உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 9 டிசம்பர், 2023

பாகம் 4 திருத்தம் செய்யப்பட்டதுதமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.

 

  பாகம் 4  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.




 பாகம் 4 தமிழீழக்கதை the Tamil Eelam of  story

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு.........CAPITAL OF STORY" 

                      " "


இது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிய சுமார் 150 போராளிகளிடம் உண்மை நிலையான கருத்துக்கள் பெறப்பட்டு K. நிமலேஸ்வரன் அல்லது வாமண்டபாட்ணர்  என்பவரால் எழுதப்பட்டது. 

பிரத்தியேக உள்ளடக்கம்

1990 தொடக்கம் 1995   வரையான பிரத்தியோகமான வரலாற்றுக் கதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது ,..........              மேலும் பல  விடயங்கள்  உள்ளே இருக்கின்றது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத் தொகுப்பு "பாகம்4" பிரத்தியோகமான வரலாறுகள் உள்ளடக்கம். 


01 -  24/03/ 1990 இந்திய இராணுவம் இலங்கையை விட்டு முழுமையாகச் வெளியேறிச் சென்றது.

02-  25/03/1990 தலைவர் யாழ்ப்பாணம் வந்தார்.


03- கலைபண்பாட்டுக் கழகம் திறமையாகச் செயற்பட்டது.


04 - 1990/4 ம் மாதம் அப்பொழுது வடமராட்சி கரவெட்டியில் எமது பாசறை இருந்தது.


05 - 10/06/1990 அதிபர் பிரேமதாசா விடுதலைப் புலிகளிற்கு எதிரான இரண்டாம்கட்ட  ஈழப்போரை ஆரம்பித்தார்.


06 -  11  /06/1990 தலைவர், மாத்தையா சந்திப்பு.


07 - 19/06 /1990 யாழ் கோட்டை முதலாவது சண்டை நடத்தப்பட்டது.


08- 21/06/1990 மன்னார் கொண்டச்சி முகாமைத் தாக்கினார்கள். 


09- 10/07/1990 அன்று விடுதலைப் புலிகளின் இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது.


10-  22/07/1990 ஆனையிறவில் இருந்து பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை சிங்கள இராணுவம் மேற்கொண்டது. 


11- 23//0/7/1990 அன்று கீரிமலைகடற் கரையில் சிறிலங்கா கடல் படையின் பாரிய தரையிறக்க  நடவடிக்கை.


12-  சங்கர் அண்ணையின் திறமையான நடவடிக்கையால் பல பொருட்கள் எமக்கு இந்தியாவிலிருந்து வந்தது.


13- 12/08/1990 அன்று அதிபர் பிரேமதாசா காலத்தில் வீரமுனை இனப்படுகொலை நடத்தப்பட்டது.


14- 30/08/1990  றோமியா நவம்பர் அல்லது லெப். கேணல் ராஜன் அவர்களின் குடும்பம் எமது போராட்டத்திற்குச் செய்த கடமையை மறக்க முடியாது.


15-  09/09/1990 அன்று அதிபர் பிரேமதாசா காலத்தில்  சத்துருக்கொண்டான் இனப் படுகொலை  நடத்தப்பட்டது.


16-  அன்று மாங்குள இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டது.


17-  22/12/1990 கட்டுவனில் பெண் போராளிகளின் வீரம். 


18-  05 /01/1991 அன்று தச்சன்காட்டில் புதிதாக அமைக்கப்பட்ட  21 தொடர் காவல் அரண் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல்.


19- 19 /03 /1991 ஆனையிறவைத்தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர். அதற்கான ஆயுதக்கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்.


20-  இதே காலப்பகுதியில் தான் கொக்குத்தொடுவாய்ப் பிரதேத்தைச் சேர்ந்த போராளி மகேந்தி அவர்கட்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது.


21- 10/04/1991 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம்.


22- 04/05/1991 கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் இவர்களின் வீரச்செயல் நடந்தது.


23-  21/05 /1991நினைச்சுக்கூட நாம் செய்ய விரும்பாத ஒரு வேலையைச் செய்தது இந்தியாவினுடைய "றோ".


24- 10/07//1991 முதலாவது ஆனையிறவுமீது விடுதலைப் புலிகளின் மரபுவழிச்சமர்.


25- 12,07 1991  கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்.


26- 14/07/1991 அன்று போராளிகளின் வித்துடல்களை அடக்கம் செய்யுமாறு தலைவர் அனுமதி வழங்கினார்.


27- 14.07.1991 அன்று ஆனையிறவை மீட்க சிங்களக் கடற் படையால் தரையிறக்கம் செய்யப்பட்டது.


27/09/1991 அன்று மின்னல் என்ற பேரில் மணலாற்றில் பாரிய தாக்குதலை ஆரம்பித்தது சிங்களப்படை.



28- 19/09/1991 அன்று தளபதி பதுமனின் தலமையில் தமிழீழப் படைத்துறைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 


29- 23/09/1991 செஞ்சோலைச் சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.


30- 19/11/1991 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழக் காவல் துறை உருவாக்கப்பட்டது. 


31-  01/01/1992 அன்று சிறுத்தைப் படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது.


32 -5/07/1992 யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகளின் கொண்டாட்டமும் ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.


33- 10/07/1992 அந்தக் காலப்பகுதி கடும் இறுக்கமான காலமாகயிருந்தது. ஏனென்றால் முதலில் தலைவரின் பாதுகாப்பு அணி ஒரு அணியாகயிருந்தது.


34-  21/07/1992 காலப்பகுதியில் வெற்றிலைக் கேணியில் இருந்து யாழைநோக்கி சிறிலங்காப்படை முன்னேறத் தொடங்கி விட்டது.


35- 08/08/1992 அன்று கொப்பேக்கெடுவா அவர்கட்டு சாவொறுப்பு வழங்கப்பட்டது. 


36-  01/10/1992 இதே காலம்தான் தலைவரால் இம்ரான் பாண்டியனணி உருவாக்கப்பட்டது.


37- 16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் சர்வதேசக்கடலால் தமிழீழம் வந்து கொண்டிருந்தார்  தளபதி கிட்டு .


38-  04/04/1993 ஜெயந்தன் படையணிஉருவாக்கம் .


39-  03/05/1993 இதே காலம் தளபதி கருணா அவர்களிற்கு திருமணம் நடந்தது.


40-  02.07.1993 மணலாற்றில் அமைந்திருந்த  மண்கிண்டிமலை முகாம்  மீது  ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.


41-  25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால் அந்த வரலாற்றுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.


42-  26/08/1993அன்று மதன், நிலவன் இருவரும் கரும்புலியாகச் சென்று கிளாவில் இரண்டு றோ கடற்கலன்களை மூழ்கடித்தனர். 


43-  29/08/1993 அன்று புகழரசன், மணியரசன் இருவரும் சென்று பாரிய சாதனை ஒன்றைப் பருத்தித்துறையில் படைத்தார்கள்.


44-  31/8/1993 அன்று இரவு மாத்தையாவைப் பிடிப்பதற்கான திட்டம்தீட்டப்பட்டது.




45- 11/11/1993 பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.


46- 11/11/1993 கரும்புலிகளை அங்கே அனுப்பிவிட்டு பூநகரித்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.


47-  10/05/1994 கடும் பதட்டமான நிலையில் இருந்தபோதும்  செல்லக்கிளிதிருடனின் வேலையால் கடுமையாகப் பயந்த  தலைவர்.


48-  1994 காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பில் பாரி மாற்றம் ஏற்பட்டு இருந்த காலமது  தலைவரின் வாகன ஓட்டுனரில்  இருந்த பெரும்பாலான போராளிகள்  வெளியேற்றப்பட்டு அதற்குப்பதிலாக புதிய போராளிகள் உள்வாங்கப்  பட்டார்கள்.



 49- 23/05/1994 ஆம் ஆண்டு தமிழீழ வைப்பகம் முதலாவதாக  யாழ்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.


50- 1994 /08 இதே காலத்தில்தான் பாரிய  துயரச் சம்பவம் ஒன்று எமது படையணிக்குள் நடந்தது.


51- 02/08/1994 அன்று மீண்டும் பலாலி விமானப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிற்குத் தலைவர் திட்டமிட்டார்.


52-  19/09/1994 கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினியுடன் 4 பேர் சென்று பாரிய சாதனை படைத்தனர்.


53-  10/03/1995 அன்று மூத்த தளபதி சொர்ணம் அவர்கட்கும் பெண் போராளிகளில் ஒருவரான ஜெனி அவர்கட்கும் திருமணம் நடந்தது.


54-  28.03.1995 நடந்துகொண்டிருக்கையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்தது.  இளவரசன் அண்ணையை யாரோ சுட்டுப் போட்டு ஓடி விட்டார்கள்.



55-  தலைவரின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட புலனாய்வு அணி எப்படி உருவாக்கப்பட்டது.


56- 09/07/1995 அன்று அதிபர் சந்திரிக்கா தலைமையிலான அரசு நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது விமானத் தாக்குதல் மேற்கொண்டது.


57-  20/07/1995 அன்று கொக்குத்தொடுவாய் முகாம்தாக்கி 180 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.


58-  22/09/1995 அன்று அதிபர் சந்திரிக்கா தலைமையிலான அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலையை மேற்கொண்டது. அது நாகர் கோவில் பாடசாலைமீது மேற்கொள்ளப் பட்டது. 


59-  30/10/1995 விடுதலைப் புலிகளின் கோட்டையாகயிருந்த வலிகாமம் இடப் பெயர்வு அன்றுநடந்தது.



யாழை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விடுதலைப்புலிகள் த்றிஸ்ரார் என அழைக்கப்படும் இந்தியாவின் துணைக்குழுவான உறுப்பினர்கள் ஒரு  சிலருக்கு மட்டும் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஏனையவர்களிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் சமுகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேகாலப்  பகுதியில் யாழ்ப்பாணத்தில் எமது போராட்டத்திற்கு மறைமுகமாகச் செயல்ப் போட்டுக்கொண்டிருந்த  இளைஞர்கள்  யுவதிகள் மற்றும் சம்பந்தப்படாத புதியவர்களும் இயக்கத்தில் இணைந்து கொண்டேயிருந்தார்கள்.  இவர்கட்கு மணியன் தோட்டம் மற்றும்  கோட்பாக் என்ற இடத்தில்  இவர்களிற்கான ஆரம்ப இராணுவப்  பயிற்சி நடந்துகொண்டேயிருந்தது. 

24/03/ 1990  இந்திய  இராணுவம்  இலங்கையை விட்டு முழுமையாக  வெளியேறிச் சென்றது.  ஆனால்  இந்திய  இராணுவத்தால் கைது செய்யப்பட்ட  கனிசமான விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனப் பலர் இந்தியா இராணுவத்திடம்   கைதிகளாக இருந்தார்கள்.  இவர்களில் ஒரு சில போராளிகளை மட்டும் கண்துடைப்பிற்காக  விடுதலை செய்து விட்டு ஏனையவர்களை பிரேமதாசா அரசிடம்  ஒப்படைத்துவிட்டு  இந்திய இராணுவம்  வெளியே சென்றது. 

அதில் விடுதலையானவர்களின்  விபரம்.  இவர்கள் இந்திய  இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது தலையாட்டிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் . என்பதும் அதில் மூன்று  பேராளிகளைக் குறிப்பிடுகின்றேன் கேணல் தமிழேந்தி மூத்த போராளி சுக்குளா அரசியல்துறையைச் சேர்ந்த தங்கன் என்பவர்கள் அதில் அடங்குவர். 

ஆனால்   விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு கைதிகளாகயிருந்த அனைத்து இந்தியச் சிப்பாய்களும் எவ்வித நிபந்தனையும் இன்றி அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இந்திய  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

எனவே  இந்திய இராணுவத்தின் கதை இன்றில் இருந்து முற்றாக முடிந்து விட்டது.  இனி அவர்களின் மாற்றுக் குழுக்களிற்கு என்ன நடந்தது என்று முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.


25/03/1990  தலைவர் யாழ்ப்பாணம் வந்தார். பிரேமதாசா விடயத்தை எப்படிக் கையாண்டார்.


25/03/1990  ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் திரு சொர்ணம் அண்ணை உட்பட 40 போராளிகளுடன் அவரின் மறைவு இருப்பிடமான புனிதபூமி மணலாற்றுக்காட்டில்   இருந்து  நாலு வாகனங்களில்  ஏறி யாழ்ப்பாணம் நோக்கிய அவரின்  பயணம் ஆரம்பம் ஆனது.  அவர்கள் கொம்படிக்குச்   சென்றபோது நேரம் இரவு பத்து மணி ஆகி விட்டது.  அதனால் வாகன வெளிச்சத்தின்  உதவியோடு தலைவர் வேட்டை ஆடிக் கொண்டு சென்றார்.  சுமார் 20 முயல்களை அவர் சுட்டார். அவ் முயல்களையும்  ஒரு உரப்பையில்  எடுத்துக்கொண்டு முதலாவதாகச் சாவகச்சேரியில் இருந்த 1-1-  முகாமிற்குச் சென்றார்கள்.  அங்கே சென்றதும்  நின்ற போராளிகளிடம் முயல்களை சமைக்கக் கொடுத்து விட்டு தலைவர் வந்த களைப்பில் ஓய்வு எடுத்தார்.

அவரைப்  பின்தொடர்ந்து எங்களின் வக்கூஸ் அணி அதாவது 18வயதிற்கு குறைந்தவர்களான  நாங்கள் 15 பேரும் திரு கடாபி அண்ணையோடு யாழை நோக்கிச்  சென்று கொண்டிருந்தோம். கொம்படி ஊரியான் தரைவழிப் பாதையூடாக யாழைச்  சென்றடைந்தோம்.


அங்கே சென்றதும் யாழ்  சாவகச்சேரி பெருங்குளச் சந்தியில் அமைந்திருந்த  ஒரு வீட்டில் விடப்பட்டோம். ஆனால் தலைவரோடு நிற்கும்  போராளிகளிற்கும்  எமக்குமான தொடர்பை  திரு. கடாபி அண்ணை  அவர்கள் எமக்கு ஏற்படுத்தித்தரவில்லை . அவர் எங்களை இறக்கியதும் உடனே வன்னிக்குத்  திரும்பிவிட்டார்.


அதில் சென்ற சிலருடைய பேரைக் குறிப்பிடுகின்றேன், அதன் அணித் தலைவர் சந்தோஸ் உதவித் தலைவர் போராளி நிமால், போராளி சரவணன், போராளி ரகீம், கப்டன் மோகன சுந்தரம், கப்டன் கண்ணாளன்,  மல்லி,   லெப் லெனின்,  கப்டன் காசன்,  தாயாபரன், போராளி திவாகரன், நான் .  

 இதில்  சந்தோஸ், ரகீம்,  சரவணன் மற்றும் என்னுடன் நாலு பேர் இந்தப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடிருந்தார்கள். ஏனையவர்கள் மரணித்து விட்டனர்.

மூன்று  நாட்கள் அங்கே இருந்தோம். எங்களோடேயிருந்த மோகனசுந்தரம் மற்றும் சந்தோஸ் இருவரும் அவர்களின் வீடான வல்வட்டித்துறை சென்று அரிசி, மா, சீனி,  புண்ணாக்கு,  பொரிமா என நிறைய உணவு கொண்டு  வந்து  சேர்த்தார்கள்.  அனைவரும் சாப்பிட்டோம்.   அடுத்த நாள் காலையில் கிராமத்தைச் சுற்றிப்பார்போம் என நானும் திவாகரனும் நடந்து கொண்டே போனோம். அப்பொழுது போராளி காளி என்பவரைச்  சந்தித்தோம். அவர் தான் மட்டுமாவட்டம் எனத் தன்னை அடையாளப் படுத்தினார்.


அவரிடம் பிரச்சனையைச் சொன்னோம். நீங்கள் எங்களிற்கு உரிய ஆட்கள் தான்என நான் நினைக்கின்றேன் .நாங்கள் புனிதபூமியில் இருந்து வந்தோமென  எங்களிடம் கூறினார். நாங்கள் உதயபீடத்தில் இருந்து வந்தோமென நாங்கள்  அவருக்குத் தெரியப்படுத்தினோம். அதையடுத்து எங்களிற்குத்  தானாகவிளங்கி விட்டது. இவர்கள் தலைவரோடு நிக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொண்டோம். இவர் சென்றதும் ஒரு சில மணித்தியாலம் கழித்து சொர்ணம் அண்ணை எங்களின் வீட்டிற்கு வந்து எங்களோடு கதைத்தார்.

எக்காரணம் கொண்டும் பொது மக்களின் விடுகளிற்குப் போகக்கூடாது அவர்களோடு பேசுவதற்கு முயற்சி செய்யக் கூடாது எனவும், அவர்களைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். முறைக்கக் கூடாது எனவும், அனுமதி இல்லாமல் உங்களின் சொந்த வீடுகளிற்குக்கூட  போகக்கூடாது  எனவும், எங்களிற்குத் தெரியப்படுத்தி விட்டு அவர் சென்றார்.


அடுத்த நாள் உணவு மூன்று  நேரமும் எங்களின் முகாமிற்கு வந்து கொண்டேயிருந்தது.  தொடர்ந்து தலைவரின் பாதுகாப்பு மற்றும் சண்டை இப்படித்தான் எங்களின் காலம் நகர்ந்தது.

1990 ஆண்டு  இதே காலம்தான் தலைவரோடு நாங்கள் சாவகச்சேரி, கரவெட்டி மற்றும் பளையென மாறி மாறி வாழ்ந்த காலம் .

இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் கலை பண்பாட்டுக்கழகம் தலைவரால் உருவாக்கப்பட்டது. கலை பண்பாட்டுக் கழகத்திற்குத் தலைவரால் முதன் முதலில் விடப்பட்ட போராளிகள் தலைமைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை. லெப்கேணல் தவா, போராளி நல்லாம்பி, மகளீர் படையணியில் போராளி சீத்தா  தலைமையில் கப்டன் கஸ்தூரி, போராளி ஞானகி,   உட்பட மொத்தம் 07 போராளிகள் கலை பண்பாட்டுக் கழகத்திற்கு தலைவரால்  விடப்பட்டனர்.

இதில் இறுதி யுத்ததின்போது போராளி சீத்தா சரண்டர் அடைந்த பின் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார், ஞானகி இப்புத்தகம் எழுதிய  காலத்தில் உயிரோடிருந்துள்ளார். 


புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமையில் சிறந்த முறையில் நடந்துகொண்டுயிருந்தது.  இவர்கள் தெருக்கூத்துக்கள் வைத்து இளைஞர் யுவதிகளைப் பெருமளவில் இணைத்துக் கொண்டிருந்த  காலம்அது.  இதே காலம் தமிழகத்தில் இருந்து தேனிசைச் செல்லப்பா அவர்களின் இசைக்குழு தமிழீழம் வந்து யாழில் உள்ள வலிகாமம் வடமராட்சி, தென்மராட்சி உட்பட தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இசைக்கச்சேரி  வைத்தனர்.


காசியண்ணையின் உணர்ச்சி வரிகளைப் பாடலாகப்  பாடினார் தேனிசைச் செல்லப்பா இந்த இசை நிகழ்விற்குப்  பின்னர்தான் தமிழீழத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் அதிக உணர்வு ஏற்பட்டு ஐயாயிரத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் எமது இயக்கத்தில் இணைந்தார்கள்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகயிருந்தது.



தேனிசைச் செல்லப்பா அவரின் மகள் சொர்ணலாதா  இவர்களும் முக்கிய பங்குவகித்தார்கள் என்பதை எமது தமிழீழ மக்கள் மறந்து விடக்கூடாது. 

இது மட்டுமல்ல வெளிநாடுகளில் சென்று  இசைக் கச்சேரியூடாக எமது விடுதலைப்  போராட்டத்திற்கு நிதிகளைப்  பெற்றுத் தந்தவர்கள் என்பதையும் ஞாபகப்படுத்துவதோடு இதன் செயற்பாட்டிற்கு  மூத்த உறுப்பினர்  ஒருவரின் பங்களிப்பு இருந்தது எனக் குறிப்பிட்டு இருந்தேன்.

 இவர் அதே காலப் பகுதியில் பெண்களுடனான தொடர்பு ஏற்பட்டது என உறுதிப்படுத்தப்  பட்டமையால், பொன்தியாகம் அப்பா, பொட்டுஅம்மான் இவர்கள் இருவரும்  சாவொறுப்பு வழங்க வேண்டும் எனத் தலைவருக்கு  அழுத்தம் கொடுத்த போதிலும் எமது விடுதலைப்  போராட்டத்தில் ஆழணி கூடிய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 ஆண்டு காலப்பகுதியில் இருந்து பெருந்திரளான இளைஞர்களைப் போரட்டத்திற்கு இணைத்தது மட்டும் அல்லாமல் அம் மாவட்டத்தில் அரசிற்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.  அதனால் இவருக்கு சாவொறுப்பு வழங்கினால் ஒரு மாவட்டத்து போராளிகளின் மற்றும் அந்த மாவட்ட மக்களின் மன நிலை பாதிக்கப்படும் என்பதற்காகத் தனது ஆளுமையைப்பயன்படுத்தி தலைவர் அவர்கள் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கினார். பின் அவர் அயல் நாடு ஒன்றிற்குப்  போய் வாழ்ந்ததாக நாம் அறிந்துள்ளோம்.

இதைத் தொடர்ந்துஇவ் இடத்திற்கு பொறுப்பாளராக  புதுவை இரத்தின துரை   அவர்கள் தலைவர் அவர்களால் நியமிக்கப் பட்டார்.



 தமிழீழ விடுதலைப் புலிகளின்  கலை பண்பாட்டுக் கழகம்.ஒரு முக்கிய பிரிவாக இருந்தது. அது தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டது. அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை இருந்தார்.


கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன. 1995 இல் நல்லூரில் மூன்று நாட் கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல் திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டதாகும். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், வாசல் ஒவ்வொன்றும் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் செம்மணி போன்ற கவிதைத் தொகுப்புக்களையும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியிட்டது. கடைசிக் காலத்தில் போராளிகளின் கவிதைகளையும் புதுவை அண்ணை வீடியோக்களாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை அது பெற்றது.



இறுதி 2009 மட்டும் இவரே இதன் பொறுப்பாக இருந்தார். இறுதி யுத்தத்தின் போது சரண்டர் அடைந்த பின் எதிரிகளால் இவர்  கொலை செய்யப்பட்டுள்ளார். 

.1990/4 ம் மாதம் அப்பொழுது வடமராட்சி கரவெட்டியில் எமது பாசறை இருந்தது. வயல்வெளிகளும் அடர்த்தியான மாமரங்களும் எங்களுடைய வீட்டை  அழகுபடுத்திய வண்ணம் இருந்தது.


 அக்காலப்  பகுதியில்  எங்களுடைய உணவுத் தேவையைபூர்த்தி செய்வதற்காக அவ்விடத்தைச்  சேர்ந்த தேவி அக்கா சமைத்து  வைப்பார். நேரத்திற்கு நேரம் போய் உணவை எடுத்துக்  கொண்டுவந்து அனைவரும் பரிமாறுவோம். எங்களிடம் 50 கலிபர் இருந்தது.  அது தலைவரின் பாதுகாப்பிற்கு உரியது அதற்கு யக்சன் என்பவர் பொறுப்பாக இருந்தார்.

எங்களிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் டேவீற்ட்  என்ற முகாமில் தலைவர் இருந்தார். அடிக்கடி காவல் கடமைக்காக அங்கே நாங்கள் சென்று வருவோம். 3/5 நாட்கள் மட்டுமே ஒரே இடத்தில் தங்குவோம்.  அதற்கு மேல் நிறையக் காலம் ஒரே இடத்தில் தங்குவது இல்லை.  ஏனெனில் பாதுகாப்புக்  காரணமாகக் அடிக்கடி இடங்களை மாற்றுவது எமது கடமையாகயிருந்தது. அவ்வேலையை தலைவரே தீர்மானிப்பார். அக்காலப் பகுதியில் எமக்கு ஒரு கறியும் சோறும் அல்லது ஏதாவது ஒரு சாப்பாடு உடன் ஒரு  கறிதான் வரும்.  அதில் மாட்டு இறைச்சி சாப்பிடாத போராளிகள் இருந்தார்கள்.  அதில் நானும் ஒருதன் அப்படி மாட்டுக்கறி  வரும்போது நாங்கள் சீனி போட்டு அவ்வுணவைச் சாப்பிடுவோம்.


 அக்காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி  சலன்ராஜ் இருந்தார். அவர் மாடு சாப்பிடுவது இல்லை. அனைத்துப் போராளிகளும் அழுத்தம் கொடுத்து அன்று அவரை மாடு சாப்பிட வைத்து விட்டார்கள்.  தீவிர கடவுள் நம்பிக்கை உடைய அவர் அது பற்றி அவர் எழுதிய கடிதத்தில்   நான் மாடு சாப்பிட்டு விட்டேன்.  என்னைக்  கடவுள் மன்னிக்க மாட்டார்.  அதனால் நான் கடவுளிற்குத் துரோகம் செய்து விட்டேன். அதனால் நான் குப்பி கடித்துச் சாவடைகின்றேன். எனது சாவிற்கு இயக்கம் தான் பொறுப்பு எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு குப்பி கடித்து அவர் சாடைந்தார்.  அது சமாதானக் காலம் என்பதால் அவரின் வித்துடல் வாகனத்தில் ஏற்றி மட்டக்களப்புக்குக்  கொண்டு சென்று அவரின் பெற்றோரிடம் அவ்வித்துடல்   ஒப்படைக்கப்  பட்டது,


இதை ஆழமாகச் சிந்தித்த  தலைவர் அன்றில் இருந்து இரண்டு கறியென சட்டத்தை உருவாக்கினார்.   அதாவது  ஒரு இறைச்சி என்றால் கத்தரிக்காய் அல்லது பருப்பு இரண்டாவது கறி சமைத்தே  ஆக வேண்டும் என்பதே அதின் கட்டுப்பாடாகயிருந்தது. இது இயக்கத்தின் இறுதி  வரை இந் நடமுறையிருந்தது.

அதே வடமராட்சியில் நவண்டி  என்ற இடத்தில் அடுத்த முகாமிருந்தது. அங்கே செழியன்  பொறுப்பாயிருந்தார்.   மிகவும் ஒரு சிறந்த  நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப்  பழங்களும் நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்துப்  போராளிகளுக்கும் வேண்டிவந்து வழங்குவார்.

 அது தலைவருற்கு மிகவும்  பிடித்த  செயலாயிருந்தது. சில நேரங்களில்  தலைவரே  சொல்வார் பொடியல் சோர்வாகயிருக்கின்றார்கள் செழியன்ற  இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்.  அதே காலப்பகுதி   20/05 /1990  சாவகச்சேரியில்  1-1- மற்றும்   77   என்ற முகாங்களில் மற்றும் பளையில் 7,3 என அழைக்கக்படும்  சுவாஸ்  தோட்டத்திலும் தலைவர் தங்கும் இடங்களாகயிருந்தது.    3-4-  அல்லது  ஒருவராத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிக்காமல் சூழற்சி முறையில் மாறி மாறித்  தலைவர் தங்குவார்.  இது இப்படி இருக்க........

10/06/1990 அதிபர் பிரேமதாசா விடுதலைப் புலிகளிற்கு எதிரான இரண்டாம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்தார். 

அடுத்து அவர் தாக்குதலை ஆரம்பித்தார்.  மீண்டும் பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கான   காரணம் என்னவென்றால் இந்திய இராணுவம் இலங்கையில் இருக்கும்போது அவர் பேசிய  பேச்சு அவர் தந்த வாக்குறுதிகள் உண்மை போல்தென்பட்டாலும் ஆனால் இந்திய இராணுவம் வெளியேறியதும் நடைமுறைக்கு சாத்தியப்படாத கோமாளித்தனமான செயல்களை அவர் பயன்படுத்தினார்.

அதாவது  தமிழர்களின் தீர்வு தொடர்பாக விடுதலைப்புலிகள் போய் பிரேமதாசாவோடு பேசியபோது அவர் சொன்ன விடயம் எதிர்பாராத ஏமாற்றம் ஒன்றை எமக்கு அளித்தது. அவர் சொன்ன விடயம் எனக்கு இரண்டாவதாக பிரபாகரன் இருக்கட்டும்.  இலங்கையினுடைய ஆலோசகராகப்  பாலசிங்கம் இருக்கட்டும்.  இலங்கை என்றால் ஒரு நாடுதான் எனத் தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டினார் பிரேமதாசா.

அதைவிடக்  கிழக்கில் வீரமுனை மற்றும் கொக்கட்டிச்சோலை இரு இடங்களில் திட்டமிட்டு இராணுவத்தை அனுப்பி சுற்றிவழைத்து ஏதும் அறியாத அப்பாவிகளான குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடுயின்றி இரு இடங்களிலும் அக்கிராமங்களில் வாழ்ந்த அனைவரையும் சுட்டுக்கொலை செய்ததோடு ஆயிரத்திற்கு  மேற்பட்ட தமிழர்களை கடத்திக்  கொண்டுபோய் மறைவிடங்களில்  வைத்துக் கொலை செய்தது, இப்படித்தான் இவரின் இனவழிப்பு தொடர்ந்த வண்ணம் இருந்தது.


உண்மைக்குப் புறம்பான  இவரின் கதைகளை  இனவெறிகொண்ட பெரும்பாண்மை  சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எனவே நடைமுறைக்கு சாத்தியப்படாத  பைத்தியக்  காரத்தனமாக பிரேமதாசா  பேசவெளிக்கிட்டார். தமிழர்களின் போராட்டம் தனக்கோ தனது அரசாங்கத்திற்கோ எந்தப் பயமும் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

அதை விட மகாவலி வலையம் என்ற போர்வையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். தமிழர்களின் தாயக விடுதலையை இலக்காகக்கொண்டு அதை மீட்பதற்கு தலைமை தாங்கிப்போராடும் அமைப்பான  விடுதலைப் புலிகளை முழுமையாக   அழிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தை  நவீன  மயப்படுத்தியதோடு  இராணுவத்தின் தொகையை பெருக்குவதற்கு அவர் கூடுதலான ஆர்வம் காட்டினார்.


அதை விட திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் பஸ்சில் பயணித்தவர்களை வழிமறித்து தமிழர்களை மட்டும் பிரித்து எடுத்து நூற்றுக்கணக்கான  தமிழர்களை வாளால் வெட்டிக்  கொலை செய்தமை. எனத் தமிழர் விரோதப்போக்கு கூடுதலாக அவரிடம் இருந்ததை நாம் அறிந்தோம். இதனால் அவரைக்கொலை செய்ய வேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.


இருந்தும் கண்ணைக் கெடுத்த சத்திராதியும் கண் எதிரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு தொடர்ச்சியாக தமிழர் பகுதி மீது விமானத் தாக்குதல்,  திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என அவரின் மிலேச்சத்தனமான செயல் நடந்து னெண்டே இருந்தது. கடுமையான கோபம் அடைந்த நாம்  இருந்தும் பொறுமையாகயிருந்தோம்.



10/06/1990 ஆண்டு எமக்கும் அரசபடைகளிற்கும் சண்டை ஆரம்பமானது.  அதாவது இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.  தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படைகளிற்கும் சண்டையை ஆரம்பித்த  சில குறிகிய நாட்களில் மட்டக்களப்பிலே சண்டை ஆரம்பமானது .

அதே நேரம் சண்டை தொடங்கி சில குறிப்பிட்ட வாரத்தில் மட்டக்களப்பில் எமது இயக்கம் சுமார் 800 சிறிலங்கா பொஸிசைக்  கைது செய்ததோடு பெரும் தொகையான ஆயுதம் மற்றும் அவர்களிற்கு மாதம், மாதம் கொடுக்கும் பெரும் தொகையான பணம் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து அங்கே இருந்த கும்புறுமுலை,  கழுவன்சூடி  எனப் பலஇராணுவ முகாம்களைச் சுற்றி வளைத்துத்  தாக்குதல் நடத்திக்கொண்டேயிருந்தார்கள். விடுதலைப் புலிகள்.  இது நடந்துகொண்டிருக்கப்  பல திட்டங்களை தலைவர் போட்டுக் கொண்டேயிருந்தார்.  தொடர்ச்சியாக உயர்நிலை தலைவர்களோடு ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். 




11  /06/1990 தலைவர், மாத்தையா சந்திப்பு

 அதனால் யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.

அதனால் மாத்தையாவைச்  சந்தித்து அடுத்த கட்டம் தொடர்பாக சில வேலைகளை செய்ய வேண்டும் எனத்  தலைவர்  சிந்தித்தார்.

அதே வடமராட்சியில்  நவண்டி  என்ற இடத்தில் அடுத்த முகாமிருந்தது. அங்கே செழியன் பொறுப்பாயிருந்தார். மிகவும் ஒரு சிறந்த  நிர்வாகியாக அக்காலத்தில் அவர் தலைவரால் அடையாளம் காணப்பட்டார். ஏனெனில் எங்கையாவது சென்று பெரிய கப்பல் வாழைப்பழங்களும், நல்ல உணவுகளும் பாதுகாப்பில் உள்ள அனைத்துப்  போராளிகளுக்கும் வாங்கி வந்து வழங்குவார். அது தலைவருக்கு மிகவும்  விருப்பமாகயிருந்தது.


 சில நேரங்களில் தலைவரே  சொல்வார் பொடியல்  சோர்வாக  இருக்கின்றார்கள் செழியன்ற இடத்திற்கு ஒரு தடவை போகத்தான் வேணும் என அவரே சொல்வார்.. அதே காலப்பகுதியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடர்பாகக்  கதைப்பதற்கு மாத்தையாவைச் சந்திக்கத் தலைவர் தீர்மானித்தார்.

 அது செழியன் அவர்களின் முகாமிலையே ஏற்பாடு செய்யப்பட்டது.  தொடர்ந்து தலைவரோடு  அவ்முகாமிற்குச் சென்றோம்.   அடுத்த நாள் காலை பத்து மணி முகாமிலுள்ள முன்னரங்கக்  காவல் அரணில் கடமையில் நான் நிக்கின்றேன். ஒரு கயேஸ் வெள்ளை வான்வெளியே வந்து நிக்கின்றது. றோட் கரையோரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு உங்களின் பெயர் என்ன என்று அவர்களிடம் கேட்டேன்.  அவர்கள் பெயரைச் சொல்லவில்லை உங்களுடைய பொறுப்பாளரிடம் கேளுங்கோ  எனப் பதில் வந்தது.  இரண்டு பேர் என்றால் ஒருதர் போய்க் கேட்டு வரலாம் ஆனால் தனியாக நிற்பதால் அது முடியாமல் இருந்தது. அவர்கள் நான்கு பேரையும் வானில் இருந்து இறக்கி உள்ளே இருக்கும் வாங்கில் இருத்தினேன். ஆனால் அதை ஒரு சில மக்கள் பார்த்துக் கொண்டே  போனார்கள்.



அந்தச் செய்தி காட்டுத்தீ  போல் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் என நினைக்கின்றேன். அந்த மாதத்தில் தான் தமிழர்களின் கொண்டாட்டமான கார்திகை விளக்கீடு வருவது வழமை. எனவே அந்த விளக்கீட்டிற்குச்  செய்த உணவுகளான மோதகம், அவல் என நிறைய ஓலைப் பெட்டியில்  மக்கள் கொண்டு  வந்த வண்ணம்  இருந்தார்கள்.  கொண்டு   வருபவர்கள் "மாத்தையா அண்ணைக்கு கொடுங்கோ" என சொல்லி விட்டுப் போகின்றார்கள்.  அப்பொழுது தான் எனக்குத் தெரியும் மாத்தையா அண்ணையைத் தான் நாம் வைத்திருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொண்டேன்.



அடுத்து வெளியே சென்ற சொர்ணம் அண்ணை சிறிது நேரத்தில் உள்ளே வந்தார். மாத்தையா அண்ணையை ஏன் உள்ளே விடவில்லை எனக் கேட்டு எனது கன்னத்தில் அறைத்தார்.  அறைந்துவிட்டு அவரே மாத்தையா அண்ணையைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்று தலைவரைச்  சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டு பிறகு என்னை சந்திப்பதற்கு வந்தார்.


மாத்தையா அண்ணையை  உமக்குத்  தெரியாதா? எனச்  சொர்ணம் அண்ணை என்னிடம் கேட்டார்.  அவரின் பெயர் தெரியும் ஆனால் ஆளைத் தெரியாது என அவரிடம் சொன்னேன். நீ அவர்களிடம் பேரைக் கேட்கவில்லையா? என என்னிடம் கேட்டார்.  அதற்கு நான் அவர்களிடம் கேட்டேன் அவர்கள் எனக்குச் சொல்லவில்லை எனப்  பதிலளித்தேன்.   முன்னர் ஆயிரம் தோப்படிக்கச்  சொன்னவர் இதைக் கேட்டதும் தோப்படிக்க வேண்டாம் என்று என்னிடம் சொன்னார். பின்னர் இதையறிந்த தலைவர் செழியனை என்னிடம் அனுப்பியிருந்தார்.  நடந்த பிரச்சனைகளைத்  தெளிவாகச் செழியனிடம் சொன்னேன்.  அதைக் கேட்டுத் செழியன் போய் விட்டான்.   தகவல் தலைவருக்குச்  சென்று விட்டது.


 அப்பொழுது பாதுகாப்புப் பொறுப்பாளராக துசி அம்மான் இருந்தார். உடனே துசி அம்மான் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதோடு அவ் இடத்திற்கு திலிப் அண்ணை நியமிக்கப் பட்டார். திலிப்அவர்கள் மிகவும் ஒரு திறமையான போராளி இந்தியாவில் இருந்த பத்மநாபாவைக் கிட்டக்கூட நெருங்க முடியாமல் இருந்த காலமது . அக்காலத்தில் குறிப்பிட்ட சில போராளிகளோடு தானும் சென்று திறமையான முறையில் பத்மநாபாவிற்குப்  மரண தண்டனை வழங்கப்பட்டது. பத்மநாபா  என்பவர்  EPRLF  அமைபின் தலைவர்.  இவர்  எமது இயக்கத்தை அழிப்பதற்குப்  பல நடவடிகள் செய்தவர் என்பதை எம்மால் மறந்து விட முடியாது. இப்படியான திறமையான வேலைகளைச் செய்தமையால் திலிப் அண்ணைக்கு எமது இயக்கத்தில் ஒரு மதிப்பு  இருந்தது. 

 திலிப் அவர்கள்  17/05/2009  காணமல் போய்விட்டார்.    செழியன் இவர் அதே ஆண்டு ஏதாவது ஒரு பிழை  விட்டிருக்கின்றார்.  அது இயக்கத்திற்குத் தெரியக் கூடாது என்பதற்காகவே  அதே முகாமில் தன்னைத்தானே சுட்டு சாவடைந்தார். அவரின் வித்துடல் சொர்ணம் அண்ணையால் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.


15 /06/1990  மேஜர் குணா இவரும் தலைவரின் பாதுகாப்பிற்கு உரிய போராளிதான் செக் மேக் இந்திய இராணுவதின் தலைவரைப்  பிடிப்பதற்கான பாரிய நடவடிக்கை மேற்கொண்ட இந்திய இராணுவத்தின் நடவடிக்கையை முறியடித்து அச்சண்டைக்கு வந்த இராணுவம் பேய் அடிக்குது என  ஓடிய கதையை எமது மக்கள் மறக்க மாட்டார்கள். 

 இவர் சண்டையிட்ட  வீரத்தைக் குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது குணா அண்ணை நெல்லியடிக்கு வந்தார். நீங்கள் யாழ் கோட்டை சண்டைக்காகப் போகப் போகின்றீர்கள் என சொல்லி 01 யக்சன்02 நான் 3 லெனின் 4 திவார் 5சரவணன் என நாங்கள் சண்டைக்குச் செல்லத் தயார் ஆனோம்.  எங்களுடையே 50 கலிபர் முகிலன் என்பவரிடம்  கொடுக்கப்பட்டது.  நான் மட்டும்T 81 துப்பாக்கி வைத்துயிருந்தேன். ஏனையோர்   அனைவரும் நிராயுதபாணியாகயிருந்தார்கள்.  அனைவரையும் கூட்டிக்கொண்டு   குணாஅண்ணை  மானிப்பாய் சென்றார்.

அங்கேதான் கப்டன் கிறோராஜ் இருந்தார். சென்றதும் ஒரு புது வெல்ஜியம் 50 கலிபர் எமக்குத் தரப்பட்டது.  அதற்கு யக்சன் கண்ணராகவும் உதவி லெனின் இருவரையும் விட்டு நானும் திவாகர், சரவணன்  நாங்கள் மூவரும் கண்ணிற்கான பாதுகாவலர்கள் என குணா அண்ணையால் சொல்லப்பட்டது. அடுத்து எங்களிற்கு ஒரு பிக்கப் வாகனமும் தரப்பட்டு அதற்கு றைவராக கிறோராஜ் நியமிக்கப்பட்டார்.


அக்காலப்  பகுதியில்தான் கடல்புறா என்ற பேரில் கேணல். சங்கர் அண்ணையின் தலைமையில் கடல் நடவடிக்கைள்  இருந்தது .  அதன் நடவடிக்கைகளை சிறப்புத்தளபதி  கடாபி அவர்கள் கண்காணித்து வந்தார்.    அதனால் நானும் குணா அண்ணையும் கரவெட்டி வந்தோம். அன்று மதியம் சாப்பிட்ட பின்னர் குணா அண்ணை மற்றும் கடாபி அண்ணை இருவரும் தலைவரோடு  கதைத்துவிட்டு வெளியே வந்தார்கள். வந்ததும் கடாபி அண்ணை நான் குணா அண்ணை மூவரும் கடல்பகுதிகளின் பாதுகாப்புத் தொடர்பாகவும்  யாழ் மாவட்ட வான் கடல் பாதுகாப்புப் பொறுப்பாளராக குணா அண்ணையிருப்பார் என்பதை அவர்களிற்கு அறிமுகம் படுத்தவே அங்கே சென்று கொண்டியிருந்தோம். அது இரண்டு பிற்பகல் இருக்கும்.

இக்காலப்பகுதியில் கடல் நடவடிக்கைகளிற்கு கடல்புறா என்ற பேரில் தளபதி கடாபி அவர்களே பொறுப்பாக இருந்தார்.


அங்கே சென்றதும் அரைக் காற்சட்டையோடும், முழு காற்சட்டையோடும் சுமார் 30 போராளிகள் காணப்பட்டார்கள். அவர்களின் கடல்ப் புறா முகாம் பருத்தித் துறையில் அமைந்திருந்தது. முதலில் கடாபி அண்ணை கடல் புறவின் கடமை தொடர்பாகவும் அவர்களின் கட்டுப்பாடு தொடர்வாகவும் பேசிவிட்டு ஆகாய கடல் வளி பாதுகாப்புப் பொறுப்பாளராகத்  தளபதி குணா அண்ணையிருப்பார் எனவும் . ஏதாவது தரையிறக்க  முயிற்சி  இராணுவத்தால் நடப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் குணா அண்ணைக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கடாபியண்ணை அவர்களிடம் தெரியப்படுத்தினார்.

தொடர்ந்து குணா அண்ணை சிறிது நேரம் அவர்களோடு கதைத்தார். அது முடிந்ததும் கடாபி அண்ணையை நெல்லியடியில் கொண்டு இறக்கி விட்டு நானும் குணா அண்ணையும் மானிப்பாயை நோக்கிச் சென்றோம்.  அப்பொழுது யாழ் மாவட்டம் அனைத்து இடங்களிலும் எம்மால் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டது. எம்மிடம் இருந்த 50 கலிபர் ஜீப்பியம் அனைத்து ஆயுதங்களும் பிக்கப் வாகனங்களில் பூட்டி ஆகாயம் கடல் ஓரங்கள் கடுமையாக அவதானிக்கப்பட்டன.

அதே நேரம் சண்டை தொடங்கி சில குறிப்பிட்ட வாரத்தில் மட்டகளப்பில் எமது இயக்கம் சுமார் 800 சிறிலங்கா பொஸிசைக் கைது செய்ததோடு பெரும் தொகையான ஆயுதம் மற்றும் அவர்களிற்கு மாதம் மாதம் கொடுக்கும் பெரும் தொகையான பணம் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.  என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

அரசாங்கத்திற்குக் கடுமையான தோல்வி ஏற்பட்டமையால்  அனைத்து மாவட்டங்களிற்கும் கூடுதலான படைகளை அனுப்பியது சிறிலங்கா ஆரசாங்கம் . அப்பொழுது1990 / 6 ம் மாதம் இறுதிப்பகுதி மேஜர் விவேகன் மாஸ்டர்தலைமையில் யாழ் காங்கேசன்துறை குவாட்டேஸ் முகாமையைத்  தாக்குவதற்காகத் தாயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

அப்பொழுது எங்களை1.4  படையென்றே போராளிகள் அழைப்பார்கள். எங்களோடு வந்த ஜெமிலன் இந்தியத் தயாரிப்பான "காள்கஸ்ரோ" வைத்துயிருந்தார். நாங்கள் யக்சனின் தலைமையில் 50 கலிபரைச் சண்டைக்கு உரியவாறு பொருத்தியிருந்தோம்.  அதற்கு மெயின் கட்டளை அதிகாரியாக மேஜர் குணா அவர்களே இருந்தார். முற்பகல் 10.30 மணிக்கு சண்டை ஆரம்பம் என்று எங்களிடம் சொல்லப்பட்டது.

அதைத் திடீர் என 3 பிற்பகல் என மேஜர் விவேகன் அவர்களால்  மாற்றப்பட்டது. அதற்கான விளக்கம் பகல் ஆனால் ஆயுதங்களை எடுப்பது இலகுவாகயிருக்கும் என எங்களிடம்  சொல்லப்பட்டது. எல்லோரும் தாயார் நிலையில் இருந்தோம். 2.30 பிற்பகல் இரவு மேஜர் விவேகன் அவர்கள் பைனாக்குளர் ஊடாகக் கடற்கரையை பார்வையிடுகின்றார். அதைப் பார்த்தபின்னர் எங்களிடம் அவர் வந்து சொன்னார். ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவம் தரையிறக்கப்பட்டுள்ளது. இனி எங்களால் இதைத் தாக்க முடியாதெனவும்  "நீங்கள் 50 கலிபரைக்கொண்டு முன்னே செல்லுங்கோ!"  எனவும் நான் வெடிமருந்துகள் இவ் இடங்ககளிற்கு வைத்து விட்டு பின்னால் வருகின்றேன் என எங்களிடம் சொன்னார்.

கப்ரன் கீறோராஜ் வாகனத்தைத் தாயார் படுத்த யக்சன் அவர்கள்50 கலிபரை வேகமாக்  களட்டி  வாகனத்திற்கு மேலே ஏற்றினார். அடுத்து வாகனத்தை கீறோராஜ் ஓட்டிச் செல்ல  நாங்கள் தச்சன் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அவ்வேளை  பாரிய வெடிச் சத்தம் ஒன்று எங்கள் காதில் கேட்டது. பின்னால் இருந்த நான் வாகனத்தைத் தட்டி உடனே வாகனத்தை  நிறுத்தினேன்.

நான் நிறுத்தியதும் வோக்கியில் தொடர்வு எடுத்த அவர்கள் எங்களை உதவிக்கு வருமாறு கேட்டார்கள். அதையடுத்து உடனே பழைய இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.  அங்கே சென்றதும்  ஒரு போராளியிடம் கீறோராஜ் அண்ணை விவேகன் மாஸ்ட்டரின் பிரச்சனையைத் தெளிவாகக் கேட்டார்.

அப்பொழுது வெடிமருந்துகளை வங்கருக்குள் வைத்துவிட்டுப் பின்னர் வெளியேறுவதற்குத்  தயாராக விவேகன் மாஸ்ட்டர் உட்பட நாங்கள் எல்லோரும் இருந்த வேளை ஆமி RPG அடித்து விட்டான். விவேகன் மாஸ்ட்டர் உட்பட நான்கு போராளிகள் வெடிமருந்து வைத்த வங்கருக்குள் புகுந்து விட்டார்கள். அவன் ஏவிய செல் அதே வங்கருக்குள் தான் வந்து விழுந்தது என எங்களிடம் சொன்னார்.

வங்கருக்குள் சென்று பார்த்தோம்.  4 பேரும் உடல் சிதறிக் கிடந்தார்கள். பின்னர் இரண்டு யூரியா பையில்  அவர்களின் சதைத்துண்டுகளை எடுத்துக்கொண்டு மானிப்பாய்க்குச் சென்று கொண்டிருந்தோம்.  அங்கே சென்றதும்  மேஜர் குணா அண்ணையோடு சென்று மானிப்பாய்  சுடலையில் அவர்களின் சதைத்துண்டுகளை அடக்கம் செய்தோம். சரியான இராணுவ அறிவு இல்லாத  காரணத்தாலே இவ் இழப்பு ஏற்பட்டதாக மேஜர் குணா அண்ணை எங்களிடம் சொன்னார்.

இதை முடித்து விட்டு நாங்கள் கோட்டையை நோக்கிச் சென்றோம். கோட்டையை தக்க வைப்பதற்காக சிறிலங்கா இராணுவம் ஹெலியில் இருந்து ரொயிலட் பீப்பாக்களையும், வெடிகுண்டுகளையும் கோட்டையைச் சுற்றி போட்ட வண்ணம் இருநந்தனர். அதனால் கோட்டை துர்நாற்றமாகயிருந்தது.

19/06 /1990 யாழ் கோட்டை முதலாவது சண்டை நடத்தப்பட்டது, 



 சண்டைக்குப் பொறுப்பாகக் கேடியிருந்தார். தளபதி மாத்தையா அண்ணையின் போராளிகள் கேடி தலைமையில் கூடுதலாகக் காணப்பட்டார்கள்.  அக்காலப் பகுதியில் யாழ் மாவட்டத் தளபதியாக வாணு அவர்கள் இருந்தார்.  அவருக்கு உதவியாகத் தமிழ்செல்வன் மற்றும் லெப்கேணல் ராஜன் அல்லது R.n இருந்தார்கள்.

அதில் எங்களின் பணி யாழ் வீரசிங்கம் ஹோட்டல் ஐந்தாவது மொட்டமாடிக்கு மேல் ஏறி 1000. 50 கலிபர் ரவை கோட்டையை நோக்கி அடித்துக்கொடுக்க வேண்டும். அப்பொழுது எங்களின் வாகன ஓட்டுனராகக் கிறோராஜ் இருந்தார். தலைமை பொறுப்பாளர் மேஜர் குணா. 50 கலிபர் இயக்குனராக யக்சன் இருந்தார்.

நாங்கள் 50 கலிபரால் கோட்டை உள்பக்கம் அடித்துக் கொடுக்க 30 பேர் கொண்ட ஆண், பெண் அணியினர் கோட்டை அகழிக்குள்ளால் இறங்கி பின் மேலே ஏறி கோட்டைக்குள் செல்லுவார்கள்.  இது தான் விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது. ஆனால் இதைத் திசை  திருப்புவதற்காகக்  கோட்டை முன்வாசலால் ஒரு  பகுதியாகப் போராளிகள் உள்ளே அடித்துக்கொண்டு இறங்குவார்கள். இது தான் திட்டமாகயிருந்தது.

அதில் தலைவரின் பாதுகாப்புக் கடமையில் நின்ற போராளிகளும் உள்ளே இறங்கும் அணியில் இருந்தார்கள்.  அதில் லெப் பூவதி தலைவரின் ஸ்பெஷல் பொடிக்காட் அடுத்து தலைவரின் பாதுகாவலர்களான கட்டன் அந்தோனி , லெப் சேரன் இதில் சேரனின் வித்துடல் வன்னிக் காட்டிற்குக்கொண்டுபோய் மேஐர் சோதியா அவர்களிற்கு வெட்டப்பட்ட கிடங்கில் அடக்கம் செய்யப்பட்டது. ஏன் இப்படி நடந்தது என்பதை முன்னர் குறிப்பட்டுள்ளேன் .

அடுத்து இருவரின் வித்துடல் கொடிகாமம் துயிலும் இல்லத்தில் எரிக்கப்பட்டது.  அதில் எங்களின் 50 கலிபர் மற்றும் அதே சண்டையில் வீரச்சாவு அடைந்த லெப்டினட் பூவதி அவர்களைக் குறிப்பிடலாம்.  அதில் எங்களின் பணி  கடினமாகயிருந்தது.  100 ரவை கொண்ட 10 ரவை பெட்டிகளை ஐந்தாவது மொட்டமாடிக்கு மேல் ஏற்ற வேண்டும். உடனே நான் அங்கே நின்ற யாழ் மாவட்ட போராளிகளின் உதவியைக் கேட்டு அனைத்துப் பெட்டிகளையும் விரைவாக மேலே ஏற்றினேன்.

அதையடுத்து இரவு 12. மணிக்கு கோட்டை மீதான சண்டை ஆரம்பித்தது ரவுன்ஸ் உயருகின்றது. "பதித்தடிடா   யக்ஸ்சன் "என இறுக்கமான கட்டளையை மேஜர் குணா அண்ணை வழங்கிக்கொண்டேயிருந்தார். வோக்கி அலறிக் கொண்டிருந்தது. யக்சன் நாலாவது பெட்டியை மாற்றி அடித்துக் கொண்டிருந்தான்.

திடீரென பேரிரைச்சலோடு  வொம்பர் என அழைக்கப்படும் "சியாமா சட்டி" விமானம் எங்கள் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியது. அது மயிரிழையில் மொட்ட மாடியை உரசிக்கொண்டு கீழே விழுந்து வெடித்தது. அதில் 7 போராளிகள் வீரச்சாவு அடைந்தாங்கள்.  நாங்கள் அவசர அவசரமாகக் கீழே 50 பது கலிபரை இறங்கி 50 கலிபரை வாகனத்தில் பூட்டிக்கொண்டு மேலால்வரும் விமானத்தை நோக்கிச் சுடுக்கொண்டேயிருந்தோம்.

அதே வேளை கோட்டை அகழிக்குள் இறங்கிய 22 போராளிகள் அதற்குள்ளே வீரச்சாவு அடைந்தார்கள். அவர்களின் பொடியைக் கூட எம்மால் எடுக்க முடியாமல் போய் விட்டது. மொத்தம் 29 போராளிகள் அச்சண்டையில் வீரச்சாவு அடைத்தார்கள். சண்டை தோல்வியில் முடிந்தது. இச்சண்டையில் எமது படையணிப் போராளி லெப்டினன்ட் பூவதி உட்பட மூன்று போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.




 அடுத்து இராண்டாவது முறை 05/08/1990  முதல் திட்டமிட்டது போல் ஒரு பாரிய நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.  அதில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பங்கு பற்றியது.  அதில் லெப். சங்கீதா தலைமையில் ஒரு அணி அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தது.  பல பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்த போதிலும் லெப்.சங்கீதா அவர்கள் கோட்டைக்குள்  நுழைந்தார்.

 இவர் தொடர்பாக அக்  காவலில் இருந்த  இராணுவீரன் எழுதும்போது அது ஒரு துணிச்சலான பெண் எங்களின் கோட்டையை அண்மித்து வந்து விட்டார்.  அதன் முகம் எனது தங்கையின் முகம் போன்று இருந்தது, அதனால் எனக்குச் சுடமனம் வரவில்லை.  எனக்குப் பக்கத்தில் இருந்த இராணுவ  வீரனே குண்டைக் கழட்டி அப்பெண்மீது எறிந்தான். அப்பெண் அவ் இடத்திலே சாவடைந்தார். 

 ஆனால் நாங்கள் அந்தப் பெண்ணின் உடலிற்குப் பக்கத்தில் கூடப்போய்ப் பார்க்கவில்லை ஏனென்றால் வெடிகுண்டுகள் வெடிக்கலாம் என்பதற்காக அப்பெண்ணின் உடல் அவ்விடத்திலே கிடந்து உருக்குலைந்து போனது. என குறிப்பிட்டிந்தார்.

 பின் கோட்டை எமது கட்டுப்பாட்டிற்குள் வந்ததும் அவரின் எலும்புக் கூட்டை நாம் எடுத்து  துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்தோம்.  இவரின் வீரம் விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.  லெப்டினன்ட் சங்கீதா, கனகசுந்தரம், ரேணுகா வீரப்பிறப்பு  04/09/1974 வீரச்சாவு 05/08/1990 முகவரி சங்கீதா வீதி திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணம். 

பலமுறை நாங்கள்  யாழ் கோட்டை மீது சண்டையில் ஈடுபட்டோம். அனைத்தும் தோல்வியில் முடித்தன.இதே காலப்பகுதியில் மற்ற ஒரு போர்முனையை எதிரி உருவாக்கினான்.  அருகில் உள்ள மண்டைதீவைப் பாதுகாப்பதற்காக எமது 50  போராளிகள் அங்கே கடமையில் இருந்தார்கள். இதன் தகவல் எதிரிக்குக் கிடைத்துவிட்டது.  இதனால் ஒரு பாரிய தரையிறக்கம் ஒன்றை எதிரி மேற்கொண்டான். கடற்கரையை நோக்கி எதிரியின் போர்க் கப்பல் வேகமாக வந்துகொண்டியிருந்தது.

அதில் இருந்த எம்மினத் துரோகி ஒருவன் இறங்க விட்டு அடிப்போம் என்று பிழையான தகவலை வழங்கினான். ஆனால் தரையிறங்கிய பின் நிலமை தலைகீழாக மாறி எதிரியின் கை ஓங்கியது. அதில் ஐம்பது எமது போராளிகள் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  அவர்களின் உடல்களை ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் போட்டு கொங்கிறீட் கலவையால் அதை மூடி விட்டான். தொடர்ந்து மண்டைதீவில் இருந்து யாழ் நோக்கி ஒரு பாரிய படை நகர்வு எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டது. இதை முன்கூட்டியே  அறிந்த விடுதலைப் புலிகள் மண்டைதீவுப் பாலத்தை உடைத்து விட்டார்கள். அதனால் அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.


பின்னர் தலைவரின் சிந்தனையில் மணியண்ணையின் தலைமையில் புதிய ஆயுதங்களைச்  செய்வதில் ஈடுபட்டோம். மணியன் தோட்டம் என்றயிடத்திலே இத்தொழிற்சாலை அமைந்திருந்தது. கூடுதலான அரசாங்க பஸ் ஏனைய வாகனங்கள் உதிரிகளாகப் பிரிக்கப்பட்டு அதன் இரும்புகள் உருக்கப்பட்டது. அடுத்து புதிய வகையான கண்டம் விட்டுப் பாயும் ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டது.

அதின் பெயர் பசிலன் 2000 என்பது ஆகும்.  இது சுமார் 600m இரண்டாயிரம் கிலோக்கிராம் வெடிமருந்தைக் காவிச் சென்று வெடிக்கக்கூடியது . இது அருகில் வீழ்ந்து வெடித்தால் அவர்களின் செவிப்பறை முற்றாகச்  செயல் இழந்து விடும்.

 

. (இதுதான் செல்)
அதை விட ஒரே நேரத்தில் கூடுதலான இராணுவத்தைக் கொல்லக் கூடியது. இது இயக்கும் முறை சுமார் 25 மீற்றர் நில வங்கருக்குள் இருந்தபடி சூட்சை அழுத்த வேண்டும்.  ஏனெனில் இது சில நேரங்களில் இயக்கும் போது தவறுதலாக தன்னையும் அழித்து விடும் அதனால் அவதானமாக இருக்க வேண்டும்.

இதுதான் அந்தப் பிராங்கி தலைவர் அதை பார்வையிடுகின்றார்,

அக்காலத்தில்புதுப்புது வகை ஆயுதங்களை சொந்தமாக உருவாக்கி வந்தனர்.விடுதலைப் புலிகள் அந்த ஆயுதங்களுக்கு, மறைந்த தங்கள் போராளிகளின் பெயர்களை அவர்கள் சூட்டி வந்தனர். 


புலிகள், தங்களது சொந்த தயாரிப்பில் உருவாக்கிய கனரக மோட்டர்  பீரங்கிக்கு ‘பசிலன் 2000‘ என பெயர் சூட்டியிருந்தனர்.  லோ போன்ற ஒரு வாகனத்தின் மீது இதை நிலைநிறுத்தி இயக்க முடியும். இடம்விட்டு இடம் எளிதாக கொண்டு செல்ல முடியும்.



மேஜர் பசிலன் (நல்லய்யா அமிர்தலிங்கம்), முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்தவர். புலிகளின் வன்னிப்பகுதி தளபதியாக இருந்தவர். இவரது தலைமையின் கீழ்தான் புலிகளின் தலைசிறந்த தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் ஒரு காலத்தில் போராளியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப் படைக்கு எதிரான போரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய ராணுவத்தின் பல டாங்குகளைச் சிதறடித்தவர் பசிலன். 1987ஆம் ஆண்டு எறிகணை தாக்குதல் ஒன்றில் இவர் வீரமரணம் எய்தினார். 

                                              

இந்தப் பசிலன் கோட்டை மீது விடுதலைப் புலிகளால் சரமாரியாக அடிக்கப்பட்டது. எதிரிகளால் ஈடு கொடுக்க முடியவில்லை கடுமையான உயிர் சேதம் இராணுவத்திற்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து யாழ் கோட்டையை விட்டு பண்ணைக்கடல் ஊடாக சிங்கள இராணுவம் ஓடித் தப்பியது. தமிழீழ மக்களும் விடுதலைப் புலிகளும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு  நாளான 27 /09/1990 மூத்த தளபதி வானு அவர்களால் யாழ் கோட்டையிலே தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அன்றைய நாள் தமிழர்களின் மிகவும் மகிழ்ச்சியான நாளாகயிருந்தது. இந்தக் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது.  பின் இந்தக்கோட்டை விடுதலைப்  புலிகளால் உடைக்கப்பட்டு வீதிகள் திருத்துவதற்காக  அக்கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டது.
                                          

21/06/1990 மன்னார் கொண்டச்சி முகாமை தாக்கி முற்றாக அழித்தார்கள் விடுதலைப் புலிகள்.


                                                         


  இதில் பங்குபற்றிய இரட்ணம் மற்றும் மேஜர் கெனடி இருவரும் குறிப்பிடுகையில்,

இதே காலப்பகுதியில் தலைவரின் தூரநோக்கத்திற்கு அமைவாக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து திறமையாகச் சண்டையிடும் போராளிகளை இனங் கண்டு ஒரு கொமாண்டோ அணிக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.  அது இரண்டு வருடப் பயிற்சித் திட்டம் எனத் தலைவரால் சொல்லப்பட்டது.  அது தளபதி வசந் அவர்களின் தலைமையில் மன்னாரில்  நடந்துகொண்டிருந்தது.

ஆனால் அதே காலம் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய  காரணத்தால் வடபகுதியில் சில தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.  அதனால்மன்னார் கொண்டச்சி முகாமைத் தாக்குவதற்குத் தலைவர் திட்டமிட்டார்.

அதனால் நீங்கள் கொண்டச்சி முகாமைத் தாக்கி அங்கே இருக்கும் பவளையும் அதில் பூட்டி இருக்கும் எல் 3 ஆயுதத்தையும் எடுத்தால் உங்களின் பயிற்சி வேளைக்கு  நிறைவு செய்யப்படும் என்று தளபதி சொர்ணம் அண்ணையூடாக தகவல் எமக்குத் தெரிவிக்கப்பட்டது,

அச்சண்டையைப்  பிடிப்பதற்கான கட்டமைப்பு முதலாவது பொறுப்பாளராக மேஜர் வசந் இரண்டாவது பொறுப்பாளராக போராளி நி௹பன் இவர்கள் நியனிக்கப் பட்டார்கள்.  அடுத்து மன்னாரைச்  சேர்ந்த போராளிகளும் அதில் கலந்து கொண்டார்கள்.  அவர்கட்கு போராளி கெக்லர் தலைமையில் ஒரு அணி வந்தது. அதற்கு மன்னார் மாவட்டத்தளபதி லெப்.கேணல்
 சுமன் அவர்கள்  தலைமை தாங்கினார். 

(தலைவருக்கும் பக்கத்தில் A.K ,LMG யோடு நிப்பவர்தான் தளபதிசுமன்)

ஆனால் அச்சண்டை மேஐர் வசந் அவர்களின் தலைமையிலே  நடைபெற்றது ,

சண்டை தொடங்கி மிகக் குறிகிய நேரத்தில் வசந்தின் தலைமையில் சென்ற அணியில் செல்லக்கிளி ,வசந், ரெட்ணம் என்னும் பல போராளிகளும் மின்னல் வேகத்தில் கேம்புக்குள்ளே  பாய்ந்தார்கள்.  ஆனால் திடீரெனத் தளபதியாகச் சென்ற வசந் வெடிப்பட்டு கீழே விழுந்தான்.  செல்லக்கிளி மயிர் இழையில் உயிர் தப்பிக் கொண்டான்.  ஆனால் இராணுவம் சுடவில்லை சூடு வந்த பக்கம் சுமன் தலைமையில் இறங்கிய மன்னார் அணியைச் சேர்ந்த போராளி கெக்லர் நின்றான். இவர்கள் இதை அவதானித்து விட்டு ஏதோ தவறுதலாக நடந்து விட்டது என எண்ணித்   தங்களின் கடமையை நிறுத்தவில்லை. மின்னல் வேகத்தில் உள்ளே இறங்கி பவலை கைப்பற்றினார்கள்.

, செத்தவன் சாகச் சாகாத ஆமி ஆயுதங்களையும் எறிந்து விட்டுத் தப்பி ஓடியது. ஆனால் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. தலைமை தாக்கி நடத்திய மேஐர் வசந்  உட்பட வீரவேங்கை ரமணி, மட்டக்களப்பு  -01 கப்டன் தனபால் கிளிநொச்சி-02 லெப்கோபிநாத் வவுனியா- 03 லெப் சுப்பிரமணியம் மன்னார்-04  வீரவேங்கை பிக்கான்ட் மன்னார்- 05 வீரவேங்கை சாந்தா மன்னார்- 06 வீரவேங்கை சுபித்திரன் மன்னார் - 07 வீரவேங்கை மேனன் மன்னார் 08 இதில் மொத்தம் 09 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதில் வீரவேங்கை ரமணி one, 4 பிரிவைச்சேர்ந்தவர். இவர் நிலமை அறிவிப்பாளராக அச்சண்டைக்கு சொர்ணம் அண்ணையால் அனுப்பப்பட்டவர். 

 அதில் வசந்தினுடைய இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தது. அதில் பங்குபற்றிய அனைத்துப் போராளிகளிற்கும் பெரும் கவலையாகயிந்தது.  இதில் பவல்  உட்பட பல தானியங்கி ஆயுதங்களும் வெடி பொருட்களும் எடுக்கப்பட்டது. சண்டை மிக வெற்றியாக நடந்து முடிந்தது.

இத்தகவல் தலைவருக்குச்  சென்றதும் மிக்க மகிழ்ச்சி அடைந்த தலைவர் உடனே தளபதி சொர்ணம் அவர்களை அனுப்பி அவர்களின் பயிற்சியை நிறைவு செய்ததோடு மட்டுமன்றி வாகனங்கள் அனுப்பி 120 போராளிகளையும் பவல்  மற்றும் அங்கே எடுத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பளையில் இருந்த எழுதுமட்டுவால் பயிற்சி முகாமிற்குக் கொண்டு வந்தார் தளபதி சொர்ணம்.



நாங்கள்  அங்கே மூன்று மாதம் நின்றோம்.  அவ்வேளை தளபதி கடாபி அவர்களினின் பாதுகாப்பணி ஒன்றுடன் தலைவர் வந்து எங்களோடு கதைத்தார். அன்று தலைவரின் ஒழுங்கு  படுத்தலில் உணவு விருந்து ஒன்றும் ஒழுங்கு படுத்தப்பட்டது.  அன்று தலைவர் கதைத்த விடயம் நீங்கள் திறமை ஆனவர்களாகயிருக்க வேண்டும். இன்றிலிருந்து உங்களிற்கு வரிப்புலிச் சீருடையில்லை உங்களிற்கு புள்ளிப் புள்ளியான ஒரு களரில் இந்தியாவில் செய்ய ஓடர் கொடுத்துள்ளேன்.  நீங்கள் ஒரு கொமாண்டோ அணியாக இருப்பீர்கள். உங்களின் முதலாவது சண்டை மிக வெற்றியாக அமைந்துள்ளது,என்று தலைவர் கதைத்தார்.

 அன்று அவரால் சில பரிசுப் பொருட்களும் எங்களிற்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து நாங்கள் உடற் பயிற்சிகளைச்  செய்துகொண்டு அங்கே பல மாதங்களாக இருந்தோம்.  இடைக்கிடை தளபதி சொர்ணம் அவர்கள் வந்து இயக்க நடைமுறை ரீதியாக எங்களோடு கதைத்து விட்டுச் செல்வார். 
 தொடர்ந்து அவர் எங்களைக்  கண்காணித்து அதில் உயிரை அர்ப்பணிக்கக் கூடிய திறமையானவர்களைத் தேர்ந்து எடுத்தார். அதில் அவரால் எடுக்கப்பட்ட   65 பேரில் எனக்கு  ஞாபகம் உள்ளவர்களைக் குறிப்பிடுகின்றேன்.
 நான்  திரு நிருபன் 02 மேஐர் மாறன் 03 மேஜர் குமரன் 04 லெப் கேணல் செல்வா மாஸ்ட்டர்  05 கேணல் குமரிநாடன் / வசந் 06  கப்டன் தினேஸ் 07   திரு மணியரசன் 08 லெப் ரெட்டியன் 09 திரு சுடர் 10 மாவீரன் சேகர்11  மொண்டியா12  மாவீரன் கலிஸ் 13  திரு கிசோ  14 செல்லக்கிளி 15  திரு ரெட்ணம் எங்கள் அனைவரையும் தளபதி சொர்ணம் அண்ணையால் வண்போர் குறுப்பிற்கு எனத் தேர்ந்து எடுத்தார்.

 எடுக்கப்பட்ட 65 போராளிகளும் தளபதி சொர்ணம் அவர்களின் ஏற்பாட்டில் முதன்முதலாக  25/11/1990  நாவற்குழியில் இருந்த தென்னம் தோட்ட முகாமிற்கு வந்தோம்.

 அங்கே பாதுகாவலர் நிமலேஸ்வரனுடன் தளபதி சொர்ணம் அங்கே வந்தார். அவர் வந்தவுடன் 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஒடும் போது வாகனத்தில் பாய்ந்து காட்டினோம். அப்பொழுது கப்டன்   தினேஸ் (மட்டக்களப்பு )என்பவரின் கையுடைந்தது. அதனால் இவர் உடனே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இவர் பின்னர் நடந்த ஆனையிறவுச் சண்டையில் வீரச்சாவு அடைந்துவிட்டார்.

பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டுக் கடமைக்கு ஏற்றவாறு அனைவரும் பிரிக்கப்பட்டனர்.  அதில் நிருபன் வடமராச்சி -மேஜர் குமரன் மட்டக்களப்பு மேஜர் மாறன் திருமலை -கேணல் குமரிநாடன் மன்னார்- இவர்களை பயிற்சி ஆசிரியராகத் தேர்ந்து எடுத்தார் தளபதி சொர்ணம், அடுத்து லெப் ரெட்டியன் திரு சுடர் இவர்கள் இருவரையும் தலைவரின் மேற்பாதுகாப்பிற்காகத் தேர்ந்து எடுத்தார்.

 ரெட்ணம் சாவகச்சேரியில் இருந்த எமது படையணி  புளியடித் தடுப்பு முகாமிற்குப் பொறுப்பாக நியமணிக்கப்பட்டார். திரு நிருபன் சம்புத் தோட்டம் அல்லது 4.5 பயிற்சி முகாம் பொறுப்பாளராக நியமனிக்கப்பட்டார்.  இவரோடு தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றினார்கள்.

ஏனைய அனைவரையும் எமது படை பணியின் தாக்குதல் அணிக்குக்கொண்டு போனார் சொர்ணம் அண்ணை.

அப்பொழுது எமது தாக்குதல் அணியில் திரு கலபதி திரு உதயன் கப்டன் தீபன் இவர்களே உயிர் நிலைத் தலைவர்களாகயிருந்தார்கள்.  இவர்களை அங்கே கொண்டு போய் அனைவருக்கும் 75 பேருக்குப் பொறுப்பாளர்15  பேருக்கும் பொறுப்பாளர் 7 பேருக்குப் பொறுப்பாளர் என அனைவருக்கும் பொறுப்பு நிலைவழங்கி விடப்பட்டனர்.

 அனைத்துக் கட்டமைப்புக்களும் பிரித்து முடிந்ததும்  அங்கே பிரதான பொறுப்பாக இருந்த கப்டன் தீபன் மற்றும் இவர்களில் இருவர் மூவரையும் ஏற்றிக்கொண்டு தலைவரின் பாதுகாப்பு முகாமிற்கு நானும் சொர்ணம் அண்னை இவர்கள் மூவரும் ஆக ஐந்து பேரும் போய்ச் சேர்ந்தோம்.  அடுத்த நாள் வந்த செல்லக்கிளியை ஏற்றிக் கொண்டுபோய் ராஜீ அண்ணையிடம் கொடுத்து விட்டு நானும் சொர்ணம் அண்ணையும்  முகாமிற்குப்  போய்ச்  சேர்த்தோம்.                                                  
வசந் வளர்த்த போராளிகளான குமரிநாடன்  சில காலம் கழிந்த பின்    


                                                                        

 கேணல் குமரிநாடான் சொர்ணம் அண்ணையிடம் மேஐர் வசந் அவர்களின் பேரை தனக்கு வைக்குமாறு அனுமதி கேட்டார். அதை சொர்ணம் அண்ணை தலைவரிடம் அனுமதி  எடுத்தபின் சட்ட ரீதியாக  குமரிநாடனின் பெயர் வசந் என மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து குமரிநாடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் .

அது மட்டும் அல்ல எமது படையணியில் இறுதி வரை வசந் ஒரு ஆசிரியராகக் கடமையாற்றினான் . இதல்லாம் முடிந்தவுடன் கெக்லர் தவறுதலாகச்சுட்டுத் தளபதி வசந் வீரச்சாவு அடைந்ததை தளபதி சொர்ணம் அண்ணைக்குச் சொல்லி அத்தகவல் தலைவருக்குச் சென்றது.  உடனே கெக்லர் அவர்களை எடுத்து விசாரணை  மேற் கொள்ளுமாறு தளபதி சொர்ணம் அவர்கட்டு தலைவர் கட்டளை வழங்கினார்.

உடனே சொர்ணம் அண்ணை கெக்லர் அவர்களை சாவகச்சேரிக்கு எடுத்து எமது படையணித் தடுப்பு முகாம் ஆன முளியடி தடுப்பு முகாமில் அடைத்து ஒரு மாதம் விசாரணை  மேற்கொள்ளப்பட்டது.  அது தவறுதல் எனத்  தலைவருக்கு உறுதிப் படுத்தப்பட்டது.  அதற்குத் தலைவர் அவதானம் இல்லாமல் செயல்பட்ட காரணத்தால் ஒரு போராளியை நாம் இழந்துள்ளோம் அதனால் போராளி கெக்லர் அவர்களை விட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தலைவர் கட்டளை வழங்கினார்.  அதன்படியே தளபதி சொர்ணம் அண்ணை போராளி  கெக்லர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.




பாகம் 4ல் பகுதி02

10/07/1990 அன்றுவிடுதலைப் புலிகளின் இரண்டாவது                                          கடற்கரும்புலித் தாக்குதல்  நடைபெற்றது.


10/07/1990 அக்காலப் பகுதியில் சிங்களக் கடற் படையினர் யாழ்  மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். குறிப்பாகக் கடல் ஓரங்களை இலக்கு வைத்து அல்லது ஆறு மைல் தூரங்களில் நின்று 20 மில்லிமீற்றர் கணோன் பிரங்கிகளால் மக்கள் வாழ்விடக்களை இலக்கு வைத்துத்  தொடர்ச்சியாகக் கடற் படையினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

அதனால் பயன் தரும் தென்னை மரங்கள், வீடுகள் அழிவது ஒரு பக்கம் இருக்கத் தொடர்ச்சியான மரண ஓலங்கள் கரையோர மக்கள் ஒருவர் அல்லது இருவரென  மக்கள் தங்கள் உறவுகளை இழந்த வண்ணம் இருந்தார்கள். இதை அவதானித்த  தலைவர் கடற் படைக்கு ஒரு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமென  நினைத்தார்.

அதற்காக ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்தவர்களும் தனது பாதுகாப்புக் கடமையில் இருந்தார்கள். அவர்களில் இருவர்தான் காந்தரூபன் மற்றும் கொலின்ஸ் . அதை விட வெளிப் படையணியில் இருந்த வினோத் அவர்களும் இருந்தார். மூவரையும் கூப்பிட்டு ஒரு கரும்புலி பயிற்சிக்குத் தலைவர் அனுப்பினார். அவர்கள் தங்களின் பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து அதற்கான வெடி மருந்துகளைத் தயார்படுத்தும் கடமையைத் தளபதி சொர்ணம் அவர்களிடமே தலைவர் ஒப்படைத்தார். அதையடுத்துச் சொர்ணம் அண்ணை எமது படையணி மூத்த போராளி ஜெகன் அல்லது றைவர் அவர்களிடம் வெடிமருந்து நிரப்பும் கடமையை ஒப்படைத்தார். அடுத்து நானும் றைவர் அண்ணையும் வெடி மருந்துகளை ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டில் இறக்கி 15 பணியாளர்களை வைத்துC 4 என்ற வெடிமருந்து 25 லீற்றர் வெறும் கேன்களில் நிறப்பப்பட்டது.

ஒரு இரவு விடிய விடிய இவ்வேலை நடந்தது மருந்து மணம் ஒவ்வாமையால் ஒரு சிலருக்குத் தலைச் சுற்று ஏற்பட்டதை என்னால் அவதானிக்க முடிந்தது. காலை விடிந்தது.  நிரப்பிய அனைத்துக் கேன்களையும் நானும் றைவர் அண்ணையும் ஒரு கண்டர் ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பருத்தித்துறையில் உள்ள கடற்புலிகளின் முகாமிற்கு கொண்டு போய் அதை ஒப்படைத்தோம்.
அதைக் கொடுத்து மூன்றாவது நாள் காந்தரூபன், கொலின்ஸ் மற்றும் வினோத் மூவரும் கடற்கரும்புலியாகச் சென்று வல்வெட்டித்துறைக் கடலில் நின்ற கடற்படை பெரிய கப்பலான "எடித்தாரா" கப்பலை மூழ்கடித்தனர்.
அனைத்து சிறிய கப்பல்களையும் வளி நடத்திய இந்தக் கப்பல் தான் என்பது பின்னர் எமக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.






காந்தரூபன் இறுதியாகத் தலைவரிடம் விடைபெறும் போது ஒரு நிபந்தனையைச் சொல்லிச் சென்றான். தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளை எமது இயக்கம் தத்தெடுத்து சிறந்த முறையில் அவர்களைப் படிப்பித்து  வளர்க்க வேண்டும் என்பதே அவனின் நிபந்தனையாகயிருந்தது.   ஏனெனில் அவனும் ஒரு அனாதையாக வளர்ந்தவன். அதனால் அவனிடம் அந்தச் சிந்தனை இருந்தது.  அக் கடமையைத் தலைவர் காந்த௹பன் விரச்சாவு  அடைந்தபின்னர்  நிறைவேற்றினார். காந்தரூபன் அறிவுச் சோலை என்ற பேரில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பிள்ளைகள் எடுக்கப்பட்டு அங்கே வளர்க்கப்  பட்டார்கள். ஒவொரு மாவீரனும் வீரச்சாவு அடையும்போது தலைவருக்குச்  சொன்ன கடமைகளைச்  செயல்படுத்துவதில் மிகவும் கவனமாக இருந்து அதைச் சிறந்த முறையில் தலைவர் நடைமுறைப் படுத்திவந்தார்.   இது எப்பொழுது நடந்தது என்பதைப் பிறகுபார்ப்போம். 



இதேகாலப் பகுதியில்தான் கிழக்கு இலங்கையில் அமைந்திருந்த கும்புறுமுலை மற்றும் கழுவாஞ்சூடி சிங்களப்படை முகாம் மீது விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் நடாத்தப்பட்டது.  நூற்றுக்  கணக்கான  போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். அச்சண்டை தோல்வியில் முடிந்தது. அது அப்படியிருக்க

22/07/1990 ஆனையிறவிலிருந்து பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றைச்  சிங்கள இராணுவம் மேற்கொண்டது. 


அதன் நோக்கம் கிளிநொச்சியில் இருந்த இராணுவம் மற்றும்  சிறிலங்கா  காவல் துறையை மீட்டு ஆனையிறவிற்கு கொண்டு  போவதே அவர்களின் நோக்கமாகயிருந்தது. இதை எதிர்த்து பால்ராஜ் அவர்களின் தலைமையில் சண்டை நடைபெற்றது. இருந்தும் இதை விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாமல் போனது.  இராணுவம் தனது திட்டத்தைத் நிறைவேற்றியது.  கிளிநொச்சியில் இருந்த இராணுவம் மற்றும் பொலிஸை  மீட்டு ஆனையிறவிற்கு   கொண்டு சென்றது. இதற்கு எதிரான சண்டையில் தலைவரின் பாதுகாப்பு அணியைச் சேர்ந்த 


லெப்டினன்ட் சிட்டன் உட்பட வீரவேங்கை தாகன் யாழ்,வீரவேங்கை சீலன் மட்டு, கப்டன் பிரபா யாழ், லெப் சிட்டன் மட்டு,2ம் லெப் தங்கப்பா யாழ், வீரவேங்கை முத்து யாழ், வீரவேங்கை டெனா, வவுனியா,2ம் லெப் தேவன் முல்லைத்தீவு என எட்டுப்போராளிகள் வீரச்சாவு அடைந்தனர் இதில் 50 போராளிகள் காயம் அடைந்தனர்.
மற்றும் மேஜர் காஞ்சனாவும் அடுத்த நாள் வீரச்சாவு அடைந்தார்.

 23//0/7/1990 அன்று கீரிமலைக்கடற் கரையில் சிறிலங்கா கடற்படையின் பாரிய தரையிறக்க  நடவடிக்கை.

 விடுதலைப் புலிகளால் முறிக்கப்பட்டது
முன்கூட்டிய எங்களிற்கு தகவல் வந்தது.

 அதை அடுத்து மேஜர் குணா அண்ணை  எங்களின் பிக்கப்  வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆயிரம் 50 கலிபர் ரவைகளை ஏற்றிக்கொண்டு  வாகனத்தை ஓட்ட  யக்சன், லெனின். திவாகர்.சரவணன் நான் வாகனத்தில் ஏறினோம். கடும் வேகமாக நாங்கள் கீரிமலையை நோக்கி சென்றுகொண்டியிருந்தோம்.

அங்கே சென்றதும் கீரிமலைக்  கோயில் மடத்திற்குப் பின்னால் எங்களின் வாகனத்தை குணா அண்ணை மறைத்து வைத்தார். அப்பொழுது யாழ் மாவட்டத் தளபதியாகயிருந்த தினேஸ் தற்போதைய பெயர் தமிழ்செல்வன் இவரின் படையணியான உ. பிரிவுப்   போராளிகளும் அங்கே கடமையில் நின்றார்கள்.  அவர்களிடம் .ஒரு 30 கலிபறும்  வைத்திருந்தார்கள்.



யக்சன் ஒரு புது நிலைப் போராளி யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகக்கொண்டவன். அவன் ஒரு குறுப்புக்காரன் கடுமையான முஸ்ப்பாத்திக் காரன். சண்டையைத் தான் எப்படி எதிர்கொள்ளப் போகின்றேன் என நினைத்து கடுமையான பதட்டம் அவனிற்கு இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவனின் பதட்டத்தைப் போக்குவதற்காக அடிக்கடி என்னை டொக்டர் டொக்டர் எனக் கேலி செய்துகொண்டிருந்தான்.

அப்பொழுது குணா அண்ணை  யக்சனைக் கூப்பிட்டுச் சொன்னார். நேவியின் போட் 400 மீற்றர் வர நான் கடல் கடல்கரையில் கொண்டு வாகனத்தை நிறுத்துவேன்.  நீ போட்டை நோக்கிச் சுட வேண்டும் என்று அவர் யக்சனிடம் சொன்னார்.

அதற்கு அவன் சரியென்று சொன்னான். கடலில் இருந்து சுமார் 400 மீற்றர் கடல் படையின் வோட் உறுமிக் கொண்டு வந்தது. திடீர் என குணா அண்ணை கடற்கரையோடு  வாகனத்தை  நிறுத்தினார். அடிறா யக்சன் எனப் பலமான கட்டளை வழங்கினார்.

யக்சன் கடுமையாகப் பதட்டம் அடைந்தான். 50 கலிபறை பின்னால் திருப்பினான். அதுதவறுதலாக வெடித்து. பின்னால் இருந்த போஸ்மரம் விழுந்தது. முன்னால் அடித்தான் அது கடல் தண்ணீரில் குத்தியது. இதைப்பார்த்த குணா அண்ணைக்கு கடுமையான கோபம் வந்தது. உடனே குணா அண்ணை வாகனத்திற்கு மேலே ஏறினார்.  நெஞ்சு என்னத்திற்கு வைத்துயிருக்காய் ஒக்குறா ஓக்குறா ஓழுங்காகத் தெரியாதா? எனத் தூசணத்தில் பேசி அவனை வெளியே தூக்கி எறிந்தார்.

பின்னர் குணா அண்ணை ஆயுதத்தை வேண்டி அந்த வோட்டை நோக்கி 3 தடவை செய்யின் பெட்டி மாத்தி மாத்தி சுமார் 300 ரவைகள் அந்த நேவி வோட்டை நோக்கிச் சுட்டார். கடல் படையின் போட் கடுமையான சேதம் அடைந்தது. எதிரிக்குக் கடுமையான உயிர்ச் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவ் நடவடிக்கையிலிருந்து அவன்  பின்வாங்கிச் சென்றான்.

தொடர்ந்து நிலமை அமைதியாகயிருந்தது. அப்பொழுது எங்களிற்குக் கடுமையான பசியாகயிருந்தது.  இதை அவதானித்த குணா அண்ணை அருகில் உள்ள ஒரு தேனீர்க்கடைக்குச் சென்று சுடச் சுட ரீ மற்றும் வனிஸ் என்பன வேண்டித்  தந்தார். அதைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொண்டு தச்சன்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம்.
திடீரென  ஒரு ரொக்கேட் தாக்குதல் எங்கள் வாகனத்தை நோக்கி விமானம் ஏவியது. அத்தாக்குதலில் இருந்து மயிர் இழையில் நாங்கள் தப்பினோம். அக்குண்டு அருகில்  இருந்த புற் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.

மறுபடியும் வொம்பர் கலைத்து வருவதாக மக்கள் கையைக் காட்டினார்கள். உடனே குணா அண்ணை அருகில் உள்ள ஒரு பிளேட் வீட்டில் வாகனத்தை மறைப்பாக உள்ளே விட்டார். வெளியே வந்த வீட்டிற்கு சொந்தமான பெண் என்னுடைய கணவரும் கால் இல்லாமல் இருக்கின்றார். எனது வீட்டிற்கு விமானம் தாக்கப்போகின்றது உடனே வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே போங்கோடா. எனச் சத்தமான குரலில் பேசி அழுதுகொண்டிருந்தார்.

இதைப்பார்த்த 18 வயதுடைய அவரின் மகன் அண்ணாக்களை கலைக்க வேண்டாம் அம்மா என்று அவர் தனது தாயிடம்  கேட்டதற்கு நீயாடா வீடு கட்டினாய் என்று கேட்டு மகனையும் பேசிக் கலைத்தார் அப்பெண். இதைப் பார்த்துக் கொண்டிருந்த குணா அண்ணைக்குக் கடுமையான கோபம் வந்தது. உடனே பிக்கப் வாகனத்தை வெட்ட வெளியில் கொண்டுபோய் விட்டார். அடிரா யக்சன் எனத் தனது இறுக்காமன கட்டளையை வழங்கினார் குணா அண்ணை. விமானம் சுற்றிக்கொண்டேயிருந்தது அவ்விடம் பதட்டமாகயிருந்தது.

குணா அண்ணை வாகனத்திற்குள்ளே றைவர் இருக்கையில் இருந்தார். எங்களை சுற்றி பாதுகாப்பான இடங்களில் நிலையெடுக்குமாறு கட்டளையிட்டார். நாங்கள் நிலையெடுத்துக் கொண்டு வாழ்வா? சாவா? என பார்த்துக் கொண்டிருந்தோம்.

லெனின் 50 கலிபர் ரவைப் பெட்டிகளை பொருத்த யக்சன் விமானத்தை நோக்கிக் கடுமையான தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தான். தச்சன் காட்டு மக்கள் நீங்கள்பாதுகாப்பான இடங்களிற்கு ஓடித் தப்புங்கோ இல்லையென்றால் நீங்கள் விமானத் தாக்குதலில் சாகப்போகின்றீர்கள் என்று சொல்லி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார்கள்.

யக்சனைப் பார்க்க எங்களிற்கும் கவலையாகயிருந்தது. எங்களை அறியாமலே கண்ணால் கண்ணீர் வந்தது. விமானத்தினுடைய ரொக்கேட் அருகில் வந்து வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. யக்சன் சுமார் 400 ரவைகள் அடித்து முடித்தான். விமானம் அவ்விடத்தைவிட்டு ஓடித் தப்பியது. அடி விமானத்திற்குப் பிடித்துவிட்டது எனக் குணா அண்ணை எங்களிடம் சொன்னார். எங்களை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கைதட்டி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

யக்சன் கடுமையான மகிழ்ச்சியில் காணப்பட்டான். 3 மணித்தியாலத்திற்கு முன்னர் கீரிமலையில் குணா அண்ணையால் வாகனத்தில் இருந்து தூக்கி ஏறியப்பட்ட  யக்சன் மீண்டும் தனது வீரத்தை நிலை நாட்டினான். அதைத் தொடர்ந்து யாழ் கோட்டையை நோக்கிச் சென்றோம். இப்புத்தகம் எழுதும் காலத்தில் திரு யக்சன் , திரு சரவணன்  புத்தகம் எழுதுபவர் மூவரும் உயிரோடிருந்துள்ளனர்.


                                    


25/07//1990 சங்கர் அண்ணையின் திறமையான நடவடிக்கையால் பல பொருட்கள் எமக்கு இந்தியாவிலிருந்து வந்தது.


 அக்காலப் பகுதியில் கடல்பகுதிகளைக் கண்காணிப்பதற்கும் கடலூடாக சில கொள்வனவுகளைச் செய்வதற்கும் . விடுதலைப் புலிகளின் படைக்கட்டமைப்பாகக் கடல்புறா இருந்தது. அதற்குச் சிறப்புத் தளபதியாக தளபதி கடாபி அல்லது ஆதவன் அவர்கள் இருந்தார். பெரிய வள்ளங்களில் இந்தியாவில் இருந்து வோக்கி வெடி மருந்துப் பொருட்கள் ஏனையவை தமிழீழம் கொண்டுவருவது வழமையாகயிருந்தது.

அந்த நடவடிக்கைகளிற்கு கேணல் சங்கர் அவர்களே பொறுப்பாகயிருந்தார். அது மட்டும் அல்ல அவரே நேரடியாகப் போய் அனைத்துப் பொருட்களையும் வேண்டிக்கொண்டு அவரே அந்த வண்டியையும் ஒட்டிவருவார். அக்காலப் பகுதியில் சங்கர் அண்ணை சாமன் கொண்டு வருகின்றார் என்ற தகவல்   தலைவர் ஊடாகத் தளபதி கடாபியண்ணைக்கு கிடைத்தது.

அதையடுத்து இந்திய இராணுவத்திடம் எடுத்த பெரிய றக்கில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு றைவர் அண்ணை பின்னால் வரக் கடாபியண்ணை ,முருகேஸ் ,நான் மூவரும் ஒரு ஜீப்பில் முன்னே சென்று கொண்டிருந்தோம். போராளிகளின் ரக்கைப் பாதுகாத்தவாறு சின்னமணி ஐம்பது கலிபர் பிக்கப் வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.  நாங்கள் சாவகச்சேரியிலிருந்து வெற்றிலைக் கேணியூடாகக் கட்டைக்காடு  சென்றோம்.

கட்டைக்காட்டுப்பகுதி கடுமையான மணலாயிருந்தமையால் வாகனங்கள் பின்பக்கத்தால் மெதுவாகச் சென்று கொண்டிருந்து. அங்கே சென்றதும் வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு கடாபியண்ணையோடு நானும் முருகேசும் சென்றுகொண்டிருந்தோம்.

கடற்க் கரையை அண்மித்த ஒரு சிறு காட்டிற்குள் படகில் இருந்து சாமான்களை இறக்கி அடிக்கிவைத்துக் கொண்டு சங்கர் அண்ணையிருந்தார். நாங்கள் போனதும் இருங்கோ தம்பி மச்சான் எனச் சொல்லி விட்டு பழம் ரின்களை வெட்டி எங்களுக்கு பரிமாறினார்.

பழங்களை நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த  வேளை பேரிரச்சலோடு சிங்கள நேவிவோட் வேகமாக வந்து எங்களின் வெறுமையான வோட்டைத் தாக்கிவிட்டுச் சென்றது. வோட்டிற்குள் சாமான் இருக்குதா அண்ணை என்று கடாபி அண்ணை சங்கர் அண்ணையிடம் கேட்க இல்லை பழம்ரின்கள் மட்டும்தான் சிறிது கிடக்கின்றது எனப்பதில் அளிக்கின்றார்.

அடுத்து அனைத்துச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு சங்கர் அண்ணையை எங்களின் வாகனத்தில் பாதுகாப்பாகச் சாவகச்சேரிக்குக் கொண்டு சென்றோம். 

12/08/1990 அன்று அதிபர் பிரேமதாசா காலத்தில் வீரமுனைஇனப்படு கொலை நடாத்தப்பட்டது.



இறப்பு(கள்) 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஆக இருந்தது.
தாக்கியதாக சந்தேகிக்கப் படுவோர் இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை
வீரமுனைப் படுகொலைகள்.  (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட்12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஷ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 யூன் மாதம் முதல் யூலை மாதம் வரை தஞ்சம் புகுந்து  அங்கே வாழ்ந்தனர்.

இக்காலகட்டத்தில் ஆகஸ்ட்  12ம் நாளன்று இவற்றினுள் புகுந்த ஊர்காவல் படைக்கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களைச் சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப் பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.

30/08/1990  றோமியா நவம்பர் அல்லது லெப். கேணல் ராஜன் அவர்களின் குடும்பம் எமது போராட்டத்திற்கு செய்த கடமையை மறக்க முடியாது.


ராஜன் அவர்களின் அண்ணாவின் வீடு  மாதகல்லிருந்தது. அப்பொழுது எமது கடற்புலிகள் பெரிதாக வளரவில்லை.  நானும் சொர்ணம் அண்ணையும் அடிக்கடி அவர்களின் வீட்டிற்குச் சென்று லட்சக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு வருவோம். பின்குறிப்பிட்ட  காலம் சென்று எமக்கு அவசரமாகத் தேவைப்படும். வோக்கி, பற்றி மற்றும் மருந்துப் பொருட்கள் பெண் போராளிகளிற்குத் தேவையான பொருட்கள் என்பன அவர் இந்தியவிற்குச் சென்று வாங்கிக் கொண்டு வந்து அவரின் வீட்டில் வைப்பார்,

 அது மிகவும் உயிராபத்தான பிரச்சனை என்பது எமக்குத் தெரியும். உயிரை அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு கடமை செய்த குடும்பம் தான் அந்தக்குடும்பம்.
பின்னர் நாங்கள் அப்பொருட்களை ஏற்றிக்கொண்டுவருவோம்.   ஒரு நாள் ராஜன் அவர்களின் அண்ணி எங்களிற்கு சாப்பாடு தருவதற்கு ஒழுங்கு படுத்திவைத்திருந்தார், அவர் அன்று எங்களிற்கு கோழிப் புறியாணிச் சாப்பாடும் இரண்டு முட்டைகளும் அவித்து வைத்துயிருந்தார்.  சொர்ணம் அண்ணைக்கு ஒரு முட்டையும் , அவரின் கணவருக்கு ஒரு முட்டையும் வைத்தார்.  ஆனால் எனக்கு வைக்கவில்லை. எனது சாப்பாட்டுப் பிளேட்டப் பார்த்த சொர்ணம் அண்ணைக்கு முகம் கறுத்துப்  போய்விட்டது.

உடனே சொர்ணம் அண்ணை தனது முட்டையைத் தூக்கி எனது பிளேட்டில் வைத்து விட்டார். அதைப் பார்த்த நான் நீங்கள் சாப்பிடுங்கோ அண்ணை  என்றேன். பொத்துடா வாய் என என்னைச்  சொர்ணம் அண்ணை அதட்டினார்.


அதைப் பார்த்த அப்பெண்  நீங்கள் சாப்பிடுங்கோ.நான் வேகமாக ஒரு முட்டை அவித்துக் கொண்டு வருகின்றேன். எனச்  சொல்லிவிட்டு வேகமாக மூன்று முட்டை பொரித்துக் கொண்டு  வந்தார்.


  அவ் முட்டைகளைச் சொர்ணம் அண்ணையின் மேசை மேல் வைத்தார். தான் முட்டை சாப்பிடுவது இல்லையென்று அவருக்குத்  தெரியப்படுத்தினார்  சொர்ணம் அண்ணை.

 ஆனால் அது அவர்களிற்குப் பெரும் கவலையாகயிருந்தது.  பொரித்த முட்டையை வைத்து ஒரு சாப்டாட்டுப் பார்சல் எங்களிற்குத் தேவையென சொர்ணம் அண்ணை சொல்லச் சிரித்த முகத்துடன் அவர்போய் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு வந்து எங்களிற்குத் தந்தார்.  அதை நான் எடுத்துக் கொண்டு போய் வாகனத்திற்குப் பக்கத்தில் நின்ற போராளிக்குக் கொண்டுபோய்  கொடுத்தேன்.  ஒவ்வொரு போராளியிலும் அன்பும் பாசமும் வைத்திருந்தவர்தான் தளபதி சொர்ணம் அண்ணை. எங்களின் படையணிப் போராளிகள் உயிரையே அவர் மீதுவைத்து இருந்தார்கள்.



09/09/1990 அன்று அதிபர் பிரேமதாசா காலத்தில் "சத்துருக்கொண்டான்"  இனப் படுகொலைநடத்தப்பட்டது.



09/09/1990 அன்று அதிபர் பிரேமதாசா  காலத்தில் அவரால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட சத்துருக்கொண்டான்  இனப்படுகொலை.

 மாலை 5.30 மணியிருக்கும்  இராணுவச் சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக் கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகின்றார்கள். அனைவரும் விசாரிக்கப் பட்டு விடுவிக்கப் படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town) இராணுவ முகாமுக்கு வரிசையாக அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.

பெரும்பாலும் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் எவரும் வீடு திரும்பவில்லை. மொத்தமாக 184 பேர் படுகொலை செய்யப் படுகிறார்கள்.


படுகொலைக் களத்திலிருந்து ஒருவர் மட்டும் உயிர்தப்பி நடந்தவற்றைக் கூற சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரியவருகிறது.


அப்போது திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராக இருந்தவரும் மட்டக்களப்பு சமாதானக் குழுவின் உறுப்பினருமாக இருந்த கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை சம்பவம் நடந்த மறுதினம் இராணுவத்தின் துணையுடன் படுகொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருக்கிறார். முழுவதும் எரியூட்டப் பட்டிருந்தது. ஆனாலும்  முழுவதும் எரியாத நிலையில் தலைகள், உடல் அங்கங்கள் கிடந்தன. அப்போது என்னை அழைத்துச் சென்ற இராணுவ கர்ணல் பேர்சி பெர்ணான்டோ, “எங்களுக்குக் கவலையாக இருக்கிறது".
 எங்களுடைய ஆட்கள்தான் செய்திருக்கிறார்கள். எனவே" நான் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தன்னிடம் கூறியதாகத் தற்போது ஓய்வுநிலையில் இருக்கும் முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அன்று நடந்ததை  பகிர்ந்துகொண்டார்.


படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற ‘போய்ஸ் டவுன்’ இராணுவ முகாமிலிருந்து கால் மைல் தூரத்தில் குளக்கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சாப்பைப் புற்காட்டில் உயிர்ப்பயத்துடன் மறைந்திருந்தவாறு அலறல் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்த இரத்தினஐயாவும் அன்று கண்ட சம்பவத்தை  பகிர்ந்து கொண்டார். சத்துருக்கொண்டான் படுகொலைை பற்றி 


 விக்கிப்பீடியாவில் இருந்து......
சத்துருக்கொண்டான் படுகொலைகள்.
சத்துருக்கொண்டான் படுகொலை is located in இலங்கைசத்துருக்கொண்டான் படுகொலை
இடம் மட்டக்களப்பு, இலங்கை
ஆள்கூறுகள் 7°42′58″N 81°42′0″E
நாள் செப்டம்பர் 9, 1990 (+6 கி.இ.நே)
தாக்குதலுக்கு
உள்ளானோர். இலங்கைத் தமிழ் பொதுமக்கள்
தாக்குதல்.
வகை--- வெட்டி, எரியூட்டப்படல்
ஆயுதம் வாள்கள், கத்திகள்
இறப்பு(கள்) 184
காயமடைந்தோர் 1
தாக்கியோர்- இலங்கை படைத்துறை
சத்துருக்கொண்டான் படுகொலை (Sathurukondan massacre) 1990 செப்டம்பர் 9 அன்று இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் பகுதியில் தங்கியிருந்த 184 இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.[1][2][3][4][5] இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை.


இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக் குழந்தையும் படையினரால் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.[3] அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.[3]


படுகொலைகள்
சத்துருக்கொண்டான் கிராமம் மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ளது. 1990 செப்டம்பர் 9 மாலை 5:30 மணியளவில், சீருடை அணிந்த இராணுவத்தினரும், மற்றும் சில ஆண்களும் கிராமத்தினுள் நுழைந்து கிராம மக்கள் அனைவரையும் வீதியில் கூடுமாறு பணித்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டனர்.
இத்தாக்குதலில் உயிர் தப்பியதாகக் கருதப்படும் ஒரேயொருவர் கந்தசாமி கிருஷ்ணகுமார் (அகவை 21) இவர் பின்னர் கொடுத்த சாட்சியத்தில்:
ஐம்பது கொமாண்டோக்கள் தம்மில் 150 பேரை சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றனர். தாம் அங்கு செல்லும் போது மாலை 7.00 அல்லது 8.00 மணியிருக்கலாம். இவர்களில் இருந்து பிரிக்கப்பட்ட நான்கு பேர் கத்திகளாலும், வாள்களாலும் தாக்கப்பட்டு முகாமிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். மீதமிருந்த அனைவரும் டயர்களுடன் சேர்த்து எரிக்கப்பட்டனர். [1]இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் என்பதில் பிரேமதாசா கடுமையாகச் செயல்பட்டார்.
காயமடைந்த  கிருஷ்ணகுமார் இருட்டில் மறைந்து ஒருவாறு தப்பி வெளியேறினார். மொத்தம் 184 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.[1][3][6] 

இதே காலம் எமது படையணி சிரேஷ்ர போராளிகள் இருவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது. 


போராளி எழிலன் திருமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கறுத்த உருவம் கவர்ச்சியான முகத்தோற்றம் உடையவர். இவர் தலைவரின் தனிப்பட்ட  பொடிக் காட்டாகயிருந்தவர். அடுத்த கட்ட வளர்ச்சிக்காகத்  தலைவரால் உயர்படிப்புக்கு அனுப்பப் பட்டார்.  அங்கே இருந்த பெண்ணோடு இவருக்குக் காதல் ஏற்பட்டது.  இது சொர்ணம் அண்ணனக்குத் தெரிந்ததும் அவரை அங்கிருந்து  கொண்டுவந்து தடுப்பு  முகாமில் அடைத்து வைத்திருந்தனர். அங்கிருந்து இவர் தப்பி ஓடி அப்பெண்ணையும் கூட்டிக்கொண்டு வவுனியா ஓமந்தைக்குச் சென்று அங்கு இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு ஓடுவதற்கு தயாராகயிருந்த வேளை ஒமந்தை சோதனைச் சாவடியில்வைத்து எமது புலநாய்வுத் துறையினரால் கைது செய்யப் பட்டார்.

அடுத்து அவருக்கான விசாரணை  மேற்கொண்டு அவரின் தவறு உறுதிப் படுத்தியபின், அவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது. 

இரண்டாவது திரு சக்குறு இவர் யாழ்மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  இவரும் தலைவரின் பாதுகாப்பில் நீண்ட காலம் இருந்தவர்.  87 தரையிறங்கிய இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டவர்.  என முன்னர் குறிப்பிடிருந்தேன். இவரும் அங்கே உயர்படிப்பு படித்துக் கொண்டுடிருந்த வேளை அங்கே படிப்பித்த ஆசிரியை ஒருவருடன் ஆண் பெண் உறவில் ஈடுபட்டார். என்பது தெரிய வந்தமையால் விசாரணை  மூலம் இது உறுதிப் படுத்தியமையால் இவருக்கும் சாவொறுப்பு வழங்கப்பட்டது.

அடுத்து சுமன் பிறப்பிடம் யாழ்மாவட்டம் இவர் சாவகச் சேரியில் ஒரு முகாமிற்குப் பொறுப்பாகயிருந்த  வேளை மேஐர். வெள்ளையண்ணை வாகனத்தில்  அங்கே சென்று "நீ பிழை விட்டுள்ளாய் உன்னை விசாரிக்க வேண்டும். உடமைகளோடு வெளிக்கிட்டுக் கொண்டு வா" எனச் சொல்லியுள்ளார். அவர் அங்கே செல்லவில்லை தனது  குப்பியை கடித்துக் கொண்டு அவ்விடத்திலே மரணித்து விட்டார்.  இதை நேரில் பார்த்த கெனடி குறிப்பிட்டார்.  இப்படி கவலையான விடயங்களும் எமது படையணிக்குள் நடந்தது.

01.11.1990 மணலாறு முந்திரிகைக் குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப் படைமுகாம் தாக்கியழிக்கப்  பட்டது.




தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து  தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப் பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும்  சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட  சிங்களக் குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினி முகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.


இம்மினி முகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் தளபதி  லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர். வேவுத் தரவுகளைத் தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமைத் தாக்கி அழிக்க வேண்டுமென  முடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.


அனைத்துத் தகவல்களையும் அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல்  நடாத்த வேண்டும் எனவும், அத்தாக்குதலின் போது பொதுமக்களுக்குச் சிறுசேதம் ஏற்படக்கூடாதெனவும் கூறிய தலைவர் அவர்கள்.இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கித்  தளபதிகளை வழியனுப்பிவைத்தார். தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுகு  அமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக் கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவு நடவடிக்கைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. 


தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான  போராளிகளால் முறையே நிசாம் வெட்டை  மற்றும் ஐீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன. பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப் படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.


தாக்குதலுக்கான  இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன. இவ்வணிகள் கொக்குத் தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல் நீரேரியைக் கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று  01.11.1990 அன்று அதிகாலை  ஒரு மணிவரை முந்திரிகைக் குளமுகாமருகில் காத்திருந்து  அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக் குளத்தில் அமைக்கப்பட்ட இலங்கைப் படையின் முகாம்மீது ஒரு வெற்றிகர அதிரடித் தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.


குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின்பூரண கட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. தொடர்ந்து அந்தமுகாமைத்  தக்க வைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித் தொழித்துவிட்டுக் கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள். இதன் பின்னும்  இதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் படையினர் மீது மேற்கொள்ளப்பட்டதால்  திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. 


 இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான  வேவுத்  தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஐ் தலைமையிலான போராளிகளால் சொல்ல முடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச் சிறுகச் சேகரித்து அதற்கான வேவுத் தகவலைக் கொடுத்திருந்தனர் .படைமுகாமின் தாக்ககுதல்களைக்  களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.



இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக் கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு வந்தது.) அன்பு அவர்கள்  வழிநடாத்தியிருந்தார். இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று வழிநடாத்திய......


மேஜர் சங்கர்,

அரியரட்ணம் லோகிதன்,

தம்பலகாமம், திருகோணமலை.


 2ம்லெப்ரினன்.மதுவன்.


வீரவேங்கை முசோலினி,

ஆபிரகாம் தயாசீலன்,

7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், திருகோணமலை.


ஆகியோர் வீரச் சாவடைந்தனர்.



நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்கு வந்திருந்தனர். ஆனால் வெற்றிச் சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.


மேஜர். சங்கர் அவர்களை 89கடசிப் பகுதியில் தலைவரிடம் வந்தாரென முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.  அவர் தான் இவர். அவரின் படம் எம்மிடம் இல்லை, மிகவும் சிறந்த ஒரு போராளி.




23/11/1990அன்று மாங்குள இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்டது.


 வன்னியில் இருந்த சிறு முகாம்களை அழித்தொழித்தால் தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது. 

 வட மாகாணத்தில் இருந்த அனைத்து முகாம்களையும் துடைத்து எறிய வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது. அத்திட்டத்திற்கு அமைவாக மாங்குளம் சிங்களப் படைமுகாம் தாக்குவதற்கான திட்டம் விடுதலைப் புலிகளால் தீட்டப்பட்டது.

மேதகு வே.பிரபாகரன் அவர்களால் அந்  நவடடிக்கைக்கான கட்டளைத் தளபதிகளான தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பால்ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டனர். சண்டைக்கான பயிற்சி நடைபெறும் போதே போர்க் தன்னிடம் சொன்ன  விடயத்தைத் தளபதி சொர்ணம் ஊடாக தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அப்படி என்ன தான் போர்க் சொன்னார்.  மாங்குளம் தாக்குவதாகயிருந்தால் தான் தான் கரும்புவியாகப்போக வேண்டும் என்பதே போர்க் அவர்களின் நிபந்தனையாகயிருந்தது.

அவ் நிபந்தனையை தலைவர் ஏற்றுக்கொண்டார்.  அனைத்துப் பயிற்சிகளும் நிறைவடைந்து சண்டை ஆரம்பம் ஆனது. வோக்கி அலரத்தொடங்கியது தளபதி பால்ராஜ் மற்றும் சொர்ணம் இருவரும் கட்டளையை வழங்கிக் கொண்டியிருந்தார்கள். காற்றை ஊடறுத்தவாறு வெடிமருந்து  ஏற்றியவாகனத்தை லெப்கேணல் போர்க் அவர்கள் வேகமாக ஓட்டி முகாம் உள்ளே நுளைந்தார். சிறிது நேரத்தில் .....

பேரிரைச்சலோடு கரும்புலிவாகனம் வெடித்துச்  சிதறியது. முகாமில் இருந்த சிங்களப்படையினர் செத்தவன் சாக ஏனையவர்கள் சிதறி  காடுகளிற்குள் ஓடித் தப்பினார்கள். படை முகாம் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. லெப் கேணல் போர்க் உட்பட பல போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். பெரும் தொகையான ஆயுதம் வெடி பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்து.

மாங்குளம் சண்டை பற்றி தளபதி பால்ராஜ் அவர்கள் குறிப்பிடும்போது நாங்கள் அடித்துக் கொண்டு போகும் போது ஒரு கட்டத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது நான் சொர்ணத்தை ஒரு பக்கம் இறக்கவா எனத் தலைவரிடம் கேட்டேன்.  அதற்குத்  தலைவர் சொன்னார். சொர்ணம் போனாலும் சரி நீ போனாலும் சரி  விடியிரத்திற்குள் எனக்கு மாங்குளம் வர வேண்டும் என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

எனவே தலைவரின் இறுக்கமான கட்டளையே இந்த வெற்றிக்குக்  காரணம் எனப் பால்ராஜ் அவர்கள் குறிப்பிட்டார். லெப்.கேணல் போர்க் 23.11.1990 அன்று முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படை முகாம்மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவை தழுவிக்கொண்டார். 



எதிரியைச் சிதறடித்து வரலாற்றில் தடம் பதித்த மாங்குளம் முகாம் தகர்ப்பு

சிறிலங்கா அரசிற்கும் – விடுதலைப் பேரியக்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களினடிப்படையில் இந்திய வல்லாதிக்கப் படைகள் 1990 பங்குனியுடன் இலங்கையிலிருந்து முற்றாக வெளியேறிய நிலையில் வட-கிழக்குப் பிராந்தியத்தியம் முழுவதும் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வர ஸ்ரீலங்காப் படைகள் ஆங்காங்கே முகாம்களுக்குள் முடங்கிக் கொண்டனர்.

வரிப் புலிச் சீருடை தரித்த புலிகளின் ஆண், பெண் போராளிகள் அணியணியாக நகரங்களில் வந்திறங்குகின்றனர். மக்கள் ஆழ்ந்த வியப்புடன் இக் காட்சிகளைத் திரண்டு சென்று பார்க்கின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட பெரும் பிரதேசங்களில் புலிகள் நிர்வாக நடவடிக்கைகளை வீச்சுடன் தொடங்குகின்றனர். இளைஞர்களும், யுவதிகளும் அணியணியாக இயக்கத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் பிரேமதாஸ-புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைய 1990 ஆனி மாதம் 10ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகின்றது. அந் நேரம் வடபிரதேசத்தின் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்க படையினர் தங்கியிருந்த சில முகாம்களை புலிகள் சுற்றி வளைத்து தமது இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டு வருகின்றனர். யாழ் கோட்டை, ஆனையிறவு, பலாலி, மற்றும் மாங்குளம் ஆகிய முகாம்கள் இவ்வாறு முற்றுகை வளையத்துள் வந்தன. இவ் இராணுவ முகாம்களிற்கான விநியோகங்களை ஹெலிகொப்டர்கள் மூலமாகவே இராணுவம் மேற்கொண்டுவந்தது. இவற்றுள் யாழ் கோட்டை இராணுவ முகாமைக் கடுமையான சமர்களின் பின்னர் 1990 புரட்டாதி மாதம் 26ம் திகதி தியாகச் செம்மல் திலீபனின் மூன்றாவது நினைவு நாளன்று புலிகள் முற்றாக அதை மீட்டனர். 

இந் நிலையில் வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தைப் போன்று அமைந்திருந்த மாங்குளம் இராணுவ முகாமைத் தகர்த்து அழித்து அப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு புலிகள் திட்டமிட்டனர். அப்போதைய வன்னிப் பிராந்தியத் தளபதி பால்ராஜ், உதவித் தளபதி தீபன் மற்றும் தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பாளர் தளபதி ஆகியோருடன் வன்னியின் மாவட்டத் தலைவர்கள், குழுத்தலைவர்களும் சேர்ந்து மாங்குளம் முகாமின் அமைப்பு, அதன் பலம்-பலவீனம் ஆகிய இராணுவ விடயங்களை அணுகி ஆராய்ந்து தாக்குதலுக்கான திட்டங்களை வரைந்தனர்.





அச்சண்டையில் பங்குபற்றிய போராளி குறிப்பிடுகையில்,


21.11.1990 மாவீரர் வாரத்தின் தொடக்க நாள். மண்ணுக்காக மரணித்த வீரமறவர்களை தாய்மண் நினைவு கூர்ந்து கொண்டிருக்கப் புலிகளின் பீரங்கிப் படையணிகள் சுறுசுறுப்பாகத் தமது வேலையை ஆரம்பித்தன. முகாமையும் அதன் பிரதான காவலரண்களையும் குறி பார்க்கும் வண்ணம் தமது தயாரிப்பான பசிலன்-2000 ஏவுகணைகளை நிலைநிறுத்திக் கொண்டனர். முகாம் தகர்ப்பிற்கான தாக்குதலணிகளும், பக்கபலமாகச்  செயற்படுவதற்கான உதவித் தாக்குதல் அணிகளும், இவர்களிற்கான ஆயுத-வெடிமருந்துகளை வழங்கி விநியோக அணிகளும், தாக்குதலில் காயமடையும் போராளிகளை அப்புறப்படுத்த மீட்புக் குழுக்களும், அவர்களுக்கு சிகிச்சை வழங்கவென 18-22 வயதேயான சீருடை தரித்த இளம் மருத்துவ அணியினரும் பிரிக்கப்பட்ட  அவரவர்களுக்குரிய கடமைகளும், கட்டளைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கார்த்திகை 22ம் நாள் கதிரவன் மறையத் தொடங்க அணிகளும் தத்தமது கடமை இடங்களுக்கு நகரத் தொடங்குகின்றன. மீண்டும் தாம் சந்திக்க முடியாமல் போகலாம் என்பதை நன்கறிந்து கொண்டவர்களாய் வேறு வேறு தாக்குதலணிகளில் இருந்த நண்பர்கள் பரஸ்பரம் விடைபெற்றுக் கொள்கின்றனர். 

சரியாக இரவு 7.00 மணிக்கு முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளும் இயங்க வைக்கப்படுகின்றன. 23ம் நாள் விடிகாலைப் பொழுதில் பெரும்பாலான காவலரண்களும் மினிமுகாம்களும் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வருகின்றன. பின்வாங்குதலும் முன்நகர்தலுமாகப்  பகல்பொழுது அமைந்திருக்க மாலை 4.00 மணியளவில் பிரதான முகாம் தவிர்ந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு 57 போராளிகளின் இழப்புடன் முதலாவது தாக்குதல் திட்டம் நிறைவிற்கு வருகின்றது.

 இவ்வாறு வீரச் சாவடைந்தவர்களில் கப்டன் ஜெகன், கப்டன் வதனன், மேஜர் திலீப் ஆகியோர் இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர்.
 பல தாக்குதல்களில் ஒன்றாகப் பணியாற்றி  இருந்திருக்கின்றார்கள். புகைப்படக் கருவியை வைத்திருந்த சக போராளியைப்  பார்த்து ஜெகன் கூறினானான் ”மச்சான்! எங்கள் மூன்று பேரையும் ஒரு படம் எடுத்து விடு.  நாளைக்கு சுவரில தான் நிப்பம்.  இப்படித்தான் இவர்களின் பமபல்  பொழுதாய்  அன்று இருந்தது. ”  . 23.11.1990 முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளையும் முன்னோக்கி நகர்த்திய அணிகள் பிரதான முகாமை குறிவைத்து சரியாக இரவு 8.00 மணிக்கு சகல பீரங்கிகளையும் இயக்கின.

பேரோசைகளுடன் முகாம் பகுதி அதிர்கின்றது. நள்ளிரவு தாண்டி 1.00 மணிக்கு பீரங்கிகளின் அனைத்து இயக்கமும் நிறுத்தப்பட யாழ்-வவுனியா பிரதான வீதியிலே வெடிமருந்து வண்டியுடன் தயாராக கரும்புலி லெப்.கேணல் போர்க். முகாமைச் சுற்றியிருந்த அனைத்து அணிகளுக்கும் வெடிமருந்து வண்டி செல்லப் போகும் செய்தி இரகசிய பாசை வழியாக அறிவிக்கப்படுகின்றது. 

போராளிகள் பாதுகாப்பாக நிலையெடுத்துக் கொள்கின்றனர். துணைத் தளபதி தீபனிடம் இறுதி விடைபெற்றுக் கொண்ட இரண்டாவது தரைக் கரும்புலி தன் இலக்கு நோக்கி நகர்ந்து சென்று பிரதான முகாமின் மையப்பகுதியில் வெடிக்கின்றான். மாங்குளம் பிரதேசம் முழுவதுமே அதிர போர்க் காற்றோடு கலந்தான். புகைமண்டலமாக காட்சியளித்த முகாம் பகுதியை நோக்கி நிலையெடுத்திருந்த புலியணிகள் விரைந்து சென்று சல்லடை போட்டு முகாமை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றன.

 இத் தாக்குதல்களில் பங்கு கொண்ட போராளிகளில் மொத்தமாக 108 பேர் வீரச்சாவடைந்தனர்.

இவ்வாறாக விடுதலையை நேசித்து  நின்ற எம் இளைஞர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளில் அளவிட முடியாதவை. சொற்களில் வர்ணிக்க முடியாதவை. இவர்கள் விடுதலை வேண்டிப் பட்ட துன்பங்கள், இழப்புகள், வேதனைகள் அளவிட  முடியாதவை.  என்றோ ஒரு நாள் இவர்களின் உயிர்விலைக்கான அறுவடை பெறப்படும். அப்போது வருடத்தின் இந் நாட்களில் இன்றைய இளைஞர்களிற்கான வழிகாட்டிகளாக இவர்கள் ஒளிவீசிப் பிரகாசிப்பர்.

போர்க் அவர்களின் மன நிலை எப்படி இருந்தது .


“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்,


வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. 

“நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.
அந்தக் குரலில் உறுதி தெரிந்தது ”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில்  “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.

"போர்க்"கின் மன நிலை எப்படியிருந்தது உறவினர்கள்,


இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார். அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.


“ தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?   ” ‘ஏன் சாகப் போறியளோ’ கேள்வி கேட்டனர்  பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப் போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன ”  அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்  படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணன் கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்......
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.


கடைசியாகத் தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சு விடுங்கோவன் ஆசையாயிருக்கு” எனச் சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.  சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.  சிறிது நேரத்தின் பின்  தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார். இப்படித்தான் ஒவ்வொரு கரும்புலி  மறவர்களும் தங்களின் இரகசியத்தைப் பாதுகார்த்தார்கள்.


90களில் இருந்து யாழ் மாவட்டம் எமது கட்டுப் பாட்டில் இருந்தது. இராணுவம் இப்படியான சண்டைகளில் தான் ஈடுபடும். அச்சம்பவத்தில் பங்குபற்றிய போராளி ஞானகி குறிப்பிடுகையில்,திடிரென பின் வாங்குவது அவர்களின் தொடர் நடவடிக்கையாக இருந்தது. காவல் அரணைத்  தாக்க வந்த இராணுவத்தின் முயற்சியை முறியடித்து முதன்முதலாக இராணுவத்தின் பொடியை எடுத்த பெருமையுடன் பெண் போராளிகளின் வீரத்தை நிலைநாட்டி இறுதியில் தன்னையும் அர்ப்பணித்த கப்டன் அஜித்தா.





22/12/1990 கட்டுவனில் பெண் போராளிகளின் வீரம்,

அக்காலப் பகுதியில் யாழ் மாவட்டத் தளபதியாக பாணு இருந்தார்.  மகளீருக்குக் கட்டளை அதிகாரியாகத்  தளபதி விதுசா இருந்தார்.  அப்பொழுது  நாங்கள் சிறு சிறு குழுக்களாக  யாழ் மாவட்டத்தைச்  சுற்றி இராணுவம் உள்ளே வராதவாறு காவல் அரண்களை அமைத்திருந்தோம். 

 அப்பொழுது கட்டுவன் பகுதியில் அஜித்தா மற்றும் ஜெனி தலைமையில் பல பெண் போராளிகள் காவல் கடமையில் நின்றோம். 

அக்கட்டமைப்புக்குப் பொறுப்பாக ஒரு பகுதிக்கு கப்டன் அஜித்தா பொறுப்பாகயிருந்தார்.  அடுத்த பகுதிக்குப் பொறுப்பாக ஜெனி இருந்தார்.  இரண்டு அணிகளிற்கும் இடையில் இருந்த காவலரணைப்  பிடிப்பதற்காக விடிகாலை 5.30 மணி இருக்கும்.  கனரக ஆயுங்களால் தாக்கியவாறு பெரிதாகக்  கத்திக்கொண்டு இராணுவம் முன்னேறி வந்தது.

 ஆனால் அவன் வந்து ஏறிய இடம் எமது வுறன் LMG வைத்து இருந்த இடம் ஆகும்.  அதனால் இராணுவம் கிட்ட வரும் வரை எமது போராளி செறிவான சூட்டை வழங்கிக்  கொண்டிருந்தார்.   அதனால் பல இராணுவம் காயம் அடையும்  நிலை அவர்களிற்கு ஏற்பட்டது. 

 அதை விட நாங்கள் வாழ்வா? சாவா?  என அனைத்தும் பெண்போராளிகளோடு நானும் நின்று கடுமையாகச் சண்டையிட்டோம்.  அதில் கப்டன் அஜித்தா அவ்விடத்தலே  வீரச்சாவு அடைந்தார்.  இன்னொரு  போராளி செல்வா அச்சண்டையில்   இரண்டு  கைகளையும்  இழந்தார்.  அச்சண்டையில் ஒரு இராணுவத்தின் பொடி எடுக்கப்பட்டது.  அவன் வைத்திருந்த ஒரு டொங்கான் எறிகணை செலுத்தியும் மேலும் பல ரவைகளும் அவனிடம் இருந்து எடுக்கப்பட்டது. 

விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள்

அச்சண்டையை நாம் வெற்றிகரமாக முறியடித்தோம்.  அதில்  நான் உட்படமேலும் பல பெண் போராளிகள் காயம் அடைந்தோம்.   என அதில் பங்குபற்றிய போராளி ஞானகி குறிப்பிட்டார். 

இந்  நவடிக்கையில் வீரச்சாவு அடைந்த போராளிகளின் விபரம்.
01 கப்டன் ஆசா பத்மாவதி, கலா, யாழ், வீரப்பிறப்பு06/04/1968 வீரச் சாவு  22 /12/1990

 02 கப்டன் அஜித்தா,.    சுகுணராணி, கந்தையா, யாழ் பிறப்பு22/02/1968.வீரச்சாவு:22.12.1990

 03 வீரவேங்கை சாம்சன்,     செல்வநாயகம் செல்வச்சந்திரன்.யாழ் பிறப்பு:26.04.1971 வீரச்சாவு:22.12.1990

 04 வீரவேங்கை.ஸ்ராலின்.   துரைரட்ணம் பபிதரன் பிறப்பு:28.03.1972  வீரச்சாவு:22.12.1990 


04 வீரவேங்கை அலன்.   குருசாமி ஜீவராசா, யாழ்,பிறப்பு:
27.01.1976. ,வீரச்சாவு:22.12.1990.

05 வீரவேங்கை.றமா.    லோகேஸ்வரி சிதம்பரப்பிள்ளை, முல்லை பிறப்பு:02.02.1975   வீரச்சாவு:22/12/1990

06 ,வீரவேங்கை  ,ரதிகலா.    சுகந்தினி(யாழ்)பிறப்பு 03.03.1975/:   வீரச்சாவு: 22.12.1990  
 மேற்படி இவர்கள் அவ்வெற்றிகரத்  தாக்குதலிற்கு பெருமை  சேர்த்ததோடு அச்சண்டையில் தங்களின் உயிரையும் அர்ப்பணித்தனர்.

அஜித்தாவின் போராட்ட வாழ்வு பற்றி அவரோடு வாழ்ந்த பெண் போராளி குறிப்பிடுகையில்.......

 எதிரியை வீழ்த்தும் துப்பாக்கிகளில் தனது துப்பாக்கியும் ஒன்றாக இருக்கவேண்டும் ! 


அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப் பார்க்க துப்பாக்கி இருக்காது. அநேகமாக எல்லோருக்கும் தெரியும் அஜித்தாக்காதான் எடுத்திருப்பா  என்று.  இன்று இந்தத் துப்பாக்கியில் இருக்கும் கவலையீனம்  தான் நாளை எமது போராளிகள் உயிரைக்  கொடுத்தெடுத்த துப்பாக்கிகளிலும் இருக்கும்.

 அவர்களின்ர  உயிர்கள் தான் இந்த துப்பாக்கிகள். ஆனபடியால் அவற்றை எங்கட உயிரைவிட மேலாக நினைக்க வேண்டும். கவனமாக அவற்றை நேசித்தபடி   வைத்திருக்க வேண்டும் என்று கூறி திரும்பத் தருவா.

இந்தக்  காலத்தில்தான் எங்களுடைய பாசறை அமைந்திருக்கும் பகுதி ஒரு சிறு அழகான குடியேற்றமாக அற்புதமான பூங்காவாக மாறிக்கொண்டிருந்தது. ஒரே பாதையைச் சுற்றி எமது வாசஸ்த் தலங்களாக சாக்குக் கொட்டில்கள். அத்தனை கொட்டில்களுக்கும் இடையில் ஓரு வித்தியாசமாக பளிச்சென்று ஒழுங்கா அமைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் ஓழுங்காக துப்பரவாக அடுக்கப்பட்டிருக்கும்.  

. அந்த குழுவுக்குக் கொடுக்கப்  பட்டிருக்கும் வேலைகள் யாவும் நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டிருக்கும். அல்லது சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருக்கும். பார்த்த உடனேயே பட்டெண்டு சொல்லி  விடலாம் அது அஜித்தாவின் குழு என்று.  அந்த அளவிற்கு வேலைகளைச்  சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்றும், எந்தளவு  கெதியாக வேலைகளைச்  செய்கிறோமோ அந்தளவிற்கு இயக்கத்தின் வளர்ச்சி, போராட்டவளர்ச்சி விரைவுபெறும் என்பதும், தரப்படுகின்ற வேலைகளை மகிழ்வுடன் ஏற்றுச்  செய்ய வேண்டும் என்பதும் அஜித்தாக்காவினுடைய விரிவுரைகளாக இருக்கும். விரிவுரைகளுக்கு மட்டுமல்ல அஜித்தா, அந்த விரிவுரைகளுக்கு விளக்க குறியீடாகவும் இருந்தவள்.

அஜித்தா இந்த போராட்டத்திற்குக் காலடி எடுத்து வைத்த காலகட்டம் வித்தியாசமானது. பெண்கள் தாமும், தமது குடும்பமும், வீட்டு வேலைகளும் தான் உலகம் என்று எண்ணியிருந்த சமூக அமைப்புக்குள் இருந்து அந்தத் தடைகளை உடைத்து வெளியேற வேண்டிய காலம். யாழ். மாவட்டத்திலிருந்து நேரடியாக ஆயுத பயிற்சிக்குப் பெண்கள் அனுப்பப்படவில்லை. ஆனாலும் இந்த சமூகத்தின் மாறுபட்ட பார்வைகளுக்கு மத்தியில் இந்தத் தேசத்திற்காக ஏதோ ஓரு வகையில் தன்னுடைய செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதனால் விடுதலைப் புலிகள் மாணவர் இயக்கத்தோடு  தனது வேலைகளைச் செய்தாள்.
  
தொடர்ந்து கால ஓட்டத்தில் பெண்களுக்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அஜித்தாவும் ஒருத்தி. இயக்கத்தில் ஏற்கனவே ஓரு அண்ணா, மூடக் கொள்கையில் ஊறிப்போன சமுதாய அமைப்பு, அத்தகைய சூழலில் இருந்து அஜித்தா இயக்கத்துக்கு வந்தமை அவள் விடுதலையை எந்த அளவிற்கு நேசித்தாள் என்பதனைப் புலப்படுத்தும். 

ஓழுங்கான பயிற்சி.   அப்போது எந்த வேளையிலும் ஓட்டத்தில் அஜித்தா தான் முதல். பயிற்சியை முடித்து இந்த மண்ணில் இருந்து எதிரியை வீழ்த்தும் துப்பாக்கிகளில் தனது துப்பாக்கியும் ஒன்றாக இருக்க  வேண்டும் என்று வந்தவர்களுக்கு, ஆதிக்கம் அடிபணியவைக்கும் ஒப்பந்தத்தைத் திணித்தத  கண்டு குமுறினாள். எரிமலைகளுக்கு முன்னால் இந்த ஓப்பந்தம் எத்தனை நாளைக்கு நின்றுபிடிக்கும்? சில மாதங்களின் பின்னால்  எமது அனுமதியின்றி இந்த மண்ணில் எந்த அந்நியனும் நுழைய முடியாது. அப்படி நுழைய  முடியுமென்றால் அது எமது பிணங்களுக்கு மேலால்தான் என்று எமது பொறுப்பாளர் கூறி “இதற்கு நீங்கள் தயார் என்றால் எம்முடன் வாருங்கள்” என்றபோது அஜித்தா சொல்லாமல் கொள்ளாமலே வாகனத்தில் ஏறிவிட்டாள்.
சண்டை ஆரம்பித்து விட்டது. யாழ். மருத்துவபீடத்தில் இறக்கப்பட்ட இந்திய இராணுவம் அனைத்தும் சடலங்களாகச்  போயின.

இதில் பெண் போராளிக் குழுக்கள் பெரும் பங்கினை வகித்தனர். அங்கே சடசடத்த துப்பாக்கிகளில் அஜித்தாவின் துப்பாக்கியும் ஒன்று. வீழ்த்தப்பட்ட எதிரிகளின் எண்ணிக்கையில் அவளுக்கும் பங்குண்டு. பலத்த எதிர்ப்புகளுக்கும், இழப்புக்களுக்கும் மத்தியில் எமது மக்களின் உடல்களை ஏறி மிதித்தபடி அங்குல அங்குலமாக முன்னேறியது இந்திய இராணுவம். 

புற்றீசல் போல் புறப்பட்டவர்களைப் புலிப்படை பொசுக்கியது. ஆனைக்கோட்டை, தாவடி, தெல்லிப்பளை என இராணுவத்தை அஜித்தா எதிர்கொண்டாள். தெல்லிப்பளையில் இவளுக்கு மோசமான வயிற்றுளைவு எழுந்து நடக்கவே முடியாது. திரும்பும் இடமெங்கும் ஆக்கிரமிப்பாளர்களின் துப்பாக்கிகள் குறி பார்த்தபடி. ஆனால் அவளின் உள்ளம் சோர்வடையவில்லை. விடுதலைக்கு மட்டும் தான் அங்கே இடம் கிடைத்தது. அஜித்தாவைப் பொறுத்த வரையில் வித்தியாசமான கஷ்டங்கள் நிறைந்த ஆனால் மகிழ்ச்சியான ஓரு புது வாழ்வை எதிர்கொண்டாள்.

 அதுதான் அந்தக் காட்டுவாழ்க்கை. அங்கே எங்களுக்கு எல்லாமே நாங்கள்தான். எமதுதேவைகள் எல்லாவற்றையும் நாமேதான் பூர்த்தி செய்யவேண்டும். உடுப்புத் தைப்பதிலிருந்து வெடிபொருட்கள், கண்ணிகள் உற்பத்தி செய்வது வரைக்கும் அஜித்தாவின் கை படிந்திருக்கும். அங்கிருந்த அனைத்துப்பெண் போராளிகளும் அணிந்திருந்தது அஜித்தா – தைத்த உடுப்புத்தான். இரவு, பகல் என்று எந்த வித்தியாசமும் அவளுக்கில்லை. அவ்வளவிற்கு வேலை இருந்தது. அந்தளவிற்கு அவளின் கடமை உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.

அவளின் அண்ணன் போராளி தியாகு


பக்கத்தில் உள்ள முகாமுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தான். அவள் அதிகமாகக் கூறுவாள்.  அறியாமல் கூட நான் தவறு செய்யக்கூடாது. அப்படித் தவறு செய்து விட்டால், நான் தண்டனை பெறும்போது அண்ணாவுக்கு அவமானம்* என்று. எந்தப் பிள்ளைகளையும் அன்பாகத்தான் அணைப்பாள். ஆனால் கூடவே  கண்டிப்பும், தவறுகளுக்கான தண்டணைகளை வழங்கிவிட்டு பின் கூப்பிட்டு ஆறுதலாக அந்தத் தவறுகள் இனிமேல் விடக்கூடாது என்றும், அதற்காகத்தான் தண்டனைகளைத் தந்தேன் என்றும் மிக நீண்ட விரிவுரை. ஆம்! அவள் மகளீர் படைப்பிரிவைப் பொறுத்த வரையில் ஒரு பேராசிரியர்தான். அன்று எல்லாம் வழமையாகத்தான் இருந்தது. ஆனால் அஜித்தா மட்டும் விம்முகின்றாள்.  ஆற்றமுடியாத அழுகை, எவராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லோருமே  அப்படியே உறைந்து போனார்கள். முகாமிலுள்ள அத்தனை பேரும் ஒன்று கூடிய ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் பின் மெல்ல எல்லோரும் அதிர்ந்தவர்களாய்… அஜித்தாவின் அண்ணாவிற்கு இயக்கக்கட்டுப் பாட்டு விதிகளை மீறியமைக்காய்…

 அதிஉயர் தண்டனை.  எந்த அண்ணனுக்காகதான் அறியாத தவறு ஒன்றுக்காகக் கூட தண்டனை பெறக்கூடாது என்று இருந்தாளோ, அந்த அண்ணன் தெரிந்து விட்ட குற்றத்திற்காகத் தண்டனை. அவள் அழுததெல்லாம் அண்ணன் இயக்கத்தின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்து விட்டான் என்ற ஆத்திரத்தாலும், அவமானத்தாலும் தான். அந்தத் தண்டனையை தானே  வழங்கப்போவதாகக் கேட்கிறாள். முகாம் பொறுப்பாளர் ஊடாகத் தலைவரிடம் கேட்டாள். அதைப் தலைவர் அனுதிக்கவில்லை மாறாகச் சொர்ணம் அண்ணை மற்றும் றோவட் அண்ணை இருவருமே அக்கடமையைச் செய்தார்கள். 


திலீபன் அண்ணைக்குப்  பக்கத்தில் இருப்பவர் மேஜர் றோவட் அண்ணை,


ஆனால் இயக்கம் மறுத்து விட்டது.  அவளின் விசுவாசத்திற்கு முன்னால் நாங்கள் விக்கித்துப் போனோம். அதற்குப் பின்னால் இந்தத் துரோகத்தினால் உள்ளுக்குள்  வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் எதுவுமே நடக்காததுபோல் அமைதியாகி  விட்டாள். தொடர்ந்து தனது குழுவும் தன் வேலைகளுமாக முன்னையைவிட இன்னும் தூய்மையைப் பேணுபவளாக இருந்தாள்.  எமது மகளீர் படைப்பிரிவு புதிய போராளிகளை உருவாக்கி விரிவடைகின்றபோது

 ஒரு படையணியின் கப்டன்அஜித்தா காட்டிற்குள் இருந்து நாட்டிற்கு வர அதற்குள் அஜித்தாவும் ஒரு குழுத் தலைவியாக வந்தாள். மூன்று வருடங்களுக்குப் பின்னால் பெற்றோரை இவள் சந்தித்தபோது இந்த நிகழ்வினை அவள் எப்படிச் சொன்னாள் என்பதெல்லாம் எமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. தாய்ப் பாசத்துக்கு முன்னால் அண்ணனின் நிலையினையைத் தங்கை சொல்லும்போது அவள் உள்ளம் பலவிதமான உணர்வுகளைச் சந்தித்திருக்கும் என்பதுதான்.

காட்டிற்குள் இருந்து நாட்டிற்கு வந்த கொஞ்சக் காலத்திற்குள்ளேயே வரலாற்று எதிரியுடன் மீண்டும் யுத்தத்தை நடத்தினோம். பலம் வாய்ந்த எதிரியும் பலம் வாய்ந்த கோட்டைமதில்களைச் சுற்றியும் முற்றுகை யுத்தம் நடாத்தினதில் ஒரு அணிக்கு அஜித்தாவின் தலைமை பொறுப்பேற்கின்றது.
அப்போதெல்லாம் "அவ்ரோ” விமானமும், "பொம்மர்" விமானங்களும் குண்டுகளை வீச இன்னொரு விமானம் உணவுகளைப்போடும். இவற்றிற்கு மத்தியில் வீரசிங்கம் மண்டபத்தில் 5 ஆவது மாடியில் அஜித்தா எல்.எம்.ஜி உடன் நிற்பாள். கோட்டைக்குள்ளே சில பார்சல்கள் விழ அதை எடுக்க ஓடி வரும் இராணுவத்தினர் அந்த இடத்திலேயே விறைத்து விடுவார்கள். 

கோட்டை முகாமைத் தாக்கி அழிக்கும் முயற்சி ஒன்றிலும் அவள் தலைமை ஏற்றுக் குழுவுடன் சென்றாள். முற்றுகைப் போருக்கு முகம் கொடுக்க முடியாத இராணுவம் பின்பக்கத்தால் ஓடியது. கோட்டையில் இன்று புலிக்கொடி பறக்கிறது. ஓய்விற்கு அவளுக்கு அவகாசம் இல்லை. பலாலி இராணுவம் வெளியேறியபோது குப்பிளான் கட்டுவன் பகுதிகளில் அவள் துப்பாக்கி முழங்குகிறது. கட்டுவனில் எதிரியை மறித்து நிலைகளை அமைத்துக் காவல் கடமையைத் தொடர்ந்தாள்.

25 அல்லது 30 யார் தூரத்தில் இருக்கும் இராணுவ நிலைகளை அறிய வேண்டும். அவர்களின் நடமாட்டங்களை அறிய வேண்டும். முகாம் பலப்படுத்தும் அல்லது விஸ்தரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வேலைகளின் போது அவள் முன்னால் சென்ற பின்பே பிள்ளைகள் பின்னால் செல்ல வேண்டும். எமது நிலைகளுக்கு முன்னால் சென்று சில நிலைகளுக்குக் கிட்ட நின்று அவள்துப்பாக்கி சத்தமிடும். எந்தப்போராளியும் அவளுக்குத் தெரியாமல் முன்னால் போக முடியாது. அவளுக்குத் தெரிந்து அவள் நிற்கையில் தான் முன்னால் போக வேண்டும். இது அவளின் இறுக்கமான கட்டளை. அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்.

 அவளின் நடத்தையில் அன்பும் கண்டிப்பும் நிறைந்திருக்கும். "நாங்கள் ஓரு விடுதலை அமைப்பு. அதிலும் மிக மோசமான சமூக அழுத்தங்களில் இருந்து புறப்பட்டவர்களின் அடுத்த பரம்பரை எம்மைப் பார்த்து எமக்கு பின்னால் வரவேண்டும். ஆனபடியால் நாங்கள் ஓழுக்க சீலர்களாக, பண்பாடுள்ளவர்களாக, வீரமுள்ளவர்களாக, மொத்தத்தில் தனித்துவமுள்ளவர்களாக வளர வேண்டும்” என்பன அவள் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வசனங்கள்.

22-12-90 அன்று கட்டுவன் பகுதியில் இருந்த இவளது பக்கமாக இராணுவம் முன்னேறுகிறது.ஒரு குழுவுடன் நின்ற இவளுக்குத் தகவல் வருகிறது. மறுபக்கமாக எதிரி வெளியேறுகின்றான் என்று. ஓடி வந்து கட்டளைகளைப் பிறப்பித்து நிலை எடுத்து ஓவ்வொருவராகக் குறிபார்த்துச் சுடுகின்றாள். “இந்தா ஒருத்தன்…ம் அடுத்தவன்…” எண்ணி எண்ணி அவதானமாகத்தான்… “எந்த நிலையிலும் பதற்றப்படாது, பரபரப்படையாது நிலைமையை விளங்கி ரவைகள் வீண் போகாது அடிக்கவேண்டும்! "என்றவளின் துப்பாக்கி நிதானத்தை விட்டு மெல்லச் சரிகிறது. வீரத்தின் சாட்சியாய் நெஞ்சிலே குண்டினை ஏந்தியபடி குருதி கொப்பளிக்க அவள் சாய்கிறாள். ஆம்! எங்கோ இருந்து ஒரு கொடியவனின் குண்டு அவள் உடலில்.  அந்தச் சண்டையில் பெண் போராளிகள் பல ஆயுதங்களை எடுத்தார்கள். அவள் அடிக்கடிச் சொல்வாள் சண்டையில் நாங்கள் ஆயுதங்கள் எடுக்க வேண்டும்.  அப்பிடி நல்லா அடிபட வேண்டும்! என்று. அப்படியே சண்டை பிடித்தார்கள். ஆயுதங்கள் எடுத்தார்கள். ஆனால் அந்த உணர்வினை ஊட்டியவள் அங்கே இல்லை. ஓரு உன்னதமான போராளியை நாம்  இழந்தோம். ஒரு பேராசிரியரை மகளீர்படைப்பிரிவு இழந்தது. ஆனால் அவள் வளர்த்த பிள்ளைகள் அவளின் உணர்வைச் சுமந்து இன்று பல களங்களில்…

(பாகம் 4ல் பகுதி03)





05 /01/1991 அன்று தச்சன்காட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 21 தொடர் காவல் அரன் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தத்  திட்டமிடப்பட்டது.



இது இப்படித் துயரமாக இருக்க 05 /01/1991 பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றைச் செய்து காங்கேசன்துறை முகாமைச்  சுற்றியுள்ள பகுதியைப் பிடித்து பலாலியை பலப்படுத்த சிங்கள இராணுவம் திட்டமிட்டது.  அதற்கு அமைவாக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது இராணுவம், ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட எந்த இழப்பும் இல்லாமல் தச்சன் காட்டுப் பகுதியை கைபற்றியது சிங்களப் படை. 

 மற்றும் கொல்லன் களட்டி எமது மக்களின் வெங்காய் வயல்களையும் ஏனைய வாழை கிறப்ஸ் தோட்டங்களையும் கைப்பற்றி தச்சன் காடு மாவட்ட புரம் ஊடாக பாரிய தொடர்காவல் அரன்களை அமைத்தது சிறிலங்கா இராணுவம்.




இதனால் பல மக்கள் தங்களின் சொந்தத் தொழிலான விவசாயத்தை இழந்தார்கள். அப்பொழுது யாழ் மாவட்டத்  தளபதியாக இருந்த தினேஸ் அல்லது பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஆளனிப்பற்றாக் குறையாக அப்பிரதேசம் விடுபட்டதாகத் தலைவரிடம் குறிப்பிட்டார். 

அதை தொடர்ந்து தலைவர் அப்பிரதேசத்தை மட்டும் தான் பொறுப்பெடுத்ததோடு அப்பிரதேசத்தை தான் நேரடியாகப் பாதுகாப்பதற்காக தளபதி சொர்ணத்தின் தலைமையில் தலைவரின் நேரடி வழிநடத்தலில் செயல்படும் one  four படையணி அங்கே அனுப்பப் பட்டது.

அவ்வகையில் தலைவரோடு நீண்ட காலமாக பாதுகாப்புக் கடமையில் இருந்த கப்டன் தீபன். மேஜர் சலீம்-கட்டன்  கேதீஸ் அவர்களோடு நானும் மட்டக்களப்பு மாவட்டம் இருந்த எமது படையணிக்காக புதிதாக  வந்த 75 போராளிகளையும்  இணைத்து மற்றும் எமது படையணியில் இருந்த போராளி சூட்டி, போராளி கிருஷ்ணா எனத் தளபதி சொர்ணம் அண்ணையால் கப்டன் தீபன் தலைமையில் ஒரு கொம்பனி சண்டைக்கு உரியவாறு உருவாக்கப்பட்டது.

அதில் 15 போராளிகளிற்குச் சூட்டி அடுத்து 15 போராளிகளிற்கு போராளி கிருஷ்னா 15 போராளிகளிற்கு மேஜர் சலீம், அடுத்து 15 போராளிகளிற்கு மேஜர் கேதீஸ் என அணிக்கொமாண்டர்கள் நியமிக்கப்பட்டு அதற்கு உதவியாகப் பதிங்கிச் சுடும் போராளி லெப் வீரா இணைக்கப்பட்டார். அதை விட எனது தலைமையில் ஒரு வேவு ரீம் உருவாக்கப்பட்டது.


அதில் லெப் நகுலேஸ், லெப் ராஜா போராளி வேல்ராஜ், போராளி உதயன் என 5 ந்து பேர் கொண்ட அணி  உருவாக்கி இரவு நேரங்களில் இராணுவ  முகாம் மற்றும் தச்சன்காட்டுத் தொடர் காவல் அரன்கள் தொடர்பான தகவல்களை  எடுக்குமாறு எங்களிடம் சொர்ணம் அண்ணையால் எங்களிற்குச் சொல்லப்பட்டது.

 தொடர்ந்து எங்களின் அணி தச்சன் காட்டிற்குச் சென்றது.  சிறப்ஸ் தோட்டங்களும், வாளை மற்றும் வெங்காய வயல்கள் எங்களை வரவேற்றது.  அது மட்டும் அல்ல அங்கே ஒரு சில முதியவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் மிகவும் நாட்டுப்பற்று நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.


14/01/1991 தமிழர் நாளான தைப்பொங்கள் அன்று அங்குள்ள முதியவர்கள் பொங்கல் செய்து அனைத்துப் போராளிகளிற்கும் பரிமாறி தங்களின் அன்பை வெளிக்காட்டினார்கள்.


அது அப்படி இருக்க எங்களின் வேவு அணி ஒவ்வொரு இரவும் இராணுவ முகாம் உள்ளே  சென்று தகவலை எடுத்துக்கொண்டு இருந்தோம். வழமையாக நானும் ராஜாவும் உள்ளே சென்று வருவோம்.  ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும் தொடர் காவல் அரனை பல நாட்களாகக் கண்காணித்து ஆமி இல்லாத காவலரனிற்கு மேலால் ஏறி உள்ளே செல்வோம்.  ஏனெனில் தரைப்பகுதிகள் அனைத்திலும் முள்வேலிகள் போடப்பட்டுயிருக்கும்.  அத்தோடு கீழே மிதி வெடிகளும் வைத்து இருப்பார்கள்.  அதனால் நாங்கள் இதைப் பயன்படுத்துவோம்.  இது எங்களிற்குப்  பாதுகாப்பாகயிருந்தது.

உள்ளே சென்று இரவு 3 மணிக்கு வெளியே வருவதற்காக காவல் அரனிற்கு மேலால் ஏறும்போது இராணுவம் எங்களைக் கண்டு சுடத்தொடங்கி விட்டது.  ராஜா வெளியே ஓடி விட்டான்.  நான் தடுமாறி கேம்புக்குள்ளே ஓடிவிட்டேன். ஆனால் நான் பதட்டம் அடையவில்லை.  இராணுவதின் கேம்புக்குள் சிக்கி விட்டோம் அவனிக்குத்தெரியாமல் மறைவாகயிருந்து வெளியே செல்ல வேண்டும் என நினைத்து வேகமாக நடந்து சென்று மாவட்ட புரப்பக்கமாகயிருந்த மக்களின் பாழ் அடைந்த விட்டுப்பக்கம் சென்றேன். 

அங்கு இருந்த ஒரு உயரமான விட்டிற்கு மேலே ஏறி ஓட்டைக் கழட்டி லெவல் சீற்றுக்குள் இறங்கினேன், அதற்குள் மறைந்து கொண்டுயிருந்தேன்.

 காலை விடிந்து ஒரு பத்து மணியிருக்கும் வெளியே அவதானித்தேன் ஆமியின் நடமாட்டம் தெரியவில்லை.  வோக்கியை ஓன் பண்ணி சொர்ணம் அண்ணையிடம் பிரச்சனையைத் தெரிவித்தேன்.  அவர் உள்ளே இருக்கும் எங்களின் போராளிகளோடு கதைக்க வேண்டாம் எனவும், இரவானதும் குப்பியைக்கடிக்கக் கூடியவாறு பொக்கேட்டிற்குள் வைத்துக்கொண்டு கடற்கக் கரைப்பக்கம் சென்று அங்கே அவர்களைக்  கண்காணித்து அவர்களின் நடமாட்டம் பற்றித் தனக்குத் தெரிவிக்கும்மாறு என்னிடம் சொன்னார்.

அது இலகுவான விடயம் அல்ல நிறையத் தூரம் நடந்து செல்ல வேண்டும்.  போனால் இந்த இடத்திற்கு வர முடியாது என்பதும் எனக்குத் தெரியும்.  அதனால் இரவு பத்து மணியானதும் வீட்டில் இருந்து கீழே இறங்கி காலைக் கடன்களை முடித்து பழைய கிணற்றில் தண்ணீர் அள்ளி அதைக் குருவிகள் குடிப்பதற்கு வைத்துப் பார்த்தேன்.  அதைப் புழுனி என்ற ஒரு குருவி குடித்துச்சென்றது.  இருந்தும் அதைக் குடிப்பதற்கு மனம் வரவில்லை நடக்கத் தொடங்கினேன்.  இடையில் தென்னைமரம் ஒன்று காய்த்துக் கிடந்தது இரண்டு நாள் சாப்பிட்டு கடும்பசியாகயிருந்தது.  அதனால் மரத்தில் ஏறி மூன்று இளநீர் பிடுங்கி இளநீரையும் குடித்து வழுக்கலையும் சாப்பிட்டேன்.  எனது பசி அடங்கியது.

அங்கே சென்று அவதானித்தேன் கடல் கரைப்பக்கமும் காவல் அரன்கள் இருந்தது செறிவாக்க  இருக்கவில்லை. ஆனால் புல்வெளிகள் பெரிதாக வளர்ந்து இருந்தது. நான் தவண்டு,  தவண்டு கடற்க் கரைக்குச் சென்றேன். அங்கே சிறிது சிறிது கற்பாறைகள் காணப்பட்டது, நான் ஒரு கற்பாறைக்குள் புகுந்துகொண்டேன்.

அது சூனியப் பிரதேசம் என்ற காரணத்தால் ஆமியின் வோட்டோ அல்லது நடமாட்டவோ இருக்கவில்லை. அடுத்த நாள் சொர்ணம் அண்ணைக்கு வோக்கியை ஒன் பண்ணி அண்ணைய் நான் உள்ளே சென்று ஒரு பத்து ஆமியைச் சுட்டு விட்டு நானும் தற்கொலை செய்யலாம் என அவருக்கு ஆலோசனை வழங்கினேன்.

 அப்படி ஒரு ஆமியையும் சுட வேண்டாமாம் அப்படி நீர் சில சமயம் பிடிபட்டால் பாதுகாப்பு முகாம்களை மாற்றவேண்டிவருமாம், என்று அண்ணை சொன்னவர்.  உன்னை றைபுளையும் கோழ்சறையும் களட்டித் தண்ணீருக்குள் ஏறிந்து விட்டு யட்டியோடு நீந்தி கீரிமலைக்கு வருமாறு அண்ணை சொல்லியுள்ளார்.  உமக்கு புதுறைவுள் யூனிபோம் தரலாம் என்று தலைவர் சொன்னதாக அவர் எனக்குச் சொன்னார்.  அவர் சொன்னதுபோல் நான் நீந்திக் கீரிமலைக்கு வந்து சேர்ந்தேன்.  புது T81 றைவுள் புது வரிப்புலிச் சீருடை வைத்துக்கொண்டு எனது வரவைப் பார்த்துகொண்டு சொர்ணம்அண்ணையிருந்தார். நான் சென்றதும் உடுப்பை மாற்றிக் கொண்டு றைபுளையும் கட்டிக்கொண்டு மீண்டும் தச்சன் காட்டிற்கு இருவரும் சென்றோம்.




இத்தகவலை எவருக்கும் சொல்லக் கூடாது எனசொர்ணம் அண்ணை எனக்குத் தெரியப்படுத்தினார். அங்கே சென்று ராஜாவைச் சந்தித்தேன்.  என்னை விட்டதற்காக 5000 தோப் ராஜாவிற்கு சொர்ணம் அண்ணையால் வழங்கப் பட்டிருந்தது.   மீண்டும் இருவரும் கடமையை செய்ய  ஆரம்பித்தோம்.





 இதற்குப் பின்னர் அப்பகுதியில் இருந்த  21 காவல் அரனையும் தாக்கி அழிக்க வேண்டும் எனச் சொர்ணம் அண்ணை திட்டமிட்டார்.


02/02/1991 எங்கள் அனைவரையும் தச்சன் காட்டில் இருந்து எழுதுமட்டுவாழ் தென்னந் தோட்டம் கொண்டுபோய் அங்கே தச்சன்காடு மினி முகாம் தங்குவதற்கான மாதிரிப்பயிற்சி அதாவது தடை உடைக்கும் பயிற்ச்சி நடைபெற்றது. அப்பயிற்சியைத் தளபதி சொர்ணம் அண்ணையே நேரடியாகயாகக்  கொடுத்தார். ரோப்பிரோ அடித்து தடை உடைத்து கடுமையான பயிற்சி அன்று நடைபெற்றது.


பயிற்சி முடிந்து மீண்டும் தச்சன்காடு வந்து சேர்ந்தோம் அங்கே அமைந்து இருந்த 21 ரு தொடர் காவல் அரன்களையும் அடிப்பதுதான் எங்களின் திட்டமாகயிருந்தது.

.05/02/1991 இரவு 8  மணிக்குச் சண்டை ஆரம்பம் எனச் சொர்ணம் அண்ணையால் எங்களிற்குச் சொல்லப்பட்டது.

 முதலாவது எமது தயாரிப்பான பசிலன் அடிப்பது எனவும் பின்னர் தடையை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வது எனத் திட்டம் இடப்பட்டது.

ஆனால் பசிலன் அடிக்கும் போது அனைத்துப் போராளிகளும் முதலாவது Rவியில் சண்டைக்குத் தயார் ஆக நிக்க வேண்டும். அன்றைய சண்டைக்கான சங்கீதப் பாசை கொத்து ரொட்டி சாப்பிட்டாச்சா என்றால் சண்டைக்குத் தாயார் ஆக நில்லுங்கோ என்பதைக்குறிக்கும். தண்ணி குடிச்சாச்சா? என்றால் ஓம் என்றால் தானாக பசிலன் காரன் சண்டையை ஆரம்பிப்பான்.


ஆனால் அன்றையச் சாப்பாடும் கொத்து ரொட்டிதான். காவலரனில் இருந்து 400 மீற்றர் பின்னால் இருந்து அனைவரும் கொத்து ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். கொத்து ரொட்டி சாப்பிட்டாச்சா எனப் பசிலன் காரன் தீபண்ணையிடம் கேட்டான். சாப்பிட்டுக் கொண்டுடிருக்கின்றோம் என பதில் அளித்தார். ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் குடிச்சாச்சா என பசிலன் காரன் கேட்டான். அவரும் மறந்து போய் ஓம் என பதில் அளித்தார். உடனே அவன் பசிலன் தாக்குதலை ஆரம்பித்தான்.  பேர் இரைச்சலோடு போய் பசிலன் வெடித்தது.


எதிரி சண்டையை ஆரம்பித்து விட்டான். நாங்கள் 400 மீற்றர் பின்னால் நிக்கின்றோம். அப்பொழுது நான் தீபன் அண்ணையிடம் போய் இது தவறுதலாக நடந்து விட்டது.  சொர்ணம் அண்ணையிடம் சொல்லி சண்டையை நிறுத்தி இன்னொரு நாளைக்கு இதைச் செய்வோம் என ஆலோசனை வழங்கினேன்.


ஆனால் அதைத் தீபன் அண்ணை நிராகரித்ததோடு அதைச் சொர்ணம் அண்ணை ஏற்கமாட்டார்.  நீர் முதலில் பாதையைக்காட்டு என என்னிடம் சொன்னார். அப்பொழுது நான் சூட்டி அண்ணையின் 15 பேர் கொண்ட அணியைக் கூட்டிக்கொண்டு காவலரனில் இருந்து 30 மீற்றர் கம்பி றோல் அருகில் கொண்டு விட்டேன். அப்பொழுது கப்டன் தீபன் அண்ணையும் எங்களோடுதான் வந்தார்.


சூட்டி அண்ணை தனது T81 துப்பாக்கியால் 3 றைவுள் கிறினெட்காவல் அரனை நோக்கி அடித்தார்.  3ன்றும் முன்னால் துப்பிக்கொண்டு விழுந்தது, ஆனால் தேவராஜ் தனது துப்பாக்கியால் காவல் அரனை நோக்கிச் சுட்டுக் கொண்டேயிருந்தான்.  நான் எதிரியின் இலக்கை அவர்களிற்குக்காட்டிக்கொண்டிருந்தேன். 

ஆனால் அது இலக்கைத் தாக்கவில்லை. அப்பொழுது நாங்கள் நிற்கும் இடத்தைத் துப்பாக்கிச் சுவாலை எதிரிக்குத்  தெளிவாகக் காட்டிக்கொடுத்தது, எதிரி 60 மில்லிமீற்றர் எறிகனையாலும் Ak LMG களாலும் கடுமையாத் தாக்கினான்.  அவ்வேளை எங்களோடு வந்த தலைமைப் பொறுப்பாளர் கப்டன் தீபன் அவர்களுக்கு  கழுத்தில் வெடிப்பட்டு அவ்விடத்தில் வீரச்சாவு அடைந்தார். 

தீபன் தீபன் எனச் சொர்ணம் அண்ணை கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். அதனால் வோக்கி அலறிக்கொண்டேயிருத்தது. அப்பொழுது நான் சொர்ணம் அண்ணையைத் தொடர்வு  எடுத்து தீபன் அண்ணை வீரச்சாவு என்பதைத்்் தெரியப்படுத்தியதோடு உண்மையாக நடந்த பிரச்சனையை அருக்குச் சொன்னேன். 

ஆரம்பத்தில் எனக்குப் பேசினார். பின்னர் நானும் காயம் அடைந்துவிட்டேன் என அவருக்குத் தெரியப்படுத்தினேன்.  காயம் அடைந்தவர்களையும் கூட்டிக் கொண்டு என்னையும் பின்னுக்கு வருமாறு கட்டளை வழங்கினார்.

எனது காலிலும் காயம் ஏற்பட்டது.  கடுமையான வலியாக எனக்கு இருந்தது.  அனைவரையும் கூட்டிக் கொண்டு பின்னால் வந்தேன். எனது சூவைக் கழட்டி எனது காலிற்கு மருந்து கட்டுவதை சொர்ணம் அண்ணை பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் என்னை மருத்துவமனைக்கு அனுப்பினார். 

அச்சண்டை மிகத் தோல்வியில் எமக்கு முடிந்தது. எமது தரப்பில் வேவு அணியில் இருந்த லெப் ராஜா மட்டக்களப்பு மற்றும்  2ம்லெப் நகுலேஸ்-வவுனியா  தலைவரின் முக்கிய பாதுகாப்புப் போராளிகளான கப்டன் தீபன் திருமலை- மேஜர் சலீம் யாழ்பாணம்- கப்டன் கேதிஸ் திருமலை  இவர்கள் உட்பட எமது தரப்பில் மொத்தம் 31 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இராணுவத்தின் தரப்பில் 7 பேர் கொல்பட்டனர். எமது அமைப்பில் வீரச்சாவு அடைந்த16 பேரின் விபரம் கீழே குறிப்பிட்டுள்ளேன்.


 01_ வீரவேங்கை -சுதாகர்-இயற்பெயர்:வெலிச்சோர் றொபேட்கெனடிஇலுப்பைக்கடவை, மன்னார்.வீரப்பிறப்பு:14.02.1972வீரச்சாவு:05.02.1991.

02 மேஜர்-சிறிஇயக்கப் பெயர்:கதிர்காமத்தம்பி இராஜசிறி-கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்-வீரப்பிறப்பு:17.07.1969 வீரச்சாவு:05.02.1991.


03 மேஜர் சலீம் தலைவரின் பெர்சினல் பொடிக்காட் இயக்கப் பெயர்:அல்போன்ஸ் யோன்பிறின்ஸ்ரன்-பாசையூர், யாழ்ப்பாணம்-வீரப்பிறப்பு:27.01.1969 வீரச்சாவு:05.02.1991.


04 கப்டன் திலக் இயக்கப் பெயர்:இரட்ணசபாபதி மகேந்திரராசா=07ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுவீரப்பிறப்பு:14.01.1971 வீரச்சாவு:05.02.1991.


05 கப்டன் கேதீஸ் தலைவரின் பெர்சினல் பொடிக்காட்இயற்பெயர்: பாக்கியராசா றொபேட்நிக்ஸன்பாரதிபுரம், திருகோணமலை வீரப்பிறப்பு:26.06.1969 வீரச்சாவு:05.02.1991.


06 கப்டன் தீபன் தலைவரின் பெர்சினல் பொடிக்காட்-சிவலிங்கம் ஜெயசீலன்=அலஸ்தோட்டம், சாம்பல்தீவு, திருகோணமலை வீரப்பிறப்பு:26.06.1967 வீரச்சாவு:05.02.1991.

07 கப்டன் அக்பர்-மாணிக்கம் யோகேஸ்வரன்-கச்சாய் தெற்கு, கொடிகாமம், வீரப்பிறப்பு:யாழ்ப்பாணம்20.08.1969 வீரச்சாவு:05.02.1991.


08 கப்டன் அஜித்தன் சோழராசா ஜெகதீஸ்வரன்-தாவளை, இயற்றாலை, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:14.07.1968 வீரச்சாவு: 05.08. 1991 .                                                         

:

09 லெப்டினன்ட்-பேனாட்அரவிந்தராசா நிர்மலன்-செல்வநாயகபுரம் திருகோணமலை வீரப்பிறப்பு:05.02.1971 வீரச்சாவு:05.02.1991.


10 லெப்டினன்ட் ஜேம்ஸ்-கந்தையா ஜெயக்குமார்அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.10.1971  வீரச்சாவு:05.02.1991.


11 லெப்டினன்ட் அசோக்-முருகன் இராசகுமார் இடைக்குறிச்சி, வரணி, கொடிகாமம், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:17.08.1966 வீரச்சாவு:05.02.1991.

இயக்கப் பெயர்:


12 லெப்டினன்ட் சுதன்-சின்னப்புபுஜீட் ஜெயசீலன்-மிருசுவில், கொடிகாமம்,  யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு.21.08.1969  வீரச்சாவு:05.02.1991.


13 லெப்டினன்ட் மணிமாறன்-சின்னத்தம்பி பாலேந்திரராசா-பதுளை வீதி, கரடியனாறு, மட்டக்களப்புவீரப்பிறப்பு :25.05.1965  வீரச்சாவு:05.02.1991.


14 2ம் லெப்டினன்ட்-நகுலேஸ் இயற்பெயர்:குமாரசிங்கம் சத்தியசீலன்-செக்கட்டிப்புலவு, வவுனியா. வீரப்பிறப்பு:23.09.1974 வீரச்சாவு:05.02.1991 இவர் அந்த மினி முகாம் தொடர்வாக எங்களோடு வேவு எடுத்த நாலு பேரில் ஒருவர் ஆவார். 


15 வீரவேங்கை எட்வேட் இயற்பெயர்:மயில்வாகனம் தயாபரன்-மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:25.04.1974  வீரச்சாவு:05.02.1991.


16 வீரவேங்கை சிவசோதிஇயற்பெயர் கணபதிப்பிள்ளை ரவீந்திரன்-தம்பிலுவில், அம்பாறை வீரப்பிறப்பு:13.01.1971 வீரச்சாவு:05.02.1991.

இதில் மொத்தம் 31 போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்,


சண்டை பாரிய தோல்வியில் முடிந்ததால் எமது தரப்பில் 31 போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். 30 திற்கும் மேற்பட்ட போராளிகள் காயம் அடைந்தனர். அதில் நானும் காயம் அடைந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்குச்  சென்று விட்டேன்.


அனைவரும் களமுனையில் இருந்து வெளியேற்றப் பட்டமையால் பதுங்கிச் சுடும் வீரா தலைமையில் ஒரு சிறிய அணிதான் தச்சன் காட்டுப்பகுதியை பாது காத்துக் கொண்டுயிருந்தது, அந்த குழுவிற்கு வீரமிக நம்பிக்கையான போராளியாக தளபதி சொர்ணம் அவர்களால் கணிக்கப்பட்டவன். 

அதை விட பதிங்கிச் சுடும் லெப்.வீராவின் பணி மிகச் சிறப்பாக இருந்தது, 

அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குள் 20 திற்கு மேற்பட்ட இராணுவ வீரர்களைச் சுட்டுத்தள்ளினான் லெப் வீரா.  ஆனால் மாவட்ட புரத்தில் கடாசியாக பதிங்கிச் சுடும்போது மரத்திற்கு மேல் இருந்து வீரா இலக்கை தேடிக் கொண்டிருந்தான். அப்போது இராணுவப் பகுதியில் இருந்து பதுங்கிச் சுடுபவனும் இலக்கைத் தேடிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் வீட்டிற்கு மேலே இருந்தான்.  வீரா மரத்திற்கு மேலே இருந்தான். இருவரும் இலக்கைத் தேடித்தேடி இறுதியில் இருவரும் இலக்கைக்் கண்டுபிடித்து விட்டார்கள்.


இருவரும் அன்றைக்குத்தான் ஒருதரை ஒருதர் குறி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இருவரும் திறமையானவர்கள். அந்த இராணுவ வீரனும் 6ற்கு மேற்பட்ட எமது போராளிகளைச் சுட்டுகொலை செய்ததோடு 10 திற்கு மேற்பட்ட போராளிகளைச் சுட்டு காயப்படுத்தினான். எனவே இருவரும் திறமையானவர்கள் தந்திரமானவர்கள் .

 என்ற காரணத்தால் இருவரும் ஒரே நேரத்தில் தங்களின் ஆயுதங்களின் விசைவில்லை அழுத்தினார்கள். இருவரிக்கும் ஒரே நேரத்தில் இடதுபக்கக் கண்களிற்குள்ளால் வெடிபட்டுப் பறிந்தது. இருவரும் ஒரே நேரத்தில் வீரச்சாவு அடைந்தார்கள். இதை ஒட்டுக் கேட்கும் கருவியூடாக விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தினார்கள்.

இது தான் இவர்களின் கடசி இலக்காகயிருக்கும் என்பதை இவர்கள் இருவரிக்கும் தெரிந்து இருக்க  வாய்ப்பில்லை.  08/03/1991 அன்று அவன் வீரச்சாவு அடைந்தான்.  இயற் பெயர் தம்பிமுத்து, தர்மசீலன், முகவரி ஏறாவூர்,மட்டு . வீரச்சாவு 08/03/1991லெப். வீரா என்ற நிலை அவனிக்கு சொர்ணம் அண்ணை அவர்களால் வழங்கப்பட்டது .  20 திற்கு மேற்பட்ட இராணுவத்தைக் குறிதவறாமல் சுட்ட பெருமை அவனையேசாரும். லெப் வீரா மட்டக்காப்பைச்சேர்ந்த  போராளி. எமது படையணிக்குப் பெருமை சேர்த்தான்.



 இதே காலம்தான் எமது இயக்கத்தில். தகடு வழங்கும் நடைமுறை உருவானது. 


 இருந்த அனைத்துப் போராளிகளிற்கும் தகட்டு இலக்கம் வழங்கப்பட்டது,


எமது வன்போர்பிரிவிற்கு 0, என்ற குறியீட்டுடன் வழங்கப்பட்டது. எனது முதலாவது தகட்டு இலக்கம் 0,149என்ற இலக்கம் வழங்கப்பட்டது. அதின் பொருள் எனக்கு முன்னர் இயக்கத்தில் சேர்ந்தவர்களின் தொகை படையணியில்148 என்பதாகும். அப்பொழுது எமது அணியில்  கடசியத் தகட்டு இலக்கம் 750  ஆகும். ஒவொரு மாவட்டங்களிற்கும் தமிழ் எழுத்துகளில் வழங்கப்பட்டது.

        

 சிறுத்தைப் படையணி கா. மாலதி படையணி எ.    சோதியாப் படையணி ஞா. யாழ் மாவட்டம்  உ. மன்னார் மாவட்டம் ஊ. மட்டக்களப்பு அ. புலநாய்வுத்துறை ஐ என வழங்கப்பட்டது, இதின் நோக்கம் சண்டையின் போது அவரின் உடம்பு முழுமையாகச் சிதைவு அடைந்தால் அவரை அடையாளம் காணுவதற்காகவே வழங்கப்பட்டது. தலைவரின்  சிந்தனையில் இதுவும் ஒன்றாகும்.





19 /03 /1991ஆணையிறவைத் தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர்.  அதற்கான ஆயுதக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பம்,

1991 இதே காலத்தில் ஆனையிறவைத் தாக்குவதற்காக திறமையான ஆண் பெண் போராளிகள் இனங்காணப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரு இடத்திற்கு இணைக்கப் பட்டார்கள். அனைவரும் அணி அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஆனையிறவைச் சுற்றி வேவு பார்ப்பதற்காக  விடப்பட்டார்கள். 

இது அந்தப் பக்கம் நடந்துகொண்டிருக்க அதை அழிப்பதற்கு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக லெப் கேணல் குட்டிசிறி தலைமையில் பெரிய ஒரு ஆயுதக் கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.

 அப்பொழுது ஆயுதக் கொள்வனவாளராக  இருந்த லெப் கேணல் சூட்டிசிறி அவர்கள் இக்கொள்வனவிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு சென்ற அவர்  பெரும் தொகையான ஆயுதம் வேண்டிக் கொண்டு சர்வதேசக்கடலில் வந்துகொண்டுயிருந்தார்.

 இயக்கம் கொள்வனவு செய்த, அவ் ஆயுதக் கப்பல் ஆழ்கடலில் வந்துகொண்டிருக்கும் போதே அதைப் பாதுகாற்பதற்காக தலைவரின் பாதுகாப்பு அணியைச் சேர்ந்த சுமார் 45 போராளிககள் தளபதி சொர்ணம் அண்ணையின் தலைமையில் கட்டைக்காட்டிற்குச் சென்றோம்.

அதில் போராளிகளிற்கு பொறுப்பாக வந்தவர்கள் மேஜர் கெனடி 15 பேர்  மாறன் 15 பேர் -மணியரசன் 15 பேர் மொத்தம் 45 பேர் அதில் மாறன் என்பவரின் அணியில் நான் இருந்தேன். நாங்கள் கட்டைக்காட்டிற்குச் சென்றோம்.

 அத்தோடு எமது போராட்டத்தில் மிகவும் நம்பிக்கையான மக்களான வல்வெட்டித் துறையைச் சேர்ந்த 50 பொதுமக்களையும் அவ் ஆயுதங்களை இறக்குவதற்காகக் கொண்டு போனோம். ஒரு மாதம் அளவில் அங்கே தங்கினோம்.

  இவர்களை ஏற்றி இறக்கும் வேலையை எமது இயக்கத்தில் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவரான றைவர் அல்லது ஜெகன் மாஸ்ட்டர் அவர்களே நாம் இந்திய இராணுவத்திடம் கைப்பற்றிய பெரிய துருப்புக்காவி "ரக்"கையோட்டி தனது கடமையை திறன்பட செய்தார். அது மட்டும் அல்ல எமது அமைப்பில் கனிசமான பேராளிகளிற்கு ஒட்டுனர் பயிற்சி வழங்கியவரும் இவரே ஆவார். 2009 இறுதி யுத்ததின்போது அவர் வீரச்சாவு அடைந்தார்.



அங்கே நாங்கள் கபடி விளையாடுவது மீன்பிடிப்பது எனப் பல பொழுதுபோக்கான வேலைகளில் ஈடுபட்டோம். வல்வெட்டித்துறை மக்களைப் பொறுத்தவரையில் எமது அமைப்பில் அவர்களும் போராளிகள் போன்றுதான் பார்க்கப்பட்டார்கள். அதனால் அவர்களோடு சேர்ந்து விளையாடுவது நொடி சொல்வது எனச் மிக மகிழ்சியாகச் சென்றது எங்களின் காலம்.


கபடி விளையாடுவது கடலில் குளிப்பது காவல் கடமைகளில் ஈடுபடுவது. இளநீர் புடுக்கக்கூடாது என சொர்ணம் அண்ணையால் கடுமையான கட்டுப்பாடு போடப்பட்டது.  அதனால் களவாக ஒரு சிலர் இநீர் குடித்தது பிடிபட்டு அவர்களிற்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. 

ரொயிலட் போபவர்கள் அனைவரும் மண் வெட்டிகொண்டு போய் வெட்டித்  தாக்க வேண்டும் எனக் கடுமையான கட்டுப்பாடு சொர்ணம் அண்ணையால் போடப்பட்டது. 

அந்நாட்களில் நாங்கள் அனைவரும் காவல் கடமையில் இரு போராளிகளை நிறுத்தி விட்டு அனைவரும் கடற்க் கரைமணலில் இரவில் படுத்து உறங்குவோம்.  அவ்வேளை இரவு ஒரு 12 மணி இருக்கும் என   நினைக்கின்றேன்.  எனது காது ஒன்றில் ஏதோ உள்நுழைந்து விட்டது. சிறகு அடிப்பது போல் உணரக் கூடியவாறு இருந்தது .உயிரு போற அளவிற்கு வலியாக இருந்தது, அப்போது எங்களின் 15 பேருக்குப் பொறுப்பாகயிருந்த மேஜர் மாறன் அவர்களை எழுப்பி பிரச்சனையைச் சொன்னேன்.


எப்படி வலிக்குது என்று என்னிடம் கேட்டார். சிறகு அடிப்பது போல் உள்ளது என்று அவரிடம் சொன்னேன். எனது இரண்டு காதையும் அவரின் கையால் காத்து உள்ளே போகாதவாறு அவரின் இரு கைகளாலும் எனது இரண்டு காதுகளையும் அழுத்திப் பிடித்தார்.  சிறிது நேரத்தில் இரண்டு காதையும் திடீரென விட்டார். வண்டு வெளியே பறந்து விட்டது.  எவளவு திறமையான போராளிகள் எமது இயக்கத்தில் இருக்கின்றார்கள் என எண்ணி பெருமிதம் அடைந்தேன். எனது வலி இல்லாமல் போனது.

 இப்படி இருக்க ஒரு நாள் இரவு 10மணி  23 மில்லிமீற்றர் கனோன் உட்பட பெரிய ஆயுதக்கப்பல் ஒன்றுவந்து கரை தட்டியது.  தளபதி சொர்ணம் அவர்களின் கட்டளைக்கு அமைவாகப் பொது மக்களின் உதவியோடு கடலில் வந்த 23 உட்பட ரசியன் 50 கலிபர் போட்டின் பொயன் 5 அதாவது 45 மில்லிமீற்றர் ஆயுதம் பெரும் தொகையான வெடி பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தோம்.


அதில் 23 மில்லிமீற்றர் கனோன் உட்பட  ராசியின்  ஐம்பது கலிபர் மற்றும் எறிகணைகள், ரவைகள், ஏராளமான ஆயுதங்கள் வந்து இருந்தது.   எனவே இதை திசை திருப்பி இராணுவத்தின் சிந்தனையை மற்றும் அவர்களின் நடவடிக்கையைத்  திசை திருப்ப வேண்டிய தேவை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது. கப்பல் தரை தட்டியதும்  இரவோடு இரவாக அனைத்து ஆயுதப் பொருட்களையும் இறக்கும் வேலை தீவிரமாக நடந்துகொண்டேயிருந்தது.


 இது இங்கே நடந்துகொண்டிருக்கத்  தலைவரின் தீர்க்க தரிசனம் ஊடாகத் அதைத் திசை திருப்புவதற்காக  நடத்தப்பட்ட தாக்குதல்தான் லெப்கேணல் சுபன் அவர்களின் தலைமையில் மன்னாரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அதை விரிவாகப் பார்ப்போம்.

 மன்னார் மாவட்டத்தில் ஆரம்பச் சிறப்புத் தளபதியாக லெப்.கேணல் விக்டர் இருந்தார். அதை அடுத்து லெப்.கேணல் ராதா அவர்கள் இருந்தார், அதை அடுத்து பிரிகேடியர் பானு அவர்கள் இருந்தார், வானு அண்ணையை அடுத்து 1990 ஆண்டு தலைவரின் மேற்பாதுகாப்பு அணியில் இருந்த சுபன் அவர்கள் தனதுA.K, LMG துப்பாக்கியை வைத்துத் தலைவரைப் பாதுகாத்த ஒரு வீரன் , அக்காலத்தில் அவனின் திறமையைப் பார்த்த தலைவர் அவனை மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக அனுப்பினார்.

 (தலைவருக்குப்பக்கத்தில்A.K   LMG யோடு நிட்பவர் சுபன்)

 அவனை அனுப்பிய காலத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடந்துகொண்டேயிருந்தது. அச்சண்டைகளில் எடுத்த வெல்ஜியம் தாயாரிப்பான மினி மினி எல்.எம்.ஜீ களைத் தலைவரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைப்பார். அவர் அனுப்பிய புது மினி மினி LMG ஒன்றைத்தான் நான் வைத்து இருந்தேன்.




அவ் திசைதிருப்பும் நடவடிக்கையை செய்வதற்காக அக் காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த சுபன் அவர்கள் தலைவரால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.




அதற்கு அமைவாக அச்சண்டைக்கான பொறுப்பை தலைவர் சுபனிடம் ஒப்படைத்தார். சுபன் சண்டைக்கு போராளிகளை தயார்படுத்தினான். அதே நேரம் மன்னாரில் முதல் கரும்புலித் தாக்குதல் நடத்துவது என்றால் தன்னையே அனுப்ப வேண்டும் என்று டாம்போ சொன்னது சுபனிற்கு ஞாபகம் இருந்தது. தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக   அந்தக் காட்டு முகாமில் உயர்ந்த மரமொன்றில் நிழலில், அதன் அடிவேரில் சாய்ந்திருந்தபடி…. நண்பனொருவனுக்கு டாம்போ தன் வீட்டுக்  கதையைச் சொன்னான்.

“வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை. இரண்டு தம்பிமாருக்குப் பிறகு கடைசியாகத் தங்கச்சி பிறந்தாள். நான் சின்ன வயசாக இருக்கும் போதே அப்பாவுக்கு இயலாமல் போய்விட்டது. அம்மாதான் கஷ்டப்பட்டு  கூலி வேலை செய்து , எங்களை வளர்த்தா. நான் கொஞ்சம் வளர்ந்ததும் அம்மாவின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளத் துவங்கினேன் . நாங்கள் எல்லோரும் பாசத்தோட பிணைஞ்சு வளர்ந்தம்.  சில வருடங்களுக்கு முன்னம் எனக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது  நாட்டு நிலைமை என்னை போராட்டத்துக்குள்ள இணைத்தது…..

அது எல்லோருக்கும் இருக்கிற கடமையும் தானே …..!

“இதுக்குப் பிறகு ஒரு சண்டையில காயப்பட்டு, சிகிச்சைக்காகத்  தமிழ்நாட்டுக்குப் போயிருந்தன். அங்கு வைத்து ஏனைய தோழர்களோடு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு, வவுனியா இந்தியப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தன்.  சிறைக்குள்ளே இருந்த காலத்தில்  இந்தியப் படைக் கெதிரான போரில் என்னால் பங்கேற்க முடியவிலையே என்ற துயரத்தில மனது துடித்தது….. அங்கேயிருந்து சிறையை உடைத்து போராளிகள் வெளியேறும் போது நானும் வந்தேன்.  அந்த முயற்சியில காலில காயப்பட்டேன்.”

“வீட்டில், நாங்கள் எல்லோருமே எங்களுடைய ஒரேயொரு தங்கச்சியில் மிகுந்த அன்பு வைத்திதோம் . அவளின் சாமத்திய வீட்டைச்  சொந்தக்காரர் எல்லோருக்கும் சொல்லி வீட்டில்  எங்களின் வசதிக்கேற்ற அளவிற்கு பெரிதாகச் செய்தம். ஆனால்

 சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள், தம்பிக்கும்  தங்கச்சிக்கும் இடையில் சின்னதாக ஒரு பிரச்சினை. அம்மா தம்பிக்கு அடித்துபோட்டா,  தன்னாலதான் அண்ணனுக்கு அடி விழுந்ததென்று நினைத்து …. எங்களின் ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து உயிரைப் போக்கிக்கொண்டாள்…”

ஒரு கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு; கிழே குனிந்தபடி ஒரு தடிகுச்சியால் மண்ணைக் கிண்டிக்கொண்டு , டாம்போ சொன்னான்…..

“இதற்கிடையில் எங்களின் இன்னொரு தம்பி பயணம் போனவன், கடற்படையால கைது செய்யப்பட்டான். இன்னும் வீட்டுக்கு வரவில்லை. இராணுவம் பிடித்துச் செல்கின்ற ஆக்கள் காணாமல் போவதென்பது இங்கு புதினமில்லைத் தானே…!
 அதற்குப் பிறகு; தங்கை இறந்து ஒரு மாதம் போக முந்தியே தம்பி இயக்கத்திற்கு வந்திட்டான். எங்களுடைய வீட்டு நிலைமையைத் தெரிந்துகொண்ட சுபன் அண்ணை, தம்பியை வீட்டுக்குப் போகச் சொல்லி அனுப்பினபோதும் போகமாட்டன் என்று அடம்பிடித்துக் கொண்டு முகாம் ஒன்றில் நின்றான்.

பிறகு நான்தான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து பயிற்சி முகாமில் விட்டன். இப்ப அவன் அங்கு ஓடித் திரிகின்றான்.  நான் கரும்புலியாகப் போகப் போகிறேன் என்று அவனுக்கு சொல்லிபோட்டன் . “என்ற முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு வேறெங்கோ பார்த்தான்.

மன்னாரில் நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான் செய்ய வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது. அதை நான் சுபன் அண்ணையிட்ட சொல்லியிருந்தனான்…இப்ப அந்த நாளும் வந்திருக்குது….”

கலக்கமில்லாத � மிகத் தெளிவான � கண்களோடு தோழனைப் பார்த்துச் சொன்னான்.  இது தான் போராளிகளின் வாழ்க்கை. பின்னர் அந்த முகாம்முகாம் முற்றாக அழிக்கப்பட்டது.

 இவர்கள் இதை செய்ய நாங்கள்  04/03/1991

 காடாபியண்ணை மற்றும் சொர்ணம் அண்ணை தலைமையில் 60 வது வல்வெட்டித்துறை மக்களைக் கூட்டிக்கொண்டு1.4 படையணியான தலைவரின் பாதுகாப்புப் போராளிகளான நாங்கள் இந்திய இராணுவத்தின் பெரிய றக்கை ஜெகன் /றைவர் அண்ணை ஓட்ட நாங்கள் எல்லோரும் வெற்றிலைக் கேணி முள்ளியான் ஊடாகக் கட்டைக்காட்டில் இருந்து சாவகச்சேரிக்கு வந்து சேர்ந்தோம், 

 அங்கே வந்தது ஆயதங்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டது அதில் ரவைகள், வெடி பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு இடம் ஒழுங்குபடுத்தப்பட்டது. தென் மாரச்சிப் டொறுப்பாளர் லெப். கேணல் குணா அண்ணையின் பொறுப்பில் இருந்த வங்கரோடு சேர்ந்த ஒரு வீட்டைச்  சொர்ணம் அண்ணை வேண்டினார். அங்கே இரவோடு இரவாக ஆயுதங்களைக் கொண்டு வந்து நுணாவில்லில் இருந்த ஒரு வீட்டில் பாதுகாப்பாகப் வைக்கப்பட்டது. அது மிகவும் இரகசியமான இடமாக இருந்தது.  அங்கே நான்  விக்கி / ஜெமிலன் மற்றும் உதயகுமார்  என நாலு பேர் பாதுகாப்பிற்காக விடப்பட்டோம். 

குட்டிச்சிறி அண்ணை, மற்றும் மேஜர் றோவட் அண்ணை, ஒவ்வொரு நாளும் வந்து ஆயுதங்களைப் பார்வையிடுவார்கள். 


இதே காலப் பகுதியில்தான் கொக்குத் தொடுவாய்ப் பிரதேசத்தைச்  சேர்ந்த போராளி மகேந்தி அவர்கட்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது,


 இவர் 75 போராளிகளிற்குப் பொறுப்பாக இருந்தார். உயர்ந்த தோற்றம் வெள்ளை நிறம் என அழகான தோற்றத்தைக் கொண்ட மகேந்தி போராளிகள் மத்தியிலும் எப்பவும் அன்பானவனாகக்  காணப்பட்டான்.

 அதைவிட எமது மக்களைக்  கண்டாலும் வயது வேறுபாடுன்றி அன்பாகச்  சிரிக்கக்கூடியவன் மகேந்தி.
துரதிஷ்ர வசமாக விரும்பியோ விரும்பாமலோ சாவகச்சேரியில் உள்ள அவனது முகாம் அருகில் ஒரு வயது வந்த பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு நாளும் மகேந்தியைப் பார்த்து சிரிப்பாள்.  ஆனால் மகேந்திக்கும் அது புரியவில்லை. ஆனால் கதைப்பதற்கு இருவருக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை.  ஆனால் இது ஒருதலைக் காதலாகவே இருந்தது. எப்படியாவது மகேந்தியை திருமணம் செய்ய வேண்டும் என்ற  அளவிற்கு அதிகமாக அவள் ஆசைப்பட்டாள்.



ஆனால் இது ஒரு கடுமையான கட்டுப்பாடான இயக்கம் என்பதையும் அதையும் கடந்து மிகவும் கட்டுப்பாடான ஒரு படையணி என்பதையும்  அவள் அறிந்து இருக்க மாட்டாள்.  திடீரென ஒரு நாள் படையணித் தளபதி சொர்ணம் அண்ணைக்கு ஒரு கடிதம் அவள் எழுதினாள்.  மகேந்தி எனது வீட்டிற்கு வந்து அவரின் சிப்பைத் திறந்து காட்டினார் என்பது தான்.  அந்தக்கடிதம் தளபதி சொர்ணம் அண்ணையூடாகத் தலைவரிக்கு பறந்தது.  அதைப் பார்த்த தலைவர்  மிகவும் கடுமையான கோபம்அடைந்தார் .

உடனே நடவடிக்கை எடுக்குமாறு தளபதி சொர்ணம் அண்ணைக்கு  கட்டளை வழங்கினார்தலைவர் .  உடனே மகேந்தி விசாரனைக்காக பொட்டு அம்மானிடம்  அனுப்பப்பட்டான்.  அங்கே  சென்று விசாரணை முடிந்த பின்  சாவகச்சேரி பெருக்குளச்  சந்தியில்வைத்து லெப்.கேணல் அம்மான் அவர்கள் மகேந்திக்கு சாவொறுப்பு வழங்கினார்,  இதை அறிந்த அந்தப்பெண் மகேந்திக்கு எக்களின் வீட்டிற்கு வருவது இல்லை! இப்படி எழுதினால் நீங்கள் மகேந்தியை எனக்கு திருமணம் செய்து தருவீர்கள் என எழுதினேன்.  ஆனால் நீங்கள் அவரைக் கொலை செய்து விட்டீர்கள் எனச் சொர்ணம் அண்ணைக்கு அப்பெண் கடிதம் எழுதினார்.  இதை அறிந்த சொர்ணம் அண்ணை கவலைப்பட்டதோடு மட்டும் இன்றி போராளிகளிற்கு கடுமையான கட்டுப்பாடும் போட்டார்.

அதைத் தொடர்ந்து அவரின் பெற்றோர்களிடம் சென்று உங்களின் மகனை மாவீரர் பட்டியலில் இணைக்க வேண்டும் எனவும் அது தவறுதலாக நடந்ததாகவும் எமது பொறுப்பாளர்கள் மன்னிப்பு கோரிய போதும் அதை அந்தப் பெற்றோர்கள் நிராகரித்து விட்டார்கள். விடுதலைப் போராட்டங்களில் பல பிரச்சனைகள் வரும் நல்லதும் நடக்கலாம், கெட்டதும் நடக்கலாம் ஆனால் இது ஒருவரலாற்றுப் பாடமாக எண்ணி அதை நாம் கடந்து போக வேண்டும். இதுதான் விடுதலைப் போராட்டங்களின் வரலாறாக இருந்துள்ளது. இதே காலம்தான் இந்தச் சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது. 

10/04/1991 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம்





தளபதி பால்ராஜ் அவர்களின் ஆளுகைக்குக் கீழ் செயல்பட்டுக்  கொண்டிருந்த கொமாண்டோ அணியையும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து திறமையான போராளிகளையும் இணைத்து உருவாக்கப் பட்டதுதான் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியாகும். 


தலைவரிக்கு மிகவும் நம்பிக்கையானவரும் ஆரம்பத் தளபதியுமான லெப். சீலன் அவர்களின் சொந்தப் பேரையே தலைவர் இப்படை பணிக்கு வைத்தார். அது மட்டும் அல்ல அவரின் மூத்தமகனிக்கும் அந்தப் பெயரையே அவர் வைத்தார்,



அப் படையணிக்கான சின்னத்தையும் தலைவரே உருவாக்கினார். 


லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக்கொண்டு தலைவரால் உருவாக்கப்பட்டது இப்படையணி.



 பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்று தலைவரின் சிந்தனையாக் கொண்டு தலைவரால்  10/04/1991 இப்படையணி உத்தியோகபூர்வமாகத்  தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தளபதி பால்ராஜ் அவர்களே!  சிறப்புத் தளபதியாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார்,. அதற்குப் பின்பலர் மாறி மாறி பொறுப்பாளராக விடப்பட்டனர்.




சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.


1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் ஓமந்தை கொந்தக்காரன்குளம், கோழியாக்குளம் ஆகிய இடங்களில் "வன்னி விக்கிரம 2" என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர். அதற்குப் பின் ஆயிரக்கணக் கணக்கான போராளிகள் அப்படையணியில் இருந்து களமாடி வீரச்சாவு அடைந்துள்ளனர்.



5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணியில் ஆரம்பத்தில் இருந்தது. லெப் கேணல் சேகர் அவர்களும் இப்படையணிக்குப் பொறுப்பாகயிருந்து சண்டையின்போது வீரச்சாவு அடைந்தார்.  இப்படையணியின் இறுதி 2009 வரையிருந்து கேணல் கோவிந்  அவர்கள் வீரச்சாவு அடைந்தார்.  வன்னியில் ரஜீவன் பேரிலும் மாறன் பேரிலும் தலைவரால் உருவாக்கப்பட்ட ஆரம்ப இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி எடுத்த கூடுதலான இளைஞர்களை தலைவர் இந்தப் படையணிக்கே அனுப்பினார்.  அதனால் அப்படையணி இறுதிவரைக்கும் உயிர்ப்போடு இருந்தது. 


04/05/1991 கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் இவர்களின் வீரச்செயல் நடந்தது.

                   


04/05/1991 அன்று அதாவது வடமரச்சிப் பொறுப்பாராக இருந்த எஸ்சோ அல்லது சூசை அவர்களிடம்  கடல்புறாவை  தளபதி கடாபி அவர்களிடம் இருந்து  /1991 ஆரம்பப்பகுதியில்  தலைவர் அவர்களால் தளபதி  எஸ்சோ அவர்கட்டு கடல்புறாபொறுப்பு வழங்கப்பட்டது.  அக்காலப் பகுதியில்தான் புதிதாகக்கடல் புலிகள் என்ற பெயரைத் தலைவர் மாற்றினார்.


புதிய பொறுப்பாளர் புதிய பெயர் என அனைத்தும் மக்களிற்கு அதியசயமாகயிருந்தது. பொறுப்பெடுத்த காலத்தில் ஒரு பெரிய தாக்குதலாகவும் அவருக்கு  பொறுப்புக்களைத் தேடித்தந்த   தாக்குதலாகக்  கூடஇதைப் பார்க்கலாம்.


அபிதா ஒரு சாதாரண போர்க்கப்பல் அல்ல சிறிலங்கா கடல்படைகளிடம் இருந்த பெறுமதியான கப்பல்களில் அதுவும் ஒன்று.  இது ஒரு கட்டளையிடும் கப்பலாகயிருந்தது. இக்கப்பலில் கட்டளைக் கோபுரம் பொருத்தப்பட்டு அனைத்து சிறிய படகுகளிற்கும் கட்டளை வழக்குவதே இதன் கடமையாகயிருந்தது. இக்கப்பலைக்  கரும்புலிகளால் அழிப்பதுதான் விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது.

 அதற்கு கப்டன் ஜெந்தன் அவர்களும் இன்னொரு போராளிக்கும் சூசை அவர்களின் அனுமதியுடன் கப்டன் சிதம்பரமே பயிற்சியை வழங்கி வந்தான். அப்பயிற்சி முடிந்ததும் அவர்கள் தயார் ஆகயிருந்தார்கள். 

 ஆனால் கரும்புலித்  தாக்குதலிற்கு இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்ட போது அப்போராளி மறுப்புத் தெரிவித்தான். ஆனால் அவனோடு நின்ற ஜெயந்தனுக்கு பெரும் கவலையாகயிருந்தது.  கால் இல்லாத நிலையில் இதைப்பார்துக் கொண்டுயிருந்த ஆசிரியரான சிதம்பரத்திற்கு  சகிக்க முடியாமல் போனது.  ஏனெனில் ஏலாது என்று சொன்னவன் அவன் பயிற்சி வழங்கமுதல் சொல்லியிருக்க வேண்டும்.  இடையில் இப்படிச் செய்து இருக்கக் கூடாது என்பதே அவனின் கருத்தாக இருந்தது.  கொண்ட  கொள்கையில் சிறிதளவும் தளம்பாமல் ஜெயந்தன் நின்றான். இதை அவதானித்த சிதம்பரத்திற்கு ஒரு உறுதி வந்தது.

,ஆனால் இயக்கத்தில் ஒரு மரபு இருந்தது போராளிகள் செய்யாமல் விட்டால் அப் பொறுப்பாளரே அக்கடமையைச் செய்ய வேண்டும்.  இதை அறிந்தவன்தான் சிதம்பரம் அதனால் தானே ஜெயந்தனோடு போவதாக தளபதியிடம் அனுமதி எடுத்தான் சிதம்பரம்.


 பயிற்சி வழங்கிய ஆசானும் மாணவனும் சென்று தங்களின் வாழ்வை முடித்துக்கொண்ட வரலாறாகவே இக்கதை பதிவானது.

சிறிலங்கா கடற்படைக் கப்பல்  "அபிதா ” மீதான கரும்புலித் தாக்குதலில் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் மூழ்கடிக்கப் பட்டது.

 கடற் கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐய ரத்தினாவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம். போராளி சிதம்பரம் பற்றி.....


சிதம்பரம் ஏற்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது.  எல்லோரையும் சிரிக்க வைத்து தானும் சிரிப்பான். சந்திரனாக இருந்தவன் தான். 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத் தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது.


 இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன்  வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்.  அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம்.  அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில் இப்ப இவ்வளவு வீரானாகச் சென்றுவிட்டான்.

அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப் படுகின்றாள்.  தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்களைப் பற்றிச் சொல்கின்றார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்குச் சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டோம்.


அதற்காக இரண்டு கரும்புலிகள் தயாராகச் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியைத்  தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்ப முடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது.......


அருகில் நின்று நிலமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து..... ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது. 


"அபிதா" கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்த பொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில்..... சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். “நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…?” எனக் கேட்டோம்.


“நீங்கள் கதைப்பது  தெளிவாகக்  கேக்கிறது.” என எந்த விதச் சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன. சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது.... ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம். ’‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம். ’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அல்லது தயக்கமோ தென்படவேயில்லை. கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக் கொண்டிருந்தது.  மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும்.  ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப் போகின்றோம். "ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம். என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக் கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. 


கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு தொலைத் தொடர்பு சாதனத்திற்குக் காதைக் கொடுத்துக் கொண்டு நின்றார்கள்.  அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத் தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிச்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளானது அபிதா கடற்படைக் கப்பல்.  அடுத்த நாள் பகல் ஒரு பக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலைக்  கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக் கொண்டிருந்ததன.




பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்து விட்டார்கள். இவனின் தளராத உறுதியை அறிந்த தலைவர் அவனின் பேரிலே படையணியை உருவாக்குமாறு கருணாவிற்கு தெரியப் படுத்தினார்.  ஆனால் ஜெயந்தன் சிதம்பரம் படையணி என்பதே பொருத்தமாகயிருக்கும் எனத் தலைவருக்குப் பல போராளிகள் ஆலோசனைக் கடிதம் எழுதினார்கள்.

 வைத்த பேரை மாற்ற முடியாது என்பதை விளங்கிக் கொண்டதலைவர் தனது படையணிக்கு பேர் வைக்கும்போது தனது பாதுகாப்பில் நின்ற இரு போராளிகளான  இம்ரான் மற்றும் பாண்டியன் இருவரையும் இணைத்து இம்ரான் பாண்டியன் படையணி என்ற பேரை வைத்து போராளிகளை மகிழ்சிப் படுத்தினார்.

 ஜெயந்தன், சிதம்பரம் வீரச்சாவு அடைந்தபின் புதிய படையணியை உருவாக்கிய தலைவர்.


பாகம் 4 ல் பகுதி 04

*********************


.

21/05 /1991நினைத்துக் கூட நாம் செய்ய விரும்பாத ஒரு வேலையைச்  செய்தது இந்தியாவினுடைய "றோ",




21/05 /1991 இந்தியா பிரதமர் Rajivgandhy (ராஜீவ் காந்தி)  தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறிபெரும் புத்தூர் வந்த போது அவர் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். உன்மையில் நடந்த விடயம் இதுதான். 1987 ம் ஆண்டு வந்த இந்திய இராணுவத்தை 3 வருடம் கடுமையான ஆயுதப்போரில் சுமார்  1200 இந்தியா வீரர்களைக் கொலை செய்ததோடு மட்டும் அல்லாமல்  பலரை சுத்தக் கைதிகளாகப்பிடித்து பின்னர் விடுதலை செய்தோம்.

இறுதியில் ஜனாதுபதி பிரேமதாசா அவர்களோடு இணைந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்குக் கடுமையாக உழைத்தவர்கள் நாங்கள்.  ஆனால் இந்திய இராணுவத்தை நாம் வெளியேற்றினாலும் எமது தொழிற்சாலைகள் அனைத்தும் சுதந்திரமாக இந்தியாவில் இயங்கிக் கொண்டுயிருந்தன. குறிப்பாக வரிப்புலி சீருடைத் தொழிற் சாலை, வெடிமருந்து குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை எமது மருத்துவமனை யுத்தகாலங்களில் காயம் அடையும் அனைத்துப் போராளிகளும் அங்கேதான் இருந்தார்கள். அதை விட யுத்த நடவடிக்கைக்குத் தேவையான வோக்கி பற்றி தொடக்கம்  C.4 வெடிமருந்துவரை நாங்கள் அங்கே தான் கொள்வனவு செய்தோம்.

அருகில் உள்ள தமிழ்நாடு எமக்கு மிகவும் உதவிவழங்கும் நாடாகயிருந்தது. இது இந்தியாவினுடைய( றோ) அமைப்பான புலநாய்வுத் துறைக்கு கடும் எரிச்சலாகயிருந்தது. எப்படியாவது ஒரு பெரிய தாக்குதலை செய்து தமிழக மக்களிற்கும் எங்களிற்கும் இருக்கும் உறவை முறித்து முதலில் எங்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இது தான் அவர்களின் குறிக்கோலாகயிருந்தது.

அக்காலப் பகுதியில்தான் கரும்புலிகள் தலைவரால் உருவாக்கப்  பட்டுக்கொண்டிருந்தார்கள்.  கொழும்பில் சில மறைமுகத் தாக்குதல் செய்வதற்காக மகளீர் படை பணியை சேர்ந்த பெண்போராளி தனு படித்துக் கொண்டியிருந்தார்.

ஆனால் இந்தியா குண்டுத் தொழிிற் சாலையில் கடமையாற்றிய பேராளிகள் வெடி மருந்து தொடர்பாக மிகவும் அனுவபம் உள்ளவர்கள். அதனால் மேலதிக படிப்பிற்காக தளபதி பொட்டுஅம்மான் அவர்கள் தனுவை இந்தியா அனுப்பினார். தனு பயிற்சி முடிந்து இலங்கை வந்ததும். அவர் கொழும்பிற்குச் சென்று ஒரு மறைமுகத்  தாக்குதலிற்காகவே அவர் பயிற்சி கொடுத்து வளக்கப்பட்டார்.

இந்தத் தகவல் மாத்தையா ஊடாக  இந்தியாவினுடைய புலநாய்வுத் துறையான  றோவிற்கு கிடைத்து விட்டது. விடுதலைப் புலிகளால் தகவல் பரிமாறும் சங்கீதப் பிரதி இந்தியாவினுடைய றோவிடம் இருந்தது. இந்தியாவினுடைய "றோ" அமைப்பினர் மூன்று நாளைக்கு முதல் அப்போதைய விடுதலைப் புலிகளின் இந்தியாவிற்கு பொறுப்பாகயிருந்த சிவராசனிற்கு தகவல் அனுப்பப்பட்டது. தனுவை அனுப்பி றாஜீவ் அவர்களை போட ஒழுங்கு செய்யவும்! இதுதான் அந்தத் தகவல். 

ஆனால் சிவராசனும் இத்தகவல் எங்கு இருந்து வந்தது என்பதை அறிய முற்படவில்லை.  அவர் தனுவை மட்டும் அனுப்பி வைத்தார்.  சிவராசன் வீடியோ எடுப்பதில் இருந்து தனுவை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போனதில் இருந்து அனைத்து வேலைகளையும் இந்தியாவின் உடைய "றோ"புலாநாய்வுத்துறையே செய்து முடித்தது. 

ஆனால் சிவராசனிற்கு இதை அறிய போதிய காலமும் இல்லை. அவர் அறியவும்  முற்படவில்லை. அவர்கள் திட்டமிட்டதுபோல் "றோ" அதிகாரிகள் எவரும் அந்த வெடிமருந்தில் சிக்காத வாறும்  வேறுபெறுமதியானவர்கள் சிக்காமலும் மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டார்கள். அதிகாரிகளும் ராஜீவ் அவர்களிற்குப் பக்கத்தில் நிக்காதவாறும் ராஜீவ் அவர்களை மட்டும் இலக்குவைத்தே அவர்கள் சிறந்த முறையில் திட்டமிட்டார்கள்.

மிகவு தொழில்நுட்பமாக ராஜீவ்வை மட்டும் கொலை செய்வதே அவர்களின் திட்டமாகயிருந்தது. அவர்கள் திட்டமிட்டதுபோல் அப்பிரச்சாரக் கூட்டத்தில் அதிபர் ராஜீவ் அவர்கள் மட்டும் கொலைசெய்யப்பட்டார். ராஜீவ் அவர்களின் கொலைக்குப் பின்னர் அவர்களிற்குப் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால் ராஜீவ் கொலை செய்யப்பட்டதினால் எமக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பார்ப்போம். எமது குண்டுத் தொழிற் சாலை சுற்றி வளைக்கப்பட்டது. அப்பொழுது 50 கலிபறிக்கு றைவுள் கிறினெட் செய்வதற்காக தமிழீழம் இருந்து தலைவரால் அனுப்பப்பட்ட மேஜர் குணா அண்ணை அவர்களும் அங்கே தான் நின்றார். இந்தியா இராணுவம் சுற்றி வளைத்து சரண்டர் அடையுமாறு கேட்கப்பட்டபோது அதை அவர் ஏற்க மறுத்து குண்டை வெடிக்க வைத்து மேஜர் குணா உட்பட 21 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.

வரிப்புலி தொழிற் சாலை சுற்றி வளைக்கப்பட்டு அதில் வேலை செய்த எமது பணியாளர்கள் அனைவரும் இந்தியப் பொலிஸ்சாரால்  கைது செய்யப்பட்டார்கள். அனைத்து வரிப்புலி சீருடைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய மருத்துவமனையில் இருந்து 174 எமது காயம் அடைந்த போராளிகள் கைது செய்யப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள். பின்னர் முக்கிய உறுப்பினர்கள் இந்தியாவின் "றோ"வால் கொலை செய்யப்பட்டார்கள். ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சிவராசன் அவர்கள் இருந்த வீட்டை அவர்களிற்கு தொடர்ந்து பால்கொடுக்கும் பொதுமகனிடம் மேலதிகமாக ஐந்து பேருக்குப் பால்கேட்டமையால் அவன் சந்தேகப்பட்டு இந்திய புலநாய்வுத் துறைக்குச் சொன்னமையால் அவ்வீடு சுற்றிவளைக்கப் பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்ட சிவராசன் இறுதியில் சிவராசன் உட்பட 11 போராளிகள் குப்பி கடித்து  வீரச்சாவு அடைந்தார்கள்.  இறுதித்தோட்டா  இருக்கும் வரை சிவராசன் சண்டையிட்டான்.  தொடர்ந்து சிவராசனும் அவனின் நண்பர்களும் தங்களை அழித்துக் கொண்டார்கள்.  இதில் மொத்தம் 11 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். 

அதையடுத்து கிட்டுவின் கப்பல் உட்பட சுமார் 12 எமது ஆயுதக் கப்பலை இந்தியா நேடியாகவும் மற்றும் காட்டிக் கொடுத்தும் கடலில் மூழ்கடித்தது. அதை விட இந்திய மக்களிற்கும் எமக்கும் இருந்த நெருங்கிய உறவை இல்லாமல் செய்தது.

இந்த நடவடிக்கையில் நாம் முழுமையாக தோற்றுவிட்டோம். எதிர் காலத்தில் இதைப் பாடமாக வைத்து நாம் முறியடிப்போம் எனத் தளபதி பொட்டு அவர்கள் எங்களிடம் கூறினார்.

இது மாத்தையா கைது செய்யப்பட்ட பின்னர் தலைவரின் பாதுகாப்பில் நின்றபோராளிகளிற்கு பொட்டுஅம்மான் நேரடியாகப் பலமுறை உரையாற்றினார். அப்பொழுது நானும் அதில் கலந்து கொண்டேன். கேட்ட கேள்விகளிற்கும் அவரால் சரியான விளக்கம் தரப்பட்டது.


கேள்வி பொட்டு என்ற பேர் எப்படி வந்தது  போராளி மிக்கல். 




பொட்டு அம்மானின்பதில்,1980 பது காலப்பகுதியில் நான் ஒரு இளைஞனாகயிருந்தேன். தமிழ் தலைவர்கள் ஈழம் தொடர்பாக வைக்கும் ஒன்று கூடல்களிற்குத் தவறாமல் நாங்கள் போவோம்.
 .

அப்பொழுது எங்களின் சட்டைப் பைகளில் ஒரு பிளேட்ரும் கொண்டு போவோம். கூட்டம் ஆரம்பித்தவுடன் அரசியல் தலைவர்களில் ஒருத்தரான  யோகேஸ்வரன் அவர்கள் மேடையில் பேசத்தொடங்கினார். அது மிகவும் தேசிய உணர்வான பேச்சாகயிருந்தது. எனது உடம்பு சிலித்தது. அனைவரும் கைதட்டினார்கள்.  நான் மட்டும் எனது கை கீறி எனது இரத்தத்தை எடுத்து அவரின் நெற்றியில் திலகம் இட்டேன். அன்றில் இருந்து என்னை பொட்டு வைத்தவன் என கூப்புடுவார்கள். காலப்போக்கில் அது பொட்டு அம்மானாக மாறியதாக எங்களிடம் தெரிவித்தார்.



10/07//1991முதலாவது ஆனையிறவுமீது விடுதலைப் புலிகளின் மரபு வழிச்சமர்.

 முதலாவது மரபுவழிச்சமர் ஆனையிறவை அதே நேரம் நாங்கள் 4 பேரும் கப்பலில் இருந்து சாமனை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றோம்.  என்பதை முன்னர் குறிப்ட்டுள்ளேன், அதில் நான் 01.எமிலன்  02.உதயகுமார் 03. கரின்டன் பிரவு 04. இப்பொழுது விடயத்திற்கு   வருவோம். ஆணையிறவு சண்டை 10/07/1991 அன்று இரவு தொடங்கி விட்டது.

 அப்பொழுது எங்களிடம் இருக்கும் புதிய வெடி பொருட்களை லெப். கேணல் குட்டிச்சிறி மற்றும் மேஐர் றோவட் இருவரும் மாறிமாறி வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு போகவருவார்கள். வந்து சண்டைக்கான வெடிபொருட்களைஒவ்வொரு நாட்களும் ஏற்றிக் கொண்டுபோவார்கள். அதாவது 23 மில்லிமீற்றர் ரவை, 50 கலிபர்ரவை, 40 மில்லிமீற்றர் ரவை, RPG செல் என்பன ஒவ்வொரு நாளும் கொண்டு போவார்கள்.


வங்கறுக்குள் ஏறி, இறங்கி ஆயுதப் பெட்டிகளை தொடர்ந்து வாகனத்தில் ஏற்றுவதால் நாங்களும் கடுமையான களைப்பாகயிருந்தோம்.

சண்டை தொடங்கி 15 நாள் ஆகி விட்டது.

திடீரென ஆயுத்ததை ஏற்றிக்கொண்டு போனகுட்டிசிறி அண்ணை, வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்து 23 செல்லுகுப்பதிலாக வேறு செல்லை நாங்கள் ஏற்றியதாக எங்களிற்குப் பேசிவிட்டு வங்கறுக்குள் இறங்கி ஆயுத இருப்பு விபரங்களை செக்பண்ணிக் கொண்டு இருக்கின்றார் குட்டிசிறி அண்ணை....



அவருக்கும் பெரிய ஏமாற்றம் ஒன்று தெரியவந்தது. 23 மில்லிமீற்றர் ரவையென நினைத்தும் 20 மில்லிமீற்றர் ரவையை நிறைய ஏற்றி விட்டார்கள். ஆயுதத் தரகர்கள். அதனால் 23 மில்லிமீற்றர் செல் முற்றாக முடிந்து விட்டது.


ஆனால் போதியளவு 20 மில்லிமீற்றர் ரவைகள் இருப்பில் உள்ளது. ஆனால் அந்த ஆயுதம் எமது இயக்கத்தில் இல்லை. தவறுதலாக அனுப்பப்பட்தா? அல்லது தெரிந்துதான் அனுப்பினார்களா? என்பது எமக்குத் தெரியாது.

 ஆனால் இதை என்னன்று நான் அண்ணைக்குத் தெரியப்படுத்துவது என்று தலையில் அடித்து கத்திக்கொண்டுயிருந்தார் குட்டிசிறி அண்ணை. நாவல் பழ யூஸ் என்றால் குட்டிச் சிறி அண்ணை விரும்பிக் குடிப்பார். அதனால் நாவல் பழம் பிடிங்கி கசக்கி அதன் சாற்றை எடுத்துச் சீனி போட்டுக் கரைத்துக் கொண்டு கொடுத்தேன். THANKS என்று சொல்லி அதை வாங்கி வெளியே  ஊத்திவிட்டார்.

 அவர் அதை குடிக்கக் கூடிய மன நிலையில் இல்லை. அண்ணைக்கு என்ன சொல்வது என சரியான மனக்குழப்பத்தில் காணப்பட்டார். இப்படி எல்லா பக்கத்தாலும் பிரச்சனைகள் காணப்பட்டது,

இனி ஆனையிறவில் என்ன நடந்தது என விரிவாகப் பார்ப்போம்.

 இந்நடவடிக்கைக்கு தளபதி மாத்தையா  தலைவரால் ஒருங்கிணைப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.


இவருக்கு கொடுக்கப்பட்ட கடைசிச் சந்தர்ப்பமாக இதைப் பார்க்கலாம். ஏன் அவருக்கு பிறகுசந்தர்ப்பம் கொடுக்கவில்லை  என்பதை இக்கதையை முழுமையாகப் படித்த பின்னர் உங்களிற்குத் தெரிந்துவிடும் என நினைக்கின்றேன்.


ஒருங்கிணைப்புத் தளபதியாக மாத்தையா அவர்ககள் நியமிக்கப்பட்டார். அருக்குக்கீழே  செயல்பட பல தளபதிகள் விடப்பட்டார்கள். அதில் தமிழ்செல்வன், பால்ராஜ் கடல்பகுதியைக் கண்காணிக்க தளபதி சூசை வண்போர் படைப் பிரிவுப் பொறுப்பாளர் தளபதி சொர்ணம்,மகளீர் படையணி தளபதி ஜெனா-  தளபதி பொட்டு என ஆனையிறவைச்சுற்றிக் களம் இறக்கப்பட்டார்கள். 


மாவட்டங்களில் இருந்தும் சிறு சிறு அணிகளை எடுத்தாலும் மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார்400 போராளிகள் வண்போர் பிரிவுக்கு எடுக்கப்பட்டார்கள். இதற்கு தளபதி சொர்ணம் அவர்களே பொறுப்பாகயிருத்தார், இது தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது,. ஆயிரக்கணக்கான போராளிகள் இந்நடவடிக்கைக்கு  தயாராகயிருத்தார்கள். அதைவிட பின் தள வேலைகள் சரியான முறையில் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தது. அவர்களிற்கான உணவுப்பகுதி மருத்துவப்பகுதி, வெடி பொருட்கள் வழங்குவதற்கான சப்பிளைப் பகுதி அதில் வீரச்சாவு அடைபவர்களை எரிப்பதற்கான ஏற்பாடுகள். அதாவது கொடிகாமத் துயிலும் இல்லத்தில் மலையளவு விறகுகள் சேமித்து வைக்கப் பட்டியிருந்தன.


புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 23 மில்லிமீற்றர் கணோன்50பது கலிபர் R.P.G ராங்கி எதிர்ப்பு உந்துகணைசெலுத்தி லோ என அனைத்தையும் வைத்துக் கொண்டு போராளிகள் மிக்க மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள்.


10/07/1991 இரவு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. ஆனையிறவைச் சுற்றிதாக்குதல் நடந்து கொண்டேயிருந்தது. முதல் நாள் சண்டையிலே 60 திற்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.


தொடர்ந்து புதிய புதிய யுத்திகளை விடுதலைப் புலிகள் கையாண்டார்கள். அதில்  பரலுக்குள்  மண்ணை நிறப்பி வெட்டை வெளிகளிற்குள்ளால் அதை உருட்டிக்கொண்டு சென்றால் மிதிவெடிகள் அதில் பட்டு வெடித்துவிடும் என அதையும் செய்தார்கள். ஆனால் அனைத்தும் பெரித்தளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

 முதலாவதுநடவடிக்கை13/07/1991 அன்று வன்னி உமையாள்புரப் பக்கமாக ஆனையிறவை நோக்கி பாரிய நாகர்வு ஒன்று விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான கட்டளையை தளபதி பால்ராஜ் அவர்கள் மேற்கொண்டார்.

 அது முதலில் வெடிமருந்து நிறப்பப்பட்ட வாகனம். வேகமாகச் சென்று உள்ளே வெடிப்பது எனவும் தொடர்ந்து போராளிகள் அடித்துக் கொண்டு உள்ளே இறங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது, அதன்படி இவ் வாகனம் அனுப்பப்பட்டது.

 நினைத்துக் கூடபார்க்க முடியாத செயல் ஒன்று அங்கே நடந்தது. ஒரு இராணுவவீரன் சாவதற்கு துணிந்து விட்டான். முன்னர் எந்தக் காலத்திலும் இராணுவ வீரர்கள் சாவதற்குத் துணிவது இல்லை. சண்டை தொடங்கினால் ஒன்று பின்னால் ஒடுவார்கள் அல்லது காயப்பட்டு சாவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் ஒரு புதிய சிந்தனை  உருவானதை நாம் அறிந்து கொண்டோம்.

திடீரென வேகமாக ஓடிவந்து அவ்துணிகர வேலையை அந்த இராவணுவீரன் செய்தான். வேகமாக ஒடி வந்து வாகனத்திற்கு மேலே ஏறி குண்டைக் களட்டி உள்ளே இருப்பவர்களிற்கு மேலேபோட்டான். அது  பேரிரைச்சலோடு வெடித்து. அவ் இராணுவவீரன் உடல் சிதறிப் பலியானான். வாகனத்தை ஒட்டிச்சென்ற மேஐர் கேசரி, அவர்களும் அவருக்கு உதவியாகச் சென்ற கப்டன் டக்ளஸ் அவர்களும் வீரச்சாவு அடைந்தனர்.


அதனால் நாம் திட்டமிட்ட நடவடிக்கை பாரிய தோல்வியில் முடிந்தது. அவ் நடவடிக்கைக்குச் சென்ற பல போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். எமது அன்றைய நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது ஒரு பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்குப் பொறுப்பாக பிரிகேடியர் தமிழ் செல்வன் தலைமை தாங்கினார்.


இந் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் நேரடியாக வழிநடாத்தினார். இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.


இவ் இராணுவ முகாம்  வெட்டவெளியென்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள். இந்த தாக்குதல்களில் இருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாக அணிகள் எழுப்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும், மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத்தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாகப் பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் திட்டம் தீட்டப்பட்டது.



அதற்கு அமைவாக தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாகச் சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் ஒரு பெரிய கவச வானத்தில் முன்னே சென்றார்கள்.  பின்னால் கனிசமான போராளிகள் சென்று கொண்டிருந்தார்கள்.  ஆனால்   எதிரியின் காவலரனுக்கு அண்மையாகச் சென்ற வேளை எதிரி ஒருவன் RPG உந்துகணை செல்லுத்தியால் எமது வாகனத்தை நோக்கி துல்லியமாகத்  தாக்குதல் நடத்தினான்.  அதனால் துரதிஸ்டவசமாக அவ் வாகனம் சேதம் அடைந்தது.  அதை ஓட்டிச் சென்ற தளபதி லெப்.கேணல் சரா அவர்களும் உதவியாகச் சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர். அதனால் அன்றைய நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

 அதில் மேலும் பலபோராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். அதனால் 


அடுத்த முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.


இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணடைந்தார்.  அவரைப் போராளிகள் பின்னுக்குக் கொண்டு  வந்தார்கள். ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார். அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.


இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன. ஆனால் சண்டைகள் தோல்வி அடைந்தாலும் புதிய புதிய யுத்திகளில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தார்கள். புதிய 23 மில்லிமீற்றர் கனோன் ஆயுத்தால் உலங்கு வானூர்திகள், அவ்றோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் காயம் அடைந்த சிப்பாய்களை வெளியே கொண்டு போகமுடியாத நிலை அடுத்து ஆயுதச்சப்பிளை உள்ளே வராமல் தடைப்பட்டது. இதனால் இரு பெரும் சிக்கல்களை அரசபடை எதிர்கொண்டது. இது நடந்து கொண்டிருந்த காலம்தான் இந்தத்துயரச் சம்பவம் நடந்தது.

 11/07/1991 இதேகாலம் மிகவும் கவலையான ஒருவிடயம் நடந்தது. இழக்கக் கூடாத ஒரு பெண் கவிஞரும் போராளியுமான கப்டன் வானதி அவர்களை இழந்தோம். கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம்.



திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது கவிதை எழுதி தேசிய உணர்வை மக்கள் மத்தியில் விதைத்து எமது தமிழீழத் தாய்க்குலத்தை கண்ணீர்விட வைத்தவர் கப்டன் வானதி அவர்கள்.

இறுதியாக அவர் ஆனையிறவுச் சண்டைக்குச் செல்லும்போது அவர் வீரச்சாவு அடைவார் என்பதை முன்கூட்டிய அறிந்து விட்டார்.  எழுதாத என் கவிதையை எழுதுங்களன். அதன் கருத்து என்னைப் பின்தொடர்ந்து போராடா வாருங்கள் என்பதைக்குறிக்கும் கருத்தாக அமைந்தது .

அது அவரின் இறுதிக் கவிதையாக இருந்தமையால் அது ஆனையிறவு மீட்கப்பட்டவுடன் அங்கே எழுதி மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

 கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை "எழுதுங்களேன்."

 நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! ஏராளம்……. ஏராளம்…. எண்ணங்களை எழுத எழுந்து வர முடியவில்லை.
 என் துப்பாக்கி எழுந்து நிற்பதால். எழுந்துவர என்னால் முடியவில்லை! எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்!

 சீறும் துப்பாக்கியின் பின்னால் என் உடல் சின்னா பின்னப்பட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகள் சிதையாது உங்களை சிந்திக்க வைக்கும்.
 அப்போது எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! மீட்கப்பட்ட – எம் மண்ணில் எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால் 

அவை உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ அன்றேல் மலர் வளைய மரியாதைக்காகவோ அல்ல! எம் மண்ணின் மறுவாழ்விற்கு உங்கள் மன உறுதி மகுடம் சூட்ட வேண்டும்  என்பதற்காகவே. எனவே எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்! அர்த்தமுள்ள என் மரணத்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில் நிச்சயம் நீங்கள் உலாவருவீர்கள்!

 அப்போ எழுதாத என் கவிதை உங்கள் முன் எழுந்து நிற்கும்! என்னை தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் அரவணைத்தவர்கள், அன்பு காட்டியவர்கள் அத்தனை பேரும் எழுதாது எழுந்து நிற்கும் கவிதைக்குள் பாருங்கள்!

 அங்கே நான் மட்டுமல்ல என்னுடன் அத்தனை மாவீரர்களும் சந்தோசமாய் உங்களைப் பார்த்து புன்னகை பூப்போம்! -கப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக் கவிதை “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”



12,07 1991  கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்.


இது இப்படி வடமாகாணத்தில் நடந்து கொண்டியிருக்க இதை திசை திருப்புவதற்காக கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு இனப்படுகொலை தமிழர் மீது சிங்களப் படையினரால் செய்யட்பட்டது.

 

.



இடம் கொக்கட்டிச்சோலை, இலங்கை


நாள் யூன் 12, 1991 (+6 GMT)

தாக்குதலுக்கு

உள்ளானோர் தமிழர்

தாக்குதல்வகை ஆயுதப் படுகொலை


ஆயுதம் இயந்திரத் துப்பாக்கிகள், கத்திகள், கோடாரிகள்

இறப்புகள் 152

தாக்கியோர் இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை[1] சிங்கள இராணுவம் அக்காலப்பகுதியில் பிரேமதாசா இலங்கை அதிபராகயிந்தார்.



இரவு 6 மணி திடீரென முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் கனரக ஆயுங்களுடன் சிங்களப்டைகள் கொக்கட்டிச்சோலை,கிராமம் உள்ளே நுழைந்து அக்கிராமத்தை சுற்றி வளைத்தனர். ஒன்று கூடலிற்காக ஓர் இடத்திற்கு வருமாறு அனைத்து மக்களும் அழைக்கப்பட்டனர். ஏதும் அறியாத அப்பாவித் தமிழர்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர்.


சுற்றி வளைத்து ஆயுதங்களுடன் நின்றதை மக்கள் அவதானித்தார்கள். இருந்தும் சந்தேகத்திற்கு இடமானவர்களைக் கண்டுபிடிப்பதற்கான செயல்பாடாக இருக்கலாம் என அங்கே சென்ற அனைவரும் நினைத்துக் கொண்டார்கள்.

முஸ்லிம் ஊர்காவல் படையினரிடம் வாள்கள் கத்திகள் வைத்திருந்தார்கள். ஆனால் சந்தேகத்திற்கு இடமான மனிதர்களைக் கண்டபோதும் தப்பிச் செல்வதற்கு எவ்விதமான பாதையும் கண்ணிற்குத் தெரியவில்லை. ஒரு வேளை ஆண்கள் சிதறி ஓடித்தப்பி விடலாம் ஆனால் பெண்களும் குழந்தைகளும் அவர்களின் நிலைமை என்னவாகும்?


 நினைக்கும்போது நெஞ்சம் கனத்தது. அனைவரும் அமைதியாக நின்றார்கள். வெடிதியனவா என்ற சத்தம் அதில் நின்ற ஒருதனால் சொல்லப்பட்டது. இராணும் சுடத்தொடங்கிவிட்டது. காயப்பட்டவர்களை முஸ்லிம் ஊர்காவல் படையினர் கத்தியால்  கழுத்தை வெட்டிக் கொல்வதை எனது கண்ணால் பார்த்தேன். அவ்விடத்தில் நின்றஅனைத்து ஆண்களும் வேகமாக அவ்விடத்தில் இருந்து ஓடத்தொடங்கினோம். வெடிப்பட்டவர்கள் கீழே விழுந்தார்கள். என்னோடு சேர்ந்து சில குறிப்பட்டவர்கள் மட்டும்தப்பிக் கொண்டோம். அதில் 152 பெண்கள் குழந்தைகள் உட்பட ஆண்களும் கொல்லப்பட்டனர். ஓடினவர்களில் நூறு பேர் காயப்பட்டனர். இவர்களின் காயங்களை விடுதலைப் புலிகளே மாற்றினார்கள் என அதில் தப்பிய திரு ராஜன் குறிப்பிட்டார். இவ் நடவடிக்கையில் இவரின் மனைவி 5 பிள்ளைகள் இனவெறியர்களால் கொல்லப்பட்டனர்.


 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை என்ற ஊரில் தமிழ் மக்கள் மீது 1991 யூன் 12 அன்று நடத்தப்பட்டது. இதன் போது மொத்தம் 152 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.[2][3] இப்படுகொலைகளை விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. படுகொலைகளை நடத்திய இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த கட்டளை அதிகாரி தவறி விட்டதாக ஆணைக்குழு கண்டறிந்தது. அவரைப்பதவியில் இருந்து அகற்றுமாறு ஆணைக்குழு பரிந்துரைத்தது. அத்துடன் படுகொலைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரில் 19 பேரை ஆணைக்குழு அடையாளம் கண்டது. கொழும்பில் நடத்தப்பட்ட இராணுவ விசாரணைகளில் இந்தப் 19 பேரும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த போதிலும், பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பான்மையாகத் தமிழரும், சிறுபான்மை இனக்களாக முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் ஆகியோர் வசிக்கின்றனர். 1980களின் ஆரம்பம் முதல் 1990களின் ஆரம்பம் வரை ஏறத்தாழ 1,100 பேர் வரைக் காணாமல் போயுள்ளனர்.  இவர்கள் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

 கொக்கட்டிச்சோலை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 1987, 1991 இல் நடந்த படுகொலைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


இதேகாலத்தில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்த தலைவர்,





14/07/1991அன்று போராளிகளின் வித்துடல்களை அடக்கம் செய்யுமாறு தலைவர் அனுமதி வழங்கினார்.


முன்னர் போராளிகளின் வித்துடல்கள் எரியூட்டப்பட்டன.  எரிபடும் போது ராஜன் என்ற பேராளியே அவ் விடியோவை தலைவருக்குக் காட்டியுள்ளார். அதைப் பார்த்த தலைவர் மேடையில் வைத்து அஞ்சலி செய்தபின் அடக்கம் செய்யுமாறு கட்டளை வளங்கியுள்ளார். அதை அடுத்து14/07/1991 முதல் முதலாக கப்டன் சோலை என்பவரின் வித்துடல்  கோப்பாய் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.  அன்றிலிருந்து தமிழீழப் பகுதியில் வீரச்சாவு அடையும்அனைத்துப் போராளிகளும் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டார்கள்.
இனி அனையிறவிற்கு வருவோம்,

 14.07.1991அன்று ஆனையிறவை மீட்க சிங்களக் கடல் படையால் தரையிறக்கம் செய்யப் பட்டது.

 வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு இராணும் தள்ளப்பட்டது.  அதனால் வெற்றிலைக் கேணி கட்டைக்காடு கடற்கரை பக்கமாக ஒரு பாரிய தாக்குதல் ஒன்றைச் செய்து ஆணையிறவில் உள்ள படைகளை பாதுகாப்பது என அரசாங்கம் திட்டமிட்டது.


அதற்கு அமைவாக 14.07.1991 அன்று சுமார் 800 படைகளை ஏற்றிக்கொண்டு சிறிலங்கா கடல்படை கடலில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் அளவில் வந்துகொண்டிருந்தது.

 ஆனால் அப்பொழுது அதை சுட்டு வீழ்த்தக்கூடிய பலமான ஆயுதமான வீற்றன் 23 மில்லிமீற்றர் ஆயுதங்கள் இருந்தன எம்மிடம் , அப்பகுதிக்குப் பொறுப்பாக நின்ற தமிழ்செல்வன் கப்பல் வந்து கொண்டிருக்கும் கதையை மாத்தையாவிற்குத் தெரிவிக்கின்றார்.  அத்தோடு கடலில்வைத்து மூழ்கடிக்கப் போகின்றோம் என்ற தகவலும் மாத்தையாவிற்குத் தமிழ்செல்வனால் சொல்லப்பட்டது.

திடீரென 5 நிமிடம் கழித்து மாத்தையாவின் பதில் வருகின்றது கப்பலைக் கடலில் வைத்து மூழ்கடிக்க வேண்டாம். அவர்கள் தரையிறங்கியதும் அவர்களை சுட்டு விட்டு அவர்கள்கொண்டுவரும் ஆயுதங்களை எடுக்குமாறு மாத்தையா தமிழ் செல்வனிற்குக் கட்டளை வழங்கினார்.


தமிழ்செல்வனும் மாத்தையாவின் கட்டளையை நிறைவேற்றினார். ஆனால் தரையிறங்கியதும் நிலமை தலைகீழாக மாறியது. இராணுவத்தின் கை ஓங்கியது. கடல்ககரைப் பிரதேசமான வெற்றிலைக் கேணியையும் கைப்பற்றி இராணுவம் ஆனையிறவோடு இணைத்தது. அன்று நடந்த சண்டையில் மட்டும் லெப்.கேணல் சூட்டி உட்பட 15 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.


 இச்சமரை முறியடிக்க தளபதி சொர்ணம் அவர்கள் தலைவரின் பதுகாப்புப் படையணியான 0 படையணியை வைத்து கடுமையான தாக்குதல் நடத்தினார், அச்சண்டையில் லெப். கேணல் சூட்டி உட்பட நூற்றுக்கணக்கான சிறோ படையணிப் போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது. ஆனால் இரண்டாகப் பிரிக்க முடியாவிட்டாலும் பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதில் 95 தானியங்கி துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.  தொடர்ந்து முன்னேறிய படையினரை  எதிர்த்து கடுமையான எதிர்த் தாக்குதலை தளபதி சொர்ணம்மேற்கொண்டார், 


கொம்படிவரை வந்த படையினர் கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்த போது.தளபதி லெப். கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியைக் கைவிட்டு .அப்படியே  வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த் தாக்குதல் நடைபெற்றது. இச்சமர் பற்றி எழுதுவதற்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. 


இவ் அர்ப்பணிப்பு மிக்க இச்சமர் இயக்கத்திற்குப் பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர். இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்திய சமர். இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான ச. பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன் வழிநடாத்தினார். அச்சண்டையின் தோல்விக்கு பிரதான பொறுப்பாக விடப்பட்ட மாத்தையா அவர்களின் துரோகமே காரணம் இந்நடவடிக்கைக்காக நாம்அறுநூற்றி மூன்று போராளிளைக் கொடுத்தும் வெல்ல முடியாமல் போனதை எண்ணிக் கவலையடைகின்றோம்,

ஆனால் ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும். 10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. 


துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும். மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம்.

 ஆனால் பேச்சுவார்த்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற கருத்தை நாம் எப்பொழுதும் தெரிவித்துக் கொண்டே இருந்தோம்.


இராணுவத்தின் கவலை முடிந்து விட்டது .விடுதலைப் புலிகள் இந்நடவடிக்கையில் முற்றாகத் தோற்றுவிட்டார்கள், இதற்கு மாத்தையா என்ற பச்சைத் தூரோகி அரசாங்கத்திற்கு உதவினான் என்பதை எந்த ஒரு போராளியும் மறக்க மாட்டான்.
இனி இதைத் திரும்ப சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்ட மணலாறு நவடிக்கை பற்றிப் பார்ப்போம்.

சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட "மின்னல்" படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் இருவரும்அந்நடவக்கையில் ஒரே நாள் வீரச்சாவ அடைந்தனர். 



17/09/1991அன்றுமின்னல்என்றபேரில் மணலாற்றில் பாரிய தாக்குதலை ஆரம்பித்தது சிங்களப்படைை.


மின்னல் என்ற பேரில்விடுதலைப் புலிகளின் ஆனையிறவு நடவடிக்கையை திசை திருப்புவதற்காக மணலாற்றைப் பிடிக்க ஒரு பாரிய நடவடிக்கையை அரச படைகள் ஆரம்பித்தது.

 நடவடிக்கையை எதிர்கொள்வதற்காக விடுதலைப் புலிகளிற்கு மேலதிகமாக ஆளணிகளை மணலாற்றுக்கு அனுப்ப வேண்டியதேவை ஏற்பட்டது. அதனால் நான் முன்னர் குறிப்பிட்டுயிருந்தேன். ஆனையிறவுச் சண்டைக்காக புதிதாக கொள்வனவு செய்த சாமானை போராளி எமிலனின் தலைமையில் நான்கு போராளிகள் நுணாவிலில் நின்றோம் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அப்பொழுது தளபதி சொர்ணம் அண்ணை திடீரென எங்களின் முகாமிற்கு வந்த அவர் என்னை மட்டும் உடமைப் பையுடன் தனது வாகனத்தில் ஏறுமாறு கட்டளை வழங்கினார்,


நான் எங்களேடு நின்ற மூவரிடமும் போய்ற்று வாறன் எனச் சொல்லி விட்டு அவரின் வாகனத்தில் ஏறினேன். அவர் நேராகச் சாகச்சேரியில் இருந்த தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆன 7.7 முகாமிற்குச் சென்றார். அங்கே சென்றதும் அப்பொழுது ஒரு நடைமுறை இருந்தது. பாதுகாப்பு முகாமில் இருந்து வெளியே சென்று மூன்று  அல்லது இரண்டு மாதங்கள் அங்கேதங்கி நின்று கடமை செய்து விட்டு மீண்டும் உள்ளே வரும்போது தனிநபர் உடமை வேக் செக்பண்ணும் நடைமுறை ஒன்று இருந்தது.


 ஆனால் அன்று எதிர்மாறாக நடந்தது. காவல் கடமைகளில் நிற்பவர்களத் தவிர அங்கே நின்ற அனைவரையும் உடுப்பு பாக்கோடு வருமாறு சொர்ணம் அண்ணை கட்டளை வழங்கினார். அதனால் அனைவரும் உடுப்பு பாக்கோடு சென்றோம். அனைவரின் உடுப்பு பாக்குகளையும் நேரடியாக சொர்ணம் அண்ணை செக்பண்ணினார், அப்பொழுது அவ் முகாமிற்கு நிர்வாகப் பொறுப்பாக இருந்த லெப். அரசனின் பாக்குக்குள் சாவகச் சேரியைச் சேர்ந்த ஒரு பெண் எழுதிய காதல் கடிதமும் அவளின் படமும்  அவரின் பாக்கில் இருந்தது.


அதைப் பார்த்ததும் சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறைபோட்டு உமக்கு கல்யாணம் கட்டுற வயசா? எனக் கேட்டு சண்டைக்கு உரியவாறு வெளிக்கிடு எனச் சொல்லி அவனை அனுப்பினார். அடுத்து அனைவரின் உடமைகளும் செக் பண்ணி முடிந்தவுடன்,


லெப்.அரசன் மேஜர் டிசான் என்னும் இரு போராளிகளையும் சண்டைக்கு வெளிகிடுமாறு கட்டளை வழங்கினார். அதற்கு மேஜர் டிசான் தனக்கு றைவுளை மாத்தித்தருமாறு கேட்டான். உடனே என்னைக் கூப்பிட்ட சொர்ணம் அண்ணை எனது T.81 துப்பாக்கியை டிசானுக்குக் கொடுக்குமாறும் அவர் வைத்து இருந்த G3 துப்பாக்கியை என்னை வேண்டி எடுக்குமாறும் கட்டளை வழங்கினார்.  நானும் அவரிடம் எனது றைவுளை களட்டிக்கொடுத்துவிட்டு அவரின் றைவுளை வேண்டி எடுத்தேன்.


 அப்பொழுது எனது றைவுளிற்கு சிலிங் இல்லை நான் சீலைத் துணியால்தான் றைவுளைக் கட்டி இருந்தேன். அப்பொழுது மேஐர் டிசானிடம் இரண்டு சிலிங் இருந்தது. ஒன்றை எனக்குத் தருமாறு கேட்டேன்.  நீர் சொர்ணத்திடம் சொன்னாலும் பராவாய் இல்லை சிலிங் தர மாட்டேன் உன்ரபல்லை உடைப்பேன் என்றார்.


 இதே காலம்தான் ஒவ்வொரு போராளிகளையும் தலைவர் தன்னோடு வைத்திருந்து அவர்களின் திறமையான செயல்ப்பாட்டை அவதானித்த பின் அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்காக மாவட்டங்களிற்கு அனுப்புவார். அந்தத் தெரிவில் 1988 காலப் பகுதியிலிருந்து தலைவரின் மேற்பாது காவலர்களாகயிருந்த லெப். கேணல் ஜோய். லெப் கேணல் விஜயகாந்-மேஐர் வினோத் போராளி அருள் இவர்கள்4 பேரும் மற்றும் தளபதி வாணு அவர்களையும் மட்டக்களப்பிற்கு அனுப்பத் தலைவர் திட்டமிட்டர். அதற்காகவே அவர்கள் அங்கே விடப்பட்டு இருந்தார்கள்.


அப்பொழுது அருகில் நின்ற ஜோய்  டிசான் என்னேடு முரண்பட்டதைப் பார்த்துக் கொண்டு நின்றார்.




உடனே ஜோய் டிசானிடம் சொன்னார்.  அவனில் தவறு இல்லை இண்டு சிலிங்கை பார்த்தபடியால் தான் உன்னிடம் கேட்டான். நீர் ஏன் அவனுக்குப் பேசினாய் எனச் சொல்லி விட்டு அவனின் சிலிங்கை எனக்குத் தந்தார். ஆனால் தான் மட்டக்களப்பு வெளிக்கிடும்போது என்னிடம் தரவேண்டும் என சொல்லித்தான் தந்தார்.


 ஆனால் அன்று பிற்பகல் அவர்கள் யாழ் மாவட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக  வெளியே போய்விட்டார்கள். ஆனால் அவன் வெளியே சென்று சில மணித்தியாலத்தால்  நாங்கள் தலைவரோடு வடமராச்சிக்குப்போய் விட்டோம்.  அப்பொழுது ஜோ மீண்டும் முகாமிற்கு வந்து என்னைக் கேட்டுள்ளான். அதற்கு அவர்கள் நான் வெளியே சென்று விட்டேன் என அவனிடம் சொல்லி உள்ளனர். அதற்கு அவன் என்னிடம் கொடுக்கச் சொல்லி ஏதாவது தந்தானா எனக் கேட்டுள்ளான்.அவர்கள் இல்லை என சொல்லியுள்ளனர். அதற்கு அவன் காண்கின்ற இடத்தில் அவனைச் சுடுவன் எனச் சொல்லுங்கோ எனச் சொல்லி விட்டு மட்டக்களப்பு சென்று விட்டான். அங்கே சென்று சிறிது காலத்தில் அவன் வீரசாவு அடைந்து விட்டான். இதுதான் போராளிகளின் வாழ்க்கை.




அடுத்து அங்கே இருந்து மேஜர் டிசானும், லெப் அரசனும் மின்னல்
 நடவடிக்கையை முறியடிப்பதற்காக மணலாற்றுக்கு அனுப்பப் பட்டார்கள். அப்பொழுது எங்களின் 0 படையணிப் போராளிகள் மேஜர் றோவட்  அவர்களின் தலைமையில் மணலாற்றிற்குச் செல்வதற்காகத் தளபதி சொர்ணம் அண்ணையால் ஒரு கொம்பனி உருவாக்கப்பட்டது.


அவ்வேளை இவர்கள் ஆனையிறவுச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அவசரமாக போராளி ரவாஸ் உட்பட 60 போராளிகள் எடுக்கப்பட்டு தளபதி றோவட் தலைமையில் மணலாற்றுக்கு அனுப்பப்பட்டனர்.


 
  அவர்களோடு இவர்கள் இருவரும் போய் இணைந்து சண்டையிட்டுகொண்டு இருந்தார்கள். இனி மின்னல் நடவடிக்கையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.




 எப்படியாவது ஆனையிறவுச் சண்டையை திசை திருப்ப வேண்டும் என எதிரி திட்டமிட்டான். அதை திசை திருப்புவதற்காக ஒரு புதிய களமுனையை ஆரம்பித்தான்.


அதுமின்னல் என்ற பேரில் மணலாற்றை பிடிப்பதற்கான நடவடிக்கையாகும்.எதிரியின் நோக்கம் ஒன்று ஆனையிறவில் இருந்து விடுதலைப் புலிகளை மணலாற்றிக்கு இழுத்து ஆனையிறவைப் பாதுகாப்பது, அல்லது அவர்கள் எதிர்ப்புக் காட்டாமல் இருந்தால் இழப்பு இன்றி இலகுவாக மணலாற்றைக் கைப்பற்றுவது, இதுவே அரசாங்கத்தின் திட்டமாகயிருந்தது.


ஆனால் ஆனையிறவை விட மணலாறே விடுதலைப் புலிகளிற்கு முக்கியமானது என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்த விடயம். அதனால் அங்கே கை வைத்தால் ஆனையிறவைத் தானாக விடுவார்கள் என்பது அவர்கட்கு நன்கு தெரியும்.எனவே அதை மையமாக வைத்தே மணலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட  ராணுவ நடவடிக்கையாகும்.


இரண்டு நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்பது விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு பாரிய சாவாலாகவே இருந்தது. ஏனெனில் அவர்கட்கு பாரிய ஆளணிப் பிரச்சனையாக இருந்தது. ஆனையிறவில் இருந்து குறிப்பிட்ட போராளிகளை மணலாற்றுக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது.


அதனால் தலைவரின் 0 பிரிவில் இருந்து சுமார் 100 போராளிகளுடன் மேஜர் றோவட்தலைமையில் மணலாற்றுக்கு ஒரு படையணி அனுப்பப்பட்டது. தளபதி பால்ராஜ் அவர்களின் றெஜிமேன்ட் 1991 - 4ம் மாதம் சாள்ஸ் அன்ரனி என பேர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே சாள்ஸ் அன்ரனி படையனியைச் சேர்ந்த சுமார் 250போராளிகளுடன் போராளி STAR  தலைமையில் அங்கே அனுப்பப்பட்டது.

அதன் பிரதான பொறுப்பாளர் தளபதியாக தளபதி பால்ராஜ் அவர்களும் அங்கே சென்றார்.




மணலாறு பகுதிக் கொமாண்டராக லெப். கேணல் ஜஸ்ரின் கடமையாற்றினார். அச்சண்டைக்கான கட்டளைகளைத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழங்கினார். காயப்பட்ட போராளிகளைப் பராமரிப்பது நிலமையை அறிந்து தலைவருக்குத் தெரியப் படுத்துவது, இவ் வேலைகளைக் கேணல் சங்கர் அவர்கள் செய்தார் .


ஒரு பகுதிக் கொமாண்டராக தளபதி றோவட் தனது 0 படை பணியை வைத்து இராணுவத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தினார்.  0 படையணியிடமே நவீன ஆயுதங்கள் உள்ளது என்பது எதிரிக்கும் தெரிந்த விடயம். இதுவே தலைவரின் நேரடிகண்காணிப்பில் செயல்படும் அணியாகும். இச்சண்டையில் தலைவரின் பாதுகாவலரான லெப்.அரசன், மேஜர் டிசான் உட்பட நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.


 


ஆனால் எதிரியின் திட்டம் தோற்கடிக்கப்பட்டது மணலாறு பாதுகாக்கப்பட்டது.



இதே காலம் தான் தளபதி வாணு அண்ணை மட்டக்களப்பு அனுப்பப்பட்டார். தளபதி பதுமன் அண்ணை திருமலையில் இருந்து எடுக்கப்பட்டார், அங்கே இருந்து எடுக்கப்பட்ட பதுமன் அண்ணை தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆன 7.7 முகாமிலே ஒரு சில மாதங்கள் நின்றார். அப்பொழுது பாதுகாப்பில் நிக்கும் அனைத்துப் போராளிகளும் மதிய நேரங்களில் அணிநடை செய்வது எங்களின் கடமையாக இருந்தது. அப்பொழுது நான் பதுமன் அண்ணையையும் அணிநடைக்கு எடுப்பதா என சொர்ணம் அண்ணையிடம் கேட்டேன்.பதுமன் என்றா அவருக்கு என்ன கொம்பா அவரையும் எடுத்து உயர முறைப்படி விட்டு பரட்டை கொடுங்கோ எனச் சொர்ணம் அண்ணை என்னிடம்சொன்னார். அவர் சொன்னது போல் பதுமன் அண்ணைக்கும் பரட் வழங்கப்பட்டது. 20/09/1991 அன்று பதுமன் அண்ணை படைத்துறைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அன்றில் இருந்து சிறந்த முறையில் போராளிகளை அவர் வளர்த்து எடுத்தார்.

19/09/1991 அன்று தளபதி பதுமனின் தலைமையில் தமிழீழப்படைத்துறைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.


19/09/1991 தமிழீழத்தில் பல கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டுமெனத் தலைவர் இரவு பகலாக சிந்தித்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் தான் வெளிநாடுகளில் உள்ள சில பக்கச் சார்பற்ற நிறுவனங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதாக போலியான வதந்திகளைப் பரப்பிய வண்ணம் இருந்தன.

அதற்காக அவர்கள் எமது மக்களால் கலை நிகழ்வுகள் செய்யும் போது சிறுவர்கள்  வரிப்புலி அணிந்து நடிக்க வைப்பது அவர்களின் விருப்பமாகயிருந்தது. இந்தப் படங்கள் இப்படியான மீடியாக்களின் கைகளில் சிக்கி விட்டது. இந்தப் படங்களை வைத்தே அவர்கள் கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள்.

அது தலைவருக்கு கடும் கவலையாகயிருந்தது. செய்யாத ஒரு வேலையைச் செய்வதாக இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்களே! என்பது தான் அந்தக் கவலை. அக்காலப்பகுதியில் திருகோணமலை சிறப்புத் தளபதியாக விடப்பட்ட தளபதி பதுமன் அப்போது திறமையான முறையில் இராணுவத்திற்கு எதிரான சண்டைகளில் ஈடுபடாமல் செயல்பாடு அற்ற ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்பட்டதாக அறியப் பட்டது.

10/08/1991 திருகோணமலை மாவட்டத்தில் இருந்து அனைத்துப் பொறுப்புக்களையும் வேற ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு யாழ்பாணம் வருமாறு தளபதி பதுமனிக்கு தலைவரால் சொல்லப்பட்டது. தொடர்ந்து பதுமன் யாழ் சாவகாச்சேரியில் உள்ளே தலைவரின் பாதுகாப்பு முகாம் ஆன 7.7. முகாமிற்கு வந்து சேர்ந்தார். அங்கே யார் வந்தாலும் தளபதி என்று எவ்விதமான சலுகைகளும் தளபதி சொர்ணம் அவர்களால் வளங்கப்படாது. அனைவரும் சமனாகவே மதிக்கப்படுவார்கள்.

நேரம் பகல் 12 மணியானால் கடும் வெய்யிலாகயிருக்கும் ஆனால் நாங்கள் எல்லோரும் பரட் அல்லது அணி நடை செய்வதற்காக லையின் பண்ணுவோம். உயர முறைப்படி பதுமன் பின்னால் நின்று பரட் அடிப்பார். நான் முன்னால் நின்று பரட் அடிப்போம். இது தான் அங்குள்ள நடைமுறையாக இருத்தது. தளபதி பதுமன் மற்றும் தலைவரின் பாதுகாப்பு அணியில் மினிமினி LMG வைத்திருந்த  பதுமன் இவர்கள் இருவரின் தலைமையில் தமிழீழப் படைத்துறைப்பள்ளி19/09/1991 ம் ஆண்டு தலைவர் ஆரம்பித்து வைத்தார்.

இதன் நோக்கம் 18 வயதிற்கு குறைந்தவர்கள் எமது இயக்கத்தில் இணைந்தால் அவர்கள் படைத்துறைப் பள்ளிக்கு அனுப்பப் படுவார்கள். அங்கே அவர்களிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் கற்ப்பிக்கப் படும்.  18 வயதை அவர்கள் அடையும் வரை இப்படிப்பு அவர்களிற்கு தொடர்ந்து நடக்கும். அவர்கள் 18 வயதை அடைந்ததும் மீண்டும் அவர்களிற்கு ஒரு நேரமும் வைக்கப்படும். அதில் நீங்கள் விடுதலைப் புலிகளின் ஆரம்ப இராணுப் பயிற்சிக்கு செல்லப் போகின்றீர்களா? அல்லது  சமுகத்தோடு சேர்ந்து வாழப் போகின்றீர்காளா?
இது தான் அந்தக் கேள்வியாகயிருக்கும். ஒரு சிலர் வீட்டிற்கு சென்று விடுவார்கள். பெரும்பாண்மையான இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்து கொள்வர்கள்.  இது தான் எங்களின் வேலையாகயிருந்தது. பிற்காலத்தில் இவர்கள் சிறந்த பேராளிகளாக வளர்ந்து வந்தார்கள். ஒரு சிலர் சிறுத்தை கொமாண்டோ அணிக்கு விரும்பிப்போய்ச் சேர்ந்தார்கள், இதில் வளந்தவர்கள் 99 வீதமானவர்கள் தங்களின் உயிரைத் தாய்நாட்டிற்காக அர்பணித்து விட்டார்கள்.

23/09/1991 செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.






யுத்த சூழ்நிலையால் பெற்றோரை இழந்து பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும்! என்பதே எனது ஆவல். இந்தப் புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்” என்றார்.



என தெரிவித்ததோடு பெண் போராளிகளில் மிகவும் நேர்மையானவரான ஜெனனி அவர்கள் அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் அவ் மாணவர்களோடு பேசிய தலைவர் நீங்கள் ஒரு திறமையானவர்களாக வளர வேண்டும். உங்களிற்கு  யராவது அடித்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ நீங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் எனத் தலைவர் கூறினார்.

தொடர்ந்து அவர்களை திறமையாகப் படிப்பதோடு மட்டும் அல்லாமல் வயது வந்த மாணவிகளை ஆண் போராளிகள் திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னோடு நின்ற போராளிகளிற்கு விளிப்புணர்வு ஏற்படுத்தினார். வெளிப்படையணியில் நின்றவர்கள் அதை ஏற்காவிட்டாலும். தலைவரின் பாதுகாப்புப் போராளிகள் அதை ஏற்று திருமணம் செய்தார்கள். குறிப்பாக போராளி. நடா . போராளி. பில்லா . போராளி. குகதாஸ் எனக் கூடுதலான போராளிகள் திருமணம் செய்தார்கள்.




19/11/1991 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழக்காவல் துறை உருவாக்கப்பட்டது. 



அதன் நோக்கம் சமுக ரீதியான பிரச்சனைகளான பாலியல் குற்றம், கொலை, கொள்ளை மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படும் கொடுக்கள், வாங்கல் காணிப் பிரச்சனையென அளவிற்கு அதிகமான பிரச்சனைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இதைப்பக்கச் சார்பற்ற முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே தலைவரின் நோக்கமாக இருந்தது.

அதைக் கையாளுவதற்கு பொறுப்பாக விடப்படுபவர் முன் அனுவபம் உள்ளவராகயிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பா.நடேசன் 

அதற்கு பொருத்தமானவராகத் தலைவரால் கருதப்பட்டார். 
    

அவர் தலைமையில் ஓரளவிற்குப் படித்த இளைஞர் யுவதிகளை இனங்காணப்பட்டு முதலாவது காவல் துறைப் பயிற்சி யாழில் நடைபெற்றது. சிறந்த போராளி ஆசிரியர்களைக் கொண்டே இப்பயிற்சி வழங்கப்பட்டது. அப்பயிற்சி முகாம் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்தது.

போராளிகளின் ஆம்பப் பயிற்சி நிறைவுகளைப் பார்க்க விரும்பாத தலைவர். இவர்களின் ஆரம்பப் பயிற்சிகளை இடைக்கிட கண்காணித்ததோடு பயிற்சி நிறைவு நாள்களில் சென்று அவர்களின் இராணுவ மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதனால் அவர்களிற்கு தலைவர் மீது நம்பிக்கையும் விசுவசமும் ஏற்பட்டது. அதனால் அவர்களின் செயல்பாடு சிறப்பாகக் காணப்பட்டது.



காலப்போக்கில் இவர்கள் சமுகப் பணி மட்டும் செய்யவில்லை இறுக்கமான ஆளணிபற்றாக்குறை ஏற்படும் போது போராளிகளோடு இணைந்து சண்டையிட்டு பலர் வீரச்சாவு அடைந்துள்ளனர். இவர்களைக் கண்டதும் மக்கள் ஒரு சிறிய பயத்துடனான ஒரு பெரிய மரியாதையைக் கொடுப்பார்கள்.

 போராளிகளிற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் போல் இவர்களிற்கு சிறிது குறைவாகக் காணப்பட்டது. அதாவது கடமையில் இருக்கும் போது மட்டும்  மது, புகைத்தல் மற்றும் சமுகம் ஏற்றுக் கொள்ளாத தவறான செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பதே இதன் கட்டுப்பாடாகும்.

அதில் சம்பந்தப்பட்டவர் குறிப்பிடுகையில்....


1991ம் ஆண்டு, கார்த்திகை மாதம் , 19ம் திகதி எமது அணிகள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறின. எமது முதலாவது அணிவகுப்பை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு எமது பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதனைத்
தொடர்ந்து யாழ். குடாநாட்டில் யாழ்ப்பாணம், சுண்ணாகம், சங்கானை, கோப்பாய், சாவகச்சேரி, பளை, பருத்தித்துறை, நாகர்கோவில் போன்ற இடங்களில் பணிமனைகள் திறந்து வைக்க்கப்பட்டன. இதன்பின்னர். வன்னிப் பெரும் நிலப்பரப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் பணிமனைகள் திறந்து வைக்கப்பட்டன. சகல பணிமனைகளிலும் அன்றிலிருந்து இன்றுவரை பணிபுரிந்து வருகின்றது . 

                                               


 01/01/1992 அன்று சிறுத்தைப் படையணி தலைவரால் உருவாக்கப்பட்டது.

 சிறுத்தை ஆண் போராளிகளிகளும் உருவாக்கப்பட்டார்கள். இவர்களும் அனைத்து மாவட்டங்களிலுமிருந்தும் 18 பதிட்டு வயது நிரம்பிய இளைஞர்கள் எடுக்கப்பட்டு தளபதி மேஜர் றோவட் அவர்களின் தலைமையில் இவர்களிற்கான பயிற்சியும் நடந்தது. இவர்களிற்கு என்ன நடந்தது என்பதைப் பின்னர் பார்ப்போம். இனி பெண் போராளிகளைப் பற்றிப் பார்ப்போம்.




 இதற்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 17 வயது தொடக்கம் 22 வயதான ஆண், பெண் போராளிகள் எடுக்கப்பட்டார்கள். இதில் பெண் போராளிகள் தனியாகவும் ஆண் போராளிகள் தனியாகவும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.

முதலில் பெண் போராளிகளைப் பற்றிப்பார்ப்போம்.

1990 கடசிப் பகுதியில் நானும் சொர்ணம் அண்ணையும் நாவற்குழி முகாமில் இருந்து செல்லக்கிளியை ராஜீவ் அண்ணையின் முகாமில் விட்டோம் எனக் குறிப்பிட்டேன். இப்பொழுது அதைப் பற்றிப் பார்ப்போம்.


இதற்கு கேணல் ராஜீவ் அவர்கள் பிரதான பொறுப்பாளராக தலைவரால் நியமிக்கப்பட்டார். சிறுத்தைப் படைப் பணியின் சிறப்புப் பொறுப்பாளர்,  லெப்.கேணல் கோமளா. 



தளபதி லெப் கேணல் நந்தா, துணைத்தளபதி போராளி சௌமியா,

ஆசிரியர்கள் உடல் பயிற்சி செல்லக்கிளி, ஆயுதரீதியான வகுப்பு ஜெனனன் மாஸ்ட்டர், வெடிமருந்து கேணல் ராஜீவ்,  தொலைத்தொடர்பு பிள்ளையான் மாஸ்ட்டர், கரிகாலன், அன்ரி / பத்மலோஜினி, கரத்தே / குத்துச்சண்டை சோதி மாஸ்ட்டர்,எனச் சிறந்த கட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்டது.


 இவ் முகாம் கொடிகாமத்தில் அமைந்த ஒரு தொன்னம் தோட்டமாகும்.  இதற்கு   பலாலியில் வீரச்சாவு அடைந்த மேஜர் தாரணி என்ற இவரின் பெயர் வைக்கப்பட்டது. இது தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடந்தது. இவர்களிற்கான உணவு பயிற்சி, அனைத்தையும் தலைவரே நேரடியாகக் கண்காணித்தார். இவர்களிற்கும் கடற்புலிகளிற்கும் மட்டுமே டாவுள் வச்சேற் என சொல்லப்படும்சத்துக் கூடிய உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு பயிற்சி மதிப்பீட்டிற்கும் இவர்களின் பயிற்சியைப் பார்ப்பதற்கு தலைவர் அங்கே செல்வார்.



அதே காலம் இவர்களின் பயிற்சி மதிப்பீட்டைப் பார்வையிடுவதற்காக தளபதி லெப் .கேணல் குட்டிசிறி தலைமையில் தலைவரோடு நாங்கள் நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த 9.5 முகாமில் இருந்து சென்றுகொண்டிருந்தோம். தலைவரின் வாகன ஓட்டியாக சின்னமணி, தலைவர் மேஜர் மாதவன் அண்ணை மற்றும் குட்டிசிறி அண்ணணை இவர்கள் தலைவரோடு முதலாவது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்,

,இரண்டாவது வானத்தை போராளி நசீர் அண்ணை ஓட்டினார். அதில் நான் லெப் கேணல் குணேஸ் அரிச்சந்திரன், போராளி கிறேசி, எனப் பல போராளிகள் சென்றோம். மூன்றாவது வாகனத்தைப் போராளி  லாம்பா அண்ணை ஓட்டி வந்தார். அதில் கதிரொளி முத்துஐயன், கமல் எனப் பல போராளிகள் அதில் வந்தார்கள். அதில் தலைவரின் பாதுகாப்பிற்காக 50 கலிபறும் வந்தது.மூன்று வாகனங்களும் 150 மீற்றர் இடைவெளியில் சென்று கொண்டிருந்தது.

அது பெண் போராளிகள் சிறுத்தைப் பயிற்சி முகாமான கொடிகாமத்தில் அமைந்து இருந்த தாரணி பயிற்சி முகாமிற்குச் சென்றது.


அங்கே சென்றதும் ராஜீவ் அண்ணை மற்றும் உடற் பயிற்சி ஆசிரியரான செல்லக்கிளி இருவரும் தலைவர் மற்றும் பொட்டு அம்மான் இருவரையும் கூட்டிக்கொண்டு அனைத்துப் பயிற்சிகளையும் காட்டினார்கள். அதைத்தலைவர் பார்வையிட்டுக் கொண்டுவந்தார். அனைவரும் ஆண்களிற்கு நிகராகச் சிறந்த முறையில் தங்களின் பயிற்சியை செய்து காட்டினார்கள்.

, தலைவருக்கு மிக்க மகிழ்ச்சியாகயிருந்தது கடசிப்பயிற்சியான 25 அடி உயிரத்தில் இருந்து கீழே பாய்தல் இதில் அனைத்துப் போராளிகளும் சிறந்த முறையில் பாய்ந்து ஓடிச் செல்கின்றார்கள். தலைவரும் மிக்க மகிழ்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் கடைசியாக வந்த ஒரு பெண் போராளி பாயாமல் கோபுரத்திற்கு மேலே நிற்கின்றார், ராஜீவ்  அண்ணையும் பாயுமாறு சொன்னார். பொட்டு அம்மானும் சொன்னார் இறுதியாகத் தலைவரும் பயப்பிடாமல் பாய் பிள்ளை எனச் சொன்னார். அவர் அதையும் கேட்கவில்லை.

அப்போதும் அப்போராளி பாயவில்லை பாய்வது போல் பாசாங்கு செய்வது பின்னர் நிற்பதுமாக நேரம் கடந்து சென்றது. இறுதியாகத் தலைவர் அது பிரச்சனை இல்லை கோபுரத்தில் இருந்து இறங்கிவா பிள்ளை எனக் கட்டளை வழங்கினார். அதையும் அப்பிள்ளை செய்யவில்லை அது கோபுரத்திற்கு மேலேநின்றது.

இத்தகவல் செல்லக்கிளிக்குச் சென்று விட்டது. எங்கயோ இருந்து வேகமாக ஓடி வந்தான் செல்லக்கிளி ஏதோவொரு பேரைச்சொல்லி சமசோட்யம் எனக் கட்டளை வழங்கினான். அப்போராளி தலைகீழாகச் சுற்றி கீழே பாய்ந்து பின் உறுதியாக நிலத்தில் நின்று ஓடியது.



இதைப்பார்த்த தலைவர் சொன்னார். நாங்கள் எவ்வளவு பேர் சொல்லியும் அப்பிள்ளை செய்யவில்லை பயிற்சி மாஸ்ட்டர் சொன்னவுடனே மேலதிகமாக சமசோட்டும் அடித்து விட்டுப்போனது.

பார்த்தையளா? இங்கே மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் மாஸ்ட்டர் சீப்பிற்கு அனைத்துப்போர் வீரர்களும் கட்டுப்படுவார்கள். ஏனெனில் மாஸ்ட்டர் சீப்பிற்குத்தான் ஒவ்வொரு போர்வீரனின் பலம், பலவீனம் கண்டிப்பாகத் தெரிந்து இருக்கும் எனத் தலைவர் குறிப்பிட்டார். பயிற்சி மதிப்பீடு முடிந்து தலைவர் பொட்டுஅம்மான்,ராஜீவ் அண்ணை அனைவரும் சாப்பிடுவதற்கு தயார் ஆகி விட்டார்கள். 


அவர்கள் இருக்கும் வட்டக்கொட்டிலுக்குப்பின்னால் நான் மினி மனி L.M.G யோடு கடமையில் நிக்கின்றேன். முன்னால் லெப் .கேணல் குனேஸ் அதே றைவுளோடு கடமையில் நின்கின்றார், எனது முடியும் குனேஸ் அவர்களின் முடியும் காத்துக்குப் பறக்கக்கூடிய இலகுவான முடிகள் அதனால் வாகனத்திற்குப் பின்னால்  இருந்து வந்தமையால் இருவரின் தலைகளும் குழம்பிய நிலையில் காணப்பட்டது. அதில் இருந்தவர்களில் 



கேணல் ராஜீவ் அல்லது குயிலன் என்பவர் மட்டும் போராளிகளில் குற்றபிடிப்பதில் திறமையானவர்
மிகவும் ஆர்வமானவர். அதனால் இந்த மாதம் பொடியல் முடி வெட்டேல்ல போலயிருக்கு தலையெல்லாம் குழம்பியிருக்குது, என்று தலைவரிடம் ராஜீவ் அவர்கள் சொல்லத் தலைவருக்கு கடும்போபம் வந்து விட்டது. என்னோடு நிப்பதெல்லாம் பேய்கள்தான் என்று சொல்லிவிட்டுத் தனது கோபத்தை அடக்கியதோடு அதற்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார்.

 மேற்கொண்டு அது தொடர்பாக அவர் கதைக்கவில்லை. இது ராஜீவ் அவர்கட்டு ஒரு ஏமாற்றமாகக்கூட  இருந்திருக்கலாம். ஏனெனில் ஆரையும் கூப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைவர் எவரையும் கூப்பிட்டுச் சொல்லவில்லை . இதை அவதானித்த ராஜீவ் அண்ணை பாதுகாப்புக்குப் பொறுப்பாகவந்த லெப் கேணல் குட்டிசிறி அண்ணையிடம் அப் பிரச்சனையைத் தெரியப் படுத்தியுள்ளார்.


நாங்கள் மீண்டும் முகாம் திரும்பியதும் எங்கள் இருவருடனும் தளபதி குட்டிசிறி அண்ணை எங்களிடம் வந்து ஏன் முடிவெட்டவில்லையென விசாரித்தார். அதற்கு நாங்கள் நேரம் இல்லாத பிரச்சனை தான் காரணம் எனத்  தெரிவித்தோம். அவர் உடனே ஒரு போராளியைக் கூப்பிட்டு எங்கள் இருவரின் முடியும் வெட்டப்பட்டது.

 அத்தோடு இருவருக்கும் நல்லெண்ணைப் போத்தல் ஒன்றும் தரப்பட்டது. அதை வாகனங்களில் போகும் வேளைகளில்மட்டும் தலைக்கு வைக்குமாறு அவரால் சொல்லப்பட்டது. 1992 அக்காலப் பகுதியில் எமது பாசறை யாழ் வலிகாமத்தில் உள்ள கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் அருகில் அமைந்திருந்தது. அவ் முகாமிற்கு பெயர்9.5 என்பதாகும். அங்கே தான் தலைவர் அனேகமாக வசிப்பது வழமை. அக்காலப்பகுதியில் தலைவரின் மேற்பாதுகாப்புப் பொறுப்பாளர்களாகச் செயல்பட்ட தளபதி சொர்ணம் 01, தளபதி கடாபி 02 , தளபதி ஜெயம் 03,  தளபதி றோவட் 04,  தளபதி குட்டிச் சிறி 05,  இவர்கள்தான் நம்பிக்கையான தளபதிகளாக தலைவரால் கருதப்பட்டவர்கள் .



பாகம் 4 ல் பகுதி 05 



அப்பொழுது ரெட்டி முகாமிலே தலைவர் அனேகமாக வசிப்பார். ஏன் எனில் அங்கே பொறுப்பாளர்மார்களைக் கூப்பிட்டுக் கதைக்க மற்றும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சந்திப்பதற்கும் அது வசதியான இடமாகயிருந்தது. அதனால்அனேமாக அவர் அங்கேதான் தங்குவார்.

அவ்முகாமை அழகுபடுத்துவதில் கேணல் இளங்கீரன் அவர்கள் மிகக் கடுமையாக உழைத்தார். அவ்முகாமில் பூமரங்கள் வைப்பது வங்கறுக்கு மேலே அறுகம் புல்லுகளை மண்ணோடு சேர்த்து வெட்டிக்கொண்டு வந்து வங்கறுக்கு மேல் அழகான முறையில் நாட்டியிருந்தார். தளபதி இளங்கீரன்  அதனால் புற்கள் அழகான முறையில் வளர்ந்து காணப்பட்டது, 

 அக்காலப் பகுதியில் வன்னிக்குச் செல்லும் போது தளபதி ஜெயம் அவர்கள் போராளிகள் தங்களின் பொழுது போக்கிற்காக மான் மரைக்குட்டிகளைப் பிடித்து வளர்த்து வந்தார்கள். அக்குட்டிகளை ஜெயம் அவர்கள் வாங்கிக் கொண்டுவந்து எமது ரெட்டி முகாமில் விடுவார்.

 அப்பொழுது மான் மரை வளர்ப்பதற்கு நல்ல மேச்சல் தரையும் இருந்தது. இந்தமான் மரைக்குட்டிகளை வளர்ப்பது போராளி கணேசின் கடமையாகவே இருந்தது.





அதனால் போதிய அளவு மேச்சல் தரை மிருகங்களிற்குயிருந்தது.  மொத்தமாக ஆறுமிருகங்கள் இருந்தன. அதில் இரண்டு மரை இரண்டு மான் பெரிதாகயிருந்தது. மற்றவை சிறிதாகயிருந்தது.


(இதில் வோக்கியோடு நிற்பவர் கேணல் இளங்கீரன்)


அதிகாலை வாகனம் வெளியே செல்லும் பாதை திறந்திருந்ததால் பெரிய ஆண் மரையும் பெரிய பெண்மரையும் வெளியே சென்று விட்டது. அப்பொழுது லெப்.கேணல் குட்டிசிறி அவர்களும் எங்களோடுதானிருந்தார்.


மரையைக் காணவில்லையெனத் தளபதி குட்டிசிறி அவர்களிடம் சொல்லப்பட்டது. சொன்னவுடன் அவர் வாகனத்தை எடுத்துக் கொண்டு தேடுவதற்காக வெளியே சென்று விட்டார். அடுத்த பக்கம் போராளி பேரம்பலத்துடன் இருவர் தேடுதலிற்காக அனுப்பப்பட்டனர். காலை 6 மணிக்கு சென்ற பேரம்பலம் பிற்பகல் இரண்டு மணிக்கு இரண்டு உரவேக்கில் இரத்த வெள்ளத்தோடு துவிச்சக்கர வண்டியில் தள்ளிக்கொண்டு இரு செல்லப் பிராணிகளின் இறைச்சிகளையும் முகாமிற்குக்குக் கொண்டுவந்து சேர்த்தான்.


என்ன விடயம் என விசாரித்தபோது m.mo  பொறுப்பாளர் பிரதீப் தலைமையிலான வெடிபொருள் உற்பத்தி செய்யும் போராளிகள் காட்டு மரையென நினைத்து இரண்டு மரைகளையும் சுட்டு இரவுச் சாப்பாட்டிற்காக கொத்துரொட்டி செய்யும் வேலை நடந்து கொண்டிருந்ததாகவும். தான் அதைப் பார்த்ததும் இது எங்களின் வளர்ப்பு மரை என அவர்களிற்குப் பேசிவிட்டு அவ்இறைச்சிகளை வேண்டிக்கொண்டுவருவதாகவும் எங்களிடம் குறிப்பிட்டார். இறைச்சிகளையும் வேறு வேறாக இரண்டு உரப்பையில் வேண்டிக் கொண்டு வருவதாக எங்களிடம் குறிப்பிட்டார்அவர்.


இது நடக்கும்போது தலைவர் பளையில் இருக்கும் எமது முகாமான 7-3 எனப்படும் "சுவாஸ்" தோட்டத்தில் நிக்கின்றார்.இந்தத்கவல் குட்டி சிறி அவர்கள் ஊடாக தலைவரிக்கு பறந்தது.  தகவலை அறிந்த தலைவர் இரண்டு மரைகளையும் தனித்தனியாக கிடங்கு வெட்டி முகாமில் மூன்று பனைமரங்கள் இருக்கும் இடத்தில்  அவ்மரங்களிற்குக் கீழே இறைச்சிகளை கிடங்கில் புதைத்து அதற்கு மேல் கல்லறை கட்டுமாறு குறிபிட்டிருந்தார். அவர் சொன்னது போல்  இரு மிருகங்களும் புதைகுழியில் விதைக்கப்பட்டு இரண்டிற்கு மேலையும் சமாதிகள் கட்டப்பட்டது,

எவளவு வேலைப்பளு இருந்த போதிலும் அவ் இடத்தையும் தானே தெரிவு செய்துள்ளார். தலைவர் என்பதையும் அவரின் உயர்ந்த சிந்தனை எப்படி இருந்துள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள்.

 அதை விட மரையைச் சுட்டவர்களிற்கு 6 மாதம் தண்டனையாக சமைப்பதற்கு விடுமாறு அப்பொழுது அவர்களிற்குப் பொறுப்பாகயிருந்த பிரதீப் மாஸ்ட்டர் அவர்களிடம் சொல்லி அனுப்பப்பட்டது.


இரவு மரைக்கறி சாப்பிடலாம் என எதிர்பார்த்த எமது முகாம் போரளிகளிற்கு முகம் கறுத்தது. தலைவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை எவராலும் கணிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாகயிருந்தது. இந்த இரண்டு மரைகளும் தலைவரின் வீட்டுற்குப் பின்னால் வந்து நிக்கும். அதைப்பார்தவுடன் தலைவர் யன்னல் வழியாக ஏதாவது ஒரு உணவு ஒவ்வொரு நாளும் கொடுப்பார். 

தலைவரிடம் இருந்து உணவு வேண்டிச் சாப்பிடும் செல்லப் பிராணிகளாக இந்த மிருகங்கள் இருந்தது. அதனால் அவ் இருமிருகங்கள் மீதும் தலைவர் அளவு கடந்தபாசம் வைத்திருந்த்தார்.


 சில காலம் கழித்து அதே ஆண்டு பாரிய ஒரு துயரச் சம்பவம் நடந்தது. அதே முகாமில் ஒரு பெரிய கொம்பு மானும் இருந்தது. ஆனால் அனைத்து போராளிகளோடும் அன்பாகப் பழகும் புல்லுகொடுத்தால் வாங்கிச் சாப்பிடும் . ஆனால் அங்கே நின்ற போராளி  துறமணி அவர்களைமட்டும் அந்த மானிற்கு கண்ணில் காட்டக் கூடாது அந்த மானிற்கு கடுமையான கோபம் வரும்.


இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை யென்று எங்களிற்குத் தெரியாது. ஒரு நாள் நான் ஒரு புல்தரையில் இருந்தேன். மான் எனக்கு முன்னால் நின்று புல் மேய்ந்து  கொண்டிருந்தது. துறமணியண்ணை எனக்குப் பின்னால் நின்று மானிற்கு சத்தம் காட்டினார். ஆனால் அவரை தாக்குவது என்றால் மான் என்னைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் மான் தவறுதலாக என்னைத் தாக்கும் என அவர் நினைத்திருக்கலாம்.


மான் என்னை நோக்கி கடும் வேகமாக வந்தது. கதிரொளி மற்றும் முத்துஐயன் இருவரும் மான் உன்னை தாக்க வருகுது ஓடு ஓடு எனக் கத்திய வண்ணமிருந்தார்கள். வேகமாக வந்தமான் எனக்கு மேலால் பாய்ந்து சென்று துறைமணி அண்ணையைக் கலைத்தது. அவர் அருகில் நின்ற நெல்லிமரத்தில் ஏறித் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்.


எனவே ஒவ்வொரு நாளும் இந்தமான் அவரை பின்தொடர்ந்த வண்ணமாயிருத்தது. ஒரு நாள் நாங்கள் எல்லோரும் தலைவரோடு வேறு முகாமிற்குச் சென்றுவிட்டோம். இரவு 7 மணி இவர் மானிடம் சரியான முறையில் மாட்டிவிட்டார். மான் இவர் மீது கடுமையான தாக்குதல் தாக்கி இவர் யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கே இவருக்கு15 தையல் போடப்பட்டது.


இந்தத்கவல் தலைவருக்கு உடனே வந்தது. தலைவருக்கு  மான் மீது கடுமையான கோபம் வந்தது ஆனால் பொறுமையாகயிருந்தார். கரவெட்டி முகாமில் இருந்து இரவு 9 மணி 9.5 முகாமிற்கு வந்து சேர்ந்தோம். அப்பொழுது நாவா மற்றும் பிரகாஸ் இருவரும் தலைவரின் P.A அல்லது நெருங்கிய பாதுகாவலர். இதன் பொருள் என்ன உணவாகயிருந்தாலும் முதலில் இவர்கள்தான் சாப்பிட்டுப் பார்ப்பார்கள். பின்னர் தான் அதைத் தலைவர் சாப்பிடுவார்.


காலை 7 மணி தலைவர் நாவா அவர்களை கூப்பிட்டு மானைச் சுட்டு போராளிகளிற்கு கறி சமைக்கக் கொடுமாறு தலைவர் நவா அவர்கட்டு கட்டளை வழங்கினார்.  நவா அவனிற்கு மிகவும் உசாராகயிருந்தது. உடனே இடுப்பில் இருந்து கைத் துப்பாக்கியை எடுத்து மானின் முன் தலையில் மூன்று வெடி வைத்தான். மான் சுருண்டு கீழே விழுந்தது. அன்று மதியம் மான் கறி எல்லோரும் சாப்பிட்டோம். மரை நல்ல பெயர் எடுத்ததால் அதற்கு கல்லறை கிடைத்தது. மான்தவறு விட்டமையால் அது கறியாகிப்போனது.  அனைத்து உயிர்களிற்கும் ஒரே சட்டத்தை நடைமுறைபடுத்திய உன்ன தலைவன்.

இதே காலம்தான் எமது ரெட்டி முகாமிற்கு முதலாவதாக "புக்காரா" விமானம் தாக்குதல் நடத்தியது. ஆனால் அன்று தலைவர் முகாமில் இல்லை. வெளியே சென்று இருந்தார். விமானத்தால் போடப்பட்ட குண்டு முன் வாசல் பக்கம் இருந்த தொலைத்தொடர்பு கொட்டிலிக்குப் பக்கத்தில் இருந்த வாகனஓடு பாதை மேலே விழுந்து வெடித்து எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் பாதையில் 12 அடி பாரிய குழி ஏற்பட்டது. விமானம் அடித்த புகை மண்டலம் கலையவில்லை. தலைவர் வரப்போகின்றார்.  உடனே குழியை மூடுமாறு தாபதி கடாபி அவர்கள் ஊடாக எங்களிற்குக் கட்டளை வந்தது.


நாங்களும் வேகமாகக் குழியை மூடிக் கொண்டிருக்கின்றோம். தலைவரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்ட பொட்டு அம்மான் முகாமிற்கு வந்து விட்டார். அதைத்தொடர்ந்து தலைவரும் முகாமிற்கு வந்து விட்டார், மேலும் பல தளபதிகள் வந்து அவ்முகாமிலே அன்று தலைவரைச் சந்தித்தார்கள். வேறு எந்தத் தலைவனும் இப்படியான பதட்டமான சூழ்நிலையில் வர மாட்டார். ஆனால் தலைவர் தனது உயிரைப்பற்றிச் சிறிதளவு கூட சிந்திக்க மாட்டார்.



.6 ம் மாதம் 1992 மாத்தையா தலைமையிலான மக்கள் முன்னணி கலைக்கப்பட்டது. மக்கள் முன்னனி செயலாளர் யோகரத்தினம் யோகி அவர்களின் பதவியும் கலைப்பட்டது.


 அதற்குப் பதிலாக அரசியல் துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நிமிக்கப்பட்டார்.



5/07/1992 யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகளின் கொண்டாட்டமும் ஒலிப்பேழை வெளியிட்டு நிகழ்வும் நடைபெற்றது.


 அந் நிகழ்விற்கும் மாத்தையா அவர்களிற்கு அழைப்பு வளங்கப்பட்ட போதும் ஆனால் இதற்கு மாத்தையா அவர்கள் வரவில்லை. மாத்தையா  வராதமைக்கான இரு காரணங்களாக இருக்கலாம். ஒன்று பொறுப்பு மாற்றத்திற்கான கோபம் அடுத்து தன்னைக்கைது செய்யலாம் என நினைத்திருக்கலாம்.

10/07/1992 அந்தக் காலப்பகுதி கடும் இறுக்கமான காலமாகயிருந்தது. ஏனென்றால் முதலில் தலைவரின் பாதுகாப்பு அணி ஒரு அணியாகயிருந்தது.


 சண்டைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் போய் சண்டையிடுவது அதில் காயம் ஏற்பட்டால் காயம் மாறியதும் தலைவரின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதும் இது தான் எங்களின் கடமையாகயிருந்தது.

அப்பொழுது காவல் கடமைக்கான நேரம் இரண்டு மணித்தியாலம். இது இரவும் பகலும் வரும். ஏனைய நேரங்களில் காலையில் உடல் பயிற்சி எடுத்தல் உடல் சுத்தம், பத்திரிக்கை வாசித்துக் காட்டல் இலையான் அடித்தல் ,கவிதை ஓவியங்கள் வரைதல், மற்றும் யூதர்களின் விடுதலைக் கதையான  தாயகம் நோக்கிய பயணம் இதை போராளிகற்கு வாசித்துக் காட்டுவது  இப்படித்தான் எங்களின் காலம் நகர்ந்தது.

ஆனால் புதிய நடைமுறை மிகவும் கடினமாகயிருந்தது. 1992ம் ஆண்டு எமது கட்டமைப்பு ஒரு புதிய வியூகமாக மாற்றப்பட்டது. புதிய போராளிகள் பாதுகாப்புக் கடமைக்காக உள்வாங்கப்பட்டார்கள். அடுத்து 40 பேர் கொண்ட அணி தளபதி ஜெயம் அவர்களின் தலைமையிலும் அடுத்து 40 பேர் கொண்ட அணி தளபதி சொர்ணம் அவர்களின் தலைமையிலும் பிரிக்கப் பட்டது.

ஒரு அணி பயிற்சியில் நிற்கும். அடுத்த அணி பாதுகாப்பில் நிற்கும். இது மாதம் ஒரு தடவை கடமை பயிற்சி என வந்து கொண்டிருக்கும். இக்காலத்தில் பாதுகாப்பிற்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பயிற்சியில் நிக்கும் அணி உடனே செயல்ப்பட்டு பாதுகாப்பிற்கு ஏற்படும் பிரச்சனையை இந்த அணி முறியடிக்கும்  இதுதான் திட்டமாகயிருந்தது. பாதுகாப்பிற்கான காவல் கடமை நேரம் மிகவும் கடினமான முறையில் மாற்றப்பட்டது. ஒருவர் 24  மணித்தியாலம் இரவு பகல் தொடர்ச்சியாகக் காவல் கடமையில் ஈடுபட வேண்டும். குறிப்பாக இருபது பேர் காவல் கடமையில் நின்றால்  அடுத்த 20 பேர் 24 மணித்தியாலம் நித்திரை கொள்வார்கள்.

அவர்களிற்கு சமைப்பதற்கும் இரவு நேரங்களில் தேனீர் போடுவதற்கும் ஒரு அணிதொடர்ந்து செயற்படும். கடமையிலிருக்கும் போராளிகளின் தனிப்பட்ட வாழ்கை மிகவும் கடினமாகயிருந்தது. பாதுகாப்பு அணியில் இணைப்பது என்றால் சில நிபந்தனைகள் இருந்தன. குறிப்பாக மாற்று இயக்கங்களில் அவர்களின் உறவினர்கள் இருந்திருக்கக் கூடாது. இயக்கத்தில் இணைந்ததில் இருந்து நேர்மையாகச் செயல்பட்டவராக இருத்தல் வேண்டும். கடுமையான பயிற்சியை எடுக்கக் கூடிய துணிச்சலானவராக இருத்தல் வேண்டும். இரகசியம் பாதுகாக்கக் கூடியவராகயிருத்தல் மற்றும் எந்த நேரமும் தனது  உயிரை அர்பணிக்கக் கூடியவராகயிருத்தல்  வேண்டும்.  இவர்களே இதற்கு தகுதியானவர்களாகக்  கருதப்படுவார்கள்.

இப்படி பல பின்னணி பார்த்துத்தான் பாதுகாப்பு அணிக்கு போராளிகளை தளபதி சொர்ணம் அவர்கள் எடுப்பார். அவ்வேளை தளபதி ஜெயம் அவர்களின் பாதுபாப்பு அணியில் நான் கடமையாற்றினேன்.


(நடுவில் இருப்பது தளபதி ஜெயம்)

 . இது இப்படியிருக்க அனைத்துப் போராளிகளும் பொறுப்பாளரோடு கதைப்பது என்றால் சலூட் அடித்துத்தான் கதைக்க வேண்டும். என்ற புதிய நடைமுறை எமது படையணிக்கு வந்தது. அப்பொழுது லெப். கேணல் குனேஸ் அவர்களே எங்களின் 15 பேருக்கும் பொறுப்பாக இருந்தார். நான் குனேஸ் அவர்களிடம் கதைப்பதற்குச் சென்றேன். சலூட் அடித்த பின்னர் தன்னோடு கதைக்குமாறு கட்டளை வழங்கினார், கடுமையாக கோவம் அடைந்த நான் சலூட் அடிக்கின்றேன் என அவருக்குக் கிட்டச் சென்று அவரின் கன்னத்தில் அறைந்தேன்.


(மேலே உள்ள சிறுபடம் லெப் கேணல் குனேஸ்)
 உடனே அவர் அதைப் பெரிதாக எடுத்து ஜெயம் அண்ணைக்குச் சொல்லி விட்டார். தளபதி ஜெயம் அவர்கள் என்னைக் கூப்பிட்டுக் கட்டுப்பாட்டை மீறியதற்காக  25 வட்டம் முகாமைச் சுற்றி டக்புக் அதாவது தாரா நடை  செல்லுமாறு கட்டளை வழங்கினார். ஒரு நாள் புள்ளாக 25 வட்டம் டக்புக் செய்து முடித்தேன். இரண்டு கால்களும் பெரிதாக வீங்கி விட்டது. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் கடும் வேதனையில் இருந்தேன்.

எனது அதிஷ்ரமாகயிருக்கலாம் தலைவரைச் சந்திப்பதற்கு தளபதி சொர்ணம் அண்ணை வந்து இருந்தார், அவரிடம் போய் நடந்த பிரச்சனையைச் சொல்லி தற்பொழுது என்னால் காவல் கடமை செய்ய முடியாது. இரண்டு கால்களும் வீங்கி விட்டது அதனால் உங்கட அணிக்கு வந்து பயிற்சி எடுக்கப் போகின்றேன் என அவரிடம் தெரியப்படுத்தினேன். நீர் இப்பதான்  பயிற்சி முடிந்து வந்தனி என ஆலோசனை வழங்கினார். ஆனால் நான் பிடிவாதமாக நின்றேன். அவர் எதைப் பற்றியும் என்னிடம் கதைக்கவில்லை.  உடமைகளை எடுத்துக் கொண்டு வாகனத்தில் ஏறுமாறு கட்டளை வழங்கினார். 

உடனே நான் உடமைகளோடு வாகனத்தில் ஏறினேன். ரெட்டி 9.5 முகாமான கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயிலடியில் இருந்து நானும் சொர்ணம் அண்ணையும் சாவகச்சேரி சம்பூத்தோட்டம் பயிற்சி முகாமிற்கு வந்து சேர்ந்தோம்.

 தளபதி சொர்ணம் அவர்களின் அணி பயிற்சியில் நின்றது. இவ்விரு அணிகளிற்கும் கேணல் குமரிநாடன்/வசந் அவர்களின் தலையில் கடுமையான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. குறிப்பாக 40 கிலோ மீற்றர் ஓடுவது,  வாகனத்தில் இருந்து பாய்தல், உயரம் பாய்தல் எனக் கடுமையான கொமாண்டோப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அதில் நானும் இணைந்து பயிற்சியைத் தொடர்ந்தேன். இதே காலப் பகுதியில் நடந்த சம்பவம் பற்றிப் போராளி கெனடி குறிப்பிடுகையில்்......

             




10/07/1992 அன்று எமது 1.4 படையணியில் இருந்து போராளி கெனடி தலைமையில் யாழ்ப்பாணம் அச்சுவேலி வளவாயில் சிறிலங்கா தொடர் காவல் அரனைத் தாக்குதற்காக 15 பேர் கொண்ட அணி ஒன்று தளபதி சொர்ணம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டது .
அதில் தலைமைப் பொறுப்பாளர் கெனடி, போராளி பாலேஸ், போராளி, ரவாஸ், போராளி வேல்ராஜ்   போராளி மணியரசன், லெப் கேணல் பார்த்திபன்,போராளி சிந்தூஜன். மேஜர் மாறன். எனப் பலர் அங்கே சென்றோம்.

 அத்தாக்குதலிற்கு மகளீர் படையணி யாழ் மாவட்டப்படையணி 1.4 பிரிவு இது மூன்றும் பங்குபற்றியது. தளபதி பால்ராஜ் தலைமையில் இச்சண்டை நடபெற்றது.

அங்கே அமைந்திருந்த தொடர்க் காவல் அரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டை தொடங்கிய ஆரம்பத்தில் வெற்றியாக அமைந்தாலும் பல ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டாலும், முடிவில் 10 பெண் போராளிகளின் உடல்கள் இராணுவப்பகுதியில் விடப்பட்டது. அதனால் இச்சண்டைக்குச் சென்ற போராளி கெனடி உட்பட பொறுப்பாகச் சென்ற சில போராளிகள் மீது மூன்று நாள் கடுமையான விசாரணை நடத்தப்பட்டது. பின் இவர்களிடம்   குற்றம் இல்லையென உறுதிப்படுத்தப் பட்டது. அதனால் விசாரணை முடிக்கப்பட்டது.

இதில் பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் இராணுவத்திடம் இருந்து எடுக்கப்பட்டது. கப்டன் லுக்மன்.வலிதியான் சின்னத்தம்பி மணக்காடு, குடத்தனை, யாழ்மாவட்டம்  வீரப்பிறப்பு:07.08.1971  வீரச்சாவு:10.07.1992.




மேலே உள்ள படம் 2ம் லெப் இந்திரன். 

 2ம் லெப் இந்திரன் மயில்வாகனம் சந்திரன் வீரப்பிறப்பு 29.07.1975  வீரச்சாவு:10.07.1992 இவர்கள் இருவர் உட்பட 15ந்திற்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். இச்சண்டை முடிந்தவுடன் ஆனையிறவில் இருந்து ஒரு இராணுவ நடவடிக்கையை இராணுவம் தொடங்க இருப்பதினால் கெனடியன் அணி அங்கே வேகமாக அனுப்பப்பட்டது,

 21/07/1992 காலப்பகுதியில் வெற்றிலைக் கேணியில் இருந்து யாழைநோக்கி சிறிலங்காப்படை முன்னேறத் தொடங்கி விட்டது.


அப்பொழுது நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இடம் சாவகச்சேரியில் உள்ள சம்பூத் தோட்டமாகும். அங்கே வைத்து தளபதி சொர்ணம் அவர்கள் போராளிகளை லையின் பண்ண அவர் சொன்னது இதுவரைகாலமும்  சண்டைக்குப்போகாதவர்களும் போகவிரும்புபவர்களும் இந்தப் பக்கம் லையின் பண்ணுங்கோ
இதுவரை காலமும் சண்டைக்கு போகாதவர்களும்  என்றார். முதலாவது நானும் மற்றும் கப்டன் உமேஸ்- பகிர், கிறேசி நடா என்று பலர் அடுத்த பக்கமாகப் போய் நின்றோம்.

கடுமையாக கோபம் அடைந்த தளபதி சொர்ணம் அவர்கள் ஓடிவந்து வயிற்றில் பிடித்து என்னை அங்கால தூக்கி எறிந்தார்.  நீர்பிடித்த சண்டை காணும் சண்டைக்கே போகாதவர்களைத் தான் நான் கூப்பிட்டேன் என எனக்கு பதில் அளித்தார். திருப்பிக் கதைப்பது சொர்ணம் அண்ணைக்குப் பிடிக்காது. அதனால் நான் அமைதியாக நின்றேன். அச்சண்டக்காக நடா - பகிர் - உமேஸ் கிறேசி ரமணி எனப் பல போராளிகள் எடுக்கப்பட்டார்கள். அதில் சென்ற உமேஸ் மிகவும் நல்லவன். எந்த நேரமும் போராளிகளுக்கு கோமாளிக்கதைகளைச் சொல்லி
சிரிப்புக் காட்டிய வண்ணமே இருப்பான். இவனின் பெயர் கந்தசாமி மணிமாறன் திருமலைமாவட்டம் தான் இவனின் சொந்த இடம்.


                                         

இவர்கள் அங்கே சென்றதும் எமது தாக்குதல் படையணி அங்கே பிரிகேடியர் ஜெயம் தலைமையில் போராளி, கெனடி, போராளி பாலேஸ், போராளி, ரவாஸ், போராளி வேல்ராஜ் போராளி திலீப் போராளி மணியரசன், லெப் கேணல் பார்த்திபன்,போராளி சிந்தூஜன். மேஜர் மாறன். எனப் பலர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு பாதுகாப்பு அணியில் இருந்து சென்றவர்களும் இணைக்கப்பட்டனர். 

சண்டை கடுமையாக  நடந்து கொண்டிருக்கும் போது பிரிகேடியர் ஜெயம் அவர்கள் வாயில் வெடிப்பட்டு இராணுவத்தின் முற்றுகையில் சிக்கிவிட்டார். அவரை வெளிய எடுக்க முடியாமல் படையணிப் போராளிகள் திண்டாடிக் கொண்டிருந்த  வேளை பாதுகாப்பு அணியில் இருந்து சென்ற கொமாண்டோ அணி உள்ளே சென்று பலமான தாக்குதல் நடத்தி அவ் இராணுவத்தின் முற்றுகையை உடைத்து பிரிகேடியர் ஜெயம்  அவர்களை வெளியே கொண்டு வந்து சேர்த்தது.  அதில் லெப்ரின். ரமணி ஆயுதம் லோ ,கப்டன் உமேஸ் ஆயுதம் மினிமினி அவ் வெற்றித்தாக்குதலில்  இவர்கள் இருவர் உட்பட பல படையணிப் போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். இதில் 35 தானியங்கித் துப்பாக்கிகள் பல வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

 அடுத்த நாள் சண்டை கடுமையாக நடந்தது. எதிரி சுத்த டாங்கியால் தாக்குதல் நடத்திக்கொண்டுவந்தான். அதில் சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த மூத்த போராளி திலீப் அவர்களின் கால் டாங்கி அடியில்  தூண்டிக்கப்பட்டது. மூத்த போராளி திலீப் அவர்களின் கால் உடைந்து தொங்கிக் கொண்டு இருந்ததாகவும் அதை அவரே கத்தியால் வெட்டி எறிந்ததாகவும், அவரின் வீரத்தை எமது போராளிகள் சில குறிப்பிட்ட காலம் வரை கதைத்துக் கொண்டே இருந்தார்கள்.


 தளபதி ஜெயம் அவர்களின் அணி அங்கேசென்று சண்டையும் வீரச்சாவும்  அடைந்து கொண்டிருக்க 
 நாங்கள் பயிற்சி முடித்து தளபதி கடாபி அவர்களின் தலையில் வலிகாமத்தில் அமைந்து இருந்த பாதுகாப்பு முகாமான ரெட்டிக்குச் சென்றோம். அங்கே சென்றதும்  தலைவரின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டோம். அப்பொழுது எனக்குச் சரியான பல் வருத்தம் ஏற்பட்டது. அப்பொழுது கடாபிஅண்ணை என்னையும் மிக்கலையும் உந்துருளியில்  போய் ஆஸ்பத்திரியில் காட்டி மருந்து எடுத்து வருமாறு கட்டளை வழங்கினார்.

மிக்கல் என்னை ஏற்றிக் கொண்டு  யாழ்பாண ஆஸ்பத்திரிக்குச் சென்றான்.  நாங்கள் அங்கே சென்றதும் படையணி மருத்துவப் போராளி வேங்கை மாயன் வந்திருந்தார்.  அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைத்தியரிடம் காட்டினார். அவர் பார்த்துவிட்டு எனக்கு மருந்து  தந்தார். மருந்தை எடுத்துக்கொண்டு முகாம் திரும்பினோம். முகாமிற்கு உள் நுழைந்ததும் காலையில் இருந்து சாப்பாடு இல்லாத காரணத்தால் கடுமையான களைப்பாகயிருந்தது. மிக்கல் தான் குளிக்கப்போவதாகச் சென்றுவிட்டான்.  நான் சமையல் கூடத்திற்குச் சென்று ஏதாவது சாப்பிடுவோம் என்று செல்கின்றேன்,

அங்கே ஒரு குழப்படிக் காரன் காளிதாஸ் என்ற போராளியும் 50 கலிபர் அணியில் நாலு பேரில் இவனும் ஒருதனாகயிருந்தான். இவன் எனது படுக்கை விரிப்பை வெறும் தரையில் போட்டுப் படுத்திருக்கின்றான். நேற்றுத்தான் கழுவி வைத்தனான் ஏன் மிருகக்கழிவு உள்ள இடத்தில் போட்டுப் படுக்கின்றாய் எனக் கேட்டேன். அவன் ஓடிவந்து எனது கன்னத்தில் அறைந்தான்.

 ஆனால் சக போராளிக்கு  கைநீட்டி அடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இயத்தில் உள்ளது.  அதனால் நான் அவனுக்கு அடிக்கவில்லை. முதலில் அவன் போட்டிருந்த வென்னியனை கிழித்து எறிந்தேன். அடுத்து அவன் போட்டிருந்த உள் உடுப்பை பல்லால் கடித்து கிழித்து எறிந்தேன். .அவன் வெற்று உடலோடு நின்றான். எல்லாப் போராளிகளும் கூப்போட அவன் ஓடி விட்டான்.


இதை அறிந்த தளபதி கடாபியண்ணை இருரையும் கூப்பிட்டுத் தலைவர் சொன்னதாகச் சொல்லி இருவரையும் நெல்லிமரத்தில் கட்டிப்போட்டார். கட்டிய நேரம் இரவு ஆறுமணி ஆனால் கடுமையான மழை பெயதமையால் இருவரும் மழையில் நனைந்து, நனைந்து நின்றோம். வழமையாக ஞாயற்றுக்கிழமை மனைவி பிள்ளைகளைச் சந்திக்கச் செல்லும் தலைவர் திங்கட்கிழமை காலை7 மணிக்குத்தான் எமது முகாமிற்கு வருவார்.  ஆனால் அன்று எங்களைக் கட்டியடித்தமைக் காகக் காலை ஐந்து மணிக்கே தலைவர் வந்து விட்டார்.

வேகமாக வந்த வாகனம் எங்களிற்குப் பக்கத்தில் வந்து நின்றது. முன் இருக்கையில் இருந்த மேஐர் மாதவன் அண்ணை வாகனத்திலிருந்து இறங்கிவந்து அவர் கொண்டு வந்து யூசினைப்பால் எங்களை கட்டப்பட்டு இருந்த கயிற்றை வெட்டினார். இதைத் தலைவர் வாகனத்திற்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். கட்டை வெட்டிய பின் மாதவன் அண்ணை எங்களிற்குச் சொன்னது இது உங்களிற்கு கடசி மன்னிப்பாம். இனிமேல் இத்தவறை விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என அண்ணை  சொன்னதாக எங்களிடம் அவர் சொன்னார்.                





08/08/1992 அன்று கொப்பக் கெடுவா அவர்கட்டு சாவொறுப்பு வழங்கப்பட்டது.


 அன்று போராளி கருவண்ணன் தலைமையில் 7 பேர்கொண்ட  அணி உள்ளே சென்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


 அவ்வேளை ராணுவ வாகனங்கள் அவ்வழியால் சென்று வரும் தடையங்கள் அவர்களால் அவதானிக்கப்பட்டது. அப்பொழுது அரசாங்கம் மண்டைதீவில் இருந்தும், யாழ் பலாலி மற்றும் ஆணையிறவில் இருந்தும் மும்முனைத் தாக்குதல் ஒன்றைச் செய்து யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றுவதே அவர்களின்  திட்டமாகயிருந்தது.

 கொப்பேக்கெடுவா அவர்கள் அந் நடவடிக்கை செய்யும் பிரதேசங்களை  நேரடியாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்த காலமது,


 அவ்வேளை எமது தலைவர் சொல்வது போல் எந்தப் பலத்திலும் ஒரு பலயீனம் இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது எமது திறமை. அதற்கு அமைவாக போராளிகள் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அராலி முனைப் பகுதியில் நிறைய வாகனம் சென்றுவரும் தடயங்கள் இவர்களால் அவதானிக்கப்பட்டது.


அதனால் அராலி முனையில் உள்ளேயொரு  பாதையில் வைக்கல் மைன்சை றோட்டை வெட்டி தாட்டு வைத்துவிட்டு  இவர்கள் மீண்டும் எமது முகாமிற்குவந்து விட்டார்கள்.  அதனால் 08/08/1992 அன்று அவர்களின் திறமையான செயல்பாட்டால் முதலாவதாக  நாம் தேடிக் கொண்டிருந்த அதிகாரி அப் பொறியில் சிக்கி விட்டார். புகழ்பெற்ற போர் வீரனான லெப்டினன்ட்  ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ உற்பட அவருடன் பயணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன,  ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கர்னல் எச்.ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் ஒய்.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் படைவீரர் டப். ஜெ. விக்கிரமசிங்க உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் , யாழ் குடாநாட்டில் அராலி முனையில் வைத்து 8 ஆகஸ்ட் 1992 அன்று விடுதலைப்புலிகளால் எவ்விதமான இழப்பும் இன்றி அவர்களை அழிக்க முடிந்தது.


அதனால் 1992 ஆம் ஆண்டு யாழ்பாணம் எதிரிகளின் கைக்குச் செல்லாமல் தப்பிக்கொண்டது. இவ் சிறப்பு நடவடிக்கையைச் செய்த கருவண்ணன் உட்பட அனைத்து வீரர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் கூப்பிட்டு சிறப்புப் பரிசில்களைக் கொடுத்து கெளரவித்தார்.

 இவ்வெற்றிகர நடவடிக்கையால், எமக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ த்தினர் மன உறுதியையும் பாதித்தது. அதனால் 1995 ஆம் ஆண்டு வரை அவர்களின் யாழ்பாணத்தைப் பிடிப்பதற்கான ஆசை பிற்போடப்பட்டது .

 இந்நடவடிக்கையைச் செய்த மேஜர் கார்வண்ணன், / பீற்றர்.

சிவஞானம், சிவஜோதி மிருசுவில் வடக்கு மிருசுவில் யாழ்ப்பாணம். இவர் கட்டைக்காட்டில் 01.10.1992 அன்று படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து இருந்து 06.10.1992யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வீரச்சாவு அடைந்தார்.

  சொர்ணம் அண்ணையின் அன்பும் அவர் போராளிகள் மீது கொன்ற பாசமும்,



1992 ஆண்டு காலப்பகுதியில்  ஆனையிறவில் நடந்த சம்பவம் பற்றி போராளி கெனடி குறிப்பிடுகையில், அப்பொழுது நானும் போராளி கலீஸ் அவர்களும் சாவகச்சேரிக்குச் சென்று உடுப்புக்கடைகளைப் பார்வையிட்டோம்.


அப்பொழுது அழகான கறுத்த T , சேட்டுக்கள் 300 ரூபாய் என விலை போடப்பட்டிருந்தது. அப்பொழுது நானும் கலீஸ் அவர்களும் ஆளுக்கு ஒன்றுப்படி இரண்டு T. சேட்டுக்களை 600 ரூபாய்கொடுத்து வாங்கினோம்.


அடுத்து அவ் சிட்டைகளை அப்பொழுது நிதிப் பொறுப்பாளராகயிருந்த வோட்டா ரூபனிடம் கொடுத்தோம். இது உணவிற்காகத் தந்தபணம் அதனால் உடுப்பு வாங்கிய வில் ஏற்க முடியாது எனச் சொல்லி எங்களிடம் அதைத் திருப்பித்தந்தார். சரியெனச் சொல்லி அச் சீட்டை வாங்கிக் கொண்டு  இருவரும் முகாமிற்குச் சென்றோம்.


அப்பொழுது இருவரையும் சொர்ணம் அண்ணை மெயின் முகாமிற்கு வரச் சொல்லியிருந்தார். நாங்கள் அங்கே சென்றோம். ரூபன் சொர்ணம் அண்ணைக்குப் பக்கத்தில் இருக்கின்றார். எங்களைக் கண்டதும் என்னடா புது T சேட்எல்லாம் போட்டு வாறிங்கள். இருவரும் அண்ணனும் தம்பியும் போல் உள்ளது. அழகாய் இருக்கின்றது எனப் பாராட்டினார்.


அது மட்டும் அல்ல உங்களிற்கு சூ இல்லையா? எனக் கேட்டார் இல்லையென்றோம். இருவருக்கும் பவர் சூ வேண்டிக்கொடு என ரூபனிக்குக் கட்டளை வழங்கினார். இதைக் கேட்டதும் ரூபன் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கவில்லை. மேலும் சூ வேண்டிக்கொடுக்கச் சொல்லியுள்ளார் என பெரும் கவலையில் வெளியே சென்றான்.


அப்பொழுது ஆனையிறவு விஸ்தரிப்பதற்கான ஒரு நடவடிக்கையை சிங்கள இராணுவம் வெற்றுலைக் கேணி கட்டைக்காட்டுப்பக்கம் மேற்கொண்டதால், எங்களுடைய படையணி அங்கே அனுப்பப்பட்டது. தொடர்ந்து சொர்ணம் அண்ணையின் தலையையில் நாங்களும் நின்றோம்.  அத்தோடு வேறு படையணிகளும் அந்நடவடிக்கையை முறியடிப்பதற்காக நிறுத்தப்பட்டது, அப்பொழுது இலங்கை விமானப்படையின் Y, 8 விமானம் குண்டுகளை எங்கள் மீது போட்டுக்  கொண்டுவந்தது. அப்பொழுது கீழேயிருந்து எங்களின் விமான எதிர்ப்பு ஆயுதங்களால் எங்களுடைய போராளிகள் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.


அச்சூடு பிடித்திருக்கும் என நான் நினைக்கின்றேன். அது மூன்றாவது குண்டைக் கழட்டும் போது அவ்விமானமும்  வெடித்து சிதறியது. அதனால் இராணுவம் உளவியல் ரீதியாகயாகப் பாதிக்கப்பட்ட காரணத்தால்அவ் நடவடிக்கை நிறுத்ப்பட்டது. நாங்கள் பழையபடி எங்களுடைய இடங்களிற்குச் சென்றோம்.

 1992 ஆண்டு /9 ம் மாதஅளவில் மூன்று போராளிகளுக்கு  சாவொறுப்பு வழங்கப்ட்டது. 


இதுதான் GPM  LMG 

1992 /9  மாதம் காலப்பகுதியில் எமது பாதுகாப்பு அணியில் GPM .LMG இருந்தது அதற்கு முதல் நிலைப் பொறுப்பாளர் மேஜர் ஜெராட், இரண்டாவது டிமல் மாவீரன்  மூன்றாவது உதயகுமார் இவர் பிறப்பிடம் கண்டி வசிப்பிடம் மட்டக்களப்பு இவர் எமது பாதுகாப்பு முகாமான ரெட்டியில் இருந்த வேளை இவர் இரவு 12 மணியளவில் தவறான செயற்பாட்டிற்காக வெளியே சென்று பின்னர் வேலியால்  உள்நுழைந்து வரும்போது.....


வாகனறைவர் சின்னமணியும் சொர்ணம் அண்ணையும் கண்டுள்ளனர். ஆனால் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. ஒரு உருவம்போல் அவர்களிற்குத் தெரிந்தது. பின் அவரின் வெளியே பதிந்த கால்பாதத்தை பிறிசல் போட்டில் எழுதிக்கொண்டு இரவோடு இரவாக அனைத்துப் போராளிகளின் பாதங்களும் அளந்து பார்க்கப் பட்டபோது இவரின் பாதம் அதை ஒத்த அளவில் இருந்தமையால் திரு. உதயகுமாரை அன்று இரவே விசாரணைக்குக் கொண்டு போனார்கள்.

 தொடர்ந்து அவர் அந்தத் தவறை ஏற்றுக் கொண்டமையால் அவருக்கும் சாவொறுப்பு வழங்கப்பட்டது. 


அதே நாளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த போராளி கிருஸ்ணா சாவகச்சேரி முகாம் ஒன்றில் இருந்த வேளை பெண்ணியல் ரீதியான தவறு செய்தாரென சக போராளி சொன்னற்கு அமைவாக அவர் மீதும் விசாரணை  மேற்கொள்ளப்பட்டது, அதை அவர் ஏற்றுக் கொண்டமையால் அவருக்கும் சாவொறுப்பு வழங்கப்பட்டது.

அதே ஆண்டு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த போராளி முரளி என்பவர் முன்னர் ரெட்டி முகாமைத்தள அமைப்பு ரீதியாக புனர் அமைத்தவர். பின்னர் மினி மினி LMG கொடுக்கப்பட்டு பாதுகாப்பு வீரனாக எங்களோடு கடமையாற்றியவர். ஒரு நாள் ரெட்டி முகாமில் வைத்து மலசல கூடத்திற்கு உள்ளே சுருட்டுக் குடித்ததை சொர்ணம் அண்ணை நேரடியாகப் பிடித்தார். தொடர்ந்து அதை அவர் மறுத்தார்.

 அனைத்துப் போராளிகளையும் லைன் பண்ணி அவரின் கையை மணந்து பார்க்குமாறு சொர்ணம் அண்ணை சொன்னார். அனைவரும் சுருட்டு என உறுதிப்படுத்தினார்கள். தொடர்ந்து சொர்ணம் அண்ணை இது உமக்கு கடைசியும் முதலும் இனிமேல் இப்பிழை விடக்கூடாது என முதல் மன்னிப்பு வழங்கப்பட்டது. அடுத்து பயிற்சியில் நின்ற தளபதி ஜெயம் அவர்களின் அணி பாதுகாப்பை பொறுப்படுத்தது. சொர்ணம் அண்ணையின் அணி பயிற்சிக்குச் சென்றது. எங்களோடு முரளியும் வந்தான். அங்கே பயிற்சி நடந்து கொண்டு இருந்தது. பின்னரும் முரளி திருந்தவில்லை. இரவுநேரம் வெளியே சென்று களவாக இரண்டு போத்தல் கள்ளு இரண்டு கட்டு சுருட்டும் வேண்டிக்கொண்டு வந்து மறைவாக ஒரு பனை வடலிக்குள் வைத்திருந்தான். அதைப் பயிற்சி ஆசிரியர் வசந் பிடித்து விட்டார். அடுத்து சொர்ணம் அண்ணை அவனைக் கொண்டுபோய் புளியடித்தடுப்பு முகாமில் அடைத்து வைத்தார்.


அடுத்த நாள் நாங்கள் வாகனம் ஓடும் போது அதில் இருந்து பாய்ந்து பயிற்சி எடுப்பதற்காக கப்புத வெட்டைக்குச்  சென்றுயிருந்தோம். அதே  நாள் தடுப்பு முகாமை உடைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த வேளை தவறுதலாக எங்களிடம் வந்து பிடிபட்டான் முரளி. அடுத்து அவனுக்கும் சாவொறுப்பு வழங்கப்பட்டது. ஏனைய படையணிகள் மாவட்டப் போராளிகளிற்கு இரண்டு அல்லது அதற்கு மேலையும் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் தலைவரின் பாதுகாப்பில் நிற்பவர்களிற்கு மன்னிப்பு வழங்குவது மிகக் குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம்.

பாகம் 4ல் பகுதி 5முடிவு.








பாகம்4ல் பகுதி 06  ஆரம்பம்


 01/10/1992 இதே காலம்தான்  தலைவரால் இம்ரான் பாண்டியணி உருவாக்கப்பட்டது.



 தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி

1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காகஒரு திறமையான பாதுகாப்பு அணி தேவைப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தலைவருக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தேர்ந்து எடுத்தார் தலைவர் .

 பின்னர் இம்ரான் சிகிச்சைக்காகத் தமிழ்நாடு சென்ற பின் தலைவர் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார்.தலைவரின் பாதுகாப்புக்கான படையணியியை  இம்ரானும் பாண்டியனுமே புதிதாக போராளிகளை இனம்கண்டுபாதுகாப்புக் கடமைக்காக எடுத்துவந்தார்கள். அந்தளவுக்கு தலைவருக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார்.

. இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் வீரச்சாவை தழுவிக்கொண்டார். பாண்டியன் வீரச்சாவு அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் விடுதலைப் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். இவர்தான்1987 அன்று யாழ்மத்திய கல்லூரியில் தலைவரைப் பிடிக்க இந்திய இராணுவம் தரையிறக்கப் பட்டபோது அவ்முற்றுகையை உடைத்துத் தலைவரை பாதுகாப்பாக மணலாற்றுக் காட்டிற்குக் கொண்டுபோன தளபதி ஆவார். 

இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.  01/10/1992  தலைமையோடு வாழ்ந்த மற்றும் அவரைப் பாதுகாத்த போராளிகளும் வாழ்ந்தார்கள். இருந்தும் 05 /05/ 1976ம் ஆண்டிற்கு முதல் புதிய புலிகள் என்ற பெயரில் இயங்கிய எமது இயக்கம் 05/05/1976 அதன் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் என பெயர் மாற்றப்பட்டது. இருப்பினும் வேறு படைபணிகளை மற்றும் மாவட்டங்களில் இயங்கும் புலி உறுப்பினர்களை விட தலைவரின் பாதுகாப்பு அணியில் நிற்பவர்களை அதே படையணியில் இருப்பவர்கள் STP என அழைப்பார்கள்.



ஆனால் எமது நிரந்தர எதிரியான இந்திய இராணுவம்1.4  one four பிரிவு என்று அழைத்தது. அதன் பொருள் தலைவரோடு நிற்பவர்கள் துணிந்தவர்கள். எந்த நேரமும் தங்களின் உயிரை அற்பணிக்க பின் நிக்க மாட்டார்கள் என்பதே இதன் பொருளாகும். எந்த மாவட்டம் அல்லது எந்தப்படை பணியாகயிருந்தாலும் முதலாவது நிலை அல்லது இரண்டாவது நிலையாக  இருந்தாலும் அவர்களிடம் நாம் சில விடையகங்களை அவர்களிடம் கேட்டால் முதலில் அவர்கள் தலைவரோடு நின்றவர்களாகத்தான் இருப்பார்கள்.



இப்படித்தான் ஒரு முக்கிய வட்டமாக தலைவர் தலைமைப்பீடம் இருந்தது.  இங்கேதான் தலைவரால் சுயநலம் அற்றவர்களாகப் போராளிகள் வளர்க்கப் பட்டார்கள். பின்னர் கடமைக்காக வேறு படையணிகளிற்கும் வேறு மாவட்டங்களிற்கும் இங்கிருந்துதான் அனுப்பப் படுகின்றார்கள். அந்த வகையில் 1983 ஆண்டில் இருந்து தலைவரின் மேற்பாதுகாப்பு அணியில் இருந்தவர்தான் தளபதி சொர்ணம். அவருக்கு முன்னர் தலைவரைப் பாது காத்த போராளிகள் தான் இம்ரான் மற்றும் பாண்டியன் ஆகும்.



 1989 ம் ஆண்டிற்கு முன்னர் தளபதி தியாகு என்பவர் தலைவரின் மேற்பாதுப்பு அணிக்குப் பொறுப்பாகயிருந்தார். அதே ஆண்டு காலப்பகுதியில் தளபதி தியாகு அவர்கள் பெண் போராளிகளோடு தவறாக நடந்தமைக்காக அவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து அப்பொறுப்பைத் தளபதி சொர்ணம் அவர்களிற்கு தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார் என்பதை முன்னர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

 இயக்கத்தை வளர்க்க வேண்டும் தலைவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இரவு பகலாக சிந்திப்பவர்தான் சொர்ணம். அதைவிட இவர் அனைத்து மாவட்டங்களிலும் சென்று சண்டைபிடித்த அனுபவங்களைக்கொண்டவர். வடமாகாணத்தில் நடைபெற்ற அனைத்துச் சமர்களிலும் சொர்ணத்தின் பாதுகாப்பு அணி பங்குபற்றியிருக்கும். பங்கு பற்றாத சண்டையென்றால் அது மிகக்குறைவானதாக இருக்கும்.

01/10/1992 கட்டைக் காட்டுச்சண்டையோடு தலைவரின் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி உருவாக்கப்பட்டது.


(இப்படையின்  ஆரம்ப வழிகாட்டி தளபதி சொர்ணம்)

அக்காலப்பகுதியில் தான் தளபதி சொர்ணம் அவர்களால் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப்பகுதியில் அமைந்திருந்த மினி முகாம்மீதான தாக்குதற்கான வேவு நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது.



அதில் குறிப்பாக அவரின் படையணிப் போராளிகளே அந்த நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப் பட்டனர். கடல் புலிகளில் இருந்து பொறுப்பாளர் சேரனின் தலைமையில் மிதிவெடி சோதனை பண்ணுபவர்கள் 10 பேர் அடுத்து அடுத்து மகளீர்படையணியில் இருந்து தளபதி ரெட்ணா தலைமையில் 45 போராளிகள் எடுக்கப்பட்டனர். வேறு படையணியில் இருந்து இந்நடவடிக்கைக்குப் போராளிகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

இப்படையணியின் இரண்டாவது வழிகாட்டி தளபதி கடாபி ஆவார்.




 கட்டைக் காட்டுச் சண்டைக்கான தயார்படுத்தல் தயாரானது. திரு ரஞ்ஜீத் அவர்களின் தலைமையில் சுமார் 75 போராளிகள் சண்டைக்குத் தயார் ஆனார்கள். வேல்ராஜ் அவர்களின் தலமையில் 15 பேர் மொறிஸ் அவர்களின் தலைமையில்15பேர் கெனடி அவர்களின் தலைமையில் 15, வாலேஸ் 15 ,ஜெகன் தலைமையில் 5 பேர் மிதிவெடி அகற்றும் ரீம் . மொத்தம் 75 போராளிகள் அனைவருக்கும் ஒயில் பூசப்பட்டு உடல் நிறம் மாற்றப்பட்டது. அனைவரின் ஆயுதங்களும் எஸ்ரூலோன் பைப்பில் தண்ணீர் போகாதவாறு பொதி செய்யப்பட்டது . அடுத்து சுண்டிக்குளக் கடல் ஊடாக நாலு கிலோ மீற்றர் நீந்தி அனைத்து ஆயுதங்களும் கொண்டு சென்றார்கள் போராளிகள். கட்டைக்காடு முகாம் நெருங்கியதும் அனைத்து ஆயுதங்களையும் வெளியே எடுத்து சண்டைக்குத்தயாராக சரிப்படுத்தினார்கள். சண்டைக்குச் சென்ற எவரும் திரும்பிவரும் நோக்கில் செல்லவில்லை. இது ஒரு கரும்புலி நடவடிக்கை போன்று தளபதி சொர்ணத்தால் அனுப்பப்பட்டார்கள். உள்ளே நகர்ந்து திட்டமிட்டாப்போல் சண்டையை ஆரம்பித்தனர்.



தளபதி சொர்ணம் றஞ்ஜீத் அவர்கட்டு கட்டளை வழங்க றஞ்ஜீத் போராளிகளை முன் நோக்கி வழி நடத்திச் சென்றான்.முதலாவது தாக்குதலாக போராளி திருமேனி அவர்கள் ராங்கி எதிர்ப்பு ஆயுதமான லோவால் படையினரின் வீட்டுற்கு அடித்து எரிக்கப் பண்ணினான். பேரீரைச்சலோடு சண்டை நடந்த வண்ணம் இருந்தது. தளபதி சொர்ணம் அவர்கள் கட்டளையை வழங்கிய வண்ணம் இருந்தார். 

அதே நேரம் தளபதி நிரூபன் அவர்களின் தலைமையில் ஒரு கொம்பனி போராளிகள் சுண்டிக்குளப்பக்கம் இருந்து சண்டையை ஆரம்பித்தார்கள். அடுத்து கட்டைக்காடு ஆஸ்பத்திரிப் பக்கமாக சென்ற குட்டி அவர்களின் தலைமையில் ஒரு கொம்பனிப் போராளிகள்  சண்டையை ஆரம்பித்தார்கள். 

தளபதி சொர்ணம் கட்டளையை வழங்கிய வண்ணம் இருந்தார். இச்சண்டைக்கு மகளிர் படையணித் தளபதி ரெட்ணா தலைமையில்  ஒரு அணி கட்டைக்காட்டுக் கிழக்குப் பக்கமாக ஒரு பாரிய தாக்குதலை நடாத்தி எதிரியை திசை திருப்பியதோடு பாரிய இழப்பும் எதிரிக்கு ஏற்பட்டது. அதனால் கட்டைக்காட்டுச் சண்டையின் வெற்றிக்கு இது பெரும் உதவியாக அமைந்தது. இதில்  2ம் லெப் அருந்ததி, முல்லை மாவட்டம் கப்டன் காசி, மன்னார் மாவட்டம் 2ம் லெப் மறைச்செல்வன், நீர்வேலி யாழ்  2ம் லெப் மங்கை, தர்சா இளவாலை யாழ் என மொத்தம்17 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள். செத்தவன் சாக .சாகாத இராணுவம் தலைதெறிக்க ஆனையிறவிற்கு ஓடித்தப்பியது.



சிறிய ஆயுதக்கிடங்கில் இருந்து180 Fnce றைவுள் டொங்கான் மற்றும்  L. 3  LMG  பெரும் தொகையான றைவுள் ரவைகள் என்பன எமது சைவர் பிரிவால் மீட்கப்பட்டது.

02 /10/1992 பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி தலைவரின் பாதுகாப்பு முகாமான 7.7 முகாமில் இருந்து நானும் தளபதி கடாபி அவர்களும் ஒரு கண்டர்ரக வாகனத்தில் கட்டைக்காட்டை நோக்கிச் செல்கின்றோம். கடுமையான மழை பெய்துகொண்டிருந்தது. போனதும் மழையில் நனைந்து நனைந்து அங்கு நின்ற போராளிகளோடு சேர்ந்து நானும் ஆயுதங்களை எங்களின் வாகனத்தில் ஏற்றினோம் .


அடுத்து வாகனம் செல்வதற்குத் தயார் ஆன வேளை தளபதி சொர்ணம் அவர்களும் எங்களோடு வரப்போவதாகத் தெரிவித்தார். பின்னர் சொர்ணம் அண்ணையும் வாகனத்தில் வந்து ஏறினார். கடாபியண்ணை வாகனத்தை ஓட்ட சொர்ணம் அண்ணை நடுவில் இருக்க நான் அவருக்குப் பக்கத்திலிருந்தேன். வாகனம் ஓடத் தொடங்கியது. இம்ரான் பாண்டியன் படையணி கிளைம் பண்ணியது தொடர்வாக மக்கள் என்ன கதைக்கின்றார்கள் என கடாபி அண்ணையைப் பார்த்து சொர்ணம் அண்ணை கேட்டார். அதற்கு கடாபி அவர்கள் புதுப்படையணி ஒன்றை வைத்திருக்கின்றார்கள் இப்பத்தான் சண்டைக்கு விட்டிருக்கின்றார்கள் என்று கதைப்பதாகக் கூறினார்.



அடுத்து தலைவர் என்ன கதைக்கின்றார் எனச் சொர்ணம் அண்ணை கேட்டார். இழப்பு இல்லாத நல்ல சண்டை என்று கூறியதாகக் கடாபி அண்ணை பதில் அளித்தார். இரவு விடிகாலை 5ந்துமணிக்கு சாவகச்சேரி 7.7 முகாமிற்குவந்து சேர்ந்தோம். காலை அனைத்து ஆயுதங்களையும்  தலைவர் பார்வையிட்டார்.



இந்தச் சண்டையோடுதான் முதல்  ONE FOUR பிரிவாகயிருந்த நாம் 1990 சைவர் பிரிவாக மாறினோம்.  01/10/1992 இம்ரான்பாண்டியன் படையணியென்ற புதிய பெயருடன் எமது பணி ஆரம்பம் ஆனது. இம்ரான் பாண்டியன் படையணி என்று பெயர் வைத்தது பற்றி திரு சொர்ணம் அவர்கள் விளக்குகையில் இம்ரான் பாண்டியன் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள் . பாடசாலையில் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் . அதைவிட விடுதலைப் போராட்டத்தில் இருவரும் ஒரே நாளில் இணைந்தவர்கள் . ஆரம்பப்பயிற்சி முடிந்தவுடன் இருவரும் தலைவரின் பாதுகாப்புக்கடமையில் இருந்தவர்கள். இருவரும் மிகவும் சிறந்த போராளிகள் என அவர் குறிப்பிட்டார்.

இதன்  இறுதித் தளபதியாக 2009 வேலவன் இருந்தார். இவரோடு போராட்டம் முடிவிற்கு வந்தது.

 10/11/1992 போராளிகளிற்கு இடையே ஏற்படும் முரண்பாட்டைத் தலைவர் எப்படிக் கையாண்டார்.





 இதே ஆண்டு நாங்கள்7, 3 எனஅழைக்கப்படும் பளையில் உள்ள சுவாஸ் தோட்டத்தில் நிக்கின்றோம். அந்த முகாமிற்குத் தற்காலிகப்பொறுப்பாளராக போராளி நிதி அண்ணை இருந்தார். இவர் அமைதியான சுபாவம் உடையவர் போல் பார்வைக்குத் தெரிந்தாலும் சிறிது முற் கோபம் உடையவர்.  காலை விடிந்ததும் எல்லோரையும் லயின் பண்ணி முகாம் சுத்தம் இலையான் அடித்தல் மற்றும் காவல் கடமை அனைத்து வேலைகளையும் பங்கீடுரீதியாக பிரித்துக் கொடுப்பது முகாம் பொறுப்பாளரின் கடமையாகும்.

 அன்றுகாலை நடந்த ஒன்றுகூடலிற்கு மிக்கல் வரவில்லை. நிதி அண்ணை போராளிகளை அனுப்பியும் அவர் வரவில்லை. எதிர்மாறாக நிதி அண்ணை குளித்துக்கொண்டிருக்கும் போது மிக்கலும் வந்துள்ளார். ஏன் மிக்கல் வரவில்லை என்று நிதி அண்ணை கேட்க மிக்கலும் அவரோடு திருப்பிக்கதைக்க இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு நிதி அண்ணை மிக்கலுக்கு இரண்டு அடி அடித்து விட்டார். கோபம் அடைந்த மிக்கல் சேட்டைக் களட்டிவிட்டு அடிரா அடிரா என்று கத்திக் கொண்டு நின்றுவிட்டு உடனே தலைவரிடம் சென்றுவிட்டான்.

அண்ணை எனக்கு நிதி அடித்து விட்டான். எனக்கு நீங்கள் ஒரு அனுமதி தாருங்கள். கோழியைக் கொல்வதுபோல் அவனை எனதுகையாலே நசித்து உங்களின் கண்முன்னே கொலை செய்கின்றேன் என வீரம் பேசிக் கொண்டு மிக்கல் நின்றான். நானும் அதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த தலைவர்  தம்பி நான் நடவடிக்கை எடுக்கின்றேன் போ எனத் தலைவர் சொன்னார். அவன் போய் விட்டான்.

நிதி அண்ணையைத் தலைவர் உடனே தண்டனையில் சமைப்பதற்குவிட்டார். இரண்டு நாட்களாக நாங்கள் எல்லோரும் வலிகாமத்தில் இருக்கிறோம்.  ரெட்டி முகாமிற்குச் சென்று விட்டோம். அப்பொழுது வன்னிக்குச் சென்ற சொர்ணம் அண்ணை வந்து இருந்தார். காலையில் கிணற்றடியில் சேவ் எடுத்துக் கொண்டு இருந்தார். அதே வேளை மிக்கலும் குளிப்பதற்கு வந்திருந்தான் மிக்கலை சொர்ணம் அண்ணை பிச்சை அப்பா என்று தான் கூப்பிடுவார். காரணம் ஜட்டி இல்லை ரவல் இல்லை எனத் தொடர்ந்து சொர்ணம் அண்ணையிடம் பஞ்சம் கூறுவான் மிக்கல் .

அதனால் பிச்சை அப்பா என்று தான் அவனைக் கூப்பிடுவார். அவனைக் கண்டதும் என்ன பிச்சை அப்பா தலைவருக்கு வீரவசனம் பேசினியாம் இரு ஐந்தாயிரம் தோப்புத் தாரன் என்று சொன்னதுதான் தாமதம் சொர்ணம் அண்ணையின் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டிப் பிடித்து விட்டான் மிக்கல். தோப்பு இல்லை என்றால் தான் விடுவன் இல்லையெனில் நான் செத்தாலும் விட மாட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் மிக்கல். சொர்ணம் அண்ணையும் திமிறிப் பார்த்தார். அவனின் கழுகுப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் இருந்தது. தோப்பு தர மாட்டன் விடு என்றார். விட்டதுதான் தாமதம் அவ்விடத்தில் நின்று பறந்து விட்டான் மிக்கல். போராளிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படித்தான் போனது. மிக்கல் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிற்காலத்தில் அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார்.  நிதி மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடிருந்துள்ளார்.

 20/12/1992 அன்று ரஷ்சிய அதிகாரிகளால் உயிர் நிலை ஆசிரியர்களிற்கான  பயிற்சி வழங்கப்பட்டது.




அன்றைய காலம் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ரஷ்சியாவில் இருந்து ஒரு மேஜர் தர அதிகாரியும் ஒரு கப்டன்  தர அதிகாரியையும் விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக ரஷ்சியா அனுப்பி வைத்தது.  உலக நாடுகளின் படைகளிற்குச் சமனாக எமது போராளிகளின் பயிற்சியும் அவர்களின் திறமையும் இருக்க வேண்டும் என்பதில் தலைவர் கவனமாகயிருந்தார். அதனால் அவர்கள்  விடுதலைப் புலிகளின் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டார்கள். முன்னரே மிகவும் உயிர் ஆபத்தான பயணம் என்பதை அவர்களிற்குத்  தெரியப்படுத்திய  பின்னரே அவர்கள்   கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டனர்.

 அவர்கள் வந்ததும் இருவரையும் விருந்தன் மாஸ்ட்டரின் பொறுப்பில் விடப்பட்டனர்.  தொடர்ந்து அவர்கள் அங்கி ருந்து இயக்கச்சியில் ஒதுக்கப்பட்ட ஒரு தென்னந் தோட்டத்தில் பயிற்சி கொடுப்பதற்காக எடுக்கப்பட்டார்கள். அடுத்து அப்போது தேர்ந்து எடுக்கப்பட்ட ஆறு போராளிகளும்.அங்கே வரவழைக்கப்பட்டனர். அதில் 06 உயிர் நிலை ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். அதில் மூவர் உயிரோடு உள்ளதால் அவர்களின் பெயரை இதில் வெளியிடவில்லை. வீரச்சாவு அடைந்தவர்களை மட்டும் குறிப்பிடுகின்றேன்.

 01 கேணல் வசந், 02 லெப்ரின் ரெட்டியன்03  கரும்புலி மேஜர் ஜெயம். இவர்கள் ஆறு பேரையும் பயிற்சி முகாமிற்கு எடுக்கப்பட்டனர். லெப்ரினன் கேணல் விருந்தன் மாஸ்ட்டர் அவர்கள் அப்பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் அங்கே கடமையாற்றினார். ஆறு மாதத்தில்  நடக்க வேண்டிய பயிற்சியை இரண்டு மாதத்தில் அவர்கள் முடித்தனர், அப்பயிற்சி தொடர்பாக சம்மந்தப்பட்ட போராளி குறிப்பிடுகையில், இது உடன் தாக்குதலைத் தயார்படுத்துவதற்கான கைக்கொமாண்டோ பயிற்சி திட்டமாகும். ஆறு மணிக்கு ஓட்டத்துடன் உடல் பயிற்சி ஆரம்பமாகும். பின்னர் ஒரு மணிக்கு நிறுத்தப்பட்டு மதிய உணவுக்கு ஒரு மணித்தியாலம் ஒதுக்கப்படும். பின்னர் இரண்டு மணிக்கு ஆரம்பம் ஆகும். அது தொடர்வான பாடங்கள் மட்டுமே நடக்கும், அவர்கள் ஆங்கிலத்தில் சொல்ல விருந்தன் மாஸ்ட்டர் தமிழில் எங்களிற்கு விளக்கப் படுத்துவார்.

                     

தலைவர் இடைக்கிடை வந்து பயிற்சியைப் பார்வையிடுவார். பயிற்சி முடிந்தவுடன் தலைவர் வந்து அவர்களைப்  பாராட்டியதோடு அவர்களிற்கு ஆளுக்கொரு கைத்துப்பாக்கியும் பெறுமதியான  யூசினைப்பும் பரிசாக வழங்கி அவர்களை வழி அனுப்பி வைத்தார் தலைவர். பின்னர் அவர்கள் எமது கப்பல் மூலம் அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்து இதில் பயிற்சி எடுத்தவர்கள் எமது போராளிகளிற்கு தாக்குதல் பயிற்சிகளை திறமையாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

எமது 30 வருட விடுதலைப் போராட்டத்தில் ரஸஷ்சியாவின் கறுப்புச் சந்தையில் இருந்தே பெரும் தொகையான ஆயுதங்களை வேண்டினோம். அது மட்டும் அல்ல தேவைக்கு ஏற்ப சில பயிற்சிகளையும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டோம் என்பதை எமது மக்கள் அறிந்து இருக்க வேண்டும் என்பதற்காக தெரிவிக்கின்றேன். ஆசியாவில் இந்தியாவைத் தவிர எந்த நாடும் விடுதலைபுலிகளிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை என்பதை எமது மக்களிற்குத் தெரிவிக்கின்றேன்.


16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் சர்வதேசக் கடலால் தமிழீழம் வந்துகொண்டிருந்தார் தளபதி கிட்டு..... 


அவருடன் குட்டிசிறி உட்பட 10 போராளிகளும் தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களும் அதில் இருந்தார்கள். இதை இந்தியாவினுடைய கடல் படை அறிந்து விட்டது.



உடனே கப்பலை முற்றுகையிட்ட இந்தியக் கடல் படையினர் சரண்டர் அடையுமாறு கேட்டனர். நிலைமைய உணர்ந்த கிட்டு அண்ணை அனைத்துப் பணி யாளர் களையும் தனது கப்பலில் இருந்து இறக்கி சிறிய போட்டில் இந்திய கடல் படையின் கப்பலிற்கு அனுப்பினர். அவர்களும் கடசியாக கிட்டு அவர்களும் போராளிகளும் சரண்டர் அடைந்து தங்களிடம் வருவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர், 

இத்துயரம் அங்கே நடக்க அப்பொழுது தலைவர் 7.3 என அழைக்கப்படும் பளையில் உள்ள சுவாஸ் தோட்டத்தில் இருக்கின்றார். ஆனால் அங்கே அனேகமாக பொட்டுஅம்மான் வருவது இல்லை. ஆனால் அன்று பொட்டு அங்கே வந்து தலைவரோடு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டுயிருந்தார்.


அப்பொழுது கிட்டு அண்ணை தலைவருக்கு தொலைத்  தொடர்பு ஊடாகத்தகவல் தெரிவிக்கின்றார். எங்களை இந்தியக் கடற்படை முற்றுகையிட்டு விட்டது. நாங்கள் என்ன செய்வது? இதுதான் அந்தக் கேள்வி, நான் என்னத்த உமக்கு சொல்வது நீரே ஒரு கட்டளை அதிகாரி இயக்க மரபுக்கு ஏற்ப முடிவு எடு ?அனுப்பப்பட்டது கிட்டு அண்ணைக்குத் தகவல் தகவலைப் பார்த்ததும் 



தலைவரின் அனுமதியைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டார்.   தன்னை அழிப்பதற்கு அவர் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால்இந்தியாவின் கப்பலை மோதி தகர்த்தால் தன்னோடு வந்த அனைத்துப் பணியாளகர்களும் சாகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் அதைக் கிட்டு அண்ணை விரும்பவில்லை அதனால்தான் அவர்களை இறக்கிவிட்டு கப்பலை வெடிவைத்துப் போராளிகளுடன் தானும் வீரமரணம் அடைந்தார்.

இதுதான் அந்தப் பதில். அதைச் சொல்லிவிட்டு அவர் இருக்கவில்லை. முகாமிலிருந்து படலை அடிக்கும் முகாமிற்குமாக நடந்துகொண்டே இருந்தார் தலைவர். அப்பொழுது நான் மினி மினி LMG யுடன் தலைவரின் பாதுகாப்பு வீரனாக கடமையாற்றிக் கொண்டிருந்தகாலம் அது. எங்களால் நடக்க முடியாமல் போய் விட்டது. உடம்பு வேர்த்து உடுப்புகள் நனைந்தன. கடுமையான களைப்பாக இருந்தது, எங்களைப்பார்த்து கவலையடைந்த சொர்ணம் அண்ணை எல்லம் ஜீ காரர்களை மட்டும் சென்றி மாத்தி விட்டார். மிகவும் களைப்பாக இருந்தது. நான் கிணற்றடிக்குப்போய் குளித்து விட்டு மீண்டு காலையுணவும் சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றிக்குப் போய் விட்டேன்.

ஆனால் தலைவர் நடந்து கொண்டே இருக்கின்றார், ஏனனெனில் கிட்டு அண்ணை சில சமயம் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டால், வெளிநாடு தொடர்வான எமது இரகசியத் தகவல்கள் மற்றும் எமது செயற்பாடுகளை இந்தியா அறிந்துவிடும் அப்படி அறிந்துவிட்டால்,


விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும். அதனால்தான் அவர் நடந்து கொண்டே இருந்தார். திடீரென சென்றிக் காரன் ஓடிவந்து கிட்டு அண்ணை வெடித்து விட்டார். என்ற தகவலைத் தெரியப்படுத்தினான். அடுத்து இந்திய வானொளிகளில் செய்திகள் வந்தது. அதைத் தொடர்ந்துதான் தலைவர் வந்து இருந்தார்.



               





 04/04/1993 ஜெயந்தன் படையணிஉருவாக்கம் 


போர்க் குணத்தால் புகழ்பெற்ற படையணியாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகிய போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.

 எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற் கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினாவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் போது தான் ஜெயந்தன் வீரச்சாவு அடைந்தார்.



கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி போர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணி....
தமிழீழ  விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறன் மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின்படைக் கட்டுமானத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.



ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக் கெதிராக தாக்கமான சமர்க்கள் வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக் கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.

விடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப் புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற் திறன்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறனாய்வுக் குறியீட வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது.



பொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.

மட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள் பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமானத்துள் கொண்டு வரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமானம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.

ஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.


ஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங் காணப்பட்டன.

ஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது
குறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற் படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற் சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.

பூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப் போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங் கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.

ஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத் தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் த
லைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.


இந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத் தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதொரு விடயமாகும்.

சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ எனப் பெருந் தலைவனால் குறிப்பிடப்பட்ட "ஜெயசிக்குறு" எதிர்ச் சமரிலும் "ஓயாத அலைகள் "– 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக் காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர் குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றிக் களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.

04/05/1993 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப் போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.

‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான். எனத் தேசியத் தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

எமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம்  மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சி நின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்.......

‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.

தலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழத் தேசியக்கொடி உயர்ந்து பறந்து கொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தி யொன்றைச் சொன்ன கதையாகஅமைந்தது.
  

03/05/1993 இதே காலம் தளபதி கருணா அவர்களிற்கு திருமணம் நடந்தது.


இவர்தான் கருணா 2002 துரோகியாக மாறி விடுதலைப் புலிகளின் பலயீனங்களை எதிரிக்குச் சொல்லி விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தவர்.

 இதே காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த செஞ்சோலை சிறுவர்களிற்கான நிகழ்வு அந் நிகழ்விற்குத் தலைவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்பது தளபதி மாத்தையா அவர்கட்குத் தெரியும். அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த மாத்தையா, 

 அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவர் விரும்பினார். தனக்கு விசுவாசமான போராளி ஒருதரை அனுப்பி ஸ்ரிக்கர் ஒட்டிய வாகனம் வந்தால் அதற்கு குண்டுத் தாக்குதல் நடத்துமாறு மாத்தையா அவர்கள் சொல்லியிருந்தார்.


ஆனால் அவர்கள் எதிர்பார்த்தவர் அப்பாதையால் வரவில்லை எதிர்மாறாக பொட்டு அம்மான் அவர்கள் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கோப்பாய் பகுதியில் வைத்து கட்டிட மறைவில் இருந்து வாகனத்தை நோக்கி குண்டுவீசப்பட்டது. 




குண்டு கீழே விழுந்து பேரிரைச்சலோடு வெடித்தது. வாகனம் மட்டும் சிறு சேதம் அடைந்தது. ஆனால் பொட்டுஅம்மானிற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் மயிர் இழையில் தப்பிக் கொண்டார். ஆனால் குண்டு ஏறிந்தவரைத் தேடுதல் வேட்டை செய்த போதும் அவர் பிடிபடவில்லை. அது எமது புலனாய்வுத் துறைக்கு ஒரு சாவாலாக அமைந்தது.

இச்சத்தம் தொடர்பாகத் தவறுதலான வெடி விழுந்ததென எங்களிற்குச் சொல்லப்பட்டது. ஏனைய படையணிப் போராளிகளிற்கும் மக்களிற்கும் இத்தகவலே பரப்பப்பட்டது. அன்று தலைவரின் வாகனத்தில் சென்ற போராளிகளிற்கும் பொட்டு அம்மானுக்கும் தான் இந்த விடயம் தெரியும்.


அது எமது தலைவரின் பாதுகாப்பை பலப்படுத்த அது ஒரு முன்னோடி அனுபவமாக அமைந்தது. அதற்குப் பிறகு எமது படையணி புலனாய்வுப் படையணியின் ஆளணிகள் அதிகரிக்கப்பட்டது. அத்தோடு தலைவரின் பாதுகாவலர்களின் ஆளணித் தொகையும் அதிகரிக்கப்பட்டது.



.01/05/1993 நடைபெற்ற அரசியல் கூட்டத்தின் போது இனிமேல் இவர் திருந்தவே மாட்டார் என்பதை அறிந்து கொண்ட நாம் அவ்நிகழ்வின்போது அவரைக் கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.


.03/05/1993 அன்று தளபதி கருணாவிற்கு திருமணம் செய்வதற்கு தேசியத் தலைவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைவாக ஒரு மாதத்திற்கு முன்னர் தலைவரின் அனுமதியுடன் தனக்குக் கீழே கடமையாற்றிய பெண் போராளிகளின் தலைவியான நிறா அவர்களை கருணா முன்னரே விரும்பி இருந்தார். அதனால் அவரைக் கூட்டிக்கொண்டு யாழ்பாணம் வருமாறு தலைவரால் தகவல் கருணாவிற்கு அனுப்பப்பட்டது .


அத் தகவல் கிடைத்ததும் பெண் போராளி நிறா அவர்களையும் கூட்டிக் கொண்டு நூறு போராளிகளின் பாதுகாப்புடன் கருணா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். ஐந்து லட்சத்திற்கு மேல் கருணா அவர்களின் திருமணத்திற்காகத் தலைவரால் நிதி ஒதுக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்தத் திருமணத்திற்கான ஏற்பாட்டை தலைவரே நேரடியாகச் செய்தார்.

 இந்நடவடிக்கை தளபதி சொர்ணம் அண்ணையின் கட்டளையிலே நடந்தது.



தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் லெப்  கேணல் Smஅப்பா  தலைமையில் துறமணி மற்றும் உதயன் அதைவிட சமையல்தொடர்பாக படித்தமாணவர்கள் என சைனீஸ் சமையல் ஆளர்கள் என sm அப்பா தலைமையல் ஒரு அணி இருந்தது. அதன் அங்கத்தவர்கள் Sm அப்பா போராளி உதயன் மற்றும் துறமணி இவர்கள் தலைமைப் பொறுப்பாளர்கள் அதற்குக் கீழே குமரதேவன்01, டட்லி02, றோவட்03, ஆனந்தபாலன்04, சாம்பசிவம்05, சுமன்06,  சோதி07, வேங்கைமார்பன்08, எனப் போராளிகளும் இவர்களிற்குக் கீழே சிறந்த சமையல் ஆளர்களாகயிருந்தார்கள்.


கருணா அவர்களின் திருமண நிகழ்விற்காக Sm அப்பா தலைமையில் பாண் கோட்டலில் சிறப்பான முறையில் சமையல் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அடுத்ததாக இந்தச் சமையல்களை கண் காணிப்பதற்காக இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட றெக்கோ உணவகப் பொறுப்பாளர் சைனீஸ் ராஜி அவர்கள் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகளால் மிகவும் ஆடம்பரமாக நடந்த திருமணமாக இது கருதப்பட்டது.


 தலைவர் நேரடியாகப் பங்குபற்றித் தானே அந் நிகழ்வை செய்தமையால் சில குறிப்பிட்ட தளபதிகளைத்தவிர சாதாரணபோராளிகள் அதில் கலந்து கொள்ளவில்லை. பாதுகாப்புக் காரணங்களிற்காக அது தவிர்க்கப்பட்டது.இது நடந்துகொண்டிருக்கும்போது தலைவர் சொன்ன கருத்து  தென்னிலங்கையில் சாவீடு இங்கே திருமண வீடு எனத்தலைவர் சொன்னார்.எல்லோருடைய துன்பங்களையும் நினைத்துப் பார்க்கும் உயர்ந்த மனிதர்களின் உணர்பு தலைவருக்கு இருந்தது.

இத்திருமண நிகழ்வில் தளபதி மாத்தையா அவர்களை வரச் சொல்வதற்காக தளபதி றிச்சாட் அவர்கள் அக்பர் மற்றும் குமரதேவன்  என மவாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுதுமலையில் இருந்த அவரின் வீட்ற்குச் சென்று இரு போராளிகளையும் அனுப்பி கருணா அவர்களிற்குத் திருமணம் அதனால் உங்களைக் கண்டிப்பாகத் தலைவர் வரச் சொன்னதாக ஒருகிழமைக்கு முதல் தகவல் சொல்லப்பட்டது. அதற்கு அவர் தனக்கு கடுமையான வேலையிருப்பதாகவும்  தன்னால் வரமுடியாது எனப் பதில் அளித்துள்ளார்.


இது இவ்வாறுயிருக்க ஆடம்பரமாகச் சமையல் நடந்துகொண்டிருந்தது. இந்நிகழ்வின்போது பாரிய ஒரு துரோகம் செய்வதற்கான திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதாவது சைனீஸ் ராஜி1987 ம் ஆண்டு  இந்தியா இராணுவம் இலங்கைக்கு அமைதிப்படையாக வரும் போதுஅவரைக் கூட்டிக்கொண்டு இலங்கை வந்தது .

அவர் தமிழ்நாட்டுத் தமிழர் என்ற காரணத்தால் அவர் தமிழ் அழகாகப் பேசுவார். அதனால் யாழ்ப்பாணம் வேம்படி மத்திய கல்லூரிக்கு முன்பாக ஒரு உணவகத்தை இந்தியா இராணுவம் வேண்டிக் கொடுத்து அவர்  கடை நடத்துவது போல் இந்திய இராணுத்தின் புலனாய்வு முகவராகச் செயல்பட்டு வந்தார். ஆனால் இது தமிழ் மக்களிற்கோ அல்லது விடுதலைப் புலிகளிற்கோ தெரியாத விடயமாகயிருந்தது.

அவ் உணவகம் சிறப்பானதாக நடந்தமையால் தளபதி றிச்சாட் ,பிரிகேடியர் ஜெயம், இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக அவ் உணவகத்தில் சாப்பிடுவதால் ராஜீவ் அவர்களிற்கும் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு வளர்ந்தது.



இதன் காரணமாக தளபதி றிச்சாட் அவர்களே பாதுகாப்பு சமையல் ஆளர்களிற்குப் படிப்பிப்பதற்காக ராஜீவை அழைத்து வந்தார். இது மாத்தையா அவர்களிற்கு  ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

ஏனென்றால் றோவிற்கும் மாத்தையாவிற்கும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்வால் ராஜி எங்களிற்கு உரிய ஆள்தான் என்பதை "றோ" மாத்தையாவிற்குத் தெரியப் படுத்தியிருந்தது. ராஜீவ்தான் கருணாவின் நிகழ்விற்கு சமையல் மேலாளர் என்பதை அறிந்து கொண்ட மாத்தையா திருமண நிகழ்வின்போது தலைவர் சாப்பிடும் உணவில் மட்டும் விசம் கலந்து கொடுக்குமாறு கட்டளை வழங்கியிருந்தார்.

ஆனால் ராஜீவ் அவர்கள் கலப்பதற்கான விசத்தை தன்னோடு வைத்து இருந்தது மட்டும் அல்ல அச்சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் திருமண நிகழ்வு ஆரம்பம் ஆனதும் தலைவர் வந்தாார். அப்போது  மாத்தையா எதிர்பார்த்தது போல் தலைவரின் பாதுகாவலர்கள் ராஜீவை தலைவருக்கு பக்கத்தில் கூட எடுக்கவில்லை. அதைவிட தலைவரிக்கான உணவு மட்டும் தலைவரின் முகாமான ரெட்டி முகாமில் இருந்து வந்தது. திருமணம் நடந்து முடிந்து படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அப்பொழுது என்னையும் ரெட்டியனையும் படம் எடுக்கக் கருணா வரச்சொல்லி இருந்தார். ஏன் அவளவு பேர் இருக்கும் போது உங்களை மட்டும் அவர் வரச்சொன்னார் என இதை வாசிப்பவர்கள் கேட்கலாம்,

 கருணா தலைவரைச் சந்திக்க வரும் போது நானும் ரெட்டியனும் தான் அவரைச் சந்திப்பதும் கதைப்பதும் வேறு எந்தப் போராளிகளும் அவரை மதிப்பதுஇல்லை அதனால் அவர் எங்கள் இருவருக்கு மட்டும் அவர் சொல்லி இருந்தார். 

நாங்கள் இருவரும் போய்க்கொண்டிருந்தோம், இடையில் வந்து சொர்ணம் அண்ணை எங்களைப் பிடித்தார். எங்கடா போறியல் என்று சொர்ணம் அண்ணை கேட்க படம் எடுக்க என ரெட்டியன் சொன்னான். அவனிற்குக் கன்னத்தைப் பொத்தி இரண்டு அறை எனக்கு ஒரு அறை தலைவரைப் பாதுகாப்பது முக்கியமா? ஃபோட்டோ எடுப்பது முக்கியமா?  ஆயுதத்தைக் கட்டிக் கொண்டு சென்றிக்குப் போங்கடா. நீங்கள் படம் எடுத்தால் பிற்காலத்தில் தலைவரின் பாதுகாப்பிற்கு ஆபத்து அதைவிட உங்கட அம்மாா, அப்பாவிற்கு ஆபத்துவரும் எனப் பேசிக்கலைத்தார். அவர் சொன்னது கருணா            பிரிந்த போது நாங்கள் விளங்கிக் கொண்டோம்.
பின் திருமணம் முடிந்து தலைவர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக ரெட்டி முகாமிற்குச் சென்றோம்.


01/07/1993 அன்று சந்தேகத்திற்கு இடமானவர்களோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் சைனீஸ் ராஜிவ் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது மாத்தையா அவர்கள் நஞ்சு கலக்கச் சொன்னது தொடக்கம் தனக்கும் இந்திய றோவிக்கும் உள்ள தொடர்பு அனைத்து விடையங்களையும் தெளிவாகச்சொன்னார். அடுத்த கட்டம் மாத்தையா அவர்களைக் கைது செய்வதற்கு உறுதிப்படுத்தப் பட்ட கனிசமான தகவல்கள் எமக்கு வந்த வண்ணம் இருந்தன.இது தொடர்பாக பின்னர் விரிவாகப் பார்ப்போம். இதே காலம்தான்,

.1991 மின்னல் இராணுவ நடவடிக்கை முடிந்தபின்னர், அக்காலப்பகுதியில் அந்நடவடிக்கையை  தலைமை தாங்கி நடத்திய படைத்தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜெனகப்பெரேரா அவர்கள் மண் கிண்டிமலை யென்ற தமிழ் பெயரை மாத்தி தனது பேரான ஜெனகபுர என பேரை மாற்றியது மட்டும் அல்லாமல், பாரிய சிங்களக் குடியேற்றம் ஒன்றை மேற்கொண்டார். அது மட்டும் அல்ல விடுதலைப் புலிகளிற்கு எதிராகப் பல தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தார்.

25.07.1993 இதயபூமி-1  அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம்தாக்குதல் நடைபெற்றது.

இம்முகாமைத் துடைத்து அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டம் இட்டார்கள். இந்நடவடிக்கைக்கு "இதய பூமி ஒன்று" எனத் தலைவரால் பேர் வைக்கப்பட்டு தளபதி பால்ராஜ் தலைமையில் வேவு நடவடிக்கைஆரம்பிக்கப்பட்டது.





02.07.1993 மணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம்  மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.

அதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப்.கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகிப் போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.


இதயபூமி-1 எனத் தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்குப் புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில் பின்னணி வேலைகள்ஆன மருத்துவம், சண்டைகளில் ஈடுபடும் போராளிகளிற்கான ஆயுத மற்றும் உணவு மினி யோகம் அனைத்தையும் தளபதி அன்பு பொறுப்படுத்தார்.



பால்ராஜ் அண்ணையின் வழிகாட்டலுடன்  தளபதி சொர்ணத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஒரு பகுதிக்குத் தனம் தலைமை தாங்கினார்.


இந்த இராணுவ முகாமைப் பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னைப் பொறுத்தவரை புலிகளை தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.!

ஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.


அந்த முகாமுக்குக் காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை அந்த முகாம் கொண்டிருந்தது.



இப்படி இது நடந்துகொண்டுயிருக்க யாழில் இருந்து தலைவவரின் பாதுகாப்புப் படை பணியான இம்ரான் பாண்டியன் படையணிப்போராளியைக் கூட்டிக்கொண்டு தளபதி சொர்ணம் அவர்கள் இந் நடவடிக்கைக்காக மணலாறு செல்கின்றார். இதுதான் விடுதலைப் புலிகளின் அதி நவீன சிறப்புப் படையணியாகும். கருப்புலி அணி மற்றும் அதி நவீன ஆயுதங்களும் இவர்களிடம் மட்டுமே உள்ளது.

  இப் படையணிக்கு முதலாவது பொறுப்பாளராக போராளி கமிலோ- இரண்டாவது பொறுப்பாளராக போராளி வேல்ராஜ் -மூன்றாவதுபொறுப்பாளர் போராளி கோணேஸ்- நாலாவது பொறுப்பாளர் போராளிபாலேஸ்- மருத்துவப் போராளிகுமரதேவன் உட்பட லெப் கேணல் ஜெரி  சுசிலன்/SL   செங்கமலம்  கெங்கா  என சுமார் 70, போராளிகளுடன்சென்றுயிருந்தார் தளபதிசொர்ணம். தொடர்ந்து சண்டை தொடர்பாகப் பேசுவதற்கு அனைத்துப் போராளிகளும் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.


அச்சண்டைக்கு தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பால்ராஜ் அவர்கள் கட்டளை அதிகாரிகளாக இருந்தார்கள். இருவரும் மாறி மாறி அச்சண்டை தொடர்வாகக் கதைத்தார்கள். அடுத்து போராளிகளிற்கு தேவையான ரவை கூடு  குண்டுகள் மற்றும் கோழ்சர்கள் என்பன வழங்கப்பட்டது. அப்பொழுது அனைத்துப் போராளிகளும் மேலதிக ரவைகள் வைக்கும் கோழ்சர்களை நெஞ்சில் கட்டியிருந்தார்கள். ஆனால் பெண் போராளிகளின் தலைவியான தளபதி ஜெனி அவர்கள் கோழ்சரை இடுப்பில் கட்டியிருந்தார்.



(இவர் தான் ஜெனி)


இதைப்பார்த்த தளபதி சொர்ணம் அவர்கள் ஜெனி கோழ்சரை நெஞ்சில் கட்டு எனக் கட்டளை வழங்கினார். தான் கட்ட மாட்டேன் என ஜெனி அடம்பிடித்தார். அனைத்துப் போராளிகளிற்கும் முன்மாதிரியாக நடக்க வேண்டிய நீர் கோழ்சரை நெஞ்சில் கட்டவில்லை. ஆனால் அவர்கள் கோழ்சரை நெஞ்சில் கட்டி இருக்கின்றார்கள். ஆனால் நீர் மட்டும் கட்டவில்லையென சொர்ணம் அண்ணை உதாரணம் காட்டினார். ஆனால் ஜெனி அதை ஏற்கவில்லை.



அடுத்து சொர்ணம் அண்ணை லெப்ரினன்ட் கேணல் ஜெரி அவர்களைக் கூப்பிட்டு உன்னுடைய யக்கேட் கோழ்சரை ஜெனிக்குக்கொடு அவளின் நெஞ்சுக் கோழ்சரை  நீர்வேண்டிக்கட்டு என்று சொல்லி ஜெனியின் பிரச்சனையைத் தீர்த்துவைக்கின்றார்.

இன்று நடந்த முரண்பாடுதான் பிற்காலத்தில் அவர்கள் இருவரும் ஒரு குடும்பம் ஆவதற்கான இறுக்கமான நட்பு ஏற்பட்டது. இதுபற்றி பின்னர்குறிப்பிடுகின்றேன்.


 இருட்டோடு இருட்டாக நகர ஆரம்பித்தனர்.போராளிகள் காவலரணில் இருந்து..... 

 சுமார் 15 கிலோ மீற்றர் நடந்து சென்றார்கள். விடுதலைப் புலிகள் சிங்களச் சிப்பாய்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு  இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்குப் பின்னால் நிலை எடுத்தனர் புலி வீரர்கள்.

இந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.


இப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி  சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து  அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.இப்படியான சம்பவங்கள் நிறையவே எமது விடுதலைப் போராட்டத்தில் நடந்துள்ளது. இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.




25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்றுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும் புலிகள் வழங்கவில்லை.

திடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது. பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்குச் சாத்தியமாகி இருந்தது. மண்கிண்டிமலை சண்டை ஆரம்பமானது தளபதி பால்ராஜ் கட்டளை வழங்க சாள்ஸ் அன்ரனி படையணி தடையை உடைத்து உள்ளே சென்றது. தளபதி ஜெனியும் கட்டளை வழங்கித் தனது பெண் போராளிகளை வழி நடத்திக் கொண்டிருந்தார். அடுத்து மணலாறு மாவட்டப் போராளிகளும் சண்டையில் ஈடுபட்டார்கள். தளபதி சொர்ணம் அவர்களின் அணிக்கு வேல்ராஜ் மற்றும் கமிலோ இருவரும் கட்டளை வழங்கினார்கள்.

 சிணைப்பர் ஆயுங்களுடன் இம்ரான் பாண்டியன் படையணிப்போராளிகளும்.   சண்டையில் ஈடுபட்டார்கள். பல சிங்களச் சிப்பாய்களின் தலைகள் பறந்தது. சொர்ணத்தின் குரலைக் கேட்டதும் குதிகால் நிலத்தில் படாமல் ஓட்டம் எடுத்தது இராணுவம். டோசர் வாகனங்களை  RPG  ஆயுதத்தால் அடித்து நொருக்கினார்கள் புலி வீரர்கள். செத்தவன் சாக உயிரோடு இருந்த இராணுவம் ஆயுதங்களையும் எறிந்து விட்டு ஓடித் தப்பியது. இறுதியில் சண்டை வெற்றியில் முடிந்தது. இச்சண்டையில் மூன்று இராணுவச் சிப்பாய்கள் சரண்டர் அடைந்தார்கள்.

றெச்சன் பைய்ண்டர் PK  LMG உட்பட T 81    எறிகணை செலுத்தி எனப் பலஆயுதங்கள் ரவைகள் என்பன விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது. அச்சண்டையில் இம்ரான் பாண்டியன் படைபணியைச் சேர்ந்த  போராளி கிருஸ்ணா உட்பட பத்துப் போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள். இது முடிய சொர்ணம் அண்ணை யாழ்பாணம் வந்துகொண்டிருந்தார்.  அச்சண்டையில் எடுத்த சில புதிய ஆயுதங்களையும் மற்றும் சரண்டர். அடைந்த மூன்று இராணுவச் சிப்பாய்களையும் போராளி ரெட்ணம் மொட்ட ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய் அவர்களைச் சாவகச்சேரிப்புளித் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். சொர்ணம் அண்ணை நேராகப் பாதுகப்பு முகாமிற்குச் சென்றுகொண்டிருந்தார்.

இதே காலத்தில்தான் இந்த வெற்றித் தாக்குதலும் நடந்தது. இதை பார்த்துவிட்டுப் பின்னர் சொர்ணம் அண்ணை என்ன செய்தார் எனப் பார்ப்போம்.

26/08/1993 அன்று மதன், நிலவன் இருவரும் கரும்புலியாகச் சென்று கிலாலியில் இரண்டு டோராக் கடற் கலன்களை மூழ்கடித்தனர்.


 அன்று யாழ்மாவட்டத்திற்கான மினியோகப் பாதையான தரைவழிப்பாதையான கொம்படி ஊரியான் பாதையை இராணுவம் 91 மூடியதில்  இருந்து அதனால் யாழ்குடா மக்கள் கடுமையான கஷ்டத்தை எதிர் நோக்கியது மட்டும் அல்லாமல் நாளாந்தம் மக்கள் கடற் படையனரால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.....
                       



மக்கள் வெளியே செல்வது சென்றால் சிறு சிறு போட்டுக்களில் கிலாலியில் இருந்து பூனகரி சிறு கடல் ஊடாக நல்லூர் பகுதிக்குச் செல்வதும் அங்கு இருந்து கிலாலிக்குச் செல்வதுமாக அவர்களின் பயணம் இருந்தது. விமானத் தாக்குதல் மற்றும் கடல் படையினரின் அச்சுறுத்தலால் பெரும்பாலும் மக்கள் அவ் ஆபத்தான பயணத்தை இரவு நேரங்களிலே மேற்கொள்வார்கள். ஆனால் அந்த நேரங்களைப் பார்த்து சிங்களக்கடற் படையினர் சுப்பர் டோறாக்களில் திடீரென வந்து மக்களை வாள்களால் வெட்டி அவர்களிடம் இருக்கும் பொருட்களைப் பறித்த பின்னர் அவர்கள் சென்ற வோட்டை கடலில் தாட்டு விடுவார்கள். ஒரு வாரம் சென்ற பின்னர் வெட்டுக் காயங்களுடன் அவர்களின் உடல் கரை ஒதுங்கும்.  


 இப்படித் துயரச்சம்பவம் நடந்து கொண்டு இருக்கையில்தான் தலைவர் அதற்கான திட்டம் ஒன்றை வகுத்தார். அதாவது நடவடிக்கை செய்ய வரும் கடல் படைப்படகுகளை திரும்பி செல்வதற்கு விடக்கூடாது. அதைக் கடலிலே மூழ்கடிக்கவேண்டும். அப்படித் தொடர்ந்து செய்தால் அவர்கள் இவ்வேலையை செய்வற்குத் துணிந்து வரமாட்டார்கள்.

 அதனால் தனது திட்டத்தைத் தலைவர் கடல் புலிகளின் தளபதிக்கு தெரியப்படுத்தினார். அதை ஏற்ற தளபதி அந்நடவடிக்கையைச் செய்வதற்கு இவர்கள் இருவரையும் நியமித்தார்.  ஏனெனில் இவர்கள் இருவரும் நீண்ட நாட்கள் இப்பணியில் ஈடுபட்டமையால் இவர்கள் இருவருக்கும் உறவுகளை இழந்த பெற்றோர்கள் பட்ட வேதனைகள் இறந்தவர்களின் அழுகுரல்கள் என அனைத்தையும் அறிந்தவர்கள். அதனால்தான் தளபதி அவர்களைத் தேர்ந்து எடுத்தார்.

வரதனும், மதனும் களம் இறக்கப்பட்டார்கள். மக்கள் படகில் பயணிக்கும் போது இவர்களும் அவர்களிற்குப் பாதுகாப்பாகச் சென்று கொண்டிருப்பார்கள். இருவரும் தனித்் தனி வெடிமருந்து நிரப்பப்பட்ட படகில்  மக்களைப் பாதுகார்த்துக்கொண்டு பயணிப்பார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டு மக்களும் துணிவுடன் பயணிப்பார்கள்.

அவ்வேளையில்தான் 40 பேர் சென்றுகொண்டிருந்த மக்களின் படகை வழிமறித்தது சிங்களக் கடற்ப்படையினரின் இரு சுப்ப டோறாக்கள். மக்களின் வோட்டை நகரவிடாமல் நிறுத்தியது.

 மக்களில் இருந்து 300 மீற்றரில் ஒரு டோராவும் மற்றது 600 மீற்றரில் நின்றது. மக்கள் ஒப்பாரி வைத்து எங்களைப் பாதுகாருங்கோ என அழுது கொண்டிருந்தார்கள்.  ஆனால் 300 மீற்றறில் நிற்கும் டோறாவைத் தாக்கினால் மக்களும் பாதிக்கப் படுவார்கள். அதனால் 600 மீற்றறில் நின்றபோட்டை  வேகமாகச் சென்று வரதன் மூழ்கடித்தான். அடுத்தவோட்டும் இதற்கு நடந்ததைப் பார்த்து ஒடவெளிக்கிட்டது. பின் அதை வேகமாகக் கலைத்துச் சென்றுமதன் மூழ்கடித்தான். இந்த வீரச்செயலை மக்கள் நேரடியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பெரும் வெடி ஓசையுடன் இரு கடற் படையின் கலங்களும் மூழ்கடிக்கப்பட்டது.

இதுஆங்கிலப்படங்களில் நடப்பதுபோல் இரண்டையும் மூழ்கடித்தார்கள்.
அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.




கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம்.

கிலாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் தியாகம் மறக்க முடியாது என 26.08.1993 அன்று கிலாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி கடற்படையின் இரு நீரூந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். எனஈழ நாதப் பத்திரிகையில் செய்திவந்தது.


அவர்களின் விபரம் வருமாறு:


1. கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)

(கந்தசாமி இராமசந்திரன் – கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு)


2. கடற்கரும்புலி கப்டன் மதன்

(சீனிவாசகம் சிவகுமார் – மட்டக்களப்பு)


3. கடற்புலி கப்டன் சிவா

(முத்துலிங்கம் கருணாநாதன் – குச்சவெளி, திருகோணமலை)


4. கடற்புலி லெப்டினன்ட் பூபாலன்

(சுந்தரராஜ் பாஸ்கரன் – நாகர்கோவில், யாழ்ப்பாணம்)


5. கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்

(சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகின்றோம்.

 இவர் வந்துகொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு வெற்றிகரமானசம்பவம் நடைபெற்றது.  அதையும் விரிவாகப் பார்ப்போம்,

தளபதி சொர்ணம் அவர்கள் சண்டை முடிந்து வெற்றிக்களிப்புடன் சண்டையில் எடுத்த சில ஆயுதங்களுடன் 28/07/1993 அன்று.....




வன்னியில் இருந்து யாழ்பாணம் நோக்கி வந்துகொண்டுயிருந்தார் சொர்ணம் அண்ணை. அது அப்படி இருக்க யாழ்ப்பாணத்தில்......

 மிகவும் மகிழ்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றது.யாழ் பருத்தித்துறைக் கடலில் நினைத்துப்பார்க்க முடியாத வெற்றிகரச் சம்பவம் ஒன்று நடந்தது. அது பற்றி விரிவாகப்பார்ப்போம். 

அப்பொழுது தலைவரின் பாதுகாப்புப்பொறுப்பாக பிரிகேடியர் கடாபி அவர்கள் இருந்தார். அதே வேளை ஒரு மகிழ்ச்சியான செய்தி வருவதற்கு பிரிகேடியார் சூசை அண்ணை அவர்களின் வழி நடத்தலில் இரண்டு கரும்புலிகளான புகளரசன் மற்றும் மணியரசன் இருவரும் கடல் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.



29/08/1993 அன்று புகழரசன், மணியரசன் இருவரும் சென்று பாரிய சாதனை ஒன்றைப் பருத்தித்துறையில் படைத்தார்கள்.


திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறாப் பீரங்கிக் கலத்தினை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து தளபதி சூசை அவர்களின் வழி நடத்தலில் இவர்கள் இருவரும் சென்று மிகவெற்றிகரமாக அத்தாக்குதலை நடத்தினார்கள்.

அந் நடவடிக்கையில் கப்பல் வெற்றிகரமாக மூழ்கடிக்கப்பட்டது.அதில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகியோர் இச்சாதனையை செய்தனர். அவ்வேளை திருகோணமலை காங்கேசன்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறாப் பீரங்கிக் கப்பல் கடல் படையினர் இவர்களை அவதானித்துள்ளனர். தொடர்ந்து இவர்களின் வோட் அவர்களின் கண்ணிற்கு மீன் பிடிப்பவர்கள் போலவே தெரிந்தன. இவர்களை மறித்து மீன் பறிக்கலாம் என நினைத்து கிட்ட நெருங்கி மீன் கேட்டுள்ளனர்.


இலக்கை தேடி அலைந்து தெரிந்தவர்களிற்கு இது ஒரு சந்தர்ப்பமாகயிருந்தது. திடீரென வெடிமருந்தை வெடிக்க வைத்து கப்டன் புகளரசன் மற்றும் கப்டன் மணியரசன் இருவரும் வீரமரணம் அடைந்தார்கள். இந்நடவடிக்கையில் இரண்டு 20 மில்லிமீற்றர் கணோன் மேலும் பல ஆயுங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள்.  இதில் 25 கடல் படையினர் கொல்லப்பட்டனர்.

இச்சண்டை நடந்து சுமார் 4 மணித்தியாலத்தில் கடல் படையனரிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கணோன்களையும் ஒரு கஜேஸ் வானில் ஏற்றிக்கொண்டு அதைத் தலைவர் பார்பதற்காகக் கொக்குவில் நந்தாவில் அம்மான் கோயில் அருகாமையில் அமைந்திருந்த ரெட்டி முகாமிற்கு ஆயுதம் வந்து சேர்ந்தது. அந்த முகாம் கிளாஸ் கொட்டியிலில் அவ் இரண்டு கணோன்களும் வைக்கப்பட்டது.


 இது தான் அந்தக் கிளாஸ் கொட்டில்.

முதலில் அதைப்பார்த்த தலைவர் கடாபியை வரச்சொல்லு என்று ஒரு போராளியை அனுப்பினார். உடனே கடாபி அண்ணை அவ்விடத்திற்குவந்தார். கடாபி அண்ணை அவ் ஆயுதம் தொடர்பாக தலைவருக்கு விளக்கப் படுத்தினார். அதை அடுத்து தலைவர் கடாபி அண்ணையிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்டார். 1991ம்  ஆண்டுக் காலப்பகுதியில் ஆனையிறவுச் சண்டைக்காக 23 mm கணோன் வேண்டப்பட்டது. அதில் கூடுதலான ரவைகள் 23 mm மில்லிமீற்றர் என சொல்லி 20mm மில்லி மீற்றர் ரவைகள் வந்தது எனத் தலைவர் சொல்ல நான் அதை உறுதிப்படுத்தினேன்.தலைவர் தன்னை அறியாமல் சிரித்து விட்டார்.

தெரிந்தோ அல்லது தெரியாமலோ கூடுதலாக 20  மில்லிமீற்றர் ரவைகளை ஆயுதத்தரகர்கள் கப்பலில் தவறுதலாக ஏற்றி விட்டார்கள். 

மேலதிகமாக வந்த ரவைகள் இதனுடையதா என்று தலைவர் கடாபி அண்ணையிடம் கேட்டார். காடாபி அண்ணை ஓம் எனப் பதில் அளித்தார். தலைவர் சிரித்த முகத்துடன் மகழ்ச்சியாகக் காணப்பட்டார்.

இது பற்றிய விரம்.....


 கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து வீரகாவியமான கடற் கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் தியாகத்தால், எந்தவித சேதமும் இல்லாது, கடற்புலிகளின் கைகளில் கிடைத்த முதல் 20MM கணோன் இது தான். அதைத் தலைவர் பார்வையிடும் போதே இந்தப்படம் எடுக்கப்பட்டது.

20MM கணோன் ஆயுதத்தை 1940 ஆண்டு சுவிஸ் நாட்டை சேர்ந்த ரெண்கொல்ட் பெக்கர் (Reinhold Becker) என்பவர் உருவாக்கினார். இந்த ஆயுதத்தின் சிறந்த பயன்பாடு காரணமாக, சுவிஸ் அரசிடமிருந்து காப்புரிமையை பெற்று பல முன்னணி நாடுகள், இதன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பலவிதமாக இதை உருவாக்கி பாவிக்கின்றன.

இதன் சிறப்பு  தரை, கடல்,வான் மூன்றிலும் பாவிக்க இலகுவானது. அத்தோடு இதிலிருந்து வெளியேறும் குண்டு  மோதுமிடத்தில் வெடிக்கும் தன்மை கொண்டதால், அந்த இடத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கும். இந்த ரவையில் உயர் சக்தி வெடிமருந்து உள்ளமையால், ஒரு கைக்குண்டின் சக்திக்கு நிகரான சேதத்தை உண்டாக்கும். இது எமது கைக்குக்கிடைத்தது.



இது நடந்து அடுத்த நாள் ஏதாவது பலி தீர்க்க வேண்டும் என அரசபடை திட்டம் இட்டது. அடுத்த நாள்  30/08/1993 அதிகாலை 6 மணி இருக்கும் எமது முகாமில் வழமையாக 5 மணிக்கு T போட்டு விடுவார்கள். அப்பொழுது சுடச் சுட ரீ வந்தது. அதைக் குடித்துவிட்டு இருக்கின்றேன்.

 அப்பொழுது றீசிவிங் அதாவது ஒட்டுக் கேட்கும் வேலை செய்வதற்கு கேணல் அன்ரன் அண்ணை அவர்கள் தான் இருந்தார். உடனே என்னிடம் வந்து மேலால் வருகுது பொய்சனிக்குப் போ என்று சொல்லி விட்டு அவர் ஏனைய போராளிகளிற்கும் தகவலைத்தெரிவிக்கச் சென்றுவிட்டார்.

நான் அப்பொழுது றோட் ஓரமாக இருக்கும் பொய்சனிக்குப் போய் நிலை எடுத்தேன். அப்பொழுது நான் வைத்திருந்த ஆயுதம் பெல்ஜீயம் தயாரிப்பான மினி மினி LMG ஆகும். சுமார் 200 ரவைகள் லோட் பண்ணியவாறு தாயார் நிலையில் நிக்கின்றேன். எனக்கு அருகாமையில் போராளி காளி அண்ணையும் நின்றார்.

அவ்வேளை கொக்குவில் பக்கமாக இருந்து சியாமாச்சட்டி என அழைக்கப்படும் இத்தாலித் தயாரிப்பான விமானம் வேகமாக எங்களின் முகாமைத் தாக்குவதற்கு வந்துகொண்டிருக்கின்றது. அப்பொழுது நான் விமானத்தை  நோக்கி சுடத்தொடங்கினேன். அன்று மட்டும் சுமார் இருநூறு ரவைகள் விமானத்தை நோக்கிச் சுட்டுத்தள்ளினேன்.

நான் சுற்றி சுற்றி அடிக்க பக்கத்தில் நின்ற காளி அவர்களிற்கு MT அடித்தது. அதைவிட முன்னால் இருந்த நாவல் மரம் சிறிது சேதம் அடைந்தது. அதை விட எமது முகாமில் இருந்தவர்களின் செயல்பாடு தொடர்வாகப் பார்ப்போம். ஆனால் .GPM வைத்து இருந்த டிமல் விமானத்தை நோக்கி 6 ரவை அடித்தார். 50 கலிபர் வைத்திருந்த கதிரொளி 12 ரவை அடித்தார்.14 ட்டின் பொயன் 5 வைத்து இருந்த மூர்த்தி 20  ரவை அடித்து இருந்தார்.

அன்றைய நாள் நான் மட்டுமே கூடுதலான ரவைகளை அடித்து எனது கடமையைச் சரியாகச் செய்தேன். அன்றைய விமானத்தாக்குதலில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் ஒரு குண்டு வெடிக்கவில்லை ஒரு குண்டு வெடித்தது அதனால் அன்றையதினம் எமது போராளிகள் கொத்துரொட்டி செய்து கொண்டிருத்தாகள். அபொழுது எமது சமையல்க்கூடம் சேதம் அடைந்தது. சமைத்துக்கொண்டிருந்த இரு போராளிகள் காயம் அடைந்தார்கள்.
அதில் போராளி இளையவன் மற்றும் போராளி திருமகன் இருவரும் அன்று நடந்த விமானத் தாக்குதலில்காயம் அடைந்தார்கள். அதனால் அன்றைய நாள் எமக்குச் சாப்பாடு இல்லாமல் போனது.இவர்கள் இருவரும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்தார்கள்.

இது நடந்து அடுத்த நாள் தலைவர் எனது செயல்பாட்டை பாராட்டியதோடு எதிர்வரும்காலங்களில் விமானம் எமது முகாமைத் தாக்கவந்தால் அந்நேரம் நீர் 50 கலிபறிற்கு பக்கத்தில் நின்றால் அவர்களின் ஆயுதத்தை  வேண்டி அடிக்கலாம் எனவும் இது ஒரு வீற்ரோ அதிகாரம் என தலைவரால் சொல்லப்பட்டது. அதே வேளைஅடுத்த நாள் வன்னியில் இருந்து வந்த சொர்ணம் அண்ணை என்னைப் பராட்டினார். கடாபி  அண்ணையும் என்னைப் பராட்டியதோடு எதிர்காலத்தில் எப்படி அடிக்க வேண்டும் என்ற தந்திரங்களையும் தளபதி கடாபி அண்ணை கற்றுத் தந்தார்.

பாகம் 4ல் பகுதி06 முடிவு.





பாகம்  4ல் பகுதி 07ஆரம்பம்

  முன்னர் இருதடவை சொர்ணம் அண்ணை வந்து கொண்டிருக்கின்றார்.  எனக் குறிப்பிட்டேன். இப்பொழுது அதைப் பற்றிப் பார்ப்போம்.

இங்கே ஆபத்தான விமானத்தாக்குதல் நடந்துகொண்டிருக்க பிரிகேடியர் சொர்ணம் அண்ணை தான் சண்டைக்காகக் கொண்டுபோன அனைத்துப் போராளிகளையும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு 31/08/1993 அன்று யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். சொர்ணம் அண்ணை அவர்கள்கொண்டு வந்த PK  LMG தான் தலைவரின் வாகனத்தில் செல்லும் பூரிப் என்பவருக்கு வழங்கப்பட்டது.


இதுதான் மினிமி LMG பெல்ஜியம்  தயாரிப்பு .

முன்னர் இவர் மினிமினி LMG வைத்துயிருந்தவர் பின்னர் இதை மாற்றி PK  LMG   கொடுக்கப் பட்டது. இதுதான் மண்கிண்டி மலையிலிருந்து சொர்ணம் அண்ணைகொண்டு வந்தபிரதான ஆயுதமாகும்.



   (இதுதான் சொர்ணம் அண்ணை கொண்டு வந்தPK  LMG )  PK  LMG பூரிப் இது அவரின் பட்டப் பெயர் இவர் முன்னர் மினி மினி LMG வைத்து இருந்தார். பின்னர் இது ஒரு சிறந்த ஆயுதம் என்பதால் இது அவருக்கு மாற்றி வழங்கப்பட்டது. மண்கிண்டிமலை சண்டையில் பெரும் வெற்றிக் களிப்போடு வந்த தளபதி சொர்ணம் அவர்கட்டு அந்த சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

 இயக்கத்தினுடைய  உள்வீட்டிற்குள் பெரும் நச்சுப் பாம்பு இருப்பது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான்  அவர்களிற்கு தெரிய வந்தது. குறிப்பாக முகாம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் அடுத்து மேலதிகமாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் என பாரிய குழப்பமான நிலையில் தலைமைப்பீடத்தில் காணப்பட்டது.


ஆனால் இவ்விடயத்தை மிக இரகசியமாக கையாள வேண்டும். என தலைவர் நினைத்தார், ஜேர்மன்தலைவர் கில்லர் சொன்னது போல் முதலில் கோழிக்கு அடிக்க வேண்டும். பின்னர் சிதறி ஓடிய குஞ்சுகளை அழிக்க வேண்டும். என்பதின் பொருள் முதலில் ரஸ்சியாவிற்கு அடிக்க வேண்டும். பின்னர் அதன் கிளை நாடுகளை அழிக்க வேண்டும் என்பதே கிட்லர் அவர்களின் தந்திரமாகயிருந்தது. அது அவருக்கு தோல்விதந்தாலும் மாத்தையா விடயத்தில் அதுவே எமக்குச் சிறந்த வழியாக இருந்தது.


அதே வழி முறையைத்தான் விடுதலைப் புலிகள் கையாள விரும்பினார்கள். முன்னர் தளபதி மாத்தையா அவர்களைக் கைது செய்வது பின்னர் அவரோடு இணைந்த அனைவரையும் தனித்தனியாகக் கைது செய்வது. இது தான் விடுதலைப் புலிகளின் தலைமையின் திட்டமாகயிருந்தது.


31//08/1993 அன்று மாத்தையா அவர்களோடு நிற்கும் போராளி ஒருத்தர் அவசரச் செய்தி ஒன்றைப் பொட்டு அம்மானிற்கு அனுப்பினார். மாத்தையா அண்ணை முல்லை மாவட்டத்தில் இருக்கும் மண்ணாங்கண்டல் முகாமிற்குச் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் ஊடாக இந்தியா செல்லப் போகின்றார். என்பது தான் அந்தத் தகவல்.


இது திசை திருப்பலா அல்லது போலியானதா? அல்லது உண்மையானதா? என்பதை உறுதிப்படுத்த அக்காலத்தில் போதியகாலம் காணமல்  எமக்கு இருந்தது. இது தொடர்பாக 31/08/1993 வலிகாமத்தில் உள்ள தலைவரின் ரெட்டி  முகாமில் காலை 10 PM தலைவர் பொட்டுஅம்மான் சொர்ணம் மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். அந்த ஆலோசனை என்னவென்றால் தளபதி மாத்தையா அவர்களை தலைவர் சந்திக்க வரச்சொல்லி அங்கே வைத்து அவரின் பிரச்சனையை பேசித் தீர்ப்பதோடு தொடர்ந்து அவரின் பாதுகாவலர்களை மாற்றி வேறு பாதுகாவலர்களை வைத்து அவரைக் கண்காணிப்பில் வைத்திருப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அடுத்து அவருடைய ஏனைய போராளிகளையும் கைது செய்து விசாரணையூடாக உண்மையை அறிவதுதான் அவர்களின் திட்டமாகயிருந்தது.


31/8/1993 அன்று இரவு மாத்தையாவைப் பிடிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது.


 காலை 10.30  மணிக்கு தங்களை தலைவர் சந்திக்க விரும்புவதாகவும் உடனே நீங்கள் ரெட்டி அல்லது9.5 முகாமிற்கு வரவும் என்று தகவல் மாத்தையா அண்ணைக்கு அனுப்பப்பட்டது.


. தகவலை அனுப்பி விட்டுத் தலைவர் சொர்ணம் அண்ணை மற்றும் பொட்டு அம்மான் அனைவரும் அவரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின் __றார்கள் .9. 5 முகாமில்.....


ஆனால்  3.30 பிற்பகல் ஆகியும் அவர் வரவில்லை. அதனால் இவர்களிற்கு கடுமையான ஏமாற்றம் ஒரு பக்கம் இவர் இங்கே தான் உள்ளாரா? அல்லது வெளியே சென்று விட்டாரா ?அல்லது இனித்தான் போகப் போகின்றாரா? என்று குழப்பதில் இருந்தார்கள். தொடர்ந்து அடுத்த நாட்கள் நகரவிடமுடியாது இரவுக்கு கண்டிப்பாத் தளபதி மாத்தையா அவர்களைப் பிடித்தே ஆக வேண்டும் என்று மூவரும் முடிவு எடுத்தார்கள். ஆனால் அவரைப் பிடிப்பதற்கான முழுமையான பொறுப்பைத் தளபதி சொர்ணம் அவர்களிடம் இருவரும் ஒப்படைத்தார்கள்.  அன்றைய நாள் நான் அதே முகாமில் சமையல் கடமையில் ஈடுபட்டுக்  கொண்டிருந்தேன்.


அதைவிட நான் தான் சமைப்பவர்களிற்கு அனைவருக்கும் பொறுப்பாகயிருந்தேன். 31/03 /1993 பிற்பகல் 3.00 மணி என்னைக் கூப்பிட்ட சொர்ணம் அண்ணை சமையல் முடிஞ்சா ? எனக் கேட்டார். நான் ஓம் என்று சொல்ல நிறையச் சாயம் போட்டு ஒரு T கொண்டுவா என்று அவர் சொல்ல நானும் ஒரு சூடான T போட்டுக் கொண்டு கொடுத்தேன். T யைக் குடித்துக்கொண்டே மினிமினி மேலதிகமாக 200 ரவையும் பிரசண்ணாவிடம் வேண்டிக்கொண்டு வேகமாக வெளிக்கிட்டுக் கொண்டுவா என கட்டளையிடுகின்றார் எனக்கு.


கோழ்ஸ்சறில் 500 மேலதிகமாக வேண்டிய 200 மொத்தம் 700 ரவையுடன் மினிமினி LMG யைக்கட்டிக்கொண்டு சொர்ணம் அண்ணையைச் சந்திக்கின்றேன். வாகனத்தை சொர்ணம் அண்ணை ஓட்டே நான் அவர் பக்கத்தில் இருக்கின்றேன். வாகனம் வேகமாக ரெட்டி முகாமில் இருந்து வல்லை வெளியூடாக வடமராச்சியை நோக்கிச் செல்கின்றது. அங்கே முதல் பாதுகாப்பில் இருந்தே லெப். கேணல் குணேஸ் அவரின் உணர்வு மற்றும் விடுலைப்பற்று காரணமாக் கடற் புலிக்கு அனுப்பப்பட்டவர். உறவினர்களோடு ஜேர்மேனியில் வாழ்ந்த குணேஸ் அவர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டும் என்பதற்காக ஜேர்மனியில் இருந்து தமிழீழம் வந்து இயக்கத்தில் இணைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


                                              


தொடந்து அங்கே சென்றதும் சிறிது நேரம் சொர்ணம் அண்ணை கதைத்து விட்டு குணேஸ் அவர்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சாவகச்சேரியை நோக்கி எங்களின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அங்கே சாவகச்சேரியில் உள்ள கச்சாயில்தான் எங்களுடைய 45 பயிற்சி முகாம் இருந்தது. அங்கே சென்றதும் சொர்ணம் அண்ணை பயிற்சி ஆசிரியர் ஊடாக விசில் அடித்து அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூடலிற்கு வருமாறு சொல்லப்பட்டது. அனைவரும் ஓடிவந்து வரிசையாக  நின்றார்கள்.


பின்னர் சொர்ணம் அண்ணை அதில் குறிப்பிட்ட சில போளிகளைமட்டும் மணியன் தோட்டம் செல்வதற்காக தரம் பிரித்து விட்டார். அதில் மிகவும் நம்பிக்கையான போராளிகளான தளபதி இரட்ணம் போராளி கோணேஸ் போராளி பூரிப்  மூவரையும் என்னுடைய பக்கம் அவர்களை போய் நில்லுங்கோ எனச் சொர்ணம் அண்ணை சொல்ல நான் விளக்கம் இல்லாமல் வேறு பக்கம் போய் நிக்க ஆத்திரம் அடைந்த சொர்ணம் அண்ணை ஒடி வந்து எனக்கு இரண்டு அறையும் போட்டு வயித்தில் பிடித்து இழுத்து எறிந்தார் என்னை. நான் மினி மினி யோடு நிலத்தில் விழுந்து வேகமாக எழும்பி பூரிப்புக்குப் பின்னால் போய் நின்றேன்.

 அடியை வேண்டிக்கொண்டு இயக்கத்தில் ஏதோ ஒரு பாரிய பிரச்சனை எற்பட்டுள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். எங்களுடையே பிக்காப் வாகனத்தில் போராளி பூரிப்-போராளி கோணேஸ்- பிரிகேடியர் இரட்ணம் - லெப் கேணல் குணேஸ்-  இவர்கள்  நாலுபேரையும் ஏற்றிக்கொண்டு நானும் சொர்ணம் அண்ணயும்   மணியின் தோட்டம் சென்றோம்.


அங்கே றிச்சாட்தலைமையில்  எங்களுடைய பாதுகாப்புப் போராளிகளும் வந்து சேர்ந்தார்கள். அதில் போராளி இளையவன் .ஜெயநந்தன் கரும்புலி கப்டன் வாமன் எனப் பல போராளிகள் வந்திருந்தார்கள். சாள்ஸ்சன்ரனி மற்றும் புலனய்வுத்துறை, சைவர் பிரிவு மகளீர்படையணி எனக் கணிசமான போராளிகள் மணியன்தோட்டம் வந்திருந்தார்கள்.   பொட்டுஅம்மான் பால்ராஜ் அண்ணை மற்றும் சொர்ணம் மூவரும் மாறி மாறிக் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.  நான் சொர்ணம் அண்ணக்கு முன்னால் சென்று அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தேன்.


ஆனால் உண்மையைச் சொல்லவில்லை மாறாக வெளியிலிருந்து எமக்கு எதிராக ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் . அதே நேரம் உள்ளே இருந்து ஒரு சிலர் தப்பி வேறு நாட்டிற்கு போவதற்கு இருப்பதாகவும் கோட்டையில் ஒரு பாரிய ஆகாயத் தரையிறக்கம் நடந்தால் நாம் பல இழப்பை சந்திக்க நேரிடும் நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து கடமையைச் செய்ய வேண்டும். என்று சொல்லி அனைத்து போராளிகளிற்கும் தெளிவுபடுத்தப்பட்டது. அதையடுத்து கடல்ஓரங்களைச் சுற்றி அனைத்துப் போராளிகளும் விடப்பட்டார்கள்.

அதில் எமது தாக்குதல் படையினர் போராளி கெனடி தலைமையில் மாவட்டபுரப்  பக்கத்தால் மாத்தையா தப்பிப் போகாதவாறு பாதுகாப்பை பலப் படுத்தினார்கள்,மகளீர் படையணி சாள்ஸ் அன்ரனி , கடற் புலிகள் இவர்கள்மாதகல் பண்ணைக் கடல்கரையோரமாக  விடப் பட்டார்கள். புலனாய்வுத்துறையினர் யாழ் நகருக்குள் இறக்கப்பட்டார்கள்.  மட்டு, அம்பாறை ஜெயந்தன் படையணி இந்நடவடிக்கைக்கு எடுக்கப்படவில்லை.


அவர்களின் பிரச்சனையை முடித்து விட்டு அதே இடத்தில் எமது படையணிப் போராளிகள் றிச்சாட் தலைமையில் ஒரு சிறப்பு அணித் தளபதி சொர்ணம் அண்ணையால் உருவாக்கப்பட்டது. அப் 15 பேர் கொண்ட அணியில் தளபதி இரட்ணம் போராளி2 oscar 3 பிரின்ஸ் .4 கரும்புலி கப்டன் வாமன்5  கோணேஸ் 6  லெப் கேணல் குணேஸ் போராளி இளையவன் லோ போராளி பூரிப் போராளி ஜெயனந்தன்போராளி .ஜெயாப் இவர்கள் 15 பேரும் சொர்ணம் அண்ணையின் தலைமையில் சென்று முன் பக்கத்தால் தாக்குவது எனவும் பின் பக்கத்தால் நிருபன் அவர்களின் எமது புலனாய்வு  அணிப்போராளிகள் பின்னால் ஓடாமல் தடுப்பார்கள். எனச் சொர்ணம் அண்ணையால் திட்டம் தீட்டப்பட்டது - ஆனால் பொட்டுஅம்மான் சொர்ணம் அண்ணை பால்ராஜ் மூவரும் எங்களோடு வந்தார்கள்.


நாங்கள் அனைவரும் மணியன் தோட்டத்தில் இருந்து கால்நடையாக மாத்தையா அண்ணையின் முகாம் அமைந்திருந்த சுண்டுக்குளிப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இரவு 12 மணிக்கு அம்முகாமை நெருங்கினோம். அவ்வேளையில் தான் முகாம் சுற்றுச் சூழலை அவதானிக்கும் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு போராளிகளை நாங்கள் பிடித்தோம்.

 பிடித்தவுடன் அவர்களின் ஆயுதங்களை பறித்த சொர்ணம் அண்ணை உடனே அவர்களின் சேட்டைக்களட்டி இருவரின் கைகளையும் பின் பக்கத்தில் வைத்துக்கட்டினார்.அதற்குப் பின்னர் பின்னால் நின்ற எங்களை ரோச் அடித்து இங்கபாரு எவ்வளவு பேர் வந்திருக்கம் ஏதாவது மறைத்தாய் என்றால் அடித்து நொருக்குவோம் என்று சொர்ணம் அண்ணை  அவ்இருவரையும் மிரட்டினார்.


அதற்கு பின் சுரேஸ் எங்கே? என முலாவது கேள்வியைக்கேட்டார். அதற்குப் அப்போராளி இங்கேதான் நிக்கின்றார் என பதில் அழித்தான்

கோபம் அடைந்த சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறை போட்டார்.


,அதற்குப்பிறகுவன்னிக்குச் சென்றுவிட்டதாக  சொன்னான் 

  உண்மையைச் சொல்லிய அப்போராளி அழத்தொடங்கினான். இருந்தும்அடுத்த கேள்வி இந்த முகாம் பொறுப்பாக யார் நிற்பது என்று கேட்டார். அதற்கு அவன் ராகவன் என்று பதில் அளித்தான்.

 உடனே அவனிற்கு தொடர்பு எடு என்று சொன்ன சொர்ணம் அண்ணை தொடர்வு கிடைத்ததும்  அவனின் வோக்கியை வேண்டி உள்ளே நின்ற ராகவனோடு சொர்ணம் அண்ணை கதைத்தார். நான் சொர்ணம் கதைக்கின்றேன். நான் மாத்தையா அண்ணையை சந்திக்க வருகின்றேன். என்பதை அவருக்கு தெரியப் படுத்து என்று சொல்லி விட்டுக் கதையை முடிக்க முன்னர் அந்த வோக்கியை பொட்டு அம்மானிடம் கொடுக்கின்கின்றார்.

 பொட்டுஅம்மான் மாத்தையா அண்ணையிடம் வோக்கியைக் கொடு கதைக்க வேண்டும் என்று சொல்ல அவன் வோக்கியை மாத்தையா அண்ணையிடம் கொடுக்கின்றான். மாத்தையா அண்ணையிடம் பொட்டுஅம்மான் பேசுகின்றார். மாத்தையா தலைவர் சொல்லி நாங்கள் வருகின்றோம். நீ ஒரு தரம் வெளியே வா என்று அம்மான் தெரியப் படுத்த ஒரு பிரச்சனையும் இல்ல பொட்டுநீங்கள் உள்ளே வாங்கோ என்று மாத்தையா அண்ணை பதில் அளிக்கின்றார். மீண்டும் பொட்டு அம்மான் சிறிதாக மாத்தையா அண்ணையை மிரட்டுகின்றார்.


மாத்தையா நீ பிழையான வழியில் போகாதே நேரான வழியில்வா என்று அம்மான் சொல்ல பிரச்சனை இல்ல பொட்டு உள்ளே வாங்கோ என்று மீண்டும் மாத்தையா அண்ணை சொல்கின்றார்.


சொர்ணம் அண்ணை அவனின் வோக்கியையும் றைவுளையும் வேண்டி எடுக்கின்றார். அதை வேண்டவும் அவன் அழத்தொடங்கினான்.


சந்திப்பது என்றால் வாகனத்தில் தனியே உள்ளே வர நீங்கள் இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி வர வேண்டும் என்று கேள்வி கேட்டான். அதற்கு சொர்ணம்அண்ணை சாதாரண போராளிகளிடம் எல்லாம் சொல்ல முடியாது. அவனை சமாளிப்பதற்காக அண்ணை சந்திக்க வரச் சொல்ல மாத்தையா அண்ணை வரவில்லை அதனால் தான் இப்படி வந்தனாங்கள் என்று அவனிடம் சொன்னார். சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி பின்னால் அனுப்பிவிட்டு நாங்கள் நடக்கத் தொடங்கினோம்.


இப்பொழுது தான் எனக்கு விளங்கியது மாத்தையா அண்ணையை கைது செய்வதற்காகத்தான் இந்தத் திட்டம் போடப்பட்டு நாங்கள் போய்க் கொண்டிருக்கின்றோம் என்று நூறு வீதம் நான் விளங்கிக் கொண்டேன்.


வேகமாக நடந்து மாத்தையா அண்ணையின் முன் வாசல் பக்கம் உள்ள வேலியைச் சென்றடைந்தோம். அதற்குப் பக்கத்தில் சென்றதும் மினி மினி LMG குணேஸ்  நான் லோ வாகனத்தகர்ப்பு லோஞ்சர்வைத்து இருந்த  பிரின்ஸ் இளையவன் மற்றும் கரும்புலி கப்டன் வாமன் டொங்கான் வைத்திருந்த  இரட்ணம் எனப் பல போராளிகள் வேலி ஓரத்தோடு சண்டைக்குத் தயாராக நின்றோம்.

 அதில் நின்ற லெப் கேணல் குணேஸ் அவர்களிடம் சொர்ணம் அண்ணை உள்ளே துப்பாக்கிச் சத்தங்கள்  கேட்டால் அல்லது   எனது தொடர்வு இல்லாமல் விட்டால்  உள்ளே இருப்பவர்களை சரண்டர் அடையச் சொல்லிக் கேளுங்கோ அதை ஏற்று சரண்டர் அடைபவர்களை பாதுகாப்பாக வெளியே எடுங்கோ! அதை ஏற்காதவர்களிற்கு நடவடிக்கை எடுங்கோ! லோவால் அடித்து வீட்டை தரை மட்டமாக்குங்கோ எங்களிற்கு அண்ணைதான் முக்கியம் என்று சொல்லி விட்டுச் சொர்ணம் அண்ணை உள்ளே சென்றார்.  அவரோடு போராளி கோணேஸ் மற்றும் றிச்சாட் போராளிளான ஜெயாப் பூரிப் ஜெயநந்தன் தளபதிகளான பால்ராஜ்   பொட்டு என15ற்கு மேற்பட்ட போராளிகள் உள்ளே  சென்றார்கள்.

அவர்கள்உள்ளே போய்க்கொண்டிருக்க LMG யை சேம்பறில் ஏற்றி விட்டு லெப் கேணல் குணேஸ் அழ  வெளிக்கிட்டான். இதைப்பார்த்த இரட்ணம் அப்படி ஒன்றும் நடக்காது. கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி குணேஸ் அவர்களை அமைதிப்படுத்தினான். இவர்கள் உள்ளே சென்றதும் மாத்தையா அண்ணையிடம் சொர்ணம்  அண்ணை வரட்டாம் என்று சொல்ல எவ்விதமான எதிர்பும் இன்றி வெளிக்கிட்டுக்கொண்டு வாகனத்தில் ஏறினார். அவர் தனியாக ஒரு வாகனத்திலும் அவரின் மனைவி பிள்ளைகள் வேறு ஒரு வாகனத்திலும் ஏற்றிக்கொண்டு பொட்டுஅம்மான் கண் முடி விழிப்பதற்கு இடையில் தனது வேலையைத் திறமையாக முடித்து விட்டு வெளியே சென்று விட்டார்.




 ஆனால் இது நடந்தது இரவு 2 மணி இதையடுத்து தளபதி சொர்ணம் அண்ணை நித்திரையில் கிடந்த அனைத்துப் போராளிகளையும் தட்டி எழுப்பி அவர்களிடம் இருந்த ஆயுதம் குப்பி தகடுகளை வேண்டினார். சொர்ணம் அண்ணையிடம் . ஒரு சில போராளிகள் ஏன் என்று கேட்க....

 சொர்ணம் அண்ணை உங்களின் ஆயுதங்களை மற்றும் குப்பிகளைக் களட்டித் தாங்கோ என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் பாதுகாப்பிற்கு நிக்கின்றோம். ஏன் ஆயுதத்தைத் தர வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சொர்ணம் அண்ணை உங்களிற்கு யார் தலைவர் என்று கேட்டார்.  அவர்கள் பிரபாகரன் என்று பதில் அளித்தார்கள். அவர் சொன்னால் நீங்கள் செய்வீர்களா? அல்லதுசெய்ய மாட்டீர்களா என்று கேட்டார். செய்வம் எனப் பதில் அளிக்கின்றார்கள்.


அதையடுத்து சொர்ணம் அண்ணை அவர்தான் உங்களின் ஆயுதங்களை வேண்டச்சொன்னவர் என்று அவர்களிற்குத் தெரியப்படுத்த அவர்கள் அனைவரும்  தங்களின் ஆயுதங்களைக் களட்டிக்கொடுக்கின்றார்கள். அதைத்தொடர்ந்து அனைவரின் ஆயுதங்களும் வேண்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து சமையல் கூடம் தொடக்கம் அனைத்து இடங்களும் சோதனை இடப்பட்டு அனைத்து ஆயுதங்களும் அனைத்து விவரங்களும் எடுக்கப்ப்பட்டது.


தளபதி சொர்ணம் அண்ணையின் வெற்றிகர நடவடிக்கையால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மாத்தையா அண்ணை உட்பட அவரின் பாதுகாப்பிற்கு நின்ற அனைத்துப் போராளிகளையும் கைது செய்து பொட்டு அம்மானிடம் ஒப்படைத்தோம். 


பக்கத்து வீட்டில் ஒரு நாய் கூட குலைக்காமல் அயலில் உள்ள மக்களிற்குத் தெரியாமல் மிகவும் இரகசிமாக அமைதியாக இந்நடவடிக்கை செய்து முடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து எடுத்த இரண்டு M 2  னோத்திறி PK மற்றும் டொங்கான் கைத் துப்பாக்கிகள் T 56 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு வெற்றிக்களிப்புடன் எங்களின் ரெட்டி முகாமிற்குச் சென்றடைந்தோம்.

 ஒரு பெரிய தலைவலி இலகுவாக முடிந்தது.மாத்தையா அண்ணையை பிடித்து அடுத்த நாள் தளபதி கடாபி தலைமையில் போராளி மோகன் செல்லக்கிளி நசிர் கதிரொளி நான் முத்துஐயன் தலைவரின் வாகன றைவராகத்  தளபதி கடாபி அண்ணை வாகனத்தை ஓட்டிச்செல்ல அதற்கு உள்ளே  செல்லக்கிளி மற்றும் மோகன் இருவரும் இருந்தார்கள். அதை விட தலைவரின் மனைவி மதிவதனியும் அவரின் இரு பிள்ளைகளும் அதற்குள் இருந்தார்கள். அப்பொழுது நாங்கள் எல்லோரும்  வடமராச்சியில் உள்ள நவண்டில் முகாமிற்குச் சென்று கொண்டிருந்தோம்.  இரண்டாவது வாகனத்தை போராளி நசிர் ஓட்டிச் செல்ல வாகனத்ற்குள் 50 பது கலிபர் உள்ளே இருக்க அதன் கண்ணர் கதிரோளி உதவியாளர் முத்துஐயன் மற்றும் மினி மினி LMG யோடு நான் அங்கே சென்றுகொண்டிருந்தோம்.


75 ற்கு மேற்பட்ட பாதுகாவலர்களை விட்டுத் தலைவர் தன்னம் தனியாக ஒரு சிலரை மட்டும் தன்னோடு கொண்டு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தலைவருக்கு. மாத்தையா அண்ணை என்ற ஒரு தனி மனிதனால் ஏற்பட்டது என்பதை எவராலும் மறந்து விடமுடியாது.

 அது வடமராச்சி நவண்டிலில்  இருந்தது . உயர்ந்த பனைமரமும் பெரிய மாமரங்களுமாக அழகான முகாமாக அது இருந்தது.நான் முத்துஐயன் கதிரோளி நசிர் 4 பேரும் அனைவருக்குமான சமையலில் வேலைகளையும் செய்துகொண்டு காவல் கடமைகளிலும் ஈடுபட்டோம். அடுத்த மூவருமான கடாபி அண்ணை செல்லக்கிளி மற்றும் மோகன் இவர்கள் மாறி மாறி தலைவரின்பாதுகாப்புக் கடமையில்  ஈடுபட்டார்கள். இருவாரங்கள் எங்களுடைய காலம் அங்கே சென்றது.

 இது இப்படி இருக்கத் தளபதி சொர்ணம் அண்ணை மற்றும் போராளி நிரூபன் இருவரும் ரெட்டி அல்லது 9.5 தலைவரின் பாதுகாப்பு முகாம் உட்பட பாதுகாவலர்கள் நின்ற பயிற்சி முகாம்ககள் அனைத்துக்கும் சென்று மாத்தையா அண்ணையின் உளவாளிகள் என்று சந்தேப்பட்டவர்களான அனைவரையும் கைது செய்து தளபதி பொட்டு அம்மானிடம் ஒப்படைத்து விட்டனர்.

சொர்ணம் அண்ணையால் பிடிக்கப்பட்டவர்களின் விபரம் தலைவரின் வாகன ஓட்டுனர் போராளி சின்னமணி தலைவரின் மருத்துவப் போராளி தோமஸ்  தலைவரின் பிரதான தொலைத் தொடர்பாளர்கள் போராளி நரையன் மற்றும் முருகன் ரெட்டி 9.5 முகாம் பொறுப்பாளர் சதீஸ்சன். பொறுப்பாளர் சுசிலன் பொறுப்பாளர் செங்கமலம். தளபதி ஜெயம் போராளி லோறன்ஸ்.போராளி சந்தோஸ் இவர்கள் அனைவரையும் பிடித்து சொர்ணம் அண்ணை பொட்டு அம்மானிடம் கொடுத்து விட்டார்.இது இப்படி இருக்க பாதுகாப்பிற்கு நல்ல போராளிகளை இனம் கண்டு கணிசமான போராளிகளை உள்ளே  எடுத்து அவ்வெற்றிடங்களை நிரப்பினார் தளபதி சொர்ணம்.

 அண்ணைக்காக புதிதாக வந்தவர்களான போராளிகளான டெல்சன் டொமினிக் சண் சிவசங்கர் எனப் பல போராளிகள் உள்ளே வந்தார்கள்.அதனால் பாதுகாப்புக்  கடமைக்கான ஆள் பற்றாக்குறையும் தீர்ந்து விட்டது.


இது இப்படிஇருக்க 1989 ஆம் ஆண்டு தொடக்கம் தளபதி மாத்தையா அவர்களிற்கும் இந்தியாவினுடைய புலனாய்வுத் துறையான "றோ" அமைப்பிற்கும் இருந்து வந்த இரகசியத் தொடர்பு 10/08//1993 முற்றாகத் தூண்டிக்கப்பட்டது. காரணம் மாத்தையா அண்ணையின் அனுதாபிகள் அனைவரும் பிடிக்கப் பட்ட காரணத்தால் இப்பிரச்சனை ஏற்பட்டது.


இது இந்தியாவினுடைய புலனாய்வுத்துறைக்கு பெரிய தலையிடியாக மாறியது. எப்படியாவது இதை அறிய வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையில் இறங்கியது றோ. அக்காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் பிரச்சனையில் பிடிபட்ட நிறையப் போராளிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதில் தேசியத்தலைவரோடு நெருக்கமாகப் பழகக்கூடிய யாழ் வடமராச்சி கிழக்கு வெற்றிலைக்கேணி தாளையடியைச் சேர்ந்த கிருபன் என்பவரும் அந்த ஜெயிலில் இருந்தார்.

ஜெயிலிற்குச் சென்று நேரடியாக கிருபனைச் சந்தித்த புலனாய்வுத் துறையினர். விசாரணைக்கு என்று சொல்லி இரண்டு கிழமை தொடர்ச்சியாக கிருபனை வெளியே கொண்டு சென்றார்கள். ஆனால் அவரோடு இருந்தவர்களிற்குக் கூட ஏன் அவரை மட்டும் தனியாகக் கொண்டு போகின்றார்கள் என்பது தெரியாமலும் கடுமையான இரகசியமாக றோ இதைச்செய்தது.


அங்கே கிருபனைக் கொண்டுபோன றோவினர் 20 வயது மதிக்கத்தக்க இந்திய விபச்சாரிகளைக் கொண்டு கிருபன் தங்கும் அறையில் விட்டனர். கிருபன் அந்தப் பெண்ணோடு செய்த ஆண்பெண் உறவுகளை அறையில் பொருத்தப்பட்ட கமரா படம் எடுத்துக் கொண்டிருந்தது. இது தான் அங்கே நடந்தது.


ஆனால் கிருபன் ஒருபுது அனுபவத்தை தான் கண்டதாக மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த நாள் கிருபன்மீது றோ அதிகாரிகள் ஒரு சிலரால் விசாரணை தொடங்கியது. முதலில் கிருபன் செய்த தவறான வீடியோக்களை அவரிடம் காட்டினார்கள். பின்னர் இந்த வீடியோவை நாங்கள் இணையத்தில் போட்டால் பிரபாகரன் கண்டிப்பாக உங்களிற்கு மரண தண்டனை வழங்குவார். அதனால் நாங்கள் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்று கிருபனிடம் சம்மதம் கேட்கப்பட்டது.


அதை ஏற்காவிட்டால் கிருபனிற்கும் வேறு வழியில்லை கிருபனும் அவர்கள் சொன்னதிற்குச் சம்மதித்தான். உன்னை நாங்கள் ஜெயிலில் இருந்து தப்பிச் செல்வதற்கான வழிகளை உருவாக்குவோம். நீ அங்கே சென்று வே.பிரபாகரனிற்கு நல்ல பிள்ளை போல் நடித்து பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் கொலை செய்ய வேண்டும்.

 அதை அடுத்து ஜெயிலில் இருக்கும் மாத்தையாவை வெளியே எடுத்து அவர் விடுதலை புலிகளின் தலைவராகவும் நீ உதவித் தலைவராகவும் இருக்க வேண்டும். சிறிது காலம் கழித்து நீ மாத்தையாவையும் கொலை செய்து விட்டு நீயே தலைவராகயிரு உமக்கு விரும்பிய ஒருத்தரை இரண்டாவது தலைவராக இருப்பார்.நீ போய் மாத்தையா இருக்கும் இடத்தை அறிய வேண்டும்.

 இது முடியாவிட்டால் இரண்டாவது மாத்தையாவை கடத்தி இந்தியா அல்லது இலங்கை இராணுவத்திடம்  பாதுகாப்பாகக்கொண்டு செல்ல வேண்டும். அல்லது மாத்தையாவைக் கொலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மாத்தையாவால் முளைச்சலவை செய்து பிரபாகரனை கொலை செய்வதற்கு மாற்றப்பட்ட 40 முகவர்களையும் பாதுகாக்க முடியும். அப்படி பாதுகாத்தால் தொடர்ந்து நடவடிக்கையை செய்வது இலகுவாகயிருக்கும் என்று கிருபனிற்கு றோவால் சொல்லப் பட்டது.


இலங்கை அரசிக்கும் உங்களிற்கும் சண்டை வராது அதை இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று கிருபனிற்கு உறுதி அளிக்கப்பட்டது.அடுத்து ஆரம்பம் ஆனது வேலை இந்தியாவின் புலனாய்வுத் துறையால் கைத்துப்பாக்கிகள்  கிருபனிற்கு வழங்கப்பட்டது. வேலூர் சிறைச் சாலையில் இருந்து என்னொரு சிறைச்சாலைக்கு மாற்றுவது போல் திட்டம் போடப்படும். ஆனால் நீ இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் காவல் துறையைச் சுட்டுவிட்டு நீர் மட்டும் தப்பி ஓட வேண்டும் என "றோ"வால் சொல்லப்பட்டது.

இவ்வாறு முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அங்கே செல்லும் போது வழமையாகக் கடையில் சாப்பிட்டு விட்டுத்தான் மீண்டும் ஜெயிலிற்கு வருவது வழமை. அங்கு சென்று அக்கடையில் கிருபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மறைத்து வைத்திருக்கும் பிஸ்ரோலை இடுப்பில் இருந்து எடுத்து பொஸிசை சுடுவதிற்கான சந்தர்ப்பம் கிருபனிற்குக் கிடைக்க வில்லை. மூன்று தடவை "றோ" சந்தர்ப்பம் கொடுத்தும் கிருபன் அக்காரியத்தைச் செய்யவில்லை. சில நேரம் தமிழர்கள் என்ற அனுதாபம் கிருபனிற்கு இருக்கலாம் என "றோ" நினைத்தது.

இரண்டு தமிழ் பொஸிசார் அவருக்குப் பாதுகாப்பாக நின்றார்கள். திடீரென காரில் வந்து இறங்கிய இந்தியாவின்ற அதிகாரிகள் இரண்டு பொஸிசையும் சுட்டு வீழ்தினார்கள். இதை எதிர்பார்த்த கிருபன் அவ்விடத்தில் இருந்து சத்தவெடி ஒன்றை வைத்து விட்டுத் தப்பி ஓடினான். அங்கே சென்ற கிருபன் தமிழ்நாட்டில் வாழ்ந்த எமது உறுப்பினார்களான போராளி ஜீவா, போராளி,சாள்ஸ், போராளி கவில் இவர்கள் மூவரிடமும் தானே பொஸிசைச் சுட்டதாகப் பச்சைப் பொய்யைச் சொன்னான். அவர்கள் நம்பவில்லை. துப்பாக்கி பெரலை மணந்து பார்க்கச்சொல்லி அவர்களை நம்ப வைத்தான்.


அவர்களும் நம்பினார்கள். இத்தகவல் விடுதலைப் புலிகளிற்குப் பறந்தது, இதை அறிந்த தலைவர் உடனே தமிழீழம் அனுப்புமாறு தலைவர் இந்தியாவில் நிக்கும் போராளிக்குத்தலைவரால் தகவல் அனுப்பப்பட்டது. உடனே விடுதலைப் புலிகளின் ஒழுங்குபடுத்தலில் மேற்குறிப்பிட்ட 3 போராளிகளுடன் கிருபனுடன் 4 பேருமாகக்கோடியாக்கரையில் இருந்து தமிழீழம் வந்து சேர்ந்தார்கள்.


 அவர்கள் திட்டமிட்டது போல் வேலூரிலிருந்து மாற்றும் போது இரண்டு பொஸிசாரை கிருபன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். எனவும் கொன்றுவிட்டுத் தப்பி ஓடியதாக பாரிய வதந்தி இந்திய ஊடகங்களில் "றோ"வால்பரப்பப் பட்டது. 

அதைத்தமிழக மக்கள் நம்பியதோடு மட்டும் அல்லாமல் இரண்டு தமிழ் பொலிசாரையும் சுட்டு விட்டுச் சென்று விட்டார்களே! என்று விடுதலைப்புலிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.

ஆனால் புத்திசாலித்தனமாக செய்து விட்டு நல்லபிள்ளைபோல் நடித்தது இந்தியாவினுடைய புலனாய்வுத்துறை.இது இப்படி இருக்க இவர்கள் நாலு பேரும் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்தார்கள் யாழ்பாணம். இவர்கள் வந்ததை அறிந்தே தேசியத்தலைவர் கடுமையான மகிழ்ச்சி அடைந்தார்.

 தனது பாதுகாவலர்களை அனுப்பித் தனது முகாமிற்கு அழைத்து வாழ்த்துத் தெரிவித்ததோடு மட்டுமின்றி முத்தம் கொடுத்து வரவேற்றார். முதலாவதாக ப் பளையில் உள்ள சுவாஸ் தோட்டத்திற்குத்தான் கிருபனைக் கொண்டு வந்தார்கள். கிருபனைப் பார்த்த தலைவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தது மட்டும் அல்லாமல் உடனே கிருபனிற்குக் கைத்துப்பாக்கியால் சூட்டுப் பயிற்சியும் வழங்கினார்.

 அதையடுத்து யாழ்கொக்குவிலில் இருக்கும் ரெட்டி அல்லது 9.5 முகாமிற்குத் தலைவர் அவரையும் கூட்டிக்கொண்டு சென்றார். அங்கே சென்றதும் சொர்ணம் அண்ணையின் வீட்டில் கிருபன் தங்கினார்.


அடுத்த நாள் காலை என்னைக்கூப்பிட்டு சொர்ணம் அண்ணை  கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளி தொட்டியை நிறப்பி கிருபனைக் குளிப்பாட்டுமாறு என்னிடம் தெரியப் படுத்தினார். நான் அவர் சொன்னது போல் கிருபனைக் குளிப்பாட்டினேன். அதைத்தொடர்ந்து செங்கமலம் வைத்து இருந்த2ப் போர் வாகனத்தை கிருபனிக்குக் கொடுத்து உல்லாசமாக இடங்களைச் சுற்றி பார்த்துக்கொண்டு திரியுமாறு தலைவரால் அனுமதி வழங்கப்பட்டது.


அதை விட கிருபனிற்கு புது கைத்துப்பாக்கிகளையும் கொடுத்து வெளிநாடுகளிற்குக்கதைக்கும் நவீன தொலைத் தொடர்வுக்கருவி மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் லெப் கேணல் மகேந்தி கப்டன்ஆதவன் இருவரும் கிருபனின் பாதுகாப்பிற்காக  விடப் பட்டார்கள்.

அனைத்தையும் கிருபனிற்குக் கொடுத்த தலைவர் கிருபனிற்குக் கொடுத்த கடமையை நினைத்தால் கவலைதான் வரும். ஆனால் நம்பிக்கைத் துரோகம் என்பது இப்படியான வரலாறுகளை படிப்பதின்னூடாக எம்மால் அறிய முடியும். கள்ளனைப் பிடித்து பொலிஸ்வேலை கொடுத்த கதையாகத்தான் அது இருந்தது. மாத்தையா செய்த தவறுகளைத் தலைவர் வெளிப்படையாக கிருபனிடம் சொன்னார். நீர் மாத்தையாவை அடிக்கடி சந்தித்து "றோ"வினுடைய திட்டங்களை அறிந்து என்னிடம் சொல் என்று தலைவர் கிருபனிடம் சொன்னார். அது கிருபனிற்கு றோவிற்கு தகவல் கொடுக்க பெரும் வசதியாகயிருந்தது. கிருபன் மாத்தையா அவர்களைச் சந்திப்பதற்கு பூரண அனுமதி தலைவரால் வழங்கப்பட்டது. 

 மாத்தையா அவர்களை கிருபன் அடிக்கடி சந்தித்தார். ஆனால் மேலே றெக்கோட் கமறா பொருத்தப் பட்டிருந்தது. அது அனைத்து விடையங்களையும் பதியும் என்பதைக் கிருபன் அறிந்தானோ இல்லையோ என்பது தெரியாது. கிருபன் மாத்தையா அண்ணையின் அறைக்குள் சென்றதும் முதலில் சுகம் விசாரிப்பதுபோல் கதைப்பான். அதையடுத்து ஒரு மாததிற்குள் இருவரையும் போட்டுவிடுவேன் அதற்குப் பின்னர் நீங்கள் வெளியே வரலாம் என்று சொல்லி விட்டு வெளியே போவான். காவலர்களைக் கண்டதும் இவனிடம் ஒன்றும் எடுக்க முடியாது என்று மாத்தையா அண்ணைக்குக் கடுமையாகப் பேசிவிட்டுச் செல்வான்.


கமறாவை சோதனையிட்ட போது இந்த வசனம் தொடர்ச்சியாகப் பாவித்து இருக்கின்றார். அந்த இருவர் யார் என்று பார்ப்போமானால் ஒன்று பொட்டுஅம்மான் அடுத்தது தலைவர் இது தான் அதனுடையே உண்மையான கருத்தாகயிருந்தது.


இது இப்படி இருக்க இஞ்ஜினியர் என்ற போராளி இவர் ஒரு கால் இல்லாதவர். கால் வருத்தம்தொடர்பாக அடிக்கடி இந்தியா போய்வருவது ஆனால் இவரை இலங்கை இராணுவம் பிடிப்பதோ விசாரிப்பதோ கிடையாது. ஆனால் இது தலைவருக்குத் தெரியாது மாத்தையா அவர்களிற்கும் இஞ்சினியருக்கும் தான் இந்த இரகசியம் தெரியும். மாத்தையா கொடுக்கும் தகவல்களை றோவிற்குக்கொடுப்பதும் "றோ" கொடுக்கும் தகவலை மாத்தையாவிற்குக்கொடுப்பதும் இதுதான் இவரின் தரகர் வேலையாகயிருந்தது. ஆனால் பொது மக்களிற்கு தான் இயக்கத்தில் இருந்து விலகியதாகச் சொல்வது. ஆனால் மாத்தையாவின் முக்கிய விசுவாசியாக இவர் இருந்தார்.

 சந்தேகத்தின் அடிப்படையில்இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். இவரை விசாரித்த போது கிருபனின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாகத் தெரியவந்தது. இந்தியா புலனாய்வுத்துறையினரின் பொஸிசாரைக் கொன்றகதை ஏன் கிருபன் அனுப்பப் பட்டார். நான் என்னத்திற்காக இந்தியா போய் வந்தேன் எனப் பல உண்மைகள் வெளிவந்தன. இதன் ஊடாக அனைத்து விடயமும் விடுதலைப்புலிகள் இஞ்ஜீனியர் இடமிருந்து அறிந்து கொண்டார்கள். இதையடுத்து.........

சித்திரவதையுடன் கூடுதலான விசாரணை மாத்தையா மீது நடந்தது. எதையும் ஒழிக்க முடியாத நிலை ஏற்பட்டமையால் 4 மணித்தியால றெக்கோட் ஊடாக அவர் சொல்லும் அனைத்து உண்மைகளும் பதியப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டது. முதலில் அது தலைவருக்கு காண்பிக்கப்பட்டது. அடுத்து தலைவரின் அனுமதியுடன் அனைத்து போராளிகளிற்கும் காண்பிக்கப்பட்டது.

கிருபன் உட்பட இலை மாறை காயாக இருந்த மாத்தையா அவர்களின் ஆட்கள் அல்லது இந்தியாவின் புலனாய்வு முகவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

ஆனால் இதில் எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடாத நல்ல போராளிகளும் இருந்தார்கள். உளவாளிகளும் இருந்தார்கள். அது தான் ஒரு கவலையான விடையமாக இருந்தது. இதில் கடுமையான சித்திரவதை செய்து உண்மையான உளவாளிகளை இனங்கான வேண்டிய துர்பாக்கிய நிலை விடுதலைப் புலிகளிற்கு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளால் மரணதண்டனை வழங்கப் பட்டவர்களின் விபரம் மகேந்திரராஜா மாத்தையா விடுதலை புலிகளின் தற்காலியப் பிரதித்தலைவர்01  அவரின் முக்கிய விசுவாசிகளான சுரேஸ் மற்றும் இஞ்ஜினியர் 03   தலைவரின் பாதுகாப்பு அணியில் இருந்து திரு மாத்தையா அவர்களால் மனம் மாற்றி எடுக்கப்பட்டவர்களான தளபதி சுசிலன்04 தளபதி செங்கமலம் 05 தலைவரின் வாகனறைவர் சின்னமணி06  தலைவரின் வெளிநாட்டுத் தொலைத் தொடர்பாளர் முருகன் 07 ரெட்டி முகாம் பொறுப்பாளர் சதீசன்08 இந்தியாவில் இருந்து இரண்டு பொஸிசை சுட்டுப்போட்டு றோவினால் அனுப்பப்பட்ட கிருபன்09  எனப் பத்து பேரிற்கு மரணதண்டனை என அழைக்கப்படும் அதிகூடிய தண்டனையாக சாவொறுப்பு வழங்கப்பட்டது.

 மற்றும் வேறு மாவட்டங்களில் கடமையாற்றிய சில போராளிகளிற்கும் சாவொறுப்பு வழங்கப்பட்டது. அது தொடர்பான விபரம் எமக்குக் கிடைக்கவில்லை. 


விசாரணைகள் முடிந்து குற்ற மற்றவர்கள் என விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட்டு நீங்கள் போராளிகளோடு இணைந்து நீங்கள் முதல் செய்த கடமைகளைச் செய்யலாம் என்று அமைப்பின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானால் அனுமதி வழங்கப் பட்டதோடு அந்தத் துன்பியல் சம்பவத்திற்கு முகம்கொடுத்த அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்கள் விடுதலைப்புலிகள்.


அதில் விசாரணை முடித்து வந்த சில போராளிகளை நான் நேரடியாகக் கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தளபதி ஜெயம் தளபதி  லோறன்ஞ் தளபதி மகேந்தி இவர்களில் பிரிகேடியர் ஜெயம் அண்ணை சொன்னவை.  ஒரு குடும்பத்தில் ஒருதர் தவறு செய்வது வழமை ஆனால் தவறு செய்யாமல் என்னைத் தண்டித்து விட்டார்கள். இருந்தும் எமது குடும்பத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பதே எனது குறிகோல் என்று பதில் அளித்தார்.




அடுத்து தளபதி லோறன்ஞ் அண்ணை அவர்களை தளபதி சொர்ணம் அண்ணை விசாரணை முடிந்து சாவகச்சேரியில் உள்ள பயிற்சி முகாமிற்குக் கொண்டுவந்து போராளிகளோடு இணைத்து பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர் கோழ்க்கொமாண்டோமற்றும் கைத்துப்பாக்கிகள் அவருக்கு வழங்கப்பட்டது. அதை லோறன்ஞ் அண்ணை வேண்டாம் என்று மறுத்ததோடு நான் சண்டையிட்டு அதை எதிரியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

இப்படி பல போராளிகள் மனம் உடைந்து காணப் பட்டார்கள்.  மாத்தையாவின் ஆட்கள் தலைவருக்கு செய்வதற்கு திட்டமிட்ட துரோகங்கள்  மற்றும் இவர்களை மாத்தையா எப்படி மாற்றினார் என்பதைக் குறிப்பிடுகின்றேன். ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களோடு உறவு கொள்ளக்கூடிய அச்சந்தர்ப்பத்தை உருவாக்குதல் பின் அதைக் கண்காணித்து அவர்களை மிரட்டி மனம் மாற்றுதல். இப்படித் தான் மாத்தையா அவர்களின் செயல்பாடு இருந்தது.

01 சதீசன் திருமலைமாட்டம் முன்னர் தலைவரின் மனைவியின் பாதுகாப்புப் பொறுப்பாக இருந்தவர். பின்னர் ரெட்டி முகாம் பொறுப்பாளராக இருந்தவர்.இவரின் பணி  தலைவரின் மனைவிக்கு மயக்கமருந்து அடித்து இந்தியாவிற்கு கடத்திச் செல்வது.

02 தளபதி செங்கமலம் யாழ் மாவட்டம்.

மான், மரையிறச்சி வத்தல் மற்றும் தேன் என்பன வழமையாக வன்னியில் இருந்து எடுத்துகொண்டு வந்து தலைவருக்குக் கொடுப்பவர். இதை அறிந்த மாத்தையா அவரிக்குக் கொடுத்த கடமை. சந்தேகம் வராதவாறு ஒரு மாதம் கழித்து சாகக்கூடிய மருந்தை தேன் அல்லது இறைச்சிக்குள் கலந்து கொடுக்குமாறு மாத்தையா சொல்லியுள்ளார்.

இதை இவர் நேரடியாக மாத்தையாவிடம் மறுத்துள்ளார். ஆனால் இதைத் தலைவருக்கு தெரியப் படுத்தவில்லை.


03 தளபதி சுசிலன் யாழ்கரவெட்டி   இவர் வாகனங்களைக் கையாளக்கூடிய மற்றும் வெடி மருந்துகளைப் பற்றிய கூடுதல் அனுபவம் உள்ளவர். பூனகரியில் எடுத்த T 56 டாங்கியை இவரே ஓட்டி வந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மாத்தையாகொடுத்த கடமை நேரக்கணிப்பு வெடிமருந்து செய்து சின்னமணியிடம் கொடுக்குமாறும் அதை சின்னமணி தலைவரின் வாகனத்திற்குள் வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இதை இவர் தலைவருக்குத் தெரிவிக்கவில்லை.


04 சின்னமணி தாளையடி யாழ்,  இவரிக்கு மாத்தையாவால் கொடுக்கப் பட்ட கடமை. கொடிகாமத்தில் மாவீரர் திறப்புவிழா தூபி ஒன்று திறந்து வைக்க ஏற்பாடு நடந்துகொண்டியிருந்தது. அவ் தூபி திறப்பு விழாவிற்குத் தலைவர் போவதாகத் திட்டம் இருந்தது.இவர் மாத்தையா குறிப்பிட்ட இடத்தில் தலைவரின் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனம் பழுது என்று சொல்லி விட்டு இவர் பின்னால் செல்வார்.


இவர் பின்னால் சென்றதும் மாத்தையாவின் ஆட்கள் மறைப்பில் இருந்து தலைவரின் வாகனத்தை நோக்கி சரமாரியாகச் சுடுவார்கள். அவ்வேளை தலைவர் செத்து விடுவார் சின்னமணி தப்பி விடுவார். அதே வேளை இச்சம்பவம் யாழில் நடக்கும் வேளை மாத்தையா அவர்கள் வன்னியில் நிப்பதாகவும் இப்பிரச்சனை தொடர்பாக மாத்தையாவிற்கு ஏதுவும் தெரியாது என்று போராளிகள் நம்பக் கூடியவாறு அவர்களின் திட்டம் இருந்தது.

 இரண்டு நாட்களிற்கு முன்னர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிவில் உடையில் ஆயுதங்களோடு ஒரு சிலர் நடமாடியதை அவதானித்த புலனாய்வுத்துறையினர் இதை அம்மானிற்கு தெரியப்படுத்தி இதை அம்மான் தலைவருக்குச் சொல்லி தலைவரின் வருகையைத் தடுத்ததோடு அன்று நடக்கவிருந்த சம்பவத்தில் இருந்து தலைவரை பொட்டுஅம்மான் பாதுகாத்தார். பின்னர் இந்தத் தூபியைத் தளபதி கருணா அவர்கள் திறந்து வைத்தார்.

05 முருகன் இவர் தலைவரின் வெளிநாட்டுத் தொலைத் தொடர்பாளர்.  சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் கிட்டு அண்ணை தமிழீழம் வரப்போகின்றார் என்ற தகவலை தொலைத் தொடர்வு ஊடாக மாத்தையா அண்ணைக்குத் தெரியப்படுத்தி அதை மாத்தையா அவர்கள் இந்தியாவின் "றோ"விற்குத் தெரியப்படுத்தி கிட்டண்ணை அவர்களின் கப்பலை இந்தியக் கடற்படை முற்றுகையிட்டு சரண்டர் அடையுமாறு கேட்டது. அவர் அதை மறுத்து தலைவரின் அனுமதியுடன் இயக்க மரபிற்கு ஏற்ப கப்பலைத் தகர்த்து அனைத்து தோழர்களுடன் தனது உயிரை அர்ப்பணித்தார்.

06 சுரேஸ் மாத்தையா அண்ணையின் பாதுகாப்புப் பொறுப்பாளர். தலைவரைக் கொலை செய்வதற்கு பல திட்டங்கள் தீட்டியவர்  இவரே. அதை விட வன்னியில் உள்ள மண்ணாங் கண்டலிற்கு இந்தியாவின் ஹெலிக் கொப்டரை எடுத்து அதில் மாத்தையா அவர்களை பாதுகாப்பாக இந்தியா அனுப்பத் திட்டம் இட்டவர். இவர்கள் அனைவரிடமும் சரியான முறையில் விசாரித்து அவர்களின் வாயால் தங்களின் தவறுகளை ஏற்ற பின்னர் எமது இயக்கத்தில் இருந்த அனைத்துப் போராளிகளிடமும் இவர்கள் செய்த தவறை அனைத்தையும்  சொல்வதற்கான ஏற்பாட்டை விடுதலைப் புலிகள் செய்தனர். 

அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் சட்டத்திற்கு அமைவாக துரோகத்திற்கு வழிகாட்டியான முக்கிய பொறுப்பு வகுத்தவர்களிற்கு மட்டும் சாவொறுப்பு வழங்கப்பட்டது. ஏனையவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.




15/10/1993 அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த போராளி வீரவேங்கை கணேஸ்-அ.ஆனந்தராசா 3ம் வட்டாரம் மட்டக்களப்பு பிறப்பு 26/01/1972 வீரச்சாவு 15/10/1993  



தலைவரின் பாதுகாப்பு அணியில் இருந்த இவன் மிகச் சுறு சுறுப்பான வீரனாகக் காணப்பட்டான். 

ஆனால் கடுமையான தலைவலி. ஒவ்ருவொரு நாளும் சித்தாலேபை போன்ற மருந்துகளை கன்னத்தில் பூசிப் பூசி கன்னம் பெரிதாக வீங்கிக் காணப்பட்டது.

அதை தாங்கிக்கொள்ள முடியாத கணேஸ் தலைவருக்கு 10த்திற்கு மேற்பட்ட கடிதம் எழுதினான். அதாவது கூடுதலான காலம் போராட்டத்தில் என்னால் இருக்க முடியாது. ஏனெனில் கடுமையான தலைவலி எனக்கு இருப்பதால் அதைத்தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

எனவே என்னை கரும்புலிக்கு அனுப்புமாறும் எனது கடமையைத் திறமையாகச்செய்து எனது போராட்ட வாழ்கையை நிறைவு செய்யத் தான் விரும்புவதாக குறிப்பிட்டிருந்தான். தலைவரோ இவன் வேலை காணமல்தான் இப்படிச் சிந்திக்கிறான் என எண்ணி அவனின் வேலையை அதிகரிக்க ஆரம்பித்தார்.

தலைவரைப் பொறுத்தவரை எவரையும் இலகுவில் இழக்க விரும்பமாட்டார். அது அவருடையே இரக்கக் குணத்தைக் காட்டியது. அனைத்துப் போராளிகளும் கரும்புலியாகப் போவது என்றால் தலைவரிக்குப் பல கடிதங்கள் எழுதி இறுதியில் கடுமையாக முரண்பட்டுக் கொண்டே போவது வழமையாகயிருந்தது. அதைத்தான் கணேஸ் அவர்களும் செய்து பார்த்தார். அது வெற்றி அளிக்கவில்லை.

 முன்னர் அவன் எமது ரெட்டி முகாம் தொலைத் தொடர்பாளனாகக் கடமையாற்றினான். தொடர்ந்து தலைவரின் கட்டளைக்கு அமைவாக,  லெப் கேணல் குட்டிச்சிறி அண்ணையிடம் சொல்லி ஒரு லட்சம் பெறுமதியான மரத்தாலான மேல்மாடிகீழ்மாடிக்கூடுகள் செய்து கொடுக்கப்பட்டது,


 அதற்குத் தலைவரின் அனுமதியுடன் வீரவேங்கை கணேஸ் அவர்களையே பொறுப்பாக  விட்டார் குட்டிசிறி அண்ணை.மேல் தட்டில்வாண்கோழிகளும் கீழ் தட்டில்   முயல் மற்றும் மரை மான்  வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்குப் பொறுப்பாளராகவும் இராண்டாவது முகாம் தொலைத்தொடர்பாளர்களாகவும் வீரவேங்கை கணேஸ் நியமிக்கப் பட்டான். ஆனால் நியமித்த சிறிது காலத்தில் கிட்டு அண்ணையை வெளியில் இருந்துகொண்டுவர குட்டிச்சிறி அண்ணை வெளிநாடு சென்று விட்டார். இனி எவரிடமும் தனது பிரச்சனையைச் சொல்ல முடியாது கணேஸ் கடுமையாகக் கவலை அடைந்தான்.


 ஆனால் சிறிது நேரம் கூட அவனால் சிந்திக்கக் கூடநேரம் இல்லாமல் இருந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு சாவகச்சேரியில் உள்ள எமது படையணி மருத்துவ முகாமான  2.3 மருத்துவமனைகுச் சென்ற  கணேஸ் இறுதியாகத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்புமிக்க தலைவர் அவர்கட்கு நான் பல தடவை கரும்புலியாகச் செல்வதற்கு கடிதம் எழுதினேன். ஆனால் நீங்கள் எதிர்மறையாக எனது கடமைகளைக் கூட்டியவாறு இருந்தீர்கள். அதுஉங்களின் இளகிய மனதைக் காட்டுகின்றது. நான் அதை அறிவேன்  ஆனால் நீங்கள் என்னை விடவில்லையானால் அதே காலத்தில் பல போராளிகளிற்கு சந்தர்ப்பம் வழங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது நான் இறுதி முடிவிற்கு வந்துவிட்டேன்.  

 தற்பொழுது நான் குப்பி கடித்துச் சாவடைகின்றேன் மாவீரர் பட்டியலில் இணைப்பதும் இணைக்காமல் விடுவதும் உங்களின் கடமையென நினைக்கின்றேன். புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் இப்படிக்குக் கணேஸ்.எனக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டுஅவர் சாவகச்சேரி மருத்துவ மனையில் குப்பி கடித்துச் சாவடைந்தார். அக்கடிதம் சொர்ணம் அண்ணையூடாக தலைவருக்குச்சென்றது .கடிதத்தைப் பார்த்ததும் தலைவர் வீரவேங்கை என நிலை வழங்கி மாவீரர் பட்டியயிலில் இணைக்குமாறு கட்டளை வழங்கினார், 


தொடர்ந்து அவனின் வித்துடலை படையணி நிர்வாகப் பொறுப்பாக இருந்த போராளி அசோக் அண்ணை மிகச் சிறப்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதியாக கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அவனின் வித்துடல் அடக்கம் செய்யப்பட்டது. தேசியத் தலைவரைப் பொறுத்தவரை தனது நடவடிக்கையால் போராளிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது போராளிகள் இறுதியாகச் செல்லும் போது அவர்களால் இதை செய்யுங்கோ அண்ணை எனத் தலைவருக்காகக் கொடுக்கப்பட்ட கடமைகள் இவற்றை நிறை வேற்றுவதில் தலைவர் மிக பொறுப்புணர்வோடு செயல்ப்படுவார்.


கணேசின் சாவைத் தொடர்ந்து தலைவரின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. கூடுதலான போராளிகளின் கரும்புலியில் இணைவதற்கான கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தோடு அவர்களிற்கான பிரத்தியோகமான பயிற்சி முகாம்களும் அமைக்கப்பட்டு பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  கணேசின் வீரச்சாவிற்குப் பின்னர் பல போராளிகளிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


 31/10/1993 அன்று எமது படையணியில் இழக்கக் கூடாத ஒரு போராளியை இழந்தோம்.



மாமா தலைவரின் பாதுகாப்புப் போராளிகளில் மிகவும் ஒரு நம்பிக்கையான போராளி மாமா RPG யோடு சண்டைக்கு வந்தால் நெஞ்சை நிமித்திக் கொண்டு போவார்கள் போராளிகள். ஏன் என்றால் மாமாவின் RPG தாக்குதல் குறிதவறிய வரலாறே இல்லை, அப்படி மிகவும் துல்லியமாகச் சுடக்கூடியவன்தான் மாமா .எந்த நேரமும் கலகலப்பான சிரிப்பு. மாமா இருந்தால் பெரிய பாட்டுக் கச்சேரியே நடக்கும். அப்படிப் போராளிகளை மகிழ்ச்சியாக வைத்து இருப்பவன் தான் மாமா.


 அன்றைய நாள் பளையில் இருந்த எமது முகாமான 7.3 என அழைக்கப்படும் சுபாஸ் தோட்டத்தில் கப்டன்  மாமா கப்டன் யாதவன் என்னும் ஒருபோராளி முகாம் முன் வாசல் கொட்டிலுக்குள் இருந்துள்ளனர், அன்றைய நாள் தலைவர் தளபதி சொர்ணம் மற்றும் குறிப்பிட்ட போராளிகளுடன் சாவகச்சேரிக்குச் சென்று விட்டார்கள். அதனால்இவர்கள் மூவருக்கும் காவல் கடமையும் இல்லை காலை உடல் பயிற்சியும் இல்லை. அதனால் காலை எழுந்தவுடன் தேனீருக்குப் பதிலாக இளநீர் பிடுங்கிக் குடித்துள்ளனர்.பின் ஓய்வாகயிருந்து RPG தொடர்பாகக் கதைத்துள்ளனர். அதில் யாதவன் சொல்லியுள்ளார் RPR க்கோழ்சறை மதிலுக்கு மேலே வைக்காத சில வேளைகீழே விழுந்தாலும் வெடித்துவிடும் என சொல்லியுள்ளார், அதற்கு மாமா செல் முன் பகுதியில் பாதுகாப்புக் கிளிப் போடப்பட்டுள்ளது அதை அகற்றினால் தான் வெடிக்கும் எனச் சொல்லியுள்ளார். அதற்கு கப்டன் யாதவன் எதற்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொல்லியுள்ளார்.


 அதைப்பொய் என நிருபிக்க வேண்டுமென முடிவெடுத்து மாமா திடீரென தனது RPG செல்லை கையில் எடுத்து அதன் முன் பகுதியை தனது வயிற்றில் இடித்துள்ளார். பாரிய சத்தத்துடன் செல் வெடித்து மாமாவும், யாதவனும் அவ்விடத்திலே உடல் சிதறி பலியானர்கள்.  கடுமையான காயத்துடன் ஒரு போராளி உயிர் தப்பினான். தேவையில்லாத போட்டியால் வந்த வினை இரு திறமையான போராளிகளை நாம் இழந்தோம்.




11/11/1993 பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப் புயல்கள்........

 
                                         

1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள்.

பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்

புதிய சரிதம் எழுதி…

இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..!

” கரும்புலிகள் ” மூலம் உருவாக்கப்பட்ட இத்தந்திரோபாயம் பூநகரி சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுவாக்கியது.பூனகரி முகாம் தாக்கும்போது பலாலியில்இருந்து விமானம் மற்றும் ஆட்லறிதாக்குதல் வரக்கூடாது என்பதற்காவே இத்தாக்குதலை நடத்த வேண்டியதேவை தலைவருக்கு ஏற்பட்டது, அதற்கு அமைவாக புதிதாகக் கரும்புலிகள் தேர்ந்து


 எடுக்கப்பட்டார்கள்,பூநகரி சண்டை ஆரம்பித்தவுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட கரும்புலிகள் பலாலி விமான தளத்தில் உள்ளே சென்று விமானங்களையும் தகர்த்து அங்கே இருக்கும் ஆட்ளறிகளையும்தகர்க்கவேண்டும் என்பதே தலைவரின் திட்டமாகயிருந்தது , அது திட்டமிட்டாப்போல்வெற்றியாக நடந்தால் பூனகரிப் படையனருக்கு இவர்களால் உதவ முடியாமல் போகும், அப்படி நடந்தால் பூனகரியைபிடிப்பது எமக்கு இலகுவாகயிருக்கும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது,இந்நடவடிக்கைக்கு மேஜர் தொண்டமான்பொறுப்பாககச் சென்றார்,

 இவரின் சங்கீதப்பெயர் கந்தையா என்பது ஆகும்


 இதற்கான கட்டளைக் கொமாண்டர் பிரிகேடியர் கடாடி இவரின்சங்கீதப் பெயர் கரிகாகாளன் என்பது ஆகும், இக்கரும்புலிகளிற்குக்கொடுக்கப்பட்ட கடமை, பூனகரிச் சண்டை ஆரம்பித்தவுடன் பலாலி விமான நிலையத்தில் இறங்கி விமானம் மீதும் ஆட்ளறி மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே ஆகும்,

 திட்டமிட்டாப்போல் இவர்கள் 15 பேரும் பயிற்சி வளங்கப்பட்டு  இவர்களிற்கான ஆயுதங்களும் வழங்கப்பட்டது பின்னர் ஆயுதங்கள் தண்ணீர் உள்ளே போகாதவாறு பாரிசல் பண்ணப்பட்டது, அடுத்து இவர்களை அனைவரையும் பிரிகேடியர் கடாபி அவர்கள் ஏற்றிக்கொண்டுபரித்தித்துறைக் கடல்கரையில் விட்டார், இரவு பத்துமணி இவர்கள் 15 பேரும் கடலில் இறங்கி தொடர் கைத்தைப்பிடித்துக்கொண்டு நீந்தத் தொடங்கினார்கள்,

 ஆனால் கடல் அடி கூடுதலாக அடிக்க ஆரம்பித்தது, அதனால் தொடர்கைத்தை வெட்டி ஒரு அணி இரண்டாப்பிரிந்து சென்று கொண்டுயிருந்தது,

கடலில் சென்றுகொண்டுடிருந்த வேளை இரு அணிகளிற்கும் இடைவெளி கனத்துவிட்டது அதனால் இரண்டு அணிகளிற்கும் ஆன தொடர்பு தூண்டிக்கப்பட்டது, அதனால் கடலில்வைத்தே

 ஒரு அணியை ஒரு அணி தேடினதால் இவர்கட்டுகொடுக்கப்பட்ட நேரம் வந்து விட்டது.

 அதனால் முதலில் சென்ற அனி தரைக்குச்சென்று பலாலிக்குள் நுளைந்தது ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் இறங்கிவிட்டார்கள், தங்களின் ஆயுதங்களை வெளியே எடுப்பதற்கான மறைவிடத்தை தேடிச்செல்கின்றார்கள், தொடர்ந்து அடுத்த அணியும் தரைக்குவந்துவிட்டது ஆனால் அவர்களும் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் தான் இறங்கினார்கள்,


ஆனால் இவர்கள் சென்ற இடப்பகுதியில் கடல்கரைபக்கத்தில் பாரிய வேலி போடப்பட்டு இருந்தது அதனால் வேலிக்கு மேலால் ஏறிகுதிக்கும் போது எதிரி கண்டு விட்டான் அதனால் சண்டை தொடங்கிவிட்டது, அவ்விடத்திலே இரு போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள்,ஏனையவர் உள்ளே சென்று விட்டார்கள், ஆனால் முதல் சென்ற அணியும் இவர்களோடு இணைந்துவிட்டது, இவர்கள் உள்ளே நுளைந்ததை அறிந்த இராணுவம் விமானத்தளம் மற்றும் ஆட்ளறி தளத்தைப்பலப்படுத்திவிட்டது, அதைவிட இராணும்இவர்களையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்து, இரு பகுதிக்கும் கடும் சண்டை நடந்துகொண்டுயிருந்தது.

பல இராவத்தினர் கொல்லப்பட்டனர், இது இப்படி இருக்க பூனகரிபடைத்தளம்மீதும் விடுதலைப்புலிகள் சண்டைடையை ஆரம்பித்து அது முன்னேற்றமாக நடந்துகொண்டுயிருந்தது, அதனால் பூனகரிப்படைக்கு உதவுவதா அல்லது தங்களைப்பாதுகாப்பதா? என்ற குழப்பமான நிலைக்கு பலாலி இராணுவம் தள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் 13 கரும்புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள், மூன்று போராளிகள் தடையை உடைத்துக்கொண்டு தப்பிவந்தார்கள்,

பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்


இக் கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் தேசப்புயல்களாய் வீசினர்.


கரும்புலி மேஜர் கலையழகன்


கரும்புலி மேஜர் தொண்டமான்


கரும்புலி கப்டன் சிவலோகன்


கரும்புலி கப்டன் கரிகாலன்


கரும்புலி கப்டன் சீராளன்


கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி


கரும்புலி கப்டன் மதிநிலவன்


கரும்புலி கப்டன் ஐயனார்


கரும்புலி லெப் நல்லதம்பி


கரும்புலி லெப் கண்ணன்


கரும்புலி லெப் ஜீவரஞ்சன்


கரும்புலி லெப் செங்கண்ணன்


கரும்புலி லெப் வீரமணி


11/11/1993கரும்புலிகளை அங்கே அனுப்பிவிட்டு பூனகரித்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது,

இது இப்படி நடக்க பூனகரி முகாம் மீது எமது தாக்குதல் அணிகள் வெற்றிகரமாகமுன்னேறிக்கொண்டுயிருந்தனர்,    தலைவரின்திட்டமிடலிற்கு அமைவாக  பூனகரிச் சண்டை அதாவது தவளைப்பாய்ச்சல்நடந்துகொண்டுயிருந்தது ,


அதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காக தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது.


ஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.!

எங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்த தாக்குதல்.!


இந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில்ஏராளம். 

அந்தத் திதை திருப்பத்தின் ஒரு பக்கம்தான் அடுத்த நடவடிக்கை அடுத்து பாரிய தாக்குதல் ஒன்றுக்காகத் தங்களைத் தயார்ப்படுத்தினார்கள்.விடுதலைப் புலிகள் அதற்காக ஒரு வருடமாக தளபதி சொர்ணம் தலைமையில் வேவு நடவடிக்கை நடந்துகொண்டுயிருந்தது. அவ்வேவு நடவடிக்கையூடக எடுக்கப்பட்டதகவலைவைத்து அதற்கான மாதிரிப்பயிற்சிகளும் நடந்துகொண்டுயிருந்தது,

.11/11/1993 பூனகரி சண்டை ஆரம்பம் ஆனது

வராலாற்று புகழ் மிக்க தவளைப்பாய்ச்சல் பூனகரிச்சண்டைக்காக புறப்படுகின்றது இம்ரான் பாண்டியன் படையணி இப்படையணியானது அனைத்து மாவட்டப் போராளிகளும் இணைக்கப்பட்ட தலைவரின் நேரடி பார்வையில் உள்ள மிகவும் பலம் பொருத்திய படை யணியாகும்,

தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவரை பாதுகாப்பதும் இப்படையயின் கடமையாக இருந்தது ஆரம்பத்தில் கரும்புலி மரவர்கள் உருவாகியதும் இப்படையணியில் இருந்து தான். இப்படையணிக்குக் கட்டளை அதிகாரியாக தளபதி சொர்ணம் அவர்கள் இருந்தார்.

இப்படையணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் இருந்தார்கள். அப்பொழுது தளபதி கொர்ணம் அவர்களின் ஏற்பாட்டில் தளபதி கெங்கா தலைமையில் 170 போராளிகள் பூனகரிச் சண்டைக்காகத்தயார்படுத்தப்பட்டார்கள். அதற்கு உதவித் தலைவராக போராளி ரஞ்சித் அவர்கள் நியமணிக்கப்பட்டார். அதில் அணித் தலைவர்களாக 45 போராளிகளிற்கு போராளி வேல்ராஜ் அடுத்து 45 போராளிகளிற்கு போராளி தீபன் அடுத்து 45 போராளிகளிற்கு மையுறன் அத்துடன் மேலதிகமாக உந்துகணை செலுத்தும்ரீம் ஆர் பீச்சி ரீம்அவர்களின் பலத்தை மெருகூட்டுவதற்காக இணைக்கப்பட்டது.

இவர்களிற்கு வளங்கப்பட்ட பணி யாழ் மணியன் தோட்டம் கடல் கரையால் நகர்ந்து பூனகரிக்கேம்பிற்கு முன்னால் இருக்கும் மினி முகாமை தாக்கி அழித்து இரண்டு கிலோ மீற்றர் உள்ளே நகர வேண்டும். இது தான் இவர்களின் கடமையாகயிருந்தது. சண்டை தொடங்கியதும் தளபதி சொர்ணம் மற்றும் பொட்டுஅம்மானின் கட்டளைகளால் வோக்கி அலறிக்கொண்டுயிருந்தது. திட்டம் இட்டாப்போல் படையணிகள் மினி முகாமை அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள் கப்டன் தீபன் உட்பட 9 போராளிகள் அன்று நடந்த சண்டையில்.வீரச்சாவு அடைந்தார்கள்.

இப்பகுதிச் சண்டைக்கான கட்டளை அதிகாரியாக தளபதி பொட்டுஅம்மான் தளபதி சொர்ணம் இருவரும்   மாறி மாறிக் கட்டளை வளங்கினார்கள். மூன்றாவது நாள் சண்டையில் போராளி ரஞ்சீத் உட்பட பல போராளிகள் காயம் அடைந்ததினால் பின் தளத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சண்டை பல முனைகளில் நடைபெற்றது தளபதி வால்ராஜ் தலைமையிலும் மற்றும் கடல் பகுதிகளைக் கண்காணித்து தளபதி சூசை தலைமையிலும் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் முதல் நாள் வீரச்சாவு அடைந்த லெப் கேணல் அன்பு அவர்களின் செயல்பாடும் அவரின் போராளிகளின் உழைப்பும் மிக முக்கியமானதாக்கக்கருதப்பட்டது.

தேசியத் தலைவர் அவர்களால் ஒவ்வொரு படையணிகளுக்கும் ஒவ்வொரு பகுதி என்ற அடிப்படையில் வேலைப்பங்கீடுகள் சிறந்த முறையில் வளங்கப்பட்டுயிருந்தது. அவ்வகையில் சண்டை தொடங்கிய சிறிது நேரத்தில் தெயந்தன் படையணிப்போராளிகள் நாகதேவன் துறையை தங்களின் பூரணகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவந்தார்கள். அதையடுத்து பூனகரி மெயன் பகுதி பிடிபட்டது. அதைத் தக்க வைப்பதற்காக மகளீர்ப்படைபணியிடம் வளங்கப்பட்டது.

ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கிளிய பண்ணி பின் தளத்திற்கு அனுப்புவது பற்றி அவர்கள்சிந்திக்கவில்லை. கள நிலவரம் நிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டுயிருந்தது  . கடும் பலத்துடன் மீண்டும் எதிரி அப்பகுதிதைக் கைப்பற்றினான் மீண்டும் எதிரிகள் பார்த்த போதுஅவர்கள் முன்னர் சேமித்து வைத்த ஆயுதங்கள் அப்படியே இருந்தது.

அது அவனிற்கு பெரும் மகிழ்ச்சியாகயிருந்தது  பின்னர் அவ் ஆயுங்களை அவன் விடுதலைப்புலிகளிற்கு எதிராக பயன்படுத்தினான். தொடர்ந்து 3ன்று நாட்கள் கடுமையான சண்டை நடைபெற்றது. இரண்டு  T 56 சுத்த டாங்கிகள் பெரும் தொகையான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது.


மெயின் பகுதி மட்டும் பிடிபடாமல் இருந்தது. அதை தலைமை தாங்கி நின்ற இராணுவப்படை அதிகாரி சுற்றி வர வாகன ரயர்களைப் போட்டு எரித்து விட்டு இதைச் சுற்றி விமானத்தாக்குதல் நடத்துமாறு  தங்களின் விமானப்படையிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இதைக்கேட்டுக் கொண்டு இருந்த தலைவர் விடிந்தால் நிலைமை மோசமாகும் என்பதை விளங்கிக்கொண்டார். தேவையில்லாத இழப்பு ஏற்படலாம். அதனால் விடிவதற்கு முன்னர் பிடிக்கப் பாருங்கோ இல்லையெனில் பின்னால் நகர்ந்து பாதுகாப்பான இடங்களில் போராளிகளை நிலையெடுத்து  இருக்குமாறு தலைவர் கட்டளை வழங்கினார்.


தலைவர் சொன்னது போல் பகல் கடுமையான விமானத்தாக்குதல் நடந்தது தளபதி சொர்ணம் அவர்களை இலக்கு வைத்து விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென அவரின் பாதுகாப்புப் போராளிகள் அவருக்கு மேலே படுத்து அவரைப் பாதுகாத்தார்கள், அதில் ஒரு போராளி அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தான் அடுத்த போராளி படுகாயம் அடைந்தான். தளபதி சொர்ணம் அவர்களின் கையில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் பாதுகாக்கப்பட்டார்.


அடுத்த நாள் மெயினில் இருந்த இராணும் பின்வாங்கி ஓடிவிட்டது. பூநகரி முழுமையாக எமது கட்டுப்பாட்டில் வந்தது. சுமார் 320 போராளிகள் இப்படை முகாமை தாக்குவதற்காக தங்களின் உயிரை அர்பணித்தார்கள்.

 லெப். கேணல் குணா அவர்களின் பங்களிப்பும் இப்படை முகாம் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

 பூநகரிச்சண்டை முடிந்தவுடன் பாரிய ஒரு நம்பிக்கைத் துரோகம் இயக்கத்தில் நடந்தது.





mmo படைத்துறைக் கட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்து.

அதின் முக்கிய கடமை இராணுவ முகாம் பற்றிய வரைபடம் உருவாக்குதல் மற்றும் அதற்கான மாதிரிப் பயிற்சிகளைப் போராளிகற்கு வழங்குதல் ஆகும்,


அதன் பிரதான பொறுப்பாளராக தினேஸ் மாஸ்ட்டர் இருந்தார், அவரின் அறிக்கையாளராகவும் மிகவும் நம்பிக்கையானவராகவும் போராளி உப்பிளாமணி இருந்தார், அவருக்கு இயக்கத்தின் பலம் பலயீனம் அனைத்தும் தெரிந்த ஒரு நபராகவும், இயக்கத்திடம் இருக்கும் ஆயுத ஆளணி அனைத்து விபரமும் இவரிடம் இருந்தது.


இவர் ஒரு நம்பிக்கையான ஒரு போராளி போல் தன்னைக் காட்டியது மட்டும் இன்றி 200 கண்றட் மோட்டார் சைக்கிள் இஞ்சினில் ஒரு கெலிக்கொப்டர் செய்து 300 மீற்றர் உயரப்பறந்து காட்டியவர். இவரின் தாய் தமிழ் தகப்பன் சிங்களம் தகப்பன் வழியூடாக சிங்களப் புலநாய்வாளர்கள் இவருக்கு ஆசையைக் காட்டி தங்களிற்குச் சார்பாக மாற்றியுள்ளனர்.


 திடீரென ஒரு நாள் இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவரின் மோட்டார் சைக்கிளில் அளவெட்டி சூனியப்பிரதேம் சென்று அங்கே மோட்டார் சைக்கிளை ஒருமரத்திற்குக்  கீழே விட்டுவிட்டு  நடையில் சென்று இராணுவத்திடம் போய்விட்டார். இவர் போனவுடன் கப்டன் நிலை இவருக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டது.


அத்தோடு விடுதலைப் புலிகளின் பலயீனம்பற்றி இராணுவச் சிப்பாய்களிற்கு வகுப்பு எடுத்தார். அவர் வகுப்பு எடுக்கும் போது ஒரு இராணுவச் சிப்பாய் விடுதலைப் புலிகளிடம் ராங்கி எதிர்ப்பு ஆயுதம் உள்ளதா எனக் கேட்டுள்ளார்? அதற்கு உப்பிளாமணி அவர்கள் ஒரு RPG அதற்கு 3 செல்கொண்டுவருவார்கள் அதில் இரண்டு துருப்புக்களிற்கு அடிக்கும்  "செல்"லும் ஒன்று ராங்கிக்கு அடிக்கும் "செல்"லும் அவர்களிடம் இருக்கும் மொத்தமாக மூன்று செல் இருக்கும்.  அதில் ஏதாவது ஒன்றை அடித்தால் இரண்டையும் கொண்டு பின்னால் ஓடி விடுவார்கள் என அவர்கட்டு விளக்கம் அளித்துள்ளார்.

அது மட்டும் அல்ல யாழ்பாணத்தைப் பிடிப்பதற்கு ஒரு பகுதிக்கு அவரே கொமாண்டராக வந்ததாக அவரோடு நின்ற இராணுவச் சிப்பாய்கள் எமக்குத் தெரிவித்தனர். யாழ்பாணத்தைப் பிடிப்பதற்கு இலங்கை இராணுவத்திற்கு உப்பிளாமணியின் பங்கு பெரிதாகயிருந்தது என்பதை இராணுவமே ஏற்றுக் கொண்டது. இப்படியான நம்பிக்கைத் துரோகங்களால் தான்விடுதலை போராட்டம் 31 வருடங்களைத் தாண்ட முடியாமல் உலக நாடுகளின் உதவியுடன் எதிரிகளால் அழிக்க முடிந்தது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


 13/11/1993அன்று காந்தரூபன் அறிவுச்சோலை   தலைவரால் உருவாக்கப்பட்டது....

https://ta.wikipedia.org/s/4c3x


யாழ்மாவட்டம் வலிகாமத்தில் கோப்பாய் பகுதியில் அவ்விடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே தளபதி சொர்ணம் தளபதி கடாபி தளபதி ஜெயம் என மூன்று பிரதான பாதுகாப்புப் பொறுப்பாளர்களுடன் தலைவர் மற்றும் நான் உட்பட கணிசமான பாதுகாப்புப் போராளிகள் அங்கே சென்று இருந்தோம். 


வெளியில் இருந்து பாலா அண்ணை அவரின் மனைவி அடல் .தளபதி தமிழ்செல்வன் என பலர் வந்து இருந்தார்கள். காந்தரூபன் அறிவுச்சோலை நாடாவை தலைவர் வெட்டித் திறந்து வைத்தார். சிறப்பு உரையை பாலா அண்ணை ஆற்றினார்.


மதிப்பிற்கு உரிய எதிர்காலத் தலைவர்களே!

நீங்கள் படித்து எதிர்காலத்தில் புத்திஜீவிகளாகவும், தளபதிகளாகவும், வரவேண்டும். முன்னர் ஒரு காலத்தில் தமிழ்செல்வனையும் உங்களைப்போன்ற ஒரு பையனாகவே நான் பார்த்தேன். ஆனால் இப்பொழுது அவர்  ஒரு தளபதியாகயிருக்கின்றார். அது போன்று உங்களை இப்பொழுது நான் அதே தோற்றத்தில் பார்க்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு வேளை என்னால் பார்க முடியாமல் போகலாம், ஆனால் நீங்கள் வளர்ந்து எங்களின் மக்களிற்கு வளிகாட்டியாக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். எனக் கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.



அடுத்து தலைவர் உரையாற்றினார். அதில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 150 குழந்தைகள்  5 வயது தொடக்கம் 10 வயது வரையில் இருந்தனர்.

காந்தரூபன் அறிவுச்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ் நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த ஆண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக வேலுப்பிள்ளை பிரபாகரனின் பணிப்புரையின் பேரில் 1993 கார்த்திகை 13ஆம் நாள் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். 



காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட” கடற்கரும்புலி” மேஜர் காந்தரூபன்.


1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டமனாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரனில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறிய போது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால் அதிஷ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.


இருந்த போதும், சயனைட் விசம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.

காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசுவும் வந்து சேர்ந்தது.


தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.

அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.

ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.


“அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும்! “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.

” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியுறாங்கள். வாழ இடமில்லாமல், படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் என்டதை நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ!. 

அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.


அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிப் போயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம்.

 எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாகச் சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார்.

யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள்......


காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிறதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். 

‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.

கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்க வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுக்க வாங்கிக் குடித்தான்.


நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். “ இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான். கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான்.


“சரி தம்பி சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்…..


“சுகமாய் போவேன் பெரியம்மா  அதில பிரசினையில்லை ஆனா திரும்பி வாறதென்கிறது தான்..... சரிபார்ப்பம்  என்றான்.


அதற்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டார்.இவ்வில்லத்தில் 2005ஆம் ஆண்டு உருவாக்கில் 227 பிள்ளைகள் பராமரிப்பில் இருந்தனர்.


நான் ஒரு அனாதை,அப்பா அம்மா இல்லாத பிள்ளை.நான் பட்ட துன்பத்தை என் போன்ற பிள்ளைகள் படக் கூடாது. இது போன்ற பிள்ளைகளை எடுத்து வளர்க்க வேண்டுமெனக் கரும்புலி மேஜர் காந்தரூபன்  தலைவருக்குச் சொன்ன கடைசி ஆசை. அதனால் அந்தக் காந்தரூபன் பெயரிலேயே துவக்கப்பட்டது இந்தச் சிறுவர் இல்லம்.
பாகம் 4 ல்பகுதி 07 முடிவு


பாகம் 4 ல்பகுதி 08 ஆரம்பம்

10/05/1994 கடும் பதட்டமான நிலையில் இருந்த போதும் செல்லக்கிளி திருடனின் வேலையால் கடுமையாகப் பயந்த  தலைவர்.





அக்காலத்தில் அக்கடமையில் நின்ற போராளி குமணன் குறிப்பிடுகையில்........

இது இப்படி இருக்க மீண்டும் ஒரு பதட்டமான நிலை ஏற்பட்டது. இருந்தும் மாத்தையா அவர்களின் பிரச்சனையோடு அல்லது வேறு துரோகத்தனமான பிரச்சனைகளோடு இது சம்மந்தப்படவில்லை. இருந்தும் இதையும் தெளிவாகப்பார்ப்போம்.

1992 ஆம் காலப்பகுதியில் செல்லக்கிளி அவர்கள் சிறுத்தை பெண் போராளிகளிற்கு பயிற்ச்சி கொடுக்க விடப்பட்டார். அதில் பெண் போராளிகளிற்கு திறமையாகப் பயிற்சி வழங்கி  அவர்கள் அனைத்து பயிற்சிகளும் எடுப்பதற்கு அவர்களால் முடியும் என்பதை நிருபித்தார். செல்லக்கிளி ஆணிற்கு நிகராக அனைத்தும் அவர்களால் செய்ய முடியும். ஆனால் புவிஈர்ப்புத்தன்மை அவர்களிடம் கூடுதலாகக் காணப்படுவதால் அவர்கள் ஓடும் போது களைப்படைவதாகவும் சிறிது வேகம் குறைவதாகவும் செல்லக்கிளி தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார். 10/05/1994 


இவனின் திறமையைக்கண்ட தலைவர் பாதுகாப்பு பயிற்சிக்கு போராளிகளை எடுக்கும் போது செல்லக்கிளியும் அவ்வணியில்  இணைக்கப்பட்டான் . அக்காலத்தில் தலைவரின் பாதுகாப்புச் முறைகள் புதிப்பிக்கப்பட்டது. 3 பேர் கொண்ட ஒரு ஸ்குவாட்அதற்கு ஒரு தலைவர் அவருக்குக் கைத்துப்பாக்கி இருக்கும் இரண்டு பேருக்கு அவர் கட்டளை அதிகாரியாக  இருப்பார். அப்பபடி நாலு ஸ்க்குவாட்டிற்கு முதலாவது பொறுப்பாளராக தளபதி கடாபியும் இரண்டாவது பொறுப்பாளராக திரு செல்லகிளி அவர்களும் தலைவரால் நியமிக்கப் பட்டார்கள்.15/05 1994 இந்தப் பொறுப்புத்தான் செல்லக்கிளிக்கு ஆசை கூடுவதற்கான காரணமாக இருந்தது.


அக்காலப்பகுதியில் கொக்குவில் தாவடியில் தலைவரின் மனைவியின் முகாம் அமைந்திருந்தது. அடுத்துதலைவரின் முகாம் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்தது வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் தலைவர் அங்கே செல்வது வழமையாக இருந்தது. அப்பொழுது தலைவரின் வாகன ஓட்டுனராக போராளி அம்மா அவர்கள் இருந்தார். திட்டமிட்டாற் போல் ஞாயிற்றுக்கிழமை தலைவர் மதிவதனி அவரின் மனைவி வீட்டிலே தங்கினார்.


பாதுகாப்புச் சட்டத்தின்படி வாகன ஓட்டுனரான அம்மா அவர்கள் இரவு 9 பது மணிக்கு வாகனத்திறப்பை செல்லக்கிளியிடம் ஒப்படைத்தார். அத்திறப்பை  பெற்றுக்கொண்ட செல்லக்கிளி அவர்கள் வேகமாகச் செயல்படத் தொடங்கினார். லெப் கேணல் தேவன் இவர் அப்பொழுது றீசிவீங் அதாவது ஒட்டுக் கேட்கும் கருவி வைத்து இருந்தவர்.


(இவர்தான் லெப் கேணல் தேவன்)

அதுதான் அவரின் கடமையாக இருந்தது . இவர் தனது குப்பியை வீட்டுச் சுவரில் இருக்கும் ஒரு ஆணியில் குப்பியைக் கொழுவி வைப்பது வழமை இதைச் செல்லக்கிளி முதலில் அவதானித்து வைத்துள்ளான்.


உடனே போய் அந்தக் குப்பியை எடுத்துக் கொண்டுவந்து உடைத்து தூள் ஆக்கி தலைவர் குடிக்கும் தண்ணீர் கேனுக்குள் கலந்து வைத்துள்ளான். தலைவர் தண்ணீர் கேட்கப் பக்கத்தில் நிற்கும் மெய்ப்பாதுகாவலர் கிட்டு அவர்கள் தண்ணீர் செல்லக்கிளியிடம் கேட்டதும் செல்லக்கிளி கேனைத்திறந்து தண்ணீரைக் குடித்துள்ளான். பின்னர் வாந்தி எடுப்பது போல்தானே நடித்துள்ளான்.


பின்னர் குறிப்பிட்ட போராளிகள் கேனை முகர்த்து பார்த்த போது அதில் குப்பி மணந்துள்ளது. உடனே தகவல் தலைவருக்குச் சொல்லப்பட்டது. தலைவர் உடனே தளபதி சொர்ணம் மற்றும் தளபதி பொட்டு இருவரையும் உடனே வருமாறு அழைத்துள்ளார். தகவல் அறிந்ததும்  சொர்ணம் மற்றும் பொட்டு இருவரும் முகாம் வந்து சேர்ந்தனர்.


செல்லக்கிளி உடனே யாழ் பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டான். இரவு11 மணிக்கு தளபதி பொட்டு அவர்கள் எல்லோருடனும் கதைத்தார். தளபதி சொர்ணம் பக்கத்தில் இருக்க கதையை ஆரம்பித்தார். முதலில் அனைத்துப்போராளிகளின் குப்பிகள் அவர்களிடம் உள்ளனவா எனச் சோதனையிடப்பட்டது. இறுதியில் போராளி தேவனின் குப்பி இல்லையென உறுதிப் படுத்தப்பட்டது.தொடர்ந்து அனைத்துப் போராளிகளிற்கும் விசாரணை  ஆரம்பமானது. 


அந்த முகாம் வெறிச்சோடிக்  காணப்பட்டது. தலைவரின் கண்கள் சிவந்து இருந்தது. கைத்துப்பாக்கியில் இருந்து கை எடுக்காமல் கடுமையான அவதானத்துடன் தலைவர் காணப்பட்டார். தலைவரின்  மனைவி மதிவதனி அழுத வண்ணம் கண் சிவந்து காணப்பட்டார். அப்பொழுது போராளி கிட்டு அவர்கள் தான் தலைவரின் நெருங்கிய மெய்ப் பாதுகாப்பாளராக இருந்தார்.




11/05 1994 காலை 9 மணிற்கு பாண் கோட்டவில் ஒரு வெள்ளையரைச் சந்திப்பதற்கான ஏற்பாடாயிருந்தது. பதட்டமான சூழ்நிலையிலும் எந்தச் சந்திப்புக்களையும் தலைவர் நிறுத்தவில்லை. அது திட்டமிட்டாப் போல் நடந்தது. அந்த ஒன்றுகூடல் முடிந்ததும் மீண்டும் தலைவர் அதே முகாமிற்கு வந்தார். பிற்பகல் 3 மணிக்கு தளபதி பொட்டு அவர்கள் வந்து அனைத்துப் போராளிகளிற்கும் நடந்த பிரச்சனை பற்றி தெளிவுபடுத்தினார்.


பொட்டு அவர்கள் சொன்னது ஆரோ ஒருத்தர் தலைவரின் கேனுக்குள் குப்பியைக் கரைத்து விட்டார்கள். செல்லக்கிளி அதைக் குடித்து சோதனையிட்டபோது அவர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். தற்போது செல்லக்கிளி ஆஸ்பத்திரியில் உள்ளார். அது அவரிக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அது கொல்வதற்காக செய்யவில்லையென நான் நினைக்கின்றேன். சிலர் பகிடியாக செய்தார்களோ தெரியாது. ஆனால் நாங்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என சொல்லி விட்டு இதை உங்களில் ஒருதர் தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எங்களிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.எனச் சொல்லி அனைவருக்கும் விசாரணை ஆரம்பமானது.


24  மணித்தியாலம் உங்களின் செயல்பாட்டைச் சொல்ல வேண்டுமெனச் சொல்லி அனைத்தும் போராளிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இறுதியில் இதன் முக்கிய சூனியக்காரன் செல்லக்கிளி என்பதை தலைவரும் பொட்டு அம்மானும் அறிந்து கொண்டார்கள். செல்லக்கிளியின் நகவஞ்சகத்தை தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ எமக்குச் சொல்லவில்லை. அதனால் நானும் குறிப்பிட விரும்பவில்லை.


இருந்தும் தங்கமான தலைவர் என்ற காரணத்தால் எல்லாப் போராளிகளிலும் அளவிற்கு அதிகமான அன்பு தலைவர் வைத்திருந்தார். செல்லக்கிளியின் நரி குணத்தை அறிந்த தலைவர் செல்லக்கிளியின் பிரச்சனையை மாத்தையாவின் சதியோடு ஒப்பிட வேண்டாம்,  விசாரணை என்ற போர்வையில் செல்லக்கிளியின் உடம்பில் கைவைக்க வேண்டாம் எனப் பொட்டு அம்மானிடம் சொல்லியிருந்தார்.

தலைவர் சொன்னதிற்கு  இன்னும் ஒரு காரணம் இருந்தது. செல்லக்கிளியின் குடும்பத்தில் அவனும் அவனின் தம்பியும் இயக்கத்தில் இருந்தார்கள். அவனின் தம்பி ஆனையிறவுச் சண்டையில் வீரசாவு அடைந்தார். அந்த வீரனால்தான் செல்லக்கிளியின் உயிர் தப்பிக்கொண்டது. அவனின் தம்பியின் வீரச்சாவு விபரம்......

வீரவேங்கை அல்வின்.

சிவபாலன் கருணாகரன் ஆரையம்பதி, மட்டக்களப்பு


வீரப்பிறப்பு :26.09.1974.  வீரச்சாவு:21.07.1991யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்தி வரை முன்னகர்ந்திருந்த சிறிலங்கா படையினரின் சங்கிலித்தொடர் நிலைகள் மீது முள்ளியானில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலின்போது வீரச்சாவுஅடைந்தார்.

, அது போல் பொட்டு அம்மானும் செல்லக்கிளியை அடிக்காமல் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டார். அதை அடுத்து செல்லக்கிளி மற்றும் மாத்தையாவின் சதி தொடர்பாக எமது ரெட்டி முகாமில் வைத்து மூன்று தடவை பொட்டுஅம்மான் அவர்கள் அனைத்துப்  போராளிகளிற்கும் வகுப்பு எடுத்து போராளிகளை தெளிவுபடுத்தினார்.

செல்லக்கிளி அனைத்துப் பிரச்சனையையும் அவன் ஒத்துக் கொண்டான். தொடர்ந்து அப்பிரச்சனை முடிவிற்கு வந்து, செல்லக்கிளியை தலைவர் என்னன்று கையாண்டார் எனப் பார்ப்போம். 1996 வன்னிக்குச் சென்றதும், எமது படையணி விசுவமடு, புதுக்குடியிருப்பு முத்துஐயன்கட்டு என முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கிய  இடங்களிலே பாசறைகள்   அமைக்கப்பட்டது. அப்பொழுது விசுவமடு ரெட்பாணா பிரசத்தில் எமது படையணி மண்ணெண்ணெய்க் களஞ்சிம் இருந்தது.


அதற்குலெப் கேணல் SM அப்பா பொறுப்பாகயிருந்தார். தண்டனை என்று சொல்லாமல் கடமை என்ற போர்வையில் மண்ணெண்ணெய் அளந்து கொடுக்கும் வேலைக்கு பிரிகேடியர் கடாபி அவர்களால் செல்லக்கிளி விடப்பட்டார், தனது கடமையை வைத்தே செல்லக்கிளி உணர்ந்து கொண்டான். இனி எந்தக் காலத்திலும் தனக்கு ஒரு வளர்ச்சி  கிடைக்காது என்பதை அவன் புரிந்து கொண்டான்.


 உடனே தான் வீடு செல்லப்போவதாக தலைவருக்குக் கடிதம் எழுதினான்.  தலைவரும் உடனே அனுமதித்தார். சிறிது காலம் புதுக்குடியிருப்பில் அங்கே தேங்காய் எண்ணெய் வடிக்கும் மாடுகளை வைத்து செக்குப் பட்டறை போட்டு இருந்தான்.  செல்லக்கிளி பின்னர் அங்கிருந்து களவாக வவுனியா சென்றான். அங்கிருந்து இங்கிலாந்திற்குப் பயணமானான்  செல்லக்கிளி.

இதுதொடர்பாகக் செல்லக்கிளி என்னிடம் குறிப்பிட்டது இதுதான்,  தம்பி தலைவரின்பாதுகாப்பு மிகவும் பலயீனமாக இருந்தது. அதனால் நான் பாரிய உயிர் ஆபத்தான வேலையைச் செய்து அவர்களை விழிப்படைய செய்துள்ளேன். இனி தலைவரின் பாதுகாப்பு பலமாகயிருக்கும் என நான் நினைக்கின்றேன். ஆனால் எனது வாழ்க்கை பாழடைந்து போய்விட்டது. இனிமேல் எனக்குப் போராட்டத்தில் எந்த வளர்ச்சியும் இருக்காது ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்  படவில்லையென எனக்குத் தெரியப்படுத்தினார்.

என்ன நோக்த்திற்காக  இந்தக் கொடுமையான வேலையை செய்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். பொட்டு அம்மானும் அவரின் நோக்கம் பற்றி போராளிகளிற்குச் சொல்லவில்லை. ஆனால்போராளிகள் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அது பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை.

 இப் புத்தகம் எழுதும்போது செல்லக்கிளி உயிரோடிருந்துள்ளார்.  செல்லக்கிளியின் தவறான நடத்தையால் தலைவரின் பாதுகாப்பு தற்காலிய வாகன ஓட்டுனராகயிருந்த அம்மா உட்பட சில போராளிகள் வெளியேற்றப் பட்டார்கள். அதனால் ஆளணிப் பிரச்சனை பெரிய பிரச்சனையாகயிருந்தது.






1994 காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டு இருந்த காலம். அது தலைவரின் வாகன ஓட்டுனரில்  இருந்து பெரும்பாலான போராளிகள் வெளியேற்றப்பட்டு அதற்குப் பதிலாக புதிய போராளிகள் உள்வாங்கப்பட்டார்கள்.

,அப்பொழுது நானும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குத்தான் பழைய போராளிகள் இருந்தோம். ஆனால் அவர்கட்டு அனுபவம் குறைவாகவே இருந்தது. தற்காலிகமாக அப்பொழுது சொர்ணம் அண்ணை வன்னிக்குச் சென்று கிறிஸ்தோபறின் வாகன ஓட்டியான போராளி சிவசங்கர் அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து தலைவரின் வாகன ஓட்டுனராகவிட்டிருந்தார். அன்றில் இருந்து தலைவரின் வாகன ஒட்டுனராக போராளி சிவசங்கர் இருந்தார்.

அப்பொழுது ஒரு சந்திப்பிற்காக நாகர் கோயிலிக்குப் போகவேண்டிய தேவை தலைவருக்கு ஏற்பட்டது. அதனால் போராளி சிவசங்கர் தலைவரின் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றான். இரண்டாவது வாகனத்திற்கான ஒட்டுனராக போராளி தீபன் அல்லது அவரின் பட்டப்பெயர் (எமட்டேசன்-1 ) என்பதாகும். இவர் புதிதாக வாகனம் பழகிக்கொண்டிருந்த வேளை அவசரத் தேவைக்காக உள்ளே எடுக்கப்பட்டவர் அதனால் வாகனத்தைப் பற்றி அனுபவம் இல்லாதவர்.

 அப்பொழுது இரண்டாவது வாகனத்தை போராளி தீபன் ஓட்டிச் செல்ல அவருக்குப் பக்கதில் ஐம்பதுகலிபர் கண்ணர் போராளி கதிரொளி இருக்கின்றார். ஐம்பது கலிபர் வாகனத்திற்குள் கழட்டப்பட்ட நிலையில் இருக்கின்றது, நான் எனது றைபுள் ஆன மினி மினி LMG யோடு உள்ளே இருக்கின்றேன். எனக்குப் பக்கதில் ஐம்பது கலிபர் உதவியாளர் முத்து ஐயன் இருக்கின்றார் .

எமது முகாமான நந்தாவில் அம்மன் கோயில் அருகாமையில் இருந்த ரெட்டி முகாமில் இருந்து வல்வை வளியூடாக கடற்புலிகளின் முகாம் ஒன்றிக்குச் சென்று கொண்டிருக்கின்றோம்,....

அது கரும்புலி கப்டன் வாமன் நாளாயினி அவர்களை தலைவர் சந்தித்து கடைசி உணவு அருந்தி அவர்களோடு நின்று படம் எடுத்து அவர்களை வழி அனுப்பி வைப்பதற்காகவே தலைவர் சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற தலைவரின் வாகனம் மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஏனனில் அவர் புதியவர் என்ற காரணத்தால் பின்னால் வரும் வாகனத்தை கவனித்து ஓடும் அளவிற்கு அவருக்கு அனுபவம் இல்லை. அவரின் பெயர் சிவசங்கர்.


இரண்டாவது வாகனம் நூறு மீற்றறில் இருந்து இருநூறு மீற்றறில் செல்ல வேண்டும். ஆனால் இது அதையும் விட கூடுதலான இடைவெளி கனத்துவிட்டது. இதை அவதானித்த கதிரொளி இது என்ன 80 கிலோ மீற்றர் வேகத்தில்தான் வாகனம் செல்லுது வேகமாக ஓட்டி முதலாவது வாகனத்திற்குக்  கிட்டப்போ எனச் சத்தமாகக் கட்டளை வழங்கினான்.

 அதுதான் கடைசி என நினைக்கின்றேன். வாகனம் ஒரு பக்க வேலியை உரசிக்கொண்டு போனது. பின்னர் அடுத்த கரையை உரசிக் கொண்டுபோனது. அடுத்து நடு றோட்டில் மூன்று தடவை வாகனம் வெல்ட்டி அடித்துக் குடை சாஞ்சது, வாகனம் கண்ணாடியிலிருந்து அனைத்துமாக எமது நிசான் பிக்காப் தேசம் அடைந்தது. தீபனின் உடம்பில் தோல் ஒன்றும் இல்லை. இறைச்சிபோல் காணப்பட்டான். தீபன் மட்டும் கடுமையான காயம் அடைந்தான். ஏனைய மூவரும் மயிரிழையில் உயிர் தப்பினோம்.  இது கண் மூடி முழிப்பதற்குக்குள் நடந்தது. 


தனது உயிரை நேசிக்கும் எந்தத் தலைவனும் போன பாதையால் திரும்பி வர மாட்டார்கள். ஆனால் எமது தலைவர் எந்தக் காலத்திலும் தனது உயிரைப் பொருட்படுத்தியது கிடையாது.  இரண்டாவது வாகனத்தை காணவில்லையென நினைத்த தலைவர் திரும்பி வந்து அவரின் வாகனம் எங்களின் வாகனத்திற்குக்  பக்கதில் நின்றது.

 பொது மக்களும் ஒரு சிலர் வந்தமையால் அவர் வாகனத்தில் இருந்து வெளியே வரவில்லை. உள்ளே இருந்து எங்களின் வாகனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்,  பின்னர் எஸ்சோ அண்ணையும் அவ்விடத்திற்கு  வந்துவிட்டார்.

பின்னார் நாங்கள் கதிரொளி வாகனத்தை ஓட்டி மந்திகைக்குச் சென்று தீபனை அங்கே இறக்கி விட்டு நாங்கள் ரெட்டி முகாமிற்குச்  சென்றோம், நாங்கள் 300 மீற்றர் வரும் வரை தலைவர் எங்களின் வாகனத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.  அடுத்து திட்டமிட்டாப்போல் தலைவர்  அந்த ஒன்று கூடலிற்குச் சென்றார்.




அங்கே சென்ற தலைவர் வாமன் நளாயினி ஆட்களோடு உணவு அருந்தி விட்டு வாமனை தனியாக் கூப்பிட்டு கதைத்தபோது, உனது பாட்ணர் நிமலேஸ்வரனையும் கூட்டிக் கொண்டுதான் வந்தன். ஆனால்வாகனம் இடையில் பிரண்டு அவர்களை மந்திகைக்கு அனுப்பி விட்டேன் என தலைவர் வாமனிடம் சொல்லியுள்ளார். வாமன் தொலைத் தொடர்பில் கதைக்கும்போது இவ்விடயத்தை எனக்குத் தெரியப் படுத்தினான். அப்படி ஏன் வாமனுக்கு மட்டும் தெரியப்படுத்தினார் என்பதை கீழே விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

 23/05/1994 ஆம் ஆண்டு தமிழீழ வைப்பகம் முதலாவதா யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.


 இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம்.


திரு. ம.வீரத்தேவன்,
மேலாண்மைப் பணிப்பாளர்,

 

தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்!
இலங்கைத் தீவிலேயே மிகப் பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகம்’ திகழ்கிறது. என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை. இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை.
 
இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது. இந்த வங்கி உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத் தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


 
36 வயதாகும் வீரத்தேவன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார். தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும். இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது.

“சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் வீரத்தேவன். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும், இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர்.

2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன். தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன்.

தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன. தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைத்தாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர்.

தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை. தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது.

சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை. இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்.   “யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன்.

 

தமிழீழ வைப்பகத்தின் கிளைகள்

கிளைகள் ஆரம்ப நாள்
யாழ்ப்பாணம் 23-05-1994
கிளிநொச்சி 05-06-1995
நெல்லியடி 14-09-1995
முல்லைத்தீவு 14-05-1996

ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள்
மாங்குளம் 07-07-1997
விசுவமடு 01-06-2001
புளியங்குளம் 24-07-2002
பளை 14-03-2003
முழங்காவில் 14-01-2004

பணிகள்

நிலையான வைப்புகள் Fixed Deposits
தேட்ட வைப்புகள் Savings Deposits
நடைமுறைக் கணக்குகள் Current Accounts
தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates
ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits
வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange
கடன்கள் Loans
மேலதிக வரைவுகள் Overdrafts
நகையடைவு Pawn Broking
காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities
வாடகைக் கொள்வனவு Hire Purchase
நிலையான கட்டளைகள் Standing Orders
பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service

நிலையான வைப்புத்திட்டங்கள்
Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 08.50 %
12 மாத நிலையான வைப்பு 08.00 %
06 மாத நிலையான வைப்பு 07.00 %
03 மாத நிலையான வைப்பு 06.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %

வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தேட்ட வைப்புத்திட்டங்கள்
Savings Deposit Schemes

தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம்
வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50%
நல்லைத் தேட்டம் 06.00%
நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50%
சிறார் உண்டியல் திட்டம் 06.50%
ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
அமுதம் சிறார் தேட்டம் 06.50%
பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50%

கடன் திட்டங்கள்
Loan Schemes

கடன் திட்டங்கள் வட்டி வீதம்
நகையடைவுக் கடன் திட்டம் 18.00%
வாணிபக் கடன் திட்டம் 16.00%
மேம்பாட்டுக் கடன் திட்டம்
வேளாண்மைக் கடன் திட்டம் 15.00%
கடற்றொழில் கடன் திட்டம் 15.00%
கைத்தொழில் கடன் திட்டம் 15.00%
சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00%
சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00%
கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%

 1994 /08 ஆம் இதே காலத்தில் தான்  பாரிய துயரச் சம்பவம் ஒன்று எமது படையணிக்குள் நடந்தது. 


                                               

மாத்தையா அண்ணையை பிடிப்பதற்குக் கட்டளை அதிகாரி  சொர்ணம் அண்ணையென அவ் அணியைத் தலைமை தாங்கிச் சென்ற தளபதி றிச்சாட் எனவும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த றிச்சாட்டிற்கு என்ன நடந்தது என்பதை இப்பொழுது பார்ப்போம்,


றிச்சாட் அண்ணை தலைவரின் செல்லப்பிள்ளையென்றுதான் சில  போராளிகள் சொல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் விசுவாசமான போராளியாக றிச்சாட் அவர்கள்இருந்தார்.  மிகவும் விசுவாசமான போராளிகளை உருவாக்கிய மண் தான் அரியாலை பிரதேத்தில் இருந்த நாயன்மாக்கேட் பிரதேசம்ஆகும்.  அந்த மண்ணில் இருந்துதான் பொட்டுஅம்மான், காக்கா அண்ணை அவர்களை பின்தொடர்ந்து வந்தவர்தான் றிச்சாட் அவர்கள்.  1986 ஆறாம் ஆண்டு எமக்கும் மாற்று இயக்கத்திற்கும் சண்டை தொடங்கியது என முன்னர் குறிப்பிட்டிருந்தேன் .


அந்தக்காலம் ஒரு ரெலோ உறுப்பினருக்கு றிச்சாட் அண்ணை அவர்கள் அளவெட்டியில் வைத்து சாவொறுப்பு வழங்கினார்.  அக்காலப்பகுதியில் பாடசாலைகளில்  உடல் பயிற்சி கொடுக்கும் பிரபல்யமான பெண் தான் இந்த ரெலோக்காரனின் மனைவி ஆவார். ஒரு குழந்தையோடு வந்த அவனின் மனைவி கடுமையாக அழத்தொடங்கிவிட்டாள்.  றிச்சாட் அண்ணைக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இந்தகவலை கிட்டு அண்ணைக்குத் தெரியப்படுத்தினார். கிட்டு அண்ணையும் ஏன் விசாரிக்காமல் செய்தனி எனக் கடுமையாகப் பேசிவிட்டு இடைக்கிடை அக்குடும்பத்தைக் கவனி என கட்டளை வழங்கினார்,


 அதைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கும் இவருக்கும் ஒரு உறவு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கு ஆண் பெண் உறவு ஏற்பட்டு அவளிற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. முன்னரும் ஒரு பிள்ளை இருந்தது. இக் குழந்தைக்கு ஐந்து வயது வரும்வரை எமது புலனாய்வுத்துறைக்கோ பொது மக்களிற்கோ தெரியாமல் மிகவும் இரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார் றிச்சாட் அவர்கள். மாத்தையா அண்ணையின் பிரச்சனைக்குப்  பின்னர் அனைத்துப் பொறுப்பாளர்களின் நடமாட்டமும் புலனாய்வுத்துறையால் கண்காணிக்கப் பட்டுவந்தது.


 இதை அறிந்த றிச்சாட் அண்ணை தனது 5 வயது பெடியனுடன் தனது காதலியை  வவுனியா ஓமந்தையூடாக கொழும்பிற்கு அனுப்பி வைத்தார். அங்கே சென்று எமது இயக்கத்திற்கு தெரியாமல் இருக்குமாறு சொல்லி அனுப்பியிருந்தார்.  ஆனால் இவர்கள் இருவரையும் விடுதலைப் புலிகள் வவுனியாவில் வைத்து கைது செய்தனர்.  விசாரணையின் போது இப்பெண் தனது கணவனின் பெயரை  மறைத்துக்கொண்டே இருந்தார் . இதனால் குழப்பம் அடைந்த விசாரணை மேற்கொண்ட போராளி ஐந்து வயது மகனை தனிமைப்படுத்தி அவனிடம் விசாரணையை மேற்கொண்டார்கள். அச்சிறுவன் என்னுடைய அப்பா றிச்சாட் என திமிராகச் சொன்னான். இருவரும் ஒமந்தையில் இருந்து மீண்டும் யாழ்பாணம் அனுப்பப்பட்டனர். தொடர்ந்து அதை நேரடியாக உறுதிப் படுத்துவற்காக அப்பெண்ணினுடைய வீடு புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு இரவு றிச்சாட் அவர்கள் திடீரென அவ்வீட்டிற்குள் நுழைந்தார்.


 எதிர்பார்த்துக்கொண்டு இருந்த புலனாய்வுத் துறையினர் உடனே உள்ளே பாய்ந்து அவரைக் கைசெய்தனர். ஆனால் தலைவரின் பாதுகாப்புப் போராளிகளைப் பிடித்து விசாரிப்பதற்கு புலனாய்வுத் துறைக்கோ அல்லது காவல் துறைக்கோ அனுமதி இல்லை. இருந்தும் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்களைப் பிடித்தால் 24 மணித்தியாலத்திற்குள் சொர்ணம் அண்ணையிடம் அல்லது தலைவரின் தனிப்பட்ட புலனாய்வுத்துறையிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். அல்லது அவர்களை விசாரிப்பதற்கு தலைவரிடம் அனுமதி எடுக்க வேண்டும்.  புலனாய்வுத்துறையினர் பிடித்தவுடன் அவரைச் சொர்ணம் அண்ணையிடம் ஒப்படைத்தார்கள் .தொடர்ந்து சொர்ணம் அண்ணை அவரைக் கொண்டுபோய் சாவகச்சேரியில் இருந்த எமது புளியடி படையணித் தடுப்பு முகாமில் அவரை அடைத்து வைத்தார்.


றிச்சாட் புத்திசாலித்தனமாகத் தடுப்பு முகாமில் பொறுப்பாக நின்ற போராளியிடம் தம்பி கடுமையான வெக்கையாகவுள்ளது. நான் ஓட மாட்டேன்.  என்னைக் கொஞ்சநேரம் வெளியே விடு என கேட்டுள்ளார். அவனும் எவ்விதமான மறுப்பும் இன்றி வெளியே விட்டுள்ளான்.

 அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி றிச்சாட் அண்ணை வேகமாக ஓடி நாயன்மார்க் கேட்டில் உள்ள அவரின் சொந்த வீட்டிற்கு ஓடிச்சென்றுள்ளார். அங்கே சென்ற அவர் லெப். கேணல் சந்தோஸ் மாஸ்டர் அவர்களின் அப்பா கணபதிப்பிள்ளையிடம் தான் தலைவருக்குத் துரோம் செய்து விட்டதாகச் சொல்லியுள்ளார். தான் வேறுமுடிவு எடுக்கப் போவதாகவும் அவரிடம் சொல்லியுள்ளர்,

 இத்தகவல் சொர்ணம்அண்ணையூடாகத் தலைவருக்கு சொல்லப்பட்டது. உடனே தலைவர் அனைத்துப் படையணிகளிற்கும் தகவலைத் தெரியப்படுத்தி யாழ்பாணத்தில் இருந்து இராணுவப்பகுதிக்குத் தப்பிச் செல்லாமல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஒரு வேளை றிச்சாட் இராணுவப் பகுதிக்குத் தப்பிச் சென்றால் யாழ்பாணத்தில் இருக்கும் அனைத்துப் பாதுகாப்பு முகாம்களும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் எப்படியாவது றிச்சாட்டைபிடிக்க வேண்டும் என புலனாய்வுத் துறையினர் வீடு வீடாக சோதனையிட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்தப்பக்கம் அப்படி நடந்துகொண்டிருக்க அங்கே சென்ற றிச்சாட் அண்ணை அவசர அவசரமாகத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார், உங்களின் நம்பிக்கைக்கும் நற்குணத்திற்கும் விசுவாசமாகயிருந்த நான் பாரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளவும். எனக்குப் பிறந்த மகனை படிப்பித்து வளர்த்து எடுக்கவும்.  மனித உணர்விற்கு இடம் கொடுத்து என்னை அறியாமலே இத்தவறை விட்டுள்ளேன். ஆனால் உங்களிற்கோ உங்களின் இயக்கத்திற்கோ எவ்விதமான துரோக வேலைகளையும் நான் ஒரு போதும் செய்ய மாட்டேன். எமது வீரர்கள் பயன்படுத்தும் சைனட்க்கூட எனது மரணத்திற்காக பயன்படுத்த மாட்டேன். நான் விட்ட பிழைக்காக வேறு வழியில் நானே எனக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றேன்.

இப்படிக்கு, உண்மையுள்ள றிச்சாட்.


கடிதத்தை எழுதி கையில் எடுத்துக்கொண்டு வேகமாக் குளியல் அறைக்குச் சென்று முகச்சவரம் எடுத்து குளித்து விட்டு வெளியே வந்து வெள்ளைவேட்டி வெள்ளை அரைக்கை சேட்டும் போட்டுக்கொண்டு ஒரு பாயும் விளக்குமாரும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு அடிக்கும் பவர் கூடிய மருந்து போத்தல் ஒன்றை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு தங்களின் வயல் அமைந்து இருக்கும் செம்மணிச் சுடலைப் பக்கம் வெளிக்கிட்டார் றிச்சாட்,  அங்கே சென்று கடிதத்தை ஒரு கல்லிற்குக் கீழேவைத்துவிட்டு மருந்துப் போத்தலை முழுமையாகக் குடித்து அவர் இறந்து கிடந்தார். மூன்று நாட்களிற்குப்பின் அயலில் இருந்த மக்கள் பொடி மணக்குது எனச் சொல்ல இத்தகவல் இயக்கத்திற்குச் சென்றது. முதலாவதாக படைப் பணியின் மூத்த போராளி 0:001  ஜெகன் அல்லது றைவர் என்பவர் பொடியையும் கடித்தையும் எடுத்துக்கொண்டு சென்றார். வீரம் உள்ள போராளியின் மானச்சாவு நடந்து முடிந்தது. தலைவர் கடுமையான கவலையடைந்தார்.

இதற்குப்பின்னர் தலைவர் ஒரு இறுக்கமான முடிவு எடுத்தார். வயசு வந்த தளபதி நிலையில் உள்ள அனைவருக்கு விரும்பம் இல்லையென அவர்கள் சொன்னாலும் கட்டாயமாக அவர்களிற்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது, அந்த வகையில்தான் தளபதி சொர்ணம் அண்ணைதொடக்கம் பால்ராஜ் அண்ணை வரை அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.




02/08/1994 அன்று மீண்டும் பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிற்குத் தலைவர் திட்டமிட்டார்.


2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.காரணம் முன்னர் நடந்த தாக்குதலை வைத்து இராணுவ அதிகாரிகள் பலாலிக்குக் கிட்டக்கூட அவர்களால் நெருங்க முடியாது. அப்படி வந்த அனைவரையும் தாங்கள் சுட்டு விட்டோம் என அறிக்கை விட்ட காலம் அது, அதனால் இவர்கட்கு ஏதாவது செய்ய வேண்டும் என தலைவர் திட்டமிட்டர்.

பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.

1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.  அதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.


அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

இச்சண்டை தொடர்பாக அதில் பங்குபற்றிய கனடி குறிப்பிடுகையில்  அப்பொழுது பூநகரிச் சண்டையில் தளபதி சொர்ணம் காயப்பட்டிருந்த  காலம் அது எங்களுடைய முகாமிற்கு வந்த சொர்ணம் அண்ணை என்னை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்பொழுது நாங்கள்அங்கே சென்றதும், ஒரு வட்டக் கொட்டிலில் நான்  இருந்தேன். சிறிது நேரத்தில் தலைவர் வந்தார், சாப்பிட்டாயா? எனத் தலைவர் என்னிடம் கேட்டார். நான் இல்லையென்றேன். சரி சாப்பிட்ட பின்னர் கதைப்போம் என்று சொல்லி நானும் தலைவரும் சாப்பிட்டோம். சொர்ணம் அண்ணை தலைவரின் பாதுகாப்பில் நின்றார்.


அப்பொழுது தலைவர் என்னிடம் கேட்டார். பூனகரிச் சண்டை நடக்கும் போது பலாலியில் ஒரு தாக்குதல் நடந்தது உமக்குத் தெரியுமா எனக் கேட்டார் ஓம் என்றேன். அதற்குத் தலைவர் முதல் நடந்த தாக்குதல் பற்றி இராணுவ அதிகாரிகள் வீரம் பேசிக்கொண்டு  இருக்கின்றார்கள் இதற்கு என்ன செய்யலாம், என்று தலைவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் திருப்பி அடிக்க வேண்டுமென பதிலளித்தேன்.  அதுதான் உன்னை வரச் சொன்னனான் என அவர் சொல்லிவிட்டு  தொடர்ந்து சில புத்திமதிகளைத் தலைவர் எனக்குச் சொன்னார்.


அடுத்து தலைவர் எனக்கு ஒரு மாதம் விடுமுறையில் செல்லும்மாறு அனுமதி வளங்கினார். ஆனால் ஒரு நாள் முந்தி வந்தாலும் உன்னை  இயக்கத்தை விட்டுக் கலைத்து விடுவேன் எனச்  சொல்லி தலைவர் என்னை அனுப்பினார். அதற்காக ஒரு மோட்டார் சைக்கிளும் செலவிற்குப் பணமும் எனக்குத் தரப்பட்டது. அது எனக்குக் கடைசி  விடுமுறை என்பதால் நான் அனைத்து உறவினர்களையும் சந்தித்துக் கதைத்தேன். அத்தோடு மிக்க மகிழ்ச்சியான   விடுமுறை நாளாயிருந்தது. 1994/01 மாதம் சென்ற நான் 1994 / 2 ஆம் மாதம் விடுமுறை முடிந்து சாவகச்சேரிக்கு வந்து சொர்ணம் அண்ணையைச் சந்தித்தேன்.

 அப்பொழுது சொர்ணம் அண்ணை என்னைக் கூட்டிக்கொண்டு எங்களுடைய பயிற்சி முகாமான சாவகச்சேரியில் இருந்த சம்புத் தோட்டம் கொண்டு போனார். அங்கே சென்று கரும்புலிக்கு விருப்பமானவர்கள் கையை  உயத்துங்கோ என்றார்.  கூடியிருந்த 200 பேரில் சுமார் 190 பேரளவில் கையை உயர்த்தினார்கள். மீண்டும் கையை விடுங்கோ என்று சொல்லி விருப்பமானவர்கள் உடனே கையை உயர்த்துங்கோ எனக் கட்டளை வழங்கினார், பின்னர் அதில் இருந்து எல்லோரும் கையை உயர்த்தினார்கள். அடுத்து என்னையும் சேர்த்து  6ஆறு போராளிகள் அந்நடவடிக்கைக்காகத் தேர்ந்து எடுத்தார் தளபதி சொர்ணம் அண்ணை. பின்னர் அதற்கான மாதிரிப் பயிற்சியை எடுப்பதற்காக வடமராச்சியில் இருந்த யப்பான் முகாமிற்குச் சென்றோம்.

மீண்டும் சொர்ணம் அண்ணை என்னை ஏற்றிக்கொண்டு போய் தலைவரைச் சந்தித்தேன். சிரித்த முகத்தோடு காணப்பட்ட தலைவர் மீண்டும் எனக்குச் சில புத்திமதிகளைச் சொன்னார்.மாதிரிப் பயிற்சியை எடுக்குமாறும் பின்னர் தான் வந்து சந்திப்பேன் என்று சொல்லித் தலைவர் என்னை வழியனுப்பினார்.    



அடுத்து எங்களிற்கு பயிற்சி ஆரம்பமானது தொடர்ச்சியாக எங்களின் பயிற்சியை தலைவர் வந்து பார்வையிடுவார். அது வடமராச்சியில் யப்பான் பயிற்சி முகாமில் நடந்தது. அது ஆறு மாதங்கள் நடந்தது.


 பயிற்சி முடிந்து எங்கள் 09பேரையும் வடமராச்சியப்பன் முகாமில் இருந்து சொர்ணம் மற்றும் செல்வராசா, பானு இவர்கள் இரண்டு வாகனங்ளில் 31/07/1994 எங்களை ஏற்றிக்கொண்டு மாதகல் கடல்கரையில் விட்டார்கள். அப்பொழுது ஒரு உறுப்பினருக்கு 2 லோ ஒரு றைபுள் 1000, ரவை அனைவருக்கும் தரப்பட்டது.

 கெனடி ஒரு டொங்கான் மற்றும் னைட்விசன் சினைப்பர் வைத்திருந்தார்.  அங்கிருந்து கடலால் நீந்தி நாங்கள் மாவட்டபுரம் இராணுவப்பகுதிக்குச் சென்று விடோம்.  அங்கே எமது மக்களின் பாழடைந்த வீடுகள் நிறையக் காணப்பட்டது. அதனால் அன்று இரவு அங்கேயே தங்கினோம். மீண்டும் 01/08/1994 இரவு நகரத் தொடங்கினோம்.  பாழடைந்த வீடுகளில் மறைந்து மறைந்து ஓய்வு எடுத்து எடுத்து நடக்கத் தொடங்கினோம். பகலானதும் வீடுகளில் தங்குவோம். இரவானதும் நடக்கத் தொடங்குவோம். பலாலியை அண்மித்ததும் ஒரு வீட்டிற்குச் சென்று உடுப்புக்களை மாற்றி சண்டைக்கு உரியவாறு தயாரானோம்.


பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது.   நாங்கள்  வந்து கொண்டிருக்கும்போது  ஒரு இராணுவ  வவல் வாகனம் ஒன்று றோட்டால் வந்து இடையில் நின்றது. நாங்கள் அனைவரும் நிலத்தில் படுத்து எங்களை மறைத்துக் கொண்டோம். அரை மணித்தியாலத்தில் இராணுவ வாகனம் அவ்விடத்திலிருந்து சென்றது.


 பின்னர் காங்கேசன்துறை றோட்டைக் கடக்கும் போது ஆமி எங்களைக் கண்டு விட்டான். எங்களிற்கும் ஆமிக்கும் ஒரு சண்டை ஏற்பட்டது. அதில் எங்களிற்குச் சேதம் ஏற்படவில்லை. ஆனால் அணி இரண்டாகப் பிரிந்து விட்டது. ஒரு வழிகாட்டியோடு கெனடியோடு ஐந்து பேரும் புலிகுட்டியோடு மூன்று பேருமாக அணி இரண்டாகப் பிரிந்துவிட்டது,  பின்னர் நாங்கள் ஐந்து பேரும் விமான ஓடுபாதைக்கு அருகாமையில் சென்றோம். அதில் மின்சார வேலி ஒன்று இருந்தது. ஆனால் பதட்டம் அடைந்த இராணுவம் உலங்கூர்தியைத் திடீரென மேலே எழும்பிப்் பின்னர் கீழே இறங்கியது.  


அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் இருந்த மின்சார வேலிக்குக் கீழால் புகுந்து உள்ளே சென்றோம். அங்கே சென்றதும் அப்பொழுது நேரம் 12.30 மணிஎங்களோடு வந்த வழிகாட்டியான அசோக் என்பவரைப் போகுமாறும் நாங்கள் சண்டையை ஆரம்பிக்கப் போகின்றோம் என அவரிடம் சொல்லுகின்றேன். இனிப்போவது கடினம் உங்களோடு நானும் வருகின்றேன் என அவர் சொல்லுகின்றார். ஒரு மாதிரி அவரை அண்ணை கண்டிப்பாக உன்னை அனுப்பச் சொன்னவர் எனச் சொல்லி அனுப்பினேன். அவர்ஒரு 10த்து மீற்றர் நடந்து இருப்பார் எங்கையோ இருந்து ஓப்பிக்காரன் சுட்டான். அவர் அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார்.




பின்னர் நாங்கள் நாலு பேரும் உள்ளே சென்றோம். அதற்குப் பின்னரும் இரண்டு தடைகளைத் தாண்டி உள்ளே சென்றோம்.  இரண்டு பொய்சனுக்கு இடையே கம்பியை வெட்டி நாங்கள் 4 பேரும் உள்ளே நுழைந்தோம். இப்பொழுது உலங்கு வானூர்தி எங்களின் கண்ணிற்குத் தெரிகின்றது. நாங்கள் நடந்து சென்றோம். நெற்வேலி ஒன்று இருந்தது. அதையும்வெட்டி உள்ளே நுழைந்தோம், இப்பொழுது 02/08/1994 இரவு 2. மணி-இருக்கும் உலங்கு வானூர்தியில் இருந்து நாங்கள் 50 மீற்றறில் நிக்கின்றோம். அதன் பாதுகாப்பிற்காக ஒரு சென்றி நிக்கின்றது. அவரை நைட்விசன் சினைப்பறால் சுட்டு வீழ்தினோம், அடுத்து உலங்கு வானூர்திக்கு உள்ளே சென்று அதை இயக்கிப் பார்த்தோம். அது நிலத்தில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தது, அடுத்து ஹெலியில் இருந்து 50 மீற்றர் பின்னால் வந்து அதைக் குறிபார்த்து மேஜர்ஜெயம் லோவால் அடித்தார். ஆனால் அது எரியவில்லை.


                                 ,

பின்னர் கிட்டப்போய் அதை லைட்டரால் எரித்தோம். அது எரிகின்றது. அடுத்து அதைப்பாதுகாப்பதற்காக வவுசர் வாகனம் ஒன்று வருகின்றது. அதையும் லோவால் அடித்தோம். அதுகும் எரிந்தது. பின்னர் அடுத்த வவுசர் வந்தது அதற்கும் அடித்தோம். அதுவும் எரிந்துகொண்டிருக்கின்றது. பின்னர் 50 கலிபர் பூட்டிய மொட்ட ஜீப் ஒன்று வந்தது. அதற்கும் அடித்தோம். அதில் வந்த ஐந்து இராணுவம் இறங்கி ஓட வெளிக்கிட்டர்கள் அவர்களையும் சுட்டு விழ்த்தினோம். அடுத்து உள்ளே இருந்த ரக்கை பின்னால எடுத்து வெளியே ஓட எடுத்தான் ஒரு ஆமி அதையும் லோவால் அடித்தோம், அதுகும் எரிந்தது. இப்பொழுது ஒரு லோ மட்டும் எமது கையில் உள்ளது.

அடுத்து பெரிய வீடு ஒன்றுக்குள் பழுது அடைந்த விமானம் ஒன்று நின்றது அதையும் எரித்தோம், இந்த நடப்புக்கை முடிந்தவுடன் வெளியில் இருந்து இராணுவம் சுட்டுக்கொண்டுவந்தது. அதில் மேஜர் திலகன் விரச்சாவு அடைந்தார்.

                    

                   

அடுத்து ஜெனரேட்டர் வேலை செய்து கொண்டிருந்தமையால் அதையும் டொங்கான் அடித்து நிறுத்தினேன். வேறு ஒரு இடத்தில் இருந்து ஜெனரேட்டர்வேலை செய்தது கடைசியாகயிருந்த லோவை ஜெயம் அடித்தான்.  ஆனால் அது நிக்கவில்லை வேலை செய்து கொண்டே இருந்தது. இராணுவம் சுற்றி நின்று கைக்குண்டுகள் எங்களை நோக்கி எறிந்து கொண்டிருந்தது, அக்குண்டுபட்டு மேஜர் ஜெயம் வீரச்சாவு அடைந்தார். இப்பொழுது நானும் நவரெட்ணமும் இருக்கின்றோம். அப்பொழுது நாங்கள் ஒரு பெரிய விட்டிற்குள் ஓடிப்போய் நுளைந்து விட்டோம்.


                    



அங்கே ஆமி ஒருதரையும் காணவில்லை. இரண்டு படுக்கை இருந்தது. அதற்கு மேலே நுளம்பு வலை கட்டப்பட்டு இருந்தது மேசை ஒன்று கிடந்தது. அதில் ஒரு பிஸ்ட்டலும் தண்ணீர் போத்தலும் இருந்தது, இப்பொழுது விடிந்து கொண்டுவருகின்றது. நாங்கள் இதற்குள்ளே இருப்போம். இராணுவம் வர வர சுட்டுக்கொண்டே இருப்போம். இரவானதும் தப்பிப் போவோம் எனஇருவரும் முடிவு எடுக்கின்றோம்.

 இப்பொழுது நேரம் 4 மணி நான் ஒரு கொமாண்ட் கொடுக்கின்றேன். டேய் நீ பத்துப் பேரைக்கொண்டு அங்கால அடி நீ பத்துப் பேரைக்கொண்டு எங்களை வந்து சந்தி எனக் கொடுத்தேன். இராணுவம் அமைதியாகயிருந்தது.  நவரெட்ணம் பசிக்குது என்று சொல்ல எனது பைக்கேட்டில் இருந்து குளுக்கோஸ் மற்றும் பிஸ் கேட்டையும் எடுத்து அவனுக்குக் கொடுக்கின்றேன். அடுத்து அவனும் நானும் சாப்பிட்டு தண்னிரும் குடிக்கின்றோம்,

அப்பொழுது நாங்கள் இருந்த படுக்கை உயர்ந்து பதிந்தது, எனக்கு சந்தேகம் வந்து விட்டது. நான் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வெளியே பாய்ந்தேன். திடீரென இரண்டு குண்டை களட்டி உள்ளே போட்டு விட்டு ஒரு ஆமி வெளியே பாய்ந்தான். அதிலிருந்து நான் தப்பிக் கொண்டேன். நவரெட்ணம் கடுமையாகக் காயப்பட்டு விட்டான். சிறிது  தூரம் அவனைக் கொண்டு போனேன். அவன் குப்பி கடித்து விட்டான். நான் மட்டும் தனித்தேன் விடிந்து கொண்டுவர கடல் கரையை நோக்கி வேகமாக ஓடினேன். என்னை மின்சாரம் தாக்கியது, அடுத்து நான் குப்பி கடித்தேன் பின் ஆறு நாட்கள் எனக்கு உணர்வு இல்லை, என அவர் குறிப்பட்டார்.

                                                         

                                                        

  ரீம் பிரிந்தது என முன்னர் குறிப்பிட்டேன். அதில் புலிக்குட்டியோடு சென்ற இரு போராளிகளான கப்டன் திரு-லெப் ரங்கன்இருவரும் வீரச்சாவு அடைந்தார்கள். இதில் புலிகுட்டியும் ஒரு  வழிகாட்டியும் தப்பி எமதுகட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தார்கள். இந்நடவடிக்கை மிகவும் வெற்றியாக நடந்து முடிந்தது. புலிக்குட்டியும், கெனடியும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்துள்ளனர்.

16.08.1994 அன்றுகப்டன்அங்கையக்கண்ணிதான் செய்த சாதனையூடாக பெண்போராளிகளிற்கு வழிகாட்டியவர் ஆவார்.




யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “அபித” தாய்க்கப்பல் மற்றும் டோறா பீரங்கிக் கலம் என்பவற்றை வெடிமருந்துடன் நீண்ட தூரம் நீந்தி அக் கப்பலை மூழ்கடித்து தானும் வீரச்சாவு அடைந்தார். இவரின் நினைவுக் கல்லறை கோப்பாய் துயிலுமில்லதில் நடப்பட்டுள்ளது.



பெண் போராளிகளும் கரும்புலியாகச் சென்று ஆண் போராளிகளிற்கு நிகராகச் சாதனை படைக்கலாம் என்ற மனநிலையை உருவாக்கிய முதல் பெண் கரும்புலிக்கப்டன் அங்கையக்கண்ணி ஆவார்.  இவர் சென்ற பின்னர் பெண் போராளிகள் மத்தியில் புதுவிதமான உறுதியும் உணர்வும் காணப்பட்டது.


தொடர்ந்து தங்களைக் கரும்புலிக்கு அனுப்புமாறு பெண் போராளிகளிடம் இருந்து பல கடிதங்கள் தலைவருக்குச் சென்ற வண்ணம் இருந்தது. அதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த சில போராளிகள் இனங்காணப்பட்டு அவர்களிற்கான மாதிரிப் பயிற்சி வழங்கப்பட்டது. அவ்வகையில் அங்கையற்கண்ணி சென்று ஒரு மாதத்தால் நாளாயினி, மங்கை இருவரும் கரும்புலியாகச் சென்று பாரிய சாதனையைப் படைத்தார்கள். அதைத் தொடர்ந்து கணிசமான பெண் போராளிகள் சென்று கொண்டேயிருந்தார்கள்.


இந்த வரலாற்றுத் திருப்பத்திற்குப் பின்னால்: கப்டன்அங்கையக்கண்ணி இருக்கின்றார்.

இயக்கப் பெயர்:அங்கையக்கண்ணி, இயற் பெயர்.துரைசிங்கம் புஸ்பகலா

கப்டன் அங்கையக்கண்ணி10.05.1973 இம்மண்ணில்பிறந்தார். 16.08.1994 அன்றுவீரச்சாவு: அடைந்தார். முகவரி கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்.



அடுத்து பெண் போராளிகளிற்கான தலைமைப் பொறுப்பில் இருந்த நளாயினி பெண்களிற்கான இரண்டாவது வழி காட்டியாகச்செல்கின்றார், இதற்கு முதல் மறைமுகமாகச் சென்று பல பெண் போராளிகள் தங்களை அர்ப்பணித்து உள்ளார்கள். அதைப்பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை. வெளிப்படையான வீரச் செல்களையே குறிப்பிடுகின்றேன்.

19/09/1994 கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினியுடன் 4 பேர் சென்று பாரிய சாதனை படைத்தனர்.


பெண் போராளிகளின் வீர வரலாற்றை மீண்டும் ஒரு தடவை சிந்திக்க வைத்தவள் நளாயினி. ஒரு சிறந்த பெண் தலைவியாக இருந்தது மட்டும் அல்லாமல், அவள் ஒரு சிறந்த பேச்சாளரும் கூட, அப் பேச்சு திறமையூடாக பல இளம் பெண்களை போராட்டத்தில் இணைத்தவள் நளாயினி. பல சண்டைகளிற்குப் போய் விழுப்புண் அடைந்தவள் நாளாயினி.  அவள் நினைத்து இருந்தால் தனது முதுமையையும் தனது காயத்தையும் காட்டி போராட்டமரபுக்கு ஏற்ப திருமணம் செய்து ஒரு அம்மாவாக வாழ்ந்து இருக்கலாம், ஆனால் தான் முன்மாதிரியாக சாதித்துக் காட்டினால்  தான் அனைத்துப் போராளிகளும் தன்னை பின்தொடர்ந்து வீரவரலாறு படைத்துப் பெண்களிற்குப் பெருமை சேர்ப்பார்கள். என்பதில் அசையாத நம்பிக்கை உடையவள் நளாயினி, அவள் மிகவும் இரக்கம் உடையவள்.

காவலரண் தொகுதி ஒன்றைத் தாக்கும் அணிக்குப் பொறுப்பாகச் சென்று வெடிபட்டு மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவற்றுக் கிடந்தாள் லெப். கேணல்பாமா அதைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதாள்  நளாயினி. அப்படி இருக்கும் வேளையில்தான்  பாமா எங்களை விட்டு எட்டாத தூரத்திற்க்குப் போய்விட்டாள். ஒருமிதி வண்டிதானும் இல்லாமலிருந்த ஆரம்ப நாட்களில் , மங்கையும் அவளும் ஒழுங்கைக்கு ஒழுங்கை நடையாய் நடந்தார்கள்.



வீதிவீதியாகத் திரிந்து, வீடுவீடாகக் கருத்துச் சொல்லி , புதிது புதிதாகப் பிள்ளைகளைச் சேர்த்து , கடற்புலிகள் மகளிர் அணியை உறுதியான ஒரு அத்திவாரத்தின் மீது அவர்கள் கட்டி எழுப்பினார்கள்.” ஆண்போராளிகள் துணையின்றி கடலில் நாங்கள் தனித்து சண்டை பிடிக்க வேண்டும் ”

தங்களது கனவுகளையெல்லாம் நனவாக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை. என்ன வருத்தம் என்றாலும் நளாயினி கடலுக்கு வராமல் ஒரு நாளும் விடமாட்டாள். பகலெல்லாம் எமக்கு பயிற்சி தந்து ஓயாமல் இயங்குகின்ற அவர்கள் , இரவான பின்னர்தான் எம்மை ஓய்வாக உறங்கவிட்டு தமக்காகப் பயிற்சி எடுக்கக் கடலுக்குப் போவார்கள். ஆனால் அது அவர்களின் கடசிப் பயணத்திற்கான பயிற்சி என்பது எமக்குத் தெரியாது.


வல்வெட்டித்துறையில் ஆறுமுகசாமி ஐயாவின் 8 செல்வங்களில் இவள் 6வது குழந்தை.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தபோது பெரிய வசதிகளைத் தூக்கி எரிந்துவிட்டுத்தான் அவள் புறப்பட்டாள். கரும்புலியாக போவதற்கு அனுமதி கிடைத்தபின் கடசியாகத் தனது தாயையும் சகோதரர்களையும் பார்க்க விடுமுறையில் வீட்டிற்குச் சென்றாளாம்......

வீட்டுக்குப் போயிருந்த ஒரு பௌர்ணமி நாளில் முற்றத்தில் அம்மாவின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த பிள்ளையை ஆசையோடு வருடிவிட்ட அன்னையிடம்…

அக்காவுக்குப் பத்து இலட்சம் கொடுத்து கலியாணம் செய்து வைத்தீர்கள் அம்மா,  எனக்கு ஐந்து இலட்சம் thaangko இயக்கத்திற்கு கொடுக்க என்றாளாம்.இறுதிச் சந்திப்பில் கூட அப்பணத்தை வேண்டி இயக்க வளர்ச்சிக்குக்கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதை  நினைத்த பெண் போராளி என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்.


 தொலைத்தொடர்பு சாதனம் ” ஒலித்தது.

இலக்குத் தெரியுது.

நல்லாக் கிட்ட வந்திட்டம்…


இடிக்கிறம்…. இது தான் அவளின் கடசிக்குரலாகக் கேட்டது.

BT-Capt-Laxman


கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்தபடி ஒற்றைக் காலில் கலைப்பான்.

தச்சன்காட்டில், பலாலிப் பெருந்தளத்தின் ஒரு பகுதிக் காவல் வியூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதல்.

கை எலும்புகளையும் நொறுக்கி, வாய்ப் பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன துப்பாக்கிச் சன்னங்கள்.


ஒரு தண்டு இல்லாமல்போய், ஒரு பக்கமாய் இழுபட்டு, நெளிந்துபோயிருந்த வாயால் அவன் பேசும்போது, பார்க்காஅழகாய்த்தான் இருக்கும். அது மழலைக் குரல்.


பண்டத்தரிப்புக்குப் பகைவன் நகர்ந்த சண்டையில் காலை இழந்தவன், ‘பலவேகய – 02′ சண்டை துவங்கியபோது பொய்க்கால் பொருத்திக்கொண்டு ஆனையிறவுக்கு ஓடினான்.


இயக்கச்சியில் வைத்து அடிக்காத குறையாய் துரத்திக் கலைத்த தளபதியோடு சண்டை பிடித்துக் கொண்டுதான் அவன் திரும்பி வந்தான்.

‘மணியந்தோட்டம் – 02′ பயிற்சி முகாம், நான்காண்டுகளுக்கு முன்னர் லக்ஸ்மனை போரிற்குத் தயாராகியது. யாழ்ப்பாணக் கோட்டைதான் அந்த வீரனின் முதற்களம்.

மாங்குளம், சிலாபத்துறை, ஆனையிறவு, மணலாறு, காரைநகர், பலாலி; பகைவன் கூடாரமடித்த இடங்களிலெல்லாம் அந்த வீரன் போர்தொடுத்தான்.

குடிமகனொருவன் தன் தாய்மண்ணுக்குகாகச் செய்யக்கூடிய அதியுயர் தியாகத்தைத் தான் செய்யவேண்டுமென்ற வேட்கையை, சுவாசமாக சுமந்துகொண்டு திரிந்தான் அந்தக் கரும்புலி. அந்த சர்ந்தப்பத்திற்காக அவன் கடல்மடியில் தவம் கிடந்த நாட்கள் ஏராளம்.

சதுரங்கப் பலகையில், தனது சேனையை மதிநுட்பத்தோடு வழிநடாத்தி, எதிராளிகளின் அரசர்களை முற்றுகையிட்டு, முறியடித்து வீழ்த்துகிற அந்த சதுரங்க வீரன்.  கற்பிட்டிக் கடலில், ஒரு கரும்புலியாய் எதிரியின் “கடல் அரசனைத்” தகர்த்து மூழ்கடித்தான்.


பாகம் 4 ல்பகுதி 09 ஆரம்பம்




  08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதல்  நடத்தப்பட்டது.


             

(பங்குபற்றிய குமரதேவன் குறிப்பிடுகையில்)

சண்டை சூசை அவர்கள் தலைமை தாங்க சொர்ணம்அவர்களும் உதவியாகயிருந்தார். இது வெற்றுலைக் கேணியில் நடைபெற்றது. வவதா கப்பல் மீது கடுமையான சண்டை நடைபெற்றது. கரும்புலி வித்தி அவர்கள் தனது வெடிமருந்து ஏற்றிய படகை வேகமாச் சென்று மோதினார். கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இச்சண்டையை   கேணல். ராயு / சூசை / சொர்ணம், வழி நடத்தினார்கள். இதில் கரும்புலி மேஜர் வித்தி அவர்கள்வீரச்சாவு அடைந்தார்.

 இவரின் தாக்குதல் முடிந்ததும் அங்கே சென்ற எமது படையணிப் போராளிகள்......

போராளி நிசாந்தன் அண்ணை தலைமையில் எமது படையணி வேவு அணி  கட்டைக்காட்டுப் பகுதியில் நின்று ஆணையிறவுப் பக்கம் வேவு எடுத்துக் கொண்டிருந்தோம்.  எங்களோடு கடற்புலி மகளீர்ப் படையணியும் இணைக்கப் பட்டிருந்தது, அப்பொழுது குமரதேவன் ஒரு மருத்துவப் போராளியாகயிருந்தான். அப்பொழுது கடல் புலிமகளீரில்  இருந்த சின்னிலா என்ற போராளிக்கும் குமர தேவனுக்கும் காதல் ஏற்பட்டது,தொடர்ந்து 10/01, /1995 அன்று வேவுக்கு அனுப்பப்பட்ட அனைவரும் தைப்பொங்கலிற்காக சாவகச்சேரி சம்பூத் தோட்டப் பயிற்சி முகாமிற்கு ஒய்வு கொடுப்பதற்காக எடுக்கப்பட்டோம்.

, ( அதை நேரில் பார்த்த நான்)

அப்பொழுது நானும் சொர்ணம் அண்ணையும் சம்பூத் தோட்ட பயிற்சி முகாம் சென்று இருந்தோம்.

அனைவரும் விசில் அடித்து அழைக்கப்பட்டார்கள். அனைவரும் வரிசையாக நின்றார்கள். சுமார் 250 பது போராளிகள் அங்கே நின்றார்கள். இதற்கு இடையில் தளபதி எஸ்சோ அவர்கள் போராளி  குமரதேவனின் தவறான நடத்தை பற்றி சொர்ணம் அன்னைக்கு தெரியப் படுத்தியிருந்தார்.

அதனால் கடும் கோபத்தில் தான் சொர்ணம் அண்னைணயின் செயல்பாடிருந்தது.

 எல்லோரும் வரிசையாக நின்றதும் சொர்ணம் அண்ணையின் கண் சிவந்துகாணப்பட்டது,

காதல் மன்னன் குமரதேவன் வாடா முன்னுக்கு எனக் கட்டளை வழங்கினார்.  அப்பொழுது போராளிகளிற்கு முன் நிலையில் குமரதேவன் வந்துநிக்கின்றார். இவர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அடுத்து இளவரசன் நிமால் வாடா முன்னிற்கு என கட்டளை வழங்கப்பட்டது.  நிமாலும் முன்னால் வந்து நின்றார். முதலாவது குமரதேவனின் பிரச்சனை தொடர்வாகக் கதைக்க வெளிக்கிட்டார். அவருக்கு குஞ்சாமணி பிடித்து மூத்திரம் பெய்யத் தெரியாது அவருக்குக் காதல் தேவையாம் எனச் சொர்ணம் அண்ணை சத்தமாகச் சொல்ல அனைத்துப் போராளிகளும் பெரிதாகச் சிரித்தார்கள்.

 ஆனால் குமரதேவனும் விட்டுக் கொடுக்கவில்லை. அது தவறு இல்லையென வாதாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவனின் மருத்துவவேலை அவனின் ஆயுதம் பறிக்கப்பட்டது. அவனுக்கு எட்டுக்குண்டு கொடுத்து குண்டுக்காரனாக அவன் தண்டணையில் விடப்பட்டான்.உமக்கு தேவையென்றால் ஆமியிற்ற அடித்து ஆயுதம் எடு என அவனிற்கு சாவல் விட்டார் சொர்ணம் அண்ணை.

அடுத்து போராளி நிமால் இவர் மட்டக்களப்பை சேர்ந்தவர். இவரைப்பற்றிக் கதைக்க ஆரம்பித்தார்.  இவருக்கு காதல் கடிதம் பொதுப்பிள்ளைகள் கொடுத்ததாம், ஆனால் பொதுப் பிள்ளைகளோடு கதைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடே படைபணியில் உள்ளது. அப்ப ஏன் இவர் கதைக்க வேணும் என்றார் சொர்ணம் அண்ணை. நான் காதலித்தது பிழையென்றால் என்னைக் கரும்புலியாகவிடுங்கோ என்றான் நிமால் .

குற்றச் செயலில் ஈடுபட்ட உன்னை கரும்புலியாக அனுப்பினால் அனைத்து மக்களும் உன்ர முகத்திற்கு பூப்போட்டுக் கும்பிடுவார்கள். இது மக்களை ஏமாத்தும் வேலையை நான் செய்ய மாட்டேன். காலப்போக்கில் அது மக்களிற்குத் தெரியவந்தால் உண்னோடு சேர்ந்து நானும் ஒரு குற்றவாளியாக மக்கள் மனங்களில் பதியப் படுவேன். அது மட்டும் அல்ல கரும்புலியாகச் சென்றவர்கள் அனைவரையும் மக்கள் தவறாக நினைப்பார்கள். அதனால் இன்றே உன்னை இயக்கத்தில் இருந்து கலைகின்றேன் என சொர்ணம் அண்ணை சொன்னார். அன்று  போராளிகள் முன் நிலையில் வைத்து நிமால் இயக்கத்தில் இருந்து கலைக்கப்பட்டார். இவர் வெளியே

சென்று அதே சாவகச்சேரிப் பிள்ளையை திருமணம் செய்து புதுக்குடியிருப்பில் வாழ்ந்து இருந்தவேளை சுகயீனம் காரணமாகச்  சாவடைந்தார்.

பின் ஒன்றுகூடல் முடிந்ததும் மீண்டும் குமரதேவவன் போராளிளுடன்  சண்டைக்கு அனுப்பப்பட்டான். அங்கே வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட அவன் மீண்டும் சொர்ணம் அண்ணையின் திருமண நிகழ்விற்காக சம்புத் தோட்ட பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்டான். பின்னர் இது தொடர்பாகப் பார்ப்போம்.



07/12/1994 செல்லக்கிளியை அனுப்பி   சிப்பாய்களிற்குச் சாவொறுப்பு வழங்கிய தலைவர்,

 மேஜர் பிரசன்னா... தலைவரின்பாதுகாப்புக்கடமையில் இருந்த ஒரு போராளி ஆவார். இவருக்கு 40 மில்லிமீற்றர் எறிகணை கொடுத்து தளபதி சொர்ணம் அண்ணை வைத்து இருந்தார். இவர் மிகவும் சொர்ணம் அண்ணைக்கு நம்பிக்கையானவராக இருந்தவர்.


இவரின் விபரம், மேஜர்.பிரசன்னா-சின்னதம்பி சிவகுமார்- மிருசுவில்  யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு :30.06.1972 வீரச்சாவு :07.12.1994 இவர் விடுமுறையில் சென்ற போது தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு யுவதியோடு இவருக்குக் காதல் ஏற்பட்டது. இத்தகவலை இவர் சொர்ணம் அண்ணைக்குத் தெரியப்படுத்தினார். தகவலை அறிந்த சொர்ணம் அண்ணை சம்முத்தோட்டப் பயிற்சி முகாமிற்கு வந்து சொர்ணம் அண்ணை அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூட்டினார்.


வரிசைக்கு முன்னர் பிரசன்னாவை வரச்சொல்லி கடுமையான முறையில் பேசினார். எக்காரணம் கொண்டும் பொதுப் பெண்களை எவரும் காதலிக்கக் கூடாது காரணம் நாங்கள் தலைவரைப் பாதுகாப்பவர்கள். எங்களை அறியாமலே நாங்கள் சில கதைகளை அவர்களிடம் சொன்னால் அது இலகுவாக எதிரிகுச் சென்று விடும்.  அதனால் நாங்கள் தனிமனிதப் பலயீனங்களிற்கு ஆளாகக் கூடாது. என அனைவருக்கும் புத்தி சொன்னார். 

மேஐர் பிரசன்னா மூன்று போராளிகளோடு சேர்த்து நாலாவது ஆளாக ஆனையிறவுப் பகுதியில் வேவு எடுப்பதற்காக  தண்டணையில் அனுப்பப்பட்டான். மற்றவர்கள் கடமை ரீதியாக அனுப்பப்பட்டனர். ஆனால் வேவுக்குச் சென்ற நாலு பேரும் திரும்பி வரவில்லை. அவர்களின் பொடியும் எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வீரச்சாவு அடைந்த தகவலை எதிரிகளின் தொலைத் தொடர்பு கதைகளின் ஊடாக உறுதிப்படுத்தியது இயக்கம்.

 அவர்களின்

விபரம்

,01  கப்டன் வாஞ்சிநாதன்-வேல்முருகு குமார்-35ம் கிராமம், வைக்கல்ல,  மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:15.01.1974வீரச்சாவு:07.12.1994

02 கப்டன் சடான்இயற்பெயர்:குணராசா ஸ்டான்லி-பெரியகல்லாறு, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:27.01.1974 வீரச்சாவு:07.12.1994


03 கப்டன் செந்தாளன் (ஐக்கியலிங்கம்)தெய்வநாயகம் ரவி-பார்வீதி மட்டக்களப்பு, வீரப்பிறப்பு:23.08.1970 வீரச்சாவு:07.12.1994.


நிகழ்வு:

யாழ்ப்பாணம் ஆனையிறவில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு.

இது நடந்தபின் தலைவருக்கு இத்தகவல் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து சொர்ணம் அண்ணையைக் கூப்பிட்ட தலைவர், செல்லக்கிளி தலைமையில் ஒரு அணியை அனுப்பி இவர்களிற்கு என்ன நடந்தது. என்பதை அங்கே சென்று தரவு எடுக்குமாறும் அதைகண்டறிந்து வந்து தனக்குச் சொல்லுமாறு தெரியப்படுத்தி இருந்தார். அதையேற்ற சொர்ணம் அண்ணை செல்லக்கிளி அவர்களின் தலைமையில் மேஜர் மாதவன் கப்டன் மயூறன் போராளி ஜொனி. என 4பேரும் ஆனையிறவுக்கு உள்ளே சென்றார்கள்.

 அப்பொழுது அங்கே புலிகளை அவதானிப்பதற்காக முன் பகுதியில் ஒரு ஓப்பிப்பொய்சன் தங்களின் தொடர் காவலரளில் இருந்து. சுமார் 150 மீற்றர் முன்பகுதியில் அப்பொய்சன் போடப்பட்டு இருந்தது.

இது உள்ளே வரும் விடுதலைப் புலிகளை கொலை செய்வதற்கான ஒரு சிலந்திவலையாகும். என்பதை   செல்லக்கிளி ஊகித்துக் கொண்டான். தான் கூட்டிச் சென்ற அனைவரையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் அவர்களை விட்டுவிட்டு ஏதாவது நான் கட்டளை வழங்கினால் காவல் அரணை நோக்கிச் சுடுங்கோ எனச் சொல்லி விட்டு செல்லக்கிளி தவண்டு தவண்டு அவர்களின் காவல் அரணுக்குப் பின்னால் சென்று விட்டான். 

செல்லக்கிளி அவன் ஒரு பலசாலி என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன். திடீரெனப் பாய்ந்து இரு இராணுவத்தையும் கத்தியால் குத்திக் கொலை செய்தான். தொடர்ந்து அவர்கள் இருவரும் வைத்திருந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு தான் கூட்டிச் சென்றவர்களையும் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு செல்லக்கிளி முகாம் வந்து  சேர்ந்தான்.

 ஒரு வெடிச்சத்தமும் இல்லை. முகாமில் இருந்த இராணுவச் சிப்பாய்களிற்குக் கூட என்ன நடந்தது என்பது காலையில்தான் தெரியவந்தது. இது செல்லக்கிளி என்ற ஒரு தனி மனிதனாலே செய்யப்பட்ட சாதனை ஆகும். பின் இவர்கள் தான் பிரசன்னாவோடு சென்ற நாலு பேரையும் சுட்டார்கள் என்பதை செல்லக்கிளி சொர்ணம் அண்ணைக்கு உறுதிப்படுத்தினான். இதில் செல்லக்கிளி மட்டும் இப்புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்ள்ளார். ஏனையவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள்.


05/03/1995 எனது பாதுகாப்புக் கடமையை முடித்து வைத்த பின்னேரே அவரும் பாதுகாப்பில் இருந்து வெளியேறினார் சொர்ணம் அண்ணை.


இப்பொழுது சந்திரிக்காவின் சமாதானகாலம் நடந்து கொண்டுயிருந்தது. அதனால் கிழக்கு இலங்கையில் இருந்து என்னைப் பார்ப்பதற்கு கிலாலியூடாக சாவகச்சேரிக்கு எனது சகோதரி வந்து இருந்தார். அப்பொழுது எமது படையணி மக்கள் தொடர்பகம் சாவகச்சேரி நுணாவில்பகுதியில் இருந்தது, அதை வெப்பன் என்ற போராளி கவனித்துக் கொண்டுயிருந்தார். அப்பொழுது நானும் பாதுகாப்பு முகாம் ரெட்டியில் இருந்து சாவாச்சேரிக்கு விடுமுறையில்வந்து நின்றேன்.

அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வரும் போராளிகளின் உறவினர்கள் ஒரு விட்டிலே தங்க வைக்கப் பட்டிருந்தாங்கள். ஆனால் அங்கே நின்ற அராலியூர் ஐயா மிகவும் ஒழுக்கமானவர் என்னோடும் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர். அப்பொழுது கதையோடு கதையாக மட்டக்களப்பு அழகிக்கும் யாழ்பாண முடவனுக்கும்  இரவு சரியான வேலையென்றார். நான் அதை விரிவாகக் கேட்க என்னிடம் அதை மறைத்து விட்டார்.

 இருந்தும் மற்றவர்களிடம் கதைத்து அங்கே நடக்கும் தவறான நடத்தைகளை நான் அறிந்து கொண்டேன், நான் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய தலைவர் அவர்கட்டு தற்பொழுது நான் விடுமுறையல் உள்ளேன்.
எமது கட்டுப்பாட்டிற்கு உட்படாத தவறான வேலைகள் நடப்பதை நான் நேரடியாக அறிந்துள்ளேன். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்கான சண்டையும் எதிரி ஆரம்பித்து விட்டான். நிதிப் பிரச்சனையும் எமது இயக்கத்தில் ஒரு சவாலாக உள்ளது. அதனால் அனைத்து உறவினர்களையும் யாழ்பாணத்தில்  ஒரு சுமூகமான நிலைவரும்வரை அதாவது சண்டையற்ற ஒரு சுமூகமான சூழ்நிலை வரும்மட்டும் கிலாலியில் இருந்து அவர்களைத் திருப்பி அனுப்புவது பொருத்தமாகயிருக்கும் என நினைக்கின்றேன் .


அல்லது கண்டிப்பாக உறவினர்களை எடுப்பதாக இருந்தால் இரண்டிற்கு மேற்பட்ட வீடுகள் எடுத்து இரவு நேரங்களில் ஆண்கள் பெண்களைத் தனித்தனியாக விட்டுச் சரியான முறையில் அவர்களைக் கவனித்து அனுப்பினால் எமது படையணியின் ஒழுக்கத்தை மேலும் பலமாக்கும் என நினைக்கின்றேன்.

 இப்படிக்கு உன்மையுள்ள போராளி,  K.நிமலேஸ்வரன் கடிதம் தலைவருக்குச் சென்று விட்டது. என்ன நடந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.


இந்தக் கடிதத்தை போராளி நவா ஊடாகத்தலைவருக்கு அனுபிவைத்தேன். பின் விடுமுறை முடிந்து பாதுகாப்பு முகாமிற்குச் சென்றேன். நான் காவல் கடமையில் நிற்கும் போது தலைவர் என்னைப் பார்த்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னைப் பார்த்துச் சிரிக்கும் தலைவர் அன்று சிரிக்கவில்லை. அதனால் ஏதோ எனக்கு நடக்கப் போகின்றது என்பதை விளங்கிக் கொண்டேன்.

10/03/1995 அன்று மூத்த தளபதி சொர்ணம் அவர்கட்கும் பெண் போராளிகளில் ஒருவரான ஜெனி அவர்கட்கும் திருமணம் நடந்தது. 


இவர்தான் சொர்ணம் அண்ணையின் மனைவி ஜெனி.



 மூத்த பயிற்சி மாஸ்ட்டரான தினேஸ் மாஸ்ட்டர் அவர்கட்கும் மூத்த பெண் போராளியான ஞானகி அவர்கட்கும் ஒரே நாள் திருமணம் செய்வதற்கான ஏற்பாடு தலைவரால் மேற்கொள்ளப்பட்டது. பத்தாம் திகதி இரவு சுண்டிக்குழியில் அமைந்திருந்த பாண் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது, அதில் பதுமன், தமிழ்செல்வன், வானு ,ஜெனனி அக்கா, பாலா அண்ணைை, அடல், தலைவர் தலைவரின் மனைவி அனைவரும் கலந்து சிறப்பாக இவ் நிகழ்வு நடைபெற்றது.




தொடர்ந்து இருபாலையில் அமைந்து இருந்த ஜெயராஜ் மண்டபத்தில் வைத்து இருபோராளிகளின் நிகழ்விற்கு வந்த அனைவருக்கும்  நேரடியாகத் தேசியத் தலைவவரின் படையணிப் போராளிகளான உதயன் தலைமையில் துரமணி, றோவட், ஆனந்தபாலன் S.M அப்பா அவர்களால் சமைக்கப்பட்ட உணவு இத்திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெயராஜ் முகாமில் வைத்து வழங்கப்பட்டது .


 இருநாட்கள் கழித்து எமது படையணிப் பயிற்சி முகாமான சம்புத் தோட்டத்தில் தனது மனைவியான ஜெனி அவர்களையும் கூட்டிக்கொண்டு தளபதி சொர்ணம் அவர்கள் தனது படையணிப் போராளிகளோடு ஒரு சந்திப்பை நடத்தினார்.

 அதில் தான் திருமணம் செய்து விட்டேன். என்ற விடயத்தை அனைத்துப் போராளிகளிற்கும் தெரியப்படுத்தினார். தனது மனைவி வடிவா என எல்லாப் போராளிகளிடமும் கேட்டார். அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள்.
 அதுவொரு   மகிழ்ச்சியான நாளாக எங்களிற்கு இருந்தது.  அந்த மகிழ்சியான நாளில் கூட என்னைப் பார்த்து எலிடொக்டர் என்று பட்டம் சொல்லும் கதையை அவர் மறக்கவில்லை.

இது சாவகச்சேரியில் உள்ள படையணிப் பயிற்சி முகாமில் நடந்தது.  ஐநூறுக்கு மேற்பட்ட படையணிப் போராளிகள் அதில் கலந்து கொண்டார்கள். அனைத்துப் போராளிகள் முன் நிலையில் போராளி குமரதேவன் அவர்களின் திருமணம் தொடர்வான கவிதையை அவனே எழுதி அவனே வாசித்தான் .


( இவர்தான் குமரதேவன்)

 19,/04 / 1995 அன்று போராக மாறியது தமிழீழம். கடற்புலிகள் "சூரயா", "ரணசுரு" ஆகிய கடற்படையினரின் கடற்கலங்களை மூழ்கடித்தனர். மேலும், விடுதலைப் புலிகள் தோளில் வைத்து செலுத்தக்கூடிய ரஸ்சியத் தயாரிப்பான மெசள்ஸ் அதாவது புதிய ரக 7.7 விமான எதிர்ப்பு ஆயுதமாகும்.


விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இப்போரில் புதிதாக விடுதலைப் புலிகள் பாவித்தனர். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் இரு "அவ்ரோ" (AVRO) விமானங்கள் யாழ் தீபகற்பத்தின் மேலாகப் பறக்கும்போது சுட்டு வீழ்த்தப்பட்டன.இவ்விரு விமானங்களையும் 24 மணித்தியாத்திற்குள் பிரிகேடியர் கடாபி அவர்களே சுட்டு வீழ்த்தினார்.



இதுதான் அந்த விமான எதிர்ப்பு ஆயுதம். இதற்குப் பின்னர் இதில் ஒன்று நிலாவரையில் விழுந்து நொருங்கியது. அடுத்தது கடலில் வீழ்ந்து முழ்கிப்போனது. தரையில் விழுந்தது போராளிகள் பெருந்திரளான மக்கள் பார்வையிட்டார்கள். யாழ்பாணத்தைக் கைப்பற்றுவதற்காகப் பாரிய நடவடிக்கையை ஆரம்பித்தது சந்திரிகா அரசாங்கம். அதனால் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய தேவை தேசியத்தலைவருக்கு ஏற்பட்டது.  அதனால் தளபதி சொர்ணம் அவர்களைத் தலைவர் ஜேயோசி கட்டமைப்பு என ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி அதில் அனைத்து மாவட்டப் போராளிகளையும் இணைத்து அக்கட்டமைப்புக்குப் பொறுப்பாக தளபதி சொர்ணம் அவர்களை தலைவர் நியமித்தார். 


அன்றில் இருந்து தலைவரின் பாதுகாப்புப் பொறுபாளராகவும் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில்  இயங்கும் படையணியான இம்ரான் பாண்டியன் படையணியின் பொறுப்பாளராக பிரிகேடியர் கடாபி அவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டார்.


1995/4 ம் மாதம் சாவகச்சேரியல் உள்ள சம்புத் தோட்டம் பயிற்ச்சி முகாமில் மாத்தையா அவர்களின் ஆட்களை போராளிகளிற்கு காட்டிக்கொண்டிருந்தவேளை அதாவது மாத்தையா அவர்களோடு சேர்ந்து தலைவரைக் கொலை செய்து விட்டு அத்தலைமைப் பொறுப்பை தான் எடுப்பதற்காக மாத்தையா அவர்கள் போட்ட  துரோக வலையில் சிக்கிய 9.5 முகாம்பொறுப்பாளர் சதிஸ்சன்01 தலைவரின்வாகன ரறைவர் சின்னமணி02 தலைவரின் மொபையில் செற்காரன் முருகன்03 மினி மினி LMG சந்தோஸ்04 படையணியைச் சேர்ந்த கெங்கா05 சுசிலன் 06 செங்கமலம்07 என மொத்தம் 12 பேரைக்கொண்டுவந்து எமது படையணிப் போராளிகள் முன் நிலையில் காட்டப்பட்டது.


 அவர்கள் விட்ட பிழைகளை போராளிகளிற்கு விளக்கப் படுத்திக்கொண்டிருந்தார்கள், அதில் போராளி நவா காரசாரமாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டான், அதற்குச் சொர்ணம் அண்ணை துரோகியாக மாறியவனிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் விடை இருக்காது என நவா அவர்களிடம் சொர்ணம் சொன்னார்.


28/03/1995 இது நடந்து கொண்டிருக்கையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வந்தது.    இளவரசன் அண்ணையை யாரோ சுட்டுப் போட்டு ஓடி விட்டார்கள்.

. என மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயது மதிக்கத்தக்க போராளி வந்து சொர்ணம் அண்ணையிடம் சொன்னான். கப்டன் இளவரசன்

நித்தியானந்தன் சிவானந்தன்

கித்துள்வெளி, கரடியனாறு, மட்டக்களப்பு


இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்

பிறப்பு 22.07.1972  வீரச்சாவு:28.03.1995:

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


இந்த முகாம் பற்றி பார்ப்போமானால் தளபதி கிட்டு அவர்கள் வரப்போகின்றார் என்ற செய்தி வந்தவுடன்  தலைவர் சாவகச்சேரிப் பகுதியில் ஒரு அழகான வீட்டைக் கிட்டு அண்ணைக்காக எடுத்து கப்டன் இளவரசன் தலைமையில் ஐந்து போராளிகளை அவ்விட்டைப் பாதுகாற்பதற்காக அங்கே விட்டு இருந்தார். ஆனால் பெரிய எதிர்பார்ப்போடு இருந்தபோது தளபதி கிட்டு வீரச்சாவு அடந்துவிட்டார், ஆனால் அவ் முகாம் இளவரசன் தலைமையல் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு இருந்துதான் இந்தத் துயரமான செய்தி வந்தது.


அவன் வந்துசொன்னதும்  சொர்ணம் அண்ணை பதட்டம் அடையவில்லை. உதவிக்கு வரச்சொல்லி எவரையும் கேட்கவும் இல்லை, ஒன்று கூடலை நடத்துங்கோ என்று சொல்லி விட்டு தனியாக அந்தப் போராளியைக் கூட்டிக்கொண்டுபோய் அவரின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார். அங்கே சொர்ணம் அண்ணைபோய் பார்த்த போது கட்டன்இளவரசன் (மட்டு மாவட்டம்)  என்பவர் தலையில் வெடிப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததாகவும், இவனிடம் கேட்டபோது சுட்டு விட்டு ஆயுதத்தையும் யாரோ எடுத்துச் சென்றதாகச் சொர்ணம் அண்ணையிடம் சொல்லியுள்ளான்.


 நீதாண்டா சுட்டனி என்று கன்னத்தைப் பொத்தி இரண்டு அறை போட்டாராம் சொர்ணம் அண்ணை. அடி வேண்டிய பயத்தில் அவன் வாழைமரத்தடியில் இளவரசனின் றைவுளை தாட்டுவைத்துவிட்டு அதற்கு மேலே தண்ணீர் அள்ளி ஊத்தி இருந்தானாம், ஏன் இப்படி செய்தனி என்று கேட்க அந்தப்பாதையில் பெண்போராளிகள்  போவதாகவும் தான் அவர்களிற்கு கிண்டல் செய்ய இளவரசன் இதைக்கண்டதும் தனக்குப் தண்டனை தந்ததாகச் சொர்ணம் அண்ணையிடம் சொல்லியுள்ளான். அவனின் விசாரணை  முடிந்ததும் அதே சம்பபுத் தோட்டப்பயிற்சி முகாமில் மாட்டு வண்டியில் ரயரும் விறகுகளும் கொண்டு வந்து பறிக்கப்பட்டது.


 பின் சொர்ணம் அண்ணை அவனைக் கொண்டு வந்தார். அடுத்து படையணிப்போராளிகள் முன் நிலையில் அவன் செய்த தவறுகளை தெரியப் படுத்தினான். சொர்ணம் அண்ணை திருமணம் செய்த காரணத்தால் அவரைச்சுட நாவா  விடவில்லை. நாவாவே தனது கைத்துப்பாக்கியால் சுட்டு அவனுக்குச் சாவொறுப்பு வழங்கினான். இதைத் தொடர்ந்து எமது படையணி போராளிகள் யாழ்பாணச் சண்டைக்கு அனுப்பப்பட்டார்கள். அச்சண்டையில் எமது படையணிப் போராளிகள் பலர் வீரச்சாவு அடைந்தனர். அச்சண்டையில் போராளி குமரதேவனும் தனது காலை இழந்தான். சொர்ணம் அண்ணையால் பாதிக்கப்பட்ட போராளியும் அவன்தான். அவரை இறுதி வரை உயிருக்கு உயிராக நேசித்த போராளியும் அவன்தான்.

இப்புத்தகம் எழுதும் காலத்தில் குமரதேவன் மற்றும் சொர்ணம் அண்ணையின் மனைவியும்  உயிரோடு இருத்துள்ளனர்.

19/04/1995 அன்றுதிருமலை துறைமுகம் பகுதியில் நங் கூரமிட்டு இருந்த இரண்டு போர்க்கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப் பட்டது.

bt-maj-thanikaimaran


19/04/1995 அன்றுதிருமலை துறைமுகம் பகுதியில் நன் கூரமிட்டு இருந்த ” ரணசுறு சூரையா என்ற போர்க் கப்லை மேஜர் தணிகைமாறன் உட்பட 4 கரும்புலிகள் சென்று 12 : 45 மணிக்கு தங்களின் சாதனையைப் படைத்தனர். இது அதிஉயர் பாதுகாப்புவலையம் என அரசாங்கத்தால் சொல்லப்பட்ட இடமாகும்.



அதியுயர் பாதுகாப்பு வலயம் கடற்படையினரின் அவலக்குரலாய் நிறைந்தது. மீண்டும் இலங்கையில் எப்பகுதியிலும் படையினர் இருக்க முடியாது என்ற நிலை உணர்த்தப்பட்டது. இந்நடவடிக்கையில்  இரண்டு போர்க்கப்பல்கள் முற்றாகக்கடலிற்குள் மூழ்கியது.

 கரும்புலி மேஜர் மதுசா


 கடைசி விடுமுறையில் சென்ற தணிகைமாறன்.

"அம்மா தனியச்சாப்பிட ஒரு மாதிரிக் கிடக்கு.... ஊர்ப்பொடியன்கள் கொஞ்சப் பேரைக் கூட்டிவாம்மா. ” மகன் கேட்டபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் சின்னனில இருந்து எல்லோரிலும் பாசம் கொண்டவன் என்று அம்மாவிற்குத் தெரியும். அம்மா அவன் பழகிய ஊர்ப்பொடியலை நித்திரையில் இருந்து எழுப்பி வந்தாள். முற்றத்தில் எல்லோரையும் வட்டமாய் இருத்தி மகனே எலோருக்கும் சாப்பாட்டைப் பகிர்ந்துகொடுத்தான்.

” அம்மா இந்தாங்கோ இதைச் சாப்பிடுங்கோ ” தன் கையினால் பிசைந்து அளைந்த சாப்பாட்டில் பாதியை அம்மாவிடம் நீட்டினான்.
அம்மாவும் வாங்கிச் சாப்பிட்டாள். எல்லாம் முடிந்த பிறகு ” அம்மா காலமை வேளைக்கு என்னை எழுப்பிவிடு ” பாயில படுத்தான். ஆழமாக உறங்கினான்.



காலை விடிந்ததுமே சைக்கிளையும் எடுத்துக் கொண்டு அம்மாவிற்கு – அப்பாவிற்கு தங்கைமாருக்கு , தம்பிமாருக்கென்று எல்லோருக்கும் தனியத் தனிய போட்டுவாறன்  என்று வாசல்வரை சொல்லிப் புறப்பட்டான்.

” 10 மணிக்கு வாகனத்தில் வந்து கூட்டிக்கொண்டு போறம் என்றல்லா சொல்லிப்போட்டு போனவர்கள். ஏன்ரா இப்பவே. ” அம்மா மெதுவான குரலில் இழுத்தாள்".

” ஊரில எல்லோருக்கும் சொல்லிப்போட்டு போகவேணும். இப்பவே போனாத்தான் சொல்லிப்போட்டுப் போகலாம். ”

சொல்லிவிட்டு மகன் சிரித்தான். வீட்டுக்காரரைப் போல ஊரவர் ஒவ்வொருவரையும் நேசித்து வந்தான் தனது மகன் என்று அம்மாவிற்குத் தெரியும். அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

மகன் போய்விட்டான் ; அம்மா பாவம் எதுவும் புரியவில்லை. காத்திருந்தாள். தன் மகன் தன்னிடம் இறுதியாகத்தான் விடைபெற்றுப் போகிறான் என்று அவளிற்குத் தெரியாது. இன்னும் ஒரு பகலும் ஒரு இரவும் கழித்தால் தன் மகன் இலக்கினை நோக்கிச் சென்றுவிடுவான் என்று அறிந்தால் பெற்றவள் தாங்கிக்கொள்வாளா…?


(கட்டன் சாந்தா)
ஆனால் அவனிற்கு தெரியும்.

இன்னும் ஒரு இரவினதும் பகலினதும் இடைவெளிக்குள் தான் கதைப்பது சிரிப்பது கலகலப்பது எல்லாம் என்று.

அதற்கிடையில் தான் நேசித்த ஒவ்வொருவரிற்கும் இறுதி விடை கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் ஊரவர்களை , தனது உறவினரை நேசித்த நேசப்பிற்க்குள் எத்தனை புனிதமான உணர்வுகள் பொதிந்திருந்தன. அந்த ஊரவர்களின் துயரம் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல்த் தானே அவனது மூச்சு புயலாக மையம் கொண்டது.

ஒவ்வொருவரையும் மிக மென்மையாக நேசித்த அவனிற்கு ஒரே இரவில் ஒன்பது ஊரவர்கள் கடற்படையால் குதறப்பட்ட சேதியை தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது.




மற்றும் புதியபோராளிகளை வன்னிக்கு பயிற்சிக்காக அழைத்துக் கொண்டுவரும்வேளை இச்சம்பவம் நடைபெற்றது .கடற்படையின் இக்காட்டுமிராண்டித்தனமான செயற்பாடானது கடற்புலிகளை ஒரு பாரிய இக்கட்டில் தள்ளிவிட்டது. அதாவது இக்கடற்படைக்கு அவனது கோட்டைக்குள்ளே வைத்துத் தாக்குதல் நாடாத்தி பழிதீர்ப்பது.இதற்கான வேவுத்தரவுகள் விரைவாகச் சேகரிக்கப்பட்டு போராளிகள் தளபதிகளால் ஆராயப்பட்டு தலைவர் அவர்களிடம் திட்டம் கொடுக்கப்பட்டது.

இவைகளை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் தளபதி கங்கைஅமரன் அவர்களின் நேரடிப் பயிற்சியிலிருந்த சுலோஐன் நீரடிநீச்சல் பிரிவும் அங்கயற்கன்னி நீரடிநீச்சல் பிரிவிடமும் இத்தாக்குதல் திட்டத்தைக் கொடுத்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதல் திட்டத்திற்கான பயிற்சிகளையும் அடிக்கடி வந்து பார்வையிட்டதுடன் சகல ஆலோசனைகளையும் வழங்கினார். ( இப்பயிற்சித்திட்டத்தினை தலைவர் அவர்கள் பார்வையிட படமும் இணைக்கப் பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு அவனின் நெஞ்சத்தை மட்டுமல்ல உயிரையே சுட்டது.

அப்போது அவன் இயக்கவேலை காரணமாக மன்னாரில் நின்றான்.

ஒன்பது இரத்த உறவுகளும் ஒரேடியாக வேட்டையாடப்பட்டனர். என்ற சோகம் தொலைத் தொடர்பு சாதனம் மூலம் தான் அவனிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை நம்ப கஸ்ரமாக இருந்தது.

கடலில் அன்றாடம் மீன்பிடித்து வாழ்க்கை நடத்துகின்ற வெற்றிலைக்கேணி கிராமத்திலா இப்படி......


” அம்பாச் ” சொல்லி வலையிழுக்கும் சத்தமும் , ” ஏலேலோ ” பாடி படகிறக்கும் ஓசையும் , கரைமுட்டி அலைபாடும் ராகமும் காற்றில் சந்தோசமாக கலக்கின்ற ஊரிலா இப்போ ஒப்பாரி ஓலங்கள் …?

கரையிலேயே தவண்டு , அலையிலே நண்டு பிடித்து , கடலிலே தொழில் செய்த மனிதரிலையா இப்போ வெறியாட்டம்.

” அழுகுரலும் , அவலமும் நிறைந்திருக்கும் ஊரிப்பார்த்து , நான் எப்படித் தாங்கிக்கொள்ளப் போறன். ”
ஒரு சில கணத்திற்குள் எத்தனையோ சிந்தனை மின்னலாய் பளிச்சிட்டு மறைந்தன. அன்று வெளியே சென்ற அவன் திரும்பவே இல்லை வெற்றிச் சமரோடு தமிழீத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தான்.

 தலைவரின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட புலனாய்வு அணி எப்படி உருவாக்கப்பட்டது.


28/06/1995 அன்று புலனாய்வு அணிப் பொறுப்பாகயிருந்த திரு நிருபன் மாற்றப்பட்டு கெளதமன் புலனாய்வுப் பொறுப்பாளராக நியமணிக்கப்பட்டார்,

1990 ஆண்டு சந்தோஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட 15 வயது தொடக்கம் 18 வயது வரையான 15 போராளிகள் தலைவரோடு சென்றோம் என முன்னர் குறிப்பிட்டேன்,


 சிவில் புலனாய்வு தொடர்பாகச் சொர்ணம் அண்ணை பல முறை எங்களிற்கு வகுப்பு எடுப்பார். அதாவது ஒரு சைக்கிளில் இரண்டு பேர் படி 3 சைக்கிளில் ஆறு பேர் வெளிக்கிடுவோம். இருவருக்கு ஒரு மைக்றோ பிஸ்ரேல் இருக்கும். உளவாளி என்று சந்தேகப்படுபவரை கை துப்பாக்கி வைத்து இருப்பவர் 10 மீற்றர் தூரத்தில் நிக்க வேண்டும். அடுத்தவர் சந்தேகம் ஆனவரிடம் கிட்டச் சென்று ஆயுதங்கள் உள்ளளவா என செக் பண்ணிப் பார்க்க வேண்டும்.


 பின்னர் அவரைக் கைது செய்யலாம். எக்காரணம் கொண்டும் பொது மக்களிடம் கைத்துப்பாக்கியைக் காட்டக்கூடாது. நாங்கள் இயக்கம் என்றும் சொல்லக் கூடாது. அப்படி ஏதாவது மக்களிடம் ஆயுதங்களைக் காட்டினால் ஆறு மாதச் சமையல் என்று அவரால் எங்களிற்குச் சொல்லப்பட்டது. அதை விட ஒரு கொப்பியும் பேனாவும் கொண்டு செல்ல வேண்டும். நாம் பாதையால் செல்லும் போது அப்பாதையில் நாம் காணும் சம்பவங்கள் எதுவாகயிருந்தாலும் அக்கொப்பியில் எழுத வேண்டும்.


 அதாவது அப்பாதையால் செல்லும் ஐஸ் பழவியாபாரி, மீன் சாவாரி பாதையால் செல்லும் லொறி வாகனம் அனைத்தையும் எழுதிக் கிழமைக்கு ஒரு தடவை சொர்ணம் அண்ணையிடம் கொடுக்க வேண்டும். இது24 மணித்தியாலம் தலைவரின் முகாமைச் சுற்றி கண்காணித்தவாறே இருப்போம்.


இது இப்படி நடந்துகொண்டிருக்க புதிதாக பயிற்சி எடுத்து இளம் போராளிகளை எமது படையணிக்கு சொர்ணம் அண்ணை நிறையப் பேரை எடுத்தார். அதில் குறிப்பிட்ட போராளிகளை இனங்கண்டு அவர்களை ஒரு வீட்டில் வைத்து அவர்கட்கு கிழமையில் இரு தடவை புலநாய்வு ரீதியாக செயற்ப் படுவதற்கான வகுப்பு எடுப்பார்.



 நாளடைவில் யாழ்பாணத்தில் கொய்யாத் தோட்டம் ஒன்று அவர்கட்கு வாங்கப்பட்டது. அடுத்துஅங்கே அவர்கள் விடப்பட்டார்கள. ஆனால் இயக்கம் என்று மக்களிற்குச் சொல்லக்கூடாது மாறாக வேலை ஆட்கள் என்றே  சொல்ல வேண்டும். கிழமையில் ஒரு தடவை சொர்ணம் அண்ணையும் நானும் அங்கே செல்வோம். அப்பொழுது நான் வெளியே நிற்பேன் .சொர்ணம் அண்ணை அவர்கட்கு வகுப்பு எடுப்பார். ஒரு நாள் சென்றோம். கொய்யாப்பழம் சாப்பிட்டு  அவர்களில் ஒரு போராளிக்கு முன் பல்லு அரித்துக்காணப்பட்டது. கோபம் அடைந்த சொர்ணம் அண்ணை அவனின் கன்னத்தில் இரண்டு அறைபோட்டார்.


பின் அனைவருக்கும் புத்தி  சொன்னார். உங்களின் பற்கள் பழுது அடைந்தால் உங்களைப் பொதுமகன் என மக்கள் கருத மாட்டார்கள். மாறாக அவர்கள் வேறுமாதிரி நினைப்பார்கள். நீங்கள் குளித்து முழுகி அழகான உடுப்புப்போட்டுப் பார்ப்பவர்கள் உங்களைக் கவர வேண்டும். மக்களிற்குத் தேவையானவர்களாக உங்களை நீங்கள் இனம் காட்ட வேண்டும். என அவர்கட்குத் தெளிவு படுத்தினார்.

நாளடைவில் வசந் தலைமையில் கொண்டச்சித் தாக்குதல் நடந்தபின் போராளி நிருபன் தலைமையில் ஒரு கொமாண்டோ அணி 1990/11 ஆம் மாதம் நாவற்குழியில் வந்து இறங்கியது எனக் குறிப்பிட்டேன். அதில் வந்த ரெட்ணம் சாவகச்சேரியில் இருந்த எமது படையணித் தடுப்பு முகாம் ஆன புளியடி முகாமிற்குப் பொறுப்பாக விடப்பட்டார். போராளி நிருபன் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் புலனாய்வு அணி மேலாளராகவும் அதாவது இரண்டு வேலை அவருக்கு சொர்ணம் அண்ணையால் வழங்கப்பட்டது.


நாளடைவில் அப்புலனாய்வு அணியை சிறந்த முறையில் கட்டி எழுப்பினார். நிருபன் அண்ணை அது மட்டும் அல்ல மாத்தையா இந்தியாவின் "றோ " புலனாய்வாளர்களின் கதையை நம்பி தலைவரைக் கொலை செய்வதற்கு அவரோடு நின்ற பல போராளிகளை தனக்குச் சார்பாக மாற்றி வைத்திருந்தான். அக்காலப்பகுதியில் இரவோடு இரவாக மாத்தையாவைக் கைதுசெய்து விட்டுத் தளபதி கடாபி தலைமையில் நான் உட்பட மிகவும் குறைந்த போராளிகளோடு தலைவரோடு சென்று கரவெட்டிப் பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தோம்.  அக்காலப் பகுதியில் சொர்ணம் அண்ணையோடு தோளோடு தோள் நின்று அனைத்து சந்தேகத்திற்கு இடமான போராளிகளைக் கைது செய்து விசாரணைக்காக அவர்களை அம்மானிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கடமைச் திறமையாகப் செய்த பெருமை நிருபன் அண்ணையைச் சேரும். அத்தோடு எமது புலநாய்வுப் போராளிகளும் இரவுபகலாக இந்த சிலந்திவலையில் சிக்கியவர்களை மீட்பதற்கு கடுமையாக உழைத்தார்கள்.




28/06/1995 அன்று திருகோணமலைப்பொறுப்பாளராக இருந்த லெப். கேணல் கில்மன் தவறுதலான விபத்தில் வீரச்சாவு அடைந்தார்.

 அதனால் அவரின் பொறுப்பை செய்வதற்காக நிருபன் அண்ணை திருகோணமலைக்கு அனுப்பப்பட்டார். அன்றிலிருந்து தலைவரின் பாதுகாப்பிற்கான புலனாய்வு அணிப்பொறுப்பாளாக  கப்டன் கௌதமன் நியமிக்கப்பட்டார். 19/07/1996  அன்று கெளதமனுக்கு  என்ன நடந்தது பிறகு பார்ப்போம்.



09/07/1995 அன்று அதிபர் சந்திரிகா தலைமையிலான அரசு நவாலி சென். பீற்றர்ஸ்தேவாலயத்தின் மீது விமானத்தாக்குதல் மேற்கொண்டது.


 பாரிய ஒரு இனப்படுகொலையை ஒன்றை மேற்கொண்டது.



இலங்கை பாதுகாப்புப் படையினரால் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின்போது பலியானவர்களின் தொகை அதாவது உடனே உயிர் இழந்தவர்களின் தொகை 65 அதில்  150  பேர் படுகாயம் அடைந்தனர். அதில் சிகிச்சை பலன் அழிக்காமல் இறந்தவர்கள் 53 மிகுதி பேர் உயிர் பிழைத்தனர், அதில் மொத்தம் 118 பெண்கள் குழந்தைகள், முதிவர்கள் என கொல்லப்பட்டனர்.


 யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலையம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதலை நேராகப் பார்த்தவர்கள் தெரிவிக்கையில்,....

அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியிலிருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த "அன்ரநோவ்" விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது..

மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு தேவாலயங்களும் பலத்த சேதமடைந்தன. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட118   பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், சுமார் 150ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ்ப்பாணம், நவாலியிலுள்ள சென். பீற்றர் மற்றும் போல் தேவாலயம், போரிலிருந்து பாதுகாப்பும் அடைக்கலமும் தேடி இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக கழிப்பறைகளை அமைத்தல் உள்ளிட்ட உதவிகளை தேவாலயத்தின் இளைஞர் கழகம் உள்ளிட்ட நவாலியிலுள்ள மக்கள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

 அண்ணளவாக 45 பேர் நவாலி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதிகமானோர் அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்து நவாலிக்கு வருகை தந்தவர்களாவர். அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தான் வீடு சென்றுபார்த்தபோது தனது 18 வயதான மகளின் சடலத்தின் கீழ் தனது உறவினரின் குழந்தை ஒன்றை உயிருடன் கண்டெடுத்தது எப்படி என்பதை பெண்ணொருவர் விபரித்தார். சில சடலங்கள் சில நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன.

 தலைகளற்ற சடலங்கள் நிலமெங்கும் பரந்து கிடந்தன. சில உடல்களின் தலைகள் மரத்தின் மீதிருந்து கண்டெடுக்கப்பட்டன. பல உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி கருகியிருந்தன. அன்றைய தினம் மாலை தான் யாழ்ப்பாணத்திலிருந்து நவாலி நோக்கி சைக்கிளில் பயணித்தபோது, சடலங்களும் அவற்றின் பாகங்களும் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் விபரித்தார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் கத்தோலிக்க பேராயர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியோரை மேற்கோள்காட்டி இக்குண்டுத் தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், பின்னர் இந்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்தது.  எப்படியிருப்பினும் கிராமவாசிகள் 147, 165 மற்றும் 217 என வேறுபட்ட எண்ணிக்கைகளை என்னிடம் கூறினர். சிலர் 300 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றும் கூறினர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள் என்பதாலும் காயமடைந்த பலர் பின்னர் உயிரிழந்ததாலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாகும். எனது நண்பர் ஒருவரின் மாமியும் காயங்கள் காரணமாக பின்னர் உயிரிழந்தவர்களுள் அடங்குவார்.


 மறுநாளும் (ஜூலை 10) அதேபோன்று அதிகமான குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் என்னிடம் கூறினர். குறித்த குண்டுகள் இலங்கை விமானப் படையினாலேயே வீசப்பட்டதாக நவாலியில் நான் சந்தித்த எல்லா மக்களும் என்னிடம் உறுதிபடத் தெரிவித்தனர். வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களில் “வான்வழி குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு” எனக் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. 1995 காலப்பகுதியில் எந்தவொரு வேறு ஆயுதக் குழுவும் வான்வழி குண்டுத்தாக்குதல் நடாத்தும் விமானங்களைக் கொண்டிருக்கவில்லை.

உயிரிழந்த தமது குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதிச் சடங்குகளை உரிய முறையில் நடத்தவோ அல்லது அவர்களை உரிய முறையில் அடக்கம் செய்யவோ முடியவில்லை என பலரும் இன்றுவரை துயரப்படுகின்றனர். சவப்பெட்டிகளைப் பெற்றுக் கொள்வது சிரமமாகவிருந்ததுடன், பல சடலங்கள் ட்ரக்டர் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. சடலங்களை ட்ரக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு அவற்றுள் தனது சொந்த மகனின் சடலத்தையும் காண நேர்ந்தது.

. அத்துடன், காயமடைந்தவர்களை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றுவதும் கடினமானதாகவிருந்தது. காயமடைந்த பெண் ஒருவர், தான் மாதக் கணக்கில் வைத்தியசாலையிலும் வெளியிலும் தங்கியிருந்ததாகவும் ஆனால் இன்று வரை சரியாக நடக்க முடியவில்லை என்றும் என்னிடம் 
கூறினார். அவரது மகளும் மகனும் கூட கொல்லப்பட்டனர். மற்றொருவர், குண்டுகள் தன்னைச் சூழ வீழ்ந்தபோது வீதியில் தட்டையாக வீழ்ந்துகிடந்து உயிர் தப்பினார். சில நிமிடங்களில் அவர் எழுந்து நின்றபோது இரத்தத்தால் நனைந்திருந்தார். யாரோ ஒருவரது இரத்தம் தோய்ந்த கை அவர் மீது வந்து வீழ்ந்தது. எந்தவித உடல் காயங்களுமின்றி அவர் தப்பியபோதிலும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தக் குண்டுத் தாக்குதலானது தேவாலயக் கட்டடம் (கூரை உட்பட), இந்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் அடங்கலாக பல கட்டடங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கத்தோலிக்க தேவாலயம், இந்துக் கோவில் மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட, சேதமடைந்த பல வீடுகள் இன்று மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் நான் அவதானித்த மூன்று வீடுகளில் இன்னமும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன. மற்றொரு வீட்டின் சுவர் ஊடாக தெரியும் துளைகளை அவதானிக்க முடிந்தது. இரும்புக் கதவொன்று பல நூறு மீட்டர்கள் தூரம் தூக்கி வீசப்படுமளவுக்கு குண்டுகளின் தாக்கம் மிகப் பெரியதாகும்.

இதே விமானம் தீவகப்பகுதியில் தாழப்பறப்பதாக தமிழீழத் தேசியத்தலைவருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அறிந்த தலைவர் தளபதி கடாபி அவர்களைக் கூப்பிட்டு நேரடியாக நீரே சென்று இலக்குத் தவறாமல் சுட்டு வீழ்த்துமாறு கட்டளை வழங்கினார். கட்டளையை ஏற்ற கடாபி அண்ணை விமான எதிர்ப்பு ஆயுதத்துடன் ஒரு மீன் வோட்டில் கரையை நோக்கிச் சென்றுகொண்டுயிருந்தார். ஆனால் வளமையாக வாற நேரத்திற்கு 30 நிமிடம் முன்னரே அவ்விமானம் வந்துகொண்டிருந்தது வோட்டில் இருந்தவாறே அவ்விமானத்தை சுட்டு வீழ்தினார் தளபதி கடாபி அண்ணை. அன்றைய நாள் அவ்விமானத்தோடு சேர்த்து அவ்விமானிக்கும் சாவொறுப்பு வழக்கப்பட்டது. இதை அறிந்த எமது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.


14/07/1995 

14.07.1995 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சலும் பின்னோக்கிப் பாய்ந்த இராணுவமும்…!


சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், இதுவரை காலமும் நடைபெற்ற சண்டைகளில், யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற அரசாங்கம் நடத்திய “முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை பல்வேறு காரணங்களினால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இராணுவம் குடாநாட்டின் மீது நடத்திய “பவான்” இராணுவ நடவடிக்கையை விட இது அழிப்பிலும், ஆக்ரோஷத்திலும் குறைவாகவும், சிறிலங்காவின் “ஒப்பரேஷன் லிபரேஷனை” விடப் பாரியதாகவும் இருந்துள்ளது. “பவான்” நடவடிக்கையில் உலங்கு வானுர்த்திகளால், ஏவப்பட்ட எறிகணைகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும், முன்னேறிய படையினராலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் கொல்லப்பட்ட, 6000 – 8000கும் இடைப்பட்ட பொதுமக்களில், “பவான்” நடவடிக்கையின் போதே பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் தரைப்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டது எல்லாக் கொலைகளுக்கும் சிகரமாய் அமைந்தது. “முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையில், ஷெல் வீச்சுக்களினாலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு ஷெல்லாவது விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொலைச் செயல்களுக்கு மகுடம் வைத்தது போல் இருந்தது. இந்திய அரசாங்கத்தின் பூரண ஆசியுடனேயே இக்கொலைகளும் நடத்தப்பட்டன என்பது முக்கிய விடயமாக உள்ளது. இவ் இராணுவ நடவடிக்கையின் போது 247 பொதுமக்கள் கொல்லப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 470 பேர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புக்களை இழந்தார்கள். கொல்லப்பட்டவர்களில், 65 பேர் குழந்தைகளாக உள்ளனர். இறந்து, காயமடைந்தவர்களில் அரைவாசிக்கு மேல் பெண்களும், வயது முதிர்ந்தோர்களும் ஆவார். தேவாலயம் மீதான தாக்குதலில் மட்டும் 120 பொதுமக்கள் இறந்தனர். அங்கு இறந்த 20 சிறார்களில் 13 பேர் கைக்குழந்தைகளாகவும் உள்ளனர்.

யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பலாலியிலிருந்து அச்சுவேலி, சங்கானை, சண்டிலிப்பாய், அளவெட்டிக்கூடாக ஒரு பெரும் அணியும், மாதகலிலிருந்து இன்னொரு பேரணி, கரையோரமாக காரைநகருக்கூடாகவும், ஊர்காவற்துறையில் இருந்து அராலிக்கூடாகவும் இன்னொரு அணியும் வந்து வட்டுக்கோட்டை, துணாவி ஆகிய இடங்களில் சந்திப்பதே முதற்கட்ட நடவடிக்கையாகும். பின்னர் அராலியிலிருந்து, அனைத்து அணிகளும் கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளிக்கூடாக யாழ். நகரை நோக்கி வந்து அதனைக் கைப்பற்றுவதாக இராணுவத் திட்டம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 09ம் திகதி காலை “முன்னோக்கிப் பாய்தல்” என்ற குறியீட்டுப் பெயருடன், 4 பிரிகேட் படைப் பிரிவுகளைக் கொண்டதான 10000க்கு மேற்ப்பட்ட இராணுவத்தின் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அப்போதே இப்போர் நடவடிக்கையின் தோல்வியைத் தேசியத் தலைவர் பிரபாகரன் தீர்மானித்து விட்டதாகக் கருதுகிறேன். பின்னர், எப்படி? எங்கு? எந்த நேரத்தில் இராணுவத் தோல்வியை முற்றுப் பெறச்செய்ய வேண்டும் என்ற அம்சங்களை தலைவர் தீர்மானிப்பதும், அதனை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துவதுமே எஞ்சி இருந்தன.

முதலில், இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் ஜனாதிபதிப் பதவியை அகற்றப் போவதாக தேர்தல் காலத்தில் பகிரங்கமாக கூறிய போதிலும், சகல வல்லமை பொருந்திய அப் பதவியை விட்டுவிட ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு மனம் ஒப்பவில்லை. ஜூலை 15ம் திகதிக்குள் அதனைச் செய்வதான காலக்கெடு நெருங்கிவந்து கொண்டிருந்தது. எனவே இப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவும், இராணுவ வெற்றி ஒன்றுடன் ஏனைய பிரச்சினைகளைச் சமாளித்து தனது அரசியல் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஜனாதிபதி சந்திரிக்கா விரும்பினார். எனவே தான் உக்ரேனிலிருந்து வருவதாக இருந்த AN – 32 துருப்புக்காகவும் விமானங்கள் போன்ற இராணுவத் தளபாடங்கள் முழுமையாக வந்திறங்கும் முன்னரே இராணுவ நடவடிக்கையைத் தொடங்க அரசாங்கம் விரும்பியது. எனவே தான் “இந்தியா டுடே”க்கு அளித்த பேட்டியில் சந்திரிக்கா கூறியிருந்தது போன்று, “ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்படும். அப் பகுதியே துடைத்தழிக்கப்படும்” என்று தெரிந்தும் இராணுவ நடவடிக்கையை அவர் அவசரப்படுத்தித் தொடங்கினார்.

இத்தகையதொரு இராணுவ நடவடிக்கை குடாநாட்டின் மீது ஆரம்பமாகப் போவது. மேற்கூறிய உள்ளூர் அரசியல் நோக்குக் காரணமாக ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. எந்தத் திகதி என்பது தான் தெரியாது இருந்தது. எனவே இதனை எதிர்கொள்ள புதிய போராளிகள் ஏராளமானோரைச் சேர்த்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தையும், சர்ந்தர்ப்பத்தையும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தது. மேலும் மண்டைதீவு மீதான முன் எச்சரிக்கையான தாக்குதல், அரசாங்கத்தின் இராணுவ தந்திரோபாயத்தில் பெரும் ஒரு அடியாகவும், ஓட்டையாகவும் அமைந்தது. (மண்டைதீவு தாக்குதல் தொடர்பான கட்டுரையை நோக்கவும் விரைவில் தேசக்காற்றில் இணைக்கப்படும்) எனவே, இராணுவம் பலாலியிலிருந்து பெரும் படை நகர்வை, கிடுக்கி போன்ற வடிவமைப்பில் (pincermovemenr) நடத்த வேண்டியிருந்தது. மண்டைதீவில் இருந்தோ ஏனைய முகாம்களில் இருந்தோ ஒரே நேரத்தில் புறப்படும் கடந்த கால நடவடிக்கை, இம் முறை கைக்கொள்ளப்படாது, பலாலியிலிருந்து பெரும்படை நகர்வை திட்டமிட்ட ரீதியில் வழிநடத்துவது என்ற நோக்கத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். இங்கு தான் இப்படை எடுப்பின் தோல்விக்கான பலவீனம் இருந்தது. அப்பலவீனத்தை தேசியத் தலைவர் மிக நுட்பமகாக, அவகாசமாக பயன்படுத்திக் கொண்டதே, போர் நடவடிக்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அது சிறீலங்காவின் “முன்னோக்கிப் பாய்தல்” என்ற தாக்குதல் நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் “புலிப்பாய்ச்சல்” என்ற தாக்குதல் நடவடிக்கைக்கு வழி வகுத்தது.

போர் நடவடிக்கையில் விநியோகம் என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மரபு ரீதியான போர்முறையில் இதன் பங்கு இன்னும் அதிகமானது. படை எடுக்கும் இராணுவப் பேரணி, எவ்வளவு நீளமாக்கப்படுகின்றதோ, எவ்வளவு பரவலாக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு விநியோகம் என்பது சிக்கலடைகிறது. புதிய துருப்புக்கள், புதிய ஆயுத தளபாடங்கள், வெடிபொருட்கள், உணவு வகைகள் ஆகியவை தொடர்ந்து சண்டைக் களத்துக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருத்தல் வேண்டும். அல்லது படையணிகளில் சீர்குலைவு ஏற்பட்டு விடும். சிறீலங்காவை பொறுத்தவரை, கடற்புலிகளின் செயற்பாட்டால், மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டே விநியோகங்கள் ஓரிருமுறை குடாநாட்டு முகாம்களுக்கு வழங்கப்பட்டன. (Avro) அவ்ரோ விமானங்கள் வீழ்ந்ததன் காரணமாக விமானப் போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தன. தரைவழிப் போக்குவரத்து முற்றாக இல்லை. எனவே ஓர் அளவில் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட விநியோகங்கள், படையணிகள் கடக்கிற தூரம், காலம் என்பதைப் பொறுத்து குறையத் தொடங்குகின்றன. இப்படியான ஒரு நிலையே சிறீலங்கா இராணுவத்துக்கு 14ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அதாவது நடவடிக்கை தொடங்கி 6ம் நாள் ஏற்பட்டிருந்தது.

இச் சர்ந்தப்பத்தையும், பொருத்தமான இடத்தையும் தக்கியதில்தான் பிரபாகரனின் போர்த்தந்திரம் அடங்கியுள்ளது. தாக்கிய இடங்கள், இராணுவப் பேரணியின் கட்டளை, விநியோக மையமாக மாற்றப்பட்டு, தற்காலிக முகாம்களாக அமைந்திருந்த அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளாகும். இதில் அடிப்பது தலையிலும், வயிற்றிலும் அடிப்பதைப் போன்றது. இதன் போது 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், 4 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 17 கனரக கவசவாகனங்கள் இராணுவ விநியோகங்களோடு புலிகளால் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த இராணுவ விநோயோகங்கள் அனைத்தையும் புலிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார். மிகவும் தேவையான நேரத்தில் தமது விநியோகங்களை இழப்பது மட்டுமல்ல, எதிரிக்குக் கொடுப்பதும் இரண்டு தரம் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. புலிகளின் இத்தாக்குதலோடு, முதுகெலும்பு முறிந்து நகர முடியாத நிலை அரச படைகளுக்கு ஏற்பட்டுவிட்டது. இதன் பிறகு பின்னோக்கிப் பாய்தலைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

முன்னோக்கி மேலும் நகர முடியாத நிலைமைக்கு அன்றையதினம் "புக்காரா"  குண்டுவீச்சு விமானம் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதும் முக்கிய காரணம். வழமையாக மரபு இராணுவங்கள் செய்வது போன்றே, முன்னேற உள்ள பகுதிகள் மீது இடைவிடாத எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, சிறீலங்கா இராணுவ அணிகளும் முதல் 6 நாட்கள் முன்னேறின. அரசாங்கம் திட்டமிட்டவாறு, 3 இராணுவ அணிகளும் வட்டுக்கோட்டைப் பகுதியில் சந்தித்துக் கொண்டன. இனிமேல், யாழ்நகர் மீது தாக்குதல் நடத்துவது குறித்த ஆயுதங்களைச் செய்துகொண்டிருக்கும் போதே திருப்புமுனையான, சண்டையின் திசையே முற்றாகத் திரும்பிவிடும்படியான விடுதலைப்புலிகள் தாக்குதல் இடம்பெற்றது. உணவு தளபாட விநியோகம், புதிய துருப்புக்களை பொருத்தமான இடங்களில் இறக்குதல், காயப்பட்டோரை அப்புறப்படுத்தல், இராணுவ அதிகாரிகளின் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விமானங்களை, உலங்குவானூர்திகளை பயன்படுத்த முடியாத நிலை, "புக்காரா"வின் வீழ்ச்சியுடன் ஏற்பட்டது. "புக்காரா" வீழ்ந்ததன் பின்னர், குடாநாட்டு காலப்பகுதிகளில் எவ்வித விமானங்களும் பறக்காதது குறிப்பிடத்தக்கது.

ஒரு சண்டையின் வெற்றிக்கு, எதிர்பாராத திடீர்தாக்குதல் கணிசமான பங்கை வகிக்கிறது. முதற்கட்ட நடவடிக்கை பெரும் இழப்புக்களின்றி முடிவுற்ற திருப்தியில் இராணுவம் இருந்தது. இராணுவ அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாண நகரைப் பிடிக்கும் கனவுகளில் மிதந்தனர். “விடுவிக்கப்பட்ட” பகுதிகளுக்கு எண்ணெய், மின்சாரம், உணவுப்பொருட்களை, புனர்வாழ்வு அமைச்சரை அனுப்பி அவர் மூலமே விநியோகிக்க அரசாங்கம் முடிவெடுத்தது. புலிகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டு போய் வைத்தால், சனங்கள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து, அவர்களை மீறிக்கொண்டு உணவுக்காக இராணுவப் பகுதிகளுக்கு ஓடிவருவார்கள் என்ற கருத்தும் அப்போது சந்திரிக்கா அம்மையாரால் வைக்கப்பட்டது. புலிகள் எல்லோரும் ஓடிப்போய் அகதி முகாம்களில் இருப்பதாகவும் ஒரு கதை பரப்பப்பட்டது. பிரபாகரன் வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டு அரசாங்கத்தின் காலில் விழுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறு பலூன் போன்று பூரித்த இராணுவத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்து புறப்பட்ட பிரதான அணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் கரையோரமாக உள் நுழைந்த அணிமீதும், ஊர்காவற்துறையிலிருந்து அராலிக்கூடாக உள் நுழைந்த இராணுவ அணிமீதும் “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கை என்ற பேரில் பிரபாகரனின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இச் சண்டைகள் வலிகாமம் மேற்குப் பகுதியில் நடந்தன. கடுமையான எதிர்த் தாக்குதல்களைத் தாங்கமுடியாத இராணுவம் பின்வாங்கித் தமது முன்னைய நிலைகளுக்குள் சென்று முடங்கிக்கொண்டது. இச் சண்டைகளின் போது 150க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத்துடன் சிறீலங்காவின் (முன்னோக்கிப்பாய்தல்) நடவடிக்கை தோல்வியில் முற்றுப்பெற்றது. ஆயினும் 16ம் திகதி ஞாயிறு காலை, “புலிப்பாய்ச்சல்” ன் ஒரு அம்சமாக காங்கேசன் துறைமுகத்தினுள் தரித்து நின்ற கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டன.

மண்டைதீவுத் தாக்குதல், சிறீலங்கா இராணுவ நடவடிக்கைக்கு முன் எச்சரிககியாக நடத்தப்பட்டது. என்று கூறினால், காங்க்கேசந்துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பின்வரக் கூடிய தாக்குதல்களை எச்சரிக்கையாகக் கொண்டு நடத்தப்பட்டது என்று கருதுகிறேன். கடற்புலிகள் என்ற படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 4 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த மிகப்பெரிய கடற்சண்டை இதுவென வர்ணிக்கப்படுகிறது.

இதனைக் கடற்புலிகள், கடற்கரும்புலிகள் அணி, சுலோஜன் நீரடி நீச்சல் அணி ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன. ராடர் பொருத்தப்பட்டு கண்காணிக்கும், கட்டுப்பாட்டுக்கும் பயன்பட்ட “எடித்தாரா” என்ற கட்டளைக் கப்பலும், இராணுவத்தினரை கடல்மார்க்கமாகத் தரையிறக்கும் பாரிய கப்பலுமே தெரிந்தெடுத்து மூழ்கடிக்கப்பட்டுள்ளன. கடற்சண்டையின்போது பல கப்பல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சிறீலங்காவின் கடல் வழிச்செயல்பாட்டை, இனிவரும் காலங்களில் கணிசமான அளவு குறைக்கும் நோக்குடனேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக ஊகித்துக் கொள்ளலாம். அரச ஆயுதப்படைகளின் மனவுறுதி இவற்றால் தளர்ந்துள்ளதையும் அவதானிக்கலாம். இவ் இராணுவ நடவடிக்கையால், அரசாங்கம் சாதித்தது ஒன்றுமில்லை. சிறீலங்காவின் முன்னைய இனவாத தலைமைகளைப் போன்றே, இராணுவத் தீர்வை பரிசீலித்துப் பார்த்து தோல்வி கண்ட நிலையில் சந்திரிக்கா உள்ளார்.

அவரது அரசியல் சரித்திரம் மேலும் பலவீனமடைந்துள்ளது. சமாதானத் தூதுவர் என்ற தோற்றம் அகன்று, மரண தேவதை என்ற உண்மைத் தோற்றம் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து பிரித்து, அவர்களின் மனங்களை வென்று, அவர்கள் விரும்பும் தீர்வை வழங்குதல் என்ற என்ற அவரின் வார்த்தைகள் இரத்தக் குளிப்பாள் முழ்கடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை விடுதலை செய்தல் என்பது அவர்களைப் பரலோகத்துக்கு அனுப்புதல் என்றும், அமைதி என்பது தமிழ்பகுதிகளில் மயான அமைதியைத் தோற்றுவித்தல் என்றும் அர்த்தங்களை இந்த இராணுவ நடவடிக்கை தந்துள்ளது. இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும், அவசரகால பொதுத்தொண்டு நடவடிக்கைகளிலும், தமிழ் மக்களின் செயல்ப்பாடுகள் பூரணமாக இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியே தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை, மனிதாபிமான அமைப்புக்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றின் பலத்த கண்டனத்தை சந்திரிக்கா அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டது. இனப்படுகொலையும், சிங்கள மேலாதிக்கமும் தான் சந்திரிக்கா அரசாங்கத்தினதும் தீர்வு என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டது.

நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் அதேவேளை, கிளர்ச்சிக்காரரையும் அவர்களது தலைவர்களையும், ஆதரவளிக்கும் பொதுமக்களையும் எவ்வளவு கொல்ல முடியுமோ அவ்வளவுக்கு கொல்ல வேண்டும். இதுவே இறுதி வெற்றிக்கு வழி என்றரீதியில் அரச இராணுவம் செயற்பட்டது. மிகப்பெரும் படை எடுப்பை மிகக் குறுகிய நாளில் மிகக்குறைந்த போராளிகளின் (80 போராளிகள்) இழப்புக்களுடன் முறியடித்தது. போர்க்கலை பற்றிய ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படப் போவது உண்மை. நவீன உலகின் தலை சிறந்த கொரில்லாத் தலைவர் என்ற பெருமையும் எமது தேசியத் தலைவருக்கு இது பெற்றுத்தரும் என்று நிச்சயம் நம்பலாம்.

“முன்னோக்குப் பாய்தல்” நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் மரபு ரீதியான இராணுவம் போன்று செயல்படவில்லை என்று எதிரான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் தன்னளவில், மரபுரீதியான, ஒழுங்கமைந்த இராணுவமாக வளர்ச்சி பெற்று வருகின்ற போதிலும், சிங்கள இராணுவத்துடனான பாரிய சண்டைகளின் போது கொரில்லா உத்தி ரீதியிலேயே சண்டையிட வேண்டும். எப்போதுமே ஆயுதபலம், ஆட்பலம் கூடிய நிலையில் உள்ள சிறீலங்கா இராணுவத்துடன் குறைந்த ஆள், ஆயுத என்னிக்கையுடனான போராளிகள் மரபுரீதியில் மோதுதல் தற்கொலைக்கு ஒப்பாகும். இவ்வாறு சர்ந்தப்பத்துக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றும் தன்மை (flexibility) கொரில்லா இராணுவத்தின் சிறப்புத் தன்மையே தவிர குறைபாடு அல்ல. விடுதலைப் புலிகள், சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பகுதிகளை விட்டு விலகியது உத்தி ரீதியான (tactical) பின் வாங்களே தவிர, தந்திரோபாயத் திட்ட அடிப்படையிலான (strategic) நகர்வே. சிறிலங்கா இராணுவப்படைகள், தமது இராணுவ நடவடிக்கையின் இலக்கை அடையமுடியாது (யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுதல்) தமது பலாலித் தளத்துக்கு பின் வாங்கியதையே நாம் தந்திரோபாயத் திட்ட அடிப்படையிலான பின்வாங்கல் என்று கூறலாம்.


  20/07/1995 அன்று கொக்குத் தொடுவாய் முகாம் தாக்கியதால்அதில் 180 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்.

28.07.1995  18 தொடக்கம் 20 வரையான இளைஞர் யுவதிகளை அனைத்து மாவட்டங்களிலும் இருந்து எடுத்து தலைவர் சிறுத்தைப் படையணி உருவாக்கினார் எனவும், அதற்குப் பொறுப்பாக ராஜீவ் அண்ணையும் பயிற்சி ஆசிரியராக செல்லக்கிளியும் இருந்தார்கள் என முன்னர் குறிப்பிட்டுயிந்தேன். அவர்கட்டு என்ன நடந்தது என்று இப்பொழுது பார்ப்போம்.



மணலாற்றில்  அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழிக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள். அதற்கான மாதிரிப் பயிற்சிகளும் நிறைவிற்கு வந்தது. ஆனால் இதன் வேவு நடவடிக்கையில் துணைப் படையினரையும் இணைத்துக்கொண்டார்கள். இந்தத் துணைப்படை வீரன் எந்தப் பக்கத்தால் இராணுவத்தை தாக்கவருவருவார்கள் விடுதலைப் புலிகள்  என்ற தகவலை இராணுவ அதிகாரிகளிற்குத் தெரியப்படுத்தி விட்டான், அதனால் இராணுவமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது,.....


அச்சண்டைக்கான கட்டளைத்தளபதி சொர்ணம் அவர்களும் பெண் போராளிகளின் நேரடிக் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் கோமளா அவர்களும் நியமிக்கப்பட்டனர். கொமாண்டோ பயிற்சி எடுத்த 200 றிற்கு மேற்பட்ட போராளிகளே உள்ளே இறங்கி கேம்பைப் பிடிப்பது எனத் திட்டம் தீட்டப்பட்டது. 28.07.1995  அன்று இரவு தளபதி சொர்ணம் கட்டளை வழங்க லெப். கேணல் கோமளா தனது பெண் போராளிகளைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தார். எதிர்பார்த்துக் கொண்டிருந்த லெப்ரினன் ஜெனரல் ஐனகப்பேரேரா தலைமையிலான இராணுவ வீரர்கள் செறிவான சூட்டை வழங்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையும் போதே கேணல் கோமளா உட்பட 180 கோமாண்டோ பயிற்சி எடுத்த பெண் போராளிகள் கொல்லப் பட்டனர்.



. எனினும் சில காட்டிக்கொடுப்புக்களால் இத்திட்டம் வெற்றியளிக்காத போதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.

 

தொடர்ந்து வீரச்சாவு அடைந்த பெண்போராளிகளின் பெண் உறுப்புக்களில் பெரிய பெரிய கட்டைகள் இறுக்கி செத்தவர் என்றும் ஒரு மனித இரக்கம் அல்லாமல் அவர்களின் உடல்கள் கத்திகளால் வெட்டி துண்டு துண்டாகக் கொடுமைப்படுத்தி பின்னர் ICRC ஊடாக 180 போராளிகளின் உடல்களும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் இவ்வித்துடல்கள் இராணுவ மரியாதையுடன் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டது. அடுத்து காட்டிக் கொடுத்த துனைப்படை வீரனைப்பிடித்து விசாரணை  முடிந்தபின் அவருக்குச் சாவொறுப்பு வழங்கப்பட்டது. இத்துடன் பெண் கொமாண்டோ அணியின் செயல்பாடு நிறைவிற்கு வந்தது. இதில் எஞ்சியிருந்த சில குறிப்பட பெண் போராளிகளிற்கு போராளி ஆரவி பொறுப்பாகயிருந்தார்.

20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

 மாதகல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோர் வீரச்சாவு அடைந்தனர்.  வலிகாமம் பிடிபட்டுக்கொண்டிருந்த காலத்திலே இந்த வீரர்களின் தியாகம் நடந்தது.



கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதகல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்கா முடித” மீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர்.


கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில்......


கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி

(வல்லிபுரம் நகுலேஸ்வரன் – பளை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா)

(கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் – மண்டைதீவு, யாழ்ப்பாணம்)

அடுத்த நடவடிக்கை


மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில்


கடற்புலிகளின் முல்லை மாவட்டச் சிறப்புத் தளபதி

கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்)

(இராமசாமி இராஜ்பவான் – அல்வாய், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் செவ்வானம்

(கிருஸ்ணபிள்ளை சுமதி – மூளாய், யாழ்ப்பாணம்)


,

22/09/1995 அன்று அதிபர் சந்திரிகா தலைமையிலான அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலையை மேற்கொண்டது. அது நாகர் கோவில் பாடசாலைமீது மேற்கொள்ளப் பட்டது. 






1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 06.30 மணியளவில் நான் வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்ற போது காலை 07.30 மணியளவில் மணற்காட்டில் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது.அப்போது "உந்தப் பக்கம் போகாதேயுங்கோ" சேர் எனச் சிலபேர் கூறினார்கள். அப்போது நான் "புக்காரா" போயிடும், பிள்ளைகள் பாடசாலைக்கு வருவார்கள் எனக் கூறிவிட்டுப் பாடசாலைக்கு வந்து சேர்ந்தேன்.

அன்றைய தினம் சரஸ்வதிப் பூஜையை நடாத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டியிருந்தமையால் காலையில் எமது கூட்டம் இடம்பெற்றது. அதில் உமாதேவி என்ற சிறுமி மிக அழகாக சில நற்சிந்தனைகளைக்   கூறியிருந்தார். அனைவரும் அவரைப் பாராட்டியிருந்தார்கள். பின்னர் முற்பகல்11.15 மணியளவில் பாடசாலையில் இடைவேளை விடப்பட்டது.



மாணவர்கள் வீடு சென்று  மீண்டும் திரும்பி வந்து விட்டார்கள். இதன்பின்னர் எங்களில் சில ஆசிரியர்கள் ஒன்றுசேர்ந்து சரஸ்வதி பூசையை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தோம். அந்தவேளையில் செம்பியன்பற்றுக்கு அண்மையில் ஒரு குண்டுச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்திலேயே எங்களுடைய பிள்ளைகள் கதிகலங்கி விட்டார்கள்.

பெற்றோர்கள் அழைக்கும் சத்தம் கேட்டுப் பல மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே போய்விட்டார்கள். இந்தநிலையில் தான் எமது பாடசாலைக்கு நேராக புக்காரா விமானங்களின் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றது.  அந்த வேளையில் நானும், எனது ஆசிரியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் கதி கலங்கி விட்டோம். பாடசாலைக்கு முன்பாக ஓடிய சில சிறுவர்கள் தாக்குதல் காரணமாக அவ்விடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்தநிலையில் தான் நாங்கள் பயந்தவாறு பாடசாலைக்கு மேற்குப் பக்கமாக ஓடினோம். காட்டுக்குள் ஒழிந்ததால் விமானத் தாக்குதலிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்ற எண்ணத்தில் தான் நாம் இவ்வாறு செயற்பட்டோம். இதன் பின்னர் மீண்டும் அவ்விடத்தைச் சுற்றிவந்த "புக்காரா" தாக்குதல் நடாத்தியது. அப்போது எனக்குப் பக்கத்தில் நின்ற பழனி எனும் மாணவன் சேர் பயப்படாதையுங்கோ என்று கூறினான்.



அவன் அவ்வாறு கூறி ஓரிரு நிமிடங்கள் தான் கடந்திருக்கும். திடீரென அவனுடைய தலையிலிருந்து இரத்தம் வரத் தொடங்கி விட்டது. பின்னர் "புக்காரா" அங்கிருந்து சென்ற பின்னர் மீண்டும் பாடசாலைக்குள் சென்றோம். அங்கு 65 மாணவர்கள் வரையானோர் காயமடைந்திருந்தனர். இதற்கிடையில் இந்தக் கிராமத்திலிருந்த பெரியோர்களும், கிராமத்தைச் சுற்றியிருந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து காயப்பட்ட எமது பிள்ளைகளைத் தமது வாகனங்களில் ஏற்றி மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள்.



19 மாணவர்கள் காயம் காரணமாக உடனடியாகவே இறந்துவிட்டார்கள். இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், அவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.




நான் மந்திகை வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது பல மாணவர்களை இரத்தம் ஒழுகிய நிலையில் படுத்தியிருந்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இறந்தநிலையில் தான் காணப்பட்டார்கள். ஆனாலும், என்னுடைய பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

விமானத் தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் நடாத்தப்படாமல் அவர்களது பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் உடல்கள் கையளிக்கப்பட்டன. இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் காரணமாக மூன்று நாட்களாக நான் வீடு செல்லாமல் கொல்லப்பட்ட மாணவர்களின் வீடுகளிலேயே நான் தங்கியிருந்தேன். இதன்  பின்னர் மாணவர்களின் வரவின்மையால் இந்தப் பாடசாலை பல நாட்களாக இயங்கவில்லை.

மிகுந்த துயர் மிக்க இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் இந்தப் பாடசாலையின் அதிபராக நான் கடமையாற்றியதை நினைத்து இன்றுவரை நான் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

விமானத் தாக்குதல் இடம்பெற்ற போது இந்தப் பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றவரும்,  தற்போது பருத்தித்துறைப் பிரதேசசபை உறுப்பினராகவுமுள்ள ஆ. சுரேஸ்குமார் தாம் சந்தித்த நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அக்காலத்தில் இந்தப் பாடசாலை இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடசாலை மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட போது நான் இங்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றேன்.

நாகர்கோவில் கிராமத்தைப் பொறுத்தவரை எங்களுடைய பிரதான வாழ்வாதாரத் தொழிலாக கடற்தொழிலே இருந்து வருகிறது. இந்த நிலையில் நாங்கள் இந்தப் பாடசாலையில் படிக்கும் காலத்தில் எமக்கென சில சலுகைகளை எமது ஆசானாகவும், தந்தையாகவும் செயற்பட்ட மகேந்திரம் சேர் வழங்கியிருந்தார்கள். நீங்கள் கடற்தொழிலுக்குச் சென்றாலும் பாடசாலைக்கு வருகை தராமல் நின்றுவிடக் கூடாது. தொழிலுக்குச் சென்றுவிட்டு ஒரு பாடவேளை கடந்த பின்னரும் நீங்கள் பாடசாலைக்கு வரலாம். உங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.இப்படி கஸ்ற்றப்பட்டு வளர்ந்த நாங்கள் எனக் கூறி தனது ஞாபங்களை நினைத்து அவர் கவலையடைந்தார்.


17/10/1995 "சூரியக் கதிர்" ராணுவ நடவடிக்கை. என்ற பேரில் மக்கள் வாழ்விடர்களை நோக்கிப் பாரிய செல் மற்றும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டது சிங்களப் படை.

 அதனால் 30/10/1995 விடுதலைப்புலிகளின் கோட்டையாகயிருந்த வலிகாமம் இடம் பெயர்வு அன்றுநடந்தது.

உலக வரலாற்றில் எந்த ஒரு இனமும் சந்தித்திராத பாரிய இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்தார்கள். 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி இந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இதற்கு காரணமாக இருந்தது தான் அன்றைய இலங்கை அதிபர் சந்திரிகாவின் ‘சூரியக் கதிர்’ ராணுவ நடவடிக்கை. இந்த சூரியக்கதிர் நடவடிக்கை 1995 அக்டோபர் 17 ல் தொடங்கப்பட்டது.



இந்த நடவடிக்கையை முறியடிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் தளபதி சொர்ணம் தலைமையில் இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தினார்கள். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அதனால் பின் வாங்குவதைத்தவிர விடுதலைப் புலிகளிற்கு வேறுவழி இருக்க வில்லை.



அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள். யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.


காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். 



ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டுத் தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.


ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது?என்ன செய்வது? என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது எனப் பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.


8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.


யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.


யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.


ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப் போனது வீதி. இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.


ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று. அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தது. 


இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று. தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்திப் பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்தச் சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.



அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.


24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.


காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும். அதே வலி இன்று ….


 இது இப்படி இருக்கத் தலைவருக்கு என்ன நடந்தது எனப் பாகம் ஐந்தில் பார்ப்போம்,........








a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...