உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க
செவ்வாய், 29 நவம்பர், 2022
mother a143 கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்
புதன், 23 நவம்பர், 2022
mother a 142 பிரிகேடியர் தமிழேந்தி
தமிழீழ நிதிப் பொறுப்பாளர்
(சபாரத்தினம் செல்லத்துரை)
யாழ் மாவட்டம்
10.03.1950 – 10.03.2009
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் .
10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் வீரவணக்க நாள்.
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் முன்றாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.
மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.
பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.
இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.
இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.
செவ்வாய், 15 நவம்பர், 2022
mother a 141 பகீர் காணொளி! வியட்னாமில்லிருந்து இளைஞர்கள் Video வாக்குமூலம் -...
வியாழன், 3 நவம்பர், 2022
mother a 240கரும்புலி லெப் கேணல் போர்க்
கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் 30 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்…!
“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க்
வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.
இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மாங்குளம் முகாமைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும். எனவே நான்தான் சக்கை லொறி கொண்டு போகவேணும் என போர்க் சொன்னான்.
அந்தக் குரலில் உறுதி தெரிந்தது”போர்க் போராட்டத்திற்குப் புதியவரல்ல. அவர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர். பல தாக்குதல்களை முன் நின்று வழிநடத்தியவர்”. தளபதி பால்ராஜ் மேலும் தொடர்கையில் “1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் அண்டைக்குத்தான் போர்க் கரும்புலியாய்ப் போனவர். புறப்படமுன் கடைசியாக என்னைக் கட்டியணைச்சு, “நான் புறப்படுறன் இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” என்று சொல்லிப்போட்டு, வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுது. முகாம் தகர்ந்தது பிறகு சில மணி நேரத்தில்”முகாம் கைப்பற்றப்பட்டது” என்றார்.
கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் ….
இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, போர்க் அண்ணை விடுமுறையில் வீட்டுக்குச் சென்றார்.
அவரது கிராமம் சிங்கள எல்லையில் அமைந்துள்ளது. அது வன்னியிலுள்ள சேமமடு. சிறு வயது தொட்டு நடந்து திரிந்த, அக்கிராமத்தில் குளம், வயல், காடு என்று ஒவ்வொன்றையும் சுற்றி ரசித்தார். இல்லை அவற்றிடமிருந்து விடைபெற்றார். அந்த நாட்களில் ஒரு நாள் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்விடத்திற்குச் சென்று ஓர் மரக்குற்றியில் அமர்ந்தவாறு போர்க் அண்ணை கேட்டார்.
“ தம்பியவை, மாவீரர்நாள் வருதெல்லோ? தற்செயலா நான் செத்துப்போனா அண்டைக்கு என்ன செய்வியள்?” ‘ஏன் சாகப் போறியளோ’ பதில் கூறினர் பிள்ளைகள். போர்க் அண்ணையும் சிரித்தபடி “தப்பித்தவறி நான் செத்துப்போனா என்ர நினைவா ஆளுக்கொரு மரம் நட்டு வளவுங்கோ என்ன ”
அவர்கள் சிரித்தனர், போர்க் அண்ணையும் சேர்ந்து சிரித்தார். வீட்டிலிருந்து புறப்படும் இறுதி நாள் வந்தது. மதியம் உணவருந்திவிட்டு விறாந்தையில் பாயைப் போட்டுப்படுத்தார். சற்றுத்தள்ளி போர்க் அண்ணையின் அம்மாவும் படுப்பதற்காக, தரையில் பாயைப் போட்டார். “அம்மா இதில வந்து, எனக்குப் பக்கத்தில பாயைப் போடணை” போர்க்கண்ணை கேட்டார். அம்மாவும் வந்து அவரின் தலையை வருடியவாறு இருந்தார்.
அன்று பின்னேரம் அப்பா, அண்ணன்மார், தம்பிமார், அன்புத் தங்கை என்று எல்லோரிடமும் விடைபெறுகிறார்.
கடைசியாக தாயாரிடம் வந்து, “அம்மா எனக்கு உங்கட கையால ஒரு பொட்டு வைச்சுவிடுங்கோவன் ஆசையாயிருக்கு” என சாதாரணமாகக் கேட்டார். ஏதுமறியாத தாயுள்ளம் பிள்ளையின் விருப்பப்படி பொட்டிட்டு மகிழ்ந்தது. இவ்விதம் சிறுபிள்ளை போல் அவர் நடப்பது வழக்கம் எனத் தாயாரும் கூறினார்.
சிரித்தபடியே விடைபெற்றவர், வீட்டுப் படலையில் நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்தார். பின் போய்விட்டார்.
சிறிது நேரத்தின் பின்
தம்பி சாரத்தையும் ரீசேட்டையும் விட்டுட்டுப் போட்டானணை” என்று போர்க் அண்ணையின் சகோதரன் அவசரமாகக் குரல் கொடுத்தார்.
திங்கள், 31 அக்டோபர், 2022
mother a 239 கடற்கரும்புலி கப்டன் வாமன்.
கடற்கரும்புலி
கப்டன் வாமன்(தூயமணி)
கந்தசாமி ரவிநாயகம்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு:22.08.1971
வீரச்சாவு:19.09.1994
நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு
நெடுநாளாக எனது மனதில் கிடந்த இந்த மிகப்பெரிய ஆசை நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது.
வாமன்! அவனொரு நல்ல மனிதன். அதற்கு அப்பால், எங்களுக்கு ஒரு அற்புதமான நண்பன்.
தனித்த சிலரோடு மட்டுமல்லாமல், பறந்து எல்லோரோடுமே நட்பைப் பேணிய ஒரு சிறந்த பண்பாளன்.
கூட இருந்த அத்தனை பேரிலுமே அன்பு கொண்டிருந்த அதே நேரத்தில், அக்கறையாகவும் இருந்த உற்றதோழன்.
எந்த நேரமும், ஏதோ ஒரு வகையில் தன்னால் இயன்ற அளவுக்கு எங்களுக்கு உதவிகால் செய்துகொண்டெயிருந்த துணைவன்.
எங்கிருந்து என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும், கடைசியில் அவன் முடிக்கும் இடங்கள் எப்போதும் இரண்டு விடயங்களைத் தொனிப்போருளாகக் கொண்டிருக்கும்.
ஒன்று, எங்களை நல்வழிப்படுத்துகிற விதமான நல்ல புத்திமதிகள், அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள்.
அடுத்தது, கரும்புலித் தாக்குதல்கள்; இலக்குகள்; வழிமுறைகள்; உத்திகள்.
“நல்லத்தான ஒரு வாழ்வைத் தந்தருள்க!” என்று கடவுளிடம் மன்றாடித் திரியும் எங்கள் சமூக வாழ்வியக்கத்துக்குள்ளிருந்துதான் அவனும் புறப்பட்டான்.
ஆனால், “நல்லத்தான ஒரு சாவைத் தந்தருள்கள்!” என்றுதான், இறைவனின் சன்னிதானங்களில் அவன் இறந்து வேண்டிக்கொண்டுதிரிந்தான்.
ஒரு கரும்புலித் தாக்குதல் வாமனின் கனவு!
ஒரு கரும்புலித் தாக்குதலே வாமனது நினைவு!
பகைவனின் நெற்றியில் வெடிக்கும் ஒரு தாகத்தைத் தாங்கியே அவனது சொல், செயல், சிந்திப்பு எல்லாமே.
தளபதிக்கு அலுப்புக் கொடுத்துக் கொடுஹ்து. ஒருவழியாக அந்த வாய்ப்பைப் பெற்றபோதும், அவனுக்குரிய சர்ந்தப்பம் சரிப்பட்டு வராமல் இழுபட்டுக்கொண்டே போனபோதுதான்,
கடவுளின் திருப்பாதங்களில்கூட போய் விழுந்து வேண்டத் துவங்கினானாம்.
சாவும், அழிவும், பட்டினியும், துயரமும் நாளாந்த வாழ்வாகிப்போன தமிழீழத்தின் தென் பிராந்தியத்திலிருந்து, இழப்புக்களால் உரமேறி வந்தவன்தான் அவன்!
அதனால்தானாக்கும், அப்படி ஒரு சுதந்திர வேட்கை அவனுக்குள் இருக்கின்றது.
இந்தியர் காலம், எங்கள் போராட்ட வரலாற்றின் இருண்ட பதிவு.
அதுவரை, தானுண்டு, தன் வீடுண்டு என இருந்தவன் அதன் பிறகு, தனக்கென ஒரு நாடும் உண்டு என்று புலியாய் வந்தான்.
இருபதாண்டுகளுக்கு முன்னாள் ஒரு இரவு. (1994ம் ஆண்டு எழுதப்பட்டது தற்சமயம் தேசக்காற்று வரலாற்றுடன் இன்று…)
கோயில் போரதீவு கிராமத்தில் ஒரு சின்னக் குடிசை.
தொட்டிலில் ஆடி, “குவா குவா” சத்தத்தோடு கண் சிமிட்டினான் அந்தக் குழந்தை. ரவிக்குமார் ஆசையாக அவர்கள் இட்ட திருநாமம்.
அப்பா கந்தசாமி; அம்மா யோகம்மா.
வீட்டில், பூர்வீகச் சொத்து என்று சொல்ல அவர்களிடம் இருந்தது, வறுமை ஒன்றுதான்.
பாவம். தன்னந்தனியாக எல்லாப் பாரங்களையும் தலையில் சுமந்தார் தந்தை.
தாயின் மடியில் அழகாய்ச் சிரித்த அந்தக் குழந்தை, தாயக மடியில் தவழ்ந்து, விழுந்து விழுந்து, எழுந்து நிமிர்ந்து உயர்ந்தபோது, சலசலத்து ஓடும் அந்த எழிலான அருவிகளில் குதித்து நீரடிமகிழ, அவனுக்கு நேரமிருக்கவில்லை.
பள்ளிக்கு நடந்த பிஞ்சுப் பாதங்கள், மீதி நேரங்களில், வயலுக்கு நடக்கவேண்டியிருந்தது. சின்னப் பையன் மாடாய் உழைத்தான்.
வரம்புகளுக்குள்ளே, வியர்வைச் சகதியில் வறுமை மூழ்க. மெல்ல மெல்ல அவர்கள் உய்யத் துவங்கினார்கள்.
இந்திய நெருக்கடி; அடிவருடிகளின் அனர்த்தங்கள்: நிம்மதி இழந்துபோன வாழ்வு.
திடிரென, அந்தக் கிராமத்திலிருந்து கொஞ்சம் இளையோரைக் காணவில்லை.
மூதூரின் அடர்ந்த காடு.
நெடித்துச் சடைத்த, தடித்த மரங்களின் கீழ் அவர்கள் களைத்தார்கள்.
இந்தியர்கள் வளைத்துத் தாக்குயபோதும், இடம்மாறி இடம்மாறி அதற்குள்ளேயே.
ஓடி…… கயிறேறி…….. மூடை தூக்கி……., சயிட்றோளில் வாந்தியெடுத்து, ‘குறோள்’ இழுத்துப் பயந்து முழங்கையில் ரத்தம் ஒழுக ஒழுக அணிவகுத்து…. அணி நடந்து…. புலிக்கொடியின் கிழ் உறுதிப் பிரமாணம் எடுத்து………
சீரான உணவில்லை, ஒழுங்கான உறக்கமில்லை, தேவியான உடையில்லை, நோயிற்கு மருந்தில்லை, நிலையாக ஒரு இடமுமில்லை…………….., ஆனாலும் ஓயாத பயிற்சி.
முடிந்தபோது, தளராத புலிகளாகக் களமாடத் தயாராக உருவாகியிருந்தனர் அவர்கள்.
ரி. 56 உம் கையுமாக வெளியில் வந்தான் வாமன்.
மண்டூர் அவனது முதற்களம். இரும்புப் பாலத்தடியில் ஒரு பதுங்கித் தாக்குதல். இலக்கு, இந்திய வல்லரசின் ஒரு தரைப்படை ரோந்து அணி.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த சேனாதிபதிகளில் ஒருவரும், தென் பிராந்தியத் துணைத் தளபதியுமான லெப்ரினன் கேணல் றீகன், களத்தில் நின்று வழிநடாத்திய அதிரடி.
நடு வீதியில், 30 இந்தியச் சிப்பாய்கள் பிணங்களாய்ச் சுருண்டார்கள்.
தென் தமிழீழத்தின் நிகழ்வுகள் பற்றித்தான், எப்போதும் அந்த மைந்தனுக்குப் பெரிய கவலைகள்.
கடற்கரை மணலில் நடந்த கால் நனைக்கிறபோது, பக்கத்தில் நடந்து கதைகள் சொல்வான்; சண்டைப் படகின் இயந்திரத்தைப் பழுது பார்கிறபோது, அருகில் அமர்ந்து சோகம் சொல்லுவான். ‘பிப்ரி கலிபரை’ கழற்றித் துப்பரவு செய்கிறபோது, கூட இருந்து துயரம் விபரிப்பான்.
சிதைந்தழிந்துபோய்க் கிடக்கும் எங்கள் மண்ணின் அந்த இன்னொரு துருவத்தை கண்களுக்கு முன்னாள் அவன் விபரிப்பான்.
உயிருக்குள் இரத்தம் வடியும்.
“அந்தச் சனங்கள் பாவம் மச்சான்” எனும்போது……. அவனைப் பார்க்கப் பாவமாய் இருக்கும்.
“அங்கயும் நாங்கள் கரும்புலித் தாக்குதல்களைச் செய்யவேண்டும்; அப்பத்தான் சிங்களவனைக் கலைக்கலாம்.” அவனுக்குள் அது பெரியதொரு ஆசை வேட்கை.
சுகயீனமாக மருத்துவமனையில் படுத்திருந்தவனுக்கு, பூநகரி அடிக்கும் சேதியை சொன்னான் பார்க்கப்போன ஒரு நண்பன்.
துள்ளிக் குதித்துக் கொண்டு முகாமிற்கு அன்றே வந்து சேர்ந்துவிட்டான் வாமன்.
‘ஒப்பரேசன் தவளை’ பாசறையில் படையெடுப்புக்கான தயார்படுத்தல்.
தளபதி குழுக்களை ஒழுங்குபடுத்தியபோது, அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தவன், தாக்குதல் அணி எதிலும் தான் செர்க்கப்படாததைக் கண்டதும் இடையில் புகுந்து சண்டை பிடித்தான்.
“தம்பி உனக்கு ஏலாதெண்……” சொல்லி முடிக்க விடாமல் கரைச்சல் தந்தான்.
ஆய்க்கினை தாங்க முடியாமல் அவனையும் ஒரு அணியோடு இணைத்தார் தளபதி.
கனரக ஆயுதப்பிரிவில் அவன். பயிற்சிகள் மாதிரி உரு இலக்கை அவனது ‘லோ’ அடி, இம்மியும் பிசகாமல் நொறுங்கியபோது, தலைவர் தோள்களில் தட்டி வாழ்த்தினார்.
இனம் புரியாத தெம்பு. சரித்திரத்தில் புகழ்பெற்ற அந்த நாள்.
நாகதேவன்துறை நோக்கிய ஒரு நீருடகத் தாக்குதலனியில் வாமன்.
அந்த வரலாற்றுச் சிறப்பான நிலத்தை நோக்கி, எங்கள் வரலாற்றுப் பெருமைமிக்க படையெடுப்பு.
72 மணி நேரத்தின் பின் அங்கிருந்து நாங்கள் வெளியேறிகொண்டிருந்தபோது , உலகம் பூநகரி பற்றியும் புலிகளைப் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தது.
வந்ததன் பின்னர்தான் கரும்புலித் தாக்குதலுக்கான அவனது நச்சரிப்பு உச்சநிலை அடைந்தது.
அண்மைக்காலம். அவன் தாக்குதலுக்காகக் காத்திருந்த நாட்கள்.
“இனி என்ன மச்சான் பேச்சுவார்த்தை துவங்கப் போகுது, சமாதானம் வரப்போகுது, உனக்கு இடக்க சர்ந்தப்பம் கிடைக்காது…………..”
நாங்கள் சுற்றிவர இருந்து அவனைக் கிண்டல் செய்வோம்.
“ஐயோ மச்சான் அப்படியெல்லாம் சொல்லாதேங்கோடா, என்னால தாங்க்கேளது” உண்மையிலேயே வேதனைப்பட்டான்.
குலுக்கல் முறையில் தெரிவாகிய கரும்புலி வீரர்களுக்குள்ளும் அவன் எடுபடவில்லை. அந்த நேரத்தில் அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
காலில் விழா குறையாக கெஞ்சினான்; தானே தான் இடிக்கவேண்டும் எனத் தளபதியிடம் வேண்டினான்.
அவர்களில் யாருக்குத்தான் மனமில்லை; எல்லோரும் முரண்டு பிடித்தார்கள்; அத்தனை பெரும் “நானே” என்று நின்றார்கள்.
இந்த அபூர்வம், பூலோகத்தில் புலிகளிடம் மட்டுமே காணக்கூடிய ஆச்சரியம்.
பிரபாகரனின் பிள்ளைகளிடம் மட்டுமே பார்க்கக்கூடிய அதீத தேசப்பற்றின் வெளிப்பாடு.
இறுதியில்………….,
தளபதியில் சொல்லுக்கிணங்க அவனுக்காக விட்டுக்கொடுத்து மற்றவர்கள் ஒதுங்கினார்கள்.
கடற்புலிகளுக்கு வாமன் வந்த புதிதில், நீந்துவதிளிருந்து, படகோட்டுவதிலிருந்து, அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது லக்ஸ்மன்தான்.
– விடுதலைப்புலிகள் இதழ்
ஞாயிறு, 23 அக்டோபர், 2022
mother a238 ஆகாய கடல் வெளிச்சமர்
இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும்.வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாகா அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .
மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும்.ஆனால் துரதிஸ்டவசமாக எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரனுக்கு அண்மையாக செயலிழந்தது.இக்கனரக வாகனத்தை செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர்.இச் சமரின் இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக சென்று தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.
மூன்றாவது வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை இவ்விடத்தில் கடற்படையால் தரையிறக்கலாமென எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் தரையிறக்கினான்.இச் சமரை வழிநாடாத்திய தளபதி லெப்.கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார்.இருந்தும் சண்டைதொடர்ந்தது.முன்னேறிய இராணுவத்தை அதாவது வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப்பிரிக்க முடியாவிட்டாலும் .
பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை.கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ச்சியாக தொடுத்தனர்.கொம்படி வரை வந்த படையினர்.கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப் .கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த்தாக்குதல் நடைபெற்றது.
இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ் அா்ப்பணிப்பு மிக்க இச்சமர் இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர் இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்தி சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன்.வழிநடாத்தினார். ஒரு மாதமாக நடைபெற்ற இவ் இராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள வீரச்சாவடைந்தனர்.
உண்மையிலே இச்சமரிலே வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளுக்குப் பின்னாலும் அற்புதமான தியாகங்களும்,மனிதத்தன்மைக்கு அப்பாலான விடுதலை உணர்வும் உள்ளன. இவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் சாதாரணமான இழப்புக்கள் அல்ல மாறாக தமிழர்களுடைய வீர வரலாற்று சரித்திரங்கள்.
இச்சமரிலே தங்கள் உயிர்களைக் கொடையாக்கி தாய்மண் விடுதலைக்காகத் தங்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக.
2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமது மண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு வரப்பட்டதால் எமது கைகளுள் வீழ்ந்தன. எனவே, எதிரி இப்போது வான்படை, கடற்படை, தரைட்படையென முட்படைகளினதும் தொடர்புகளுடன்கூடிய அல்லது அவ்வாறான தொடர்புகளை உடன் ஏற்படுத்தக்கூடிய இராணுவக் கூட்டுத்தளங்களை மட்டுமே எமது பிரதேசங்களில் வைத்திருப்பதற்கு நிப்பந்திக்கப்பட்டான்.
ஆனையிறவுத் தளமும் இத்தகைய அமைப்பைக் கொண்டதாக இருந்தது. இம்முகாம் மீது நாம் தாக்குதலைத் தொடுக்கும் பட்சத்தில் வான், கடல், தரையென மும்முனைகளிலும் எமது நடவடிக்கைகளை எதிகொள்ளக்கூடிய வாய்பான சூழ்நிலையில் ஆனையிறவு இராணுவத்தளம் இருந்தது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளுக்குமான ஒரேயொரு தரைப்பாதையாக ஆனையிறவுக் கடல்நீரேரியூடாக ஒடுங்கிச்செல்லும் பாதையில், குடாநாட்டின் கழுத்தை நெரிப்பதுபோல் ஆனையிறவு இராணுவத்தளத்தை எதிரி நீண்டகாலமா கவே வைத்திருந்தான். கடல்நீரேரியும் நீண்ட உப்புவெளிகளைக் கொண்டிருந்த பிரதேசங்களும் எதிரியின் பாதுகாப்பிற்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருந்தன
இவ்வாறு, சகலவழிகளிலுமே எதிரிக்குச் சாதகமாக இருந்த ஆனையிறவுத் தளத்தின்மீது ஒரு முற்றுகைத் தாக்கியழிப்புச் சமரை மேற்கொண்டு, அதை வீழ்த்துவதென எமது இயக்கம் முடிவுசெய்தது.ஒரு மரபுவழிச் சமருக்குரிய ஆட்பலநிலையிலும் கருவி நிலையிலும் எதிரி பல மடங்கு மேலோங்கியிருந்தான். எனினும், ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பிற்குரிய ஆட்பல நிலையையும் கருவிநிலையையும் மட்டுமே கொண்டிருந்த எமது இயக்கம், மரபுவழிச் சமருக்கு முகங்கொடுக்கக்கூடிய எமது போராளிகளின் மனத்திடத்தை மட்டுமே நம்பிச் சமரங்கைத் திறக்க முடிவுசெய்தது. எமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களை வைத்து, எமது போராளிகளின் தனித்து வமான தொழினுட்ப அறிவை மட்டுமே பயன்படுத்தி மரபுவழித் தாக்குதலுக்கு மிகவும் இன்றிய மையாததாயிருந்த போர்க்கலங்கள் ஆனையிறவுச் சமருக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தன. உழவு இயந்திரம், புள்டோசர் என்ப ன பெரும் வெட்டைகளூடாக எமது அணிகளை நகர்த்துவதற்குத் தேவையான கவசவாகனங்களாக உருமாற்றப்பட்டிருந்தன. எமதியக்கத்தால் தயாரிக்கப்பட்ட “பசிலன் – 2000′ என்ற அதிகதாக்கம் விளைவிக்கக்கூடிய குறுந்தொலைவீச்சுப் பீரங்கியும் எம்மிடம் இருந்தது.
எனவே, போராளிகளின் மனப்பலத்தை மட்டுமே பெரிதாக எண்ணித் திட்டமிடப்பட்ட ‘ஆகாய, கடல், வெளி நடவடிக்கையில், முகாமின் தென்பகுதியூடான நடவடிக்கைகளுக்கான பிரதான பணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் வழங்கப்பட்டது. ஏனைய படையணிகளையும் உள்ளடக்கி இத்தென்சமர்முனையைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடத்தினார்.
போன்ற இடங்களில் நடைபெற்ற சமகளில் படையினர் கடும் இழப்பினைச் சந்தித்தனர். பூவரசங்குளச் சந்திப்பகுதியில் நடைபெற்ற கடுமையான சமளிற் சிறீலங்கா வான்படைமீதான எமது படையணிப் போராளிகளின் தாக்குதலில் ‘பெல்’ ரக உலங்குவானுர்தி ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இது போராட்ட வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி புரிந்த முக்கிய சாதனையாகும், எதிரியின் கவசவாகனங்கள் பலவும் சேதமாகின. களத்தில் மூக்குடைபட்ட எதிரி தன் அநாகரிகத்தை வெளிப்படுத்தி அண்டியிருந்த மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடாத்தினான். 19.06.1991 வரை நடந்த கடுமையான சமரில் 50 இற்கு மேற்பட்ட படையினரையும் ஆயு தங்களையும் இழந்ததுடன் 150 இற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்ததிற் படையினர் பின் வாங்கத் தொடங்கிள். புலிகளின் பலம்பற்றி இராணுவ விமர்சகர்கள் வியந்து நின்ற இச்சமரின் வெற்றிக்காகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த போராளிகள் 22 பேர் வரலாறாகினர்.
‘வன்னி விக்கிரம’ நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரின் இழப்பைப்பற்றி ஆராய்ந்த பி.பி.சி. உலக சேவையின் இலங்கை முகவர் கருத்து வெளியிடுகையில் இலங்கைத்தீவில் இலங்கை இராணுவம் புலிகளிடம் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். அவ்வளவிற்குச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ‘வன்னி விக்கிரம’ எதிர்த்தாக்குதல் வலுப்பெற்றிருந்ததை உலகம் அறிந்துகொண்டது
–நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் நூல்
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
mother a237 லெப்.கேணல் கௌசல்யன்
தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்
மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.
லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.
மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.
காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர்இ பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவைஇ இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.
காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.
ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.
தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.
கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.
திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.
பெப்ரவரி 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.
2005 பெப்ரவரி 7
சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.
- “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.”
– தமிழீழத் தேசியத்தலைவர் –
அவன் விழிப்பான். மரணித்தது மரணமே.
சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவிய ஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது
“………this was the most unkindest cut of all “
எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.ப தமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர்.
அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள் எம் கண்முன்னே விரிகின்றன.
ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ் தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
- சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான.”…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்துவிலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்துசுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையெனவெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்துசஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க
விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்
அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை
மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……”
என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ?
ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகே யுகே.
சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. .
”….He lives, he wakes, ’tis death is dead, not he..”
கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.
2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டு ஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.
லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.
மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.
காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டான்.
காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினான். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.
ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.
தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.
கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான்.
திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.
- 2005 பெப்ரவரி 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.
போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.
ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலை செய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.
- இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.
இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.
இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.
எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.
சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.
இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.
ஆண்டு ஜந்தாகின்றது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.
“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…யாழில் சகோதரரின் கொடூர செயலால் விபரீத முடிவை எடுத்த இளம் பெண்!a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்
மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...
-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு......... தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் LTTE MASTER BOOK தலைமைப்பீடத்தி...
-
உக்கிரைனுக்கு ஆதரவாக திரண்ட ஈழத் தமிழர்கள்- லண்டனில் பெரும் ஆர்பாட்டம் -புகைப்படங்கள் ! லண்டனின் மத்திய நகரப் பகுதியில் சற்று முன்னர் ஈழத் ...