உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 19 பிப்ரவரி, 2026

a 359தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பு :உன்மையை துணிந்து சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

கூறப்பட்ட இரகசியம் அம்பலம்இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும்



 

என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி  தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போது கூறியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டிய விடயம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுமா என்ற கேள்வி பிரித்தானிய துணைப்பிரதமர் சார்பில் விபரிக்கப்பட்டபோது இந்த அரசு புதிய அரசியலமைப்பை கொண்டுவர மாட்டாது என  கஜேந்திரகுமார் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயத்தில் மூடிய அறையில் நடைபெற்ற சந்திப்பில் தற்போதைய அரசு புதிய அரசியலமைப்பை கொண்டு வரமாட்டாது என கஜேந்திரகுமார் கூறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கஜேந்திரகுமார் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தாரா என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

Share: 
  •  
  •  
  •  

சனி, 14 பிப்ரவரி, 2026

a 358-தனிநபர் கொலைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் தினறும் இலங்கை

 

தனிநபர் கொலைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் தினறும் இலங்கை, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவவிகளைக் கேட்டபோதும் அனைத்து நாடுகளும் கை விரித்ததாகத் தகவல், நடப்பது என்ன



கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

பொலிஸ் தகவலின்படி, குறித்த கார் காலி அகலியா பகுதியில் கைவிடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அப்போது, அந்த வாகனம் தீப்பிடித்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா? | Colombo Double Murder Suspects Conspiracy Exposed

இந்த இரட்டைக் கொலையில் வெளிநாட்டில் மறைந்து இருப்பதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் ஜெயலத் சில்வா தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக, உயிரிழந்த வழக்கறிஞர் கரந்தெனிய சுத்தாவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், பின்னர் அவரது முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் “லோகு பாட்டி” என்பவரின் வழக்கிற்காகவும் ஆஜராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் தகவல் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலை சுத்தாவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையில் கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

a 357-]வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

 

235வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு


சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர்.

ஆதரவளிக்க அழைப்பு

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.

வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Jaffna Uni Students Call Black Day Rally

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சில தினங்களாக அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

a 359தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பு :உன்மையை துணிந்து சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  கூறப்பட்ட இரகசியம் அம்பலம்இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும்   என பி...