையான பணத்தை நான் தருகின்றேன் எவ்வளவு தேவையென கேட்டுள்ளார்; அதற்கு இவர்கள் இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும் என சொல்லியுள்ளனர். அது பிரச்சனை இல்லை அதைத் தருகிறேன் என்று சொல்ல  தலைவர் உட்பட மூவரும் மகிழ்் ச்சி அடைந்தார்கள்.



நாளை என்னை வந்து சந்தியுங்கோ...! என எம். ஜீ .ஆர் சொன்னார். அடுத்த நாள் பாலா அண்ணை,கேணல் சங்கர், ரகு மற்றும் லெப் கேணல் இம்ரான் வாகனத்தை ஓட்டிச் செல்ல பறங்கிமலையில்  உள்ள       எம். ஜீ. ஆர் அவர்களின் இல்லத்தில் எம்மவர்களின் வருகையை எதிர்பார்த்தபடி அவர்  நின்றார். எம்மவர்களைக் கண்டதும் பங்களவிற்குள் அழைத்துச் சென்றார்; அங்கே சென்றதும் பணம் காட்போட் பெட்டிக்குள் அடிக்கி வைக்கப்பட்டு இருந்தது. பத்துப்பெட்டிகளை இவர்களின் வாகனத்தில் எம். ஜீ .ஆர் ஏற்றி அனுப்பினார்.


கோடிக்கணக்கான பணத்துடன் வாகனத்தில் செல்வது பாதுகாப்பாக இருக்காது எனக் கருதி பாலா அண்ணை அவருக்குச் சொன்னபோது சரியென சொல்லி விட்டு யாரோடோ போன் பேசினார் எம்.ஜீ.ஆர்; உடனே இரண்டு ஜீப்பில் ஆயுதம் தரித்த பொலிஸார் வந்து இவர்களை பாதுகாப்பான முறையில் இவர்களின் வாகனத்திற்கு முன்னும் பின்னுமாக சென்று வாகனத்தை பாதுகாப்பாகக் கொண்டு விட்டனர்.


அங்கே தலைவரும், கேணல் தமிழ்ழேந்தி அவர்களும் நின்றார்கள். அவர்கள் பணத்தைக் கண்டதும் பெரும் மகிழ்சி அடைந்தார்கள்.  இந்த சம்பவத்தின் பின் எம். ஜி .ஆர்  மீது பெரிய நம்பிக்கை தேசியத் தலைவருக்கு ஏற்பட்டது. அதற்குப்பின்னர் இருவருக்குமான உறவு நெருக்கமானது; அவர் ஒரு முதல் அமைச்சராக எங்களோடு பழகவில்லை அவர் ஒரு சகோதரன் போலவே பழகினார்;

 எங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அது மட்டும் அல்ல நீங்கள் விட்டு விடக்கூடாது தொடர்ந்து எதிர்த்துப் போராடி சுதந்திர தமிழீழத்தை அமைக்க வேண்டுமென தொடர்ந்து தலைவருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்; அதற்கான நிதியுதவி, மற்றும் ஆயுத உதவிகளையும் நான் தருவேன் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டே இருந்தார்.


இந்திய மத்திய அரசு எமது அமைப்பு மீது ஒரு தவறான முடிவு எடுத்த போதும் கூட அது மத்திய அரசின் முடிவு "என்னைப் பொறுத்தவரை நான் இறுதி வரை உங்களிற்கு ஆதரவாகயிருப்பேன்" என உறுதிப்படுத்தினார். அது மட்டும் அல்ல நாம் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி இந்தியா ஊடாகத் தமிழீழம் கொண்டு செல்வதற்கும் அவரின் உதவி எமக்கு கிடைத்தது;

இவ் உதவிகளை செய்த எம். ஜி. ஆர் அவர்கட்கு 1985 கடசிப்பகுதியில் தலைவர் நேரில் சென்று தனது நன்றியைத் தெரிவித்ததோடு அவருக்கு அன்பளிப்பாக புதிய  AK 47 ரக இயந்திர துப்பாக்கி  ஒன்றினையும் பரிசாக வழங்கி அதை இயக்குவது தொடர்வாகவும் அவருக்கு சொல்லிக் கொடுத்தார் தலைவர். எம். ஜி .ஆர் தனது நன்றியைத் தலைவருக்கு தெரியப்படுத்தினாராம். எம். ஜி.ஆர் அவர்களின் உதவியை எம்மால் அளவிட முடியாது; இவர் மட்டும் அல்ல தமிழகத்தில் குளத்தூர்மணி, ஐயாநெடுமாறன், வைக்கோபாலசாமி என நாம் அறியாத பல தமிழக மக்களும்; தமிழகத் தலைவர்களும்; நாம் தமிமீழத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத் தோளோடு தோள் நின்று எம்மோடு சேர்ந்து உழைத்தவர்கள் என்பதை ஒவ்வொரு ஈழத் தமிழனாகிய நாம் மறந்து விடக் கூடாது என தேவர் குறிப்பிட்டார்.



1983/11 ஆம் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு பயிற்சி தர இந்தியா அனுமதி வழங்கியது.





பாலா அண்ணை முதலில் தமிழக புலனாய்வுத்துறை Q Branch உதவி பொலிஸ் மா அதிபராக பதவி வகுத்த திரு. அலக்ஸ்சாண்டர் என்பவரோடு தொடர்வுகொண்டு;   அவரோடு உரையாடியதைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைக்கு அமைய திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில் இந்திய இராணுவப்பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகளிற்கும் இடம் வழங்கும்படி கேட்டிருந்தார். அதற்கு இந்தியாஅனுமதி வழங்கியது.

 

முதலாவது, மற்றும் இரண்டாவது, பயிற்சி முகாம் பற்றி ஆரம்ப காலப் போராளியின்நாட்குறிப்பில்இருந்து





அதன் படி1983 / 9 ஆம் மாதம் வட இந்தியாவில் உள்ள "டேராடூன்" என்ற இடத்தில் முதலாவது பயிற்சிக்கான  அணி புறப்பட்டுச் சென்றது; திருநெல் வேலி தாக்குதலிற்கு முன்னர் விடுதலைப் புலிகளில் இருந்த சிரஸ்ற்ற போராளிகளின்மொத்தத்தொகை  33 தாக்குதலிற்கு . பின்னர் இருந்த தொகை 29 திருநெல்வேலி தாக்குதற்கு முன்னர் வீரச்சாவு அடைந்தவர்கள் 4 பேர்( 01. தலைவரின் முதலாவது பாதுகாவலர் லெப் சங்கர் / சத்தியநாதன்,   02. வீரவேங்கை ஆனந்த்,.  03. லெப் .சீலன், 04. லெப். செல்லக்கிளி.


இதில் தலைவரால் முதலாவது பயிற்சிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல்; இந்தியாவில் நின்று கடமையாற்றியவர்களின் விபரம்:01. தலைவர்,  02 .பேவி அண்ணை,   03. ராகவன்,  04. அன்ரன் மாஸ்ட்டர், 05. தேவர் அண்ணை, 06. நேசன்,  07. தலைவரின் முதலாவது பாதுகாவலர்  குண்டப்பா,   08 . கே.பி.


இதில் தலைவரால் முதலாவது பயிற்சிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாமல்; தமிழீழத்தில் கடமை ஆற்றியவர்கள் தமிழீழத்தில் அனைத்து மாவட்டங்களிற்கான பொறுப்பாளராக; கப்டன் பண்டிதர் தலைவரால் நியமணிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கீழே வன்னிப் பொறுப்பாளராக  மாத்தையா இருந்தார். மட்டு, அம்பாறை பொறுப்பாளராக ராமு இருந்தார். யாழ் மாவட்டப் பொறுப்பாக பசீர்காக்கா மற்றும் அப்பையா அண்ணையும் இருந்தார்கள். திருமலை மாவட்டப் பொறுப்பாக சந்தோஸ் மாஸ்ட்டரும் இக்காலப்பகுதியில் மாத்தையாவே மன்னார் மாவட்டத்தையும் கவனித்து வந்தார்.






இதில் தலைவரால் முதலாவது பயிற்சிக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் 01. பொன்னம்மான்,  02. அருணா , 03. புலேந்திரன், 04. கணேஸ், 05. யோகன்பாதர்,  06. விக்டர்,  07. ராஜேஸ்,  08. லிங்கம்,   09. பொட்டுஅம்மான், 10.  றெஜி, 11.ஞானம், 12. ரஞ்சன் லாலா, 13. கிட்டு,  14.அல்பேட்,  15. சுப்பையா, இவர்கள் அங்கே பயிற்சிக்குச் சென்றதும்; கப்டன். பண்டிதர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து;  புதிதாக 85 இளைஞர்களை இணைத்து; முதலாவது "லூப்பி" பயிற்சிக்காக அனுப்பி வைத்தார்.இதில் தமிழீழத்தில் இருந்து அனுப்பப்பட்ட என்பத்தைந்து இளைஞர்களில் தலைவரால் கொழும்பில்  வைத்து மரணதண்டனை வழங்கப்பட்ட பொத்துவில்லையைச்  சேர்ந்த  கனக ரத்தினத்தின் மகன் சைமனும் அடங்குவார். அவர் அங்கே சென்று சிறந்த முறையில் பயிற்சி எடுத்து தமிழீழம் வந்து முக்கிய பொறுப்பாளாராக13/02/1985 அன்று மணலாறு கொக்குளாய் படை முகாம் மீதான தாக்குதலிற்குச் சென்று திறமையாகாச்  சண்டையிட்டு வீரச்சாவு அடைந்தார்.



அவரின் முழுப்பெயர் கனகரத்தினம், ரஞ்சன் பிறப்பு 20 /09/1985 சொந்தமுகவரி, பொத்துவில். அன்றில் இருந்து எம்மால் போற்றப்படும் மாவீரர் குடும்பமாக மாறிவிட்டது அவரின் குடும்பம். இதனை அனைவருக்கும் தெரிவிப்பதோடு எமது விடுதலை இயக்கத்தைப் பொறுத்த வரையில் எங்கள் விடுதலைப்பயணத்தில்  எமது தமிழீழ மக்கள் எவரையும் வஞ்சகக் கண்ணோட்டத்தோடு நாம் பார்த்தது இல்லை.


அவன்தூரோகி , இவன் துரோகி, என்று அடையாளப்படுத்தி வைப்பதோ! பிரித்து வைப்பதோ! எமது போராட்ட மரபில் கிடையாது.ஒரு குடும்பதில் அவர்களின் அங்கத்தவர்களான தககப்பன் அல்லது சகோதரர்கள் மற்றும் இயக்கங்களில் இருந்து கொண்டு;  அவர்கள் துரோகச்செயல்ப்பாடுகளில் ஈடுபட்டால்; அவர்களிற்கு மட்டுமேமரண தண்டனை வழங்குவது எமது கடமை ஆகும். ஆனால் அக்குடும்பங்களில் எவ்விதமான பாரபட்சமும் காட்டியது இல்லை. அனைவரையும் சகோதரத்துவ உறவுமுறை ஊடாக; நேசக்கரம் நீட்டி; அனைவரையும் இணைத்து விடுதலைப் போராட்டத்தில் பயணித்தோம். என்பதை தெளிவு படுத்துகின்றேன்.

 இது 1983 கடசிப்பகுதியில் நடந்தது; இதன் பெயர் "லூப்பி" முதலாவது பயிற்சி முகாம் என வைக்கப்பட்டது. இவர்களிற்கான பயிற்சியை இந்திய இராணுவம் வழங்கியது. பயிற்சியை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் பொன்னம்மானே இருந்தார்.





 இரண்டாவது பயிற்சி முகாம் "லூப்பி இரண்டாவது" என பெயர் வைக்கப்பட்டது. இது ரஞ்சன் லாலா தலைமையில் நடைபெற்றது. இதற்கும் இந்திய இராணுவமே பயிற்சி வழங்கியது. தமிழீழத்தில் இருந்துநூறு இளைஞர்கள் அதிலும் பயிற்சி எடுத்தார்கள்.

தமிழீழத்தில் இருந்து இளைஞர்களை குண்டப்பாவே படகுகள் மூலம் ஏத்தி இறக்கினார் . அதே நேரம் தலைவரின் பாதுகாப்புத் தொடர்பான கடமைகளையும், அவரே கவனித்தார். 

இப்பயிற்சி சிறந்த முறையில் நடைபெற்றது. இதில் பயிற்சி எடுத்த போராளிகளில் ஒரு தொகுதியினர் இந்தியாவிலே நின்றதன் காரணம் அடுத்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக;  ஏனையவர்கள் தமிழீழம் அனுப்பப்பட்டார்கள்.

 போராளிகள் திரும்பிய போதிலும் தேசியத் தலைவர் அவர்கள் அதில் திருப்தியடையவில்லை. தமிழகத்தில் மேலும் பயிற்சி முகாம்களை ஆரம்பிக்க வேண்டும் என சிந்தித்தார். இது பற்றி பேவி அண்ணாவோடு கலந்து ஆலோசித்தார். இருவரின் திட்டத்திற்கு அமைவாக அக்காலப் பகுதியில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைபற்றிய புகைப்படக் கண்காட்சிகள் பேவி அண்ணையின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டுயிருந்தன;

 அப்பொழுது கோவையிலும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அவ்வேளை திரு. ராமகிருஷ்ணன் அவர்களிடம் பேவி அண்ணா பயிற்சி முகாம் நடத்த இடம் தேவைப்படுவதாக தெரிவித்தார். அதைக் கேட்டு  திரு. ராமகிருஷ்ணன் மேட்டூர் கொளத்தூரில் மணி அண்ணாவின் தோட்டம் அதற்கு ஏற்றதாக இருக்கும் என தெரிவித்ததோடு பேவி அண்ணாவையும், மணி அண்ணாவையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.


மணி அண்ணாவும்... "உங்களிற்கு அவ் இடம்பிடித்துக் கொண்டால் தாராளமாக அங்கு நடத்துங்கள்" என தெரிவித்துள்ளார். முதன் முதலில் கொளத்தூருக்குச் சென்று இடத்தைப் பார்வையிட்டு வந்தார் ராகவன். அடுத்து பேபி அண்ணா மற்றும் தேசியத் தலைவர் இருவரும் சென்று மணி அண்ணையைச் சந்தித்து கலந்துரையாடி அங்கு பயிற்சி முகாம்கள் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



3 வது பயிற்சி முகாம் பற்றி போராளி "சுக்குளா" விளக்குகின்றார்;

 14/01/1984 அன்று முதல் முதலாக சில குறிப்பிட்ட இளைஞர்களுடன் நான் அங்கே ஆரம்ப இராணுவப் பயிற்சிக்காகச் சென்றேன். நாங்கள் அங்கே சென்றதும்; தைப்பொங்கலிற்காக அவர்களால் பொங்கப்பட்ட நெய்ப் பொங்கல் எங்களிற்கு பரிமாறப் பட்டது. அது மிகவும் சுவையாகயிருந்தது. அது அந்த பண்ணையை எமக்கு தந்து உதவிய குளத்தூர் மணியண்ணைதான்  அப்பொங்கலை எமக்கு பரிமாறினார்.


இப்பயிற்சி  மெதுவாகவே தொடங்கியது. ஏனெனில் தமிழீழம் இருந்து சிறிது சிறிதாக இளைஞர்கள் வந்து கொண்டுயிருந்தரர்கள்.... அதனால் அனைவரும் வரும் வரை நாங்கள் அங்கே பயிற்சி முகாம் தொடர்பான வேலைகளையும், உடல் பபிற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டியிருந்தோம். நூற்று முப்பது இளைஞர்களும் வந்தவுடன் 25/01/1984 அன்று பயிற்சி ஆரம்பமானது.


இந்தியன் 3வது பயிற்சி முகாம்,நூற்று முப்பது போராளிகளோடு ஆரம்பமானது.   இரண்டு பெரிய கொட்டில்களில் 65 பேராகப் பிரித்து இரண்டிலும் விட்டார்கள். கர்நாடக மாநில எல்லைப் பிரதேசமான மலைப் பிரதேசத்தை அண்டிய  "கும்பாரப்ப்பிட்டி" குளத்தூர் பகுதியில் இருந்த மணியண்ணையின் தோட்டதில் இப்பயிற்சி முகாம் அமைந்து இருந்தது, இவ் முகாம் பொறும்பாளராக லெப் கேணல். பொன்னம்மான் இருந்தார்.


உடல் பயிற்சி ஆசிரியராக புலேந்தி அம்மானும் அவருக்கு உதவியாக செந்திலும் விடப்பட்டிருந்தார்கள். அடுத்து எங்களின் பயிற்சியை கண்காணிப்பதற்காக எங்களிற்கு முதல் பயிற்சி எடுத்த போராளிகள் விடப்பட்டுயிருந்தனர். அதில் போராளி லூக்காஸ் அம்மான், போராளி மேனன், போராளி சுபாஸ், போராளி பிரபா, போராளி நிதி, போராளி ரமணன், போராளி சைமன், போராளி ரஞ்சன், இவர்கள் விடப்பட்டனர். இப்பயிற்சி சிறப்பான முறையில் நடந்து கொண்டுயிருந்த வேளை பொன்னம்மானின் வேண்டுகோளிற்கு இணங்க காலை நேர உணவை நிறுத்தி அதில் மிஞ்சும் பணத்தில்   பயிற்கு முகாம் தேவைக்கு ஒரு வாகனம் வேண்டுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள் என மூத்த போராளி சுக்குளா குறிப்பிட்டார். இதில் பயிற்சி எடுத்தவர்கள்: 01.பிரிகேடியர் சொர்ணம், 02 பிரிகேடியர் ஜெயம்,  03. ஜெகன் றைவர்,  04. சஞ்சை,  05. நியூடன், 06. சுக்குளா, என 130 போராளிகள் பயிற்சி முடித்தார்கள். இதில் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் கணிசமான போராளிகள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.

 போராட்டக் கல்வி தொடர்பான வகுப்புக்களை லெப். கேணல் ராதா மற்றும் பொன்னம்மான் இருவரும் எடுத்தார்கள். அணி நடைகளிற்கான பபயிற்சியை ராதா அண்ணையும், பொன்னம்மானும் தந்தார்கள்.1984 / 5ம் மாதம் அனைத்துப் பயிற்சிகளும் நிறைவிற்கு வந்ததாக மூத்த போராளி சுக்குளா குறிபிட்டார்.

நிர்மலா பிடிபட்டது தொடர்வாக முன்னர் பார்த்தோம் இனி அவரை மீட்டது தொடர்வாகப்பார்ப்போம்


10/04/1984மட்டு ஜெயிலை உடைத்து நிர்மலாவை மீட்டனர் புலிகள்.

நிர்மலா எந்தக் காலத்தில்? ஏன் பிடிபட்டார்? என்பது முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது அவரை ஜெயிலில் இருந்து எடுத்தது தொடர்பாகப் பார்ப்போம்.

அப்பொழுது நிர்மலா ஜெயிலில் இருந்தார் .1984 /5 மாதம் நிர்மலாவை ஜெயலில் இருந்து மீட்குமாறு தலைவர் கிட்டு அண்ணைக்குக் கட்டளை வழக்கினார். இதை ஏற்றுக் கொண்ட தளபதி கிட்டு அண்ணை மட்டக்களப்பில் இருந்து போராளி பிறான்சிஸ் அவர்களையும்; யாழில்இருந்து போராளி காக்கா அவர்களையும்; எடுத்து  ஒரு மாதம் தன்னோடு வைத்து இருந்து அதற்கான பயிற்சியை கிட்டு அண்ணை வழங்கினார்.

அடுத்து இருவருக்கும் இரண்டு றிவ்வோல்வரையும் கொடுத்து அவ் நடவடிக்கைக்காக மட்டக்களப்பிற்கு அனுப்பி அனுப்பிவைத்தார் கிட்டு அண்ணை.

 இவர்கள் இரண்டு றிவ்வோல்வருடன் அங்கே சென்றார்கள்.அவர்களுடன் சிவம், டேவிற், மற்றும் புதிய உறுப்பினர்கள், அனைவரும் இணைந்து மட்டக்களப்பு ஜெயிலை10/04/1984 வெற்றிகரமாக உடைத்து நிர்மலாவை பொலநறுவை ஊடாக பல இடங்கள் மாறி, மாறி மன்னாருக்குக் கொண்டு வந்து மன்னாரில் இருந்து படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வந்தார் காக்கா அண்ணை.


வெற்றிகரமாக் கொண்டுவந்து தளபதி கிட்டு அண்ணையிடம் ஒப்படைத்தார் அவர்.சிறிது நாட்கள் அங்கே நின்ற நிர்மலா படகு மூலம் கிட்டு அண்ணையால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் சென்ற படகில்தான் பயிற்சி முடித்து அங்கே நின்ற லெப். பரமதேவா யாழ்ப் பாணம் வந்து சேர்ந்தார்.

பரமதேவா யாழ்பாணம் வந்து சேர்ந்த வேளையில் பயிற்சி முடித்து இந்தியாவில் கடமையாற்றிக் கொண்டு இருந்த மூத்த போராளி காந்தன் இந்தியாவில் இருந்து வந்து யாழ்பாணத்தில் நின்றார். ஆனால் அவருக்கு அடையாள அட்டை இருந்தமையால் அவரை பேரூந்து ஊடாகக் கிட்டு அண்ணை மட்டக்களப்பிற்கு.அனுபிவைத்தார்

 பரமதேவாவை முல்லைதீவு அணியோடு சேர்த்து கால்நடையாக மட்டக்களப்பிற்கு அனுப்பிவைத்தார் கிட்டு அண்ணை.


1984 நடைபெற்ற சிறு, சிறுநடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்;

09/04/1984 அன்று யாழ் றெயில் நிலையத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வைத்து விடுதலைப்புலிகள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15 இராணுவத்தினர்கொல்லப்பட்டனர். இராணுவ வண்டி முற்றாகச் சேதம் அடைந்தது.

10/04/1984 அன்று விடுதலைப் புலிகள் பொது மக்களின் ஆதரவுடன் பருத்தித் துறை பொலிஸ் நிலையத்தைத் தாக்கி எரியூட்டியதுடன் அங்கு இருந்து இராணுவப் புத்தகங்களையும் கைப்பற்றினர்.


04/05/1984 அன்று விடுதலை புலிகளின் முக்கிய தளபதியான சீலனை காட்டிக் கொடுத்தமைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைஞச் சேர்ந்த பொன்னையா, சுப்பிரமணியம் என்ற நபருக்கு மீசாலையில்வைத்து விடுதலைப் புலிகள் சாவொறுப்பு வழங்கினார்கள்.




16/05/1984 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை காட்டிக் கொடுத்த வவுனியாவைச் சேர்ந்த தர்மபாலா என்பவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது.




18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய அற்பணிப்பைச்செய்து அனைத்துப்போராளிகளிற்கும்ஒரு வளிகாட்டியாக தனது வீரச்சாவைப்பதிவு செய்தார், இப்போராளி தமிழிழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில் முதலாவது குப்பி கடித்து வீரச்சாவு அடைந்த போராளி இயக்கப் பெயர் வீரவேங்கை  பகீரதன் சொந்தப் பெயர் வேலுப்பிள்ளை அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: 02.05.1959 


 18.05.1984 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் படையினரால் முற்றுகையிடப்பட்டு அவரைக்கைது செய்து அவர்களின் இராணுவ முகாமிற்குக்கொண்டு செல்லப்பட்டபோது அவர் திடீரேன சயனைட் உட்கொண்டு அவ்விடத்திலேவீரச்சாவு அடைந்தார், அடுத்து அவரின் வித்துடலை உறவினர்களிடம்இருந்து வேண்டியெடுத்து விடுதலைப் புலிகள் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைத்துள்ளார்கள், ஆரம்பத்தில் பொன்சிவகுமரன் குப்பி கடித்து தமிழர்களிற்கு வழிகாட்டினாலும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிற்கு வளி காட்டியது இவரே ஆவார் அதைத்தொடர்ந்து ஆயிரக்காணக்கான எமது போராளிகள் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பம் ஏற்படும்போது குப்பிகடித்து வீரச்சாவு அடைந்துள்ளார்கள்,




காரணம் அவர்கள் உயிரோடு பிடிபட்டால் எதிரி கடுமையான சித்திரவதை செய்து எமது போராட்டத்தில் இரகசியம் எனகருதப்படும் எமது தீவிர ஆதரவாளர்கள் பற்றிய தகவல், மற்றும் எமது தலைவரின் மறைவிடம், ஆயுதக்களஞ்சியங்களின்மறைவிடம், எமது எதிர்காலத் திட்டங்கள் தொடான இரகசியர்களை  எதிரி அறிந்த பின் அவரைக்கொலை செய்து விடுவான்,


அதனால்தான் எமது தலைவர் இவ்நடை முறையை அனைத்து போராளிகளிற்கும்கொண்டுவந்தார், ஆயுதப்போராட்டம் மைனிக்கும்வரை இது நடைமுறையில் இருந்தது,

04/08/1984/ அன்று பதினெட்டு சிங்களப் படையினர் வல்வெட்டித்துறையில் வைத்து விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்தனர். அம்முற்றுகையை பொது மக்களின் ஆதரவுடன் இரு பகுதிக்கும் இடையே நடந்த சண்டையில் ஆறு கடற் படையினர் கொல்லப்பட்டனர். மூவர் காயம் அடைந்தனர். இழப்புக்கள் இன்றி முற்றுகையை உடைத்து விடுதலைப் புலிகள் வெளி ஏறினார்கள்.


05/08/1984 அன்று மாலை ஐம்பது பேரைக்கொண்ட முல்லைத்தீவுமாவட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் "கொரில்லா" அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.


06/08/1984 அன்று யாழ் மருத்துவமனைக்கு அண்மையில் சிங்களப் படைக்கவச வாகனங்களில் வந்து நின்று பொது மக்களின் கட்டிடங்களை சேதப்படுத்திக்கொண்டு இருந்தவேளை விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிராகக் கைக்குண்டுகளை வீசி நடாத்திய தாக்குதலில் அதிகாரி ஒருவர் அவ் இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு இராணுவத்தினர் காயம் அடைத்தனர்.


11//08/1984 அன்று மன்னார் பூநகரி பிரதானபாதையில் நிலக்கண்ணி வெடிவைத்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வண்டியில்   வந்த  பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஜீப் வண்டியும் முற்றாக அழிக்கப்பட்டதுடன் ஆயுதங்களும் மீட்க்கப்பட்டன.


14/08/1984 அன்று இராணுவம் மற்றும் பொலிஸ் இணைந்து இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல படையினர் காயம் அடைந்தனர்.


24/08/1984 அன்று கரவெட்டி மேற்கில் பாதையொன்றில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியை அகற்ற முயன்ற இராணுவம் மீது அது வெடித்ததில் எட்டு இராணுவத்தினர் அவ் இடத்திலே கொல்லப்பட்டனர்.


01/09/1984/ அன்று செம்மலை ஊடாக செல்லும் முல்லைத்தீவு கொக்குளாய் பாதையூடாக மூன்று வாகனங்களில் இராணுவம் வந்து கொண்டிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட  கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு ஜீப்வண்டி கண்ணிவெடியால் சிதறியது. மற்ற இரண்டு வாகனங்களை நோக்கி விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் மொத்தம் பதினைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


22/09/1984 அன்று மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் மீது நடாத்திய தாக்குலில் லெப். பரமதேவா, ஆதரவாளர் ரவியும், வீரச்சாவு அடைந்தனர். முன்னரே பொலிஸார் உசார் அடைந்தமையால் விடுதலைப் புலிகள்பாதுகாப்பின் நிமித்தம் பின்வாங்கிச்  சென்றார்கள்.


01/09/1984 அன்று விடுதலைப் புலிகள் நடாத்திய அச்சுவேலி, வசாவிளான் பகுதியில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதிலில் கவச வண்டி முற்றாக சேதம் அடைந்தது அதில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.




 1984 ஆண்டு 09ஆம்  மாதம் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின்  ஐந்தாவது பயிற்சி முகாம்பற்றி;


அதில் பயிற்சி எடுத்த ஆரம்ப காலப்போராளி மாயா குறிப்பிடுகையில் நாங்கள் இருநூற்றைம்பது இளைஞர்கள் அங்கே சென்று இருந்தோம். போனவுடனே எங்களின் பயிற்சிக்கான உடைகள் தரப்பட்டதோடு முடி, நகம் அனைத்தையும் வெட்டுமாறு கட்டளை வழங்கப்ட்டது; அதற்கு ஏற்றவாறு நாங்களும் ஒத்துழைப்பு வழக்கிங்கினோம்.

எங்களின் பயிற்சி முகாமிற்கு மேலாளராக லெப். கேணல் பொன்னம்மான் இருந்தார். பயிற்சி முகாம் பொறுப்பாளராக போராளி அத்தி என்பவர் நியமிக்கப் பட்டிருந்தார்.  எங்களிற்கான பாடங்களை பொன்னம்மான் மற்றும் மூத்த போராளிகள் சிலரும் எடுத்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சியை சுக்குளா, போள், முத்து, போராளிவேணு, இவர்கள் தந்தார்கள். அதில் ஒரு போராளி மட்டுமே வருத்தம் காரணமாக இடையில் வெளியேறி விட்டார். ஏனைய இருநூற்று நாப்பத்தொன்பது போராளிகளும் பயிற்சி முடிந்ததும் தமிழீழம் அனுப்பப்பட்டார்கள்; என குறிப்பிட்டார்.   




 

 2/03/1984 பயிற்சியை  முடித்து வந்த பரமதேவாவை கிட்டு அவர்கள் தான் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.

இதே காலப்பகுதியில்தான் லெப்.பரமதேவா மட்டக்களப்பு மாவட்டதிற்கு  தலைவரால் அனுப்பப்பட்டார்.

தென்தமிழீழத்தின் மூத்தபோராளி, மட்டக்களப்பின் தன்னலமற்ற தானைத்தளபதி, லெப்.ராஜா .பரமதேவா அவர்கள் , இந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெற்று முடிந்து தமிழகம் இருந்து போராளிகளோடு வடமாகாணம் வந்த பரமதேவா சில குறிப்பிட்டகாலம் மணலாறு மாவட்டத்தில் கடமையாற்றினார்; அக்காலப் பகுதியில்.....



 1983ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதலாவது பயிற்சிக்காக மட்டக்களப்பில் இருந்து சில குறிப்பட்ட மூத்த போராளிகள் அனுபப் பட்டார்கள்; அதில் போராளிகளான காந்தன், யோகன்பாதர் , பரமதேவா என என்னும் பல போராளிகள் அனுப்பப்பட்டார்கள்.

 அக்காலத்தில் ஆரம்ப மட்டு, அம்பாறை இணைப்பாளராக போராளி ராம் இருந்தார்; அவருக்கு உதவியாக பிறான்சிஸ் இருந்தார்.

பயிற்சி முடிந்து யாழ்பாணம் வந்த பரமதேவா மட்டக்களப்பு செல்வதற்காக வன்னிக் குறுப்போடு இணைக்கப்பட்டார். அப்பொழுது அவர் மணலாறு போய் நின்ற காலத்தில்தான் முல்லை ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் பரமதேவா பங்குபற்றி சிறந்த வீரனாகச் செயற்பட்டார்.

 05/08/1984 அன்று மாலை ஐம்பது பேரைக்கொண்ட முல்லைத் தீவுமாவட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் "கொரில்லா" அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 ஏந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

முதலாவது பாசறையில் பயிற்சி எடுத்த பல கிழக்கு மாகாணப் போராளிகள் இருந்தாலும், இச்சண்டையில் திறமையாகச் செயல்பட்ட காரணத்தால்கிழக்கு மாகணத்திற்கு முதல் தாக்குதல் தளபதியாக பரமதேவா தலைவரால் அனுப்பப்பட்டார்.

1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.


சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களைத்  தீவிரப் படுத்தும்  நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் யாழில் செயல்பட்டார்.


அதே போல் கிழக்கு மாகாணத் தாக்குதல் தளபதியாக ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர்.


பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.


முன்னர் குறிப்பிட்டுயிருந்தேன் காந்தன் அடையாழ அட்டையிருந்தமையால் அரச பேரூந்து ஊடாக மட்டக்களப்பு சென்றார் என்று அது போல் பரமதேவும் சண்டை முடிந்த கையோடு நடையில் மிகவேகமாகப்போய்ச்சேர்ந்தார், மட்டக்களப்பிற்குஅதானால் அனைவரும் சேர்ந்து,

1984 .09 .22 ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களக் காவல் நிலையதாக்குதற்காக விடுதலைப்புலிகள் தாயார் ஆனார்கள். அத்தாக்குதலில் பங்குபற்றிய போராளி காந்தன், காக்கா, பரமதேவா கட்டன் பிரான்சிஸ்



பல போராளிகள் இணைந்து

. அச்சண்டை வெற்றிகரமாக நடத்தினார்கள்,வெற்றியடையா விட்டாலும்; மட்டு மாவட்டத்தில் நிலை கொண்டுயிருந்த எதிரி படைகளிற்கு ஒரு சவாலாகவே அமைந்தது.

அச்சண்டையில்முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன், வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில்  தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.



மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும்; ஏனைய போராளிகளும்; தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்து இருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டது. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனைகளும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன. பரமதேவாவின் விரச் சாவிற்குப் பின்னர் : 1984/04ம் மாதம் வரை மட்டு, அம்பாறை இணைப்பாளராக போராளி காக்கா தலைவரால் நியமிக்கப் பட்டுயிருந்தார்.

பின்னர் அனைத்து செயல்பாடுகளிலும் பங்குபற்றிய பிரான்ஸ்சிக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்அவரின் கோட்டைக்கல்லாறு விட்டிற்குச் சென்றபோது சமூகவிரதிகளால் இந்திய இராணுவத்திற்குதகவல் தெரிவித்தமையால் இந்திய இராணுவமும் தேசத்துரோகிகளும் இணைந்து முற்றுகையிட்டபோது, முற்றுகை முறியடித்து ஓடும்போது காலில் வோத்தல் துண்டு வெட்டி இரத்தம் ஓடிக்கொண்டுயிந்தது அதைபின் தொடர்ந்து சென்ற இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார், 


பண்டிதர் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில்தான் லெப். பரமேதேவாவின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் மீதானதாக்குதலும் அவனின் வீரச்சாவும் நடைபெற்றது.

 யாழ் மாவட்ட முதல் தளபதிகப்டன். பண்டிதர் அவர்கள் வரலாறு,

இதேகாலப்பகுதியில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக கப்டன். பண்டிதர் அவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் கடமையாற்றிக் கொண்டுயிருந்தார்.




அவன் தனது பதினாறுவயதின் இறுதிலேயே தமிழீழவிடுதலை என்பதில் ஆழமான ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கின்றான். விடுதலைக்கான பாடல்களை எழுதி தனது பாடசாலை கொப்பியில் அழகாக வைத்திருப்பதில் ஆரம்பித்து விடுதலைக்காக ஆயுதப் போராட்ட அமைப்பை ஆரம்பித்திருந்த தேசியதலைவரை 1977ல் சந்தித்து தன்னையும் தலைவருடன் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததுவரை அவனது ஆரம்பம் இருந்திருக்கிறது.


எடுத்தவுடன் எவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை கவனித்து அவர்களின் உறுதியை சோதித்து அதன்பின்னரே தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தலைவரின் இயல்புக்கேற்பவே முதன்முதலாக தலைவருக்கும் பண்டிதருக்குமான அந்த சந்திப்பு இருந்திருக்கிறது.


ஒரு கைத் துப்பாக்கியின் விசையை இழுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மெலிந்தவனாகவும் இருந்த மையால் "தற்போது நீ !வீட்டபோய் நில் பெரியஆளாக வந்தவுடன் எடுக்கலாம் என தலைவர் அவனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்";


மாதக்கணக்கில் ஆரம்பித்து சிலவேளைகளில் வருடக் கணக்குக்கு கூட இப்படி காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இந்த காத்திருப்பு காலத்தில்தான் ஒவ்வொருவரையும் தலைவர் அடையாளம் காணுவார். உணர்ச்சிவசப்பட்டு விடுதலைக்கு வருபவர்களில் இருந்து உணர்வுபெற்று விடுதலைக்காக வருபவர்களை வடிகட்டி எடுக்கும் தலைவரின் ஆரம்பகால இந்த அணுகு முறைதான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கும் உறுதியான அத்திவாரத்துக்கும் வலுச்சேர்த்தது. எழுபத்தெட்டில் பண்டிதரும் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டான்.

எந்தநேரமும் வாட்டிக் கொண்டிருந்த ஆஸ்மா நோயுடன் அவன் விடுதலைக்காக முழுநேரமானான்.


அவன் நிறையவே தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டான். அவரிடம் இருந்து எளிமை,அவரிடம் இருந்தே ரகசியம்பேணும் தன்மை,அவரிடம் இருந்தே மக்களை ஆழமாக நேசிக்கும் பண்பு, என்று எல்லாமே அவரைப்போலவே அவனும்...... எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் அவனில் இன்னும் ஆழமாக புகுந்துகொண்டது..!


இதனை அவதானித்த தலைவர் 1980 ஆரம்பத்தில் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார். அதை விட இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளராகவும் அவனே இருந்தான்.



.எல்லோருக்கும் மாதம் முதல்திகதியில் அந்த மாதத்துக்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கப் பட்டுவிடும்.தினசரி சாப்பாட்டுச்செலவு பத்துரூபாவீதம் கணக்கு பார்த்துகொடுக்கப்படும். இந்த பணத்துக்கான செலவுக்கணக்கு மாதமுடிவில் பண்டிரிடம் கொடுத்தால்தான் மறுமாதத்துக்கான பணம் பெறமுடியும்.தலைவர்உட்பட அனைவருக்கும் இதே வரையறையைதான் பண்டிதர் வகுத்திருந்தான்.


ஒவ்வொருவரின் கணக்குதுண்டுகளையும் பார்த்து அதில் இருக்கும் அதிகமான செலவுகளை குறைப்பது; சம்பந்தமாக அவர்களுடன் அவன் கதைக்கும் பாங்கு இன்னும் நினைவுக்குள் நிற்கின்றது.

பகல்முழுதும் சைக்கிளில் அங்கும், இங்கும் என்று இயக்கவேலைக்களுக்காகவும்;மக்களை சந்திப்பதற்காகவும்; அதிகாலைமுதல் நள்ளிரவு வரை ஓடிக்கொண்டே இருப்பான்.இரவு அவன் தங்குமிடத்தில் அனைவரும் தூங்கியபின்னரும் இவன் தனித்து ஒரு குப்பிவிளக்கு ஒளியிலோ மெல்லிய வெளிச்சத்திலோ அன்றைய கணக்குகளை எழுதிக் கொண்டிருப்பான்;


மிகவேகமாகவே பண்டிதர் அனைவரதும் தேவைகளையும்; அனைவரதும் கோரிக்கைகளையும்; உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான்.

நிதிபொறுப்பு என்பதைவிட ஆயிரம்மடங்கு கடினமானது ஆயுதபொறுப்பு.அந்தநேரம் இருந்த ஆயுதங்களில் ஒருபகுதி எந்தநேரமும் நிலத்துக்கு கீழாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.அப்படி புதைத்துவைத்திருக்கும் ஆயுதங்களின் விபரங்கள் அவை வைக்கப்பட்ட திகதி;மீண்டும் எடுத்து மீளவும் சரிபார்க்கப்பட்டு வைக்கப் படவேண்டிய திகதி; என்று அனைத்தும் அவனால் மிகவும் அழகானமுறையில் எழுதப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கும்.


ஆனால் என்ன.... அதை வேறுயாருமே படிக்க முடியாது.இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு இரகசிய சங்கேத எழுத்துமுறையைக் கண்டு பிடித்தான். அதில்தான் எழுதுவான்.இதனை படிக்கக் கூடியவர்களாக இயக்கத்தில் தலைவரும்,லெப்.சங்கரும், ரஞ்சன்லாலாவுமே விளங்கினார்கள்.

முதலாவது மாவட்டத் தளபதி என்ற பொறுப்பு தமிழீழத்தில் கப்டன். பண்டிதர் என்பவரே யாழ். மாவட்டத்தில் தலைவரால் நியமிக்கப்பட்டார், ஆனால் அனைத்து மாவட்டங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இவருக்கு இருந்தது. இவர்! தன்னைப் பொறுப்பாக விட்டதும்;  மிகவேககமாக இயங்கத் தொடங்கினார், 

இராணுவதிற்கு எதிராகப் பல "கொரில்லா" தாக்குதல்களை நடாத்தி இராணுவத்தை கடுமையான முறையில் பயமுறுத்தி வைத்திருந்தார்.



இவரின் முதலாவது வேலையாக வெளிநாட்டில் இருந்து ஒரு R.P.G உந்துகணை செலுத்தி  ஒன்றை வேண்டி இந்தியா கொண்டுவந்து அதைமிகவும் பாதுகாப்பான முறையில் அதை யாழ்பாணம் கொண்டு வந்தார். ஆனால் முதல் முதலாக இலங்கைக்கு கொண்டுவந்த  R.P.G யும் அதுவாகவே இருந்தது; ஏனெனில் அந்தக் காலத்தில் இலங்கைப் படைகளிடம் இவ்ஆயுதம் இருக்கவில்லை.

அந்தக் காலப்பகுதியில் தான்இந்தக் கதை சிங்கள அரசிக்குக் "காட்டுத்தீ "போல் பரவியது. கண்டம் விட்டுப் பாயும் பெரிய ஆயுதம் ஒன்றை விடுதலைப் புலிகள் பெற்று விட்டார்கள் என்பதே..! அந்த வதந்தியாகும். இந்தத் தகவல் கிடைத்ததும்; இராணுவம் யாழ். குடாவில் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது; 09//01/1985 அச்சுவேலியிலுள்ள எமது "கொரில்லா" தளமொன்றை தேடிக்கொண்டு இருந்தகாலம் அது... அப்பொழுது தான் அச்சுவேலியில் பண்டிதர் இருப்பதாகத் தகவல் போய் அவ் வாழைத்தோட்டத்தைச் சுற்றி வளைக்கின்றது சிங்களப் படை; அப்போது !அத்தோட்டத்தில்   கப்டன். பண்டிதர், சின்னலோ உட்பட பதினைந்து போராளிகள் அங்கே இருந்தார்கள். 


உடனே முடிவு எடுத்த பண்டிதர்  சின்னலோவுடன் பத்துப்பேரை எதிரியை நோக்கி சுட்டுக் கொண்டு இருக்குமாறு கட்டளை வழங்கினார்.

 இராணுவத்தை நோக்கி சண்டையிடுமாறு சொல்லி விட்டு தான் அவசர, அவரமாக R.P.G உந்துகணை செலுத்தியை வாழைத்தோட்டத்திற்குள்வெட்டிபுதைக்கின்றார். பண்டிதர் அது எதிரி எடுக்கக் கூடாது எனத்  தாட்ட இடத்தில் இருந்து வேறு இடம் சென்று அங்கு இருந்து நான்கு போராளிகளுடன் இறுதி தோட்டா இருக்கும் வரை சண்டையிட்டுக்கொண்டே இருந்தார்பண்டிதர்.


பண்டிதரைநோக்கி சிங்களப்படை சுட்டுக்கொண்டு ஓட; இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி;  சின்ன   லோவுவுடன்  நின்ற  பத்துப் போராளிகளும்; முற்றுகையை உடைத்து வெளியே செல்கின்றார்கள்...... 


தொடர்ந்து பண்டிதர் இராணுவத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு இருக்கின்றார்..... பல மணித்தியாலம் இராணுவத்தைக் களைப்படையச்  செய்து தனது தோட்டா ரவைகள் முடிந்ததும் "குப்பி" கடித்து தன்னோடு நின்ற நான்கு போராளிகளுடன்   09/01/1985அன்றுவீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றார்கள்.


"கெரில்லா" வீரர்களைக் கைநழுவ விட்ட இராணுவத்தினர்; அச்சுவேலிக் கிராமத்திலுள்ள ஐம்பது அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து; அவர்களுக்கு பயங்கவாதிகள் என்ற முத்திரைகுத்தி; "வெற்றி வாகை" சூடிக் கொண்டனர். இதே காலத்தில் தான் நடக்கக்கூடாத விடயம் ஒன்று நடந்தது.

.1984 அக்டோபர் 31 ஆம் நாள் திருமதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.


திருமதி. காந்தியின் திடீர் மரணம் ஈழத் தமிழினத்தை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது. தமிழரின் அரசியில் அபிலாசையும், நம்பிக்கையும் இடிந்து நொறுங்கின. கடைகள், பாடசாலைகளை மூடி, வீடுகள் எங்கும் கருப்புக் கொடிகள் பறக்கவிட்டுத் தமிழீழ மக்கள் துக்கம் கடைப்பிடித்தபோது; தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படையினர் வீதிகளில் நடனமாடி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர்.
 தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைப் பொறுத்தவரை திருமதி. காந்தியின் திடீர் மறைவானது ஈடுசெய்ய முடியாத பெரியதொரு தார்மீக சக்தியைத் தமிழரின் சுதந்திர இயக்கம் இழந்து தவித்தது. இந்திரா காந்தி  அம்மையார் ஆழமான ஆளுமையும், மதிநுட்பமும் மிகுந்தவர். இலங்கை அரசியலின் சிக்கலான பரிமாணங்களை நன்கு அறிந்தவர். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினையில் ஆழமான அக்கறையும், அனுதாபமும் கொண்டவர். தமிழரின் உரிமைகளையும்; அரசியல் அபிலாசைகளையும்; வென்று கொடுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டிருந்தவர்.



 சிங்கள அரசியல் தலைவர்களின் மன  இயல்புகளையும்; அவர் நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவர்களை அச்சமூட்டிப் பணியவைக்கும் தந்திரங்களையும் கையாண்டு வந்தார். வங்காளதேசம் தனியரசாக உருப்பெற்றமைக்கு இந்திரா காந்தியின் பங்களிப்புக் காரணமாக இருந்த வரலாற்றை ஜெயவர்த்தனா நன்கு அறிந்திருந்தார்.

தமிழரின் இனப் பிரச்சினையிலும் திருமதி. காந்தி தலையிட்டுத் தமிழருக்குத் தனியரசை உருவாக்கிக் கொடுக்கலாமென ஜெயவர்த்தனாவுக்கு அச்சம் இருந்து வந்தது. ஜெயவர்த்தனாவின் இந்த அச்சம் பற்றி "திரு.டிக்சிட்" குறிப்பிடுகையில்! "திருமதி காந்தி உயிரோடு இருந்திருப்பாராயின் 1985 ஆம் ஆண்டிலேயே இலங்கையை இரு நாடுகளாகப் பிளவுபடுத்தியிருப்பார்; என்று ஜெயவர்த்தனா என்னிடம் அச்சம் தெரிவித்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.


"எமது விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகளுக்கும்; சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கும்; மத்தியில் பகை நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்குடன் இந்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை நாம் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்தோம். இந்திய அரசின் மத்தியஸ்துவத்தையும்; நல்லெண்ண சமரச முயற்சிகளையும்; மனமார வரவேற்று; எமக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும், உத்தரவாதங்களையும், ஏற்றுக்கொண்டு; ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போர் நிறுத்தம் செய்வதென; இம்மகஜரில் கைச்சாத்திட நாம் கூட்டாக முடிவெடுத்துள்ளோம்.
 எமது முடிவு ஒரு நல்லெண்ண சூழ்நிலையையும், இயல்பு நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும் என நம்புகிறோம். இந்தச் சமரசப் புறநிலையை ஏதுவாகக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கு மென எதிர்பார்க்கின்றோம். இத்தீர்வுத் திட்டம் எமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக; அமைந்திருந்தால் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியற் தீர்வு காண்பது குறித்துப் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்”.


"ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் போர் நிறுத்தம் செய்ய நாம் இணங்கிய போதும்; போர் நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும், எமக்கு அனுகூலம் அற்றவையாகவே உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களையும்; மாற்று யோசனைகளையும்; இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்".


"போர் நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அரசியற் தீர்வு குறித்து ஒரு விபரமான உருப்படியான திட்டத்தைச் சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்; என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசியல் தீர்வுத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்தால் மட்டுமே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக நாம் எடுத்துக்கூற விரும்புகின்றோம். தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுத்து; காலம் காலமாக மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள்; தமிழ் மக்களை ஏமாற்றி இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் கசப்பான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்".
 "அத்துடன் சிங்கள அரசுகள் தமிழ்த் தலைவர்களோடு செய்து கொண்ட உடன்பாடுகள், ஒப்பந்தங்களை நிறைவு செய்யாது முறித்துக் கொண்டமையும் உலகறிந்த உண்மை. அது மட்டுமின்றி தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதைத் தட்டிக் கழித்து; இழுத்தடிக்கும் ஒரு மோசமான நடைமுறையையும்; சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதையும்; நாம் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆகவே! இந்த ஏமாற்று அரசியல் வித்தையில் நாம் பலிக்கடாவாக விரும்பவில்லை. அதனால்தான் பேச்சுக்களில் பங்குகொள்வது பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள அரசு முதலில் எமது பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்".


ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் புதுடில்லியில் சாதகமான வரவேற்பைப் பெறவில்லை. டில்லியிலிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட "திரு.சந்திரசேகரன்" எமது  நிலைப்பாட்டில் இந்திய அரசுஅதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குச் சிறீலங்கா அரசு மீது ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையை விதித்துள்ளதாக; இந்திய வெளியுறவு அமைச்சு கருதுவதாகவும் அவர் விளக்கினார். எமது மகஜர் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை நான் பிரபாகரனிடம் எடுத்துக் கூறினேன்".


"இப்பிரச்சினை குறித்து முன்னணித் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்திக் கலந்துரையாடினர். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னராக இலங்கை அரசு ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்ற எமது நிலைப்பாட்டில் நாம் உறுதி பூண்டு நிற்கவேண்டும்! என பிரபாகரனும், ஏனைய கூட்டணித் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தனர்".
 "முன்னணித் தலைவர்களின் முடிவை திரு.சந்திரசேகரன் மூலமாக நான் டில்லிக்குத் தெரியப் படுத்தினேன். எமது விடாப்பிடியான நிலைப்பாடு குறித்து ஆத்திரமடைந்த "  "சந்திரசேகரன்" பிரபாகரனையும்  ஏனைய கூட்டணித் தலைவர்களையும் விரைவில் இந்திய அரசு டில்லிக்கு அழைத்துத் தனது அதிருப்தியை நேரில் தெரியப்படுத்தும் என எச்சரித்தார்".
 "ராஜீவ் அரசுக்கும், தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியில் நேரடியான முரண்பாடும், மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது போல எனக்குத் தென்பட்டது"

01/10/1984 அன்றுதேயத்தலைவர் அவர்களிற்கும் செல்லி மதி  அவர்களிற்கும் திருமணம் நடைபெற்றது


01/10/1984 தலைவர் பிரபாகரனிற்கு இந்தியாவில் உள்ள திருப்பூர் முருகன் கோயிலில் வைத்து சில குறிப்பிட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில் சமய முறைப்படி சட்டரீதியாக புங்குடிதீவைச் சேர்ந்த மதிவதனி என்பவருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும்  திருமணம் நடைபெற்றது.இவர்களிற்கு முதலாவது மகனாகச்சாழ்ஸ் அன்ரனியும் இரண்டாது மகளாக துவராகாவும் மூன்றாவது வன்னியில் பிறந்தவரான வாலச்சந்திரன் ஆகும்இவர்களிற்கு என்ன நடந்தது என்பதை பின்னர்பார்ப்போம்


 


 19/11/1984 அன்று கட்டுவன் பதியிலும் மேலும் பல இடங்களில் சிறு சிறு தாக்குதல்கள் நடைபெற்றது

 அன்று கட்டுவன் தெல்லிப்பளை வீதியில் உள்ள வறுத்தலைவிளானில் வைத்து வாகனம் மீது நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அத்தாக்குதலில் பிரிகேடியர் ஆரியபெருமாள் உட்பட ஒன்பது இராணுவத்தினர் சொல்லப்பட்டனர்.


18/12/1984 அன்று புல்மோட்டையில் விடுதலைப் புலிகள் நடத்திய நிலக் கண்ணிவெடி தாக்குலில் ஒரு டிரக் வண்டி சேதம் அடைந்தது; இரண்டு உயர் அதிகாரிகள் உற்பட முப்பத்தைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.எமது தரப்பில் இரண்டு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்




15/02/1985   - (6) ஆறாவது பயிற்சி முகாம் பற்றி அதில் பயிற்சி எடுத்தபோராளி நாடன்  குறிப்பிடுகையில்;

 15/02/1985/ தொடங்கி 15/10/1985 வரை பயிற்சி முடிந்தது. " எமது பயிற்சிமுகாமிற்கான இளைஞர்களை  தமிழீழம் இருந்து பொறுப்பாளர் குண்டப்பாவே படகு மூலம் கொண்டு வந்தார். அதில் என்னோடு சேர்த்து சுமார் முன்னூற்று அறுபது போராளிகள் அப் பாசறைக்கு வந்து சேர்ந்தோம்.


15/10/1985 அன்று எங்களின் ஆரம்ப இராணுவ பயிற்சி ஆரம்பம் ஆனது; பயிற்சி முகாம் அமைந்த இடம் மணியண்ணையின் தோட்டம் கும்புறுப்பிட்டி சேலம் மாவட்டம் , அதில் பயிற்சிக்கான பிரதான பொறுப்பாளராக தளபதி பொன்னம்மான் இருந்தார்.ஆறாவது  பயிற்சி முகாமிற்கான பொறுப்பாளராக  லூக்காஸ் அம்மான் இருந்தார். பயிற்சிகளை மேற்பார்வை செய்வதற்காக மேலாளர்  மேனன் இருந்தார்.


எங்களுக்கான போராட்ட ரீதியான வகுப்புக்களை மாதவன் மாஸ்டர் மற்றும் இந்திரன் இருவரும் எடுத்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சி ஆசிரியராக றோய் அவர்கள் இருந்தார். எங்களோடு பயிற்சி எடுத்தவர்களில் எனது ஞாபகத்தில் உள்ளோர்; யோகரெத்தினம் யோகி, திலீப், றகீம், பன்னீர்,புஸ்பன், பத்மன், முஸ்த்தப்பா, கலா, வாரத்,ராம், நவாஸ், நளன்.


இவர்கள் என்னோடு பயிற்சி எடுத்தார்கள். முந்நூற்றுஅறுபது பேருக்கும் சிறப்பான முறையில் பயிற்சி முடிந்தது. தலைவர் அவர்கள் திடீர், திடீர்ரென வந்து பொறுப்பாளர்களோடு கதைத்து விட்டுச் செல்வார்.பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு போராளிகளோடும் தலைவர் தனித்தனியாகக் கதைத்தார். அதில் என்னோடும் அவர் கதைத்தார்.

அடுத்து சிறு ,சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனைவரும் தமிழீழம் அனுப்பப்பட்டோம்.எங்களுக்கு பயிற்சி தந்த "றோய்" அவர்கள் பயிற்சி முகாம் முடிந்த பின் தமிழீழம் சென்று அங்கே சிங்களப் படையோடு சண்டையிட்டு காயம் அடைந்து மீண்டும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு வரப்பட்டு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் வீரச்சாவு அடைந்தார். அவரின் வித்துடல் அப் பயிற்சி முகாமிலே அடக்கம் செயப்பட்டது என அவர் குறிப்பட்டார்.




இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகளும் மற்றும் வேறு ஈழப் போராளி அமைப்புக்களும் வட கிழக்கில் இராணுசத்திற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருந்தார்கள் இதனால் நாள் ஒன்றுக்குச்சராசரி 100 இராணுவம் செத்துக்கொண்டுயிருந்தனர், இதனால் இந்தியாவின் காலில் விழுந்தது இலங்கை அரசு எப்படியாவது புலிகளுடன் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள் என்பதே அவர்களின் அழுத்தமாகயிருந்தது, விரும்பியோ விரும்பாமலே அவ் உதவியை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தள்ளப்பட்டது, ஏனனில் இந்திய செய்ய மறுத்தால் இலங்கை வேறு நாடுகளிடம் போய் அவ் உதவியை வேண்டினால் இந்தியவின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என இந்தியபயந்தது
அதனால் புலிகளை வலுக்கட்டாயமாகப் பேச்சுக்கு இழுத்தது இந்திய,



03/07/1985திம்பு பேச்சுவார்த்தைக்கு புலிகளை இழுக்கும் பொறிமுறையை உருவாக்கிய இந்தியா.

*****************************"************************************


 "1985 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் நாள், பிரபாகரனும், நானும், ஏனைய கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும், அவர்களது அரசியல் உதவியாளர்களும், இந்திய இராணுவ விமானம் மூலம் புது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தலைநகரின் மையத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம்". 
"நாம் அங்குச் சென்றதும் "றோ" புலனாய்வு அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த உயரதிகாரிகளும், மாறி மாறி எம்மைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கவுரைகள் அளித்தார்கள். தமிழ்ப்புரட்சி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு; ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு; ரொமேஸ் பண்டாரி மேற்கொண்ட இராஜதந்திர சாணக்கியத்தைப் பாராட்டினார்கள். இந்தியாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி எனக் குறிப்பிட்ட அவர்கள்;"


 "இதன் மூலம் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறினார்கள். "ஈழத் தேசிய விடுதலை முன்னணித்" தலைவர்கள் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்வித நிபந்தனையும்  விதிக்கக் கூடாது என்பதே! இந்த விளக்கவுரையின் அடிநாதமான வேண்டு கோளாக அமைந்தது".


இந்திய அரசு அதிகாரிகளின் அறிவுரைகளும், அழுத்தங்களுக்கும் பிரபாகரனும் சரி; ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் சரி; பணிந்து இணங்கிப் போகவில்லை. எல்லோருமே ஒருமித்த கருத்துடன் தமது நிலைப்பாட்டில் உறுதிபூண்டு நின்றனர். முடிவின்றி இழுபட்டுக் கொண்டிருந்த இப்பிரச்சினை இறுதியாக "றோ" புலனாய்வுத்துறை அதிபர் திரு. "சக்சேனா"விடம் கையளிக்கப்பட்டது.


"புதுடில்லியிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தார் திரு."சக்சேனா". பல மாடிகளைக் கொண்ட வானளாவிய பிரமாண்டமான கட்டிடம்! . கட்டிட வாசலிலே ஆயுதம் தரித்த "கரும்பூனை அதிரடிப் படைவீரர்கள்" எம்மைச் சூழ்ந்து கொண்டு; உயர்மாடியில்  உள்ள "சக்சேனா"வின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்".
 "கடுமையான முகத்துடன்; முறைப்பான பார்வையுடன்; எமக்காகக் காத்திருந்தார்"றோ" அதிபர். அவரது அகன்ற மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் பிரபாகரனும், நானும், மற்றும் ரெலோ தலைவர் சிறீசபாரெத்தினம், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் அமர்ந்து கொண்டோம். முதலில் தனது உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது வழக்கமான பாணியில், கனத்த குரலில் நேரடியாகவே விடயத்திற்கு வந்தார்."
 தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்குத் தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! என வலியுறுத்திக்கூறிய திரு. "சக்சேனா" ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.


உங்களது விட்டுக்கொடுக்காத கடும்போக்கைப் புதிய இந்திய அரசு பொறுத்துக்கொள்ளாது; உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் பாதுகாப்பான புகலிடச் சலுகைகளை மறுக்கவும் தயங்காது; என மிரட்டினார் "சக்சேனா". பூட்டான் தலைநகரமான "திம்புவில்" இன்னும் இரு வாரங்களில் பேச்சக்கள் ஆரம்பமாக உள்ளன. இப்பேச்சுக்குள் நிபந்தனையற்ற முறையில் நடைபெறும்  பேச்சுக்களில் பங்குபற்ற நீங்கள் மறுத்தால்! இந்திய மண்ணிலும்; இந்திய கடற்பரப்பிலும்; நீங்கள் செயற்பட முடியாது போகும் என்று கண்டிப்பான குரலில் கத்தினார். 


நான் வசனத்திற்கு வசனம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஆத்திரத்தை விழுங்கியபடி துயரம் தோய்ந்த முகங்களுடன் "சக்சேனா"வை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போராளி அமைப்புகளின் தலைவர்கள். ஏதோ சொல்வதற்காக வாயசைத்தார் பத்மநாபா; ஆனால் சப்தம் வெளிவராது தொண்டைக்குள் மடிந்து போயிற்று. மௌனம் சாதித்தபடி ஆழமான சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாரகன். கெரில்லாத் தலைவர்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்ட சக்சேனா; "நான் கூறியவற்றை நீங்கள் ஆழமாகப் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான பதிலை நாளைய தினம் கூறினால் போதும் என்றார்".அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.


நாம் அனைவரும் விடுதிக்கு திரும்பிய உடனேயே ஒரு அவசரக் கலந்துரையாடலை நிகழ்த்தினோம். தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாகரன். பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்து வீணாக இந்திய அரசைப் பகைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் பங்குகொண்டு எமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது; எமது அரசியல் கொள்கையை எதிரியிடம் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது; "என்னைப் பொறுத்தவரை இந்திய அரசைப் பகைக்காமல் ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுக்களில் கலந்து கொள்வதுதான் சிறந்த வழி என்றார் பிரபாகரன்". அவரது நிலைப்பாட்டையே நானும் ஆதரித்தேன். ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் புலிகளின் தலைவரது கருத்தை ஏகமனதாக ஆதரித்தனர்.


 நிபந்தனையற்ற முறையில் சமாதானப் பேச்சுக்களில் பங்கபற்றுவது என்ற ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் முடிவு மறுநாள் இந்திய அரசுக்கு தெரியப்ப டுத்தப்பட்டது.
அதாவது!  தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு வழங்கி வந்த சகல இராணுவ உதவிகளையும்; இந்திய அரசு நிரந்தரமாக நிறுத்தவிட வேண்டுமென்றும்; தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழ் அமைப்புகளை நிர்ப்பந்திக்க வேண்டுமென்றும்; ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்தார். இந்த நிபந்தனையை நிறைவு செய்வதாக இந்திய அரசு உறுதியளித்ததை அடுத்துப் போர்நிறுத்தம் செய்வதற்கு ஜெயவர்த்தனா இயங்கினார். போருக்கு ஓய்வு கொடுப்பதும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குமான நாட்களும் நிர்ணயிக்கப் பட்டன. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் மத்தியில் 1985 ஜுன் நடுப்பகுதியில் போர் நிறுத்தத்தைச் செயற் படுத்துவது என்றும்; இந்திய அரசின் மத்தியஸ்துவத்தின் கீழ் மூன்றாம் நாடான இமாலய இராச்சியமான பூட்டானில் ஜுலை நடுப்பகுதியில் பேச்சுக்களைத் தொடங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. மாற்று இயக்கங்கள் "திம்பு"பேச்சுவார்த்தையில் எதிர்ப்பு தெரிவிக்காமை எமது அமைப்பிற்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. 



13/07/1985 பூட்டான் திம்புவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஈழப் போராளிகள் இந்திய  மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



 இதில் எமது தரப்பில் அன்ரன் மாஸ்ட்டர், திலகர், பேவி அண்ணை இதை ஒழுங்குபடுத்தியவர்  பாலா அண்ணை.  "புளொட்"சார்பாக திரு வாசுதேவா இவர் லெப்.பரமதேவாவின் அண்ணன் ஆவார். E.P.R.L.P சார்பாக வரதராஜப்பெருமாள், ரெலோ சார்பாகப் போனது திரு.சாள்ஸ், நடுவர் சத்தியஜேந்திரா  லோயர், ஈரோஸ் சார்பாக திரு சங்கர், தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாகப்போனது சம்மந்தர். இலங்கை அரசாங்கம் சார்பாக ஏச். யெ. ஜேவர்த்தனா, இந்தியா சார்பில் "றோ" அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


கருணாநிதியின் கருத்தைப் பின் தொடர்பவர்களான மாற்று அமைப்புக்கள்; இலங்கை தமிழர்களிற்கான தீர்வு மாகாணசபை அதாவது வடகிழக்குக்கு தனித்தனி முதல் அமைச்சர்கள் என்பதே! அவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது.


 எமது அமைப்புச் சார்பான அன்ரன் மாஸ்ட்டர் அவர்கள் தமிழீழமே இலங்கை தமிழர்களிற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்; என தெரிவித்தார்கள். அதற்கு இந்திய அதிகாரிகள்! "சிறுபாண்மை நீங்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள் நீங்கள் இரண்டாகப் பிரித்தால் அவர்கள் மற்றும் சிறுபாண்மை முஸ்லிம்கள் உள்ளார்கள் அதனால்!  முவ்வின மக்கள் வாழும் பிதேசமாக கிழக்கு இருக்கட்டும்; வடபகுதியில் மட்டும் ஒருமுதலமைச்சர் இருப்பார்; அது தமிழர்களாகதான் இருக்கும்"  என தெரியப்படுத்தினர். 


ஆனால் பேச்சு வார்த்தைக்குப் போக முன்னரே எம்.ஜி.ஆர் தலைவருக்குச் சொன்ன விடயம் இதுதான் "தமிழீழத்தை தவிர எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளாதே! எக்காரணம் கொண்டும் கருணாநிதியோடு உறவு வைத்துக்கொள்ளாதே! அப்படி வைத்தால் எந்த விடயத்திற்கும் என்னிடம் வர வேண்டாம்" என சொல்லி இருந்தார்.
இதுஎமது தரப்பிற்கு நன்கு தெரியும்; அதனால் அவர்கள் இறுக்கமாக நின்றார்கள். பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி முடிவடைந்தது. நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்  வெளிப்படையான அறிக்கையை மக்களிற்கு தெரியப்படுத்தினார். 
அதைப் பாருங்கள்...! திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு;




திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு காலத்தின் தேவை கருதி .!


"எமது தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு உள்நாட்டு நெருக்கடியாகத் தோன்றிய எமது பிரச்சினை இன்று உலகத்தை ஈர்க்கும் ஒரு சர்வதேச நெருக்கடியாக  விஸ்வரூபம் கொண்டுள்ளது."


"சிங்கள அரசானது எம்முடன் தனித்து நின்று போராடவில்லை. ஏகாதிபத்திய நாசகார சக்திகள் அனைத்தையும் தனக்குப் பக்கபலமாக அணி திரட்டி எமது மக்களுக்கு எதிராக ஒரு இன அழிப்ப்பு யுத்தத்தை நடாத்தி வருகிறது;எமது கோரிக்கை என்ன ?எமது அரசியல் இலட்சியம் என்ன? என்பதில் நாம் மெளனமாக இருந்து விடவில்லை . எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிய திட்டம் ஒன்றை நாம் முன்வைத்தோம்." 

"நாமொரு தேசிய இனம் என்ற ரீதியிலும்; வரலாற்று ரீதியாக அமைந்த எமது பரம்பரைத் தாயக பூமி எமது சொத்துடமை என்பதாலும்; எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை எமக்குண்டு! இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே;

 எமது தனியரசுப் போராட்டம் அமைந்திருப்பதால் எமது போராட்டம் நியாயமானது என்பதை விளக்கியிருந்தோம்."


"தேசிய சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டம் நீண்ட வரலாற்றையுடையது. பல வடிவப் போராட்டங்களால் பரிணாமம் பெற்றது. காந்தியப் பாதையில், அமைதிவழிப் பாதையில், மொழிஉரிமை கோரி, சமஉரிமை கோரி,சமஷ்டி கோரி, நடைபெற்ற அகிம்சை வடிவப் போராட்டங்கள் அனைத்துமே எதிரியின் இராணுவ ஒடுக்கு முறையால் அடக்கியொடுக்கப்பட்டன".

"இறுதியில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தனியரசுக் கோரிக்கை பிறந்தது. அது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவம் பெற்றது."


"இப்படியாக தமிழரின் அரசியல் போராட்ட வரலாற்றின் உச்ச கட்டமாகவே தமிழீழக் கோரிக்கையும்; அதனை அடையும் மார்க்கமாக ஆயுதப் போராட்டமும்; பரிணமித்தது என்பதை விளக்கியிருந்தோம்".


"தமிழீழ மக்களின் தேசியத்திற்கும்,தாயகத்திற்கும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கும்; உத்தரவாதம் அளிக்கப்படாத எந்தவொரு தீர்வையும்; நாம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதே நமது உறுதியான நிலைப்பாடாக இருந்தது.ஆனால்! சிங்கள அரசு எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கள இனவாத ஆட்சியாளர் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெட்டத் தெளிவாகியுள்ளது. எமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் பூதாகரமாகத் திரிபுபடுத்திக் காட்டி; சுதந்திரப் போராளிகளை வன்முறைப் பித்தர்களாகச் சித்தரித்துக் காட்டியும்; இராணுவரீதியாக எம்மை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்".


"இந்த இலக்கில் அவர்கள் முழுச்சிங்கள தேசத்தையுமே இராணுவ மயமாக்கி வருகிறார்கள். பெரியதொரு இனயுத்தத்திற்கு ஆயத்தங்கள் செய்து வருகின்றனர். தர்மமும், உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்க அதுவே எமது பலம் .அதர்மமும், பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்திருக்க; அதுவே அவனின்பலவீனம்".

"ஈற்றில் வெற்றி கொள்வதுநாம். ஏனெனில் என்றும் அழியாத தர்மம் எமக்குப் பக்கபலமாக இருக்கின்றது".

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு .வே .பிரபாகரன் அவர்கள் 


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “





பூட்டான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமைக்கு இந்தியா ஈழத் தமிழர்கள் மீது வைத்து இருக்கும் சந்தேகமே காரணம். "கொலம்பேஸ்" என்பவரால் அத்துமீறி அமெரிக்காவின் செவ்இந்தியர்களின் நாட்டைப்பிடித்து அங்கு இருந்த செவ் இந்தியர்களை கொலை செய்த பின்னர் அமெரிக்கா என்ற நாட்டை அவர் உருவாக்கினார்.


 அதையடுத்து இங்கிலாந்தில் உள்ள முதலாளி மற்றும் செல்வந்தர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருந்து நிரந்தரமாக அமெரிக்காவிற்குக் குடியேறினார்கள். அதனால் சில குறிப்பிட்ட காலம் இங்கிலாந்து ஒரு வறிய நாடாக இருந்தது மட்டும் அல்லாமல்; அனைத்து தேவைகளிற்கும் அமெரிக்காவிடமே கை ஏந்த வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
அது போல் இலங்கையில் தமிழீழம் என்பது அமைந்தால்!  குறிப்பா தமிழகத்தில் இருக்கும் முதலாளிமார்களும், செல்வந்தவர்களும் தமிழீழத்திற்கு நிரந்தரமாகாகக் குடியேறி விடுவார்கள். அப்படி நடந்தால்!  இந்தியா ஒரு வறுமையான நாடாகப்போய்விடும். இரண்டாவது ....தமிழீழம் ஒரு பொருளாதார நாடாக வழர்ச்சி அடைந்தால்! தமிழக இளைஞர்கள் தமிழீழத்தின் உதவியோடு ஆயுதப் போராட்டம் அல்லது அகிம்சை  வழியூடாகப் போராடி இந்தியாவில் இருந்து தமிழகம் தனி நாடாகப் பிரியலாம்... என சந்தேகக் கண்ணோட்டத்தால் தொடர்ச்சியாக  இந்தியா ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.


 இது தமிழகத்தில் வாழும் புத்திஜீவிகளிற்குத்  தெளிவாகத் தெரியும். அதைவிட தமிழகத்தில் வாழும் ஐம்பது வீதமான மக்களிற்கும் இது தெரியும். அதனால் தான்அவர்கள் தொடர்ந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்தார்கள் .
 ஒரு கட்டத்தில் இந்திய அரசிக்கு ஆதரவான ஒரு தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்வி "தமிழீழம் என்று ஒரு நாடுஅமைந்தால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் இங்கே வந்து நிரந்தரமாகக் குடியேற அனுமதி வழங்குவீர்களா"?
 பதில் " தமிழீழம் அவர்களின் தாய் நாடு அவர்களை வர வேண்டாம்! என சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கே? வாழ வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்". என பதில் அளித்தார் தலைவர். இப்படியான அவரின் ஒளிவுமறைவு இல்லாத தன்மையே அவர்கள் பயப்பிடக் காரணமாக இருந்திருக்கலாம் .


அடுத்து...... இந்தியா எதிர்பார்த்த விடயம்!இலங்கையில் ஒரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து  நடந்து கொண்டே இருந்தால்;  கடல் மார்க்கமாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் இலங்கை செல்ல பயப்பிடுவார்கள். அவர்கள் இந்தியாவிலே தரித்து நின்று செல்வார்கள். மற்றும் உல்லாசப் பயணிகளும் இந்தியாவையே விரும்புவார்கள். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 


அதை விட உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நடந்துகொண்டுயிருந்தால்; அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் தளம் அமைக்க விரும்ப மாட்டார்கள். அதைவிட இலங்கை ஒரு வறிய நாடாக இருந்து தொடர்ந்து இந்தியாவிடம் பிச்சை எடுக்க  வேண்டும் என இந்தியா விரும்பியது.
இறுதியில் ஏன்?  இந்தியா விடுதலைப் புலிகளை அழித்தது. போராட்டம் 30 வருடம் நீண்டு கொண்டு செல்வதாலும்; விடுதலைப் புலிகள் ஒரு மரபுவழி இரானணுவமாக மாறிவருவதினாலும்;  இன்னும் ஒரு 30 வருடம் நீடிக்குமானால்; தமிழீழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது என்பது இந்தியாவிற்கு நன்குதெரியும். அதனால்தான் ஆயுதங்களையும்; இந்திய இராணுவத்தையும்; இலங்கைக்குக் கொடுத்து 2009 விடுதலைப்புலிகளை அழிக்க இந்தியா துணை போனது. இது அனைத்துத் தமிழர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களிடம் எவ்விதமான பலமும் இல்லையென்பதுதான் உண்மை.ஆனால் தமிழீழம் என்று ஒரு நாடுஅமைந்தால் தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை அவர்கள் அறியும் நாள் வெகுதூரம் இல்லை,
        

 



 மகளீருக்கான (7) ஏழாவது பயிற்சி முகாம் பற்றி மூத்த போராளி தீபா 

18/08/1985 சோதியா உட்பட அதாவது பெண்களிற்கான முதலாவது பயிற்சி முகாம்.


மகளீர் அமைப்பின் மூத்த போராளி தீபா விபரமாகச் சொல்கின்றார்..!பெண்களை விடுதலைப் போராட்டத்திற்கு உள்வாங்குவதற்கான முதலாவது பயிற்சிக்காக தமிழீழம் இருந்து விடுதலைப்புலிகள் பெண்களை கொண்டுவந்தார்கள். அதைவிட ரெலோ அமைப்பினால் பயிற்சிக்காய் (காா) தமிழீழம் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழ் பெண்கள் அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒரு வீட்டில் நின்றார்கள்.  அதில் நானும் ஒருவராகயிருந்தேன். எங்களை விடுதலைப் புலிகளின் மூத்த போராளி ஒருத்தர் வந்து  "கவலைப்படாதோங்தோ" என எங்களிடம் சொல்லி எங்களையும் கூட்டிக்கொண்டு அவர்களின் பயிற்சி முகாமில் இணைத்தார்கள்.
எங்களோடு சேர்த்து சுமார் தொன்னூற்றுஒன்பது போராளிகள் பயிற்சி எடுத்தார்கள். அது விடுதலைப் புலிகளில் 7 ஆவது பயிற்சி முகாமாகவும்; மகளீருக்கான முதலாவது பயிற்சிமுகாமாகவும் இருந்தது. சிறுமலை திண்டுக்கல் என்ற இடத்தில் இப்பயிற்சி முகாம் நடந்தது.
முகாம் பொறுப்பாளராக பாரதியண்ணை இருந்தார். மெயின் பொறுப்பாளராக பொன்னம்மான் இருந்தார். நேசன் மற்றும் மனோ மாஸ்ட்டர் உடல் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றினார்கள். போராட்டம் தொடர்பான வகுப்பு எடுப்பவர் இந்திரன்.  ஜெனகன் மாஸ்ட்டர், திலகர் இவர்கள் போராட்டம் தொடர்வான  வகுப்புக்களை எடுத்தார்கள்.மிகவும் வெய்யில் பிரதேசமாக  இருந்தது கடுமையான பயிற்சிதான் எங்களிற்கு வழங்கப்பட்டது என அவர்குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒன்பதாவது பயிற்சி முகாம்  இதே காலப்பகுதியில் இதே இடத்தில்தான் நடந்தது. இந்தியாவில் நடந்த விடுதலைப் புலிகளின் 9 தாவது பயிற்சி முகாம் பற்றி போராளி காசன் அவர்கள் குறிப்பிடுகையில்,  இந்தியாவில் இருந்த மணியண்ணையின் தோட்டமான

கும்பாறப்யிபிட்டியில் எங்களின் பயிற்சி முகாம் அமைந்துயிருந்தது, பயிற்சி முகாம் பிரதான பொறுப்பாளராக அப்பொழுது லெப் கேணல் பொன்னம்மான் அவர்கள் இருந்தார், முகாம் பொறுப்பக அத்தி அவர்கள் இருந்தார் அவரே எங்களிற்கான உடல் பயிற்சிகளைளையும் தந்தார்,


எங்களிற்கான வகுப்புகளை, மாதவன் மாஸ்ட்டர், கேணல் மனோ மாஸ்ட்டர், இவர்கள் தந்தார்கள்

 நாங்கள் 251 போராளிகள் அங்கே பயிற்சி எடுத்தோம் இது 1985 கடசிப்பகுதியில்  நடைபெற்றது தங்களோடு பயிற்சி எடுத்தவர்களை அவர் குறிப்பிடும்போது,01 பிரிகேடியர்பால்ராஜ்,02 பிரிகேடியர் கடாபி,03 லெப் கேணல்போர்க் 04 கட்டன் மில்லர் 05 போராளி செபமாலை 06 பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ட்டர் 07 லெப் கேணல் சுமன் 08 இதில் பயிற்சி எடுத பலர் ஆரம்பத்தில் அமைப்பில் இருந்து விலகி வெளிநாடு மற்றும் உள் நாடுகளிலும் சில குறிப் பட்டவர்கள் வாழ்வதாக அவர் குறிப்பிட்டார்,



அதற்கும் லெப் கேணல் பொன்னம்மான் அவர்கள்தான் பொறுப்பாக இருந்தார். இப்பயிற்சி முகாம் இரண்டு சிறந்த பொறுப்பாளர்களை எமது விடுதலைப் போராட்டத்திற்குத் தந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் கடாபிஆகியோரே.....  இதில் பயிற்சி எடுத்தவர்கள் ஆகும்
,

இப்பயிற்சி முடிந்து தமிழீழம் வந்ததும் ஒரு குறிப்பிட்ட காலம் பெண் போராளிகள் ஆண் போராளிகளாடு இணைந்து சில சண்டைகளிற்குச் சென்றாலும், பிற்காலத்தில் ஆண் போராளிகளின் உதவியின்றி ஆண்களிற்கு நிகராக அவர்களை வளர்க்க வேண்டும் என தலைவர் தீர்மானித்தார்; அதற்கு அமைவாக பெண்களிற்கான முதல் பொறுப்பாளராக மேஜர் சோதி அவர்கள் தலைவரால் நியமிக்கப் பட்டார். அன்றில் இருந்து பெண்போராளிகள் தனியாக முகாம் அமைத்து வாழத் தொடங்கினார்கள்.
இதேகாலப்பகுதியில் தான் சிங்கள அரசின் கல்வி தரப்படுத்தலிற்கு எதிராக யாழ். பல்கலை கழகத்தில் உயர்தர மாணவ மாணவிகள் சாகும்வரையான உண்ணா விரதத்தினை ஆரம்பித்தார்கள். அதில் இரு ஆண்கள் உட்பட ஒன்பது மாணவிகள் அடங்குவர். அதில்நான் அறிந்தவற்றைக் குறிப்பிடுகின்றேன்.

ஜெயா, ஜெனனி, மதிவதனி, வனஜா,தேவி, ஆண்களில் லெப்ரினன் காண்டியன் உட்பட தலைவரின் பிற்கால மனைவியான மதிவதனி,   என்னும் சில மாணவிகள் உணவு தவிர்ந்த சாகும்வரையான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுயிருந்தார்கள்.



லெப் காண்டீபன் / எம்பி .சோ, முகவரி குமுழமுனை, முல்லைத்தீவு,பிறப்பு 10/06/1957 இவர் ஒதிய மலையில் படையினரின் பதுங்கித் தாக்குதலின்போது 24/12/1984 அன்று வீரச்சாவு அடைந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னர் இவரின் மனைவியான திருமதி கல்பனா என்பவரைத்தான் தளபதி மாத்தையா திருமணம் செய்து கொண்டார். இது இயக்கத்தின் இரண்டாவது திருமணமாகப் பதிவாகியது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி தரப் படுத்தலிற்கு எதிராகதலைவரின் மனைவியோடு இணைந்து சில மாணவிகளும் அதில் இருந்தனர். அதில் இருந்த ஆண்களில் காண்டிபனும் ஒருவர்.

 இவர்களின் முக்கியமான கோரிக்கை தமிழர்களிற்கு தனியாகப் போடப்பட்ட கல்வித்  தரப்படுத்தலை நிறுத்தி சிங்களர், தமிழர் என பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் ஒரே புள்ளிவிபரத்தை அறிவிக்குமாறு கேட்டுயிருந்தனர். அக்காலத்தில் தமிழ் மாணவர்களிற்கு சிங்கள அரசால் இழைக்கப்பட்ட பாரபட்ச ரீதியான செயல்பாடுகளால் தமிழ் மாணவர்கள் கடுமையான கோபம் அடைந்தார்கள்.


ஆனால் சிறீமாவின் சிங்கள அரசு தமிழர்களின்உயர் கல்வியில்  கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும்; என்கிற சதித்திட்டத்தோடு தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழகக் கல்வியில் புகுத்தியது.


 தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும்; இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம்;  தமிழ் மாணவர்களாக பல்கலைக் கழகத்தில் அக்காலத்தில்படித்துக் கொண்டுயிருந்தவர்களான தமிழீழ மாணவ  மாணவிகள் ஜெனனி_ பிற்காலத்தில் செஞ்சோலைப்பொறுப்பாராகயிருந்தவர், தேவி_ மூத்த பெண் போராளியாக இருந்தவர்,மதிவதனி__  தலைவரின்  மனைவியாவார், இவர்கள் மூவர் உட்பட 9 மாணவிகள் இருஆண்களும் அடங்குவார்கள்.  ஆனால்! யாழ்பல்கலைக்கழகத்தில் கூடுதலான மாணவர்கள் கல்விகற்றாலும் நான் குறிப்பிட்டவர்களிற்கு மட்டுமே தமிழ் தேசிய உணர்வுகாணப்பட்டது.

இதனால் இவர்கள் தமிழ் மாணவர்களிற்கு எதிரான கல்வி தரப்படுத்தலை மீளப்பெறமட்டும் யாழ். பல்கலைக்கழகத்தில் சாகும் வரையான உண்ணாவிரதத்தினை ஆரம்பித்தார்கள்.


அப்பொழுது எமது இயக்கத்தில் இருந்த பல்கலைக்கழக மாணவரான லெப். கேணல் திலீபன் அவர்கள் விடுதலைப் புலிகள் சார்பாக தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இதை அறிந்த ரெலோ போன்ற மாற்றுக்குழுக்கள் இவர்களைக் கடத்துவதன் ஊடாக தங்களின் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவை பெறலாம்... என அவர்கள் திட்டமிட்டதை எமது இயக்கம் அறிந்து கொண்டது,


உடனே குண்டப்பா அங்கே சென்று மாணவர்ளோடு உண்மை நிலைப்பாட்டை தெளிவு படுத்துகின்றார்!" அதாவது நீங்கள் படித்த புத்திஜீவிகள் நீங்கள் சாவதை சிங்கள அரசு விரும்புமேதவிர அதைத் தடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அதை விட உங்களின் நிபந்தனைகளையும் நிறைவேற்ற மாட்டார்கள். அதனால் நாங்கள் முதலில் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வோம். அதற்குப்பின்னர் யோசிப்போம் என தெரியப்படுத்தினார்.


அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டுபாதுகாப்பாக இந்தியா சென்றார் குண்டப்பா; அங்கே சென்றதும் இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ளஒரு வீட்டில் மேல் மாடியில் விடப்பட்டார்கள்; அப்போது தலைவர்கீழ் மாடியில் இருந்தார். ஆனால் குறிப்பிட்டகாலம்வரை தலைவர் இங்கே தான் உள்ளார் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்தது.


அப்பொழுது மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நாங்கள் பிரபாகனை நேரில் கண்டு எங்களின் பிரச்சனையைக் கதைக்க வேண்டும்; அல்லது எங்களை நாட்டிற்கு கொண்டு விடுங்கோ! என பலர் குழம்பிய நிலையில் இருந்தார்கள். இது இப்படி இருக்க மாற்று இயக்கங்கள் "யாழ் மாணவிகளைக் கடத்தி விட்டது! ரைக்கேஸ்" என பெரிய வதந்தியை  பரப்பிய வண்ணம் இருந்தார்கள்.


அப்பொழுது குண்டப்பா! "தலைவர் வேறு எங்கையும் இல்லை தலைவர் உங்களோடுதான் இருக்கின்றார்; "என சொல்லி இவர்களை அவரிடம் கூட்டிக் கொண்டுபோய் விட்டார். அப்பொழுது தலைவர்; "சிங்களவர்களிடம் நாம் சத்தியாக்கிரக நீதியாகப் போராடி எமக்குத் தீர்வு கிடக்காது"என்கிறார்.


நாம் ஆயுதம் தூக்கிப் போராடினால்தான் எமது சுதந்திரத்தைப்பெற முடியும்; எனவே என்னோடு சேர்ந்து ஆயுதம் தூக்கிப் போராட விரும்புபவர்கள் இங்கே நில்லுங்கள்; ஏனையவர்களை உங்களின் வீடுகளில் கொண்டே விடலாம் என தெரிவித்தார்.அதில் விரும்பிய மாணவிகள் அனைவரும் 7வது பெண்களின் பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.லெப். காண்டீபனும் மற்ற இளைஞனும் விடுதலை புலிகளின் முதலாவது பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
 அக்காலப்பகுதியில்தான் தலைவருக்கும் மதிவதனிக்கும் காதல் ஏற்பட்டது; ஆனால் மத்திய குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தலைவர் திருமணம் செய்யக் கூடாது என வாதிட்டார்கள்; ஆனால் பாலா அண்ணை "தலைவர் கண்டிப்பாகத் திருமணம் செய்யத்தான் வேண்டும்; அப்படி செய்தால் தான் ஏனைய போராளிகள் சந்தேகம் ஏற்படாதவாறு இயக்கத்தை சிறந்த முறையில் நடத்தலாம் என தெரிவித்தார்". பாலா அண்ணை சொன்னதுபோல் தலைவருக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தது.


1985 ஆம் ஆண்டு தமிழர்புனர் வாழ்வுக் கழகம் இதற்கான அலுவலகம் சென்னை அடையாறு இந்திரா நகரில் தேசியத் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன் பொறுப்பாளராக திரு. யோகநாதனும், செயலாளராக திரு. கமலநாதனும், பொருளாராக திரு. சி பரமகுருசாமியும் இயங்கத் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் ரகுவப்பாவின் தந்தையார் அவர்களும் தேசியத் தலைவரால் நியமிக்கப் பட்டார்கள்.


மருத்துவத் துறைக்கு பொறுப்பாக டாக்டர் ஜெயகுலராஜாவும், மற்றும் மருத்துவர் பூ. ஆ. விசாகரத்தினம், செல்வி மோகினி விசாகரத்தினம் மற்றும் இவர்களோடு டக்டர் ந. சத்தியமூர்த்தி அவர்களும் தலைவரால் நியமிக்கப் பட்டார்கள்.

இது தூர நோக்கோடு தலைவரால் உருவாக்கப்பட்டது. தமிழீழம் எங்கும் சிறந்த பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக இது உருவாக்கப்பட்டாலும்; அக்காலத்தில் தமிழகத்தில் அகதி முகாங்களில் இருந்த எமது தமிழீழ மக்களிற்கான மருத்துவ உதவி மற்றும் பிள்ளைகளிற்கான, கல்வி கற்றலிக்கான உதவிகளைச் செய்வது என அவர்களின் ஆரம்பப் பணியாக அது சிறப்பான முறையில் நடந்தது. பின்னர் இது தமிழீழத்தில் மிகவும் ஒரு பலமான நிறுவனமாக இருந்தது மட்டும் அல்லாமல் மக்களை தொழில் ரீதியாக ஊக்கப்படுத்துதல்; இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களை பாதுகாத்தல்; என நிறைய வேலைகளை இது பொறுப்பெடுத்துச் செய்து வந்தது.

அனைவருக்கும் வணக்கம்...!
 இவ் ஆவணமானது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் அர்ப்பணிப்புச் சம்பந்தமானது. அதைவிட எமது தலைவனின் நேர்மையான பயணம் தொடர்வானது; இக்கதையை நாம் ஆவணப்படுத்திவந்தோம். ஆனால் வெளியிடுவதுற்கான தேவையேற்படவில்லை. இருந்தும் "மேதகு 2"  படம் வெளிவந்தபின்னர் அதில் பெண் போராளிகளின் இணைவு பற்றியோ; தலைவரின்  மெய்ப் பாதுகாவலர்கள் பற்றியோ; அவரின் நல்ல நடத்தைகள் பற்றியோ;  அதில் குறிப்பிடவில்லை. மாறாக அவர் ஒரு கொலைகாரன் போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தார் .  அது சம்பந்தமாக ஒருவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது!  "உயிர் போனாலும் கதைத்தவரின் பெயரை மட்டும் சொல்ல மாட்டேன்" என தெரியப்படுத்தினார். இன்னொருதரின் போன் நம்பர் அவர் தந்தார்.  அது வேலை செய்யவில்லை. 

இருந்தும்  பலர்" போன்" எடுத்து எமக்குக் காரசாரமாகப் பேசினார்கள். அது மட்டும்அல்ல படம் ஓடிய இடத்தில் என்னைப் பார்த்து ஒருதர் காறி முன்னால் துப்பினார். இளநீர் குடித்தவன் தப்பி விட்டான்;  கோம்பை சாப்பிட்டவன் சிக்கி விட்ட கதையாகவே இருந்தது. அதனால் நாம் இவ் ஆவணத்தை வெளியிட்டோம். இதில் ஏதாவது தவறு இருந்தாலும் ; அல்லது இணைக்கப்படாமல் சில கதைகள் இருந்தாலும் ; உங்களின் போன் நம்பருடன்  உங்களிற்கு தெரிந்த கதைகளை எழுதி கீழே குறிப்பிடும் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்.  இவ் ஆவணமானது தலைவரால் சொல்லப்பட்டு;  ஆரம்ப  இராணுவப் பயிற்சி          
  போராளிகளுக்குப் படிப்பித்துக் கொடுக்கப்பட்டது. என்பதை நினைவூட்டுகின்றேன்.  
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்____
wwwtemlnews@gmail.com

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...