உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 12 அக்டோபர், 2025
சனி, 11 அக்டோபர், 2025
a 337பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி
பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி
றியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
29.09.2025 அன்று தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறிய சிதறிய சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன்படி இப் பகுதியில் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 5 அக்டோபர், 2025
a 336 போராட்டத்தை திசை திருப்ப நினைக்கும் அரசு வவுனியா மாவட்டத் தலைவி கட்டனம்?
செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும்
இன்றைய (05-10-2025) தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து குறிப்பிடுகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தாங்கள் இலங்கையில் கடந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலேயே உள்நாட்டு பொறி முறை ஒன்றை எதிர்த்து சர்வதேச தரத்திலான ஒரு பொறி முறை ஊடாகவே தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம் அதே நேரம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கின்ற போராட்டத்திணை தாம் முற்றாக நிராகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளி, 3 அக்டோபர், 2025
புதன், 1 அக்டோபர், 2025
செவ்வாய், 30 செப்டம்பர், 2025
a 324 ஈழப் போரில் சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி குறித்து மாத்திரம் சிறிலங்கா ஏன் பேசுவதில்லை
ஈழப் போரில் சிறுவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி குறித்து மாத்திரம் சிறிலங்கா ஏன் பேசுவதில்லை!
ஏதுவுமறியாத எங்கள் சிறுவர்களை அழிப்பது ஏன் ? அவர்களின் வாழ்வை பறிப்பது ஏன் ? அவர்களின் நிலத்தை பறிப்பது ஏன் ? அவர்களின் தாய் தந்தையரை கொன்றும் காணாமல் போகச் செய்தும் சிறையில் அடைத்தும் அனாதைகளாக்கியது ஏன் ? குழந்தைகளை, சிறுவர்களை பழிவாங்கும் குறி வைக்கும் ஒரு நாட்டில் சிறுவர் உரிமையும் மனித உரிமையும் எந்த விசித்திரத்தில் இருக்கின்றது ? உலகப் போரில் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசும் சிறிலங்கா அரசு ஈழப் போரில் நிகழ்ந்த அநீதி குறித்து மாத்திரம் பேசுவதில்லை.
ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்பட்டார்கள். ஈழத்தில் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு தாய் தந்தைக்காகப் போராடுகிறார்கள்.
குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதையெல்லாம் ஈழ நிலத்தில் எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
உலக சிறுவர் தினம்
அக்டோபர் முதலாம் திகதி “உலக சிறுவர் தினம்” சர்வதேச ரீதியாக கொண்டாடப்படும் நிலையில், இவ்வாண்டு “அன்புடன் காப்போம் – உலகை வெல்வோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பான தேசிய நிகழ்ச்சிகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலிலும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உலக சிறுவர் தின நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான சிறுவர் தினத்தை முன்னிட்டு 2025 செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் முதலாம் திகதி வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனப்படுத்தி பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் கருத்து
சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகப் போரின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
சிறுவர் உடை அலங்காரம் இதன்போது சிறுவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கென்று உரிமைகள் இருத்தல் வேண்டும் என தீர்மானித்தது. இதனால் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் (CRC) ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கையும் 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் “தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் வாதிட்டு வந்தது.
சிறுவர் உடை அலங்காரம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுவர்களுக்கு என்று பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. சிறுவர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை நடைமுறைப்படுத்த தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது…” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈழ குழந்தைகளின் நிலை
ஈழ நிலத்தின் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது.
எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள அரசு படைகளின் குண்டுகளால், விமானங்களால் பிய்த்தெறியப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்த அப்பாவிக் குழந்தைகளை சிங்கள இராணுவம் கொலை செய்து அழித்தது.
அவர்களின் புகைப்படங்கள் அவர்களின் இரத்தம் அவர்களின் கண்ணீர் இந்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கவில்லை. ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய போரால் எங்கள் குழந்தைகள் இடர்மிக்க காலத்தை சந்தித்துள்ளனர். இன்றைக்கு எங்கள் குழந்தைகள் தாய் தந்தையரை இழந்து அனாதரவாக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் உள்ள சிறுவர் இல்லங்கள் சிலவற்றுக்குச் செல்கிறபோது எத்தனை தாய் தந்தையரை இழந்த சிறுவர்களை சந்திக்க முடிகிறது. தாய் தந்தையர்களை குழந்தைகள் இழப்போடு அவர்கள் மாபெரும் தனிமைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் பேரன்பை இழக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் வேறு ஒரு திசையில் செல்கிறது. இட்டு நிரப்ப முடியாத அந்த இடைவெளி அவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
ஈழ போரில் சிறுவர்கள்
ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இறுதிப் போரில் சரணடைந்த ஐம்பது சிறுவர்கள் குறித்து ஸ்ரீலங்கா அரசும் இராணுவப் படைகளும் இன்றுவரையில் வாய் திறக்காமல் இருக்கின்றன. சிறுவர்கள் குறித்து அதிகம் பேசுகின்ற உலக நிறுவனங்கள், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் குறித்தெல்லாம் பேசுகின்ற அமைப்புக்களும் கூட இந்த விடயத்தில் சிறிலங்கா அரசு மீது கேள்வி எழுப்பாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வேதனை.
இங்குதான் சிறிலங்கா அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் சிறுவர் தினம் குறித்த பிரகடனங்கள் கேள்விக்கு உள்ளாகின்றன. அத்துடன் போரில் சிறுவர்கள் மற்றும் இளையவர்கள் என பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது? இந்த விடயத்தில் நீதிக்காகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து வடக்கு கிழக்கு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெருக்களிலும் அரச நிறுவனங்களின் முன்பாகவும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன இப்போது ரணில் விக்கிரமசிங்க, இப்போது அநுரகுமார திசாநாயக்க எனப் பலர் ஆட்சிக் கதிரை மாறிய போதும் இந்த மக்களுக்கு பதில் வழங்கப்படாத துயர நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.
சிறுவர்கள் எதிர்கொள்ளும் சமூக அவலங்கள்
போரினாலும் சமூக அவலங்களாலும் சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்கு அந்நிலையங்கள் அவர்களுக்கு சிறைக் கூடங்களாகின்றன. பெற்றோர் தரும் அரவணைப்பை சகோதரர்கள் கூடியிருக்கும் வாழ்வை யாரால் தர இயலும் ?
அந்த வாழ்வில் இருக்கும் ஆறுதலை இனிமையை எப்படித் தர இயலும். வாடிய முகங்களுடன் ஏக்கங்கள் நிறைந்த மனத்தோடு பிஞ்சு வயதிலேயே மன நெருக்கடிகள் நிறைந்து வாழும் ஒரு வாழ்க்கைக்கு எங்கள் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறுவர் இல்லங்கள் என்றில்லாமல் சிறுவர் இல்லங்களுக்கான குழந்தைகளாக அவர்களின் சூழல் அமைக்கப்பட்டிருக்கின்றது.
தய்தையை இழந்து, தாயை இழந்து அன்பும் ஆதரவுமற்று அனாதரவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் பல இடங்களில் தொழிலாளிகளாக நடத்தப்படுகிறார்கள்.
பக்கத்து வீட்டிலிருந்து வணிக நிறுவனங்கள் வரை வடக்கில் தொழிலாளிகளாக குழந்தைகள் நடத்தப்படுவதைக் காணலாம். தாய் இறந்துபோக தந்தையார் செய்து கொண்ட மறுமணத்தின் ஊடாக கிடைத்த மாற்றுத் தாயே பாடசாலையை இடைவிலக்கி குழந்தைகளை தொழிலாளிகள் போல நடத்துவதையும் காணமுடிகிறது. இவ்வாறு குழந்தைகள் குடும்பங்களில், வீடுகளில் முகம்கொடுக்கும் சிக்கல்கள் ஏராளம்.
ஈழச் சிறுவர்களின் உரிமைகள்
ஈழச் சிறுவர்களின் பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டு அவர்களின் தாய் தந்தையர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டு அவர்களின் தந்தையர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்கள் அனாதரவாக்கப்பட்டு அவர்கள் பாடசாலை கல்வியை இழந்து இராணுவ ஆக்கிரமிப்பும் அபாயமும் மிகுந்த சூழலில் வாழத் தள்ளப்பட்டுள்ளமை எதற்காக ?
இப்படி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் சிறுவர்களுக்கு இந்த மண்ணில் என்ன உரிமை இருக்கின்றது ?
சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எங்கள் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உரிமை பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு எல்லாமும் பறிக்கப்பட்ட எங்கள் சிறுவர்கள் இலங்கையில் ஈழச் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை குறித்து இந்த உலகின் முன் நீதியை கோரி முகத்தில் அறைகின்றனர்.
ஞாயிறு, 28 செப்டம்பர், 2025
a 322 VIDEO சுலற்சிமுறையில் உணவுதவிர்ப்பு போராட்டம் 025 09 28
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.
வடக்கில் யாழ் செம்மணியில் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் கிழக்கில் அம்பாறையில் நேற்று 27ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி செல்வராணி தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டம் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.
இன்றைய போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையிலான மட்டக்களப்பு மாவட் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களும் கொண்டிருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிளையின் தலைவர் சட்டத்தரணி நிதான்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவளித்துவருகின்றனர்.
a 321 விஜய் பிரசார கூட்டம் ; பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு ; விசாரணைக்கு ஆணைக்குழு நியமிப்பு
விஜய் பிரசார கூட்டம் ; பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு ; விசாரணைக்கு ஆணைக்குழு நியமிப்பு
தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் பகுதியி்ல் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர்.

இந்தநிலையில், சனநெரிசலில் சிக்கியவர்களில் 6 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும், காரணங்களையும் கண்டறியும் நோக்கில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவினையும் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தமை தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு, இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சம்பவத்துக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதன், 24 செப்டம்பர், 2025
a 320 றீச்சாவில் தீ வைத்த விசமிகள்! 200 ற்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்
றீச்சாவில் தீ வைத்த விசமிகள்! 200 ற்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்
வடக்கின் பிரபல சுற்றுலாத் தலமான றீச்சா பண்ணையின் தென்னைகளுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் காரணமாக பண்ணையில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட தென்னைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
கடந்த நாட்களாக போலியான குற்றச்சாட்டுகளால் றீச்சா குறிவைக்கப்பட்டு வந்த நிலையில், இந்தச் செயல் திட்டமிட்ட பழிவாங்கலாகவே கருதப்படுகிறது.
குறித்த விடயத்திற்கு றீச்சா பண்ணையின் நிர்வாகம் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ள நிலையில், இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
ஞாயிறு, 21 செப்டம்பர், 2025
a 319சுவிட்சர்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன..
சுவிட்சர்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன..
சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.
சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸட்சர்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல்
சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிட்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிட்சலாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிகாட்டியுள்ளார்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுரேஸே பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர்.
கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ‘இரு அரசு’ முறையிலான தீர்வு பொருத்தமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர்.
ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்த கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர்.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஆனால் அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.
தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம்
அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார்.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே — அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார்.
ஆனால் இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
அதேநேரம் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.
ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார்.

அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது,அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.
அதேநேரம், போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் – யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார்.
சமஸ்டி ஆட்சி
சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர்.

ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர். அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார்.
இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
அதேவேளை, மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.
சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார்.
2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார்.
இந்த கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது.
அதேநேரம், இந்த கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது
செவ்வாய், 16 செப்டம்பர், 2025
a 318 ஜெனிவாவில் 15/09/25 அன்று நடந்த கவன ஈர்ப்புப் போராட்டம்
இனவழிப்பு தொடர்பில் ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாகஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.
தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அபுலம்பெயர் தாயக உறவுகள் தொடர்ந்து மாவீரர்களின் கனவை நனவாக்க தங்களின் வரலாற்றுக் கடமையில்?தனைத்தொடர்ந்து அவ்வறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது.

அதேவேளை பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60ஃஎல்.1 எனும் முதல் வரைவு குறித்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தி திங்கட்கிழமை (15) சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்ற நடாத்தப்பட்டது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்பாகக் கூடினர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பிரதிபலிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சர்வதேச நீதிப்பொறிமுறையைக்கோரி பேரணியாகச் சென்றனர்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025
a 317 வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது.
வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்து விட முடியாது.
உலகின் எந்தக் கவிஞனாலும் தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய காவியத்தை எழுதி விட முடியாது என்பதுதான் உண்மையானது, பிரபாகரன் என்ற பெயரே கவியம்தான்.
ஆனாலும், அந்தப் பெயரின் முழுமையை உணர்ந்தெழுத முடியாது, நாம் தலைவர் பற்றி அறிந்து கொண்டது எல்லாமே அவர் புறவயமான வரலாறே, அவர் அகமும் புறமுமாய் இருந்த ஈழ விடுதலைப் பயணத்தை அவரால் மாத்திரமே எழுதி விட முடியும்
இரகசியத்தால் வளர்க்கப்பட்ட இயக்கம்
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் அதில் போராளிகள், தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களின் பங்களிப்பு குறித்தும் அதற்காய் தலைவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பல நூறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, போராட்ட காலத்திலும் சரி போராட்டம் முடிந்த பின்னரும் கூட அது பற்றி நிறையவும் எழுப்பட்டுள்ளன.
அவைகளில் எல்லாம் நாம் அறிந்து கொண்ட பிரபாகரனின் வாழ்வும் வரலாறும் பார்வையும் முழுமையானதா ? நிச்சயமாக இல்லை அதைக் கடந்து பல வரலாறுகளும் உண்மைகளும் வாழ்க்கையும் உண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தனது வாழ்வையும் இரகசியங்களால் வளர்த்தெடுத்தவர் தலைவர் பிரபாகரன்.
புலிகளின் இரகசியங்களில் இருந்த நியாயம் எப்படியானது ? ஈழத் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உண்மையும் நேர்மையும் அதன் வழியான பற்றுதியும் கொண்டிருத்தல் என்ற ஒழுக்கமும் மாண்புமே அதிலிருந்து விலகக்கூடாது என்பதுடன் ஈழ மக்களின் விடுதலைப் பயணத்தை சரியான வழியில் நகர்த்தி, மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கானதே அந்த இரகசியங்களில் பொதிந்திருக்கும் கனவுகள்.
பிரபாகரனின் முகவரி
ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் எம் சிறார் பருவத்தில் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதும் சிறுவர்களாக நாம் இருந்திருக்கிறோம் அவரது பிறந்த நாளிலும் தைப்பொங்கல் போன்ற பண்டிகை காலத்திலும் கடிதம் எழுதுவோம் அவருக்கு ஒரு முகவரியும் உண்டு அதாவது வே. பிரபாகரன், தமிழீழத் தேசியத் தலைவர், தமிழீழம் என்பதே அந்த முகவரி.

பெரும்பாலான நாடுகளில் ஜனாதிபதிக்கு பெரியவர்கள் எழுதுகிற கடிதங்களுக்குக்கூட பதில்கள் கிடைப்பதில்லை ஆனால் தலைவர் பிரபாகரனுக்கு எழுதும் கடிதங்களுக்கு பதில் வரும் நாம் அரிதாகக் காணுகின்ற அழகிய அந்த கையெழுத்துடன் தலைவர் பிரபாகரனின் வீட்டை உடைத்ததாக ஒருமுறை சிங்கள இராணுவத்தினர் அறிவித்தனர்.
வன்னியில் ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அதனைப் பிரபாகரன் வீடு என்றும் அறிவித்தனர் அந்த வீட்டை கைப்பற்றியதாக வீரத்தை வெளிப்படுத்த இராணுவத்தினர் முனைந்தனர் ஆனால் அந்த வீட்டை சிங்கள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர் அந்த காணி நிலத்தில் இருந்து மண்ணை அள்ளிச் சென்று தமது வீடுகளில் வைத்தார்கள், பிரபாகரன் வீடு என்பதையே ஒரு கோயில் போல சிங்கள மக்களும் வணங்கியதால் அந்த வீட்டை தகர்த்தது இராணுவம்.
தலைமுறைகளை ஈர்க்கும் பெயர்
ஒரு இனத்திற்காக, ஒரு இனத்தின் வீடுகளுக்காக, ஒரு இனத்தின் இருப்புக்காக மற்றும் ஒரு இனத்தின் நிலத்திற்காக போராடிய தலைவனுக்கு அடையாளப்படுத்தும் விதமாய் ஒரு வீடும் நிரந்தரமான முகவரியும் இருந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இந்த தேசமே அவரது வீடாக இருந்திருக்க வேண்டும், இந்த தேசமே அவரது முகவரியாக இருந்திருக்க வேண்டும்.

அதேபோல, வல்வெட்டித்துறையில் உள்ள தலைவர் பிரபாகரன் பிறந்த வீட்டையும் இலங்கை அரச படைகள் தகர்த்துள்ளன ஆனாலும் அந்த வீட்டின் உடைந்த சுவர்களும் நிலமும் பற்றைகளும் தலைவர் பிரபாகரனை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது சிறிலங்காவின் அரசியலில் எத்தனையோ நபர்கள், ஜனாதிபதிகளாக மற்றும் பிரதமர்களாக இருந்துவிட்டார்கள்.
தேடித் தேடி, புத்தகங்களில் படித்தால்தான் அவர்களின் பெயர்கள் நமக்கு தெரிகின்றன, அவர்களின் முகங்கள்கூட நினைவுக்கு வர மறுகின்றன ஆனால் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றில் எவர் நினைவிலும் படிந்துவிட்ட முகமும் பெயரும் என்றால் அது பிரபாகரன் என்ற பெயராகத்தான் இருக்கும் அத்தோடு பள்ளிப் புத்தகங்களில் இல்லாத பிரபாகரன் என்ற பெயரை அறியாத குழந்தைகள் இன்றும் இல்லை, பிரபாகரன் என்ற பெயரும் அந்வ வீர முகமும் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும்.
மறைக்கத்தான் முடியுமா?
இன்றைக்கு ஈழ மண்ணில் எங்கள் வீடுகளில் பிரபாகரன் அவர்களின் படத்தை வைத்திருக்க முடியாது, அந்தப் பெயரை நாங்கள் சத்தமாக உச்சரிக்கவும் முடியாது, பிரபாகரன் என்று பெயர் வைத்துக் கொண்ட பிள்ளைகளை கண்டாலே இராணுவத்தினர் அஞ்சி மிரள்வதை கண்டிருக்கிறேன் அத்தோடு எங்கள் தெருக்களில், சுவர்களில் பிரபாகரனின் சிலையும் இல்லை மற்றும் புகைப்படமும் இல்லை.

ஆனால், பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இருதயங்கள் இல்லை என்பதே வரலாற்றில் பிரபாகரன் என்ற பெயருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது தலைவர் பிரபாகரன் பற்றிய நினைவுகளையும் வரலாற்றையும் இல்லாமல் செய்துவிடும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் கடுமையாக ஈடுபடுகின்றது.
முகநூலில் அவரது புகைப்படத்தை பகிர்ந்தால் முகநூலில் இருந்து தடை செய்வோம் என்று எச்சரிக்கிறது முகநூல் நிர்வாகம் மற்றும் அதுபோல் யூடியூப் சனலில்கூட தலைவர் பற்றிய பதிவுகளையும் படங்களையும் நீக்கும் முயற்சிகள் நடக்கின்றன, பல இலட்சம் ஈழ தமிழ் மக்களால் மாத்திரமின்றி உலக தமிழர்களாலும் நேசிக்கும் ஒரு தலைவன் படத்தை இருட்டடிப்பு செய்ய இவர்களுக்கு என்ன உரிமையுண்டு ?
வரலாறு மாறும்
தமிழர்களை இல்லாமல் ஆக்குகின்ற இலங்கை அரசின் முயற்சிகளுக்கு இது ஒப்பானது மற்றும் தமிழ் ஈழத்தை இல்லாமல் ஆக்குகின்ற முயற்சிகளுக்கு ஒப்பானது, தலைவர் பிரபாகரன் பற்றிய நினைவுகளையும் வரலாற்றையும் இல்லாமல் செய்ய முனைகின்ற செயல் மாறாக இந்த செயலானது முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தலைமுறைகளையும் பிரபாகரன் நோக்கித் திருப்பி விடுகின்றது.

ஒரு இனத்தின் தலைவரை அம்மக்கள் கொண்டாடுவதை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர்களின் நினைவுரிமையில் பங்கம் ஏற்படுத்தக்கூடாது மக்களின் உரிமைக்காக தங்களை அர்ப்பணித்துப் போராடியவர்களை வரலாறு விடுவித்துக்கொள்ளும்.
அத்தகைய உன்னதமான தலைவர்களை வரலாறு போற்றுகின்ற போதே அந்த விடுதலைப் போராட்டங்களும் அர்த்தம் பெறுகின்றன, நெல்சன் மண்டேலாவும் பிடல் காஸ்ரோவும் பயங்கரவாதிகளாக சொல்லப்பட்டு பின்னர் உலக இதயங்களில் உன்னத போராளிகளாக மற்றும் தலைவர்வளாக நிலைத்தவர்கள் அவர்களைப் போல உலகின் எந்த ஜனாதிபதிகளும் மற்றும் பிரதமர்களும் நின்றதில்லை அப்படியொரு அதியுன்னதமான போராளியே எம் தலைவர் பிரபாகரனும்.
ஒப்பற்ற தலைவர்
கடந்த காலத்தில் கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்சவினருக்கு எதிராக நடந்த போராட்டங்களில் சிங்கள மக்களின் அன்பும் ஈடுபாடும் தலைவர் பிரபாகரன் பக்கம் திரும்பியமை வரலாற்றின் விடுவித்தல் ஆகும், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொள்ளுகிற அவர் தாகத்தையும் இலட்சியத்தையும் ஏந்திக்கொள்கிற ஒரு காலம் வரத்தான் போகின்றது.

இன்று தமிழர் தாயகத்தை வடக்கென சுருக்க முனையும் சுயநல அரசியல்வாதிகள் எம் தாயகத்தை கூறுபோட முனைகிற தருணத்தில் எதிரிகளுக்கு மாத்திரமின்றி எம்மவருக்கும் பிரபாகரன் என்பது பயம் மட்டுமல்ல பாடமும் தான் இன்று ஈழத்தில் எம் மக்களுக்கு தலைமைத்துவம் இல்லை.
அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டு சுயநல அரசியல் செய்கிறார்கள் ஈழ மக்களுக்காக துளியளவு கூட தன்னலமின்றி, வீரமும் தீரமும் கொண்டு போராடியவராகவும் உலகில் இதுவரை எவரும் கண்டிராத ஒரு ஒப்பற்ற தலைவராக பிரபாகரன் அவர்கள் தனித்துவம் பெறுகிறார், காலங்கள் கடந்தும் வரலாறு கடந்தும் பிரபாகரன் என்ற மந்திரச் சொல்லே எமக்காக போராடுகிறது எமது அடையாளமும் காவலும் அந்தப் பெயர்தான் அத்தோடு, வரலாற்றை
a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;
தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...

-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த...
-
பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத...