தமிழீழத்தை சிதைத்த இந்தியா..!
நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையாகும்.!
attack_frog_jump
பூநகரியில் சிங்களப்படைகளிடம் இருந்த போது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்கள் இரண்டு இருந்தன. ஆனையிறவு ஒரே தரைவழிப் பாதையை இறுக்கியிருந்தது. கடல் வழியான மாற்றுப் பாதையும் இறுக்கி யாழ் குடா மக்களை இக்கட்டில் வைத்திருந்தது பூநகரிப்படைத்தளம்.
அப்போது யாழ் குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி – நல்லூர் (குஞ்சுப்பரந்தன்) பாதையே இருந்தது. அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.
இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் நிறையப்பேர் அக்கடலிற் கொன்று குவிக்கப்பட்டனர். வெட்டுக் காயங்களோடு கூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ் குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான். கற்புலிகளின் தோற்றத்தின் ஆரம்பகட்ட நேரமாக இருந்த போதும் லெப்.கேணல்.சாள்ஸ் அண்ணை தலமையில் பயணத்துக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களை பாதுகாத்தனர் புலிகள்.
பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன் துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.
இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் ஊடாக சண்டைக்கான திட்டம் தயாராகி புலிகளின் எல்லா துறைகளிலும் இருந்து,அந்த தாக்குதலுக்காக (புலனாய்வுதுறை உட்பட )போராளிகள் திரட்ட பட்டது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் நிவாகம் மாவட்ட ரீதியாக பிரிக்க பட்டிருந்தது. அதில் அப்போது தளபதிகளாக இருந்தோரிடம் ஒவ்வொரு பகுதியை கைப்பற்றும் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது. அதன் படி அதற்கான பயிற்சிகள் அரியாலை,தென்மராட்சி கிளிநொச்சி,அச்சுவேலி, மணலாறு போன்ற பகுதிகளில் துண்டு துண்டாக பயிற்சிகள் நடந்தது.
இது இப்படி இருக்க 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக, கிளாலி கடல் போக்கு வரத்தை தடுத்து யாழ் குடாவை வெளித்தொடர்பு இல்லாது தனிமை படுத்தும் நோக்குடன் ‘யாழ்தேவி’ என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் புலிகள் படையணிகள் பயிற்சியில் இருந்தமையால் காவலுக்கு இருந்த சொற்ப போராளிகளை தாண்டி எதிரி புலோபளை வரை முன்னேறிவிட்டான்.
எதிரியின் திட்டம் நிறை வேறினால் யாழ் குடா தனிமை பட்டு போவது மட்டுமல்ல பல மாதங்களாக சிரமப்பட்டு பயிற்சி எடுத்த தவளை நடவடிக்கையும் கைவிட்டு போகும் அபாயத்தில் புலிகள் இருந்தனர். இதை உணர்ந்த தலைவர் அந்த நேரத்தில் அரியாலையில் பயிற்சியில் இருந்த சாள்ஸ் அன்ரனி படையணியின் ஒரு தொகுதி போராளிகளுடன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையை, முறியடிப்பு தாக்குதலுக்காக அவசர அவசரமாக களமிறக்கினார்.
அவரது மறிப்பு தாக்குதல் புலோப்பளையில் ஆரம்பித்து எதிரியை பெரும் இழப்புடன் 2km தூரம் பின்னுக்கு துரத்தினார். அந்த தாக்குதலின் போது களத்தில் பால்ராஜ் அண்ணையும் எதிரிக்கு அருகில் இருந்தமையால் அவனின் தாக்குதலில் ஒரு காலில் எலும்பு உடைந்து படுகாயமடைகின்றார். அதன் பின்பும் களத்தை விட்டு அகல மறுத்த போதும்,போராளிகளால் வில்லங்கமாக அவரை வைத்தியத்துக்காக பின் நகரத்தைப் பட்டதும், தொடர்ந்து அந்த சண்டையை பிரிகேடியர் தீபண்ணை வழிநடத்த அவருக்கு உதவியாக நரேஷ் அண்ணை விடப்பட்டிருந்தார் .
புலிகளால் துரத்தி அடிக்க பட்ட பின்னும் எதிரி முகாம் திரும்பாது தன்னை மீளவும் ஒழுங்கு படுத்தி பெரும் தாக்குதலுக்கு தயார் படுத்தினான். எமது தரப்பிலும் தீபண்ணை புலோபளையில் வைத்து எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாரானார்.அதன் ஒரு திட்டமாக புலோப்பளையின் கரையோர கண்டல் காடுகளின் மறைப்பில் கிடங்கு வெட்டி அதனுள் போராளிகளை இருக்க வைத்து உருமறைப்பு செய்தார். அதே போல நடுவில் இருந்த வெளிப் பகுதியை எதிரி இலவுவாக முன்னேற இடம் விட்டு,அருகில் இருந்த பனைமர தோப்பினுள்ளும் அதேபோல் புலிகளை இருக்க செய்து பெரும் பொறி ஒன்றை உருவாக்கிய பின் எதிரியை மறித்து வைத்திருந்த போராளிகளுக்கும் எதிரி முன்னேறும் போது எதிரி சந்தேக படாதவாறு சண்டை இட்டபடி பின் வாங்கும் படி கட்டளை இட்டிருந்தார்.
அதன் படி அடுத்த நாள் எதிரி சரத்பொன்சேகா தலைமையில்(ஸ்ரீலங்காவின் பின்னாளில் இராணுவ பளபதியாக இருந்த லெப்.ஜெனரல்சரத் பொன்சேகா) புலிகள் வைத்துள்ள பொறி அறியாது தமது முன்னேற்றத்தை ஆரம்பித்தனர்.
எதிரியை தடுத்து வைத்திருந்த போராளிகளும் திட்டத்தின் படி சண்டையிட்டபடி பின் வாங்கினர்.பின்வாங்கிய புலிகள் பிரதான வீதிக்கு எதிரியை முன்னேற விடாமால் சண்டையை கடுமையாக்கி,புலிகள் அமைத்து வைத்திருந்த பொறி இருந்த பகுதியில் மட்டும் எதிரியை முன்னேற அனுமதித்தார்கள். இதை அறியாத எதிரி அவர்களை கடந்து செல்லும் வரை காத்திருந்து,எதிரியின் பிரடியில் ஓங்கி அடித்தனர். இப்படியொரு முறியடிப்பு தாக்குதலை எதிரி எதிர் பாக்கவில்லை. எதிரி என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் பொறியில் மாட்டிய எலிகள் போல மாண்டு போயினர். புலிகளும் இரண்டு தாங்கிகளை (tanks) முற்றாக அழித்து, நான்கு தாங்கிகளை சேதமாக்கியும் பல நூறு எதிரியை கொன்றும் இருந்தனர்.
புலோபளையில் வைத்து சர்த்பொன்செகாவின் “யாழ்தேவியை”புலிகள் தடம் புரட்டினர். இந்த முறியடிப்பில் கிளிநொச்சிக் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ் அண்ணை (நாயகன்) உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
புலிகளால் மிகவும் இரகசியம் காக்கப் பட்டு கடும் பயிற்சியின் பின் (முக்கியமான தளபதிகளை தவிர பயிற்சியில் இருந்த போராளிகளுக்கு எங்கு தாக்க போகிறோம் என்று சொல்ல படவில்லை, மாறாக இறுதி நேரத்தில் தான் சொல்ல பட்டது) யாழ்தேவி நடவடிக்கை முடிந்து,
ஒன்றரை மாதங்களின் பின் அணிகள் எடுக்கப் பட்ட வேவு திட்டத்தின் படி அந்தந்த அணிகள் அவர்களுக்குரிய தளபதிகளுடன் பூநகரி முகாமினுள் நுழைந்தனர். இதில் குணா அண்ணையின் தலமையில் உல் நுழைந்த அணிகள் எதிரிகளால் இனம் கானப் பட்டமையால் தாக்குதலுக்கான நேரத்துக்கு முன்னமே சண்டை ஆரம்பமானது. இந்த சண்டையை அரியாலை கிழக்கில் இருந்த எமது முகாம் ஒன்றில் தங்கியிருந்து அண்ணை (தலைவர்) நெறிப்படுத்தினார்.!
புலிகளின் சமர்களங்களில் தவிர்க்க முடியாத தளபதி பால்ராஜ் அண்ணா தான். தவளை நடவடிக்கையில் பங்கு பற்ற முடியாமையை நினைத்து,வைத்திய சாலையில் (26ம் வாட்டில்) காலுக்கு மண் மூட்டை போட்டிருந்த போதும், அவரது எண்ணமெல்லாம் அதை சுற்றியே இருந்தது. அவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வைத்தியசாலைக்கு சென்று பார்ப்பேன். அப்போது அவரது ஏக்கம் வார்த்தைகளில் சொல்ல முடியாது.! அவர் இருக்கும் வைத்திய சாலை பகுதியை அறிந்த எதிரி அவரை இலக்கு வைத்து மண்டைதீவில் இருந்து வைத்திய சாலை என்றும் பாக்காமல் நான்கு எறிகனைகளை எவியிருந்தான்.
அதனால் அவர் திருநல்வேலியில் இருந்த ஜேம்ஸ் (தாக்குதல் விசாரணை பிரிவு MO பிரிவுக்கு சொந்தமானது) முகாமிற்கு மற்றப் பட்டார். அங்கிருந்த படி சண்டையின் போக்கை தொலை தொடர்பில் கேட்டுக் கொண்டிருந்தார். தினமும் களங்களில் நின்று சுழன்ற அந்த நாயகனுக்கு அது விருப்பமுடைய நாளாக இருந்திருக்காது.! அத்தோடு அவரது வலது கைபோல் செயல் பட்ட நவநீதண்ணாயின் இழப்பு அவருக்கும் பெரும் இழப்பாகவே இருந்திருக்கும்.!!
நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவளைப் பாய்ச்சல் எதிரியை துவசம் செய்திருந்தது. இந்த தாக்குதலின் பின் ஐந்து விசையூந்து படகுகள் (இரண்டு சேதமாகியிருந்த படியால் புலிகளால் அழிக்கப் பட்டது ) மற்றும் தாங்கி ஒன்று (ஒன்று சேதமான படியால் பின் வாங்கும் போது புலிகளால் உடைக்கப் பட்டது) உட்பட 120mm மோர்டர்கள் மற்றும் பெரும் தொகை ஆயுதங்களும் கைப்பற்ற பட்டிருந்தது. இதனால் புலிகள் சேனை படைத்துறை ரீதியில் பெரும் வளர்ச்சியை பெற்றது.!
இந்த தாக்குதலில் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதன் போது, என்னோடு தனிப்பட்ட ரீதியில் நட்புடன் இருந்த லெப்.கேணல்களான குணாண்ணை, அன்பண்ணை, சூட்டண்ணை, நவநீதண்ணை, மற்றும் கப்டன் கோணேஸ் போன்றோரையும் இழந்திருந்தோம்.
இந்த இழப்புகளால் (முன்னைய பதிவுகளில் இவர்களுடனான நட்பு பற்றி பகிர்ந்துள்ளேன்) அந்த நேரத்து வெற்றியை என்னால் கொண்டாட முடியாது போனது என்னவோ உண்மை தான்.!!
தொகுப்பு கதிர் ஈழம்இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவிகள் செய்தது.
ஆனால் இந்தியாவிலுள்ள உயர்சாதிகளின் திட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் இணைங்க மாட்டார்களென்று தெரிந்த பின் நிலைமைகள் வெகுவாக மாறியது. ஈழத்தமிழர்களை கொல்ல இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பியதிலிருந்து நிறைய சொல்லலாம்.
அதேநேரத்தில் தனது நோக்கம் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியதை அடுத்து ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி தமிழீழ மக்களை ஒடுக்கவும் தனது வன்மத்தை மறைக்கவும் அதனை பயன்படுத்தியது.
இலங்கை எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்ததுவோ, அதே அளவு இந்திய அரசாங்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
ஒரே வித்தியாசம், இலங்கை அரசாங்கத்தை விட, இந்தியா உலக அளவில் தன் ஆளுமையை செலுத்தக் கூடிய நாடாக இருந்தது. ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்தால், தனித் தமிழீழத் தேசம் மலர்ந்திருக்கும்.
இந்தியா இரண்டு விடையங்களுக்காக அஞ்சியது:
தமிழீழத்தை சிதைத்த இந்தியா..! | Sri Lanka War Crimes 2009 India Help
தமிழீழம் விடுதலை அடைந்தால், தமிழ்நாடும் விடுதலைக் கோரும். இது இந்தியாவின் புவிசார் அரசியல் நிலையையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
தமிழீழம் அங்கீகரிக்கப் படாத நாடாக இருந்த காலத்தில், பிற அங்கீகரிக்கப் படாத நாடுகளைக் காட்டிலும், இராணுவம் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தது. அமைதி காலகட்டத்தில் (2001-2006) தமிழீழம் அடைந்திருந்த வளர்ச்சி இந்திய உயர்சாதியினர்களுக்கு எரிச்சலை கொடுத்தது.
1991 க்கு பிறகு, இலங்கைக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா தொடர்ச்சியாக அளிக்கத் தொடங்கியது. மூன்றாம் ஈழப் போரின் போது, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான பல யுத்தங்களை வென்ற போது, இலங்கை அரசுடன் இராணுவ வர்த்தகத்திலும், நிதியுதவி அளிப்பதிலும் இந்திய அரசாங்கமே முன்னிலையில் இருந்தது.
2018 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க இந்தியா வந்த முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க “நான் இலங்கையின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலமாக இருந்தது. எங்களின் பொருளாதாரமும் நலிந்திருந்தது. திரு.வாஜ்பாயி அவர்கள் தான் எங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார். எங்களுக்கு தேவையான இராணுவ பயிற்சிகளையும் அளித்தார். இந்த உதவிகளாலேயே கடல் புலிகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது” என்று கூறினார்.
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச, “காங்கிரஸ் அரசாங்கத்துடனும், அதன் அதிகாரிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பத்தில் எங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு இருந்தது” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் கடைசி கட்ட போரின் போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸின் ஆட்சி இருந்தது.
சோனியா காந்தி
தமிழீழத்தை சிதைத்த இந்தியா..! | Sri Lanka War Crimes 2009 India Help
1. இந்தியாவின் நலன்களை இலங்கையில் பாதுக்காக்கவும், பாக்கிஸ்தான் மற்றும் சீனா இலங்கையில் நிலை பெறுவதை தடுக்கவும், விடுதலைப் புலிகளை அழிப்பதும், பிரபாகரனைக் கொல்வதும் மட்டும் தான் ஒரே வழி என்ற சோனியா காந்தியின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.
அமைதி காலத்தின் போது ஈழச் சிக்கலுக்கு இராணுவத் தலையீட்டின் மூலமே முடிவு காண வேண்டும் என்று சோனியா காந்தி விடாப் பிடியாக இருந்தார். இராணுவ உத்திகள், பொதுமக்களை கட்டுப்படுத்துதல், ஊடகங்களை ஒடுக்குதல் அகியவற்றுடன் முற்று முழுதான போரிற்கான அறிவுரைகளை அமைதி காலத்திலும் கூட சோனியா காந்தி இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்தார்.
கருணா மற்றும் கே.பி ஆகியோர் உட்பட விடுதலைப் புலிகள் தலைமையில் பிளவு ஏற்பட சோனியா காந்தி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
2. பத்திரிக்கையாளர், சாம் ராஜப்பாவின் கூற்றுப் படி: இலங்கையில் நடைபெறும் இன விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ நடவடிக்கை மூலம் முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் கொல்வதற்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்கத் தயார் என்று சோனியா காந்தி கூறியதாக கொழும்புவில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.
இந்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உட்பட பிரதமர் அலுவலகத்தில் இருந்த பல்வேறு அதிகாரிகள் தேசிய நலனை விட சோனியா காந்தியின் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவி செய்தனர்.
உலகமே இலங்கையில் நடந்தவற்றை கண்டு கொந்தளித்துக் கொண்டு இருந்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அமைதியாக இருந்தது. ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படும் பட்சத்தில், இந்திய அராங்கம் மட்டும் தப்பித்து விட முடியாது.
கருணாநிதி
தமிழீழத்தை சிதைத்த இந்தியா..! | Sri Lanka War Crimes 2009 India Help
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு துணை நின்றார். அவரின் அமைதியும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவும் கேடு விளைவித்தது.
பிரபாகரன் கோரிய உதவிகளை புறம் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, காங்கிரஸ் கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள மறுத்தார்.
3. Tamil Nadu Coastal Security Group உதவியுடன், இந்திய உளவுத் துறை அமைப்பான RAW 2007 இல், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும், விடுதலைப் புலிகள் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வருவதை தடுக்கவும், ஆயுதங்கள் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த தொடர்புகளையும் முடக்கியது.
4. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்திற்கு காரணமானவர்களை விசாரிக்க ஐ.நா’வில் தீர்மானம் கொண்டு வரவும் வற்புறுத்தி, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு செயல்படுத்த போதிய அழுத்தங்களை கருணாநிதி மத்திய அரசிற்கு அளிக்கவில்லை.
ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இந்திய அரசாங்கம் முக்கியப் பங்காற்றியது. அதையும் கருணாநிதி கண்டிக்கவில்லை.
தங்கள் வற்புறுத்தலின் பெயரிலேயே தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது என்று மன்மோகன் சிங் கடிதம் வாயிலாக கூறிய பிறகும் கூட கருணாநிதி அமைதி காத்தார்.
5. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்புப் பட்டியலில் வைப்பது, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பது, கனடாவின் வலதுசாரி கட்சிகளில் உள்ள இந்தியர்களை கொண்டு விடுதலைப் புலித் தலைவர்களை தடை செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வருவது போன்ற அரசியல் ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் செய்தது.
6. இராணுவ ரீதியில், இலங்கை அரசாங்கத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், போர் விமானங்கள், தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியா அளித்தது.
அமைதி காலத்தில் மட்டும் இந்திய அரசாங்கம்: JY11 3D ரேடார் கருவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு 5 மில்லியன் டொலருக்கு விற்றது; இரண்டு Indra IN-PC-2D ராடார் கருவிகள், இலவசமாக அளித்தது; 13 MG போர் விமானங்கள், நூற்றுக்கணகான போர்வீரர்கள் அணியும் உடுப்புகள், மற்றும் தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வழங்கியது.
7. இந்தியாவின் செயற்கைக் கோள்களை பயன்படுத்திக் கொள்ள இலங்கை இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலமும், தானியங்கி விமானங்கள் (Drone) மூலமும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் கண்காணித்தது.
கடல் புலிகளின் கலன்கள் மீது, ஆயுதம் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது இந்திய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தியது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, விடுதலைப் புலிகள் தலைவர்கள் தப்பிச் செல்வதையும் தடுக்க இந்திய கப்பற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்திய கப்பல் படை, விடுதலைப் புலிகளின் கிடங்குகளாக பயன்படுத்திய பத்து கலன்களை (floating warehouses) அழித்தது. இதனால் கடற் புலிகள் அமைப்பு மிகவும் பலவீனம் அடைந்தது.
கடற்பகுதிகளை கண்காணித்து, சேகரித்த தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு அளித்தது, கடற் புலிகளின் கலன்கள் மீது விமானப் படைத் தாக்குதல்களையும் நடத்தியது. இந்தியாவில் இராணுவ பயிற்சி பெறும் முதன்மை நாடாக இலங்கை இருந்தது.
2008 இல், இலங்கை இராணுவத்திற்கு வருடாந்திர பயிற்சிகளை அளிக்கவும் இந்தியா ஏற்பாடுகள் செய்தது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ராஜபக்சேவின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமால், தனிப்பட்ட முறையில் தகவல்களை பறிமாறிக்கொள்வதற்கான முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. 2007-2009 கால கட்டத்தில் இவர்கள் பல முறை சந்தித்துக் கொண்டனர்.
8. இலங்கையின் கடற்படை தளபதியான வசந்தா கரணகோடா “விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்கள் இந்திய கப்பற்படை அளித்த தகவல்களை கொண்டு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு எல்லா வகையான பொருட்களும் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால் எங்களால் வேகமாக முன்னேற முடிந்தது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் கட்டியமைத்திருந்த தேசத்தை எங்களால் அழிக்க முடிந்தது.” என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசு மீதான சர்வதேச போர் குற்றங்களை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசாங்கம் இன்றளவும் விடாப்பிடியாக தடுத்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக