உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப்பட்டுவருடுகின்றது,
சுழியம் உதவித் திட்டம் 01
பெண் தலைமைத்துவக் குடும்பமாக வாழ்ந்துவரும் லெப். கேணல் விதுரன் அவர்களின் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் மாங்குளத்தில் வசித்து வருகின்றார். இவர் வாழ்வாதார உதவி கேட்டதற்கு அமைவாக, காவியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 570000 ரூபாயும், யோகன் அவர்களால் 100000 ரூபாயும் நவம்பர் 2022 இல் வழங்கப்பட்டது. இதன் மூலம் கடை ஒன்றை அமைத்து செயற்படுத்தி வருகின்றார்.
சுழியம் உதவித் திட்டம் 02
09/2003
பெண் தலைமைத்துவக் குடும்பமாக வாழ்ந்துவரும் லெப். கேணல் சிவாஜி அவர்களின் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வள்ளிபுனத்தில் வசித்து வருகின்றார். இவர் வாழ்வாதார உதவி கேட்டதற்கு அமைவாக, சீராளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 400000 ரூபாயும், யோகன் அவர்களால் 100000 ரூபாயும் செப்ரம்பர் இல் வழங்கப்பட்டது. இதன் மூலம் தேங்காய் எண்ணை வடிக்கும் கொப்பிறா மிசின் போட்டுக் கொடுக்கப்பட்டது.இதன் மூலம் இவர் தனது வாழ்வாதரத்தைச் செய்து வருகின்றார்,
சுழியம் உதவித் திட்டம் 03
09/2003
பெண் தலைமைத்துவக் குடும்பமாக வாழ்ந்துவரும் கேணல். அகிலேஸ் அவர்களின் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றார். இவர் வாழ்வாதார உதவி கேட்டதற்கு அமைவாக, அவுஸ்திரேலியா செயற்பாட்டாளர்களால் 200000 ரூபாய் பிரித்தானிய செயற்பாட்டாளர்களால் 200000 ரூபாய் மொத்தம் 400000 ரூபாய் ஒக்ரோபர் 2023 இல் வழங்கப்பட்டது. இதன் மூலம், இவர் வீட்டுத் தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்ளவுள்ளார்.
சுழியம் உதவித் திட்டம் 04
09/2003
பெண் தலைமைத்துவக் குடும்பமாக வாழ்ந்துவரும் தமிழரசன் அவர்களின் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வள்ளிபுனத்தில் வசித்து வருகின்றார். இவர் வாழ்வாதார உதவி கேட்டதற்கு அமைவாக, பிரான்ஸ் செயற்பாட்டாளர்களால் 350000 ரூபாயும் சுவிஸ் செயற்பாட்டாளர்களால் 50000 ரூபாயும் ஒக்ரோபர் 2023 இல் வழங்கப்பட்டது. இதன் மூலம், இவர் வீட்டுத் தோட்டம் மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்ளவுள்ளார்.
சுழியம் உதவித் திட்டம் 05
சுழியம் உதவித் திட்டம் 06
12/2003
சுழியம் உதவித்திட்டம் 07
12/2003
12ம்மாத சுழியம் உதவித் திட்டம் ராஜ்குமார், கலைவாணி பூநகரியில் வசிப்பவருக்குச் செய்யப்பட்டது,
சுழியம் உதவித்திட்டம் 08
09/2004
சுழியம் உதவித்திட்டம் 09
06/2004
ஆணி ஆறாம் மாதச்சுழியம் உதவித் திட்டம் மாவீரன் லெப் கேணல் அரிச்சுணா அவர்களின் துனைவியார் திருமதி கருணாநதி ஒருபிள்ளையுடன் மூங்கிலாறு முல்லைத்தீவுமாட்டத்தில் வசித்து வருகின்றார்,
,அவரின் கணவர் வீரச்சாவு அடைந்தபின் தனது பிள்ளையை படிப்பிப்பதற்காகவும் எனது அடிப்படைத் தேவைக்காகவும் நான் கடினமாக உளைத்துவருகின்றேன், அவ்வகையில் பல ஆண்டுகளிற்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து சிறு உதவி பெற்றுள்ளேன், அது காணாதமையால் மீண்டும் உதவிகோரக் கடமைப் பட்டுள்ளேன்,
எனவே தொடர்ந்து நான் எனது காணியில் சிறு தோட்டம் செய்து எனது வாழ்வாதாரத்தை நிலையான ஒரு தொளிலாகமாற்றுவதற்காக சுழியம் நிர்வாகத்திடம் நிதி உதவியைக்கோரி நிக்கின்றேன், என அவர்
கேட்டுயிருந்தார், அதற்கு அமைவாக ஆணி மாதம் இவருக்கு வாழ்வாதார உதவி செய்வதற்கு சுழியன் எமது அங்கத்தவர்களைகொண்டுயியங்கும் அனைத்து நாடுகளின் கிளை அமைப்புக்களிடம் இருந்து உதவி கோரப்பட்டமைக்கு அமைவாக,
அவுஸ்திரேலியா கிளை 100000 ஒரு லக்சம் ரூபாய் ,பிரான்ஸ் கிளை170000 ஒரு லக்சத் எழுபதினாயிரம் ரூபாய் ,இங்கிலாந்து கிளை ஒரு லக்சம் ரூபாய். ஐரோப்பா கிளை 30000 முப்பதினாயிரம் ரூபாய் என
எமது தேசிய் செயற்பாட்டாளர்களின் பங்களிப்பின் மூலம் இவருக்கு நான்கு லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது 26/06/2024 அன்று இவரின் வாழ்வாதார உதவியை மேற்படுத்துவதற்காக அவரின் கணக்கு இலக்தகத்திற்கு அனுப்பப்பட்டது, என்பதை அனைத்து அங்கத்தவர்களிற்கும் தெரித்துக் கொள்கின்றோம்,
பங்களிப்பு செய்த சுழியம் மக்கள் கட்டமைப்பு அங்கத்தவர்கள் 07 சுழியன் கட்டமைப்பு அங்கத்தவர்கள்39 மொத்தம் 46 பேர் பங்களிப்பு செய்துள்ளனர் , மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் தங்களின் உயிரை அற்பணித்த இந்த உத்தமர்களின் உறவினர்களை வாழவைக்க தாங்கள் பெரிய மனதுடன் செய்யும்பங்களிப்பை எமது சந்ததி ஒருபோதும் மறக்காது,கடமையுனர்புடன் செயற்படும் அனைத்து செயல்பாட்டாளர்களிற்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்,
நன்றி சுமியம் நிர்வாகம்
சுழியம் உதவித்திட்டம் 10
சுழியம் உதவித்திட்டம் 10
சுழியம் நடுவப்பணிமனை அனைத்து நாடுகளிற்கான செயலகம்
22/08/2024
எமது அமைப்பின் அங்கத்தவர்களின் உயர்ந்த பங்களிப்பு ஊடாக மாவீரர்களின் தாய் மற்றும் அவர்களின் துணைவிமார்களான பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நாம் தொடர்ந்துசெயல்பட்டுவருகின்றோம்,அவ்வகையில் மிகவும் வறுமையில் வாழ்பவர்களை இனங்கண்டு உதவி செய்ய தேர்ந்து எடுப்பதற்கான அனுமதி சுழர்ச்சி முறையில் அந்த நாடுகளின் கிளை அங்கத்தவர்கள் ஊடாக நாடுகளின் இணைப்பாளரிக்கு வழங்கப்பட்டுள்ளது,அவ்வகையில் பத்தாவது உதவி செய்வதற்கான பயனார் தேர்வு சுவிஸ் கிழைக்கு வழங்கப்பட்டது
அதனால்சுவிஸ் நாட்டின் இணைப்பாளர் அன்பணாஅவர்களின் பூரண ஆதரவுடன் பத்தாவது உதவி செய்வதற்கான பயனார் தேர்வாக லெப் பூவதி மற்றும் கட்டன் விடுதலை மற்றும் அவர்களின் இரு சகோதரிகளின் கணவன்மார் இறுதி சுத்தத்தில் காணமல் போய்யுள்ளனர்அதனால் அவர்களின் கூட்டுக் குடும்பத்திற்கு உதவுவது என முடிவடுக்கப்பட்டமைக்கு அமைவாக25/09/2024 அருள்நம்பி, திருமதி அஜந்தி என்பவரின் கனக்கு இலக்கத்திற்கு நான்கு லக்சம் பணம்அனுப்பப்ட்டது அதன் விபரம் அஸ்திரலிய கிளை100000 ஒரு லக்சம் பிரான்ஸ் கிளை145000 ஒரு லட்சத்தி நாற்பத்தி ஐயாயிரம் ஐரோப்பா கிளை35000 முப்பத்தி ஐயாயிரம் ரூபாய், சுவிஸ் கிளை 70000 எழுபதினாயிரம் ரூபாய் என மொத்தம் நாலு லக்சம் பணம் அனுப்பப்பட்டது
மாவீரனின் தாய் திருமதி குமாரசிங்கம், அமராவதி 80 இவரின்பிள்ளைகளான மாவீரன் லெப் பூவதி கோட்டையில் 19/06/1990 அன்று வீரச்சாவு மற்றும் கப்டன் விடுதலை26/07/1996 அன்று வீரச்சாவு அடைந்தார், இவரின் தாயார் இரண்டு கணவனை இழந்த மகளுடன் வாழ்வதினால் தனக்கு வாழ்வாதார உதவிசெய்யுமாறு எமது சுமியம் நிர்பாக அங்கத்தவர்களிடம் கேட்டுயிருந்தார்,
அனைவரின் நாளாந்த வாழ்க்கைச் செலவு கடினமாகயிருப்பதால் மாவீரனின் தாய் வாழ்வாதாரஉதவிகேட்டுள்ளார் ,தனக்கு 80 வயது ஆகின்றது அதனால் தன்னால் எதுகும் செய்ய முடியாது. எனவும் அதனால் எனது மகளின் உளைப்பில் வாழ்வதால் அவருக்குத் தையல் மிசின் மற்றும் அதற்கான துணிகள் வேண்டி அதன் தொளில் ஊடாக எங்களின் வாழ்வாதாரத்தை மேற்படுத்தஉதவி செய்யுமாறு கேட்டிருந்தார். இவரின் இரண்டு பிள்ளைகள் சுழியம் அமைப்பில் இருந்து வீரச்சாவு அடைந்துள்ளனர், இவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் அவர்கள் இருவரும் ஒருதர் போராளியும் மற்றவர் தமிழீழக் காவல் துறை உறுப்பினர் என .இருவரும் திருமணம் செய்து இருந்தனர், இருவரின் கணவன் மார்களும் 2009 இறுதி சுத்தத்தில் காணமல் போய்யுள்ளனர்.
தற்பொழுது இவர்களின் பரமரிப்பில்மாவீரனின் தாய் வாழ்ந்து வருகின்றார்,அதனால் அவர் கேட்டதற்கு அமைவாககுறிப்பிட்ட உதவி வழங்கப்பட்டது.
தையல் மிசின் மற்றும் அதற்குத் தேவையானதுணிகளும் வேண்டிக் கொடுப்பதற்கு எமது நிர்பாகம் முடிவு செய்துள்ளதுள்ளது அதனுடாக தங்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளனர்
இவ் உதவியை செய்வதற்காக பெரும் மனதோடு புரட்டாதி மாதம் உதவிசெய்யமுன்வந்த அங்கத்தவர்களின் விபரம் சுவிஸ் அங்தத்தவர் 06 ஐரோப்பா அங்தத்தவர்02 அவுஸ்திரேலிய அங்தத்தவர்10 பிரான்ஸ்அங்தத்தவர் 21 இங்கிலாந்துஅங்தத்தவர்06 என மொத்தம் 45 அங்கத்தவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர் எனவே அவர்களிற்கும் அவர்களின் குடும்ப உறவினர்களிற்கும் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எமது அடுத்த உதவித் திட்டம் 12 ஆம் மாதம் ஆரம்பம் ஆகும்,
நன்றி
இவ்வண்ணம்
சுழியம் நடுவப்பணிமனை
அனைத்து நாடுகளிற்கான செயலகம்
,
பதிலளிமுன்அனுப்பு |