உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 1 மே, 2025

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

 

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து | Tamil Representative Wins Canadian Election

2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்குக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கனேடியத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் கனேடியத் தமிழர் பேரவை தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மக்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கையை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் புதிய அரசு உறுதியுடன் செயற்படும் என நாம் நம்புகின்றோம்.

தேர்தல் வெற்றி

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற கனேடியத் தமிழ் உறுப்பினர்களுக்கும் கனேடியத் தமிழர் பேரவை பெருமிதத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.


கனேடியத் தமிழர் பேரவையின் முன்னாள் சட்ட ஆலோசகரான கரி ஆனந்தசங்கரி மீண்டும் தெரிவாகியுள்ளார். கனேடியத் தமிழர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஜோனீட்டா நாதன் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாகப் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

இதனுடன், அனீட்டா ஆனந்த்தும் மீண்டும் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றிகள், கனேடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் ஈடுபாடு மற்றும் பங்களிப்பைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.

கனேடியத் தமிழர் பேரவை

அரசியல் சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பாகச் செயற்படும் கனேடியத் தமிழர் பேரவை, புதிய அரசுடன் இணைந்து, அனைத்து கனேடியர்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தும் பணிகளிலும் செயற்படத் தயாராக இருக்கின்றது.

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து | Tamil Representative Wins Canadian Election

புதிய அரசு மக்கள் விருப்பங்களை மதித்து, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

அதேபோல், நாடு எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் திறமையாகச் சமாளித்து, கனடாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தி, அனைத்து கனேடியர்களுக்கும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளைப் புதிய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

கனேடியத் தமிழர் பேரவை, புதிய அரசின் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து உறுதியாகக் கைகோர்க்கும்.”என்றுள்ளது.


செவ்வாய், 29 ஏப்ரல், 2025

a 304 இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றுமொரு பதற்றம்: இந்திய இராணுவ வீரரை பிடித்துச் சென்றது பாகிஸ்தான் இராணுவம் | India Bsf Jawan Detained By Pakistan Rangers

ஜம்மு காஷ்மீரின் (jammu kashmir) பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மறுநாள் இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எல்லையை தாண்டியதாக தெரிவித்து  கைது

பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லையை தாண்டியதாக தெரிவித்து இந்திய BSF வீரரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.


இதேவேளை கடந்த 6 நாட்களாக அவரை மீட்பது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மோடி அரசு முனையவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உச்சக்கட்ட முறுகல் – ஜம்மு – காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு

அரசு எடுத்த நடவடிக்கை என்ன..!

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கோரா “BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டு 6 நாட்கள் ஆகின்றன.

அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அவரை மீட்டுக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

a 303 கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள்

 

கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள்Gallery

கிளிநொச்சியில் நேற்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது. 

அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Gallery

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

 

பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு


பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு | Japan Predicts Earth S Doom

 பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஜப்பானின் Toho பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் நிபுணர்கள் இணைந்து, பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் துல்லியமான நாளை கணித்துள்ளனர்.

குறித்த தகவலின்படி, அப்பொகலிப்ஸ் (apocalypse) அல்லது உலக அழிவு, 1,000,002,021-ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் உயிரினங்கள்

இதன்படி, அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் மெதுவாக வெப்பத்தை அதிகரிக்க தொடங்குவதனால் கடல்கள் கொதித்து நீராவியாகி விண்வெளிக்கு சிதறும்.

குறித்த நிலை, 999,999,996-ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும், பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.


அதே நேரத்தில், நாசா ஆய்வாளர்கள் சூரிய புயல்களின் உடனடி அபாயத்தையும் எச்சரித்துள்ளனர்.

2024 இல் வெளியான ஆய்வில், சூரியனில் இருந்து வெளியேறும் சக்திவாய்ந்த வெப்பக் கதிர்வீச்சுகள் மற்றும் CME வெளியேற்றங்கள் (Coronal Mass Ejections), பூமியின் வாயுவில் மாற்றங்களை ஏற்படுத்தி, வெப்பநிலை உயர்வுக்கும் ஆக்சிஜன் குறைவுக்கும் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2025

a 301 கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் | Tourist Family Found Lost Bag In Sri Lanka

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவில் இருந்து தம்பதி நாடு திரும்பியுள்ளது.

இந்நிலையில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி செல்லும் ரயிலில் ஏறும் போது, ​​அவர்களின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இலங்கை தம்பதி 

திருடிய நபரை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் துரத்திச் சென்றதை அடுத்து, பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டனர்.


ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன், உடனடியாக பிரித்தானியரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.

பேலியகொடயில் உள்ள வீடு ஒன்றிற்குள் பையுடன் குறித்த நபர் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

a 300 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easter attack) தொடர்பில் அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள


 அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலான தகவலை வெளிப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், தற்போது அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

இதில், வெளிநாட்டவர்கள், காவல்துறை உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று மூன்று நாட்களக்கு பின்னர் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்க உளவு பிரிவின் சிறப்பு தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை அமெரிக்காவுக்கு எடுத்து சென்றுள்ளதாக தெரிவிப்படுகின்றது.

இந்நிலையில், தற்போது அமெரிக்க உளவு பிரிவு (FBI) வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

  •  
  •  
  •  

சனி, 12 ஏப்ரல், 2025

a 299 புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!!

 

 புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!!

புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!! | New Crisis For Immigrants In Trump S America

6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்கள் திறம்பட ரத்து செய்யப்பட்டு அவர்களை வேலை செய்யவோ அல்லது சலுகைகளை அணுகவோ முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது, புலம்பெயர்ந்தோரை சுயமாக நாடுகடத்த ஊக்குவிக்கவும், சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டும் ட்ரம்ப் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பது இலக்க எண்

இதேவேளை, இந்தக் கொள்கையால் குறிவைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவில் நுழைந்து தங்க அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!! | New Crisis For Immigrants In Trump S America

அவர்கள் சட்டப்பூர்வமாக சமூகப் பாதுகாப்பு எண்களைப் பெற்றிருந்துள்ளதுடன், அவை அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.இந்த எண்கள் பல்வேறு உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, இதில் வருவாய் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கான பங்களிப்புகளைக் கண்காணிப்பதும் அடங்கும் என கூறப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சி

அதன்படி, புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்களை அகற்றுவதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் பல நிதிச் சேவைகளிலிருந்து அவர்களைத் துண்டித்து, வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதாக தெரியவந்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில், பைடன் நிர்வாக திட்டங்களின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை ஒடுக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கடுமையான நடவடிக்கை கருதப்படுகிறது

எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோரை ஒடுக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து   2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூ...